HinduSamayam
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

HinduSamayam
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
HinduSamayam
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்
by vpoompalani March 24th 2016, 13:59

» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26

» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17

» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06

» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07

» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58

» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24

» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35

» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52

» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20

» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18

» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37

» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47

» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19

» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46

» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49

» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37

» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07

» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29

» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38

» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55

» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00

» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49

» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28

» திருத்தல யாத்திரை  ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51

» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33

» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46

» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28

» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13

» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29

» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15

» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10

» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29

» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54

» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38

» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42

» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32

» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01

» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20

» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00

தமிழர்களின் சிந்தனைகளம்
Related Posts Plugin for WordPress, Blogger...



ஐயப்பன் வரலாறும் 'பள்ளிக்கட்டு' பாடல் வரியும்

Go down

  ஐயப்பன் வரலாறும் 'பள்ளிக்கட்டு' பாடல் வரியும்  Empty ஐயப்பன் வரலாறும் 'பள்ளிக்கட்டு' பாடல் வரியும்

Post by மாலதி August 25th 2010, 08:18

  ஐயப்பன் வரலாறும் 'பள்ளிக்கட்டு' பாடல் வரியும்  300px-Ayyappan


ஐயப்பன் வரலாறு :

கேரளாவில் பந்தள மகாராஜா குழந்தையில்லாமல் மனம் வருந்தி வந்தார். அந்த சமயத்தில் மகிஷி என்ற அரக்கி ரிஷிகளை துன்புறுத்தி வந்தாள். அவர்களுக்கு உதவ சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்தவர் தான் ஐயப்பன். விஷ்ணு மோகினியாக மாற, சிவனுக்கும் மோகினிக்கும் (விஷ்ணுவுக்கும்)ஐயப்பன் பிறந்தார்.

குழந்தையாக
பிறந்த ஐயப்பனை மரத்திற்கு அடியில் விட்டுவிட்டு சென்று விட்டனர் ஹரியும்,
விஷ்ணுவும். தெய்வ செயல்கள் அனைத்திற்குமே ஒரு காரணம் உண்டல்லவா?
பக்திமானான பந்தள மகாரஜாவின் பிள்ளையில்லா குறையைத் தீர்க்கவே
பரந்தாமனும், பரம்பொளும் குழந்தையை அங்கேவிட்டுச் சென்றனர்.

வேட்டைக்கு
வந்த பந்தள மன்னன் குழந்தையின் அழுகுரல் கேட்டான். எங்கு குழந்தை அழுகிறது
என பதைபதைத்து தேடி மரத்தடியில் ஜொலிக்கும் தேஜசுடன் குழந்தை ஐயப்பனைக்
கண்டான். "ஆண்டாவா! என் குழந்தையில்லா குறை தீர்க்கவே இந்த குழந்தை இங்கு
இருக்கிறதா" என மகிழ்ந்து அந்தகுழந்தையை அரண்மனை கொண்டு சென்றான்.

அரசியும் மட்டிலா
மகிழ்ச்சி அடைந்தாள். இருவரும் இறைவனுக்கு நன்றி செலுத்தினர். குழந்தையை
கண்ட அனைவரும் சொக்கிப் போனார்கள். ஜோதிடர்கள் இந்தக் குழந்தை தெய்வாம்சம்
பொருந்திய குழந்தை எனக் கூறினர். கழுத்தில் மணியுடன் பிறந்ததால்,
குழந்தைக்கு 'மணிகண்டன்' என்று பெயரிடலாம் என்று முடிவு செய்து மணிகண்டன்
என பெயரிட்டு அன்போடு பாராட்டி சீராட்டி வளர்த்து வந்தனர்.

இந்நிலையில்
மகாராணிக்கும் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அரசனும் அரசியும் அடைந்த
ஆனந்தத்திற்கு அளவில்லை. மணிகண்டன் வந்த நேரம் நமக்கும் குழந்தை பிறந்தது
என ஆனந்தம் அடைந்தனர்.

ஆனால் எங்குமே நல் மனதைக் கெடுக்கும்
புல்லுருவிகள் இருக்குமல்லவா? ஐயப்பன் உங்களுக்கு பிறந்த மகன் அல்ல. ஆனால்
அவனையே தலைப்பிள்ளை போல் சீராட்டி வளர்க்கிறீர்கள். அதனால் அடுத்த மன்னனாக
அவன் வரவே வாய்ப்பிருக்கிறது. உங்களுக்கு பிறந்த குழந்தையிருக்க வேறுயாரோ
எப்படி அரசனாவது என அரசியின் மனதில் நஞ்சைக் கலந்தனர் சிலர்.

தீயபோதனைகளால்
அரசியும் மனம் மாறினாள். தான் வயிற்று வலியால் அவதிப்படுவதாக
பொய்யுரைத்தாள். அரசவை வைத்தியரை 'புலிப்பால்' குடித்தால் மட்டுமே தன்
வயிற்று வலி தீரும் என கூற வைத்தாள்.

ஐயப்பன் அறிய மாட்டானா
உண்மையை!?. தாய்க்கு புலிப்பால் கொண்டு வர காடு நோக்கி புறப்பட்டான்.
வழியில் அரக்கி மகிஷி ஐயப்பனைத் தடுத்தாள். வில்லெடுத்தான் வில்லாளி
வீரன். வதம் செய்தான் மகிஷியை. அவன் அவதார மகிமை பூர்த்தி பெற்றது.
தேவர்கள் பூமாரி பொழிந்தனர். இந்திரனே புலியாக மாற, மற்ற தேவர்கள் புலியாக
புடை சூழ புலிமேல் ஏறி நாடு சென்றான் ஐயப்பன்.

புலிமேல் வந்த
மணிகண்டனைக் கண்டு பதறிப் போனாள் அரசி. தான் செய்த தவறுக்கு மன்னிப்பு
கேட்டு புலிகளை திருப்பி அனுப்புமாறு வேண்டினாள். ஐயப்பனும் அவ்வாறே
செய்து அருளினார்.

மேலும் தன் அவதார காரணம் பூர்த்தி பெற்றதால்
தான் சபரிமலையில் தவமிருக்கப் போவதாகவும் தன்னை தரிசிக்க வேண்டுமானால்
அங்கு வருமாறும் கூறி சபரி மலையில் 18 படிகளுக்கு மேல் தவக் கோலத்தில்
அமர்ந்தார் அருள்தரும் ஐயப்பன்.

இன்றும் நாம் ஐயப்பனை அங்கு அந்த தவக் கோலத்தில் காணலாம். ஐயப்பனின் இரு கால்களில் துண்டு கட்டியிருக்கப்பட்டிருப்பதைக் காணலாம். அதற்கும் ஒருகாரணம் கூறப்படுகிறது.<blockquote>ஐயப்பனைக்
காண பந்தள மகாரஜா ஒரு மூறை வந்த போது ஐயப்பன் தன் தந்தை என்ற காரணத்தால்
எழ முயன்ற போது இறைவன் தனக்கு மரியாதைசெய்ய எழுந்திருக்கக் கூடாது
என்பதற்காக தன் தோளில் போட்டிருந்த பட்டு அங்கவஸ்திரத்தை ஐயப்பனை நோக்கி
அவர் தூக்கி போட்டபோது அந்தஅங்கவஸ்திரம் ஐயப்பன் காலைச் சுற்றிக்
கொண்டதாகவும் கூறப்படுகிறது. உற்று நோக்கினால் ஐயப்பன் அமர்ந்த
கோலத்திலிருந்து சற்றேஎழுந்திருப்பது போல் தோன்றும் எனக் கூறுகிறார்கள்.</blockquote>இப்போது எங்கு பார்த்தாலும் ஐய்யப்பன் பக்தி பாடல்கள். எனக்கு கி.வீரமணி அவர்கள் பாடிய "பள்ளிக்கட்டு சபரி மலைக்கு" என்ற பாடல் மிகவும் பிடிக்கும்.
<blockquote>Show <--- இங்கே அந்த பாடல் வரிகளை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சியே.</blockquote>

இருமுடி தாங்கி ஒரு மனதாகி குருவெனவே வந்தோம்
இருவினை தீர்க்கும் அந்த எமனையும் வெல்லும்
உன் திருவடியை காண வந்தோம்...

பள்ளிக்கட்டு சபரி மலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
ஸ்வாமியே அய்யப்போ
சுவாமி சரணம் ஐயப்பா சரணம் (2 தடவை மெல்லிய குரலில்)

பள்ளிக்கட்டு சபரி மலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
ஸ்வாமியே அய்யப்போ அய்யப்போ சுவாமியே

நெய்யபிஷேகம் சுவாமிக்கே
கற்பூர தீபம் சுவாமிக்கே
ஐயப்பன் மார்களும் கூடிக்கொண்டு
ஐயனை நாடி சென்றிடுவார்
சபரி மலைக்கு சென்றிடுவார் (ஸ்வாமியே அய்யப்போ அய்யப்போ சுவாமியே)

கார்த்திகை மாதம் மாலையணிந்து
நேர்த்தியாகவே விரதமிருந்து

பார்த்த சாரதியின் மைந்தனே உன்னை
பார்க்க வேண்டியே தவமிருந்து (2)

இருமுடி எடுத்து எருமேலி வந்து
ஒரு மனதாகி பேட்டை துள்ளி
அருமை நண்பராம் வாவரை தொழுது
அய்யனின் அருள் மலை ஏறிடுவார் (ஸ்வாமியே அய்யப்போ அய்யப்போ சுவாமியே)

அழுதை ஏற்றம் ஈரும் போது
அரிகரன் மகனை துதித்து செல்வார்
வழி காட்டிடவே வந்திடுவார்
அய்யன் வன்புலி ஈறி வந்திடுவார்

கரிமலை ஏற்றம் கடினம் கடினம்
கருணை கடலும் துணை வருவார்
கரிமலை இறக்கம் வந்தவுடனே
திருநதி பம்பையை கண்டிடுவார் (ஸ்வாமியே அய்யப்போ அய்யப்போ சுவாமியே)

கங்கை நதி போல் புண்ணிய நதியாம் பம்பையில் நீராடி
சங்கரன் மகனை கும்பிடுவார் சங்கடமின்றி ஏறிடுவார்
நீலிமலை ஏற்றம் சிவபாலனும் ஈற்றிடுவார்
காலமெல்லாம் நமக்கே அருள் காவலனாய் இருப்பார்

தேக பலம் தா பாட பலம் தா தூக்கிவிடையா ஏற்றிவிடையா
தேக பலம் தா பாட பலம் தா (மெல்லிய குரலில்)

தேக பலம் தா என்றல் அவரும் தேகத்தை தந்திடுவார்
பாட பலம் தா என்றல் அவரும்
பாட்டை தந்திடுவார் நல்ல
பாதையை காட்டிடுவார் (ஸ்வாமியே அய்யப்போ அய்யப்போ சுவாமியே)

சபரி பீடமே வந்திருவார்
சபரி அன்னையை பணிந்துடுவார்
சரங்குத்தி ஆளில் கன்னிமார்களும்
சரத்தினை போட்டு வணங்கிடுவார்
சபரிமலை தனை நெருங்கிடுவார்

அந்த பதினெட்டு படி மீது ஏறிடுவார்
கதி என்று அவரை சரணடைவார்
மதி முகம் கண்டே மயங்கிடுவார்
ஐயனை துதிக்கையிலே
தன்னையே மறந்திடுவார்

பள்ளிக்கட்டு சபரி மலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
ஸ்வாமியே அய்யப்போ
சுவாமி சரணம் அய்யப்ப சரணம்

பள்ளிக்கட்டு சபரி மலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
சுவாமி அய்யப்போ அய்யப்போ சுவாமி

சரணம் சரணம் அய்யப்போ சுவாமி சரணம் அய்யப்போ (6)


Thanks : Thatstamil
நல்ல பதிவு பலரையும் சென்றடைய மறக்காமல் உங்கள் கருத்துகளை அழகாய் சொல்லிடு ஒரு வோட்டு போடுங்க. நன்றி. மீண்டும் வருக!!!
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

  ஐயப்பன் வரலாறும் 'பள்ளிக்கட்டு' பாடல் வரியும்  Empty Re: ஐயப்பன் வரலாறும் 'பள்ளிக்கட்டு' பாடல் வரியும்

Post by மாலதி August 25th 2010, 08:20

தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும் என்ற புகழுடைய இந்த
பூமிக்கு கிடைத்த கலியுக தெய்வம் ஐயப்பன். நம்பியவர்களுக்கெல்லாம்
நல்வாழ்வை அள்ளித்தரும் வரதன். ஐயப்பனை வார்த்தையால் விளக்கிச் சொல்ல
முடியாது - ஐயப்ப பக்தியை அனுபவித்தாலே புரியும்.
தமிழகமெங்கும், தர்மசாஸ்தா, அய்யனார், பதினெட்டாம்படி கருப்பு என்று
வெவ்வேறு விதமாக கொண்டாடப்பட்டாலும், சாஸ்தாவுக்கு உரிய தலம்
கேரளாவில்தான் அமைந்திருக்கிறது. பம்பையில் நீராடி பெரிய பாதையில் ஒரு
முறையாவது சென்று வர வேண்டும் என்று ஒவ்வொரு ஐயப்ப பக்தருக்கும் ஆசை
இருக்கும். மகர ஜோதியை தரிசிப்பது மிக முக்கியமானது.
  ஐயப்பன் வரலாறும் 'பள்ளிக்கட்டு' பாடல் வரியும்  Iyappa1-150x150மணிகண்டனுக்கு
எல்லா ஜாதி, மதங்களைச் சேர்ந்தவர்களும் வித்தியாசம் பாராட்டாமல்
பக்தர்களாக இருமுடி ஏந்தி வருகிறார்கள். கரையாத மனங்களிலும் பக்திரசத்தை
பெருகச் செய்து கரைத்து ஆட்கொண்டு விடுகிறான் ஐயப்பன். தன்னுடைய பெயரையே
தன் பக்தர்களுக்கும் கொடுத்த ஒரே தெய்வம் ஐயப்பன் தான்.
தர்ம சாஸ்தாவான ஐயப்பனுக்காக சாதாரண மக்கள் ஏற்றுக் கொள்ளும் விரதங்கள்
ஒரு மண்டல காலத்துக்குள் அவர்களை பக்தியில் திளைத்துக் கரைகண்ட
முனிவர்களுக்கு ஈடாகவே ஆக்கிவிடுகிறது. சிலர் மாதந்தோறுமே விரதம் இருந்து
ஐயப்ப தரிசனம் செய்வது உண்டு. ஐயப்ப பக்தியில் காணப்படும் சில விசேஷ
அம்சங்கள் நம்மை பிரமிப்புக்கு உள்ளாக்குகின்றன.
சபரி மலைக்கு மகர ஜோதி தரிசிக்கச் செல்லும் பக்தர், முதலில் மாலை
அணிந்து கொள்கிறார். ஹரிஹர சுதனான ஐயப்பனுக்காக அணியும் இந்த மாலை
பரமசிவனுக்கான ருத்ராட்சமாகவோ, மகாவிஷ்ணுவுக்கு உகந்த துளசி மாலையாகவோ
இருக்கலாம். மாலை அணிந்த பின் என்ன ஆச்சரியம்! அந்த பக்தரின் கண்முன்
தென்படுவது அத்தனையும் ஐயப்ப ‘சாமி’யாகவே ஆகிவிடுகிறது. மாலை
போட்டுக்கொண்டவர் பொருளாதார ரீதியாகவும் வயதிலும் எவ்வளவு சிறியவராக
இருந்தாலும் அவரையும் மற்றவர்கள் ‘சாமி, சாமி’ என்று மரியாதையாக
அழைக்கிறார்கள். எல்லாமே அந்தக் கடவுள் வசிக்கும் இடம் என்று இதைவிட
எளிதாக காட்ட ஓர் வழியும் உண்டோ!
மாலை போட்டுக் கொண்டவர் சிந்தனை, சொல், செயல் எல்லாவற்றிலும் மிகுந்த
கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். இவ்வாறு ஒரு மண்டல காலம், அதாவது
நாற்பது நாட்கள், ஒருவர் உண்மையிலேயே இருப்பாரானால் அவர் இயல்பாகவே இறைச்
சிந்தனையும் ஒழுக்கமும் கொண்டவராக மாறிவிடுவார். தற்காலத்தில் ஒரு வாரம்,
இரண்டு வாரம் என்றெல்லாம் விரதமிருந்து செல்கிறார்கள். கேட்டால் ‘அந்த
வழியில் போகத்தான் 40 நாள் விரதம்’ என்று சொல்லிவிடுகிறார்கள். விரதம்
என்பது தவமும்கூட. அந்தத் தவம் நம்மை மேம்பட்ட மனிதர்களாக்க வேண்டும்.
அவ்வாறில்லாமல் மலையிலிருந்து திரும்பிய உடனே நாமும் நம் பழைய
வழிகளுக்குச் சென்றுவிடுவோமானால் அந்த விரதம் நம்மை மாற்றவில்லை, நம்முள்
இருக்கும் இறைத்தன்மையை நாம் கண்டடையவில்லை என்று பொருள்.
இந்திய ஆன்மீக சிந்தனையில், சைவமும் வைணவமும் இரு பெரும் நதிகளாகப்
பொங்கிப் பிரவகிக்கின்றன. ஒரே இறைவனை அதாவது பிரம்மத்தை சிவமயமாகவும்,
விஷ்ணு மயமாகவும் இரு வண்ணங்களில் நமது ஆன்மீக முறைகள் சித்தரிக்கின்றன.
இந்த இரு பெரும் நதிகளின் சங்கமமாக ஐயப்பன் இருக்கிறான். சைவ வைணவ பக்தியை
இணைய வைத்து, ஆன்மீக முழுமையை ஏற்படுத்துகிற தெய்வம் ஐயப்பன்தான்.
பகவான் ஐயப்பனின் அவதாரம், ஸ்ரீமத் பாகவதத்தில் எட்டாவது காண்டத்தில்,
பரம சிவன், மோஹினி அவதாரத்தில் இருக்கும் மகா விஷ்ணுவைப் பார்த்து
மயங்குவதில் தொடங்குகிறது. இப்படி பரமசிவனுக்கும் மோஹினிக்கும் பிறந்த
குமாரன் தர்ம சாஸ்தா. தர்ம சாஸ்தாவின் அவதாரம்தான் மணிகண்டன்.
மகிஷாசுரனின் சகோதரியான மகிஷியை அழிக்க இந்த மண்ணில் வந்து சாஸ்தா
ஐயப்பனாக அவதரித்தார். தர்ம சாஸ்தாவுக்குப் பூரணை, புஷ்கலை என்று இரண்டு
மனைவியர். ஆனால் ஐயப்பனுக்கு மனைவியர் இல்லை. எப்படி ராமன் ஏக பத்தினி
விரதனாகவும், கிருஷ்ணன் பகுபத்னி பாவத்தையும் வெளிப்படுத்துகிறார்களோ, அதே
போலவே தர்ம சாஸ்தாவும், ஐயப்பனும் இருக்கிறார்கள். இதனாலேயே ஐயப்ப
பக்தர்கள், விரத காலத்தில் பிரம்மச்சரியத்தை கடைபிடிக்க வேண்டும் என்கிற
கட்டுப் பாடுகள் இருக்கின்றன.
பகவான் கிருஷ்ணர் உபதேசித்த பகவத் கீதையைப் போல, சாஸ்தாவின் அவதாரமான
ஐயப்பன், தன்னை வளர்த்த தந்தையான பந்தள நாட்டு அரசனுக்கு, மோக்ஷத்தை
அடையும் விதமாக உபதேசித்தவைகள் “பூதநாத கீதை” என்ற பெயருடன் விளங்குகிறது.
பக்தி மார்க்கம் மட்டும் அல்லாமல், யோக மார்க்கத்திலும் ஐயப்பனுக்கு
தொடர்பு உண்டு. பகவான் ஐயப்பன் அமர்ந்திருக்கும் நிலைக்கு யோகத்தில்
என்றும் இளமையை தக்க வைக்கக் கூடிய ஆசன முறை என்று கூறுவர்.
நமது இந்து மத ஆன்மீகத்தில், பக்தியை காதலாக கொள்ளுவது புதிதல்ல.
கண்ணனுக்கு ஆண்டாளைப் போல, ஐயப்பனைக் காதலித்த பெண் உண்டு. ஐயப்பனுக்கு
தற்காப்பு, போர் கலைகள் கற்றுக் கொடுத்த குருவிற்கு லீலா என்ற பெயருடன்
ஒரு மகள் இருந்தாள். சிறு குழந்தையாக இருந்த போதிருந்து ஐயப்பன் மீது
காதலும் பக்தியும் கொண்டிருந்தாள். ஆனால் நித்ய பிரம்மச்சாரியாக இருக்க
நினைத்த ஐயப்பன் அவளை மனைவியாக ஏற்றுக் கொள்ளவில்லை. என்றைக்கு
கன்னிச்சாமியாக (முதல் முறை வரும் ஐயப்ப பக்தர்) ஒருவர் கூட வரவில்லையோ
அன்று திருமணம் செய்வதாக ஐயப்பன் வாக்கு கொடுத்ததாகவும், அதன் பின், அந்த
பெண் சபரிமலையிலேயே மாளிகைப் புறத்து அம்மனாக குடி கொண்டு விட்டதாக
கூறப்படுகிறது.
  ஐயப்பன் வரலாறும் 'பள்ளிக்கட்டு' பாடல் வரியும்  Ayyappa2-150x150நமது
ஆன்மீகத்தில், பதினெட்டு என்னும் எண் பல சிறப்புகளைப் பெற்றுள்ளது.
பதினெட்டுப் புராணங்கள், பகவத் கீதையில் பதினெட்டு அத்தியாயங்கள், மகா
பாரதத்தில் பதினெட்டு பர்வங்கள் என்று பதினெட்டு முக்கிய இடம்
பெற்றுள்ளது. ஐயப்ப வழிபாட்டிலும் தான். பதினெட்டுப் படி பூஜை என்பது மிக
முக்கியம். பக்தர்கள் விரதமிருந்து நெய் விளக்கேற்றி, பயபக்தியுடன் இந்த
படிபூஜை செய்வார்கள்.
அன்னதானம் செய்வதும் ஐயப்ப பூஜையின் முக்கிய அம்சமாக இருக்கிறது.
ஐயப்பனை ‘அன்ன தானப் பிரபுவே’ என்று அழைக்கின்றனர். இந்த ஐயப்ப
வழிபாட்டினை, தானாகவே செய்வது வழக்கமில்லை. ஒரு குருவை தெரிந்தெடுத்துக்
கொண்டு, அவரது வழிகாட்டுதலின் பேரில்தான் மேற்கொள்ள வேண்டும். அந்த
குருசாமியையும், ஐயப்பனாகவே நினைக்க வேண்டும். இப்படி ஹிந்து தரும
ஆன்மீகத்தின் அடிப்படைகள் அத்தனையும், ஐயப்ப வழிபாட்டில் மிக சுலபமாக
அமைந்திருக்கின்றன.
யேசுதாசின் ஹரிவராசனம் பாடலை ஒருமுறையாவது கேட்டுப் பாருங்கள். கான கந்தர்வனான யேசுதாஸ் சிறந்த ஐயப்ப பக்தரும் கூட. மாத்ரு பூமி இணைய பக்கத்தில்
வெளிவந்த யேசுதாசின் பேட்டியில் இவ்வாறு சொல்கிறார் “சுவாமிப் பாடல்களைப்
பாடுகின்ற ஒரு சாதாரண சன்னிதானப் பாடகன்தான் நான். எனது கைகளில் ஜெபமாலை
இல்லை. இருப்பதோ மந்திர சுருதி சேர்க்கும் தம்புரு மட்டுமே. பத்மராக கீதம்
பாடி, அவனது திருப்பாதங்களில் படிந்து கிடக்கும் துளசிப்பூக்களாகவேண்டும்
என்ற ஆசைப்படும் ஆயிரக்கணக்கான பக்தர்களில் ஒருவன் மட்டுமே நான். சங்கீதம்
என்னும் ஊடகத்தின் வழியாக நான் சமூகத்திடம் தொடர்பு கொண்டுள்ளேன்.
அந்நிலையில் என்னால் இயன்றதையெல்லாம் செய்திருப்பதாகக் கருதுகின்றேன். ஓர்
அனுஷ்டானம்போல் ஆண்டுதோறும் புதுப்புதுப் பாடல்களைப் பாடுவதும் ஒருவிதமான
ஐயப்பசேவை என்றே எண்ணுகின்றேன்”.
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

  ஐயப்பன் வரலாறும் 'பள்ளிக்கட்டு' பாடல் வரியும்  Empty Re: ஐயப்பன் வரலாறும் 'பள்ளிக்கட்டு' பாடல் வரியும்

Post by மாலதி August 25th 2010, 08:21

ஓம் கன்னிமூல கணபதியே சரணம் ஐயப்பா

ஓம் காந்தமலை ஜோதியே சரணம் ஐயப்பா

ஓம் ஹரிஹர சுதனே சரணம் ஐயப்பா

ஓம் அன்னதானப் பிரபுவே சரணம் ஐயப்பா

ஓம் ஆறுமுகன் சோதரனே சரணம் ஐயப்பா

ஓம் ஆபத்தில் காப்போனே சரணம் ஐயப்பா

ஓம் ஆபத்தில் காப்போனே சரணம் ஐயப்பா

ஓம் இன்தமிழ்ச் சுவையே சரணம் ஐயப்பா

ஓம் இச்சை தவிர்ப்பவனே சரணம் ஐயப்பா

ஓம் ஈசனின் திருமகளே சரணம் ஐயப்பா

ஓம் உண்மைப் பரம்பொருளே சரணம் ஐயப்பா

ஓம் உலகாளும் காவலனே சரணம் ஐயப்பா

ஓம் ஊமைக்கருள் புரிந்தவனே சரணம் ஐயப்பா

ஓம் ஊழ்வினை அழிப்பவனே சரணம் ஐயப்பா

ஓம் எளியோர்க்கு அருள்பவனே சரணம் ஐயப்பா

ஓம் எங்கள் குல தெய்வமே சரணம் ஐயப்பா

ஓம் ஏழைப் பங்காளனே சரணம் ஐயப்பா

ஓம் ஏகாந்த மூர்த்தியே சரணம் ஐயப்பா

ஓம் ஐங்கரன் தம்பியே சரணம் ஐயப்பா

ஓம் ஐயமெல்லாம் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா

ஓம் ஒப்பில்லாத் திருமணியே சரணம் ஐயப்பா

ஓம் ஒளிரும் திருவிளக்கே சரணம் ஐயப்பா

ஓம் ஓங்காரப் பரம்பொருளே சரணம் ஐயப்பா

ஓம் ஓதும் மறைபொருளே சரணம் ஐயப்பா

ஓம் ஒளடதங்கள் அருள்பவனே சரணம் ஐயப்பா

ஓம் சௌபாக்கியம் அளிப்பவனே சரணம் ஐயப்பா

ஓம் கலியுக வரதனே சரணம் ஐயப்பா

ஓம் சபரிமலை சாஸ்தாவே சரணம் ஐயப்பா

ஓம் சிவன்மால் திருமகனே சரணம் ஐயப்பா

ஓம் சைவ வைணவ ஐக்கியமே சரணம் ஐயப்பா

ஓம் அச்சங்கோயில் அரசே சரணம் ஐயப்பா

ஓம் ஆரியங்காவு ஐயாவே சரணம் ஐயப்பா

ஓம் குளத்துப்புழை பாலனே சரணம் ஐயப்பா

ஓம் பொன்னம்பல வாசனே சரணம் ஐயப்பா

ஓம் வில்லாளி வீரனே சரணம் ஐயப்பா

ஓம் வீரமணிகண்டனே சரணம் ஐயப்பா

ஓம் உத்திரத்தில் உதித்தவனே சரணம் ஐயப்பா

ஓம் உத்தமனே சத்தியனே சரணம் ஐயப்பா

ஓம் பம்பையில் பிறந்தவனே சரணம் ஐயப்பா

ஓம் பந்தள மாமணியே சரணம் ஐயப்பா

ஓம் சகலகலை வல்லோனே சரணம் ஐயப்பா

ஓம் சாந்தம் நிறை மெய்ப்பொருளே சரணம் ஐயப்பா

ஓம் குருமகனின் குறை தீர்த்தவனே சரணம் ஐயப்பா

ஓம் குருதட்சினை அளித்தவனே சரணம் ஐயப்பா

ஓம் புலிப்பாலைக் கொணர்ந்தவனே சரணம் ஐயப்பா

ஓம் வன்புலி வாகனனே சரணம் ஐயப்பா

ஓம் தாயின் நோய் தீர்த்தவனே சரணம் ஐயப்பா

ஓம் குருவின் குருவே சரணம் ஐயப்பா

ஓம் வாபரின் தோழனே சரணம் ஐயப்பா

ஓம் துளசிமணி மார்பனே சரணம் ஐயப்பா

ஓம் தூயவுள்ளம் அளிப்பவனே சரணம் ஐயப்பா

ஓம் இரு முடிப்பிரியனே சரணம் ஐயப்பா

ஓம் எரிமேலி தர்மசாஸ்தாவே சரணம் ஐயப்பா

ஓம் நித்ய பிரம்மச்சாரியே சரணம் ஐயப்பா

ஓம் நீலவஸ்திர தாரியே சரணம் ஐயப்பா

ஓம் பேட்டை துள்ளும் பேரருளே சரணம் ஐயப்பா

ஓம் பெரும்ஆணவத்தை அழிப்பவனே சரணம் ஐயப்பா

ஓம் சாஸ்தாவின் நந்தவனமே சரணம் ஐயப்பா

ஓம் சாந்தி தரும் பேரருளே சரணம் ஐயப்பா

ஓம் பேரூர்த்தோடு தரிசனமே சரணம் ஐயப்பா

ஓம் சாஸ்தாவின் நந்தவனமே சரணம் ஐயப்பா

ஓம் சாந்தி தரும் பேரருளே சரணம் ஐயப்பா

ஓம் பேரூர்த்தோடு தரிசனம் சரணம் ஐயப்பா

ஓம் பேதமையை ஒழிப்பவனே சரணம் ஐயப்பா

ஓம் காளைகட்டி நிலையமே சரணம் ஐயப்பா

ஓம் அதிர்வேட்டுப் பிரியனே சரணம் ஐயப்பா

ஓம் அழுதைமலை ஏற்றமே சரணம் ஐயப்பா

ஓம் ஆனந்தமிகு பஜனை பிரியனே சரணம் ஐயப்பா

ஓம் கல்லிடும் குன்றமே சரணம் ஐயப்பா

ஓம் உடும்பாறைக் கோட்டையே சரணம் ஐயப்பா

ஓம் இஞ்சிப்பாறைக் கோட்டையே சரணம் ஐயப்பா

ஓம் கரியிலந் தோடே சரணம் ஐயப்பா

ஓம் கரிமலை ஏற்றமே சரணம் ஐயப்பா

ஓம் கரிமலை இறக்கமே சரணம் ஐயப்பா

ஓம் பெரியானை வட்டமே சரணம் ஐயப்பா

ஓம் சிறியானை வட்டமே சரணம் ஐயப்பா

ஓம் பம்பா நதித் தீர்த்தமே சரணம் ஐயப்பா

ஓம் பாவமெல்லாம் அழிப்பவனே சரணம் ஐயப்பா

ஓம் திரிவேணி சங்கமே சரணம் ஐயப்பா

ஓம் திருராமர் பாதமே சரணம் ஐயப்பா

ஓம் சக்தி பூஜை கொண்டவனே சரணம் ஐயப்பா

ஓம் சபரிக்கு அருள் செய்தவளே சரணம் ஐயப்பா

ஓம் தீபஜோதித் திருஒளியே சரணம் ஐயப்பா

ஓம் தீராத நோய் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா

ஓம் பம்பா விளக்கே சரணம் ஐயப்பா

ஓம் பலவினைகள் ஒழிப்பவனே சரணம் ஐயப்பா

ஓம் தென்புலத்தார் வழிபாடே சரணம் ஐயப்பா

ஓம் திருப்பம்பையின் புண்ணியமே சரணம் ஐயப்பா

ஓம் நீலிமலை ஏற்றமே சரணம் ஐயப்பா

ஓம் நிறைவுள்ளம் தருபவனே சரணம் ஐயப்பா

ஓம் அப்பாச்சி மேடே சரணம் ஐயப்பா

ஓம் இப்பாச்சி குழியே சரணம் ஐயப்பா

ஓம் சபரி பீடமே சரணம் ஐயப்பா

ஓம் சரங்குத்தி ஆலே சரணம் ஐயப்பா

ஓம் உரல்குழி தீர்த்தமே சரணம் ஐயப்பா

ஓம் கருப்பண்ணசாமியே சரணம் ஐயப்பா

ஓம் கடுத்த சாமியே சரணம் ஐயப்பா

ஓம் பதினெட்டாம் படியே சரணம் ஐயப்பா

ஓம் பகவானின் சந்நிதியே சரணம் ஐயப்பா

ஓம் பரவசப் பேருணர்வே சரணம் ஐயப்பா

ஓம் பசுவின் நெய்யபிஷேகமே சரணம் ஐயப்பா

ஓம் கற்பூரப் பிரியனே சரணம் ஐயப்பா

ஓம் நாகராசப் பிரபுவே சரணம் ஐயப்பா

ஓம் மாளிகைப் புரத்தம்மனே சரணம் ஐயப்பா

ஓம் மஞ்சமாதா திருவருளே சரணம் ஐயப்பா

ஓம் அக்கினி குண்டமே சரணம் ஐயப்பா

ஓம் அலங்காரப் பிரியனே சரணம் ஐயப்பா

ஓம் பஸ்மக் குளமே சரணம் ஐயப்பா

ஓம் சற்குரு நாதனே சரணம் ஐயப்பா

ஓம் மகர ஜோதியே சரணம் ஐயப்பா

ஓம் மங்கள மூர்த்தியே சரணம் ஐயப்பா

தெரிந்தும்
தெரியாமலும் அறிந்தும் அறியாமலும் செய்த சகல குற்றங்களையும் பொறுத்து
காத்து ரட்சிக்க வேண்டும். ஓம் சத்தியமான பொன்னு பதினெட்டாம்படி மேல்
வாழும் வில்லாளி வீரன் வீர மணிகண்டன் காசி, ராமேஸ்வரம், பாண்டி மலையாளம்
அடக்கி ஆறும் ஓம் ஸ்ரீ ஹரி ஹரசுதன் ஆனந்த சித்தன் ஐயன் ஐயப்ப சாமியே சரணம்
ஐயப்பா!
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

  ஐயப்பன் வரலாறும் 'பள்ளிக்கட்டு' பாடல் வரியும்  Empty Re: ஐயப்பன் வரலாறும் 'பள்ளிக்கட்டு' பாடல் வரியும்

Post by மாலதி August 25th 2010, 08:29

இந்தக் கதை வரலாற்று பூர்வமானது; நடந்தது கி.பி. பதினோராம் நூற்றாண்டில்...
உதயணன் என்ற காட்டுக் கொள்ளைக்காரன் அப்போது மிகவும் கொடூரமானவனாக
இருந்தான். சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் உள்ள மக்களைக் கொன்று குவித்து,
கொள்ளையடிப்பதில் கில்லாடியாக இருந்தான். ஒருசமயம் சபரிமலைக்கு அருகில்
உள்ள கிராமத்தில் கொள்ளையடிக்க முயன்றபோது, அவனால் முடியாமல் போகவே,
அங்கிருந்த ஒரு மாந்திரீகரிடம் இதற்கான காரணத்தைக் கேட்டான். அதற்கு அவர்,
சபரிமலையில் தர்மசாஸ்தாவின் அவதாரமான மணிகண்டனின் கோயில் இருப்பதாலும்,
அதன் அபார சக்திதான் அந்தக் கிராமத்தைக் காத்து வருவதாகவும் கூறினார்.

அதனால் வெகுண்டெழுந்த உதயணன், எப்படியாவது அந்தக் கோயிலை நாசப்படுத்தி,
கோயிலையும் கொள்ளையடிப்பேன் என்று சபதம் செய்து, அவ்வாறே சபரிமலைக் கோயிலை
தீக்கிரையாக்கி நாசப்படுத்தினான். தடுக்க வந்த கோயில் நம்பூதிரியைக்
குத்திக் கொலை செய்தான். தனது அப்பா உதயணனால் கொல்லப்படுவதைப் பார்த்துக்
கொண்டிருந்த நம்பூதிரியின் மகன் ஜெயந்தன், மீண்டும் சபரிமலைக் கோயிலை
எடுத்துக் கட்டுவேன் என்றும், உதயணனைப் பழிவாங்குவேன் என்றும் சபதம்
செய்தான்.
உதயணனே அறியாமல் அவனது கொள்ளைக் கூட்டத்திலேயே போய்ச் சேர்ந்தான்
ஜெயந்தன். இதற்கிடையில் உதயணனுக்கு பந்தள ராஜாவின் சகோதரியைத் திருமணம்
செய்துகொண்டு, தனக்கு ராஜமரியாதை வரவேண்டும் என்ற ஆசை பிறந்தது. எனவே அவன்
ராஜகுமாரியைத் திருட்டுத்தனமாகத் தூக்கிவந்து விட்டான். தன்னுடன் வந்த
ஜெயந்தனிடம் ராஜகுமாரியை பத்திரமாகத் தனது இருப்பிடத்தில் கொண்டுபோய்
விடுமாறும், தான் மேலும் கொள்ளையடித்துவிட்டு வருவதாகவும் கூறி, உதயணன்
சென்று விட்டான்.
இந்நிலையில் ஜெயந்தன் ராஜகுமாரியிடம் தனது சபதத்தைக் கூறினான்.
ராஜகுமாரியும் தனக்கு உதயணனைத் திருமணம் செய்ய விருப்பமில்லை என்றாள்.
ஜெயந்தனையே திருமணம் செய்துகொண்டு, சபரிமலைக் கோயிலைப் புதுப்பிக்க தானும்
உதவிசெய்யப் போவதாகக் கூறினாள். அவள் விருப்பப்படி ஜெயந்தனையே திருமணம்
செய்து கொண்டாள்.
அவர்கள் இருவரும் அருகிலுள்ள குகையில் வாழ்க்கை நடத்தினார்கள்.
கோயிலைக் கட்ட இறையருள் வேண்டும் என்று எண்ணி, தர்மசாஸ்தாவை நோக்கித் தவம்
புரிந்தனர். தர்ம சாஸ்தா அவர்களுக்குப் பிரசன்னமாகி, வேண்டும் வரம்
கேட்டார். தங்கள் விருப்பத்தை அவர்கள் கூறினர். ஐயப்பனாக தானே மறுபிறப்பு
எடுத்து வருவதாக அவர்களிடம் வாக்களித்தார் சாஸ்தா. அதன்படி ஐயப்பன்
அவதரிக்க, இது பற்றி விவரமாகக் கடிதம் எழுதி, அக்குழந்தையை பந்தள ராஜனிடம்
அனுப்பி வைத்தார்கள்.
பந்தள ராஜாவும் குழந்தை ஐயப்பனை நல்ல முறையில் வளர்த்து வந்தார்.
ஓரளவுக்கு வயது வந்தவுடன் தனது தந்தையான ஜெயந்தன் போட்ட சபதத்தை
நிறைவேற்ற, தனது படைவீரர்களுடனும் சகாக்களுடனும் கானகத்திற்குக்
கிளம்பினார் ஐயப்பன். காட்டிற்குச் செல்லும் வழியில் கண்ணில்பட்ட உதயணனின்
ஒவ்வொரு முகாமையும் தாக்கி, கொள்ளையர்களை அழித்தவாறே சபரிமலையை நோக்கிச்
சென்றனர் அனைவரும்.
அப்போதுதான் அராபியக் கடல் கொள்ளைக்காரரான வாபர் ஐயப்பனுக்கு
அறிமுகமானார். இவர் அலிக்குட்டி - அஸீமா தம்பதியினருக்குப் பிறந்தவர்.
எரிமேலி பகுதியிலுள்ள உதயணனின் முகாமைத் தாக்கி அழித்து, அந்த
இடத்திற்குக் காவலாக வாபரை நிறுத்திவிட்டுச் சென்றார் ஐயப்பன்.
இறுதியில் கரிமலைக்கோட்டை என்ற இடத்தில் உக்கிரமான சண்டை நடந்தது. அந்தச் சண்டையில் உதயணனைக் கொன்றார் ஐயப்பன்.
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

  ஐயப்பன் வரலாறும் 'பள்ளிக்கட்டு' பாடல் வரியும்  Empty Re: ஐயப்பன் வரலாறும் 'பள்ளிக்கட்டு' பாடல் வரியும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum