Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்by vpoompalani March 24th 2016, 13:59
» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26
» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17
» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06
» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07
» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58
» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24
» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35
» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52
» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18
» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47
» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19
» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46
» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49
» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37
» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07
» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29
» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38
» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55
» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00
» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49
» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28
» திருத்தல யாத்திரை ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51
» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33
» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46
» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28
» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13
» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29
» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15
» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10
» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29
» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54
» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38
» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42
» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32
» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01
» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20
» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00
சிவபெருமானை நண்பராகப் பெற்றவர் சுந்தரர்.
Page 1 of 1
சிவபெருமானை நண்பராகப் பெற்றவர் சுந்தரர்.
சிவபெருமானை நண்பராகப் பெற்றவர் சுந்தரர்.
************************
இவருக்கு தம்பிரான் தோழர் என்ற பெயரும் உண்டு.
தம்பிரான் என்றால் சிவன்.
ஒருநாள் சுந்தரர்ருடைய கனவில் ஈசன்தோன்றி, நான் காளையார் கோயில் (சிவகங்கை மாவட்டம்) தங்கியுள்ளேன் என்று கூறி மறைந்தார்.
சுந்தரர் தன்னுடன் இருந்த சேரமான்பெருமாள் நாயனாரையும் அழைத்துக்கொண்டு
கானப்பேர் என்னும் காளையார் கோயில் புறப்பட்டார். கானப்பேர் உறை காளையே!
என்று சிவனைப் போற்றிப் பாடினார்.
சண்டாசுரனை வதம் செய்த காளி,
காளையப்பரை வணங்கி, அழகான வடிவம் பெற்று, சவுந்தரநாயகி என்ற பெயர் பெற்று
சிவனை மணம் புரிந்தாள். காளியை மணந்ததால் இவருக்கு காளீசர் என்ற பெயரும்
உண்டு.
இதில் மருதுபாண்டிய மன்னர்கள் கட்டிய கோபுரம் அமைந்துள்ளது.
************************
பதிகம்: [7:84]
தொண்டர் அடித்தொழலும், சோதி இளம்பிறையும்,
சூது அன மென்முலையாள் பாகமும், ஆகி வரும்
புண்டரிகப் பரிசு ஆம் மேனியும்; வானவர்கள்
பூசல்இடக் கடல்நஞ்சு உண்ட கருத்து அமரும்,
கொண்டல் எனத் திகழும், கண்டமும்; எண்தோளும்;
கோல நறுஞ்சடைமேல் வண்ணமும்; கண்குளிரக்
கண்டு, தொழப்பெறுவது என்றுகொலோ, அடியேன்?
கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே.
கூதல்இடும் சடையும், கோள் அரவும், விரவும்
கொக்குஇறகும், குளிர் மா மத்தமும், ஒத்து உன தாள்
ஓதல் உணர்ந்து, அடியார் உன் பெருமைக்கு நினைந்து
உள் உருகா, விரசும் ஓசையைப் பாடலும், நீ
ஆதல் உணர்ந்து அவரோடு அன்பு பெருத்து அடியேன்
அங்கையில் மாமலர் கொண்டு,என்கணது அல்லல் கெட,
காதல் உற, தொழுவது என்றுகொலோ, அடியேன்?
கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே.
நான் உடை மாடு எனவே நன்மை தரும் பரனை,
நல் பதம் என்று உணர்வார் சொல்பதம் ஆர் சிவனை,
தேன்இடை இன்னமுதை, பற்றுஅதனில்-தெளிவை,
தேவர்கள்நாயகனை, பூ உயர் சென்னியனை,
வான்இடை மா மதியை, மாசுஅறு சோதியனை,
மாருதமும்(ம்) அனலும் மண்தலமும்(ம்) ஆய
கான்இடை மாநடன் என்று எய்துவது என்றுகொலோ?
கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே.
செற்றவர் முப்புரம் அன்று அட்ட சிலைத் தொழில் ஆர்
சேவகம்; முன் நினைவார் பாவகமும்; நெறியும்;
குற்றம் இல் தன் அடியார் கூறும் இசைப் பரிசும்;
கோசிகமும்,அரையில்,கோவணமும் அதளும்;
மல்-திகழ் திண்புயமும்; மார்புஇடை, நீறு துதை,
மாமலைமங்கைஉமை சேர் சுவடும்; புகழக்
கற்றனவும் பரவிக் கைதொழல் என்றுகொலோ?
கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே.
கொல்லை விடைக் குழகும், கோல நறுஞ்சடையில்
கொத்து அலரும்(ம்) இதழித்தொத்தும், அதன் அருகே
முல்லை படைத்த நகை மெல்லியலாள் ஒருபால்
மோகம் மிகுத்து இலங்கும் கூறு செய் எப்பரிசும்,
தில்லைநகர்ப் பொது உற்று ஆடிய சீர் நடமும்,
திண்மழுவும், கைமிசைக் கூர் எரியும்(ம்) அடியார்
கல்லவடப் பரிசும், காணுவது என்றுகொலோ?
கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே.
பண்ணு தலைப் பயன் ஆர் பாடலும், நீடுதலும்,
பங்கயமாது அனையார்,---பத்தியும்; முத்தி அளித்து
எண்ணு தலைப்பெருமான் என்று எழுவார்அவர்தம்
ஏசறவும்(ம்); இறைஆம் எந்தையையும் விரவி
நண்ணுதலைப் படும்ஆறு எங்ஙனம்? என்று அயலே
நைகிற என்னை மதித்து உய்யும் வணம் அருளும்
கண்ணுதலை, கனியை, காண்பதும்; என்றுகொலோ?
கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே.
மாவை உரித்து அதள் கொண்டு அங்கம் அணிந்தவனை,
வஞ்சர் மனத்து இறையும் நெஞ்சு அணுகாதவனை,
மூவர்உருத் தனது ஆம் மூலமுதல்கருவை,
மூசிடும் மால்விடையின் பாகனை, ஆகம் உறப்
பாவகம் இன்றி மெய்யே பற்றுமவர்க்கு அமுதை,
பால் நறுநெய் தயிர் ஐந்துஆடு பரம்பரனை,
காவல் எனக்கு இறை என்று, எய்துவது என்றுகொலோ?
கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே.
தொண்டர்தமக்கு எளிய சோதியை, வேதியனை,
தூய மறைப்பொருள்ஆம் நீதியை, வார்கடல்நஞ்சு
உண்டு அதனுக்கு இறவாது என்றும் இருந்தவனை,
ஊழி படைத்தவனோடு ஒள் அரியும்(ம்) உணரா
அண்டனை, அண்டர்தமக்கு ஆகமநூல் மொழியும்
ஆதியை, மேதகு சீர் ஓதியை, வானவர்தம்
கண்டனை,அன்பொடு சென்று எய்துவது என்றுகொலோ?
கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே.
நாதனை, நாதம் மிகுத்த ஓசைஅதுஆனவனை,
ஞானவிளக்குஒளிஆம் ஊன்உயிரை, பயிரை,
மாதனை, மேதகு தன் பத்தர் மனத்து இறையும்
பற்று விடாதவனை, குற்றம் இல் கொள்கையனை,
தூதனை, என்தனை ஆள் தோழனை, நாயகனை,
தாழ் மகரக்குழையும் தோடும் அணிந்த திருக்-
காதனை,---நாய்அடியேன் எய்துவது என்றுகொலோ?
கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே.
கன்னலை, இன்னமுதை, கார்வயல் சூழ் கானப்
பேர் உறை காளையை, ஒண் சீர் உறை தண்தமிழால்
உன்னி மனத்து அயரா, உள் உருகி, பரவும்
ஒண் பொழில் நாவலர்கோன் ஆகிய ஆரூரன்
பன்னும் இசைக்கிளவி பத்துஇவை பாட வல்லார்,
பத்தர் குணத்தினராய், எத்திசையும் புகழ,
மன்னி இருப்பவர்கள், வானின்; இழிந்திடினும்,
மண்டல நாயகராய் வாழ்வது நிச்சயமே!
_____________________________________________
பதிகம்: [3:26]
************************
பிடிஎலாம் பின் செல, பெருங்கைமா மலர் தழீஇ,
விடியலே தடம் மூழ்கி, விதியினால் வழிபடும்
கடி உலாம் பூம்பொழில் கானப்பேர் அண்ணல்! நின்
அடிஅலால் அடை சரண் உடையரோ, அடியரே?
நுண்இடைப் பேர்அல்குல் நூபுர மெல்அடிப்
பெண்ணின்நல்லாளை ஓர்பாகமாப் பேணினான்,
கண் உடை நெற்றியான், கருதிய கானப்பேர்
விண் இடை வேட்கையார் விரும்புதல் கருமமே.
வாவிவாய்த் தங்கிய நுண்சிறை வண்டுஇனம்
காவிவாய்ப் பண்செயும் கானப்பேர் அண்ணலை,
நாவிவாய்ச் சாந்துளும் பூவுளும் ஞானநீர்
தூவி, வாய்ப் பெய்து நின்று ஆட்டுவார், தொண்டரே.
நிறை உடை நெஞ்சுளும், நீருளும், பூவுளும்,
பறை உடை முழவுளும், பலியுளும், பாட்டுளும்,
கறை உடை மிடற்று அண்ணல் கருதிய கானப்பேர்
குறை உடையவர்க்கு அலால், களைகிலார், குற்றமே.
ஏனப் பூண் மார்பின்மேல் என்பு பூண்டு, ஈறு இலா
ஞானப் பேர் ஆயிரம்பேரினான், நண்ணிய
கானப்பேர்ஊர் தொழும் காதலார் தீது இலர்;
வானப் பேர் ஊர் புகும் வண்ணமும் வல்லரே.
பள்ளமே படர்சடைப் பால் படப் பாய்ந்த நீர்-
வெள்ளமே தாங்கினான், வெண்மதி சூடினான்---
கள்ளமே செய்கிலார் கருதிய---கானப்பேர்
உள்ளமே கோயிலா உள்கும், என் உள்ளமே.
மான மா மடப்பிடி வன் கையால் அலகுஇடக்
கானம் ஆர் கடகரி வழிபடும் கானப்பேர்,
ஊனம் ஆம் உடம்பினில் உறு பிணி கெட எணின்,
ஞானம் ஆம் மலர்கொடு நணுகுதல் நன்மையே.
வாளினான், வேலினான், மால்வரை எடுத்த திண்-
தோளினான், நெடு முடி தொலையவே ஊன்றிய
தாளினான், கானப்பேர் தலையினால் வணங்குவார்
நாளும் நாள் உயர்வது ஓர் நன்மையைப் பெறுவரே.
சிலையினால் முப்புரம் தீ எழச் செற்றவன்,
நிலை இலா இருவரை நிலைமை கண்டு ஓங்கினான்,
கலையின் ஆர் புறவில்---தேன் கமழ்தரு கானப்பேர்
தலையினால் வணங்குவார் தவம் உடையார்களே.
உறித்தலைச் சுரையொடு குண்டிகை பிடித்து, உச்சி
பறித்தலும் போர்த்தலும் பயன் இலை, பாவிகாள்!
மறித் தலை மடப்பிடி வளர் இளங் கொழுங் கொடி
கறித்து, எழு கானப்பேர் கைதொழல் கருமமே.
காட்டுஅகத்து ஆடலான் கருதிய கானப்பேர்,
கோட்டகத்து இள வரால் குதிகொளும் காழியான்---
நாட்டுஅகத்து ஓங்கு சீர் ஞானசம்பந்தன---
பாட்டுஅகத்து இவை வலார்க்கு இல்லைஆம், பாவமே.

logu- Posts : 69
Join date : 01/08/2011
Similar topics
» சிவபெருமானை நண்பராகப் பெற்றவர் சுந்தரர். மந்திரங்கள்
» பிரதோஷ காலத்தில் சிவபெருமானை வழிபடுவது எப்படி?
» சுந்தரர் தேவாரம்
» தம்பிரான் தோழராகிய சுந்தரர், பரவையார் திருமணம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum