Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்by vpoompalani March 24th 2016, 13:59
» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26
» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17
» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06
» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07
» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58
» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24
» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35
» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52
» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18
» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47
» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19
» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46
» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49
» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37
» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07
» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29
» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38
» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55
» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00
» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49
» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28
» திருத்தல யாத்திரை ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51
» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33
» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46
» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28
» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13
» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29
» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15
» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10
» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29
» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54
» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38
» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42
» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32
» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01
» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20
» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00
மகா சிவராத்திரி விரதமுறையும் பலனும்!
Page 1 of 1
மகா சிவராத்திரி விரதமுறையும் பலனும்!
சிவராத்திரி விரதத்தை முதல் நாளே தொடங்கிவிட வேண்டும். விரதமிருப்போர்
முதல் நாள் ஒருவேளை மட்டுமே உணவு உண்ணவேண்டும். சிவராத்திரி நாளில்
முழுநேரம் உணவேதும் உண்ணாமல் சிவ சிந்தைனையுடன் இருக்கவேண்டும்.
இயலாதவர்கள் இருவேளை பால்,பழம் சாப்பிட்டு ஒருவேளை உணவு உண்ணலாம். ஓம்
நமசிவாய ஓம் சிவாயநம மந்திரங்களை 108 அல்லது 1008 முறை ஜெபிக்க வேண்டும்.
இரவில் கோயிலில் நடைபெறும் நான்குகால அபிஷேகத்தை தரிசிக்கவேண்டும். இரவு
முழுவதும் விழித்திருக்க வேண்டும். உணவு உண்ணாமல் பசியை அடக்குவதன் மூலம்
காமம், கோபம், பொறாமை ஆகியவற்றில் இருந்து விடுதலை கிடைக்கும்.
விழித்திருந்து சிவபூஜை செய்வதால் சுறுசுறுப்பு உண்டாகும். சிவனுக்கு
அபிஷேகம் செய்வது புறவழிபாடு. அகவழிபாடாக, சிவ பெருமானே! தண்ணீர், பாலால்
உமக்கு அபிஷேகம் நடக்கிறது. அதனை ஞானப்பாலாக்கி எமக்கு அருள வேண்டும்.
அறியாமல் செய்த பாவங் களைப் போக்கி வாழ்வில் மகிழ்ச்சியைத் தர வேண்டும்,
என்று பிரார்த்திக்க வேண்டும்.
சிவராத்திரி விரத மகிமை: விரதங்கள் பலவும் அதனைக்
கடைப்பிடிப்போர்க்கு மட்டுமே பலன் தரும். மகா சிவராத்திரியன்று விரதம்
இருப்பவர்களுக்கு நற்கதி கிடைப்பதுதான் சொர்க்கலோக பாக்கியமும் கிடைக்கும்
என்பது நம்பிக்கை. ஒருவர் தொடர்ந்து 24 வருடங்கள் சிவராத்திரி விரதம்
இருந்துவந்தால் அவர் சிவகதியை அடைவதுடன், அவரது 21 தலைமுறைகளும் நற்கதி
அடைந்து முக்தியை அடைவார்கள் என்பது ஐதீகம். அசுவமேத யாகம் செய்த பலனும்
கிடைக்கும்.
செல்வம் தரும் சிவராத்திரி: மகாபாரதம் சாந்தி
பர்வத்தில் சிவராத்திரியின் மகத்துவம் கூறப்பட்டுள்ளது. அம்பு படுக்கையில்
கிடந்த பீஷ்மர், சிவராத்திரி விரத மகிமையை பாண்டவர்களுக்கு சொன்னார்.
இக்ஷவாகு குலத்தில் பிறந்த மன்னர் சித்திரபானு. அஷ்டவக்கிர முனிவர் ஒரு
சிவராத்திரி நாளில் மன்னனைச் சந்திக்க வந்தார். விரதமிருந்த மன்னன்
முனிவரிடம், ஐயனே! நான் சுஸ்வரன் என்னும் வேடனாக முற்பிறவியில்
வாழ்ந்தேன். வேட்டையாடி மாமிசத்தை விற்பது என் தொழில். ஒருநாள், பகலில்
மிருகம் ஏதும் சிக்கவில்லை. இரவான பிறகு மான் ஒன்றைக் கொன்றேன். காட்டிலேயே
தங்கிவிட்டேன். மிருகங்களிடமிருந்து தப்ப ஒரு மரத்தில் ஏறிக் கொண்டேன்.
பசிமயக்கத்தால் தூக்கம் வரவில்லை. இலைகளைப் பறித்து கீழே போட்டபடி
இருந்தேன். பொழுது புலர்ந்து விட்டது. அந்த நாள் சிவராத்திரி என்பதை
அப்போது நான் அறிந்திருக்கவில்லை. மரணம் ஏற்பட்டு என் உயிர் நீங்கிய பின்,
இரு சிவதூதர்கள் என்னை அழைத்துச் செல்ல வந்தனர். நீ வேட்டையாடச் சென்ற நாள்
சிவராத்திரி. அன்று நீ ஏறியது வில்வமரம். மரத்தடியில் ஒரு சிவலிங்கம்
இருந்தது. நீ வில்வ இலைகளைப் பறித்துப் போட்டபடி இருந்தாய். உறங்கவும்
இல்லை. அறியாமல் செய்தாலும், சிவராத்திரியன்று லிங்கத்துக்கு
வில்வார்ச்சனையால் உனக்கு நற்கதி கிடைத்தது என்றனர். அதனால், நாடாளும்
மன்னனாக சித்திரபானு என்ற பெயரில் இப்பிறவியில் பிறக்கும் பேறு பெற்றேன்,
என்றார். பக்தியுடன் சிவராத்திரி விரதம் இருப்பவர்கள், எத்தனை பிறவி
எடுத்தாலும் பணக்காரர்களாக இருப்பர். அவர்களது சந்ததியும் செல்வவளத்துடன்
திகழும்.
சிவராத்திரி விரதமிருந்து அர்ஜுனன் தவம் செய்து பாசுபதம் (பசுபதி+சிவன்)
என்ற அஸ்திரத்தைப் பெற்றான். கண்ணப்ப நாயனார் குருதி வடியும் லிங்க
வடிவிலிருந்த ஈசனின் கண்மீது தன் கண்களைப் பெயர்த்தெடுத்து பொருத்தி முக்தி
அடைந்தான். பகீரதன் கடுந்தவம் இயற்றிக் கங்கையை பூமிக்குக் கொணர்ந்தான்.
மார்க்கண்டேயனுக்காக யமனையே சிவபெருமான் சம்ஹாரம் செய்தார். பார்வதிதேவி
அருந்தவம் இயற்றி சிவபெருமானின் இடப்பாகத்தில் இடம்பெற்றுச் சிவனையே
உமையொரு பாகனாகச் செய்தார். சிவபெருமான் காலனை உதைத்தார். லிங்ககோற்பவராக
ஈசனை தோன்றினார். உமயவள், மகேசனிடம் ஆகம உபதேசம் பெற்றாள். சிவபெருமான்,
நஞ்சு உண்டார்.
சிவபூஜை செய்த வேடன்: ஒரு காட்டில் சண்டன் என்ற ஒரு
வேடன் வாழ்ந்து வந்தான்; அவன் காட்டில் வேட்டையாடுவதையே தொழிலாகக்
கொண்டிருந்தான். காட்டில் அலையும் விலங்குகளையும் பறவைகளையும் வேட்டையாடிப்
பிடித்து, அவற்றை விற்று ஜீவனம் செய்து வந்தான். அவனுக்கு சண்டிகா என்ற
மனைவி இருந்தாள். ஒருநாள் அடர்ந்த காட்டிற்குள் விலங்குகளைத்தேடி அலைந்து
கொண்டிருந்தபோது, வானுயர்ந்த ஒரு பெரிய வில்வ மரத்தினடியில், அழகிய
சிவலிங்கம் ஒன்று புதியதாய்த் தோன்றி இருப்பதைக் கண்டான். அது ஒரு சுயம்பு
லிங்கம். சிவலிங்கத்தைக் கண்டதும் அவனுக்கு மெய்சிலிர்த்தது. அவனுள்
அன்பும் பக்தியும் பெருகி அவனையுமறியாமல் கண்களில் ஆனந்தக்கண்ணீர்
பெருகிவழிந்தது. அவன் உள்ளம் பெறற்கரிய பெருஞ்செல்வத்தைப் பெற்றதுபோல்
குதூகலத்தால் குதித்துக் கூத்தாடியது. தானே தோன்றிய சிவலிங்கத்திற்கு பூஜை
எப்படிச் செய்ய வேண்டும்? இறைவனை எப்படி வணங்க வேண்டும்? என்ற விவரமெல்லாம்
அவனுக்குத் தெரியாது. எதுவுமே தெரியாத ஒரு அப்பாவி வேடன் அவன். அப்போது
அங்கே சிங்க கேது என்ற மன்னன் வந்தான். வேட்டையாட கானகம் வந்தவன், தன்
பரிவாரங்களைப் பிரிந்து, வழிதெரியாமல் அலைந்து கொண்டிருந்தவன், வேடன்
சண்டன் இருக்குமிடம் வர நேர்ந்தது. வேடனைக் கொண்டு கானக வழியைக்
கண்டுபிடித்து வெளியேறி விடலாம் என நம்பினான். மன்னன் சிங்ககேது
வந்ததைக்கூட அறியாமல் சிவ லிங்கத்தையே பார்த்துக் கொண்டிருந்த சண்டனைப்
பார்த்து, வேடா, இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்? வழி தவறி வந்து
விட்டேன். காட்டைவிட்டு வெளியேற வேண்டும். வழிகாட்டு! என்று கேட்க, மன்னன்
குரல் கேட்டு சண்டன் உணர்வு வரப்பெற்றான்.
அரசே, என்னை மன்னியுங்கள். பாராமுகமாய் இருந்து விட்டேன். என்னுடன்
வாருங்கள் வழிகாட்டுகிறேன்! என்றான். தொடர்ந்து, மகாராஜா, இங்கே இருக்கும்
சிவலிங்கத்தை எப்படி பூஜிக்க வேண்டும் என்பதை எனக்கு விளக்கமாய் கூறுங்கள்!
என்று மிகுந்த பணிவுடன் மன்னனிடம் கேட்டான் சண்டன். உடனே மன்னன்
பரிகாசமாய், வேடனே, உன் தோல் பையில் தண்ணீர் கொண்டு வந்து
சிவலிங்கத்தின்மீது ஊற்று. சுடலையில் வெந்த சாம்பலைக் கொண்டு வந்து
சிவலிங்கத்துக்குப் பூசு. கைக்குக் கிடைக்கிற பூக்களையெல்லாம் கொண்டு வந்து
சிவலிங்கத்தின் மேல் வை. நீ உண்ணும் உணவைக் கொண்டு வந்து நிவேதனமாக வை.
விளக்கேற்றிவை. இரு கை கூப்பிக் கும்பிடு போடு! என்று அலட்சியத்தோடு
கூறினான். மன்னன் சொன்ன விவரங்களையெல்லாம் சண்டன் கவனமாகக் கேட்டுக்
கொண்டான். மன்னன் சிங்ககேது கூறியதையெல்லாம் அப்படியே மனதில் பதித்துக்
கொண்டான் சண்டன். தோற்பையில் தண்ணீர் கொண்டுவந்து சிவலிங்கத்தின்மீது
ஊற்றினான். சுடலையைத் தேடிச் சென்று, கை நிறைய வெந்த சாம்பலை அள்ளிக்கொண்டு
வந்து சிவ லிங்கத்தின்மீது பூசினான். கைக்குக் கிடைத்த காட்டுப்
பூக்களையெல்லாம் கொண்டுவந்து சிவலிங்கத்தின்மீது வைத்தான். தான் உண்ணும்
உணவையே நிவேதனமாகப் படைத்தான். விளக்கேற்றி வழிபட்டான். இதனையே உறுதியாகக்
கொண்டு தினமும் பூஜை செய்து வந்தான். இரவும் பகலும் அவன் நினைவில்
சிவலிங்கமே நிறைந்திருந்தது. ஒரு நாள் சுடலையின் வெந்த சாம்பல் அகப்படாமல்
போயிற்று. சிவபூஜை தடைப்பட்டது. இதனால் சண்டன் மிகுந்த கவலையுடன்
இருந்தான்.
உண்ணாமல் உறங்காமல் உற்சாகமின்றிக் காணப்பட்டான். அவனுக்கு எதுவுமே
சொல்லத் தோன்றவில்லை. இதனை அவனது கற்புடைய மனைவி சண்டிகா அறிந்து மனம் மிக
நொந்தாள். கணவனை நோக்கி, அன்பரே, நீங்கள் சிவபூஜையைத் தொடர்ந்து செய்ய ஒரே
ஒரு வழிதான் இருக்கிறது. நாம் குடியிருக்கும் இந்தக் குடிசையைக்
கொளுத்தினால், நான் அதில் விழுந்து வெந்து சாம்பலாவேன். அந்த சாம்பலை
எடுத்துக்கொண்டு போய் சிவலிங்கத்திற்குப் பூசுங்கள். உங்கள் விருப்பப்படியே
பூஜையும் இனிதே நடக்கும் என்றாள் சண்டிகா. கள்ளங்கபடமில்லாத சண்டனும்
அப்படியே செய்து முடித்தான். பூஜை முடிவில் வழக்கப்படி நிர்மால்யம் கொண்டு
போனான். அன்று சிவராத்திரி என்று அவனுக்குத் தெரியாது. மெய் மறந்து வழிபட்ட
நிலையில், அவன் செய்த புண்ணியத்தால், இறைவன் அவன் முன் தோன்றி
அருள்பாலித்தார். அவன் மனைவி சண்டிகாவை உயிர்ப்பித்தார். குடிசையும் முன்பு
இருந்தது போலாயிற்று. வேடன் சண்டன் ஞானம் வரப்பெற்றவனாய் இறைவனைப்
போற்றினான். சிவகணங்கள் எதிர்கொள்ள கயிலையை அடைந்தான் என்று,
சிவராத்திரியின் பெருமை பற்றிக் கூறும் பிரம்மோத்திர காண்டமும் வரதபண்டிதம்
என்ற நூலும் விவரிக்கின்றன. எதுவும் தெரியாமலும் தன்னை அறியாமலும்
செய்யும் சிவராத்திரி வழிபாடு கூட பலன்தரும். இப்படி அறியாமல் செய்த
பூஜைக்கே பலனுண்டு என்றால் சிவராத்திரியை அறிந்தே பூஜை செய்பவர்களுக்கும்,
ஆலயம் சென்று முறையே வழிபாடு செய்பவர்களுக்கும் புண்ணியம் வந்துசேரும்.

Re: மகா சிவராத்திரி விரதமுறையும் பலனும்!
மஹா சிவராத்திரி
விழிப்புணர்வின் வாசல் !!
இந்த அம்மாவாசை இரவில்தான் சிவதாண்டவம் புரிந்ததாக சாஸ்திரங்கள் சொல்கின்றன. சிவதாண்டவம் என்பது வெறும் நடணம் அல்ல. இது சிவனின்
எல்லையற்ற தன்மையை குறிக்கிறது. இது "ஆணந்த தாண்டவம்" என்றும்
சொல்லப்படுகிறது. இந்த நடணம் எல்லையற்ற சக்தியின் ஐந்து தண்மைகளாகிய
படைத்தல், காத்தல், அழித்தல், முக்தி மற்றும் மாயையை குறிக்கிறது.
உலகம் உண்டாக்கப்பட்ட போது பார்வதி சிவ பெருமானை எது சிறந்த நாள் என்று கேட்டபோது, இந்த நாளை தான் சிவன் பரிந்துரைத்தாராம்.
இந்த நாளில் தான் அசுரர்களும் தேவர்களும் பாற்கடல் என்கிற சமுத்திரத்தை,
"மந்தார மலை" எனும் மத்தை ஒரு ஆமையின் மீது அமர்த்தி, "வாசுகி" எனும்
பாம்பை கயிறாக்கி, அதனை கடையும் போது, ஆலகால விஷம் வெளிப்பட்டது.
அசுரர்களும், தேவர்களும் செய்வதறியாது திகைத்தனர். உலகமே அழிவின்
விளிம்பிற்கு வந்தது. பரமசிவன் உலகை இரட்சிக்க அந்த கொடிய விஷத்தை தன்
கழுத்தில் அடக்கி உலகை காப்பாற்றினார்.
இது என்ன கதை ? ஹிந்து தர்மத்தில் பாமரனுக்கு ஒரு கதை இருக்கும், ஞானிகளுக்கு ஒரு தத்துவமும் இருக்கும்.
இந்த "சமுத்திர மந்தனம்" எனப்படும் கதை, நம்முள் இருக்கும் விழ்ப்புணர்வு
நிலையை குறிக்கிறது. தேவர்கள் நம் சுகங்களையும், அசுரர்கள் நம்
துக்கங்களையும் குறிக்கிறார்கள். சுக துக்கம் இரண்டையும் ஒன்றாக சேர்த்து,
பாற்கடல் எனும் மனதை உள்முகமாக திருப்புவதை இது குறிக்கிறது. கடலில்
அலைகள் ஓயாமல் வருவது போல், நம் மனதிலும் எண்ண ஓட்டங்கள் ஓயாமல் வருகின்றன
அல்லவா ?
"மந்தாரா" என்பது வெறும் மலையின் பெயரல்ல, "மன்"
என்றால் மனம், தாரா என்றால் தாங்குவது அல்லது ஒரே நிலையில் வைப்பது என்று
பொருள் படுகிறது. ஆக மந்தாரா என்றால் மனதை ஒரு நிலைப்படுத்துவது எனப்
பொருள்படும்.
வாசுகி எனும் பாம்போ, ஆசைகளை குறிக்கிறது. பல தலைகளை கொண்ட பாம்பு, பலவிதமான ஆசைகளை குறிக்கிறது.
இந்த மலையை எது தாங்குகிறது ? ஆமை வடிவில் உள்ள விஷ்னுவால். ஆமை
ஒட்டுக்குள் நுழைந்து கொள்வது போல் நம் புலன்களை உள் வாங்கி ஒடுக்குவதை
அது குறிக்கிறது. ஆமை பொறுமைக்கு பெயர் போனது அது விடா முயற்சியையும்
குறிக்கிறது.
மொத்தத்தில் சுக துக்கம் இரண்டையும் ஒன்றாக
பாவித்து, புலன்களை அடக்கி, ஆசைகளை ஒடுக்கி, மனதை ஒருநிலைப்படுத்தினால்
அமிர்தம் எனும் விழிப்புணர்வு நிலை கிடைக்கும் என்பதை இது உணர்த்துகிறது,
"ஆலகால விஷம்" நாம் மனதை ஒருநிலை படுத்துகையில் ஏற்படும் தடங்கல்கள்,
வேதனைகள், வலிகள் ஆகியவற்றைக் குறிக்கிறது. சிவன் விவேகம், பற்றற்ற
தன்மை, ஆற்றல், பொறுமை, இடைவிடாத முயற்சி ஆகியவற்றை குறிக்கிறார்.
ஆகையால் ஒரு யோகி தனக்கு வரும் தடைகளை அத்தகைய தன்மைகளை கொண்டு
விழிப்புணர்வு நிலையை அடைகிறார் என்பதை அது குறிக்கிறது.
இன்றைய தினத்தில் பக்தர்கள் விரதமிருக்கிறார்கள். 'ஓம் நமச்சிவாய' என்ற
பஞ்சாட்சர மந்திரத்தை இரவு முழுதும் உச்சரிக்கிறார்கள். இது யஜுர்
வேதத்தில் வரும் "ஸ்ரீ ருத்ர சமகத்தில்" ஒரு பகுதியாகும். இது
"மங்களமானவரை வழிபடுகிறேன்" என்று பொருள் பெரும்.
பிரபஞ்சத்தின்
மூலாதாரத்தை குறிக்கும் சிவலிங்கத்தை நீர், பால் மற்றும் தேனால் அபிஷேகம்
செய்து, அதற்கு தூய சந்தனத்தை பூசி, எல்லாவற்றின் முடிவை குறிக்கும்
திருநீற்றை அதற்கு இட்டு, வழிபடுவது வழக்கம்.
ஞாணத்தை குறிக்கும் விளக்கை ஏற்றி நம் உள் உறைந்திருக்கும் விழிப்புணர்வை தூண்டுமாறு ப்ரார்தித்தால் சாலச் சிறந்தது.
"ஓம் நமச்சிவாய" !!

Similar topics
» ஜபம் செய்யும் திசையும் பலனும்
» வலம் புரிச்சங்கு பூஜை சிறப்பும், பலனும்..!
» மகா சிவராத்திரி அனுஷ்டிப்பதற்கு தனி விதி உள்ளது.
» மஹா சிவராத்திரி
» மகா சிவராத்திரி விரதம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum