Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்by vpoompalani March 24th 2016, 13:59
» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26
» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17
» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06
» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07
» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58
» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24
» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35
» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52
» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18
» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47
» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19
» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46
» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49
» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37
» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07
» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29
» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38
» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55
» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00
» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49
» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28
» திருத்தல யாத்திரை ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51
» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33
» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46
» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28
» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13
» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29
» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15
» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10
» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29
» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54
» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38
» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42
» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32
» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01
» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20
» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00
நம்பியாண்டார் நம்பிகள் அருளிய திருநாவுக்கரசு தேவர் திரு ஏகாதசமாலை
Page 1 of 1

திருநாவுக்கரசருடைய பெருமையினை விரித்துரைப்பதாகிய இந்நூல், பதினொரு பாடல்களைக்
கொண்டது. ஏகாதச என்பது பதினொன்றைக் குறிக்குமாதலின் இப்பெயர் எண்ணால்
பெற்ற பெயராகும். இதன்கண் அமைந்த பாடல்கள் பதினொன்றே ஆயினும்,
திருநாவுக்கரசருடைய வரலாற்றில் அமைந்த சிறந்த உண்மைகளும் அப் பெரியாரை
வழிபடுவதனால் உளவாம் பெரு நலங்களும், அவர் திருவாய் மலர்ந்தருளிய
திருப்பதிகங்களின் சிறப்பும் இப் பாடல்களில் தெளிவாக அமைக்கப் பெற்றுள்ளன.
திருச்சிற்றம்பலம்
புலனோ டாடித் திரிமனத்தவர்
பொறிசெய் காமத் துரிசடக்கிய
புனித நேசத் தொடுதமக்கையர்
புணர்வி னால்உற் றுரைசெயக்குடர்
ஐம்புல நுகர்ச்சியினால் திரிகின்ற மனத்தை உடையவர், பொறிகள் செய்கின்ற
காமமாகிய குற்றத்தை அடக்கிய தூய்மையான அன்போடு தமக்கையாகிய புனிதவதியாரிடம்
வந்து சேர்ந்து அவர் சொன்ன நல்லுரைகளைக் கேட்டு வயிற்றுவலி (சூலை நோய்),
*************************************************
சுலவு சூலை பிணிகெ டுத் தொளிர்
சுடுவெ ணீறிட் டமண கற்றிய
துணிவி னான்முப் புரமெ ரித்தவர்
சுழலி லேபட் டிடுத வத்தினர்
சூலை நோய் நீங்கப்பெற்று, பிரகாசமான திருவெண்ணீறிட்டு, சமணர்களை அகற்றிய
துணிவை உடையவர். முப்புரங்களை எரித்த சிவபெருமானது ஆளுகைக்கு உட்பட்டு,
(சைவராகி) தவத்தை உடையவர்.

உலகின் மாயப் பிறவி யைத்தரும்
உணர்வி லாவப் பெரும யக்கினை
ஒழிய வாய்மைக் கவிதை யிற்பல
உபரி யாகப் பொருள்ப ரப்பிய
உலகில் மாயப் பிறவியைத் தரும் உணர்வில் ஈடுபடும் மயக்கினை ஒழிக்க, பல தேவாரப் பாடல்களையும் பாடி, சைவ நெறியைப் பரப்பிய,

அலகில் ஞானக் கடலி டைப்படும்
அமிர்த யோகச் சிவவொ ளிப்புக
அடி ரேமுக் கருளி னைச்செயும்
அரைய தேவத் திருவ டிக்களே.
உலகில் ஞானக் கடல் இடைப்படும் அமிர்த யோகச் சைவ நெறியில் புக
அடியார்களாகிய எங்களுக்கு அருளினைச் செய்யும் அரையத்தேவ சுவாமிகளே !
வணக்கம்.

திருநாவுக் கரசடி யவர்நாடற் கதிநிதி
தெளிதேனொத் தினியசொல் மடவார்ஊர்ப் பசிமுதல்
வருவானத் தரிவையர் நடமாடிச் சிலசில
வசியாகச் சொலுமவை துகளாகக் கருதிமெய்
உருஞானத் திரள்மனம் உருகாநெக் கழுதுகண்
உழவாரப் படைகையில் உடையான்வைத் தனதமிழ்
குருவாகக் கொடுசிவ னடிசூடித் திரிபவர்
குறுகார்புக் கிடர்படு குடர்யோனிக் குழியிலே.
திருநாவுக்கரசர், அடியவர்கள் நெருங்கிப் பழகுவதற்குப் பெருநிதி போன்றவர்
(புகலிடம் எனினுமாம்). தெளிந்த தேனைப் போன்று இனிய சொல்லையுடையவர்
(நாவுக்கு அரசர் எனினுமாம்). மாதர்களில் உருப்பசி முதலாக தெய்வப் பெண்கள்
ஈறாக உள்ளவர் பலரும் வசியமாகச் சொல்லும் அவையனைத்தையும் தூசியாகக் கருதி,
மெய் உரு ஞானத்திரள் மனமுருகி, நெகிழ்ந்து, அழுது, கண்ணீர் மல்கி, உழவாரப்
படையைக் கையில் உடையான். அவர் பாடிய தேவாரப் பாடல்களைக் குருவாகக் கொண்டு,
சிவனடி சூடத் திரிபவர், துன்பம் தருகின்ற பிறவிக் குழியைக் குறுகார்
என்றவாறு.
திருநாவுக்கரசர் உழவாரப் படையைக் கொண்டு சிவத்தலங்களின் பிரகாரத்தைச் சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டிருந்தார்.

குழிந்து சுழிபெறுநா பியின்கண் மயிர்நிரையார்
குரும்பை முலையிடையே செலுந்த கைநன்மடவார்
அழிந்தபொசியதிலே கிடந்தி ரவுபகல்நீ
அலைந்த யருமதுநீ அறிந்தி லைகொல்மனமே
கழிந்த கழிகிடுநா ளிணங்கி தயநெகவே
கசிந்தி தயமெழுநூ றரும்ப திகநிதியே
பொழிந்த ருளுதிருநா வினெங்க ளரசினையே
புரிந்து நினையிதுவே மருந்து பிறிதிலையே.
மனமே ! நீ குழிந்து சுழிபெறு நாபியின்கண் மயிர் நிரையார், குரும்பை
முலையிடை செல்லும் நன்மடவார் அழிந்த பொசியதிலே கிடந்து இரவு பகல் நீ
அளைந்து அயரும் தன்மையை நீ அறியவில்லை. போனது போகட்டும். நாள் இணங்கி,
இதயம் நெகிழுமாறு கசிந்து இதயம் கனியுமாறு தேவாரப் பாடல்களைப் பாடுகின்ற
செல்வமே ! திரு நாவினை உடைய எங்கள் அரசின் அருமையைப் புரிந்து நினைப்பாயாக.
இது தவிர வேறு வழியில்லை. இதுவே நன்மருந்து என அறிக. பெண் இன்பத்தில்
காலம் கழிக்காதே என மனத்திற்கு அறிவுரை கூறுகின்றார்.

இலைமா டென்றிடர் பரியா ரிந்திர
னேயொத் துறுகுறை வற்றாலும்
நிலையா திச்செல்வம் எனவே கருதுவர்
நீள்சன் மக்கட லிடையிற்புக்
கலையார் சென்றரன் நெறியா குங்கரை
யண்ணப் பெறுவர்கள் வண்ணத்திண்
சிலைமா டந்திகழ் புகழா மூருறை
திருநா வுக்கர சென்போரே.
செல்வம் இல்லையென்று துன்பம் அடையமாட்டார்கள். இந்திரனுக்குச் சமமாகச்
செல்வம் படைத்திருந்தாலும் இச் செல்வம் நிலைத்திருக்காது. என்றே கருதுவர்.
நீண்ட பிறவிக் கடலில் மூழ்கி அலைய மாட்டார்கள். சென்று சிவபெருமானது சைவ
நெறியாகிய கரையை அடையப் பெறுவார்கள். அவர்கள் யார் என்னில், அழகிய திண்ணிய
கல் மாடங்கள் திகழ்கின்ற புகழ் பெற்ற திருவாய்மூரில் அவதரித்த
திருநாவுக்கரசின் நாமத்தைப் போற்றுபவர்கள் என்பதாம். அவர் பாதங்களைப்
பணிபவர்களுக்கு ஒரு குறையும் இல்லை என்கிறார்.

என்பட்டிக் கட்டிய இந்தப்பைக் குரம்பையை
இங்கிட்டுச் சுட்டபின் எங்குத்தைக் குச்செலும்
முன்பிட்டுச் சுட்டிவ ருந்திக்(கு)எத் திக்கென
மொய்ம்புற்றுக் கற்றறி வின்றிக்கெட் டுச்சில
வன்பட்டிப் பிட்டர்கள் துன்புற்றுப் புத்தியை
வஞ்சிக் கத்திவி ழுந்(து)எச்சுத் தட்டுவர்
அன்பர்க்குப் பற்றிலர் சென்(று)அர்ச்சிக் கிற்றிலர்
அந்தக்குக் கிக்கிரை சிந்தித்த பித்தரே.
தெளிவுரை : எலும்பால் செய்யப்பட்ட இந்தச் சிறுகுடில் போன்ற உடலை இங்கு
எரித்த பிறகு எவ்விடத்திற்குச் செல்லும். முன்பிட்டுச் சுட்டி வருந்தி
எங்குச் செல்வதென்று அறியாமல் வலிமையுற்று, படிப்பில்லாமல் கெட்டு,
மதத்திற்குப் புறம்பானவர்கள் சிலர் துன்புற்று, புத்தியை வஞ்சித்துத்
துன்புறுவர். அன்பர்க்குப் பற்றிலர். சென்று அர்ச்சிக்க மாட்டார்கள்.
வயிற்றுக்கு உணவு தேடும் பித்தர்கள் என்றவாறு. சிவநெறியைக்
கடைப்பிடியுங்கள் என்று அறிவுரை கூறுகின்றார்.

பித்தரசு பதையாத கொத்தைநிலை உளதேவு
பெட்டியுரை செய்துசோறு கட்டியுழல் சமண்வாயர்
கைத்தரசு பதையாத சித்தமொடு சிவபூசை
கற்றமதி யினனோசை யிட்டரசு புகழ்ஞாலம்
முத்திபெறு திருவாள னெற்றுணையின் மிதவாமல்
கற்றுணையில் வரும்ஆதி
பத்தரசு வசைதீர வைத்தகன தமிழ்மாலை
பற்பலவு மவையோத நற்பதிக நிதிதானே.
பித்தரசு பதையாத கொத்தை நிலை (அறிவில்லாத நிலை) உளதேவு பெட்டியுரை செய்து
(வேறு தெய்வங்களைப் புகழ்ந்து பேசி) உணவே முக்கியமென்று கருதி உழலுகின்ற
சமணர்கள் கையிலிருந்து விடுபட்டு, சிவபூசை செய்து ஞாலத்தார் புகழ்கின்ற
முத்தி பெறு திருவாளனாகிய திருநாவுக்கரசர், வேறு எந்தத் துணையும் இல்லாமல்
கல்லையே தெப்பமாகக் கொண்டு எல்லாராலும் போற்றப்படுகின்ற தேவாரப் பாடல்களே
பெரும் செல்வமாகும். திருநாவுக்கரசை வணங்குவோம். அவர் பாடிய தேவாரப்
பாடல்களைப் பாடி நற்கதி பெறுவோம் என்கிறார்.

பதிகம் ஏழேழுநூறு பகருமா கவியோகி
பரசுநா வரசான பரமகா ரணவீசன்
அதிகைமா நகர்மேவி யருளினா லமண்மூடர்
அவர்செய்வா தைகள் தீருமனகன் வார்குழல்சூடின்
நிதியரா குவர்சீர்மை யுடையரா குவர்வாய்மை
நெறியரா குவர்பாவம் வெறியரா குவர்சால
மதியரா குவரீச னடியரா குவர்வானம்
உடையரா குவர்பாரில் மனிதரா னவர்தாமே.
10 அல்லது 11 பாடல்களைக் கொண்டது ஒரு பதிகம் என்று பெயர். இவர் பாடியதாகக்
கூறுவது ஏழ் எழுநூறு. அதாவது 4900 பதிகங்கள் என்று ஆகின்றன. (இவ்வளவு
பாடல்களும் இப்போது கிடைக்கவில்லை). இவ்வளவும் சிவபெருமானைப் பற்றிய
தேவாரப் பாடல்கள். திருவதிகை வீரட்டானத்திலிருந்து பாடினார். சமணர்கள்
செய்த துன்பங்களைப் போக்கும் அவர் தீவினையற்றவர். அவர் பாதங்களைப்
போற்றினால் தீவினை இல்லாதவர்கள் ஆவர். நீதி, சீர்மை, வாய்மை இவைகள் வந்து
சேரும். பாவங்கள் விலகும். பேரறிவாளர்கள் ஆவர். ஈசனுக்கு அடியார் ஆவர்.
முத்தி கிடைக்கும். இவ்வுலகில் இருக்கும் வரை போற்றப்படுவார்கள்.

தாமரைநகு மகவிதழ் தகுவன
சாய்பெறுசிறு தளிரினை யனையன
சார்தருமடி யவரிடர் தடிவன
தாயினும் நலம் கருணையை யுடையன
தாமரை சிரிக்கும் உள்ளிதழ் ஒப்பாவன. சாய்கின்ற சிறு தளிரினை ஒத்தன.
சார்தரும் அடியவர் துன்பத்தை அழிப்பன. தாயைக் காட்டிலும் நல்ல கருணையை
உடையன.

தூமதியினை யொருபது கொடுசெய்த
சோதியின்மிகு கதிரினை யுடையன
தூயனதவ முனிவர்கள் தொழுவன
தோமறுகுண நிலையின தலையின
பரிசுத்தமான பத்துச் சந்திரன்களைக் கொண்டு செய்த பிரகாசத்தை உடையன.
பரிசுத்தமானவை என்று தவ முனிவர்கள் தொழுவன. குற்றமற்ற குணங்கள் பொருந்தியன.
தலைமைப் பதவியை வகிப்பன.

ஓமரசினை மறைகளின் முடிவுகள்
ஒலிடுபரி சொடுதொடர் வரியன
ஓவறுமுணர் வொடுசிவ வொளியன
ஊறியகசி வொடுகவி செய்த புகழ்
ஓம் வடிவாகவுள்ள சிவ பெருமானைத் துதிக்கும் வேதங்களின் முடிவுகள் ஓலமிடும்
தன்மையோடு அறிதற்கு அரியன. அன்போடு தோய்ந்து பாடிய தேவாரப் பாடல்களின்
புகழ்,

ஆமரசுய ரகம்நெகு மவருளன்
ஆரரசதி கையினர னருளவன்
ஆமரசுகொ ளரசெனை வழிமுழு
தாளரசுத னடியிணை மலர்களே.
திருவதிகை வீரட்டான ஈஸ்வரரின் அருள் பெற்றவர். அத்தகைய சிறப்புடைய
திருநாவுக்கரசின் அடியிணை மலர்களை வழிபட்டு நற்கதி பெறுவோமாக என்கிறார்.

அடிநாயைச் சிவிகைத் தவிசேறித் திரிவித்
தறியாவப் பசுதைச் சிறியோரிற் செறியுங்
கொடியேனுக் கருளைத் திருநாவுக் கரசைக்
குணமேருத் தனைவிட் டெனையாமொட் டகல்விற்
பிடியாரப் பெறுதற் கரிதாகச் சொலுமப்
பிணநூலைப் பெருகப் பொருளாகக் கருதும்
செடிகாயத் துறிகைச் சமண்மூடர்க் கிழவுற்
றதுதேவர்க் கரிதச் சிவலோகக் கதியே.
அடிநாயைப் பல்லக்கிலேற்றி, வீதி வலம் வந்து, அறிவற்ற விலங்குத் தன்மையுடைய
சிறியோரில் பொருந்தும் கொடியவனாகிய எனக்கு அருள் செய்யும் திருநாவுக்கரசை,
குணமேரு போன்றவரை விட்டு, மற்றவர்கள் சொல்லும் அப் பிண நூலைப் பெரிய
பொருளாகக் கருதும் துர்நாற்றம் வீசுகின்ற உடலை உடைய, உறியைக் கையிலேந்திய
சமணர்க்காக, தேவர்க்கு அரிதாகிய சிவலோகக் கதியை மறந்தது பெரும் தவறாகும்
என்கிறார்.

சிவசம் பத்திடைத் தவஞ்செய்து
திரியும் பத்தியிற் சிறந்தவர்
திலகன் கற்றசிட் டன்வெந்தொளிர்
திகழும் பைம்பொடித் தவண்டணி
சிவசம்பத்தின் (சைவ நெறி) மத்தியில் தவம் செய்து திரியும் பத்தியில்
சிறந்தவர், திலகன், கல்வியிற் சிறந்தவன். திருநீற்றைக் கவசமாக அணிந்தவர்.

கவசம் புக்குவைத் தரன்கழல்
கருதுஞ் சித்தனிற் கவன்றியல்
கரணங் கட்டுதற் கடுத்துள
களகம் புக்கநற் கவந்தியன்
சிவபெருமானது திருவடிகளைக் கருதும் சித்தணிற் கவன்றிய கரணங் கட்டுதற்கு
அடுத்துள களகம் புக்க நற்கவந்தியன். திருநீறு ஆகிய போர்வையை உடையவன்.

அவசம் புத்தியிற் கசிந்து கொ
டழுகண் டசத்துவைத் தளித்தனன்
அனகன் குற்றமற் றபண்டிதன்
அரசெங் கட்கொர்பற் றுவந்தறு
பரவச புத்தியில் கசிந்து கொடு அழுகண்டத்து வைத்து அளித்தவன். பாவமற்றவன்.
குற்றமற்ற பண்டிதன். திருநாவுக்கரசு; எங்கட்கு ஒரு பற்றக்கோடு.

பவசங் கைப்பதைப் பரஞ்சுடர்
படிறின் றித்தனைத் தொடர்ந்தவர்
பசுபந் தத்தினைப் பரிந்தடு
பரிசொன் றப்பணிக்கும் நன்றுமே.
பிறவிப் பிணியைத் தீர்த்து வைக்கும் பரஞ்சுடர். குற்றமின்றி இத்தனைத்
தொடர்ந்தவர். உயிர் பந்தத்தைப் பரிந்தடு பரிசு ஒன்று அப்பணிக்கு
நன்றாகியது.
இவ்வளவையும் செய்யக்கூடியது திருநாவுக்கரசர் போற்றும் சைவ நெறி என்பதாம்.

நன்றும் ஆதரம் நாவினுக் கரைசடி
நளினம்வைத் துயினல்லால்
ஒன்றும் ஆவது கண்டிலம் உபாயம்மற்
ருள்ளன வேண்டோமால்
என்றும் ஆதியும் அந்தமும் இல்லதோர்
இகபரத் திடைப்பட்டுப்
பொன்று வார்புகும் சூழலில் புகேம்புகில்
பொறியில்ஐம் புலனோடே.
திருநாவுக்கரசரின் திருவடித் தாமரையை வைத்து உய்ந்தால் அல்லாமல் ஒன்றும்
ஆவது கண்டிலம். வேறு உபாயங்கள் எதுவும் எமக்கு வேண்டா. ஆதியும் அந்தமும்
இல்லதோர் இகபரத்து இடைப்பட்டு அழிவார் புகும் சூழலில் புகமாட்டோம்.
அப்படிப் புகின், பொறியில் ஐம்புலனோடே திருநாவுக்கரசரின் பாதம் பணிவோம்.
ஆதரவு தருவன திருவடிகளே.

Similar topics
» நம்பியாண்டார் நம்பிகள் அருளிய ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை
» கருவூர்த் தேவர் திருவிசைப்பா
» நக்கீரதேவ நாயனார் அருளிய திருக்கண்ணப்ப தேவர் திருமறம்
» திருவெண்ணெய் நல்லூர் மெய்கண்ட தேவர் அருளிய சிவஞானபோதம்
» நம்பியாண்டார் நம்பி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum