Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்by vpoompalani March 24th 2016, 13:59
» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26
» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17
» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06
» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07
» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58
» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24
» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35
» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52
» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18
» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47
» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19
» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46
» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49
» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37
» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07
» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29
» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38
» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55
» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00
» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49
» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28
» திருத்தல யாத்திரை ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51
» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33
» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46
» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28
» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13
» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29
» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15
» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10
» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29
» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54
» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38
» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42
» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32
» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01
» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20
» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00
ஸ்ரீசுதர்சனர் மகிமை :: பலன் தரும் சுலோகங்கள்
Page 1 of 1
ஸ்ரீசுதர்சனர் மகிமை :: பலன் தரும் சுலோகங்கள்
ஸ்ரீமன் நாராயணனே சிருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரங்களை செய்துவருவது யாவரும் அறிந்ததே. மகாவிஷ்ணுவின் கரங்களில் ஒன்றிலே காணப்படும் சுதர்சன சக்கர ஆயுதத்தில் உறையும் தேவனே ஸ்ரீசுதர்சனராகும். மகாவிஷ்ணுவுக்கு துஷ்ட நிக்ரகத்துக்கு ஆயுதப் படை அத்தியாவசியம். ஆயுதங்களில் ராஜனாக இருப்பது சுதர்சனம். சுதர்சனர் உக்கிர வடிவினர். மகாவிஷ்ணுவின் சக்கர சக்தியை சக்கரத்தாழ்வார் என்றும் சிறப்பாகக் கூறுவார்கள். நாராயணனே சக்கர ரூபமாக உள்ளார் என்பது ஸம்ஹிதை. மனிதராகப் பிறந்த நமக்குப் பல பிரச்னைகள். அதில் சுயகௌரவம் முக்கியமானது. மானம், மரியாதை, ஆஸ்தி இவற்றைக் காப்பாற்ற அன்றாடம் அதிகப் பாடுபடுகிறோம். இதில் விரோதிகள் தொல்லை, வம்பு வழக்கு, கடன், சிறை பயம், விரோதம், பிணி, எதிரிகளால் வைக்கப்படும் ஏவல், பில்லி, சூனியம் போன்ற கொடூரங்களை எதிர்த்துப் போராட வேண்டியும் ஏற்படுகிறது, இந்த மாதிரியான சமயத்தில் நம்மைக் காப்பாற்றும் தெய்வம்தான் ஸ்ரீசுதர்சன பகவான். அவரை முறைப்படி வழிபட்டு வந்தால் சகல நன்மைகளையும் பெறலாம். ஸ்ரீசுதர்சன பகவானை வழிபடும் முறை இங்கு விவரிக்கப்படுகிறது. ஸ்ரீசுதர்சனர் கலியுகத்தில் பிரத்யட்சமான தெய்வம். அவருடைய மகிமை அபாரமானது. பயனை வேண்டி வழிபடுபவர்களுக்கு மிகவும் குறுகிய காலத்தில் அனுகிரகம் செய்வார். ஒரு மாத உபாசனையிலேயே மனதுக்கு பலமும் வீரியமும் உண்டாவதைத் தெரிந்து கொள்ளலாம். ஸ்ரீசுதர்சனரை வழிபடுவோர் மிகவும் ஆசாரமாக இருக்க வேண்டும். நேர்மையானவராக, ஒழுக்கமுடையவராக இருக்க வேண்டும். மூல மந்திரத்தைத் தாய், தந்தை, குரு இவர்களிடம் உபதேசம் பெற்று ஜபித்து வரவேண்டும். ஸ்ரீசுதர்சன பகவானின் கிருபையைப் பெற்று சர்வ காரிய சித்தியைப் பெறலாம். ஸ்ரீசுதர்சன நவ ஸ்துதி ஸ்ரீசுதர்சன பகவானை ஆராதித்து அம்பரீஷன் செய்த அற்புத ஸ்துதியாகும். மிகவும் பயன் தருவது. த்வமக்னிர் பகவன் ஸுர்யஸ் த்வம் ஸோமோ ஜ்யோதி ஷாம்பதி: தவமாபஸ்த்வம் க்ஷிதிவ்யோம் வாயுர் மாத்ரேந்த்ரியாணி ச!! ஸுதர்சந நமஸ்துப்யம் ஸஹஸ்ராராச்யுத ப்ரிய ஸர்வாஸ்த்ரகாதின் விப்ராய ஸவஸ்தி பூயா இடஸ்பதே!! த்வம் தர்மஸ்த்வம்ருதம் ஸத்யம் த்வம் யக்ஞோகில யக்ஞபுக் த்வம் யோகபால: ஸர்வாத் மா த்வம் தேஜ: பௌருஷம் பரம்!! நம: ஸுநாபாகில தர்மஸேதவே ஹ்யதர்மசீலா ஸுரதும கேதவே த்ரைலோக்ய கோபாய விசுத்தவர்ச்சஸே மனோஜவாயாத்புத கர்மணே க்ருஹே!! த்வத்தேஜஸா தர்மமயயேன ஸம்ஹ்ருதம் தம: ப்ரகாசாஸ் சத்ருதோ மகாத்மனாம் துரத்யயஸ்தே மஹிமா கிராம்பதே த்வத் ரூபமேதத் ஸதஸத் பராவரம்!! யதா விஸ்ருஷ்ட ஸ்த்வ மனஞ்ஜனேன வைபவம் ப்ரவிஷ்டோ ஜித தைத்ய தானவம் பாஹு தாரோர் வங்க்ரி சிரோதராணி வ்ருக்ணந் நஜஸ்ரம் ப்ரதனே விராஜஸே!! ஸத்வம் ஜகத்ராண கலப்ரஹாணயே நிரூபித: ஸர்வ் ஸஹோ சுதாப்ருதா விப்ரஸ்ய சாஸ்மத்குல தைவ ஹேதவே விதேஹி பத்ரம் ததனுக்ர ஹோஹித: யதுயஸ்தி தத்தமிஷ்டம் வா ஸ்வதர்மோ வா ஸ்வநுஷ்டித: குலம் நோ விப்ர தைவம் சேத் த்விஜோ பவது விஜ்வர: யதினோ பகவான் ப்ரீத ஏக: ஸர்வ குணாச்ரய: ஸர்வ பூதாத்ம பாவேண த்விஜோ பவது விஜ்வர: ஸ்ரீசுக உவாச இதி ஸம்ஸ்துவதோ ராஜ்ஞ: விஷ்ணு சக்ரம் ஸுதர்சநம் அசாம்யத் ஸர்வதோ விப்ரம் ப்ரதஹத்ம ராஜ யாக்ஞயா!! ஸமுக்தோஸ்த்ராகினி தாபேன துர்வாஸா ஸ்வஸ்தி மாம்ஸ்தத ப்ரசசம்ஸ தமுர் வீசம் யுஞ்ஜான: பர மா சிஷ: ஸ்ரீசுதர்சன சதகம் திருமிகு கூர நாராயண ஜீயர் ஸ்வாமிகள் சுதர்சன உபாசகர். திருவரங்கம் ஆலயத்திலே திருவாய் மொழி ஓதி பய பெற்றவர். ஒரு சமயம் அவருக்கு ஏற்பட்ட கொடிய கண்டமான நோயிலிருந்து தன்னை காப்பாற்றும்படி சுதர்சன பகவான் பிரார்தித்து இயற்றப்பட்ட பாமாலைதான் சுதர்சன சதக இதிலுள்ள ஒவ்வொரு பாசுரமும் ஒப்பற்றா உட்கருத்தை கொண்டதாகும். எப்பேற்பட்ட கொடிய நோய் ஏற்பட்டிருந்தாலும் சிகிச்சையில் குணமாகாது அவதிப்பட்டாலும் சுதர்சன சதக பாராயணம் செய்து சுதர்சனரை வழிபட்டு வந்தார் ஆச்சர்யப்படும்படி குணமாவது குறிப்பிடத்தக்கதாகும். ரங்கேச விஜ்ஞப்தி கராமயஸ்ய சகார சக்ரேசநுதிம் நிவ்ருத்தயே ஸமாச்ரயேஹம் வரபூரணீம்ய: தம்கூர நாராயண நாமகம் முநிம் சகல காரியசித்தி பெற ஸமாரா ஸமாதேவி ச சமஸ்த ஸுரஸேவிதா! ஸர்வ ஸம்பத்தி ஜநநீ ஸத்குணா ஸகலேஷ்டதா!! ஸௌதர் சந்யுஜ்ஜி ஹாரா திசி விதிசி திரஸ்க்ருத்ய ஸாவித்ரமாச்சி: பாஹ்யா பாஹ்யாத் தகாரக்ஷத ஜகதகதங்கார பூம்நா ஸ்வதாம்நா தோ கர்ஜுதுர கர்ஜத்வீ புதரிவது கண்ட வைகல்ய கல்யா ஜ்வாலா ஜாஜ்வல்ய மாநர விதரது பவதாம் வீப்ஸயா பீப்ஸிதாநி. செல்வம் செழிக்க வஸுப்ரதா வாஸுதேவி வாஸுதேவ மநோஹரி! வாஸவார்சித பாதஸ்ரீ: வாஸவாரி விநாஸிநீ!! ப்ரத்யுத்யாதம் மயூகை நபஸி நிருக்ருத ப்ராப்தஸேவம் ப்ரபாபி: பூமௌ ஸௌமேரவீபீ: திவி வரிவஸிதம் தீப்திமிர் தேவதாம்நாம் பூயஸ்யை பூதயேவ: ஸ்புர துஸகலதிக் ப்ராந்த ஸாந்த ஸ்வரஸ்புலிங்கம் சக்ரம் ஜாக்ரத் ப்ரதாபம் த்ரிபுவநவிஜய வ்யக்ரமுக்ரம் மஹஸ்தத் தரித்திரம் நீங்கி செல்வம் செழிக்க தினசரி இந்த சதகங்களை பாராயணம் செய்து ஸ்ரீசுதர்சன பகவானை வழிபட்டு வரவேண்டும். சர்வ சத்ரு நாசமடைய ப்ரகாரரூபா ப்ராணேஸு பிராண ஸம்ரக்ஷணி பரா! ப்ராஸஞ்ஜீவிநி ப்ராச்யா ப்ராணி: ப்ராணா ப்ரபோதிநீ!! த்ருஷ்டேஜ் திவ்யோம சக்ரே விகசநவ ஜபாஸந்நிகாசே ஸகாசம் ஸவர்ப்பாநுர் பாநுரேஷ ஸ்புடமிதி கலயந்நாகதோ வேகதோ ஜ்ஸ்ய நிஷ்டப்தோ பைர் நிவ்ருத்தோ விலுமிவ ஸஹஸா ஸ்ப்ரஷ்மு மத்யாபி நேஷ்டே கர்மாம்சும் தே கடந்தாமஹித விஹதயே பாநவோ பாஸ்வரா வ: சர்வ ஜன வசியமாக ஸப்தகோடி மஹாமந்த்ர மாதா ஸர்வ ப்ரதாயிநீ! ஸகுணா ஸம்ப்ரமாஸாக்ஷீ ஸர்வ சைதன்ய ரூபிணி! அம்ஹல் ஸ்ம்ஹத்ய தக்த்வா ப்ரதிஜநி ஜநிதம் ப்ரெடஸம்சாரவந்யா துராத் வந்யாநதன்யாத் மஹதி விநதிபிர் தரமநி ஸ்தாபயந்தீ விச்ராந்திம் சாச்வதீம் யாநயதி ரமயதாம் சக்ர ராஜஸ்ய நாபி: ஸம்யந்மோ முஹ்யாமா நத்ரிதசரிபுதசா ஸாக்ஷிணீ ஸாக்ஷிணீ வ: சர்வ ரோக நாசமடைய ஸர்வ ரோக ப்ரஸமநீ ஸர்வபாப விமோசநீ! ஸமத்ருஷ்டி: ஸமகுணா ஸாவகோபத்ரீ ஸஹாயிநீ!! தம்ஷ்ட்ரா காந்த்யா கடாரே கபட கிடிதரோ கைடபாரே ரதஸ்தாத் ஊர்த்வம் ஹாஸேந வித்தே நரஹரிவமஷோ மண்டலே வாஸவீயே: ப்ராக் ப்ரத்யக் ஸாந்த்ரச் சவி பரபரிதே வ்யோம்நி வித்யோத மாந: தைதேயோத் பாதசம்ஸீ ரவிரிவ ரஹமத்வ ஸத்ரோஜோ ருஜம் வ: ஸகல சுகமும் பெற சக்கரத்தாழ்வான் ஸ்தோத்ரம் ஸ்ரீரங்கம் ஸ்ரீசக்கரத்தாழ்வான் நம்பெருமாளான ஸ்ரீரங்க நாதனுடைய திருசக்கரதாழ்வானாவர் இந்த திவ்யக்ஷெத்திரத்திலே இவருக்கு தனி மஹிமை உண்டு. இவரை வந்து ஸேவித்துப் பிரதக்ஷினம் செய்து வந்தால் ஸகல தோஷங்களுக்கும் பரிஹாரம் கிடைக்கும். இந்தப் பெருமாளைப் பற்றி ஸ்ரீமன் நிகமாந்த மஹாதேசிகன் அருளிச் செய்த கீழ்க்காணும் பாசுரத்தைத் தினமும் அநுஸந்தித்துவந்தால் ஸகல வகைத் தோஷங்களும் நீங்கும்: பில்லி, சூனியம் முதலியவை யாவும் நம்மை நெருங்கிடாது: நோய் நொடிகளும் வராது: விவாகமாதவர்களுக்குக் கங்கன ப்ராப்திக்கு ஹேதுவாகும். திகிரி மழுவுயர் குந்தந்தண்டங் குசம்பொறி சிதறு சதமுக வங்கிவாள் வேலமர்ந்தும் தெழிபணில சிலைகண்ணி சீரங்க செவ்விடி செழியகதை முசலந்தி சூலந் திகழ்ந்ததும் அகிலவுலகுகள் கண்டையா யோரலங்கலில் அடையவடை விலிலங்க வாசின்றி நின்றதும் அடியுமரு கணையுமரவாமென்ன நின்று அடி யடையுமடி யரையன் பினாலஞ்ச லென்பதும் மகிழுமமரர் கணங்கள் வானங் கவர்ந்திட மலியுமசுரர் புணர்த்த மாய்ந் துரந்ததும் வளருமணி மணிமின்ன வானந்தி கொண்டிட மறைமுறை முறைவணங்க மாறின்றி வென்றதும் சிகியிரவி மதியமுமிழ் தேசுந்தவெண்டிசைத் திணிமருள் செகவுந்து சேமங்கள் செய்ததும் திகழரவணை யரங்கர் தேசென்ன மன்னிய திருசுதரிசனர் செய்ய வீரெண் புயங்களே. |
Similar topics
» பலன் தரும் விரதங்கள்
» பலன் தரும் பத்து முத்திரைகள்
» பலன் தரும் ஸ்லோகம் (நோய்களை அகற்றி, காரிய வெற்றி பெற)
» சரஸ்வதியின் தமிழ் சுலோகங்கள்:-
» ருத்திராட்சத்தின் பலன்
» பலன் தரும் பத்து முத்திரைகள்
» பலன் தரும் ஸ்லோகம் (நோய்களை அகற்றி, காரிய வெற்றி பெற)
» சரஸ்வதியின் தமிழ் சுலோகங்கள்:-
» ருத்திராட்சத்தின் பலன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum