Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்by vpoompalani March 24th 2016, 13:59
» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26
» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17
» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06
» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07
» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58
» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24
» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35
» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52
» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18
» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47
» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19
» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46
» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49
» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37
» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07
» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29
» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38
» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55
» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00
» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49
» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28
» திருத்தல யாத்திரை ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51
» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33
» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46
» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28
» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13
» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29
» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15
» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10
» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29
» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54
» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38
» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42
» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32
» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01
» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20
» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00
சனிபகவான் தரும் யோக வாழ்க்கை !
Page 1 of 1
சனிபகவான் தரும் யோக வாழ்க்கை !
[You must be registered and logged in to see this link.]
ஒருவருடைய ஜாதகத்தில் இரண்டு
பாவகங்களுக்கு , அதிபதியாகும் தன்மை சனி ,குரு,செவ்வாய்,சுக்கிரன்,புதன்
ஆகிய கிரகங்களுக்கு உண்டு . இருப்பினும் ஜாதகருக்கு அதிக நன்மையான பலன்களை
தருவதில் முன்னுரிமை சனிபகவானுக்கே உண்டு , கலபுருஷ தத்துவத்திற்கு
சனிபகவான் ஜீவன ஸ்தானம் எனும் பத்தாம் வீட்டிற்கும் , அதிர்ஷ்டம் ,லாபம்
எனும் பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியாகிறார் , பொதுவாகவே இவருடைய
கருணையில்லாமல் , ஒரு ஜாதகருக்கு நல்ல தொழிலும் , அதிர்ஷ்டமும் கிடைத்து
விட வாய்ப்பு என்பது இல்லை அது சுய ஜாதகத்தில் ஜாதகருக்கு எந்த லக்கினம்
என்றாலும் சரி , மேலும் இந்த இரண்டு பாவகங்களில் , சனிபகவான் ஏதாவது ஒரு
பாவகத்திர்க்காவது இயற்கையாகவே நிச்சயம் நன்மையை தருவர் அது எந்த
லக்கினம் என்றாலும் சரி, மகரம் , கும்பம் என்ற ராசி அமைப்பில் இருந்து
ஒரு ஜாதகருக்கு தரும் நன்மைகளை பற்றி இனி காண்போம் .
மகர ராசி அமைப்பில் இருந்து சனிபகவான் தரும் யோகங்கள் :
மகர ராசி கால புருஷ
தத்துவத்திற்கு சர நில ராசியாகவும் , பத்தாம் வீடாக அமைகிறது . ஒருவரது
சுய ஜாதாகத்தில் இந்த மகர ராசி லக்கினத்திற்கு எந்த பாவகமாக வந்தாலும் சரி
, அந்த பாவகத்திர்க்கு சனிபகவான் நன்மை தரும் அமைப்பை பெற்றால் ,
ஜாதகருக்கு அடிப்படையில் நல்ல திடகாத்திரமான உடல் அமைப்பை கொடுத்துவிடும் ,
வாழ்க்கையில் ஜாதகருக்கு எந்தவிதமான உடல் நிலை குறைவும் நிச்சயம்
ஏற்ப்படாது , அப்படி ஏற்ப்பட்டாலும் ஜாதகர் விரைவில் நலம் பெறுவார் ,
மேலும் தொழில் அமைப்பில் மண்ணில் இருந்து கிடைக்கும் கனிம வளங்களை அடிப்படை
மூலதனமாக கொண்டு விரைவில் , அந்த தொழில் கொடிகட்டி பறக்கும் தொழில்
அதிபர்கள் அனைவரின் ஜாதகத்திலும் இந்த மகர ராசி மிகவும் சிறப்பாக
அமைந்திருக்கும் .
குறிப்பாக அவர் மேஷ லக்கினம் கடக
லக்கினம் , துலா லக்கினம், தனுசு லக்கினம் ,மீன லக்கினம் போன்ற அமைப்பை
நிச்சயம் பெற்றிருப்பார் , மேலும் கட்டுமான தொழில்களில் , கனரக வாகனம் ,
சரக்கு வாகனம் ,பண்ணை தொழில் , வெளிநாடுகளில் இருந்து வரும் பொருட்களை
மொத்த வியாபாரம் செய்வோர், இரும்பு , சிமென்ட், தொழில்களில் சிறந்து
விளங்கும் நபர்கள் , மண்ணை ஆதராமாக கொண்டு தொழில் செய்யும் நபர்களில்
சிறந்து விளங்கும் தன்மை பெற்றவர்களின் ஜாதக அமைப்பில் இந்த மகர ராசி
மிகவும் சிறப்பாக அமைந்திருக்கும். ஆக ஒருவருடைய ஜாதகத்தில் சனிபகவான் மகர
ராசி அமைப்பில் நன்மையை செய்கிறார் என்றால் , அந்த ஜாதகருக்கு தொழில்
அமைப்பில் இருந்து விரைவான முன்னேற்றமும் , தான் செய்யும் தொழில் சிறந்து
விளங்கும் யோகம் நிச்சயம் உண்டு இதை தடுக்க எவராலும் முடியாது .
கும்ப ராசி அமைப்பில் இருந்து சனிபகவான் தரும் யோகங்கள் :
கும்ப ராசி கால புருஷ
தத்துவத்திற்கு ஸ்திர காற்று ராசியாகவும் , பதினொன்றாம் வீடாக
அமைகிறது . ஒருவரது சுய ஜாதாகத்தில் இந்த கும்ப ராசி லக்கினத்திற்கு எந்த
பாவகமாக வந்தாலும் சரி , அந்த பாவகத்திர்க்கு சனிபகவான் நன்மை தரும்
அமைப்பை பெற்றால் , ஜாதகருக்கு அளவிட முடியாத புத்திசாலி தனத்தையும் ,
சிறந்த நிர்வாக திறமையையும் வாரி வழங்கி விடுகிறார் , மேலும் இந்த அமைப்பை
பெற்ற ஜாதகர்கள் அனைவரும் அரசு துறையில் மிக உயர்ந்த பல பதவிகளில் அமர்ந்து
இருக்கின்றனர் , மக்களுக்கு சிறப்பான வழிகாட்டுதல்களையும் , அவர்களின்
நல்வாழ்விற்க்கான அறிய திட்டங்களை வகுக்கும் பொறுப்புகளில் சிறப்பாக செயல்
படுகின்றனர் , அரசு இயந்திரம் சிறப்பாக செயல் பட இவர்களின் அறிவாற்றல்
அதிகம் பயன்படுகிறது , சமுதாய முன்னேற்றத்திற்கு ஏதாவது ஒரு வகையில்
இவர்களின் உதவி நிச்சயம் தேவைபடுகிறது . தனது அறிவை மூலதனமாக கொண்டு
வாழ்க்கையில் முன்னேற்றம் பெரும் அனைவரின் ஜாதகத்திலும் இந்த கும்ப ராசி
மிகவும் சிறப்பாக அமைந்திருக்கும் .
குறிப்பாக அவர் ரிஷப லக்கினம் ,
மிதுன கன்னி லக்கினம் ,சிம்ம லக்கினம் ,விருச்சிக லக்கினம் போன்ற அமைப்பை
நிச்சயம் பெற்றிருப்பார் , தனியார் துறையில் உயர் பதவிகள் வகிப்பதிலும்,
சட்டம் மற்றும் மருத்துவ துறைகளிலும் ,கலை துறையிலும் , ஆடிட்டர், வங்கி
மேலாண்மை ,புதிய கண்டு பிடிப்புகள் , மக்கள் ஆதரவு தொழில்களிலும், ஏற்றுமதி
இறக்குமதி தொழில்களில் சிறந்து விளங்கும் நபர்களும் , இந்த கும்பராசி
அமைப்பில் சனிபகவானால் யோக பலன்களை அனுபவிக்கும் தன்மை பெற்றவர்களே ,
அதிலும் தகவல் தொழில் நுட்பம் , மின்னணு சாதனங்கள் மூலம் அதிக லாபம்
பெறுவோர்கள் என சிறப்பான வாழ்க்கையை, இந்த கும்பராசி, சனிபகவானால்
பெறுவோர்கள் அதிகம் .
ஆக மகர ராசி அமைப்பில் சனிபகவான் சொத்து , சுகம் , மனம், உடல் என்ற அமைப்பில் யோக பலன்களையும் , கும்ப ராசி அமைப்பில் சனிபகவான் அறிவு , புத்திசாலி தனம் , அதிர்ஷ்டம் , மக்கள் செல்வாக்கு என்ற அமைப்பில் யோக பலன்களையும் ,
தவறாமல் தந்து விடுகிறார் . எந்த ஒரு லக்கினம் என்றாலும் சனிபகவான்
அதிபதியாக வரும் இந்த மகரம் , கும்பம் ராசி அமைப்பில் இருந்து ஒரு ராசி ,
அமைப்பிற்கு நிச்சயம் சனிபகவான் நன்மையான பலன்களை தந்து விடுகிறார் , எனவே
எந்த ஒரு ஜாதகரும் சனிபகவானால் 100 சதவிகிதம் பாதிக்க படுவதில்லை என்பது
முற்றிலும் உண்மை.
Similar topics
» சனிபகவான் இருக்கும் சிறப்பான இடங்கள்...
» விரதங்களின் விபரமும் சனிபகவான் பற்றிய தகவலும்!
» வாழ்க்கை தத்துவம்
» கிரஹங்கள் தரும் துன்பங்களிலிருந்து விடுபட
» சிந்தித்து செயற்பட்டால் வாழ்க்கை பிரகாசிக்கும்
» விரதங்களின் விபரமும் சனிபகவான் பற்றிய தகவலும்!
» வாழ்க்கை தத்துவம்
» கிரஹங்கள் தரும் துன்பங்களிலிருந்து விடுபட
» சிந்தித்து செயற்பட்டால் வாழ்க்கை பிரகாசிக்கும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum