Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்by vpoompalani March 24th 2016, 13:59
» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26
» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17
» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06
» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07
» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58
» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24
» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35
» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52
» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18
» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47
» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19
» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46
» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49
» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37
» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07
» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29
» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38
» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55
» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00
» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49
» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28
» திருத்தல யாத்திரை ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51
» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33
» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46
» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28
» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13
» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29
» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15
» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10
» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29
» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54
» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38
» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42
» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32
» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01
» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20
» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00
மாணிக்கவாசகர் அருளிய திருப்பொற் சுண்ணம்
Page 1 of 1
மாணிக்கவாசகர் அருளிய திருப்பொற் சுண்ணம்
திருப்பொற் சுண்ணம் சிவனை முதன்மைப்படுத்தி பாடப் பெற்றது. மாணிக்கவாசகர்
தில்லை வழியாகச் சென்று கொண்டிருக்கும் போது மகளிர் பாட்டுப் பாடிப்
பொற்சுண்ணம் இடித்துக் கொண்டிருப்பதைக் கண்ணுற்றார். பொற் சுண்ணம் என்பது
அழகிய வாசனைப் பொடி என்பதாகும். இச்சுண்ணம் பல்வேறு வாசனைப் பொருட்களை
ஒன்று சேர்த்து இடிக்கப்படுவதாகும்.
இதை இடிக்கும் போது களைப்புத்
தோன்றாத விதத்தில் மகளிர் வாய்க்கு வந்தபடி பாடல்களைப் பாடிக் கொண்டு
சுண்ணத்தை இடித்தனர். மாணிக்கவாசக சுவாமிகள் அவர்களுக்கென தாள கதிக்கு ஏற்ப
அமைக்கப் பெற்ற ஓசை நயம் கொண்ட இருபது பாடல்களைப் பாடியுள்ளார். இதைப்
போன்று தான் மாணிக்கவாசக சுவாமிகள் திருவெம்பாவைப் பாடல்களையும்
பாடியுள்ளார்.
குளிர்மிக்க மார்கழி மாதத்தில் மகளிர் நீராடிக்
கொண்டிருந்ததைக் கண்ணுற்ற வாகீசர் சிவனின் புகழைப் பாடித் துயில் எழுப்பும்
வகையில் மற்றொரு திருவாசகமாக திருவெம்பாவையை பாடியுள்ளார். அதேபாணியில்
இப் பொற் சுண்ணப் பாடல்களும் மகளிர் சிவனின் புகழைப்பாடி பொற்சுண்ணம்
இடிப்பதற்கெனப் பாடப் பெற்றது.
பொற்சுண்ணம், தாள இசையோடு கூடிய பாடல்
திருப்பொற்
சுண்ணப் பாடல்கள் பற்றிக் கூறுவதற்கு முன் திருப்பொற் சுண்ணம் என்றால்
என்ன, அது எதற்குப் பயன்படுத்தப்படுகின்றது. அதன் மகிமை போன்றவற்றை சற்றுச்
சுருக்கமாகக் கூறுவது இதற்குப் பொருத்தமாக விருக்கும். வாதவூரர் புராணம்
பாடல் 63ல் கூறப்பட்டவாறு மாணிக்கவாசகர் தில்லை ஊர் வழியாகச் சென்று
கொண்டிருக்கும் போது மகளிர் பொற்சுண்ணத்தை உரலில் போட்ட உலக்கையால்
இடிப்பதைக் கண்டு அவர்களுக்கென திருப்பொற் சுண்ணப் பாடல்களைப்
பாடியுள்ளார்.
இச் சுண்ணம் பல்வேறு வகைப்பட்ட பொருட்களுடன் வாசனைத்
திரவிய பொருட்களும் சேர்த்து இடிக்கப்படுவதாகும். சிலப்பதிகாரத்தில் வரும்
மாதவி குளிப்பதற்கு பயன்படுத்திய பொடி மிகப் பல வாசனைப் பொருட்கள் சேர்த்து
இடிக்கப்பட்டதாகும். மிகப் பழங்காலத்தில் இத்தகைய சுண்ணத்தைக்
கிராமங்களில் வாழும் மக்கள் தாங்களே இடித்துத் தயாரித்துக் கொண்டனர் என
அறிய முடிகின்றது.
இவ் வகைச் சுண்ணத்தை மகளிர் குளிப்பதற்குப்
பயன்படுத்திய தோடு சாதாரண நிலையிலும் பூசிக் கொண்டனர். கோவில்களுக்குச்
செல்லும் சைவப் பிரமுகர்களின் தலையிலும் இது தெளிக்கப்பட்டது. மங்களகரமான
விழாக்களின் போது இப்பொடி தெளிக்கப்பட்டு வந்துள்ளது. எல்லாவற்றிற்கும்
மேலாக இறைவனு க்கு அபிஷேகப் பொருளாகவும் பொற்சுண்ணம் பயன்படுத்தப்படு
கின்றது.
பொற்சுண்ணத்தை இருவரோ அல்லது நால்வரோ எதிர் எதிராக நின்று
கொண்டு இடித்தனர் என்பதை அறிய முடிக்கின்றது. உரலில் உள்ள சிறிய குளியில்
ஓர் உலக்கைக்கு மேல் ஒரே நேரத்தில் உள்ளே செல்ல முடியாது எனவே இடிப்பவர்கள்
ஒருதாள கதியை அடிப்படையாகக் கொண்டு, ஒன்று, மூன்று, இரண்டு, நான்கு என்ற
முறையில் மாறி மாறி இடித்தனர் என்பதைத் தொல்காப்பியத் தில்
குறிப்பிடப்படும் வற்றைப் பாட்டு மூலம் அறிய முடிகின்றது.
இந்த
தாளக் கதிக்கு ஏற்ப உலக்கை விள வேண்டுமானால் அதற்கேற்ற இசையோடு கூடிய பாடல்
ஒன்று வேண்டும். திருவாசகத்தில் வரும் திருப்பொற் சுண்ணம் இந்த தாள
கதிக்கு ஏற்ப அமைக்கப் பெற்ற ஓசை நலம் கொண்ட இசைப்பாடல்களைக் கொண்டதாகும்.
திருவாசகத்தின் பிற பாடல்களில் காணப் பெறாத இசையமைப்பு
திருப்பொற்சுண்ணத்தில் மட்டும் அமைந்திருத்தலைக் காணலாம்.
திருப்
பொற் சுண்ணம் எல்லா உயிர்க்கும் தலைவனாகிய இறைவனின் புகழை உரலின்
எதிரெதிராக நிற்கும் பெண்கள் பாடிக் கொண்டே மாறிமாறி இடிக்கும் தாள கதியில்
அமைந்துள்ளது. இறைவனின் புகழைப் பாடும் போது, மனம் இறையன்பில்
மூழ்கியிருக்க, பாடலின் தாள கதிக்கேற்ப, உலக்கை பிடித்த கைகள் மட்டும் மாறி
மாறி இடிக்கின்றதைக் காணலாம்.
திருப்பொற் சுண்ணமும் ஈமக்கிரியையும்
திருப்பொற்
சுண்ணம் மங்களகரமான பாடல் சொல்லப் போனால் சைவக் கோவில்களில் உற்சவ
காலங்களில் கொடியேற்றப்படும் போதும், கொடி இறக்கப்படும் போதும் திருப்பெற்
சுண்ணம் படிக்கப்படுகின்றது. அப்பேர்பட்ட பாடலை அமங்கல நிகழ்வில் மரணச்
சடங்கின் போது படிக்கலாமா என்ற ஐயப்பாடு சிலர் மத்தியில் தோன்றுகிறது.
இத்தகைய
ஐயப்பாட்டை சில பாமர மக்கள் மாத்திரமன்றி தமது நூலில் தமிழ் நாட்டைச்
சேர்ந்த பேராசிரியர் அ.சு. ஞானசம்பந்தன் திருவாசகம் என்ற தமது நூலில்
திருப்பொற் சுண்ணப் பாடல்கள் பற்றிக் குறிப்பிடுகையில் பின்வருமாறு தனது
ஆதங்கத்தைத் தெரிவிக்கின்றார் “சைவத்திலும் திருவாசகத்திலும் எல்லையற்ற
ஈடுபாடு கொண்டு, அன்றாடம் திருவாசகப் பாராயணம் செய்யும் யாழ்ப்பாண வாழ்
சைவப் பெருமக்கள் வீட்டிலும் தென்பாண்டிச் சைவர் கள் பலர் வீட்டிலும்
இன்றும் ஒரு தவறு நிகழ்ந்து வருகின்றது. மங்களகரமான பொற்சுண்ணம் இடிப்பதை
என்ன காரணத்தினாலோ, சாவு வீட்டில் செய்து வருகின்றனர்.
இது
சிந்திக்கப்பட வேண்டிய ஒன்று” எனப் பேராசிரியர் கூறியுள்ளார். இவ்வாறு
சந்தேகம் பொதுவாக ஏற்படுவது இயல்பு தான். ஆனால் சைவ சமயத்தின்
சித்தாந்தத்தை சற்று ஆழமாக நோக்கும் போது அதில் தவறில்லை என்று எண்ணத்
தோன்று கின்றது. பரமாத்மா இறைவன் மனிதர் களாகிய எம் ஆத்மாவுக்கும்
பரமாத்மாவுக்கும் இடையே தொடர்புள்ளது.
ஈற்றில் ஆத்மா பரமாத்மாவுடன்
இரண்டறக் கலக்கின்றது. அதுதான் முக்தி பேறு “சீவன் சிவனென்றறி” என்று யோக
சுவாமிகள் கூறி வைத்தார். சிவனுக்கும் சீவனுக்கும் உள்ள தொடர்பை திருமூலர்
பின்வருமாறு கூறுகின் றார். “தெள்ளத் தெளிர்ந்தார்க்கு சீவன் சிவலிங்கம்”
“உள்ளம் பெரும் கோயில், ஊன் உடம்பு ஆலயம்” என்றும் கூறப்பட்டுள் ளது.
மாணிக்கவாசகர்
கடவுளை சோதி வடிவில் கண்டு பாடியவர். அவர் அருளிய திருவாசகப் பாடல்களில்
பெரும்பாலும் முழுமுதற் கடவுளாகிய சிவனைப் புகழ்ந்து பாடியுள்ளார்.
ஆதலி
னால் ஒருவர் இறந்தவுடன் அவரின் ஆத்மா இறைவனைச் சென்றடைவதாகக் கருதி, சைவப்
பெருமக்களின் மரணச் சடங்கின் போது திருப்பொற் சுண்ணப்பாட்டு
படிக்கப்படுகிறது. இடிக்கப்படும் பொற்சுண்ணம் இறந்தவருக்கு அளிக்கப்படு
கின்றது. ஆத்மா சிவகதியடைய வேண்டு மென்பதே இதன் நோக்கமாகும். இற்றைக்கு
பல்லாண்டு காலமாக இந்த வழக்கு இருந்து வருகின் றது. மேலும் சைவப் பெருமக்க
ளால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தொன்றாகும்.
சிவம்தான் எல்லாம்
திருப்பொற்
சுண்ணப் பாடல் களில் நிறைய சமய தத்துவப் பொருள் மேலோட்டமாகக் காணப்
படுகின்றது. முதலாவது பாடல் “முத்து நல் தர்மம் பூ மாலை தூக்கி முளைக்குடம்
தூபம் நல் தீபம் வைமின்” என்று தொடங்குகிறது.
சிவன் நீராடும்
பொழுது பூசுவதற்குரிய சுண்ணத்தை இடிக்கத் தொடங்குமுன் வீட்டை சுத்தம்
செய்து அலங்கரிக்குமாறு கோரப்படுகின்றது. இரண்டாவது பாடல் “பூ இயல் வார்
சடை எம்பிரானுக்கு பொன் திருச்சுண்ணம் இடிக்க வேண்டும்.” என்று
தொடங்குகிறது. அதாவது மலர் நிறைந்த சடையையுடைய இறைவனுக்கு அபிஷேகப்
பொருளாகிய பொற்சுண்ணத்தை இடிக்கத் தொடங்க வேண்டும்.
பத்தாவது பாடல்.
இது நடனமாடிக் கொண்டு பொற்சுண்ணம் இடிப்பது. பொற்சுண்ணம் இடிக்கும் மகளிரை
முன்னிலைப்படுத்திப் பாடப்பட்டது. “சித்தம் சிவனொடும் ஆட ஆட” என்ற வரி
கவனிக்கப்பட வேண்டியது. சித்தத்தை சிவன்பால் இருத்தி ஆடும்படி
கூறப்படுகின்றது. பாடல் 13 ல் முதலில் வழமை போன்ற பெண்டிர்
விழித்துரைக்கப்படு கின்றனர்.
பின்னர் எம்பெருமானைப் பற்றி
குறிப்பிடுகையில்” இமவான் மகட்கு தன்னுடைக்கேள்வன் மகன், தகப்பன், தமையன்”
என மாணிக்க வாசகர் குறிப்பிடுகின்றார். சிவன்தான் எல்லாம்- அதாவது கணவன்,
மகன், தந்தை என வியாபித்திருக்கிறார். அப்பேற்பட்ட தலைவனின்
பாதவிந்தாரத்தைப் பூசித்து பொற்சுண்ணம் இடிப்போம் என்று கூறுகின்றார்.
பாடல்
15ல் - எளிதில் அடைய முடியாத பரம்பொருள்- அத்தகையவர் எமது சித்தத்தில்
புகுந்து இனிமை தரவல்லவனை, அல்லாமல் பிறப்பறுத்து ஆட் கொண்ட கூத்தனை நாம்
புகழ்ந்து பாடிப் பொற்சுண்ணம் இடிப்போம். பாடல் 16ல் சிவனின் புகழ்
பற்றியும் பாடல் 17 ல் சிவபெருமானின் அணிகலன்கள் பற்றிப் புகழ்ந்து
பாடப்படுகின்றது. தேவரும் பூவுலகோரும் உய்யும் பொருட்டு ஆலகால விசத்தை உண்ட
சிவனைப்பாடி நாம் திருப்பொற்சுண்ணம் இடிப்போம். 20 வது கடைசிப் பாடலில்
முழு சைவசித்தாந்தக் கருத்துக்கள் பொதிந்துள்ளன.
அவன்தான் (சிவன்) வேதமும், வேள்வியும்
அவன்தான் எல்லாம் பொய்மையும் மெய்மையும்
சுடரொளியும் அவனே, இருளும் அவனே
துன்பமும் அவனே, இன்பமும் அவனே
பாதியுமாய் இருக்கின்றாய், முழு நிறைவாகவும்- இருக்கின்றாய்
நீயே பந்தபாசத்தில் கட்டுண்டு இருப்பவனும் நீயே, மோட்சமும்
தொடக்கமும் நீயே முடிவும் நீயே
அவன்தான்
(சிவன்) வேதமும், வேள்வியும் அவன்தான் எல்லாம், பொய்மையும், மெய்மையும்,
சுடரொளியும் அவனே இருளும் அவனே, துன்பமும் அவனே இன்பமும் அவனே, பாதியுமாய்
இருக்கின்றாய், முழு நிறைவாகவும் இருக்கின்றாய், பந்த பாசத்தில் கட்டுண்டு
இருப்பனும் நீயே, மோட்சமும் நீயே தொடக்கமும் நீயே முடிவும் நீயே.
அப்பேற்பட்ட பரம் பொருளை நீராட்டுவதற்கு திரவியப் பொடியை இடிப்போமாக என
விழித்துரைத்துக் கொண்டு மாணிக்கவாசக சுவாமிகளின் திருப்பொற்சுண்ணப் பாடல்
நிறைவு பெறுகின்றது.
திருவாசகப் பாடல்களைப் படிப்பதன் மூலம் ஆன்ம
விமோசனம் உண்டாகும் என்ற பொதுவான நம்பிக்கை வைசமக்கள் மத்தியில் உள்ளது.
ஒருவரின் உயிர் பிரியும் தறுவாயில் அவர் முன்னிலையில் திருவாசகத்தை
பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ சூழவுள்ள சுற்றத்தார் படிப்பது வழமையாகும்.
இதனைக்
கேட்டு அவரின் கடைசித் சிந்தனைகள் இறைவன்பால் ஈர்க்கப்பட்டு மோட்ஷத்துக்கு
இட்டுச் செல்லும் என நம்ப்படுகின்றது. சைவசமய எழுச்சிக்கும் காரணமாயிருந்த
ஸ்ரீல ஸ்ரீ ஆறுமுகநாவலர் மரணப்படுகையில் இருக்கும் போது திருவாசகத்தைப்
படிக்கும் படி கேட்டுள்ளார். திருவாசகம் படிப்பதனால் விமோசனம் கிடைக்கும்
என்ற கருத்துக்கு வலுவூட்டும் வகையில் மற்று நிகழ்வைக் குறிப்பிட முடியும்.
ஓலைச்
சுவடிகளை அச்சிட்டு பிரசுரித்து தமிழ் இலக்கியத்திற்கு அரிய சேவை ஆற்றிய
கலாநிதி யூ. வி. சாமிநாதை யர் தமது உயிர் பிரியப் போகின்ற தென்பதை உணர்ந்து
திருவாசகப் பாடல்களைப் படிக்க வைத்துள்ளார். இந்த வழமையை எமது
மூதாதையர்கள் வெகு சிரத்தையோடு அனுசரித்து வந்துள்ளமை கண்கூடு.
இந்த
வகையில் ஒருவரின் மரணத்தறுவாயில் தேவாரம், திருவாசகம் குறிப்பாக எமது
மூதாதையினால் படிக்கப்பட்டு வந்தது கண்கூடு. நாகரீகம் மிக்க கலியுகத்தில்
இது அருகி வருவது வருந்தத்தக்கது. “ஒவ்வொரு ஜீவான்மாவும், உள் நிறைந்த
தெய்வத் தன்மையுடையது” என்று சுவாமி விவேகாந்தனர் கூறியிருப்பது கருத்திற்
கொள்ளப்பட வேண்டியது.

Re: மாணிக்கவாசகர் அருளிய திருப்பொற் சுண்ணம்
போற்றிஓம் நமச்சிவாய புயங்கனே மயங்குகின்றேன்
போற்றிஓம் நமச்சிவாய புகலிடம் பிரிதொன்றில்லை
போற்றிஓம் நமச்சிவாய புறம்யெனை போக்கல்கண்டாய்
போற்றிஓம் நமச்சிவாய ஜய ஜய போற்றி போற்றி
முத்துநல் தாழம்பூ மாலைதூக்கி
முளைக்குடந் தூபம்நல் தீபம்வைம்மின்
சக்தியும் சோமியும் பார்மகளும்
நாமகளோடுபல்லாண்டிசைமின்
சித்தியுங் கௌரியும் பார்ப்பதியும்
கங்கையும் வந்து கவரிகொண்மின்
அத்தன் ஐயாறன்அம்மானைபாடி
ஆடப்பொற் சுண்ணம் இடித்துநாமே.

Similar topics
» மாணிக்கவாசகர் திருவண்ணாமலையில் அருளிய திருவெம்பாவை
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
» கச்சியப்பசிவசாரியர் அருளிய கந்தபுராண - வாழ்த்து:
» தில்லையில்*அருளிய*அச்சப்பத்து*
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
» கச்சியப்பசிவசாரியர் அருளிய கந்தபுராண - வாழ்த்து:
» தில்லையில்*அருளிய*அச்சப்பத்து*
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum