Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்by vpoompalani March 24th 2016, 13:59
» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26
» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17
» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06
» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07
» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58
» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24
» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35
» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52
» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18
» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47
» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19
» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46
» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49
» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37
» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07
» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29
» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38
» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55
» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00
» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49
» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28
» திருத்தல யாத்திரை ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51
» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33
» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46
» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28
» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13
» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29
» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15
» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10
» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29
» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54
» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38
» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42
» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32
» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01
» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20
» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00
நம்பியாண்டார் நம்பிகள் அருளிய ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை
Page 1 of 1

இந்நூல் திருஞானசம்பந்தப் பிள்ளையாருடைய வரலாற்று நிகழ்ச்சிகளைத் தொகுத்துக் கூறுவதாகலின்,
ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை என்னும் பெயருடையதாயிற்று. திருஞானசம்பந்தப்
பிள்ளையார் சிவபிரானுடைய திருவருளால் உமா தேவியார் அளித்தருளிய திருமுலைப்
பாலைப் பருகித் தேவாரப் பாக்களைப் பாடத் தொடங்கியது முதல், திருநல்லூர்ப்
பெருமணத்தில் திருவருட் பேரொளியில் கலந்தது வரை நிகழ்ந்த செய்திகளை எல்லாம்
இச் சிறுநூல் தொகுத்து உரைக்கின்றது.
திருச்சிற்றம்பலம்
************************************************
1.தி பூவார் திருநுதல்மேல் பொற்சுட்டி இட்டொளிரக்
கோவாக் குதலை சிலம்பரற்ற ஒவா
தழுவான் பசித்தான் என் றாங் கிறைவன் காட்டத்
தொழுவான் துயர்தீர்க்கும் தோகை வழுவாமே
முப்பதத் திரண்டறமும் செய்தாள் முதிராத
அழகிய நெற்றியில் பொற்சுட்டி பிரகாசிக்க, குதலை மொழியையுடைய குழந்தையின்
கால்களில் சிலம்பு ஒலி செய்ய, இடைவிடாது அழுவதனால் பசித்திருக்கிறான் என்று
இறைவன் காட்டவும், வழிபடுவோரின் துயரங்களை நீக்கும். மயில் போலும் சாயலை
உடையவளும் குறை வில்லாமல் முப்பத்து இரண்டு அறங்களையும் செய்தவளுமாகிய உமா
தேவியார்,

2.செப்பொத்த கொங்கைத் திருநுதலி அப்பன்
அருளாலே ஊட்டுதலும் அப்பொழுதே ஞானத்
திரளாகி முன்னின்ற செம்மல் இருள் தீர்ந்த
காழி முதல்வன் கவுணியர்தம் போர்ஏறு
ஊழி முதல்வன் உவன் என்று காட்ட வலான்
முதிராத, செப்புப் போன்ற கொங்கைகளையும் திருநுதலையும் உடைய உமா தேவியார்
இறைவனது கருணையினால் தன் முலைப் பாலைப் பொற்கிண்ணத்தில் ஊட்டவும் அப்பொழுதே
ஞானத்திரளாகி முன்னின்ற திருஞான சம்பந்தர், மயக்கம் நீங்கிய சீகாழித்
தலத்தின் முதல்வனும், ஊழி முதல்வனுமாகிய இறைவன் ஆகாயத்தில் உள்ளான் என்று
காட்டவல்லான்,

3.வீழி மிழலைப் படிக்காசு கொண்டபிரான்
பாழி அமணைக் கழுவேற்றினான் பாணர்
யாழை முறித்தான் எரிவாய் இடும் பதிகம்
ஆழி உலகத் தழியாமற் காட்டினான்.
ஏழிசை வித்தகன் (வந்து) ஏனோரும் வானோரும்
திருவீழிமிலையில் படிக்காசுப் பெற்ற பிரான்; பெருத்த அமணர் கூட்டத்தைக்
கழுவேற்றினான். திருநீலகண்ட யாழ்ப்பாணரின் யாழை, யாழ்முரி என்னும் பாடலைப்
பாடி முரித்தான். எரிவாயிடும் பதிக மூலம் கடலால் சூழப்பட்ட இந்த உலகத்தை
அழியாமல் காப்பாற்றினான்; ஏழிசைகளிலும் வித்தகன்; மற்றவர்களும் தேவர்களும்
வந்து வணங்கும்.

4.தாழும் சரணச் சதங்கைப் பருவத்தே
பாலையும் நெய்தலும் பாடவலான் சோலைத்
திருவா வடுது றையில் செம்பொற் கிழிஒன்
றருளாலே பெற்றருளும் ஐயன் தெருளாத
தென்னவன் நாடெல்லாம் திருநீறு பாலித்த
காலில் சதங்கை அணியும் சிறு பருவத்திலேயே பாலை நிலத்தைப் பற்றியும்
நெய்தல் நிலத்தைப் பற்றியும் பாடும் திறம் பெற்றிருந்தார். சோலைகள் சூழ்ந்த
திருவாவடுதுறையில் செம்பொற் கிழியொன்று பெறும் அளவுக்கு அருள் பெற்றிருந்த
ஐயன்; தெளியாத பாண்டிய நாட்டில் திருநீறு அளித்த மன்னன்.

5.மன்னன் மருகல் விடம் தீர்த்த பிரான்பின்னைத்தென்
கோலக்கா வில்தாளம் பெற்றுஇக் குவலயத்தில்
மாலக்கா லத்தே மாற்றினான் ஞாலத்து
முத்தின் சிவிகை அரன் கொடுப்ப முன்னின்று
தித்தித்த பாடல் செவிக்களித்தான் நித்திலங்கள்
திருமருகலில் பாம்பு கடித்து இறந்த கணவனை உயிர் பெற்றெழச் செய்தவன்;
திருவோலக்காவில் பொற்றாளம் பெற்று இக் குவலயத்தின் மயக்கத்தை மாற்றியவன்;
சிவ பெருமான் முத்துச்சிவிகையைக் கொடுப்ப முன்னின்று தித்தித்த தேவாரப்
பாடல்களைச் செவிக்கு விருந்தாக அளித்தவன்.

6.மாடத் தொளிரும் மறைக்காட் டிறை கதவைப்
பாடி அடைப்பித்த பண்புடையான் நீடும்
திருவோத்தூர் ஆண்பனையைப் பெண்பனைஆ கென்னும்
பெருவார்த்தை தான் உடைய பிள்ளை மருவினிய
கொள்ளம்பூ தூர்க்குழகன் நாவா யது கொடுப்ப
முத்துக்கள் மாடங்களில் பிரகாசிக்கும் திருமறைக்காட்டில் (வேதாரண்யத்தில்)
முடியாமல் இருந்த கோயில் கதவை, திருப்பதிகம் பாடி மூடும்படி செய்தான்.
நீண்ட புகழை உடைய திருவோத்தூரில் (இப்போது செய்யாறு என வழங்கப்படுகிறது)
ஆண் பனையைப் பெண் பனை ஆகுமாறு செய்த அருளாளன்; மணமிகுந்த கொள்ளம்பூதூர்
இறைவன் ஓடம் தர,

7.உள்ளமே கோலாக ஊன்றினான் வள்ளல்
மழவன் சிறு மதலை வான்பெருநோய் தீர்த்த
குழகன் குலமறையோர் கோமான் நிலவிய
வைகை ஆற் றே டிட்டு வான்நீர் எதிர்ஒட்டும்
செய்கையான் மிக்க செயலுடையான் வெய்யவிடம்
உள்ளத்தையே துடுப்பாகக் கொண்டு படகைச் செலுத்தினான்; வள்ளல் மழவனுடைய
குழந்தையினது பெருநோயினைத் தீர்த்த அழகன். கவுணியர் குலக் கோமான்; வைகை
ஆற்றின் வெள்ளத்தில் ஏட்டை எதிர் ஓட்டும் செய்கையால் மிக்க செயலுடையான்,

8.மேவி இறந்த அயில் வேற்கண் மடமகளை
வாவென் றழைப்பித் திம் மண்ணுலகில் வாழ்வித்த
சீர்நின்ற செம்மைச் செயலுடையான் நேர்வந்த
புத்தன் தலையைப் புவிமேல் புரள்வித்த
வித்தகப் பாடல் விளம்பினான் மொய்த்தொளிசேர்
மயிலாப்பூரில் கொடிய விஷத்தால் இறந்த வேல் போன்ற கண்களை உடைய பூங்கோதையை,
வா என்று அழைத்து இம் மண்ணுலகில் வாழ்வித்த சீர்நின்ற செம்மைச்
செயலுடையான்; எதிரிட்டு வந்த புத்த மதத்தைச் சேர்ந்தவனது தலையைப் புவிமேல்
புரள்வித்த வித்தகப் பாடலைப் பாடியவன்,

9.கொச்சைச் சதுரன் தன் கோமானைத் தான் செய்த
பச்சைப் பதிகத் துடன்பதினா றாயிரம்பா
வித்துப் பொருளை விளைக்க வலபெருமான்
முத்திப் பகவ முதல்வன் திருவடியை
அத்திக்கும் பத்தர்எதிர்ஆணைநம தென்னவலான்
ஒளி மிகுந்த கொச்சை எனப்படும் சீகாழிச் சதுரனாகிய இறைவன் மீது பாடிய
பதிகத்துடன் பதினாறாயிரம் தேவாரப் பாடல்களைப் பாடவல்ல, முத்தி தரும் இறைவன்
திருவடியை அடைய பக்தி மார்க்கத்தை நமதென்று சொல்ல வல்லவன்,

10.கத்தித் திரிபிறவிச் சாகரத்துள் ஆழாமே
பத்தித் தனித்தெப்பம் பார்வாழத் தந்தபிரான்
பத்திச் சிவம் என்று பாண்டிமா தேவியொடும்
கொற்றக் கதர்வேற் குலச்சிறையும் கொண்டாடும்
அற்றைப் பொழுதத் தமணர்இடும் வெந்தீயைப்
ஓலமிட்டுத் திரிகிற பிறவியாகிய கடலில் ஆழ்ந்து போகாமல், பக்தியாகிய
ஒப்பற்ற தெப்பத்தை உலகம் வாழத் தந்த பிரான்; பத்திச் சிவமென்று பாண்டிமா
தேவியொடும் கொற்றக் கதிர் வேலையுடைய அமைச்சராகிய குலச்சிறையாரும்
கொண்டாடும் அன்று சமணர்கள் இட்ட வெந்தீயை,

11.பற்றிச் சுடுகபோய்ப் பாண்டியனை என்னவல்லான்
வர்த்தமா னீசர் கழல்வணங்கி வாழ் முருகன்
பத்தியை ஈசன் பதிகத்தே காட்டினான்
அத்தன் திருநீல நக்கற்கும் அன்புடையான்
துத்த மொழிக்குதலைத் தூயவாய் நன்னுதலி
பற்றிச் சுடுக போய்ப் பாண்டியனை என்ன வல்லான்; திருப்புகலூரில்
வர்த்தமானீச்சரம் என்னும் கோயிலில் எழுந்தருளிய சிவபெருமான் பாதங்களைப்
பணிந்து, வாழ் முருகன் பத்தியை ஈசன் பதிகத்தே காட்டினான். அத்தன் திருநீல
நக்கற்கும் அன்புடையான். துத்தம் என்னும் இசை நரம்பை ஒழிக்கும் குழந்தை
தூயவாய்,

12.நித்தில்லப்பூண் முலைக்கும் நீண்டதடங் கண்ணினுக்கும்
கொத்தார் கருங்குழற்கும் கோலச்செங் கைம்மலர்க்கும்
அத்தா மரை அடிக்கும் அம்மென் குறங்கினுக்கும்
சித்திரப்பொற் காஞ்சி சிறந்தபே ரல்குலுக்கும்
முத்தமிழ்நூல் எல்லாம் முழுதுணர்ந்த பிள்ளையார்க்கு
(மனைவியின் சிறப்பைக் கூறுகின்றார்) நல்ல நெற்றியையுடைய முத்து அணிந்த
முலைகளுக்கும், நீண்ட பெரிய கண்களுக்கும், கொத்தார் கரிய கூந்தலுக்கும்,
கோலச் செங்கைம் மலர்க்கும், அந்தாமரையடிக்கும் அழகிய மென்மையான
தொடைகளுக்கும் சித்திரப் பொற் காஞ்சி செறிந்த பேர் அல்குலை உடையாளுக்கும்
முத்தமிழ் நூல் எல்லாம் உணர்ந்த நம் திருஞான சம்பந்தர்க்கும்,

13.ஒத்த மணம் இது என் றோதித் தமர்களெல்லாம்
சித்தம் களிப்பத் திருமணம் செய் காவணத்தே
அற்றைப் பொழுதத்துக் கண் டுட னேநிற்க
பெற்றவர்க ளோடும் பெருமணம் போய்ப் புக்குத்தன்
அத்தன் அடியே அடைந்தான் அழகிதே.
ஒத்த மணம் இது என்று ஓதி, சுற்றத்தார் எல்லாம் மனம் களிக்க திருமணம் செய்த
பந்தலில், அன்றைய தினமே எல்லாரும் கண்டு மகிழ, பெற்றவர்களோடும்
திருநல்லூர்ப் பெருமணம் என்னும் திருக்கோயிலுக்குச் சென்று, கோயிலினுள்
புகுந்து தன் அத்தன் அடியே மகிழ்ந்து அடைந்தான். அப்போது எழுந்த
பெருஞ்சோதியில் திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் மூழ்கி முத்தி
பெற்றனர்.

Similar topics
» நம்பியாண்டார் நம்பிகள் அருளிய திருநாவுக்கரசு தேவர் திரு ஏகாதசமாலை
» பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்: விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்
» பிள்ளையார்.. பிள்ளையார்.. பெருமை வாய்ந்த பிள்ளையார்..
» நம்பியாண்டார் நம்பி
» மார்கழி பிள்ளையார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum