Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்by vpoompalani March 24th 2016, 13:59
» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26
» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17
» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06
» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07
» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58
» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24
» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35
» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52
» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18
» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47
» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19
» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46
» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49
» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37
» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07
» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29
» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38
» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55
» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00
» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49
» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28
» திருத்தல யாத்திரை ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51
» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33
» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46
» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28
» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13
» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29
» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15
» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10
» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29
» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54
» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38
» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42
» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32
» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01
» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20
» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00
திரு அண்ணாமலை உண்ணாமுலை உமையாளொடும்
Page 1 of 1
திரு அண்ணாமலை உண்ணாமுலை உமையாளொடும்
*1
உண்ணாமுலைஉமையாளொடும் உடன்ஆகிய ஒருவன்,
பெண்ஆகிய பெருமான், மலை---திரு மா மணி திகழ,
மண் ஆர்ந்தன அருவித்திரள் மழலை(ம்) முழவுஅதிரும்---
அண்ணாமலை தொழுவார் வினை வழுவா வணம் அறுமே.
*2
தேமாங்கனி கடுவன் கொள விடு கொம்பொடு தீண்டி,
தூ மா மழை துறுகல்மிசை சிறுநுண்துளி சிதற,
ஆமாம்பிணை அணையும் பொழில் அண்ணாமலை அண்ணல்
பூ மாங் கழல் புனை சேவடி நினைவார் வினை இலரே.
*3
பீலி(ம்)மயில் பெடையோடு உறை பொழில் சூழ் கழை முத்தம்
சூலி(ம்) மணி தரைமேல் நிறை சொரியும் விரி சாரல்,
ஆலி(ம்) மழை தவழும் பொழில் அண்ணாமலை அண்ணல்
காலன் வலி தொலை சேவடி தொழுவாரன புகழே.
*4
உதிரும் மயிர் இடு வெண்தலை கலனா, உலகுஎல்லாம்
எதிரும் பலி உணவுஆகவும், எருது ஏறுவதுஅல்லால்,
முதிரும் சடை இளவெண்பிறை முடிமேல் கொள, அடிமேல்
அதிரும் கழல் அடிகட்கு இடம்---அண்ணாமலைஅதுவே.
*5
மரவம், சிலை, தரளம், மிகு மணி, உந்து வெள்அருவி
அரவம் செய, முரவம் படும் அண்ணாமலை அண்ணல்
உரவம் சடை உலவும் புனல் உடன்ஆவதும் ஓரார்,
குரவம் கமழ் நறுமென்குழல் உமை புல்குதல் குணமே?
*6
பெருகும் புனல் அண்ணாமலை, பிறைசேர், கடல்நஞ்சைப்
பருகும்தனை துணிவார், பொடி அணிவார், அது பருகிக்
கருகும் மிடறு உடையார், கமழ் சடையார், கழல் பரவி
உருகும் மனம் உடையார்தமக்கு உறு நோய் அடையாவே.
*7
கரி காலன, குடர் கொள்வன, கழுது ஆடிய காட்டில்
நரி ஆடிய நகுவெண்தலை உதையுண்டவை உருள,
எரிஆடிய இறைவர்க்கு இடம்---இளவண்டு இசை முரல,
அரி ஆடிய கண்ணாளொடும் அண்ணாமலைஅதுவே.
*8
ஒளிறூ புலிஅதள்ஆடையன், உமை அஞ்சுதல்பொருட்டால்,
பிளிறூ குரல் மதவாரணம் வதனம் பிடித்துஉரித்து,
வெளிறூபட விளையாடிய விகிர்தன்; இராவணனை
அளறூபட அடர்த்தான்; இடம்---அண்ணாமலைஅதுவே.
*9
விளவு ஆர் கனி பட நூறிய கடல்வண்ணனும், வேதக்
கிளர் தாமரைமலர்மேல் உறை கேடு இல் புகழோனும்,
அளவா வணம் அழல் ஆகிய அண்ணாமலை அண்ணல்---
தளராமுலை, முறுவல்(ல்), உமை தலைவன்(ன்)---அடி சரணே!
*10
வேர் வந்துஉற, மாசு ஊர்தர, வெயில் நின்று உழல்வாரும்,
மார்வம் புதை மலி சீவரம் மறையா வருவாரும்,
ஆரம்பர்தம் உரை கொள்ளன்மின்! அண்ணாமலை அண்ணல்,
கூர்வெண்மழுப்படையான், நல கழல் சேர்வது குணமே!
*11
வெம்பு உந்திய கதிசோன் ஒளி விலகும் விரிசாரல்,
அம்பு உந்தி மூஎயில் எய்தவன் அண்ணாமலைஅதனை,
கொம்பு உந்துவ, குயில் ஆலுவ, குளிர் காழியுள் ஞான-
சம்பந்தன் தமிழ் வல்லவர் அடி பேணுதல் தவமே.
Similar topics
» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
» நம்பியாண்டார் நம்பிகள் அருளிய திருநாவுக்கரசு தேவர் திரு ஏகாதசமாலை
» பெருந் திரு இமவான் பெற்ற பெண்கொடி பிரிந்த பின்னை***
» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
» நம்பியாண்டார் நம்பிகள் அருளிய திருநாவுக்கரசு தேவர் திரு ஏகாதசமாலை
» பெருந் திரு இமவான் பெற்ற பெண்கொடி பிரிந்த பின்னை***
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum