HinduSamayam
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

HinduSamayam
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
HinduSamayam
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்
by vpoompalani March 24th 2016, 13:59

» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26

» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17

» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06

» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07

» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58

» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24

» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35

» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52

» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20

» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18

» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37

» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47

» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19

» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46

» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49

» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37

» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07

» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29

» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38

» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55

» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00

» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49

» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28

» திருத்தல யாத்திரை  ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51

» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33

» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46

» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28

» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13

» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29

» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15

» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10

» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29

» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54

» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38

» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42

» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32

» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01

» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20

» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00

தமிழர்களின் சிந்தனைகளம்
Related Posts Plugin for WordPress, Blogger...



சிவபெருமானின் ஐந்து வடிவங்கள்!

Go down

சிவபெருமானின் ஐந்து வடிவங்கள்! Empty சிவபெருமானின் ஐந்து வடிவங்கள்!

Post by ராகவா August 19th 2014, 22:36

சிவபெருமானின் ஐந்து வடிவங்கள்! Siva

சிவபெருமானின் வடிவங்களில் ஐந்துமூர்த்தங்கள் மிகவும் சிறப்புடையவை. நமக்கு என்ன பலன் தேவையோ அதற்கேற்ற வடிவத்தில் சிவபெருமானை வழிபட்டு பலன் பெறலாம். சாந்தமே உருவான தட்சிணாமூர்த்தியாக வழிபடுபவர்கள் மனஅமைதியும் ஞானமும் கைவரப்பெறுவர்.

வசீகரமூர்த்தியாகத் திகழும் பிட்சாடனரை வணங்கினால் முகத்தில் வசீகரமும், மனதில் புத்துணர்வும் பிறக்கும். வக்ரமூர்த்தியாக விளங்கும் பைரவராக வழிபட்டால் எதிரிகளின் தொல்லை நீங்கும். தைரியம் உண்டாகும்.

ஆனந்த தாண்டவம் ஆடும் நடராஜராகத் துதித்தால் மனமகிழ்ச்சியும் குதூகலமும் ஏற்படும். அம்மையப்பராக சிவபார்வதி வீற்றிருக்க முருகன் நடுவில் அமர்ந்திருக்கும் சோமாஸ்கந்தமூர்த்தியை. தரிசித்தால் வாழ்வில் நிம்மதியும், மனநிறைவும் ஏற்படும். சோமாஸ்கந்தரை கருணையின் வடிவம் என்பர்.
ராகவா
ராகவா
உதய நிலா
உதய நிலா

Posts : 1143
Join date : 09/11/2012
Age : 44
Location : தஞ்சை மாவட்டம்

http://athisayakavi.blogspot.in/

Back to top Go down

சிவபெருமானின் ஐந்து வடிவங்கள்! Empty சூரிய பகவானை பார்க்கக்கூடாத நேரம்!

Post by ராகவா August 19th 2014, 22:37

சிவபெருமானின் ஐந்து வடிவங்கள்! TN_180112000000

உதிக்கும் போது, நடுவானில் இருக்கும் நடுபகல்பொழுது, மறையும் போது அஸ்தனமாகும் பொழுது, நீரில் பிரதிபலிக்கும் போதும், ஜலத்தில் காணும் பொழுதும், சூரியகிரகணத்தின் பொழுதும் பார்க்கக்கூடாது.

சூரியனின் தந்தை ...

உலகின் இருளைப் போக்கி ஆத்மபலத்தை தரும் ஒளிமயமான சக்தி எதுவோ அதனை நமஸ்கரிப்போமாக! என்று ரிக்வேதம் சூரியனைப் போற்றுகிறது. காஷ்யப முனிவரின் பிள்ளையே சூரியன். வேதங்களில் உள்ள ஏழு சந்தங்களை ஏழு குதிரைகளாக்கி வானமண்டலத்தில் பவனி வருவதால் இவருக்கு, சப்தாஸ்தவன் என்ற சிறப்புப் பெயர் உண்டு. 

சூரியனின் தேருக்கு கருடனின் சகோதரனான மாதலி என்பவனே சாரதியாக இருக்கிறான். சூரிய சித்தாந்தம் என்னும் நூலில், நவக்கிரகங்களில் எல்லா கிரகங்களும் தேவையான ஆற்றலை சூரியனே வழங்குகிறார் என்று கூறுகிறது. அந்த ஆற்றலை சூரியன் காயத்ரி மந்திரம் மூலமே பெற்று, அக்னி சொரூபமாக வானில் திகழ்கிறார்
ராகவா
ராகவா
உதய நிலா
உதய நிலா

Posts : 1143
Join date : 09/11/2012
Age : 44
Location : தஞ்சை மாவட்டம்

http://athisayakavi.blogspot.in/

Back to top Go down

சிவபெருமானின் ஐந்து வடிவங்கள்! Empty அஷ்ட ஐசுவரியம்!

Post by ராகவா August 19th 2014, 22:38

தனம், தான்யம், நிதி, பசு,

புத்திரர், வாகனம், இசை, தைர்யம்.

அஷ்ட பரிமளம்

சந்தனம், புனுகு, கோரோசனை, கஸ்தூரி, ஜவ்வாது, அகில், பச்சைக்கற்பூரம், குங்குமப்பூ இவைகளின் அபிஷேகம் சிவனுக்கு உகந்தது.

செல்வம், சுற்றம், புகழ், நற்செயல், கல்வி இவை வரிசைப்படி ஒன்றைக் காட்டிலும் ஒன்று சிறந்தது.
ராகவா
ராகவா
உதய நிலா
உதய நிலா

Posts : 1143
Join date : 09/11/2012
Age : 44
Location : தஞ்சை மாவட்டம்

http://athisayakavi.blogspot.in/

Back to top Go down

சிவபெருமானின் ஐந்து வடிவங்கள்! Empty Re: சிவபெருமானின் ஐந்து வடிவங்கள்!

Post by ராகவா August 19th 2014, 22:39

நோய் தீர்க்கும் திருக்கோயில்கள்!


சூலைநோய் அகல்வதற்கு சமணர்கள், தருமசேனருக்கு செய்த உபாயங்கள் அனைத்தும் பலனற்றுப் போயின. அந்நிலையில் சோர்வுபெற்ற தருமசேனர் தமது தமக்கை திலகவதியாரை எண்ணி அழத் தொடங்கினார். தம்முடைய சமையற்காரரை அழைத்து தமது நிலையை தமக்கையாரிடம் தெரிவிக்கச் சொன்னார். தம்பியின் சூலைநோய் பற்றி அறிந்த திலகவதியார், தாம் சமண்பாழிக்கு வர இயலாத நிலையை உணர்த்தினார். தருமசேனருக்கு வேறுவழி தோன்றியது. சமண சமயத்தில் இருந்து சூலைநோய் தீராத நிலையில், தமக்கையாரின் திருவடிகளை வணங்கி உய்வதே சிறந்தது எனத் தீர்மானித்தார்.

சமண உடைகளை நீக்கி, வெள்ளை ஆடை அணிந்து இரவோடு இரவாக பாடலிபுத்திரத்திலிருந்து புறப்பட்டு, திருவதிகையில் தமக்கையார் இருந்த திருமடத்தை அடைந்தார். திலகவதியார் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி தமது சூலைநோயின் கொடுமையைத் தாங்க மாட்டாதவராகக் கதறினார். தாம் பிழைத்துக் கரையேறுவதற்குரிய வழியை வேண்டினார். தம்பியின் மன நிலையையும் சூலைநோயின் கொடுமையையும் உணர்ந்த தமக்கை, “சிவபெருமான் திருவடிகளைச் சரண் அடைந்து பணி செய்” என்று அறிவுறுத்தி, அவருக்குத் திருநீற்றை திருஐந்தெழுத்து ஓதிக் கொடுத்தார். திருவாளன் திருநீற்றை அணிந்த மருள்நீக்கியார், விடியற்காலை நேரத்தில் தமக்கையாருடன் திருவதிகை வீரட்டானத் திருக்கோயிலுக்குச் சென்று தொழுது வலம் வந்தார்.

சிவபெருமான் திருவருளால் தமிழ்மாலைகளாகிய திருப்பதிகங்கள் பாடும் உணர்வு மேலிட, தம்மை வருத்திய சூலைநோய் நீங்கும் பொருட்டு திருவதிகைச் சிவபெருமானை நினைந்து, உள்ளத்தில் பேரன்பு பொங்க பாடத் தொடங்கினார்.

கூற்றாயின வாறு விலக்ககிலீர்

கொடுமைபல செய்தன நான் அறியேன்

ஏற்றாய் அடிக்கே இரவும் பகலும்

பிரியாது வணங்குவன் எப்பொழுதும்

தோற்றாதென் வயிற்றின் அகம்படியே

குடரோடு துடக்கி முடக்கியிட

ஆற்றேன் அடியேன் அதிகைக் கெடில

வீரட்டானத்துறை அம்மானே!

திருநீற்றினை அணிந்து நிறைவான திருமேனியுடன் விளங்கிய மருள்நீக்கியார் நெஞ்சில் ஆர்வம் மேலிட, பகைவர்களுக்காக திரிபுரத்தை அழித்த சிவபெருமானிடம் தமது சூலைநோயினையும், மாயை வினையும் நீக்கும் பொருட்டு மாசற்ற முதல் திருப்பதிகத்தைப் பாடினார்.

ராகவா
ராகவா
உதய நிலா
உதய நிலா

Posts : 1143
Join date : 09/11/2012
Age : 44
Location : தஞ்சை மாவட்டம்

http://athisayakavi.blogspot.in/

Back to top Go down

சிவபெருமானின் ஐந்து வடிவங்கள்! Empty Re: சிவபெருமானின் ஐந்து வடிவங்கள்!

Post by ராகவா August 19th 2014, 22:40

“திருக்கெடில நதியின் வடகரையில் உள்ள திருவதிகை வீரட்டானத்தில் எழுந்தருளியுள்ள எம்பெருமானே! உடம்பிலிருக்கும் உயிரைக் கூறுபடுத்தும் எமன்போல் கொடிய தன்மை கொண்ட சூலைநோயை நீக்க மாட்டீரா? வயிற்றினுள்ளே குடலைப் பிணித்து, உடலை முறுக்கி, தீராத வலியை உண்டாக்கி என்னைப் பெருந்துன்பத்துள் ஆழ்த்துகிறது. இந்நோயைப் பொறுத்துக்கொள்ளும் வலிமை எனக்கில்லை; நோயை அடைவதற்குரிய கொடிய வினைகளை யான் அறிந்து செய்யவில்லை; இரவும் பகலும் எப்போதும் உன் திருவடிகளை இடைவிடாமல் வணங்குகிறேன். விஷம்போல வந்து உடலை நலியச்செய்யும் கொடுமை-யான சூலைநோய், வயிற்றினுள் பற்றிக்கொண்டு புரட்டியெடுத்துத் தின்று சுடுகிறது. அதனால் நான் அயர்த்தும் அலுத்தும், வேர்த்தும் புரண்டும், விழுந்தும் எழுந்தும் வேதனைப்படுகின்றேன்! இறைவா! நீவீர் அருள் செய்யாவிட்டால், வேறு யார் எனக்கு உதவுவார்?”

இறைவனை நினைந்து, அழுது தொழுது பதிகம் பாடியபோது, அவரது வயிற்றில் புகுந்து வருத்திய சூலைநோய் விரைவில் அகன்றது. “என் பிழையால் விளைந்த இந்த சூலைநோயைப் போக்கிய உமது கருணையை எப்படிப் போற்றுவேன்?-” என்று, உடல்நலத்தை அருளிய திருவருள் திறத்தை எண்ணி மெய்சிலிர்க்க, கண்ணீர் மழைபொழிய நிலத்தில் வீழ்ந்து புரண்டார். அந்நிலையில், “செந்தமிழ்ச் சொல் மலர்களால் ஆன திருப்பதிகப் பாமாலையை நீ பாடிய தன்மையினால், நின்பெயர் ‘நாவுக்கரசு’ என்று உலகேழும் நிலைபெற்று வழங்கு-வதாக!” என அதிகை வீரட்டத்து இறைவனது திருவருள் வாக்கு, யாவரும் கேட்க வானில் எழுந்தது.

தேவார மூவரில், முதன்முதலில் பாடியவர் திருநாவுக்கரசரே! முதல் தேவாரம் பெற்ற தலம் திருவதிகை வீரட்டானம் என்பதும் குறிப்பிடத்தக்கது. வரலாற்று அறிஞர்கள் ஆய்வுப்படி, திருநாவுக்கரசர் அவதரித்தது ஆறாம் நூற்றாண்டில் - 575-ஆவது வருஷம். ஏறக்குறைய 50-ஆவது வயதில், திருவதிகைப் பெருமான் திருவருளால் அவருக்கு சூலைநோய் நீங்கியது. அதன்பின் இருபது ஆண்டுகள் வரை திருவதிகையில் இருந்த அவர், தமது 70-ஆவது வயதில் திருத்தல யாத்திரையைத் தொடங்கினார். அப்போது சீகாழியில் திருஞானசம்பந்தரைச் சந்தித்தபோது, சம்பந்தரின் வயது ஏழு. திருநாவுக்கரசு சுவாமிகள் 81 வயது வரை வாழ்ந்ததாக அவரது வரலாறு தெரிவிக்கிறது.

சிவபெருமான் திரிபுரத்தை எரிக்க, தேவர்கள் அமைத்த தேரில் வந்தாரல்லவா? அக்காட்சியை நினைவுறுத்து-வதுபோல இக்கோயில் கருவறை விமானம் தேர் போன்று அமைக்கப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆகம விதிப்படி கருவறையைச் சுற்றிலும் பரிவாரத் தேவர்கள் அமையப்பெற்று, எட்டு கோணத்தில் அமைந்த இவ்விமானம் அடித்தளத்திலிருந்து உச்சி வரை சிற்ப வடிவங்கள் நிறைந்து கலை அழகுடன் காட்சியளிக்கிறது. பிட்சாடனர், எட்டு கரங்கள் கொண்ட நடராஜர், திரிபுராந்தகர், சந்திரசேகரர், சதாசிவ மூர்த்தி, சிவபெருமான் திருமணக்கோலம் (அதில் திருமாலும் காட்சி அளிக்கிறார்), தட்சிணா-மூர்த்தி, கஜசம்ஹாரர் முதலான வடிவங்களும் மிக அழகாக உள்ளன.

கருவறையில் வீரட்டேச்வரர், வட்ட வடிவமான ஆவுடையாரில் 16 பட்டையுடன் கூடிய லிங்கத் திருமேனியில், கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். ‘ஷோடச தாரா லிங்கம்’ என்ற பெயருடைய இவ்வடிவில் சந்திரனின் பதினாறு கலைகளையும் பதினாறு பட்டைகளாகக் கொண்டுள்ளதால், இதை ‘சந்திர கலா லிங்கம்’ என்றும் அழைப்பர். இவ்வகை லிங்கத்தை வழிபடுவோர் இறைவனோடு இரண்டறக் கலக்கும் தன்மையைப் பெறுவர் என்றும், இதனை ‘சாயுஜ்ய லிங்கம்’ என்றும் சிற்ப நூல்கள் கூறுகின்றன. இங்கு லிங்கத் திருமேனிக்குப் பின்புறம், இறைவனும் இறைவியும் காட்சி அளிக்கிறார்கள். கல்வெட்டுகளில் இவ்விறைவர் திருவீரட்டான மகாதேவர், திருவீரட்டானமுடையார், அதிகை நாயகர் என்னும் திருப்பெயர்களால் அழைக்கப்பெறுகிறார்.


திருஞானசம்பந்தர் திருஅதிகைப் பெருமானைத் தரிசித்தபோது இறைவன் அவருக்கு, பூதகணங்கள் பாட தமது திருநடனத்தை ஆடிக்காட்டி அருளினார். அப்போது, ‘குண்டைக் குறட்பூதம்’ என்று தொடங்கும் திருப்பதிகத்தால் இறைவனைப் பாடி பரவினார். திருநாவுக்கரசர், திருவதிகைத் தலத்தில் பாடியருளிய பதிகங்கள் பதினெட்டு ஆகும் (பொதுப்பதிகம் உட்பட). அதிக அளவில் தேவாரத் திருப்பதிகங்கள் பெற்ற பெருமையுடைய தலங்களில் முதலில் சீகாழியும், அடுத்து திருவாரூரும், மூன்றாவதாக திருவதிகையும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அஷ்ட வீரட்ட தலங்களில் அதிக அளவில் தேவாரப் பதிகங்கள் பாடப்பெற்ற திருக்கோயில் திருவதிகை ஆகும்.

சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருவதிகை அடைந்தபோது, திருநாவுக்கரசர் உழவாரத் திருத்தொண்டு செய்த தலம் என்பதால், தம் காலால் மிதிக்க அஞ்சி ஊருக்குள் வராது வெளியில் சித்தவட மடம் என்ற இடத்தில் இரவு தங்கினார். தற்போது கோட்டலம்பாக்கம் என்று அழைக்கப்படும் இவ்விடத்தில் இறைவன் அந்தணனாக வந்து, தமது திருவடியை சுந்தரரின் தலைமீது வைத்துத் தாமும் தூங்குவது போல் இருந்தார். சுந்தரரின் தலையைத் தன் திருவடியால் பலமுறை மிதித்து, பின் இறைவன் மறைந்தருளினார். இறைவனைத் தாம் அறியாது போய்விட்டோமே என்று வருந்தி, ‘தம்மானை அறியாத சாதியர் உளரே’ என்ற திருப்பதிகத்தை இத்தலத்தில் பாடியருளினார். அவ்வகையில், சுந்தரருக்குத் திருவடி தீக்ஷை நல்கிய திருத்தலம் திருவதிகை ஆகும்.

இத்தலத்தில் உறையும் ஆறுமுகப் பெருமானைப் போற்றி அருணகிரிநாத சுவாமிகள் பாடியுள்ள திருப்புகழ்ப் பாடல்கள் இரண்டு உள்ளன. “அமரர் ஆதியர் இடர்பட அடர்திரு கொடியதானவர் திரிபுரம் எரிசெய்த அதிகை மாநகர் மருவிய சசிமகள் பெருமாளே” என்பது அருணகிரியார் வாக்கு.

இத்தலத்தில் அருள்பாலிக்கும் திரிபுரசுந்தரி எனும் பெரியநாயகி அம்மையின் சந்நிதி, சுவாமிக்கு வலப்புறம் அமைந்துள்ளது. கல்வெட்டுகளில் ‘அதிகை வீரட்டத்து ஈசன் இடமருங்கில் ஏந்திழை’ என்றும், ‘அண்ணல் அதிகையான் பாகம் பிரியாத பெண்ணின் நல்லாள்’ எனவும் அழைக்கப்படுகிறார். அம்பிகை பின் இரு கரங்களில் தாமரை மலரும், நீலோத்பல மலரும் கொண்டிருக்கிறாள். முன் வலக்கரம் அபய முத்திரையிலும், முன் இடக்கரம் ‘கட்யவலம்பித’ (இடுப்பில் கொண்ட) அமைப்பிலும் காணப்படுகின்றன. அம்பிகையின் திருக்கோயிலைக் கட்டியவர் முதற் குலோத்துங்க சோழன், விக்ரம சோழன் இவர்களின் படைத் தலைவராயிருந்த மணவிற்கோட்டத்து காளிங்கராயர் என்று கல்வெட்டு மூலம் அறியமுடிகிறது.

கோயில் உட்பிராகாரத்தில் சண்டீசர் சந்நிதி அருகில் சூலகங்கை என்னும் கிணறு உள்ளது. மருள்நீக்கியாருக்கு சூலைநோய் நீக்கியதால் இது சூல தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. இத்தீர்த்தத்தை உட்கொண்டால் உடல்நோயும் பிறவிநோயும் நீங்கும் என்பது மக்கள் நம்பிக்கை. உட்பிராகாரத்தின் தெற்குப்புறம் தலவிருட்சமான கொன்றை மரம் உள்ளது.

இத்திருக்கோயிலில் காணவேண்டிய கவின்மிகு வடிவங்களில் ஒன்று, கருவறையின் தென்புறப் பகுதியில் உள்ள முப்புரம் எரித்த பெம்மானின் சுதையினால் ஆகிய வடிவமாகும். வலக்கால் ஊன்றி இருக்க, இடக்கால் மடித்தும், பன்னிரு திருக்கரங்களில் முறையே சூலம், கத்தி, வில், அம்பு முதலான படைக்கலங்களுடன் அமைந்துள்ளது. வில்லின் நாண் பூட்டப்பட்ட நிலையில், ஜடா மகுடத்துடன் இறைவன் முப்புரங்கள்மீது போர் தொடுக்கும் அமைப்பில் காணப்படுகிறார். பிரமன் தேரோட்டியாக அமர்ந்திருக்க, சுற்றிலும் தேவ கணங்கள் உள்ளனர். இறைவன் திருவுருவ அழகு அற்புதம். அடுத்து, ராவணனுக்கு அருள்பாலிக்கும் ‘ராவண அனுக்கிரக மூர்த்தி’ வடிவம். மேற்புறத்தில் உள்ள பஞ்சமுக லிங்கம் ஓர் அரிய அமைப்பாகும். சிவபெருமானின் ஐந்து முகங்களான ஈசானம், தத்புருடம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் ஆகியவற்றைக் காட்டும் வகையில் நான்கு திக்குகளில் நான்கு முகங்களும், மேல்புறத்தில் ஒருமுகமும் இருக்கும்.
ராகவா
ராகவா
உதய நிலா
உதய நிலா

Posts : 1143
Join date : 09/11/2012
Age : 44
Location : தஞ்சை மாவட்டம்

http://athisayakavi.blogspot.in/

Back to top Go down

சிவபெருமானின் ஐந்து வடிவங்கள்! Empty Re: சிவபெருமானின் ஐந்து வடிவங்கள்!

Post by ராகவா August 19th 2014, 22:41

திருமால், கருடன், பஞ்ச பாண்டவர்-கள், திருமூலர், மனவாசகங்கடந்தார் ஆகியோர் வழிபட்ட இத்திருக்கோயிலில் ஏராளமான கல்வெட்டுகள் உள்ளன. பல்லவர், சோழர், பாண்டியர், கேரள அரசர்கள், சாளுவர், விஜயநகர அரசர்கள் ஆகியோர் காலத்துக் கல்வெட்-டுகளில் இக்கோயிலுக்கு அளிக்கப்பெற்ற நிவந்தங்கள், நிலங்கள் மற்றும் திருவிழா நடத்துவதற்கு அளிக்கப்பெற்ற தானங்கள் பற்றிய விவரங்கள் உள்ளன.

இத்திருக்கோயிலில் தை, வைகாசி மாதங்களில் திருவிழா நடைபெறுகிறது. ‘வெம்பினார் மதில்கள் மூன்றும் வில்லிடை எரித்து வீழ்த்த அம்பினார் கெடிலவேலி அதிகை வீரட்டனாரே’ என்று அப்பர் பெருமான், திரிபுர சம்ஹார நிகழ்ச்சியைப் போற்றும் வகையில் திருவதிகை வீரட்டேசர் கோயிலில், ஐதீக விழா ஆண்டுதோறும் நடைபெறுகின்றது. வைகாசித் திருவிழாவில் ஒன்பதாம் நாள் காலை, திரிபுர சம்ஹாரமூர்த்திக்கு (உற்சவருக்கு) விசேஷ அபிஷேக வழிபாடுகள் நடைபெறுகின்றன. இம்மூர்த்தி முன் இரு கரங்களில் வில் அம்பு ஏந்தியும், பின் இரு கரங்களில் மான், மழு உள்ள அமைப்பிலும், அருகில் திரிபுரவல்லி உடனிருக்க காட்சி அளிக்கிறார். இம்மூர்த்திக்கு அலங்காரம் செய்து திருத்தேரில் எழுந்தருளச் செய்வர்.

மாடவீதியில் தேர் வலம் வந்து, அங்குள்ள அக்னி மூலையில் நிறுத்தப்படும். அப்போது ஊரின் கிழக்கே கோயில் கொண்டுள்ள சர நாராயணப் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருள்வார். அவரை எதிர்கொண்டு அழைத்துவந்து தேரின் பக்கத்தில் எழுந்தருளச் செய்து தீபாராதனை செய்கிறார்கள். பிறகு, திரிபுராந்தகரின் கரத்தில் உள்ள சந்திர கணையை (அம்பு) பெருமாள்மீது சார்த்தி, அதில் மந்திரபூர்வமாக எழுந்தருளச் செய்கிறார்-கள். பிறகு அதனை சிவபெருமான் கரத்தில் வைத்து, திருமால் அம்பாக இருப்பதை உணர்த்து-கிறார்கள்.

இருவருக்கும் தீபாராதனை செய்தபின், வீரட்டேசுவரர் கோயிலுக்குத் தெற்கிலுள்ள கெடில நதிக்கரையில் உள்ள மூன்று கோட்டைகளை (வைக்-கோல், தென்னங்கீற்று, பனை ஓலை ஆகியவற்றால் ஆகியதை) தீ மூட்டிக் கொளுத்துவார்கள். வாண வேடிக்கை-கள் நடைபெறுகின்றன. இந்த வைபவம் முடிந்ததும் சர நாராயணப் பெருமாளுக்கு மாலைகள் அணிவித்து, தீபாராதனை செய்து விடை கொடுப்பார்கள்.

திரிபுராந்தக மூர்த்தி தேரில் இருந்து இறங்கி, கோயிலில் உள்ள மகா மண்டபத்தை அடைவார். அங்கு அவருக்குப் பிராயச்சித்த அபிஷேகம் செய்வர். இத்தலத்தில் நரசிம்மமூர்த்தி சர நாராயணப் பெருமாளாகக் காட்சி தருகிறார். இவர் சயனக் கோலத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இக்கோயில் வீரட்டேசுவரர் கோயிலுக்கு வடகிழக்கில் உள்ளது.

வைகாசி உற்சவம் தவிர, கார்த்திகை சோம வாரத்தில் 108 சங்காபிஷேகமும், சித்திரை மாதம் அப்பர் பெருமான் சதயத் திருவிழாவும் நடைபெறுகின்றன. திலகவதியார் மலர் பறித்துத் தொண்டு செய்த திரு நந்தவனம், வாகீசர் திருமடம், திருநாவுக்கரசர் தெரு முதலியவை, இத்தலப் பெருமையையும் வரலாற்றுத் தொடர்பையும் காட்டுகின்றன.

இறைநெறியைப் பெற பக்தி மார்க்கம் சிறந்தது என்று கருதிய அப்பர் பெருமான், அதனையும் தொண்டின் மூலமாக உழவாரப்பணி என்னும் திருத்தொண்டினை உலகறியத் துவக்கி வைத்தவர். மக்களுக்கும் ஆண்டவனுக்கும் இணைப்பாக உள்ள திருத்தொண்டுகளான தண்ணீர்ப் பந்தல், அன்னம் பாலித்தல், கல்லும் முள்ளும் நீக்கி கோயில் வழிகளைத் தூய்மை செய்தல் முதலிய அறப்பணிகளைச் செய்ய வழிகாட்டியவர். தொண்டுசெய்து பயனை எதிர்பாராமல் வாழ்ந்தால் இறையருளை எளிதில் பெறலாம் என்ற அப்பரடிகளின் வாழ்வியல் நெறியான ‘தன் கடன் அடியேனையும் தாங்குதல், என்கடன் பணி செய்து கிடப்பதே’ என்பது தாரக மந்திரமாகும்.

உரிய நாயகி ஓங்கு அதிகைப்பதித்

துரிய நாயகி தூய வீரட்டற்கே

பிரிய நாயகி பேரருள் நாயகி

பெரிய நாயகி பெற்றியைப் பேசுவோம்.

- திருவருட்பிரகாச வள்ளலாரின் திருவருட்பா.


நன்றி திரிசக்தி
ராகவா
ராகவா
உதய நிலா
உதய நிலா

Posts : 1143
Join date : 09/11/2012
Age : 44
Location : தஞ்சை மாவட்டம்

http://athisayakavi.blogspot.in/

Back to top Go down

சிவபெருமானின் ஐந்து வடிவங்கள்! Empty Re: சிவபெருமானின் ஐந்து வடிவங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum