HinduSamayam
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

HinduSamayam
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
HinduSamayam
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்
by vpoompalani March 24th 2016, 13:59

» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26

» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17

» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06

» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07

» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58

» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24

» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35

» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52

» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20

» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18

» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37

» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47

» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19

» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46

» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49

» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37

» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07

» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29

» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38

» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55

» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00

» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49

» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28

» திருத்தல யாத்திரை  ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51

» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33

» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46

» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28

» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13

» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29

» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15

» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10

» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29

» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54

» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38

» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42

» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32

» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01

» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20

» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00

தமிழர்களின் சிந்தனைகளம்
Related Posts Plugin for WordPress, Blogger...



விரதங்களின் விபரமும் சனிபகவான் பற்றிய தகவலும்!

Go down

விரதங்களின் விபரமும் சனிபகவான் பற்றிய தகவலும்! Empty விரதங்களின் விபரமும் சனிபகவான் பற்றிய தகவலும்!

Post by மாலதி July 30th 2012, 16:38

விரதங்களின் விபரமும் சனிபகவான் பற்றிய தகவலும்! Shanee_saturn-1
விரதம், நோன்பு, கிழமை
என்பன ஒரே பொருளுடையன. எல்லாச் சமயங்களிலும் விரதங்கள்
கைக்கொள்ளப்படுகின்றன. வெறெந்தச் சமயங்களையும் விட சைவ சமயத்தில் அனேகமான
விரத அனுஸ்டானங்கள் இருக்கின்றன.

இந்த விரதங்களையெல்லாம் ஒருவர் கட்டாயம் கைக்கொள்ள வேண்டுமென்ற
நியதியும் கிடையாது. அவரவர் பக்தி, பலம், வசதி, விருப்பம், பொருள், இடம்,
காலம், பருவம் முதலியன நோக்கி மேற்கொள்ள வேண்டும்.

ரதங்களை எவரொருவர் நோர்க்கின்றார்களோ அத்தகையவர்கள் திடசித்தமின்றி
பெயருக்கோ, புகழுக்கோ, மற்றவர்களின் கட்டாயத்திற்காகவோ,
மேற்கொள்ளக்கூடாது. அப்படிச் செய்வதால் தேக இழைப்பு மனச் சோர்வு, கடவுள்
பேரில் வீண் பழி, நோய் முதலிய தீமைகளைச் சம்பாதிப்பதற்கு ஏதுவாகும். இதனை
“இயலாதன செய்யேல்” என்ற மூதுரை மூலம் அறிந்து கொள்ளலாம்.

ரதமாவது மனம் பொறிகளின் வழிப்போகாது நிற்றற் பொருட்டு உணவை
விடுத்தேனும், அல்லது சுருக்கியேனும் மனம், வாக்கு, காயம் என்னும்
மூன்றினாலும் கடவுளை விதிப்படி பக்தியன்போடு மன அமைதியுடன் வழிபடுதலாம்.
நோக்கம் இதிலே தெளிபாகத் தெரிகிறது. “நோன்பென்பதுவே கொன்று தின்னாமை”
என்பது நீதி வாக்கியம்.

சைவ சமயத்தின் முதல் விரதம் இதுதான் இவ்விரதம் ஒன்றையே
கடைப்பிடித்தாலும் போதும். “கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா
உயிரும் தொழும்” இது பொய்யாமொழிப் புலவரின் மெய்ஞானக் கருத்து.

யாதாயினும் பயன் கருதி விரதம் கடைப்பிடிப்பதைக் காமியம் என்றும், பயன்
கருதாது நேர்ப்பதை நிஷ்காமியம் என்றும் கூறப்படும். எவர் எப்படி
கருத்துடன் அனுட்டித்தாலும் இறைவனானவன் சுமந்தார்களுக்கு
சுமைக்குத்தக்கபடி தக்க கூலி கொடுக்காமலே விடமாட்டான் இதுவே உண்மை.

விரதங்களை அனுஷ்டிப்பதால் தேகசுத்தி, நோயின்மை, தீர்க்காயுள்,
மனத்தூய்மை பாவ நீக்கம், நினைத்த காரிய சித்தி, மன அமைதி, மகிழ்ச்சி, இறை
பக்தி ஆகிய எண்ணிறைந்த நன்மைகள் உண்டாகுமென சைவ சமய சிந்தாமணி மூலம் அறிய
முடிகிறது.

இனி விரத வகைகளில் பல விதமான விரதங்கள் இருப்பதை சைவம் கூறுகின்றது.
அந்தவகையில் சிவ, சக்தி, விநாயகர், முருகன், வீரபத்திரர், வைரவர், விஷ்ணு,
பிதுரர் விரதங்களுடன் நவக்கிரகங்களை குறிப்பிடும் விரதங்களும் சிறப்பாக
சொல்லப்படுகின்றது.

தற்போது புரட்டாதி மாதம் இந்த மாத்தில் புரட்டாதி சனிக்கிரக விரதமும்,
நவராத்திரி விரதமும் விசேடமாகக் குறிப்பிடத்தக்கவை. விகிர்தி வருடத்தில்
தற்போது இடம்பெறும் சனிக்கிழமை விரதம் ஐந்து சனி தினத்தில் இடம்
பெறவுள்ளது.

அவற்றுள் முதலாம் வார சனிக்கிழமை விரதம் 18-09 இல் முடிவற்றதை சைவ
மக்கள் அறிந்திருப்பார்கள். இன்னும் நான்கு சனி விரத நாட்கள் இருக்கின்ற
காலத்தில் சனிக்கிரக மகிமை பற்றியும் விரதம் பற்றியும் சிறிது ஆராய்வது
பொருத்தமென்று நினைக்கின்றேன். முதலில் சனி பகவானைத் தெரிந்து கொள்வோம்.

சனி பகவான் எனவும், சனீஸ்வரன் எனவும் சகலரும் போற்றும் “சனி நவக்கிரக
பீடத்தில் அமர்ந்து எல்லோருக்கும் அச்சம் அளிப்பவர் ஆவார். எனினும் அவர்
அருளின்றி வாழ்வில் இன்பங்களை அனுபவிக்க முடியாது என்பது பிரத்தியட்சம்.
சனி கொடுத்தால் எவர் தடுப்பார்? அத்தகைய விசேட பவர் படைத்தவர்தான்
சனிபகவான்.

நமது பூர்வ புண்ணிய பயனாய் நம்மை தகிக்கும் நீதி தேவர் சனீஸ்வரன்,
நேர்மையின் வடிவம் அவர். வறுமையிலும் நேர்மை ஏழ்மையிலும் பக்தி வாழ்வு
தாழ்வுற்ற போதிலும் மனநிலை சாய்ந்துவிடாத போக்கு ஆகியவை வாய்க்கப்பெற்று
அவரைச் சரணடைந்து பக்தி செய்பவர்களுக்கு அவரொரு கற்பக விருட்சம். காலச்
சக்கரத்தை பிளப்பதில் கதிரவனுக்குச் சமமானவர். மகா வல்லமை மிக்கவர்
சனீஸ்வரர்.

நவக்கிரகங்களில் தலைமைக் கிரகமான சூரிய பகவான் “த்ரிஷ்டா” என்பவரின்
மகளான சுவர்க்சலா தேவியைத் திருமணம் செய்து கொண்டார். வைவஸ்தமனு,
எமதர்மன், என்ற இரண்டு மகன்களும், யமுனை என்ற மகளும் உண்டு. யமனும்,
யமுனையும் இரட்டைப் பிறவிகளாவர்.

சூரியனின் இன்ப வாழ்வில் திளைத்த சுவர்ச்சலா தேவிக்கு நாட்கள் செல்லச் செல்ல ஆதவனின் வெப்பந்தாங்க முடியாமல் தகித்தார்.

இதனை தனது கணவனான பகலவனிடம் சொல்ல முடியாமல் கானகம் சென்று கடும்
வெப்பத்தை தாங்கும் சக்தியை வேண்டி கடுந்தவம் புரிய ஆயத்தமானாள். அதற்கு
முன்பு தன் மனோ வலிமையினாலும், சக்தியினாலும் தனது நிழலையே தன்னைப் போன்ற
வடிவமாக மாற்றினாள்.

அந்த உருவம் தனது சாயலைப் பெற்றுள்ளமையால் “சாயா தேவி” என்று பெயர்
சூட்டினாள். சாயா தேவிக்கும் ஞாயிறு என்கின்ற கதிரவனுக்கும் தபதி என்ற
மகளும் “ச்ருதஸ்ரவசி” ஸ்ருதகர்மா என்ற இரு மகன்களும் பிறந்தனர் இதில்
“ஸ்ருத கர்மா” என்பவர்தான் சனிக்கிரகம் சனிபகவான், சனீஸ்வரன் என்றெல்லாம்
போற்றப்படும் காகத்தை வாகனமாகக் கொண்ட தம்பிரான் ஆவார்.

மேற்குத் திசைப் பக்கம் அவரது ஆசன அமர்வாகும் சர்வ வல்லமை படைத்த சனி
விநாயகப் பெருமானின் தலை துண்டுபடவும் பின்பு யானைத் தலை அமையவும்
காரணமானவர். சுந்தர கணேசன், லம்போதர கணபதி ஆனதும் சனி பார்வையினாலேயே. மூல
முதற்பொருளான மூத்த கணேசனின் சாபத்தினாலேயே சனி ஊன பாதன் ஆனதும் புராண
கதைகள் மூலமும் அறியப்பட்டது.

நவகோள்களிலும் ஈஸ்வரப்பட்டம் சனியைத் தவிர வேறு எந்தக் கிரகத்திற்கும்
கிடையாது. சனி பகவான் காசித்திருத்தலம் சென்று சிவலிங்கமொன்றை பிரதிஸ்டை
செய்து பூஜித்தார்.

அதன் பயனாக பரமேஸ்வரன் சனிபகவானின் பக்தியை மெச்சி சனி என்ற நீ இனி
சனீஸ்வரன் என அழைக்கப்படுவாய் என்றும் நீ பூஜித்த லிங்கம் சனீஸ்வரலிங்கம்
என திருநாமம் பெறும் என்று அருளியதாக வரலாறுண்டு.

சனி பகவானைப் பற்றி அனேகமான கதைகள் உண்டு. இருப்பினும் அவரது பிறப்பு
பற்றியே இக்கட்டுரையில் குறிப்பிட்டேன். இனி சோதிடத்தில் சனிக்கிரகத்தின்
ஒரு சில தகவல்களை ஆராய்வோம்.

ஒருவரது ஜென்மராசிக்கு 1, 2, 12 ஆகிய ராசி வீடுகளில் தலா 2 1/2 வருட வீதம் 3×2 1/2 என சஞ்சரிக்கும் காலம் 7 1/2 சனி காலமாகும்.

இவர் ஒருவரின் ராசிக்கு 4 ஆம் இடத்தில் சஞ்சரிக்கும் போது
அர்த்தாஸ்டமச்சனி என சொல்லப்படும். 8 ஆம் இடத்தில் சஞ்சரிக்கும் போது
அட்டமத்துச் சனி எனக் கூறப்படும்.

குறிப்பிட்ட இந்த ராசி வீடுகளில் சனி சஞ்சாரம் இடம்பெறும் பொழுது இது
சம்பந்தப்பட்டவர்களுக்கு யோகமான நற்பலன்கள் இடம்பெற முடியாமற் போகின்றது.
இதனை அனுபவ ரீதியாக அனுபவித்தவர்கள்தான் அறிவார்கள்.

ஒருவரது ராசிக்கு 3, 6, 11 ஆம் வீடுகளில் சனிக்கிரக சஞ்சாரம் இடம்பெறும்
காலம் நற்பலன்களை கூட்டி வழங்குவார் என சோதிட மூலம் அறியக்
கூடியதாயுள்ளது.

இப்பேர்ப்பட்ட சனிபகவான் இந்தியாவிலும், இலங்கையிலும் உள்ள சைவ
ஆலயங்களில் நவக்கிரக கோயில்களில் வழிபாட்டிற்காக வைத்திருப்பதை அறியலாம்.
ஆனாலும் இந்தியாவில் திரு நள்ளாற்றில் தனி ஆலயமாக மிகப் பிரசித்தம் பெற்று
விளங்குகின்றார். இலங்கையில் திருக்கோணமலையில் மரத்தடியில் சனீஸ்வரனுக்கு
தனி ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமைகளில் சனீஸ்வரனுக்கு பூசை வழிபாடும் புரட்டாதி மாதத்தில் விசேட பூசை வழிபாடுகளும் இடம்பெறுவதைக்காண முடியும்.

சனிக்கிரக மண்டலமானது பூமியை விட்டு அதிக தொலைவில் உள்ளது.

அதாவது 97 கோடியே 90 இலட்சம் மைல்கள் தூரம் எனவும் இதனைச் சுற்றி 3
வளையங்கள் உள்ளனவெனவும் இதன் நடுவில் இருள் படலம் இருப்பதாகவும் 75000
மைல் 1/2 விட்டமுள்ளது எனவும் 700 பங்கு கன பரிமாணம் உள்ளது பூமியைப்போல்
100 மடங்கு எடையுள்ளது எனவும் இது ராசி மண்டலத்தைச் சுற்றிவர 29 1/2
வருடம் ஆகிறது என வானவியல் உண்மைகள் புலப்படுத்துகின்றது.

மேலும் சைவ அடியார்களின் அறிதலுக்காக சனிபகவானின் அதி தேவதை யமதர்மன்,
வாகனம், காகம், திசை மேற்கு வஸ்திரம் கறுப்பு/கருநீலம், உகந்த புஸ்பம்
நீலக்காக்கணை, தானியம் கறுப்பு எள்ளு நல்லெண்ணெய், எள்ளுக்கலந்த சாதம்
அகியனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அன்பர்களே சங்கடங்கள் தீர்க்கும் சனிபகவானை மங்களம் பொங்க வரமருள பிரதி
சனிக்கிழமைகளில் விசேடமாக புரட்டாதி மாதம் வரும் சனிக்கிழமைகளில் ஆசார
சீலராக விரதமிருந்து சங்கல்ப்பபூர்வமாக எள்ளு எரித்து சனிபகவானின்
கெடுபலனிருந்து விடுபடுவதால் நற்பயனை பெறலாம் என ஆதார பூர்வமாக அறிய
முடிகிறது.

கன்னிராசி வீட்டில் சனி பகவான் எதிர்வரும் 2011.11.14 ஆம் திகதி வரை சஞ்சரியப்பார்.

இக்காலம் வரை சனீஸ்வரரின் தாக்கத்திற்கு உள்ளாகும் நபர்கள் சனீஸ்வரரின்
ப்ரீதியை வேண்டி அவருக்குகந்த புரட்டாதிச் சனி விரதத்தினை முறைப்படி
அனுசரிப்பது அனுகூலமானதாகும். மேலும் சங்கடம் தீர்க்கும் சனி பகவானே
மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய் சச்சரவின்றி சாகா நெறியில் இச்சகம் வாழ
இன்னருள் தா தா! என மனம் உருகி வேண்டுதல் செய்வதன் மூலமும்.

காகத் வஜாய வித்மகே

கட்க கஸ்தாய தீமஹி – தன்னோ

மந்த ப்ர சோதயாத் என்ற காயத்ரி மந்திரத்தை உச்சரித்து வழிபடுதல் மூலமும் சனிக்கிழமை அனுகூலத்தை பெறமுடியும்.

மேலும் விசேடமாக சனீஸ்வரனின் கிருபா கடாட்சத்தை பெறுவதற்காக அவரது கவசம் ஒன்றினை இங்கே தருகின்றேன்.

ஓம் அஸ்ய ஸ்ரீ சனைச்வர கவச

மஹா மந்தரஸ்ய – காஸ்யப ரிஷி

அனுஸ்டுப் சந்த சனைச்சரோ தேவதா

சம் பீஜம் நம் சக்தி மம கீலகம்

மம சனைச்சர கிரஹப்ரசாத

ஸித்தியர்த்தே ஜபே விநியோக!

இதனை தினசரி ஒருமுறை தியானிப்பின் சனி பகவானால் ஏற்பட்ட சங்கடம் விலகி
மங்களம் உண்டாகுமாம். என சனிபகவானைப் பற்றிய விபரங்கள் அடங்கிய பல நூல்கள்
மூலம் அறிய முடிகின்றது.

முக்கியமாக சனீஸ்வரரின் ப்ரிதியை வேண்டி வழிபடுமடியார்கள் அவசியம் ஸ்ரீ கிருஷ்ன பரமாத்மாவையும் வேண்டுதல் செய்வதே உகந்தது.
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

விரதங்களின் விபரமும் சனிபகவான் பற்றிய தகவலும்! Empty Re: விரதங்களின் விபரமும் சனிபகவான் பற்றிய தகவலும்!

Post by மாலதி July 30th 2012, 16:40

சனிபகவான் அருள் பெற உதவும் பரிகாரங்கள்




சனி பகவானின் அருளை எளிதில் பெற கீழ்க்கண்ட விரதமுறைகளை பின்பற்றலாம்…

  • ஒவ்வொரு
    சனிக்கிழமை தோறும் விரதம் இருந்து காலத்திற்கும், ஏழைகளுக்கும் அன்னதானம்
    செய்யலாம். அல்லது, ஒவ்வொரு சனிக்கிழமையும் ஒரு வேலை உணவோடு விரதம் இருந்து
    சனிபாகவனை வழிபடலாம்.
  • சிறிது என்னை பொட்டலமாக கட்டி
    தினசரி இரவு படுக்கும் போது, அதை தலைக்கு அடியில் வைத்து படுத்து, காலையில்
    அதனை அன்னத்தில் கலந்து காகத்திற்கு அன்னமிடலாம். 9 நாள் அல்லது 48 நாள்
    அல்லது 108 நாள் என்று இந்த பரிகார முறையை பின்பற்றலாம்.
  • ஒரு முழு தேங்காயை சனி பகவான்
    சன்னதியில் சனிக்கிழமைகளில் இரண்டு பகுதியாக்கி அதில் நல்லெண்ணெய் விட்டு
    எள் முடிச்சிட்டு தீபமாக ஏற்றலாம்.
  • சனிபகவானுக்கு நல்லெண்ணெய்
    அபிசேகம் செய்து, கரும்பு அல்லது எள் சாதம், வடை மாலை செய்து வழிபட்டு,
    அனைத்தையும் ஏழைகளுக்கு விநியோகம் செய்யலாம்.
  • சனிபகவானுக்கு நவக்கிரக சாத்தி ஓமங்கள் செய்து வழிபடலாம்.
  • எள்ளை சுத்தம் செய்து வறுத்து
    வெல்லம், ஏலக்காய் பொடியுடன் சேர்த்து இடித்து திலசூரணம் செய்து வெங்கடேச
    பெருமாளுக்கும், சனிபகவானுக்கும் படைத்து விநியோகம் செய்யலாம்.
  • அவரவர் பிறந்த சென்ம நட்சத்திர
    தினத்தன்றோ அல்லது சனிபாகவனின் பிறந்த நட்சத்திரமான ரோகிணி நட்சத்திரம்
    அன்றோ ஒவ்வொரு மாதமும் அல்லது ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் அர்ச்சனைகள்
    செய்வது நன்மையான பலன்களை தரும்.
  • சனிக்கிழமை தோறும் நல்லெண்ணெய்
    தேய்த்து நீராடி, சனி பகவானுக்கு ஒரு சிறு துணியில் எள் முடிந்து, அதை
    விளக்கில் வைத்து நல்லெண்ணெய் விட்டு விளக்கேற்றி கருங்குவளை மலரால் சனி
    பகவானை அர்சிப்பதோடு, எள் சாதம் நெய்வேத்தியம் செய்வதும் நல்லது.
    தொடர்ந்து, சனி கவசம் அல்லது காயத்திரி செபம் செய்யலாம். நெய்வேத்தியம்
    செய்யும் எள் சாதத்தில் சிறிது காக்கைக்கு வைத்து விட்டு, பின்
    அனைவருக்கும் அளித்து சாப்பிடலாம்.
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum