Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்by vpoompalani March 24th 2016, 13:59
» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26
» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17
» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06
» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07
» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58
» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24
» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35
» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52
» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18
» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47
» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19
» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46
» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49
» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37
» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07
» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29
» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38
» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55
» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00
» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49
» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28
» திருத்தல யாத்திரை ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51
» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33
» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46
» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28
» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13
» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29
» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15
» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10
» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29
» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54
» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38
» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42
» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32
» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01
» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20
» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00
நலம் தரும் ஆடி அமாவாசை
Page 1 of 1
நலம் தரும் ஆடி அமாவாசை
இந்து சைவ மக்களுக்கு ஆடி அமாவாசை திதி வரும் ஆடி மாதம் முக்கியத்துவம்
வாய்ந்ததொரு மாதமாகத் திகழ்கிறது. ஆடிப்பிறப்பு, ஆடி அமாவாசை விரதம், ஆடி
அமாவாசை தீர்த்தம், ஆடிப்பூரம் முதலானவைகள் எல்லாம் ஆடி மாதத்தில் வருகின்ற
இந்து மதம் சார்ந்த புனித நிகழ்வுகளாகவே உள்ளன. இவற்றில் ஆடி அமாவாசை
விரதமும், ஆடி அமாவாசை தீர்த்தமும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பு
நிகழ்வாக இந்து சைவ மக்கள் மத்தியில் பிரபல்யம் பெற்று விளங்குகின்றது.
ஆடி
அமாவாசை தீர்த்தமும் விரதமும் இலங்கையில் வாழும் இந்து சைவ மக்களிடையே
மிகவும் புனிதத்துவம் வாய்ந்த பாரம்பரியம் மிக்க சமய நிகழ்வாக திகழ்கிறது.
எதிர்வரும்
30.07.2011 ஆம் திகதி ஆடி அமாவாசை விரதம், ஆடி அமாவாசை தீர்த்த உற்சவ
தினமாகும். இத்தினத்தில் இலங்கையில் பல இடங்களில் ஆடி அமாவாசை தீர்த்த
உற்சவம் இடம்பெறவுள்ளது.
இவற்றில் கொழும்பு மாவட்டம் முகத்துவாரம், யாழ்ப்பாண மாவட்டம் கீரிமலை,
மட்டக்களப்பு
மாவட்டம் மாமாங்கம் அமிர்தகழி திருகோணமலை மாவட்டம் மூதூர் கங்குவேலி ஆகிய
இடங்களில் இடம்பெறும் ஆடி அமாவாசை தீர்த்த உற்சவங்கள் மிகவும் பக்தி
பூர்வமான மகத்துவமான வைகளாக உள்ளன.
கொழும்பு மாவட்டம்
முகத்துவாரத்தில் ஆடி அமாவாசை தீர்த்த உற்சவம் கடலில் சமுத்திர தீர்த்த
உற்சவமாக நிகழ்கிறது. யாழ்ப்பாண மாவட்டம் கீரிமலையில் பிரதான ஆடி அமாவாசை
தீர்த்த உற்சவம் கடலில் சமுர்த்திர தீர்த்த உற்சவமாக நிகழ்கிறது.
இதேவேளையில் தீர்த்தக்கேணி வாய்க்கால் ஆகிய இடங்களில் அடியார்கள் தீர்த்தம்
ஆடும் நிகழ்வுகள் இங்குண்டு.
மட்டக்களப்பு மாவட்டம் மாமாங்கத்தில்
அமிர்தகழி தீர்த்தக்குளத்தில் ஆடி அமாவாசை தீர்த்த உற்சவம் நிகழ்கிறது.
திருகோணமலை மாவட்டம் மூதூர் கங்குவேலியில் மகாவலி கங்கையில் கங்கை
தீர்த்தமாக ஆடி ஆமாவாசை தீர்த்த உற்சவம் நிகழ்கிறது. இவ்விடங்களில் வருடா
வருடம் இந்து சைவ, மக்கள் ஆடி அமாவாசை விரதம் நோற்று பிதிர்கடன் நிறைவேற்றி
தீர்த்தமாடுவது நீண்ட நெடுங்காலமாக வழக்கில் இருந்து வருகிறது.
ஆடி அமாவாசை விரதம்.
விரத
வகைகளிலே ஆடி அமாவாசை விரதம் தந்தையை இழந்தவர்களுக்கான முக்கியத்துவம்
வாய்ந்த விரதமாகும். சித்திரை பூரணை விரதம் அன்னையை இழந்தவர்களுக்கான
விரதமாகும். இவை பிதிர் விரதங்களாகும்.
அமாவாசை என்பது சூரியனும்,
சந்திரனும் ஓர் இராசியில் சேர்ந்திருக்கும் நாளை குறிப்பதாகும். ஆடி
அமாவாசை தினம் வானியலும், சோதிடம், விஞ்ஞானம் இணைந்த விளக்கங்களை
கொண்டுள்ளது.
உலக இயக்க நாயகனான சூரியனும், வாழ்வுக்கு இதம் தரும்
குளிர் நாயகனான சந்திரனும் ஒரே பாகையில் பூமிக்கு நேராகவரும் போது அமாவாசை
தினம் உண்டாகிறது. சந்திரன் பூமியில் இருந்து பிரிந்து பூமியை சுற்றி
வருகின்ற மார்க்கத்தில் ஆடி மாதத்தில் புவிக்கும் சூரியனுக்கும் 180
பாகையில் வரும் போது ஏற்படும் அமாவாசை திதி ஆடி அமாவாசை தினமாகும்.
சந்திரனும்
சூரியனும் ஒரே ராசியில் வரும் புனிதமான தினம் தேவர்களுக்கும்
மனிதர்களுக்கும் அகபோகம் மிக்க முக்கியமான தினமாக கருதப்படுகிறது. சகல
தேவர்களும் அமாவாசை தினத்தில் அதிதிகளாவர். உயிர்களுக்கு சுகபோகமான மாறுதலை
உணர்த்தும் நாளென்று குறிப்பிடப்படும் அமாவாசை நாள் முன்னறி தெய்வமான
தந்தையை இழந்தவர்கள் விரதம் நோற்கப்பட வேண்டிய புனித நாளாக கருதப்படுகிறது.
இதனால்
அமாவாசை நன்னாள் நோன்பு நோற்று விரதம் காத்து தந்தைக்கு பிதிர் கடன்
நிறைவேற்றும் புனித தினமாகவும், தேவர்களையும், இறைவனையும் மதித்து அவர்களை
மகிழ்ச்சியடையச் செய்யும் புண்ணிய தினமாகவும் விளங்குகின்றது.
சிவலோகமடையும் உயிர்கள்
இறந்தவர்களின்
தூலவுடம்பும், ஆக்குமவுடம்பும், பிறவிக்குக் காரணமாக வினையும்
தகனக்கிரியை, அந்தியேட்டிக்கிரியை முதலானவற்றால் நீங்கவிடும். இருந்தும்
ஒருவர் இறக்கும்போது தூல சரீரம் அழிந்து போகிறது. சூக்கும சரீரம்
உண்மையிலேயே அழிவதில்லை. சூக்கும சரீரத்தோடு செல்லும் உயிர் பூமியில் செய்த
வினைகளுக்கேற்ப இன்ப, துன்பங்களை சொர்க்கத்திலும், நரகத்திலும்
அனுபவிக்கும் இவ்வாறு அனுபவிக்காத எச்ச வினைகளை புவியில் கழிக்க உயிரானது
மீண்டும் புவியில் வந்து பிறக்கிறது.
அபத்தி பூர்வமாகச்
செய்தவினைகள் அந்தியேட்டி தகனக்கிரியைகளால் நீங்கும். புத்திபூர்வமாகச்
செய்த வினைகள் என்றும் அனுபவித்தே ஆகவேண்டும். இவ்வினை நீக்கத்திற்கு
பிதிர்கடன் மிகவும் முக்கியமானதாகும்.
உயிர் சபிண்டீ கரணம் என்னும்
கிரியையினாலே சிவலோகத்தை அடையும். அங்கு பிதாவினுடைய உயிர் ஸ்கந்த சொரூபமாக
இருக்கும். பாட்டனுடைய உயிர் சபீண்டீகரண மண்டபத்திலே ஸ்கந்த சொரூபியாக
இருக்கும். முப்பாட்டனுடைய உயிர் காணாதிப பதத்திலே காணாத சொரூபியாக
இருக்கம். இவர்களுக்கு தலைவர்களாக ஸ்கந்த, சண்ட கணாதீசர் என்னும் மூவர் அதி
தெய்வங்களாக விளங்குவர். இவர்கள்தான் பிதிர் தேவதைகள் என்று
அழைக்கப்படுகின்றனர்.
அத்தேவதைகளை ஆராதனை செய்து வழிபடுவது
சிரார்த்தம் எனப்படும் நிர்வாண தீட்சை பெற்றவர்களின் பிதிர் தேவதைகள் ஈசர்,
சதாசிவர், சாந்தர் எனப்படுவர். இறக்கும் கால நேரங்களை பொறுத்து உயிர்களை
நற்பேறடையச் செய்ய சிரார்த்தம் இன்றியமையாதது. மாதா மாதம் வரும் அமாவாசை
தந்தை வழி பிதிர் கருமத்திற்கு சிறப்பானது. எனினும் ஆடி அமாவாசையே தந்தை
வழி பிதிர் கருமத்திற்கு மிகவும் புனிதமானதும், சிறப்பானதுமாகும்.
பிதிர் கடன்
ஆடி
அமாவாசை விரதம் முன்னறி தெய்வமான தந்தையின் ஆவிக்குரியது. “தந்தை
சொல்மிக்க மந்திரம் இல்லை” என்ற ஒளவை வாக்கும், “தந்தையோடு கல்வி போம்”
என்ற முன்னோர் வாக்கும், தந்தையின் பெருநிலையினை எமக்கு
சுட்டிக்காட்டுகின்றன. தந்தைக்கு நிகரானவர் எவரும் இல்லை உலகில் இதனால்
தந்தைக்கு செய்ய வேண்டிய பிதிர் கடனை தப்பாமல் செய்ய வேண்டும்.
தந்தையை
இழந்தவர்கள் ஆடி அமாவாசை தினத்தில் விரதம் இருந்து எள்ளும் தண்ணீரும்
இறைத்து புணிதம்மிகு புண்ணிய தீர்த்தம் ஆடி அறுசுவை உணவு தயாரித்து
காற்றோட்டக் காயும் பொரித்து பாசமிகு தந்தையின் ஆத்மாவுக்கு படைக்க
‘ரிqனிu.
தந்தையின் ஆத்மாவுக்கு உணவு படைத்த பின்னர் ஒரு பிடிசோறு
காகத்துக்கு வைத்து, சிவனடியாருக்கு உணவளித்து தாமும் உணவு உண்ண வேண்டும்.
அன்றைய இரவு பால் பழம் உண்டு ஆடி அமாவாசை விரதத்தை நிறைவு செய்து
கொள்ளலாம்.
இந்த விதமாக ஆடி அமாவாசை தினத்தில் பாரம்பரிய முறையில்
பிதிர்கடன் செலுத்தி நல்வாழ்வுபெற அனைவரும் தம்¨மை தயார்படுத்திக்
கொள்ளவேண்டும்.

Similar topics
» நலம் தரும் தீப வழிபாடு
» நலம் தரும் குத்துவிளக்கு
» உடல் நலம் தரும் விரல் முத்திரைகள்
» தை அமாவாசை மற்றும் ஆடி அமாவாசை தினங்களில் மட்டும் தர்ப்பணம் செய்தாலே ஆண்டு முழுவதும் தர்ப்பணம் செய்ததற்கு சமம் என்பது முன்னோர் வாக்கு.
» ஆடி அமாவாசை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum