Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்by vpoompalani March 24th 2016, 13:59
» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26
» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17
» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06
» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07
» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58
» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24
» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35
» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52
» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18
» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47
» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19
» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46
» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49
» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37
» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07
» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29
» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38
» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55
» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00
» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49
» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28
» திருத்தல யாத்திரை ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51
» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33
» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46
» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28
» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13
» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29
» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15
» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10
» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29
» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54
» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38
» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42
» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32
» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01
» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20
» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00
குழந்தை வரம் தரும் திருத்தலம்-பிரியா கல்யாணராமன்
Page 1 of 1

கர்ப்பவதி கோலத்தில் மேடிட்ட வயிற்றுடன் சீதா தேவியை எங்காவது நீங்கள் தரிசனம் செய்திருக்கிறீர்களா?
அப்படிப்பட்ட
அபூர்வ சீதையின் முன் நின்று, கண் மூடிப் பிரார்த்தனை செய்தாலே குழந்தை
வரம் கிட்டும் என்ற உணர்வு ஒவ்வொருவருக்கும் தோன்றும்.
சீதைக்குப் பிரசவம் நிகழ்ந்த தலம் இதுதான் என்பதால், நம்பிக்கை மேலும் பலப்படும். கருப்படும். உருப்படும்.
சீதா-ராமனின்
குழந்தைகளான லவனும் குசனும் வழிபட்ட கோயம்பேடு குறுங்காலீஸ்வரரை சென்ற
வாரம் தரிசித்தோம் அல்லவா? அந்தக் கோயிலுக்கு அருகிலேயே அமைந்திருக்கிறது
இந்த வைகுண்ட வாசன் திருக்கோயில்.
சிவன் கோயில் வடக்குப் பார்த்தபடி
இருக்கிறது என்றால், இந்தப் பெருமாள் கோயில் கிழக்குப் பார்த்தபடி 115 அடி
நீளத்துடனும் 188 அடி அகலத்துடனும் அழகுற அமைந்திருக்கிறது. உள்ளே
நுழைந்ததும் காணப்படும் தசாவதாரக் காட்சி பரவசப்படுத்துகிறது. எதிரில் லவ
குசர்கள் நீராடிய திருக்குளம். குளக்கரை வாசலில் ஆஞ்சநேயர் ஆலயமும்
அமைந்துள்ளது.
பெருமாள் கோயில்களில் எல்லாம் வருடத்திற்கு ஒருமுறை
வைகுண்ட ஏதாதசியன்று மட்டும் சொர்க்கவாசல் புறப்பாடு நடக்குமே! அந்த
வைகுண்ட வாசன்தான் இந்த ஆலயத்தில் வருடம் பூராவும் பக்தர்களுக்கு அருளாசி
வழங்குகிறார்.
வைகுண்டவாசன் என்றாலே ஆதிசேஷன் மீது அமர்ந்த
நிலையில்தான் காட்சி தருவார். ஆனால் இங்கே ஷ்ரீதேவி, பூமாதேவியுடன் நின்ற
திருக்கோலத்தில் அருள்புரிவது, மிகுந்த சிறப்பானதாகும்.
ஏன் இப்படி?
வால்மீகி
முனிவர் வைகுண்டவாசனைத் தியானித்த போது, பெருமாள் உடனடியாக வந்து
அருள்பாலித்தார். அதாவது அமரக் கூட நேரமாகுமே என்று விரைந்து வந்து நின்ற
கோல தரிசனம். அத்தனை மகிமை வாய்ந்த வைகுண்ட வாசப் பெருமாளை வணங்கினால்,
நினைத்ததெல்லாம் நடக்கும்.
108 லட்சுமி ஹார மாலையும், 108
சாளக்கிராம மாலையும் அணிந்து கம்பீரமாகத் தாயார்களுடன் காட்சி தரும்
பகவானைப் பார்த்தாலே பரவசமாக இருக்கிறது!
கர்ப்பவதியாக மட்டுமல்ல, கோடாலிக் கொண்டையுடனும் சீதை இங்கே காட்சி தருகிறாள்!
சக்ரவர்த்தித்
திருமகனான ராமபிரானைப் பட்டாபிஷேகக் கோலத்துடன் பலகோயில்களில்
பார்த்திருப்பீர்கள். இங்கே கிரீடமோ, ஆபரணங்களோ இல்லாமல் மரவுரி தரித்த
கோலத்தில் ராமரைக் காணலாம்.
காரணம் என்ன? மகன்களுடன் வால்மீகி
முனிவரின் ஆசிரமத்தில் வசித்து வந்த சீதை, ராணி அலங்காரமெல்லாம் இல்லாமல்
கோடாலிக் கொண்டை முடிச்சுடன் சராசரி பெண்ணாகக் காட்சி தருவதால், ராமரும்
மனம் நெகிழ்ந்து, எளிய கோலத்தில் காட்சி தருகிறார்.
அதுமட்டுமா? எல்லாக் கோயில்களிலும் காணப்படுவது போல ராமரின் பக்கத்தில் லட்சுமணனோ, ஆஞ்சநேயரோ கிடையாது.
ஏன்?
நெடுங்காலம் பிரிந்திருந்து ஒன்று சேர்வதால் சீதையும் ராமரும் ஏகாந்தமாக
இருக்கட்டும் என்று லட்சுமணனும், அனுமனும் நகர்ந்து விட்டார்கள்?!
கர்ப்பிணி
சீதாப்பிராட்டிக்குப் பக்கத்தில், ஒரே கல்லில் உருவான, பவ்யமே உருவாக
லவனும் குசனும் வால்மீகி முனிவரின் பக்கத்தில் நிற்கும் காட்சியும் பரவசம்
தரத்தக்கது.
பிராகாரத்தில் இரண்டு வில்வ மரங்களுக்கு இடையில் ஒரு
வேப்பமரம் பின்னிப் பிணைந்து வளர்ந்திருக்கிறது. வேப்பமரம், பார்வதி.
வில்வமரங்கள் சிவனும் விஷ்ணுவும், அதாவது விஷ்ணு தன் தங்கையை சிவனுக்குத்
திருமணம் செய்து கொடுத்ததையே இந்த மரங்கள் மெய்ப்பிப்பதாக நம்பிக்கை.
திருமணத்திற்கும் குழந்தைப் பேற்றிற்கும் இங்கே பக்தர்கள் பிரார்த்தனை
செய்கிறார்கள்.
கனகவல்லித்தாயார், ஆண்டாள், ஆழ்வார்கள் ஆகியோரும் இந்த ஆலயத்தில் காட்சி தருகிறார்கள்.
அர்த்த
மண்டப நுழைவாயிலின் அருகே சுரங்கப்பாதை ஒன்று அமைந்துள்ளது. மாலிக்காபூர்
படையெடுப்பின் போது, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலிலுள்ள
உற்சவர்களைப் பாதுகாப்பதற்காக, வனப் பகுதியாக இருந்த இங்கே சுரங்கப்பாதை
மூலம் கொண்டு வந்து வைத்ததாகச் சொல்லப்படுகிறது.
கோயில் பூஜைகள்,
ஆகமத்தை வழிமுறைப்படுத்திய விகனஸ ஆசார்யாரும் இங்கே அருள்பாலிக்கிறார்,
அவருக்கான உற்சவ உபயத்தை பட்டாசார்யார்களே ஏற்றுக் கொள்கிறார்கள்.
சிவாலயமும்,
பெருமாள்கோயிலும் அருகருகே அமைந்து சைவ-வைணவ ஒற்றுமையைப் பறைசாற்றுகின்றன.
சிவன் கோயிலின் தலமரமான குறும்பலா மரம், பெருமாள் கோயிலில் காணப்படுவதும்
ஒற்றுமைக்கு ஓர் உதாரணம்.
குழந்தை வரம் வேண்டுமா?
சுகப்பிரசவம் ஆக வேண்டுமா?
வீர தீரமான குழந்தைகள் உங்களுக்குப் பிறக்க வேண்டுமா?
உடனே
கோயம்பேடு வைகுண்டவாசப் பெருமாள் கோயிலுக்குச் செல்லுங்கள். லவன், குசன்
மாதிரி இரட்டைக் குழந்தைகள் பிறக்கவும் வாய்ப்புண்டு. ஜாக்கிரதை!
``வைகுண்டவாசப் பெருமாள் கோயில் எங்கிருக்கிறது?''
``கோயம்பேடு மார்க்கெட்டிலிருந்து பத்து நிமிடத் தொலைவு, குறுங்காலீஸ்வரர் கோயில் அருகில்.''
``கோயில் எப்போது திறந்திருக்கும்?''
``காலை 7-10.30, மாலை 5-8.30''
``சிறப்புகள்?''
``மக்கட் பேறு மற்றும் வீடுபேறு.''

Similar topics
» குழந்தை வரம் பெற விரும்பும் தம்பதியினருக்கு
» இருதய நோய் உள்ளவர்கள் கட்டாயம் செல்ல வேண்டிய ஆலயம்-ப்ரியா கல்யாணராமன்
» வேண்டிய வரம், செல்வம் தரும் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர்
» விளக்கேற்றினால் குழந்தை பாக்கியம் தரும் மடப்புரம் காளி
» சித்திரை மாதத்தில் குழந்தை பிறந்தால் சித்தரவதையா ? வெள்ளி கிழமை ஆண் குழந்தை பிறந்தால் குடும்பம் விளங்காதா ?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum