HinduSamayam
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

HinduSamayam
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
HinduSamayam
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்
by vpoompalani March 24th 2016, 13:59

» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26

» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17

» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06

» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07

» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58

» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24

» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35

» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52

» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20

» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18

» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37

» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47

» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19

» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46

» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49

» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37

» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07

» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29

» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38

» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55

» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00

» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49

» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28

» திருத்தல யாத்திரை  ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51

» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33

» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46

» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28

» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13

» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29

» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15

» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10

» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29

» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54

» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38

» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42

» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32

» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01

» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20

» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00

தமிழர்களின் சிந்தனைகளம்
Related Posts Plugin for WordPress, Blogger...



அர்த்தமுள்ள இந்து மதம் - கவிஞர் கண்ணதாசன்

Go down

அர்த்தமுள்ள இந்து மதம் - கவிஞர் கண்ணதாசன் Empty அர்த்தமுள்ள இந்து மதம் - கவிஞர் கண்ணதாசன்

Post by மாலதி July 17th 2011, 17:34

அர்த்தமுள்ள இந்து மதம் - கவிஞர் கண்ணதாசன்
‘மனிதன் சமூக வாழ்க்கையை மேற்கொண்டு விட்ட ஒரு மிருகம்’ என்றார் ஓர் ஆங்கில அறிஞர்
காட்டு மிராண்டிகளாகச் சிதறிக்கிடந்த மனிதர்கள் குடிபெயர்ந்து ஊர்ந்து
வந்து ஓரிடத்தில் சேர்ந்தார்கள். அதனால் அவர்கள் சேர்ந்து வாழ்ந்த இடம்
‘ஊர்’ என்று அழைகப்படது.
அதில் பலர் நகர்ந்து வந்து பெருங்கூட்டமாக ஓரிடத்தில் குடியேறினார்கள். அவ்விடம் ‘நகரம்’ என்றழைக்கப்பட்டது.
தனி மனிதர்கள் ‘சமூக’மாகி விட்டார்கள்.
தனி மனிதனுக்கான நியதிகளோடு சமுதாயத்திற்காகச் சில சம்பிரதாயங்களும் உருவாயின.
அந்தச் சம்பிரதாயங்களுள் சில புனிதமாக்க் கருதப்பட்டு தருமங்களாயின.
கணவன் - மனைவி உறவு, தாய்-தந்தை பிள்ளைகள் உறவு, தயாதிகள்- பங்காளிகள் உறவு, ஊர்ப்பொது நலத்துக்கான கூட்டுறவு முதலியவைகள் தோன்றின.
தந்தைவழித் தோன்றல்களெல்லாம் ‘பங்காளி’ களாவும், தந்தையுடன் பிறந்த சகோதரிகளெல்லாம் ‘தாயாதி’ களாகவும் ஒரு மரபு உருவாயிற்று.
வார்த்தைகளை கவனியுங்கள்.
தந்தைவழி பங்குடையவன் என்பதாலே ‘பங்காளிய யாகவும், தாயை ஆதியாக வைத்து விளைந்த சகோதரத்துவம் ‘தாயாதி’ என்றும் கூறப்பட்டது.
‘சகோதரன்’ என்ற வார்த்தையே ‘சக உதரன்- ஒரே வயிற்றில் பிறந்தவன்’ என்பதைக் குறிக்கும்.
சம்பிரதாயங்களாகத் தோன்றிய உறவுகள் மரபுகளாகி, அந்த மரபுகள் எழுதாத சட்டங்களாகிவிட்டன.
இந்த உறவுகளுக்குள்ளும், பொதுதவாகச் சமூகத்திலும் நிலவ வேண்டிய ஒழுக்கங்கள் சம்பிரதாயங்களாகி, மரபுகளாகி, அஐயும் சட்டங்களாகி விடன.
இந்தச் சட்டங்களே நமது சமூகத்தின் கௌரவங்கள்: இந்த வேலிகள் நம்மைக் காவல் செய்கின்றன.
இந்த உறவுகள், ஒழுக்கங்களுக்கும் நம்மதிக்குமாக உருவாக்கப்பட்டவை.
ஆனால் இவை மட்டும்தானா உறவுகள்?
இந்து மதம் அதற்கொரு விளக்கம் சொல்கிறது.
“பிறப்பால் தொடரும் உறவுகளல்லாமல், பிணைப்பால் தொடரும் உறவுகளே உன்னதமானவை என்பது இந்துமதத்தத்துவம்
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

அர்த்தமுள்ள இந்து மதம் - கவிஞர் கண்ணதாசன் Empty கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் - 01

Post by மாலதி July 17th 2011, 17:36

1. உறவு
*******
‘மனிதன் சமூக வாழ்க்கையை மேற்கொண்டு விட்ட ஒரு மிருகம்’ என்றார் ஓர் ஆங்கில அறிஞர்
காட்டு மிராண்டிகளாகச் சிதறிக்கிடந்த மனிதர்கள் குடிபெயர்ந்து ஊர்ந்து
வந்து ஓரிடத்தில் சேர்ந்தார்கள். அதனால் அவர்கள் சேர்ந்து வாழ்ந்த இடம்
‘ஊர்’ என்று அழைகப்படது.
அதில் பலர் நகர்ந்து வந்து பெருங்கூட்டமாக ஓரிடத்தில் குடியேறினார்கள். அவ்விடம் ‘நகரம்’ என்றழைக்கப்பட்டது.
தனி மனிதர்கள் ‘சமூக’மாகி விட்டார்கள்.
தனி மனிதனுக்கான நியதிகளோடு சமுதாயத்திற்காகச் சில சம்பிரதாயங்களும் உருவாயின.
அந்தச் சம்பிரதாயங்களுள் சில புனிதமாக்க் கருதப்பட்டு தருமங்களாயின.
கணவன் - மனைவி உறவு, தாய்-தந்தை பிள்ளைகள் உறவு, தயாதிகள்- பங்காளிகள் உறவு, ஊர்ப்பொது நலத்துக்கான கூட்டுறவு முதலியவைகள் தோன்றின.
தந்தைவழித் தோன்றல்களெல்லாம் ‘பங்காளி’ களாவும், தந்தையுடன் பிறந்த சகோதரிகளெல்லாம் ‘தாயாதி’ களாகவும் ஒரு மரபு உருவாயிற்று.
வார்த்தைகளை கவனியுங்கள்.
தந்தைவழி பங்குடையவன் என்பதாலே ‘பங்காளிய யாகவும், தாயை ஆதியாக வைத்து விளைந்த சகோதரத்துவம் ‘தாயாதி’ என்றும் கூறப்பட்டது.
‘சகோதரன்’ என்ற வார்த்தையே ‘சக உதரன்- ஒரே வயிற்றில் பிறந்தவன்’ என்பதைக் குறிக்கும்.
சம்பிரதாயங்களாகத் தோன்றிய உறவுகள் மரபுகளாகி, அந்த மரபுகள் எழுதாத சட்டங்களாகிவிட்டன.
இந்த உறவுகளுக்குள்ளும், பொதுதவாகச் சமூகத்திலும் நிலவ வேண்டிய ஒழுக்கங்கள் சம்பிரதாயங்களாகி, மரபுகளாகி, அஐயும் சட்டங்களாகி விடன.
இந்தச் சட்டங்களே நமது சமூகத்தின் கௌரவங்கள்: இந்த வேலிகள் நம்மைக் காவல் செய்கின்றன.
இந்த உறவுகள், ஒழுக்கங்களுக்கும் நம்மதிக்குமாக உருவாக்கப்பட்டவை.
ஆனால் இவை மட்டும்தானா உறவுகள்?
இந்து மதம் அதற்கொரு விளக்கம் சொல்கிறது.
“பிறப்பால் தொடரும் உறவுகளல்லாமல், பிணைப்பால் தொடரும் உறவுகளே உன்னதமானவை என்பது இந்துமத்த்தத்துவம்
பிறப்பின் உறவுகளே பேதலிக்கின்றன.
பெற தந்தையைப் பிச்சைகு அலையவிடும் மகன் இருக்கின்றான்.
கட்டிய தாரத்தையும் பட்டின் போடும் கணவன் இருக்கின்றான்.
தாயைத் தவிக்கவிட்டுத் தாரத்தின் பிடியில் லயித்துக் கடக்கும் பிள்ளை இருக்கிறான்.
கூடப் பிறந்தவனே கோர்ட்டுப் படிக்கட்டுகளில் ஏறி எதிராக நிற்கிறான்.
சமூக மரபுகள் இவற்றை ஒழுக்க் கேடாக்க் கருதவில்லை.
முதலில் நமது சமூகங்களுக்கு, ‘இவையும் ஒழுக்க் கேடுகள்’ என்று போதித்தது இந்து மதம்.
கணிகை ஒருத்தியைக் கட்டிலில் போட்டு இரவு முழுவதும் விளையாடுகிறோம்.
இச்சை தீர்ந்ததும், அவளைத் தள்ளில் படு என்றுதான் சொல்லத் தோன்றுகிறதே
தவிர, அங்கு நீக்கமுடியாத பிணைப்பு ஏற்படுவதில்லை.
அந்த உறவு இரவுக்கு மட்டுமே!
அலுவலகத்தில் வேலை பார்க்கிறோம். வேலையிலிருந்து விலகியதும், வேலை பார்த்த இடத்தை மறந்து விடுகிறோம். அந்தப் பிணைப்பு கூலிக்காகவே!
ஹோடலில் அறை எடுத்துக்கொண்டு தங்குவதுபோல் சில உறவுகள்,சொந்த வீட்டில் வாழ்வதுபோல் சில உறவுகள்.
ஆயிரம் வாசல் இதயம்! யாரோ வருகிறார்கள், யாரோ போகிறார்கள்!
வாழ்ந்தால் சிரிக்கிறாரகள். வறண்டால் ஒதுங்குகிறார்கள். செத்தப்பின் ஒப்புக்காக அழுகிறார்கள்.
இர்ண்டு ஆத்மாக்கள் ஐக்கியமாகி, ஓர்ஆத்மா தாக்கப்படும்போது இன்னொரு ஆத்மாவும் இயற்கையாகத் துடிக்குமானால், அந்த உறவே புனிதமான உறவு.
பிறப்பில் சொந்தமிருந்தாலும் சரி, இல்லா விட்டாலும் சரி.
எங்கே பந்தம் ஏற்றத்தாழ்வுகளில் சேர்ந்து வருகிறதோ, அங்கேதான் உறவிருக்கிறது.
கண்ணீரைத் துடைக்கின்ற கைகள், காயத்துக்கும் கடுப் போடம் கைகள்,
வறுமையில் பங்கு கொள்ளும் உள்ளம, சோதனையில் கூடவே வரும் நட்பு - உறவு
பூர்த்தியாகிவிடுகிறது.
“அற்ற களத்தி ன்றநீர்ப்பறவைபோல்
உற்றழித் தீர்வா ருறவல்லர் - அக்குளத்திற்
கொட்டியு மாம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி யுறுவா ருறவு!” -ஔவையார்
இதற்குப் புராணத்திலிருந்து ஒரு பகுதியை உதாரணம் காட்டி விரிவுரை தருகிறார், திருமுருக கிருபானந்த வாரியார்.
அதை அவருடைய வாசகத்திலேயே தருகிறேன்.
‘இடர் வந்த காலத்தில்தான் சிநேகிதர, பந்துக்கள் முதலியவர்களுடைய அன்பைத்
திட்டமாக அளந்தறியலாம். நமக்கு வரும் இடர்தான்,சிநேகிதரையும் உறவின்
முறையினரையும் அளகும் அளவுகோல். ஆதலால் அக்கேட்டிலும் ஒரு பலன் உளது
என்றார் பொய்யில் புலவர்.
கேட்டினும் உண்டோர் உறுதி; கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்.
இது சம்பந்தமாக, தரும்புத்திர்ர் வினவி, பீஷ்மர் கூறிய வியாக்கியானத்தை எடுத்துக் காட்டுவோம்.
காசிராஜனுடைய தேசத்தில் ஒரு வேடன், வடமுள்ள பாணத்தை எடுத்துக்கொண்டு,
சேரியிலிருந்து புறப்படுட் மானைத்தேடிப்போனான். அங்கு ஒருபெரிய வனதில்
மான்கள் அருகிலிருக்கக் கண்டு மாமிசத்தில் இச்சையுடைய அந்த வேடன்,ரு
மானையடிக்கக் குறிவைத்துக் கூரிய பாணத்தை விடதாதன். தடுக்கமுடியாத அந்தப்
பாணம் குறி தவறினதால், அக்கானகத்திலுள்ள ஒரு பெரிய தழைத்த
மரத்தின்மீதுபாய்ந்தது. கொடுயி விடந்தடவய கணையினால் மிக்க வேகத்துடன்
குத்தப்பட்ட அம்மரம், காய்களும் இலைகளும் உதிர்ந்து உலர்ந்து போயிற்று.
வானளாவி வளர்ந்தோங்கிநயிருந்த அத்தருவானது அவ்வாறு உலர்ந்தபோது, அதன்
பொந்துகளில் வெகுநாள்களாக வசித்திருந்த ஒரு கிளி, அம்மரத்தின் மேல்லுள்ள
பற்றினால் தன்னிருப்பிடதை விடவில்லை. நன்றியறிவுளதும் தருமத்தில்
மனமுள்ளதுமாகிய அந்தக் கிளி வெளியிற் சஞ்சரியாமலும், இரையெடாமலும்,
களைப்புற்றும் குரல் தழுதழுத்தும், மரத்துடன் கூடவே உளர்ந்தது.
மரஞ்செழிப்புற்றிருந்து போது அதனிடஞ் சுகித்திருந்தது போல், அது உலர்ந்து
துன்றபுறும்போது அதனை விட்டுப் பிரியாமல், தானுந்துன்புற்றிருந்தது. அந்தக்
கிளியின் உயர்ந்த குணத்தை நன்கு நோக்குங்கள்.
சிறந்த குணமுள்ளதும், மேலான சுபாவமுள்ளதும் மனிதர்க்கு மேற்பட்ட
நல்லொழுகமுடையதுமான அக்கிளி, அமர்ரத்தைப் போலவே சுகத்தையும் துக்கத்தையும்
அனுபவித்துக் கொண்டிருப்பதைக் கண்ட தேவேந்திரன் திகைப்படைந்தான். ‘திரிய்
ஜாதிகளுக்கு இல்லாத கருணையை இந்தப பட்சி அடைந்திருப்பது எவ்வகை?’ என்று
நினைத்தான்: பிறகு, ‘இதில் ஆச்சர்யப்படவேண்டியதில்லை. எல்லாப்
பிராணிகளிலும் குணம், குற்றம் எல்லாம் காணப்படுகின்றன. என்று எண்ணமும்
இந்திரனுக்கு உண்டாயிற்று.
இங்ஙனமெண்ணிய இந்திரன், மானிட உருவெடுத்து ஓர் அந்தணன்
வடிவமாகப்பூமியில் இறங்கி அந்தப் பட்சியைப் பார்த்து, ‘ஓ பட்ணசிகளிற்
சிறந்த கிளியே; உன்தாயாகிய தாக்ஷேயி உன்னால் நல்ல சந்ததியுள்ள வளாக
ஆகிறாள். கிளியாகிய உன்னை நான் கேட்கிறேன் உலர்ந்து போன இந்த மரத்தை ஏன்
விடாமலிருக்கிறாய்?” என்று கேட்டான்.
இமையவர் தலைவனாம் இந்திரானால் இவ்வாறு கேட்கப்பட்ட கிளியானது
அவனுக்குத்தலைவணங்கி நமாகாரம் புரிந்து, “தேவராஜாவே, உனக்கு நல்வரவு. நான்
தவத்தினால் உன்னைத் தெரிந்துகொண்டேன். என்று சொல்லிற்று. தேவேந்திரன்
“நன்று! நன்று!” என்று கூறி, ‘என்ன அறவு’ என்று மனத்திற்குள் கொண்டாடினான்.
“அறிவிற் சிறந்த பறவையே! இலைகளும் காய்களும் இன்றி உலர்ந்து,
பறவைகளுக்கு ஆதரவற இம்மரத்தை ஏன் காக்கிறாய்? இது பெரிய வனமாயிருக்கிறதே!
இலைகளினால் மூடப்பட்ட பொந்துகளும் சஞ்சரிக்கப்ப போதுமான இடமுள்ள இன்னும்
அழகான மரங்கள் அநேகம் இப்பெரிய வனத்திலிருக்கையில் முதிர்ச்சியடைந்து,
சக்தியற்று, இரசம் வற்றி ஒளி குன்றிக் கெட்டுப்போன இந்நிலையற்ற மரத்தைப்
புத்தியினால் ஆராய்ந்து பார்த்துவிட்டு விடு.”
அமரேசனுடைய இந்த வார்த்தையைக்கேட்டு தம்மவாத்மாவான அந்தக் கிளி, மிகவும்
நீண்ட பெருமூச்செறிந்து துயரத்துடன் பின்வருமாறு சொல்லத் தொடங்கிற்று:
“மகாபதியே! இந்திராணியின் கணவனே! யாவராலும் வெல்ல முடியாத
தேவர்களிருக்கும் பொன்னுலகத்தில் வசிக்கும் நீ, நான் கூறுவதைத்
தெரிந்உகொள். அநேக நற்குணங்கள்பொருந்திய இம்மரத்தில் நான் பிறந்தேன்.
இளமைப் பருவத்தில்நன்றாகப் பாதுகாக்கப்பட்டேன். பகைவர்களாலும்
பீடிக்கப்டாமலிருந்தேன். மழை,காற்றி, பனி,வெயில் முதலிய துன்பங்களால்
வருந்தாது, இத்தருவில் சகித்திருந்தேன்.
வலாரியே! தயையும் பக்தியுமுள்ளவனாக வேறு இடம் செல்லாமலிருக்கும் என்
விடயத்தில் அனுக்கிரகம் வைத்து என் பிறவியை ஏன் பயன்படாமற் செய்கின்றாய்?
நான், அன்பும் பக்தியுமுள்ளவன். பாவத்தைப் புரியேன். உப காரியங்கள்
விடயத்தில் தயை செய்வதே நல்லோர்களுக்கு எப்போதும் மனத்திருப்தியை
உண்டாக்குகிறது. எல்லாத் தேர்களும் தருமத்திலுள்ள சந்தேகங்களை
உன்னிடத்திலேயே கேட்கின்றனர். அதனாலேயே,நீ தேவசிரேட்டர்ளுக்கு அதிபதியாப்
பட்டாபிஷேகம் செய்யப்பட்டிருக்கிறாய். இந்திரனே! வெகு காலமாக இருந் மரத்தை
நான் விடும்படி நீ சொல்வது தகாது. நல்ல நிலைமையிலிருந்ததை
அடுத்துப்பிழைத்தவன், கெட்ட நிலைமைக்கு வந்தவுடன், அதை எப்படி விடலாம்?”
எக்காலமு மிப்பாதப மெனதாமென வைகி
முக்காலே முதிருங்கனி முசியாது நுகர்ந்தேன்
இகாலமி தற்கிவ்வண மிடையோறு கலந்தாற்
சுக்காகல் வதுவோவுணர் வுடையோர்மதி தூய்மையே!
- மகாபாரதம்
இவ்வாறு கூறிய, பொருளடங்கியதும், அழுகுடையதுமாகிய கிளியினது வசனங்களால்
மகிழ்உள்ள இந்திரன், அதன் நன்றியறிவையும் தயையையும் எண்ணித்
திருப்தியுற்று, தரும்ம் தெரிந்த அக்கிளயைப் பார்த்து, மொரு வரம் கேள்!”
என்றுசொன்னான்.
அன்பர்காள்! அகிளியானது தன் நன்மையைக் குறித்து வரம் கேட்கவில்லை. அதனுடைய பெருங்குணத்தை உற்று நோக்குங்கள்!
எப்போதும், பிறர் நோவாமையைப் பெரிதாக்க் கருதிய அந்தக் கிளி, “ஏ தேவர்
கோமானே! இம்மரமானது நன்றாகச் செழித்துத் தலைத்து ஓங்க வேண்டும்!” என்றது.
அப்பறவையினுடைய உறுதியான பக்தியையும் நிரம்பின நல்லொழுக்கத்தையும்
அறிந்து களிப்புற்று இந்திரன் உடனே அம்மரத்தின் மீது அமிர்தம் பொழிந்தான்.
அதனால் அத்தரு, கனிகளும், இலைகளும், கிளைகளும் உண்டாக்கித்தழைத்து.
கிளியினுடைய உறுதியான பக்தியால், அம்மரம் முன்னைக் காட்டிலும் மிகவும் நன்றாகச்செழித்தது.
நன்இயறிவு, தயை இந்தக்குணங்களின்பயனாகிய அச்செய்கையினால் கிளியும்
அத்தருவில் இனிது மகிழ்ந்திருந்தது. தன் ஆயுள் முடிந்த பிறகு இந்திர
லோகத்தையடைந்தது.
நன்றி :- கவிஞார் கண்ணதாசன்

"நிழல்களின் ஒப்பந்தங்களை விட
நிஜங்களின் போராட்டமே சிறந்தது"
என்றென்றும் நட்புடன்,
dharshi.
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

அர்த்தமுள்ள இந்து மதம் - கவிஞர் கண்ணதாசன் Empty கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் - 02

Post by மாலதி July 17th 2011, 17:37

2. ஆசை
*******
வாழ்க்கை எதிலே ஓடிக்கொண்டிருக்கிறது?
ஆசையிலும் நம்பிக்கயிலுமே ஓடிக்கொண்டிருக்கிறது.
சராசரி மனிதனை ஆசைதான் இழுத்துச் செல்கிறது.
அன் துக்கெல்லாம் அதுவே காரணமாகிறது. ‘வேண்டும்ய என்றகிற உள்ளம்
விரிவடைந்து கொண்டே போகிறது. ‘போதும்’ என்ற மனம் சாகும்வரை வருவதில்லை.
ஐம்பது காசு நாணயம் பூமியில் கிடந்து, ஒருவன் கைக்கு அது கிடைத்துவிட்டால், வழியெடுக நாணயம் கிடைக்கும் என்று தேடிக்கொண்டே போகிறான்.
ஒரு விஷயம் கைக்குக் கிடைத்துவிட்டால் நூறு விஷயங்களை மனது வளர்த்துக்கொள்கிறது.
ஆசை எந்தக் கட்டத்தில் நின்றுவிடுகிறதோ, அந்தக் கட்டத்தில் சுயதரிசன் ஆரம்பமாகிறது.
சுயதரிசன் பூர்த்தியானவுடன், ஆண்டவன் தரிசன் கண்ணுக்கு தெரிகிறது
ஆனால் எல்லோராலும் அது முடிகிறதா?
லட்சத்தில் ஒருவருக்கே ஆசையை அடக்கும் அல்லது ஒழிக்கும் மனப்பக்குவம் இருக்கிறது.
என் ஆசை எப்படி வளர்ந்ததன்று எனக்கே நன்றாகத் தெரிகிறது.
சிறுவயதில் வேலையின்றி அலைந்தபோது “மாதம் இருபது ரூபாயாவது கிடைக்கக்கூடிய வேலை கிடைக்காதா” என்று ஏங்கினேன்.
கொஞ்ச நாளில் கிடைத்தது.
மாதம் இருப்பத்தைய்து ரூபாய் சம்பளத்திலே ஒருபத்திரிகையில் வேலை கிடைத்தது.
ஆறு மாதம்தான் அந்த நிம்மதி.
“மாதம் ஐம்பது ரூபாய் கிடைக்காதா?” என்று மனம் ஏங்கிற்று.
அதுவும் கிடைத்தது. வேறொரு பத்திரகையில் பிறகு மாதம் நூறு ரூபாயை மனது அவாவிற்று.
அதுவும் கிடைத்தது. மனது ஐநூறுக்குத் தாவிற்று.
அது ஆயிரமாக வளர்ந்தது.
ஈராயிரமாகப் பெருகிற்று.
யாவும் கிடைத்தன.
இப்பொழுது நோட்டடிக்கும் உருமையையே மனது கேட்கும் போலிருக்கிறது!
எந்க கட்டத்திலும் ஆசை பூர்த்தியடையவில்லை.
‘இவ்வளவு போதும்’ என்று எண்ணுகின்ற நெஞ்சு, ‘அவ்வளவு’ கிடைத்ததும், அடுத்த கட்டத்திற்குத் தாண்டுகிறதே, ஏன்?
அதுதான் இறைவன் லீலை!
ஆசைகள் அற்ற இடத்தில், குற்றங்கள் அற்றுப் போகின்றன.
குற்றங்களும், பாபங்களும் அற்றுப்போய்விட்டால் மனிதனுக்க அனுபவங்கள் இல்லாமற் போய் விடுகின்றன.
அனுபவங்கள் இல்லையென்றால், நன்மை தீமைகளைக்கண்டுபிடிக்க முடியாது.
ஆகவே தவறுகளின் மூலமே மனிதன் உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்கா, இறைவன் ஆசையைத் தூண்டிவிடுகிறான்.
ஆசையை மூன்றுவிதமாப் பிரிக்கிறது இந்து மதம்.
மண்ணாசை!
பொன்னாசை!
பெண்ணாசை!
மண்ணாசை வளர்ந்துவிட்டால், கொலை விழுகிறது.
பொன்னாசை வளர்ந்துவிட்டால், களவு நடக்கிறது.
பெண்ணாசை வளர்ந்துவிட்டால், பாபம் நிகழ்கிறது.
இந்த மூன்றில் ஓர் ஆசைகூட இல்லாத மனிதர்கள் மிகவும் குறைவு.
ஆகவேதான்,பற்றற்ற வாழ்க்கையை இந்து மதம் போதித்தது.
பற்றற்று வாழ்வதென்றால், எல்லாவற்றையும் விட்டு விட்டு ஓடிப்போய் சந்நியாசி ஆவதல்ல!
“இருபது போதும்; வருவது வரட்டும்: போவது போகட்டும்: மிஞ்சுவது
மிஞ்சட்டும்” என்று சலனங்களுக்கு ஆட்படாமலிருப்பதே பற்றற்ற வாழ்க்கையாகும்.
ஆசை, தீமைக்கு அடிப்படையாக இல்லாதவரை, அந்த ஆசை வாழ்வில் இருக்கலாம் என்கிறது இந்து மதம்.
நான் சிறைச்சாலையில் இருந்தபோது கவனித்தேன்.
அங்கே இருந்த குற்றவாளிகளில் பெரும்பாலோர் ஆசைக் குற்றாளிகளே.
மூன்று ஆசைகளில் ஒன்று அவனைக் குற்றவாளியாக்கியிருக்கிறது.
சிறைச்சாலையில் இருந்து கொண்டு, அவன் “முருகா, முருகா!” என்று கதறுகிறான்.
ஆம், அவன் அனுபவம் அவனுக்கு உண்மையை உணர்த்துகிறது.
அதனால்தான் “பரம்பொருள் மீது பற்று வை: நிலையற்ற பொருள்களின் மீது ஆசை வராது” என்கிறது இந்துமதம்.
“பற்றுக பற்ற்ற்றான் பற்றினை அப்பறைப்
பற்றுக பற்று விடற்கு” - என்பது திருக்குறள்.
ஆசைகளை அறவே ஒழிக்கவேண்டியதில்லை.
அப்படி ஒழித்துவிட்டால் வாழ்க்கையில் என்ன சுகம்?
அதனால்தான் ‘தாமரை இலைத் தண்ணீர் போல்ய என்று போதித்தது இந்து மதம்.
நேரிய வழியில் ஆசைகள் வளரலாம்.
ஆனால் அதில் லாபமும் குறைவு. பாபமும் குறைவு.
ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்று எதிர்பார்த்து ஐநூறு ரூபாய் மட்டுமே கிடைத்தால், நிம்மதி வந்து விடுகிறது.
எதிர்பார்ப்பதைக் குறைத்துக்கொள்: வருவது மனதை நிறைய வைக்கிறது” என்பதே இந்துக்கள் த்த்துவம்.
எவ்வளவு அழகான மனைவியைப் பெற்றவனும், இன்னொரு பெண்ணை ஆசையோடு பார்க்கிறானே, ஏன்?
லட்சக்கணக்கான ரூபாய் சொத்துக்களைப் பெற்றவன்மேலும் ஓர் ஆயிரம் ரூபாய் கிடைக்கிற தென்றால் ஓடுகிறானே,ஏன்?
அது ஆசை போட்ட சாலை.
அவன் பயணம் அவன் கையிலில்லை; ஆசையின் கையிலிருக்கிறது.
போகின்ற வேகத்தில் அடி விழுந்தால் நின்று யோசிக்கிறான்ந அப்போது அவனுக்கு தெய்வஞாபகம் வருகிறது.
அனுபவங்கள் இல்லாமல, அறிவின்மூலமே, தெய்வத்தைக் கண்டு கொள்ளும்படி போதிப்பதுதான் இந்து மத்த்தத்துவம்.
‘பொறாமை, கோபம்’ எல்லேமே ஆசை பெற்றெடுத்த குழந்தைகள்தான்.
வாழ்க்கைத் துயரங்களுக்கெல்லாம் மூலகாரணம் எதுவென்று தேடிப் பார்த்து,
அந்தத் துயரங்களிலிருந்து உன்னை விடுபடச் செய்ய, அந்தக் காரணங்களைச்
சுட்டிக் காட்டி, உனது பயணத்தை ஒழுங்குபடுதும் வேலையை, இந்து மதம்
மேற்கொண்டிருக்கிறது.
இந்து மதம் என்றும் சந்நியாசிகளின் பாத்திரமல்ல.
அது வாழ விரும்புகிறவர்கள், வாழ வேண்டியவர்களுக்கு வழிகாட்டி.
வள்ளுவர் சொல்லும் வாழ்க்கை நீதிகளைப் போல இந்து மதமும் நீதிகளையே போதிக்கிறது.
அந்த நீதிகள் உன்னை வாழவைப்பதற்கேயல்லாமல் தன்னை வளர்த்து கொள்வதற்காக அல்ல.
உலகத்தில் எங்கும் நிர்பந்தமாக, வெண்மையாக, தூய்மையாக, இருக்கிறது என்றதற்கு அடையாளமாகவே அது ‘திருநீறு’ பூச்ச் சொல்லுகிறது.
உன் உடம்பு, நோய் நொடியின்றி ரத்தம் சுத்தமா இருக்கிறது என்பதற்காகவே, ‘குங்கும்ம்’ வைக்கச் சொல்கிறது.
‘இவள் திருமணமானவள்’ என்று கண்டுகொண்டு அவளை நீ ஆசையோடு பார்க்காமலிருக்கப் பெண்ணுக்கு அது ‘மாங்கல்யம்’ சூட்டுகிறது.
தன் கண்களால் ஆடவனுடைய ஆசையை ஒருபெண் கிளறிவிடக்கூடாது என்பதற்காகவே, அவளைத் ‘தலைகுனிந்து’ நடக்கச் சொல்கிறது.
யாராவது ஆடவன்தன்னை உறு நோகுகிறான் என்பதைக் கண்டால், இந்தப் பெண்கள் மார்பகத்து ஆடையை இழுத்து மீட்க்கொள்கிறார்களே, ஏன்?
ஏற்கனவே திருத்தமாக உள்ள ஆடையை மேலும் திருத்துகிறார்களே, ஏன்ழ
எந்தவொரு ‘கவர்ச்சி’யும் ஆடவனுடைய ஆசையைத் தூண்டிஇடக்கூடாது என்பதால்.
ஆம்; ஆடவன் மனது சலனங்களுக்கும், சபலங்களுக்கும் ஆட்பட்டது.
கோவிலிலே தெய்வ தரிசன்ம் செய்யும்போது கூட கண் கோதையர்பால் சாய்கிறது.
அதை மீட்க முடியாத பலவீன்னுக்கு, அவள் சிரித்துவிட்டால் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியதுபோல் ஆகிறது.
“பொம்பளை சிரிச்சா போச்சு; புகையிலை விரிச்சாப் போச்சு” என்பது இந்துக்கள் பழமொழி.
கூடுமானவரை மனிதனைக் குற்றங்களிலிருந்து மீட்பதற்கு, தார்மீக வேலி போட்டு வளைக்கிறது இந்துமதம்.
அந்தக் குற்றங்களிலிருந்து விடுபட்டவனுக்கே நிம்மதி கிடைக்கிறது.
அந்த நிம்மதியை உனக்கு அளிக்கவே இந்துமதத் தத்துவங்கள் தோன்றின.
இன்றைய இளைஞனுக்கு ஷேக்பியரைத் தெரியும்; ஷெல்லியைத்தெரியும்;
ஜேம்ஸ்பாண்ட் தெரியும். கெட்டுப்போன பின்புதான் அவனுக்குப் பட்டினத்தாரைப்
புரியும்.
ஓய்ந்த நேரத்திலாவது அவன் ராமகிருஷ்ண மரமஹம்சரின் உபதேசங்களைப்
படிப்பானானால், இநுத் மதம் என்பது வெறும் ‘சாமியார் மடம் ‘ என்ற எண்ணம்
விலகிவிடும்.
நியாயமான நிம்மதியான வாழ்க்கையை நீ மேற்கொள, உன் தாய் விடிவில் துணை வருவது இந்துமதம்.
ஆசைகளைப்பற்இ பரமஹம்சர் என்ன கூறுகிறார்?
“ஆழமுள்ள கிணற்றின் விளிம்பில் நிற்பவன், அதனுள் விழுந்துவிடாமல்
எப்போதும் ஜாக்கிரதையாக இருப்பதைப்போல் உலக வாழ்க்கையை மேற்கொண்டவன்
ஆசாபாசங்களிஙல் அமிழ்ந்து விடாமல் இருக்க வேண்டும்” என்கிறார்.
“அவிழ்த்து விடப்பட்ட யானை, மரங்களையும் செடிகொடிகளையும் வேரோடு
பிடுங்கிப் போடுகிறது. ஆனால் அதன் பாகன் அங்குசத்தால் அதன் தலையில்
குத்தியதும், அது சாந்தமாகி விடுகிறது.
அது போல, அடக்கியாளாத மனம் வீண் எண்ணங்களில் ஓடுகிறது”
“விவேகம் என்ற அங்குசத்தால் அது வீழ்த்தப்பட்டதும் சாந்தமாகி விடுகிறது”. என்றார்.
அடக்கியாள்வதன் பெயரே வைராக்யம்.
நீ சுத்த வைராக்கியனாக இரு. ஆசை வளராது.
உன்னைக் குற்றவாளியாக்காது, உன் நிம்மதியைக் கெடுக்காது.
நன்றி :- கவிஞார் கண்ணதாசன்

"நிழல்களின் ஒப்பந்தங்களை விட
நிஜங்களின் போராட்டமே சிறந்தது"
என்றென்றும் நட்புடன்,
dharshi.
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

அர்த்தமுள்ள இந்து மதம் - கவிஞர் கண்ணதாசன் Empty கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் - 03

Post by மாலதி July 17th 2011, 17:38

3. துன்பம் ஒரு சோதனை
*********************
வெள்ளம் பெருகும் ந்திகளும் ஒருமுறை வறண்டு விடுகிறது.
குளங்கள் கோடையில் வற்றி மழைக்காலத்தில் நிரம்புகின்றன.
நிலங்கள் வறண்ட பின்தான் பசுமை யடைகின்றன.
மரங்கள் இலையுதிர்ந்து பின் தளிர் விடுகின்றன.
இறைவனின் நியதியில் நிரந்தரமாக வாழ்ந்து கொண்டிருப்பது மலை ஒன்றுதான்.
அதுவும் வளர்வதாகவும், அமிழ்வதாகவும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
இறைவன் மனிதனையும் அப்படித்தான் வைக்கிறான்.
நிரந்தரமாக இன்பத்தை அனுபவித்தவனும் இல்லை. நிரந்தரமாகத் துன்பத்தில் உழன்றவனும் இல்லை.
முதற்கட்டம் வரவு என்றால், அடுத்தக் கட்டம் செலவு.
முதற்கட்டம் இன்பமென்றால், அடுத்தக்கட்டம் துன்பம்.
முதற்கட்டமே துன்பமென்றால், அடுத்த கட்டம் இன்பம் இறைவனது தராசில் இரண்டு தட்டுக்களும் ஏறி ஏறி இறங்குகின்றன.
“இடுக்கண் வருங்கால் நகுக; அதனை
அடுத்தூர்வ தஃதொப்ப தில்”
என்றான் வள்ளுவன்.
எல்லாச் செல்வங்களையும் நிரந்தரமாக எவனுக்கும் இறைவன் வழங்கியதில்லை.
அந்த நாளில் எனக்கு நல்ல பசியெடுத்தது; உணவு கிடைக்கவில்லை.
பின் பசியுமிருந்தது; உணவும் கிடைத்தது.
இப்போது உணவு கிடைக்கிறது; பசியில்லை. அடுக்கடுக்காகப் பணம் சேர்த்து, ஆயிரம் வேலிக்கு மிராசுதார்ரானார் ஒருவர்.
ஆன மறுநாளோ, அவரை ‘அரிசி சாப்பிடக்கூடாது; சர்க்கரை வியாதி’ என்று சொல்லிவிட்டார் டாக்டர்.
சீனாலவில் மாசே - துங் புரட்சி நடக்கும்போது பல ஆண்டுகள் காடுமேடுகளில்
ஏறி இறங்கினார். மனைவியைத் தோளில் தூக்கிக்கொண்டு அலையக்கூட வல்லம
பெற்றிருந்தார்.
புரட்சி முடிந்து, பதவிக்கு வந்து இரண்டே ஆண்டுகளில் நோயில் படுத்தார்.
ரஷ்யாவில் லெனின் கதையும் அதுதான்.
புரட்சி நடக்கும்வரை லெனின் ஆரோக்கிய மாகவே இருந்தார்.
பதவிக்கு வந்த சில மாதங்களிலேயே படுக்கையில் விழுந்தார்; சில ஆண்டுகளிலேயே மரணமடைந்தார்.
எனது தி.மு.க நண்பர்கள் ஒவ்வொருவரும் கடுமையான உழைப்பாளிகள். ரயிலிலும்
கட்டை வண்டிகளிலும், கால்நடையாவும் சென்று கூட்டத்தில் பேசுவார்கள்.
போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறைச்சாலைக்குப் போவார்கள்.
அப்பொழுதெல்லாம் அவர்கள் உடல்நிலை நன்றாகவே இருந்தது.
அவரகள் பதவிக்கு வந்து நிம்மதியாக இருக்க வேண்டிய நேரத்தில் அவர்களில் பலருடைய ஆரோக்கியம் கெட்டு விட்டது.
எனது நண்பர் ஒருவர் படமெடுத்தார்.
முதற்படமே அபார வெற்றி. அளவுகடந்த லாபம்.
அடுத்த படத்திலிருந்து விழத் தொடங்கியது அடி. இன்னும் அவர் எழமுடியவில்லை.
இன்னொரு பட அதிபர்…
ஊமைப்படக் காலத்திலிருந்து தொழிலில் இருக்கிறார். ஆரம்பக் கட்டத்தில்
பலபடங்கள் அவருக்குக் கை கொடுக்கவில்லை. மிகுந்த சிரம்ப்பட்டுச் சென்னைக்கு
வந்து ஒருபடம் எடுத்தார்.
அவரது ‘வாழ்க்கை’யையே அந்தப் படம்தான் தீர்மானிக்க வேண்டும் என்று பேசிக்கொண்டார்கள்.
அந்தப் படம் அமோகமாக ஓடியது. ஒருபுது நடிகையை நட்சத்திர
நடிகையாக்கிற்கு. அது தெலுங்கிலும் வெற்றி; இந்தியிலும் வெற்றி. அதுமுதல்
அவர் தொட்டதல்லாம் வெற்றி.
பிறப்பிலிருந்து இறப்பு வரை துன்பமே இலாமல் வாழ்ந்தவர்கள் எத்தனை பேர்?
கண்களை மூடிக்கொண்டு எண்ணிப் பாருங்கள்.
ஒரு கட்டம் அப்படி என்றால், மறு கட்டம் இப்படி!
ஏற்றம் என்பது இறைவன் வழங்கும்பரிசு.
இறக்கம் என்பது அவன் செய்யும் சோதனை.
நீ நினைப்பது எல்லாமே நடந்துவிட்டால், தெய்வத்தை நம்ப வேண்டாம்.
எப்போது நீ போடும் திட்டம் தோல்வியுறுகிறதோ அப்போது உனக்கு மேலானவன் அதை நடத்துகிறன் என்று பொருள்.
எப்போது உன் திட்டங்கள் வெற்றி பெறுகின்றனவோ, அப்போது இறைவன் உனக்கும் அனுமதியளித்து விட்டான் என்று பொருள்.
“ஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட டொன்றாகும்
அன்றி அதுவரினும் வந்தெய்தும் - ஒன்றை
நிறையாது முன்வந்து நிற்பினும் நிற்கும்
என்யாளும் ஈசன் செயல்”
என்பது முன்னோர் பழமொழி.
“கற்பகத்தைச்சேர்ந்தார்க்குக்
காஞ்சிரங்ககாய் ஈந்தேன்
முற்பவத்தில்செய்தவினை”
இதுவும் அவர்கள் சொன்னதே.
உனது வாழ்க்கை பூஜ்ஜியத்திஏ ஆரம்பமாகிறது. அதற்கு முன்பக்கம் நம்பர் விழுந்தால் இறைவனின் பரிசு; பின் பக்கம் விழுந்தால் அவனது சோதனை.
மேடும் பள்ளமுமாக ஆழ்க்கை மாறி மாறி வந்தால் உனக்குப் பெரிய வீழ்ச்சியில்லை.
ஒரேயடியாக உச்சிக்கு நீ போய்விட்டால் அடுத்துப் பயங்கரமான சரிவு காத்திருக்கிறது.
என் வாழ்க்கை மேடும் பள்ளமுமாகவே போவதால்,என் எழுத்து வண்டி இருப்பத்தைந்தாண்டுக் காலாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இதைத்தான் ‘சகடயோகம்’ என்பார்கள். வீழ்ச்சியில் கலக்கமோ எழுச்சியில் மயகமோ என்றார்கள் நம் முன்னோர்கள்.
‘ஆண்டவனின் அவதாரங்களே ஆண்டவன் சோதனைக்குத் தப்பவில்லை’ என்று நமது இதிகாசங்கள் கூறுகின்றன.
தெய்வ புருஷன் ஸ்ரீராமனுக்கே பொய் மான் எது, உண்மை மான் எது என்று தெரியவில்லையே!
அதனால் வந்த வனைதானே, சீதை சிறையெடுகப்பட்டதும், ராமனுக்குத் தொடர்ச்சியாக வந்த துன்பங்களும்!
சத்திய தெய்வம் தருமனுக்கே சூதாடக்கூடாது என்ற புத்தி உதயமாகவிலையே!
அதன் விளைவுதானே பாண்டவர் வனவாசமும் பாரத யுத்தமும்!
முக்காலும் உணர்ந்த கௌதமனுகே,பொய்க்கோழி எது, உண்மைக் கோழி எது என்றுதெரியவில்லையே!
அதனால்தானே அகலிகை கெடுக்கப்பட்டதும், சாபம் பெற்றதும்.
ஆம், இறைவனின் சோதனை எவனையும் விடாது என்பதற்கு, இந்தக கதைகளை நமது இந்துமத ஞானிகள் எழுதி வைத்தார்கள்.
துன்பங்கள் வந்தே தீருமென்றும், அவை இறைவனின் சோதனைள் என்றும்,
அவற்றுக்காக்க் கலங்குவதும் கண்ணீர் சிந்துவதும் முட்டாள்தனமென்றும் உன்னை
உணர வைத்து, துன்பத்திலும் ஒரு நிம்மதியைக் கொடுக்கவே அவர்கள் இதை எழுதி
வைத்தார்க்க்.
இந்தக் கதைகளை ‘முட்டாள்தனமானவை’ என்று சொல்லும் அறிவாளிகள் உண்டு.
ஆனால்,முட்டாள்தனமான இந்தக் கதைகளின் தத்துவங்கள், அந்த அறிவாளிகளின் வாழ்க்கையையும் விட்டதிலை.
நான் சொல்ல வருவது, ‘இந்து மத்த்தின் சாரமே உனது லௌகீக வாழ்க்கையை நிம்மதியாக்கித் தருவது என்பதையே.
துன்பத்தைச்சோதனை என்று ஏற்றுக்கொண்டு விட்டால், உனக்கேன் வேதனை வரப்போகிறது?
அந்தச் சோதனையிலிருந்து உன்னை விடுவிக்கும் படி நீ இறைவனை வேண்டிக்கொள்; காலம் கடந்தாவது அது நடந்துவிடும்.
தர்ம்ம் என்றும், சத்தியம் என்றும், நேர்மை என்றும், நியாயம் என்றும் சொல்லி வைத்த நமது மூதாதையர்கள்முட்டாள்களல்ல.
கஷ்டத்திலும் நேர்மையாக இரு.
நீ ஏமாற்றப்பட்டாலும் பிறரை ஏமாற்றாதே.
உன்வாழ் நாளிலேயே அதன் பலனைக்காண்பாய்.
தெய்வ நம்பிக்கை உன்னைக் கைவிடாது.
நன்றி :- கவிஞார் கண்ணதாசன்

"நிழல்களின் ஒப்பந்தங்களை விட
நிஜங்களின் போராட்டமே சிறந்தது"
என்றென்றும் நட்புடன்,
dharshi.
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

அர்த்தமுள்ள இந்து மதம் - கவிஞர் கண்ணதாசன் Empty கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் - 04

Post by மாலதி July 17th 2011, 17:39

4. பாவமாம், புண்ணியமாம்!
***********************
இதுவரை யாருடைய பெயரையும் நான் குறிப்பிடவிலை.
இப்போது ஒருவருடைய பெயரை குறிப்பிட விரும்புகிறேன்.
பட அதிபர் சின்னப்ப தேவரை நீ அறிவாய்.
சிறு வயதிலிருந்தே அவர்தெய்வ நம்பிகை யுள்ளவர்.
சினிமாத் தொழிலிலேயே மதுப்பழக்கமோ, பெண்ணாசையோ இல்லாத சிலரில் அவரும் ஒருவர்.
மிகவும் உத்தமர்கள் என்று சொல்லத்தக்க உயர்ந்தோரில் ஒருவர். முப்பது
முப்பத்தைந்து வயதுவரை, அவரது வாழ்ஐ கடுமையான வறுமையிலும் ஏழ்மையிலும்
கழிந்தது.
அப்போதும் அவர் நாணயத்தை நேர்மையையும் விட்டதில்லை.
குஸ்தி கோதா நடத்தினார். சிறிய பால் பண்ணை நடத்தினார். ஜூபிடர் பிக்சர்ஸ் படங்களில் ஸ்டண்ட் நடிகராக வேலைபார்த்தார்.
அவரது வரலாறு உழைத்து முன்னேற விரும்புகிறவர்களுக்கு ஒரு பாடமாகும்.
அந்த நேரத்தில் ஒரு வெற்றிலை பாக்குக் கடையில் அவருகு ஆறு ரூபாய் வரை கடனாகிவிட்டது.
கடைக்காரன் அவர் கழுத்தில் துண்டைப் போட்டு முறுக்கினான்; அந்தக் கடையிருகும் பக்கமே போக முடியாதபடி அவதிப்பட்டார்.
அடிக்கடி கோவைக்குப் பத்து மைலுக்கு அப்பாலிருக்கும் மருதமலைக்குப் போய் ‘முருகா!, முருகா!’ என்று அழுவார்.
அந்தக் கோவிலோ ஜன நடமாட்டமில்லாத கோவில்.
கடைக்காரன் கோபித்துக் கொண்ட அன்று இரவு. அந்த மருதமலைக் கோவிஇல் போய்
உட்கார்ந்து கொண்டு அழுதார்: “முருகா! காப்பாற்று” என்று வேண்டிக்
கொண்டார்.
நள்ளிரவில், காடுகள் நிறைந்த அந்த மலையைவிட்டு இறங்கினார்.
வழியில் ஒரு சிகரெட் பாக்கெட் கிடந்தது.
அதைக் காலால் உதைத்துக்கொண்டே நகர்ந்தார்.
கொஞ்சதூரம் வந்ததும் என்ன தோன்றிற்றோ?
அந்த சிகரெட் பாக்கெட்டை எடுத்துப் பார்த்தார்
உள்ளே இர்ணுட சிகரட்டுகளும்,பத்து ரூபாய் நோட்டும் இருந்தன.
அப்போது அவரது மனநிலை எப்படி இருந்திருக்கும்?
“நலவனாக வாழ்ந்தோம்ந தெய்வத்தைநம்பினோம்; தெய்வம் கைவிடவில்லை” என்று தனே எண்ணியிருக்கும்!
அந்த முருகன் அவரை வாழ வைத்தான்.
ஒவ்வொருநாளும், “முருகா! முருகா! ” என்று உருகுகிறார்.
“தனக்கு நஷ்டம் வந்தாலும் பிறருக்கும் நஷ்டம் வரக்கூடாது” என்று தொழில் புரிகிறார்.
அதனால், அவர் நாளுக்குநாள் செழித்தோங்குகிறார்.
நீயும் நல்லவனாக இரு.
தெய்வத்தை நம்பு.
உனக்கு வருகிற துன்பமெல்லாம்,பனிபோலப் பறந்து ஓடாவிட்டால், நீ இந்து மத்த்தையே நம்ப வேண்டாம்.
“பாவமாம், புண்ணியமாம்; எந்த மடையன் சொன்னான்?”
“சொர்க்கமாம், நரகமாம்! எங்கே இருக்கின்றன அவை?”
“பாவமும் புண்ணியமும் பரலோகத்தில்தானே? பார்த்துக்கொள்வோம் பின்னாலே?”
இவையெல்லாம் நமது பகுத்தறிவு உதிர்க்கும்பொன் மொழிகள்.
பாவம்- புண்ணியம், சொர்க்கம் - நரகம் என்ற வார்த்தைகளைக் கேட்கின்ற இளைஞனுக்கு , அவை கேலியாகத் தெரிகின்றன.
‘நரம்பு தளர்ந்துபோன கிழவர்கள், மரண பயத்தில் உளறிய வார்த்தைகள் அவை. என்று அவன் நினைக்கிறான்.
நல்லதையே செய்தால் சொர்க்கத்துக்குப் போவாய் என்றும், அங்கே வகைவகையாக
விருந்துகள் உனக்கு காத்திருக்குமென்றும், தீங்கு செய்தால் நரகத்துக்குச்
செல்வாயென்றும், அங்கே உன்னை எண்ணெய்க் கொப்பரையில் போட்டு
வறுத்தெடுப்பார்களென்றும் சொல்லப்படும் கைகள் நாகரிக இளைஞனுக்கு
நகைச்சுவையாகத் தோன்றுவதில் வியப்பில்லை.
ஆனால் இந்தக் கதைகள், அவனை பயமுறுத்தி, அவன் வாழ்க்கையை ஒழுங்குபடுத்துவதற்காகவே தோன்றிய கதைகள்.
அவனுடைய பற்றாக்குறை அறிவைப் பயமுறுத்தித்தான் திருத்த வேண்டும் என்று
நம்பிய நம் மூதாதையர் அந்தக கதைகளைச் சொல்லி வைத்தார்கள். இந்தக கதைகள்
நூற்றுக்கு ஐம்பது பேரையாவது திருத்தியும் இருக்கின்றன. என்பதை அறிந்தால்,
நம் மூதாதையர் நம்பியுரைத்த கற்பனைகள் கூட , எவ்வளவு பலனை அளிக்கின்றன
என்பதை அவன் அறிவான்.
பாவம் புண்ணியம் பற்றிய கதைகளை விடு; பரலோகத்துக்க உன் ஆவி போகிறதோ இல்லையோ, இதை நீ நம்ப வேண்டாம்.
ஆனால், நீ செய்யும் நன்மை தீமைகள், அதே அளவில் அதே நிலையில், உன் ஆயுட்காலத்திலேயே உன்னிடம் திரும்பிவிடுகின்றன.
அந்த அளவு கூடுவதுமில்லை, குறைவதுமில்லை.
ஒருவனை எந்த வார்த்தை சொல்லி நீ திட்டுகிறாயோ, அதே வார்த்தையில், எப்போதாவது ஒருமுறை நீ திட்டப்படுகிறாய்.
“எப்படித் தீர்க்க நினைக்கிறீர்களோ அப்படியே தீர்க்கப்படுவீர்கள்” என்று
கிறிஸ்தவ வேதம் கூறுகிறது.”செய்த வினை, அதே வடிவத்தில் திரும்ப வரும்” எறு
முதன்முதலில்போதித்தது இந்து மதம்தான்.
“பாவம் என்பது நீ செய்யும்தீமை.”
“புண்ணியம் என்பது நீ செய்யும் நன்மை”.
“முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்”.
“விநாச காலே விபரீத புத்தி.”
-இவையெல்லாம் இந்துக்களின் பழமொழிகள்.
ஊரைக்கொள்ளையடித்து, உலையிலே போட்டு, அதை உயில் எழுதி வைத்துவிட்டு மாண்டவன் எவனாவது உண்டா?
பிறர் சொத்தைக் திருடிக்கொண்டு, அதை நிம்மதியாக அனுபவித்து, அமைதியாகச்செத்தவன் எவனாவது உண்டா?
அப்படி ஒருவன் இருந்தாலும், அவன் எழுதி வைத்த உயிலின்படி அவன் சொத்துக்கள் போய்ச் சேர்ந்ததுண்டா?
எனக்குத் தெரிந்தவரை அப்படிப்பட்ட சொத்துக்களை நீதி மன்றத்தால்
நியமிகப்படும் ‘ரிஸீவர்’கள்தான் சாப்பிட்டிருக்கிறார்கள். இறந்தவனுடைய
சந்ததி சாப்பிட்டதில்லை.
கொலை செய்துவிட்டுத் தலைமறைவாகி, தண்டனையில்லாமல் நிம்மதியாக வாழ்ந்து, வலி இல்லாமல் செத்தவன் எவனாவது உண்டா?
எனக்குத் தெரிந்தவரை இல்லை.
ஒருவன் செய்த எந்த பாவமும் அவன் தலையைச்சுற்றி ஆயுட்காலத்திலேயே அவனைத் தண்டித்து விட்டுத்தான் விலகியிருக்கிறது.
“பாவத்தின் சம்பளம் மரணம்” என்கிறது கிறிஸ்துவ வேதம்.இல்லை, பாவத்தின்
சம்பளம் வயதான காலத்தில் திரும்பரும் சிறு சேமிப்பு நிதி; சரியான நேரத்தில்
அவனுக்குக் கிடைக்கும் போனஸ்!
சாவுக்குப் பின் நடப்பது இரண்டாவது விசாரணை!
முதல் தீர்ப்பு அவன் ஆயுட்காலத்திலேயே அளிக்கப்பட்டுநிறைவேற்றப்பட்டு விடுகிறது.
எனக்கு நன்றாக நினைவிலிருக்கிறது. 1953 - ஆம் ஆண்டு தால்மியாபுரம்
போராட்டத்தில், பதினெட்டு மாதம் கடுங்காவல் தண்டனை விதக்கப்பட்டு,
நானுத்,நண்பர் அன்பில் தர்மலிங்கமும், மற்றும் இருபது பேரும் திருச்சி
மத்திய ணசிறையில் இருந்தோம். அங்கே தூக்குத் தண்டனை பெற்ற கைதிகள் சிலரும்
இருந்தார்கள்.
அர்களைத்தனித்தனியாகச்சில அறைகளில் பூட்டி வைத்திருந்தார்கள்.
அவர்களில, ‘மாயவரம் கொலை வழக்கு’ என்று பிரபலமான வழக்கில், தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டவர்கள் ஏழு பேர்.
செஷன்ஸ் கோர்ட் அவர்களுக்குத்தூக்குத்தண்டனை விதித்தது.
அப்போது உயர்நீதிமன்ற நீதிபதிகளில் ஒருவராக இருந்தவர் தரு.சோமசுந்தரம்.
பெரும்பாலான கொலை வழக்குகளில் அவர் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டையாக மாற்றுவது வழக்கம்.
காரணம், பன்னிரண்டு வருடங்கள் கழித்துத் திரும்ப몮போகும் குற்றவாளி
நல்லவனாகத்திரும்பி வந்து அமைதியான வாழ்க்கை வாழ்வான் என்ற நம்பிக்கையே!
அவர் சட்டத்தோடு தர்மத்தையும் கலந்தே யோசிப்பார்.
செஷன்ஸ் கோர்ட்டின் தூக்குத்தண்டனை யொன்றை அவர் ஊர்ஜிதம் செய்கிறார் என்றால், அதை ஆண்டவனே ஜர்ஜிதம் செய்த்தாக அர்த்தம.
மாயவரம் கொலை வழக்கில் ஏழு கைதிகளின் தூக்குத் தண்டனையை ஊர்ஜிதம் செய்தார்.
அவரத்தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டும், அதை ஊர்ஜிதம் செய்ததது.
ஜனாதிபதிக்கு கருணை மனு போயிற்று. அவரும் தூக்குத் தண்டனையை ஊர்ஜிதம் செய்தார்.
காரணம் நடந்த நிகழ்ச்சி அவ்வளவு பயங்கரமானது.
மாயவரத்தில் நாற்பது வயதான ஒரு அம்மையார் விதவை. அந்த வயதிலும் அழகாக இருப்பார்.
சுமார் அறுபதனாயிரம் ரூபாய் பெறக்கூடிய நகைகளை அவர் வைத்திருந்தார்.
சொந்த வீட்டில் ஒரு வேலைக்காரப் பெண்ணை மட்டுமே துணையாக்க் கொண்டு வாழ்ந்திருந்தார்.
அவரை மோப்பமிட்ட சிலர், ஒருநாள் இரவு அவர் வீட்டுக்குள் புகுந்தார்கள்.
ஐந்து பேர் அவரைக் கற்பழித்தார்கள். அந்த அம்மையார் மூச்சுத்தின்றி இறந்துபோனார்.
இறந்து பிறகும் இன்னொருவன் கற்பழித்தான்.
ஆம். மருத்துவரின் சர்டிபிகேட் அப்படித்தான் கூறிற்று.
நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. கொலைகார்ர்கள் ஓடிவிட்டார்கள்.
பிடிபட்டவர்கள் ஏழு பேர்.
சிறைச்சாலையில் அந்த ஏழுபேரில் ஆறுபேர் “நாளை தூக்குக்குப்
போகப்போகிறோமே!” என்று துடித்துக்கொண்டிருந்தார்கள். “முருகா முருகா” என்று
ஜபித்துக்கொண்டிருந்தார்கள்.
ஆனால், ஒருவன் மட்டும் சலனமில்லாமல் அமைதியா இருந்தான்.
சிறைச்சாலையில் தூக்குத் தண்டனை பெற்ற கைதிகளை மற்ற கைதிகள் அணுகிப் பேச முடியாது.
நானும் நண்பர் அன்பில் தர்மலிங்கமும் அதிகாரிகளிடம் அனுமதி பெற்று, அவர்களை அணுகினோம்.
சலனமே இல்லாமலிருந்தானே அந்த மனிதன், அவனிடம் மட்டுமே பேச்சுக் கொடுத்தோம்.
உடம்பிலே உணிகூட இல்லாமல் சிறைச்சாலை விதிகளின்படி நிறுத்தப்பட்டிருந்த அந்த மனிதன், அமைதியாகவே பேசினான்.
நாளை சாகப்போகிறோம் என்ற கவலை அவனுக்கில்லை. அவன் சொன்னான்:
“ஐயா, இந்தக் கொலைக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை. ஏற்கெனவே நான் மூன்று
கொலைகள் செய்திருக்கிறேன். ஒவ்வொரு கொலை செய்யும்போதும் நான் ஊரில்
இல்லாத்துமாதிர ‘அலிபி’ தயார் செய்துவிட்டு, அந்தக் கொலையைச் செய்வேன்.
மூன்று கொலைகளிலும் நான் விடுதலையானேன். இந்தக் கொலை நடந்த அன்று நான்
மாயவரத்திலேயே இருந்தேன். ஆண்டவன்தன் என்னை இருக்க வைத்திருக்கிறான். பல
நாட்களாக எனக்கு வலைவீசிய போலீசார், சரியான சாட்டியங்களோடு என்னைக்
கைதுசெய்துவிட்டார்கள். காரணம் கொலை சொய்தவர்களிலே மூன்றுபேர் என் சொந்க்
கார்ர்கள். சாட்சியம் சரியாக இருந்ததால், எனக்குத் தூக்குத் தண்டனை
விதிக்கப்பட்டு விட்டது. ஐயா! இந்தக் கொலைக்காக நான் சாகவில்லை. ஏற்கெனவே
செய்த கொலைகளுக்காகவே சாகப் போகிறேன்.”
அவன் சொல்லி முடித்தபோது, ‘அரசன் அன்று கொல்வான்,தெய்வம் நின்று கொல்லும்ய என்று பழமொழியே என்நினைவுக்கு வந்தது.
அப்போது மாலை ஐந்து மணி இருக்கும். அறைக்கதவு மூடப்படும் நேரம். நானும் தர்முவும் எங்களுடைய அறைக்குத் திரும்பினோம்.
தர்மு தன்னையும் மறந்து சொன்னார்:
“என்னதான் சொல்லையா, செய்யற பாவம் என்றைக்கும் விடாதய்யா!”
ஆமாம்,பாம் கொடுத்த, ‘போனஸ்யதான் செய்யாத கொலைக்குத் தண்டனை.
அன்று இரவு நான் தூங்கவே இல்லை.
காலை ஐந்து மணிக்கு “முருகா! முருகா!” என்று பலத்த சத்தம்.
அப்போது நான் உணரவில்லை. இப்போது உணருகிறேன்.
“என்ன விலை கொடுக்கிறாயோ, அதே விலை திரும்ப வரும்”.
நன்றி :- கவிஞார் கண்ணதாசன்

"நிழல்களின் ஒப்பந்தங்களை விட
நிஜங்களின் போராட்டமே சிறந்தது"
என்றென்றும் நட்புடன்,
dharshi.
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

அர்த்தமுள்ள இந்து மதம் - கவிஞர் கண்ணதாசன் Empty கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் - 05

Post by மாலதி July 17th 2011, 17:41

5. மறுபடியும் பாவம் - புண்ணியம்
****************************
“இந்து மத்த்தைப்பற்றி எழுத வந்து எங்கெங்கோ நடந்த சம்பவங்களை
விரித்துக் கொண்டு போகிறாயே, ஏன்?” என்று நீ கேட்பது எனக்குப் புரிகிறது.
இந்து மத்த்தைப்பற்றி ராமகிருஷ்ணரும், விவேகானந்தரும், காஞ்சி ஆசாரிய
சுவாமிகளும், விரிவுரை நிகழ்த்தும் வாரியாரும், பிறரும் சொல்லாத விஈயங்கள்
எதையும் நான் புதியதாகச் சொல்லப் போவதில்லை.
ஆனால் அர்கள் சொன்னபடியேதான் உன் வாழ்க்கை நட்கிறது என்பதைச் சுட்டிக் காட்டுவது என் கடமை.
“ஒவ்வொரு ஒலிக்கும் எதிரொலி இருக்கிறது” என்பது அவர்கள் வாதம்.
அப்படி விவாதித்தபோது கண்ணெதிரே நடந்த சாட்சியங்களை அவர்கள் காட்டவில்லை. த்துவார்த்த விளக்கமே கூறினார்கள்.
அந்தத் த்த்துவார்த்தம் என்னைப் போன்றவர்களுக்கு
அந்தத் த்த்துவப்படி நடந்த சம்பவர்களை நான் எழுதுவது உன்னைப் போன்றவர்களுக்கு,
பாவம்,புண்ணியம் என்பதையெல்லாம், வெறும் த்த்துவமாகவே கேட்டுக் கொண்டிருந்த
மனிதனுக்கு சில நிகழ்ச்சிகளைச் சுட்டிக் காட்டினால் விளங்கும்
என்பதற்காகவே இதை நான் எழுதுகிறேன்.
வாழ்க்கை ஒழுக்கத்தை, சமுதாய ஒழுக்கத்தை அதிகமாக வற்புறத்துவது இந்து மதம்தான்.
அதன் பாண்பாடுகள் உன்னதமானவை. அதன் சடங்குள் அர்தமுள்ளவை.மங்கல வழக்கு, அமங்கல வழக்கு எனப் பிறந்தது இந்துக்களிடம்தான்.
சில சின்னங்களை மங்கலமாகவும், சிலவற்றை அமங்கலமாகவும் அவர்க்க் காட்டினார்கள்.
மங்கல நிகழ்ச்சிகள் நடக்கும் வீட்டில், அமங்கல வார்தைகூடக்கேட்க்க்கூடாது என்றார்கள்.
பெண்ணுக்கு மங்கலம் என்றது தாலி.
திருமணத்தில் கட்டப்படும் அந்தத் தாலியை யார் அபகரித்தாலும், அந்தத்
தாலி அவர்கள் குடும்பத்தையே அழித்துவிடும் என்பது, இந்துகள் நம்பிக்கை.
எனக்கொரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது.
பதினான்கு ஆண்டுகளுக்குமுன்னால் நான்படம் எடுக்கத் தொடங்கியபோது, எனது பாட்டுத் திறமையை மட்டுமே வைத்து, ஒரு படமெடுக விரும்பினேன்.
நன்கு பாடக்கூடிய ஒரு நடிகரை அதற்கு ஏற்பாடு செய்தேன்.
ஒரு காலத்தில் ஓகோ என்று விளங்கிய அந்த நடிகர் நான் ஒப்பந்தம் செய்தபோது வறுமையிலிருந்தார்.
அவருடைய மனைவியின் கழுத்தில் தங்க மாங்கல்யம் இல்லை.
அரக்கு மஞ்சளை மஞ்சள் நூலில் கோர்த்து அணிந்திருந்தார்.
தாலி ஓரிடத்தில் அடகு வைக்கப்பட்டிருப்பதாக நடிகர் கூறினார்.
உடனே நான், அதற்கு வேண்டிய பணத்தை எடுத்துக் கொண்டு அவரையும் கூட்டிக்கொண்டு, அடகு பிடித்தவர் வீட்டிற்குப் போனேன்.
நடிகருடைய எல்லா நகைகளுமே அவரிடம்தான் அடகு வைக்கப்பட்டிருந்தன.
தாலிக்கு வேண்டிய பணத்தை மட்டும் கொடுத்துத் தாலியைத் திருப்பிக் கேட்டேன்.
அவர் பணத்தையும் வாங்கிக்கொண்டு, ஏராளமான வட்டி பாக்கியிருக்கிறது; இதை
வட்டிக்கு வரவு வைத்துக்கொள்கிறேன்; தாலியைத் தரமுடியாதும என்று
சொல்லிவிட்டார்.
பணம் கொடுத்தும் அந்தத் தாலி கிடைக்கவில்லை.
பிறகு நான் மேலும் கொஞ்சம் பணம் கொடுத்து, அவர்புதிய தாலியையே வாங்கி தன் மனைவியின் கழுத்தில் கட்டினார்.
என் படம் நடந்து கொண்டிருந்தபோதே, அந்த நடிகர் ‘இன்சால்வென்ட்’ ஆனார்.
ஆனால் மூன்றாவது மாதமே படம் வெளிவந்ததும் பத்துப் படங்களுக்கு அவர்
ஒப்பந்தம் செய்யப்பட்டுப் பணமும் வந்தது. ‘இன்சால்வென்சி’யும் ரத்தாயிற்று.
அவருடைய சொத்துக்கள் அவருக்கே திரும்பி வந்தன. இன்று அவர் சுகமாக
நாடகங்களிலும் படங்களலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
அவருடைய மனைவி உத்தமி.
புராண காலத்துச் சீதை, வரலாற்றுக் காலத்துக் கண்ணகிக்கு நிகரான சத்தியவதி.
அந்தச் சத்தியவதியின் தாலியை வைத்திருந்தாரே அவரது குடும்பம் பட்ட
பாடும், அதில் ஏற்பட்ட குழப்பும், அவர் நோயில் இழுத்துக்கிடந்து மாண்டதும்
விவரிக்கமுடியாத பெருங்கதை.
அந்தத் ‘தாலி’ அவரது குடும்பத்தின் நிம்மதியையே அழித்துவிட்டது.
இந்துக்களின் மங்கல சூத்திரம் தன் சக்தியைக் காட்டி விட்டது.
பாவத்தின் விலை, அவரது வாழ்நாளிலேயே கிடைத்துவிட்டது.
நிற்க,
‘அன்னையும் பிதாவும் முதல்தெய்வம்’ என்பது இந்துக்கள் சம்பிரதாயம்.
‘தாயைப் பணிந்தவன் கோவிலுக்குப் போக வேண்டாம்’ என்பார்கள்.
தாய்-தந்தையைச் சுற்றி வநுத கணபதிக்குத்தான் சிவபெருமான் மாம்பழத்தை அளித்தார்; உலகத்தைச் சுற்றி வந்த முருகனுக்கு அல்ல.
தாய் தந்தையருக்குத் தொண்டு செய்து கொண்டிருந்த ஒருபக்தன்,
மாறுவேடத்தில் வந்த இறைவனைக் கவனிகவில்லை என்உம், இறைவன் ஆத்திரமுற்றபோது
‘தன் முதற்கடமை இதுதான்’ என்று அவன் உறுதியாக்க் கூறினான் என்றும், இறைவனே
மனமயங்கி, அவன் பாத்த்தில் விழுந்தான் என்றும் நாம் படிக்கிறோம்.
அந்தத் தாய் தந்தையரை மனமார நேசிக்கும் எவனுகும் எதிர்காலம் உண்டு.
நான் கண்ணெதிரிலேயே பாரகிறேன். பலரை.
ஆனால் தாயின் குரலைக் கேளாத ஒருவருடைய கதையை உனக்குச் சொல்ல வேண்டும்.
அவர் என்னுடைய சமூகத்தைச்சேர்ந்தவர்; ஏழைக் குடும்பத்திலே பிறந்தவர்.
அரது விதவைத் தாய் தன் வயிற்றைக் கட்டி வைத்து மகனுக்குச்சோறூட்டுவாள்.
எங்கள் பக்கத்தில் பிள்ளைகள் இல்லாத பணக்கார்ர்கள் ‘சுவிகாரம்’ எடுகும் பழக்கம் பரவலாக உண்டு.
அந்தச் சுவிகாரத்தில் பிள்ளையைப் பெற்ற தாய்க்கு விலையாக ஒரு தொகையையும் தருவார்கள்.
அந்தத் தொகைக்காகவும், தன் பிள்ளையாவது நல்ல இடத்தில் வாழட்டுமே என்றும் சுவிகாரம் விட்டு விட்டாள், அந்தத் தாயார்.
ஏழை மகன் லட்சாதிபதியானான். பணக்காரப் பெண்ணைக் திருமணம் செய்துகொண்டான். வசதியான வாழ்க்கையில், பெற்ற ‘தாயையே’ மறந்துவிட்டான்.
அவனால் மறக்க முடிந்தது; தாயினால் அது முடியவில்லை.
ஒருநாள் நான் அந்த மனிதனைப் பார்க்கப் போனேன். காய்கிற வெயிலில், அந்த
வீட்டின் வெளித் திண்ணையில், அந்த அம்மையார் உட்கார்ந்திருந்தார்கள்.
என்னைப் பார்த்ததும் “ஐயா, நீ யார்?” என்று கேட்டார்கள்.
“என்ன ஆச்சி? என்ன வேண்டும்?” என்று நான் கேட்டேன்.
உடனே அந்த மூதாட்டி, “தம்பி, உள்ளே இருப்பது ன்பிளைதான். சுவிகாரம்
விட்டுவிட்டேன். அவைப்பாகுறதுகாக்க் காலையில் இருந்து திண்ணையிலேயே
உட்கார்ந்திருக்கேன். ஒருத்தரும் விடமாட்டேங்கிறாங்க. நீயாவது எம் மங்கிட்ட
கொஞ்சம் சொல்லேன்ம என்றார்கள்.
என் கண்கள் கலங்கிவிட்டன.
ஆசையாக ஒரு கூடையில் பணியாரமும் உளுந்து வடையும் கொண்டு வந்து, துணியல்
அதை மூடி வைத்திருக்கிறார்கள், தன் மகனுக்குத் தன் கையாலேயே ஊட்டி
விடுவதற்காக.
நான் ஏகமாக உள்ளே போய், அந்தப் பையனைப் பார்த்து, “உன்னைப் பெற்ற தாயார்
வந்திருக்கிறார்கள். கொஞ்சம் உள்ளே கூப்பிட்டு உட்கார வையப்பா” என்றேன்.
அவர் கோபமக “அவுங்களுக்கு எப்பவும் இதே வேஐயாய்ப் போச்சு. வராதே
வராதேன்னா எதுக்காக அழைத்து, “இந்தா ஆத்தா வந்திருக்காளாம், ஒரு இருநூறு
ரூபாய் கொடுத்து, இனிமே ந்தப் பக்கம் வர வேண்டாம் என்று சொல்லும என்றார்.
“அதை நீயே கூப்பிட்டுச் சொல்லேன்” என்றேன் நான்.
அவர் மறுத்துவிட்டார், மனைவிக்கு பயந்து.
கணக்குப்பிள்ளை அந்தப் பணத்தைக் கொண்டு போய்க் கொடுத்ததும் அந்த அம்மையார்,
“அப்பச்சி! தம்பி! ஐயா! ஒருதரமாவது பார்த்துட்டுப் போயிடுறேன்!” என்று சத்தம் போட்டார்கள்.
அந்தக் குரல் அந்தப் பாவியின் காதில் விழவில்லை. விளைவு என்ன தெரியுமா?
தாயின் குரலைக் கேட்காத அந்தக் காதுகள், வேறு எந்தக்குரலையும் கேட்க முடியாதபடி, ‘டமாரச்’ செவிடாகிவிட்டன.
மனைவி மயக்கத்தில் மாதாவை மறந்தவன் கதி யென்ன என்பதைப் புராணங்களைப்
படித்து நீ நம்பவில்லையானால், உன் பக்கத்து வீடுகளில் கேட்டுக் பார்.
இப்படியொரு அங்கேயும் நடந்திருக்கும்.
தாய் - தகப்பனுக்குச்செய்யும் பாம் உன் தலையைச் சுற்றி அடிக்கும்.
ஆயிரம் மனைவிமார்களை விலைக்கு வாங்கலாம்; அன்னையும் பிதாவும் மறுபடி வரமுடியாது.
இந்துக்கள் சொன்ன த்த்துவம் வேடிக்கைக் கதையல்ல.
‘யாருகு நீ பாவம் செய்தாலம் அதற்குத் தண்டனை உண்டு’ என்பது அழிக்க முடியாத உண்மை.
இத்தகைய நிகழ்ச்சிகளை நான் விவரித்துக் கொண்டே போகலாம்.
எவ்வளவோ பாவிகள் தங்கள் வாழ்நாளிலே தண்டிக்கப்ட்டதை நான் பார்த்திருக்கிறேன்..
‘பாவத்தின் அளவு எவ்வளவோ அவ்வளவே தண்டனை’ என்து, எவ்வளவு உண்மை!
இறைவன் தீர்ப்பு எப்படி இருக்கும் என்பதை இந்துக்கள் சொன்னதுபோல் வேறு யார் சொன்னார்கள்?
இறைவா, இந்து சமூகம் உன்னையும் உன் ராஜாங்கத்தையும் சரியாக அளந்து வைத்திருப்பதை எண்ணி எண்ணி நான் வியக்கிறேன்.
சொந்த நிகழ்ச்சிகளில் இந்த அனுபவத்தைக் காணாதரை, ஞானமார்க்க உபதேசிகளை நான் கேலி செய்த்துண்டு.
ஒவ்வொரு படிக்கட்டிலும், ஒவ்வொரு உண்மையைக் காணக் கான, நமது ஞானிகள் ‘அறிவுலகத்தின் சுதரளிகள்’ என்றுதான் நான் நம்புகிறேன்.
இசையின் சுவையைப் பாடல் அதிகப்படுத்துவது போல், தத்துவத்தின் உண்மையைச் சம்பவங்களே உறுதி செய்கின்றன.
‘இந்து மகாசமுத்திரம்’ என்ற பெயர். இந்து மதத்துதக்கே பொருந்தும்.
‘பாவமும் குற்றமும் செய்துவிட்டுத் தெய்வத்தை வணங்கினால் பலன் உண்டா?’
நன்றி :- கவிஞார் கண்ணதாசன்

"நிழல்களின் ஒப்பந்தங்களை விட
நிஜங்களின் போராட்டமே சிறந்தது"
என்றென்றும் நட்புடன்,
dharshi.
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

அர்த்தமுள்ள இந்து மதம் - கவிஞர் கண்ணதாசன் Empty கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் - 06

Post by மாலதி July 17th 2011, 17:42

6.புண்ணியம் திரும்ப வரும்
**********************
“வந்த வினையும் வருகின்ற வல்வினையும்,
கந்தனென்று சொல்லக் கலங்கும்”
ஆனால், செய்த வினையும் செய்கின்ற் தீவினையும், ஓர் எதிரொலியைக் காட்டாமல் மறையமாட்டா.
நீ விதைத்த விதைகளை நீயே அறுவடை செய்தபின்னால்தான் அந்த நிலத்தில் வேறுபயிர்களைப் பயிரிட முடியும்.
கொலை, களவு, சூது அனைத்தையும் செய்துவிட்டு, “குமரா! முருகா!” என்று கூவினால் குமரன் நீ வரும் கோயிலுக்குக் கூட வரமாட்டான்.
இதிலும் எனக்கோர் அனுபவம் உண்டு.
என்னிடம் படம் வாங்கிய ஒருவர், படத்துக்காக வசூலான கணக்குக்காட்டாமல்,
பொய்க் கணக்கு எழுதி, நான் அவருக்கு முப்பதினாயிரம் ரூபாய் தர வேண்டும்
என்று கோர்ட்டிலே வழக்குத் தொடர்ந்தார்.
வேறு வழியில்லாமல் வயிற்றெரிச்சலோடு நானும் கொடுக்க வேண்டி வந்தது.
அவர் ஏற்கெனவே ஒரு பணக்காச செட்டியாரையும் ஆச்சாள்புரத்துக்கார்ர் ஒருவரையும் ஏமாற்றியவர்.
அவரது மூலதனமே ஏமாற்றுவதுதான்.
ஏமாற்றி என்ன பயன்?
அத்தனை பணமும் போய், நகை நட்டுகளும் போய், அன்றாடச் சோற்றுக்கே இன்று அலை மோதுகிறார்.
அவரை அடிக்கடி வடபழனி கோவிலில் காணலாம்.
உடம்புக்குச் சட்டையில்லாமல் இடுப்புக்குத் துண்டு கட்டிக்கொண்டு, அந்தப் ‘பாபாத்மா’ தினமும் கோயிலுக்கு வருகிறது.
நெற்றியில் கட்டுக்கட்டடாக விபூதி; இரண்டு காதிலும் கதம்ப몮 பூக்கள்; கையில் தேங்காய் பழம் கொண்ட தட்டு.
அந்த மனிதர் தினந்தோறும் முருகனைத் தேடுகிறார்.
முருகனோ அவரைக் கண்டாலே ஓடுகிறான்.
ஒருவன் வந்த வழியைப் பார்த்துத்தான், கந்தன் வரப்போகும் வழியைத் திறந்து விடுகிறான்.
ராஜாங்கம் கட்டி ஆண்டவனுங்கூட, நேர்மை தவறி நடந்தால் நிம்மதி இல்லாமல் துடிக்கிறான்.
இறைவனில் தராசு வணிகனின் தராசு அல்ல; அது எடையைச் சரியாகவே போடுகிறது.
குளத்திலே ஒருரூபாயைத்தவறிப் போட்டுஇட்டால், குளம் வற்றியுத்ம அது உன்
கைக்கே கிடைக்கிறத - அது நேர்மையாகச் சம்பாதித்த பணமாக இருந்தால்.
ஒரு நடைபாதையில் நீ கணாடித் துண்டைப்போட்டால், நீ திரும்பி வரும்போது, அது உன் காலிலேயே குத்துகிறது.
குளிக்கும் அறையில் நான் எசஞ்சிலைத் துப்பி விட்டேன்.
ஒரு மணி நேரம் கழித்து நான் உள்ளே போன போது, அது என் காலையே வழுக்கி விட்டது.
விதி என்பது இறைவன் விதித்தது மட்டுமல்ல; நீயே விதித்ததுமாகும்.
ஊரையெல்லாம் கேலி செய்த ஒரு பணக்கார்ர். ஊர் முழுவதும் கேலி செய்யும் நிலையில் வாழ்ந்து மடிந்ததை நான் அறிவேன். அவரும் பக்தர்தான்!
பக்தி செய்யும் எல்லாருக்கும் பரமனருள் கிடைப்பதில்லை.
அது பாவம் செய்யாதவர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது.
‘உண்மையே தெய்வம்’ ‘ அனபே தெய்வம்’ என்று இந்து மதம் சொன்னது அதனால்தான்.
‘நம்பினோர் கெடுவதில்லை. நான்கு மறைத்தீர்ப்பு” உண்மைதான். ‘கெட்டவன்’ நம்பினால் அவனருள் கிட்டுவதில்லை.
அதுவும் உண்மைதான்.
காலங்களை நிர்ணயிக்கின்வனும், வாழ்க்கையின் கதியையே
உருவாக்குகின்றவனுமான பரம்பொருள், உன் வாழ்க்கைக்குப் பொறுப்பேற்றுக்
கொளவில்லை, ஆத்மாவுக்கே பொறுப்பேற்றுக் கொள்கிறான்.
மத்த்துறையை ‘ஆத்மார்த்தத்துறை என்பது அதனால்தான்.
ந்தியின் ஓட்டம் பள்ளத்தை நோக்கியே; அந்த நாயகனின் ஓட்டமும் எளிமையான நேர்மையை நோக்கியே.
ஒன்று, அறியாமல் செய்யும் தவறுகள் பாபங்கள் அல்ல; அவை வெறும் தவறுகளே!
அவற்றுக் உடனே மன்னிப்பு உண்டு.
அறிந்து செய்யும் தவற், தவறல்ல: அது குற்றம்.
அதற்கு மன்னிப்புக் கிடையாது!
ஆண்டவனின் அவதாரங்களேகூட, அறியாமல்தவறு செய்திருப்பதாக வழக்குக்கதைகள் உண்டு.
ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி ஒருமுறை கங்கைக்குக் குளிக்கச்சென்றார்.
அவரது அம்பாறாத் தூணியில் ஒரே ஒரு அம்பு மட்டுமே இருந்தது.
அந்த அம்பைப் படுக்கை வசமாக வைக்கக்கூடாதென்ற மரபுப்படி, அதைப் பூமியிலே குத்தி வைத்தார்.
‘ஒற்றை அம்பை ஊன்றி வை என்பது வழக்கு. அம்பை ஊன்றிய ராம்பிரான், கங்கையில் குளித்துவிட்டுக் கரையேறினார்.
ஊன்றிய அம்பை எடுத்தார்.
அதிலொரு தேரைக்குஞ்சு குத்தப்பட்டிருந்தது.
பூமிக்குள்ளிருந்த தேர்க்குஞ்சை அவர் அறியாமல் குத்திவிட்டார்.
தேரைக்குஞ்சு சாகும் தருவாயிலிருந்தது.
ராம்பினான் கபண்கள் கலங்கிவிட்டன்.
“ஐயோ, தேரையே! நான் குத்தும்போது நீ கத்தியிருந்தால் காப்பாற்றி இருப்பேனே. ஏன் கத்தவிலை?” என்றார்.
அதற்குத் தேரை சொன்னது;
“பெருமானே! யாராவது எனக்குத்துண்பம் செய்யும்போதெல்லாம் நான் ‘ராமா
ராமா’ என்றுதான் சத்தமிடுவேன். அந்த ராமனே என்னைக் குத்துகிறார்
என்னும்போது, யார் பெயரைச் சொல்லி ஓலமிடுவேன்?”
ராம்பிரான் கண்ணீரோடு சொன்னார்: “தேரையே, என்னை மன்னித்துவிடு. இதுநான் அறியாமல் செய்த பிழை.”
தேரை சொன்னது:
“பெருமானே! ‘அறியாமல் செய்கின்ற பிழைகள் அப்பொழுதே மன்னிக்கப்படுகின்றன’ என்று சொன்னது உன் வாக்குத்தானே!”
தேரையின் ஆவி முடிந்தது. நான் பாவம் என்று குறிப்பிடும்போது, நீ அறியாமல் செய்த பிழைகளை எல்லாம் பாபக்கணக்கில் சேர்காதே.
சிறு வயதில் கடன் தொல்லை தாங்காமல் நான் ‘திருடியிருக்கிறேன்’ - என் தாயின் பணத்தைத்தான்.
திருடிவிட்டு நிம்மதியில்லாமல் இருந்திருக்கிறேன். கடவுளை வேண்டியிருக்கிறேன் - “இறைவா மன்னி” என்று.
அந்தத்தவற்றைக்கடவுள் மனிக்கவில்லை என்றால் இந்த வாழ்க்கையை எனக்கு அருளியிருப்பாரா?
என்னுடைய நண்பர்களில் என்னிடம் உதவி பெறாதவர் குறைவு.
உதவி பெற்றவர்களில் நன்றியுடையவர்கள் குறைவு.
உதவி பெற்றவர்களில் நன்றியுடையவர்கள் குறைவு.
என்னுடைய ஊழியர்களில் என்னை ஏமாற்றாதவர்கள் குறைவு.
ஏமாற்றியவர்களில் நன்றாக வாழ்கின்றவர்கள் குறைவு.
எழுத்தின்மூலமே சம்பாதித்தவர்களில் என்னைப்போல் சம்பாதித்தவர்கள் குறைவு.
சம்பாதித்ததை அள்ளி இறைத்ததில், என்னைப்போல் அள்ளி இறைத்தவர்கள் குறைவு.
இவ்வளவு அறியாமைக்கிடையிலேயும், ஏதோ ஒரு சுடரொளி என்னைக் காப்பாறுகிறது.
ஏன் காப்பாற்றுகிறது? எதனால் அது என்னைக் காப்பாற்றுகிறது?
‘தர்ம்ம் தலைகாக்கும்’ என்ற இந்துகளின் பழமொழி எனக்கு நினைவுக்கு வருகின்றது.
செய்த பாவம் தலையிலடிக்கிறது - செய்த புண்ணியம் தலையைக்காக்கிறது.
ஆம்: செய்த புண்ணியம் திரும்பி வருகிறது.
புண்ணியம் என்பது, என்றும் எதிலும் நீ செய்யும் நன்றி!
பாவத்தில் முதற்பாவம், நன்றி கொல்லுதல்.
கஷ்ட காலத்தில் எனக்கு ஒரு ரூபாய் உதவியவரை நான் ஞாபகத்தில் வைதுக்கைம்மாறு செய்திருக்கிறேன்.
அந்த நாயகன் அறிய நான் நன்றி கொன்றதில்லை.
ஆகவே பாவம் செய்யாமல்,புண்ணியம் செய்து கொண்டே இறைவனைத்தியானித்தால் உன் வாழ்நாளிலேயே உனக்கொரு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது.
நான த்த்துவம் பேசவில்லை; அனுபவம் பேசுகிறது.
இந்துமத்த்தின் ஒவ்வொரு அணுவையும் நான் உணர்வதற்கு எதையும் நான் படிக்கவில்லை.
சாதாரணம் பழமொழிகளும் அனுபவத்தில் அவற்றின் எதிரொலிகளுமே, இந்துமத்த்தில் ஆழ்ந்த நம்பிக்கையை எனக்கு உண்டாக்கியிருக்கின்றன.
நன்றி :- கவிஞார் கண்ணதாசன்

"நிழல்களின் ஒப்பந்தங்களை விட
நிஜங்களின் போராட்டமே சிறந்தது"
என்றென்றும் நட்புடன்,
dharshi.
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

அர்த்தமுள்ள இந்து மதம் - கவிஞர் கண்ணதாசன் Empty கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் - 07

Post by மாலதி July 17th 2011, 17:43

7. விதிப்படி பயணம்
****************
உனக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கையே ‘விதி’ என்று கூறப்படுகிறது.
உனதுவாழ்க்கை எந்தச் சாலையில்போனாலும், அது இறைவன் விதித்ததே.
ஜன்னம் உலகமெங்கும் ஒரே மாதிரி இருக்கிறது.
பத்தவாது மாதம் ஜன்னம் என்பது நிரந்தரமானது.
ஆனால் வாழ்க்கை ஏன் பல கோணங்களில் போகிறது? மரணம் ஏன் பல வழிகளில் நிகழ்கிறது?
நீ கருப்பையில் இருக்கும்போது, நீ போகப்போகிற பாதைகளும், சாகப்போகிற இடமும், நேரமும், உன் மண்டை ஓட்டுக்குள் திணிக்கப்படுகின்றன.
நீ எங்கே போனாலும், எப்படி வாழ்ந்தாலும், அது இறைவன் வித்ததே.
மனத்தின் சிந்தனைப் போக்கு எப்படி வேண்டுமானாலும் போகலாம்; ஆனால் அது நடப்பதும் நடக்காத்தும் உன் விதிக்கோடுகளில் அடங்கி இருக்கிறது.
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்
என்றார் வள்ளுவர்.
ஊழ் என்பது பூர்வ ஜம்த்தயும் விதியையும் குறிக்கும்.
பூர்வ ஜன்மத்தின் எதிரொலியைக் கொண்டே அந்த ஜன்மத்தின் விதி நிர்ணயிக்கப்பெறுகிறது.
அதனை, ‘ஊழ்வினை உறுத்து வந்தூட்டும்’ என்றான் இளங்கோ.
போன ஜன்மத்தின் எதிரொலியைக் கொண்டே அந்த ஜன்மத்தின் விதி நிர்ணயிக்கப்பெறுகிறது.
அதனை, ‘ஊழ்வினை உறுத்து வந்தூட்டும் என்றான் இளங்கோ.
போன ஜென்மத்தில் உன் வித பாவம் செய்யும்படி விதிக்கப்பட்டிருந்தால், அதற்கான பரிகாரம் இந்த ஜன்மத்தில் எழுதப்படுகிறது.
ஆகவே விதியின் கோடுகள்தாம் உன்னை ஆட்சி செய்கின்றன ன்பது, இந்துக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
நீ எண்ணியது நடந்தாலும் நடக்காவிட்டாலும், எண்ணாத்து நடந்தாலும், யாவும் உன் விதி ரேகைகளில் விளைவே.
முயற்சி கால் பங்கு; விதியின் ஒத்துழைப்பு முக்கால் பங்கு.
“எல்லாவற்றுக்கும் கால நேரம் வர வேண்டும்” என்கிறார்களே இந்துக்கள், அதற்கு என்ன காரணம்?
இன்ன காரியங்கள், உனக்கு உன்ன காலங்களிஙல் நடக்கும் என்று விதிக்கப்பட்டிருக்கிறது; அவ்வளவுதான்.
நினைவுகளின் மயக்கத்தை விதி ஒழுங்குபடுத்துகிறது.
இரண்டாவது உலக யுத்தத்தின்போது, ஹிட்லருகு இருந்த வசதியும் , ஆயுதப் பெருக்கமும் வேறு எந்த நாட்டிற்கும் இல்லை.
ஒரே நாளில் போலந்தைப் பிடித்தான்.
வெறும் மிரட்டலிலேயே செக்கோஸ்லாவாகியாவைப் பிடித்தான்.
குண்டு போடாமலேயே பிரான்ஸைப் பிடித்தான். அவன் விரும்பியிருந்தால் ஐரோப்பாவையும், ஆறு நாட்களில் பிடித்திருக்கலாம்.
எறும் வாய் வேட்டுக்களையே விட்டுக் கொண்டிருந்த சர்ச்சிலை, அவன் கனடாவுக்குத் துரத்தி யடித்திருக்கலாம்
(சர்ச்சில் தென் அமெரிக்காவுக்கு ஓடத் திட்ட மிட்டிருந்தார்.)
அகல ஐரோப்பாஐயும் பிடித்துவிட்டால், உலகத்தில் ஐரோப்பிய
நாடுகளுக்குக்காலனியாக இருந்த ஆசிய - ஆப்பிரிக்க , அரேபிய நாடுகள் - சுமார்
எண்பது- குண்டுகள் போதாமலேயே அவன்கைக்கு இயற்கையாகவே வந்திருக்கும்.
இது சுலபமாக நடந்திருக்கக் கூடியதே.
ஆனால், விதி ஹிட்லரின் ஆணவத்தை ஆட்சி புரிந்தது.
பிரட்டனைக் ‘கோழிகுஞ்சு’ என்று அவன் கேலி செய்துவிட்டு, ‘யானையைச்
சாப்பிட்டால்தான் என் பசி அடங்கும் என்று சோவியத் யூனியனுக்குள்
நுழைந்தான்.
‘அவனது சவக்குழி அங்கேதான் தோண்டப்படுகிறது’ என்று விதி சிரித்தது.
சோவியத் யூனியனின் பருவகாலத்தில் அவன் சிக்கிச் சிக்கி இழுபட அமெரிக்காவும், பிரிட்டனும் தங்களைத் தயார் செய்து கொண்டு விட்டன.
எச்சரிக்கையாக இருந்திராத்தால், உலகத்தையே ஆண்டிருக்கூடிய ஹிட்லர், தன் பிணத்தைக்கூடப் பிறர் பார்க்க முடியாதபடி இறந்துபோனான்.
எந்த மனிதனின் பாதையையும் திசை திருப்பி விடும் விதி. ஹிட்லரின் ஆணவதையும் அழிவை நோக்கித் திருப்பிவிட்டது.
உலக வரலாறுகளை கூர்ந்து நோக்குங்கள்.
நினைத்ததை எல்லாம் நடத்தி முடித்தவன் எவன்?
நினைப்பவன் தான் நீ. முடிப்பவன் அவன்.
இந்துக்களின் த்த்துவத்தில் இதுமுக்கியமானது.
நம்முடைய லகான் இறைவன் கையிலே உள்ளது என்பதை, இந்துமதம்தான் வலியுறுத்துகிறது.
பிச்சைக்காரி ராணியான கதையும், ராஜா பிச்சைக்காரனான கதையும் அதிர்ஷ்டம்
என்ற பெயரிலோ, துரதிர்ஷ்டம் என்ற பெயரிலோ விதியின் பரிசளிப்பு.
“ஐயோ! எவ்வளவோ ஆசை வைத்திருந்தேனே, இப்படி ஆகிவிட்டதே” என்று நீ பிரலாபித்துப் பயனில்லை.
“அப்படித்தான் ஆகும்ம என்று நீ ஜனிக்கும்போது எழுதப்பட்டிருக்கிறது.
ராமனையும் விதி ஆண்டது. ரதியையும் விதி ஆண்டது.
சோழ நாட்டுக் கோவலனின் விதி. மாதவியின் மயக்கத்திலே இருந்தது.
கண்ணகியின் விதி மதுரையிலே இருந்தது.
பாண்டியன் நெடுஞ்செழியன் விதி, ஒரு காற்சிலம்பில் அடங்கியிருந்தது.
அலெக்சாண்டரின் விதி, பாபிலோனியாவில் முடிந்தது.
ஜூலியஸ் சீஸரின் விதி, சொந்த நண்பனின் கையிலே அடங்கியிருந்தது.
நெப்போலியனின் விதி, அவனது பேராசையிலே அடங்கியிருந்தது.
காந்திஜியின் விதி, கோட்ஸேயின் கைத்துப்பாக்கியில் அடங்கி இருந்தது.
அடிமைகள் கிளர்ந்து எழுந்ததும், ஆதிக்க வெறியர்கள் விழுந்து துடித்ததும், காலமறிந்து கடவுள் விதித்த விதி.
கடவுளே இல்லை என்று வாதிடுவோரும் நீண்ட காலம் வாழ வேண்டும் என்று இறைவன் ஏன் விதிக்கிறான்?
தங்கள் கொள்கைகள், தங்கள் கண் முன்னாலேயே தோல்வி அடைவதைக் கண்டு சாக வேண்டும் என்றுதான்!
உண்மையான பக்தி உள்ள சிலருகுஆண்வன் ஏன் நீண்ட ஆயுளைத் தருகிறான்?
‘தாங்கள் பக்தி செலுத்தியது நியாயமேய என்று அவர்களும், அவர்களைப் பார்த்துப் பிறரும் உணர்வதற்காகத்தான்.
இறைவன் விதியை ஒருவேடிக்கைக் கருவியாக வைத்திருக்கிறான்.
சக்தியும் சிவனும் பூமியில் பூமியில் பல வேடங்களில் பிறந்ததாக இந்துக்
கதைகள் கூறுவது, இனைவன், தானும்விதிக்கு ஆட்பட்டு, அதன் சுவையை
அனுபவிக்கிறான் என்பதைக் காட்டுவதற்காகத்தான்.
அந்தக் கதைகளை வெறும்கைதகளாக நோக்காமல், இறைவின் த்ததுவங்களாக நோக்கினால்,
மானடத் த்தத்துவத்தை எப்படி இறைவன் வகுத்திருக்கிறான் என்பதை அறிய முடியும.
விதி-மதி ஆராய்ச்சியில் மதியையே விதிதான் ஆட்சி செய்கிறது என்பதை நான் அனுபவத்தில் கண்டிருக்கிறேன்.
அதை ஒரு கதையாக மூன்று வருடங்களுக்கு முன்பு எழுதினேன்.
பிரவாகம்
-----------
ஞானி, பிகதீஸ்வர்ர், திருக்கோவிலுக்கு விஜயம் செய்தார்.
அவர் பெரிய மகான், உண்மையிலேயே ஞானி. சிறுவயதிலே துறவு பூண்டவர்.
கல்மண்டபத்தின் வடக்கில் அவருக்காக மேடை அலங்கரிக்கப்பட்டது. எதிரே ஆண்களும் பெண்களும் கணக்கிலடங்காது கூடியிருந்தனர்.
வேதங்கள் பற்றியும், புராணங்களைப் பற்றியும் விளக்கிக்கொண்டே வந்த
ஞானியார், ‘யாரும் கேள்விகள் கேட்கலாம். பதில் சொல்லப்படும்’ என்று
தெரிவித்தார்.
யார் என்ன கேள்வி கேட்கப் போகிறார்கள் என்பதையே ஒவ்வொருவரும் ஆவலாக எதிர்ப்பார்த்தார்க்க்.
மண்டபத்தின் மேறகு மூலையிலிருந்து ஓர் உருவம் மெதுவாக எழுந்து நின்றது.
நடுத்தர வயது; தீட்சண்யமான கண்கள்; பந்த பாசங்களில் அடிபட்டுத்தேறி வந்துது போன்ற ஒரு தெளிவு.
சபையில் இருந்த எல்லோரும் அவரையே திரும்பிப் பார்த்தார்கள்.
“தாங்கள் என்ன கேட்க விரும்புகிறீர்கள்?” என்று ஞானியார் கேட்டார்.
அவர் சொன்னார்:
“சுவாமி!
விதியையும் மதியையும் பற்றி வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு சர்ச்சைகள் தோன்றி முடிவுகு வராமல் முடிந்திருக்கின்றன.
‘விதியை மதியால் வெல்ல்லாம் என்றும், மதியை விதி வென்றுவிடும்’ என்றும், இரண்டு கருத்துகள் இன்னும் இருந்துகொண்டிருக்கின்றன.
எது முடிவானதோ சாமிக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்”
கேள்வி பிறந்ததும், ஞானியார் லேசாகச்சிரித்தார்.
மண்டபத்தில் இருந்த எல்லோரையும் பார்த்து, “எல்லோரும் எழுந்து வெளியே செல்லுங்கள்; நான் கூப்பிட்ட பிறகு வாருங்கள்” என்றார்.
மண்டபம்காலியாயிற்று.
இரண்டு நிமிஷங்கள் கழித்து, எல்லோரும் வாருங்கள்” என்றழைத்தார்.
திபுதிபுவென்உற எல்லோரும் ஓடி வந்து அமர்ந்தார்க்க்.
ஞானியார் கேட்டார்.
“குழந்தைகளே, இந்த மண்டபத்தில் உட்பார்ந்திருந்தவர்கள் வெளியே போய்
மீண்டும் உள்ளே வந்திருக்கிறீர்கள். உங்களி போன தடவை உட்கார்ந்த அதே
இடத்தில் உட்கார்ந்திருப்பவர்க்க் எத்தனை பேர்?”
எல்லோரும் விழித்தார்க்க்.
நாலைந்து பேர் மட்டும்பழைய இடத்தில் அமர்ந்திருந்தார்கள்.
மற்ற எல்லோரும் இடம் மாறி இருந்தார்கள்.
கேள்வி கேட்டவரைப் பார்த்து, ஞானியார் சொன்னார்:
பாருங்கள், இந்தச சின்ன விஷயத்தில் கூட இவர்கள மதி வேலை செய்யவில்லை.
கொஞ்சம் நிதானமாக யோசித்தால், இவர்கள்மெதுவாக வந்து, அவரவர் இடங்களில் அமர்ந்திருப்பார்கள்!
இவர்கள் மதியை மூடிய மேகம் எது?”
கேள்வியாளர் கேட்டார்:
“இது அவர்கள் அறியாமையைக் குறிக்கும்: இதை விதி என்று எப்படிச் சொல்கிறீர்கள்?”
ஞானியார் சொன்னார்:
“அறியாமையே விதியின் கைப்பாவை.
அறிவு எல்லோருக்குமே தெளிவாக இருந்து விட்டால், விதியும் இல்லை. விதித்தவனும் இல்லை.”
கேள்வியாளர் கேட்டார்:
“மனிதனின் அறியாமையே விதி என்றால், விதிக்குத் மனி நியமங்கள் இல்லையா?”
ஞானியார் சொன்னார்:
“இருக்கின்றன!
இந்த உருவத்தில், இந்த இடத்தில் பிறக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கவில்லை.
உங்களைப் பிறக்க வைத்தது விதியின் பிரவாகம்.
இப்படித்தான் வாழ வேண்டும் என்று நீங்கள் திட்டமிடுகிறீர்கள்; அப்படி வாழ விடாமல் செய்வது விதியின் பிரவாகம்.
இந்தப் பெண்தான் எனக்குத்தேவை என்று முடிவு கட்டுகிறீர்கள்; அவளைக் கிடைக்க விடாமல் செய்வது விதியின் பிரவாகம்.
எபோது நீங்கள் நினைத்தது நடகவில்லையோ அப்போது உங்கள் நினைவுக்கு மேல் இன்னொன்று இருக்கிறது என்று அர்த்தம்.
அதற்கும் நம் மூதாதையர் சூட்டிய பெயரே விது”
கேள்வியாளர் கேட்டார்:
“அந்த விதி எப்போது நிர்ணயிக்கப்படுகிறது; ஜன்னத்தில் தொடங்குகிறது.
தான் நினைத்தபடியெல்லாம் வாழ்க்கையை நடத்தி முடித்தவர்களை எத்தனைபேர்?
வீரன் வெற்றி பெற்றால், அது வீரத்தால் வந்தது. கோழை தோல்வியுற்றால், அது
கோழைத் தனத்தால் கிடைத்து.
ஆனால் வீரன் தோல்வியுற்றாலோ, கோழை வெற்றி பற்றாலோ, அவை விதியால் நிர்ணயிகப்பட்டவை!
வரலாற்று ந்தியைத் தனி மனிதனின் சாகசங்கள் இழுத்துச் செல்வதில்லை.
விதியே அழைத்துச்சென்றிருக்கிறது
கோவலனை மதுரைக்கு அழைத்ததும், பொற்கொல்லனைச் சந்திக்க வைத்ததும் விதி.
மாதர்களாலேயே ஆரம்பமான பிரஞ்சு சாம்ராஜ்யம், மாதர்களாலேயே அழிவுற்றதற்குக் காரணம் விதி!
ஒன்று நடைப்பெற்ற பின்னால், ‘கொஞ்சம் அப்படிச்செய்திருந்தால் நடந்திருக்காதே’ என்று மதி சிந்திக்கிறது!
மதி ஏன் தாமதமாகச்சிந்திக்கிறது?
விதி முந்திக்கொண்டு விட்டது!”
கேள்வியாளர் கேட்டார்:
“அப்படியானால் மனிதனின் மதியால் ஆக்க் கூடியது ஒன்றுமே இல்லையா?”
ஞானியார் சொன்னார்:
“இருக்கிறது!
பள்ளம் என்று தெரியும்போது, அதில் விழாதே என்று எச்சரிப்பது மதி.
அதைப்பள்ளம் என்று தெரிய வைத்தது விதி.
விதி வாசலைத் திறந்து கொடுத்தால் மதி மாளிகைக்குள்ளே நுழைகிறது.
விதி வாசலை மூடிவிட்டால்,மதி அதிலே மோதிக் கொண்டு வேதன் அடைகிறது.
விதியென்னும் மூலத்திலிருந்து முளைத்த கிளையே மதி.
தந்தையைக்கொன்று சாம்ராஜ்யத்தைக்கைப்பற்றிய இளவரசர்களைப்போல் மதி சில நேரம் விதியை வென்றிருக்கலாம்.
ஆனால் விதி அந்த மதியின் குழந்தையாக மறுபடியும் பிறந்து தந்தையைக் கொன்று விடுகிறதமு.
நியமிக்கப்பட்ட தர்மங்கள் சலனமடைவதும், நியமிக்கப்படாத்தை உறுதி பெறுவதும்,நமக்கு அப்பாற்பட்ட ஒருசக்தியினாலே.
அதை என்ன பெயர் வைத்து அழைத்தாலும், அதுதான் நம்மை அழைத்துச் செல்கிறது.
சாமியாக இருந்தவன் யோகியாக மாறுவது அனுபவதால் வந்த மதி.
யோகி சாமியாக மாறுவது ஆசையின் மூலம் வந்த விதி.
தொடக்கம்பலவீனமனல், முடிவு பலமாகிறது.
தொடக்கம் பலமானால், முடிவு பலவீனமாகிறது!
தொடக்கமும் முடிவும் ஒரே மாதிரி இருந்தால் விதி வேலை செய்யவில்லை என்று அர்த்தம்.
அப்படி யாராவது இருக்கிறார்களா?”
ஞானியாரின் கேள்வி, கேள்வியாளரைச் சிந்திக்க வைத்தது.
கண்களை மூடிக்கொண்டு சிறிது நேரம் யோசித்தார்.
மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
ஞானியார் அமைதியாக்க் கேட்டார்:
“உங்கள் மதி வேலை செய்யவில்லையா>?”
கேள்வியாளர் அமர்ந்தார்.
ஞானியார் சொன்னார்:
ஜன்னத்துக்கும்முன்பும் மரணத்திற்குப்பின்பும், நாம் எங்கிருந்தோம்.
எங்கு போகிறோம் என்று தெரியும்வரை நமக்கு அப்பாற்பட்டது ஒன்று இருக்கிறது.
இடைப்பட்ட வாழ்க்கையை அது நடத்துகிறது.
நான்துறவியானதும் நீங்கள் சம்சாரிகளானதும் நமது விருப்பத்தால் மட்டும் விளைந்தவை அன்றுழ
காலை வெயிலில், நமது நிழல்நம் உயரத்தை விடப் பன்மடங்கு உயரமாக இருக்கிறது.
நம் உருவம் என்னமோ ஒரே மாதிரி இருக்கிறது.
நம் முரவமே விதி; நம் நிழலே மதி!”
மண்டபமே அதிரும்படி கையொலி கேட்டது.
அபை கலைந்தது.
கேள்வியாளர் மட்டும் வெளியே நின்று கொண்டிருந்தார்.
“உங்கள் கேள்வியும் என் பதிலும் விதியல்ல; மதியே!
மதியால் விதியை ஆராய்ச்சி செய்ய முடியும், ஆட்சி செய்ய முடியாது.” என்றபடி ஞானியார் நடந்தார்.
கேள்வியாளர் பின் தொடர்ந்தார்.
நன்றி :- கவிஞார் கண்ணதாசன்

"நிழல்களின் ஒப்பந்தங்களை விட
நிஜங்களின் போராட்டமே சிறந்தது"
என்றென்றும் நட்புடன்,
dharshi.
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

அர்த்தமுள்ள இந்து மதம் - கவிஞர் கண்ணதாசன் Empty கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் - 08

Post by மாலதி July 17th 2011, 17:45

8. ஆணவம்
**********
‘நம்மிடம் ஏதுமில்லை’ என்று நினைப்பது ஞானம்.
‘நம்மைத்தவிர ஏதுமில்லை’ என நினைப்பது ஆணவம்.
ஞானம், பணிந்து பணிந்து வெற்றிமேல் வெற்றியாகப்பெறுகிறது.
ஆணவம், நிமிர்ந்து நின்று அடி வாங்குகிறது.
நமது புராண இதிகாசங்களில் ஆணவத்தால் அழிந்தவர்களைச் சித்தரிக்காத்து மிகவும் குறைவு.
ராம காதையில் ராவணன், பாரத்த்தில் துரியோதன்ன், இரணியன், கண்ணனால்
கொல்லப்பட்ட நரகாசுரன், கந்தனால் கொல்லப்பட்ட சூரபத்மன், மற்றும்
பத்மாசுரன் இவர்களேலாம் ஆவத்தின் அடையாளச்சின்னங்கள்.
இவர்களுடைய முடிவு கொடுமையானதைக் காட்டி, இந்துமதம் ஆணவக்கார்ர்களை எச்சரிக்கிறது.
‘நான்’ என்னும் எண்ணம் ஒருவனுக்குத் தோன்றுகின்றதென்றால், அவன் தோல்விகளைச சந்திக்கத் தயாராகிக்கொண்டிருக்கிறான் என்று பொருள்.
அறிவு குறைவானவர்களுக்கே ஆணவம் வருகிறது.
நிறை குடங்களுக்கு அது வருவதில்லை. வெற்றி மயக்கம் ஏற ஏற அறிவு தடுமாறி,
முட்டாள்தனமான தைரியம் தோன்றி, ‘எல்லாம் நாமே’ என்று எண்ணம்ப் பிறந்து,
தடுமாறிக்காரியம் செய்யத் தொடங்கியதும் ஒவ்வொரு தோல்வியாகத் தொடர்ந்து
வந்து, ஆணவக்காரனைக்கூனிக் குறுகிச்செய்கின்றன.
எனக்குத் தெரிந்த ஒரு நண்பர் நீண்ட கால நண்பர்.
ஆரம்பத்தில் மிகுந்த சிரம்ப்பட்டுக் கொண்டிருந்தார்.
அந்தச் சிரமத்தோடு கடன் வாங்கி ஒரு படம் எடுத்தார்.
கதை, வசனம், டைரக் ஷன், எல்லாம் அவரே.
படம், ‘ஓகோ’ என்று ஓடிற்று.
வெற்றி மயக்கத்தில் அவர் நிலை கொள்ளவில்லை.!
உடனே ஒரே நேரத்தில், நாலைந்து படங்கள் எடுக்கப்போவதாக விளம்பரம் செய்தார்.
விநியோகஸ்தர்கள் அவரிடம் வந்து, “புதிய படங்களை நாங்கள் வாங்கிக்கொள்கிறோம்; யார் யார் நடிக்கிறார்கள்!” என்று கேட்டார்கள்.
அதறகு அவர் \கோபமாக, “எல்லாம் நானே என் பெயருக்குத்தான் படமே தவிர
நடிப்பவர்ளுக்காக அல்ல; இஷ்டமிருந்தால் கையெழுத்துப் போடுங்கள்” என்று
மிரட்டினார்.
நான் ஒருநாள் அவரைச் சந்தித்தபோது, “என் ஒவ்வொருபடத்தையும் ‘பாக்ஸ் ஆபீஸ்’ பண்ணிக் காட்டுகிறேன்” என்று என்னிடமே சவால்விட்டார்.
என்னுடைய படம் என்றால், ஓலையிலே பிரிண்ட் பண்ணினாலும் ஓடும்” என்று
சொன்னார். பெரிய பெரிய கோவில்களுக்கெல்லாம் வேண்டிக்கொண்டும், அவரது அடுத்த
பட்ம படுதோல்வியடைந்தது. மூன்றாவது படமும் படுதோல்வி.
கடன்கார்ர் ஆனார். கஷ்டப்படுகிறார்.
தன்னைத் தேடி வந்தவர்களிடம் ஆணவத்தோடு நடந்து கொண்ட அவர், தினமு அவர்க்கைத் தேடி நடக்கிறார்.
இன்னொருவம்… அவரும் கதை எழுதி டைரபக் ஷன் செய்கிறவர்.
அவர் விழித்துக் கொண்டிருக்கிற நேரத்தில், பெரும் பகுதி தன்னைப் பற்றிஏ பேசிக்கொண்டிருப்பார்.
நீங்கள் அவரோடு பேசப்போனால் நீங்களும் அவரைப்பற்றியே பேசினால்தான் அவர் உங்களோடு பேசுவார்.
வசனத்திலே வல்லினம் மெல்லினம் இருக்காது.
ஆனால் குருட்டுத்தனமாக வந்த வெற்றி, அவரைக்குருடனாகவே ஆக்கிவிட்டது.
இதுவரை ஆணவக்காரர்கள் எப்படி அவதிப்பட்டார்களோ, அப்படிப்பட்ட அவதிக்கே அவரும் தயாராகிக்கொண்டிருக்கிறார்.
மனிதன் உடம்பு மிகவும் பலவீனமானது.
அதில் ஒரு நரம்பைத் தட்டினால் பல நரம்புகளிலும் சங்கீதம் கேட்கிறது.
ஒரு வெற்றிக் கண்ணுக்குத் தெரிந்துவிட்டால், வரப் போவதெல்லாம் வெற்றியே என்ற திமிர் வருகிறது.
அந்தத்திமிர், யாரையும் அலட்சியப்படுத்தச் சொல்கிறது.
அடி பலமாக விழுந்ததும்,திமிர் தானாக அடங்கிப் பணிவு எங்கிருந்தோ வந்து விடுகிறது.
ஒரு சபைக்கு நான் போயிருந்தேன்.
பெரிய பெரிய அறிஞரெல்லாம் வந்திருந்தார்கள்.
அவர்களையெல்லாம் சாதாரணமாக நினைது, ஓர் அரைகுறைப் படிப்பாளி, ஆணவத்தோடு பேசிக்கொண்டு இருந்தார்.
அவரது ஆணவத்தைப் பார்த்து அவர் பேசியதிலிருந்த தவறுகளைக்கூட யாரும் திருந்தவில்லை.
ஒவ்வொ வரியையும் முடிக்கும்போது, “எப்படி நான் சொல்வது?” என்று கேட்டுக் கொண்டே இருந்தார்.
நான் ஆத்திரம் தாங்காமல், “ஒரு குழந்தை எப்படிச் சொல்லுமோ, அப்படியே சொல்கிறீர்கள்” என்றேன்.
“தெளிவில்லாதவன், விவேகமற்றவன்” என்பதை நயமாகவும், நளினமாகவும் சொன்னேன்.
சில கவியரங்கங்களிலும் இந்த அனுபவம் எனக்குக் கிடைத்திருக்கிறது.
இலக்கண மரபோ, இலக்கியச் சுவையோ தெரியாத சிலரும், அந்த அரங்கங்களில் தோன்றிவிடுவார்கள்.
என்னைத்தாக்கிவிட்டால் தாங்கள்பெரிய கவிஞர்கள் என்ற எண்ணத்தில், அசிங்கமாகத் தாக்குவார்கள்.
நான் அடக்கத்தோடும் பயத்தோடும் உட்கார்ந்திருப்பேன். திரும்ப அவர்களைத் தாக்க மாட்டேன்.
காரணம், கிருபானந்தவாரியர் சொன்ன ஒரு கதை.
கோயில் யானை ஒன்று நன்றாக்க்குளித்துவிட்டு நெற்றியில் பட்டை தீட்டிக்கொண்டு சுத்தமாக வந்து கொண்டிருந்ததாம்.
ஓர் ஒடுக்கமான பாலத்தில் அது வரும்போது எதிரே சேற்றில் குளித்துவிட்டு ஒரு பன்றி, வாலை ஆட்டிக் கொண்டே வந்ததாம்.
யானை ஓர் ஓரத்தில் ஒதுங்கி நின்று அதற்கு வழி விட்டதாம்.
அந்தப் பன்றி, எதிரே இருந்த இன்னொரு பன்றியிடம், “பார்த்தாயா, அந்த யானை என்னைக்கண்டு பயந்து விட்டது!” என்று சொல்லிச் சிரித்ததாம்.
அந்த யானையைப் பார்த்து இன்னொரு யானை, “அப்படியா! நீ பயந்து விட்டாயா?” என்று கேட்டதாம்.
அதற்குக் கோயில்யானை கீழ்க்கண்டவாறுபதில்சொன்னதாம்.
“நான் சுத்தமாக இருக்கிறேன், பன்றியின் சேறு என் மேல் விழுந்துவிடக்
கூடாதே என்று ஒதுங்கினேன். நான் ஏறி மிதித்தால் அது துவம்சம்மாகிவிடும்;
ஆனால் என் கால் அல்லவா சேறாகிவிடும்.”
-இந்தக் கதையின்படி சிறியவர்களின் ஆணவத்தைக் கண்டு, நான் அடக்கத்தோடு ஒதுங்கி விடுவது வழக்கம்.
முன்னேற விரும்புகிற எவனுக்கும் ஆணவம் பெருந்தடை.
ஆணவத்தின் மூலம் வெற்றியோ லாபமோ கிடைப்பதில்லை; அடிதான் பலமாக விழுகிறது.
தான்பணக்கார வீட்டுப்பெண் என்ற ம்மதையில் கணவனை அலட்சியப்படுத்தும் மனைவி.
தான் மந்திரியாகிவிட்ட போதையில் தொண்டர்களை அலட்சியப்படுத்தும் தலைவன்;
தான்சொன்ன ஏதோ ஒன்றை ஜனங்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்பதற்காகத்தினமும் எதையாவது சொல்லிக்கொண்டிருக்கும் தலைவர்கள்;
-இவர்களெல்லாம், ஒருகட்டத்தில், அவமானத்தாலும் வெட்கத்தாலும் கூனிக்குறுகிப் போய் விடுகின்றார்கள்.
‘எதற்கும் தான் காரணமல்ல; ஏதோ ஒரு சக்தி தான் காரணம்’ என்று எண்ணுகிறவன் ஆணவத்திற்கு அடிமையாவதில்லை.
‘மற்றவர்களுக்கு என்ன தெரியும்’ என்று நினைப்பவன், சபைகளில் அவமானப்படாமல் தப்பியதில்லை.
ஆணவத்தால் அழிந்துபோன அரசியல் தலைவர்ள் உண்டு; சினிமா நடிகர்கள் உண்டு;பணக்கார்ர்கள் உண்டு.
அடக்கத்தின் மூலமாகவே தோல்விகளில் இருந்து மீண்டும் வெற்றிகரமாக முன்னேறியவர்கள் பல பேருண்டு.
மகாபாரத்த்தில் நான் கேட்டிருந்த ஒரு சம்பவம்.
பரந்தாமன் மஞ்சத்தில் அமைதியாகத்தூங்கிக் கொண்டிருந்தானாம்!
துரியோதன்ன் பரந்தாமனின் தலைமாட்டருகே அமர்ந்தானாம். அர்ச்சுன்ன் காலடியில் அமர்ந்தானால்ம!
காலடியில் அமர்ந்திருந்ததால், விழித்துதும் முதன் முதலில் அவனையே பாரத்த பரந்தாமன், “என் உதவி உனக்குத்தான்” என்று கூறிவிட்டானாம்.
ஆணவம் தலைமாட்டில் அமர்ந்தது; அடக்கம் காலடியில் அமர்ந்தது.
அடக்கத்துக்கு உதவி கிடைத்தது.
பாரதப்போரில் ஆணவம் தோற்றது.
ஆணவத்தோடு நிமிர்ந்து நிற்கும் தென்னை, புயற்காற்றில் விழுந்து விட்டால் மீண்டும் எழுந்து நிற்க முடிவதில்லை.
நாணலோ பணிந்து, வளைந்து, எந்தக் காற்றிலும் தப்பி விடுகிறது.
‘எல்லோர்க்கும் நன்றாம் பணிதல்’ என்றான் வள்ளுவன்.
‘அடக்கம் அமரருள் உய்க்கும் ‘ என்று பேசுகிறவர்கள் உண்டு.
ஆனால், கம்பனுக்கு அந்த ஆணவம் வந்ததில்லை.
அதனால்தான், காலங்களுக்கும் நிலைக்கக்கூடிய காவியத்தை அவனால் எழுத முடிந்தது.
இந்துக்கள் வற்புறுத்தும்பணிவும் அடக்கமும் வாழ்வில் வெற்றியை நோக்கிப் போவதற்கான படிக்கட்டுகளே!
இந்தப் பணிவை வங்காளத்து இந்துக்களிடம் அதிகம் காணலாம்.தன்னைவிட வயதில்
மூத்தவரைச்சந்தித்தால், எந்தப் பேரறிஞனும், அவர்கள்
காலைத்தொட்டுக்கும்பிடுகிறான்.
வெறும் வயதுக்கே அந்த மரியாதையைத் தருகிறான்.
என்னுடைய விழா ஒன்றில், ஒரு பெருந்தலைவனில்காலத் தொட்டு வணங்கியதுபற்றி, என்னைச் சிலர் கோபித்தார்கள்.
நான் சொன்னேன்.
“அந்தக் கால்கள் தேசத்துக்காக சத்தியாக்கிரகம் செய்யப்போன கால்கள்.
சிறைச்சாலையில் பல்லாண்டு உலாவிய கால்கள் என்னுடைய கால்களுக்கு
அந்தப்பாக்கியம் இல்லாத்தால்,கைகளாவது அந்தப் பாக்கியத்தைப் பெறட்டுமே!”
சில சபைகளில், என்னை உட்கார வைத்துக் கொண்டே என்னைப்புகழ்வார்கள். எனக்குச் சர்வாங்கும் ஒடுங்கிவிடும்.
‘நாம் என்ன எழுதிவிட்டோம்? என்ன செய்து விட்டோம்?’ என்ற எண்ணமே தோன்றும்.
‘இப்படிப் புகழ்கிறார்களே’ என்ற பயம் தோன்றும்.
ஆண்டவன், ன் தலையில் ஆணவத்தை உட்கார வைத்து என்னை அவமானபடுத்தியதில்லை!
அடக்கதில் இருக்கும் சூகம், ஆணவத்தில் இல்லை!
ஆணவத்தின் வெற்றி ஆரவாரங்களையும், அவற்றின் வீழ்ச்சியையும், இந்துக்களின் புராணங்களிலும், இதிகாசங்களிலும் படியுங்கள்.
‘கீதையில் கண்ணன் சொல்லும் ஸ்வதர்மங்களில் அடக்கமும் ஒன்று’ என்பதையும் அறியுங்கள்.
குருட்டுத்தனமாக ஏதேனும் வெற்றியோ பதவியோ கிடைத்துவிட்டால், அதை வைத்துக்கொண்டு, ஞானிகளையும் பெரியவர்களையும் அவமதிக்காதீர்கள்.
அடங்கி வாழ்ந்தால் ஆயுள் காலம் முழுவதும் ஓங்கி வாழலாம் என்பதே இந்து மதத்தின் சாரம்.
நன்றி :- கவிஞார் கண்ணதாசன்

"நிழல்களின் ஒப்பந்தங்களை விட
நிஜங்களின் போராட்டமே சிறந்தது"
என்றென்றும் நட்புடன்,
dharshi.
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

அர்த்தமுள்ள இந்து மதம் - கவிஞர் கண்ணதாசன் Empty கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் - 09

Post by மாலதி July 17th 2011, 17:46

9. தாய்- ஒரு விளக்கம்
*******************
பெயர் சொல்ல விரும்பாத ஒருநண்பர் கீழ்கண்ட கடித்த்தை எனக்கு எழுதியிருக்கிறார்.
அவர் எழுப்பியிருக்கும் ஐயம் சிந்தனைக்குரியது.
அதுபற்றி விளக்கம் கூறுமன், அவரது கடத்த்ததை அப்படியே சமர்ப்பிக்கிறேன்.
“தாயை வணங்கு; தந்தையைத்தொழு; தாயிற் சிறந்ததொரு கோவிலும் இல்லை;
கோவிலில் சென்று அடையும் புண்ணியத்தைவிடத் தாயை வணங்கிக் கிடைப்பது பெரும்
புண்ணியம்’ என்று. இந்த வாரக் கதிரில் எழுதியுள்ளீர்கள். நானும் சிறிதளவு
படித்திருக்கிறேன்; ஆனால் எனக்கு ஒன்று மட்டும் விளங்கவில்லை;
குழம்புகிறது.
அதாவது, தாய் எப்படிப்பட்டவராக இருப்பினும் அவர் எத்தகைய
செயலைச்செய்பவராக இருந்தாலும் (கற்பல்ல ஈண்டு குறிப்பது) பிள்ளையிடம்
வாஞ்சையோ பெரியோரிடத்து (தாய்க்கு) மதிப்போ, மஞ்சள் குங்கும்ம்
தந்தவனிடத்து மாண்போ இன்றித் தான்தோன்றித் தனமாக நடக்கும் தாயைக்கூட
மதிக்கலாகுமோ?
மேலும் கூட்டுக்குடும்பம் குழப்பமடைந்து சிதறிப்போகுச்செய்யும் உள்ளம்
படைத்து, கூச்சல் குழப்பம் மிகுதியும் விளைவித்து, வயது வந்த பிள்ளைகளை
மதிக்காமல் நடக்கும் தாய்க்கு, ‘அர்த்தமுள்ள இந்துமதம் ‘ என்ன சொல்கிறது.?
இப்படிப்பட்ட ஒருதாயை வைதல் ஏற்படக்கூடிய பாவ புண்ணியங்களைப் பற்றி
நீங்கள் என்ன சொல்லப்போகிறீர்கள் என்பதை அறிய ஆவலுடன் இருப்பேன்! ஏன்
தெரியுமா? நான் வீட்டுக்கும், வீட்டுப் பெரியோர்களுக்கும் நல்லது செய்ய
முயல்கினேன்; ஆனால் புண்ணியங்கள் கிடைக்கும்?”
உண்மைதான்.
ஒரு தாய்ராட்ச்சியாக இருந்துவிட்டால், அவளும் வணங்கத்த தக்கவள்தானா?
மகனுக்குச் சோறு போடாமல், மணாளனை மதிக்காமல் கற்புநெறி உள்ளவளாக
இருந்தாலும், இந்துக்கள் சொல்வதுபோல் ஓர் அன்னையின் குணம் இல்லாமல்
ராட்ச்சப் போக்கில் நடப்பவளை எங்ஙனம் வணங்குவது?
முதலில் இதற்கு என்ன பதில்
“அப்படிப்பட்ட தாய் லட்சத்தில் ஒருத்தியே” என்பதாகும்.
எந்த நியதியிலும் விதி விலக்கு உண்டு.
ராட்ச்ச தாயும் அப்படியே!
‘மூன்று தலையோடு கன்றுகுட்டி, ஐந்து குலை தள்ளுகிற பசுக்களும் உண்டு.
அவற்றில் சொந்தக்கன்றுகளையே முட்டித்தள்ளுகிற பசுக்களும் உண்டு. இவை
அபூர்வமானவை.
கண்ணாடித் துண்டுகளையே தின்று ஒருவர் ஜீவிக்கிராராம்.
பூமிக்கடியில் ஆறு மாதங்கள் இருந்த ஒருவர் உயிரோடு வெளிவருகிறாரார்.
இவர்கள் எப்படி லட்சத்திலோ, கோடியிலோ ஒருவராக்க் காட்சியளிக்கிறார்களோ, அப்படியேதான் குணங்கெட்ட தாயும்.
சத்திய தேவதை ருத்திர தாண்டவமும் ஆடுவதாக இந்துக்களின் புராணங்கள் கூறுகின்றன.
ருத்திர தாண்டவம்முடிந்த பிறகு அமைதியடைகின்றது.
ராட்ச்சக் குணங்கொண்ட தாயும் தன் முதுமையில் அமைதியடைகிறாள்.
சட்டித் தூக்கி, தெருத்தெருவாக அலைய வேண்டிய நிலைமைக்கு வருகிறாள்.
பரம்பொருள் அந்தத்தாயை அப்படித்தான் தண்டிக்கிறான்.
பசி,பட்டினி, நோய்களால் வெந்து, தன் பாவங்களுக்குக் கழுவாய் தேடுகிறாள் அவள்.
அத்தகைய தாய்க்குத்துர்மரணமே சம்பவிக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.
மலர் கல்லாகிவிட்டால் வாசம் போய்விடுகிறது.
தோற்றம் மலரானாலும் அது வெறும் கல்லே!
குணம் கெட்ட தாயும் அப்படியே!
இப்படிப்பட்ட தாய் எப்படி உற்பத்தியாகிறாள்?
இந்துக்களின் பூர்வஜென்ம நம்பிக்கையை இங்கே தான் நானும் ஒப்புக்கொள்கிறேன்.
பூர்வஜென்ம பாவ புண்ணியம் தொடர்ந்து வருகிறது. காரணம் தெரியாத துயரங்களுக்கு அதுதான் காரணம் என்பது இந்துக்களின் நம்பிக்கை.
‘போன ஜன்மத்திலும் மகனாலும் மணாளனாலும் பழி வாங்கப்பட்ட தாயொருத்தி,
அடுத்த ஜன்மத்தில் இருவரையும் பழி வாங்குகிறாள்’ என்றே நான் அதற்குப்
பொருள் கொள்கிறேன்.
இது எனது யூகமே; வேறு பொருள்களும் இருக்க்க்கூடும்.
இல்லையென்றால், உலகத்திலேயே மென்மையான் அன்னையின் இதயம் கல்லாவது எப்படி?
இறைவனின் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று என்பதைத்தவிர, வேறு பதில் சொல்ல எனக்குத் தோன்றவில்லை.
‘எதிலும் விதிவிலக்கு உண்டு’ என்பதைத்தான் மீண்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
கோடானுகோடி இந்துக்களில் இப்படிப்பட்ட தாய்மார்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவே இருப்பார்கள்.
அதற்காக, அந்தத் தாயின் மகனோ, கணவனோ தாய்க்குலத்தையே வெறுக்ககூடாது.
வகை வகையான மலர்கள் பூத்துக்குலுங்கும் உலகில் ஒவ்வொரு மலருக்கும் ஒவ்வொரு விதமான வாசம் உண்டு.
ஆனால் மலர் ஒன்று ‘மல நாற்றம்’ அடிப்பது உங்களுக்குத்தெரியுமா?
ஆனால் அபூர்வமான மலர்.
அது மலரும் செடியின் பெயர் ‘பீநாறிச் சங்கு’ என்பதாகும்.
அந்தச் செடியின் இலைகள்கூட மலநாற்றமே அடிக்கும்.
அந்த இலைகளை அரைத்துக் குடித்தால், உடம்பில் எவ்வளவு சிரங்கு இருந்தாலும் உதிர்ந்துவிடும்.
அந்த மலரைத் தேடிப்பிடித்து வாங்கிப்பாருங்கள். அதைவிட அழகான மலர் உலகத்திலேயே கிடையாது.
ஆனால் அதை மூக்கிலே வைத்தால் மூன்று நாளைக்குச் சோறு செல்லாது.
அதுவும் இறைவனின் படைப்புத்தான்!
உலகத்திலுள்ள அபூர்வத் தன்மைகளை மனத்திற்கொண்டே, இந்துக்கள் பூர்வஜென்ம நம்பிக்கையை வளர்த்தார்கள்.
குணங்கெட்டவளைத்தாயாகப் பெற்றவர்கள், இந்தப் பூர்வஜென்ம நம்பிக்கையிலேயே அமைதியுற வேண்டும்.
அவர்கள் அவளை வணங்க வேண்டியதில்லை. அவளை விட்டு ஒதுங்கிவிட வேண்டும்.
முதுமையில் அவளே வந்து அவர்களை வணங்குவாள்.
விதிவிலக்குகளை ஐத்துப்பொதுவான த்த்துவங்களை யாரும் எடை போடக்கூடாது.
பொதுவில் ‘தாய்மைய என்பது இந்துக்களால் சக்தி என்றழைக்க்படுகிறது.
ரத்த பாசத்தை உடம்பு சிலிர்க்க வருணிப்பது இந்து மதம்தான்.
பூமியைப் ‘பூமாதா’ என்றும் பசுவைக் ‘கோமாதா’ என்றும் வருணிப்பவர்கள் இந்துக்கள்தாம்.
‘பொறுமையில் பூமாதேவி’ என்றும், அமைதியில் ‘பசு’வென்றும் சொல்பவர்கள் இந்துக்கள்தான்.
ஆகவே, பொறுமையும் அமைதியும் நிறைந்தவள் தாய் என்பது இந்துக்கள் மரபு.
பொறுமை, அமைதியும் நிறைந்தவள் தாய் என்பது இந்துக்கள் மரபு.
பொறுமை, அமைதி, ரத்தபாசம், தன் வயிறைப்பட்டினி போட்டு மகனுக்கு ஊட்டுதல் - இவையே தாய்மை!
இந்துக்களிடேயே ஒரு கதை உண்டு.
ஒருதாய்; அவளுக்கு ரு மகன்; அந்த மகனோ தாசிலோலன்; ஒரு தாசியிடம் மனதைப் பறிகொடுத்தான்.
‘மனம் போனபடியே பொருள் போகும்’ என்றபடி பொருளையும் பறிகொடுத்தான்.
அவனிடம் பொருளில்லை என்பதை அறிந்த கணிகை அவனைத்துரத்தியடித்தாள்.
அவனோ மோக லாகிரி முற்றி “உனக்கு எது வேண்டுமோ கொண்டு வருகிறேன்ம என்று காலில் வீழ்ந்தான்.
அவள் கேலியாகச் சிரித்துக்கொண்டே, “உன் தாயின் இருதயம் எனக்கு வேண்டும்” என்றாள்.
காம மயக்கத்தில் சிக்கிய அவன், தாயிடம் ஓடினான்.
“அம்மா! அவளுக்குக் கொடுப்பதற்கு என்னிடம் ஏதுமில்லை. உன் இருதயம் வேண்டும் என்கிறாள். அவளை என்னால் மறக்க முடியாதம்மா” என்றழுதான்.
தாய் கேட்டாள்.
“அதன்மூலம் அவள் திருப்தியடைந்து உன்னுடனேயே இருப்பாளா மகனே?”
“இருப்பாள்!” என்றான் மகன்.
தன்னைக் கொண்டு இருதயம் வெட்டி எடுத்துக் கொள்ளும்படி தாய் கூறினாள்.
அவன்தாயைக் கொன்றான். இருதயத்தை எடுத்தான். வலது கையில் ஏந்தியவாறு
கணிகை ஏந்தியவாறு கணிகளை வீடுநோக்கி ஓடினான். வழியில் ஒரு கல் தடுக்கிக்
கீழே விழுந்தான். கையிலிருந்த தாயின் இருதயம் நான்கு அடி தள்ளி விழுந்தது.
அடிபட்டு விழுந்த அவனைப்பார்த்து அதே இருதயம் சொன்னது:
“ஐயோ! வலிக்கிறதா மகனே! நான் உயிரோடில்லையே உனக்கு மருத்தவம் செய்ய!”
மகன் “அம்மா!” என்றலிறினான். அவன் ஆவிபிரிந்தது.
ஆம், அதன் பெயர்தான் தாய்மை!
ஓர் இடத்தில் நான் சொன்னேன், “இளைவன் உன் ஆத்மாவுக்கு மட்டுமே பொறுப்பேற்றுக்கொள்கிறான்” என்று.
னால்ஓர் அன்னையோ உன் ஆத்மாவுக்கும் உடம்புக்கும் பொற்பேற்றுக்கொள்கிறாள்.
கடைசியாக, தாயை மதிப்பவர்களுக்கு, பக்தி செலுத்துவோர்களுக்கு, எப்படி
வாழ்வு வரும் என்பதைச்சாதாரண மனிதனுக்கும் புரியும்படி சொல்கிறேன்.
இன்று படவுலகில் இருபது வருஷங்களாக அசைக்க முடியாமல் இருந்துவரும்
நட்சத்திரங்கள், அரசியலில் திடீரன்று, அதிர்ஷ்டம் வாய்ந்த - குறைந்த
கல்வியே உள்ள தலைவர்கள், அனவரையும் எண்ணிப் பாருங்கள். அவர்கள் அனைவரும்
தாயிடம் பக்தி செலுத்திய ஒரே காரணத்தால் முன்னுக்கு வந்தவர்கள்!
நன்றி :- கவிஞார் கண்ணதாசன்

"நிழல்களின் ஒப்பந்தங்களை விட
நிஜங்களின் போராட்டமே சிறந்தது"
என்றென்றும் நட்புடன்,
dharshi.
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

அர்த்தமுள்ள இந்து மதம் - கவிஞர் கண்ணதாசன் Empty கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் - 10

Post by மாலதி July 17th 2011, 17:47

10. மங்கல வழக்குகள்
******************
சுயமரியாதை - சீர்திருத்த இயக்கம் தீவிரமாக இருந்த காலம்.
கடவுள் ஒழிப்பு, பார்ப்பன ஆடிக்க ஒழிப்பு, மூட நம்பிக்கை ஒழிப்பு என, து ஆரவாரம் செய்த காலம்.
அந்த ஆரவாரத்தால் கவர்ச்சிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன்.
கருப்புச் சட்டைப் போட்டுக் கொள்வதும், மதங்களையும் மதவாதிகளையும் கேலி
செய்வதும், அந்த நாளில் இளைஞர்களுக்கு வேடிக்கை விளையாட்டாக இருந்தது.
அது ஒரு த்த்துவமா, அதில் பொருளை உண்டா. பயனுண்டா என்று அறியமுடியாத வயது.
அந்த வயதிலும், அந்த நிலையிலும், இந்துக்களின் மங்கல வழக்குகள் மூதி எனக்குப் பிடிப்புண்டு.
சில சீர்திருத்த திருமணங்களுக்கு நான் தலைமை தாங்கியிருக்கிறேன்.
மற்றும் சில திருமணங்களில் நான் பேசியிருக்கிறேன்.
இன்று மேலவைத்தலைவராக இருக்கும் திரு. சி.பி. சிற்றரசுவின் மகளுக்கு
சீர்திருத்தத்திருமணம் நடந்த போது, நானும் அதில் கலந்து கொண்டேன்.
அங்கே பேசியவர்களில் பொன்னம்பனார் என்று ஒருவரும் பேசினார்.
மணமக்களின் தலைமீது மஞ்சள் அரிசியும் புஷ்பங்களும் தூவப்பட்டது பற்றி அவர் குறிப்பிட்டார்.
“இங்கே மஞ்சள் அரிசி தூவினார்கள். இந்த முட்டாள்தனம் எதற்காக?
பிணத்துக்கும்தான் மஞ்சள் அரிசி தூவுகிறார்கள் இவர்கள் மணமக்களா? இல்லை
பிணங்களா?” என்று அவர்பேசினார்.
எனக்கு நெஞ்சில் அடிப்பது போலிருந்தது.
திருமணவீட்டில் அமங்கலமாய் பேசுகிறாரே என்று நான் வருந்தினேன்.
இன்னொரு சீர்திருத்தத் திருமணம்.
அங்கே ஒருவர் கீழ்க்கண்டவாறு பேசினார்.
“இங்கே நடப்பது சீர்திருத்தத் திருமணம் இரண்டே நிமிடத்தில் செலவில்லாமல்
முடிந்துவிட்டது. ஐயர் வரவில்லை. அருந்ததியும்பார்க்கவில்லை. இங்கே ஐயர்
வராத்தால் இந்ப் பெண் வாழமாட்டாளா? இவளுக்குப் பிள்ளை பிறக்காதா? ஐயர்
வந்து நடத்தாத்தால் இவள் விதவையாகிவிடப் போகிறாளா? அப்படியே விதவையாகிறாள்
என்றே வைத்துக் கொள்வோம். ஐயர் நடத்தும் திருமணங்களில் பெண்கள்
விதவையாவதில்லையா? அந்த ஐயர் வீட்டிலேயே விதவைகள் இருப்பார்களே! அவர் வந்து
கட்டினால்தான் தாலி நிலைக்குமா? நாங்கள் கட்டி வைத்தால் அறுந்து போகுமா?”
-அவர் பேசி முடிக்கவில்லை. நான் அவர் கையைப் பிடித்து இழுத்து உட்கார வைத்தேன்.
“நடப்பது திருமணம். நீ பேசுவது விதவையாவது எப்படி என்பதைப்பற்றி. பேசாமல் உட்கார்” என்றேன்.
பிறகு நான் பேசும்போது நமது மங்கல மரபுகள் பற்றிக் குறிப்பிட்டேன்.
‘மங்கலம்-அமங்கலம்’ என்று இந்துக்கள் பிரித்தது மூட நம்பிக்கையால்ல்ல; அது மனோத்த்துவ மருத்துவம்.
நல்ல செய்திகள், வெற்றிச் செய்திகள் கேட்கும்போது, உன் உடல் எவ்வளவு புல்லரிக்கிறது.
மங்கல வழக்குகள் அதற்காகவே ஏற்பட்டவை.
திருமணத்தில் மாங்கல்யம் சூட்டும்போது ஏன் கெட்டிமேளம் கொட்டுகிறார்கள்?
ஏதாவது ஒருமூலையில், யாரோ யாரையோ, ‘நீ நாசமாய்ப் போக’ என்றோ, ‘உன் தலையில் இடி விழ’ என்றோ அமங்கலமாய்த் திட்டிக் கொண்டிருக்க்கூடும்.
அத்தகைய வார்த்தைகள் மணமக்களின் காதுகளில் விழக்கூடாது என்பதற்காகவே,
அந்தச் சத்தத்தை அடக்குவதற்காவே பலமாக்க் கெட்டிமேளம் தட்டப்படுகிறது.
இதையெல்லாம் மூட நம்பிக்கை என்று சொல்லிக் கொண்டு துள்ளி வந்த சீர்திருத்தம், களை எடுக்கிற வேகத்தில்பயிரையே பிடுங்க ஆரம்பித்தது
நமது மங்கல வழக்குகள் ஒரு நாகரிக சம்பிரதாயத்தையே உருவாக்கியுள்ளன. அவற்றுள் பல விஞ்ஞான ரீதியானவை.
மணமக்கள் வீட்டுக்குள் நுழையும்போது, ஏன் வலது காலை வரச்சொல்லுகிறார்கள்.
மணவறையைச் சுற்றி ஏன் வலம் வருகிறார்கள்.?
ஊர்வலம் வருவது என்று ஏன் கூறுகிறார்கள்?
எல்லாமே வலப்புறம் போவதன் நோக்கம் என்ன? காரணம், பூமியே வலப்புறமாகச் சுழல்கிறது என்பதுதான்.
மனிதனின் இரண்டு கால்களில் இரண்டு கைகளில இடது கால் கைகளைவிட, வலது கால் கைகள் பலம் வாய்ந்தவை.
‘சக்தியோடு வாழ’ நிரந்தரமாக எதிலும் வைப்புறாமகா வருவது நன்றுய என இந்துக்கள் நம்பினார்கள்; நம்புகிறார்கள்.
‘வலம்’ என்பது ‘நாம் வலிமயடைவோம்’ என்றும பொருள் தருகிறது.
‘வலியோம், வல்லோம், வல்லம், வலம்’
-இந்த நான்கு வார்த்தைகளும் ஒரே பொருளுடையவை.
தனது வலிமையின்மீது நம்பிகை வைத்து வாழ்வதற்கே வலது காலை முதலில் எடுத்து வைக்கச்சொன்னார்கள் இந்துக்கள்.
சாதாரணமாக, நண்பர்கள் வீட்டுக்கோ திருமணங்களுக்கோ போகிறவர்கள்,
திரும்பிச்செல்லும் போது, போய்வருகிறேன்’ என்று சொல்லிக்கொண்டு போவார்கள்.
அதன் பொருள், “இன்னும் பல திருமணங்கள் விழாக்கள் உன் வீட்டில் நடைபெறும் நாங்கள் மீண்டும் வருகிறோம்” என்பதே.
அமங்கல வீடுகளுக்குச்செல்கிறவர்கள் திரும்பும்போது, நாங்கள் வரவேண்டியதாயிருக்காதும என்று நம்பிக்கையூட்டுவதாகும்.
மணமக்களை, “பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க” என்று ஏன் வாழ்த்துகிறார்கள்?
உலகத்திலுள்ள வாழ்க்கைப் பேறுகள், இந்துக்களால் பதினாறு வகையாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன.
அவை மக்கட்பேறு, செல்வப்பேறு, உடல்நலம் எனப்பதினாறு வகையாக விரியும்.
மணமக்கள் அவ்வளவு சுகமும் பெறவேண்டும் என்பதையே, இந்துக்கள் ‘பதினாறு பெற வேண்டும்ய என்று குறிப்பிடுகிறார்கள்.
நூற்றுக்கணக்காண ஆண்டுகள், விழுது விட்டு விழுதுவிட்டு ஒருங்கு சேர்ப்பது ஒரே வேர்தான்.
இப்படித் தழைத்து நிற்பவை, வேரோடு வாழ்பவை பெருமைக்குரிய பேறுகள் அனைத்தையும், மங்கல வழக்கில் சேர்த்தார்கள் இந்துக்கள்.
‘கணவனின் பெயரை மனைவி சொன்னால்கூட மரியாதையும் குறையும், மங்கலமும் குறையும்’ என்று நம்பினார்கள்.
யாராவது ஒருவர்தும்மினால், பக்கத்தில் இருக்கிறவர்கள் ‘வாழ்க’ என்பார்கள்.
தும்மினேனாக வழுத்தினாள்” என்றான் வள்ளுவன்.
தும்மும் போது சிலர் ‘நூறு வயது’ என்பார்கள்.
எங்கள் பாண்டிய நாட்டில் பிச்சைக்காரர்கள் வந்து சோறு கேட்கும்போது, சோறு இல்லை என்றால் இல்லை’ என்று சொல்ல மாட்டார்கள்.
‘நிறைய இருக்கிறது; நாளைக்கு வா’ என்பார்கள். தீபத்தை அணைக்கச்
சொல்லும்போது, ‘அணையுங்கள்’ என்று சொல்லமாட்டார்கள். ‘வளர்த்து
விடு’என்பார்கள்.
பெண் ருதுவாவதைப் ‘பூப்படைந்தாள், புஷ்பவதியானாள்’ என்பார்கள்.
“காதலில் துடித்துக்கொண்டிருந்த உள்ளம் , ஆசைகளை அடக்கிக் கொண்டிருந்த உடம்பு அன்றைக்குச் சாந்தியடைகிறது” என்பது அதன் பொருள்.
இந்துக்கள் கூறும் ஒவ்வொரு வார்த்தையிலும் மங்கலமே நிறைந்திருக்கும்.
நான் சொல்லுவது சராசரி இந்துக்களை.
ஆத்திரக்கார்ர்கள் அமங்கலமாகப் பேசுவது இந்துக்களின் மரபைச் சேர்ந்ததல்ல.
நன்றாக வாழ்கிற பெண்ணை எங்களூரில் ‘வாழ்வரசி’ என்பார்கள். கொச்சைத் தமிழில் ‘வாவரசி’ என்பார்கள்.
பெரும்பாலான இந்து சமூகங்களில், ‘கணவனை இழந்த பெண் வெள்ளைச் சேலை அணிய வேண்டும். என்று விதிவகுத்துவைத்திருப்பது ஏன்?
‘இவள் கணவனை இழந்தவள்’ என்று தனித்துக் காட்டுவதற்காகவும், கணவனை இழந்தும் ‘தூய்மையானவள்’ என்று குறிப்பதற்காகவும்.
ஆக, மங்கல மரபு அல்லது வழக்கு என்பது வாழ்க்கையில் நம்பிக்கையும் உற்சாகமும் உண்டாவதற்காகவே.
அமங்கலங்கள் குறிக்கப்படும்போதெல்லாம், அவற்றில் அடக்கமும் அமைதியும் வற்புறுத்தப்படுகின்றன.
“இந்தத் துயரங்கள் உனக்கு இறைவனால் அளிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றை நீ
ஏற்றுக் கொள்” எனக் கூறுவதே அமங்கலங்களில் பலர் கூடிப் பரிந்துரைபதன்
நோக்கம்.
வாழாமல் இறந்துபோன குழந்தைகளை - வாலிபர்களை - கன்னிப்பெண்களை - இந்துக்கள் புதைக்கிறார்கள்.
கொஞ்ச நாளாவது வாழ்ந்து இறந்தவர்களை எரிக்கிறார்கள்.
வாழாத உடம்பு விண்ணிலே கலந்து ஐக்கியமாகவும் அவர்கள் அவ்வாறு செய்கிறார்கள்.
சாம்பலை ஏன் ந்தியில் கரைக்கிறார்கள்?
“ஆறுபோல் உன் ஆத்மா ஓடிக் கடல் போலிருக்கும் இறைவனோடு கலக்கட்டும்” என்பதற்காகவே.
இந்துக்களின் ஒவ்வொரு நடவடிக்கையையும், பழக்க வழக்கங்களையும் கூர்ந்து நோக்குங்கள்.
அவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் பொருள் விரித்துப் பாருங்கள்.
இயற்கையாகவே மங்கலம், அமங்கலம் தெரிந்துவிடும். மங்கலச் சொற்கள், மங்கல
அணி, மங்கல விழா என்ற வார்த்தைகள் இந்துக்களின் பண்பாட்டு உணர்ச்சியை
அறிவுறுத்தும்.
அடுத்தவர் வீட்டில் சாப்பிடும்போது, சாப்பாடு மட்டமாக இருந்தாலும்,
‘அற்புதமாக இருக்கிறது’ என்று சொல்வது, இந்துக்கள் வலியுறுத்தும் நாகரிகம்.
‘பெயக் கண்டும் நஞ்சுண்டமைவர், நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்.” என்றான் வள்ளுவன்.
உலகத்தில், நாகரிகம் என்பது இருபதாம் நூற்றாண்டின் பழக்க வழக்கங்களைக் குறிக்கிறது.
நமது நாகரிகமோ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிவிட்டது.
நன்றி :- கவிஞார் கண்ணதாசன்

"நிழல்களின் ஒப்பந்தங்களை விட
நிஜங்களின் போராட்டமே சிறந்தது"
என்றென்றும் நட்புடன்,
dharshi.
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

அர்த்தமுள்ள இந்து மதம் - கவிஞர் கண்ணதாசன் Empty கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் - 11

Post by மாலதி July 17th 2011, 17:48

11. கல்லானாலும்…. புல்லானாலும்….
******************************
‘ஒரு பெண் உத்தமியாக இருக்க வேண்டும்; பத்தினியாக இருக்க வேண்டும்” என்ற மரபு எல்லா மதங்களிலும் உண்டு.
ஆனால் அதை வலியுறுத்தும் கதைகள் இந்து மத்தில்தான் அதிகம்.
இந்துப் புராணங்களில் வரும் எந்த நாயகியும் அப்பழுக்கற்ற பத்தினியாக்க் காட்சியளிப்பாள்.
குடும்பத்தில் கெட்ட சூழ்நிலை ஏற்படுவதற்குப் பெண்தான் காரணமாக அமைவாள்
என்பதால், மானத்தையும் கற்பையும் பெண்ணுக்கே வலியுறுத்திற்று இந்து மதம்.
கற்பு என்பது, நல்ல தாயிடமிருந்து நல்ல மகள் கற்றுக்கொள்வது.
அடிப்படையிலிருந்தே அந்த ஒழுக்கம் வளர வேண்டுமென்பதற்கு, இந்து மதம் சான்று காட்டி நீதி சொல்கிறது.
‘பிற புருஷனை அவள்மனத்தால நினைத்தாலும் கற்பிழந்து விடுகிறாள்’ என்று இந்து மதம் அச்சுறுத்துகிறது.
பெண் ‘தலைகுனிந்து நடக்க வேண்டுமென்று இந்துக்கள் விரும்புவது’அவள் பிற முகங்களைப் பார்க்காமல் இருப்பதற்குத்தான்.
அழகான ஆடவன்முத்தை அவள் பார்த்த ஒரு கணம் அதிர்ச்சி வந்து, பிறகு அவள்
தன்னிலைகு மீண்டால்கூடக் ‘களங்கம்ய என்று இந்துக்கள் கருதுகிறார்கள்.
‘காலைப் பார்த்து நட’ என்று அவர்கள் போதிப்பது அவள் பிற முகங்களைப்
பார்க்காமல் இருப்பதற்கு மட்டுமல்ல; பூமியிலும் வாழ்க்கையிலும் வழுக்கி
விழாமல் இருப்பதற்குங்கூட!
பெண்ணுக்கு அதை அதிகம் வலியுறுத்தினாலும் ‘ஆணுக்கும் அது வேண்டும்ய என்கிறது இந்துமதம்.
திருமணத்தில் பெண்ணுக்குக் கழுத்தில் மாங்கல்யம் கட்டுகிறார்கள்! காலிலே ஆடவனுக்கு வெள்ளியால் ‘மெட்டி’ போடுகிறார்கள் இவை ஏன்?
நிமிர்ந்து நடந்துவரும் ஆடவன் கண்ணுக்கு எதிரே நடந்துவரும் பெண்
கழுத்தில் மாங்கல்யம் இருப்பது தெரிய வேண்டும். ‘அவள் அந்நியன் மனைவி’
என்று தெரிந்து அவன் ஒதுங்கிவிட வேண்டும்.
தலைகுனிந்து நடக்கும் பெண்ணின் கண்களுக்கு எதிரே வரும் ஆடவன் கால்மெட்டி
தெரிய வேண்டும். ‘அவன் திருமணமானவன்’எனத்தெரிந்து அவள் ஒதுங்கி விட
வேண்டும்.
ஒருபெண்ணும் காளையும் சந்தித்து ஒருவரையொருவர் காதலிக்கலாம். மணம்
செய்து கொள்ளலாம். காதல் நிறைவேறவில்லை என்றால பிரிவால் ஏங்கலாம்;
துயரத்தால் விம்மலாம்; இறந்தும் போகலாம். அது ஒரு கதையாகவோ காவியமாகவோ
ஆகலாம்.
ஆனால் திருமணமான ஒருபெண்ணுக்கு பரபுருஷன் மீது ஆசை என்பது கிஞ்சித்தும் வரக்கூடாது.
தாலி என்பது பெண்ணுக்குப் போடப்படும் வேலி; அதை அவள்தாண்டமுடியாது.
தமிழகத்திலே ஒரு மன்னனுக்குத் ‘தாலிக்கு வேலி’ என்ற பெயரே உண்டு.
திருமணத்தின் போது ‘அக்கினி’ வளர்க்கிறார்களே, ஏன்?
அவர்களது எதிர்கால ஒழுக்கத்திற்கு ‘அக்கினி அவர்கள் உள்ளத்தை எரிக்கிறான்; அவர்களைத் தண்டிக்கிறான்.
அதனால்தான், கற்பு நிறைந்த பெண்ணைக் ‘கற்புக்கனல்’ என்கிறார்கள். அம்மி மிதிக்கிறார்களே, ஏன்?
எல்லாக்குடும்பங்களுக்கும் இன்றியமையாத்து அம்மி. அந்த அம்மியின்மீது
காலை வைப்பது, ‘என் கால் உன்மீதுதான் ருக்கும்; உன்னைத் தாண்டிப்போஆகது
என்று சத்தியம் செய்வதே.
“படி தாண்டாதப் பத்தினி’ என்பது வழக்கு.
“படியைத் தாண்ட மாட்டேன்” என்பதே அம்மியின் மீது சொல்லப்படுவது.
அருந்ததியைப்போல் நிரந்தரக் கற்பு நட்சத்திரமாக நின்று மின்னுவேன்” என்று ஆணையிடுவதே.
‘பால்-பழம்’ சாப்பிடுவது ஏன்?
அது “பாலோடு சேர்ந்த பழம்போலச் சுவை பெறுவோம்” என்று கூறுவதே.
பூ மணம் இடுவது ஏன்?
“பூமணம்போலப் புகழ் மணம் பரப்புவோம்” என்றே!
மாங்கல்யத்தில் மூன்று முடிச்சுப் போடுவதேன்?
ஒரு முடிச்சு கணவனுக்கு அடங்கியவளென்றும், மறு முடிச்சு தாய்
தந்தையருக்குக்கட்டுப்பட்டவளென்றும், மூன்றாவது முடிச்சு தெய்வத்துக்குப்
பயந்தவளென்றும் உறுதி கொள்ள வைப்பதே.
ஆம்; பெண்ணிற்குத் ‘தற்காப்பு’ வேண்டும்; தாய்-தந்தை ‘காப்பு’ வேண்டும்; தெய்வத்தின் ‘காப்பு’ அணியப்படுகிறது.
‘அவளைக் காப்பேன்’ என்ற உத்தரவாத்திற்காகவே கணவன் கையில் ‘காப்பு’க்கட்டப்படுகிறது.
குழந்தைப்பருவத்திலிருந்து முதுமைப் பருவம் வரை ஒருபெண்ணைப் பக்குவமாக வைத்திருக்க இந்து மதம் கூறும் வித்தியாசங்கள்தாம் எத்தனை!
‘கற்புடைய பெண் நினைத்தால் கடவுள்களையே குழந்தைகள் ஆக்கலாம்’ என்று போதிக்கும் அனுசூயையின் கதை.
‘கற்புடைய பெண் விரும்பினால், சூரியனையே உதிக்காமல் செய்யலாம்’ என்று கூறும் நளாயினியின் கதை.
கற்புடைய பெண் மரணத்தையும் வெல்லுவாள்’ என்று கூறும் சாவித்திரியின் கதை.
அதையே வேறு வடிவில் நாகபஞ்சமி கதை.
இவையெல்லாம் பொய்க்கதைகள் என்ற வாதிகலாம். ஆனால் ‘அவர்களைப் போல’த்
தன்மனைவி இருக்க வேண்டும் என்று விரும்புகிறவனுக்கு இவை மெய்க்கதைகளே!
கொல்லப்பட்டான் கணவன் என்றறிந்து, துடித்தெழுந்து மதுரைநகர் வலம் வந்து,
‘செங்கதிர்ச் செல்வனே! என் கணவன் கள்வனா?” என்று நியாயம் கேட்டுத்
துர்க்கைக் கோயிலில் வளையல்களை உடைத்து மதுரையை எரித்தாள் கண்ணகி.
‘அவள் இடது பக்கத்து மார்பைத்திருகி எறிந்தாள்; மதுரை எரிந்தது’ என்கிறது சிலப்பதிகாரம்.
“மார்பைத்திருகி எறிந்தால் மதுரை எரியுமா?” என்று கேலி பேசுவோருமுண்டு.
“இடது பக்கத்து மார்பை” என்று இளங்கோ சொல்வதைக்கவனிக்க வேண்டும்.
இடது பக்கம்தான் இதயம் இருக்கிறது. அதுவும் மார்பை ஒட்டியே இருக்கிறது.
‘அந்த இருதயத்து அக்கினி மதுரையையே எரித்தது’ என்பதைத்தான் இளங்கோ அப்படி விவரிக்கிறான்.
“கல்லானாலும் கணவன்! புல்லானாலும் புருஷன்” என்பது இந்துக்கள் பழமொழி.
“கல்லும் புல்லும் கணவனாகுமா?” என்று கேலி பேசுவோருமுண்டு.
வெறும் ஜடப்பொருள்களான கல்லையும், புல்லையும் இது குறிக்கவில்லை..
“உன் கணவன் மனது கல்லானாலும், அவன் உனக்கக்கணவனே; சம்பாதிக்க முடியாத
சக்தியற்ற கோழையாக ஊருக்குப் புன்மையானவனாக, வெறும் புல்லைப் போல
இருந்தாலும், அவன் உனக்குப் புருஷனே” என்பது அதன்பொருள்.
பெண்ணைத்தெய்வமாக்கிக்கணவனப்பக்தனாக்கி வாழ்க்கையைச் சந்தோஈமாக்க, இந்து
மதம் எடுத்துகொண்ட முயற்சியைப் போல வேறு எந்த மதமும்
எடுத்துக்கொண்டதில்லை.
அந்நியப் புருஷன் தன்னைப்பார்க்கிறான் என்று தெரிந்ததும் முந்தானையைச் சரிசெய்துகொள்ளும் பெண்கள் இந்துமத்த்தின் சிருஷ்டிகள்.
கற்புக்கு இவ்வளவு காவல் வேலிகள் போட்ட பிறகும், பலாத்தாரமாக, வேறு வழியில்லாமல் கெடுக்கப்பட்ட பெண்களுக்குப பரிகாரமென்ன?
இங்கே நிகழ்ச்சியொன்று பழைய த்த்துவத்தை வலயுறுத்துகிறது.
1947-48 - ல் பாகிஸ்தானில் கற்பழிக்கப்ட்ட இந்துப் பெண்கள் லட்சோபலட்சமாக இந்தியாவுக்கு வந்தார்கள்.
“அவர்கள் உடலால்தான் கெட்டார்கள். உள்ளத்தால் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று காந்தியடிகள் வாதாடினார்.
எத்தனை இளைஞர்களுக்கு அந்த அநியாயம் புரிந்ததென்று தெரியவில்லை.
ஆனால், காந்தியடிகள் நேசித்து வணங்கிய ராம்பிரானின் வரலாற்றிலேயே அதற்கு நேரடியாகச்சாட்சியம் உண்டு.
அது அகலிகையின் கதை.
அகலிகையின் கதை.
அகலிகையின் முனிவன் மணந்தான்.
ஒருநாள் நள்ளிரவில் இந்திரன் சேவல் வடிவமெடுத்தான்; பொழுது விடிந்துவிட்டது. போலக்கூவினான்.
உண்மையறியாத முனிவன் சந்தியாவந்தனத்திற்குப் புறப்பட்டான்.
இந்திரன், முனிவன்போல் வேடமிட்டு அகலிகையை நெருக்கினான்.
திரும்பி வந்த முனிவன் உண்மையறிந்தான். அகலிகையைக் கல்லாகச் சபித்துவிட்டான்.
ராம்பிரானின் காலடிபட்டுத்தான் அந்த சாபம் நீங்க வேண்டும்.
ராமபிரான் ஒருநாள் அந்தக் கல்லை மிதித்தார். அகலிகைமீண்டும் உயிர் பெற்றாள்.
முனிவனோ, “நான் என்று நினைத்து இன்னொருவனோடு அவள் கலந்ததெப்படி? இவள்
பத்தினியானால் எனக்கும் இன்னொருவனுக்கும் ‘பேதம்’ தெரியாதா?” என்று
கேட்டான்.
அதற்கு ராம்பிரான் சொன்னார்:
“கடந்த காலம், நிகழ்காலம்,எதிர்காலம் ஆகிய திரிகாலமும் அறிந்த முனிவன்
நீ! நீயே உண்மைச் சேவல் எது, பொய்ச்சேவல் எது என்று தெரியாமல்
சந்தியாவந்தனத்துக்குப்பிறப்பட்டாயே! அவளோ ஒரு காலமும் தெரியாத பேதை!
உள்ளத்தால் உன்னையே நினைத்தாள். உடலால் தான் கெட்டாள். ஆகவே ஏற்றுக்கொள்வது
உன் கடமை”.
முனிவன் அவளை ஏற்றுக்கொண்டு விட்டான்.
பாகிஸ்தானில் கற்பழிக்கப்பட்ட பெண்கள் பற்றிய காந்தியடிகளின் வாதம், ராம்பிரான் வாத்த்தின் எதிரொலியே!
நான் ஏற்கெனவே சொன்னதுபோல அறியாமல் செய்த பிழைகள் மன்னிக்கப்ட வேண்டியவையே!அவை விதிக்கணக்கில் சேர்க்கப்பட வேண்டியவையே!
‘அறிந்து கெடக்கூடாது’ எனக் குலமாதருக்கு விதித்த தடை, நமது குடும்ப வாழ்வை எவ்வளவு நிம்மதியாக்கி இருக்கிறது!
கற்பு என்றொரு வேலி போட்டு, பெண்ளைத் தெய்வங்களாக்கி, குடும்பங்களை
மகிழ்ச்சிகரமாக்கிய ‘ஏ! இந்து மதமே, உன்னை என் உயிராக நேசிக்கிறேன்.’
நன்றி :- கவிஞார் கண்ணதாசன்

"நிழல்களின் ஒப்பந்தங்களை விட
நிஜங்களின் போராட்டமே சிறந்தது"
என்றென்றும் நட்புடன்,
dharshi.
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

அர்த்தமுள்ள இந்து மதம் - கவிஞர் கண்ணதாசன் Empty கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் - 12

Post by மாலதி July 17th 2011, 17:49

12. நல்ல மனைவி
***************
மனைவியைத் தேர்ந்தெடுப்பதில் இளைஞர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நிதானத்தையும் எச்சரிக்கையையும் இந்துமதம் வலியுறுத்துகிறது.
‘அவசரத்தில் கல்யாணம் பண்ணி சாவகாசத்தில் சங்கடப்படாதே’ என்பது இந்துக்களின் எச்சரிக்கைப்பழமொழி.
இளம் பருவத்தின் ரத்தத்துடிப்பு வெறும் உணர்ச்சிகளையே அடித்தளமாக்க்கொண்டது.
அந்தப் பருவத்தில் காதலும் தோன்றும்; காம்மும் தோன்றும்.
ஒருபெண்ணிடம் புனிதமான காதல் தோன்றிவிட்டால், உடல் இச்சை உடனடியாக எழாது.
அவளைப்பார்க்க வேண்டும். பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும். பேச வேண்டும். பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆசை வளரும்.
அவளைக்காணாத நேரமெல்லாம் கவலைப்படும்.
கனவு காணும்.
கற்பனை செய்யும்.
மிகவும் சிறு பருவத்தில் மட்டுமே அத்தகைய புனிதக் காதல் தோன்றும்.
அது நிறைவேறி, வாழ்க்கை வெற்றிகரமாக நடப்பதும் உண்டு; நிறைவேறாமல்
தலையணையைக் கண்ணீரால் நனைப்பதும் உண்டு. நிறைவேறிய பிறகு கூட்டுறவில்
தோல்வி ஏற்படுவதும் உண்டு.
ஒரு பெண்ணின் மீது காதல் கொள்ளும்போது உடல் இச்சை உந்தித் தள்ளுமானால், அந்தக் காதல் ஆத்மாவின் ராகம் அல்ல; சரீரத்தின் தாளமே!
உடல் இச்சையால் உந்தித்தள்ளப்படும் எந்த இளைஞனும் நல்ல பெண்ணைத் தேர்ந்தெடுப்பதில் தவறிவிடுகிறான்.
எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் அவனுக்குப் பிடிக்கிறது.
அவள் சரியானவள், இவள் தவறானவள் என்று உணர முடியாமல் போகிறான்.
பெரும்பாலும் தவறான ஒருத்தியே அவனுக்கு வந்து சேருகிறாள்.
பூரித்து நிற்கும் சரீரத்தில் மட்டுமே ஒருவனுடைய பார்வை
லயித்துவிட்டால், அந்தச் சரீரத்துள்ளே இருக்கும் இதயத்தின் சலனத்தை,
சபலத்தை, அகங்காரத்தை, மோசத்தை, வேஷத்தை அவன் அறிய முடியாமல் போகிறது.
ஆனால் ஆத்மாவின் ராகம் கண்களை மட்டும் கவனிக்கிறது.
அந்தக் கருநீலக் கண்களை மட்டும் கவனிக்கிறது.
அந்தக்கருநீலக் கண்கள் அவனைப் பார்த்து நாணுவதிலும், அச்சப்படுவதிலும் ஆத்மாவின் புனித்த் தன்மை வெளியாகிறது.
அங்கே உடல் உருவம் மறைந்து, உள்ளமே மேலோங்கி நிற்கிறது.
புனிதமான அந்தக் காதலை அறியாதவர்கள் உடல் இச்சையால் தவறான பெண்களை மணந்து, நிம்மதி இழந்து விடுகிறார்கள்.
எதிர்காலக்குடும்ப நிம்மதியையும் ஆனந்தத்தையும் நாடும் இளைஞன், எத்தகைய
பெண்ணைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்கு வடமொழியில் ஒரு சுலோகம் உண்டு.
கார்யேஷூதாசி
கரணேஷூ மந்திரி
ரூபேஷூ லட்சுமி
க்ஷமவா தரித்ரி
போத்யேஷூ மாதா
சயனேஸூ வேஸ்யா
சமதர்ம யுக்தா
குலதர்ம்பத்தினி
-சேவை செய்வதில் தாசியைப் போலவும்,
யோசனை சொல்லுவதில் மந்திரியைப்போலவும்,
அழகில் லட்சுமியைப் போலவும்,
மன்னிப்பதில் பூமாதேவியைப்போலவும்,
அன்போடு ஊட்டுவதில் அன்னையைப் போலவும்,
மஞ்சத்தில் கணிகையைப் போலவும்,
நடந்து கொள்ளக்கூடிய ஒருத்தியே குலதர்ம பத்தினி என்கிறது அந்த சுலோகம்.
கொண்டான் குறிப்பறிவாள் பெண்டாட்டி’ என்று பழமொழிக்கேபக்கணவனுக்கு
என்னென்ன நேரங்களில் என்னென்ன தேவை என்பதை வீட்டுகு வந்த சில நாள்களிலேயே
கண்டு கொண்டு, அந்தக் கடமைகளைச் செய்வதில் அவள் அடிமைபோல் இயங்க வேண்டும்.
(வடமொழியில் தாசி என்றால் அடிமை)
அவள் கல்வியறிவுளவளாய், இக்கட்டான நேரங்களில் நல்ல யோசனை சொல்பவளாய், ஒரு மந்திரியைப் போல இயங்க வேண்டும்.
‘பார்ப்பதற்கு லட்சுமி மாதிரி இருக்கிறாள்.’ என்கிறார்களே, அந்தமகாலட்சுமியைப் போன்ற திருத்தமான அழகு இருக்க வேண்டும்.
அழகு, என்றால் முடியை ஆறு அங்குலமாக வெட்டி, ஜம்பரைத் தூக்கிக் கட்டி,
முக்கால் முதுகுபின்னால் வருவோருக்குத் தெரிகிற மாதிரி ஜாக்கெட் போட்டு,
பாதி வயிற்றையும்பார்வைக்கு வைக்கும் நாகரிக அழகல்ல;
காஞ்சிபுரம் கண்டாங்கி கட்டி, அரைக்கை ரவிகை போட்டு, ஆறடிக் கூந்தலை
அள்ளி முடித்து, மல்லிகைப் பூச்சூடி, முகத்துகு மஞ்சள் பூசி, குங்கும்ப்
பொட்டு வைத்து, கால் பார்த்து நடந்து வரும் கட்டழைகையே, ‘மாகலட்சுமி போன்ற
அழகு’ என்றார்கள்.
அவள் பார்க்கும்போதுகூட நேருக்குநேர் பார்க்கமாட்டாள்.
“யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்”
- என்றான் வள்ளுவன்.
ஒரு கண் சிற்க்கணித்தாள் போல நகும்’ என்பதும் அவளே.
எந்த ஆடவனின் அழகும் ஒரு பெண்ணின் பார்வையில் திடீரென்ற அதிர்ச்சியைத்
தருமென்றால் மகாலட்சுமி மோற் குலப்பெண்கள், அந்த அதிர்ச்சிக்குப் பலியாகி
விடுவதில்லை.
இடி தாங்கிக் கருவி, இடியை இழுத்துக் கிணற்றுக்குள் விட்டுவிடுவது போல்
அழகான ஆடவன் தந்த அதிர்ச்சியை அடுத்த கணமே அவர்கள் விரட்டி விடுகிறார்கள்.
ரூபத்தில் மகாலட்சுமி, என்று சொல்லுகிற சுலோகம், அப்படிப்ட்ட ரூபத்திலுள்ள இதயத்தையும் மகாலட்சுஇயின் இதயமாகவே காட்டுகிறது.
பொறுத்தருள்வதில் அவள் பூமாதேவியைப் போல் இருக்க வேண்டும்.
கணவனது சினத்தைத் தணிக்கும் கருவியாக இருக்க வேண்டும்.
அவனது கோபத்தில் எண்ணெய் ஊற்றி குடும்பத்தை இரண்டாக்கி விடக்கூடாது.
நல்ல குலப் பெண்களால் அது முடியும். அறுசுவை உணவை அன்போடு ஊட்டுவதில், அவள் தாய்போல் இருக்க வேண்டும்.
‘தாயோடு அறுசுவைபோம்’ என்பது, நம் முன்னோர் மொழி.
பள்ளி அறையில் அவள் கணிகையைப் போலவே நடந்துகொள்ள வேண்டும். கணிகையின்
சாகசம், சாதுர்யம், ஊடல், கூடல் அனைத்தும் உள்ளவளாய் இருக்க வேண்டும்.
மீண்டும் அவளையே பார்க்க வேண்டும். என்ற ஆசை கணவனுக்கு எழ வேண்டும்.
-அப்படிப்ட்ட ஒருபெண்ணைத் தன்பத்தினியாக ஏற்றுக்கொண்டவன், பெரும்பாலும் கெட்டுப் போவதும் இல்லை. வாழ்க்கையில் தோல்வியடைவதும் இல்லை.
நல்ல பெண்ணை மணந்தவன்,முட்டாளாய் இருந்தாலும், அறிஞனாகிவிடுகிறான். அவன் முகம் எப்பொழுதும் பிரகாசமாயிருக்கிறது.
தவறான பெண்ணை அடைந்தவன், அறிஞனானாலும் முட்டாளாகி விடுகிறான். அவன் முகத்தில் ஒளி மங்கி விடுகிறது.
எல்லாம் சரி. அத்தகைய நல்ல பெண்ணைக் கண்டுபிடிப்பது எப்படி?
அதற்குப் பாண்டிய நாட்டு இந்துக்களிடையே ஒருபழமொழி உண்டு.
‘தாயைப் பார்த்துப்பெண்ணெடு
தரத்தைப்பார்த்து வரவிடு
நிலத்தைப் பார்த்து பயிரிடு
நேரம் பார்த்து முடிவெடு’
- என்பார்கள்.
“தாயைத் தண்ணீர்த் துறையில் பார்த்தால்,
மளைப் படிக்கட்டில் பார்க்க வேண்டாம்” என்பார்கள்.
“தாயைப் போலபிள்ளை நூலைப்போல சேலை” என்பார்கள்.
தாயின் குணங்கள் பெண்ணுக்கும், தந்தையின் குணங்கள் பிள்ளைக்கும் படிவதாக ஐதீகம்.
அப்படிப் படியாமலும் போவதுண்டு; அது விதி விலக்கு.
ஆகவே, தாயைப் பற்றித் தெரிந்து கொண்டால்,பெண்ணைப்பார்க்க வேண்டியதில்லை.
இளைஞரின் துடிதுடிப்பு தாயைப்பற்றிக் கேள்வி கேட்பதில்லை. பெண்ணின் வாலிப்பான அங்கங்களே அவன்நினைவை மயக்குகின்றன.
அதனால்தான் ‘பெற்றோர் பார்த்து மகனுக்குப்பெண் தேட வேண்டும்’ என்கிறார்கள்.
பெற்றவர்கள் பெண் பார்க்கும்போது, பெண்ணின் குலம் கோத்திரம் அனைத்தையும் ஆராய்ந்து பார்த்தபிறகுதான், பேசி முடிக்கிறார்கள்.
அத்தகைய திருமணங்ள் - நிதானமாக அறிந்து முடிக்கப்ட்ட திருமணங்கள். நூற்றுக்குத்தொண்ணூறு வெற்றிகரமாக அமைந்திருக்கின்றன.
ஆத்திரத்தில் காதல்
அவசரத்தில் கல்யாணம்
-என்று முடிந்த திருமணங்கள். நூற்றுக்குத் தொண்ணூறு தோல்வியே அடைந்திருக்கின்றன.
ஆகவே, ஆயுள்காலக் குடும்ப வாழ்க்கைக்கு நிம்மதி வேண்டுமென்றால், பெணகள் தேடும் பொறுப்பை பெற்றோர்களிடமே விட்டுவிட வேண்டும்.
காவியத்துக்குச் சுவையான காதல் வாழ்க்கை, பல பேருக்கு நேர்மாறான பலனையே
தந்திருக்கின்றது. (விதி விலக்குகளை இதில் நான் சேர்க்கவில்லை)
குடிப்பிறப்புப் பார்த்துதான பெண்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
இல்லையென்றால் வாழ்க்கை மழுவதும் அமைதி இழந்து, அவமானம் சுமந்து, அழுது
நொந்து சாக வேண்டியிருக்கும்.
‘குடிப்பிறப்பு’ என்பது ஜாதியைக் குறிப்பதல்ல; பெண் பிறந்த குடும்பத்தையே குறிப்பது.
எந்த ஜாதியிலும் நல்லபெண்கள் தோன்றுகிறார்கள்; கெட்ட பெண்களும் இருக்கிறார்கள்.
நல்ல பெண்களைத் தேர்ந்தெடுப்பதில் ஜாதி- மதம் -பார்ப்பது பயன்ற்றது.
குடிப்பிறப்புத்தான் இன்றியமையாத்து.
இலங்கையில் சீதையைக் கண்டு திரும்பிய அநுமன், இராமனிடம் இப்படிச் சொல்கிறான்.
“விற்பெரும் தடந்தோள் வீர
வீங்குநீர் இலங்கை வெற்பின்
நற்பெரும் தவத்த ளாய
நங்கையைக் கொண்டே னில்லை;
இற்பிறப் பென்ப தொன்றும்
இரும்பொறை என்ப தொன்றும்
கற்பெனும் பெயர தொன்றும்
களிநடம் புரியக் கண்டேன்!”
“ஆரியப் புத்ரா! நான் இலங்கையின் சீதை என்னும் நங்கையைக் காணவில்லை.
“குடிப்பிறப்பு என்ற ஒற்றுமையும், சிறந்த பொறுமை எனும் ஒன்றையும், கற்பு எனும் ஒன்றையும் கண்டேன்” என்கிறான்.
“நலத்தின் கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப்படும்”
என்றான் வள்ளுவன்.
“நடத்தையின் குற்றம் குலத்தின் குற்றமே” என்பது வள்ளுவன் வாதம்.
ஆகவே, ஒரு பெண்ணின் குடிப்பிறப்பைக்கூர்ந்து அறிதல் இன்றியமையாத்து.
நற்குடிப் பிறப்பை அறிந்துகொண்டு விட்டால், பிறகு பெண்ணின் உருவத்தை
மட்டும் பார்த்தால்போதும் மற்ற குணங்கள் தாய் வழியே வந்திருக்கும்.
பொறுப்பற்ற இளைஞன், குடும்ப몮பொறுப்பை மேற்கொண்ட பிறகு, அந்த ரதம் நீண்ட
தூரம் செல்ல வேண்டிய ரதம் என்பதை அறிந்தால், இதில் எச்சரிக்கையாக
இருப்பான்.
நல்ல துணை கிடைக்காமல், பைத்தியக்கார்ரைப் போல் உலவும்
துர்பாக்கியசாலிகளின் கண்ணீரில் இருந்து, பெண்ணைத் தேர்ந்தெடுக்கும்
பாடத்தை இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.
“பத்தாவுக்கேற்ற பதிவிரதை யாமானால்
எத்தாலும் கூடி வாழலாம் - சற்றேனும்
ஏறுமாறாக இருப்பாளே யாமாயின்
கூறாமற் சந்தியாசம் கொள்!”
“சண்டாளி சூர்ப்பநகை தாடகையைப்போல்வடிவு
கொண்டாளைப்பெண்ணென்று கொண்டாயே தொண்டா
செருப்படித்தான் உந்தன் செல்வமென்ன செல்வம்
நெருப்பிலே வீழ்ந்திடுதல் நேர்!”
-என்றான் தமிழ் மூதாட்டி.
“கைப்பிடி நாயகன் தூங்கையிலே அவன் கையை
எடுத்(து)
அப்புறம் தன்னில் அசையாமல் முன்வந்(து)
அயல்வளைவில்
ஒப்புடன் சென்று துயில்நீத்துப் பின்வந்(து)
உறங்குவாளை
எப்படி நான் நம்புவேன், இறைவா
கச்சி ஏகம்பனே!”
என்று புலம்பினார் பட்டினத்தார்.
சித்தர்கள், ரிஷிகள், சந்நியாசிகள் பலர் மனைவியால் விரக்தியுற்ற அப்படி
ஆனவர்கள் என்பதால்தான் ந்தி மூலம் ரிஷிமூலம் பார்க்கக்கூடாது என்கிறார்கள்.
“இல்லாள் அகத்திருக்க இல்லாத தொன்றில்லை
இல்லாளும் இல்லாறே ஆமாயின் -இல்லால்
வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்வில்
புலிகிடந்த தூறாய் விடும்”
இதுவும் மூத்தோர் மொழி.
இல்லாள் என்பவள் இல்லத்தை ஆள்பவள்; அவள் அன்பில்லாளாக, அடக்கமிலாளாக
பணமில்லாளாக, பத்தினித்தன்மை இல்லாளாக இருந்துவிட்டால், உன் வீடு புலி
கிடந்த குகைபோல் ஆகிவிடும்” என்பது முன்னோரு எச்சரிக்கை!
இந்துப் புராணங்களில் ஈடுபாடு கொண்டவர்கள்,நல்ல மனைவியின் இலக்கணங்களை அறிவார்கள்.
இன்றைய இளைஞனுக்கும் மத ஈடுபாடு ஏற்பட்டு விட்டால், அவன் கண்ணை மனது வென்று, நல்ல பெண்ணை நோக்கிக் கொண்டு போகும்.
நன்றி :- கவிஞார் கண்ணதாசன்

"நிழல்களின் ஒப்பந்தங்களை விட
நிஜங்களின் போராட்டமே சிறந்தது"
என்றென்றும் நட்புடன்,
dharshi.
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

அர்த்தமுள்ள இந்து மதம் - கவிஞர் கண்ணதாசன் Empty கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் - 13

Post by மாலதி July 17th 2011, 17:50

13. நல்ல நண்பன்
**************
நல்ல மனைவியைத் தேர்ந்தெடுப்பது போலவே, நல்லநண்பனைத் தேர்ந்தெடுப்பதிலும் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும்.
உன் எதிரியை நீ சுலபமாக அடையாளம் கண்டு கொண்டுவிட முடியும்.
ஆனால், நண்பர்களிலே, நல்ல நண்பர் யார் என்பது அனுபவத்தின் மூலமேதான் தெரியுமே தவிர, சாதாரண அறிவினால் கண்டுகொள்ள முடியாது.
முகத்துக்கு நேரே சிரிப்பவன்,
முகஸ்துதிசெய்பவன்,
கூழைக்கும்பிடு போடுபவன்,
இவனெல்லாம் நல்ல நண்பன் மாதிரியே தோற்றமளிப்பான்.
எந்த நேரத்தில் அவன் உன்னைக் கவிழ்ப்பான் என்பது அவனுக்கும் கடவுளுக்கும் மட்டுமே தெரியும்!
ஆகவே ஒருவனை நண்பனாக்கிக் கொள்ளுமுன், அவனைப்பற்றி நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
சரியாகத் தெரிந்த பின்புதான், அவனிடம் ரகசியங்களைப் பரிமாறிக்கொள்ள வேண்டும்.
நன்றாக ஆராய்ந்து, ‘இவன் நல்லவன்தான்’ என்று கண்டபின், ஒருவனை நண்பனாக்கிக் கொண்டு விட்டால், பிறகு அவன்மேல் சந்தேகப்படக்கூடாது.
“அவசரத்தில் ஒருவனை நம்பிவிடுவதும், நம்பிக்கைக்கு உரியவன் என்று
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவனைச் சந்தேகிப்பதும், தீராத துயரத்தைத் தரும்”
என்றான் வள்ளுவன்.
தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்.
-சரி, நல்ல நண்பனைத்தேர்ந்தெடுப்பது எப்படி?
யாரோடு நீ பழக ஆரம்பிக்கின்றாயோ, அவனோடு நீ இனிமையாகப் பழக வேண்டும்.
கொஞ்ச காலத்திற்கு அதை, நீ நட்பாக்க்கருதக் கூடாது.
வெறும் பழக்கமாகத்தான் கருத வேண்டும்.
உனக்கு கஷ்டம் வந்தபோது அவன் கை கொடுத்தால், உன்னைப்பற்றி நல்லவிதமாக,
நீ இல்லாத இடத்தில் அவன் பேசுவதைக் கேள்விப்பட்டால், பிறர் உன்னைப்பற்றி
நல்லவிதமாக, நீ இல்லாத இடத்தில் அவன் பேசுவதைக் கேள்விப்பட்டால்,
பிறர் உன்னைப்ற்றித்தவறாகப்பேசும்போது, அவன் தடுத்துப் பேசியதாக அறிந்தால்,
அவனை நீ நம்பத் தொடங்கலாம்.
தொடர்ந்து இது போன்ற பல செய்திகளைக் கேள்விப்பட்ட பிறகுதான், வனை நண்பனாக நீ வரித்துக்கொள்ள வேண்டும்.
பல இடங்களில் ஒரே மாதிரி ஒருவன் நடிக்க முடியாது. ஆகவே, உன்மீது அவன் வைக்கும் அன்பும் உண்மையாகத்தான் இருக்கமுடியும்.
நட்பு என்பது வெறும் முகஸ்துதி அல்ல.
ஆபத்தில் உதவுவது ஒன்றே நட்பு.
“முகநக நட்பது நட்பன்று; நெஞ்சத்து
அகநக நட்பதே நட்பு.”
“உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.”
என்றான் வள்ளுவன்.
நண்பர்களை மூன்று வகையாகப் பிரிக்கிறது ஒரு பழம்பாடல்.
பாடல் மறந்துபோய்விட்டது. விளக்கம் இதுதான்.
ஒன்று, பனைமரம் போன்ற நண்பர்கள்; இரண்டு, தென்னைமரம் போன்றவர்ள; மூன்று வாழைமரம் போன்றவர்கள்.
-பனைமரம் யாராலும் நட்டுவைக்கப்பட்டதல்ல.
பனம்பழத்தைத் தேடி எடுத்து யாரும் புதைப்பிதில்லை.
அதுதானாகவே முளைக்கிறது.
தனக்குக் கிடைத்த தண்ணீரைக் குடித்துத்தானாகவே வளர்கிறது.
தனது உடம்பு ஓலையையும் நுங்கையும் அது உலகத்திற்குத் தருகிறது.
நம்மிடம் எந்த உதவியையும் எதிர்பாராமல், நமக்கு உதவுகிறவன்,பனைமரம் போன்று நண்பன்.
தென்னைமரம் நம்மால் நடப்படுகிறது.
அதற்கு அடிக்கடி தண்ணீர் ஊற்றி வளர்த்தால் தான் அது நமக்குப் பலன் தருகிறது.
அதுபோல், நம்மிடம் அவ்வப்போது உதவி பெற்றுக்கொண்டு நண்பனாக இருக்கிறவன்,தென்னை மரத்துக்கு இணையான நண்பன்.
வாழை மரமோ, நாம்தினமும் தண்ணீர் ஊற்றிக் கவனித்தால்தான் நமக்குப்பலன் தருகிறது.
அதுபோல் தினமும் நம்மிடம் உதவி பெற்றுக்கொள்கிறவன் வாழைமரம் போன்ற நண்பன்.
இந்த மூவரில், பனைமரம் போன்ற நண்பனே நீ தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டிய நண்பன்.
எனக்கு அப்படிப்பட்ட நண்பனே நீ தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டிய நண்பன்.
எனக்கு அப்படிப்பட்ட நண்பர்கள் சிலர் கிடைத்தார்கள்.
எனக்குத் கிடைத்த நண்பர்களில் நூற்றுக்கு ஒருவர் இருவரே அப்படிப்பட்ட நண்பர்களா இருந்தார்கள் என்பது பொருந்தும்.
மற்றவர்கள் எல்லோரும் என்னிடம் பணம் பறிப்பதற்காகவே நண்பர்களாக இருந்தார்கள்.
அதிலே நான் ஏமாளியாக இருந்தேன் என்பதை ஒப்புக் கொள்வதில் வெட்கமில்லை.
ஆனால் என்னை ஏமாற்றிய நண்பர்கள் எல்லாம் இன்று செல்வாக்கிழந்து ‘கோழி
மேய்க்கிறார்கள்’ என்பதை எண்ணும்போது சிநேகித்த் துரோகிகளுகு இறைவன்
அளிக்கும் தண்டனையைக் கண்டு, நான் மகிழ்ச்சியடைகிறேன்.
மற்றவர்களுக்கு அந்த அனுபவன் வரக்கூடாது என்பதற்காகவே இதை எழுதுகிறேன்.
இந்துக்களில் இதிகாசங்கள், நல்ல நண்பன் எப்படி இருப்பான் என்பதை நமக்குச் சுட்டிக் காட்டுகிறான்.
ஸ்ரீராமனுக்குக் கிடைத்த நண்பர்கள் ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைத்தால்
துன்பங்களே இல்லாமல் போய்விடும். ஸ்ரீராமனின் துன்பங்களை யார் யார் பங்கு
போட்டுக் கொண்டார்கள்?
அதை ரகுநாதனின் வாய்மொழியாகக் கம்பன் சொல்கிறான்.
“குகனொடும் ஐவ ரானோம்
முன்பின் குன்று சூழ்வான்
மகனொடும் அறுவ ரானோம்
அம்முறை அன்பின் வந்த
அகமறர் காதல் ஐய
நின்னோடும் எழுவ ரோனாம்!”
வீடணன் நண்பனானபோது, வீடணனைப்பார்த்து ஸ்ரீ இராமன் சொன்ன வார்த்தகைகள் இவை.
“வீடணாஸ! நானும் இலக்குவனும், பரதனும், சத்துருக்கன்னும் நான்கு சகோதர்ர்களாகப் பிறந்தோம்.
க்ங்கை இரு கரையுடையான், கணக்கிறந்த நாவாயான் குகனைச் சந்தித்த போது, நாங்கள் ஐவரானோம்.
சுக்ரீவன் எங்களோடு சேர்ந்தபோது நாங்கள் அறுவரானோம்.
உன்னைச் சேர்த்து இப்போது எழுவராகி விட்டோம்.”
ஆம்: ராமனுக்கு அவர்கள் செலுத்திய அன்புக்காணிக்கை ராமனுடைய சகோதர்ர்களாகவே அவர்களை ஆக்கிவிட்டது.
நல்ல நட்புக்கு என்னென்ன இலக்கணங்கள் உண்டோ அவை எல்லாம் கூடி வாய்க்கப்
பெற்ற ஒருவன் நண்பனாக மட்டுமின்றிச் சகோதரனாகவும் ஆகிவிடுகிறான்.
நண்பல்கள தனக்கு உதவ செய்தார்கள் என்பதற்காகத் தன் சொந்த சகோதர்ர்களையே
விரோதித்துக்கொண்டு செஞ்சோற்றுக் கடன் கழித்து, ஒருவன்மகா பாரத்த்தில்
காட்சியளிக்கிறான்.
அவனே கர்ணன்.
கர்ணன் குந்தியின் மகன்! பாண்டவர்களின் சகோதரன்.
கௌரவர்கள் அவனிடம் பாராட்டிய நட்புக்காக, அவர்கள் செய்த உதவிக்காக, போர்க்களத்தில் தன் சகோதர்ர்களையே எதிர்த்தான் கர்ணன்.
நட்பு என்பதும், செஞ்சோற்றுக்கடன் கழித்து நன்றி செலுத்துவது என்பதும் இந்துக்களின் மரபு.
அந்த மரபின், நட்பின் மேன்மையை வற்புறுத்தும் புராணக் கதைகள் பலவுண்டு.
நல்ல மனைவியை எப்படி இறைவன் அருளுகிறானோ, அப்படியே நல்ல நண்பர்களை அருளுமாறு இறைவனைப் பிரார்த்திப்பது நல்லது.
நன்றி :- கவிஞார் கண்ணதாசன்

"நிழல்களின் ஒப்பந்தங்களை விட
நிஜங்களின் போராட்டமே சிறந்தது"
என்றென்றும் நட்புடன்,
dharshi.
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

அர்த்தமுள்ள இந்து மதம் - கவிஞர் கண்ணதாசன் Empty கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் - 14

Post by மாலதி July 17th 2011, 17:52

14. கீதையில் மனித மனம்
**********************
அர்ஜூன்னுக்குப் பரந்தாமன் உபதேசித்தது பகவத் கீதை.
மனிதனின் மனதைப்பற்றி அர்ஜூன்னுக்கும் கண்ணனுக்கும் வாக்கு வாதம் நடக்கிறது.
கண்ணன் சொல்கிறான்:
“அர்ஜூனா, எவன் தன்னையே உதாரணமாக்க்கொண்டு இன்ப-துன்பங்கள் இரண்டையும்
சம்மாகப்பார்க்கிறானோ, அந்த யோகிதான் சிறந்தவன் என்பது துணிவு.”
அர்ஜூனா,! உன்னால் கூறப்படும் சமநோக்கத்துடன் கூடிய யோகத்தின் ஸ்திரமான
நிலையை என்னால் உணர முடியவில்லை; காரணம், உள்ளம் சஞ்சல முடையது.
கிருஷ்ணா! மனித மனம் ச்ஞ்சலமுடையது; கலங்க வைப்பது; வலிமையுடையது; அடக்க
முடியாத்து; காற்றை அடக்குவது போல் அதை அடக்குவது கடினமானது”.
பகவான் கூறுகிறான்.
“தோ வலி படைத்த காண்டீபா! மனம் அடக்கமுடியாத்து; சலனமடைவது; இதில்
ஐயமில்லை. ஆனால் குந்தியின் மகனே! பழக்கத்தால் அதை அடக்க முடியும்.”
இதையே ராமகிருஷ்ண பரமஹம்சர் இப்படிக்கூறுகிறார்;
“கீழே கொட்டிய கடுகைப் பொறுக்கி எடுப்பது வெகு சிரம்ம். அதுபோலப்பல
திசைகளிலும் ஓடும் மனத்தை ஒருமைப்படுத்துவது எளிதன்று. ஆனால்,
வைராக்கியத்தால் அதைச் சாதித்துவிட முடியும்”.
மனித மனத்தின் சலனங்களை, சபலங்களை, எப்படி அடக்குவு என்பது பற்றி
பரந்தானமன் அர்ஜூன்னுக்கு உபதேசித்த பகுதி, பகவத் கீதையின் தியான
யோகமாகும்.
சகல காரியங்களுக்கும்- இன்பத்திற்கும் துன்பத்திறகும் நன்மைக்கும்
தீமைக்கும், இருட்டுக்கும் வெளிச்ச்த்திற்கும், பாவத்திற்கும்
புண்ணியத்திற்கும், அன்புக்கும் வெறுப்புக்கும் மனமே காரணம்.
மனத்தின் அலைகளே உடம்பைச்செலுத்துகின்றன.
பகுத்தறிவையும் னம் ஆக்ரமித்துக்கொண்டு வழி நடத்துகிறது.
கருணையாளனைக் கொலைகாரனாக்குவதும் மனம்தான்ந கொலைகாரனை ஞானியாக்குவதும் மனம்தான்.
அது நோக்கிச் செல்லும் தடங்களின் அனுபவத்தைப் பெற்றுப் பேதிக்கிறிது; அப்போதுதான் அறிவு வேலை செய்கிறது.
எந்த அனுபவங்களையம் கொண்டு வருவது மனம்தான்.
இது சரி, இது தவறு என்று எடை போடக்கூடிய அறிவை, மனத்தின் ராகங்கள் அழித்துவிடுகின்றன.
உடம்பையும் அறிவையும் மனமே ஆக்ரமித்துக்கொள்வதால், மனத்தின் ஆதிக்கத்திலேயே மனிதன் போகிறான்.
என்ன இந்த மனது?
காலையில் துடிக்கிறது; மதியத்தில் சிரிக்கிறது; மாலையில் ஏங்குகிறது; இரவில் அழுகிறது.
“இன்பமோ துன்பமோ எல்லாம் ஒன்றுதான். நடப்பது நடக்கட்டும்” என்றிருக்க மனம் விடுவதில்லை.
ஓரே சீரான உணர்ச்சிகள் இந்த மனத்துக்குத் தோன்றுவதில்லை.
எவ்வளவு பக்குவப்பட்டாலும் மனதின் அலைகளாலேயே சஞ்சலிக்கிறான்.
கடிவாளம் இல்லாத இந்த மனக்குதிரையை அடக்குவது எப்படி?”
அதையே சொல்கிறார் பகவான் ராமகிருஷ்ணர்.
அது என்ன வைராக்கியம்? உள்ளத்தை ஒருமுகப்படுத்துவது எந்த நிகழ்ச்சி களுக்கும் அசைந்து கொடுக்காமல் இருப்பது.
மெழுகுபோல் இஉரக்கும் மனதை மரக்கட்டை போல் ஆக்கிவிடுகிறது.
ஆசாபாசங்களில் இருந்து மனதை மட்டும் ஒதுக்கி வைத்துவிடுவது; பந்த பாசங்களில் இணங்கிவிடாமல்இருப்பது.
பற்றறுப்பது; சுற்றுச் சூழ்நிலைகள் வெறும் விதியின் விளையாட்டுகளே என்று முடிவு கட்டிவிடுவது.
நடக்கும் எந்த நிகழ்ச்சியும் இறைவனின் நாடகத்தில் ஒரு காட்சியே என்ற முடிவுக்கு வருவது.
ஜன்னத்துக்கும் மரணத்துக்கும் இடைப்பட்ட வாழ்க்கை, சாட்டை இல்லாப் பம்பரம்போல் ஆட்டி வைக்கப்படும் வாழ்க்கையே என்று கண்டு கொள்வது.
துன்பத்தைத் தரக்கூடிய விஷயங்களை அலட்சியப்படுத்துவது.
இன்பமான விஷயங்களைச்சந்தேகமில்லாமல் ஏற்றுக்கொள்வது.
பிறர தனக்கிழைத்த துன்பங்களை மறந்துவிடுவது, மன்னித்துவிடுவது.
முயற்சிகள் தோல்வியுறும்போது, ‘இதற்கு இறைவன் சம்மதிக்கவில்லை’ என்று ஆறுதல் கொள்வது.
‘கணநேர இன்பங்களை’ அவை கண நேர இன்பங்களே என்று முன் கூட்டியே கண்டு கொள்வது.
‘ஆத்மா என்னும் மாயப்புறா அமரும் மாடங்களெல்லாம் நம்முடைய மாடங்களே, என்ற சம நோக்கத்தோடு பார்வையைச்செலுத்துவது.
காலையில் இருந்து மாலைவரை நடந்த நிகழ்ச்சிகள் ஆண்டவனின் கட்டளையால் செலுத்தப்பட்ட வாகனங்களின் போக்குத்தான் என்று அமைதி கொள்வது.
சொல்வதற்கும் எழுதுவதற்கும் சுலபமாக இருக்கிறது. ஆனால எப்படி இது முடியும்?
பகவத் தியானத்தால் முடியும்.
அதிகாலையில் ஓர் அரைமணி நேரம், இரவிலே ஓர் அரைமணி நேரம், கோவிலிலோ
வீட்டுப் பூஜை அறையிலோ தனிமையில் அமர்ந்து, வேறு எதையும் நினைக்காமல்
இறைவனையே நினைப்பது.
இனைவனை நினைத்துக் கொண்டிருக்கும்போதே, மனம் வேறு திசையில் ஓடினால் அதை இழுத்துப் பிடிப்பது.
பாசத்திலே மூழ்கிக் கிடந்த பட்டினத்தார் ‘ஞானி’ யானது இப்படித்தான்.
தேவதாசிகளின் உறுப்புகளிலேயே கவனம் செலுத்திய அருணகிரிநாதர், ஆண்வனின் திருப்புகழைப் பாடியதும், இப்படித்தான்.
இயற்கையாகவே கல்வியாற்றல் பெற்றிருக்கும் ஒரு கவிஞன், ஒரு
பொருளைப்பற்றிக் கவிதையில் சிந்திக்கும்போது, அவன் மனம் கவிதையிலேயே
செல்கிறது.
அதில் லயிக்கிறது, ரசிக்கிறது, சுவைக்கிறது.
அப்போது ஓர் இடையூறு, குறுக்கீடு வந்தாலும் அவனுக்கு ஆத்திரம் வருகிறது.
கண்கள் திறந்திருக்கின்றன. மனம் கவிதையில் ஆழ்ந்து கிடக்கிறது; அப்போது
திறந்த கண்ணின் எதிரில் நிற்கும் மனைவிகூட அன் கண்ணில் படுவதில்லை.
மரத்தில் அமர்ந்திருக்கும் பறவையைநோக்கி வில்லெடுக்கும் வேடனின் கண்களல்
பறவை மட்டும்தெரியுமே தவிர, மரத்திலுள்ள இலைகள், காய்கள், கனிகள்
தெரிவதில்லை.
கவிஞனுக்கும் வேடனுக்கும் சாத்தியமான மனதின் ஒருமுக நிலையை மற்றவர்களும்பெற முடியும்.
அதாவதுர ஒன்றையே, நினைத்தல்.
அந்தலயம் கிட்டிவிட்டால் புலனகளும், பொறிகளும், செயலற்றுப் போகின்றன.
வாயின், சுவை உணவு, நாசியின் மண உணர்வு, கண்களின் காட்சி உணர்வு,
செவியின் ஒலி உணர்வு, பிற அங்கங்களில் ஸ்பரிச உணர்வு அனைத்தையும் அடித்துப்
போட்டுவிட்டு , புலியைக்கொன்ற வேடன்போல் மனது கம்பீரமாக நிமிர்ந்து
நிற்கிறது. அதுதான் சரியான லயம்.
சங்கீத வித்வான் சரித்திர ஆராய்ச்சி செய்வதில்லை; ஸ்வரங்களையும் ராகங்களையுமே ஆராய்ச்சி செய்கிறான்.
ஒரே இடத்தில் ஒரே நிலையில் மனத்தைச் செலுத்தினால் சலனமில்லாத ஒரே உணர்ச்சி தோன்றுகிறது.
ஒரு கதை உண்டு!
ஒரு தாய் தனது ஒரு மாதக் கைக்குழந்தையோடு அரையிலே பாய் விரித்துப்
படுத்திருந்தாள். அப்போது அவளுக்குக் கொஞ்ச தூரத்தில் பாம்பு வந்து
நின்றது.
பாம்பைக் கண்ட உறவினர்கள் பதறினார்கள்; துடித்தார்கள்.
அந்தப் பாம்பு குழந்தையையும் தாயையும் கடித்துவிடப்போகிறதே என்று பார்த்தார்கள்.
தாயின் பெயரைச் சொல்லி சத்தமிட்டார்கள்.
தாய் எழவில்லை.
ஓங்கித் தடியால் அடித்தார்கள்; அப்போதும் அவள் எழவில்லை.
பக்கத்தில் படுத்திருந்த குழந்தையின் மீது ஒரு மல்லிகைப் பூவை
எடுத்துப்போட்டார்கள். தாய் உடனே விழித்துக்கொண்டு, அந்தப் பூவை எடுத்து
அப்புறம் போட்டாள்.
தன்னை உதைத்தபோதுகூடச் சொரணை யில்லாது உறங்கிய தாய், குழந்தையின் மீது பூ விழுந்ததும் விழித்துக்கொண்டது எப்படி?
அந்த உள்ளம் குழந்தையிடமே லயித்துக்கிடந்ததால்தான்ழ.
ஈஸ்வர பக்தியில் உடல் உருக, உள்ளம் உருக லயித்துக் கிடந்த அடியார்கள்,
ஆழ்வார்கள், நாயன்மார்கள் எல்லாம் மனதை ஒருமுகப்படுத்தியவர்களே.ழ
இந்த மனத்தின் கோலங்களாலாலேயே நான் பலமுறை தடுமாறி இருக்கிறேன்.
ஆசைக்கும் அச்சத்துக்கும் நடுவே போராடி இருக்கிறேன்.
ஜன்னம் தகப்பனின் படைப்பு; மரணம் ஆண்டவனில் அழைப்பு; இடைப்பட்ட வாழ்க்கை
அரிதாரம் பூசாத நடிப்பு என்பதை, நாளாக நாளாக உணர்ந்து வருகிறேன்.
இன்னமும் முழுப்பக்குவம் கிட்டவில்லை.
திடீர் தடீரென்று மனதில் ஒன்றிருக்க ஒன்று பாய்கிறது.
ஒன்றை எடுத்தெறிந்தால், இன்னொன்று ஓடி வருகிறது.
ஒரேயடியாக மிதித்துக் கொன்றால்தான் நிம்மதி கிடைக்கும் என்பது தெரிகிறது.
என் கால்கள் இன்னும் அந்த வலுவைப்பெறவில்லை.
பெற முயல்கிறேன்;பெறுவேன்.
பிறந்தோருக்காகசஞ்சிரிக்காமலும், இறந்தோருக்காக அழாமலும் பரந்தாமன் கூறியதுபோல சமநோக்கத்தோடு நின்று, மன அமைதி கொள்ள முயல்கிறேன்.
அதை நான் அடைந்தவிட்டால், கடவுள் கண்களிலே கண்ணீர் வைத்ததற்கான காரணமும் அஇபட்டுப்போகும்.
இவ்வளவையும் நான் சொல்லுவது லௌகிக வாழ்க்கையிலும் நம்மை அமைதிப்படுத்துவதே இந்து மதத்தின்நோக்கம் என்பதை விளக்கத்தான்.
லௌகிக வாழ்க்கையை செப்பனிடும் இந்து மதக்கருவிகளில் பகவத்கீதையும் ஒன்று என்பதுதான் என் துணிவு.
நன்றி :- கவிஞார் கண்ணதாசன்

"நிழல்களின் ஒப்பந்தங்களை விட
நிஜங்களின் போராட்டமே சிறந்தது"
என்றென்றும் நட்புடன்,
dharshi.
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

அர்த்தமுள்ள இந்து மதம் - கவிஞர் கண்ணதாசன் Empty கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் - 15

Post by மாலதி July 17th 2011, 17:53

15. உயர்ந்தோர் மரணம்
*******************
அவர்கள் சரித்திர நதியின் அணைக்கட்டுகள், அனுபவக் கல்லூரியின் பேராசிரியர்கள், அறிவெனும் நத்தா விளக்கின் ஜூவாலைகள்.
அவர்களது ஜன்னம் ஒருபொது விசேஷமாகக் கருதப்பட்டதில்லை.
ஆனால் மரணமோ, சரித்திரத்தில் மகத்த்தான மணி மண்டபமாக்க் கருதப்படுகிறது
உயர்ந்தோர்,
நல்லோர்,
பெரியோர்கள்.
ஞானிகள்-
இந்த வார்த்தைகளில் பாரத்த்தன் முழு வரலாறுகளும் அடங்கிக்கிடக்கின்றன.
அந்த விளக்குகள் ஒளியைத் தந்தன; நாம் வாழ்க்கைக் கண்டு கொண்டோம்.
அந்தக் கைகாட்டிகள் பாதையைக் காட்டின; நாம் போக வேண்டிய ஊருக்குப் போய்ச் சேர்ந்தோம்.
அந்த மேகங்கள் மழை பொழிந்தன; நாம் நமது நிலங்களைச் செழுமையாக்கிக்கொண்டோம்.
பிறக்கும்போது ஊமையாகவும், பருவகாலத்தில் குருடனாகவும், பற்றும் பாசமும்
சூழ்ந்த பிறகு திருடனாகவும், முதுமைக் காலத்தில் பொறுமை இழந்தவனாகவம்
வாழ்ந்து மடிகிற சாதாரண மனிதனுக்கு, அவர்கள்தான் செம்மையான சுகமான வாழ்க்கை
நிம்மதியைக்காட்டினார்கள்.
அவன் கண்கள் காணத் தொடங்கும்போதே, நல்லவற்றைக் காணும்படி அறிவுறுத்தினார்கள்.
அவன் வாய் பேசத் தொடங்கும்போதே, உணைமையைப் பேசும்படி வலியுறுத்தினார்கள்.
காதலிக்கும்போது பெண்களுக்குப் பண்புள்ள இலக்கணம் சொன்னார்கள்.
எப்படி வாழ்ந்தால் நிம்மதி என்பதற்கும் இலக்கணம் தந்தார்கள்.
நீதிக் கதைகளும் குட்டிக் கதைகளும் சொல்லி, நீதியை மனதில் பதிய வைத்தார்கள்.
ராஜ தண்டனையைவிடத் தெய்வத் தண்டனை உறதியானது என்பதை நம்பிக்கையோடு பதிய வைத்தார்கள்.
பிறரை ஏமாற்றாமல் வாணிபத்தில் லாபம் சம்பாதிக முடியும் என்பதையும்,
அடுத்தவன் சொத்தை அபகரிக்காமல் சுயமாகச் சம்பாதித்தே சேர்க்க முடியும்
என்பதையும், நமக்குக் கிடைக்கின்ற எல்லைக்குள்ளேயே நமது மகிழ்ச்சியை
அதிகப்படுத்திக்கொள்ள முடியும் என்பதையும் அவர்க்தான்
விளக்கிச்சன்னார்கள்ழ.
மரணத்தின்பின், சொர்க்கமோ நரகமோ கிட்டுது, மரணத்திற்குமின்னால் நீ
வாழ்ந்து வாழ்க்கையைப் பொறுத்தது என்பதை அவர்கள்தான் தெளிவு படுத்தினார்க்.
“பேராசை பெரு நஷ்டம்’ என்றார்கள்ழ ‘விநாசகாலே விபரீதபுத்தி’
என்றார்களக். ‘தன்வினை தன்னைச் சுடும்’ என்றார்கள். முற்பகல் செய்யின்
பிற்பகல் விளையும்’ என்றார்கள். ‘அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று
கொல்லும்’ என்றார்கள்.
தவறான பாதைக்கு இலக்கியங்களாக ராவணையும் துரியோதன்னையும் காட்டினார்கள்.
நமது வாழ்க்கை எத்தனை நாள் ஓடுகிறதோ, அத்தனை நாளுக்கும் நாட்குறிப்பு எழுதி வைத்ததுபோல் நன்மை, தீமைக் குறிப்பு எழுதி வைத்தார்கள்.
அப்படிச சிலரைப் பாரத பூமி பெற்றதனால் தான் பயங்கர இருளுக்கிடையேயும் வெளிச்சம் நமக்குத் தெரிகிறது.
அயோக்கியர்களிடையே யோக்கியர்களையும், துரோகிகளுக்கிடையே நன்றியுள்ளவர்களையும் நம்மால் கண்டுபிடிக்க முடிகிறது.
பற்று பாசத்தால் பரிதவித்து, சுற்றச்சூழல்களால் துடிதுடித்து, ‘கற்றதும்
பயனில்லையே’ என்று கதறும் போதும், நம்மைக் கையமர்த்தி,
அந்தச்சிக்கல்களிலிருந்து விடுபடுவது எப்படி என்பதை, அவர்களேதான்
நமக்குக்காட்டினார்கள்.
சிலந்தி வலைபோல் பின்னப்பட்ட லௌகிக வாழ்க்கையில் துன்பங்களை எப்படிச்
சமாளிப்பது என்பதையும், அவர்கள்தான் சொல்லித் தந்தார்கள். அவர்களது
வாழ்நாளில் அவர்களைப் பற்றி உணரமுடியாத்தை,அவர்கள் இறந்த பிறகு நாம்
உணர்ந்து கொள்கிறோம்.
நலவர்களை நாம் அடையாளம் கண்டு கொள்வதற்காகவே அவர்களுக்குமரணம் சம்பவிக்கிறது.
வாழ்ந்த நாளில் அவர்களை வசை பாடியவர்கள் கூட, அவர்கள் இறந்த நாளில்
அவர்களுடைய நற்பண்பு களை எண்ணிப் பார்க்கிறார்கள். அன்றாட இகழ்ச்சிகளின்
மீது ஆத்திரமுற்று அவர்களைத் தொக்கியவர்களூட அவர்களது மொத்தப் பண்புகளை
எண்ணிவிய்கிறார்கள்.
‘அவர்கள் உலகுக்காகவ வாழ்ந்தவர்கள’ என்பதை எண்ணும்பது ‘நாமும் அதுபோல் வாழ வேண்டும்’ என்ற சிலராவது எண்ணுகிறார்கள்.
“குருடனுக்குக் கிடைக்கின்ற கைக்கோல் ஒரு ஞானியைப் போன்றது, அது
அவனுக்கு வழி காட்டுவதால், எத்தனையோ குருடர்களுக்கு ஒரே கைக்கோல் வழி
காட்டுகிறதென்றால், அது ஞானிக்கு ஞானியாகும்.”
வசிஷ்டர், வியாசர், வாமீகி போன்றவர்கள் இந்து மத்த்தின் பாரம்பரியங்கள்.
அந்தப் பாரம்பரியத்தில், நமுத தலைமுறை கண்ட ஒரு ஞானி, ராஜாஜி.
தசரதன் இற்தபோது, கதாபாத்திரத்தின் வடிவில் கம்பன் இப்படிப் புலம்புகிறான்;
“நந்தா விளக்கனைய
நாயகனே நானிலத்தோர்
தந்தய் தனி அறத்தின்
தாயே தயாநிதியே
ஏந்தாய் இகழ்வேந்தர்
ஏறே இறந்தனையோ
அந்தோ இனிவாய்மைக்
காருளரே மற்றுலகின்?”
-ஆம்; இது தசரதனுக்கு மட்டுமல்ல, காந்திக்கும் பொருந்தும்; நேருவுக்கும் பொருந்தும்; ராஜாஜிக்கும் பொருந்தும்.
உயர்ந்தவர்கள் அனைவரும் ஒரு வரிசை
அவர்களில் ஒருவருக்குச் சூட்டப்படும் புகழ்மாலை அனைவருக்கும் பொருந்தும்.
வார்த்தைகளை மாற்றாமல் பெயர்களை மட்டும் மாற்றினால் போதும்.
அவர்கள் அனைவமு ஒரே சீராக வாழ்ந்தார்கள். அவர்கள் மடியும்போது ‘நாம் அழவேண்டியதில்லை.
அவர்களது தலைமுறையில் நாம் வாழ்ந்ததற்காக மகிழ்ச்சியடைய வேண்டும்.
அவர்கள், நமக்காக ஏராளமான நூல்களை வைத்துவிட்டுப்போயிருக்கிறார்கள் என்பதற்காக, நாம் பெருமைப்பட வேண்டும்.
இந்துமத வேதங்கள் இப்படிச் சொல்கின்றன.
இறந்து போனவர்களுக்காக அழுது கொண்டிருப்பவர் கண்ணீரைத் துடையுங்கள்.
இதற்கு நீங்களும் தப்பமுடியாது என்பதை நினைவு கொள்ளுங்கள்.
எழுந்து ஸ்நானம் செய்யுங்கள்.
உங்களது லௌகிக் கடமைகளைச்செய்யத் தொடங்குங்கள்.
உங்களது இரண்டாவது வாழ்க்கை ஈசுவரனிடத்துத்தொடங்கப்படுகிறது.
அந்த நம்பிக்கையோடு உங்கள் முதல் வாழ்க்கையை ஒழுங்காக நடத்துங்கள்.
ஆம். தெய்வ நம்பிக்கையின் மீது உங்கள் கண்ணீரைத் துடையுங்கள்.
புனிதன் ராஜாஜியின் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்தியுங்கள்.
‘அவரது காலடிச் சுவடுகளில் இருந்து இன்னும் சில ஞானிகள் முளைத்தெழுவார்கள்’ என்ற நம்பிக்கையோடு உங்கள் லௌகிக வாழ்க்கையைத்தொடங்குகள்.
கிருஷ்ணார்ப்பணம்.
நன்றி :- கவிஞார் கண்ணதாசன்

"நிழல்களின் ஒப்பந்தங்களை விட
நிஜங்களின் போராட்டமே சிறந்தது"
என்றென்றும் நட்புடன்,
dharshi.
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

அர்த்தமுள்ள இந்து மதம் - கவிஞர் கண்ணதாசன் Empty கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் - 16

Post by மாலதி July 17th 2011, 17:56

16. கண்ணனை நினைப்பவர்கள் சொன்னது பலிக்கும்.
*******************************************
நான் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்த சில அனுபவங்களைக் கூற விரும்புகிறேன்.
“நான் சொன்னால் பலிக்கும்; என் வாக்குப் பலிக்கும்” என்று தங்களைப்
பற்றிச் சிலர் சொல்லிக் கொள்கிறார்களே அது என் விஷயத்திலும் உண்மையாக
நடக்கிறது.
யாரையும் வஞ்சிக்காத ஒருவன், கடவுள் நம்பிக்கையுள்ள ஒருவன், மனதாச் சொல்லும் எந்த வார்த்தைக்கும் உயிர் இருக்கிறது.
அந்த உயிர் தன் சக்தியைக்காட்டி விடுகிறது.
ஆத்திரத்தில் சொல்லும் வார்த்தைகள் மட்டுமின்றி இயற்கையாக வந்து விழும் வார்த்தைகளும் பலித்து விடுகின்றன.
எல்லாவற்றுக்கும் தெய்வ நம்பிக்கைதான் காரணம்.
‘கவிஞன் பாடினான், நகரம் எறிந்தது’ என்றும், ‘கலம்பகப்பாட்டினால் ந்த்திவர்மன் இறந்தான்’ என்றும் நாம் கேட்கிறோம்.
நான் கவிஞனோ இல்லையோ கடவுள் நம்பிக்கையுடையவன்.
என்னையறியாமலேயே வந்து விழுந்த சில வார்த்தைகள் என் வாழ்விலும்
நண்பர்லக் வாழ்விலும் எப்படிப் பலித்திருகின்றன என்பதை நான் எண்ணிப்
பார்க்கிறேன்.
எனது நெருங்கிய நண்பர், நடிப்பிசைப் புலவர் கே.ஆர். ராமசாமிக்காக, 1960,- ல் ஒரு படத்தில் ஒருபாடல் எழுதினேன்.
‘பாடமாட்டேன் - நான்
பாடமாட்டேன்’
என்பது பாடலின் பல்லவி.
ஆம்; அதுதான் அவர் சினிமாவில் கடைசியாகப் பாடிய பாடல். அதற்குப் பிறகு அவர் பாடவே இல்லை.
எனது சொந்தப் படம் ஒன்றில் ஒரு சோகப் பாடல் எழுதினேன்.
‘விடியும் விடியும் என்றிருந்தோம்
முடியும் பொழுதாய் விடிந்ததடா!-
கொடியும் முடியும் தாழ்ந்ததடா நம்
குடியும் குலமும் ஓய்ந்ததடா!”
-எவ்வளவு அறம் நிறைந்த சொற்கள்!
எழுதும்போது எனக்கு அந் உணர்ச்சி தோன்றவில்லை.
ஆனால், அந்தப் படத்தில் விழுந்த அடி, என்னைப் பத்துஆண்டுகள் கலங்க வைத்தது.
அந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டு இருந்தது. ஒரு ஸ்டூடியோவில்,
அந்த ஸ்டூடியோ கிண்டியில் இருந்தது.
மறுநாளைப் படப்பிடிப்புக்ககாக, அந்த ஸ்டூடியோ நிர்வாகியிடம் பத்தாயிரம் ரூபாய் நான் அச்சாரம் கொடுத்துவிட்டு வந்துவிட்டேன்.
மறநாள் நடிகர்களெல்லாம் ஸ்டூடியோவிற்குப் போன பிறகு, அவசரமாக வரும்படி எனக்கு டெலிபன் வந்தது.
நான் போனேன்.
எங்களுக்கு ‘கால்ஷீட்’ கிடையாது என்றும் ஒரு மாய மந்திரப் படத்திற்கு ‘கால்ஷீட்’ கொடுத்து விட்டதாகவும் நிர்வாகி சொன்னார்.
அப்போது இசையமைப்பாளர் விசுவநாதனும் என் கூட இருந்தார்.
எனக்கு ஆத்திரமா வந்தது.
கோபத்தில், அந்த ஸ்டூடியோ நிர்வாகியைத் திட்டிவிட்டு, “உன் ஸ்டூடியோ
எரிந்து சாம்பலாகத்தான் போகும்” என்று கூறிவிட்டு, அலுவலகத்திற்கு வந்தேன்.
அலுவலகத்தில் வந்து உட்கார்ந்ததுதான் தாமதம், டெலிபோன் வந்தது.
“ஸ்டூடியோவில் படப்பிடிப்பு மண்டபம் நெருப்புப்பிடித்து எரிகிறது” என்ற என் தயாரிப்பு நிர்வாகி கூறினார்.
அந்த மாய மந்திர செட்டில், சிங்கத்தின் வாயில் நெருப்பு வருவதுபோ படம்
பிடித்தார்கள் என்றும், அந்த நெருப்பு மேலேயிருந்த சாக்கிலே பற்றி,மண்டம்
எரிகிறது என்னும் அவர் சொன்னார்.
என்குத்தூக்கி வாரிப்போட்டது.
கூட இருந்த தம்பி விசுவநாதன் என் கையைப் பிடித்துக்கொண்டார்.
“அண்ணே, இனி யாரையும் ஏதும் சொல்லாதீர்கள்!” என்று கெஞ்சினார்.
என் சக்தியை உங்களுகுச் சொல்லிப் பயமுறுத்த இவறை நான் சொல்லவில்லை.
“வஞ்சகமிலாத ஆத்மா ஒரு வார்த்தை சொன்னாலும் பலிக்கும்” என்பது இந்துக்கள் நம்பிக்கை.
முனிவர்களின் சாபங்களையும், பத்தினிகளின் சாபங்களையம் நாம் புராணங்களில் படிக்கிறோம்.
நல்லது செய்தால் நல்லது வருகிறது. சொன்னது பலிக்கிறது.
நான் என் உறவினர்களி சிலருக்குத் திருமணங்கள் நடத்தி வைத்திருக்கிறேன்.
அப்போதெல்லாம்என் குழந்தைகளின் திருமணங்களைப்பற்றி நான சிந்தித்துக்கூடப் பார்த்ததில்லை.
“ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், தன் பிள்ளை தானே வளரும்” என்ற இந்துக்களின் பழமொழிகயில் எனக்கு நம்பிக்கை உண்டு.
என் மூத்த பெண்ணுக்கு அப்போது பதினாறு வயது. திருமணதிற்கு அவசரப்படத் தேவை இல்லாத வயது.
அப்போது ஒரு படத்தில் , ” பூ முடிப்பாள் இந்தப் பூங்குழலி” என்றொரு பாடல் எழுதினேன்.
அந்தப் படம் வெளியாயிற்று; பாலும் பிரபல மாயிற்று.
ஒருநாள், வீட்டில் அந்த இசைத் தட்டைப் போட்டுக் கேட்டுக் கொண்டிருந்தபோது, என் இளைய சகோதரி வந்தார்கள்.
“ஒரு நல்ல மாப்பிள்ளை இருக்கிறது; அலமுவுக்கு கல்யாணம் பேசலாமா?” என்றார்கள்.
“இந்த வயதி என்ன கல்யாணம்?” என்றேன் நான்.
“சுபம் சீக்கிரம் என்பார்கள். பெண் திருமணத்தைச் சீக்கிரம் முடித்துவிடுவது நல்லது” என்றார்க்.
“சரி, பேசுங்கள்” என்றேன்.
கிராமத்துக்குச் சென்ற என் இளைய சகோதரி, எனது ஒன்றுவிட்ட சகோதரியிடம் சொல்லி, “அந்த மாப்பிள்ளையைப் பேச வேண்டும்” என்றார்க்க்.
அதற்கு என் ஒன்றுவிட்ட சகோதரி, “எங்கள் வீட்டில் செய்யக்கூடாதா?” என்று கேட்டுவிட்டு நேரே சென்னைக்குப்புறப்பட்டு வந்துவிட்டார்க்க்.
என் சகோதர்ரும், “அந்தச் சகோதரிவீட்டில்தான் செய்ய வேண்டும்” என்று உறுதியாகச் சொல்லிவிட்டார்.
அன்றைக்கே திருமணமும் பேசி முடிந்தது.
அப்போது 1967 தேர்தல் முடிந்த நேரம். தேர்தலில் வாங்கிய அடி; இரண்டு படங்களில் பட்ட கடன் எல்லாம் என்னைப் பின்னி எடுத்த நேரம்.
செட்டி நாட்டுத் திருமணம் என்றால் செலவு எப்படி இருக்கும் என்று உனக்குத் தெரியும்.
“காலணாக்கூட கையில் இல்லாமல் கல்யாணம் பேசி விட்டோமே!” என்று நான் கலங்கினேன்.
எங்கிருந்தெல்லாம் எனக்க ஆறுதல் வந்தது தெரியுமா?
யாரிடமிருந்தெல்லாம் எனக்கு உதவி வந்தது தெரியுமா?”
நான் எதிர்பாராத இடமெல்லாம் எனக்குக்கை கொடுத்தன.
நான் பிறருக்குத் திருமணம் செய்து வைத்தது வீண் போகவில்லை.
என் மகளின் திருமணத்தைக் கண்ணனே முன்னின்று நடத்தி வைத்துவிட்டா.
திருமண வரவேற்பில் ‘பூ முடிப்பாள் இந்தப் பூங்குழலி’ என்ற பாடலைச் சௌந்தர்ராஜன் பாடும்போது,
‘கைத்தலம தந்தேன் என் கண்மணி வாழ
கடமை முடிந்தது கல்யாண மாக’
-என்ற என்னுடைய அடிகளே, என் கண்களில் ஆனந்தக் கண்ணீரை வரவழைத்தன.
அப்படியேதான் இரண்டாவது பெண்ணின் திருமணத்தைப்பற்றியும் நான் சிந்திக்கவில்லை.
“காசி விசாலாட்சி” என்றொரு கதையும் வசனமும் எழுத பெங்களூர் உட்லண்டஸ ஓட்டலில் தங்கியிருந்தேன்.
பாதிவரை எழுதிவிட்டேன்.
கிராமத்திலிருந்து காசிக்குச் சென்ற ஒருதாயும் தகப்பனும் காலராவினால்
பாதிக்கப்பட, காசி விசுவநாதரும் விசாலாட்சியுமே தாய்தகப்பனாக வந்திருந்து,
ஒரு பெண்ணின் திருமணத்தைப் பேசி முடிக்கிறார்கள்.
அதிலே முடிவாக நான் எழுதிய வசனம், ‘இந்த ஆடி போய் ஆவணியிலே திருமணத்தை வைத்துக் கொள்வோம்’ என்பதாகும்.
அதை எழுதி நிறுத்தியபோது சென்னையிலிருந்து டிரங்கால் வந்தது.
“சில பத்திரங்களில் கையெழுத்துப் போட வேண்டும். ஒருநாள் வந்துவிட்டுப் போங்கள்” என்றார்கள்.
நான் வந்தபோது, என் வீட்டிற்குச் சில உறவினர்கள் வந்திருந்தார்கள்.
அவர்கள் “தம்பி நல்ல பையன் இருக்கிறான்; குடும்பமும் சென்னையிலே இருக்கிறது; பேசலாமா?” என்றார்கள்.
பேசினார்கள்; மறுநாள் பெண்பார்க வந்தார்கள்.
“மாலையிலேயே நான் பெங்களூர்போக வேண்டும் ” என்றேன்.
பெண் பார்த்துவிட்டுப் போனவர்கள், “நாளைக்கே பேசி முடித்துக் கொள்வோம்; பெங்களூர்ப் பயணத்தை ஒருநாள் ஒத்திப் போடுங்கள்” என்றார்கள்.
திருமணம் பேசி முடிந்து விட்டது.
அப்போதும் பணம் இல்லாத நிலைதான்.
கண்ணன் எனக்கு வழி காட்டினான்.
தேவர் எனக்குக் கைகொடுத்தார்.
கேட பக்கமெல்லாம் உதவி கிடைத்தது.
திருமணம் மங்கலமாக முடிந்துவிட்டது.
“ஆவணியிலே திருமணத்தை வைத்துக் கொள்ளலாம்” என்று காசி விசுவநாதன்
சொல்வதாக நான் வசனத்தில் எழுதினேன். ஆவணியிலேயே திருமணம் நடந்துவிட்டது.
நன்றியுடமை, தெய்வபக்தி, வஞ்சகமற்ற உள்ளம் இவற்றுக்கு ஆண்டவன் எப்போதும் துணை நிற்கிறான்.
“கடவுளை நம்பினோர் கைவிடப்படார்” “நம்பினோர் கெடுவதில்லை,நானகு மறை தீர்ப்பு” என்பதெல்லாம் இந்துக்களில் பழமொழிகள்.
விதையைப்போட்டுவிட்டுக் கனி வராதா என்று நான் ஏங்கி எதிர்பார்த்ததில்லை.
விதைத்துக்கொண்டே போனேன். திரும்பி வந்து பார்த்தபோது மரங்கள் பழுத்துக் குலுங்கின.
என்னால் நடத்த முடியாத நற்காரியங்கள் என் வீட்டிலே நடைபெறுமானால், இறைவனைத்தவிர வேறு காரணம் ஏது?
கண்ணனை நினைக்கிறேன்.
சொன்னதுபலிக்கிறது.
நன்றி :- கவிஞார் கண்ணதாசன்
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

அர்த்தமுள்ள இந்து மதம் - கவிஞர் கண்ணதாசன் Empty கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் - 17

Post by மாலதி July 17th 2011, 17:57

17. பூர்வ ஜென்மம்
பூர்வ ஜென்மம் என்று ஒன்று உண்டா? பூர்வஜென்மத்தில் தொடர்ச்சியாக இந்த
ஜென்மத்தில் நாம் நன்மைத்தீமைகளை அனுபவிக்கிறோம் என்பது உண்மையா?”
“ஜென்மங்கள் பற்றிய விஷயத்தில் கடவுளுக்குச் சம்பந்தம் என்ன?”
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் என்னுடைய பதிலைக் கூறுமுன் மதுரை
ஆதீனகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞான சம்பந்த பராமாசாரிய சுவாமிகள்
எழுதியுள்ள ஒரு சிறு நூலிலிருந்து விஷயங்களை வைக்கிறேன்.
“கடவுளை நோக்கிச் செய்கின்ற பிரார்த்தனை அல்லது வேண்டுகோள் பலனுடையதாக
இருக்குமா? அப்படி ஒரு கடவுள் இருக்கிறாரா? அப்படி இருப்பாரன்றால்,
நமக்கும் அவருக்கும் எவ்விதத்தொடர்பும் இருக்கின்றதாகத் தெரியவில்லையே!
அவ்வித மூட நம்பிக்கை நமது நாடைவிட்டுப்போனாலன்றிநம் நாடு முன்னேற முடியாது
என்று சொல்கின்ற பலர், ஆலய வழிபாட்டிலும், வீட்டு வழிபாட்டிலும் தலை
சிறந்த நமது தமிழகத்திலேயே உற்பத்தியாகி இருக்கிறார்கள். இவை வெளி
நாடுகளிலிருந்து விதைத்த விதைகளால் ஏற்பட்டவை. இப்படிப்பட்ட கேள்விகளையும்
இதற்கு மேலதிகமான கேள்விகளையும் பல்லாயிரம் வருஈங்களுக்கு முன்பே கேட்டு,
அவர்களுக்கெல்லாம் பல நியாயங்களும் நிரூபணங்களும் கொடுத்து
ஒத்துக்கொள்ளுமாறு நமது அலுளாளர்களும் ரிஷிகளும் செய்து, அவற்றைப் பின்
சந்ததியார்கள் யாவரும் உணர்ந்து கொள்ளுமாறு ஏடுகளில் எழுதியும்
உதவியிருக்கிறார்கள். அந்த உண்மைகளை நாம் திருவருளால் கண்டுணர்ந்து இன்று
வெற்றிமுரசு கொட்டிகையாண்டு வருகிறோம்.
அவ்வாறு கேட்கின்ற ஒருவரிடம்,நாம் முதலாவதாக ஒரு கேள்வி கேட்கிறோம்; “நீ
இந்த உலகத்தில் பிறந்து, நன்றாக உண்டு வளர்ந்து, இவ்வாறு பேசுவதற்கு மூல
காரணம் உன்னுடைய அப்பாவும் அம்மாவும்தான் என்பதை ஒப்புக்கொள்கிறாயா?”
என்பதே அந்தக் கேள்வி. ‘ஆம்’ என்று ஒப்புக் கொண்டால் மட்டும் மேற்கொண்டு
பேசுவோம்.
மனிதனான எவனும் ஒப்புக்கொள்ளாதிருக்க முடியாது. “உன்னை உன்னுடைய
அம்மாதானே பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்துப் பாலூட்டித்தாலாட்டி உணவு
கொடுத்து வளர்த்து வந்தாள்? அப்படியிருக்க ‘நீ யாருடைய குழந்தை’ என்று
கேட்டால், ‘நீ ஏன் அம்மாவின் பெயரச் சொல்லாமல் அப்பாவின் பெயரைச் சொல்லி,
அவருடைய மகன் என்று சொல்கிறாயே’ என்று கேட்போம். உன்னைப்பெற்றெடுத்து உனது
தாயார்தான் என்பதே அவள் சொல்லித்தான் தெரியுமே தவிர, நீ அறியாதிருக்க,
தகப்பனார் பெயரை உன் தாயார் சொன்னதைக் கேட்டுத் தானே ஒப்புக்கொண்டு
சொல்லிவருகிறாய்?” என்போம். ‘ஆம்’ என்று சொல்லாமல் தீராது.
தாயாருக்கே தான் பெற்ற பிள்ளையின் தகப்பானார்யார் என்று தெரியாத
நிலையிலிருந்தால், தாயார் விலாசத்தைப் போட வேண்டியதைத் தவிர வேறு
வழியில்லை., தாயார் பெயரைச்சொல்லாத்தும், தகப்பனார் பெயரைச் சொல்லாத்தும்
உலக முழுவதிலும் நடைபெறுவதாகும். அதற்குமூல காரணம் ஒன்று உண்டு. அதாவது,
ஒரு விளைநிலம் ஒருவன்குச்சொந்தமாக இருக்க, அதில் உழுவு செய்து வித்திட
அவனுக்குத்தான் அந்த நிலத்தில் விளைந்து வந்த பயிர் சொந்தமாகும். அதுபோல்
மனைவி, கணவனுடைய உடைமை, வித்திட்டவனும் கணவன், ஆகவே, கணவனது உணைமையாக
மனைவியிடத்தில் உற்பத்தியான குழந்தைகள் சொந்தத் தந்தையின்
குழந்தைகளாகின்றன.
அதனாலேயே பெண்களெல்லாம் கற்புடையவர்களாக இருக்க வேண்டுமென்பது உலக நீதி.
இரண்டாவது கேள்வி: உனக்குக்கல்யாணமாகியிருக்கிறதா?” என்பதாகும். ‘ஆம்’
என்பான். “பிள்ளைகள் இருக்கின்றனவா” ‘ஆம், இருக்கின்றனர்!’ “நீயும் உன்
மனைவியும் விரும்பிய வண்ணம் குழந்தைகள் பிறந்தனவா?” ‘இல்லவே இல்லை”
என்பான்.
நேருஜிக்கு எவ்வளவோ வசதிகள் இருந்தும் ஆண் குழந்தைகள் கிடையாது
என்பதும், பல பெரிய பணக்கார்ர்களுக்கும்,பதவியில் உள்ளவர்களுக்கும், சில
வைத்திய நிபுணர்களுக்கும், விஞ்ஞானிகளுக்கும் குழந்தையே கிடையாது என்பதும்,
யாவரும் அறிந்த உண்மையாகும்.
அதற்கும் உண்மையான காரணம் உண்டு. அது எந்த மனிதனும் தனது விருப்பம்போல்
ஆண் மகவுக்குரிய வித்தையோ, பெண் மகவுக்குரிய வித்தையோ உற்பத்தி செய்து
உண்டாக்கிக் கொள்ள முடியாததேயாகும். அந்த வித்தை, எல்லாம் வல்ல கடவுள்
கொடுத்துத்தான் எந்தத் தந்தையும் பெறவேண்டியிருகிறது. கடவுள்
கொடுக்கத்தந்தை பெற்று, தாயார் அதனைப் பெற்றதன் காரணத்தினாலேயே தாய்
தந்தையரைப் ‘பெற்றவர்கள்’ அல்லது ‘பெற்றோர்கள்’ என்று சொல்லுகின்றோம்.
இந்த உண்மையை உணர்ந்த அருளாளர்கள், தந்தை இரண்டு மாதம் தங்குகின்ற
நாற்றங்காலாகவும், தாயாரைப் பத்து மாதம் வளர்கின்ற விளைநிலமாகவும்,
இரண்டையும் உடையவர்கள் கடவுளே என்றும், அவற்றில் வித்திட்டவரும் கடவுளே
என்றும் கண்டு, ஆண்டனே உலகத்தில் பிறந்திருக்கிற எல்லா மனிதர்களுக்கும்
எல்லா பிறவிகளுக்கும் உண்மையான அம்மையப்பன் ஆகின்றான் என்றும்
அருளியிருக்கின்றார்க்க்.
இந்துக்கள், கடவுளை ‘ அம்மையே அப்பா’ என்றும், ‘எந்தையாய் எம்பிரான்
மற்றும் யாவருக்கும் ‘தந்தை தாய் தம்பிரான்’ என்றும், கிறிஸ்தவர்கள்
‘நாமெல்லாம் பரமண்டலத்திலிருக்கின்ற பிதாவினது குழந்தைகளே’ என்றும்;
இஸ்லாமியர்கள் ‘கடவுளே மனிதர்களைப் படைத்தார்’ என்றும் கூறி வருகிறார்கள்.
யாரும் உயிர்களைக் கடவுள் படைத்ததாகச் சொல்லவில்லை.
மூன்றாவது கேள்வி: “உனக்கு ஒரு பெயரிடப்பெற்றிருக்கிறதல்லவா? அந்தப்
பெயர் கண்ணுக்குத் தெரியாத உயிருக்கு இடப்பட்டதா? கண்ணுக்குத் தெரிகின்ற
பாரமுள்ள உடலுக்கு இடப்பட்டதா?அல்லது வேறொரு பாரமில்லாத உன் உடலுக்கு
இடப்பட்டதா? எப்பொழுது இடப்பட்டது? யாரால் இடப்பட்டது?” என்று கேட்போம்.
‘நான் பிறந்த பின்தான் பெயரிட்டிருக்கிறார்கள்; ஆணா பெண்ணா என்று பார்த்து
என் பெற்றோர்கள்தான் பெயரிட்டிருக்கிறார்கள்.’ என்றுதான் (நாம்
எழுதியிருகிற புத்தகத்தைப் படித்தறியாத) எவரும் சொல்வர்.
ஆனால் உண்மையில் மனிதராகப் பிறந்திருக்கிற எவருக்கும் பெயரிட்டவர்
கடவுளே யாவர். ஒருவரை ஆணாகவோ பெண்ணாகவோ பிற்றக்கச்செய்ய வேண்டிய
தகப்பனாருடைய உடலில், அதற்குரிய அணுப்பிராமாணமுள்ள அதிசூக்கும்மான
வித்தைச்செலுத்தி, முன்னரேயே அத்தகைய வினைகளுக்குத்தகுந்த தலையெழுத்தை
ஆணுக்கு வலது உள்ளங்கையிலும், பெண்ணுக்கு இடது உள்ளங்கையிலும், பெண்ணுக்கு
சுருக்கெழுத்துப் போன்ற இரேகைகளாகப்பொறித்து, இன்ன ஊரில், இன்ன ஜாதியில்,
இன்ன பெற்றோருக்கு, இன்ன பெயரோடு, இன்ன விநாடியில் இன்னின்ன கிரக நிலையில்
பிறக்க வேண்டுமென்று கடவுளே தீர்மானித்து, அதன்படி பிறக்கச் செய்து, அவர்
இட்ட பெயரையே இடும்படியாகவும், அவரவர் செய்த புண்ணிய பாவத்திற்கேற்ப இன்ன
இன்ன இன்பம் துன்பம் அனுபவிது வருமாறும் ஆட்சி புரிந்து வருகிறார்.
அந்தப்பெயரும் சொப்பனத்தில் பாரமுள்ள உடலின் உதவியின்றி, இன்பம் துன்பம்
அனுபவிக்கின்ற, பாரமில்லாத உள்ளுடலுக்கே இட்டிருக்கிறார்.
இந்த அரிய பெரிய பேருண்மையை முதல் முறையாகக் கேட்கின்ற அனைவரும்
ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது. ஒருவேளை, நம்கு மூளைக்குகோளாறாக
இருக்கலாமோ என்றுகூட ஆத்திரக்கார்ர்கள் நினைக்கக் கூடும். நாம் இதனுடைய
உண்மையைச் சோதித்து உணருவதற்காக ரூபாய் ஒரு லட்சத்திற்கு மேல் செலவு செய்த
பின் இவ்விதம் கூறுகின்றோம்.
திருவள்ளுவர்:
“எப்பொருள் யார் யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு”
என்றும்,
“எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு”
என்றும் கூறியிருப்பதனால், நாம் கூறும் இந்த உண்மையைச்
சோதித்துப்பார்த்தபின், அதைப்பற்றி ஏதாவது சொல்ல வேண்டுமே தவிர, கேட்ட
மாத்திரத்தில் யாரும் எதையும் மறுத்தால் அது அறிவுடைமையாகாது.
பெயர்களைக்குறித்துக் கிறிஸ்துவ வேத நூலில் பிரசங்கி ஆகம்ம், அதிகாரம்
6, வசனம் 10 - ல் இருக்கின்றவன்எவனும் தோன்று முன்னமே
பெயரிடப்பெற்றிருக்கிறான். அவன் மனுஷன் என்பது தெரிந்திருக்கிறது” என்றும்,
இரேகை சாஸ்திரத்தைக் குறித்து யோபு ஆகம்ம், அதிகாரம் 37, வசனம் 7-ல் “தாம்
உண்டாக்கின சகல மனுஷரும் தம்மை அறியும்படி, அவர் சகல மனுஈருடைய கையையும்
அறியும்படி, முத்தரித்துப் போடுகிறார்” என்றும் கூறியிருக்கிறது.
உதாரணமாக நாகர்கோவில் ஸ்ரீ ஆறுமுக நாவலரது நாடி சாஸ்திர ஏட்டில்,
அவருடைய பெயரை ‘ஐந்தும் ஒன்றும் வதனமெனப் பெயரும் சூட்டி ‘ என்று
கண்டிருந்தது. ஐந்து +ஒன்று +ஆறு; வதன் என்றால் முகம்; ஆறுமுகம் என்பது
ஆண்டவன் இட்ட பெயர்.
ஸ்ரீவைகுண்டத்திலுள்ள ஒரு கத்தோலிக்கக் கிறிஸ்துவ அன்பருக்கு, ‘சாவில்
ஆறும் சாவில் ஒன்பதும் இவன் தன் நாம்ம்’ என்று கண்டிருந்தது. ‘ச’ என்று
எழுத்து வரிசையில் ஆறாவது எழுது ‘சூ’; ஒன்பதாவது எழுது ‘சை’ அவரது தந்தை
இட்ட பெரும் ‘சூசை’ என்பதாகும். ஆண்டவன் கொடுத்த பெயரும் சூசை என்பதாகும்.
ஓர் இந்துவைப்போல் மாறுவேஈம் போட்டுக்கொண்டு சென்ற, மதுரையிலுள்ள
இஸ்லாமியருக்கு ‘அப்துல் ரஹ்மான்’ என்று பெயர் கூறப் பெற்றிருக்கிறது.
ஓர் ஆங்கிலேயர் பார்த்தபொழுது, ‘முழத்தில் பாதி இவன் தன் நாம்ம்’
என்றிருந்தது. அவரது பெயர் ‘ஜான்’ என்பதாகும். கோவையில் கௌமார மடதை நிறுவிய
தலைவருக்கு இராமக் குட்டி’ என்றும், பின் துறவு பூண்டு ‘இராமானந்தர்’
ஆவார் என்றும் கண்டிருந்தது. இவற்றின் உண்மைகளை, சென்னை அரசாங்கத்தார் கை
ரேகைகள் சம்பந்தமாக, ‘சபதரிஷி நாடி’யின் பழைய ஏட்டுப் பிரதிகளிலிருந்து பல
புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் கந்தர் நாடி, காக்கையர் நாடி, கௌசிகர் நாடி, சீவக-சிந்தாமணி, அநாகத வேம் முதலிய பிற இரேகை சாஸ்திரங்களும் இருக்கின்றன.
கடவுள் கொடுத்திருக்கும் அவ்வித்த்தீர்ப்புகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு
விதமாக இருப்பதற்குக் காரணம், அவரவர் சுய அறிவு கொடு முன் பிறவிகளில்
செய்த நல்வினை தீவினைகளில் ஏற்பட்ட வேற்றுமைகளே தவிர, கடவுளது பட்சபாதமுள்ள
செயலால் அல்ல என்பதற்குரிய நிரூபணங்களும், இரேகை சாஸ்தி, ஏடுகளில்
காணப்பெறுகின்றன.
கடவுள் கொடுக்கிற நியாயத் தீர்ப்பில் தவறு ஏதும் இருக்க முடியாது.”
மதுரை ஆதீன கர்த்தர் மேற்கூறிய கருத்துப்படி, நம்முடைய பிறப்பும்,
நமக்குப் பெயரிடப்படுவதும், நமது வளர்ப்பும், முற்பிறவியும் மறுபிறவியும்
ஆக எல்லாமுமே இறைவன் கையில்தான் இருக்கின்றன.
“ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரோ” என்றும் முன்னோர்கள் சொல்லிச் சென்றார்கள்.
“முன்னர் நமதிச்சையில் பிறந்தோமில்லை.
முதல் இடை கடைநமது வசத்திலில்லை
என்றான் மகாகவி பாரதி.
எந்தத்தாயின் வயிற்றில்,எந்த நேரம் நாம் பிறக்கிறோம் என்பதையும், நமக்கு என்ன பெயர் சூட்டப்புடும் என்பதையும் இறைவன் குறிக்கிறான்.
பின்னாளில், நாம் வைத்துக்கொள்கிற புனைப் பெயரைக்கூட இறைவனே குறித்திருக்கக்கூடும் என்று நான் நம்புகிறேன்.
உதாரணமாக,
என் பெற்றோர் எனக்கிட்ட பெயர் முத்தையா.
இது வைத்தீசுவரன் கோவில் சுவாமியின் பெயர்.
அந்த சுவாமி எங்கள் குலதெய்வம்.
என் சகோதரருக்கு மறுபெயர் முத்துக்குமரன்.
என் பெயரை மாற்றி ஒருபுனைபெயர் வைத்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியபோது ‘கண்ணதாசன்’ என்று பெயர் எனக்கேன் தோன்றிற்று?
அப்போது பாரதிதாசன், சக்திதாசன், கம்பதாசன் என்றெல்லாம் பலர் இருந்ததால் அதுமாதிரி ஒரு பெயரை வைத்துக்கொள்ள விரும்பினேன்.
உண்மைதான்.
காலங்களால் அந்தப் பெயர் பொருத்தமாகிவிட்டது.
கண்ணனும் தன் பெற்றோருக்கு எட்டாவது குழந்தை!
நானும் எட்டாவது குழந்தை.
கண்ணனை வணங்கத் தொடங்கிய நாளில் இருந்து எனக்கு அமைதியும் ஞானமும் வரத் தொடங்கின.
சரியாகத் தேடிப் பார்த்தால் ஏதாவது ஒருநாடி சாஸ்திரத்தில் இதை நான் காணக்கூடும்.
பூர்வ ஜென்மத்தில் நான் யாராக இருந்தேன் என்பதும் தெரியக்கூடும்
நாடி சாஸ்திரம் அதையும் சொல்கிறது என்கிறார் ஆதீனகர்த்தா.
உதாரணமாக,
“எகிப்து தேசத்தில் முன் பிறவியில் மன்னராக இருந்த ஒருவரே, இன்று
திருநெல்வேலி ஜில்லாவில் சிங்கப் பட்டி ஜமீன்தாராகப் பிறந்திருக்கிறார்”
என்று”அநாகத வேதம்” என்று நாடி சாஸ்திரத்தல் குறிப்பிடப்பட்டிருக்கிறதாம்.
அதில்,முன் செய்த தீவினை இன்னதென்றும், அதற்குரிய பரிகாரம் இன்னதென்றும்
குறிப்பிடப் பெற்று அந்தப் பரிகாரம் செய்தபின் அவருடைய வியாதி பூரண மாக்க்
குணமாகி விட்டதாம்.
“ஒவ்வொரு உயிரும் மறுபிறப்பெடுத்து நன்மை தீமைகளை அனுபவிக்கிறதும் என்னும் இந்துக்கள் நம்பிக்கை எனக்கும் இருக்கிறது.
‘பதவீம் பூர்வ புண்ணியானால்’ என்பது வடமொழி சுலோகம்.
‘மேலைத் தவத்தளவே யாகுமாம் தான் பெற்ற செல்வம்’ என்பதும், தமிழ் மூதுர.
முற்பிறப்பின் பகரும வினைகளை அடுத்த பிறப்பிலும் தொடர்கின்றன.
அலகாப்பாதில் செல்வந்தர் மகனாக் பிறந்தவர் பரத கண்டத்தில்பிரதம
மந்திரியானதும், சேரிவாழ் மக்களிடையே பிறந்தவர் பாதுகாப்பு மந்திரியானதும்,
மராட்டியக் குடிமகன் ஒருவர் நிதி மந்திரியானதும், காஞ்சியிலும்
திருவாரூரிலும் நடுத்தரக் குடம்பத்தில் பிறந்தவர்கள் முதல் மந்திகளானாதும்
அவர்களூடைய திறமையினாலா? முயற்சியினாலா?
எட்டாம் வகுப்பை எட்டிப் பார்க்காத ஓர் ஏழை தமிழகத்தின் தலைவனாகி,
ஆயிரம் பள்ளிக் கூடங்கள் கட்டி நூற்றுக்குத்தொண்ணூறு பேரப் படிக்க வைத்தது
எப்படி முடிந்தது.?
“இட்டமுடன் என் தலையில் இன்னபடி
என்றெழுதி விட்ட சிவன்”
என்றொரு பாடல் சொல்கிறதே, அதன் பொருள் என்ன?
ஒவ்வொரு உயிரின் வாழ்வும் தாழ்வும், வறுமையும் வளமும், நோயும் சுகமும்,
இறப்பும் மறுபிறப்பும் ஆண்டவனில் இயக்கமே என்பதைத் தவிர வேறென்ன? முற்றி
முதிர்ந்த ஞானம் இவற்றை அடையாளம் கண்டு கொள்கிறது.
முயற்சியால் ஆக்க்கூடிய திருவும், தெய்வத்தின் இயக்கத்தால் கிடைப்பதே.
ஆண்டவனில் ஆக்க்கூடிய யாரும் தப்ப முடியாது.
ஒருதலைவருக்குப் புற்றுநோய் வந்தபோது “நாத்திகம் பேசியதால் வந்தது” என்றார்கள்.
ஆத்திகம் பேசிய ரமணருக்கு ஏன் வந்தது?
சிலருக்கு பொடி போட்டதால் வந்தது என்றார்கள்.
பொடி போடாதவர்களுக்கு ஏன் வந்தது?
‘புகையிலை உபயோகிப்பதால் வருகிறது’ என்கிறார்கள் மருத்துவர்கள்.
அதை உபயோகிக்காதவர்களுக்கு ஏன் வருகிறது?
ஆத்திகராக இருந்ததால், ஒருவர் நீண்ட நாள் வாழ்ந்ததாக்க கூறுகிறார்கள்.
நாத்திகர்களும் நீண்ட நாட்கள் வாழ என்ன காரணம்?
அளவோடு சாப்பிடுகிறவர்கள் அதிக நாள் வாழலாம் என்கிறார்கள்.
அளவின்றிச்சாப்பிடுவோரும் வாழ்வதற்கு என்ன காரணம்?
இன்பத்தையோ துன்பத்தையோ தெய்வம்தான் வழங்குகிறது என்பதைத்தவிர வேறு என்ன காரணம்?
எந்தக கணக்கைக்கொண்டு தெய்வம் வழங்குகிறது?
ஒவ்வொரு பிறவியின் கணக்கைக்கொண்டும் அடுத்த பிறவியை நிர்ணயிக்கிறது.
நூறாண்டுகள் வாழ்வது எப்படி என்ற நூலை எழுதியவர், அறுபது ஆண்டிலேயே காலமானதை நான் பார்த்திருக்கிறேன்.
ஆகவே, நமது கண்ணுக்குத் தெரியாத சூட்சும இயக்கம் என்று ஒன்று நடந்து கொண்டிருக்கிறது.
நாம்பிறந்துள்ள இந்தப் பிறப்பில் நடந்து கொள்கிற முறையை வைத்து,
அதற்குரிய பரிசையோ தண்டனையையோ இந்தப்பிறப்பில்பாதியையும், அடுத்த பிறப்பில்
பாதியையும் அனுபவிக்கின்றோம்.
“ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவருக்கு
எழுமையும் ஏமாப்புடைத்து”
என்றான் வள்ளுவன்.
ஆகவே பிறவிகள் ஏழு என்பதை இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன்பாகவே, நம்மவர்கள் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.
அடுத்த பிறப்பு என்பது நம்முடைய ஆசையின் படியே விளைய இறைவன்
அனுமதிப்பானானால், அடுத்த பிறவியில் நான் ஒரு நாயாகப் பிறந்து, இந்தப்
பிறவியில் என்னிடம் நன்றியோடு நடந்தவர்களுக்கெல்லாம், அந்த நன்றியைத்
திரும்பிச்செலுத்த விரும்புகிறேன்.
நன்றி :- கவிஞார் கண்ணதாசன்

"நிழல்களின் ஒப்பந்தங்களை விட
நிஜங்களின் போராட்டமே சிறந்தது"
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

அர்த்தமுள்ள இந்து மதம் - கவிஞர் கண்ணதாசன் Empty கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் - 18

Post by மாலதி July 17th 2011, 17:58

18. பிற மதங்கள்
**************
இந்து மதம் பிற மதங்களை வெறுப்பதில்லை. சொல்லப்போனால் எல்லா மதங்களையும் தன்னோடு சமமாகவே கருதுகிறுது.
மதத் துவேஷம், எந்தக் காலத்திலும் இந்துக்களால் ஆரம்பிக்கப்பட்டதில்லை.
அதன்பரந்த கரங்கள், அத்தனை மதங்களையும் அணைத்துக்கொண்டே வளர்ந்திருக்கின்றன.
ஓர் ஏரியின் நீரைப்போல் பரம்பொருளையும், அதில் இறங்குனிற் பல படித்துறைகளைப்போல் எல்லா மதங்களையும் பரமஹம்ஞர் காணுகின்றார்
அன்பின் மூலம் அன்பு வளர்வதைப்போல், வெறுப்பின் மூலம் வளர்வதில்லை என்கிறது இந்து மதம்.
வெறுப்பு ஒருகுறுகிய கூட்டுக்ள் சதிராடுகிறது. அன்போ, வானையும் கடலையும்போல், அறிவை விரியச்செய்கின்றது.
நிலத்தைப்பங்கு போட்டுக் கொள்வதுபோல் வானத்தைப் பங்கு போட முடிவதில்லை.
‘நிலம்’ என்பது மதம்? ‘வானம்’ என்பது பரம்பொருள் என்கிறார் பரம ஹம்சர்;
‘சமண மதம் பரவ் கிடந்த காலத்தில் அதைக் கருவறுத்து, சமணர்களைக்
குழுவிலேற்றிய கூன் பாண்டியனும், மங்கையர்கரசியும்தான் பிற மதங்களைத்
துவேஷித்த முதலாவதும் கடைசியுமான இந்துக்கள்.
அர்களுக்கு முன்னாலும் சரி. பின்னாலும் சரி, இந்து மதம் யாரையும் வெறுத்ததில்லை.
“வீட்டின் உச்சி முகட்டுக்குப்போக ஏணி, மூங்கில் படி, கயிறு- இவற்றில்
ஏதேனும் ஒன்றன் உதவியைக் கொண்டு ஏறலாம். அதுபோலப் பரம்பொருளை அடைவதற்கு
ஒவ்வொரு மதம்மு அப்படிப்பட்ட மார்க்கங்களில் ஒன்றைத்தான் காட்டுகிறது.
அதுபோலவே, வெவ்வேறு காலத்தில் தேசத்தோறும் தோன்றிய மதபோதகர்கள்
அனைவரும், சர்வ சக்தியுள்ள ஒரேயொரு மூலப்பொருளிடமிருந்து இடைவிடாது
பெருகிக் கொண்டிருக்கும் ஒளியை வெளியிடும் தீப ஸ்தம்பம் போன்றவர்களே”
என்றார் பரமஹம்சர்.
எல்லா மதங்களாலும் போற்றப்படும் இறைவன் ஒருவனாகவே இருந்தால் ஏன் அவனைப் பல மடங்கு ம்ப மாதிரி வருணிக்கின்றன?
இங்கு பரமஹம்சரின் பதில்:
“நீ வீட்டு எஜமான்: உன் மனைவிக்குக்கணவன்; மகனுக்குத் தந்தை; வேலைக்காரனுக்க முதலாளி; ஆனால்மு நீ ஒருவன்தான்.
அவரவரும் உன்னிடம் கொண்ட உறவு முறையை வைத்து உன்னைப் பார்ப்பதுபோல், பலமத்த்தவரும் ஆண்டவனைப் பல விதத்தில் பார்க்கிறார்க்கள்.”
ராமகிருஷ்ணரின் இந்த வாக்கு இந்துவின் விரிந்த ஞானத்துக்கு எடுத்துக்காட்டு.
இந்து மதத்திற்கு எதிராகப் பல கட்டங்களில்தோன்றிய நாத்திகவாதம், தானாகவே மடிந்து போனதற்குக்காரணம் இதுதான்.
சகிப்புத் தன்மையையும், அரவணைப்பையும் இந்து மதம் வலியுறுத்தியது.
“உடலில் பட்ட காயம் மறைந்துவிடும். உள்ளத்இல் பட்டால்மறையாது. ஆகவே,பிறரை நீ புண்படுத்தாதே” என்கிறது இந்து மதம்.
தண்டனையைக் கடவுளின் பொறுப்பில் விட்டு விடுவதால், நடைமுறைகளைத்தாங்கிக்கொள்கிற சக்தி இயற்கையாகவே வந்து விடுகிறது.
“காலப்போக்கில் ஒவ்வொன்றும் மாறுகிறது” என்று விஞ்ஞான உண்மயை, வேதாந்த உண்மையாக இந்துக்கள் எப்போதோ சொல்லிவிட்டார்கள்.
‘மாறும்வரை பொறுத்திரு’ என்பதே இந்து மத்த்தின் உபதேசம்.
மனப்பக்குவம் இல்லாதவன், நினைத்தபடி எல்லாம் நடக்கிறான்.
வழியில் கிடைக்கும் அனுபவங்கள், அவனுக்கு அந்தப் பக்குவத்தை உண்டாக்கி விடுகின்றன.
‘வெறுபை வளர்ப்பவனும் என்றோ ஒருநாள் பக்குவம் பெறுவான்; அதுவரை அவனை நாம் சகிப்போம்’ என்பதே இந்து மத்தின் சாரம்.
இவற்றை நான் குறிப்பிடுவதற்குக் காரணம் இந்தத் தொடர் கட்டுரையில், நான்பிற மதங்களை மதிக்கவில்லை என்று குற்றம் சாட்டி வந்த கடிதமே.
இந்து மத்த்தின் சிறப்பியல்புகளை நான் விவரித்துக் கொண்டுபோகும்போது, வேறு மதங்களுக்உ அந்தச்சிறப்பில்லை என்ற கருதக்கூடாது.
நான் ஓர் இந்து என்ற முறையில், எனது மத்த்தின் மேன்மைகளை நான் குறிப்பிடுகின்றேன்.
அவை பிற மதங்களில் இருக்கலாம்; நான் மறுக்க வில்லை.
உதாரணமாக, ‘கல்லானாலும் புல்லானாலும்’ என்ற கட்டுரையில், இந்துப்
பெண்களின் கற்பியல்புகளை நான் விவரித்ததைப் படித்துவிட்டு, “எங்கள்
மத்த்தில் கற்புள்ள பெண்கள் இல்லையா?” எனுற் ஒரு கிறிஸ்துவ நண்பர் எனக்கு
எழுதியிருக்கிறார்.
நான் அப்படிச்சொன்னேனா?
‘கற்பை வலியுறுத்தும் கதைகள் இந்து மத்த்தில் அதிகம்’ என்றுதான் குறிப்பிட்டிருக்கிறேன்.
எனது மூதாதையர்க் எப்படி எந்த மத்த்தையும் வெறுக்கவில்லையோ, அப்படியே நானும் வெறுக்க மாட்டேன்.
சாதாரண மனிதன் தன் அறியாமையால் தன் மதமே பெரியதென்று எண்ணி ஆரவாரம் செய்கிறான்.
உண்மை ஞானம் எனக்கு இன்னும் உதிக்கவில்லை. அது உதிக்கும் முன்னாலேயே
எல்லா மதங்களையும் நேசிக்கும் அறிவை நான் பரமைம்சரிடம் இருந்து பெற்றுக்
கொண்டிருக்கிறேன்.
ஆகவே, இந்தக் கட்டுரையில், தொடர்ச்சியாக இந்து மத்த்தின் மேன்மையை நான்
குறிப்பிடும் போதெல்லாம், பிற மதங்களில் அவை இல்லை என்று
சொல்வதாக்க்கருதக்கூடாது.
‘என் மனைவி அழகானவள்’ என்று சொன்னால் ‘அவன் மனைவி கோரமானவள்’ என்று அர்த்தமல்ல!
நன்றி :- கவிஞார் கண்ணதாசன்
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

அர்த்தமுள்ள இந்து மதம் - கவிஞர் கண்ணதாசன் Empty கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் - 19

Post by மாலதி July 17th 2011, 18:00

19. சமதர்மம்
************
‘ஏழை ஏழையாகவே இருப்பது, அவன்தலையெழுத்து’ என்று இந்து மதம் சொல்கிறதா?
ஏழை முயற்சி செய்து முன்னுக்கு வரக்கூடாதென்று இந்துமதம் தடுக்கிறதா?
‘பணக்காரன் தேவைக்கு மேல் சொத்து வைத்திருப்பதை இந்து மதம் அனுமதிக்கிறாதா?
இல்லை!
தர்ம்ம் சரியாக விநியோக்கப்படவேண்டும் என்பதே இந்து மத்த்தின் சாரம்.
கடந்த நூற்றாண்டுகளில் பணக்கார்ர்களாக இருந்தவர்கள், தங்கள் சுயநலத்துக்கக ஏழ்மையைத் தலைவிதி’ என்றார்கள்.
ஆனால், ஏழையின் அளவைப் பணக்கார்ர்கள் பங்கிட்டுக் கொண்டார்கள்.
ஏழ்மை என்பது நிரந்தரமாக இருக்குமானால், அது இறைவன் விதித விதியாக இருக்கலாம்.
எப்போது ஏழையும் பணக்காரனாக வாய்ப்பிருக்கிறதோ, அப்போது அந்த வாய்ப்புகள் தடுக்கப்ட்டவன் தான் ஏழையாக இருக்கிறான் என்று அர்த்தம்.
‘பேரசைக்கார்ர்களை மோட்சத்துக்குப் போவதில்லை’ என்று இந்து மதம் கூறுகிறது.
ஒருவனது அறிவை இறைவன் நிர்ணயிக்கலாம்; ஆனால்பொருளை அவன் நிர்ணயிப்பதில்லை.
‘ஏழ்மை என்பது இறைவனால் நிர்ணயிக்கப்பட்டது அல்ல’ என்று இந்துமதம் அறுதியிட்டுக்கூறுகிறது.
அந்தக்கால உபன்யாசகர்கள் இதுபற்றி என்ன சொன்னார்களோ, எனக்குத் தெரியாது.
ஆனால், இந்தக் காலத்தில், இந்துமத்தத்துவங்களை லௌகீக வாழ்க்கை உகந்த
வகையில் விமர்சிக்கும் காஞ்சி ஆசார்ய சுவாமிகளே, அதனைத்
தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.
தெளிவான சமதர்ம்மே இந்து மத்த்தின் நோக்கம் என்பதை அவர்கள் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.
பொருளாதார சமதர்மத்தையே அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
அவர்களது கருத்தை, அவர்களது வார்த்தைகளிலேயே அப்படியே தருகிறேன்.
இது துறவியின் பேச்சு என்று அப்போது படிக்காமல் இருந்தவர்க், இப்போது படியுங்கள்.
அவர்கள் சொல்கிறார்கள்;
“ஸாயா தோயம் வஸநம் அஸநம்”
ஸாயா என்றால் நிழல்: தோயம் என்றது ஜலம்; வஸநயம் என்பது உடுத்திக்கொள்கிற வஸ்திரம்; அஸநம் என்றால் ஆகாரம்.
மனுஈர்களுடைய மானம், உயிர் இரண்டையும் காப்பாற்றிக்கொள்ள, இந்த நான்கும்
மிகவும் அவசியமானவை. நிழல் கொடுப்பு இந்தப்பூமிதான். பூமியிலிருந்த மண்,
கல், சுண்ணாம்பு எல்லாவற்றையும் பெற்றுக்கொண்டு வீடு கட்டிக்கொள்கிறோம்.
பூமியிருருந்து ஊலம் வருகிறது. ஆகாரம், பூமியிலிருந்துதான் கிடைக்கிறது.
வஸ்திரமும் பூமியிலிருந்து வரும்படியான பருத்தியினால்தான் கிடைக்கிறது.
முடிந்த முடிவில், நாம் ‘பூமி’யில்தான் மறைந்து போகிறோம்
நமக்குத்தேவையானவற்றை எல்லாம் பூமிதான் கொடுக்கிறது. என்றாலும், ‘பூமி’யில்
தான் மறைந்து போகிறோம். நமக்குத் தேவையானவற்றை எல்லாம் பூமிதான்
கொடுக்கிறது என்றாலும்
‘பூமி’யிலிருந்து கிடைக்கும்படியான பொருள்களில், நமக்கு மிகவும் குறைச்சலாக
எவ்வளவு வேண்டுமோ அவ்வளவுதான் உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும் மானத்தைக்
காப்பாற்க்க்கொள்ள ஆடை கட்டிக்கொள்ள வேண்டும். நமக்கு ஒரு வருஷத்திற்குக்
குறைந்தது எவ்வளவு ஆடை வேண்டமோ அவ்வளவுதான் உபயோகப்படுத்திக்கொள்ள
வேண்டும். இந்த விஷயத்தில்தான் நாம் கவனம் செலுத்துவதில்லை.
ஆடை எதற்கு? மானத்தைக்காத்துக் கொள்வதற்காக, அதற்கு நல்ல கெட்டித்
துணியாக,பருத்தி ஆடையாக இருந்தால் போதும். பகட்டாக இருக்க வேண்டும்
என்பதற்காக மிக விலை உயர்ந்த ஆடைகளை அணிந்து கொண்டால், மற்றவர்கள் கௌரவமாக
நினைப்பார்கள் என்ற தப்பாக எண்ணிக் கொண்டு, அவ்வாறு செய்கிறோம். அதனால்
மானத்தையும் மறைபதா நினைகமுடியாது. ‘பாருடா எவ்வளவுஇறுமாப்பு’ என்றாதான்
பார்கிறவர்களுக்குத்தோன்றும். இந்த விஈயத்தில் குடம்பம் செலவழிக்கிற
பணத்தைக்கணக்கெடுத்தால், அந்த் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு
மானத்தைக்காத்துக்கள்ளத் தேவைப்படும் திணி போக, பாக்கியை வைத்துக்கொண்டு,
ஐந்து குடும்பங்களுக்கு வேண்டிய துணியைக்கூட சப்ளைபண்ணலாம்.
இரண்டாவது, பட்டுப்புடவை என்று வாங்குகிறார்களே தவிர அதனால் பாவம்நிறைய
வருகிறது. பட்டுப்புடவனை, படு வேஷ்டி இவற்றால் எதனை ஜீவன்களுக்கு ஹிம்சை
ஏற்படுகிறது? செலவு அதில் அபாரமாக ஆகிறது. அஹிம்சை அஹிம்சை என்று
சொல்லிக்கொண்டு மாமிசமே சாப்பிடுவது இல்லை என்று நாம் சொல்லிக்கொள்கிறோம்.
ஆனால் கொஞ்சம் யோசித்துப் பார்த்தல், நமக்கு இந்தப் பட்டுப்புடவை, பட்டு
வேஷ்டி இவற்றினால் வருகிற பாவம் மாமிசம் சாப்பிடுகிறவர்களுக்குக் கூட
வராது. ஓர் ஆடோ இரண்டு ஆடோ அங்கே உயிரை இழக்கின்றன என்றால், இங்கே கணக்கு
வழக்கு இல்லாத ஜீவன்களுக்கு ஹிம்சை ஏற்பட்டு வருகிறது. கூடிய வரைக்கும்
நாம் உடுத்திக்கொள்கிற வஸ்திரம் ஹிம்சை இல்லாத வஸ்திரமாக இருக்க வேண்டும்.
கெட்டியான வஸ்திரமாகவும், சாதாரண ஜனங்கள் எல்லாம்
உடுத்திக்கொள்ளும்படியானதாகவும் இருக்க வேண்டும்.
மக்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும் என்பதற்காக,
அரசாங்கத்தார் அயேக திட்டங்களைப் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். நாட்டிலும்
தரித்திரம் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டிருக்கிறது. வாழ்க்கைத்தரம்
உயர்வது என்றால் ஒருவன் இரண்டு வேளை காப்பி சாப்பிடுவது, நான்கு வேளையாக
வேண்டும்; இரண்டு வேஷ்டி வைத்துக்கொண்டிருப்பவன் இருபது வேஷ்டி வேஷ்டி
வைத்துக் கொண்டிருப்பவன் இருபது வேஷ்டி வைத்துக்கொள்ளவ ஏண்டும் என்கிற
அபிப்ராயம் வளர்ந்தால், அதுபெரிநய தப்பு. வாழ்க்கைத் தரம் உயர்வது என்று
சொல்லிக்கொண்டு வாழ்க்கைத் தேவைகள் நாளுக்குநாள் மனுஷர்களுக்கு அதிகமாகிக்
கொண்டே போனால், நாட்டில்தரித்திரந்தான் மிஞ்சும்.
மனுஷ்யர்களுக்கு மானம், உயிர் இரண்டையும் காப்பாற்றிக்கொள்ள மிகமிக
அத்தியாவசியமானவை எவையோ அவை நாட்டில் உள்ள அத்தனை ஜனங்களுக்கும் கினைக்க
வேணுட்ம். அதற்குத்தான் திட்ட ஒழுங்கு எல்லாம் வேண்டும். அப்படி
வாழவேண்டுமானால், வசதி உள்ளவர்களை கூட, நாட்டில் இருக்கும்படியான பரம ஏழை
எப்படி வசிக்கிறோனோ அப்படி வசிக்கப் பிரய்த்தனம் பண்ண வேண்டும். சௌகர்யம்
இருக்கிறவர்களும்கூடத் தங்களிடம் பணம் இருக்கிறது என்று தேவைக்குமேல்
அதிகமான வசதிகளைப்பெருக்கிக் கொள்ள முடியாமல் இருக்கவேண்டும்.
வசதி இருக்கிறது என்று இவர்கள் பண்ணுகிற காரியங்கள் எல்லாம், அபரிக்ரகம்
என்பதற்கு விரோதம்தான். இந்த் தோஷம் வந்துவிட்டால் ஈசுவரானுக்ரகம்
கிடையாது. மனுஷ்ய ஜன்ம்ம், பிரயோஊன் உள்ளதாக ஆக வேண்டுமானால், நமக்கு
எவ்வளவு தேவையோ அதற்கு மேல் ஓர் இம்மிகூட விரும்பக்கூடாது. வசதி இருக்கிறது
என்றல் அதைக்கொண்டு கஷ்டப்படுகிற இதர குடும்பங்களுக்கு - அந்தக்
குறைச்சலான வசதியைக்கூடப் பெற முடியாதவர்களுக்கு - உதவி செய்வதுதான்
புண்ணியம். இதுதான் அவனுக்கு மோஷத்தை அளிக்கும்.
இது தெரியாம், வசதி இருக்கிறவர்கள், தேவைக்குமேல் பட்டுப்புடவை, பட்டு
வேஷ்டி என்கிற தோஷத்தை அதிகமாக இப்போது பண்ணிக்கொண்டிருக்கிறது, ஒரு
பக்கம்; அந்தச்சமயம் இவர்களைப் பார்த்து வசதி இல்லாதவர்களும் கூட கடன்
வாங்கியாவது அவற்றை வாங்க வேண்டும் என்று கடனாளியாகி அநேக
உபத்திரவங்களுக்கு உள்ளாகி வருகிறார்கள்.
பட்டுப்புடவையைப் போலத்தான் வைர ஆபரணங்களி உள்ள ஆசை. இதில் போடுகிற பணம்
வீண். ‘கந்யாம் கநக ஸம்பந்தாம்’ என்று பெண்ணைக் கொடுக்கும்போது ஸ்வர்ணம்
கொடுப்பது என்கிற வழக்கம் இருந்திருக்கிறது. தங்கத்தில் போடுகிற பணமாது
பிரயோஜனப்படுகிறது. வைரத்தில் பிரயோஜனம் இல்லை. உபத்திரவம் இருக்கிறது.
ஐம்பது வருஷங்களுக்கு முன்னால் எல்லாம் யர்ரும் காப்பி சாப்பிட்டது
இல்லை. குடிசையில்தான் இருந்தார்கள். காதில் பனை ஓலை
போட்டுக்கொண்டிருந்தார்கள். கேழ்வரகுக் கூழோ கஞ்சியோதான் சாப்பிட்டார்கள்.
ஏழைகளோ, பணக்கார்ர்களோ எல்லோரும் ஒரே மாதிரியாகத்தான் இருந்தார்கள். நாம்
பட்டுத்துணி உடுப்பது இல்லை. காப்பி குடிப்பது இலை என்று சங்கல்பம்
செய்துகொண்டு விட்டால் இப்போது ஒரு குடும்பத்துக்குச் செலவாகிறதைக் கொண்டு
விட்டால் இப்போது ஒரு குடும்பத்துக்குச் செலவாகிறதைக்கொண்டு, ஐந்து
குடும்பங்கக் வாழ முடியும். தேவையை எவ்வளவுக்கு எவ்வளவு அதிகப்படுத்திக்
கொள்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு சாந்தி ஏற்படாது. சௌக்கியம் ஏற்படாது.
தரித்திரம், துக்கம் எல்லாந்தான் உண்டாகும்.
பட்டுப் புடவையில் காசு போடவில்லை என்றால், எல்லாக் குடும்பங்ககளும்
முன்னுக்கு வந்துவிடும். குடும்ப சௌகரியத்திற்காக மட்டும் சொல்லவில்லை.
பட்டுப் புடவையினால் வருகிற பாவங்கள் நமக்கு இல்லை என்றால்,
மோக்ஷத்திற்குச் சிரமங்களே இல்லாமல் போகும். அஷ்தாங்க யோகத்தன்மதல் அங்கமே
அஹிம்சை,அபரிக்ரகம் -இவை எல்லாம்தான். ஒருபிராணிக்குக் கூட நம்மால் ஹிம்சை
உண்டாக்க் கூடாது. நம்முடைய தேவைக்கு மேல் ஒரு துரும்பைக்கூட, வசதி
இருக்கிறது. பணம் இருக்கிறது. என்பதற்காக வாங்கிக்கொள்ளக்கூடாது. பணம்
இருக்கிறது என்றால், இன்னும் சில குடும்பங்களுக்கு உதவி செய்யலாம்.
இப்படிச் செய்தால்தான் செய்வதற்குப் பிரயத்தனமவது செய்தால்தான்
சீக்கிரத்திலே ப்ரம்ம சாட்சாத் காரத்தைப் பெற முடியும். அஷ்டாங்க யோகத்தின்
முதல் படியே இதுதான். முதல் படியை மிதிக்காமல் மேல்படிக்குப் போக
முடியாது. என்பதற்காக இதைச் சொன்னேன்.
நன்றி :- கவிஞார் கண்ணதாசன்
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

அர்த்தமுள்ள இந்து மதம் - கவிஞர் கண்ணதாசன் Empty கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் - 20

Post by மாலதி July 17th 2011, 18:01

20. குட்டித் தேவதைகள்
********************
இந்து மத்த்தின் பேரால் தமிழகத்தின் பட்டிதொட்டிகளிலெல்லாம் ஏராளமான சிறு தேவதைக்கோயில்கள் இருக்கின்றன.
இந்தியாவின் பிற மாநிலங்களிலும் இத்தகைய கோவில்கள் இருந்தாலும், தமிழகத்தில் உள்ளதுபோல் எலாக் கிராமங்களிலும் இருக்கவில்லை.
ரோமானிய நாகரிகத்திலும் ஒரு காலத்தில் இத்தகைய சிறு தேவதை நம்பிக்கை இருந்தது.
மழைத்தேவதை, காதல் தேவதை என்று பல தேவதைகள் வணங்கப்படன.
அந்தக் காலத்தில் கிறிஸ்தவர்களிடையேயும் இந்த நம்பிக்கை இருந்ததாகத் தெரிகிறது.
கிரேக்க நாகரிகத்தில் இத்தகையதேவதைகள் வணக்கம் பெருமளவில் இருந்தது.
ஆனால், அவையனைத்த்மு மூல தெய்வத்தின் கிளைகளாகவும், தூதுவர்களாகவுமே வருணிக்கப்பட்டிருந்தன.
‘ஊருக்கொரு தேவதை’ என்ற நிலையில், இந்து சமயத்தைத் தவிர , வேற் எந்தச் சமயமும் சிறுதேவதை நம்பிக்கை கொண்டதில்லை.
இந்தச்சிறு தேவதைகள் எப்படித்தோன்றின?
இவையொன்றும் மூட நம்பிக்கையில் எழுந்தவை அல்ல.
“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்”
என்றபடி ஆங்காங்கு வாழ்வாங்கு வாழ்ந்த பலர், தேவதைகளாக்க் கருதப்பட்டனர்.
முத்தன், முனியப்பன், காடன், மதுரை வீரன் என்பன போன்ற ஆண் தெய்வங்களும்;
ஆலையம்மன், எல்லையம்மன், படவேட்டம்மன் போன்ற பெண் தேவதைகளும், ஏதோ ஒரு காலத்தில் வாழ்ந்து மடிந்தவர்களாக இருக்க வேண்டும்.
‘கற்பரசி கண்ணகிக்குச் சேரன் செங்குட்டுவன் கோவில் கட்டினான்’ என்ற
செய்தியிலிருந்தே, கற்புடைய பெண்களுக்கு அந்தக் கற்பினால் ஊராரிடையேயும்,
தன் சுற்றத்திடையேயும் பெருமை பெற்ற பெண்களுக்குக் கோவில் எழுப்புவது,
இந்துக்களின் வழக்கமாய் இருந்திருக்கிறது என்பதை அறிய முடியும்.
கற்பு, ‘அறம், மறம்’ என் இருவகையாகப் பிரிக்கப்படும்.
கணவன் கொல்லப்பட்டான் என்ற செய்தி அறிந்து பொங்கி எழுந்து, மதுரையை எரித்த கண்ணகியின் கற்பு- மறக்கற்பு.
கணவன் இறந்தான் என்ற சஞெய்தியை அறிந்தவடுனேயே தானும் இறந்த கோப்பெருந்தேவியின் கற்பு - அறக்கற்பு.
இந்த அறம்- மறம் இரண்டையுமே தெய்வமாக்க் கருதி இருக்கிறார்கள்.
மறக் கற்புடைய பெண்களே, ருத்ர தேவதைகளாக்க் காட்சியளிக்கிறார்கள்!
காளி, மாரி போன்ற ருத்ர தேவதைகள் இவ்வழி நம்பிக்கையில் எழுந்தவையே!
அமைதியான அம்மன்கள் அறவழிக் கற்பில் எழுந்தவையே! அதுபோல் ஆண்
தெய்வங்களிலும் கோபத் தெய்வங்களாக்க் காட்சியளிப்போர், வீர்ர்களாக
வாழ்ந்திருக்க வேண்டும்.
ஒருவேளை, பயங்கரமான குணம் படைத்தவர் களாகவும் வாழ்ந்திருக்கலாம்.
அவர்களது ஆவியை அமைதிப்படுத்துவதற்கே பலி கொடுக்கும் பழக்கமும் வந்திருக்கலாம்.
பெண் தேவதைகளிலம் சில ருத்ர தேவதைகள் பயங்கரமான குணம் படைத்தவர்களாக
இருந்டது வாழ்ந்து, சாந்தி இல்லாமல் இறந்து போனவர்களாக இருக்கலாம்.
அவர்களையும் அமைதிப்படுத்தவே பலி கொடுக்கும் பழக்கம் வந்திருக்கலாம்.
கையிலோ இடையிலோ வாளுடன் கூடிய பயங்கரமான உருவம் படைத்த ஒரு வீரனின் சிலை, சுற்றிலும் இருபது முப்பது மண் குதிரைகள்!
ஒவ்வோர் இடத்திலும் ஒவ்வொரு சிலைக்கும் வேறு வேறு பெயரிருக்கிறது.
ஒரே பெயரைக் கொண்ட பல சிலைகளும் உண்டு.
அவரவர்களுடைய சுற்றத்தினர், ங்கள் குலத்தில் வாழ்ந்த ஒருவனுக்கோ
ஒருத்திக்கோ எழுப்பிய இந்தச் சிறு ஆலயங்கள், நாளடைவில் ஊராரின்
நம்பிக்கைக்கு உரியனவாகி, தெய்வங்களாகி இருக்க வேண்டும்.
இந்தக் குட்டித் தேவதைகளை வணங்கும் எண்ணம் ஏன் வந்தது?
‘மரணத்திற்குப் பிறகு ஆலவி உலாவுகிறது’ என்ற நம்பிக்கையிலேயே இது எழுந்தது.
அந்த ஆவியைச்சாந்தப்படுத்தினால், தங்கள் குடும்பத்திற்கு அது உதவும் என்று இந்துக்கள் நம்பினார்கள்.
இன்றைக்கும், இறந்து போனவருக்கு அனுதாபம் தெரிவிக்கும்போது, ‘அவர் ஆத்மா சாந்தி அடைக!’ என்று குறிப்பிடுகிறோம் அல்லவா!
இறந்துபோன தங்கள் மூதாதையுரக்குப் படையலிடும் பழக்கம், இன்னும் இந்துக்களிடையே இருப்பதை நாம் பார்க்கிறோம்.
எங்கள் குடும்பங்களில், ஒவ்வொரு திருமணத்திலும் மாப்பிள்ளை அழைப்பிற்குப் பிறகு, முதல்நாள், மூதாதையர்படைப்பு நடைபெறுகிறது.
அவர்கள் கட்டியிருந்த வேட்டிகளும், சேலைகளும் பத்திரமாகப்பாதுகாக்கப்பட்டு , ஓர் ஓலைப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்தன.
ஒவ்வொரு திருமணத்திற்கு முன்பும், அவற்றைத் துவைத்துக் காயப்போட்டு
மடித்து, பழையபடியும் ஓலைப் பெட்டியில் வைத்து, பக்கத்தில் இரண்டு குத்து
விளக்குகளை ஏற்றிவைத்து, படைப்பு நடத்துகிறார்கள்.
சில வீடுகளில், கோடி ஆடைகளை வைத்து நடத்துவதும் உண்டு.
படைப்பு, பெரும்பாலும் கோழி இறைச்சியும் முட்டையும் கலந்ததாக இருக்கும்.
ஏதாவது பலி கொடுத்துச் சாந்தி செய்ய வேண்டும் என்ற நம்பிக்கையில் எழுந்ததே அது.
கிராமங்களில் தேவதைக் கோவில்கள் பலவற்றில், சிலை உருவம் ஏதுமில்லாமல் ஒரு சாமாதி மேடு மட்டுமே இருப்பதை நான் பார்த்திருக்கிறேன்.
அது ந்தத் தேவதை வாழ்ந்து மடிந்த ஒரு பெண் என்பதை வலுப்படுத்துகிறது.
இராமநாதபுரம் ஜில்லா திருப்பத்துஊர் தாலுக்காவில் நான் பிறந்த ஊர் சிறுகூடற்பட்டி என்ற கிராம்மாகும்.
அங்கே ‘மலைஅரசி’ ‘அழகியதேவி நாச்சியார்’ என்று இரண்டு தேவதைகள் உண்டு.
மலையரசியின் கோவில் ஒருசிறய குடியை; அவ்வளவுதான்.
உள்ளே சிலை கிடையாது. ஒரு சமாதி மேடு மட்டுமே உண்டு.
அழகிய தேவியின் கோவில் சுண்ணாம்புச் சுவரால் ஆனதுதான் என்றாலும், ஒரு தேவதைக் கோவில் என்ற அளவில், சிறியதாகவே இருக்கின்றது.
இந்த தேவதைகளை ‘நாச்சியார்’ என்ற பட்டப் பெயரோடு அழைக்கிறார்கள்.
‘நாச்சியார்’ என்ற பட்டம் முக்குலத்து ராணி களுக்குரிய பட்டமாகும்.
‘தேவி’ய என்ற பொருள் தருவது அந்தப் பட்டன்.
பெரும்பாலும், பாண்டிய நாட்டில் ராமநாதபுரம் ஜில்லாவில் மட்டுமே, இந்தப் பட்டப்பெயர் அதிகம்.
முக்குலத்துத் தாய்மார்கள், மற்ற ஜாதிப் பெண்களை வாழ்த்தும்போது, “நாச்சியார் நல்லா இருக்கணும்!”- என்று வாழ்த்துவார்கள்.
பல இடங்களில் ‘நாச்சியார் கோவில்கள்’ என்ற கோவில்கள் உண்டு. .’நாச்சியம்மை’ ன்ற பெயர்லள் அதனடியகத் தோன்றியவையே.
ஆகவே, இராமநாதபுரம் ஜில்லாவிலுள்ள அம்மன்களில் பல , முக்குலத்து வீரப் பெண்மணிகளாக இருந்திருக்க வேண்டும்.
‘எங்களூர் மலையரசி நாச்சியாரோடும், அழகிய தேவி நாச்சியாரோடும்
கூடப்பிறந்த பெண்கள் ஐந்து பேரென்றுத், அவர்க் எழுவரும் தேவதைகள்ய என்றும்
கூறுகிறார்கள்.
பக்கத்துப் பக்கத்து ஊர்களில் ஒவ்வொரு தேவதைக்கும் கோவில் இருக்கிறது.
எல்லாத் தேவதைகளின் பெயர்களும் அழகான தமிழ்ப் பெயர்கள்.
ஆகவே, ‘சிறு தேவதை வணக்கம். ஆவி, நம்பிக்கையில் எழுந்ததே’ என்று திட்டமாக்க் கொள்ளலாம்.
நான் ‘சிவகங்ககைச்சீமை’ படம் எடுத்துக்கொண்டிருந்தபோது அது பறிய விவரங்களைச்சேகரிப்பதற்காக சிவகங்களைப் பகுதிக்கும் போயிருந்தேன்.
அங்கே ‘நரிக்குடி’ என்ற ஊர்!
இருபது வீடுகளே இருக்கும் அந்த ஊரில் ஒரு பழங்ககாலக் கல் சத்திரம்.
‘யாத்ரீகர்களுக்கு இரவு பகலாக உணவு பரிமாறிய இடம் அது’ என்று சொல்லுவார்கள்.
மருதுபாண்டியர் ஆட்சிக்காலத்தில், அந்தச் சத்திரத்தில் ஓர் இளம் பெண்ணும் அவள் கணவனும் வந்து தங்கியிருந்தார்களாம்.
இரவு நேரத்தல், அவள் கணவனைச் சில பேர் கூட்டிக்கொண்டு போய்க் கொலை
செய்து பக்கத்தில் இருக்கும் கண்மாய்க்குள் போட்டுக் கல்லை
வைத்துவிட்டார்கள்.
அவன் வளர்த்த நாய்க்குட்டி ரத்தக்கறையோடு ஓடிப்போய், அவன் தலைவியின் சேலையைக் கவ்விக் கூட்டி வந்து சடலத்தைக் காட்டிற்றாம்.
அவள் அழுது புலம்ப, ஊரெல்லாம் கூடி மருது பாண்டியனுக்கு செய்தி அனுப்பினார்களாம்.
மருதுபாண்டியர் வருகிற நேரத்தில், அந்தப் பெண் கணவனோடு உடன்கட்டை ஏறுவதற்குத் தயாராக இருந்தானாம்.
மருதுபாண்டியர் எவ்வளவோ தடுத்தும் கேளாமல், தான் கட்டியிருந்த சேலை,
கழுத்தில்போட்டிருந்த கருமணி, கைகளில் போட்டிருந்த வளையல்கள் அனைத்தையும்
கழற்றி வைத்துவிட்டு, வெள்ளைச் சேலையைக் கட்டிக்கொண்டு, உடன்கட்டை
ஏறிவிட்டாளாம்.
அவள் அணிந்திருந்த ஆடைமணிகளை ஓர் ஓலைப்பெட்டியில் வைத்து,
மருதுபாண்டியர் வம்சா வழியில் ஒருகுடும்பத்தினர், பல தலைமுறையாகப் பூஜித்து
வருகிறார்கள்.
மருதுபாண்டியானது ஆண் வாரிசுகள் அனைவரையும் வெள்ளைக்கார்ர்கள் கொன்று விட்டதால், பெண் வாரிசுகளே பாதுகாத்து வருகிறார்கள்.
175 ஆண்டுகளாக ஒரே பரண்மீது போடப்பட்ட காய்ந்த மாலைகளைப் பார்த்தோம்.
அவர்களைக் கெஞ்சிக் கேட்டு முதன்முறையாக அந்தப் பெட்டியைக் கீழே இறக்கிக் காட்டச் சொன்னோம்.
அது பழங்காலத்து ஓலைப்பெட்டி. ஆதலால் தொட்ட இடம் மட்டும் கையோடு வந்து கொண்டிருந்தது.
பிறகு, அப்புறமாகப் பலகைக் கொடுது இறக்கிய பார்த்தோம்.
அந்தச் சேலையையும், கருகமணியையும் பார்த்தபோது நான் கண்ணீர்விட்டு அழுதுவிட்டேன்.
அதைப்பார்த்துக் கொண்டிருந்த முக்குலத்து மூதாட்டி, பாட்டில் மூலமே அவ்வளவு விஷயங்களையும் சொன்னாள்.
(பாண்டிய நாட்டுப் பெண்களுக்கப் பாடல் என்பது உடப்போடு பிறந்தது)
இன்றைக்கும் குட்டித் தேவதைகள் மிக அதிகமாக உள்ள நாடு பாண்டிய நாடுதான்.
ஆகவே இந்துக்களின் ஆவி நம்பிக்கை அழிக முடியாத நம்பிக்கை என்பது புலனாகிறது.
இன்றும், ஆவிகள் பற்றிய பல்வேறு செய்திகளை நாம் பத்திரிகைகளில் பார்க்கிறோம்.
அதில் எனக்கு ஒரே ஆசை.
தமிழகம் முழுவதிலும் உள்ள குட்டித் தேவதைகள் பற்றிய விவரங்களை யாராவது சேகரிக்க வேண்டும்.
அந்தத் தேவதைகள், பறிய கர்ண பரம்பரைச் செய்திகளையும் விசாரித்து எழுத வேண்டும்.
அப்படி முழுமையான விபரங்களுடன் கூடிய ஒரு நூலை யாராவது முயன்று ஊர்
ஊராகப் போய் அதையே வேலையாக வைத்துக்கொண்டு எழுதுவாரானால், அந்த நூலுக்கு
ஒரு நல்ல சன்மானம் தரவும், அதை என் நண்பர்கள் மூலம் வெளியிடவும் நான்தயாராக
இருக்கிறேன்.
நன்றி :- கவிஞார் கண்ணதாசன்
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

அர்த்தமுள்ள இந்து மதம் - கவிஞர் கண்ணதாசன் Empty கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் - 21

Post by மாலதி July 17th 2011, 18:02

21. உலவும் ஆவிகள்
******************
இறந்து போனவர்ளுடைய ஆவிகள் தங்கள் குடும்பத்தினரைக் கண்காணிக்கின்றன என்பதற்கு, மறுக்க முடியாத ஆதாரங்கள் கிடைக்கின்றன.
ஆவி உலகில் உலவுகிற சிலர், தங்களுக்குப் பிரயமானவர்களின் உடலில்
புகுந்து கொண்டு, அவர்களையே மீடியமாக வைத்து, மறவர்களோடு பேசுகிறார்கள்
என்பதும் உண்மை.
அண்மையில் தினமணி கதிர் பத்திரிகையில் காங்கிரஸ் பிரமுகர் திரு. பி.ஜி.
கருத்திமன் அவர்கள், இதுபற்றி இரண்டொரு கட்டுரைகள் எழுதியிருந்தார்கள்.
இறந்து போனவர்களுடைய ஆவி தங்களுக்குப் பிரியமானவர்கள் உடலில் புகந்து
பேசுவதும் உண்டு. வேறு உடல்களை மீடியமாக்க்கொண்டு பேசுவதும் உண்டு.
எனக்கே இதில் அனுபவம் உண்டு.
1941 - ஆம் ஆண்டு என் உடன் பிறந்த நாலாவது சகோதரி இறந்து போனார்.
அவருக்கு இரண்டு பெண்களும், ஒரு பையனும் உண்டு.
அந்தப் பெண்களில் மூத்த பெண்மீது, என் சகோதரியின் ஆவி வந்து பேசுவது உண்டு.
ஏதாவது முக்கியமான பிரச்சினைகளைப் பற்றியப் பேசிக்கொண்டிருக்கும்போது என் சகோதரியின் ஆவி தன் மகள் உடம்பில் வந்து பேசும்.
அந்தப் பெண்ணுக்கு நான் மாமன்!
சாதாரண நேரங்களில் ‘மாமா’ என்றழைக்கின்ற அந்தப் பெண், ஆவி வந்து அழைக்கும்போது, ‘தம்பி’ என்றழைக்கும்.
மற்ற உறவினரையும், என் சகோதரி எப்படி அழைப்பாரோ, அப்படியே அழைக்கும்.
மேலும், குரலும் என் சகோதரியின் குரலாகவே இருக்கும்.
இதைநான் பலமுறை கண்டிருக்கிறேன்.
ஆவி வந்து சொன்ன விஷயங்களெல்லாம் நடந்திருக்கின்றன.
இறந்து போனவர்களுக்குப் பிரியமானபதார்த்தங்களை செய்து நாம் படையல்
நடத்துகிறோம் அல்லவா? அந்தப் பதார்த்தங்களை ஆவிகள் உண்ணுகின்றன என்பது
ஐதீகம்!
தர்க்கத்திற்கு இது நிற்க முடியாது. என்று வாதிடுவோரும் உண்டு.
ஆனால் இறந்து போனவர்களுடைய ஆவி பற்றிய பல சம்பங்களைத் தம் வாழ்யாளிலேயே
கண்டிருக்கிறார் மதுரை ஆதீனகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞான சம்பந்த தேசிக
பரமாசாரிய சுவாமிகள்.
அவர் கூறியுள்ள சில அனுபவங்களை அப்படியே இங்கு எடுத்துக்கொடுப்பது வாசகர்களைச் சிந்திக்க வைக்கும்.
அவர் சொல்லியுள்ள பல விஷயங்களில் சிலவற்றை மட்டுமே நான் இங்கே தருகிறேன்.
இறந்தவர்கள் மீடியமாக இருப்பவர்களுக்குத் தெரியாத பாஷையில் அறிவித்தல்:
தூத்துக்குடியில் வருமான வரி ஆபீசராக இருந்த ஓர்
இஸ்லாமியர்,இறந்தவர்களோடு பேசுவதன் உண்மையை அறிய வேண்டும் என்று, எமது
தம்பியார் வீட்டிற்கு வந்து இருந்தார். அவர் தாமும் பேசிப் பாக்க வேண்டும்ந
ஆனால் தமிழைத் தாய் பாஷையாக்க் கொண்ட மூடியம் மூலம், அந்த மீடியத்திற்குக்
கொஞ்சமும் பழக்கமில்லாத பாஷையாகவும் தமது தாய் பாஷயாகவும் இருக்கும் உருது
பாஷையில் கேள்விக்கேட்டு பதிலும் உருது பாஷையில் வந்தால்தான், அது
மீடியத்தில் ஏற்பட்ட பதில் அல, இறந்தவருடைய வாக்கே ன்று உறுதியாக் கூற
முடியுமென்று சொன்னார். “தம்பியார் யாரும் இவ்வாறு இதுவரை யோசித்துப்
பார்க்கவில்லை; ஆபிஸர் சொல்வது சரியான சோதனையோ சோதித்துப் பார்ப்போமே”
என்றுபார்த்தார். ‘உருது’ ஒரு வார்த்தையும் தெரிஆத பிராமணச் சிறுவன்
மீடியாமாக இருக்க, அவன் மூலம் உருது பாஷையில்பதில் வரவே ஆபிஞரும்
மற்றவர்களும் திகைத்துப் போனார்கள்.மேற்கொண்டு பேசவேண்டும் என்று ஆபிசரும்
விரும்பவே ஆவி உலகத்திலிருந்து அவருடைய கொழுந்தியாள், ‘இப்பொழுது
மேற்கொண்டு பேசவேண்டாம்; இங்கு பேசுகின்ற முறையிலேயே வீட்டில் வைத்துப்
பேசுங்கள்; வீட்டில் இருக்கும் மகள் மீடியமாக இருக்கிறாள்’ என்உ அறிவித்து
விட்டாள். அதன்படி அவர்க வீட்டில் வைத்துப் பேசவும், அதன் உதவியைப்
பிறருக்கு எடுத்துச் சொல்லவும் ஆரம்பித்துவிட்டார் ஆனதால் நல்ல சக்தி
வாய்ந்த மீடியமாக இருந்தால், மீடியத்திற்கு தெரியாத பாஷைகளிலும் பேச்சு
நிகழ்த்தலாமென்பதும், அதில் மீடியத்தினுடைய அறிவின் விளக்கமோ மீடியம்
கள்ளத்தனமாக வேண்டுமென்ற தன்னுடைய கருத்தை போலித்தனமோ, ஓர் அணுவளவும் கல்ல
முடியாதென்பதும் பெறப்படுகின்றதல்லவா?
மறதியாகப் பணம் வைக்கப்பட்ட இடத்தை இறந்தவர் அறிவித்தல்:
ஆவி உலகத்திலிருந்து அறிவித்தபடியே அந்த வருமானவரி அதிகாரி தன்னுடைய
வீட்டில் உருது பாஷையில் தன்னுடைய சொந்த மகளை மீடியமாக வைத்துப் பேசியதில்,
அவருடைய மனைவியின் தங்கை ஆவியுலகத்திலிருந்து பல அரிய விஷயங்களை
அறிவித்ததாகத் தெரிவித்தார். அவற்றுள் ஒன்று மட்டும் இங்கு
குறிப்பிடுகின்றோம். ஒரு நாள் அவருடைய சட்டைப்பையில் போட்டு வைத்திருந்த
ஒரு ரூபாயைக் காணாத காரணத்தால், அவர் தம்முடைய வேலைக்காரன்
திருடியிருக்கலாம் என்று கருதி அவனைக் கடுமையாக்க்கோபித்து
அடித்துவிட்டார். மறுமுறை ஆவி உலகத்திலிருந்ததன்னுடைய
கொழுந்தியாளோடுபேசியது காணாமற் போன ரூபாயைக் குறித்து அவர் ஒன்றும்
பேசியதாகவும், அந்த ரூபாய் மேல் பையில் இருப்பதாகவும், அவரே ஞாபக்க்குறைவாக
அதில் போட்டிருக்க, கீழ்ப்பையில் போட்டதாக எண்ணிக்கொண்டதாகவும், அந்த
வேலைக்காரனைப் பேசியதும் அடித்ததும் பாவமான காரியமென்றும், அந்தப்
பாவத்தைப்போக்குவதற்கு அவனிடம் உணைமையைச் சொல்லி, அவனுக்கு ஒரு ரூபாய்
வெகுமதி கொடுக்க வேண்டும் என்று அறிவித்ததாகவும், அவர் அந்தப்படியே நடந்து
கொண்டதாகவும், அதிலிருந்து ஆவி உலகத்தில் புண்ணியப் பகுதியிலுள்ள
சுற்றத்தார் தாங்கள் இருந்த வீட்டில் ஏதாவது விபரீதமான காரியங்கள்
நடந்தால், அதை எவ்வளவு கருத்தோடு கவனித்து வருகிறார்கள் என்பதையும் அவர்
உணர்ந்த கொள்ள முடிந்ததாகவும் அறிவித்தார்.
இறந்த இஸ்லாமியர் தானாகவே வலிய வந்து தன் மகனது வியாகூலத்தைநீக்கல்:
ஈரோடு மார்க்கத்தில் கரூருக்குச் சமீபமாயுள புகழூரிலே ஒரு நாள் இரவு 1
மணிக்கு இறந்துபோன சுற்றத்தாருடன் பேசிக்கொண்டிருக்கையில் ஆவி
உலகத்திலிருந்த ஓர் இஸ்லாமியர் வந்து தாம் அவ்வூரிலுள்ள (போஸ்ட் மாஸ்டர்0
தபால் அதிகாரியினுடைய தகப்பனார் என்றும், தம்முடைய மகன்தூக்கம் வராமல்
விழித்துக் கொண்டு படுக்கையில் உட்கார்ந்து கொண்டு இருப்பதாகவும், அவன்
அவனுடையமனைவியின் உடல் நிலை விஈயமாகவும் அவளூடைய பிள்ளைப் பேறு விஷயமாகவும்
நினைத்துக் கொண்டே இருப்பதாகவும், அவனைத்தயவு செய்து கூட்டிக் கொண்டு
வந்து தம்மோடு பேச வைக்க வேண்டும் என்றும் வேண்டிக்கொண்டாராம்.இரவில் 1
மணிக்கு அவரை அவ்விதம் கூப்பிடுவது சரியல்லவே என்று கேட்டபொழுது, “அவன்
தூங்கிக்கொண்டிருப்பானானால் எழுப்பக்கூடாதுதான். ஆனால்
விழித்துக்கொண்டிருக்கும்பொழுது தெருவாயில் கதவை லேசாகத் தட்டினாலே அவன்
வந்து திறந்து விடுவான்; அதைப்பற்றி யாதும் யோசிக்க வேண்டாம். அந்த
உதவியைச் செய்து தரவேண்டும்” என்று வேண்டிக்கொண்டார். அதன்படி ஒரு
வேலைக்காரனை அனுப்பி, ‘அவருடைய வீட்டுக் கதவைத் தட்டிப் பார்;
விழித்திருந்து உடனே கதவண்டை யாரென்று கேட்டால், விவரம் சொல்லிக் கூட்டி
வா; அல்லவிடில் வந்துவிடு’ என்று அறிவித்திருந்தோம். அவனும் (போஸ்ட்
மாஸ்டர்) தபால் அதிகாரி வீட்டிற்கு சன்று லேசாக்க் கதவைத் தட்ட, அவர்
எழுந்து வந்து யாரென்று கேட்டு வ்வரம் அறிந்து, தகப்பனாரிடம் பேச வந்து
விட்டார். நாங்கள் இறந்தவர்களோடு பேசும் வழக்கமுள்ளவர்கள் என்பது மாத்திரம்
அவருக்கு முன்னமேயே தெரியும். ஆவி உலகத்திலுள்ள தந்தையார் தமது மகனிடம்,
‘கவலைப்பட வேண்டாம், மனைவிக்குச் சுகமான பிரசவம் நடைபெறும் ; பிறக்கப்போவது
ஆண்குழந்தை’என்று சொல்லி, குடும்ப சம்பந்தமாக எலா நலங்களும் உண்டாவதற்கு
மேலுலகத்தில் தாமும் ஆண்டவனிடம் பிரார்த்தித்து வருவதாகவும், வேறு சில
இடையூறுகளை வரவொட்டாமல் தாம் தடுத்து விட்டதாகவும் சொல்லி, மகனை
உற்சாகப்படுத்திஅனுப்பிவிட்டார்.
பின்னர், அதன்படியே மனைவிக்குச் சுக பிரசவன் நடந்து ஆண் மகவு பெற்றெடுத்தாள் என்பதை அறிவோம்.
இதிலிருந்து ஆவி உலகத்திலுள்ளவர்கள், நாம் நினைத்த மாத்திரத்தில் அந்த
இடத்திற்கு வந்து நம்முடைய நிலைகளை நன்றாக அறிய முடிகிறதென்பதை உணருகிறோம்.
இதனை உபமானமாக்க் கொண்டுவிட்டால் சர்வ வல்லமையுள்ள ஆண்டவன், நாம்
நினைப்பதையும் பேசுவதையும் சொல்வதையும் அறிந்து கொண்டும் கேட்டுக்கொண்டும்
பார்த்துக்கொண்டும் இருக்க முடியும் என்பதை யாவரும் உய்த்து உணர்ந்து கொள்ள
முடியும் அல்லவா?
இறந்தவர் தம் தம்பியிடம் தனது மகனுடைய அந்தரங்கச் செயல்களை அறிவித்து மணம்முடிக்கச் செய்தல்:
ஒருநாள் மதுரைக்கு வந்திருந்த நாட்டுக்கோட்டைச் செட்டியார் ஒருவர்,
அம்மைய நாயக்கனூருக்குத்தம்முடைய சொந்த மோட்டார் காரில் வந்து, காலம் சென்ற
தம்தந்தையாருடன் பேசிப் பார்க்க வேண்டுமென்று விரும்பினார். அதன்படியே
அவர் தம் தந்தையாருடன் பேசிக் கொண்டிருக்கும்பொழுது தந்தையார் தம்முடன் ஆவி
உலகத்தில் இருந்த மூத்த மகன் (மதுரையிலிருந்து வந்திருந்த செட்டியாருடைய
காலஞ்சென்ற தமையன்) தம்பியுடன் வந்திருப்பதாக அறிவித்தார்.அந்த
அண்ணாவைப்பேச்ச் சொன்னபொழுது அவர், தம்முடைய மகன் காட்டுப் புத்தூரில்
படித்துக் கொண்டிருப்பது போதுமென்றும், அவனைப் பற்றி அவ்வூரில் சில
புகார்கள் வருகின்றனவென்றும், அவனும் இன்னொரு வயது வந்த பெண்ணும் காதல்
கடிதங்கள் வரைந்து கொண்டிருக்கிறார்களென்றும், காரியம் முற்றிவிடுவதன்
முன், அவனை ஊருக்குக் கூட்டிக்கொண்டு போய், வேற் பெண் பார்த்துக் கல்யாணம்
செய்து வைத்துவிட வேண்டுமென்றும், அம்மைய நாயக்கனூருக்குக் கொண்டு
வந்திருக்கிற காரிலேயே, நேராக்க் காட்டுப்புத்தூருக்குப் போய் அங்குள்ள தம்
மகனைக்கூட்டிக் கொண்டு வந்துவிட வேண்டுமென்றும் தெரிவித்தார்.
பேச வந்த செட்டியாருக்கு ஒன்றும் புலப்பட வில்லை. தாம் மதுரையில்
அநேகரைக் காக்க வைத்து விட்டு, இரவு திரும்பி வந்துவிடுவதாக
அம்மையநாயக்கனூருக்கு வந்ததாகவும், ஆனதால் நேரே மதுரைக்குத் திரும்பிப்
போய் அங்குள்ள காரியங்களைப் பார்த்துவிட்டு, மறுநாள் காட்டுப்புத்தூர
போவதாகவும் பதில் அறிவித்தார்.
ஆவி உலகத்திலிருந்து பேசிய தமையனும், மதுரைக் காரியத்தைப் பின்னால்
பார்த்துக் கொள்ளலாம் என்றும், காட்டுப்புத்தூர் காரியம் மிகவும் அவசரமானது
என்றும், மதுரைக்குத் தந்தியைக் கொடுத்துவிட்டு, நேரே காட்டுப்
புத்ததூருகுச் சென்று, தன்னுடைய மகன் விஷயத்தைக் கொஞ்சமும் தாமதியாமல்
கவனித்து ஆவன செய்துவிட்டுத்தான் மறுவேலை பார்க்க வேண்டுமென்றும் திரும்பத்
திரும்பச் சொன்னார். அதைப்பற்றித்தன் தந்தையாரிடம் செட்டியார் கேட்டபொழுது
அவரும் அது மிகவும் அவசரமான காரியம்தான் என்று சொல்லவே மதுரைக்குத்
திரும்பிவிட வேண்டுமென்று எண்ணியிருந்த செட்டியார், அந்த எண்ணத்தை மாற்றி,
தந்தியில் தான் காட்டுப்புத்தூருக்குச் சென்று வருவதாக அறிவித்துவிட்டு,
அம்மையநாயக்கனூரிலிருந்தே காரில் காட்டுப்புத்தூருக்குப் போய்விட்டார்.
அங்கு சென்று காரியங்களைப் பரிசீலனை செய்து பார்க்க, தம் தமையனார்
சொன்னது முற்றிலும் உண்மை என்று புலனாயிற்று. ஆனதால், தன் தமையனார் தனக்கு
அறிவித்தது போல், படித்துக்கொண்டிருந்த பையனுடைய படிப்புக்கு அன்றோடு
முற்றுப்புள்ளி வைத்துவிட்டு அவனைத் தன்னுடைய ஊருக்கு அழைத்துச் சென்று,
கால தாமதமில்லாமல் கல்யாணமும் செய்துவிட்டார். நாங்களும் அக்
கல்யாணத்திற்குச் சென்று சிறப்பித்தோம்.
ஆகவே, ஆவி உலகத்திலிருக்கிற தந்தை தம்முடைய மகனுடைய நடத்தைகளைக்
கண்காணித்து வருகிறார்ர் என்பதும், அதற்கு இன்னது செய்ய வேண்டுமென்று
அறிவிக ஆர்வத்துடன் சந்தர்ப்பத்தை எதிர் நோக்கியிருக்கிறார் என்பதும்
இதிலிருந்து புலப்படுகிற தல்லாவா? அல்லாமலும் அம்மையும் அப்பனும் ஆகிய சர்வ
வல்லமையுள்ள ஆண்டவனும், நாம் செய்கின் காரியங்களை எல்லாம் நமக்குத்
தெரியாமல் கண்காணித்து வருகிறார் என்பதை ஊகித்து உணர்ந்து கொள்ளவும், நாம்
நம்முடைய நடத்தைகளைத் திருத்தி அமைத்துக்கொள்ளவும், இச்சம்பவன்
உள்ளத்தைத்தூண்டுகிற அளவுக்கு, எத்தனை புத்தகப் படிப்பும் மக்களைத்தூண்ட
முடியாதன்றோ!
நன்றி :- கவிஞார் கண்ணதாசன்
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

அர்த்தமுள்ள இந்து மதம் - கவிஞர் கண்ணதாசன் Empty கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் - 22

Post by மாலதி July 17th 2011, 18:03

22. சோதனையும் வேதனையும்
*************************
இந்த் தொடர் கட்டுரை பற்றி எனக்கு ஏராளமான கடிதங்கள் வந்துள்ளன.
பெரும்பாலான கடிதங்களி வேதனையும், சோதனையும், விம்மலும் தொனிக்கின்றன.
வாழ்க்கை என்பது இன்பமும், துன்பமும் கலந்தது தான் என்பதை அறியமுடியாத,
பக்குவமற்ற இளம் உள்ளங்கள், தங்கள் ஏக்கத்தை வெளியிட்டிருக்கின்றன.
சில கடிதங்கள் திகைப்பளிக்கக்கூடியவையாகவும் இருக்கின்றன.
உதாரணமாக, வட ஆற்காடு திருப்பத்தூரிலிருந்து ஒரு சகோதரி, தனக்கு வேண்டிய வேறு ஒருவரது காதல் கவலையை வெளியிட்டிருக்கிறார்.
அந்தக் காதல், நினைத்துப்பார்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது.
ஒரு பெண் தனது பெரியப்பாவின் மகனைக் காதலிக்கிறாளாம்.
இந்துக்களின் அழுத்தமான பண்பாட்டின்படி ரத்த பந்த சகோதரனாகிய ஒருவனை
அவள் காதலிக்கக்கூடாதுதான் என்றும், ஆனால் எப்படியோ இருவருக்கும் அன்பு
அரும்பிவிட்டதென்றும், இது பூர்வஜென்மத்தொடர்ச்சியாக இருக்க்கூடும்
என்றும், அவர் தெரிவிக்கிறார்.
இந்துக்கள் கற்பனைக்கூடச் செய்து பார்க முடியாத கெட்ட கனவு தீய நினைவு
என்றே நான் இதைக் குறிப்பிடுவேன். ” அந்த ஒருத்தி, ஒருவனை மனப்பூர்வமாக்க்
காதலித்துவிட்டதால் வேறொருவனை அவள் திருமணம் செய்துகொள்வது அவளது
கற்பியல்பிற்குக் களங்கமல்லவா?” என்று அவர் கேட்கிறார். நான் அப்படி
நினைக்கவில்லை.
ரத்த பந்தத்தை உணர்ந்துகொள்ளாத நினைவு காதலாகாது.
ஆகவே, அவள் வேறு ஒருவனை மணந்து கொள்வது தவறாகாது.
இந்துகளின் உறவு முறைகள் மிகவும் கண்டிப்பானவை. அர்த்தமுள்ளவை. அதிலே தொய்வோ மாறுதலோ இதுவரை ஏற்பட்டதில்லை.
பங்காளி உறவும், மாமன் மைத்துன்ன் உறவும் வேறு வேறானவை.
அவை ரத்தத்தை அனுசரித்தே உண்டாக்கப் பட்டவை.
ஆகவே, பண்புகெட்ட நினைவிலிருந்து மீண்டும் வேறு திசையைத்
தேர்ந்தெடுதுக்கொள்வது ஒழுக்கத்திற்கு உயர்வே தவர தவறாகாது என்பதை அந்தச்
சகோதரிக்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இன்னொரு நண்பர் மகுடஞ்சாவடி, அ. தாழை யூரிலிருந்து கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்
“என் தாய் மாமனுக்கு ஆறு பெண்கள். அவர்களில் ஒருத்தியை நான் மனமார
விரும்புகிறேன். அவளும் என்னை விரும்புகிறாள். எங்களது காதலைத் தங்களது
வார்த்தைகளில் கூறுவதென்றால் ‘சரீரத்தின் தாளம் அல்ல; ஆத்மாவின் ராகம்’.
தாங்கள் குறிப்பிடும் நற்குடியைச் சேர்ந்தவள். அதைவிட மேலாக, நைந்துபோன
உறவை மீண்டும் ஏற்படுத்து, என் தாயே அப்பெண்ணை மருமகளாகப் பெரிதும் ஆவலாய்
உள்ளார். ஆனால், என் சோதனை என் தந்தையிடம்தான் ஆரம்பிக்கிறது.
என் தந்தை, அவருக்கும் என் மாமாவிற்கும் முன்பு ஏற்பட்ட மனஸ்தாபத்தைக்
காரணமாக வைத்து, என் மாமாவின் பெண்ணைத் திருமணம் செய்ய அனுமதிக்க
மறுக்கிறார். அதைவிடப் பெரிய அதிர்ச்சி என்னவென்றால் என் மாமா வீட்டிற்குப்
பக்கத்து வீட்டிலேயே ஒருபெண்ணை எனக்குத் திருமணம்முடிக்க ஏற்பாடு
செய்கிறார். அவர் பார்க்கும் பெண்ணும்,தங்கள் கூற்றுப்படி
‘நற்குடி’ப்பெண்தான். நானும் கண்டு பேசியிருக்கிறேன்….நல்ல அழகு, நல்ல
குணம், நல்ல ஒழுக்கம் நிறைந்தவள்தான்.
நீங்கள் கூறுகிறீர்கள். “பெற்றோர் பார்த்து மகனுக்குப் பெண் கேட்க
வேண்டும்; அவர்கள் பெண்ணின் குலம் கோத்திரம் அனைத்தையும் ஆராய்ந்து
பாரத்தபிறகுதான் பேசி முடிக்கிறார்கள்” என்று என்னைப் பொறுத்தவரை என்தாயும்
தந்தையும் இருவேறு பெணகளை எனக்குப் பேசி முடிக்க விரும்புகின்றார்கள்.
அந்த இரு பெண்களுமே, நீங்கள் எத்தகைய பெண்களைச் சிபாரிசு செய்கிறீர்களோ
அத்தனை தகுதிகளும் உடையவர்களே. ஆனால் என் மனம் என் மாமாவின் பெண்ணைத்தான்
நாடுகிறது. என் தந்தையோ அதற்குச் சிறிதும் இணங்கத் தயாராய் இல்லை. அவரை
மீறவும் எனக்குத்தைரியம் போதவில்லை. அம்மாவைப் புறக்கணிக்கவும் என் மனம்
இடந்தரவிலை. நான் அழுகிறேன். ;குழம்புகிறேன்; துடிக்கிறேன்; இந்தச்
சூழ்நிலையில் தங்கள் கவிதை ஒன்று ஞாபகம் வருகிறது.
‘நதியினில் வெள்ளம்
கரையினில் நெருப்பு
இரண்டிற்கும் நடுவே
இறைவனின் சிரிப்பு!
எனவே எனது இந்தக் கடித்த்திற்குத் தாங்கள் தயவு செய்து கொஞ்சம்
மதிப்புக்கொடுத்து, என்னை இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து
விடுவிக்கவும், நான் எவ்வாறு நடந்துகொண்டால் பிரச்சனை தீரும் என்பதற்கு
வழிகாட்டித் தாங்கள் பதிலளிதீர்களானால் எனக்கு வழி காட்டிய ‘கண்ணனாக’வே
தங்களைப் பூஜிப்பேன் எனக் கூறி என் கடித்த்தை முடிக்கிறேன்’
-இந்த நண்பலின் துயரம் எனக்குப் புரிகிறது.
‘பெற்றோர்தான் பெண் தேடித்தர வேண்டும்’ என்று நான் சொன்னதை
ஒப்புக்கொண்டே அவர், தாயும் தகப்பனும் வேறு வேறுபெண்ணப்பார்தால் என்ன
செய்வது என்ற கேட்கிறார்.
அப்போது விஷயத்தைப் ‘புல் பெஞ்சு’க்கு விட்டுவிட வேண்டும். அதாவது, இருவரும் ஒரு நீதிபதியாக அமர்ந்துவிட வேண்டும்.
எந்தப்பெண்ணுக்கு இவருடைய ‘வோட்டு’ விழுகிறதோ அந்தப் பெண்ணுக்கு இரண்டு வோட்டு விழுந்து விட்டதாக அர்த்தம்.
மெஜாரிடியை நம்புகிற ஜனநாயகத்தில், இத்தகைய முடிவுதான் சரியானது.
பொதுவில் தங்களது காதல் துயரங்களையும் வேறு பல துயரங்களையும் ரசிகர்கள் வெளியிட்டிருக்கிறார்கள்.
“நான் கடவுளை மனதார நம்புகிறேன். எனினும் எனக்கு துயரத்தின்மேல் துயரம்
வருகிறதோ அப்போதே நாம் இறைவனின் பார்வைக்கு இலக்காகி இருக்கிறோம் என்றுதான்
அர்த்தம்.
உண்மையான பக்தனைத்தான் இறைவன் சோதிக்கிறான்.
திருடர்களை அவர்கள் இஷ்டம்போல போகவிட்டுத் தண்டனைக்கு ஆளாக்குகிறான்.
பக்தர்களைப்பரமன் சோதித்து, இறுதியில் சிறந்த அருள் வழங்கியதாக நமது
புராணங்களில் உள்ளன.
முதலில், சோதனைகளாலே மனம் மரத்துப் போய்ப் பக்குவம்பெற்றுவிடுகிறது.
பக்கவம் வந்தபின் கைக்கு வரும் எந்த லாபமும் தலைமுறைக்குத் தொடர்ந்து வருகிறது.
வீண் ஆரவாரங்கள், ஆர்ப்பாட்டங்கள் அடிபட்டுப்போய் நிதானம்
வந்துவிடுவதால், பெரிய நன்மை வரும்போது ஆணவமோ அகந்தையோ வருவதில்லை; உள்ளம்
அதை அமைதியாக வரவேற்கிறது. சோதனைகளின் பலனாக்க் கிடைத்த அடக்கும் பணிவும்
அதிகமாகின்றன.
சோதிக்கப்பட்ட மனிதன் பிறகு பலருடைய மரியாடைக்கும் உரியவனாகிறான்.
ஆகவேதான், நல்லவனை மிக நல்லவனாக்குவதற்கு வேதனைகளையும், சோதனைகளையும் இறைவன் தொடர்ந்து வழங்குகிறான்.
நண்பா, வருகின்ற சோதனைகளை யெல்லாம் தாங்கிக் பார்க்கவேண்டம்.
ராசி மாறும்பது, ஜாதகத்தின் நல்ல நேரம்தோன்றும்போது, அதன்பலன் தெரியும்.
“நிழலருமை வெய்யிலிலே
நின்றறிமின் ஈசன்
கழலருமை வெவ்வினையில்
காண்மின்”
என்றார்கள்.
வீழ்ந்தவன் வீழ்ந்துகொண்டே இருந்து, வாழ்ந்தவன் வாழ்ந்துகொண்டே இருந்தால், இறைவனின் இயக்கம் சரிவர இயங்கவிலை என்று பொருள்.
ஆனால் வீழ்ந்தவனுக்கு எழுச்சியும் வீழ்ச்சியும்தான், இறைவன் இயங்கிக்கொண்டிருக்கிறான் என்பதைக் குறிக்கின்றன.
பிறந்துவிட ஒவ்வொரு மனிதன் ஜாதகமும் இறைவனை நினைக வைக்கின்றன.
மனிதனைப் பிரக்ஞையோடு வைத்திருப்பதற்குத் தான் இறைவன் ஒவ்வொருவருடைய விதியையும் மாற்றி மாற்றி அமைக்கிறான்.
விதியும் பூர்வஜென்மும் ஒன்றோடொன்று தொடர்புடையவையாக இருப்பதற்குக்காரணமும் இதுதான்.
ஆகவே சிக்கல் நேரும்போதெல்லாம், ‘கண்ணா’ என்றோ, ‘கந்தா’ என்றோ ஒருமுஐ அழைத்து, அதைத் தாங்கிக்கொண்டு அமைதியடைய வேண்டும்.
‘துன்பம் வரும்போது சிரி; அதற்கு அடுத்தாற்போல வருவது துன்பமாக இருக்காது’ என்று வள்ளுவன் அறுதியிட்டுக் கூறினான்.
இந்து மதம் வேரூன்றியுள்ள இந்தியாவில், கால நிலையின் மாறுபாட்டுக் கணித்த்தை நாம் பார்க்கிறோம் அல்லவா?
கோடைக்கால வெயிலால் காய்ந்துபோன ஏரிகள் மாரிக்கால மழையால் மறுபடியும் நிரம்பவில்லையா?
“காலம் ஒருநாள் மாறும் - நம்
கவலைகள் யாவும் தீரும்!”
என் வாழ்க்கையிலேகூடப் பல நேரங்களில், துன்பம் தாங்காமல் தற்கொலையைப் பற்றி நான் சிந்தித்துண்டு.
அது நடக்காமற் போனதற்குக் காரணம், என்னாலும் ‘ஏதோ ஆகும்’ என்று இறைவன் எழுதியிருப்பதும்தான்.
பலமுறை தற்கொலைக்கு முயன்ற ராபர்ட் கிளைவ், இந்தியாவையே ஆளக்கூடியவனாக வந்து சேரவில்லையா?
பாழும் மனது சில நேரங்களில் சஞ்சலிக்கும்.
‘போதுமே, இந்தக் கஷ்டம்’ என்று தோன்றும்.
‘போய்ச் சேர்ந்துவிடலாம் அவனிடம்’ என்று எண்ணும்.
குழம்பும், புலம்பும், தவிக்கும், தத்தளிக்கும்; நன்மை கிடைத்தவுடன் ‘வாழ்ந்து பார்க்கலாம்’ என்ற சபலம் வரும்.
அது அதிகமாகும்போது, வாழ்க்கையைப் பறிய நம்பிக்கையும் வந்தவிடும்.
அந்த நம்பிக்கையிலேதான் நண்பா சோதனைகளைத் தாங்கிக் கொள்ள வேண்டும்.
இறைன் யாரையும் கைவிடமாட்டான்.
இது சத்தியம்.
நன்றி :- கவிஞார் கண்ணதாசன்
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

அர்த்தமுள்ள இந்து மதம் - கவிஞர் கண்ணதாசன் Empty கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் - 23

Post by மாலதி July 17th 2011, 18:04

23. ஒரு கடிதமும் பதிலும்
*********************
உயர்திரு கவிஞர் கண்ணதாசன் அவர்களுக்கு; தாங்கள் எழுதிய “கீதையில் மனித மனம்” படித்தபின் என் மனத்தின் ஓலத்தைத்தந்திருக்கிறேன்.
எண்ணங்கள் அலைமோதுகின்றன. அலைகள் சீர்படவில்லை,. கரையை உடைத்து
நிலத்தைச் சிதைக்குமோ என்ற பயம். நெஞ்சம் விம்மிப் புடைத்துத்தணியும்
பெருமூச்சின் உஷணத்தின் அளவைக் கலோரியில் கணக்கிட்டாலும், அது வரும்.
வெந்து நொந்து போன இதயத்தின் நிலையைக் கணக்கிடவோ, ஆற்றவோ என்றோ ஒரு நாள்
உண்டு என்ற ஆணித்தரமான நினைவுகள்தான் நிம்மதியைத் தருகின்றன. இது எத்தனையோ
ஞானிகள் போல், வேதாந்தத்தையோ, வாழ்க்கையின் தத்துவத்தையோ உணர்ந்த நிலை
அல்ல. இதுதான் உண்மை நிலை என்று எண்ணும் சாசுவதமான பலம் கிட்டாதவரை, சுய
பலத்தில் வாழ விழைகிறேன். கடவுளே, எனது பார்வையில் தெளிவையும் காலில்
வலுவையும் கொடு என்று உன்னை நாடுகிறேன்.
‘பிறப்பு, தகப்பன் அளிப்பது; இறப்பு ஆண்வன் அழைப்பது; இரண்டும்க்கும்
இடைபட்டது, அரிதாரம் பூசப்படாத நடிப்பு என்னும் வாழ்க்கை!’ எத்தனை அழகான
உரவுகம் தந்திருக்கிறீர்கள். இந்த நடிப்பில் நவரசம், அந்த நடிப்பில்
சோகரசம்; அந்த நடிப்பில் ஆர்வமான நடிப்ப; அபசுரமான பாடல்கள்; ஒரே சத்தம்;
ஆரவாரம்; காதே செவிடுபடும் அதிர்வுகள்; சுற்றும் சுழல்கள்; செருகும் நிலைய்
கண்கள்; சுவாசம் சீரான நிலை தவறும் தருணம்;ந்ந எங்கோ லேசாகிப் பறக்கும்
கும்மென்ற இனந்தெரியாத பரபரப்பு; உடம்பெல்லாம் பஞ்சாகி, வெது வெதுப்பாகி
நீறாகிக் கரைந்து போகும் நிலை. ஒரே வெளிச்சம் …பின் ஒரே இருட்டு…..
இருட்டு… இருட்டு…….. மையிருட்டு! எங்கே ஆரம்பித்து, எங்கே முடிகிறது என்று
தெரியாத இருள்… வாழ்க்கைப் பயணம் ஒரு நிலை கடக்கும் விந்தைகள், ‘who are
you?’ இந்தக் கேள்வியை எத்தனைமுறை என்னுள் கேட்டுக் கொண்டாலும் பதிலே
இல்லை. ‘What is the purpose of God in creations?” இந்தக் கேள்வியும்
பதிலும் புரியாத த்த்துவமே என எண்ணுகிறேன்.
என்கு நன்றாகத்தெரியும் வாழ்க்கை மிகமிகச் சிறியது என்று. அதை
முழுவதுமாக ரசித்துச்சுவைக்கப்போகிறேன். இந்த உடம்பு எதனை நாட்கள் தாங்கப்
போகிறது? எல்லாம் அவன் இட்ட கட்டளைகள். அவன் போட்ட கட்டளைப்படி பிறந்த
நாம், நமக்குள் ஏற்படுத்திக்கொள்வது பட்டுப்பாடு ன்ற பிதற்றல்; கடமை என்ற
அபத்தம்; கண்ணியம் என்ற ஊர் ஏமாற்று வேலை. இவை எல்லாம் நம்மில் கூட்டம்
சேர்ந்து விட்டதால், நம்மை வகைப்படுத்திக்கொள்ளப் பயத்தினால் போட்டுகொண்ட
தற்காப்புகள் என்கிறது தற்கால ஹிப்பியிஆம்? எல்லாவற்றையும் நேசி;
அன்பாயிரு; உலக இன்பங்களை எல்லாம் தெவிட்டச் சுவை என்கிறது. இதற்குத்
தங்கள்பதில் என்ன?
என்னால் என் மனத்தை ஒருமைப்படுத்திக்கொள்ள முடியும். இந்த வரியை
எழுதுவதறகு எத்தனை துணிச்சல் இருந்தால் இப்படி எழுதியிருப்பேன் என்று
யூகிக்கலாம். ஆனால் இதில் ஏற்படும் போட்டாப்போட்டியில் வென்றவனையும்
தோற்றவனையும் காண்பது கடினம். நான் வாளாவருந்துவிட்டால்,
என்னைச்சுற்றியுள்ள ஆரவாரம் பரபரக்கிறது. என் உணவைத் திருட வேறு ஒருவன்
மறைந்து பார்கிறான். ஒருவன் திருடுகிறான், ஒருவன் அனுபவிக்கிறான்.
எல்லோரும் சேர்ந்து,’ஏமாந்தவன்’ என்று எனக்குப்பட்டமளிக்கிறார்கள். பலர்
சந்தர்ப்பவாதிகளாவே சௌபாக்கியமாய் இருக்கின்றனர். சிலர் என்னைப்
பைத்தியக்காரன் என்றே நம்புகின்றனர்.
என் மனத்தை வலிமைப்படுத்த நான் உணர்ச்சி வசப்படுவதில்லை.
கோப்ப்படுவதில்லை. என்னால் முடிந்த வரை தர்ம்ம் செய்கிறேன். முடியாவிட்டால்
இரக்கப்படுகிறேன். என்னைப் பார்த்து ஒருவன் பொறாமை கொள்ளாத அளவு இருக்கப்
பழகிக்கொள்கிறேன்.
தனிமையில் கடவுளையே நினைக்கிறேன். ஒவ்வொரு கணமும், இப்போதைய
வாழ்க்கையையும் போதுமான வசதிகளையும் கொடுத்தனைக்குக் கடவுளுகு நன்றி
சொல்கிறேன். நான் ஒரே வார்த்தையில் பரம ஆத்திகன். படித்துக்கொண்டிருக்கும்
மாணவனானாலும் தற்கால நாகரிகதின் நடைக்கேற்ற வேகத்தில் செல்லவொட்டாத என்
பொருளாதார நிலையில், நான் அணியும் உடையில் கூட எனக்கு நிறைவு உண்டு.
தனித்தவனாக இருப்பதும், பிறர் என்னைத்தனித்துப் பார்ப்பது கூட என்னில்
தாழ்வுணர்ச்சியை ஏற்படுத்தியதில்லை. எனது மனத்துணிவிற்கும்
தன்னம்பிக்கையின் வலுவிற்கும் சான்றுகள் இல்லை.
இயலாமை காரணமாக நான் இப்படியெல்லாம் இருக்கிறேன் என்பது உண்மை. எனினும்,
இதிலும் நிறைவு காணும் மனது எனக்கு இருக்கிறது. வாழ்க்கையில் பலவற்றை
இயலாமை காரணமாக விட்டுக் கொடுக்கும் போது ‘தியாகம்’ என்ற பெரிய
வார்த்தையைப் போட்டு, அதற்குப் பக்கத்தில் ஒளிந்து கொண்டு மனம் வெம்பியே
இருப்பவன், மனிதருள் சோடை போனவன் என்பது என் கருத்து, முழுவதுமாப் பற்றற்ற
வாழ்க்கையையா வலியுறுத்துகிறது இந்து மதம்.
அப்படி அனைவரும் பற்றற்றுப் போய்விட்டால் ரிசர்வ பாங்க் அச்சடிப்பதை
நிறுத்த நேரிடும்; லோ ராஜ்ய சபாக்கள் பஜனை தனக்களாகும்ந்ந தொழிற்கூடங்கள்
பர்ண சாலைகளாகும். நான் வாழும் காலம், பெட்ரோல் புகையும் பேரிரைச்சலும்
உள்ள, அவசரமான, ஆபத்தான, குறுகிய வாழ்க்கை. மதங்கள் அவனவனுக்குத் தன்
நிலையையும், தனது பாரம்பரியத்தையும் Origin உணர்த்த பல சந்தர்ப்பங்களை, பல
சடங்குகள் வாயிலாகத்தருகிறது. புத்தரின் போதனையில் கூடத் தலையாயது
மனவடக்கம் தானே?
மனம் ஒருமைப்பட்டால்சிந்தனைகள் சீராகும். சிந்தனைகள் சீர்பட்டால் செயல்கள் செவ்வனே நடக்கும்.
சிந்தனையும் செயலும் ஒருமித்தால் நியாயம் அநியாயங்கள் தெளிவாகும்.
அத்தெளிவு உண்டானால் மன அமைதிஉண்டாகும். நமக்குத் தற்போது அந்த அமைதிதான்
தேவை. விவேகமற்றவன் சிந்திப்பதில்லை; விவேகமுள்ளவன் மனப் பகுவம் அடைகிறான்,
இரண்டிற்கும் இடைப்பட்டவன் வாலிபால் பந்துபோல் அலைக்கழிக்கப்படுகிறான்.
அந்த மென்மையான இன்பமான, மன அமைதியும் நிறைவும் பெறக் கீதை போன்ற இந்து
மதத்தின் ஆணி வேரனைய பொக்கிஷங்கள், தற்கால நிலையில் ஒரு சாரசரி நிலையாளன்
கடைப்பிடக்கும்படி என்ன சொல்கிறது என்பதையும் இதில் இந்து மதத்தின்
தனித்துவம் பற்றியும் தங்களை எழுத வேண்டுகிறேன்.
தங்கள் அன்பன்,
எஸ். வெங்கட்ராம்ன்
கோயமுத்தூர் -9
அன்புள்ள நண்பரே!
உங்கள் எண்ணம் எனக்குப் புரிகிறது.
உங்கள் மனத்தின் கோலங்களை எனக்கு விளங்கும்படியே வரைந்திருக்கிறீர்கள்.
மனிதனின் மனத்துக்கு முதல் தேவை, அமைதியும், நிம்மதியுமே!
எந்தெந்த வழிகளில் அவை உங்களுக்கு கிடைக்குமோ அந்த வழிகளை நீங்கள் கடைப்பிடிப்பதை இந்து மதம் தடுக்கவில்லை.
நிச்சயமாக தவறான வழிகளில் அவை உங்களுக்குக்கிடைக்குமோ அந்த வழிகளை நீங்கள் கடைப்பிடிப்பதை இந்து மதம் தடுக்கவில்லை.
நிச்சயமாக தவறான வழிகளின் மூலம் அவை கிடைக்கப் போவதில்லை.
காமுகனோ, கொலைகாரனோ, சூதாடியோ, பிறர் மனை நயந்து செல்லும் பேதையோ, ஏமாற்றுக்காரனோ, பிற நிரந்தரமான நிம்மதியை அடைவதில்லை.
ஆகவே, நிரந்தரமான நிம்மதிக்காகப் பிறர் வெறுக்காத நல்ல வழிகளைத்தான் நீங்கள் நாடமுடியும்.
அந்த வழி எதுவானாலும், அதை நீங்கள் தேர்தெடுத்துக் கொள்வதை இந்து மதம் தடுக்கவில்லை.
நீங்கள் சொல்வதுபோல், பற்றற்ற வாழ்க்கையை மட்டும் இந்து மதம்
போதித்தால், ரிசர்வ் பாங்க் அச்சடிப்பதை நிறுத்த வேண்டும். லோக் சபையும்
மக்கள் சபையும் பஜனை மடங்கள் ஆகும் என்பதையும் நான ஒப்புக்கொள்கிறேன்.
இந்துமதம் லௌகீக வாழ்க்கையை வற்புறுத்துகிறது என்பதுதான், இதுவரை நான் எழுதி வந்திருக்கும் தொடர் கட்டுரையின் சாரமாகும்.
மனதுக்கு நிம்மதி என்பது பந்த பாசங்களை அறுத்து விடுவதால் மட்டுமே கிடைக்கும் என்று நான் வாதாட வரவில்லை.
கீதையைக் கண்ணன் உபதேசித்தது அர்ஜூனனுக்கு.
ஆகவே பந்த பாசத்தை அறுப்பது என்பது கீதையின் முழு நோக்கமாக இருக்க முடியாது.
காரணம், அர்ஜூனன் பந்த பாசங்களுக்கு கட்டுப்பட்டவன்.
காதல் உணர்ச்சி மிகுதியும் உள்ளவன்.
போர் என்று வந்தபின் உறவு பார்க்கக்கூடாது என்றுதான் கண்ணன் வாதாடுகிறான்.
அர்ஜூனன் ஆத்மராகம் சஞ்சலிப்பதைத்தான் நிறுத்த முயல்கிறான்.,
தியானத்தால் மனதை ஒருமுகப்படுத்த முடியும் என்றுதான் கூறுகிறான்.
யாரையும் சந்நியாசியாகப் போகச் சொல்வது இந்து மதத்தின் நோக்கமல்ல.
வாழ்வைக்கண்டு பயந்தவர்கள், நொந்தவர்கள், லௌகீ வாழ்க்கையில் நிம்மதி
இல்லை என்று கண்டவர்கள்,பற்றற்ற வாழ்வுக்குத் தங்களை அர்ப்பணித்துக் கொள்ள
இந்து மதம் அனுமதிக்கிறது.
ஆனால், லௌகீக வாழ்க்கையிலே சரியானவற்றைத் தேர்ந்தெடுத்து மனநிம்மதியைப் பெறக்கூடியவர்களை அது தடுக்கவில்லை.
அதை ஊக்கப்படுத்துகிறது என்ற கூடச் சொல்ல்லாம்.
உங்களுடைய சலனம் “லௌகீக வாழ்க்கையில் மன நிம்மதியைப் பெறுவது எப்படி?” என்பதே.
நீங்கள் எவ்வளவு விவகமுள்ளவராக இருந்தாலும் அந்த நிம்மதிக்கு இடையூறு எப்போதாவது வந்து சேருகிறது.
அது உங்கள் தலையெழுத்தைப் பொறுத்தது.
ஒரு நல்ல பெண்ணைத் தேர்ந்தெடுத்து, அவளோடு நிம்மதியாக வாழ நீங்கள் விரும்புகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள்.
அந்தத் தேர்விலேயே விதி உங்களை வென்று விடக்கூடும்.
நீங்கள் எண்ணியது போன்ற மனைவியாக அவர் இல்லாமற் போய்விடக்கூடும். நிம்மதியை அழிக்கும் சக்தியாக ஆகிவிடக்கூடும்.
வாழ்க்கைக்குப்பொருள் வேண்டுமே என்று நீங்கள் தொடங்குகிற வாணிபன், ஒரு
கட்டத்தில் வீழ்ச்சியுற்று, உங்கள் நிம்மதியை அழித்துவிடவும் கூடும்.
உங்கள் நண்பர்கள் நன்றி கெட்டவர்களாகி, உங்கள் நிம்மதியைக் கொண்றுவிடவும் கூடும்.
அதுவே லௌகீக வாழ்க்கைக்கு மன நிம்மதியை வேண்டுபவன், முதலில் அந்த மனதை
எந்த அதிர்ச்சியையும் தாங்கக் கூடியதாகப் பக்குவம் செய்து கொள்ள வேண்டும்.
லௌகீக வாழ்க்கையில் மனதைக் கெடுப்பதற்குத் தான் ஏராளமான வழிகள் உள்ளன் என்பதையும், முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
கீதையில் கண்ணன் சொல்வது போல் எதிலும் சமநோக்கு ஏற்படும் நிலை வந்தால்தான், மனநிம்மதி சாத்தியமாகும்.
எனது வாழ்க்கையிலேயே இதற்கான அனுபவங்கள் உண்டு.
முதலில் நான் மனதாரக் காதலித்த பெண் எனக்குக் கிடைக்கவில்லை.
நான் கவலைப்பட்டேன்.
நிம்மதி இழுந்தேன்.
பிறகு திருமணம் பேசும்போது, நான் குறிப்பிட்ட பெண் எனக்குக் கிடைக்கவில்லை.
நான் மீண்டும் நம்பிக்கை இழந்தேன்.
‘விரும்பியது கிடைக்காததால், கிடைத்ததை விரும்புய என்ற பழமொழிபடி
கிடைத்ததை விரும்பத் தொடங்கி, செயற்கையான நிம்மதியைத் தேடிக்கொண்டேன்.
நான் இருபத்தைந்து ரூபாய் சம்பளத்தில் ஓர் இடத்தில் வேலை பார்த்தபோது, அது எழுபத்தைந்து ஆகாதா என்று ஏங்கினேன்; ஆயிற்று.
ஆயிரம் வராதா என்று அமைதி இழந்து கேட்டது மனது; அதுவும் வந்தது.
அது லட்சம் வரை போயிற்று; அப்போதும் நிம்மதி இல்லை.
வந்த ஏதும் தங்கவில்லை.
‘செல்வம் என்பது செல்வதற்காக வருவதுதான் என்று முடிவு கொண்டேன்.
பொருளைப் பெரிதாகப் பொருட்படுத்தாமல், ‘வருவதும் வரும், போவது போகும்’ என்று சமநோக்குமுடிவு கொண்டேன், அந்த வகையில் நிம்மதி வந்தது.
ஆனால், லௌகீக வாழ்க்கையில் ஒரு நிம்மதி வரும்போது, ஒருதுன்பமும் கூட வருகிறதே. என்ன செய்ய?
பேதலித்த மனத்தைப் பார்த்து, ‘நினைக்கத் தெரிந்த மனமே! உனக்கு மறக்கத் தெரியாதா?” என்று அழுதேன்.
‘இரண்டு மனம் வேண்டும் ‘ என்று இறைவனைக் கேட்டேன்.
உபதேசத்தில் இறங்கியிருக்கும் எனக்கே இன்னும் முழு நிம்மதி கிட்டவில்லை.
பகவத் கீதையின் தியானயோகம் என்னை செம்மைப்படுத்தி வருகிறது.
என்றோ ஒரு நாள் சாகப்போகிறோம். செத்த பிணத்தின் முன் இனி, சாகப்போகும் பிணங்கள் கதறி அழப்போகின்றன.
வீடு வரை உறவு
வீதி வரை மனைவி
காடுவரை பிள்ளை
கடைசி வரை யரோ?.
-ஆம்; கதை ஒருநாள் முடியப்போகிறது.
சிலர் அழுது முடிக்கப்போகிறார்கள்!
பிறகு எல்லோரும் மறந்துவிடப் போகிறார்கள்!
காந்தியையும் நேருவையும் மறந்துவிட்ட ஜனங்கள் என்னையா நினைவில் வைத்துக்கொள்ளப் போகிறார்கள்?
-இப்படி நினைப்பேன்.
‘போனால் போகட்டும் போடா! வாழ்க்கையை அனுபவித்துச்சாவோம்!” என்று முடிவு கட்டுவேன்.
ஒரு நாள் மயங்கிக் கிடப்பேன். மறுநாள் எதிர்காலத்தைப் பற்றிய பயம் வரும்.
உடனே அந்தப் பயத்தை மாற்றிக்கொள்வேன்.
ஆகவே, லௌகீக வாழ்க்கையில் இருந்து கொண்டே மனநிம்மதியைப் பெற எண்ணினால்
தினசரி வருகின்ற இடையூறுகளைக்களைந்துகொண்டே இருக்க வேண்டும்.. இடையூறுகள்
வந்தே தீரும்; அவற்றுக்குப் பயப்படக்கூடாது.
“எல்லாம் கண்ணனின் கட்டளைம என்று சிரித்துக்கொடே அப்புறப்படுத்திவிட வேண்டும்.
இப்படி ஓராண்டுக்குச்செய்து பாருங்கள். பிறகு உள்ளம் மரத்துப்போகும்;
ஈட்டி வந்து குத்தினாலும் வலிக்காது. முள்ளின்மீது உட்கார்ந்து கொண்டு
ரோஜாப் பூவைப்பற்றிப் பாடுகின்ற சக்தி வந்துவிடும்.
நமது பிறப்பு கண்ணனின் விளையாட்டு என்ற ஞானம் வந்துவிடும்.
மற்றவர்களெலாம் சிறியவர்களாகவும் நாம் கொஞ்சம் பெரியவர்களாகவும் நமக்கே தோன்றும்.
அடிக்கடி பகவத்கீதை படியுங்கள்; பிறகு நீங்களே உங்கள் மனதைச் சோதித்துப் பாருங்கள்; தேறிவரும்.
எனக்கும் தேறி வருகிறது.
24. பாவிகளே பிரார்த்தியுங்கள்
(இது எல்லாப் பாவிகளுக்கும் அல்ல; அப்பாவிகளுக்கும் மட்டும்!)
எங்கள் இறைவா!
மூல முதல்வனே!
அகல் விளக்குகள் ஒளிவிடும் உன் சந்நிதியில் நாங்கள் மண்டியிடுகிறோம்.
தாழ்ந்து கிடந்த எங்கள் கரங்கள் மேலெழுகின்றன.
இருகை கூப்பி வணங்குகிறோம்.
கூப்பிய கரங்களுக்குள் எந்த ஆயுதமும் மறைத்து வைக்கப்படவில்லை என்று கூறுகிறோம்.
சலனமற்ற கண்களையும், சபலமற்ற உள்ளத்தையும் எங்களுக்குக் கொடு.
கடந்த காலங்களில் நாங்கள் செய்த தவறுகளை மன்னித்துவிடு.
சூன்யத்தில் பிறந்த இதயம் வளர வளரக் காட்சிக்கு வருவது நியதி. ஆனால் எங்கள் இதயம் வளரவில்லை.
அது வளர்ச்சிக்குப் பிறகும் சூன்யமாகவே இருந்தது.
கைக்கோலை நழுவவிட்ட குருடன் கருந்தேளைப்பிடிப்பதுபோல் ஆன்மீக உணர்ச்சியை மறந்துவிட்ட நாங்கள் பாபத்தில் சிக்கினோம்.
அறிந்தோ, அறியாமலோ செய்த எங்கள் குற்றங்களை ஆதி நாயகனே மன்னித்துவிடு.
நாங்கள் அமுதென்று எண்ணி, நஞ்சை அருந்தினோம்.
மலரென்று எண்ணி முட்களைச் சூடினோம்.
எங்கள் கடிவாளம் ஆசையின் கையிலிருந்ததால் எங்கள் பயணத்தையும் ஆன்மா நடத்த முடியவில்லை.
ஆசை அழைத்த வழி சென்றோம்; தண்டனை கிடைத்த பிறகுதான் தவறுகளை உணர்ந்தோம்.
மலத்திலே கால் வைத்தபோது, அது மலமென்று எங்களுக்குத் தெரியவில்லை.
கையினால் தொட்டுப் பார்த்தபோதும் கண்டு கொள்ள முடியவில்லை.
மூன்றாவது, மூக்கிலே வைத்தபோதுதான் முழுதும் புரிந்தது.
இவை ஒரு முட்டாள் செய்யும் காரியங்களல்ல.
நாங்கள் நடந்து சென்ற இருட்காட்டில் எங்கள் அறிவுச் சுடர் எரியவில்லை.
காற்றை மட்டுமே நம்பிப்போகும் பாய்மரப் படகுபோல், அசையை மட்டுமே நம்பி எங்கள் வாழ்க்கைப் படகு போய்விட்டது.
நாங்கள் பிறர்மனை நயந்திருந்தால் அது எங்கள் பெண்ணாசையின் குற்றம்.
நாங்கள் பிறர் பொருள் விழைந்திருந்தால் அது எங்கள் பொன்னாசையின் குற்றம்.
நாங்கள் பிறர் நிலம் கவர்ந்திருந்தால் அது எங்கள் மண்ணாசையின் குற்றம்.
ஆசைகளை சிருஷ்டித்து, அந்த விளையாட்டில் எங்களைச்சிக்க வைத்து, வேடிக்கை பார்த்த எங்கள் பரம்பொருளே!
நிலைக்கும் என்று நாங்கள் எண்ணியவை யெல்லாம் நிலையாதனவென்று இப்போது அறிந்தோம்.
மரத்திலிருந்து உதிர்ந்து விழுந்த சருகுகள், பசுமை இலைகளைப் பார்த்து
ஏங்குவதுபோல்,பாவிகளாகிய நாங்கள் உத்தமமான ஞானிகளைப் பார்த்து, அப்படியே
நாமும் வாழக்கூடாதா என்று ஏங்குகிறோம்.
அந்த வாழ்க்கையை, ஏ, ஹரிஹரனே எங்களுக்கு அருள்வாயாக!
சமைக்கப்பட்ட சேவல் கூவ முடியாதென்பது எங்களுக்குத் தெரியும்.
முழுக்க தன்னைத் அழித்துக்கொண்டுவிட்ட மனிதன் உன்னை வேண்ட முடியாது என்பதும் எங்களுக்குத் தெரியும்.
நாங்கள் முழுக்க எங்களை அழித்துக்கொள்ள வில்லை.
பாதி வழியிலேயே எங்களுக்குக் கண் திறந்துவிட்டது.
எங்கள் இறகுகள்தான் பறிக்கப்பட்டிருகின்றன.
நாங்கள் கொல்லப்படவும் இல்லை.சமைக்கப்படவுமில்லை.
இந்த நிலையில் ஏ,ஏசுநாதா!
எங்கள் இறகுகள் மறுபடியும் வளர அனுமதி.
கண்ணென்பது நல்லவற்றைக் காணுவதற்காகவும், செவி என்பது நன்மொழிகளைக்
கேட்பதற்காகவும், நாசி என்பது நறுமணங்களை நுகர்வதற்காகவும் , வாய் என்பது
நல்ல சேதிகளைச்சொல்வதற்காகவும், கை என்பது உதவி பெறத் தகுதியுள்ளவர்களுக்கு
உதவுவதற்காகவும், கால் என்பது நல்லோரை நோக்கி நடப்பதற்காகவும் என்பதை
நாங்கள் அறியாமற் போனோம்.
இந்த அங்கங்களில் ஒன்று அறியாமல் பிழை செய்திருந்தால் ஏ, ஆனந்த மூர்தியே! அந்த அங்கங்களைத் தண்டிக்காமல் விட்டுவிடு.
‘தீர்க்கப்பட முடியாத நோய் எங்களுக்கு வராதவாறு, திருத்தாண்டவ மூர்த்தியே, எங்களுக்கு அருள் செய்!
மீன், பூச்சியைத் தின்பது பசியால்.
அந்த மீனை நாரை கொத்துவது பசியால்.
அந்த மனிதன் தவறுகள் செய்வதும் பசியால்.
எங்கள் தவறுகளுக்குப் பசி மட்டுமே காரணமாக இருந்தால், உடனடியாக மன்னித்துவிடு.
இந்த ஆசைக்கு அறியாமையே காரணம் என்றால் அந்த அறிவை நாங்கள் அடையாதவாறு
தடுத்தது நீதான் என்பதால், நாங்கள் நிம்மதியாக வாழ உடனே அனுமதித்துவிடு.
பலாப்பழத்தில், சுளையைத் தேடி எடுக்க ஒரு கத்தி தேவைப்படுவதுபோல், லௌகீக
வாழ்க்கையில் நியாயத்தைக் கண்டுகொள்ளப் புத்தி தேவைப்படுகிறது.
அந்தப் புத்தி எங்களுக்கு இல்லாமற் போய் விட்டது என்பதைச்சொல்லிக் கொள்ள,நாங்கள் வெட்கப்படவில்லை.
‘ஒரு முட்டாள், தான் முட்டாள் என்பதைக் கண்டு கொள்ளும்போது, அறிவாளியாகி விடுகிறான். என்பது முன்னோர் வாக்கு.
நாங்கள் கண்டுகொண்டுவிட்டோம்.
பரம்பொருளின் சந்நிதானத்தில் எங்கள் பாபங்களைக் கழுவிவிட்டு, நிம்மதியை வாங்கிப்போக வந்திருக்கிறோம்.
இறைவா!
உன் சந்நியதியில் கற்பூரம் ஏற்றப்படுகிறது!
உனக்குச் செய்யப்படும் நைவேத்தியத்தில் வாழைப்பழமும் தேங்காயும் வைக்கப்படுகின்றன.
இவை ஏன் என்பதை, இப்போதுதான் நாங்கள் அறிந்துகொண்டோம்.
கற்பூரம் தன்னை அழித்துக்கொள்கிறது.
அது எரிந்து முடிந்த பிற்பாடு ஒரு கரித்தூள் கூட மிஞ்சுவதில்லை. வாழை
மட்டை, தண்டு, இலை, பூ, காய், பழம் அனைத்தையும் தந்து உதவுகிறது.
தென்னைமரம் கீற்று, இளநீர், தேங்காய் அனைத்தையும் தந்து உதவுகிறது.
இவற்றில் எந்தப் பாகமும் வீணாவதில்லை.
மனிதனும் அப்படி உலகிற்குப் பயன்பட வேண்டும் என்ற இந்துக்களின் அசையையே இது குறிக்கிறது.
நாங்களோ மற்றவர்களைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பினோம்; நாங்கள் பயன்படவில்லை.
எங்கள் கண்கள் திறந்துவிட்டன்.
நாங்கள் இனி எந்தச் சேவையைச்செய்ய வேண்டுமென்று நீ கனவில் வந்து கட்டளையிடுகிறாயோ, அந்தச் சேவையைச் செய்யக் காத்திருக்கிறோம்.
எங்கள் கனவில் உன்னை எதிர்பார்க்கிறோம்.
லௌகீக வாழ்க்கையாக எவருக்கும் வேதனை இல்லாமல் வேடிக்கையாக நடத்தலாம்.’ என்று முதலுதாரணம் காட்டிய ஸ்ரீகிருஷ்ணா!
‘லௌகீக வாழ்க்கையில் சில சட்டதிட்ட வரம்புகள் இருந்தால் காலங் கடந்தாவது வெற்றி வரும்’ என்று நிரூபித்த ஸ்ரீராமர்!
‘ஒழுக்கம் மிகுந்த பக்திக்கு உருவகம் கொடுத்த முருகா!’
‘இவை மூன்றிலும் எதை நீ தேர்ந்தெடுத்துக்கொண்டாலும் நானுனக்குத் துணை நிற்பேன் என்று உறுதி கூறும் சிவபெருமானே!’
‘அந்த நால்வர் வழியில் ஒன்றைப் பின்பற்றும் முன்பு, அந்த வழியில் தொல்லையில்லாமலிருக்க அனுமதி வழங்கும், விநாயக்ப் பெருமானே!
இந்துக்களின் பல தெய்வ வணக்கங்கள் எவ்வளவு அர்த்தமுள்ளவை என்பதை நாங்கள் கண்டு கொண்டுவிட்டோம்.
எங்கள் பாவங்களை இங்கே சமர்ப்பிக்கிறோம். மன்னிப்பை எங்கள் வீட்டிற்கு அனுப்பி வையுங்கள்.
கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் பாகம் ஒன்று முற்றும்..
நன்றி :- கவிஞார் கண்ணதாசன்
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

அர்த்தமுள்ள இந்து மதம் - கவிஞர் கண்ணதாசன் Empty Re: அர்த்தமுள்ள இந்து மதம் - கவிஞர் கண்ணதாசன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum