Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்by vpoompalani March 24th 2016, 13:59
» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26
» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17
» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06
» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07
» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58
» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24
» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35
» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52
» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18
» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47
» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19
» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46
» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49
» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37
» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07
» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29
» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38
» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55
» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00
» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49
» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28
» திருத்தல யாத்திரை ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51
» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33
» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46
» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28
» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13
» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29
» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15
» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10
» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29
» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54
» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38
» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42
» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32
» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01
» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20
» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00
தில்லையில்*அருளிய*அச்சப்பத்து*
Page 1 of 1
தில்லையில்*அருளிய*அச்சப்பத்து*
தில்லையில்*அருளிய*அச்சப்பத்து*[1]
புற்றில் வாள் அரவும் அஞ்சேன் பொய்யர் தம் மெய்யும் அஞ்சேன்
கற்றை வார் சடை எம் அண்ணல் கண்ணுதல் பாதம் நண்ணி
மற்றும் ஓர் தெய்வம் தன்னை உண்டு என நினைந்து என நினைந்து எம் பெம்மான்
கற்றிலாதவரை கண்டால் அம்ம நாம் அஞ்சும் ஆறு
______________________________________________
பதப்பொருள்:
*************
புற்றிலே உள்ள கொடிய பாம்புக்கும் அஞ்சமாட்டேன்
பொய்யர்களது மெய் போன்ற சொற்களுக்கும் அஞ்சமாட்டேன்
திரட்சியான நீண்ட சடையையுடைய எம் பெரியோனாகிய
நெற்றிக்கண்ணையுடைய இறைவனது திருவடியை அடைந்தும்
வேறொரு தெய்வத்தை இருப்பதாக எண்ணி எம்பெருமானைப்
போற்றாதாரை காணின் ஐயோ நாம் அஞ்கின்ற வகை சொல்லும் அளவன்று.

விளக்கம்:
*********
பொய்யர்தம் மெய் என்பது வஞ்சனையாம். அரவத்தையே அணியாகப் பூண்டு, ஞானத்தையே
கண்ணாகக் கொண்டு உள்ள இறைவன் அடியார், புற்றில்வாழ் அரவத்தையும்
பொய்யர்தம் மெய்யையும் கண்டு அஞ்ச வேண்டுவதில்லை. ஆனால், இறைவனது திருவடியை
அடைந்தும் பிற தெய்வங்களை வழிபடுவாரைக் கண்டு அஞ்ச வேண்டும் என்கின்றார்.
பெம்மானைக் கற்றலாவது, பெருமானது நல்ல புகழைப் போற்றுதலாம். 'எம்
பெம்மாற்கு அற்றிலாதவரை' எனப் பிரித்து, எம் இறைவன்பொருட்டுப் பிற பற்றுகள்
நீங்காதவரை என்றும் பொருள் கூறலாம்.
http://www.tamilvu.org/slet/l4100/l4100pd2.jsp?bookid=116&pno=530

Re: தில்லையில்*அருளிய*அச்சப்பத்து*
தில்லையில்*அருளிய*அச்சப்பத்து*[2]
வெருவரேன் வேட்கை வந்தால் வினைக்கடல் கொளினும் அஞ்சேன்
இருவரால் மாறு காணா எம்பிரான் தம்பிரான் ஆம்
திருவுரு அன்றி மற்றோர் தேவர் எத்தேவர் என்ன
அருவராதவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சும் ஆறு
______________________________________________
பதப்பொருள்:
*************
ஆசை மிகுந்து வந்தாலும் அஞ்ச மாட்டேன் வினையாகிற கடல் என்னைச் சூழ்ந்துகொண்டாலும் அஞ்சமாட்டேன்,
பிரம விட்டுணுகளாகிய இருவராலும் மாறுபட்டுக் காண முடியாத எம் தலைவனாகிய இறைவனது
திருவடிவத்தையே கண்டு களிப்பதன்றி மற்றைய தேவர்களை என்ன தேவரென்று
அருவருப்பும் கொள்ளாதவரைக் காணின் ஐயோ நாம் அஞ்சுகின்ற வகை சொல்லும் அளவன்று.
______________________________________________
விளக்கம்:
*********
பறறற்றான் பற்றினைப் பற்றும் அடியார்க்கு உலகப் பற்று அறும் ஆதலின்,
'வேட்கை வந்தால் வெருவரேன்' என்றார். அவர்களுக்கு வினையாகிய கடலைக்
கடத்தற்கு இறைவனாகிய தோணி உதவுமாதலின், 'வினைக்கடல் கொளினும் அஞ்சேன்'
என்றார். அவ்வாறு உதவுகின்றவனாகிய சிவபெருமானைத் தவிர மற்றொரு தேவரைக்
கண்டால் வெறுப்பு அடையாதவரைக் கண்டால் அஞ்ச வேண்டும் என்பார், 'தம்பிரானாந்
திருவுரு அன்றி மற்றோர் தேவர் எத்தேவர் என்ன அருவரா தவரைக் கண்டால் அம்ம
நாம் அஞ்சுமாறு' என்றார்.
இதனால், சிவபெருமானையன்றி மற்றத் தேவரை வணங்குவதால் பிறவித்துன்பம் நீங்காது என்பது கூறப்பட்டது.

தில்லையில்*அருளிய*அச்சப்பத்து*[4]
கிளி அனார் கிளவி அஞ்சேன் அவர் கிறி முறுவல் அஞ்சேன்
வெளிய நீறு ஆடும் மேனி வேதியின் பாதம் நண்ணி
துளி உலாம் கண்ணர் ஆகி தொழுது அழுது உள்ளம் நெக்கு
இங்கு அளி இலாதவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சும் ஆறு
______________________________________________
பதப்பொருள்:
*************
மொழியால் கிளி போன்ற மாதரது இனிய சொற்களுக்கு அஞ்ச மாட்டேன் அவர்
வஞ்சனையுடைய புன்சிரிப்புக்கும் அஞ்ச மாட்டேன் வெண்மையான திருநீற்றல்
மூழ்கிய திரு மேனியையுடைய அந்தணனது திருவடியை அடைந்து நீர்த்துளிகள்
சிந்துகின்ற கண்களையுடையவராய் வணங்கி அழுது உள்ளம் நெகிழ்ந்து இவ்விடத்தில்
கனிதல் இல்லாதவரைக் காணின் ஐயோ நாம் அஞ்சுகின்ற வகை சொல்லும் அளவன்று
______________________________________________
விளக்கம்:
**********
ஒரு வார்த்தையால் ஆட்கொள்ளும் சொல்லையும் குமிழ் சிரிப்பையும் உடையவனாகிய
பெருமானைக் காணப் பெற்றவர், மாதரது அழகிய சொல்லுக்கும் வஞ்சனைச்
சிரிப்புக்கும் அஞ்ச வேண்டுவது இல்லை. ஆனால், பெருமானது அருட் கோலத்தைக்
கண்டு உருகாதவர்களைக் கண்டால் அஞ்ச வேண்டும் என்கின்றார். அருட்கோலமே
கண்ணுக்கும் செவிக்கும் இன்பம் தருமாதலின், அதனைப் பருகி உள்ளம் உருக
வேண்டும் என்பதாம். இதனால், சிவபெருமானது அருட்கோலத்தைக் கண்டு உள்ளம் உருக
வேண்டும் என்பது கூறப்பட்டது.

தில்லையில்*அருளிய*அச்சப்பத்து*[3]
வன்புலால் வேலும் அஞ்சேன் வளைக்கையார் கடைக்கண் அஞ்சேன்
என்பு எலாம் உருக நோக்கி அம்பலத்து ஆடுகின்ற
என் பொலாமணியை ஏத்தி அருள் இனிது பருகமாட்டா
அன்பு இலாதவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சும் ஆறு
______________________________________________
பதப்பொருள்:
*************
வலிமையான மாமிசம் பொருந்திய வேற்படைக்கும் அஞ்ச மாட்டேன் வளையலை அணிந்த
பெண்களுடைய கடைக்கண் பார்வைக்கும் அஞ்ச மாட்டேன் எலும்புகளெல்லாம்
உருகும்படியாகப் பார்த்து பொன்னம்பலத்தில் நடிக்கின்ற எனது துளையிடப்படாத
மாணிக்கத்தைத் துதித்து, அருள் இனிது பருகமாட்டா அன்பு இலாதவரைக் கண்டால்
ஐயோ நாம் அஞ்சுகின்ற வகை சொல்லும் அளவன்று.
______________________________________________
விளக்கம்:
*********
காலனைக் கடிந்து காமனை எரித்த பெருமானது அடியார்க்குக் கொடிய வேலும்
மாதரது கூரிய பார்வையும் துன்பம் தரமாட்டா' என்பார், 'வன்புலால் வேலும்
அஞ்சேன், வளைக்கையார் கடைக்கண் அஞ்சேன்' என்றார். 'ஆனால், அம்பலத்தாடும்
பெருமானது இனிமையான பார்வையையும் அழகிய நடனத்தையும் கண்டு அன்புறாதவர்களைக்
கண்டால் அஞ்ச வேண்டும்' என்பார், 'அம்பலத்தாடுகின்ற என் பொலா மணியை ஏத்தி
இனிதருள் பருக மாட்டா அன்பிலாதவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறு' என்றார்.
இதனால், இறைவனது அருள் நடனத்தைக் கண்டு இன்புறுவதே மனிதப்பிறவியின் பயன் என்பது கூறப்பட்டது.

தில்லையில்*அருளிய*அச்சப்பத்து*[5]
பிணி எலாம் வரினும் அஞ்சேன் பிறப்பினோடு இறப்பும் அஞ்சேன்
துணிநிலா அணியினான்றன் தொழும்பரோடு அழுந்தி அம்மால்
திணி நலம் பிளந்தும் காணா சேவடி பரவி வெண்ணீறு
அணிகிலாதவரை கண்டால் அம்ம நாம் அஞ்சும் ஆறு
______________________________________________
பதப்பொருள்:
*************
எல்லா வகையான நோய்களும் வந்தாலும் அஞ்ச மாட்டேன் பிறப்புக்கும் இறப்புக்கும் அஞ்ச மாட்டேன்
துண்டப் பிறையை அணிகலனாகவுடைய சிவபெருமானது தொண்டரோடு பொருந்தி அத்திருமால்
வலிமையான நிலத்தை அகழ்ந்தும் காணமாட்டாத சிவந்த திருவடியைத் துதித்து திரு வெண்ணீறு
அணியாதவரை காணின் ஐயோ நாம் அஞ்சுகின்ற வகை சொல்லும் அளவன்று.
______________________________________________
விளக்கம்:
**********
தீராத நோயைத் தீர்த்து அருள வல்ல பெருமானது அடியாரோடு கலந்து
இருப்பார்க்கு, நோய் துன்பம் தாராது ஆதலின், 'பிணியெலாம் வரினும் அஞ்சேன்'
என்றார். பிறப்பு இறப்பு இல்லாத இறைவனது திருவடியை அடைந்தார்க்குப் பிறப்பு
இறப்பு இல்லையாதலின், 'பிறப்பினோ டிறப்பும் அஞ்சேன்' என்றார். ஆனால்,
பிறவிப் பிணிக்கு மருந்தாகிய பெருமானுக்கேயுரிய திருவெண்ணீற்றினையணிந்து
மகிழாதவரைக் கண்டால் அஞ்ச வேண்டும் என்றார்.

தில்லையில்*அருளிய*அச்சப்பத்து*[6]
வாள் உலாம் எரியும் அஞ்சேன் வரை புரண்டிடினும் அஞ்சேன்
தோள் உலாம் நீற்றன் ஏற்றன் சொல் பதம் கடந்த அப்பன்
தாள் தாமரைகள் ஏத்தி தடமலர் புனைந்து நையும்
ஆள் அலாதவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சும் ஆறு
______________________________________________
பதப்பொருள்:
*************
ஒளி வீசுகின்ற நெருப்புக்கும் அஞ்ச மாட்டேன் தலைகீழாகப் பிறழ்ந்திட்டாலும் அஞ்சமாட்டேன்
தோல்களில் விளங்குகின்ற திரு வெண்ணீற்றையுடையவனும் காளையை ஊர்தியாக உடையவனும் சொல் அளவையைக் கடந்த அப்பனுமாகிய இறைவனது
திருவடித் தாமரைகளை துதித்து பெருமை பொருந்திய மலர்களைச் சாத்தி மனம் உருகுகின்ற
அடிமைகள் அல்லாதவர்களைக் காணின் ஐயோ நாம் அஞ்சுகின்ற வகை சொல்லும் அளவன்று.
______________________________________________
விளக்கம்:
**********
கையில் அனலேந்தி எரியாடுபவனும் என்றும் அழிவில்லாதவனுமாகிய பெருமானுக்கு
ஆட்பட்ட அடியார்கள் நெருப்பிற்கும் உலகத்தின் அழிவிற்கும் அஞ்ச
வேண்டுவதில்லை என்பதாம். அத்தகைய இறைவனை மலர்தூவி வழிபடாதவர்களைக் கண்டால்
அஞ்ச வேண்டும் என்பார், 'தடமலர் புனைந்து நையும் ஆளலாதவரைக் கண்டால் அம்ம
நாம் அஞ்சுமாறு' என்றார்.
இதனால், சிவபெருமானை மலர் தூவி வழிபட வேண்டும் என்பது கூறப்பட்டது.

தில்லையில்*அருளிய*அச்சப்பத்து*[7]
தகைவு இலா பழியும் அஞ்சேன் சாதலை முன்னம் அஞ்சேன்
புகைமுகந்த எரி கை வீசி பொலிந்த அம்பலத்துள் ஆடும்
முகை நகை கொன்றை மாலை முன்னவன் பாதம் ஏத்தி
அகம் நெகாதவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சும் ஆறு
______________________________________________
பதப்பொருள்:
*************
தவிர்க்க முடியாத பழிக்கும் அஞ்ச மாட்டேன் இறத்தலை முதலாவதாக அஞ்ச மாட்டேன்
புகையைக் கொண்ட நெருப்பை கையிலே ஏந்தி வீசிக்கொண்டு விளங்குகின்ற பொன்னம்பலத்தில் ஆடுகின்ற
அரும்பு மலர்கின்ற கொன்றை மாலையை அணிந்த முதல்வனது திருவடியைத் துதித்து
மனம் நெகிழாதவரைக் காணின் ஐயோ நாம் அஞ்சுகின்ற வகை சொல்லும் அளவன்று.

தில்லையில்*அருளிய*அச்சப்பத்து*[8]
தறிசெறி களிறும் அஞ்சேன் தழல் விழி உழுவை அஞ்சேன்
வெறி கமழ் சடையன் அப்பன் விண்ணவர் நண்ணமாட்டா
செறி தரு கழல்கள் ஏத்தி சிறந்து இனிது இருக்க மாட்டா
அறிவிலாதவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சும் ஆறு
______________________________________________
பதப்பொருள்:
*************
கட்டுத்தறியிலே பொருந்தியிருக்கும் ஆண் யானைக்கும் அஞ்ச மாட்டேன் நெருப்புப் போன்ற கண்களையுடைய புலிக்கும் அஞ்சமாட்டேன்
மணம் வீசுகின்ற சடையையுடையவனும் தந்தையுமாகிய இறைவனது தேவர்களாலும் அடைய முடியாத
நெருங்கிய கழலணிந்த திருவடிகளைத் துதித்து சிறப்புற்று இன்பமாக இருக்க மாட்டாத
அறிவிலிகளைக் காணின் ஐயோ நாம் அஞ்சுகின்ற வகை சொல்லும் அளவன்று.
______________________________________________
விளக்கம்:
**********
மலையே வந்து வீழினும் நிலையினின்று கலங்காத உள்ளம் உடைய அடியவர்களைக் கொலை
யானை முதலிய கொடிய விலங்குகள் வணங்கிச் செல்லுமாதலின், 'தறி செறு களிறும்
அஞ்சேன்; தழல் விழி உழுவை அஞ்சேன்' என்றார். அமணர்களால் ஏவப்பட்ட மதயானை
திருநாவுக்கரசரை வலம் வந்து வணங்கிச் சென்றதைக் காண்க. ஆனால், அஞ்சத்
தக்கவர் யார் எனின், அம்பலத்தாடுவான் மலர்சிலம்படி வாழ்த்தி வணங்கி
இன்புறும் தன்மை இல்லாத அறிவிலிகளேயாவர் என்க.
இதனால், சிவபெருமானை ஏத்தி வழிபடுவதே அறிவுடைமையாகும் என்பது கூறப்பட்டது.

தில்லையில்*அருளிய*அச்சப்பத்து*[9]
மஞ்சு உலாம் உருமும் அஞ்சேன் மன்னரோடு உறவும் அஞ்சேன்
நஞ்சமே அமுதம் ஆக்கும் நம்பிரான் எம்பிரான் ஆய்
செஞ்செவே ஆண்டுக்கொண்டான் திரு முண்டம் தீட்டமாட்டாது
அஞ்சுவார் அவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சம் ஆறு
______________________________________________
பதப்பொருள்:
*************
மேகத்தில் உலாவுகின்ற இடிக்கும் அஞ்ச மாட்டேன் அரசரது நட்புக்கும் அஞ்ச மாட்டேன்
விடத்தையே ஆமுதமாக ஏற்றுக்கொண்ட இறைவனானவன், எம்பிரான் ஆய் - எம்
தலைவனாகி, செஞ்செவே ஆண்டுக்கொண்டான்; செம்மையாகவே எம்மை ஆட்கொண்டான்;
அவனது, திரு - செல்வமாகிய திருவெண்ணீற்றை, முண்டம் தீட்டமாட்டாது - தமது
நெற்றியில் பூச மாட்டாமல், அஞ்சுவார் அவரைக் கண்டால் - அஞ்சுவோராகிய அவரைக்
காணின், அம்ம - ஐயோ, நாம் அஞ்சம் ஆறு - நாம் அஞ்சுகின்ற வகை சொல்லும்
அளவன்று.
______________________________________________
விளக்கம்:
**********
ஓசை ஒலியெல்லாம் ஆகிய இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட அடியாரை இடியோசை என்ன செய்ய
முடியும்? ஒன்றும் செய்ய முடியாதாதலின், 'மஞ்சுலாம் உருகும் அஞ்சேன்'
என்றார். அவ்வடியார்களுக்கு மன்னனது தொடர்பினால் வரும் துன்பமும் ஒன்றும்
இல்லையாதலின், 'மன்னரோடுறவும் அஞ்சேன்' என்றார். பல்லவ மன்னனோடு
கொண்டிருந்த உறவை நீக்கிக்கொண்டபின், அவன் செய்த பல கொடுமைகளும்
திருநாவுக்கரசரை ஒன்றும் செய்ய முடியாமை அறிக. ஆனால், இத்துணை உதவியும்
பெற்று, அவனுக்குரிய திருநீற்றை அணியக் கூசுவாரைக் காணின் அஞ்ச வேண்டும்
என்றார். இவர்கள் செய்ந்நன்றி கொன்றோராதலின் என்க.

தில்லையில்*அருளிய*அச்சப்பத்து*[10]
கோள் நிலா வாளி அஞ்சேன் கூற்றுவன் சீற்றம் அஞ்சேன்
நீள்நிலா அணியினானை நினைந்து நைந்து உருகி நெக்கு
வாள் நிலாம் கண்கள் சோர வாழ்த்தி நின்று ஏத்த மாட்டா
ஆண் அலாதவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சும் ஆறு
______________________________________________
பதப்பொருள்:
*************
கொலைத் தன்மை தங்கிய அம்புக்கு அஞ்ச மாட்டேன் இயமானது கோபத்துக்கும் அஞ்ச மாட்டேன்
நீண்ட பிறையாகிய அணிகலத்தையுடைய சிவபெருமானை எண்ணி கசிந்து உருகி நெகிழ்ந்து
ஒளி பொருந்திய விழிகளில் ஆனந்தக் கண்ணீர் பெருக துதித்து நின்று புகழ மாட்டாத
ஆண்மை உடையரல்லாரைக் காணின் ஐயோ நாம் அஞ்சுகின்ற வகை சொல்லும் அளவன்று.
______________________________________________
விளக்கம்:
**********
இறைவனே உடலிடங்கொண்டிருத்தலின், கொடுமையான வாள் அதனுள் ஊடுருவிச் செல்ல
முடியாது என்பார், 'கோணிலா வாளி அஞ்சேன்' என்றார். நோற்றலில்
தலைப்பட்டார்க்குக் கூற்றம் குதித்தலும் கை கூடுமாதலின், 'கூற்றுவன்
சீற்றம் அஞ்சேன்' என்றார். ஆனால், இறைவனது திருவடிவத்தை நினைந்து
பேரின்பத்தில் திளைத்திராதவரைக் காணின் அஞ்ச வேண்டும் என்றார்.
திருச்சிற்றம்பலம்

Similar topics
» தில்லையில் அருளிய திருப்பூவல்லி
» கச்சியப்பசிவசாரியர் அருளிய கந்தபுராண - வாழ்த்து:
» ஸ்ரீஆதிசங்கராச்சாரியார் அருளிய ஸ்ரீகாலபைரவாஷ்டகம்
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
» ஆண்டாள் அருளிய திருப்பாவை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum