HinduSamayam
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

HinduSamayam
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
HinduSamayam
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்
by vpoompalani March 24th 2016, 13:59

» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26

» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17

» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06

» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07

» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58

» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24

» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35

» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52

» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20

» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18

» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37

» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47

» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19

» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46

» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49

» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37

» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07

» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29

» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38

» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55

» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00

» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49

» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28

» திருத்தல யாத்திரை  ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51

» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33

» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46

» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28

» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13

» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29

» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15

» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10

» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29

» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54

» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38

» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42

» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32

» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01

» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20

» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00

தமிழர்களின் சிந்தனைகளம்
Related Posts Plugin for WordPress, Blogger...



அருணகிரிநாதர் வரலாறு

Go down

அருணகிரிநாதர் வரலாறு Empty அருணகிரிநாதர் வரலாறு

Post by மாலதி December 13th 2011, 07:53

அருணகிரிநாதர் வரலாறு Pic
லிங்கோத்பவர்
படைக்கும் கடவுளாகிய பிரம்மாவும் காக்கும் கடவுளாகிய
திருமாலும் இருவருமே பெரியவர்கள் என்று தமக்குள் சர்ச்சை ஏற்பட்டு
சிவபெருமானிடம் சென்று தம்மில் யார் பெரியவர் எனக் கேட்க, சிவபெருமான் தனது
அடியை அல்லது முடியை உங்களில் யார் கண்டு வருகிறீர்களோ அவர் தான் பெரியவர்
எனக்கூற திருமால் வராக அவதாரம் எடுத்து அடியைக்காண பூமியைக் குடைந்து
சென்றார். அடியைக் காண இயலாமல் சோர்ந்து திரும்பினார். பிரம்மன் அன்னப்
பறவையாக உருவெடுத்து சிவபெருமானது முடியைக் காண உயரப் பறந்து சென்றார்.
முடியைக் காண இயலாமல் தயங்கி பறக்கும்போது சிவன் தலை முடியில் இருந்து
தாழம்பூ கீழே இறங்கி வந்ததை கண்டு, அதனிடம் சிவன் முடியை காண எவ்வளவு
துèரம் உள்ளது என்று கேட்க, தாழம்பூ தான் சிவனாரின் சடையில் இருந்து நழுவி
நாற்பதாயிரம் ஆண்டுகளாக கீழ் நோக்கி வந்து கொண்டு அருக்கிறேன் என்று கூற,
பிரம்மன் முடியைக்காணும் முயற்சியை விடுத்து தாழம்பூவிடம் ஒரு பொய்
சொல்லும்படி கூறினார்.
திருமாலிடம், சிவன் முடியை பிரம்மன் கண்டதாக சாட்சி
சொல்லும்படி கேட்டுக்கொண்டதற்கு இணங்க, தாழம்பூ சாட்சி சொல்ல, முற்றும்
உணர்ந்த சிவபெருமான், பொய் சொன்ன பிரம்ம தேவனுக்கு பூலோகத்தில் ஆலயம்
அமையாதென்றும், பொய்சாட்சி சொன்ன தாழம்பூ சிவ பூஜைக்கு உதவாது என்றும்
சாபமிட்Ðடார். திருமாலும், பிரம்மனும் தான் என்ற அகந்தை நீங்கிட உலகுக்கு
உணர்த்த சிவபெருமான் அடியையும், முடியையும் காணமுடியாத ஜோதி பிழம்பாக நின்ற
இடம் திருவண்ணாமலை. அது மஹாசிவராத்திரி நாளாகும்.
இங்குள்ள அண்ணாமலையானது கிருதா யுகத்தில் அக்னி
மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் பொன்
மலையாகவும், கலியுகத்தில் கல் மலையாகவும் மாறி வந்துள்ளது. ஜோதி பிழம்பாக
இருந்த சிவபெருமான் திருமாலும், பிரம்மனும் பணிந்து பிரார்த்திக்க
அவர்களின் பிரார்த்தனைக்கு இறங்கி சிவபெருமானே சிவலிங்க திருஉருக்கொண்டு
மலையின் அடிப்பாகத்தில் அடைந்துள்ள இடம் இத்திருக்கோயில் ஆகும்.

அர்த்தநாரீஸ்வரர்
உமாதேவியார் விளையாட்டாக சிவபெருமுèனின் கண்களை தன்
கையால் மூட உலகம் எங்கும் இருளாயிற்று. ஜீவராசிகள் இருளில் இன்னல்கள்
அடைந்தன. இந்த பாவம் தீர்க்க வேண்டி உமாதேவியார் காஞ்சி மாநகரத்தில் மணலை
லிங்கமாக அமைத்து பூஜை செய்துவரும் நாளில் சிவபெருமான் îதான்றி
திருவண்ணாமலை சென்று தவமியற்றி தமது இடப்பாகம் பெறுமாறு அருளிச் செய்தார்.
சிவபெருமான் கட்டளைப்படி பார்வதி தேவியார் திருவண்ணாமலைக்கு வந்து
பவழக்குன்று மலையில் பர்ணசாலை அமைத்து கௌதம முனிவரின் உதவியால் தவம்
செய்தார். தவத்தை மகிடாசூரன் என்பவன் கெடுத்து வந்தான். உமாதேவியார்
துர்க்éயாக உருவெடுத்து மகிடாசூரனை வதம் செய்து, கார்த்திகை மாதம் பௌர்ணமி
கூடிய கிருத்திகை பிரîதாஷ கால்த்தில் மலை மேல் ஜோதி ஸ்வரூப தரிசனம் கண்டு
சிவபெருமான் இடப்பாகம் பெற்று உமாதேவியார் அமர்ந்தார்.
அதனைக் குறிக்கும் வகையில் கார்த்திகை தீபத்தன்று
மாலை சரியாக 6.00 மணிக்கு அர்த்தநாரீஸ்வர மூர்த்தி எழுந்தருளி காட்சி
கொடுப்பது குறிப்பிடத்தக்கது.

முருகப்பெருமான் நேரில் îதான்றுதல்
அருணகிரிநாதர் முருகப்பெருமானின் தீவிர பக்தர்.
அரசவைப்புலவராக இருந்த சம்பந்தன் காளி தேவியிடம்் வரங்கள் பல பெற்றவர்.
அருணகிரிநாதரின் புகழில்Ð பொறாமையுற்ற சம்பந்தன் தனக்கும்
அருணகிரிநாதருக்குமிடைய ஒரு போட்டியை ஏற்பாடு செய்யுமாறு மன்னரைக்
கேட்டுக்கொண்டார். அதாவது இருவரில் யார் தங்களுடைய கடவுளை நேரில் îதான்றச்
செய்விப்பது என்பது தான் போட்டி.
இப்போட்டியில் சம்பந்தனால் தனது தெய்வமான காளியைத்
îதான்றச் செய்ய இயலவில்லை. ஆனால் அருணகிரிநாதர் வேண்டுதலின் பேரில்
முருகப்பெருமான் நேரில் காட்சியளித்தார். இந்நிகழ்ச்சிக்குப்பின் இத்தலம்
முருகபக்தர்கள் யாத்திரை செல்லும் புகழ் மிக்க தலங்களில் ஒன்றாக
விளங்குகிறது.

சிவபெருமானால் வள்ளாள மகாராஜாவின் அகந்தை அகற்றப்பட்ட சம்பவம்
வள்ளாள மகாராஜா இக்கோபுரத்தைக் கட்டி முடித்தவுடன்
தன் சாதனையை எண்ணி கர்வமுற்றார். அவருக்கு பாடம் புகட்ட எண்ணிய சிவபெருமான்
பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவில் முதல் ஒன்பது நாட்களும் வள்ளாள
மகாராஜா கோபுரத்தின் வழியாக செல்ல மறுத்து விட்டார். தன் தவறை உணர்ந்த
மன்னர் இறைவனிடம் தன்னை மன்னிக்கும்படி வேண்டினார். அதன் பின் பத்தாவது
நாளில் இக்கோபுரத்தின் வழியாக செல்ல இறைவன் ஒப்புக்கொண்டார். சிவபெருமானின்
இச்செயல் வள்ளாள மகாராஜாவிற்கு மட்டுமின்றி அகந்தையுற்ற ஒவ்வொருவருக்கும்
பாடமாக அமைந்துள்ளது.

முருகப்பெருமானால் அருணகிரிநாதர் காப்பாற்றப்பட்ட சம்பவம்
தனது இளமைக் காலத்தில் விரக்தியுற்ற அருணகிரிநாதர்
வள்ளாள மகாராஜா கோபுரத்தின் உச்சியிலிருந்து குதிப்பதற்கு முயற்சியுற்றார்.
முருகப் பெருமான் அருணகிரிநாதருக்கு காட்சியளித்து அவரது உயிரைக்
காப்பாற்றினார். இச்சம்பவத்திற்குப் பின் அருணகிரிநாதர் திருப்புகழ்
பாடியருளினார்.

வள்ளாள மகாராஜாவின் ஈமக்கிரியைகளை அருணாசலேசுவரரே செய்து வருதல்
எல்லா நற்குணங்களும் நிரம்பியவர் வள்ளாள மகாராஜா
என்று அருணாசல புராணம் கூறுகிறது. நேர்மை, கொடைத்தன்மை மற்றும்
அருணாசலேசுவரர் மீது அளவிலா பற்று கொண்டவர் இவர். இம்மன்னருக்கு குழந்தை
பாக்கியம் கிட்டவில்லை இவருடைய பக்தியை சோதிக்க எண்ணிய சிவபெருமான்
இவருக்கும் இவர் மனைவிக்கும் குழந்தையாக îதான்றினார். இறைவனின் அருளை
வியந்து இத்தம்பதியினர் அக்குழந்தையைத் தழுவும் போது இறைவன் மறைந்து
விட்டார்.
பின்னர் இறைவனிடம் தன் மனக்குறையை வெளிப்படுத்திய
போது, இறைவன் அவருக்கு காட்சியளித்து மன்னர் தன் கடமைகளை சரிவர செய்து வர
வேண்டுமென்றும் அவருடைய ஈமக்கிரியைகளை தானே செய்வதாகவும் வாக்களித்தார்.
இப்போது கூட ஒவ்வொரு ஆண்டும் மாசிமாதத்தில் வள்ளாள மகாராஜாவின் திதி
நாளன்று அருணாசலேசுவரர் பள்ளிகொண்டாபட்டு என்ற கிராமத்தில் எழுந்தருளி
மிகுந்த சம்பிரதாயங்களுடன் ஈமக்கிரியைகள் செய்வது வழக்கம். இவ்விழாவிற்கு
மாசிமகம் தீர்த்தவாரி என்று பெயர்.

யானை திறை கொண்ட விநாயகர்
ஒரு சமயம் ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த அரசர்
ஒருவர் போரிட்டு இப்பகுதியைக் கைப்பற்றிய பின் தன் படை வீரர்களுடன்
இவ்விடத்தில் தங்கியிருந்தார். அன்று இரவு யானை ஒன்று தன்னையும் தன்
படைவீரர்களையும் விரட்டியடிப்பதாகக் கனவு கண்டார். இது குறித்து விசாரித்த
போது தான் தவறுதலாக விநாயகப் பெருமானால் பாதுகாக்கப்பட்டு வரும் புனிதத்
தலத்தில் தங்கியுள்ளதாக அறிந்தார். தன் தவறை உணர்ந்த அவ்வரசர் விநாயகப்
பெருமானிடம் மன்னிப்பு வேண்டியதுடன் தன்னுடைய யானைகளையும் விநாயகப்
பெருமானுக்கு காணிக்கையாக அளித்தார்.

கிளி கோபுரம்
ஒரு சமயம் விஜய நகர் மன்னர் பிரபுட தேவராயர் கண்
பார்வை இழந்து துன்பமடைந்தார். மன்னரின் நம்பிக்கைக்குகந்த புலவர்
சம்பந்தாண்டான் பாரிஜாத மலரைக் கொண்டு சிகிச்சை செய்தால் கண்பார்வை
திரும்பக் கிடைக்கும் என்றும் இப்பணியைச் செய்ய வல்லவர் அருணகிரிநாதார்
தாம் என்று கூறினார். மன்னரும் இதை ஏற்று அருணகிரிநாதரை பாரிஜாத மலரைக்
கொண்டு வரும்படி கேட்டுக் கொண்டார்.

பாரிஜாத மலர் சொர்க்கத்தில்
இருப்பதால் அருணகிரிநாதர் Ð கூடு விட்டு கூடு பாயும் திறமையால் ஒரு இறந்த
கிளியின் உடலுக்குள் தன் உயிரைப் புகுத்தினார். உயிரற்ற தன் உடலை
ஓரிடத்தில் கிடத்தி விட்டு பாரிஜாத மலரைக் கொண்டு வரச் சென்றார். ஆனால்
மலரைக் கொண்டு வருவதற்குள் புலவர் சம்மந்தாண்டனது சூழ்ச்சியினால்
அருணகிரிநாதரின் அவர் உடல் தகனம் செய்யப்பட்டு விட்டது. தன் பூத உடல்
மீண்டும் திரும்பப் பெற முடியாதோல் அருணகிரிநாதர் கிளி வடிவில் வாழ்ந்து
கந்தரனுபூதி முதலான பாடல்கனை இயற்றினார்.

இக்கோபுரத்தின் கலசத்தில் அருணகிரிநாதர் கிளி உருவாக அமர்ந்து சென்றதால் இதற்கு கிளி கோபுரம் என்ற பெயர் வழங்கலாயிற்று.
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

அருணகிரிநாதர் வரலாறு Empty அருணகிரிநாதர் நூல்கள் (Arunagirinathar Books)

Post by மாலதி December 13th 2011, 08:18

அருணகிரிநாதர் வரலாறு Arunakiri






அருணகிரிநாதர், தமிழ் நாட்டில் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து
முருகக் கடவுள் மீது பாடல்கள் எழுதி புகழ் பெற்ற அருளாளர். இவர்
திருவண்ணாமலையில் பிறந்தார் என்றும், காவிரிப் பூம்பட்டினத்தில் பிறந்தார்
என்றும் சொல்கின்றனர். இவர் தமிழ் மொழி, வடமொழி ஆகிய இரு மொழிகளிலும்
புலமை பெற்றவர்.




அருணகிரிநாதர் நூல்கள் மொத்தம் 9. அவை :

கந்தர் அந்தாதி




அருணகிரிநாதர் வரலாறு Murugan








ஆறுமுகப் பெருமானுக்கு உகந்த ஆறு நூல்களுள் ஒன்று இந்த கந்தர் அந்தாதி.
இதிலுள்ள காப்புச் செய்யுள்களால் இது திருவண்ணாமலையிற் பாடப்பட்டிருத்தல்
வேண்டுமெனத் தோன்றுகிறது. நூலிலுள்ள நூறு செய்யுள்களின் முதலெழுத்துக்கள்
சி, சீ, செ, சே, தி, தீ, தெ, தே என்னும் எட்டெழுத்துக்களுள் அடங்குதல்
கவனிக்கத்தக்கது. இந்நூலைப் பாடியவர் அருணகிரி நாதர்.


பெரும்புலமை வாய்ந்த பாரதம் பாடிய வில்லிபுத்தூரார், தமது கல்விச்
செருக்கால், தம்மோடு வாது செய்து தோற்றவர்களின் காதைக் குறடு கொண்டு
குடைந்து தோண்டும் வழக்கத்தை கொண்டிருந்தார். அவருக்கும்
அருணகிரிநாதருக்கும் ஒருமுறை தருக்கம் உண்டாயிற்றென்றும், அப்போது
ஆசுகவியாக அருணகிரிநாதர் பாடிய நூல் தான் கந்தர் அந்தாதி என்றும்
அந்நூலுக்கு உரையை வில்லிபுத்தூரார் உடனுக்குடன் கூறி வந்தார் என்றும்
கூறுவர். அவ்வாறு கூறி வரும் போது 'திதத்த' எனத் தொடங்கும் 54வது
செய்யுளுக்கு வில்லிபுத்தூரார் உரை கூற இயலாது திகைத்து தோல்வியுற்றார்
என்றும் அதற்கு அருணகிரிநாதரே உரை அருளினார் என்றும் கூறுவர். பின்பு ஏனைய
பாடல்களுக்கு வில்லிபுத்தாரே உரை கூறினார் என்றும் கூறுவர். வில்லிபுத்தார்
உரை கூற முடியாமல் தோல்வியுற்றாலும் அருணகிரிநாதர் அவருடைய காதை அறுத்து
இழிவுபடுத்தாமல், இனி கருணைக்கு விரோதமான இவ்வழக்கத்தை விட்டுவிட வேண்டும்
என புத்தி சொல்லி அவர் கையிலிருந்த குறடை எறியச் செய்தார் என்றும் கூறுவர்.
இக்கருணையைக் கருதியும் 'கருணைக் கருணகிரி' என்னும் வழக்கு எழுந்தது.








காப்பு


வாரணத் தானை யயனைவிண் ணோரை மலர்க்கரத்து
வாரணத் தானை மகத்துவென் றோன்மைந் தனைத்துவச
வாரணத் தானைத் துணைநயந் தானை வயலருணை
வாரணத் தானைத் திறைகொண்ட யானையை வாழ்த்துவனே.

ஐராவதம் என்ற யானைக்கு தலைவனாகிய இந்திரனையும், பிரம்மனையும், ஏனைய
தேவர்களையும், தாமரை போன்ற கையில் பாஞ்ச சன்யம் என்கிற சங்கை ஏந்தி
இருக்கும் திருமாலையும், தட்ச யாகத்தில், வீரபத்திரன் சொருபத்தில் வந்து
ஜெயித்த சிவபெருமானின், குமாரனும், கோழிக்கொடியை உடைய குமாரக் கடவுளை,
சகோதரனாக பெற்றிருப்பவனும், வயல்கள் சூழ்ந்த அருணாசலத்தில், யானைமுகத்தை
உடைய கஜமுகாசுரனை, வெற்றி கொண்ட, யானை முகம் கொண்டவனும் ஆகிய கணபதியை,
வணங்குகிறேன்.




உண்ணா முலையுமை மைந்தா சரணம் பரருயிர்சேர்
உண்ணா முலையுமை மைந்தா சரண மருணைவெற்பாள்
உண்ணா முலையுமை மைந்தா சரணந் தனமுமொப்பில்
உண்ணா முலையுமை மைந்தா சரணஞ் சரணுனக்கே.

கன்றுகள் மிகுதியாக உண்ணுகின்ற, பசு இனங்கள் (வாழ்கின்ற), முல்லை
நிலத்திற்கு, தலைவனாகிய திருமாலின், கருமை நிறத்தையும், வலிமையும்,
உவர்ப்பாகிய குற்றத்தையும் (உடையதாய்), கோட்டையாக உள்ள, கடலில்
ஒளிந்திருக்கின்ற அசுரர்களின், ஜிவனை, மாய்த்து, தேவர்கள் உள்ளத்தில்
இருந்த, நாம் ... அச்சத்தை, போக்கி அழித்த, தெய்வமே, ஆட்டு வாகனத்தில்
ஏறும், உஷ்ணத்தை உடைய அக்னி தேவன், சேர்ந்திருக்கும், நாம் அடைக்கலம்
புகுவதற்கு இடமாகிய, அண்ணாமலையில் விளங்கி அருளும், மிகுதியாகப், பெருகும்,
கற்புடமைக்கும், அழகிய, மை ... அஞ்சனம் தீட்டிய, செவிகளை எட்டிப்
பிடிக்கும், விழிகளின், கிருபைக்கும், ஒப்புவமை இல்லாத, உண்ணாமுலை என்கிற
பெயர் கொண்ட பார்வதியின், குமாரனே, உன்னிடம் அடைக்கலம் புகுந்தேன்.




நூல்



திருவாவி னன்குடி பங்காள ரெண்முது சீருரைச
திருவாவி னன்குடி வானார் பரங்குன்று சீரலைவாய்
திருவாவி னன்குடி யேரகங் குன்றுதொ றாடல்சென்ற
திருவாவி னன்குடி கொண்டதண் கார்வரை செப்புமினே.
1

லட்சுமி தேவிக்கு நாயகனாகிய திருமாலும், நல்ல பெண் தெய்வமாகிய உமையை
இடப்பக்கத்தில் வைத்திருக்கும் சிவபெருமானும், மதிக்கும் விதத்தில்,
பழமையான வேதத்திற்கு, சிறந்த பொருளை விளக்கிய, சாமர்த்தியம் உடைய,
இளங்குமாரனாகிய முருகப்பெருமான், நிரந்தரமாக வாசம் செய்யும், வானளாவும்
திருப்பரங்குன்றம், சிறந்த செந்தில் பதி, பங்கயம் பொருந்திய பழநி, சுவாமி
மலை, அந்தக் கந்தக் கடவுள் திருவிளையாடல் செய்த பல குன்றுகள், நடந்து, பூமி
அதிர்கின்ற, யானைக் கூட்டங்கள், வாழ்கின்ற, குளிர்ந்த, கருமேகங்கள்
சூழ்ந்த பழமுதிர்சோலையையும், துதி செய்யுங்கள். ..




செப்புங் கவசங் கரபா லகதெய்வ வாவியம்பு
செப்புங் கவசங் கரிமரு காவெனச் சின்னமுன்னே
செப்புங் கவசம் பெறுவார் கணுந்தெய்வ யானைதனச்
செப்புங் கவசம் புனைபுயன் பாதமென் சென்னியதே.
2

ரிஷப வாகனத்தை உடைய, புனித முர்த்தி யாகிய, ஈசனின், குமாரனே,
தெய்வீகமாகிய, சரவணப் பொய்கையின் நீரில், செனித்த, தூயனே, சங்கை ஏந்தியுள்ள
திருமாலின் மருகனே, என்றெல்லாம், விருதுகள், முன்னதாகவே சொல்லி வர, அதைக்
கேட்டவுடன் அந்த இடத்திலேயே, தன்னிலை அழிந்து சானித்தியம் அடையும் பவனி
மாதர்களின், (அவசம் ஆவேசம்), பார்வையும், தெய்வயானையின் மார்பாகிய
கவசத்தையும், சட்டையாக தரித்துள்ள, தோள்களை உடைய முருகப் பெருமான்,
திருவடிகள், என் தலையின் மீது வீற்றிருந்தன. ..




சென்னிய மோகந் தவிராமு தோகண் டிகிரிவெண்ணெய்ச்
சென்னிய மோகம் படவூ தெனத்தொனி செய்தபஞ்ச
சென்னிய மோகந் தரம்புனத் தேன்புணர் தேவைத்தெய்வச்
சென்னிய மோகம் பணிபணி யேரகத் தேமொழிக்கே.
3

சிரசின் மேல், கங்கா ஜலத்தின், ஆரவாரம், நீங்காத (சிவபெருமான் உண்ட),
நஞ்சமோ, இந்தத் தலைவியின் கண்? சக்கரம் ஏந்தி, நவநீதத்தைத் திருடிய,
புல்லாங்குழல் இசைக்கும் (திருமால்), தேவர்கள் எல்லாம் மயக்கம் அடையும்படி,
ஊது என்று கட்டளை இட்டு, சப்தத்தைக் கிளப்பிய, இவளின் (இந்தத் தலைவியின்)
கழுத்து சங்கு போன்று இருக்கிறது, வள்ளிபுனத்தில் வாழும் வள்ளியைக் கலந்த,
குமரக் கடவுளை, தெய்வீகமாகிய சோழ ராஜன், அதிக ஆசையுடன் வணங்கி, திருப்பணி
செய்த, சுவாமி மலையில் வாழும் தேன் போன்ற மொழியை உடைய இந்தப் பேண்ணுக்கு.
..




தேமொழி யத்தம் பெறவோந் தனக்கன்று சேணுலகத்
தேமொழி யத்தம் சினங்காட் டவுணரைச் சேமகரத்
தேமொழி யத்தம் புயமவர் சூடிகை சிந்தவென்ற
தேமொழி யத்தம் பதினா லுலகுமந் தித்ததொன்றே.
4

தேன் போன்ற மொழியை உடைய பார்வதியின், பாதியாகிய சிவபெருமான்,
பெற்றுக்கொள்ளும்படி, பிரணவத்திற்கு, முன்பு, தேவலோகத்தின், நலனெல்லாம்
அழியும்படி, தம்முடைய கோபத்தைக் காட்டிய, சூரபத்மாதிகளை, ஆண் சுராக்கள்
வாழும், இடமாகிய சமுத்திரத்தில், கணுக்களை உடைய, கரங்களும், தோள்களும்,
அவர்களின் சிரங்களும், பூமியில் விழும்படி, அவர்களை ஜெயித்து அழித்த,
குமரக் கடவுள், உபதேசித்த, பொருள், ஈரேழு பதினாலுலகமும் ஒரே தன்மையாக
பொருந்தி இருந்தது. ..




தித்தவித் தார மனித்தரைத் தேவர் வணங்கமுன்போ
தித்தவித் தாரகை மைந்தர்செந் தூர்க்கந்தர் சிந்துரவா
தித்தவித் தார முடையா ரருள்வெள்ளந் தேக்கியன்பு
தித்தவித் தாரந் தனிவீ டுறத்துக்கச் செவ்வனவே.
5

தித்த என்ற தாள ஜதி விரிவுகளை, தன்னுடைய நடனத்தின் மூலம், அழிவில்லாத
நடராஜப்பெருமானுக்கு, மற்ற தேவர்கள் எல்லாம் வணங்கும்படியாக,
முன்னொருகாலத்தில் சுவாமி மலையில், உபதேசம் செய்தவரும், விஷேசமான,
கிருத்திகை மாதர்களின் புதல்வரும், செந்தில் ஆண்டவரும், நெற்றிப் பொட்டை,
சூரியனைப் போல் ஒளி வீசும்படி தரித்துள்ள, அற்புதமான இரண்டு தேவிமார்களை
உடைய கந்தப் பெருமான், தன்னுடைய க்ருபா நதியை உள்ளத்தில் நிரப்பி, பக்தியை
மூளும்படி செய்து, ஒப்பற்ற மோட்ச வீட்டை நான் அடையும்படி, பல துன்பங்களைத்
தருகின்ற, பிறப்பாகிய, அக்னியை, அவியச் செய்தார். ..




செவ்வந்தி நீலப் புயமுரு காபத்தர் சித்தமெய்யிற்
செவ்வந்தி நீலத்தை யுற்றருள் வாய் திங்கட் சேய்புனைந்த
செவ்வந்தி நீலத் தொருபாகர் போன்ற தினிச்சிந்தியார்
செவ்வந்தி நீலத்தி னீடுமுற் றாத திமிரமுமே.
6

சாமந்தி மாலையையும், நீலோற்பல மாலையையும் புனைந்திருக்கும், புயங்களை
யுடைய முருகனே, உன் அடியார்களுடைய, இதயமாகிய உண்மை நிலையில், மிகுதியாக
பொருந்தி இருக்கும், நீ, க்ருபை கூர்ந்து, அந்த மாலையை நீ கொடுத்து அருள
வேண்டும், இளம் பிறையை, அணிந்திருக்கும், சிவந்த மாலைக்காலம், பார்வதி
பங்கராகிய பரமசிவனை, போல் விளங்குகிறது, இனிமேல் வரப்போகிறது, உன்னைத்
தியானிக்காதவர்கள் அடையும், ஜெனனமாகிய பிறப்பு, வருத்தத்தை விளைவிக்கும்,
அஞ்ஞான இருளைப் போன்று, நீடித்து நிற்கும், தொலையாத, இராக்காலம். ..




திமிரத் திமிரக் கதரங்க கோபசெவ் வேலகைவேல்
திமிரத் திமிரக் ககுலாந் தகவரைத் தேன்பெருகுந்
திமிரத் திமிரக் தனையாவி யாளுமென் சேவகனே
திமிரத் திமிரக் கனலாய சந்தன சீதளமே.
7

இருள் நிறைந்ததும், திமிங்கலத்திற்கு வாசஸ்தலமாக இருப்பதும் ஆன,
சமுத்திரத்தை, கோபித்த, சிவந்த வேலாயுதத்தை உடையவனே, கையிலுள்ள
வேலாயுதமும், மழுங்கும்படியாக குற்றிய, ராட்ஸச குலத்திற்கு எமன் போன்றவனே,
குற்றிய, மலையிலிருந்து தேன் ஆறு போல் பெருகும், காட்டு ஆற்றின் வளப்பத்தை
உடைய வள்ளி நாயகியே, யானையால் வளர்க்கப்பட்ட தேவசேனா நாயகியே, மிகவும்,
என்னை அணைத்து எனது ஆவியை காப்பாற்ற வேண்டும், என்று சல்லாபம் பேசுகின்ற,
வீரனே, பூ சப் பூசப், நெருப்பைப் போல தகிக்கின்றது, சந்தனம் முதலிய
குளிர்ந்த வஸ்துக்கள் எல்லாம். ..




சீதளங் கோடு புயங்கைகொண் டார்தந் திருமருக
சீதளங் கோடு முடியாளர் சேய்தனக் கேதுளதோ
சீதளங் கோடு னிதருமென் பார்தொழுந் தேவிபெறுஞ்
சீதளங் கோடு கொடிவேன் மயூரஞ் சிலையரசே.
8

மகாலட்சுமியின், மார்பகத்தையும், சங்கையும், திருத்தோளிலும்,
திருக்கரத்திலும், தரித்துள்ள திருமாலின் மருகனும், குளிர்ந்த சந்திரனின்,
அழகிய கோணல் வடிவமான பிறையை (தரிக்கும்), சிரசை உடைய பரமசிவனின்,
குமாரனுமாகிய முருகனுக்கு, என்ன சொத்து உளது என்று கேட்டால்,
அருவெறுக்கத்தக்க, செல்வம், குற்றத்தையும், துன்பத்தையும், கொடுக்கும்,
என்று கருதி அதை விட்டு நீங்கிய ஞானிகள், வணங்கும், வள்ளி நாயகி மூலம்,
கிடைத்த சீர்வரிசைகள், ஊது கொம்பும், சேவல் கொடியும், வேலாயுதமும், மயில்
வாகனமும், மலைகளை ஆளும் உரிமையுமே. ..



சிலைமத னம்படு மாறெழுஞ் சேய்மயி லுச்சிட்டவெச்
சிலைமத னம்படு சிந்துவை யிந்துவைச் செய்வதென்யான்
சிலைமத னம்படு காட்டுவர் கேளிருஞ் செங்கழுநீர்ச்
சிலைமத னம்படு தாமரை வாவி திரள்சங்கமே.
9

நீலோற்பலகிரியாகிய திருத்தணி மலையில் காணப்படும், தேனும், அன்னப்
பட்சிகளும் நிறைந்திருக்கும், தாமரைத் தடாகத்தில் வசிக்கும், சங்கினங்களே,
வில்லை உடைய மன்மதனின், பாணம், என்னைக் கொல்வது போல் தாக்குகிறது, குமாரக்
கடவுளின் மயில் வாகனத்தின், எச்சிலாகிய சரப்பத்தின், எச்சிலாகிய தென்றல்
காற்றையும், ஒருமுறை கடையப்பட்ட கடலையும், நிலவையும், நான் என்ன செய்து
கடப்பேன்? ஆர்பாட்டத்துடன் கோபத்தை, சுற்றத்தார் எல்லோரும், என்மேல்
காட்டுகிறார்கள். ..



திரளக் கரக்கரை வென்கண்ட வேலன் றிசைமுகன்மால்
திரளக் கரக்கரை யான்பாட நாடுதல் செய்யசங்க
திரளக் கரக்கரை காண்பான்கைந் நீத்திசை வார்பனிக்க
திரளக் கரக்கரை வானீட்டு மைந்தர்புந் திக்கொக்குமே.
10

ஸ்திரமான, லட்சக் கணக்கான, அசுரர்களை, வெற்றி கொண்ட, வேலாயுதனை,
பிரம்மாவுக்கும், திருமாலுக்கும், ஆயிரம் கண்ணுடைய இந்திரனுக்கும்,
ருத்ராட்சம் அணிந்துள்ள பரமசிவனுக்கும், இறைவனாகிய கந்தக் கடவுளை, நான்
புகழ்ந்து பாட உத்தேசிப்பது, சிவந்த சங்குகள் முழங்குகின்ற, கடலை, கடந்து
செல்பவன், நீந்திப் போகும் புத்திக்கும், சந்திரனை, பிடிக்கும் பொருட்டு,
கையளவை, ஆகாசத்தில் நீட்டும், சிறு பிள்ளையின், புத்தியைப் போலும்
இருக்கிறது. ..



திக்கத்திக் கோடு படிபுடைச் சூதத் தெறிபடபத்
திக்கத்திக் கோடு கடடக் கடறடி சேப்படைச்சத்
திக்கத்திக் கோடு துறைத்திறத் தற்ற குறக்குறச்சத்
திக்கத்திக் கோடு பறித்துக்கொ டாதி சிறைபிறப்பே.
11

நாலு திசைகளிலும், எல்லோரும் திகைக்கும்படி பரந்து இருக்கும்,
பூமியின் கண், நீக்கி அருள்வாயாக, மாமரமாய் நின்ற சூரபத்மனை, விளங்கும்படி,
ஆயிரம் பணா மகுடங்களை உடைய ஆதிசேஷனின் தலையின் மேல், இந்த சங்குகள்
எல்லாம், ஊறும்படி, பெரிய விசாலமான, சமுத்திரத்தின் கண், அடக்கி அழித்த,
சிவந்த வேலாயுதப் படையை உடையவனே, கதறி, மாறுபட்ட, பர சமய கோட்பாடுகளில்,
நீங்கி நிற்பவனே, (உலையில்) குற்றுவதற்கு, குற நாயகியாகிய வள்ளி நாயகிக்கு,
யானையின் தந்தத்தை, பறித்துக் கொடுத்த, ஆதி மூலமே, பஞ்சேந்திரியங்களால்
கட்டுண்ட சிறை போன்ற என்னுடைய ஜனனத்தை, நீக்கி அருள்வாய்). ..



சிறைவர வாமையி லேறிச் சிகரி தகரவந்து
சிறைவர வாமையில் கூப்பிடத் தானவர் சேனைகொண்ட
சிறைவர வாமையில் வாங்கிதன் றேங்கழல் யாங்கழலாச்
சிறைவர வாமையி னெஞ்சுட னேநின்று தேங்குவதே.
12

தோகையும், அடியார்களுக்கு அருளும் வரப்பிரசாதத்தையும் உடைய, தாவிச்
செல்லும் மயிலில் ஏறி, க்ரவுஞ்ச கிரி, தூளாகும்படி எழுந்தருளி, கரையால்,
சூழப்பட்டதும், ஆமைகளுக்கு இருப்பிடமானதும் ஆன கடல், ஓ என்று ஓலமிட,
அரக்கர்களின் சேனையால், தள்ளப்பட்ட, தேவர்களின் சிறை வாசம் நீங்க, தகுந்த,
ஐவேலை, பிரயோகித்த முருகப்பெருமானின், இனிய திருவடிகளை, நான் அணுகாமல்
பிரிந்திருப்பதினால், அல்பமாகிய, பஞ்சேந்திரியங்களின், ஆசையாகிய, இருளில்,
என்னுடைய இருதயம், சேர்ந்து நின்று (இருளொடு), திகைக்கின்றது. ..



தேங்கா வனமும் மதகரி வேந்துடன் சேர்ந்தவிண்ணோர்
தேங்கா வனமுனை யவ்வேற் பணியெனுஞ் சேயிடமேல்
தேங்கா வனமுந் தளர்நடை யாயஞ்சல் செண்பகப்பூந்
தேங்கா வனமுங் கழுநீ ரிலஞ்சியுஞ் செந்திலுமே.
13

நிறைந்திருக்கும், பசுக் கூட்டங்களை மேய்க்கும் திருமாலையும்,
மும்மதங்களையும் பொழியும் ஐராவதத்திற்கு தலைவனான, இந்திரனையும், அவருடன்
சேர்ந்திருக்கும், தேவர்களையும், அவர்களுக்கு இருப்பிடமான அமராவதியையும்,
ரட்சிப்பது, நம்முடைய, கூரிய வேலாயுதத்தின், தொழிலாகும், என்று சொல்லி
(அதைக் கட்டளை இட்ட) முருகனின், வாசஸ்தலம், இதோ இருக்கிறது, திகைத்து, தன்
நடையை தோற்கடிக்கிறது என்று அன்னப் பட்சியும், தளர்ந்து போகும், நடையை
உடையவளே, பயப்படாதே (அவை யாவன), செண்பக மலரால், விளங்கும், இனிய,
பூஞ்சோலையும், செங்கழுநீர் தடாகமும், திருச்செந்தூர் தலமுமேயாகும். ..



செந்தி லகத்தலர் வாணுதல் வேடிச் சிமுகபங்க
செந்தி லகத்தலர் துண்டமென் னாநின்ற சேயசங்க
செந்தி லகத்தலர் ராசிதந் தானைச் சிறையிட்டவேற்
செந்தி லகத்தலர் தூற்றிடுங் கேடு திவாகருளே.
14

சிவந்த குங்கும பொட்டு இட்டு, விளங்கும், ஒளி வீசும் நெற்றியை உடைய
வள்ளி நாயகியின், வதனம், தாமரை போன்றது, எள்ளின் பூ போன்றது, நாசி, என்று
அவளின் அழகை நலம் புனைந்து உரைத்த, குமரக் கடவுளே, ஜீவராசி கூட்டங்கள்
வசிப்பதற்கு, அண்ட கோடிகளை, சிருஷ்டித்த பிரமனை, சிறையில் அடைத்த,
வேலாயுதத்தை உடைய, செந்தில் ஆண்டவனே, அகங்காரத்தினால், என்னை வசைகள்
பேசுவார்கள், சுற்றத்தார்கள் (அதனால்), எல்லோராலும் துதிக்கப்படும், உன்
புயத்தை, எனக்கு தந்தருள வேண்டும் ..



திவாகர கன்ன கொடைப்பாரி யென்றுழ றீனவல்லீர்
திவாகர கன்ன புரக்குழை வல்லி செருக்குரவந்
திவாகர கன்ன சுகவா சகதிறல் வேல்கொடென்புந்
திவாகர கன்ன மறலி யிடாதுயிர்ச் சேவலுக்கே.
15

பகல் பொழுதில் தானம் கொடுக்கும், கையை உடையை கர்ணனே, பாரியைப் போன்ற
கொடை வள்ளலே, என்றெல்லாம் பலரிடமும் பேசி, என்னை உழல வைக்கும், வறுமையாகிய,
இருளை, பிளக்கக்கூடிய, ஞான சூரியனே, கர்ணபூரம் என்ற ஆபரணத்தைத்
தரித்திருக்கும், வள்ளி நாயகி, பெருமிதத்துடன் (தழுவும்), மார்பை உடையவனே,
மாலைப் பொழுதின் நிறத்தை உடைய, சிவபெருமானின், காதில், இனிமையாக பிரணவத்தை
உபதேசம் செய்தவனே, வலிய வேலாயுதத்தை ஏந்தி வந்து, என்னுடைய இருதயத்தில் நீ
வீற்றருள வேண்டும், ஒளிந்து, எமன் கொள்ளை கொள்ளாதபடி, உயிரைக்
காப்பாற்றுவதற்காக ..



சேவற் கொடியும் பனிசாந் தகனுந் திருக்கரத்துச்
சேவற் கொடியுங் கொடியகண் டாய்தினை சூழ்புனத்துச்
சேவற் கொடியுந் திவளத் தவளுந்தந் திக்களபச்
சேவற் கொடியு முடையாய் பிரியினுஞ் சேரினுமே.
16

ரிஷப வாகனத்தை உடைய பரமசிவானல், பல் தகர்க்கப்பட்ட, (நிசி + அந்தகன்)
பூஷா என்னும் சூரியனும், உன் திருக்கையில் ஏந்தி இருக்கும், கொடியாகிய
சேவலும், பொல்லாதவைகளாய் இருக்கின்றன, தினைப் பயிர் நன்றாக வளர்ந்துள்ள
கொல்லையை, காவல் புரியும், நீண்ட, காட்டாற்றின் வளப்பத்தை
அநுபவிப்பவளுமாகிய (வள்ளியையும்), ஐராவதத்தால் வளர்க்கப்பட்ட, சந்தன சேறு
பூசியிருக்கும், சிவந்த, சொக்கட்டான் கருவி போன்ற மார்பகமும், கொடி போன்ற
இடையையும் உடைய (தேவசேனையையும்), இரண்டு பக்கங்களிலும் சேர்த்துக்கொண்டு
இருப்பவனே, உன்னைப் பிரிந்திருக்கும் போதும், உன்னிடம் கலந்திருக்கும்
போதும், கொடியவைகளாய் இருக்கின்றன). ..



சேரிக் குவடு மொழிவிழி யாடனச் செவ்விகுறச்
சேரிக் குவடு விளைந்ததன் றேநன்று தெண்டிரைநீர்
சேரிக் குவடு கடைநாளி லுஞ்சிதை வற்றசெவ்வேள்
சேரிக் குவடு புடைசூழ் புனத்திற் றினைவிளைவே.
17

இசைந்த, கரும்பையும், மாவடுவையும் (ஒத்த), பேச்சையும், கண்களையும்
உடைய (வள்ளி நாயாகியின்), மார்பின் பக்குவ நிலையால், குறவர் குடிலுக்கு,
அவளைக் களவு மணம் செய்து கொண்டான் முருகன் என்ற அபவாதம் ஏற்பட்டது, அந்தக்
காலத்தில் தானே, நன்றாக விளங்கியது, தெள்ளிய அலைகளை உடைய சமுத்திர ஜலம்,
ஒன்று சேர்ந்து, பூமியை, அழிக்கின்ற, பிரளய காலத்திலும், அழிவில்லாத,
முருகவேளுடைய, வடசேரி தென்சேரியில், மாலையில், பக்கவாக்கில், வயலில்,
தினைப்பயிரின் விளைவானது ..



தினைவேத் தியன்புசெய் வேந்தன் பதாம்புயத் திற்பத்திபுந்
தினைவேத் தியமுகந் தேற்றினர் மாற்றினர் பாற்றினந்தீத்
தினைவேத் தியர்நெறி செல்லாத விந்தியத் தித்தியினத்
தினைவேத் தியங்குயிர் கூற்றாரி லூசிடுஞ் சீயுடம்பே.
18

தினைப்புனத்திற்கு இறைவியாகிய வள்ளி, காதல் புரிகின்ற, முருகக்
கடவுளின், திருவடித் தாமரையில், பத்தி செய்கின்ற உள்ளத்தையும்,
புத்தியையும், அவருக்கு உரிய நைவேத்தியமாக, விருப்பமுடன் சமர்பித்த
அடியார்கள், உண்மையாகவே மாற்றி விட்டார்கள், பருந்துக் கூட்டங்களும்,
அக்னியும், சாப்பிடுவதும், அழகிய அறிஞர்களால் உணர்த்தப்பட்ட, மார்க்கத்தில்
ஒழுகாததும், பஞ்சேந்திரியங்களின் வசப்பட்டதும், தின் பண்ட வகைகளின்,
கழிவாகிய மலஜலமாதிகளை, ஏற்றுக்கொண்டிருப்பதும், உள் நின்று இயங்குகின்ற
பிராணனை, எமன் உண்டுவிட்டால், க்ஷண நேரத்தில் ஊசிப்போகும்,
அருவெருக்கத்தக்க இந்த உடம்பை, மாற்றி விட்டனர்). ..



சீயனம் போதி யெனவாய் புதைத்துச் செவிதரத்தோல்
சீயனம் போதி யமலையிற் றாதை சிறுமுநிவன்
சீயனம் போதி கடைந்தான் மருகன்செப் பத்திகைத்தார்
சீயனம் போதி லரனா திருக்கென் செயக்கற்றதே.
19

பார்வதியின் பாகராகிய சிவபெருமான், நமக்கு, உபதேசம் செய்வாய் என்று
கேட்டு, பணிவுடன் வாயை மூடிக்கொண்டு, காதால் கேட்க, யானைகளும்,
சிங்கங்களும், தஞ்சமாக உறைகின்றதும், கல்வி ஒழுக்கத்திற்கு இருப்பிடமாகிய,
பொதிக மலைக்கு, தலைவனாகிய, அகத்திய முனிவனின், பாட்டனாரும், பாற்கடலை
கடைந்தவனாகிய திருமாலின், மருகனாகிய குமரக் கடவுள், அப்போது உபதேசம் செய்ய,
தியக்கமுற்றிருந்தார், மிகவும் கேவலமானது, அன்னத்திலும் தாமரையிலும்
இருக்கும், பிரம்மன், பழமையான வேதத்தை, எதற்காக கற்றுக் கொண்டான்? ..



செயதுங்க பத்திரி போற்றும் பகீர திகரசெவ்வேற்
செயதுங்க பத்திரி சூடுங் குறத்தி திறத்ததண்டஞ்
செயதுங்க பத்திரி புத்திரி பாதத்தர் செல்வதென்பாற்
செயதுங்க பத்திரி யத்திரி யாதிரென் சிந்தையிலே.
20

கீர்த்தி உடைய, துங்கபாத்திரி நதி, வணங்குகின்ற, கங்கையின், கையில்
விளங்குபவனே, சிவந்த வேலாயுதத்தை உடைய வெற்றி வீரனே, சுரபுன்னை இலையை,
தரித்திருக்கும், வள்ளியின் மணாளனே, தண்டாயுதமும், உயர்ச்சியும்,
ஒழுக்கமும் உடைய, (மார்கண்டேயரை அழிக்கப் போனதால் எதிரியாகிய) எமனை,
அழியும்படி, கால்களால் உதைத்த சிவ பிரானின், மைந்தனே, தெற்கிலிருக்கும்
எமபுரத்திற்கு அழைத்துப் போவதும் யாவராலும் ஒதுக்கப்பட்டதும், ஆபத்துககள்
நிறைந்ததுமாகிய வழியில், எனது மனம் முரிந்து, உழலாமல், நீ இருக்க வேண்டும்,
என் உள்ளத்தில் ..



சிந்தா குலவ ரிசைப்பேரு முருநஞ் சீருமென்றோர்
சிந்தா குலவ ரிடத்தணு காதரு டீமதலை
சிந்தா குலவரி மாயூர வீர செகமளப்பச்
சிந்தா குலவரி மருக சூரனைச் செற்றவனே.
21

ஒருகாலும் அழியாது, நம்முடைய வம்ச பரம்பரையின் பெயரும், நாம்
வசிக்கும் இந்த நகரமும், நமது சிறப்பும், என்று பொய்யாக எண்ணுகின்ற,
அஞ்ஞானிகள் பால், நான் சேராதிருக்க நீ அருள வேண்டும், அக்னி தான்
உருவெடுத்த சேவலை, கொடியாக வைத்து, விளங்கும், பச்சை நிறமுள்ள, மயிலேறிய
சேவகனே, இவ்வுலகத்தை அளப்பதற்காக, வாமன அவதாரம் எடுத்த, திருமாலின் மருகனே,
சூரபத்மனை வென்றவனே. ..



செற்றை வரும்பழ னஞ்சோலை யிஞ்சி திகழ்வரைமேற்
செற்றை வரும்பழ நிக்கந்த தேற்றிடு நூற்றுவரைச்
செற்றை வரும்பழ நாடாள நாடிகண் சேய்விடுத்த
செற்றை வரும்பழ மாங்கூடு வேமத் தினத்தில்வந்தே.
22

செற்றை எனும் மீன் இனம், திகழ்கின்ற, வயல்கள், பூஞ்சோலை, மதில்கள்
(இவை), திகழ்கின்ற, மலையின் மேல், மேகக் கூட்டம், தவழ்கின்ற, பழநி மலை
ஆண்டவனே, எனக்கு அபயம் கொடுத்து காப்பாற்று, துரியோதனாதிகள் நூறு பேரையும்
அழித்து, பஞ்ச பாண்டவர்கள் ஐவரும், புராதனமான ராஜ்ஜியத்தை ஆளும்படி, மனதில்
நினைத்து (அப்படிச் செய்த கிருஷ்ணமூர்த்தியின்), ஒரு நேத்திரமாகிய
சூரியனின், மைந்தனாகிய எமன், அனுப்பிய, தூதர் கூட்டம், வருகின்ற, கிழ திசை
அடைந்த இந்த உடலாகிய கூடு, அக்னியில் தகிக்கப் படுகின்ற, அந்த கடைசி
நாளில், எழுந்தருளி, எனக்கு அபயம் கொடுத்து காப்பாற்று). ..



தினகர ரக்கர தங்கெடுத் தார்குரு தேசிகர்செந்
தினகர ரக்கர மாறுடை யார்தெய்வ வாரணத்தந்
தினகர ரக்கர சத்தி யின் றாகிலத் தேவர்நண்ப
தினகர ரக்கர தந்தீர்வ ரீர்வர் செகமெங்குமே.
23

பகன் பூடா என்னும் இரண்டு சூரியர்களுடைய, நேத்திரத்தையும், பல்லையும்,
அழித்த சிவபெருமானுக்கு, உபதேசம் செய்த ஞானாசிரியனும், செந்தில் பதியில்
இருப்பவரும், ஷடாக்ஷரப் பொருளாய் இருப்பவரும், தெய்வீகமான, வேதங்கள்
பூஜித்த, சர்ப்பம் போல் வடிவமுடைய திருச்செங்கோடு மலையை ஆள்பவரும் ஆகிய
கந்த பிரானின், அரத்தைப் போன்ற கூர்மையான, கை வேலாயுதம், இல்லை என்றால்,
தேவர்களின் சிறந்த அமராவதி நகரம், இல்லாமல் போயிருக்கும், வஞ்சனையை உடைய
அசுரர்கள், இறப்பைத் தவிர்த்திருப்பார்கள், உலகம் முழுவதையும்
நிர்மூலமாக்கி இருப்பார்கள். ..



செகம்புர வார்கிளை யெல்லா மருண்டு திரண்டுகொண்ட
செகம்புர வாதிங்ஙன் செய்ததென் னோமயல் செய்யவன்பு
செகம்புர வாச மெனத்துயில் வார்செப்ப பங்கபங்க
செகம்புர வாமுரல் செந்தூர வென்னத் தெளிதருமே.
24

இவ்வுலகத்திலும், ஊரிலும் உள்ள, ஒழுங்கான, உறவினர் எல்லாரும், பயந்து
கொண்டு, கூட்டமாக கூடிக்கொண்டு, ஆட்டினுடைய, தலையை, காப்பாற்றாது, இந்த
இடத்தில், வெறியாட நினைத்து அதைக் கொல்லக் கருதுவது என்ன விபா£தம்? (அதற்கு
பதிலாக) ஒருதலை காமமாக மயங்கி இருக்கும் இந்தப் பெண்களின் விரக தாபம்,
சிவந்த, வலிய, ஆதி சேடனை, சொந்த வாசஸ்தலமாக, நித்திரை செய்யும் மகாவிஷ்ணு,
புகழ்கின்ற, குற்றமில்லாதவனே, தாமரை வாவியில், சங்குகள், உரக்கமாக சப்தம்
செய்கின்ற, செந்தில் பதியானே, என்று அவன் நாமத்தைச் சொன்னால், அந்தக்
கணத்திலேயே மயக்கம் தீர்ந்து விடும். ..



தெளிதரு முத்தமிழ் வேதத்திற் றெய்வப் பலகையின்கீழ்
தெளிதரு முத்தமிழா நித்தர் சேவித்து நின்றதென்னாள்
தெளிதரு முத்தமிழ் தேய்நகை வாசகச் செல்விதினைத்
தெளிதரு முத்தமிழ் செவ்வே ளிருப்பச் செவிகுனித்தே.
25

தெளிவைத் தருகின்ற, இயல் இசை நாடகம் என்ற முத்தமிழிலும், நான்கு
மறைகளிலும், முதலில் விளங்கிய தெய்வீகமாகிய சங்கப் பலகையிலும் (மதுரையில்),
மாசற்ற, குற்றால மரத்தின் கீழினும் (தட்சிணாமூர்த்தியாக), முதன்மை
ஸ்தானத்தில் விளங்குகின்ற, அழிவில்லாத நித்தியராகிய சிவ பெருமான், பணிந்து
நிற்கக் காரணம் என்ன? நட்சத்திரம் போல, பிரகாசிக்கும், முத்தையும்,
தேவாமிர்தத்தையும், ஒத்த, பல்லையும், வார்த்தையையும் உடைய, மங்கையாகிய,
தினை தானியத்தை கொழிக்கின்ற வள்ளி, கொடுக்கும், முத்தத்தில், ஆனந்தத்தில்
அமிழ்ந்திருக்கும், முருகப் பெருமான், குருவாய் எழுந்தருளி உபதேசிக்க,
செவியைத் தாழ்த்திக் கொண்டு, பணிந்து நிற்கக் காரணம் என்ன?) ..



செவிக்குன்ற வாரண நல்கிசை பூட்டவன் சிந்தையம்பு
செவிக்குன்ற வாரண மஞ்சலென் றாண்டது நீண்டகன்மச்
செவிக்குன்ற வாரண வேலா யுதஞ்செற்ற துற்றனகட்
செவிக்குன்ற வாரண வள்ளி பொற்றாண்மற்றென் றேடுவதே.
26

நாகாசல வேலவனே, என்னுடைய காதுக்கு, உன்னுடைய நீங்காத, உரிமையை
(உனக்கும் எனக்கும் விடாத தொடர்பை ஏற்படுத்தி) கொடுக்கும், உன்னுடைய
கீர்த்தியை சேர்த்துக் கொள்ள, வலிய, என் இதயமாகிய, செந்தாமரையில்
இருக்கும், ஜீவாத்மாவாகிய பட்சி, இல்லற துன்பத்தைப் பார்த்து நடுங்கும்
பொழுது, உன்னுடைய கொடியாகிய சேவல், பயப்படாதே என்று சொல்லி, என்னை அடிமை
கொண்டது, மிகப் பெரிய, முன்பு செய்த வினையால் விளையும், ஜனனத்திற்கு
விதையாகிய, மலை போன்ற ஆசைக் கூட்டத்தை, போர் புரிவதில் வல்லமை உள்ள, உன்
திருக்கை வேல், தகர்த்து விட்டது, உன்னுடைய கிரியா சக்தியாகிய தேவயானை,
இச்சா சக்தியாகிய வள்ளி இவர்களின், சிறந்த திருவடிகள் என் சிரசின் கண்
வந்து அமர்ந்தன, இனி நான் சம்பாதிக்க வேண்டிய வேறென்ன இருக்கிறது. ..



தேடிக் கொடும்படை கைக்கூற் றடாதுளஞ் சேவின்மைமீன்
தேடிக் கொடும்படை கோமான் சிறைபட வேறுளபுத்
தேடிக் கொடும்படை யாவெகு நாட்டன் சிறைகளையுந்
தேடிக் கொடும்படை மின்கேள்வ னற்றுணை சிக்கெனவே.
27

நெஞ்சமே, பாசக் கயிற்றை, சேர்ந்திருக்கும் (பிடித்திருக்கும்), கையை
உடைய, எமன், இந்த உடலாகிய கூட்டை அழிப்பதற்கு முன், இப்போதே
சம்பாதித்துக்கொள், ரிஷபம், தனுஷ், ஆடு, மீனம், விருச்சிகம் (முதலிய எல்லா
ராசிகளையும்), எல்லா திசைகளிலும் உள்ள அண்டங்களையும் சிருஷ்டித்த, பிரம்ம
தேவனை, சிறையில் அடைத்து, வேறு தெய்வங்களின், பக்தியில், மாறிப்போகும்
மனப்பான்மையை, அடையாத, ஆயிரம் கண்களை உடைய இந்திரனின், சிறையை
நீக்கினவரும், நீரிலும் நெருப்பிலும் சமணர்களால் செலுத்தப்பட்ட, பனை
ஏடுகளையும், அவர்கள் செய்த பல கொடுர செயல்களையும், அழித்த, சுவாமியான,
தெய்வயானை நாயகனாகிய கந்தக்கடவுளின், நல்ல அனுக்கிரகத்தை, உறுதியாக,
(தேடிக்கொள் மனமே) ..



சிக்குறத் தத்தை வழங்கா திழந்து தியங்குவர்தே
சிக்குறத் தத்தை வடிவ
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum