Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்by vpoompalani March 24th 2016, 13:59
» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26
» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17
» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06
» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07
» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58
» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24
» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35
» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52
» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18
» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47
» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19
» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46
» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49
» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37
» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07
» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29
» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38
» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55
» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00
» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49
» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28
» திருத்தல யாத்திரை ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51
» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33
» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46
» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28
» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13
» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29
» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15
» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10
» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29
» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54
» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38
» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42
» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32
» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01
» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20
» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00
தம்பிரான் தோழராகிய சுந்தரர், பரவையார் திருமணம்
Page 1 of 1
தம்பிரான் தோழராகிய சுந்தரர், பரவையார் திருமணம்
திருக்கயிலாய மலையில் பார்வதிதேவியாருடைய சேடியர்களாய் ஆலாலசுந்தரரால்
காதலிக்கப்பெற்ற மகளிர் இருவருள் ஒருவராகிய கமலினி என்பார் திருவாரூரில்
உருத்திர கணிகையர் குலத்துட் பிறந்து பரவையார் என்னும் பெயரைப் பெற்றுத்
திருமகளே இவள் என்று சொல்லுமாறு பேரழகோடு வளர்ந்து மங்கைப் பருவம்
எய்தினார்.
பார்வதிதேவிக்குத் தொண்டு புரிந்த பண்டையுணர்வு செலுத்துதலால் பரவையார் நாடோறும் திருக்கோயிலை வழிபடும் கடமையுடையராய் விளங்கினார்.
பரவையார் தம் தோழியர்களுடன் வழக்கம் போல் திரு வாரூர்த்
திருக்கோயிலுக்குச் சென்று வரும் நாட்களில் ஒருநாள் தம்பிரான் தோழராகிய
சுந்தரர் சிவபிரானை வணங்கிக்கொண்டு அடியார்கள் சூழத் திரும்பிவருங்கால்
ஊழ்வினை கூட்டப் பரவை யாரைக் கண்டார். காதல் கொண்டார்.
பரவையாரும் பண்டை நல்விதி கூட்ட நம்பிகளைக் கண்டு காதல் கொண்டார். அச்சம்
நாண் மடம் பயிர்ப்பு ஆகிய பெண்மைக் குணங்கள் ஒருபுடை சாய்ந்தன. எனினும்
வன்றொண்டர்பால் ஈடுபட்ட மனத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு பரவையார்
பூங்கோயிலுக்குள் சென்று பெருமானை வழிபட்டார்.
இவ்வாறு, பரவையார்தம் பேரழகில் ஈடுபட்ட நம்பியாரூரர் அயலே நின்றவர்களை நோக்கி
"என் மனம் கவர்ந்த இவள்யார்" என்று கேட்டார்.
அருகில் இருந்தோர் "அவர்தாம் நங்கை பரவையார் வானோர்க்கும் தொடர்வரிய தூய்மையுடையார்" எனக் கூறினர்.
வன்றொண்டர் பரவைபால் எல்லையற்ற காதலுடையவராய்
`என்னை யாட் கொண்டருளிய இறைவனையடைந்து என் கருத்திற்கு இசைவு பெறுவேன்`
என்று எண்ணிய வண்ணம் இறைவன் திருமுன் சென்று பரவையாரைத் தமக்கு வாழ்க்கைத் துணைவியாகத் தரவேண்டிப் பணிந்தார்.
பரவையார் வன்மீகநாதரை வலம்செய்து அங்கிருந்து வேறொருபுறமாகப் புறப்பட்டுத் தம் மாளிகை சென்றார்.
"என் உயிர் போன்ற பரவை எங்கே சென்றாள்?" என்று தேடிச்சென்றார் சுந்தரர்.
ஆரூர்ப் பெருமான் பரவையை எனக்குத்தந்து என் ஆவியை நல்குவர் என்னும்
உறுதிடையராய் வெளிவந்து தேவாசிரிய மண்டபத்தின் ஒருபுடை அமர்ந்திருந்தார்.
மாலை நேரம் வந்தது.
பரவையாரும் தம்பிரான் தோழர்பால் தம்மனம்
ஈடுபட்டதை எண்ணியவாறே தம்மாளிகையை அடைந்து மலர் அமளியிலமர்ந்து
அருகிலிருந்த பாங்கியை நோக்கி
"நாம் பூங்கோயில் சென்ற பொழுது நம் எதிரே வந்தவர் யார் என்றனர்".
தோழியர் "அவர் நம்பியாரூரர், தம்பிரான்தோழர், சிவபிரானால் வலிய ஆட்கொள்ளப் பெற்றவர்" எனக்கூறினர்.
அதுகேட்ட பரவையார் "எம்பிரான் தமர்" என்றுரைப் பதைத் கேட்டு அவர்மேல் பெருங்காதல் கொண்டார்.
அமளியில் வீழ்ந்து வெதும்பிப் பலவாறு புலம்பி வருந்தித் தம் வேதனையை நீக்கி யருளுமாறு இறைவனை வேண்டினார்.
சிவபெருமான் அன்றிரவே அடியார்கள் கனவில் தோன்றிப் பரவையாரைச்
சுந்தரர்க்குத் திருமணம் செய்து கொடுக்குமாறு பணித்தருளினார். சுந்தரர்
கனவிலும் தோன்றி "நங்கை பரவையை உனக்கு வாழ்க்கைத் துணைவியாகத் தந்தோம்"
என்று கூறினர்.
பொழுது புலர்ந்தது, அடியார்கள் திரண்டு வந்து வன்றொண்டர்க்கும் பரவையார்க்கும் விதிப்படித் திருமணம் செய்து வைத்து மகிழ்ந்தனர்.
சுந்தரர் பரவையாருடன் கூடி சிவபிரானருட் கடலில் திளைக்கும் சிவயோகச்
செல்வராய்ச் செந்தமிழ்ப் பதிகங்கள் பாடிச் சிவபிரானைப் போற்றி
மகிழ்ந்திருந்தார்.

Similar topics
» தம்பிரான் தோழராகிய சுந்தரர், பரவையார் திருமணம்
» திருமணம்..!,மணமுறைகள் :
» சிவபெருமானை நண்பராகப் பெற்றவர் சுந்தரர்.
» திருமணம்..!
» சிவபெருமானை நண்பராகப் பெற்றவர் சுந்தரர். மந்திரங்கள்
» திருமணம்..!,மணமுறைகள் :
» சிவபெருமானை நண்பராகப் பெற்றவர் சுந்தரர்.
» திருமணம்..!
» சிவபெருமானை நண்பராகப் பெற்றவர் சுந்தரர். மந்திரங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum