Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்by vpoompalani March 24th 2016, 13:59
» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26
» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17
» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06
» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07
» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58
» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24
» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35
» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52
» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18
» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47
» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19
» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46
» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49
» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37
» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07
» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29
» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38
» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55
» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00
» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49
» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28
» திருத்தல யாத்திரை ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51
» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33
» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46
» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28
» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13
» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29
» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15
» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10
» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29
» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54
» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38
» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42
» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32
» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01
» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20
» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00
தீபாவளி கொண்டாடுவது ஏன் தெரியுமா?
Page 1 of 1
தீபாவளி கொண்டாடுவது ஏன் தெரியுமா?
தீபாவளியன்று எண்ணெய் தேய்த்துக் குளிப்பது காலங்காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் நடைமுறையாக இருந்து வருகிறது.
தீபாவளியன்று அதிகாலையில் மேற்கொள்ளப்படும் எண்ணெய்க் குளியலை `கங்கா ஸ்நானம்' என்று கூறுகிறோம்.
அஞ்ஞானம் என்னும் `இருள்' மறைந்து மெய்ஞானம் என்னும் `ஒளி' பிறப்பதை உணர்த்தும் வகையில் அதிகாலையில் இருள் மறைந்து வெளிச்சம் தோன்றும் போது இந்தப் பண்டிகையை கொண்டாடுகிறோம். நரகாசுரனை கிருஷ்ண பரமாத்மா அழித்த நேரம் அதிகாலை என்பதால் தீபாவளி திருநாளன்று அதிகாலையில் எண்ணெய் தேய்த்து குளிக்கிறோம். தீபாவளி அன்று எண்ணெயில் தனத்திற்கு அதிபதியான லஷ்மியும், வெந்நீரில் கங்காதேவியும் வாசம் செய்வதாக புராணங்கள் கூறுகின்றன. எனவே தான் இந்த எண்ணெய்க் குளியலை `கங்கா ஸ்நானம்' என்று கூறுகிறோம்.
கங்கை நதியில் குளிப்பதற்கு ஒப்பாக தீபாவளி எண்ணெய்க் குளியல் கருதப்படுகிறது. இந்த நாளில் காசியிலுள்ள கங்கையாற்றில் நீராடி அங்குள்ள விஸ்வநாதர் - விசாலாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்று வழிபடுவதையும் பலர் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
தீபாவளி அன்று வீட்டின் பல பகுதிகளிலும் தீபங்களை ஏற்றிவைத்து மகாலஷ்மியை தியானித்து வழிபட வேண்டும். மாலையில் வீட்டிற்கு வெளியே விளக்குகளை ஏற்றிவைத்தல் அவசியம். தீபாவளி அன்று குறைந்தது 21 விளக்குகளையாவது ஏற்றிவைக்க வேண்டும் என்பது மரபு.

Re: தீபாவளி கொண்டாடுவது ஏன் தெரியுமா?
புதிய பொருட்களை வாங்குவதற்கும், வர்த்தக, வியாபார நிறுவனங்களை தொடங்குவதற்கும் உகந்த நாளாக தீபாவளி கருதப்படுகிறது. சிலர் இந்த நாளில் தங்கள் நிறுவன கணக்குகளையும் புதிதாகத் தொடங்குவார்கள்.
புதிய நகைகள் வாங்குவது, புதிய ஆடைகள் வாங்குவது உள்பட இனிப்புகள், பலகாரங்களுடன் இந்த பண்டிகையை உவகைபொங்க கொண்டாடுகிறோம். தீமை அழிந்து மகிழ்ச்சி ஏற்பட்ட நாளைக் குறிக்கும் விதமாகவே தீபாவளி நாளில் பட்டாசுகளையும் ஒளிரச் செய்து மகிழ்கிறோம்.
தீபாவளிப் பண்டிகையன்று அதிகாலையில் எழுந்துவிடுவதுடன் இரவிலும் அதிக நேரம் கழித்தே தூங்கச் செல்கிறோம்.
வனவாசத்திற்குப் பின்னர் ராமர் மீண்டும் அயோத்தி வந்து அரச பொறுப்பை
ஏற்ற நாளாகவும், தீபாவளி கொண்டாடப்படுகிறது.
நாம் தீபாவளிக்கு முன்பே பட்டாசுகளை வாங்கிக் குவித்துவிட்டு அதனை வெடிக்கத் துவங்கிவிடுவோம். தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பதையே முழு நேர வேலையாகக் கொள்வோம்.
ஆனால் வட இந்தியர்கள் தீபாவளியை 5 நாட்களுக்குக் கொண்டாடுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

நரகாசுரன் என்ற அரக்கன் ஒருவன் இருந்தான். அவனுக்கு இந்த மூவுலகமும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து தன் விருப்பத்திற்கு அனுபவிக்க வேண்டும் என்ற பேராசை இருந்தது. தேவர்கள் கூட தன் காலடியில் கிடக்க வேண்டும் என்ற நப்பாசை இருந்தது.
இந்த ஆசைகளை நிறைவேற்ற பிரம்மனை நோக்கி கடும் தவம் இருந்தான் நரகாசுரன்.
இதனை பார்த்த பிரம்மன், தனக்காக தவம் இருந்த நரகாசுரனுக்கு அவன் கேட்கும் வரங்களை அள்ளி அள்ளி கொடுத்தார். ஒரு கெட்டவனுக்கு பதவி கிடைத்தால் எப்படியெல்லாம் பயன்படுத்துவானோ அப்படியெல்லாம் பயன்படுத்திக் கொண்டான் நரகாசுரன்.
எல்லோருக்கும் துன்பம் விளைவித்து வந்த நரகாசுரன், தேவர்களையும் முனிவர்களையும் அவன் கொடுமைப்படுத்தினான். அதுமட்டுன்றி தனக்கு வரம் கொடுத்த பிரம்மனை எதிர்த்தே போர் தொடுத்தான் நரகாசுரன்.
வரத்தை கொடுத்து விட்டு நரக வேதனைகளை அனுபவிக்க வேண்டி இருக்கிறதே என்று புலம்பினார் பிரம்மன். காக்கும் கடவுளான கிருஷ்ண பகவானிடம் தன் குறைகளை கூறி முறையிட்டார்.
இதனால் கிருஷ்ண பகவான் நரகாசுரனை அணுகி, தவம் செய்து பெற்ற வரத்தை தவறான வழியில் செயல்படுத்துவது நியாயம் அல்ல என்று முறையாக சொல்லி பார்த்தார்.
ஆனால் நரகாசுரன் கேட்பதாக இல்லை. தன் விருப்பம் போல் மக்களை கொடுமைப்படுத்தினான். இதனால் கோபம் அடைந்த கிருஷ்ண பகவான், நரகாசுரனை போருக்கு அழைத்து தம் சக்கராயுதத்தால் அவனின் உடலை இரண்டாக பிளந்தார்.
இறக்கும் நிலையில் இருந்த நரகாசுரன், கிருஷ்ணனின் காலை பிடித்து, பகவானே என்னுடைய சாவு கெட்டவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும். நான் செய்த பாவங்களை மன்னித்து விடுங்கள் என்று கெஞ்சினான்.
இறக்கும் நிலையில் உள்ள எனக்கு ஒரு ஆசை. அதை இப்போது தெரிவிக்கிறேன் என்று சொன்ன நரகாசுரன், கொடியவனாக நான் இறக்கும் இந்நாளை மக்கள் அனைவரும் அல்லல் நீங்கிய நன்நாளாக மங்களகரமான நாளாக கொண்டாடி மகிழ வேண்டும் என்று வேண்டினான்.
கிருஷ்ண பகவானும் அவ்வாறே அவனுக்கு அருளினார். இதனால் தான் நரகாசுரன் இறந்த நாளைத்தான் இந்துக்கள் தீபாவளியாக கொண்டாடி வருகின்றனர் என்று ஜதீகம் கூறுகிறது.
இந்த நன்நாளில் அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை அணிந்து பல வகை பண்டங்கள் செய்து பட்டாசு வெடித்து கொண்டாடி வருகிறோம்.
தீபாவளி இங்கு மட்டும் கொண்டாடப்படுவதில்லை. உலகம் முழுவதும் இந்த பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
ராமபிரான் இலங்கை சென்று ராவணனோடு கடும் போர் புரிந்து, தனது இல்லாளான (மனைவி) சீதா பிராட்டியாரை மீட்டுக் கொண்டு அயோத்திக்கு திரும்பி வந்தார்.
தன் வனவாசம் முடிந்து நாட்டை ஆள வரும் வெற்றி வீரர் ராமரை வரவேற்க மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக தீபங்களை ஏற்றி கொண்டாடினார்கள்.
அதனால்தான் தீபாவளி அன்று திருவிளக்குகளை வரிசையாக ஏற்றி வைக்கும் வழக்கம் ஏற்பட்டதாக கூறுவார்கள்.

தீபாவளியை நரக சதுர்தசி என்றும் அழைப்பார்கள். ஐப்பசி மாதத்தில் சூரியன் துலா ராசியில் இருப்பார். அப்போது தேய் பிறையான (கிருஷ்ண பட்சம்) 14ஆம் நாளில் கொண்டாடப்படும்.
திரியோதசி இரவு சதுர்தசி காலை கொண்டாடப் பெறுவதினால் இதற்கு நரக சதுர்த்தசி என்று வழங்கப்படுகிறது.
தீபாவளிப் பண்டிகையின் அடிப்படையே கெட்ட சக்திகள் விலகி தனிமனிதர், சமூக வாழ்க்கையில் அமைதியும் சுபிட்சமும் ஏற்படுவதற்கான துவக்கமாக கருதப்பட்டு நம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
பஞ்ச பூதங்களில் ஒன்றான நெருப்பை இறையொளியின் அம்சமாக தீபங்களாக ஏற்றிவைத்து வழிபடுவது நமது நாட்டில் தீபாவளித் திருநாளன்று தொன்று தொட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
எங்கும் ஒளிபிறந்து அறியாமை, அகங்காரம், கோபம் போன்ற எதிர்குணங்கள் அழிய வேண்டும் என்பதே தீப ஒளி ஏற்றி கொண்டாடுவதன் அர்த்தமாகும்
தீபங்களை ஏற்றி தீபாவளியைக் கொண்டாடும் பழக்கம் நமது தமிழ்நாட்டில் கடைபிடிக்கப்படுவதில்லை எனினும், ராஜஸ்தான், குஜராத், மராட்டியம் ஆகிய மாநிலங்களில் ஒவ்வொரு வீடும் ஒளியாமல் மிளிரும் அளவிற்கு தீபங்களை ஏற்றுகின்றனர்.
தீபாவளி அன்று லக்ஷ்மி, குபேர புஜை செய்வது விசேடமாகும். ஐப்பசி மாத சதுர்தசி திதியில் இப்பூஜையை செய்வது மிகுந்த பலனளிக்கக் கூடியது.

அதன்படி மணமக்களும் தீபாவளிக்கு முன் தினமே பெண்ணின் வீட்டிற்குச் செல்வர்.
தீபாவளி அன்று அதிகாலை 4 மணிக்கு முன்பே எழுந்து அந்த பெண்ணும், அவளது கணவரும் எண்ணெய் வைத்து குளித்து முடித்து புத்தாடை அணிவர்.
பூஜைகள் செய்து, பெற்றோரின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய பின்னர் இனிப்புகள் உண்டு மகிழ்வர். அவர்கள் ஜோடியாக பெண்ணின் குடும்பத்தாருடன் பட்டாசுகளைக் கொளுத்தி மகிழ்வர். மணமகன் தன் மனைவியின் குடும்பத்தாருடன் தீபாவளியை கொண்டாடுவதுதான் தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் தலை தீபாவளி.
பெண் எடுத்த வீட்டில் மணமகனும் ஒரு அங்கத்தினர் தான் என்பதை கூறும் வகையிலும், பெண்ணை தங்கள் வீட்டிற்கு அனுப்பிய சம்பந்தி வீட்டிற்கு தீபாவளி அன்று தனது மகனை உங்களது மகனாக ஏற்றுக் கொள்ளும்படியாக அனுப்பி வைத்து பெற்றோர்கள் ஒருவருக்கொருவர் உறவு பாராட்டிக் கொள்வதும் இந்த தலை தீபாவளியின் வழக்கமாகும்.
தீபாவளி என்றால் தீபங்களின் வரிசை என்று பொருள் உண்டு. இந்தநாளில் தீபங்களை வரிசையாக வைத்து மகிழ்ந்து கொண்டாடுவார்கள்.

Similar topics
» ஆடிப்பெருக்கு திருவிழா கொண்டாடுவது ஏன்?
» வெற்றி திருநாளான விஜயதசமி கொண்டாடுவது ஏன்?
» உலகின் பெரிய வழிபாட்டுத்தலம் எது என்பது உங்களுக்கு தெரியுமா ? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா ?
» 9ன் சிறப்பு தெரியுமா?
» வீட்டிற்குள் நுழையக்கூடாத ஆமை எது தெரியுமா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum