Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்by vpoompalani March 24th 2016, 13:59
» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26
» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17
» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06
» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07
» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58
» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24
» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35
» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52
» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18
» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47
» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19
» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46
» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49
» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37
» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07
» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29
» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38
» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55
» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00
» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49
» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28
» திருத்தல யாத்திரை ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51
» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33
» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46
» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28
» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13
» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29
» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15
» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10
» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29
» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54
» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38
» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42
» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32
» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01
» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20
» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00
திருநாவுக்கரசர் தேவாரம்·
Page 1 of 1
திருநாவுக்கரசர் தேவாரம்·
வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி|
மீளாமே ஆளென்னைக்கொண்டாய் போற்றி
ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி |
ஓவாத சத்தத் தொலியே போற்றி
ஆற்றாகி அங்கே அமர்ந்தாய் போற்றி |
ஆறங்கம் நால்வேதம் ஆனாய் போற்றி
காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி |
கயிலை மலையானே போற்றி போற்றி.
பிச்சாடல் பேயோ டுகந்தாய் போற்றி |
பிறவி அறுக்கும் பிரானே போற்றி
வைச்சாடல் நன்று மகிழ்ந்தாய் போற்றி |
மருவிஎன் சிந்தை புகுந்தாய் போற்றி
பொய்ச்சார் புரமூன்றும் எய்தாய் போற்றி |
போகாதென் சிந்தை புகுந்தாய் போற்றி
கச்சாக நாகம் அசைத்தாய் போற்றி |
கயிலை மலையானே போற்றி போற்றி.
மருவார் புரமூன்றும் எய்தாய் போற்றி |
மருவிஎன் சிந்தை புகுந்தாய் போற்றி
உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி |
உள்ளாவி வாங்கி ஒளித்தாய் போற்றி
திருவாகி நின்ற திறமே போற்றி |
தேசம் பரவப் படுவாய் போற்றி
கருவாகி ஓடும் முகிலே போற்றி |
கயிலை மலையானே போற்றி போற்றி.
வானத்தார் போற்றும் மருந்தே போற்றி |
வந்தென்றன் சிந்தை புகுந்தாய் போற்றி
ஊனத்தை நீக்கும் உடலே போற்றி |
ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி
தேனத்தை வார்த்த தெளிவே போற்றி |
தேவர்க்கும் தேவனாய் நின்றாய் போற்றி
கானத்தீ ஆடல் உகந்தாய் போற்றி |
கயிலை மலையானே போற்றி போற்றி.
ஊராகி நின்ற உலகே போற்றி |
ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி
பேராகி எங்கும் பரந்தாய் போற்றி |
பெயராதென் சிந்தை புகுந்தாய் போற்றி
நீராவி ஆன நிழலே போற்றி |
நேர்வார் ஒருவரையும் இல்லாய் போற்றி
காராகி நின்ற முகிலே போற்றி |
கயிலை மலையானே போற்றி போற்றி.
சில்லுருவாய்ச் சென்று திரண்டாய் போற்றி |
தேவர் அறியாத தேவே போற்றி
புல்லுயிர்க்கும் பூட்சி புணர்த்தாய் போற்றி |
போகாதென் சிந்தை புகுந்தாய் போற்றி
பல்லுயிராய்ப் பார்தோறும் நின்றாய் போற்றி |
பற்றி உலகை விடாதாய் போற்றி
கல்லுயிராய் நின்ற கனலே போற்றி |
கயிலை மலையானே போற்றி போற்றி.
பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி |
பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி
எண்ணும் எழுத்துஞ்சொல் லானாய் போற்றி |
என்சிந்தை நீங்கா இறைவா போற்றி
விண்ணும் நிலனுந்தீ யானாய் போற்றி |
மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி
கண்ணின் மணியாகி நின்றாய் போற்றி |
கயிலை மலையானே போற்றி போற்றி.
இமையா(து) உயிரா(து) இருந்தாய் போற்றி |
என்சிந்தை நீங்கா இறைவா போற்றி
உமைபாகம் ஆகத்(து) அணைத்தாய் போற்றி |
ஊழிஏ(ழு) ஆன ஒருவா போற்றி
அமையா வருநஞ்சம் ஆர்ந்தாய் போற்றி |
ஆதி புராணனாய் நின்றாய் போற்றி
கமையாகி நின்ற கனலே போற்றி |
கயிலை மலையானே போற்றி போற்றி.
மூவாய் பிறவாய் இறவாய் போற்றி |
முன்னமே தோன்றி முளைத்தாய் போற்றி
தேவாதி தேவர்தொழும் தேவே போற்றி |
சென்றேறி எங்கும் பரந்தாய் போற்றி
ஆவாய் அடியேனுக்(கு) எல்லாம் போற்றி |
அல்லல் நலிய அலந்தேன் போற்றி
காவாய் கனகத் திரளே போற்றி |
கயிலை மலையானே போற்றி போற்றி.
நெடிய விசும்பொடு கண்ணே போற்றி |
நீள அகலம் உடையாய் போற்றி
அடியும் முடியும் இகலிப் போற்றி |
அங்கொன்(று) அறியாமை நின்றாய் போற்றி
கொடியவன் கூற்றம் உதைத்தாய் போற்றி|
கோயிலா என்சிந்தை கொண்டாய் போற்றி
கடிய உருமொடு மின்னே போற்றி |
கயிலை மலையானே போற்றி போற்றி.
உண்ணா(து) உறங்கா(து) இருந்தாய் போற்றி |
ஓதாதே வேதம் உணர்ந்தாய் போற்றி
எண்ணா இலங்கைக்கோன் தன்னைப்போற்றி|
இறைவிரலால்வைத்துகந்த ஈசாபோற்றி
பண்ணார் இசையின்சொல் கேட்டாய் போற்றி |
பண்டேஎன் சிந்தை புகுந்தாய் போற்றி
கண்ணாய் உலகுக்கு நின்றாய் போற்றி |
கயிலை மலையானே போற்றி போற்றி.
Similar topics
» சுந்தரர் தேவாரம்
» தினம் ஒரு தேவாரம்
» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
» பன்னிரண்டு திருமுறைகள்-தேவாரம், திருவாசகம், திருமந்திரம்
» நமச்சிவாயப் பதிகம் - சுந்தரர் தேவாரம் - திருமுறை 7.48
» தினம் ஒரு தேவாரம்
» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
» பன்னிரண்டு திருமுறைகள்-தேவாரம், திருவாசகம், திருமந்திரம்
» நமச்சிவாயப் பதிகம் - சுந்தரர் தேவாரம் - திருமுறை 7.48
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum