Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்by vpoompalani March 24th 2016, 13:59
» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26
» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17
» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06
» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07
» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58
» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24
» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35
» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52
» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18
» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47
» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19
» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46
» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49
» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37
» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07
» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29
» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38
» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55
» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00
» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49
» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28
» திருத்தல யாத்திரை ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51
» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33
» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46
» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28
» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13
» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29
» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15
» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10
» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29
» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54
» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38
» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42
» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32
» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01
» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20
» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00
திருத்தலத் திருப்பணி: பக்தர்களைக் காக்கும் 16 கரங்கள்!
Page 1 of 1
திருத்தலத் திருப்பணி: பக்தர்களைக் காக்கும் 16 கரங்கள்!
திருமாலின் அவதாரங்களில் மிகுந்த சிறப்பிடம் பெறுவது நான்காவது அவதாரமான
நரஸிம்ம அவதாரம். தன் பக்தன் பிரஹலாதனுக்காக மஹாவிஷ்ணு எடுத்த அவதாரம் இது.
திருமால் இந்த அவதாரத்தை எடுத்தது ஆந்திர மாநிலத்தில் உள்ள அஹோபிலம் என்ற
இடத்தில். "அஹோ' என்றால் "சிங்கம்' என்றும் "பிலம்' என்றால் குகை என்றும் பொருள்.
ஆகவே "சிங்கவேள் குன்றம்' என்று அத்தலத்தை அழைப்பர். அதன்பிறகு நாடு முழுவதிலும்
பல்வேறு ரிஷிகள், முனிவர்களின் தவத்தை ஏற்று தரிசனம் தந்ததுடன் நதிக்கரைகளிலும்,
குன்றுகளிலும் கோயில் கொண்டார் ஸ்ரீநரஸிம்மர். இவற்றுள் வரலாற்றுச் சிறப்பு
மட்டுமின்றி ஸ்தலம், மூர்த்தி, தீர்த்தம் ஆகியவற்றாலும் சிறப்பு பெற்றது கீழப்பாவூர்
ஸ்ரீநரஸிம்மர் கோயில்.
தல வரலாறு
ஒருமுறை காச்யபர், சுகோஷர் முதலிய ரிஷிகள் நரஸிம்ம அவதாரத்தை மீண்டும்
தரிசிக்க விரும்பி மஹாவிஷ்ணுவை நோக்கி தவம் செய்தனர். அசரீரி வாக்காக மஹாவிஷ்ணு, "பொதிகை
மலைச்சாரலில் மணிமுத்தாறு தீர்த்தத்திற்கு (தற்போதைய பாபநாசம் பாணதீர்த்தம்) வடக்கே
சித்ரா நதி செல்கிறது. அங்கே என்னை நோக்கி தவம் செய்க''என்று கூறினார்.
அதன்படி ரிஷிகளும் தவம் இருந்தனர். தவத்தில் ஆனந்தம் அடைந்த மஹாவிஷ்ணு, தான்
முன்பு எடுத்த நரஸிம்ம அவதாரத்தை காட்டியருளினார். ஸ்ரீதேவி, பூதேவியுடன் மஹா உக்ர
மூர்த்தியாக 16 திருக்கரங்களுடன் தோன்றினார். தான் காட்சியளித்த அந்த இடத்திலேயே
நிரந்தரமாகக் குடிகொண்டார். அதுவே தற்போதைய கீழப்பாவூர்.
கல்வெட்டுகள்
அண்மையில் இத்திருக்கோயில் கல் திருப்பணிக்கு அஸ்திவாரம் தோண்டியபோது
பூமிக்கடியில் இருந்து 34 கல்வெட்டுகள் கிடைத்தன. அக்கல்வெட்டுகள் இக்கோயிலுக்கு
மேலும் பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளன. அவற்றில், இப்பகுதியை சடாவர்மன் ஸ்ரீவல்லப
பாண்டியன் கி.பி. 1101முதல் கி.பி. 1124 வரை ஆட்சி புரிந்தார் எனக்
குறிப்பிடப்பட்டுள்ளது. சோணாடு கொண்டருளிய சுந்தரபாண்டிய மன்னன், மாறவர்மன்
விக்கிரம பாண்டியன், எம்மண்டலமும் கொண்டருளிய முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன்,
ஸ்ரீவல்லபபாண்டியன் ஆகியோரது பெயர்கள் கல்வெட்டில் உள்ளன. மாறவர்மன் திரிபுவன
சக்கரவர்த்தி விக்கிரம பாண்டியன், தான் ஆட்சிக்கு வந்த ஏழாவது ஆண்டில்
இத்திருக்கோயிலுக்கு நித்திய பூஜைகளுக்கு நிலங்கள் வழங்கிய செய்தியும் உள்ளது.
பாண்டிய மன்னர்களும் கோயிலுக்கு நிலங்கள் வழங்கியதாகக் கல்வெட்டில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆலயத்தின் அமைப்பு
இவ்வாலயம் ஊரின் வடமேற்குப் பகுதியில் ஊரைவிட்டு சற்று ஒதுங்கிய நிலையில்
அமைதியான சூழ்நிலையில் அமைந்துள்ளது. ஆலயத்தைச் சுற்றிலும் வயல்கள், குளங்கள்,
வாழைத் தோப்புகள், தென்னந்தோப்புகள் என எங்கும் பசுமை.
சோழர் காலக் கட்டடக் கலையில் உள்ள மிகச் சிறிய ஆலயத்தில் பல்லவர் காலப்
பாணியில் அமைந்த மிகச்சிறிய கருவறையில் கருங்கல் புடைப்புச் சிற்பமாக (பிரதிஷ்டை
செய்யப்படவில்லை) வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார் நரஸிம்மர். சூரியனும்
சந்திரனும் வெண் சாமரம் வீச, வெண்கொற்றக் குடையுடன் காட்சி தருகிறார். ஹிரணியனை வதம்
செய்யும் திருக்கோலத்துடன், 16 திருக்கரங்களுடன் பக்தர்களைக் காக்கிறார். அருகே
ப்ரஹலாதன், அவனுடைய தாய், காசி மன்னன், நாரதர் ஆகியோர் நரஸிம்மரை
துதித்துக்கொண்டிருக்கும் காட்சி நம்மை கிருதயுகத்துக்கே அழைத்துச் செல்கிறது.
உக்ரத்தைத் தணிக்க ஆலயத்தின் முன்பு தெப்பக்குளம் அமைந்திருப்பது தனிச்சிறப்பு.
பரிகாரத் தலம்
திருமணத் தடை நீங்கவும், நீண்ட நாள் நோய் குணமாகவும், நிலுவையிலுள்ள வழக்குகள்
முடிவுக்கு வரவும் வழிபடும் பரிகாரத்தலமாக கீழப்பாவூர் நரஸிம்மர் கோயில்
விளங்குகிறது.
நரஸிம்மரை வழிபட செவ்வாய், புதன், சனிக்கிழமைகளும் மாலை வேளையும் உகந்ததாகும்.
நீராஞ்சனம் செய்தும் வழிபடலாம். கலியுகத்தில் பானகம் நைவேத்யம் செய்து நரஸிம்மரின்
உக்ரத்தைத் தணிக்கலாம் என்று மங்களகிரி புராணம் கூறுகின்றது.
திருப்பணி
1000 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் கீழப்பாவூர் நரஸிம்மர் ஆலயத்திற்கு இதுவரை
கும்பாபிஷேகம் நடக்கவில்லை என்பது வருத்தமளிக்கும் செய்தி. தற்போது ஆலயம்
பாழடைந்தும், அஸ்திவாரம் வலுவிழந்தும் காணப்படுகிறது. தமிழ்நாடு அரசின் இந்து சமய
அறநிலையத்துறை ஆட்சிக்கு உட்பட்ட இக்கோயிலில் ஒரு கால பூஜை மட்டுமே நடக்கிறது.
தற்போது இக்கோயிலைப் புனரமைக்கும் புண்ணியப்பணியில் "ஸ்ரீநரஸிம்ம ஸ்வாமி கைங்கர்ய
சபையினர்' ஈடுபட்டுள்ளனர். கல் திருப்பணி தொடங்கி இரண்டு ஆண்டுகள் ஆகியும்
நிதிப்பற்றாக்குறை காரணமாக புனரமைப்புப் பணிகள் மந்தமாகவே நடந்துவருகின்றன.
திருப்பணி குறித்து மேலும் தகவல் அறிய விரும்புவோர் 9442330643 என்ற எண்ணில் தொடர்பு
கொள்ளலாம்.
அமைவிடம்: திருநெல்வேலி மாவட்டத்தில், தென்காசியிலிருந்து 12 கி.மீ.
தொலைவிலும், பாவூர்சத்திரத்திலிருந்து 2 கி.மீ. தொலைவிலும் உள்ளது கீழப்பாவூர்.
Similar topics
» மூளையைக் காக்கும் தோப்புக்கரணம்!
» இயற்கையின் அதிசயம் — நம் உடலுறுப்புக்களை போன்றே தோற்றமளித்து அவற்றை காக்கும் சில காய்கனிகள்!
» இயற்கையின் அதிசயம் — நம் உடலுறுப்புக்களை போன்றே தோற்றமளித்து அவற்றை காக்கும் சில காய்கனிகள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum