Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்by vpoompalani March 24th 2016, 13:59
» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26
» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17
» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06
» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07
» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58
» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24
» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35
» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52
» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18
» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47
» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19
» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46
» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49
» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37
» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07
» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29
» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38
» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55
» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00
» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49
» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28
» திருத்தல யாத்திரை ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51
» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33
» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46
» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28
» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13
» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29
» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15
» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10
» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29
» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54
» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38
» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42
» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32
» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01
» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20
» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00
கடவுளை காட்டியவர்
Page 1 of 1
கடவுளை காட்டியவர்
ஆதிசங்கரர் உலகத்தை மாயை கனவுபோன்ற இல்லாத பொருள் என்று அத்வைத சித்தாந்தம் பேசுகிறார் அவரைப்போன்றே ஞானமும் தவமும் கொண்டவர் ஸ்ரீராமானுஞர் அவர் உலகத்திற்கு தந்த தத்துவம் விஷிஸ்டாத்வைதம் அக்கொள்கை என்னவென்று அறிந்து கொள்ள சில வினாக்களை யோகி ஸ்ரீ ராமானந்த குருவிடம் கேட்டேன் அதற்கு அவர்....
குருஜி: நீ கண்களால் காணும் தொடுஉணர்வால் நுகரும் இந்த உலகம் பொய்யல்ல நிஜம் என்று ராமானுஜர் கூறுகிறார். ராமானுஜரின் உலகம் உண்மையென்ற இந்த தத்துவம் சங்கரரின் ஒருமைவாதமான அத்வைதத்திற்கு முற்றிலும் மாறுபட்டது. ஆதி சங்கரரின் ஒவ்வொரு கருத்தையுமே எதிர்க்கக்கூடிய கருத்துகளை ஸ்ரீ ராமானுஜர் வெளியிட்டுள்ளார்.
கேள்வி: உலகத்தை உண்மையென்று சொல்லும், வாழ்க்கையை நிஜம் என்று கருதும் ஸ்ரீ ராமானுஜரின் திவ்யமான கருத்துகளை அறிந்து கொள்ள ஆவலோடு இருக்கிறேன். அதை முழுமையாகக் கூற வேண்டுகிறேன்?
குருஜி: பொதுவாக இன்று நிறைய மனிதர்கள் தத்துவம், சித்தாந்தம், கொள்கைகள் என்பதெல்லாம் வேறு, மதம் என்பது வேறு என்று கருதி வருகிறார்கள் அதாவது தத்துவத்தை சிந்தனைப் பொருளாகவும் மதத்தை வழிபாட்டுப் பொருளாகவும் கருதிக் கொண்டிருக்கிறார்கள். தத்துவம் என்பது சிந்தனைக்கு மட்டும் உரியது அல்ல வாழ்க்கையின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் வழிபாட்டிற்கும் உரியது மதம் வேறு தத்துவம் வேறு என்று கருதுவது அறியாமையின் வெளிப்பாடாகும் என்று மதத்தையும் தத்துவத்தையும் ஒருங்கிணைத்து மனிதன் நடந்து செல்லும் வாழ்க்கைப் பாதையாக்கியவர் முதன்முதலில் ஸ்ரீ ராமானுஜரே ஆவார்.
அவருக்குப்பிறகு சைவ சித்தாந்திகள் இப்பணியைச் செய்தவர்களாவார்கள் நமது நாட்டை பொறுத்தவரையில் தத்துவம், இலக்கியம், சமயங்கள் என்று அனைத்திற்கும் மூலமாகவும் ஆதாரமாகவும் இருப்பது வேதங்களும், உபநிஷதங்களும் தான். இந்த ஒன்றினையே ஆதாரமாகக் கொண்ட போதிலும் தத்துவங்களும், சமயங்களும் தங்களுக்குள் ஒருங்கிணையாமல் இரு துருவங்களாக இருப்பது என்னவோ வாஸ்தவம்தான். இந்த பிரபஞ்சத்தின் இயல்பையும் அதன் மூலத்தையும் ஆராய்வது தத்துவம். ஆனால் இந்த ஆராய்ச்சியினால் மட்டும் மக்களின் மனம் முழு திருப்தியை அடைந்துவிட முடியாது ஆராய்ச்சியையும் தாண்டி வாழ்க்கை என்பதற்கு என்ன லட்சியம் தேவை அந்த லட்சியத்தை அடைவதற்கு என்னென்ன வழி வகைகள் உண்டு என்பதை அறிந்துகொள்ள மனிதர்கள் ஆசைபடுவார்கள். மக்களின் வாழ்க்கை லட்சியம் இதுதான். இதை இந்த வழியில்தான் அடைய வேண்டுமென்று மதங்கள் கூறுகின்றன. இதனால்தான் தத்துவ நிழலைத்தேடி இளைப்பாறும் மனித கூட்டத்தைவிட மதங்களின் அரவணைப்பில் பாதுகாப்போடு வாழுகின்ற மனிதக் கூட்டம் அதிகமாக இருக்கிறது. திசையறியாது திணறிக் கொண்டிருக்கும் மக்கள் தடம்பார்த்து நடைபயில மதங்கள் இறைவன் என்ற பற்றுக்கோட்டைத்தருகிறது. ஆகவே உலகிலுள்ள அனைத்து மதங்களுமே கடவுள் கொள்கையை ஆதாரமாகக் கொண்டே எழுந்து நிற்கின்றன. இதனாலேயே கடவுளை இரண்டாம் பட்சமாகக்கருதி அறிவையும், தெளிவையும் முதலாவதாகக் கொள்ளுகின்ற தத்துவங்கள் மதங்களுக்கு அருகிலேயே இருந்தாலும் புகைவண்டியின் வழித்தடங்கள்போல் இணையாமலே இருந்து வந்தன.
மதங்கள் ஆதாரமாகக் கொண்டிருக்கும் கடவுள் கொள்கையும், தத்துவங்கள் கூறும் பிரம்மக்கொள்கையும் ஒன்றே என்பதை நிரூபிக்க அல்லது இணைத்துக்காட்ட பல அறிஞர்கள் முயன்றாலும் அதில் முழு வெற்றியை அடைந்தவர் ஸ்ரீ ராமானுஜரே ஆவார். ஆதி சங்கரரைப்போன்றே ஸ்ரீ ராமானுஜரும் பழுத்த அறிவு முதிர்ந்த ஒரு தத்துவ ஞானியே ஆவார். இவரும் சங்கரரைப்போன்றே நமது நாட்டின் தெற்கில் உதித்த சூரியன் ஆவார். சங்கரர் பிரம்மசூத்திரத்திற்கும், பகவத்கீதைக்கும் சில உபநிஷதங்களுக்கும் விளக்க உரை எழுதியது போன்றே ஸ்ரீ ராமானுஜரும் பல விளக்க உரைகளை எழுதியிருக்கிறார். இவர் பிரம்ம சூத்திரத்திற்கு எழுதிய விளக்க உரை ஸ்ரீபாஷ்யம் என்ற பெயரில் புகழோடு விளங்குகிறது. இது தவிர வேதாந்த சாரம், வேதாந்த சங்கிரகம் வேதாந்த தீபம் போன்ற அறிய நூல்களையும் படைத்துள்ளார்.
ஆதிசங்கரர் ஸ்ரீ ராமானுஜர் அவதாரம் எடுப்பதற்கு சில நூறு ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியவர் ஆவார். அதனால் ஆதிசங்கரரின் அனைத்து கொள்கைகளையும் நன்கு விளங்கி உள்வாங்கிக் கொள்ளும் சூழ்நிலையை காலம் ஸ்ரீ ராமானுஜருக்கு ஏற்படுத்திக்கொடுத்தது. சங்கரரும் அவரைப் பின்பற்றி வந்த மற்ற அத்வைதிகளும் கொண்ட கொள்கையை ஸ்ரீ ராமானுஜர் அறிவுப்பூர்வமாகவும் வாதத்திறமையுடனும் எதிர்த்து தனது கொள்கைகளை நிலைநாட்டிக் கொள்ள விரும்பினார். இதனாலேயே விஷிஸ்டாத்வைதம் என்ற தத்துவகொள்கையை உருவாக்கி மக்களிடம் பிரச்சாரம் செய்தார்.
இக்கொள்கையே நாளடைவில் ராமானுஜ வேதாந்தம் என்று ஆகி வைஷ்ணவ சமய பிரிவாக மக்கள் இன்றுவரை பின்பற்றி வருகிறார்கள். சங்கரர் சிவபெருமானை வழிபடும் மூர்த்தியாக கொண்டிருந்த போதும்கூட அவரின் தத்துவத்தை சைவசமயம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் ஸ்ரீ ராமானுஜரின் தத்துவச்சாரமே ஸ்ரீ வைஷ்ணவம் என்ற சமயப்பிரிவாக உருவாகி இருக்கிறது என்றால் அதற்கு ஏதேனும் விசேஷமான காரணம் இருக்க வேண்டுமல்லவா.
அது என்ன என்று நான் சிந்தித்தபோது சுவாமி விவேகானந்தரின் நூல்வழியாக தக்க சான்று கிடைத்தது. சங்கராச்சாரியாரின் கொள்கை முழுவதும் அறிவுப்பூர்வமானது. அறிவானது அளவுக்கு அதிகமாக இருக்கும் இடத்தில் உணர்வு பூர்வம் என்ற ஈரப்பசை இல்லாத வறண்ட காய்ந்துபோன பகுதிகளாகவே இருக்கிறது. ஸ்ரீ ராமானுஜரிடமோ அறிவு மட்டுமின்றி உணர்வும் கலந்திருப்பதினால் மக்கள் அதைக் கடைபிடிக்க சுலபமாகக் கருதி சமயப்பிரிவாகவே மாற்றிவிட்டார்கள் என்ற உண்மை புலப்பட்டது.
கேள்வி: சங்கரரும், இராமானுஜரும் வேதங்கள் உபநிஷதங்களையே மூல ஆதாரமாகக் கருதுகிறார்கள். அப்படி இருக்க இருவரின் கருத்துகளும் எப்படி எதிர்எதிர் திசையை நோக்கிச்செல்லும்?
குருஜி: இரண்டு பேரின் கருத்துகளும் மாறுபட்டு இருக்கிறதே தவிர எதிர் எதிர் திசையில் செல்வதாகக் கூறமுடியாது. இருவரின் கருத்துக்களிலும் எவ்வகையான மாறுபாடுகள் உள்ளன என்பதை அறிந்து கொள்ள இருவரின் சிந்தனைகளையும் ஒப்பிட்டு பார்ப்பதைத்தவிர வேறுவழி கிடையாது. இந்த ஒப்பு நோக்குதல் என்று வரும்பொழுது இரு சிந்தனைகளிலும் எது சிறந்தது? பெரியது? என்ற ஒரு சிக்கல் எழக்கூடும். இதனால் சில மனவருத்தங்களும் ஏற்படலாம் அதற்காக ஒப்பு நோக்குவதை கைவிட்டுவிடவும் முடியாது. இருவரின் சிந்தனைகள் எத்தனை அளவு உயர்ந்ததோ அதே போன்றே இருவரின் கொள்கைகளிலும் சில குறைபாடுகள் உண்டு என்பதை உணர்ந்தால் இந்த உலகத்தில் எதுவும் முழுமையான நிறைவுடையது இல்லை. அதே நேரம் முற்றிலும் குறைவானது என்றும் எதுவும் இல்லை என்பது புலனாகும். இப்போது ராமானுஜரின் கொள்கைகளை சங்கரரின் சித்தாந்தத்தோடு இணைத்துப் பார்க்க முயற்சிப்போம். இந்த உலகத்தில் எண்ணிக்கையில் அடங்காத உயிரினங்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் இயக்கத்தாலும் உடல் அமைப்பாலும் ஒன்றிலிருந்து மாறுபட்டு அமைந்திருப்பதைக் காணுகிறோம். ஆனால் எல்லா படைப்புகளுக்கும் உயிர் என்பது மட்டும் பொதுத்தன்மையாக இருப்பதை நாம் அறிவோம். அதே நேரம் இந்த உயிர்கள் அனைத்தும் வேறுவேறானது அதாவது பல உயிர்கள் உலகில் உண்டு என்று நாம் நம்பி வருகிறோம். ஆனால் ஆதிசங்கரர் இவைகள் உடம்புகளால் வேறுபட்டு இருந்தாலும் உயிரால் ஒன்றுபட்டு இருக்கிறது. அதாவது பல உயிர்கள் என்பது கிடையாது எல்லாமே ஒரே உயிர்தான் என்கிறார். அந்த ஒரு உயிர் மட்டுமே உண்மை அது பலவாக தோன்றுகிறதே தவிர பல அல்ல. என்று அவர் வாதிப்பதினால் அவரையும் அவரைப்போன்ற அத்வைதிகளையும் ஏகான்ம வாதிகள் என்று அறிஞர்கள் அழைக்கிறார்கள். ஓர் உயிர் கொள்கையை நிரூபிக்க சங்கரர் இரண்டு விதமான உதாரணங்களைத் தருகிறார். அவற்றுள் ஒன்று பிரதிபிம்ப வாதம் எனப்படும். பிரதிபிம்ப வாதம் என்றால் என்னவென்று பார்ப்போம். வானத்திலே ஒரே ஒரு நிலா மட்டுமே இருக்கிறது. பூமியில் ஆறுகள், ஏரிகள், குளம், குட்டைகள் என்று பல நீர் நிலைகள் உள்ளன. இந்த நீர்நிலைகள் அனைத்திலும் நிலாவின் பிம்பம் தெரிகிறது. அப்படி தெரிவதினால் இது ஆற்று நிலா அது கிணற்று நிலா என்று பல நிலவுகள் இல்லை. ஒரே ஒரு நிலாதான் பல சந்திரன்களாகத் தெரிகிறது. அதே போன்றுதான் ஒரே ஒரு உயிர் பல உயிர்களாக தோற்றம் அளிக்கிறது என்கிறார்கள். இதன் பெயர்தான் பிரதிபிம்பவாதம் ஆகும். நிலாவின் நிழல் நீரில் விழுவதுபோல பரமாத்மாவின் நிழல் உயிர்களாகத்தோன்றுகிறது என்று வாதிடும்போது இன்னொரு கேள்வி இயற்கையாக எழுகிறது. நிலாவின் நிழல் நீரில் விழுவதினால் இன்னொரு நிலா தோன்றுகிறது. அதே போன்று பரமாத்மாவின் நிழல் எதன் மேல் விழுந்து ஜீவாத்மாவாக தோற்றமளிக்கிறது என்பதே அக்கேள்வியாகும். இதற்கு அத்வைதிகள் அற்புதமான பதிலைத்தருகிறார்கள். சந்திர பிம்பத்தை பிரதிபலிக்க நீர் இருப்பதுபோல பரமாத்மாவின் பிம்பத்தை பிரதிபலிக்க அவித்தை அதாவது மாயை இருக்கிறது என்கிறார்கள்.
நீரில் விழும் நிலாபிம்பம் நீர் அசைந்தால் அசைகிறது. அசையாவிட்டால் அசையாமல் இருக்கிறது. நீரின் தன்மைக்கு ஏற்றவாறு அதன் காட்சி அமைகிறது. அதே போன்றே மாயையின் இயல்புக்கு ஏற்றவாறு ஆத்மாவின் இயல்புகளும் மாறுபடுகின்றன என்றும் கூறுகிறார்கள். நீர் எல்லாம் வற்றிவிட்டால் பிம்ப நிலாக்கள் மறைந்து நிஜமான நிலா மட்டுமே எஞ்சி நிற்கும் அவ்வாறே அவித்தையெல்லாம் மாயையெல்லாம் மறைந்துவிட்டால் நிஜமான நிலையான ஆத்மாமட்டுமே தனித்து இருக்கும் என்பதாகவும் கூறுகிறார்கள். இனி சங்கரர் கூறும் இரண்டாவது உதாரணத்தை பார்ப்போம். இந்த உதாரணத்திற்கு அவச்சேதவாதம் என்று பெயர். இந்த வாதத்தின் விரிவாக்கத்தைக் கூறுகிறேன் கேள். நமது பூமி முழுவதும் காற்றானது நிரம்பி இருக்கிறது. எங்கும் வியாபித்து இருக்கிறது ஆனாலும் இந்த காற்று பூமியில் உள்ள ஏராளமான அடைப்புகளில் தடைபட்டு அங்கங்கு பிரிந்து உள்ளது. ஒரு அறையினுள் இருக்கும் காற்று அந்த அறையின் வடிவத்திற்கு ஏற்றவாறும் ஒரு பாட்டிலுக்குள் அடைபட்டு இருக்கும் காற்று அந்தப்பாட்டிலின் உருவத்திற்கு ஏற்றவாறு பிரிந்து தனித்து இருக்கிறது. ஆனால் அறைக்குள் இருக்கும் காற்றிற்கும் அதற்கு வெளியே இருக்கும் காற்றிற்கும் பாட்டிலில் இருக்கும் காற்றிற்கும் அதற்கு புறத்தே இருக்கும் காற்றிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. எல்லாக்காற்றுமே ஒரே காற்றுதான்
ஆனால் தற்காலிகமான தடுப்புகளால் அது வேறுவேறு அமைப்பில் இயங்குகிறது இதே போன்றுதான் பிரம்மமும் தற்காலிகமாகப் பலவித ஆத்மாக்கள்போல் தோற்றம் அளிக்கிறது. காற்றைப் பிரித்துக் காட்டுவது எப்படி பலவித தடைகளோ அதே போன்றதுதான் பரமாத்மாவை பல ஜீவாத்மாக்களாகப் பிரித்துக்காட்டும் மாயையின் பல நிலைகள் ஆகும். மேலே சொன்ன பிரதிபிம்பவாதம், அவச்சேதவாதம் ஆகிய இரண்டும் ஆத்மாக்கள் அடிப்படையில் ஒன்றுதான் என்பதை விளக்க ஆதிசங்கரர் குறிப்பிடும் உதாரணங்கள் ஆகும். இந்த உதாரணங்களை ராமானுஜர் முற்றிலும் ஒதுக்கித்தள்ளி மறுத்துரைக்கிறார். அதோடு மட்டுமின்றி ஒன்று பலவாகத் தோன்றுவதற்கு மாயைதான் காரணம் என்பதையும் முற்றிலும் மறுக்கிறார். மாயையை அறியாமை என்ற பொருளில்தான் சங்கரர் பயன்படுத்துவதாக ராமானுஜர் கருதி அறியாமையான மாயை எதனை ஆதாரமாகக் கொண்டு செயல்படுகிறது என்ற கேள்வியை எழுப்பி பிரம்மத்தை நிலைக்களனாக ஆதாரமாக கொண்டு செயல்படுகிறது என்ற பதிலைச் சொன்னால் அதை ஏற்கமுடியாது என்றார்.
ஏனென்றால் பிரம்மம் என்பது அறிவே சொரூபமானதாகும். அறிவே வடிவான பிரம்மத்திலிருந்து அறியாமை என்ற மாயை தோன்றுவதற்கு வழியே கிடையாது என்று வாதிடும் ராமானுஜர் ஆத்மாவை அடிப்படையாகக் கொண்டு மாயை செயல்படுகிறதா? என்று அடுத்த கேள்வியும் கேட்டு அதற்குச்சரியான பதிலையும் தருகிறார். ஆத்மாவை நிலைக்களனாக மாயை கொள்கிறது என்றால் ஆத்மா தோன்றுவதற்கு முன்னாலேயே மாயை தோன்றிவிடுகிறது. அதாவது பிரம்மம் மாயை வசப்பட்டதனால்தான் ஜீவாத்மாபோல் தோன்றுகிறது என்று சங்கரர் கூறுவதினால் ஆத்மாவைவிட மாயை மூத்தது ஆகிறது. தனக்கு பின்னால் உருவாகும் ஒன்றை முன்னால் தோன்றியது எப்படி ஆதாரமாகிக்கொள்ள முடியும் என்றும் அதைத்தள்ளிவிடுகிறார்.
ஸ்ரீ ராமானுஜரின் இத்தகைய கேள்விகளுக்கு சங்கரர் வழித்தோன்றல்கள் பதில் கூறாமல் இல்லை. ஆனால் ராமானுஜர் அந்த பதில்கள் எவற்றிற்கும் சமாதானம் அடையாமல் அவைகள் பொருந்தவே பொருந்தாது என்று மறுதலிக்கிறார். உயிர்களின் தோற்றத்தைப்பற்றிய கொள்கைகளை மட்டுமல்ல உலகின் தோற்றத்தைப்பற்றிய சங்கரரின் கொள்கைகளை இவ்வாறே ராமானுஜர் மறுதலித்து நிராகரித்து விடுகிறார்.
கேள்வி: மாயையால் உலகமும் உயிர்களும் தோன்றுகின்றன என்ற சங்கரரின் சித்தாந்தத்தை மறுத்துரைக்கும் ராமானுஜர் அதற்கு மாற்றாக என்ன கருத்தை தருகிறார்?
குருஜி: சங்கரரின் கருத்துகளை ராமானுஜர் தனது சுயவிருப்பத்தின் அடிப்படையில் மறுக்கவில்லை. சங்கரர் இந்த கொள்கைகளை எந்த வேதத்திலும் உபநிஷதத்திலும் இருந்து பெற்றாரோ அதே வேதங்களையும் உபநிஷதங்களையும் ஆதாரமாகக் கொண்டே ராமானுஜர் மறுத்தார். உலகம் உயிர் இவைகளைப்பற்றி ராமானுஜர் கூறும் கருத்துக்கள் மிகவும் எளிமையானது அதே நேரம் அறிவாற்றலின் எல்லையைத் தொட்டவர்களால் மட்டுமே கூறமுடியும் என்கின்ற அளவிற்கு ஆழமானது.
அவர் சொல்கிறார் இந்த உலகையும், உயிர்களையும் இயக்குவது இறைவனாகும் அதாவது நமது உடலை உயிரானது எப்படி இயக்குகிறதோ அதே போன்றே இறைவன் உலகத்தையும், உயிர்களையும் இயக்குகிறான். எனவே இறைவனைப் பொறுத்தமட்டில் இந்த உயிர்களும், உலகமும் அவனது உடம்பாகிறது. இறைவன் இவைகளுக்கு உயிராக அமைகிறான் அதாவது அண்டசராசரங்கள் அனைத்தும் அவனுக்கு சரீரமாக அமைகிறது அவன் சரீரியாக இருக்கிறான். அதனால் இறைவனின் திருமேனியே உலகமாகவும் உயிராகவும் தோற்றமளிக்கிறதே தவிர இது மயக்கத்தால் அறியாமையால் ஏற்பட்டுவிட்ட மாயத்தோற்றம் அல்ல கற்பனை வடிவங்கள் அல்ல இறைவன் எந்த அளவிற்கு நிஜமானவனோ அதே அளவிற்கு இவைகளும் நிஜமானவைகள் என்ற முடிவை ஸ்ரீ ராமானுஜர் நமக்கு தருகிறார். மேலும் நமது உடலுக்குப் பரிபூரணமான சுதந்திரம் என்பது கிடையாது. உயிரே உடலை சுதந்திரமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதைப்போல இறைவனின் உடல்களான உலகிற்கும் ஜீவன்களுக்கும் முழுமையான சுதந்திரம் கிடையாது என்று விளக்கிக் கூறும் ராமானுஜர் இதுவே உள்ளது பல அல்ல ஒன்றே ஒன்றுதான் உள்ளது என்ற உபநிஷத வாக்கியத்திற்கு விளக்கமாக தருகிறார். அதாவது அத்வைதிகள் கூறுவதுபோல் பிரம்மா மட்டும்தான் உள்ள பொருள் மற்ற அனைத்துமே வெறும் கற்பனைப் பொருள் என்பது இதன் விளக்கமல்ல. சுதந்திரமானது உடைய பொருள் ஒன்றே ஒன்றுதான் மற்றவைகள் அனைத்துமே சுதந்திரம் அல்லாதவைகள் தான் என்பதே மேற்கண்ட உபநிஷத வாக்கியத்தின் அர்த்தமாகும் என்கிறார். உலகமெல்லாம் இறைவனின் திருமேனி என்று சொல்லும் பொழுது ஒரு மிகப் பெரும் சிக்கல் ராமானுஜரது கொள்கையில் ஏற்படுகிறது. அதாவது உலகம் இறைவனின் உடல் என்றால் உலகத்திலுள்ள குறைகள் இறைவனையும் பாதிக்கும் குறையுடையவனாக ஆக்கிவிடும் என்பதுதான் அந்த சிக்கல் இறைவனின் பரிபூரண தன்மைக்கு இக்கொள்கையால் அதிகமான இடர்ப்பாடுகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. இதை அத்வைதிகள் மிகக் கடுமையாகக் கண்டனம் செய்கிறார்கள். உலகம் என்பது உண்மையாகவே இறைவனின் தேகமாக இருக்கிறது என்றால் உலகம் ஒவ்வொரு கனமும் மாறிக்கொண்டே இருக்கிறது. உலகத்தின் இத்தகைய மாற்றம் இறைவனின் மாறாத தன்மையை எப்படி பாதிக்காமல் இருக்கும். இக்கொள்கையை ஏற்றுக் கொண்டால் இறைவனின் நித்தியதத்துவம் அர்த்த மற்றதாகிவிடும். எனவே இது ஏற்புடையது அல்ல என்கிறார்கள். அத்வைதிகளின் கண்டனத்தைப் பார்த்து ராமானுஜர் ஒன்றும் சளைத்துவிடவில்லை. இதற்கான பதிலை ஆனித்தரமாகத்தருகிறார். உடம்பிற்கு மூப்பு ஏற்படுகிறது பிணி ஏற்படுகிறது ஆனால் அவை எதுவாலும் உயிரானது எந்தவித பாதிப்பையும் குறைவையும் அடைந்து விடவில்லை. அதுமாதிரிதான் உலக இயக்கத்தின் மாறுதல்கள் இறைவனை எந்த வகையிலும் பாதிப்பது கிடையாது என்று அடித்துக்கூறுகிறார். இதோடு மட்டுமல்ல இன்னொரு உதாரணத்தையும் அவர் தருகிறார் ஒரு அரசன் இருக்கிறான் என்று வைத்துக் கொண்டால் அவனுக்கும் மக்களுக்கும் தொடர்பு என்பது இல்லாமல் இருக்காது. அதே நேரம் மக்களின் சுக துக்கங்கள் அரசனை எந்த வகையிலும் பாதிப்படையச்செய்யாது அதே போன்றுதான் உலகமாற்றம் இறைவனை பாதிப்பதில்லை என்று வாதிடுகிறார். சொல்லுவது ராமானுஜராக இருக்கட்டும் கடவுளாகக்கூடவே இருக்கட்டும் ஏற்புடைய சொல் அது அல்ல என்று தோன்றினால் அதை விமர்சனம் செய்வது எந்த வகையிலும் தர்மத்திற்கு முரணாக அமையாது என்று சனாதனதர்மம் மனித சிந்தனைக்கு முழு சுதந்திரத்தை தந்திருப்பதினால் ராமானுஜரின் இந்தக்கருத்தை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றே தோன்றுகிறது. ஆரோக்கியமான உடலின் துணையில்லாமல் செயற்கரிய எந்த செயலையும் உயிரானது தனித்துச்செய்துவிட முடியாது. உடல் நோயாலும், மற்றும் பல பிரச்சினைகளாலும் தாக்கப் படும்போது உயிர் தெளிவுடனும் புத்துணர்ச்சியுடனும் இருக்குமென்று எப்படிக் கூற இயலும் அதனால் உடம்பின் மாறுபாடு உயிரைப் பாதிக்காது என்ற ராமானுஜரின் கொள்கை ஏற்புடையதாக அமையாது. அடுத்ததாக மக்களின் சுகதுக்கங்கள் அரசனை பாதிக்காது என்பதையும் ஏற்றுக்கொள்ளத் தக்கதாக இல்லை. வறுமையின் பிடியில் மக்கள் அகப்பட்டுத்தவித்தாலோ வன்முறை கலாச்சாரத்தில் ஊறித்திளைத்தாலோ மக்களின் செயல்பாடுகள் அரசனை நிச்சயம் பாதிக்கும். எனவே ராமானுஜரின் இந்த உதாரணத்தையும் அறிவு பூர்வமாகவும் அனுபவபூர்வமாகவும் ஏற்றுக் கொள்ள முடியாது. மேலும் இறைவனின் திருமேனியாக உலகமும் உயிர்களும் திகழ்கிறது என்பதை வாதத்திற்காக ஒத்துக்கொண்டால் உடல் இல்லாமல் உயிரோ உயிர் இல்லாமல் உடலோ தனித்தனியாக இயங்க முடியாது ஒன்று இயங்க மற்றதின் துணை கண்டிப்பாக தேவை என்பதினால் இறைவன் இல்லாமல் உயிர்களோ உயிர்கள் இல்லாமல் இறைவனோ இல்லை என்பதான முடிவுதான் வருகிறது இதனடிப்படையில் இறைவன் மட்டுமே சுதந்திரமானவன் என்ற ராமானுஜரின் கோட்பாடு அடிபட்டு போகிறது. எப்படியென்றால் இறைவனின் உடலான உலகமும் உயிர்களும் இல்லாது கடவுள் இல்லை என்ற நிலை வரும்போது கடவுள் இப்படி சர்வசுதந்திரம் உள்ளவராக இருக்க முடியும் எனவே ராமானுஜரின் கடவுள் சுதந்திர கொள்கையும் பல முரண்பாடுகளைக் கொண்டதாகவே இருக்கிறது.
கேள்வி: ஆத்மா என்பது பரமாத்மாவின் சிறு பகுதி அதாவது ஆத்மாக்கள் இறைவனின் உடல் இறைவன் அதை இயக்கும் உயிர் ஆத்மா, ஜனங்கள் இறைவன், ஜனங்களை ஆளும் அரசன் என்ற இத்தகைய உதாரணங்களால் இறைவனுக்கும் உலகிற்கும் உடைய தொடர்புகளை ராமானுஜர் விளக்குவது கேட்பதற்கு நன்றாகவே இருக்கிறது. ஆனால் ஆழ்ந்து சிந்தித்து பார்க்கும்போது இந்த உதாரணங்கள் ஆத்மாவும், உலகம் வேறு இறைவன் என்பது வேறு என்ற கருத்தே வலுவாக தோன்றுகிறது. ராமானுஜர் தமது வாதங்களுக்கெல்லாம் மூலம் வேதங்களும், உபநிஷதங்களும் என்று தான் சொல்கிறார். அவர் ஆதாரமாகச்சொல்லும் உபநிஷதங்கள் உலகமும் உயிர்களும் ஒன்றே எனக்கருத்தைக் கொள்ளும் தத்வமசி என்ற வார்த்தை ஆனித்தரமாகச் சொல்லப்பட்டிருக்கிறதே அந்த வார்த்தைக்கு ராமானுஜர் என்ன பதிலைச் சொல்லுகிறார்?
குருஜி: உபநிஷதங்கள் கூறும் தத்வமசி என்ற வார்த்தைக்கு நீயே அது அல்லது அதுவே நீ என்ற அர்த்தத்தை நான் பலமுறை பல இடங்களில் சொல்லியிருக்கிறேன். அதனால் மட்டுமல்ல அந்த வார்த்தையின் உண்மைபொருளே அதுதான். அத்வைதிகளுக்கு இந்த வார்த்தையின் பொருளை அப்படியே ஏற்றுக்கொள்வது எந்த சிக்கலும் இல்லை. காரணம் அவர்கள் ஒன்றாகிய பரமாத்மா மாயையால் கட்டுண்ட நிலையில் ஜீவாத்மாவாக தோற்றமளிக்கிறது. எனவே எல்லாம் ஒன்றுதான் என்று சுலபமாகக் கூறிவிட முடியும். ஆனால் ராமானுஜரின் கொள்கையின்படி இந்தவாதத்தை அவர் கூறிவிட முடியாது. எனவே மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த உபநிஷத வாக்கியத்திற்கு அவர் என்ன பொருளைச் சொல்கிறார் என்பதை உன்னிப்பாகக்கவனிக்க வேண்டும். தத்வமசி என்ற வார்த்தையால் வரும் துவம் என்ற பதத்திற்கு ராமானுஜர் நேரடியாக நீ என்ற அர்த்தத்தைக் கொள்ளாமல் உன்னுள்ளே இருக்கும் இறைவன் என்ற பொருளைக் கொள்ளுகிறார். அதாவது ஜீவன்களுக்குள்ளே அந்தர்யாமியாய் இருக்கும் இறைவனையே துவம் என்ற பதம் சுட்டிக்காட்டுவதாகவும் ஆனால் தத்வமசி என்பதற்கு உன்னுள்ளே உறைந்திருக்கும் பரம் பொருள் ஒன்றுதான் என்பதுதான் உண்மையான அர்த்தமாகும் என்று விளக்கம் தருகிறார். இது மட்டுமல்ல ஸ்ரீ ராமானுஜரின் கொள்கைகளை வேறு நோக்கிலும் நாம் பார்க்கவேண்டும். அதாவது இறைவனின் உடலான உலகம் மற்றும் உயிர்களின் மாற்றம் அவனை எந்த வகையிலும் பாதிக்காது என்பதை பக்திமார்க்கத்தின் வழியாகச் சிந்தித்து பார்க்கும்பொழுது ஒரு நல்ல முடிவு கிடைக்கிறது. உலகமும் உயிர்களும் மாறுகின்றன குறைவுடையதாகவும் நிறைவுடையதாகவும் மாறிமாறி தோன்றுகின்றன. இதனால் இறைவனின் தன்மைக்கு குறைவு ஏற்படுகிறது என்ற கருத்தை சற்றுதள்ளி வைத்துவிட்டு இந்த மாறுபாடெல்லாம் இறைவனால் அவனது உடம்பான உயிர்களுக்கும் உலகத்திற்கும் கொடுக்கப்படுகிறது.
அது அவன் திருவிளையாடல் என்ற கருத்தில் பார்க்க ஆரம்பித்தோம் என்றால் ராமானுஜரின் கொள்கை முற்றிலும் ஏற்றுக்கொள்ள தக்கது என்பது புலனாகும். இறைவனுக்கும் ஆத்மாவிற்கும் உள்ள தொடர்பை தேருக்கும் அதன் சக்கரத்திற்கும் உள்ள தொடர்போடு ஒப்பிட்டு பார்த்தால் மிக நன்றாகப்புரியும். தேரும் சக்கரமும் வேறுவேறா? என்றால் அதற்கு ஆம் என்ற பதிலும் சக்கரம் தேரினுடைய ஒரு பகுதிதானே அதனால் சக்கரமும் தேரும் ஒன்றுதானே என்றால் அதற்கும் ஆம் என்ற பதிலுமே கிடைக்கும்.
சக்கரம் இல்லாத தேர் பயனற்றது. அதே போன்றே தேரில் இல்லாத சக்கரமும் பயனற்றதே! இரண்டும் வேறுவேறாக இருந்தாலும் ஒன்றாக இணைந்திருக்கும் போதுதான் பயன் என்பது கிடைக்கும். அதே நேரம் இரண்டும் ஒன்றையொன்று சார்ந்து இருப்பதினால் தேருக்கோ சக்கரத்திற்கோ தனியான பாதிப்போ குறைபாடுகளோ இல்லை. அதே போன்றுதான் ஆத்மாக்களும் இறைவனும் ஒருவரையொருவர் சார்ந்திருப்பதால் எந்த குறையும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. ஆனாலும் இரண்டும் சேர்ந்தே இருந்தாலும் வேறு வேறுதான் என்ற உண்மை புலனாகும். இதை இன்னும் நன்றாகப்புரிந்து கொள்ள வேண்டுமென்றால் ராமானுஜர் ஆத்மாக்களைப்பற்றியும் அதன் இயல்புகளைப் பற்றியும் கூறுவதை அறிந்துகொள்ள வேண்டும்.
கேள்வி: ராமானுஜர் ஆத்மாக்களின் இயல்பை பொறுத்து அவைகளை மூன்று விதமாக பிரிப்பதாகக் கேள்விபட்டிருக்கிறேன். ஆத்மாவின் அந்த மூன்று தன்மை என்ன?
குருஜி: ஆத்மாக்கள் அத்வைதிகள் குறிப்பிடுவது போல் ஒன்றுஅல்ல பலவாகும். ஆனால் அத்தனை ஆத்மாக்களும் அழியாத தன்மையுடைய நித்திய பொருட்களாகும் என்பதே ராமானுஜரின் கொள்கை ஆனால் வேதங்களில் ஆத்மா ஒன்றுதான் என்ற வாக்கியம் பல இடங்களில் வருகிறதே அதை எப்படி தவறுதலானது என்று சொல்ல முடியும். ஆத்மா ஒன்று என்றால் ராமானுஜரின் கொள்கையை கைவிடவேண்டும். பல என்றால் வேதத்தைக் கைவிடவேண்டும்.
இவற்றில் எதைக் கைவிடுவது இரண்டுமே முக்கிய மானவைகளாகவும் உண்மையானவைகளாகவும் தோன்றுகிறதே என்ற கலக்கமும் மயக்கமும் பலருக்கு ஏற்படுவது உண்டு. இப்படிப்பட்ட மயக்கம் மக்களுக்கு ஏற்படும் என்பதை நன்கு அறிந்த ஸ்ரீ ராமானுஜர் தக்க பதிலை நமக்குத்தருகிறார். ஆத்மாக்கள் ஒன்றுதான் என்று வேதம் கூறுவது எண்ணிக்கையின் அடிப்படையில் அல்ல. ஆத்மாக்கள் அனைத்தும் அறிவை இயல்பாகக் கொண்டது என்பதனால் அறிவின் இயல்பால் அவையாவும் ஒன்றே என்பதே வேத வாக்கியத்தின் உண்மைப்பொருளாகும் என்கிறார்.
ஆத்மாக்களை அதன் இயல்பை அடிப்படையாகக் கொண்டு மூன்று வகைகளாக பிரிக்கிறார். முதல் வகை ஆத்மாக்கள் எப்போதுமே முக்தி நிலையில் இருப்பவைகள் அதாவது அந்த ஆத்மாக்கள் ஆரம்பகாலத்திலிருந்தே கட்டுண்ட நிலையில் இல்லாமல் சுதந்திர நிலையில் உள்ளவை என்றும் இரண்டாவது வகை ஆத்மாக்கள் கட்டுண்ட நிலையிலிருந்து முக்தி நிலையை நோக்கி நகர்ந்தவை என்றும் மூன்றாவது வகை ஆத்மாக்கள் எப்பொழுதும் கட்டுண்ட நிலையிலேயே இருப்பவைகள் என்றும் வகைபடுத்திக்கூறுகிறார். இவர் கூறுவதுபோலதான் சைவ சித்தாந்தமும் ஜைன தத்துவமும் ஆத்மாவின் நிலைகளை பற்றி கூறுகிறது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். ஸ்ரீ ராமானுஜர் ஆத்மாவின் இத்தகைய தர வரிசையை அதாவது குண இயல்பை தர்மபூத ஞானம் என்ற பெயரால் அழைக்கிறார். தர்மபூத ஞானத்தில் ஆத்மாக்களின் குண இயல்பு ஞானமுடமை ஆகும். இறைவனுடைய ஞானம் என்பதும் தர்மபூத ஞானத்திற்கு உட்பட்டதே ஆகும். ஆனால் இறைவனின் ஞானமானது செயல்படுவதற்கு புறக்கருவிகள் எதுவும் தேவையில்லை. ஜீவன்களில் ஞானம் புறக்கருவிகளான புலன்களை அடிப்படையாகக் கொண்டே தொழில் செய்ய முடியும்.
மேலும் ஜீவன்களில் படிந்துள்ள தர்மபூதஞானம் இன்பம், துன்பம், விருப்பு, வெறுப்பு ஆகிய உணர்வுகளாகவும் வெளிப்படுகிறது. இந்த உணர்வுகள் தான் பரிசுத்தமான ஜீவஞானத்தை குறைவுடையதாக்கி கர்மத்திற்குள் தள்ளுகிறது. இதுதான் பிறவித்தளை என்றும் ஜனனமரண துன்பமென்றும் அழைக்கப்படுகிறது. ஆதியில் ஜீவன்களில் பதிந்துள்ள ஞானமுடைமையை உணர்ந்து தளைகளை அறுத்தெறிந்து ஸ்ரீமன் நாராயணன் வீற்றிருக்கும் ஸ்ரீ வைகுண்டத்தை அடைவதே ஜீவன்களின் லட்சியமாகவும் இறுதி நோக்கமாகவும் இருக்க வேண்டும் என்கிறார் ராமானுஜர் வீடுபேறு என்னும் இறுதிநிலையை ஜீவன்கள் அடைவதற்கு கர்மயோகம், ஞானயோகம், பக்தியோகம் ஆகிய மூன்றுயோக முறைகள் உதவி செய்யும் என்கிறார்.
இந்த யோகமார்க்கத்தை பற்றிய கருத்துக்களிலும் சங்கரரும் ராமானுஜரும் வேறுபடுகிறார்கள் என்பது சுவையான செய்தியாகும். சங்கரர் கர்மகாண்டத்தையும் ஞானகாண்டத்தையும் ஒரு ஜீவன் ஒரே நேரத்தில் கடைப்பிடிக்க முடியாதென்றும் எதாவது ஒரு காண்டத்தை கடைப்பிடித்தால் போதுமென்றும் சொல்லுகிறார். ராமானுஜரோ இரண்டுமே ஒரு ஜீவன் ஒரே நேரத்தில் கடைப்பிடித்தே ஆகவேண்டியது ஆகும். காரணம் அறிவில்லாத செயலோ செயலில்லாத அறிவோ இயங்காமைக்கு சமமாகும் என்கிறார். அப்பொழுதுதான் பக்திமார்க்கம் என்பது பூரண நிலையை எட்டும் என்று அறுதியிட்டு வலியுறுத்துகிறார். பக்தியை பற்றி பேசுகின்ற ராமானுஜர் பிரபக்தி என்ற புதிய விஷயம் ஒன்றையும் சொல்லுகிறார். அதாவது பக்தியானது படிப்படியாக முன்னேறிதான் இறைவனின் திருவடி நிழலை அடைய வழி செய்யும் பிரபக்தியோ தோன்றிய ஷனத்திலேயே இறைவனின் கமல பாதங்களில் கொண்டு சேர்த்துவிடும் என்கிறார். இதை எளிமையாக உதாரணத்தோடுச் சொல்ல வேண்டுமென்றால் புத்தருக்கு ஏற்பட்ட திடீர் ஞானத்தோடு ஒப்பிட்டுக்கூறலாம். பக்தி விஷயத்தில் மூடத்தனமான குருட்டு பக்தியை ராமானுஜர் ஏற்றுக்கொள்ளவில்லை.
செயல்புரிதலையும் ஞானத்தை தேடுதலையும் பக்திக்கு துணையாக்கிக் கொண்டு ஒவ்வொரு ஜீவனும் தனக்கு விதிக்கப்பட்ட சுயதர்மத்தை சிரத்தைவுடன் செய்து வரவேண்டும். பலனை எதிர்பாராமல் எல்லாமே ஈஸ்வரனுக்கு அர்ப்பணம் செய்வது இறைவனுக்கு மிகவும் பிடித்தமானது. உலக இன்பதுன்பங்களில் கிடந்து உழன்றாலும் நாராயணன் ஒருவனையே மனதில் தியானித்து உபாசித்து இடையறாது வணங்கி வரவ
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum