Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்by vpoompalani March 24th 2016, 13:59
» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26
» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17
» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06
» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07
» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58
» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24
» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35
» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52
» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18
» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47
» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19
» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46
» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49
» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37
» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07
» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29
» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38
» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55
» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00
» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49
» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28
» திருத்தல யாத்திரை ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51
» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33
» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46
» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28
» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13
» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29
» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15
» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10
» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29
» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54
» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38
» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42
» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32
» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01
» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20
» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00
பாபா பதில்கள் - ஏதவன் பேர்? ஏதவன் ஊர்? - சங்கரம் சிவ சிங்கரம்
Page 1 of 1

கடவுள் என்பவன் எந்த நிலையும் இல்லாதவன். 'ஏதவன் பேர்? ஏதவன் ஊர்? யார்
உற்றார்? யார் அயலார்?' அவனுக்கு என்று ஒரு நிலை இருக்கிறதா? அல்லது அவன்
இந்தக்காலத்தைச் சேர்ந்தவன் என்று உண்டா? முன்னைப் பழமைக்கும் பழம்
பொருளாய் பின்னைப் புதுமைக்கும் பேற்றும் அப்பெற்றியனாக இருக்கின்றான்.
நம்
குடும்பத்தில் இருக்கிற ஒருவரிடம் உறவாடுகிற மாதிரி கடவுளிடத்தில் உரையாட
முடியும் என்கிற தன்னம்பிக்கை நமக்கு வந்தால் நாம் ஆன்மீகத்தில் படி
நிலைகளை கடந்து வந்திருக்கிறோம் என்று அர்த்தம். ஆன்மீகத்தில் இது ஒரு
நிலை.
ஆண்டாளுக்கு ரங்கநாதர் காதலன். ஆனால் ஆண்டாளுடைய தகப்பனாராகிய
பெரியாழ்வார் இருக்கிறார் அல்லவா, அவருக்கு ரங்கநாதர் சின்னக்குழந்தை.
அவரைக் கூப்பிட்டு 'வாப்பா; குளிப்பா; லேட்டாகிவிட்டது' என்பார். அவரை
பல்லக்கில் தூக்கிக் கொண்டு வருகிற போது, 'நீ ரொம்ப இளைத்த மாதிரி
இருக்கிறாய். நீ நன்றாக இருக்க வேண்டும்' என்று 'பல்லாண்டு பல்லாண்டு'
பாடுகிறார். கிருஷ்ணனை குழந்தையாக பெரியாழ்வார் பார்த்துக்
கொண்டிருக்கிறார். ஆண்டாள் காதலனாக பார்க்கிறாள். திடீரென்று ஒரு நாள்
குழந்தையாக தான் பாவித்த கண்ணன், தன் மகளை அழைத்துக் கொண்டே போய்விட்டார்
என்கிறார். 'ஒரு மகள்தன்னை உடையேன் அவனை திருக்கண்மால் கொண்டு போனான்'
சின்னப்பையன் என்று அவனை நினைத்துக் கொண்டிருந்தேன். பார்த்தால் என் மகளை
அழைத்துக் கொண்டு போய்விட்டானே!' என்பார் பெரியாழ்வார்.
பகழிக்கூத்தர்
என்று ஒருத்தர் இருந்தார். அவருக்கு தீராத வயிற்றுவலி. திருச்செந்தூருக்கு
போனார். வயிற்றுவலி நன்றாக ஆனது. உடனே ஒரு பாட்டு பாடினார்.
'பேராதரிக்கும் அடியவர் தம் பிறப்பை ஒழித்து வீடு பேறும் அளிக்கும்
பிள்ளைப் பெருமான் என்றும் பேராளா' என்று. யாரெல்லாம் நம்புகிறார்களோ
அடியார் தம் பிறப்பை ஒழித்து அவர்களுக்கு பிறப்பு இல்லாமல் செய்துவிடுவான்.
வீடும் பேறும் மோட்சமும் தருவான். இந்த உலகத்தில் இருக்கிற போது அருள்,
பொருள் இரண்டும் தருவான். சின்னக்குழந்தை என்று பகழிக்கூத்தர்
கொஞ்சுகிறார்.
சூரபத்மன் கடைசியில்தான் தெரிந்து கொண்டான். 'பாலகன்
என்று ஏமாந்தேன்'. இவ்வளவு நாளாக இவன் சின்னப்பையன் என்று ஏமாந்து
விட்டேனே என்பான்.
வேறு ஒரு புலவர் பாடுகிறார். 'அப்பா! நான்
இவ்வளவு கஷ்டத்தில் இருக்கிறேன். நீ என்ன சின்னக்குழந்தையா?' என்கிறார்.
'அன்னை நினது கன்னத்தில் மை இட்டு அமுதூட்டிய சிறுவன்தானோ' அம்மா உனக்கு
கன்னத்தில் மை இட்டு உனக்கு பால் சோறு ஊட்டிய சின்னப்பையன் என்று
நினைத்துக் கொண்டிருக்கிறாயா? பார் உனக்கு கல்யாணம் ஆகிவிட்டது. வள்ளி
தெய்வயானை பக்கத்தில் இருக்கிறார்கள். 'அன்னமும் மஞ்சையும் போலே இரு பெண்
பிள்ளை கொண்ட ஆண்பிள்ளை நீயல்லவோ. அதனால் இனிமேல் உன்னிடம் சின்னப்பையன்
என்று நினைத்து கேட்கமாட்டேன். உனக்கு வயது வந்து விட்டது. எனக்கு நீ
நல்லது செய்தாக வேண்டும்' என்கிறார்.
ஒருத்தருக்கு அவர் பெரிய ஆளாக
நின்று தனக்கு அனுக்கிரகம் பண்ணவேண்டும் என்று தோன்றுகிறது.
இன்னொருத்தருக்கு 'நீ சின்னக் குழந்தையாக இருந்தாலும் எனக்கு இதெல்லாம்
கொடுத்துவிடுவாய் மோட்சமும் தருவாய்' என்று தோன்றுகிறது. அதுதான் கடவுளுடைய
நிலை என்பது.
கடவுளுக்கு எந்த நிலையும் அல்ல. எந்த வயதும் அல்ல.
எந்த ஊரும் அல்ல. நீ எந்த உறவில் வேண்டுமானாலும் கடவுளை வைத்துக்
கொள்ளலாம். தனக்குப் பிடித்த அவரவர்களுக்கு ஒரு relationship கடவுளிடத்தில்
வரும். அதற்குப் பல காரணங்கள். முன் பிறவியில் எப்படி பூஜை செய்து
கொண்டிருந்தாயோ அப்படி உனக்கு விட்ட குறை தொட்ட குறை. உனக்குக்
கடவுளிடத்தில் எந்த மாதிரி எண்ணங்கள் இருந்தனவோ அப்படி வரும்.

Similar topics
» சாய் பாபா வரலாறு தமிழில்
» ஷிர்டி சாய் பாபா சத் சரித்திரம்.MP3 Audio Book
» சீரடி சாயி பாபா வாழ்க்கை வரலாறு ! (வீடியோ இணைப்பு)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum