HinduSamayam
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

HinduSamayam
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
HinduSamayam
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்
by vpoompalani March 24th 2016, 13:59

» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26

» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17

» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06

» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07

» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58

» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24

» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35

» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52

» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20

» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18

» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37

» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47

» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19

» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46

» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49

» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37

» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07

» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29

» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38

» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55

» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00

» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49

» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28

» திருத்தல யாத்திரை  ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51

» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33

» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46

» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28

» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13

» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29

» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15

» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10

» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29

» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54

» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38

» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42

» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32

» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01

» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20

» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00

தமிழர்களின் சிந்தனைகளம்
Related Posts Plugin for WordPress, Blogger...



காஞ்சி காமாட்சி அம்மன் திருக்கோயில்

Go down

காஞ்சி காமாட்சி அம்மன் திருக்கோயில் Empty காஞ்சி காமாட்சி அம்மன் திருக்கோயில்

Post by மாலதி December 31st 2011, 07:53

தெய்வத் திருக்கோயில்கள்


காஞ்சி காமாட்சி அம்மன் திருக்கோயில்

அகிலங்கள் அனைத்திலும்
அருளாட்சி செய்யும் நாயகியாகத் திகழ்ந்து, தன அருட்கருணை பொங்கும்
திருவிழிப் பார்வையினால், தன்னை நாடி வந்து துதித்துத் தொழுகின்ற
அடியார்களின் விருப்பங்களைஎல்லாம் நிறைவேற்றி அருள்பவள், அன்னை காமாட்சி.

காம என்றால் அன்பு, கருணை. அக்ஷ என்றால் கண். எனவே, காமாக்ஷி என்றால் கருணையும், அன்பும் நிறைந்த கண்களையுடையவள் என்று பொருள்.

அன்னை காமாட்சி எழுந்தருளி, நமக்கெல்லாம் அருள்புரியும் திருத்தலமான காஞ்சிபுரம் பெரும் சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டது. அன்னை பராசக்தி தேவியின் அருள் நிறைந்து விளங்கும் முக்கிய திருத்தலங்கள் மூன்று. அவை: காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, காசி விசாலாட்சி திருக்கோயில்களே அவை. அவற்றில் காஞ்சி காமாட்சி அன்னை ஆலயம் தனிச் சிறப்புப் பெற்று விளங்குகின்றது.

வடமொழிப் புலவர் காளிதாசர் காஞ்சிபுரத்தைப் பற்றிக் கூறுகையில், " நகரேஷு காஞ்சி " என்றும், " முக்தி தரும் நகரேழுள் முக்கியமாம் காஞ்சி " என்றும் கூறுகின்றார். முக்தியை அளித்திடும் தெய்வத் திருத் தலங்கள் ஏழு. அவை, மதுரா, மாயா, காசி, காஞ்சி, அவந்திகா, பூரி, துவாரகை என்பவையாகும்.

காஞ்சிபுரத் திருத்தலத்துக்கு காஞ்சிபுரம்,
பிரளயசித்து, சிவபுரம், விண்டுபுரம், மும்மூர்த்தி வாசம், பிரமபுரம்,
காமபீடம், தபோமயம், சகலசித்தி, கன்னிகாப்பு, துண்பீரபுரம், தண்டகபுரம்,
காஞ்சினபுரம், கச்சி, சத்தியவிரதரேத்திரம் என்னும் பதினைந்து திருநாமங்கள் உண்டு.

இத் திருத்தலத்தில் முற்காலத்தில் சண்பக மரங்கள் நிறைந்திருந்ததால், சண்பகாரண்யம் என்னும் திருப்பெயரும் உண்டு.

காஞ்சிபுரத்தில் நூற்றிஎட்டுச் சிவத்திருத்தலங்களும், பதினெட்டு வைணவத் திருத்தலங்களும் அமைந்துள்ளன.

புண்ணிய பூமியான பாரத தேசத்தில் ( = இந்தியாவில் ) உள்ள ஐம்பத்தொரு சக்தி பீடங்களுள், காமகோடி பீடம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் முக்கிய இடம் வகிக்கிறது.

ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரியின் பூரண பிம்ப சொரூபிணியாகத் திகழ்வது, அருள்மிகு அன்னை காஞ்சி காமாட்சியின் மூல விக்கிரகம் ஒன்றுதான்.

அன்னை காமாட்சி கலைமகளையும் ( சரஸ்வதி ), திருமகளையும் ( லக்ஷ்மி ) தன் இரு கண்களாகக் கொண்டவள்.


இத்தகு பெருமைகளைத் தன்னகத்தே கொண்ட காஞ்சிமாநகரத்தில் அன்னை
காமாட்சி தேவி எழுந்தருளிய சம்பவம் ஒரு ஆற்றல்மிக்க வரலாறாக விரிகின்றது.

முன்னொரு காலத்திலே, பந்தகாசுரன் என்ற
ஓர் அசுரன் ( = அரக்கன் ) வாழ்ந்து வந்தான். அவன் மிகக் கடுமையான தவங்களை
மேற்கொண்டு, பிரம்ம தேவரிடமிருந்து அரிய பல வரங்களைப் பெற்றிருந்தான். அந்த
வரங்கள் அளித்த சக்தியாலும், ஆணவத்தாலும் அவன் மூவுலகங்களையும்
கைப்பற்றித் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் பலவித துன்பங்களை உண்டாக்கி
வந்தான்.

பந்தகாசுரனின் கொடுமைகள் நாள்தோறும் அதிகமாகி வந்ததால், அதிக துன்பமுற்ற தேவர்களும், முனிவர்களும் சிவபெருமானிடம் சென்று தங்கள் துன்பத்தைக் கூறி முறையிட்டார்கள்.


பிரம்மாவின் வரங்களைப் பெற்றதால் பந்தகாசுரன் மிகுந்த வலிமை
பெற்றிருப்பதை உணர்ந்த சிவபெருமான், " அந்தப் பந்தகாசுரனை அழிக்கும் ஆற்றல்
அன்னை பராசக்தி தேவிக்குத்தான் உள்ளது " என்று கூறி, அவர்களைப் பராசக்தியிடம் அனுப்பி வைத்தார்.

அத்தருணம், அன்னை பராசக்தி தேவி, காம கோட்டம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில், கிளி வடிவம் கொண்டு, ஒரு செண்பக மரத்தில் அமர்ந்து சிவபெருமானைக் குறித்துத் தவம் செய்து கொண்டிருந்தாள்.

தேவர்களும், முனிவர்களும் அன்னை இருக்கும் இடத்துக்கு வந்து, அவளை வழிபட்டுத் தங்கள் துயரங்களைக் கூறினார்கள்.


அவர்களின் துன்பத்தைக் கண்டு மனம் இரங்கிய அன்னை,
பந்தகாசுரனைக் கொன்று, அவர்களின் துயரத்தைத் தீர்ப்பதாக உறுதியளித்தாள்.


அத்தருணம், பந்தகாசுரன் கயிலாயத்தில், ஒரு இருண்ட
குகையினுள்ளே, ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பதை அறிந்து, அவனைக் கொல்ல அதுவே
தருணம் என்று முடிவு செய்த அன்னை, பதினெட்டுக் கரங்களில், பதினெட்டு
வகையான ஆயுதங்களைத் தாங்கிய பைரவ ரூபிணியாக,
உக்கிர உருவம் கொண்டாள். பந்தகாசுரனின் கழுத்தில் ஒரு பாதத்தையும்,
மார்பில் ஒரு பாதத்தையும் வைத்து, அவனது தலையை அறுத்து, ஒரு கையில்
தூக்கிப் பிடித்தபடி காஞ்சிபுரம் வந்தடைந்தாள்.


உக்கிர கோப ரூபத்தில் வந்த அன்னையைக் கண்ட தேவர்களும்,
முனிவர்களும் பயத்தில் நடுங்கி மயங்கி வீழ்ந்தனர். அவர்களின் பயத்தைப்
போக்க விரும்பிய அன்னை, உடனே, அழகிய பட்டாடை அணிந்த சிறு பெண்ணின்
உருவத்தில், புன்னகை தவழும் முகத்துடன் அவர்களுக்குக் காட்சியளித்தாள்.


அத்தரிசனம் கண்டு, மகிழ்ச்சிப் பெருக்கில் திளைத்த தேவர்களும்,
முனிவர்களும் அவளைப் பலவாறும் போற்றிப் புகழ்ந்து மகிழ்ந்தார்கள்.


அப்போது, அன்னை அவர்களைப் பார்த்து, அந்த இடத்தில் ஒரு பள்ளம்
தோண்டுமாறும், பந்தகாசுரனை அந்தப் பள்ளத்தில் இட்டுப் புதைத்து,
புதைத்த இடத்தில் வெற்றித் தூண் ஒன்றை நிறுவுமாறும் கூறினாள்.

அன்னையின் கட்டளைப்படி தேவர்கள் அந்த இடத்தில் ஒரு பள்ளம் தோண்டியபோது, மல்லகன் என்ற
கொடிய அரக்கன் அங்கே மறைந்திருப்பதைக் கண்டார்கள். அந்த அரக்கனை அழித்துத்
தங்களைக் காக்கும்படி, மகாவிஷ்ணுவிடம் வேண்டினார்கள்.


தேவர்களின் கோரிக்கையை ஏற்று, மகாவிஷ்ணு மல்லகனுடன் போரிட்டார்.
ஆனால், மல்லகனின் உடலிலிருந்து வெளியாகும் ஒவ்வொரு துளி இரத்தமும் ஒரு
அரக்கனாக உருமாறிப் போர் புரிந்தது. இவ்வாறு அங்கே மாபெரும் அரக்கர்
படையொன்று உருவாக்கி மகாவிஷ்ணுவுடன் கடுமையான போர் புரிந்தது.


அரக்கனின் உடலிலிருந்து வெளிவரும் இரத்தத் துளிகள் ஒவ்வொன்றும்
ஒரு அரக்கனாக உருவெடுப்பதைக் கண்ட மகாவிஷ்ணு, தம் உதவிக்குச் சிவபெருமானை
அழைத்தார். சிவபெருமான் போர்க்கோலத்தில், ருத்ர மூர்த்தியாக அங்கே
வந்தார். அவர் இரண்டு பூதங்களை உருவாக்கி, மல்லகனின் உடலிலிருந்து
வெளிவரும் இரத்தத் துளிகள் எல்லாவற்றையும் பூமியில் விழாதபடி குடிக்கும்படி
கட்டளையிட்டார். பூதங்கள் அப்படியே செய்தன.

இவ்வாறு, மேலும் அரக்கர்கள் தோன்றாமல் தடுத்ததும், மகாவிஷ்ணு தம் சக்கராயுதத்தால் அந்த அரக்கனை அழித்தார்.

அதன்பின், அன்னை கட்டளையிட்டபடி, பந்தகாசுறனைப் புதைத்த இடத்திற்கருகில், இருபத்து நான்கு தூண்களை நிறுவி, காயத்ரி மண்டபம் அமைத்து,
அந்த மண்டபத்தினுள்ளே, அழகிய பீடம் அமைத்து, அன்னையின் உருவம் ஒன்றைச்
செய்து வைத்து வணங்கினார்கள். பின்னர், கதவை மூடிவிட்டு வெளியில் இருந்து
அன்னையைத் துதித்துக்கொண்டிருந்தார்கள்.


மறுநாள் அதிகாலை, சூரியன் உதய வேளையில், மிகுந்த பயபக்தியுடன்
அவர்கள் அந்தக் கதவைத் திறந்தார்கள். என்ன ஆச்சரியம் ? அங்கே அவர்கள் கண்ட
அற்புதமான காட்சியைக் கண்டு மெய் சிலிர்த்து, மகிழ்ந்து நின்றார்கள்.

ஆம், அந்தக் காயத்ரி மண்டபத்தின் நடுவில், அவர்கள் நிறுவிய சிலை உருவத்துக்குப் பதிலாக, அன்னை காமாட்சி தேவி அழகிய
திருக்கோலத்தில் காட்சியளித்தாள். அந்த நன்னாள், ஸ்வயம்பு
மனுவந்திரத்தில், கிருத யுகத்தில், ஸ்ரீமுக வருஷம் பங்குனி மாதம் கிருஷ்ண
பட்சத்தில், பிரதமை திதியும், பூர நட்சத்திரமும் கூடிய ஒரு வெள்ளிக்கிழமை
நாள் ஆகும்.

எல்லையில்லாக் கருணை வடிவம் கொண்ட ராஜ ராஜேஸ்வரியாக காமாட்சி
அன்னை காட்சியளித்தாள். அந்தக் காயத்ரி மண்டபத்தின் நடுவில் அன்னை தென்
கிழக்காக, நான்கு கரங்களுடன், பத்மாசன கோலத்தில் காட்சியளித்தாள். அவளது
நான்கு திருக்கரங்களில் பாசம், அங்குசம், மலர் அம்பு, கரும்பு வில் முதலியன காணப்பட்டன.


அன்னையின் அழகையும், கருணையையும் கண்டு பக்திப் பரவசமாகி
மகிழ்ந்த தேவர்களும், முனிவர்களும், அன்னையை நோக்கி, அங்கேயே அமர்ந்து
உலகம் உய்ய அருள் புரியுமாறு வேண்டிக்கொண்டார்கள்.


அவர்களின் பிரார்த்தனைக்கிணங்கி, காமாட்சி அன்னை, இருபத்து
நான்கு தூண்களாலான அந்தக் காயத்ரி மண்டபத்தின் மத்தியில் அமைந்த அழகிய
பீடத்தில் அமர்ந்து அருளாட்சி செய்கின்றாள்.


தற்போது, அன்னை காமாட்சி திருக்கோயில் காஞ்சிபுரத்தின்
மையப்பகுதியில், ஐந்து நிலைகளைக் கொண்ட அழகிய ராஜகோபுரத்துடன், கண்களையும்,
உள்ளத்தையும் பக்திப் பரவசமாக்கும் ஓர் அழகிய, கம்பீரமான ஆலயமாக எழுந்து
நிற்கின்றது.




அன்னை காமாட்சி இத்திருக்கோயிலில் ஸ்தூலம், சூட்சுமம், காரணம் எனும்
மூவகை வடிவிலும் அமைந்து அருள் புரிகின்றாள். ( பெரும்பாலான கோயில்களில்
இவற்றில் ஒன்றிரண்டு வடிவில்தான் அன்னை காட்சியளிப்பாள். ) அந்த மூவகை
வடிவங்களாவன:

காமகோடி காமாட்சி - ( ஸ்தூல வடிவம் ) - (மூல விக்கிரக உருவில் )

அஞ்சன காமாட்சி ( அரூப லக்ஷ்மி ) - ( சூட்சும வடிவம் )

காமகோடி பீடம் எனப்படும் ஸ்ரீ சக்கரம் - ( காரண வடிவம் )

காமாட்சி அன்னைக்கு மகாதேவி, திரிபுரசுந்தரி, ராஜராஜேஸ்வரி, காமேஸ்வரி, லலிதா, ஸ்ரீ சக்கர நாயகி என்னும் திருப்பெயர்களும் உண்டு.

காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தில், நாம் தரிசனம் செய்யக்கூடிய சந்நிதிகள் இருபத்துநான்கு. அவையாவன:

* காயத்ரி மண்டபம்
* காமகோடி காமாட்சி ( கருவறையில் )
* காமகோடி பீடமாகிய ஸ்ரீ சக்கரம் ( கருவறையில் )
* தபஸ் காமாட்சி
* பிலாகாசம்
* அரூப லக்ஷ்மி எனப்படும் அஞ்சன காமாட்சி
* வராஹி
* சந்தான ஸ்தம்பம்
* அர்த்த நாரீஸ்வரர்
* ரூப லக்ஷ்மியும், கள்ளர் பெருமாளும்
* அன்னபூரணி
* தர்ம சாஸ்தா
* ஆதி சங்கரர்
* துர்வாச முனிவர்
* உற்சவ காமாட்சி
* துண்டீர மகாராஜா
* ( அஷ்ட புஜ ) மகா சரஸ்வதி
* தர்ம ஸ்தம்பம்
* காசி கால பைரவர்
* துர்க்கை
* காசி விஸ்வநாதர்
* பஞ்ச கங்கை
* பூத நிக்ரக பெருமாள்
* அகஸ்தியரும், ஹயகிரீவரும்

மேற்கண்ட சந்நிதிகளுள், முக்கியமாகக் கருதப்படும் சில சந்நிதிகளைப்பற்றி விபரமாகப் பார்ப்போம்.

காயத்ரி மண்டபம் :

காமாட்சி ஆலயத்தின் முதல் பிரகாரத்தின் மத்தியில் காயத்ரி மண்டபம் உள்ளது. இது இருபத்து நான்கு ஸ்தம்பங்களால்
( கல் தூண்களால் ) அமைக்கப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தின் மத்தியில்தான்,
காமாட்சி அம்மன் மூல விக்கிரகமாக அழகுற அமர்ந்திருக்கிறாள்.

காமகோடி காமாட்சி:

மேற்படி காயத்ரி மண்டபத்தின் மத்தியில் அன்னை காமாட்சி அம்பாள் தென் கிழக்காக, நான்கு கரங்களுடன், பத்மாசனத்தில் எழுந்தருளியிருக்கிறாள். அவளது திருக்கரங்களில், பாசம், அங்குசம், மலர் அம்பு ( புஷ்ப பாணம் ), கரும்பு வில் முதலிய
ஆயுதங்களைத் தாங்கி இருக்கின்றாள். இங்கு, மூலமூர்த்தியாகிய அம்பிகையே
ஸ்தூல வடிவத்தில், தன்னுடைய பக்தர்கள் தன்னைத் தரிசித்த மாத்திரத்திலேயே
சகல வரங்களையும் தந்து அருள் புரிவதால், அன்னை காமகோடி காமாட்சி என்னும் திருநாமத்துடன் விளங்குகின்றாள்.


காஞ்சிபுரத் திருத்தலத்திலுள்ள எல்லா சிவாலயங்களுக்கும்
காமாட்சி அம்பாளே மூலவர் அம்பாளாக விளங்குகிறாள். அந்த சிவாலயங்களில் ,
அம்பாளுக்குத் தனி சந்நிதிகள் இருப்பதில்லை. அம்பாளின் உற்சவ மூர்த்திகள்
மட்டுமே எல்லா சிவாலயங்களிலும் காட்சியளிக்கின்றனர்.

அரூப லக்ஷ்மி என அழைக்கப்படும் அஞ்சன காமாட்சி:

மூல மூர்த்தியான காமகோடி காமாட்சியின் இடது பக்கத்தில் வட திசை நோக்கியவாறு அரூப லக்ஷ்மியாகிய அஞ்சன காமாட்சி காட்சியளிக்கின்றாள்.
இது அன்னையின் சூட்சும வடிவமாகும். இந்த அன்னைக்கு வடிவம் கிடையாது.
ஆனால், இவளது மேனியில் தடவப்படும் அர்ச்சனை குங்குமத்தின் மகிமையால் இவள்
ஒரு அழகிய வடிவத்தைப் பெறுகின்றாள். இந்த அஞ்சன காமாட்சி தவம் புரியும்
கோலத்தில் காட்சியளிக்கின்றாள்.

( அழகே உருவான லக்ஷ்மி தேவி அரூப
உருவம் கொண்டது ஏன்? இக் கேள்விக்குரிய பதிலாக, ஒரு சுவையான கதை நமது
புராணங்களில் காணப்படுகின்றது. அந்தக் கதையைப் பின்னர் படியுங்கள். )

காமகோடி பீடம் என அழைக்கப்படும் ஸ்ரீ சக்கரம்:

அன்னை காமாட்சியின் காரண வடிவமான ஸ்ரீ சக்கரம், கருவறையினுள், மூலவரான காமாட்சி அம்பாளின் எதிரில் காட்சியளிக்கின்றது. ( அதனால், இத் திருத்தலம் ஸ்ரீ சக்கர பீடத் தலம் என அழைக்கப்படுகின்றது ). அன்னை காமாட்சியே ஸ்ரீ சக்கரமாகவும் விளங்குகின்றாள். வட்ட வடிவமான தொட்டி போன்று சக்கர பீடம் அமைந்துள்ளது. இந்தப் பீடத்தின் உட்சுவர்களில் அஷ்ட லக்ஷ்மிகளின் திரு உருவங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. தொட்டியின் மத்தியில், பீடத்தில், அபூர்வ சக்திகள் நிறைந்த ஸ்ரீ சக்கரம் ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றது.
இந்த ஸ்ரீ சக்கர பீடத்தைப் பூஜித்து, ஆதி சங்கரர் அன்னையின் அருள் பெற்றார் என்று கோயில் வரலாறு கூறுகின்றது.

சந்தான ஸ்தம்பம்:

காமாட்சி அன்னையின் இடது புறத்தில் உள்ள வராஹி தேவியின் எதிரில், சந்தான ஸ்தம்பம் உள்ளது. இந்த ஸ்தம்பத்தைப் பிரதட்சணம் செய்யும் பக்தர்களுக்குப் புத்திர பாக்கியம் உண்டாகும் என்பது அம்பாளின் அருள்வாக்கு.

அர்த்தநாரீஸ்வரர் :

காயத்ரி மண்டபத்தில், தேவிக்கு வலது பக்கத்தில் தெற்குத் திசை நோக்கியவண்ணம் அர்த்தநாரீஸ்வரர் சந்நிதி உள்ளது.

காசி விஸ்வநாதர்:

காமாட்சி அன்னை ஆலயத்தின் மூன்றாவது பிரகாரத்தில், கிழக்குப் பக்கத்தில், கிழக்குத் திசையை நோக்கியவண்ணம் காசி விஸ்வநாதர் ஆலயம் உள்ளது.

மகிஷாசுரமர்த்தனி:

காமாட்சி அன்னையின் ஆலயத்தில் மூன்றாவது பிரகாரத்தில், கீழ்க் கோபுரத்தின் உட்புறம், தேவியை நோக்கியவண்ணம், மகிஷாசுரமர்த்தனி தேவி நின்ற கோலத்தில் அருள் புரிகின்றாள்.

அன்னபூரணி:

காமாட்சி அன்னையின் முதல் பிரகாரத்தில், காயத்ரி மண்டபத்துக்குச் செல்லும் வழியில் அன்னபூரணி அன்னையின் சந்நிதி கிழக்குத் திசை நோக்கி அமைந்துள்ளது.


அழகே உருவான லக்ஷ்மி தேவி, காஞ்சிபுரத்தில் அரூப லக்ஷ்மியாக வடிவம் கொண்டது ஏன்? நமது புராணங்கள் கூறும் சுவையான கதையை இப்போது படியுங்கள்.

முன்னொரு காலத்தில், அமுதத்தை அடைவதற்காக, தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து, பாற்கடலைக் கடைந்தார்கள். மந்தார மலையை மத்தாகவும், வாசுகி என்ற
பாம்பைக் கயிறாகவும் கொண்டு, தேவர்கள் ஒருபுறமாகவும், அசுரர்கள் மறு
புறமாகவும் நின்று, பாம்பை இருபக்கமும் மாறி மாறி இழுத்து, பாற்கடலைக்
கடைந்தார்கள். வலி தாங்க முடியாமல் வாசுகிப் பாம்பு விஷக் காற்றைக்
கக்கியது. அந்த விஷக்காற்றின் தாக்கத்தால், மகாவிஷ்ணுவின் திரு மேனி ( உடல்
) கறுப்பாக மாறி விட்டது.

பாற்கடலை மேலும் கடைந்தபோது, அங்கே லக்ஷ்மி தோன்றினாள்.
அவளை மகாவிஷ்ணு மணந்துகொண்டார். அப்போது, லக்ஷ்மி, மகாவிஷ்ணுவின் கறுத்த
மேனியைப் பார்த்துப் பரிகாசம் செய்தாள். அவர் தன்னைவிட அழகில் குறைந்தவரே
என்று கேலி செய்தாள். ( லக்ஷ்மி தேவி அழகிய பொன் நிற மேனியை உடையவள். )


லக்ஷ்மியின் கர்வத்தை அடக்க விரும்பிய மகாவிஷ்ணு, " நீ கர்வம்
கொண்டு என்னைப் பரிகாசம் செய்ததால், உன்னுடைய அழகு அரூபமாகப் போகக் கடவது "
என்று சாபமிட்டார்.

மனம் வருந்தி அழுது, மன்னிப்புக் கோரிய லக்ஷ்மியிடம், " நீ காமகோட்டம் ( காஞ்சிபுரம் ) சென்று தவம் செய் " என்று கூறினார்.


அவ்வாறே, தாங்கமுடியாத மனவருத்தத்துடன், காமகோட்டம்
வந்துசேர்ந்த லக்ஷ்மியை வாழ்த்தி வரவேற்ற அன்னை காமாட்சி, அவளுக்கு " அஞ்சன காமாட்சி " என்று பெயரிட்டு, தன இடது பக்கத்தில் அமர்ந்திருக்குமாறு இடம் கொடுத்தாள்.


மேலும், " என்னை வணங்க வரும் பக்தர்கள் பெறும் அர்ச்சனைக்
குங்குமத்தை உன் திருவடிகளில் சமர்ப்பிக்கும்போது, அந்த அர்ச்சனைக்
குங்குமத்தின் மகிமையெல்லாம் ஒன்றுசேர்ந்து, உன் உண்மையான வடிவத்தைப்
பெறுவாயாக. மேலும், உன்னை உள்ளன்புடன் வணங்கும் பக்தர்களுக்கு அஷ்ட
ஐஸ்வர்யங்களையும் வழங்கி, அவர்களுக்கு நல்ல வாழ்வை வழங்குவாயாக " என்று
கூறி அன்னை லக்ஷ்மி தேவிக்கு அருள் புரிந்தாள்.


அன்றுமுதல், மங்கள நாயகியாம் அன்னை காமாட்சியின் அருட்
பார்வையாலும், குங்குமப் பிரசாத மகிமையாலும், இழந்த அழகையெல்லாம் மீண்டும்
பெற்று, லக்ஷ்மி தேவி அழகுருக்கொண்டு விளங்கினாள்.

காமாட்சி அன்னையின் திருக்கோயிலில், அன்னை காமாட்சிக்கு நடைபெறும் மாசி மாதப் பிரமோத்சவம் மிகவும் விசேடமானது. இவ்விழாவின் இறுதிநாள் உதயம் விசுவரூப சேவை மிகவும் முக்கியத்துவமும், விசேடமும் உடையது.


தன்னை நாடி வரும் பக்தர்களின் இன்னல்களைப் போக்கி, இன்பத்தை
நல்கும் மங்கள நாயகியாய், வேண்டுவார்க்கெல்லாம் வேண்டுவன நல்கும் அருள்
வடிவினளாய் விளங்கும் அன்னை காமாட்சியின் பேரெழிலை வர்ணித்துப் போற்ற
வார்த்தைகள் போதாது. அந்த அன்னையின் திருவடித் தாமரைகளைத் தினமும் வணங்கி,
அவளது பேரருளைப் பெற்று, துன்பங்களையெல்லாம் அகற்றி, இனிய நல்வாழ்வைப்
பெறுவோமாக.


அன்னை காமாட்சி தேவியைப் போற்றி வணங்குவதற்கேற்ற

ஸ்ரீ காமாட்சியம்மன் விருத்தம்




ஓம் சக்தி


1 . சுந்தரி சவுந்தரி நிரந்தரி துரந்தரி

சோதியாய் நின்ற உமையே,

சுக்கிர வாரத்திலுனைக் கண்டு தரிசித்தவர்கள்

துன்பத்தை நீக்கி விடுவாய்,

சிந்தைதனிலுன் பாதந் தன்னையே தொழுபவர்கள்

துயரத்தை மாற்றி விடுவாய்,

ஜெகமெலா முன் மாய்கை புகழவென்னா லாமோ

சிறியனால் முடிந்திடாது.

சொந்தவுன் மைந்தனாய் எந்தனை ரட்சிக்கச்

சிறிய கடன் உன்னதம்மா,

சிவசிவ மகேஸ்வரி பரமனிட யீச்வரி

சிரோன்மணி மனோன் மணியுநீ,

அந்தரி துரந்தரி நிரந்தரி பரம்பரி

யனாத ரட்சகியும் நீயே,

அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்

அம்மை காமாட்சி யுமையே .


2 . பத்துவிரல் மோதிரம் எத்தனை பிரகாசமது

பாடகந் தண்டை கொலுசும்,

பச்சை வைடூரியம் மிச்சையா இழைத்திட்ட

பாதச் சிலம்பின் ஒலியும்,

முத்து மூக்குத்தியும் ரத்தினப் பதக்கமும்

மோகன மாலை யழகும்,

முழுதும் வைடூரியம் புஷ்ப ராகத்தினால்

முடிந்திட்ட தாலி யழகும்,

சுத்தமாயிருக்கின்ற காதினிற் கம்மலுஞ்

செங்கையிற் பொன் கங்கணமும்

ஜெகமெலாம் விலைபெற்ற முகமெலா மொளியுற்ற

சிறுகாது கொப்பினழகும் ,

அத்திவரதன் தங்கை சக்தி சிவரூபத்தை

யடியனால் சொல்ல திறமோ

அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்

அம்மை காமாட்சி யுமையே


3 . மாயவன் தங்கை நீ மரகத வல்லிநீ

மணிமந்திர காரிநீயே

மாயா சொரூபிநீ மகேஸ்வரியுமான நீ

மலையரை யன்மக ளான நீ,

தாயே மீனாட்சிநீ சற்குண வல்லிநீ,

தயாநிதி விசாலாட்சிநீ,

தரணியில் பெயர்பெற்ற பெரிய நாயகியும்நீ

சரவணனை ஈன்ற வளும்நீ,

பேய்களுடனாடிநீ அத்தனிட பாகமதில்

பேறுபெற வளர்ந்தவளும் நீ,

பிரணவ சொரூபிநீ பிரசன்ன வல்லிநீ

பிரியவுண்ணா முலையுநீ,

ஆயிமகமாயிநீ ஆனந்தவல்லிநீ

அகிலாண்டவல்லிநீயே,

மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum