Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்by vpoompalani March 24th 2016, 13:59
» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26
» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17
» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06
» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07
» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58
» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24
» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35
» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52
» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18
» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47
» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19
» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46
» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49
» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37
» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07
» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29
» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38
» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55
» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00
» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49
» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28
» திருத்தல யாத்திரை ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51
» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33
» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46
» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28
» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13
» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29
» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15
» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10
» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29
» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54
» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38
» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42
» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32
» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01
» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20
» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00
களை கட்டும் கல்யாண சீசன்... புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே!
Page 1 of 1

ஆவணி மாதமும் சரி, பின்னால் வரும் ஐப்பசி, கார்த்திகை என்றாலும்சரி,
கல்யாணம் களை கட்டும். பல மாதங்களுக்கு முன்பே, கல்யாணமண்டபங்கள் "புக் ஆகி
விடும். இன்னும் சொல்லப் போனால், கல்யாண மண்டபம் எப்போது கிடைக்கிறதோ,
அந்தத் தேதியில் கல்யாணத்தைவைத்துக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
இக்காலத்தில் இவ்வளவு முக்கியத்துவம் பெறும் கல்யாணத்தைப் பற்றிய சுவாரஸ்ய
தகவல்கள், என்னென்ன பரிசுகள் வழங்கலாம்,ஹனிமூனுக்கு எங்கே செல்லலாம்... இதோ
ஒரு தொகுப்பு.
திருமணம் ஆனவுடன், பெண்கள் பிறந்த வீட்டை விட்டு,
தனது கணவனது வீட்டுக்குச் செல்கிறாள். பிறந்த வீட்டுக்கும்,
புகுந்தவீட்டுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கும். இது தெரியாமல் சில
பெண்கள் பிறந்த வீட்டில் இருந்தமாதிரியே இங்கும் இருக்கவேண்டும் என
எதிர்பார்க்கின்றனர். ஆனால் இது மிகப்பெரிய தவறு. புகுந்த வீட்டை பற்றி
முழுமையாக அறிந்து கொள்ளும் வரை, பொறுமையாக இருக்க வேண்டும். சில
மணமகள்கள், திருமணம்ஆன சமயத்திலேயே, புகுந்தவீட்டினருடன் அவரசரமாக ஏதாவது
பேசி, பிரச்னையில் சிக்கிக் கொள்கின்றனர். இதனால்,தனிக் குடித்தனம்
செல்வோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. இதை எப்படி தவிர்ப்பது,
நல்லமருமகளாக எப்படி நடந்துகொள்வது?
என்ன செய்வது
* முதலில் புகுந்த வீட்டில் குடும்ப உறுப்பினர்கள் யார் யார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
*
மாமனார், மாமியார் என்றாலே ராட்சசி, குற்றம் கூறுபவர், திமிர் பிடித்தவர்
என்ற தப்பான அபிப்ராயங்களை தவிர்க்க வேண்டும். மணமகள், தாய், தந்தையை போல,
மாமனார், மாமியாரைப் பார்க்க வேண்டும்.
* வயது ஆக ஆக, பெரியவர்களுக்கு
குழந்தை மனமும், பிடிவாத குணமும் அதிகரிக்கும். அதற்கு ஏற்றார்போல் மணமகள்,
புகுந்த வீட்டில் நடந்து கொள்ள வேண்டும்.
* சமையல் செய்யும் போது,
மாமியாரின் உதவியோடு செய்யலாம். அப்போது அந்த வீட்டில் யாருக்கு என்ன
பிடிக்கும், என்ன பிடிக்காது என்பதை தெரிந்து கொள்ளலாம். இதை விட்டுவிட்டு,
தனதுவிருப்பத்துக்கு ஏற்றவாறுமருமகள் செய்தால் வீட்டில்பிரச்னைகள் எழலாம்.
*
ஒருமுறை கூட, கணவரிடம் நயவஞ்சமாக பேசி, தனிக்குடித்தனம் செல்ல
முயற்சிக்காதீர்கள். ஏனென்றால் பெரும்பாலான மாமியாருக்கு, மருமகள் மீது
வெறுப்பு ஏற்படுவது இந்தகாரணத்தால் தான். சில வீட்டில் மாமனார், மாமியார்
அவர்களாகவே மகன் தனிக்குடித்தனம் செல்ல விரும்புவர். அப்போது நீங்கள்
சம்மதிக்கலாம்.
* புகுந்த வீட்டில் உள்ளவர்களிடம், சகஜமாக, ஒளிவு
மறைவின்றி மனம் விட்டு பேச வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு,மருமகள் மீது
நம்பிக்கை வரும்.
* கணவரிடம், அவரது அம்மா, தங்கை இவ்வாறு செய்தார்கள்,
திட்டினார்கள் என்று குறைசொல்லாதீர்கள். அது கணவனுக்கும் அவரது தாய்
தந்தையருக்கும் பகைமை வளரக் காரணமாகிவிடும்.
* புகுந்த வீட்டில், பிறந்த வீட்டு பெருமைகளை, புகழ்ந்துபேசுவதை மணமகள் தவிர்க்க வேண்டும்.
*
அதிகாலையில் எழுந்து, வீட்டின் முன் கோலம் இடுவது, சமையல் செய்வது, கணவரை
வேலைக்கு அனுப்புவது, மாமனார் மாமியாருக்கு தேவையான உதவிகளை செய்வது என பல
வேலைகளையும் மருமகள் விரும்பிச் செய்ய வேண்டும்.
* பிறந்த வீட்டில்
எப்படி உறவினர்களுடன் விருப்பு வெறுப்பின்றி பழகினீர்களோ, அதைப்போலவே
புகுந்த வீட்டு உறவினர்களுடனும் நடந்து கொள்ளுங்கள்.
* ஆண்டுக்கு
ஒருமுறை, புகுந்த வீட்டு குடும்பத்துடன் சுற்றுலா செல்லுங்கள். அப்போது
தவறாமல் மாமனார் மாமியாரையும் அழைத்துச் செல்ல வேண்டும்.
* புகுந்த
வீட்டில், கணவனுடைய திருமணமாகாத தம்பி/ தங்கை இருந்தால், அவர்களை
நன்குகவனித்துக் கொள்ளுங்கள். இது புகுந்த வீட்டினரிடம், உங்களைப் பற்றிய
மதிப்பை அதிகரிக்கும்.
* விட்டுக்கொடுக்கும் மனதுயாரிடம் உள்ளதோ அவர்கள்
எந்த சூழலிலும் குடும்பத்தை வெற்றிகரமாக நடத்த முடியும். எனவே கணவன் மனைவி
ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழுங்கள். வாழ்க்கை எந்நாளும்
சந்தோஷமாக இருக்கும்.
திருமணம்... எத்தனை திருமணம்...
இந்தியாவில் ஒவ்வொரு மொழி, கலாசாரத்திற்கேற்ப திருமணமுறைகளிலும் வேறுபாடுகள் உள்ளன. ஒவ்வொன்றும் சுவாரஸ்யமானவை. காண்போரை கவர்பவை.
மகாராஷ்டிரா திருமணம்:
மகாராஷ்டிரா
திருமணங்கள், வண்ணமயமாக கொண்டாடப்படுகிறது. இசை வாத்தியங்கள் அதிகம்
வாசிக்கப்படுகின்றன. திருமண விழா காலை துவங்கி மாலை வரை நடைபெறுகிறது. ஒளி
காட்சியுடன், திருமணவரவேற்பு இரவு நேரத்தில் நடைபெறுகிறது.
திருமணத்திற்கு முன்
* சாகார் பூத விழா
* சிமன்ட் பூஜை
திருமண சடங்குகள்
* திருமண விழா
* லட்சுமி நாராயண் பூஜை
* ஜால் பிர்வானே
திருமணத்திற்கு பின்
* சுன் முக் பாக்னி
* மணமக்கள் பெயர் மாற்றுதல்
* திருமண வரவேற்பு
கன்னட திருமணம்:
கன்னட
திருமணங்கள், மகிழ்ச்சியாக, எளிமையாக இருக்கும். சடங்குகள் சுவாரஸ்யமானவை.
அங்கு வாழும்பல்வேறு சமூக மக்கள், பல வித திருமணம் நடத்தினாலும்,
அடிப்படையான சில சடங்குகள்:
திருமணத்திற்கு முன்
* நாண்டி வழக்கம்
* காசியாத்திரை
* தேவ் காரிய விழா
திருமணத்தின் போது
* மண்ட பூஜை, வர் பூஜை
* சப்தபாடி விழா
திருமணத்திற்கு பின்
* கிரகபிரவேசம்
* பெயர் மாற்ற விழா
* ஆடை மாற்றுதல்
* திருமண வரவேற்பு
தமிழ் திருமணம்:
தமிழ்
திருமணங்கள், பெரும்பாலும் நெருங்கிய, தூரத்துஉறவினர்கள் கலந்து கொள்ளும்
சிறப்பான வைபவமாகவே இருக்கிறது. ஒவ்வொருசமூகமும், தனித்தனி திருமண
சடங்குகளை நடத்துகின்றன. அடிப்படையில் சில சடங்குகள் பொதுவானவை.
திருமணத்திற்கு முன்
* பந்தக்கால் முகூர்த்தம்
* மாப்பிள்ளை அழைப்பு
* நிச்சயதார்த்தம்
* பத்திரிகை வாசித்தல்
திருமணத்தின் போது
* மாங்கல்ய ஸ்நானம்
* காசி யாத்திரை
* ஊஞ்சல்
* கன்யாதானம்
* முகூர்த்தம்
திருமணத்திற்கு பின்
*சம்மந்தி மரியாதை
* வரவேற்பு
தெலுங்கு திருமணம்:
தெலுங்கு
திருமணமும், பல்வேறு சடங்குகளைஉள்ளடக்கியது. மக்கள்,ஆன்மிகத்தில்
அதிகநம்பிக்கை யுடையவர்கள்ஆதலால், திருமண நிகழ்வில் ஆன்மிகம் சார்ந்த
சடங்கு முதன்மை பெறுகிறது. தெலுங்கில் அனைத்து சமூகத்தினருக்கும்,
அடிப்படையான சில சடங்குகள்
திருமணத்திற்கு முன்
* முகூர்த்தம்
* காசியாத்திரை
* மங்கள ஸ்நானம்
* ஆர்த்தி
* கணேஷ், கவுரி பூஜை
திருமணத்தின் போது
* கன்யா தானம்
* சுமங்கலி
திருமணத்திற்கு பின்
* கிரகப்பிரவேசம்
மாப்பிள்ளை அழைப்பு என்றால் என்ன?
உலகம்
ஒரு பெரிய குடும்பம், என்கிறது வேதம். உலகிலுள்ள எல்லா ஜீவன்களும் நலமோடு
இருக்கட்டும். அவர்களின் தேவைகள் அனைத்தும் நிறைவேறட்டும். மனிதர்கள்
அனைவரும் ஒற்றுமையாக இருக்கட்டும். உலகெங்கும் சாந்தம் நிலவட்டும் என்று
அது வலியுறுத்துகிறது. உலகெங்கும் உள்ள அனைவரும் நம் உறவினர் என்ற எண்ணம்
உண்டாகி விட்டால் பகை, பொறாமை, வெறுப்பு போன்ற தீயகுணங்கள் நம்மை விட்டுக்
காணாமல் போய்விடும். அந்த உயர்ந்த நிலையை ஒவ்வொரு மனிதனும் பெற வேண்டும்
என்பதற்காகவே திருமணம் நடத்தப்படுகிறது.
திருமணம்:
"விவாகம்
என்ற சமஸ்கிருத சொல்லுக்கு "ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குச்
சென்று, அந்த இடத்தைச் செழிக்கச் செய்வது என்று பொருள். ஆம்! ஒரு பெண்
திருமகள் போல ஒரு குடும்பத்திற்குள் நுழையும்சம்பவமே அது. அதுவே தமிழில்
"திருமணம் ஆயிற்று. பெண்ணுக்கு இவ்வாறு முக்கியத்துவம் இருப்பது போல,
திருமண வைபவத்தில் மாப்பிள்ளை அழைப்பும், முக்கிய நிகழ்ச்சியே ஆகும்.
திருமணத்துக்கு முதல் நாள், பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டாரை, வரவேற்கும்
நிகழ்ச்சி இது. அக்காலத்தில் பெண்ணின் சகோதரர் குடைபிடித்து வர,
மாப்பிள்ளை உடன் வருவார். தற்போது இது கார் பவனியாக மாறிவிட்டது.
பொதுமக்கள் அதிகமாக கூடும் கோயிலில் இருந்து, சாலை வழியே மாப்பிள்ளையை
அழைத்து வருவது அக்கால சம்பிரதாயம். "இவர் தான் எங்கள் வீட்டு மாப்பிள்ளை
என்று ஊருக்கு அறிமுகமாகவேண்டும் என்பதற்காக இதுநடத்தப்படுகிறது.
மாப்பிள்ளை நல்லவர், ஒழுக்கமானவர் என்பதை ஊரில் உள்ள அனைவரும் அறிந்து
கொள்ள வேண்டும், என்பதற்கான வெளிப்பாடாகவும் மாப்பிள்ளை அழைப்பு அமைகிறது.
திருமணப் பொருத்தத்திற்கு தேவை எவை:
திருமணத்தில்
ஜாதகப்பொருத்தம் முக்கியமானது. பெண், மாப்பிள்ளை ஜாதகத்தின் அடிப்படையில்
பத்து பொருத்தம் இருக்கிறதா என்பதைஜோதிடரிடம் கணிப்பர்.
இது குறித்து ஜோதிடமாமணி மதுரை சங்கர்ஜி கூறியதாவது:
தினப்பொருத்தம்: பெண்நட்சத்திரம் முதல் மாப்பிள்ளைநட்சத்திரம் வரை எண்ணும்போது 2,4,6,8,9,11,13,15,17,18,20,22,26,27 நட்சத்திரங்கள் உத்தமம்.
கணப்பொருத்தம்:
பெண், மாப்பிள்ளை நட்சத்திரம் ஒரே கணமானால் உத்தமம். தேவ மனுஷ்ய கணமாக
இருந்தாலும் திருமணம் செய்யலாம். ஸ்திரி ராட்சஷ கணமாக இருந்து, புருஷன்
தேவகணமாகவோ, மனுஷ்யகணமாகவோ கூடாது. ஸ்திரி மனுஷ கணமும், புருஷன் ராட்சஷ
கணமுமாக இருந்தால் பொருந்தும்.
மகேந்திரப்பொருத்தம்: பெண்
நட்சத்திரம் முதல் மாப்பிள்ளைநட்சத்திரம் வரை எண்ணும்போது
1,4,7,10,16,18,19,22,25 ஆனால் உத்தமம். இந்த முதல் மூன்று பொருத்தங்களில்
ஏதாவது இரண்டு இருப்பது நல்லது.
ஸ்திரி தீர்க்கப் பொருத்தம்:
பெண் நட்சத்திரம் முதல் எண்ணும்போது புருஷநட்சத்திரம் 13க்கு மேலானால்
உத்தமம். சிலர் 7க்கு மேலானால் ஓரளவுக்குப் பொருந்தும் என்றும் சொல்லுவர்.
யோனிப்பொருத்தம்:
நட்சத்திர யோனிகள் குறிப்பிட்டபடி(யானைக்கு சிங்கம், மனிதர்)(குதிரைக்குப்
பசு) (எருமை, பசு, கடா, மான், நாய் இவைகளுக்குப் புலி) (குரங்குக்கு
ஆடு)(எலிக்கு பூனை, பாம்பு), (பூனைக்குப் புலி நாய்) பகையாகும். மற்றவை
நட்பாகும். இரண்டும் புருஷயோனிகளாக இருக்கக் கூடாது. பெண் ஸ்திரியோனியும்,
மாப்பிள்ளை ஆண்யோனியும் ஆக இருந்தால் உத்தமம்.
ராசிப் பொருத்தம்:
பெண்ணின் ராசி முதல் மாப்பிள்ளை ராசிவரை எண்ணினால் 9 ராசிக்கு மேலாயின்
உத்தமம். 8ம் ராசியாக இருந்தால் கூடாது. இந்த மூன்று பொருத்தங்களில் ஏதாவது
இரண்டு இருப்பது சிறப்பு.
ராசி அதிபதி பொருத்தம்: பெண் ராசி அதிபதிக்கும், மாப்பிள்ளை ராசி அதிபதிக்கும் நட்பாகில்உத்தமம். பகை கூடாது.
வசியப்பொருத்தம்:
மேஷத்திற்கு சிம்மம், விருச்சிகம், ரிஷபத்திற்கு கடகம், துலாம்,
மிதுனத்திற்கு கன்னி, கடகத்திற்கு விருச்சிகம், தனுசு, சிம்மத்திற்கு
மகரம்,கன்னிக்கு ரிஷப,மீனம், துலாத்திற்குமகரம், விருச்சிகத்திற்கு கடகம்,
கன்னி, தனுசுக்கு மீனம், மகரத்திற்கு கும்பம், கும்பத்திற்கு
மீனம்,மீனத்திற்கு மகரம் வசியமாகும். பெண் ராசிக்கு மாப்பிள்ளை ராசி
வசியமானால் உத்தமம்.
ரஜ்ஜு பொருத்தம்: மிருகசிரீஷம்,
சித்திரை, அவிட்டம் ஆகியவை சிரோ ரஜ்ஜு ஆகும். ரோகிணி,திருவாதிரை, அஸ்தம்,
சுவாதி,திருவோணம், சதயம் ஆகியவை கண்டரஜ்ஜு எனப்படும்.கார்த்திகை,
புனர்பூசம்,உத்திரம்,விசாகம், உத்திராடம், பூரட்டாதி ஆகியவை வயிறுரஜ்ஜு
ஆகும். பரணி, பூசம், பூரம், அனுஷம்,பூராடம், உத்திரட்டாதி ஆகியவை துடைரஜ்ஜு
ஆகும். அசுவினி, ஆயில்யம், மகம்,கேட்டை,மூலம், ரேவதி ஆகியவை பாதரஜ்ஜு
எனப்படும். பெண், மாப்பிள்ளை ஒரே ரஜ்ஜுவாக இருக்கக்கூடாது. வெவ்வேறு
ரஜ்ஜுவாக வந்தால் நல்லது.
நாடிப்பொருத்தம்:
அசுவினி,திருவாதிரை, புனர்பூசம், உத்திரம், அஸ்தம், கேட்டை,மூலம், சதயம்,
பூரட்டாதி ஆகியவை பார்சுவநாடியில் அடங்கும். பரணி, மிருகசீரிடம், பூசம்,
பூரம், சித்திரை,அனுஷம், பூராடம், அவிட்டம், உத்திரட்டாதி ஆகியவை
மத்யநாடியில் அடங்கும். கார்த்திகை,ரோகிணி, ஆயில்யம்,மகம், சுவாதி,
விசாகம், உத்திராடம், திருவோணம்,ரேவதி ஆகியவை ஸமானநாடியில் அடங்கும். பெண்
நட்சத்திர மும்மாப்பிள்ளை நட்சத்திரமும் மத்யநாடியானால் கூடாது. ஸமான
நாடியானால் தம்பதிகள் சவுக்கியமாகஇருப்பர். வெவ்வேறு நாடியாகவந்தால்
தோஷமில்லை.
இந்த நான்கு பொருத்தங்களில் மூன்று பொருத்தம் இருப்பது
சிறப்பு. பத்துபொருத்தங்களில் ஸ்திரிதீர்க்கம், கணம், ரஜ்ஜு,நாடி, வசியம்
ஆகிய ஐந்தும் மிகமுக்கியமானவை.

Similar topics
» வீட்டில் ஸ்ரீ பைரவர் வழிபாடு செய்யும் முறை
» திருமணத்தில் தடையா..! இந்த காதல் கடிதம் படியுங்க.. உங்கள் கல்யாண தேதி குறியுங்க!
» வீட்டில் சுபநிகழ்ச்சிகளில் வாழைமரம் கட்டுவது ஏன்?
» வீட்டில் சரஸ்வதி பூஜை செய்வது எப்படி?
» 8ம் வீட்டில் கிரகங்கள் அமர்வதால் பலன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum