Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்by vpoompalani March 24th 2016, 13:59
» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26
» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17
» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06
» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07
» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58
» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24
» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35
» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52
» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18
» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47
» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19
» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46
» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49
» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37
» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07
» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29
» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38
» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55
» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00
» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49
» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28
» திருத்தல யாத்திரை ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51
» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33
» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46
» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28
» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13
» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29
» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15
» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10
» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29
» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54
» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38
» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42
» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32
» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01
» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20
» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00
அமாவாசை நிலா
Page 1 of 1
அமாவாசை நிலா
அமாவாசையன்று நிலா தோன்றுமா! நிச்சயம் தோன்றும்.அன்னை அபிராமியை பூரணமாக
நம்புவோருக்கு நடக்காது என்று நினைத்தது கூட நடந்து விடும். தை அமாவாசை
நாளில், தன் பக்தனுக்காக நிலாவை வரவழைத்த திருக்கடையூர் அபிராமி அன்னையை
இந்த வாரம் தரிசிப்போம்.
தல வரலாறு:
சிவனிடம் பிரம்மா ஞான உபதேசம் பெற கைலாயம் சென்றார். அவரிடம் சிவன் சில
வில்வ விதைகளைக் கொடுத்து, பூலோகத்தில் எவ்விடத்தில் இது விதைக்கப்பட்ட ஒரு
நாழிகைக்குள் மரம் வளர்கிறதோ, அவ்விடத்தில் உபதேசம் செய்வதாக கூறினார்.
அதன்படி பிரம்மா, திருக்கடையூரில் விதைக்க, மரம் வளர்ந்தது. அங்கு சிவன்
அவருக்கு காட்சி தந்து ஞான உபதேசம் செய்தார். இதனால், சிவனுக்கு "ஆதி
வில்வவனநாதர்' என்ற பெயர் ஏற்பட்டது. ஒருசமயம், பாற்கடலில் அமிர்தம் எடுத்த
தேவர்கள், விநாயகரை வணங்க மறந்து, அதைப் பருக முயன்றனர். விநாயகர்
அமிர்தக்குடத்தை மறைத்து விட்டார். பின் விநாயகரிடம் மன்னிப்பு கேட்டு
அதைப் பெற்ற தேவர்கள் குடத்தை அவர் முன் வைத்து பூஜித்தனர். குடம் இருந்த
இடத்தில் லிங்கம் ஒன்று உருவானது. அவருக்கு "அமிர்தகடேஸ்வரர்' என்ற பெயர்
ஏற்பட்டது.
அபிராமி சிறப்பு:
அபிராமி அன்னை மகாவிஷ்ணுவின் ஆபரணத்தில் இருந்து தோன்றினாள். ஒரு சமயம்,
சுப்பிரமணிய பட்டர் என்பவர் அம்பாளின் முகத்தை பார்த்து மெய்மறந்து
நின்றார். அப்போது, சந்நிதிக்கு சரபோஜி மன்னர் வந்தார். அவர் பட்டரிடம்,
""இன்று என்ன திதி?'' என்றார். அன்று தை அமாவாசை. ஆனால், பட்டர் அம்பாளின்
பிரகாசமான முகத்தைப் பார்த்தபடியே "இன்று பவுர்ணமி' என்றார். கோபமடைந்த
மன்னர், அன்று இரவு நிலா வராவிட்டால், மரண தண்டனை என அறிவித்து விட்டு
சென்றார். இதன்பிறகே, நடந்ததை அறிந்த பட்டர், அம்பாளிடம் தன்னைக்
காப்பாற்றுமாறு அன்னையைப் புகழ்ந்து பாடினார். அந்நூலே புகழ் பெற்ற
"அபிராமி அந்தாதி' ஆகும். இதற்குள் மாலை வந்து விடவே, பட்டர் 79ம் பாடலை
முடித்திருந்தார். அப்போது அபிராமி தன் காதில் அணிந்திருந்த சந்திர அம்ச
தோட்டை வானில் எறியவே, அது முழுநிலவாக காட்சி தந்தது.
இந்த நிகழ்ச்சி தை
அமாவாசையன்று இப்போதும் நடத்தப்படுகிறது. அன்று அம்பிகை புஷ்ப
அலங்காரத்தில் காட்சி தருவாள். கொடிமரம் அருகில் அர்ச்சகர்கள் அந்தாதி
பாடுவர். 79ம் பாடல் பாடும்போது, கோயிலுக்கு வெளியில் மின்விளக்கை எரியச்
செய்கிறார்கள். இந்நாளில், மாங்கல்ய தோஷம் உள்ள பெண்கள், புதுத்தாலியை
அம்பாள் பாதத்தில் வைத்து கட்டிக்கொள்வர். பழைய தாலியை காணிக்கையாக
செலுத்தி விடுவர்.
காலசம்ஹார மூர்த்தி:
மார்க்கண்டேயரின் ஆயுள் 16 வயதில் முடிவதாக இருந்தது. அவரது தந்தை
வருத்தப்பட்டார். தந்தையின் வருத்தத்தைப் போக்க, அவர் திருக்கடையூர்
வந்தார். எமன் விரட்டினான். மார்க்கண்டேயர், அமிர்தகடேஸ்வரரை
கட்டியணைத்துக் கொண்டார். எமனை உதைத்து சம்ஹாரம் செய்தார் அமிர்தகடேஸ்வரர்.
இவர் காலசம்ஹார மூர்த்தி என்ற பெயரில் அருளுகிறார். இவரது காலடியில் எமன்
இருக்கிறான். இந்த சந்நிதியில் பாலாம்பிகை சிறுமி வடிவில் காட்சி
தருகிறாள். அருகில் லட்சுமி, சரஸ்வதி உள்ளனர்.
கடையூர் ரகசியம்: சிதம்பரத்தில்
ஆகாய ரகசியம் போல, இங்குசுவாமிக்கு வலப்புறமுள்ள மதிலில் யந்திர தகடு
உள்ளது. இதனை, "திருக்கடையூர் ரகசியம்' என்கிறார்கள். இந்த தகட்டை
வணங்கினால் ஆயுள் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. பூர்ணாபிஷேகம் (100வயது
பூர்த்தி), கனகாபிஷேகம் (90வயது), சதாபிஷேகம் (80வயது), பீமரதசாந்தி
(70வயது), மணிவிழா (60 வயது) மற்றும் ஆயுஷ்ய ஹோமம் செய்வது இங்கு விசேஷம்.
கட்டணம் உண்டு.
சிறப்பம்சம்: திருக்கடையூர்
கோயிலில் பாபகரேஸ்வரர் மற்றும் புண்ணியகரேஸ்வரரை வணங்கியபின்பே, மற்ற
சுவாமிகளை வழிபட வேண்டும். பிரகாரத்தில் பார்வதி, முருகனை வலது மடியில்
அமர்த்திய கோலத்தில் "குகாம்பிகை'யாக இருக்கிறாள். "கள்ளவாரண பிள்ளையார்'
துதிக்கையில் அமிர்த கலசத்துடன் காட்சியளிக்கிறார்.
இருப்பிடம்: மயிலாடுதுறையில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் ரோட்டில், 26 கி.மீ.,
திறக்கும் நேரம்: காலை 6- 1, மாலை 4 - 9.
போன்: 04364- 287 429.

Similar topics
» தை அமாவாசை மற்றும் ஆடி அமாவாசை தினங்களில் மட்டும் தர்ப்பணம் செய்தாலே ஆண்டு முழுவதும் தர்ப்பணம் செய்ததற்கு சமம் என்பது முன்னோர் வாக்கு.
» ஆடி அமாவாசை
» நலம் தரும் ஆடி அமாவாசை
» நாளை 6.8.2013 ஆடி அமாவாசை!
» அமாவாசை திதியில் பிறந்தவன் திருடனா ?
» ஆடி அமாவாசை
» நலம் தரும் ஆடி அமாவாசை
» நாளை 6.8.2013 ஆடி அமாவாசை!
» அமாவாசை திதியில் பிறந்தவன் திருடனா ?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum