Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்by vpoompalani March 24th 2016, 13:59
» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26
» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17
» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06
» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07
» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58
» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24
» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35
» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52
» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18
» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47
» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19
» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46
» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49
» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37
» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07
» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29
» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38
» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55
» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00
» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49
» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28
» திருத்தல யாத்திரை ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51
» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33
» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46
» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28
» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13
» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29
» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15
» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10
» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29
» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54
» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38
» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42
» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32
» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01
» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20
» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00
சிவ வடிவங்கள் சில
Page 1 of 1
சிவ வடிவங்கள் சில
1) கங்காதரர்
**********
பகீரதனின்
வேண்டுகோளை ஏற்று விண்ணுலகிலிருந்து பூமிக்கு வந்த கங்கையை தன் சடைக்
கற்றையில் தரித்துள்ள ஈசன் கங்காதரர் என வணங்கப்படுகிறார்.
2) சந்திரசேகரர்
************
தட்சப்பிரஜாபதியின் 27 பெண்களை மணந்து அதில் ரோகிணியிடம் மட்டும் மிக்க
அன்பு வைத்திருந்ததால் தட்சனின் சாபம் பெற்ற சந்திரனை காத்து, இழந்த ஒளியை
அவனுக்கு தந்து தன் சிரசிலும் தரித்துக்கொண்ட ஈசன், சந்திரசேகரர் ஆனார்.
3) கல்யாணசுந்தரர்
****************
ஈசன், பூமியில் பிறந்த அம்பிகையை மணம் புரிந்து கல்யாணசுந்தரராகத் திருக்கோலம் கொண்டார்.
மீனாட்சி,
கார்த்யாயனி,
மாதங்கி,
பார்வதி,
தாட்சாயணி
என ஒவ்வொரு முறையும் அம்பிகை ஒவ்வொரு பெயரில் பிறந்து ஈசனை மணந்தது வரலாறு
4) சோமாஸ்கந்த மூர்த்தம்
***********************
பார்வதிக்கும் ஈசனுக்கும் இடையே முருகப்பெருமான் அமர்ந்துள்ள திருவடிவம் சோமாஸ்கந்த மூர்த்தம் என்று வணங்கப்படுகிறது.
5) சோம கணபதி மூர்த்தம்
***********************
ஈசனுக்கும், பார்வதிக்கும் நடுவில் விநாயகப் பெருமான் வீற்றுள்ள வடிவம் சோம கணபதி மூர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.
6) அர்த்தநாரீஸ்வரர்
*****************
வண்டு வடிவம் எடுத்து ஈசனை மட்டுமே வலம் வந்த பிருங்கி முனிவரின் ஆணவத்தை
அடக்கி, சக்தியின் பெருமையை உலகிற்கு உணர்த்த ஈசன் தன் உடலில் பாதியை
உமையம்மைக்கு தந்தார். அதுவே அர்த்தநாரீஸ்வர வடிவம்.
7) லிங்கோத்பவர்
***************
ஈசனின் அடியைத் தேடி வராக வடிவில் திருமாலும் முடியைத் தேடி அன்ன வடிவில்
நான்முகனும் புறப்பட்டனர். அப்போது வானுலகையும் பாதாள உலகையும்
இணைத்தாற்போல் ஜோதி வடிவாகத் தோன்றிய ஈசன், லிங்கோத்பவ மூர்த்தி
என்றழைக்கப்பட்டார்.
விஷாபரணமூர்த்தி
******************
பாற்கடலை அசுரர்களும் தேவர்களும் கடைந்தபோது எழுந்த ஆலாலம் எனும் கொடிய
விஷத்தை விழுங்கி தன் கழுத்தில் ஆபரணமாக நிறுத்திய ஈசன் விஷாபரணமூர்த்தியாக
வணங்கப்படுகிறார்.
9) காமதகனமூர்த்தி
****************
குமார சம்பவம் நிகழ்வதற்காக ஈசனின் மேல் தன் மலர்க்கணைகளை எய்த மன்மதனை தன்
நெற்றிக்கண்ணால் எரித்து சாம்பலாக்கினார் ஈசன். அந்த ஈசனே காமதகனமூர்த்தி.
10) சிஷ்யபாவ மூர்த்தி
******************
ஓம் எனும் பிரணவத்திற்கு பொருள் சொன்ன சுப்ரமண்ய சுவாமியிடம் சிஷ்ய
பாவத்தில் அதன் பொருள் கேட்ட ஈசன், சிஷ்யபாவ மூர்த்தியாக போற்றப்படுகிறார்.
11) காலசம்ஹாரமூர்த்தி
********************
என்றும் 16 ஆக வாழும் வரம் பெற்ற மார்க்கண்டேயனுக்காக காலனை எட்டி உதைத்த
ஈசன் காலசம்ஹாரமூர்த்தி அல்லது ம்ருத்யுஞ்ஜய மூர்த்தி எனப் பெயர் கொண்டார்.
12) சரபேஸ்வரமூர்த்தி
******************
ஹிரண்யகசிபுவை அழித்த நரசிம்மமூர்த்தியின் ஆவேசத்தை அடக்க தன் இரு
இறக்கைகளாக ப்ரத்யங்கிரா, சூலினி தேவியருடன் தோன்றிய ஈசனின் திருவுருவம்
சரபேஸ்வரமூர்த்தியாக வணங்கப்படுகிறது.
13) பிட்சாடனர்
***********
தாருகா வன முனிவர்களின் ஆணவத்தை அடக்கவும் அவர்கள் பத்தினிகளின் மன
அடக்கமின்மையை உலகிற்குத் தெரியப்படுத்தவும் ஈசன் மேற்கொண்டது பிட்சாடனர்
திருக்கோலம்.
14) கஜசம்ஹாரமூர்த்தி
*******************
கஜாசுரன் எனும் அசுரனை அழித்து அவன் யானை வடிவ தோலில் நர்த்தனமாடிய ஈசனின்
திருவடிவம் கஜசம்ஹாரமூர்த்தி என போற்றப்படுகிறது. ஈசன் யானையின் தோல்
அணிந்ததோடு மட்டுமல்லாமல் ஆனந்த நடனமும் ஆடினார்.
15) ரிஷபாரூடர்
************
அன்னை பார்வதியுடனும் விநாயகர், முருகப்பெருமானுடனும் ஈசன் புன்முறுவல்
பூத்த வண்ணம் எருதில் ஏறி அருளும் திருவடிவம், ரிஷபாரூடர் எனப்படுகிறது.
16) திரிபுராந்தகர்
************
கடுந்தவம் செய்து நான்முகனிடமிருந்து பொன் கோட்டை பெற்ற தாரகாட்சன்,
வெள்ளிக் கோட்டை பெற்ற கமலாட்சன், இரும்பு கோட்டை பெற்ற வித்யுன்மாலி எனும்
மூன்று அசுரர்களையும் அவர்தம் கோட்டைகளையும் அழித்த ஈசன்
திரிபுராந்தகராகக் கொண்டாடப்படுகிறார்.
17) வீரபத்திரர்
**********
தன்னை மதிக்காமல் யாகம் செய்த தன் மாமனாரான தட்சப்பிரஜாபதியை அழித்த ஈசன்
வீரபத்திரர் எனும் தட்ச சம்ஹாரமூர்த்தியாக வணங்கப்படுகிறார்.
18) சக்ரதான மூர்த்தி
****************
திருமாலை சோதிக்க நினைத்த ஈசன், அவர் தன்னை அர்ச்சிக்கும் தாமரை மலர்களில்
ஒன்றை மறைத்து விடுகிறார். ஆனால் திருமாலோ, அந்த மலருக்கு பதிலாக, தம்
மலர்க் கண்ணையே பறித்து ஈசனுக்கு அர்ப்பணித்தார். அதனால் மகிழ்ந்த ஈசன்
அவருக்கு பத்மாக்ஷன் எனும் பட்டத்தையும் சக்கரத்தையும் அளித்தார்.
அத்திருவடிவம் சக்ரதான மூர்த்தியாய் போற்றப்படுகிறது.
19) லிங்கமூர்த்தம்
**************
சாதாரணமாக ஆலயங்களில் வழிபடப்படும் சிவமூர்த்தம் லிங்கமூர்த்தம் என வழிபடப்படுகிறது.
20) கிராதமூர்த்தி
*************
பாசுபதாஸ்திரத்தைப் பெற கடுந்தவம் செய்த அர்ஜுனனுக்கு வேடுவ வடிவில்
காட்சியளித்த ஈசனை பக்தர்கள் கிராதமூர்த்தி என்று வழிபடுகின்றனர்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum