Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்by vpoompalani March 24th 2016, 13:59
» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26
» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17
» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06
» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07
» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58
» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24
» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35
» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52
» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18
» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47
» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19
» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46
» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49
» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37
» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07
» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29
» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38
» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55
» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00
» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49
» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28
» திருத்தல யாத்திரை ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51
» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33
» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46
» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28
» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13
» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29
» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15
» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10
» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29
» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54
» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38
» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42
» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32
» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01
» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20
» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00
திருத்தொண்டர் கதைகள்
HinduSamayam :: கதைகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
திருத்தொண்டர் கதைகள்
இறைவனின் தாய் இவள்!
அடிகள், அழகன், அந்தணன், அரன், ஆதிரையான், ஆள்வான், இறைவன், ஈசன்,
உத்தமன், எந்தை, எம்மான், ஒப்பினை இல்லவன், கண்ணுதலான், கறைமிடற்றான்,
குழகன், சங்கரன், நம்பன், பரமன், புண்ணியன், மாயன், வானோர் பெருமான்,
விமலன், வேதியன்… - ஆண்டவனை இப்படி எத்தனையோ பெயர்களில் அழைக்கலாம்.
ஆனால், அந்த இறைவனாலேயே ‘அம்மையே’ என்றழைக்கப்பட்ட ஒரு மகத்தான பெண்மணி ஒருத்தி இருந்தார். அவர்தான் புனிதவதி!
சோழவள நாட்டின் துறைமுக நகரமான காரைக்காலில் தனதத்தன் என்பவரது
திருமகளாகப் பிறந்தவர் புனிதவதி. சிறுவயதிலிருந்தே ஈசனிடம் அளவிலா அன்பு
கொண்டவர். வணிகக் குடும்பத்தைச் சேர்ந்த புனிதவதியை பரமதத்தன் என்னும்
நாகப்பட்டின வியாபாரிக்குத் திருமணம் செய்து வைத்தனர். இருவரும் காரைக்
காலிலேயே தனி வீட்டில் இனிதே வாழ்ந்துவந்தனர்.
துளிகள்…
ஒரு நாள் பரமதத்தனின் கடைக்கு வந்த நண்பர்கள் இரு மாம்பழங்களை அன்புடன்
அளித்தனர். அவன் அவற்றைப் பணியாள் மூலம் வீட்டுக்கு அனுப்பினான். தேடி
வரும் சிவனடியார்களுக்கு தலைவாழை இலையில் விருந்து படைத்து மகிழ்வது
புனிதவதியின் வழக்கம். அன்றைக்கும் ஒரு சிவனடியார் அதீத பசியோடு வந்து
சேர்ந்தார். அவரை அதிக நேரம் காக்க வைக்க வேண்டாம் என நினைத்த புனிதவதி
கணவன் அனுப்பிய இரு மாம்பழங்களில் ஒன்றை அளித்தாள். அவரும் கனியை
உண்டுவிட்டு கனிவாகச் சென்றார். உச்சிவேளை தாண்டிய பிறகு தாமதமாக உணவருந்த
வந்தான் கணவன். உணவோடு மீதியிருந்த ஒரு மாம்பழத்தையும் வைத்தாள் புனிதவதி.
ரசித்துச் சாப்பிட்ட கணவன், “புனிதா… இரண்டு பழம் கொடுத்தனுப்பினேனே…
மற்றொன்றையும் எடுத்து வா” என்றான். திடுக்கிட்டாள் அவள். இரண்டில்
ஒன்றைத்தான் சிவனடி யாருக்கு அளித்தாயிற்றே… இப்போது என்ன செய்வது?
கணவனுக்கு ஏமாற்றமாக இருக்குமே… கலங்கித் தவித்தாள். இறைவனை வேண்டினாள்.
என்ன அதிசயம்! அவள் சங்கடத்தைத் தீர்க்க விரும்பிய இறைவன் அவள் கையிலே
ஒரு மாங்கனி வந்து சேருமாறு அருளினார். புளகாங்கிதம் அடைந்த புனிதவதி
இறைவனின் அருளை எண்ணிக்கொண்டே கடவுள் அளித்த கனியை கணவனுக்குப்
படைத்தாள். அப்பழத்தின் அதீத சுவை கண்ட பரமபத்தனுக்கு பெரும் வியப்பு.
முந்தைய பழத்தைப் போல இல்லையே இது! புனிதவதியை அழைத்துக் தன் ஐயத்தை
கேட்டான். ‘இவ்வளவு சுவை படைத்த கனி இங்கே எங்கும் கிடைக்காது. உண்மையைச்
சொல்’ என்றான். நடுங்கும் கரங்களால் அவனைத் தொழுதவாறு நடந்ததைச் சொன்னாள்
புனிதவதி. பரமபத்தனுக்கோ நம்பிக்கை ஏற்படவில்லை. ‘அப்படியா? இறைவன்
அருளினாரா? அப்படியானால் இன் னொரு கனி தரச்சொல் பார்க்கலாம்’ என்று
அவநம்பிக்கையுடன் கூறினான். சமையலறை உள்ளே சென்ற அவளது கண்கள் நீரைச்
சொரிந்தன. ‘இறைவா… ஏரிப்படகு போல எளிமையாகப் போய்க்கொண்டிருந்த வாழ்வை
புயல் அகப்பட்ட தோணி போல ஆக்கி விட்டாயே… என்ன செய்வேன்’ என இறைஞ்சினாள்.
அவளே எதிர்பாராதவிதமாக மீண்டும் ஒரு கனி அவளது கைகளை அடைந்தது. உடனே அதைக்
கொண்டு சென்று கணவனிடம் கொடுத்தாள். ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்
டிருக்கையில் அவனது கையிலிருந்த கனி மறைந்தது. பதறி விட்டான் பரமபத்தன்.
மனைவியை ஒரு தெய்வம் என நினைத்து அவாளிடம் ஒரு தொடர்பும் இன்றி வாழ்ந்து
வந்தான்.
துளிகள்…
இனி புனிதவதியோடு இல்லறம் நடத்த முடியாது எனக் கருதிய பரமபத்தன், கடல்
வணிகத்திற்கு செல்வதாகக் கூறி, பாண்டிய நாட்டுக்குச் சென்று இன்னொரு
திருமணம் செய்து கொண்டான். அந்த மனைவிக்குப் பிறந்த மகளுக்கு புனிதவதி என
பெயர் சூட்டினான். இச்சம்பவத்துக்குப் பிறகு புனிதவதியார் சிவனடியாராக
மாறிவிட்டார். தன் அழகை எல்லாம் போக்கி பேயுருவுக்கு மாற்றும்படி இறைவனை
வேண்டினார். அவரும் அவ்வண்ணமே செய்தார். அதன் பிறகு அவர் தமிழ்
இலக்கியத்துக்கும் பக்தி இலக்கி யத்துக்கும் செய்த தொண்டு மகத்தானது.
அற்புதத் திருவந்தாதி, திருவிரட்டை மணிமாலை உள்பட பல பதிகங்களை
அருளினார். இடுகாட்டில் நடனமாடும் கோலம், பிட்சாடனக் கோலம், உமையொரு
பாகனாக விளங்கும் கோலம் ஆகியவை அம்மையாரால் அதிகம் பாடப்
பட்டுள்ளன. இறைவனை உள்ளபடி உணர்ந்தவர் யார்? மயானச் சாம்பல் பூசிய
மேனியையும் எலும்பு மாலையையும் கொண்ட வெளித்தோற்றத்தைப் பார்த்துச் சிலர்
இறைவனைப் பேய் என இகழ்கின்றனர். இறைவனின் ஆட்டத்தில் மெய்மறந்து இவரும்
ஆடிக் கொண்டிருந்ததைப் பார்த்த ஊர்மக்கள் இவரைப் பேய் பிடித்தவர் என்றே
கருதினர். அதை அவமதிப்பாகக் கருதாமல் தன்னைச் சங்கரனின் பேய்க்கணங்களில்
ஒன்றாகக் கருதிக் கொண்டார்.
ஒரு கட்டத்தில் திருக்கயிலாயம் சென்றார் புனிதவதியார். காலால்
நடக்காமல் தலையால் நடந்தே, காண்பவர் மிரளும் விகாரத் தோற்றத்தில் அவர்
கயிலாயத்தை அடைந்தார். அப்போதுதான் அவரது செயல் கண்டு உருகிய சிவபெருமான்,
‘அம்மையே’ என விளித்தார்… ‘நீர் வேண்டுவது என்ன’ எனக் கேட்டார்.
எமக்கிதுவோ பேராசை என்றும் தவிராது
எமக்கொருநாள் காட்டுதியோ எந்தாய் – அமைக்கவே
போந்தெரிபாய்ந் தன்ன புரிசடையாய் பொங்கிரவில்
ஏந்தெரிபாய்ந்து ஆடும் இடம்”
இப்படி காரைக்கால் அம்மையார் பாடியதும், “கேட்ட வண்ணம் கொடுத்தேன்.
தென் நாட்டிலே திருவாலங்காட்டிலே என் நடனம் பார்த்து பாடலாம்” என
அம்மைக்கு ஈசன் அருளினார். திருவாலங்கட்டிலே ஆண்டவன் திருநடனம் கண்ட
அம்மையார் ‘எட்டி இலவம்’, ‘கொங்கை திரங்கி’ ஆகிய திருப்ப திகங்களைப்
பாடினார். பின்னர் திருவடி அடைந்தார். அற்புதங்களும் புனிதமும் நிறைந்த
வாழ்க்கை அவருடையது!
- சுந்தரம். thanks:http://www.aambal

- புதுவை மாநிலம் காரைக்காலில் அம்மையாருக்கு திருக்கோயில் உள்ளது.
- அறுபத்துமூன்று நாயன்மார்களில்
காரைக்காலம்மையார், மங்கையர்க் கரசியார், இசைஞானியார் ஆகிய மூவர் மட்டுமே
பெண்கள். பாண்டிமாதேவியான மங்கையற்கரசியாரும், சுந்தரரின் தாயாரான
இசைஞானியாரும் பத்திப் பாடல்கள் எதையும் பாடவில்லை. அப்பரின் சகோதரியான
திலகவதியார் அறுபத்துமூவரில் இடம்பெறவில்லை. - அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவரான
காரைக்கால் அம்மையார் தேவார காலத்திற்கு முற்பட்டவர். அப்பருக்கும்
சம்பந்தருக்கும் முன்தோன்றியவர். கி.பி. 300 – 500 காலகட்டம். - சுந்தரமூர்த்தி சுவாமிகள் காரைக்கால் அம்மையாரை ‘பேயார்’ என அன்போடு அழைக்கிறார்.
ஒரு நாள் பரமதத்தனின் கடைக்கு வந்த நண்பர்கள் இரு மாம்பழங்களை அன்புடன்
அளித்தனர். அவன் அவற்றைப் பணியாள் மூலம் வீட்டுக்கு அனுப்பினான். தேடி
வரும் சிவனடியார்களுக்கு தலைவாழை இலையில் விருந்து படைத்து மகிழ்வது
புனிதவதியின் வழக்கம். அன்றைக்கும் ஒரு சிவனடியார் அதீத பசியோடு வந்து
சேர்ந்தார். அவரை அதிக நேரம் காக்க வைக்க வேண்டாம் என நினைத்த புனிதவதி
கணவன் அனுப்பிய இரு மாம்பழங்களில் ஒன்றை அளித்தாள். அவரும் கனியை
உண்டுவிட்டு கனிவாகச் சென்றார். உச்சிவேளை தாண்டிய பிறகு தாமதமாக உணவருந்த
வந்தான் கணவன். உணவோடு மீதியிருந்த ஒரு மாம்பழத்தையும் வைத்தாள் புனிதவதி.
ரசித்துச் சாப்பிட்ட கணவன், “புனிதா… இரண்டு பழம் கொடுத்தனுப்பினேனே…
மற்றொன்றையும் எடுத்து வா” என்றான். திடுக்கிட்டாள் அவள். இரண்டில்
ஒன்றைத்தான் சிவனடி யாருக்கு அளித்தாயிற்றே… இப்போது என்ன செய்வது?
கணவனுக்கு ஏமாற்றமாக இருக்குமே… கலங்கித் தவித்தாள். இறைவனை வேண்டினாள்.
என்ன அதிசயம்! அவள் சங்கடத்தைத் தீர்க்க விரும்பிய இறைவன் அவள் கையிலே
ஒரு மாங்கனி வந்து சேருமாறு அருளினார். புளகாங்கிதம் அடைந்த புனிதவதி
இறைவனின் அருளை எண்ணிக்கொண்டே கடவுள் அளித்த கனியை கணவனுக்குப்
படைத்தாள். அப்பழத்தின் அதீத சுவை கண்ட பரமபத்தனுக்கு பெரும் வியப்பு.
முந்தைய பழத்தைப் போல இல்லையே இது! புனிதவதியை அழைத்துக் தன் ஐயத்தை
கேட்டான். ‘இவ்வளவு சுவை படைத்த கனி இங்கே எங்கும் கிடைக்காது. உண்மையைச்
சொல்’ என்றான். நடுங்கும் கரங்களால் அவனைத் தொழுதவாறு நடந்ததைச் சொன்னாள்
புனிதவதி. பரமபத்தனுக்கோ நம்பிக்கை ஏற்படவில்லை. ‘அப்படியா? இறைவன்
அருளினாரா? அப்படியானால் இன் னொரு கனி தரச்சொல் பார்க்கலாம்’ என்று
அவநம்பிக்கையுடன் கூறினான். சமையலறை உள்ளே சென்ற அவளது கண்கள் நீரைச்
சொரிந்தன. ‘இறைவா… ஏரிப்படகு போல எளிமையாகப் போய்க்கொண்டிருந்த வாழ்வை
புயல் அகப்பட்ட தோணி போல ஆக்கி விட்டாயே… என்ன செய்வேன்’ என இறைஞ்சினாள்.
அவளே எதிர்பாராதவிதமாக மீண்டும் ஒரு கனி அவளது கைகளை அடைந்தது. உடனே அதைக்
கொண்டு சென்று கணவனிடம் கொடுத்தாள். ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்
டிருக்கையில் அவனது கையிலிருந்த கனி மறைந்தது. பதறி விட்டான் பரமபத்தன்.
மனைவியை ஒரு தெய்வம் என நினைத்து அவாளிடம் ஒரு தொடர்பும் இன்றி வாழ்ந்து
வந்தான்.
துளிகள்…
- இவரது பதிக முறையைப் பின்பற்றிப் பிற்காலத்தில்
தேவாரப் பதிகங்கள் அமைந்தன. இவரது செயல்பாடுகள், சைவ இயக்கத்திற்கு
முன்னோடியாக சிவனை முழு முதற்கடவுளாக பாடிய பாடல்கள், சிவதாண்டவம் பற்றிய
கருத்தாக்கங்கள், இலக்கிய வடிவங்கள்… இப்படி பரந்துபட்ட துறைகள்
எல்லாவற்றிலும் முன்னோடியாகத் திகழ்ந்தார் காரைக்காலம்மையார். அக்காலச்
சூழலில் வைத்து நோக்கும்போது அவர் செய்தது ஒரு புரட்சியே! - பண்ணோடு பாடும் பாடல்களைப் பாடி பக்தி இயக்கத்திற்கும் இலக்கியத்துக்கும் வித்திட்டவர் காரைக்கால் அம்மையாரே.
- அவர் திருவாலங்காட்டில் விதைத்த விதைகளே அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் தடைகளைத் தாண்டி சோலையாகி நிற்கின்றன.
இனி புனிதவதியோடு இல்லறம் நடத்த முடியாது எனக் கருதிய பரமபத்தன், கடல்
வணிகத்திற்கு செல்வதாகக் கூறி, பாண்டிய நாட்டுக்குச் சென்று இன்னொரு
திருமணம் செய்து கொண்டான். அந்த மனைவிக்குப் பிறந்த மகளுக்கு புனிதவதி என
பெயர் சூட்டினான். இச்சம்பவத்துக்குப் பிறகு புனிதவதியார் சிவனடியாராக
மாறிவிட்டார். தன் அழகை எல்லாம் போக்கி பேயுருவுக்கு மாற்றும்படி இறைவனை
வேண்டினார். அவரும் அவ்வண்ணமே செய்தார். அதன் பிறகு அவர் தமிழ்
இலக்கியத்துக்கும் பக்தி இலக்கி யத்துக்கும் செய்த தொண்டு மகத்தானது.
அற்புதத் திருவந்தாதி, திருவிரட்டை மணிமாலை உள்பட பல பதிகங்களை
அருளினார். இடுகாட்டில் நடனமாடும் கோலம், பிட்சாடனக் கோலம், உமையொரு
பாகனாக விளங்கும் கோலம் ஆகியவை அம்மையாரால் அதிகம் பாடப்
பட்டுள்ளன. இறைவனை உள்ளபடி உணர்ந்தவர் யார்? மயானச் சாம்பல் பூசிய
மேனியையும் எலும்பு மாலையையும் கொண்ட வெளித்தோற்றத்தைப் பார்த்துச் சிலர்
இறைவனைப் பேய் என இகழ்கின்றனர். இறைவனின் ஆட்டத்தில் மெய்மறந்து இவரும்
ஆடிக் கொண்டிருந்ததைப் பார்த்த ஊர்மக்கள் இவரைப் பேய் பிடித்தவர் என்றே
கருதினர். அதை அவமதிப்பாகக் கருதாமல் தன்னைச் சங்கரனின் பேய்க்கணங்களில்
ஒன்றாகக் கருதிக் கொண்டார்.
ஒரு கட்டத்தில் திருக்கயிலாயம் சென்றார் புனிதவதியார். காலால்
நடக்காமல் தலையால் நடந்தே, காண்பவர் மிரளும் விகாரத் தோற்றத்தில் அவர்
கயிலாயத்தை அடைந்தார். அப்போதுதான் அவரது செயல் கண்டு உருகிய சிவபெருமான்,
‘அம்மையே’ என விளித்தார்… ‘நீர் வேண்டுவது என்ன’ எனக் கேட்டார்.
எமக்கிதுவோ பேராசை என்றும் தவிராது
எமக்கொருநாள் காட்டுதியோ எந்தாய் – அமைக்கவே
போந்தெரிபாய்ந் தன்ன புரிசடையாய் பொங்கிரவில்
ஏந்தெரிபாய்ந்து ஆடும் இடம்”
இப்படி காரைக்கால் அம்மையார் பாடியதும், “கேட்ட வண்ணம் கொடுத்தேன்.
தென் நாட்டிலே திருவாலங்காட்டிலே என் நடனம் பார்த்து பாடலாம்” என
அம்மைக்கு ஈசன் அருளினார். திருவாலங்கட்டிலே ஆண்டவன் திருநடனம் கண்ட
அம்மையார் ‘எட்டி இலவம்’, ‘கொங்கை திரங்கி’ ஆகிய திருப்ப திகங்களைப்
பாடினார். பின்னர் திருவடி அடைந்தார். அற்புதங்களும் புனிதமும் நிறைந்த
வாழ்க்கை அவருடையது!
- சுந்தரம். thanks:http://www.aambal
Similar topics
» பரசுராமரைப் பற்றிய பல புராணக் கதைகள்
» பக்தி கதைகள் எல்லாம் சிவமயம்!
» ஏட்டில் இல்லா கதைகள்
» ஈஸ்வரி புராணக் கதைகள்
» பரசுராமரைப் பற்றிய பல புராணக் கதைகள்
» பக்தி கதைகள் எல்லாம் சிவமயம்!
» ஏட்டில் இல்லா கதைகள்
» ஈஸ்வரி புராணக் கதைகள்
» பரசுராமரைப் பற்றிய பல புராணக் கதைகள்
HinduSamayam :: கதைகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum