HinduSamayam
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

HinduSamayam
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
HinduSamayam
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்
by vpoompalani March 24th 2016, 13:59

» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26

» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17

» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06

» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07

» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58

» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24

» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35

» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52

» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20

» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18

» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37

» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47

» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19

» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46

» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49

» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37

» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07

» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29

» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38

» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55

» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00

» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49

» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28

» திருத்தல யாத்திரை  ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51

» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33

» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46

» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28

» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13

» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29

» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15

» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10

» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29

» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54

» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38

» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42

» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32

» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01

» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20

» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00

தமிழர்களின் சிந்தனைகளம்
Related Posts Plugin for WordPress, Blogger...



நமச்சிவாயப் பதிகம் - சுந்தரர் தேவாரம் - திருமுறை 7.48

Go down

நமச்சிவாயப் பதிகம் - சுந்தரர் தேவாரம் - திருமுறை 7.48 Empty நமச்சிவாயப் பதிகம் - சுந்தரர் தேவாரம் - திருமுறை 7.48

Post by மாலதி May 15th 2013, 07:23

மற்றுப் பற்றெனக் கின்றி நின்திருப் பாத மேமனம் பாவித்தேன்
பெற்ற லும்பிறந் தேன்இ னிப்பிற வாத தன்மைவந் தெய்தினேன்
கற்ற வர்தொழு தேத்துஞ் சீர்க்கறை யூரிற் பாண்டிக் கொடுமுடி
நற்ற வாஉனை நான்ம றக்கினுஞ். சொல்லும்நா நமச்சி வாயவே.

பதம் பிரித்து:
மற்றுப் பற்று எனக்கு இன்றி நின் திருப்பாதமே மனம் பாவித்தேன்;
பெற்றலும் பிறந்தேன்; இனிப் பிறவாத தன்மை வந்து எய்தினேன்;
கற்றவர் தொழுது ஏத்தும் சீர்க் கறையூரில் பாண்டிக் கொடுமுடி
நற்றவா! உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.

மற்று - வேறு;
பற்று - பற்றுக்கோடு (support);
தஞ்சம் (refuge);
பாவித்தல் - எண்ணுதல்; தியானித்தல்;
கறையூர் என்பது தலத்தின் பெயர்; 'பாண்டிக் கொடிமுடி' என்பது கோயிலின் பெயர்.
நற்றவன் - நல்ல தவ வடிவினன்;

=======================================
7.48.2)
இட்ட னுன்னடி ஏத்து வார்இகழ்ந் திட்ட நாள்மறந் திட்டநாள்
கெட்ட நாள்இவை என்ற லாற்கரு தேன்கி ளர்புனற் காவிரி
வட்ட வாசிகை கொண்ட டிதொழு தேத்து பாண்டிக் கொடுமுடி
நட்ட வாஉனை நான்ம றக்கினுஞ் சொல்லும்நா நமச்சி வாயவே.

பதம் பிரித்து:
இட்டன் உன் அடி ஏத்துவார் இகழ்ந்திட்ட நாள், மறந்திட்ட நாள்,
கெட்ட நாள் இவை என்று அலால் கருதேன், கிளர் புனல் காவிரி
வட்ட வாசிகை கொண்டு அடி தொழுது ஏத்து பாண்டிக் கொடுமுடி
நட்டவா! உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.

இட்டனுன்னடி - இட்டன் உன் அடி / இட்டன் நுன் அடி;இட்டன் - இஷ்டன் - சிநேகிதன் (Friend);
விருப்பத்திற்கு இடம் ஆனவன் (Endeared person);
கிளர்தல் - மிகுதல்;
பொங்கி எழுதல்;
வாசிகை - மாலை (garland);
நட்டவன் - நண்பன்; (நள்ளுதல் - நட்டல் - நட்புக்கொள்ளுதல்; விரும்புதல்);

=======================================
7.48.3)
ஓவு நாள்உணர் வழியும்நாள் உயிர் போகும் நாள்உயர் பாடைமேல்
காவு நாள்இவை என்ற லாற்கரு தேன்கி ளர்புனற் காவிரிப்
பாவு தண்புனல் வந்தி ழிபரஞ் சோதி பாண்டிக் கொடுமுடி
நாவ லாஉனை நான்ம றக்கினுஞ் சொல்லும்நா நமச்சி வாயவே.

பதம் பிரித்து:
ஓவு[ம்] நாள், உணர்வு அழியும் நாள், உயிர் போகும் நாள், உயர் பாடைமேல்
காவு[ம்] நாள் இவை என்று அலால் கருதேன், கிளர் புனல் காவிரிப்
பாவு தண் புனல் வந்து இழி பரஞ்சோதி, பாண்டிக் கொடுமுடி
நாவலா! உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.

ஓவுதல் - நீங்குதல் (to remove, separate);
முடிதல் (to cease, terminate, become extinct);
காவுதல் - சுமத்தல் (to carry on the shoulder, etc.);
உயர்த்தல் - தூக்குதல்;
கிளர்தல் - மிகுதல்; பொங்கி எழுதல்;
தண் புனல் - குளிர்ந்த நீர்;
பாவுதல் - பரத்தல் (to extend);
வியாபித்தல் (to pervade); படர்தல்;
பரஞ்சோதி - மேலான ஒளி - கடவுள் (Supreme Being, as the Light Divine)
குறிப்பு: நாவலன் - இறைவன் வேதத்தை ஓதுவதால், நாவலன் என்று அருளினார்.

=======================================
7.48.4)
எல்லை யில்புகழ் எம்பிரான் எந்தை தம்பி ரான்என்பொன் மாமணி
கல்லை யுந்தி வளம்பொ ழிந்திழி காவி ரியதன் வாய்க்கரை
நல்ல வர்தொழு தேத்துஞ் சீர்க்கறை. யூரிற் பாண்டிக் கொடுமுடி
வல்ல வாஉனை நான்ம றக்கினுஞ் சொல்லும்நா நமச்சி வாயவே.

பதம் பிரித்து:
எல்லை இல் புகழ் எம்பிரான்; எந்தைதம் பிரான்; என் பொன், மா மணி;
கல்லை உந்தி வளம் பொழிந்து இழி காவிரி அதன் வாய்க்கரை,
நல்லவர் தொழுது ஏத்தும் சீர்க் கறையூரில் பாண்டிக் கொடுமுடி
வல்லவா! உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.

எல்லை - அளவு;
பிரான் - தலைவன் (Lord, king, chief, master); கடவுள்;
எம்பிரான் - எம் பிரான் - எம் ஆண்டவன் (Our Lord);
எந்தை - என் தந்தை;
கல் - இரத்தினக் கற்கள்;
வாய்க்கரை - கரைவாய் - கரையில்;வல்லவன் - ஆற்றல் உள்ளவன்;
=======================================
7.48.5)
அஞ்சி னார்க்கர ணாதி என்றடி யேனும் நான்மிக அஞ்சினேன்
அஞ்ச லென்றடித் தொண்ட னேற்கருள் நல்கி னாய்க்கழி கின்றதென்
பஞ்சின் மெல்லடிப் பாவை மார்குடைந் தாடு பாண்டிக் கொடுமுடி
நஞ்ச ணிகண்ட நான்ம றக்கினுஞ் சொல்லும்நா நமச்சி வாயவே.

பதம் பிரித்து:
அஞ்சினார்க்கு அரண் ஆதி என்று அடியேனும் நான் மிக அஞ்சினேன்;
அஞ்சல் என்று அடித் தொண்டனேற்கு அருள் நல்கினாய்க்கு அழிகின்றது என்?
பஞ்சின் மெல் அடிப் பாவைமார் குடைந்து ஆடு பாண்டிக் கொடுமுடி
நஞ்சு அணி கண்ட! நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.

அஞ்சுதல் - அச்சப்படுதல் - இங்கே அஞ்சி அடைதல்;
அரண் - பாதுகாவல்;
ஆதி - கடவுள் (அனைத்திற்கும் மூலமாக, முன்னே உள்ளதால்);
அழிதல் - கெடுதல்;
மனம் உருகுதல்; இரங்குதல்;
பஞ்சின் மெல் அடி - பஞ்சு போல் மென்மையான பாதம்;
பாவை - பெண்;
=======================================
7.48.6)
ஏடு வான்இளந் திங்கள் சூடினை என்பின் கொல்புலித் தோலின்மேல்
ஆடு பாம்ப தரைக்க சைத்த அழக னேஅந்தண் காவிரிப்
பாடு தண்புனல் வந்தி ழிபரஞ் சோதி பாண்டிக் கொடுமுடிச்
சேட னேஉனை நான்ம றக்கினுஞ் சொல்லும்நா நமச்சி வாயவே.

பதம் பிரித்து:
ஏடு வான் இளம் திங்கள் சூடினை; என் பின்! கொல் புலித் தோலின்மேல்
ஆடு பாம்பு அது அரைக்கு அசைத்த அழகனே! அம் தண் காவிரிப்
பாடு தண் புனல் வந்து இழி பரஞ்சோதி பாண்டிக் கொடுமுடிச்
சேடனே! உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.

ஏடு - மலர் இதழ் (petal); மலர்; குற்றம்;
சூடினை - சூடினாய்;
கொல்புலித்தோல் - வினைத்தொகை - கொன்ற புலியின் தோல்;
கொல்லும் புலியின் தோல்;
ஆடுதல் - அசைதல் (to move, wave, swing, shake, vibrate);
அரை - இடை;
அசைத்தல் - கட்டுதல்;
அம் - அழகிய;
தண் - குளிர்ந்த;
பரஞ்சோதி - பரம் சோதி - மேலான ஒளி - கடவுள்;
சேடன் - பெரியோன்; கடவுள்; (சேஷம் - மீதி; இதன் அடிப்படையில், "சேடன் -
எல்லாம் ஒடுங்கிய பின்னும் எஞ்சியிருப்பவன்" என்றும் சொல்லலாம்);

=======================================
7.48.7)
விரும்பி நின்மலர்ப் பாத மேநினைந் தேன்வி னைகளும் விண்டன
நெருங்கி வண்பொழில் சூழ்ந்தெ ழில்பெற நின்ற காவிரிக் கோட்டிடைக்
குரும்பை மென்முலைக் கோதை மார்குடைந் தாடு பாண்டிக் கொடுமுடி
விரும்ப னேஉனை நான்ம றக்கினுஞ் சொல்லும்நா நமச்சி வாயவே.

பதம் பிரித்து:
விரும்பி நின் மலர்ப் பாதமே நினைந்தேன்; வினைகளும் விண்டன;
நெருங்கி வண் பொழில் சூழ்ந்து எழில் பெற நின்ற காவிரிக் கோட்டிடைக்
குரும்பை மென் முலைக் கோதைமார் குடைந்து ஆடு பாண்டிக் கொடுமுடி
விரும்பனே! உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.

குறிப்பு: 'வினைகளும் விண்டனன்' என்றும் பாடம் ஓதுவர்.
விள்ளுதல் - நீங்குதல்;
நெருங்குதல் - செறிதல் (to be close together; to crowd);
வண்மை - வளப்பம் (fruitfulness, fertility, abundance); அழகு;கோடு - கரை (bank of a river, bund of a tank or well);
குரும்பை - தென்னை, பனை இவற்றின் இளங்காய் (very young coconut);
கோதை - பெண் ("மாலை போன்ற அழகிய பெண்);
விரும்பன் - விரும்பப்படுபவன்; விரும்புபவன்;

=======================================
7.48.Cool
செம்பொ னேர்சடை யாய்தி ரிபுரந் தீயெ ழச்சிலை கோலினாய்
வம்பு லாங்குழ லாளைப் பாக மமர்ந்து காவிரிக் கோட்டிடைக்
கொம்பின் மேற்குயில் கூவ மாமயில் ஆடு பாண்டிக் கொடுமுடி
நம்ப னேஉனை நான்ம றக்கினுஞ் சொல்லும்நா நமச்சி வாயவே.

பதம் பிரித்து:
செம்பொன் நேர் சடையாய்! திரிபுரம் தீ எழச் சிலை கோலினாய்!
வம்பு உலாம் குழலாளைப் பாகம் அமர்ந்து, காவிரிக் கோட்டிடைக்
கொம்பின் மேல் குயில் கூவ மா மயில் ஆடு பாண்டிக் கொடுமுடி
நம்பனே! உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.

செம்பொன் - சிறந்த பொன்;
நேர் - ஒத்த; போன்ற;
சிலை - வில;
கோலுதல் - வளைத்தல்;
வம்பு - வாசனை; மணம்;
உலாம் - உலாவும் (உலாவுதல் - சஞ்சரித்தல்;
வியாபித்தல்; சூழ்தல்);
அமர்தல் - விரும்புதல்;
கோடு - கரை (bank of a river, bund of a tank or well);
கொம்பு - கிளை;
நம்பன் - விரும்புபவன்; விரும்பத்தக்கவன்;

(சம்பந்தர் தேவாரம் - 2.27.3 - "என்பொன் என்மணி என்ன ஏத்துவார் நம்பன்
..." - என் பொன்னே என் மணியே என்று புகழ்ந்து போற்றுவாரை விரும்புபவன்);

=======================================
7.48.9)
சார ணன்தந்தை எம்பி ரான்எந்தை தம்பி ரான்எம்பொன் மாமணீயென்று
பேரெ ணாயிர கோடி தேவர் பிதற்றி நின்று பிரிகிலார்
நார ணன்பிர மன்தொ ழுங்கறை யூரிற் பாண்டிக் கொடுமுடிக்
கார ணாஉனை நான்ம றக்கினுஞ் சொல்லும்நா நமச்சி வாயவே.

பதம் பிரித்து:
"சாரணன்; தந்தை; எம்பிரான்; எந்தைதம் பிரான்; எம் பொன், மா மணீ" என்று
பேர் எணாயிர கோடி தேவர் பிதற்றி நின்று பிரிகிலார்;
நாரணன் பிரமன் தொழும் கறையூரில் பாண்டிக் கொடுமுடிக்
காரணா! உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.

சாரணன் - 1) எங்கும் இயங்குபவன்;
2) புகலிடம் ஆனவன்; ('அடைக்கலம்' எனப் பொருள் தரும் 'சரண்' என்பதன் அடியாக வந்த தத்திதப் பெயர்);
பிரான் - தலைவன் (lord, king, chief, master); கடவுள்;
எம்பிரான் - எம் பிரான் - எம் ஆண்டவன் (our lord);
எந்தை - எம் தந்தை;
எணாயிர கோடி - எண்ணாயிர கோடி - எண்ணற்ற; அளவில்லாத;கில்தல்/கிற்றல் - இயலுதல் (to be able);
நாரணன் - நாராயணன் - திருமால்;காரணன் - மூலமாக இருப்பவன்; முதல்வன்; (one who is the first cause, as the supreme being)

=======================================
7.48.10)
கோணி யபிறை சூடி யைக்கறை யூரிற் பாண்டிக் கொடுமுடி
பேணி யபெரு மானைப் பிஞ்ஞகப் பித்த னைப்பிறப் பில்லியைப்
பாணு லாவரி வண்ட றைகொன்றைத் தார னைப்படப் பாம்பரை
நாண னைத்தொண்டன் ஊரன் சொல்லிவை. சொல்லு வார்க்கில்லை துன்பமே.

பதம் பிரித்து:
கோணிய பிறை சூடியைக், கறையூரில் பாண்டிக் கொடுமுடி
பேணிய பெருமானைப், பிஞ்ஞகப் பித்தனைப், பிறப்பு இல்லியைப்,
பாண் உலா வரி வண்டு அறை கொன்றைத் தாரனைப், படப் பாம்பு அரை
நாணனைத் தொண்டன் ஊரன் சொல் இவை சொல்லுவார்க்கு இல்லை துன்பமே.

கோணுதல் - வளைதல்;
பேணுதல் - விரும்புதல்;
பிஞ்ஞகன் - தலைக்கோலம் உடையவன்; சம்ஹாரம் செய்பவன்;
பித்தன் - பேரருள் உடையவன்; இறைவனது செயல்கள், பித்தர்களின் செயலைப் போலப்
பிறரால் அறிவதற்கு அரியனவாய் இருப்பன என்பதாலும் அவன், 'பித்தன்'
எனப்படுவான் என்பார்கள்);
பாண் - பண் என்பது நீட்டல் விகாரம் பெற்று வந்தது.
உலா - உலாவுதல்;
அறைதல் - ஒலித்தல்;
கொன்றை - Indian Laburnum tree;
தார் - பூமாலை;
ஊரன் - நம்பி ஆரூரன் - சுந்தரர்;
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum