Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்by vpoompalani March 24th 2016, 13:59
» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26
» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17
» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06
» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07
» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58
» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24
» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35
» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52
» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18
» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47
» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19
» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46
» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49
» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37
» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07
» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29
» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38
» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55
» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00
» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49
» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28
» திருத்தல யாத்திரை ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51
» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33
» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46
» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28
» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13
» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29
» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15
» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10
» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29
» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54
» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38
» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42
» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32
» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01
» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20
» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00
இறைவன் நுழைந்த அதிசயக் குகை - சுருளிமலை அதிசயம் பாகம் - 2 God and Siththar Cave -2
Page 1 of 1
இறைவன் நுழைந்த அதிசயக் குகை - சுருளிமலை அதிசயம் பாகம் - 2 God and Siththar Cave -2
இறைவன் நுழைந்த அதிசயக் குகை - சுருளிமலை அதிசயம் பாகம் - 2
சுருளிமலை தேவலோக கிரி கைலாசப் புடவு - இமயகிரி சித்தர் வனம்
எம்பெருமான் ஈசனின் இறை அருள் நிறைந்த கைலாயத்தில் [இமயமலை கைலாயம்] "இமயகிரி சித்தர்" என்றொருவர் இருந்தார். அவர் சிவபெருமானைத் தினமும் நேரில் பூசிக்கப் பெற்றவர்.அவர் மீது சிவபெருமானுக்கு மிகவும் பிரியமுண்டு.அப்படியிருக்கின்ற காலத்தில் துர்வாச மகரிஷி,கண்ணுவ மகரிஷி முதலான ரிஷிகள் சதுரகிரி மலை அடிவாரத்தில் தபோவனம் என்னும் மாவூற்றில் யாகங்கள்,எக்கியங் கள் வளர்த்து இறைவனை நோக்கித் தவம் செய்தார்கள்.
அத் தவத்தைக் கண்டு சிவபெருமான் தவம் செய்த முனிவர்,ரிஷிகளு க்கு தேவ லோக வாழ்வைக் கொடுத்து தாமும் "மகா லிங்க" சொரூப மாய் அங்கேயே அமர்ந்திருந்தார்.அந்த சொரூபந்தான் இப்போது இருக் கின்ற சதுரகிரி மலை மூலவராகிய மகாலிங்க மாகும்.
பின்பு தேவலோக வாழ்வைப் பெற்ற ரிஷி, முனிவர்கள் மன மகிழ் வோடு "ககன குளிகை" இட்டு ஆகாய வெளியில் பறந்து போகும் போது சுருளி மலையை கடக்கும் போது அங்கு ஏராளமான ரிஷிகளும், முனிவர்களும், சித்தர்களும் அருந்தவம் செய்து கொண்டிருப்பதையும், அந்த வனத்தின் அழகும்,தேவலோக கானல்களையும்,வனப்பூஞ் சோலைகளும், சப்த கன்னிமார்கள் சிவபெருமானுக்கு புஷ்பம் எடுத்துப் போகின்ற நேர்மைகளும், உதகநீர் அங்காங்கு மிகுதியாய் இருப்பதும்,அந்த உதக நீரில் இறங்கிய மனிதர்கள் கல்லாக மாறி இருப்பதும், போன்ற ஏராளமான அதிசயங்கள் நிறைந்த இம் மலையில் தவம் செய்வது முக்கியம் எனத் தெரிந்து அங்கு இறங்கி சில காலம் தவம் செய்து பின்பு கைலாயம் செல்கின்றனர்.
கைலாயத்தில் உள்ளே துர்வாச மகரிஷி,கண்ணுவ மகரிஷி முதலான ரிஷிகள் செல்லும் போது எதிரே இமயகிரி சித்தர் வருகின்றார். ரிஷி களை வணங்கி சுவாமி தாங்கள் எங்கிருந்து வருகின்றீர்கள் என்று கேட்க அதற்கு ரிஷிகள் கூறியது நாங்கள் சதுரகிரி தபோவனம் என்னும் மாவூற்றில் அருந்தவம் செய்து இறைவன் சிவபெருமானால் கைலாய வாழ்வைப் பெற்று இங்கு வருகையில் சுருளிமலையின் பெருமைகளை அறிந்து அங்கு சில காலம் தவம் செய்து இப்போது தான் இங்கு வருகின்றோம் என்றனர்.
இதனைக் கேட்ட இமயகிரி சித்தர் மனம் மகிழ்ந்து உடனே புறப்பட்டு சுருளிமலைக்கு வந்து அங்கு தவம் செய்யும் ரிஷி,முனிவர்,சித்தர் களைப் பார்த்து தவம் செய்ய விரும்பி அங்கிருந்த சித்தர்களில் ஒருவரான "பூத நாராயண சித்தரை" அழைத்து மலையில் இருக்கின்ற பூஞ்சோலைகளை கண்டு மகிழ்ந்து குகை வாசம் செய்வதற்கு புடவு செய்ய இடம் பார்த்து ஆற்றோரம் இருக்கின்ற குண்டு மலையில் தலை மட்டும் நுழையும் படியாகவும் உள்ளே விசாலமாகவும் புடவு செய்து [குகை] குகைக்கு முன் பூத நாராயண சித்தரை காவலிருக்க வைத்துச் சொன்னதாவது ,
இந்த குகைக்குள் வரவேண்டுமென்ற விருப்பம் உள்ளவர்கள் தவ சிரேஷ்டர்களாக இருந்தால் மட்டும் உள்ளே நுழைய இடம் கொடுக்கும். உள்ளே வரலாம், இவை அல்லாதவர்கள் குகைக்குள்ளே தலையை விட்டால் தலை நுழையாது என்று சொல்லி குகைக்குள் நுழைந்து தவம் செய்து கொண்டிருக்கும் காலத்தில்,
கைலாயத்தில் சிவபெருமானார் நம்மை தினந்தோறும் பூசிக்கின்ற இமயகிரி சித்தரை காணோம் என்று ஞான திருஷ்டியால் பார்க்க அவர் சுருளி மலையில் தவம் செய்வதை அறிகின்றார்.சித்தருக்கு வரம் கொடுக்க விரும்பி அம்மை உமையவளுடன் இறைவனும் சுருளி மலைக்கு எழுந்தருள்கின்றார்.
சுருளிமலையில் தவம் செய்கின்ற ரிஷிகள்,முனிவர்,சித்தர்கள் இறைவனை கண்டு தரிசனம் செய்கின்றனர்.அப்போது சிவபெருமான் அவர்களைப் பார்த்து ,அருந்தவ ரிஷி,முனி,சித்தர்களே உங்கள் தவம் முடிந்தவுடன் கைலாய வாழ்வு கொடுப்போம் என்று சொல்லி விட்டு மாயா சொரூபமாய் இமயகிரி சித்தர் இருக்கின்ற குகைக்குள் நுழைந்தார்.
அந்த புடவுக்குள்ளே வந்த சிவபெருமானைக் கண்டு இமயகிரி சித்தர் மெய் பதறி அடி வணங்கி தெண்டனிட அவரை அழைத்துக் கொண்டு இறைவன் வெளிவருகின்றார்.
வெளியே வந்த இறைவன் சித்தரிடம் என்ன வரம் வேண்டும் என்று கேட்க அவர் சுவாமி அடியேன் இந்த சுருளிமலையில் புடவில் சில காலம் வசிக்க விரும்புகின்றேன்.ஆகையால் தங்களை யான் கைலா யத்தில் தினமும் பூசித்த வழக்கப் படி இங்கேயும் பூசிக்கும் வரம் வேண்டும் என்று கேட்க அதற்கு சிவபெருமானும்,அம்மையும் அப்படியே கொடுத்தோம் என வாக்கருளி, சுவாமி லிங்க சொரூபமா யும், தாய் அம்மை சொரூபமாயும் அமர்ந்தனர்.
அப்போது அங்கிருந்த ரிஷி,முனி,சித்தர்கள் அனைவரும் பார்த்து இறைவன் சிவபெருமானே இந்தப் புடவுக்குள் [குகைக்குள்] நுழைந்த மையால் இந்தப் புடவுக்கு "கைலாசப் புடவு" என்ற பெயருடன் விளங் கட்டும் என்று பெயரிட்டனர்.அன்று முதல் இந்தப் புடவு என்ற "கைலாச புடவு" "கைலாசநாதர் குகை" என்ற பெயருடன் இன்று வரை விளங்கு கின்றது.
[ கோரக்கர் மலை வாகடம் ]
இந்தியாவிலேயே வேறெங்கும் இல்லாத சிறப்பு மிக்க இறைவன் நுழைந்த அதிசயக் குகை இது ஒன்றுதான்.
நாம் சென்ற பதிவில் குறிப்பிட்ட "சித்தர்கள் வாழும் மர்மக்குகை" என்ற தலைப்பில் குறிப்பிட்ட குகையும் இதுவும் ஒன்றே இதனை வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்.
http://siththarpokkisam.blogspot.in/2013/03/1-siththar-cave.html
http://siththarpokkisam.blogspot.in/2013/03/1-siththar-cave.html
மேலும் சுருளிமலையில் நாம் கண்ட நேரடி அதிசய ஆய்வு விபரங்கள் தொடரும்…
நன்றி !
சித்தர் பொக்கிஷம் குழு - blog
சித்தர் பொக்கிஷம் குழு [face book]
Similar topics
» சித்தர்கள் வாழும் மர்மக் குகை - சுருளிமலை அதிசயம் -1 - Siththar Cave
» அர்த்தமுள்ள இந்துமதம் – பாகம் I
» அர்த்தமுள்ள இந்துமதம் – பாகம் II
» ஆலயங்களில் சித்தர்கள்..! (பாகம் 01)
» மகான்களின் அற்புதம் : குகை நமசிவாயர்
» அர்த்தமுள்ள இந்துமதம் – பாகம் I
» அர்த்தமுள்ள இந்துமதம் – பாகம் II
» ஆலயங்களில் சித்தர்கள்..! (பாகம் 01)
» மகான்களின் அற்புதம் : குகை நமசிவாயர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum