Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்by vpoompalani March 24th 2016, 13:59
» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26
» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17
» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06
» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07
» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58
» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24
» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35
» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52
» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18
» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47
» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19
» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46
» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49
» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37
» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07
» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29
» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38
» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55
» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00
» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49
» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28
» திருத்தல யாத்திரை ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51
» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33
» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46
» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28
» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13
» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29
» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15
» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10
» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29
» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54
» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38
» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42
» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32
» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01
» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20
» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00
திரிகோணமலை நல்லியக்கோடர்.ஆலய வரலாறு
Page 1 of 1
திரிகோணமலை நல்லியக்கோடர்.ஆலய வரலாறு
தமிழர் வாழும் இடமெல்லாம் முருகவழிபாடு உண்டு.
ஈழ நாட்டின் திரிகோண மலைப்பகுதி தமிழர் வாழும் பகுதி. அங்கு கடைச் சங்க காலத்தில் ஒரு குறுநில மன்னர் ஆண்டு வந்தார். அவர் பெயர் நல்லியக்கோடர்.
தமிழகத்தின் வடபகுதி தொண்டை நாடு எனப் பட்டது. தொண்டை நாட்டிலுள்ள
எயிற்பட்டினம், ஆமூர், வேலூர், மூதூர் ஆகிய நகரங்களை நல்லியக்கோடர்
கைப்பற்றினார். அங்கு கோட்டைகள் அமைத்து அரசு புரிந்தார். இவரது குலதெய்வம்
குமரக் கடவுள்.
புலவர் நந்தத்தனார் நல்லியக்கோடர்மீது பாடியது
சிறுபாணாற்றுப்படை என்னும் நூல். இது சங்க இலக்கியங்களில் பத்துப்பாட்டில்
ஒன்றாகும். நல்லியக்கோடர் புலவர்க்குப் பரிசிலாக யானைக் குட்டியும்
வளநாடும் பொற்குவியலும் வழங்கிப் போற்றியுள்ளார்.
நல்லியக்கோடர்
புகழ் சங்க இலக்கியத்தில் இடம் பெற்றதை அறிந்தனர் மூவேந்தர். அவர்கள்
உள்ளத்தில் பொறாமைத் தீ மூண்டது. மூவேந்தரும் நல்லியக்கோடர் மீது திடீர்
படையெடுப்பு நடத்தினர்.
"முருகனை நம்பினோர் முழு வெற்றி பெறுவர்'
எனும் கொள்கையுடையவர் நல்லியக்கோடர். அந்த நம்பிக்கையோடு தன் படைகளுடன்
மூவேந்தரை எதிர் கொண்டார்.
நல்லியக்கோடரின் கெடுமதி கொண்ட
அமைச்சர் பகைவருக்கு உளவு சொல்லியதனால் நல்லியக்கோடரின் படைகள் மூவேந்தர்
படைகளின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் சிதறின.
தோல்வி நிச்சயம்
என்பதை உணர்ந்தார் நல்லியக்கோடர் இரவோடு இரவாக மனைவியுடன் வேலூர் சென்று
முருகப் பெருமானின் திருவடிகளைச் சரணடைந்தார்.
"ஐயனே, தோல்வியால்
மானம்ழிந்தபின் இனி உயிர் வாழேன்'' என்று கூறிவிட்டு அயர்ந்து விட்டார்.
கனவில் கந்தவேள் கைவேலுடனும் மயிலுடனும் காட்சி தந்து
"நல்லியக்கோடனே, யாமிருக்க பயமேன்? வேலுண்டு வினையில்லை; மயிலுண்டு
பயமில்லை. நீ நீராடும் கேணி நீரில் பூக்கும் ஒற்றைத் தாமரை மலரைப் பறித்து
எமது ஆறெழுத்து மந்திரத்தை (ஓம் சரவணபவ) சொல்லி பகைவர்மீது வீசி எறிவாயாக''
என்று திருவருளாணையிட்டு மறைந்தார்.
எழுந்த நல்லியக்கோடர் புத்துணர்ச்சி பெற்று போர்க்களம் சென்றார்.
வள்ளிமணாளன் முருகன் சொன்னபடி கேணியில் பறித்த தாமரை மலரை பகைவர் மீது
வீசினார். மலரே வேலாக மாறியது. பகைவர் தலைகளைச் சாய்த்தது. அவனது
போர்ப்படைகள் செய்ய முடியாததை முருகனின் வேற்படை செய்து முடித்தது.
"அம்மலர் அயிலென அணுகி ஆங்குள
வெம்மைசேர் படைகளை வீட்டி தெவ்வர்கள்
தம்முழி அமைச்சன் தன் தலையைக் கொய்து உயர்
செம்மனக் கோடன்தன் திருக்கை சேர்ந்ததே'
என்கிறது பாடல்.
அயில்- வேல்;
வீட்டி- அழித்து;
தெவ்வர்கள்- பகைவர்கள்;
கொய்து- பறித்து.
வேலாக மாறிய தாமரை மலர் பகைவர்களை அழித்து, கொடிய அமைச்சர் தலையை வெட்டி நல்லியக்கோடர் கையில் சேர்த்தது!
நல்லியக்கோடரைக் காக்கும் வேல் கொடிய அமைச்சனைத் தாக்கும் வேலாகியது.
கடவுள் கை ஆயுதங்கள் என்றுமே நல்லோருக்குத் தீங்கு செய்யாது. எனவே
அவற்றிற்கு கொடியோர்தான் அஞ்ச வேண்டும். அதிலும் மனந்திருந்திவிட்டால்
அவர்களையும் வாழ வைக்கும் வேலாயுதம் என்பதற்கு மயிலாக வாழ்ந்து
கொண்டிருக்கும் சூரபத்மனே சான்று!
பொறாமைத் தீ மூவேந்தர்க்கு தோல்வியைத் தந்தது. குறுநில மன்னர் நல்லியக்கோடரிடம் பணிந்தனர் மூவேந்தர்.
தனக்கு வெற்றி தந்த வேலவனுக்கு நல்லியக்கோடர் ஓர் ஆலயம் எடுத்தார். அந்த ஊர் பெயரும் அன்று முதல் வேலூரானது.
---வாரியார் சுவாமிகள் கூறியதை ஆதாரமாய்க் கொண்டு எழுதப்பட்டது. நன்றி எம்.எஸ். சுப்பிரமணியம்.

Similar topics
» ராம நாமத்தின் வரலாறு
» அருணகிரிநாதர் வரலாறு
» திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில்தல வரலாறு
» திருமூலர் தம் வரலாறு கூறுதல்
» ஸ்ரீ ராகவேந்திரர் வரலாறு
» அருணகிரிநாதர் வரலாறு
» திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில்தல வரலாறு
» திருமூலர் தம் வரலாறு கூறுதல்
» ஸ்ரீ ராகவேந்திரர் வரலாறு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum