Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்by vpoompalani March 24th 2016, 13:59
» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26
» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17
» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06
» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07
» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58
» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24
» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35
» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52
» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18
» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47
» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19
» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46
» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49
» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37
» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07
» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29
» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38
» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55
» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00
» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49
» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28
» திருத்தல யாத்திரை ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51
» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33
» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46
» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28
» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13
» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29
» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15
» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10
» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29
» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54
» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38
» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42
» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32
» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01
» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20
» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00
ஓம் என்னும் பிரணவம்
Page 1 of 1
ஓம் என்னும் பிரணவம்
[You must be registered and logged in to see this image.]
ஓம் என்னும் பிரணவம்:-எந்த மொழியிலும் எழுத்துகள் பிறப்பதற்கு மூல காரணமாக
இருப்பது ஒலியே. அந்தஒலியே பிரவணம் எனப்படும். வாயைத் திறந்து
உள்ளிருக்கும் மூச்சுக் காற்றை வெளியிடும்போது ‘ஓ’ என்ற உருவமற்ற ஒலி
பிறக்கின்றது. அவ்வொலியின் கடைசியில் வாயை மூடும்போது ‘ம்’ என்ற ஒலி
தோன்றுகிறது. இந்த ''ஓம் - ஓம்'' என்ற
ஒலியையே பிரவணம் என்று கூறுவர். உலகம் தோன்றுவதற்கு
முன்பு பிரவண ஒலியே நிலவி இருந்தது என்றும் , பிரணவத்திலிருந்து
விந்துவும், விந்திலிருந்து நாதமும் அதிலிருந்து உலகமும் உயிர்களும்
ஒன்றிலிருந்து ஒன்றாகத் தோன்றின எனத் தத்துவ நூல்கள் கூறுகின்றன.ஓம் என்பது
பிரணவ மந்திரமாகும்இது அ + உ+ ம் என்ற மூன்றெழுத்தின் இணைப்பே ‘ஓம்’.
மனிதனின் உடலும் இறைவனின் இயற்கை வடிவான ஓங்கார வடிவத்துடன்
அமைந்திருக்கிறது.மனித வடிவமும் அருள் வடிவம்தான்.ஓம் என்ற பிரவணன்"அ"
என்பது எட்டும்"உ"என்பது இரண்டும் என்ற எண்களின் தமிழ் வடிவம்.உயிர்
எழுத்தும் மெய் எழுத்தும் சேர்ந்து உயிர்மெய்த்தாவது போல் உயிரும் உடலும்
சேர்ந்ததுதான் மனித வாழ்வு.அவரவர் கையால் மனிதனின் உடல் எண் சாண்
அளவுடையது.மனிதன் விடும் இரு வகை மூச்சுகள். [உள் மூச்சு வெளி மூச்சு ]" உ '
எழுத்து குறிக்கும் மூச்சு உள் மூச்சு வெளி மூச்சு." ம் ' ஆறு அறிவின்
உணர்வு இயக்கத்தால் எற்படும் இன்பத்தை அது குறிக்கும்அத்துடன் " ஓம் " என்ற
பிரணவம் 96 தத்துவத்துடன் விளங்கும்.அ உ ம் என்ற எழுத்துக்களால்
குறிக்கும் பெருக்கு தொகை 8 x 2 x 6 = 96.இதனை சிலர் இப்படியும்
கூறுவார்கள்: அ என்பது முதல்வனான சிவனையும்உ என்பது உமையவள் எனப்படும்
சக்தியினையும், சிவனும் சக்தியும் இணைந்தசிவசக்தியினையும் குறிக்கும்.
இச்சிவசக்திவடிவமே, சொரூபமே வரி வடிவில் " ஓ " என பிள்ளையார்சுழியாகவும் ,
"உ" எனவும் உள்ளது. வழிப்படும் உருவவாக 'சிவலிங்கமும்' ,ஒலி எழுத்தாக
சொல்லும்போது ஓங்காரம், பிரணவம் என்று ஆன்றோர்களும்,சான்றோர்களும்
சொல்கிறார்கள்.இதனை திருமூலர், திருமந்திரத்தில் :" ஓமெனு ஓங்காரத் துள்ளே
ஒரு மொழிஓமெனு ஓங்காரத் துள்ளே உருவம்ஓமெனு ஓங்காரத் துள்ளே பல பேதம்ஓமெனு
ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே "முதல் வரிக்கு ஓம் என்பதை உச்சரிக்கும்
பொழுது ஒரே சொல்லாகவும்,இரண்டாம் வரிக்கு அன்னையின் கருவில் பிண்டம்
தரிக்கும் பொழுதும்அது தாயின் வயிற்றிற்குள் காணும் காட்சி ஓம் என்றே
தோன்றும் ,மூன்றாம் வரிக்கு ஒரே உச்சரிப்பாயினும், மூன்றெழுத்தையும்
அதன்விளக்கத்தையும் , பேதங்கள் பலவாறாகவும் , நான்காவது வரிக்கு இதைசதா
உச்சரித்து தியானிப்பதால் முக்தி - உயர்ந்த சித்தியும் கிட்டும் என்பதை
பாடல் நமக்கு உணர்த்துகிறது.முதல் எழுத்து:"ஆதியிலே பராபரத்திற் பிறந்த
சத்தம்அருவுருவாய் நின்ற பாசிவமுமாகிதோதியென்ற சிவனிடமாய்ச்
சத்தியாகித்தொல்லுலகில் எழுவகையாந் தோற்றமாகி "என்னும் சுப்பிரமணிய
ஞானத்திலிருந்து அறியலாம்.சட்டை முனியும் தனதுசூத்திரத்தில் :" ஒடுக்கமடா
ஓங்காரக் கம்பமாச்சுஓகோகோ அகாரமங்கே பிறந்ததாச்சு "- என்றும்
குறிப்பிட்டுள்ளார்.சிவன், சக்தி , சிவசக்தி மூலத்தைக் குறிக்கும் ஓங்கார
மந்திரத்திற்க்கும்முதல் எழுத்தாகவும் இதுவே " அ " உள்ளது. அத்துடன்
எழுத்துக்களைக்குறிக்குங்கால் , தமிழ் , தெலுங்கு , கன்னடம் , மலையாளம் ,
சமஸ்கிருதம்முதலிய மொழியிலும் இதுவே முதல் எழுத்து." அகரமுதல எழுத்தெல்லாம்
ஆதிபகவன் முதற்றே உலகு "என்ற வள்ளுவர் முதல் குறள் மூலமும் ,அகஸ்த்திய
பெருமான் தனது மெய்ஞான சுத்திரத்தில் ," அவ்வாகி உவ்வாகி மவ்வுமாகி ,-
ஐம்பத்தோ ரெழுத்துக்கு தியாகி ""அகாமுதல் அவ்வைமுத்தும்
தியாகும்அறிந்தோர்க்கு இதிலேதான் வெளியதாகும் "என்று பாடியுள்ளத்தின் மூலம்
நன்கு அறியலாம்.
உருவமும்- உடலும்.உடம்பை உருவைக் குறிக்கும் போது ஏற்கனவே
குறித்தப்பிட்டபடிஇதுவே கருவில் தரிக்கும் பிண்டத்திற்குக் காரணமாய்
விளங்குகிறது.ஆண்டவன் அவ்வெழுத்தின் உருவமாய் உடம்பினுள்
அமைந்துள்ளார்என்பது கீழ்காணும் மெஞ்ஞான முனிவர்களது சூத்திரம் மூலம்
விளங்கும்."கண்டது அவ்வென்னுங் கடைய தோரட்சாம்,பிண்டத்துக் குற்பத்தி
பிறக்கு மிதிலே"- மச்சைமுனி தீட்சை ஞானம் "உந்தியினுள்ளெ அவ்வும் உவ்வுமாய்
மவ்வுமாகிவிந்துவாய் நாதமாகி விளங்கிய சோதிதன்னை "- அகஸ்தியர் முதுமொழி
ஞானம்.மேலும் இது வாயைத் திறந்தவுடன் நாக்கு , அல்லது மேல்
வாயைத்தீண்டாமலேயே தொண்டையின் மூலமாய் பிறக்கும் ஓசை பேசும் போதுஉண்டாகும்
எல்லா ஒலியையும் விட மிகவும் இயற்கையானது.இது பற்றி யூகிமுனி தனது வைத்திய
சிந்தாமணி 800 - ல்"அவ்வென்னும் அட்சாத்தில் நாடிதோன்றும்அந்நாடி தானின்று
தத்துவந் தோன்றும்எவ்வென்னு மெலும்பு தசை புடை நரம்பும்ஈலிட்டு
பழுவோடிரண்டு கொங்கையுமாம்முவ்வென்று முட்டுக்கால்
விளையீரெட்டாம்முட்டியமைத் தங்ஙனே யோருருமாக்கி "என்று கூறியுள்ளதன் மூலம்
உருவம் உடம்பிற்கும் இதுவே முதல்காரணமென நன்கு தெளிந்துணரலாம்.ஓங்காரம்,
பிரவணம். இது எல்லா எழுத்து ஒலிகட்கும் முதலாக விருந்துஅகத்தும்,
புறத்தும், இயற்கையாய் ஒலிக்கும் ஓசை. இது உந்தியின் கீழ் தங்கிநிற்கும்.
இதை விளக்கும்படி திருமூலர்," ஓங்காரம் உந்தி கீழ் உற்றிடும்
எந்நாளும்நீங்கா வகாரமும் நீள் கண்டத் தாயிடும் " என்று
கூறியுள்ளார்.ஓங்காரத்தி தத்துவம் , அ , உ , ம் எனமித்து ஒலி
எழுப்புவது.அகாவொலி முதற்பிரிந்து படைத்தற் தொழிலையும், உகாரவொலி
பின்தோன்றிக் காத்தல் தொழிலையும் , மகாரவொலி முடிவாதலின்
அழித்தற்தொழிலையும் ஆக முத்தொழிலையும் ஒருங்கேஇணைத்து அடக்கி நிற்கும்.
"ஓம்" எனும் தாரக மந்திரத்தை தனிமையாக இருந்து ஏகாந்த தியானம்செய்தால் இதன்
பலன் அதிகம். ஐம்புலன்களின் தொழில்கள் இயக்கம்அடைந்து மனது நிலைபெறும்.
ஐம்புலக் கதவு அடைபடும். தன்னையும்,உலகையும் மறந்து நிற்க , சாபாசங்கள்
மறந்து மனம் நிலைப்படும்.குறுகிக் கிடந்த மனம் விசாலமடையும்.மெய்ஞான
விசாரணை விளைந்து,அதனால் வாழ்க்கையும் வேதனைகளும் இல்லாத
ஒன்றாகிவிடும்.இந்த விரிந்த அண்டப்பார்வை உண்டாகும்"ஓம்" என தியானிப்பதால்
அநேக சித்திகள் கைகூடும். அதனால்ஒழுக்கம் ஏற்பட்டு உண்மை அறிவு இன்னதென்று
நன்கு நமக்கு விளங்கும்.இதன் மூலம் ஒளியை தரிசித்து மனத்திருப்தி,மெய்,
முகம், ஆகியவற்றில்ஒரு தெளிந்த பிரகாசமிக்க ஒளி, அறிவு உயர்ந்து
மற்றோருக்கு வழிகாட்டும்தன்மை நீங்களும் காணலாம்.You see, there is no gain
without pain.ஆனால் முயன்றால் நிச்சயம் சாதித்துவிடலாம்.ஒரே சமயத்தில்
மனதின் வெவ்வேறு ஓட்டங்களை, நாம் விரும்பிய பாதைகளில் செல்லுமாறு
செய்வதுதான் அடிப்படையானது. அப்படியரு சாதனையைப் பழக்கப்
படுத்திக்கொள்ளும்போது ஒரே நேரத்தில் மூன்று நான்கு காரியங்களிலாவது மனதை,
கவனத்தைச் செலுத்தலாம். வேகமாக சிந்திக்கலாம். சிந்தனையின் பல படிகளைத்
தாண்டி முடிபுகளை விரைவாக அடையலாம்.Lateral Thinking போன்றவை
எளிதானவைதானே!பலர் காயகல்பம் பற்றி கேள்விப்பட்டு இருப்பார்கள்.
இதைஉண்டவர்கள் நரை, திரை மாறி பொன்போல் உடல் ஒளிர்ந்து - சாவில்லாதுஎன்றும்
இளமையுடன் வாழலாம் என்பர்கள். ஆயினும் அந்த காயகல்பம்கிடைப்பது அரிது.
இருப்பினும் நாம் காயகல்பம் பெற ஒரு வழி உண்டு.அதிகாலை எழுந்ததும் , இரவில்
படுக்கபோகும் பொழுதும் நாள் தவறாதுபத்து நிமிட மணித்துளிகள் ' ஓம் '
என்னும் மந்திரத்தை மனதால் உச்சரிக்கவேண்டும்.உச்சரிக்கும் போது நமது
மூக்கின் வலப்பகுதி துவார வழியாககாற்றை சுவாசித்து இடப்பக்க மூக்குத் துவார
வழியாக காற்றை வெளியிடவேண்டும்.
இப்படி சூரிய பகுதியில் உஷ்ணமாக உள்ள காற்றை
சந்திரப்பகுதியில்குளிர்ச்சிப்படுத்தி வெளியேற்றும் பொழுது ' ஓம் ' என்ற
மந்திரத்தை மனதால்நினைந்தவாறு தொடர்ந்து செய்து வரவேண்டும். இங்ஙனம்
வெளிச்செல்லும் பிராணன்குறைந்து குறைந்து இறுதியில் உள்ளேயே சுழலத்
தொடங்கும். உள் சுழற்சியால்மூலாதாரத்தில் பாம்பு வடிவில் உறங்கிக்
கொண்டுடிருப்பதாக சொல்லப்படும் குண்டலிஅல்லது குண்டலினி என்னும் சக்தி
எழுப்பும். குண்டலியும் அடியுண்ட நாகம் போல் ஓசையுடன் எழும். இவ்வாறு
எழும்பும் குண்டலினி ஆறு தரங்களில் பொருந்தி சகஸ்ராரத்தில் சென்று அமுதமாக
மாறிக் கீழ்வரும்.[ சித்தர்கள் 'விந்து விட்டவன் நெந்து
கெடுவான்]என்பார்கள். காரணம் இந்த விந்துதான் பிரணாயத்தின் மூலம் குண்டலி
வழி சகஸ்ராரத்தில் அடைகிறது. மேல் ஏறினால் பேரின்பம். கீழ் இறங்கினால்
சிற்றின்பம்.]யோகியர் நாவை மடித்து இதனை உண்ணுவார். இந்த ஒரு சொட்டு அமுதம்
சுவைத்தால் பசி, தாகம், தூக்கம் இல்லாது பன்னிரண்டு ஆண்டுகள்
தவமிருக்கலாம். அதுவே சிவநீர் என்பார்கள். இதனை விழுங்கினால் நாமும்
காயசித்தி பலனை அடையலாம்.இதனை திருமூலர் :"ஏற்றி இறக்கி இருகாலும்
பூரிக்கும்காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாரில்லைகாற்றைப் பிடிக்கும்
கணக்கறி வாள்ர்க்குக்கூற்றை உதைக்கும் குறியது வாமே " -
என்கிறார்.இருகாலும் என்பது இரு காற்று வழி. இடகலை, பிங்கலை. அவ்வாறு
இரண்டாகப்பிரிக்காது இரு வழியாகவும் மூச்சுக்காற்றை ஒரே முறையில் ஏற்றிப்
பின்பு இறக்கிப்புருவமத்தியில் பூரிக்கச் செய்தல் வேண்டும். இவ்வாறு காற்றை
முறையாக ஏற்றிஇறக்கும் கணக்கை இவ்வுகத்தார் அறியவில்லை. அவ்வாறு
அறிந்தவர்கள் எமனைஎதிர்த்து உதைக்கும் ஆற்றல் அறிந்தவர்கள்.வாழும் கலை
என்று மனிதரை நீண்ட நாள் வாழ வைக்கும் கலையினை நம் பண்டைப் பெருமைக்குரிய
சித்தர்கள் 'தாம் பெற்ற இன்பம் இவ்வையகம்பெறுக' என்ற நோக்கில் தெளிவாக
சொல்லியுள்ளார்கள்.
காயசித்தியின் பெருமையினை 'காகபுசண்டர்' பாடலைக் காண்போம் :பாரப்பா
பன்னிரண்டு முடிந்துதானால்பாலகன் போலொரு வயது தானுமாச்சுநேரப்பா இருபத்தி
நான்கு சென்றால்நேர்மையுள்ள வயது மீரண்டாகும்சீரப்பா முப்பத்தி
ஆறுமானால்சிறப்பாக மூன்று வயதாச்சுதப்போதாரப்பா பன்னிரண்டுக்கோர்
வயதாய்த்தான் பெருக்கி வயததுவை எண்ணிக்கொள்ளே ....ஒன்றில்லாமல்
ஒன்றிலில்லை. இதனை மெய்பிக்கவே சிவனும் - சக்தியும்.உலக மாந்தர்களும்
அவ்வாறு எண்ணி ஒழுகல் வேண்டும். ஆணும் - பெண்ணும்சேர்ந்ததே வாழ்வு.
வாழ்வில் இன்ப - துன்பம் எல்லாவற்றிலும் இருவருக்கும் சமபங்கு உண்டு என்பதை
மெய்பிக்கவே , விளக்கவே அர்த்தநாரீஸ்வரர்உருவமாக சரிபாதி உடல்.

Similar topics
» ஓம் என்னும் பிரணவம்
» ஓங்காரம்(பிரணவம்) விளக்கம்
» ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் மகிமைகள்
» ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் மகிமைகள் தெரியுமா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum