Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்by vpoompalani March 24th 2016, 13:59
» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26
» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17
» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06
» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07
» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58
» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24
» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35
» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52
» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18
» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47
» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19
» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46
» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49
» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37
» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07
» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29
» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38
» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55
» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00
» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49
» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28
» திருத்தல யாத்திரை ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51
» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33
» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46
» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28
» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13
» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29
» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15
» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10
» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29
» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54
» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38
» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42
» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32
» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01
» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20
» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00
புண்ணியம் என்பது என்ன?
Page 1 of 1
புண்ணியம் என்பது என்ன?
[You must be registered and logged in to see this link.]
புண்ணியம் என்பது என்ன?
நமது இந்து சமயத்தில் பல பிறவிகள் உண்டு என்பது எல்லோருக்கும் உள்ள நம்பிக்கை.
நாம் அடுத்த பிறவியில் எப்படிப் பிறப்போம் என்பது யாருக்கும் தெரியாது.
இது ஒருவிதத்தில் நல்லது தான்.அதே போல முன்பிறவியில் எப்படிப் பிறந்து இருந்தோம் என்பதும் நமக்குத் தெரியாது. இதுவும் நல்லது தான்.
முன் பிறவியில் எப்படிப் பிறந்து இருந்தாலும், அடுத்த பிறவியாவது எடுக்கக் கூடாது என்பதில்
நமது முன்னோர்கள் வைராக்கியமாக இருந்தார்கள். அதற்கு இந்தப் பிறவியில் என்ன செய்யவேண்டும்
என்பதை நமக்குச் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்கள்.
புண்ணியம் என்ன கடையில் போய் வாங்கிவிடலாமா? கிலோ என்ன விலையில் கிடைக்கும்?
ஆன்றோர்கள் புண்ணியத்தை பெற பல வழிகள் உள்ளன என்கிறார்கள்.
இம்மையில் செய்யும் பல தானங்கள் மறுமையில் புண்ணியத்தைக் கொடுக்குமாம்.
எனவே அடுத்த பிறவியிலாவது நல்லவனாக வாழ இப்பிறவியில் நன்மை செய்யவேண்டும் .
பணம் படைத்தவர்கள் அவற்றை நல்ல முறையில் செலவழிக்க செலவழிக்க புண்ணியத்தை சேர்க்கலாம்.
ஒரு ஏழை மாணவனுக்கு படிப்புக்கு அந்தப் பணத்தை செலவழிப்பதன் மூலம் இப்பிறவியில் புண்ணியத்தை சேர்க்கலாம்.
பாரதியார் கூட இதைப் பற்றி பாடியுள்ளார்.
கனிகள் தரும் சோலைகள் உண்டாக்குதல்,
நீர் தரக்கூடிய சுனைகள் அமைத்தல்,
ஆயிரம் அன்ன சத்திரம் ஆயிரம் கட்டுதல்
பதினாயிரம் ஆலயங்கள் கட்டுதல் போன்றவற்றைக் காட்டிலும்
ஒரு ஏழைக்கு படிப்புக்கு அந்தப் பணத்தை செலவழித்தல்
கோடிப புண்ணியத்திற்குச் சமம் என்று பாரதியார்
தன்னுடைய "வெள்ளைத்தாமரை" என்று தொடங்கும் பாடலில் பின்வருமாறு கூறியுள்ளார்.
இன்ன றுங்கனிச் சோலைகள் செய்தல்
அனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல்;
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆல யம்பதி னாயிரம் நாட்டல்.
பின்ன ருள்ள தருமங்கள் யாவும்
பெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல்,
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல்
அது சரி, பணம் இல்லாதவன் என்ன செய்வது?
நல்ல முறையில் பணத்தை செலவழிப்பவனை தடுக்காமல் இருந்தாலே அதுவே ஒரு புண்ணியம் தான்.
நாஸ்திகன் செய்த புண்ணியம்
கடவுள் இல்லை என்று சொல்லக்கூடிய ஒருவன்,ஆனால் மனிதனேயம் உள்ள மனிதன்,
தன்னுடைய வீட்டின் வாசலில் திண்ணை ஒன்று கட்டி இருந்தான்.
அதில்,வருபவர் போவர் எல்லோரும் தங்கட்டும் என்று நினைத்து அமைத்து இருந்தான்.
ஒரு நாள் ஒரு வழிப்போக்கன் தங்கி இரவு இளைப்பாரி விடடு காலை அங்கிருந்து புறப்பட்டுச் சென்றான்.
போகும் போது,'இந்தப் புண்ணியவான் நன்றாக இருக்கட்டும். இரவு தங்குவதற்கு
இடம் இல்லாமல் தவித்தபோது இந்தத் திண்ணைதானே உதவியது,அவன் குலம்
வாழட்டும், அவன் நன்றாக இருக்கட்டும்" என்று மனதார வாழ்த்திச் சென்றான்.
இதைப் பார்த்த வீட்டு முதலாளி திக்கித்து நின்றான்.இதைத் தான் 'நாம் ஒன்று
நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கிறது"
என்று சொல்வார்கள்.
கடவுள் அவன் நினைக்காமலேயே அவன் கணக்கில்
புண்ணியத்தைச் சேர்த்தான்.
தொண்டரடிப் பொடியாழ்வார்
வேத நூல்பிராயம் நூறு* மனிசர் தாம் புகுவரேலும்*
பாதியும் உறங்கிப் போகும்* நின்றதில் பதினையாண்டு*
பேதை பாலகனதாகும்* பிணி பசி மூப்புத் துன்பம்*
ஆதலால் பிறவி வேண்டேன்* அரங்கமாநகருளானே.
தொண்டரடிப் பொடியாழ்வார் தனது திருமாலையில் மேற்கண்டவாறு கூறுகிறார்.
மனிதர்களின் வாழ்வு நூறு ஆண்டுகள் என்று கொண்டால்,
அதில் பாதி ஆண்டுகள் தூக்கத்திலேயே போய்விடுமாம்.
குழந்தைப் பருவம் பதினைந்து ஆண்டுகள் போய்விடுமாம்.
மீதி ஆண்டுகள் வியாதிகள்,பசி துன்பம், மூப்பு
இவை மீதி ஆண்டுகள். இப்படி இருக்கும் போது உன்னை எங்கே நினைக்கபோகிறேன்.
ஆதலால் இனி எனக்குப் பிறவி வேண்டேன். அரங்கனாதா!
இப்படி, இருக்கும் காலத்திற்குள் புண்ணியத்தை சம்பாதிக்க வேண்டும் என்று ஆழ்வார்கள்
அன்றைக்கே பாடி வைத்து விட்டுப் போயிருக்கிறார்கள்.
கர்ணன் செய்த புண்ணியம்
கர்ணனைப் பற்றி ஒரு கதை உண்டு.பாரதப் போரில் கர்ணன் துரியோதனன் பக்கம்.
துரியோதனன் எவ்வளவு கெட்டவனாக இருந்தாலும், செஞ்சோற்றுக் கடனுக்காக அவன் பக்கம் இருந்தான்.
பாரதப் போரின் பதினேழாவது நாள். கிருஷ்ணன் பார்த்தசாரதியாக தேரை ஒட்டி வருகிறான்.
அர்ச்சுணன் கிருஷ்ணனிடம் "கர்ணனை கொல்வது மிகக் கடினமாக உள்ளதே?" என்று கேட்கிறான்.
கிருஷ்ணன் "கர்ணனைக் கொல்வது அவ்வளவு சுலபம் என்று நினைத்தாயா?
அவனை இதற்கு முன் எத்தனை பேர் கொன்றிருக்கிறார்கள் தெரியுமா? என்னமோ நீதான்
அவனைக் கொல்லப் போகிறேன் என்று மார்தட்டி நினைக்காதே. அவன் செய்த
புண்ணியம் அவனைக் அவ்வளவு எளிதாகக் கொல்ல விடாது. பட்டியல் போடுகிறேன்
கேள்" என்று கிருஷ்ணன் அர்ச்சுனனிடம் கர்ணனைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தான்.
"எல்லோருக்கும் மாதா, பிதா,குரு தெய்வம் என்று நால்வரும் எப்போதும் துணை
இருப்பார்கள். ஆனால் கர்ணனுக்கு ஒருவரும் துணையில்லை. பாருங்களேன்,தந்தை
சூரியன் குந்திக்கு குழந்தையைக்
கொடுத்து விட்டு சென்றுவிட்டான் . குந்தியான
தாய் கர்ணனைப் பெற்று ஊருக்கு பயந்து, குழந்தையை ஒரு பெட்டியில் ஆற்றில்
விட்டுவிட்டாள். இவர்கள்தான் இப்படி என்றால் குரு பரசுராமரைப்
பாருங்கள்.எல்லா வித்தைகளையும் சொல்லிக் கொடுத்துவிட்டு
அவை எல்லாம் மிக முக்கியமான தருணத்தில் மறந்து விடுவாய் என்று கைகழுவி விட்டார்.
தெய்வத்தைப் பாருங்கள் .அது தான் கர்ணனின் புண்ணியத்தை எல்லாம்
கடைசி நேரத்தில் கிருஷ்ணனின் வடிவில் யாசகமாக
பெறத் தயாராக உள்ளார்.
பெற்றவுடன் தாயால் கைவிடப்பட்டதில் இருந்து கடைசியாக இறக்கும் தருவாய்
முடிய எல்லா இடங்களிலும் அவனைக் கைவிட்டவர்கள் கைவிடாதது அவன் செய்த
புண்ணியம் ஒன்றுதான்.
ஆம் பிறந்ததில் இருந்து யார் வந்து கேட்டாலும் இல்லை என்று ஒருபோதும் சொன்னதில்லை.
அந்தப் புண்ணியம் இருக்கும் வரை அவனை நீயோ நானோ ஒன்றும் செய்யமுடியாது.எனவே
அவனிடம் உள்ள புண்ணியத்தை முதலில் வாங்கிவருகிறேன்" என்று அர்ச்சுனனுக்கு
சொல்லிவிட்டு கிருஷ்ணன் யுத்தகளத்தை விட்டு நகர்ந்தான்.
ஒரு வயதான அந்தணர் வடிவத்தை எடுத்துக் கொண்டு தேர்க்காலில் வீழ்ந்து
கிடக்கும் கர்ணனிடம் போய் "கர்ணா, நான் எல்லா இடங்களையும் சுற்றிப்
பார்த்துவிட்டு புண்ணியம் சேர்த்துக் கொண்டுவருகிறேன்.
அப்போது உன்னிடத்தில் உள்ள புண்ணியத்தை கேட்டு தானம் பெறலாம் என்று வந்துள்ளேன்" என்று இறைஞ்சுகிறான்.
மரணத் தருவாயில் உள்ள கர்ணன் வந்த வயதான அந்தணரைப் பார்த்து, "பெரியவரே,நல்ல சமயத்தில் தான் வந்துள்ளிர்கள்,
இறக்கும் தருவாயில் உங்களுக்குக் கொடுப்பதற்கு என்னிடம் ஒன்றும் இல்லை
என்று நினைத்திருந்தேன். நீங்களே எனக்கு உதவி உள்ளீர்கள், இப்போதே நான்
இதுவரை சம்பாதித்த,
இனிமேலும் சம்பாதிக்கும் எல்லா புண்ணியத்தையும் தானமாக கொடுத்தேன்"
என்று மார்பில் பாய்ந்திருந்த அம்பினை உருவி அதில் இருந்து வெளியேறிய குருதியை நீராகப் பயன்படுத்தி கண்ணனுக்கு தானமாகக் கொடுத்தான்.
ஆச்சர்யத்துடன் கர்ணனைப் பார்த்து "கர்ணா,உன்னுடைய இந்தச் செயல் என்னை நெகிழச்செய்துவிட்டது
நீ மிகவும் உயர்ந்து விட்டாய் நான் உண்மையில் வயதான அந்தணன் இல்லை. நான் கிருஷ்ணன்,
உனக்கு என்ன வரம் வேண்டும்" என்று வினவினான்.
"நான் எப்பிறப்பு எடுத்தாலும் தருமம் என்று கேட்டு என்னிடம் வருபவர்களுக்கு
கொடுப்பதற்கு ஒன்றும் இல்லை என்று சொல்லக்கூடிய
மனத்தை கொடுத்துவிடாதே" என்று கிருஷ்ணனிடம் மன்றாடினான்.
கிருஷ்ணனும் அவ்வாறே தந்தான்.
இவ்வாறு புண்ணியத்தைச் சம்பாதித்தான் கர்ணன்.
புண்ணியத்தை சம்பாதிக்க தீர்த்த யாத்திரை போகலாம்.தீர்த்த யாத்திரை போனவர்களை வணங்கலாம்
நல்ல உபன்யாசங்களை கேட்கலாம். பெரியவர்களை, சாதுக்களை வணங்கலாம்
இந்த மாதிரி பல வகையிலும்
புண்ணியத்தை சம்பாதித்து மறுபிறப்பிலாவது நல்லவனாக இருக்க முயற்சிப்போம்.

Similar topics
» என்ன கோலம் போட்டால் என்ன பலன் கிடைக்கும் தெரியுமா?
» சாளக்கிராமம் என்பது என்ன?
» குண்டலினி சக்தி என்பது என்ன?
» உலகின் பெரிய வழிபாட்டுத்தலம் எது என்பது உங்களுக்கு தெரியுமா ? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா ?
» அம்மனுக்கு என்ன அபிஷேகம் செய்தால் என்ன பலன் கிடைக்கும்?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum