HinduSamayam
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

HinduSamayam
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
HinduSamayam
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்
by vpoompalani March 24th 2016, 13:59

» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26

» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17

» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06

» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07

» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58

» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24

» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35

» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52

» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20

» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18

» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37

» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47

» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19

» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46

» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49

» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37

» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07

» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29

» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38

» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55

» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00

» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49

» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28

» திருத்தல யாத்திரை  ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51

» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33

» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46

» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28

» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13

» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29

» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15

» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10

» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29

» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54

» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38

» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42

» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32

» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01

» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20

» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00

தமிழர்களின் சிந்தனைகளம்
Related Posts Plugin for WordPress, Blogger...



அருணகிரிநாதர் நூல்கள் (Arunagirinathar Books)

Go down

அருணகிரிநாதர் நூல்கள் (Arunagirinathar Books) Empty அருணகிரிநாதர் நூல்கள் (Arunagirinathar Books)

Post by மாலதி December 13th 2011, 08:20

அருணகிரிநாதர் நூல்கள் (Arunagirinathar Books) Arunakiri






அருணகிரிநாதர், தமிழ் நாட்டில் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து
முருகக் கடவுள் மீது பாடல்கள் எழுதி புகழ் பெற்ற அருளாளர். இவர்
திருவண்ணாமலையில் பிறந்தார் என்றும், காவிரிப் பூம்பட்டினத்தில் பிறந்தார்
என்றும் சொல்கின்றனர். இவர் தமிழ் மொழி, வடமொழி ஆகிய இரு மொழிகளிலும்
புலமை பெற்றவர்.




அருணகிரிநாதர் நூல்கள் மொத்தம் 9. அவை :
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

அருணகிரிநாதர் நூல்கள் (Arunagirinathar Books) Empty Re: அருணகிரிநாதர் நூல்கள் (Arunagirinathar Books)

Post by மாலதி December 13th 2011, 08:21


கந்தர் அந்தாதி (Kanthar Anthathi)
கந்தர் அலங்காரம் (Kanthar Alankaram)
கந்தர் அனுபூதி (Kanthar Anupoothi)
சேவல் விருத்தம் (Seval Virutham)
திருஎழுகூற்றிருக்கை (Thiruvezhukoorrirukkai)
திருப்புகழ் (Thiruppugazh)
திருவகுப்பு (Thiruvaguppu)
மயில் விருத்தம் (Mayil Virutham)
வேல் விருத்தம் (Vel Virutham)

மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

அருணகிரிநாதர் நூல்கள் (Arunagirinathar Books) Empty கந்தர் அந்தாதி

Post by மாலதி December 13th 2011, 08:22


அருணகிரிநாதர் நூல்கள் (Arunagirinathar Books) Murugan








ஆறுமுகப் பெருமானுக்கு உகந்த ஆறு நூல்களுள் ஒன்று இந்த கந்தர் அந்தாதி.
இதிலுள்ள காப்புச் செய்யுள்களால் இது திருவண்ணாமலையிற் பாடப்பட்டிருத்தல்
வேண்டுமெனத் தோன்றுகிறது. நூலிலுள்ள நூறு செய்யுள்களின் முதலெழுத்துக்கள்
சி, சீ, செ, சே, தி, தீ, தெ, தே என்னும் எட்டெழுத்துக்களுள் அடங்குதல்
கவனிக்கத்தக்கது. இந்நூலைப் பாடியவர் அருணகிரி நாதர்.


பெரும்புலமை வாய்ந்த பாரதம் பாடிய வில்லிபுத்தூரார், தமது கல்விச்
செருக்கால், தம்மோடு வாது செய்து தோற்றவர்களின் காதைக் குறடு கொண்டு
குடைந்து தோண்டும் வழக்கத்தை கொண்டிருந்தார். அவருக்கும்
அருணகிரிநாதருக்கும் ஒருமுறை தருக்கம் உண்டாயிற்றென்றும், அப்போது
ஆசுகவியாக அருணகிரிநாதர் பாடிய நூல் தான் கந்தர் அந்தாதி என்றும்
அந்நூலுக்கு உரையை வில்லிபுத்தூரார் உடனுக்குடன் கூறி வந்தார் என்றும்
கூறுவர். அவ்வாறு கூறி வரும் போது 'திதத்த' எனத் தொடங்கும் 54வது
செய்யுளுக்கு வில்லிபுத்தூரார் உரை கூற இயலாது திகைத்து தோல்வியுற்றார்
என்றும் அதற்கு அருணகிரிநாதரே உரை அருளினார் என்றும் கூறுவர். பின்பு ஏனைய
பாடல்களுக்கு வில்லிபுத்தாரே உரை கூறினார் என்றும் கூறுவர். வில்லிபுத்தார்
உரை கூற முடியாமல் தோல்வியுற்றாலும் அருணகிரிநாதர் அவருடைய காதை அறுத்து
இழிவுபடுத்தாமல், இனி கருணைக்கு விரோதமான இவ்வழக்கத்தை விட்டுவிட வேண்டும்
என புத்தி சொல்லி அவர் கையிலிருந்த குறடை எறியச் செய்தார் என்றும் கூறுவர்.
இக்கருணையைக் கருதியும் 'கருணைக் கருணகிரி' என்னும் வழக்கு எழுந்தது.








காப்பு


வாரணத் தானை யயனைவிண் ணோரை மலர்க்கரத்து
வாரணத் தானை மகத்துவென் றோன்மைந் தனைத்துவச
வாரணத் தானைத் துணைநயந் தானை வயலருணை
வாரணத் தானைத் திறைகொண்ட யானையை வாழ்த்துவனே.

ஐராவதம் என்ற யானைக்கு தலைவனாகிய இந்திரனையும், பிரம்மனையும், ஏனைய
தேவர்களையும், தாமரை போன்ற கையில் பாஞ்ச சன்யம் என்கிற சங்கை ஏந்தி
இருக்கும் திருமாலையும், தட்ச யாகத்தில், வீரபத்திரன் சொருபத்தில் வந்து
ஜெயித்த சிவபெருமானின், குமாரனும், கோழிக்கொடியை உடைய குமாரக் கடவுளை,
சகோதரனாக பெற்றிருப்பவனும், வயல்கள் சூழ்ந்த அருணாசலத்தில், யானைமுகத்தை
உடைய கஜமுகாசுரனை, வெற்றி கொண்ட, யானை முகம் கொண்டவனும் ஆகிய கணபதியை,
வணங்குகிறேன்.




உண்ணா முலையுமை மைந்தா சரணம் பரருயிர்சேர்
உண்ணா முலையுமை மைந்தா சரண மருணைவெற்பாள்
உண்ணா முலையுமை மைந்தா சரணந் தனமுமொப்பில்
உண்ணா முலையுமை மைந்தா சரணஞ் சரணுனக்கே.

கன்றுகள் மிகுதியாக உண்ணுகின்ற, பசு இனங்கள் (வாழ்கின்ற), முல்லை
நிலத்திற்கு, தலைவனாகிய திருமாலின், கருமை நிறத்தையும், வலிமையும்,
உவர்ப்பாகிய குற்றத்தையும் (உடையதாய்), கோட்டையாக உள்ள, கடலில்
ஒளிந்திருக்கின்ற அசுரர்களின், ஜிவனை, மாய்த்து, தேவர்கள் உள்ளத்தில்
இருந்த, நாம் ... அச்சத்தை, போக்கி அழித்த, தெய்வமே, ஆட்டு வாகனத்தில்
ஏறும், உஷ்ணத்தை உடைய அக்னி தேவன், சேர்ந்திருக்கும், நாம் அடைக்கலம்
புகுவதற்கு இடமாகிய, அண்ணாமலையில் விளங்கி அருளும், மிகுதியாகப், பெருகும்,
கற்புடமைக்கும், அழகிய, மை ... அஞ்சனம் தீட்டிய, செவிகளை எட்டிப்
பிடிக்கும், விழிகளின், கிருபைக்கும், ஒப்புவமை இல்லாத, உண்ணாமுலை என்கிற
பெயர் கொண்ட பார்வதியின், குமாரனே, உன்னிடம் அடைக்கலம் புகுந்தேன்.




நூல்



திருவாவி னன்குடி பங்காள ரெண்முது சீருரைச
திருவாவி னன்குடி வானார் பரங்குன்று சீரலைவாய்
திருவாவி னன்குடி யேரகங் குன்றுதொ றாடல்சென்ற
திருவாவி னன்குடி கொண்டதண் கார்வரை செப்புமினே.
1

லட்சுமி தேவிக்கு நாயகனாகிய திருமாலும், நல்ல பெண் தெய்வமாகிய உமையை
இடப்பக்கத்தில் வைத்திருக்கும் சிவபெருமானும், மதிக்கும் விதத்தில்,
பழமையான வேதத்திற்கு, சிறந்த பொருளை விளக்கிய, சாமர்த்தியம் உடைய,
இளங்குமாரனாகிய முருகப்பெருமான், நிரந்தரமாக வாசம் செய்யும், வானளாவும்
திருப்பரங்குன்றம், சிறந்த செந்தில் பதி, பங்கயம் பொருந்திய பழநி, சுவாமி
மலை, அந்தக் கந்தக் கடவுள் திருவிளையாடல் செய்த பல குன்றுகள், நடந்து, பூமி
அதிர்கின்ற, யானைக் கூட்டங்கள், வாழ்கின்ற, குளிர்ந்த, கருமேகங்கள்
சூழ்ந்த பழமுதிர்சோலையையும், துதி செய்யுங்கள். ..




செப்புங் கவசங் கரபா லகதெய்வ வாவியம்பு
செப்புங் கவசங் கரிமரு காவெனச் சின்னமுன்னே
செப்புங் கவசம் பெறுவார் கணுந்தெய்வ யானைதனச்
செப்புங் கவசம் புனைபுயன் பாதமென் சென்னியதே.
2

ரிஷப வாகனத்தை உடைய, புனித முர்த்தி யாகிய, ஈசனின், குமாரனே,
தெய்வீகமாகிய, சரவணப் பொய்கையின் நீரில், செனித்த, தூயனே, சங்கை ஏந்தியுள்ள
திருமாலின் மருகனே, என்றெல்லாம், விருதுகள், முன்னதாகவே சொல்லி வர, அதைக்
கேட்டவுடன் அந்த இடத்திலேயே, தன்னிலை அழிந்து சானித்தியம் அடையும் பவனி
மாதர்களின், (அவசம் ஆவேசம்), பார்வையும், தெய்வயானையின் மார்பாகிய
கவசத்தையும், சட்டையாக தரித்துள்ள, தோள்களை உடைய முருகப் பெருமான்,
திருவடிகள், என் தலையின் மீது வீற்றிருந்தன. ..




சென்னிய மோகந் தவிராமு தோகண் டிகிரிவெண்ணெய்ச்
சென்னிய மோகம் படவூ தெனத்தொனி செய்தபஞ்ச
சென்னிய மோகந் தரம்புனத் தேன்புணர் தேவைத்தெய்வச்
சென்னிய மோகம் பணிபணி யேரகத் தேமொழிக்கே.
3

சிரசின் மேல், கங்கா ஜலத்தின், ஆரவாரம், நீங்காத (சிவபெருமான் உண்ட),
நஞ்சமோ, இந்தத் தலைவியின் கண்? சக்கரம் ஏந்தி, நவநீதத்தைத் திருடிய,
புல்லாங்குழல் இசைக்கும் (திருமால்), தேவர்கள் எல்லாம் மயக்கம் அடையும்படி,
ஊது என்று கட்டளை இட்டு, சப்தத்தைக் கிளப்பிய, இவளின் (இந்தத் தலைவியின்)
கழுத்து சங்கு போன்று இருக்கிறது, வள்ளிபுனத்தில் வாழும் வள்ளியைக் கலந்த,
குமரக் கடவுளை, தெய்வீகமாகிய சோழ ராஜன், அதிக ஆசையுடன் வணங்கி, திருப்பணி
செய்த, சுவாமி மலையில் வாழும் தேன் போன்ற மொழியை உடைய இந்தப் பேண்ணுக்கு.
..




தேமொழி யத்தம் பெறவோந் தனக்கன்று சேணுலகத்
தேமொழி யத்தம் சினங்காட் டவுணரைச் சேமகரத்
தேமொழி யத்தம் புயமவர் சூடிகை சிந்தவென்ற
தேமொழி யத்தம் பதினா லுலகுமந் தித்ததொன்றே.
4

தேன் போன்ற மொழியை உடைய பார்வதியின், பாதியாகிய சிவபெருமான்,
பெற்றுக்கொள்ளும்படி, பிரணவத்திற்கு, முன்பு, தேவலோகத்தின், நலனெல்லாம்
அழியும்படி, தம்முடைய கோபத்தைக் காட்டிய, சூரபத்மாதிகளை, ஆண் சுராக்கள்
வாழும், இடமாகிய சமுத்திரத்தில், கணுக்களை உடைய, கரங்களும், தோள்களும்,
அவர்களின் சிரங்களும், பூமியில் விழும்படி, அவர்களை ஜெயித்து அழித்த,
குமரக் கடவுள், உபதேசித்த, பொருள், ஈரேழு பதினாலுலகமும் ஒரே தன்மையாக
பொருந்தி இருந்தது. ..




தித்தவித் தார மனித்தரைத் தேவர் வணங்கமுன்போ
தித்தவித் தாரகை மைந்தர்செந் தூர்க்கந்தர் சிந்துரவா
தித்தவித் தார முடையா ரருள்வெள்ளந் தேக்கியன்பு
தித்தவித் தாரந் தனிவீ டுறத்துக்கச் செவ்வனவே.
5

தித்த என்ற தாள ஜதி விரிவுகளை, தன்னுடைய நடனத்தின் மூலம், அழிவில்லாத
நடராஜப்பெருமானுக்கு, மற்ற தேவர்கள் எல்லாம் வணங்கும்படியாக,
முன்னொருகாலத்தில் சுவாமி மலையில், உபதேசம் செய்தவரும், விஷேசமான,
கிருத்திகை மாதர்களின் புதல்வரும், செந்தில் ஆண்டவரும், நெற்றிப் பொட்டை,
சூரியனைப் போல் ஒளி வீசும்படி தரித்துள்ள, அற்புதமான இரண்டு தேவிமார்களை
உடைய கந்தப் பெருமான், தன்னுடைய க்ருபா நதியை உள்ளத்தில் நிரப்பி, பக்தியை
மூளும்படி செய்து, ஒப்பற்ற மோட்ச வீட்டை நான் அடையும்படி, பல துன்பங்களைத்
தருகின்ற, பிறப்பாகிய, அக்னியை, அவியச் செய்தார். ..




செவ்வந்தி நீலப் புயமுரு காபத்தர் சித்தமெய்யிற்
செவ்வந்தி நீலத்தை யுற்றருள் வாய் திங்கட் சேய்புனைந்த
செவ்வந்தி நீலத் தொருபாகர் போன்ற தினிச்சிந்தியார்
செவ்வந்தி நீலத்தி னீடுமுற் றாத திமிரமுமே.
6

சாமந்தி மாலையையும், நீலோற்பல மாலையையும் புனைந்திருக்கும், புயங்களை
யுடைய முருகனே, உன் அடியார்களுடைய, இதயமாகிய உண்மை நிலையில், மிகுதியாக
பொருந்தி இருக்கும், நீ, க்ருபை கூர்ந்து, அந்த மாலையை நீ கொடுத்து அருள
வேண்டும், இளம் பிறையை, அணிந்திருக்கும், சிவந்த மாலைக்காலம், பார்வதி
பங்கராகிய பரமசிவனை, போல் விளங்குகிறது, இனிமேல் வரப்போகிறது, உன்னைத்
தியானிக்காதவர்கள் அடையும், ஜெனனமாகிய பிறப்பு, வருத்தத்தை விளைவிக்கும்,
அஞ்ஞான இருளைப் போன்று, நீடித்து நிற்கும், தொலையாத, இராக்காலம். ..




திமிரத் திமிரக் கதரங்க கோபசெவ் வேலகைவேல்
திமிரத் திமிரக் ககுலாந் தகவரைத் தேன்பெருகுந்
திமிரத் திமிரக் தனையாவி யாளுமென் சேவகனே
திமிரத் திமிரக் கனலாய சந்தன சீதளமே.
7

இருள் நிறைந்ததும், திமிங்கலத்திற்கு வாசஸ்தலமாக இருப்பதும் ஆன,
சமுத்திரத்தை, கோபித்த, சிவந்த வேலாயுதத்தை உடையவனே, கையிலுள்ள
வேலாயுதமும், மழுங்கும்படியாக குற்றிய, ராட்ஸச குலத்திற்கு எமன் போன்றவனே,
குற்றிய, மலையிலிருந்து தேன் ஆறு போல் பெருகும், காட்டு ஆற்றின் வளப்பத்தை
உடைய வள்ளி நாயகியே, யானையால் வளர்க்கப்பட்ட தேவசேனா நாயகியே, மிகவும்,
என்னை அணைத்து எனது ஆவியை காப்பாற்ற வேண்டும், என்று சல்லாபம் பேசுகின்ற,
வீரனே, பூ சப் பூசப், நெருப்பைப் போல தகிக்கின்றது, சந்தனம் முதலிய
குளிர்ந்த வஸ்துக்கள் எல்லாம். ..




சீதளங் கோடு புயங்கைகொண் டார்தந் திருமருக
சீதளங் கோடு முடியாளர் சேய்தனக் கேதுளதோ
சீதளங் கோடு னிதருமென் பார்தொழுந் தேவிபெறுஞ்
சீதளங் கோடு கொடிவேன் மயூரஞ் சிலையரசே.
8

மகாலட்சுமியின், மார்பகத்தையும், சங்கையும், திருத்தோளிலும்,
திருக்கரத்திலும், தரித்துள்ள திருமாலின் மருகனும், குளிர்ந்த சந்திரனின்,
அழகிய கோணல் வடிவமான பிறையை (தரிக்கும்), சிரசை உடைய பரமசிவனின்,
குமாரனுமாகிய முருகனுக்கு, என்ன சொத்து உளது என்று கேட்டால்,
அருவெறுக்கத்தக்க, செல்வம், குற்றத்தையும், துன்பத்தையும், கொடுக்கும்,
என்று கருதி அதை விட்டு நீங்கிய ஞானிகள், வணங்கும், வள்ளி நாயகி மூலம்,
கிடைத்த சீர்வரிசைகள், ஊது கொம்பும், சேவல் கொடியும், வேலாயுதமும், மயில்
வாகனமும், மலைகளை ஆளும் உரிமையுமே. ..



சிலைமத னம்படு மாறெழுஞ் சேய்மயி லுச்சிட்டவெச்
சிலைமத னம்படு சிந்துவை யிந்துவைச் செய்வதென்யான்
சிலைமத னம்படு காட்டுவர் கேளிருஞ் செங்கழுநீர்ச்
சிலைமத னம்படு தாமரை வாவி திரள்சங்கமே.
9

நீலோற்பலகிரியாகிய திருத்தணி மலையில் காணப்படும், தேனும், அன்னப்
பட்சிகளும் நிறைந்திருக்கும், தாமரைத் தடாகத்தில் வசிக்கும், சங்கினங்களே,
வில்லை உடைய மன்மதனின், பாணம், என்னைக் கொல்வது போல் தாக்குகிறது, குமாரக்
கடவுளின் மயில் வாகனத்தின், எச்சிலாகிய சரப்பத்தின், எச்சிலாகிய தென்றல்
காற்றையும், ஒருமுறை கடையப்பட்ட கடலையும், நிலவையும், நான் என்ன செய்து
கடப்பேன்? ஆர்பாட்டத்துடன் கோபத்தை, சுற்றத்தார் எல்லோரும், என்மேல்
காட்டுகிறார்கள். ..



திரளக் கரக்கரை வென்கண்ட வேலன் றிசைமுகன்மால்
திரளக் கரக்கரை யான்பாட நாடுதல் செய்யசங்க
திரளக் கரக்கரை காண்பான்கைந் நீத்திசை வார்பனிக்க
திரளக் கரக்கரை வானீட்டு மைந்தர்புந் திக்கொக்குமே.
10

ஸ்திரமான, லட்சக் கணக்கான, அசுரர்களை, வெற்றி கொண்ட, வேலாயுதனை,
பிரம்மாவுக்கும், திருமாலுக்கும், ஆயிரம் கண்ணுடைய இந்திரனுக்கும்,
ருத்ராட்சம் அணிந்துள்ள பரமசிவனுக்கும், இறைவனாகிய கந்தக் கடவுளை, நான்
புகழ்ந்து பாட உத்தேசிப்பது, சிவந்த சங்குகள் முழங்குகின்ற, கடலை, கடந்து
செல்பவன், நீந்திப் போகும் புத்திக்கும், சந்திரனை, பிடிக்கும் பொருட்டு,
கையளவை, ஆகாசத்தில் நீட்டும், சிறு பிள்ளையின், புத்தியைப் போலும்
இருக்கிறது. ..



திக்கத்திக் கோடு படிபுடைச் சூதத் தெறிபடபத்
திக்கத்திக் கோடு கடடக் கடறடி சேப்படைச்சத்
திக்கத்திக் கோடு துறைத்திறத் தற்ற குறக்குறச்சத்
திக்கத்திக் கோடு பறித்துக்கொ டாதி சிறைபிறப்பே.
11

நாலு திசைகளிலும், எல்லோரும் திகைக்கும்படி பரந்து இருக்கும்,
பூமியின் கண், நீக்கி அருள்வாயாக, மாமரமாய் நின்ற சூரபத்மனை, விளங்கும்படி,
ஆயிரம் பணா மகுடங்களை உடைய ஆதிசேஷனின் தலையின் மேல், இந்த சங்குகள்
எல்லாம், ஊறும்படி, பெரிய விசாலமான, சமுத்திரத்தின் கண், அடக்கி அழித்த,
சிவந்த வேலாயுதப் படையை உடையவனே, கதறி, மாறுபட்ட, பர சமய கோட்பாடுகளில்,
நீங்கி நிற்பவனே, (உலையில்) குற்றுவதற்கு, குற நாயகியாகிய வள்ளி நாயகிக்கு,
யானையின் தந்தத்தை, பறித்துக் கொடுத்த, ஆதி மூலமே, பஞ்சேந்திரியங்களால்
கட்டுண்ட சிறை போன்ற என்னுடைய ஜனனத்தை, நீக்கி அருள்வாய்). ..



சிறைவர வாமையி லேறிச் சிகரி தகரவந்து
சிறைவர வாமையில் கூப்பிடத் தானவர் சேனைகொண்ட
சிறைவர வாமையில் வாங்கிதன் றேங்கழல் யாங்கழலாச்
சிறைவர வாமையி னெஞ்சுட னேநின்று தேங்குவதே.
12

தோகையும், அடியார்களுக்கு அருளும் வரப்பிரசாதத்தையும் உடைய, தாவிச்
செல்லும் மயிலில் ஏறி, க்ரவுஞ்ச கிரி, தூளாகும்படி எழுந்தருளி, கரையால்,
சூழப்பட்டதும், ஆமைகளுக்கு இருப்பிடமானதும் ஆன கடல், ஓ என்று ஓலமிட,
அரக்கர்களின் சேனையால், தள்ளப்பட்ட, தேவர்களின் சிறை வாசம் நீங்க, தகுந்த,
ஐவேலை, பிரயோகித்த முருகப்பெருமானின், இனிய திருவடிகளை, நான் அணுகாமல்
பிரிந்திருப்பதினால், அல்பமாகிய, பஞ்சேந்திரியங்களின், ஆசையாகிய, இருளில்,
என்னுடைய இருதயம், சேர்ந்து நின்று (இருளொடு), திகைக்கின்றது. ..



தேங்கா வனமும் மதகரி வேந்துடன் சேர்ந்தவிண்ணோர்
தேங்கா வனமுனை யவ்வேற் பணியெனுஞ் சேயிடமேல்
தேங்கா வனமுந் தளர்நடை யாயஞ்சல் செண்பகப்பூந்
தேங்கா வனமுங் கழுநீ ரிலஞ்சியுஞ் செந்திலுமே.
13

நிறைந்திருக்கும், பசுக் கூட்டங்களை மேய்க்கும் திருமாலையும்,
மும்மதங்களையும் பொழியும் ஐராவதத்திற்கு தலைவனான, இந்திரனையும், அவருடன்
சேர்ந்திருக்கும், தேவர்களையும், அவர்களுக்கு இருப்பிடமான அமராவதியையும்,
ரட்சிப்பது, நம்முடைய, கூரிய வேலாயுதத்தின், தொழிலாகும், என்று சொல்லி
(அதைக் கட்டளை இட்ட) முருகனின், வாசஸ்தலம், இதோ இருக்கிறது, திகைத்து, தன்
நடையை தோற்கடிக்கிறது என்று அன்னப் பட்சியும், தளர்ந்து போகும், நடையை
உடையவளே, பயப்படாதே (அவை யாவன), செண்பக மலரால், விளங்கும், இனிய,
பூஞ்சோலையும், செங்கழுநீர் தடாகமும், திருச்செந்தூர் தலமுமேயாகும். ..



செந்தி லகத்தலர் வாணுதல் வேடிச் சிமுகபங்க
செந்தி லகத்தலர் துண்டமென் னாநின்ற சேயசங்க
செந்தி லகத்தலர் ராசிதந் தானைச் சிறையிட்டவேற்
செந்தி லகத்தலர் தூற்றிடுங் கேடு திவாகருளே.
14

சிவந்த குங்கும பொட்டு இட்டு, விளங்கும், ஒளி வீசும் நெற்றியை உடைய
வள்ளி நாயகியின், வதனம், தாமரை போன்றது, எள்ளின் பூ போன்றது, நாசி, என்று
அவளின் அழகை நலம் புனைந்து உரைத்த, குமரக் கடவுளே, ஜீவராசி கூட்டங்கள்
வசிப்பதற்கு, அண்ட கோடிகளை, சிருஷ்டித்த பிரமனை, சிறையில் அடைத்த,
வேலாயுதத்தை உடைய, செந்தில் ஆண்டவனே, அகங்காரத்தினால், என்னை வசைகள்
பேசுவார்கள், சுற்றத்தார்கள் (அதனால்), எல்லோராலும் துதிக்கப்படும், உன்
புயத்தை, எனக்கு தந்தருள வேண்டும் ..



திவாகர கன்ன கொடைப்பாரி யென்றுழ றீனவல்லீர்
திவாகர கன்ன புரக்குழை வல்லி செருக்குரவந்
திவாகர கன்ன சுகவா சகதிறல் வேல்கொடென்புந்
திவாகர கன்ன மறலி யிடாதுயிர்ச் சேவலுக்கே.
15

பகல் பொழுதில் தானம் கொடுக்கும், கையை உடையை கர்ணனே, பாரியைப் போன்ற
கொடை வள்ளலே, என்றெல்லாம் பலரிடமும் பேசி, என்னை உழல வைக்கும், வறுமையாகிய,
இருளை, பிளக்கக்கூடிய, ஞான சூரியனே, கர்ணபூரம் என்ற ஆபரணத்தைத்
தரித்திருக்கும், வள்ளி நாயகி, பெருமிதத்துடன் (தழுவும்), மார்பை உடையவனே,
மாலைப் பொழுதின் நிறத்தை உடைய, சிவபெருமானின், காதில், இனிமையாக பிரணவத்தை
உபதேசம் செய்தவனே, வலிய வேலாயுதத்தை ஏந்தி வந்து, என்னுடைய இருதயத்தில் நீ
வீற்றருள வேண்டும், ஒளிந்து, எமன் கொள்ளை கொள்ளாதபடி, உயிரைக்
காப்பாற்றுவதற்காக ..



சேவற் கொடியும் பனிசாந் தகனுந் திருக்கரத்துச்
சேவற் கொடியுங் கொடியகண் டாய்தினை சூழ்புனத்துச்
சேவற் கொடியுந் திவளத் தவளுந்தந் திக்களபச்
சேவற் கொடியு முடையாய் பிரியினுஞ் சேரினுமே.
16

ரிஷப வாகனத்தை உடைய பரமசிவானல், பல் தகர்க்கப்பட்ட, (நிசி + அந்தகன்)
பூஷா என்னும் சூரியனும், உன் திருக்கையில் ஏந்தி இருக்கும், கொடியாகிய
சேவலும், பொல்லாதவைகளாய் இருக்கின்றன, தினைப் பயிர் நன்றாக வளர்ந்துள்ள
கொல்லையை, காவல் புரியும், நீண்ட, காட்டாற்றின் வளப்பத்தை
அநுபவிப்பவளுமாகிய (வள்ளியையும்), ஐராவதத்தால் வளர்க்கப்பட்ட, சந்தன சேறு
பூசியிருக்கும், சிவந்த, சொக்கட்டான் கருவி போன்ற மார்பகமும், கொடி போன்ற
இடையையும் உடைய (தேவசேனையையும்), இரண்டு பக்கங்களிலும் சேர்த்துக்கொண்டு
இருப்பவனே, உன்னைப் பிரிந்திருக்கும் போதும், உன்னிடம் கலந்திருக்கும்
போதும், கொடியவைகளாய் இருக்கின்றன). ..



சேரிக் குவடு மொழிவிழி யாடனச் செவ்விகுறச்
சேரிக் குவடு விளைந்ததன் றேநன்று தெண்டிரைநீர்
சேரிக் குவடு கடைநாளி லுஞ்சிதை வற்றசெவ்வேள்
சேரிக் குவடு புடைசூழ் புனத்திற் றினைவிளைவே.
17

இசைந்த, கரும்பையும், மாவடுவையும் (ஒத்த), பேச்சையும், கண்களையும்
உடைய (வள்ளி நாயாகியின்), மார்பின் பக்குவ நிலையால், குறவர் குடிலுக்கு,
அவளைக் களவு மணம் செய்து கொண்டான் முருகன் என்ற அபவாதம் ஏற்பட்டது, அந்தக்
காலத்தில் தானே, நன்றாக விளங்கியது, தெள்ளிய அலைகளை உடைய சமுத்திர ஜலம்,
ஒன்று சேர்ந்து, பூமியை, அழிக்கின்ற, பிரளய காலத்திலும், அழிவில்லாத,
முருகவேளுடைய, வடசேரி தென்சேரியில், மாலையில், பக்கவாக்கில், வயலில்,
தினைப்பயிரின் விளைவானது ..



தினைவேத் தியன்புசெய் வேந்தன் பதாம்புயத் திற்பத்திபுந்
தினைவேத் தியமுகந் தேற்றினர் மாற்றினர் பாற்றினந்தீத்
தினைவேத் தியர்நெறி செல்லாத விந்தியத் தித்தியினத்
தினைவேத் தியங்குயிர் கூற்றாரி லூசிடுஞ் சீயுடம்பே.
18

தினைப்புனத்திற்கு இறைவியாகிய வள்ளி, காதல் புரிகின்ற, முருகக்
கடவுளின், திருவடித் தாமரையில், பத்தி செய்கின்ற உள்ளத்தையும்,
புத்தியையும், அவருக்கு உரிய நைவேத்தியமாக, விருப்பமுடன் சமர்பித்த
அடியார்கள், உண்மையாகவே மாற்றி விட்டார்கள், பருந்துக் கூட்டங்களும்,
அக்னியும், சாப்பிடுவதும், அழகிய அறிஞர்களால் உணர்த்தப்பட்ட, மார்க்கத்தில்
ஒழுகாததும், பஞ்சேந்திரியங்களின் வசப்பட்டதும், தின் பண்ட வகைகளின்,
கழிவாகிய மலஜலமாதிகளை, ஏற்றுக்கொண்டிருப்பதும், உள் நின்று இயங்குகின்ற
பிராணனை, எமன் உண்டுவிட்டால், க்ஷண நேரத்தில் ஊசிப்போகும்,
அருவெருக்கத்தக்க இந்த உடம்பை, மாற்றி விட்டனர்). ..



சீயனம் போதி யெனவாய் புதைத்துச் செவிதரத்தோல்
சீயனம் போதி யமலையிற் றாதை சிறுமுநிவன்
சீயனம் போதி கடைந்தான் மருகன்செப் பத்திகைத்தார்
சீயனம் போதி லரனா திருக்கென் செயக்கற்றதே.
19

பார்வதியின் பாகராகிய சிவபெருமான், நமக்கு, உபதேசம் செய்வாய் என்று
கேட்டு, பணிவுடன் வாயை மூடிக்கொண்டு, காதால் கேட்க, யானைகளும்,
சிங்கங்களும், தஞ்சமாக உறைகின்றதும், கல்வி ஒழுக்கத்திற்கு இருப்பிடமாகிய,
பொதிக மலைக்கு, தலைவனாகிய, அகத்திய முனிவனின், பாட்டனாரும், பாற்கடலை
கடைந்தவனாகிய திருமாலின், மருகனாகிய குமரக் கடவுள், அப்போது உபதேசம் செய்ய,
தியக்கமுற்றிருந்தார், மிகவும் கேவலமானது, அன்னத்திலும் தாமரையிலும்
இருக்கும், பிரம்மன், பழமையான வேதத்தை, எதற்காக கற்றுக் கொண்டான்? ..



செயதுங்க பத்திரி போற்றும் பகீர திகரசெவ்வேற்
செயதுங்க பத்திரி சூடுங் குறத்தி திறத்ததண்டஞ்
செயதுங்க பத்திரி புத்திரி பாதத்தர் செல்வதென்பாற்
செயதுங்க பத்திரி யத்திரி யாதிரென் சிந்தையிலே.
20

கீர்த்தி உடைய, துங்கபாத்திரி நதி, வணங்குகின்ற, கங்கையின், கையில்
விளங்குபவனே, சிவந்த வேலாயுதத்தை உடைய வெற்றி வீரனே, சுரபுன்னை இலையை,
தரித்திருக்கும், வள்ளியின் மணாளனே, தண்டாயுதமும், உயர்ச்சியும்,
ஒழுக்கமும் உடைய, (மார்கண்டேயரை அழிக்கப் போனதால் எதிரியாகிய) எமனை,
அழியும்படி, கால்களால் உதைத்த சிவ பிரானின், மைந்தனே, தெற்கிலிருக்கும்
எமபுரத்திற்கு அழைத்துப் போவதும் யாவராலும் ஒதுக்கப்பட்டதும், ஆபத்துககள்
நிறைந்ததுமாகிய வழியில், எனது மனம் முரிந்து, உழலாமல், நீ இருக்க வேண்டும்,
என் உள்ளத்தில் ..



சிந்தா குலவ ரிசைப்பேரு முருநஞ் சீருமென்றோர்
சிந்தா குலவ ரிடத்தணு காதரு டீமதலை
சிந்தா குலவரி மாயூர வீர செகமளப்பச்
சிந்தா குலவரி மருக சூரனைச் செற்றவனே.
21

ஒருகாலும் அழியாது, நம்முடைய வம்ச பரம்பரையின் பெயரும், நாம்
வசிக்கும் இந்த நகரமும், நமது சிறப்பும், என்று பொய்யாக எண்ணுகின்ற,
அஞ்ஞானிகள் பால், நான் சேராதிருக்க நீ அருள வேண்டும், அக்னி தான்
உருவெடுத்த சேவலை, கொடியாக வைத்து, விளங்கும், பச்சை நிறமுள்ள, மயிலேறிய
சேவகனே, இவ்வுலகத்தை அளப்பதற்காக, வாமன அவதாரம் எடுத்த, திருமாலின் மருகனே,
சூரபத்மனை வென்றவனே. ..



செற்றை வரும்பழ னஞ்சோலை யிஞ்சி திகழ்வரைமேற்
செற்றை வரும்பழ நிக்கந்த தேற்றிடு நூற்றுவரைச்
செற்றை வரும்பழ நாடாள நாடிகண் சேய்விடுத்த
செற்றை வரும்பழ மாங்கூடு வேமத் தினத்தில்வந்தே.
22

செற்றை எனும் மீன் இனம், திகழ்கின்ற, வயல்கள், பூஞ்சோலை, மதில்கள்
(இவை), திகழ்கின்ற, மலையின் மேல், மேகக் கூட்டம், தவழ்கின்ற, பழநி மலை
ஆண்டவனே, எனக்கு அபயம் கொடுத்து காப்பாற்று, துரியோதனாதிகள் நூறு பேரையும்
அழித்து, பஞ்ச பாண்டவர்கள் ஐவரும், புராதனமான ராஜ்ஜியத்தை ஆளும்படி, மனதில்
நினைத்து (அப்படிச் செய்த கிருஷ்ணமூர்த்தியின்), ஒரு நேத்திரமாகிய
சூரியனின், மைந்தனாகிய எமன், அனுப்பிய, தூதர் கூட்டம், வருகின்ற, கிழ திசை
அடைந்த இந்த உடலாகிய கூடு, அக்னியில் தகிக்கப் படுகின்ற, அந்த கடைசி
நாளில், எழுந்தருளி, எனக்கு அபயம் கொடுத்து காப்பாற்று). ..



தினகர ரக்கர தங்கெடுத் தார்குரு தேசிகர்செந்
தினகர ரக்கர மாறுடை யார்தெய்வ வாரணத்தந்
தினகர ரக்கர சத்தி யின் றாகிலத் தேவர்நண்ப
தினகர ரக்கர தந்தீர்வ ரீர்வர் செகமெங்குமே.
23

பகன் பூடா என்னும் இரண்டு சூரியர்களுடைய, நேத்திரத்தையும், பல்லையும்,
அழித்த சிவபெருமானுக்கு, உபதேசம் செய்த ஞானாசிரியனும், செந்தில் பதியில்
இருப்பவரும், ஷடாக்ஷரப் பொருளாய் இருப்பவரும், தெய்வீகமான, வேதங்கள்
பூஜித்த, சர்ப்பம் போல் வடிவமுடைய திருச்செங்கோடு மலையை ஆள்பவரும் ஆகிய
கந்த பிரானின், அரத்தைப் போன்ற கூர்மையான, கை வேலாயுதம், இல்லை என்றால்,
தேவர்களின் சிறந்த அமராவதி நகரம், இல்லாமல் போயிருக்கும், வஞ்சனையை உடைய
அசுரர்கள், இறப்பைத் தவிர்த்திருப்பார்கள், உலகம் முழுவதையும்
நிர்மூலமாக்கி இருப்பார்கள். ..



செகம்புர வார்கிளை யெல்லா மருண்டு திரண்டுகொண்ட
செகம்புர வாதிங்ஙன் செய்ததென் னோமயல் செய்யவன்பு
செகம்புர வாச மெனத்துயில் வார்செப்ப பங்கபங்க
செகம்புர வாமுரல் செந்தூர வென்னத் தெளிதருமே.
24

இவ்வுலகத்திலும், ஊரிலும் உள்ள, ஒழுங்கான, உறவினர் எல்லாரும், பயந்து
கொண்டு, கூட்டமாக கூடிக்கொண்டு, ஆட்டினுடைய, தலையை, காப்பாற்றாது, இந்த
இடத்தில், வெறியாட நினைத்து அதைக் கொல்லக் கருதுவது என்ன விபா£தம்? (அதற்கு
பதிலாக) ஒருதலை காமமாக மயங்கி இருக்கும் இந்தப் பெண்களின் விரக தாபம்,
சிவந்த, வலிய, ஆதி சேடனை, சொந்த வாசஸ்தலமாக, நித்திரை செய்யும் மகாவிஷ்ணு,
புகழ்கின்ற, குற்றமில்லாதவனே, தாமரை வாவியில், சங்குகள், உரக்கமாக சப்தம்
செய்கின்ற, செந்தில் பதியானே, என்று அவன் நாமத்தைச் சொன்னால், அந்தக்
கணத்திலேயே மயக்கம் தீர்ந்து விடும். ..



தெளிதரு முத்தமிழ் வேதத்திற் றெய்வப் பலகையின்கீழ்
தெளிதரு முத்தமிழா நித்தர் சேவித்து நின்றதென்னாள்
தெளிதரு முத்தமிழ் தேய்நகை வாசகச் செல்விதினைத்
தெளிதரு முத்தமிழ் செவ்வே ளிருப்பச் செவிகுனித்தே.
25

தெளிவைத் தருகின்ற, இயல் இசை நாடகம் என்ற முத்தமிழிலும், நான்கு
மறைகளிலும், முதலில் விளங்கிய தெய்வீகமாகிய சங்கப் பலகையிலும் (மதுரையில்),
மாசற்ற, குற்றால மரத்தின் கீழினும் (தட்சிணாமூர்த்தியாக), முதன்மை
ஸ்தானத்தில் விளங்குகின்ற, அழிவில்லாத நித்தியராகிய சிவ பெருமான், பணிந்து
நிற்கக் காரணம் என்ன? நட்சத்திரம் போல, பிரகாசிக்கும், முத்தையும்,
தேவாமிர்தத்தையும், ஒத்த, பல்லையும், வார்த்தையையும் உடைய, மங்கையாகிய,
தினை தானியத்தை கொழிக்கின்ற வள்ளி, கொடுக்கும், முத்தத்தில், ஆனந்தத்தில்
அமிழ்ந்திருக்கும், முருகப் பெருமான், குருவாய் எழுந்தருளி உபதேசிக்க,
செவியைத் தாழ்த்திக் கொண்டு, பணிந்து நிற்கக் காரணம் என்ன?) ..
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

அருணகிரிநாதர் நூல்கள் (Arunagirinathar Books) Empty Re: அருணகிரிநாதர் நூல்கள் (Arunagirinathar Books)

Post by மாலதி December 13th 2011, 08:23

செவிக்குன்ற வாரண நல்கிசை பூட்டவன் சிந்தையம்பு
செவிக்குன்ற வாரண மஞ்சலென் றாண்டது நீண்டகன்மச்
செவிக்குன்ற வாரண வேலா யுதஞ்செற்ற துற்றனகட்
செவிக்குன்ற வாரண வள்ளி பொற்றாண்மற்றென் றேடுவதே.
26

நாகாசல வேலவனே, என்னுடைய காதுக்கு, உன்னுடைய நீங்காத, உரிமையை
(உனக்கும் எனக்கும் விடாத தொடர்பை ஏற்படுத்தி) கொடுக்கும், உன்னுடைய
கீர்த்தியை சேர்த்துக் கொள்ள, வலிய, என் இதயமாகிய, செந்தாமரையில்
இருக்கும், ஜீவாத்மாவாகிய பட்சி, இல்லற துன்பத்தைப் பார்த்து நடுங்கும்
பொழுது, உன்னுடைய கொடியாகிய சேவல், பயப்படாதே என்று சொல்லி, என்னை அடிமை
கொண்டது, மிகப் பெரிய, முன்பு செய்த வினையால் விளையும், ஜனனத்திற்கு
விதையாகிய, மலை போன்ற ஆசைக் கூட்டத்தை, போர் புரிவதில் வல்லமை உள்ள, உன்
திருக்கை வேல், தகர்த்து விட்டது, உன்னுடைய கிரியா சக்தியாகிய தேவயானை,
இச்சா சக்தியாகிய வள்ளி இவர்களின், சிறந்த திருவடிகள் என் சிரசின் கண்
வந்து அமர்ந்தன, இனி நான் சம்பாதிக்க வேண்டிய வேறென்ன இருக்கிறது. ..



தேடிக் கொடும்படை கைக்கூற் றடாதுளஞ் சேவின்மைமீன்
தேடிக் கொடும்படை கோமான் சிறைபட வேறுளபுத்
தேடிக் கொடும்படை யாவெகு நாட்டன் சிறைகளையுந்
தேடிக் கொடும்படை மின்கேள்வ னற்றுணை சிக்கெனவே.
27

நெஞ்சமே, பாசக் கயிற்றை, சேர்ந்திருக்கும் (பிடித்திருக்கும்), கையை
உடைய, எமன், இந்த உடலாகிய கூட்டை அழிப்பதற்கு முன், இப்போதே
சம்பாதித்துக்கொள், ரிஷபம், தனுஷ், ஆடு, மீனம், விருச்சிகம் (முதலிய எல்லா
ராசிகளையும்), எல்லா திசைகளிலும் உள்ள அண்டங்களையும் சிருஷ்டித்த, பிரம்ம
தேவனை, சிறையில் அடைத்து, வேறு தெய்வங்களின், பக்தியில், மாறிப்போகும்
மனப்பான்மையை, அடையாத, ஆயிரம் கண்களை உடைய இந்திரனின், சிறையை
நீக்கினவரும், நீரிலும் நெருப்பிலும் சமணர்களால் செலுத்தப்பட்ட, பனை
ஏடுகளையும், அவர்கள் செய்த பல கொடுர செயல்களையும், அழித்த, சுவாமியான,
தெய்வயானை நாயகனாகிய கந்தக்கடவுளின், நல்ல அனுக்கிரகத்தை, உறுதியாக,
(தேடிக்கொள் மனமே) ..



சிக்குறத் தத்தை வழங்கா திழந்து தியங்குவர்தே
சிக்குறத் தத்தை வடிவே வெனார்சிவ ரன்பர்செந்தாள்
சிக்குறத் தத்தை கடிந்தேனல் காக்குஞ் சிறுமிகுறிஞ்
சிக்குறத் தத்தை யனகிலெப் போதுந் திகழ்புயனே.
28

(தினைப்பயிரை உண்ண வந்த) கிளிகளை ஓட்டி, அந்த தினைப்பயிரை,
ரட்சிக்கின்ற, பெண்ணாகிய, குறிஞ்சி நிலத்தில் வாழும் குறப்பெண்ணாகிய, அந்த
வள்ளிநாயகியின், மார்பின் சுவட்டால், சதாகாலமும், பிரகாசிக்கின்ற
புயத்தையுடைய கந்தக்கடவுளே, உன் வேலாயுதத்தை புகழ்கின்ற அடியார்கள், உன்
சிவந்த திருவடிகளை, உறுதியாய் பற்றிக்கொள்ளக் கண்டும், சில அஞ்ஞானிகள்,
தம்முடைய புகழ், நலியும்படி, இழச்சிக்கு இடமானதும், குறைந்து போவதுமாகிய,
செல்வத்தை, நல்ல வழியில் தர்மம் செய்யாமல், பல வழிகளில் அவற்றைத் தொலைத்து,
வருந்துவார்கள், வடிவேலைத் துதிக்காதவர்களே இவர்கள். ..



திகழு மலங்கற் கழல்பணி வார்சொற் படிசெய்யவோ
திகழு மலங்கற் பகவூர் செருத்தணி செப்பிவெண்பூ
திகழு மலங்கற் பருளுமென் னாவமண் சேனையுபா
திகழு மலங்கற் குரைத்தோ னலதில்லை தெய்வங்களே.
29

விளங்குகின்ற, மாலை சூட்டிய, தனது திருவடியை, வணங்குகின்ற
அடியார்களின், திருவாக்கின்படி நடக்க (சம்பந்தரின் ஒவ்வொரு பதிகத்திலும் 11
வது பாட்டாக திருக்கடைக் காப்பு என்று ஒரு பாட்டு உண்டு. அப்பதிகத்தை
பாடுவார்க்கு என்ன பலன் கிடைக்கும் என்பார். இதன்மூலமாக அடியாருக்கு
அந்தப்பலனைத் தேடிக்கொடுப்பதை இங்கு கூறுகிறார்). தேவாரத் திருப்பதிகங்களை
ஓதி, தான் அவதரித்த சீர்காழியையும், தான் காத்தளித்த அமராவதியையும், தான்
என்றும் கலியாண சுபுத்திரனாக நிற்கும் திருத்தணியையும், துதித்து, அணியும்
திருவெண்ணீறு, மும்மலத்தைப் போக்கடிக்கும், முழுப்பொருள் இதுவே என்று
நம்பும் கற்புடமையையும், கொடுக்கும், என்று நினையாத, சமணக் கூட்டங்களை,
வருத்தம் தரும், கழுமரத்தில் ஏற்றி, கலக்கம் அடைந்து அழியும்படி,
வாதுபுரிந்த சம்பந்தப்பெருமான் ஆகிய குமரக் கடவுள் அன்றி, வேறு பிரத்யக்ஷ
தெய்வங்கள் கிடையாது. ..



தெய்வ மணம்புணர் தீகால் வெளிசெய்த தேவரைந்த
தெய்வ மணம்புண ராரிக்கு மருக செச்சையந்தார்
தெய்வ மணம்புண ருங்குழ லாளைத் தினைப்புனத்தே
தெய்வ மணம்புணர் கந்தனென் னீருங்க டீதறவே.
30

மற்ற தேவர்களையும், பூமி, நீர், அந்தக்கரணம், நெருப்பு, காற்று,
ஆகாசம் முதலிய ஐந்து பூதங்களையும், படைத்த, பிரம்ம தேவன், நம்மேல் எழுதிய
தலை எழுத்தை (முருகனின் நாம சங்கீரத்தனம்), அழித்துவிடும். (அதனால்)
மாசற்ற, அழகிய, கருட வாகனனாகிய, நரசிம்மரின் மருகனே, வெட்சி மாலை அணிந்த
தெய்வமே, நறுமணம் வீசும், கூந்தலையுடைய வள்ளியை, தினைப்புனத்தில், கந்தர்வ
மணம் செய்துகொண்ட, குமரக் கடவுளே என்று துதியுங்கள், உங்கள் தீய வினை
எல்லாம் ஒழியும்படி ..



தீதா வசவ னுபவிக்க மண்ணிலும் விண்ணிலுஞ்செந்
தீதா வசவ னியாயஞ்செய் வேதிய ரேதியங்காத்
தீதா வசவ னிமலர்செல் வாசாக் கிரவசத்த
தீதா வசவன் புறப்பா ரெனுமுத்தி சித்திக்கவே.
31

தீமையாகிய, இழிச்சொல், அனுபவிக்கும்படியாய், பூலோகத்தில் புகழ்
பெறவும், தேவர்கள் உலகத்தில் போகங்களைப் பெறவும் எண்ணி, சிவந்த அக்னி
தேவன், ஏறுகின்ற, ஆட்டை, கருணை இல்லாமல் பலி கொடுத்து யாகம் செய்கின்ற,
மறையோரே, இனி அப்படி திகைக்காமல், தெளிவான அறிவை, தந்தருள்க என்று, இடப
வாகனத்தை உடைய, சிவபிரானின், மைந்தனே, கருவி கரணங்கள் ஐவேலை செய்யும்
விழிப்பு நிலையிலும், அவைகள் ஒடுங்கி இருக்கும் துரிய நிலையிலும், உனக்கு
எங்களிடத்தில் கிருபை உண்டாகி கடாட்சிக்க வேண்டும் என்று வேண்டிக்
கொள்ளுங்கள், மோட்சம், உங்களுக்கு கிடைக்கும்படி. ..



சித்திக்கத் தத்துவ ருத்திர பாலக செச்சைகுறிஞ்
சித்திக்கத் தத்துவ ரத்தியின் மாவென்ற சேவகவிச்
சித்திக்கத் தத்துவர் வாய்மொழி மாதர்க் கெனுந்திணைவா
சித்திக்கத் தத்துவ ருத்தப் படாதுநற் சேதனமே.
32

அடியேனுக்கு கிட்டும் படி அருள வேண்டும், தத்துவ மூர்த்தியே, சிவனார்
குமாரனே, வெட்சி மாலை அணிந்த, குறிஞ்சி நிலத்திற்கு அதிபதியே, அலை
தாவுகின்ற, உப்பை உடைய, கடலின் கண், மா மரமாக நின்ற சூரனை, ஜெயித்த, வீரனே,
மிகவும் விருப்பமுடன், கரும்பும், அந்த சிவந்த பவளமும், வாயும்,
மொழியாகும், பெண்களுக்கு, என்று வர்ணிக்கும் காம சூத்திரத்தை,
ஓயாமல்படித்து, இதற்கு இனமான வெகுளியினால், துன்பப் படாமல், நல்ல ஞான
அறிவை, அடியேனுக்குக் கிட்டும்படி அருள வேண்டும்). ..



சேதனந் தந்துறை யென்றுமை செப்புங் குருந்துறைகாற்
சேதனந் தந்துறை யல்லிமன் வாவிச் செந்தூர்கருத
சேதனந் தந்துறை யென்றறி யார்திற நீங்கிநெஞ்சே
சேதனந் தந்துறை மற்றுமுற் றாடித் திரிகைவிட்டே.
33

அழகிய, திருமுலைப் பால் ஊட்டி, பெரும் பாக்கியமாய் கிடைத்த, என் ஐயன்,
என்றெல்லாம், பார்வதி கொஞ்சிப் புகழ்கின்ற, குழந்தை, நீங்காமல்
வசிக்கின்ற, சிவந்த காலை உடைய, அன்னப்பட்சிகளும், நூலோடுகூடிய,
ஆம்பல்களும், நிறைந்திருக்கின்ற, திருச்செந்தூரை, தியானிப்பாயாக,
அறிவின்மையால், தங்கள், சமயக் கோட்பாடுகள், என்று உணராத, திருந்தி உழலும்
பரசமய கூட்டத்தை விட்டு, மனமே, சேது முதலாகிய, மற்றும் அநேக
சமுத்திரங்களையும் நதிகளையும், போய் ஸ்நானம் செய்து, உழல்கின்ற வேலையை,
விட்டு, (சேந்தூர் கருது). ..



திரிகையி லாயிர வெல்லாழி மண்விண் டருசிரபாத்
திரிகையி லாயிர வாநந்த நாடகி சேரிமகோத்
திரிகையி லாயிர மிக்குமைந் தாசெந்தி லாயொருகால்
திரிகையி லாயிரக் கோடிசுற் றோடுந் திருத்துளமே.
34

மாறுதல் இல்லாதவனே, ராத்திரி, பகல், சமுத்திரம், பூமி, விண்ணுலகம்,
இவைகளை எல்லாம் மும்மூர்த்திகளில் முதல்வனாய் நின்று படைத்தவரும், கையில்
பிரம்ம கபாலம் ஏந்தியவரும், கைலாய நாதரும், ஆரவாரம் மிகுந்த, ஆனந்த நடனம்
செய்பவருமாகிய சிவபெருமானுக்கும், அவரின் இடப்பாகத்தில் சேர்ந்திருக்கும்,
இமயமலையில் உற்பவித்த, தாயாகிய பார்வதிக்கும், மகிழ்ச்சியைத் தரும்,
புதல்வனே, செந்தில் பதியானே, குயவனின் சக்கரம் ஒருமுறை சுற்றி வரும் முன்
எண்ணற்ற முறை சுற்றி வரும், என் உள்ளத்தை, மாற்றி அமைதியைத் தந்தருள்க. ..



திருத்துள வாரிகல் போதுடன் சேண்மழை தூங்குஞ்சங்க
திருத்துள வாரிதி கண்டுயி லாசெயன் மாண்டசிந்தை
திருத்துள வாரன்னை செந்தூரையன் னள்செம் மேனியென்பு
திருத்துள வார்சடை யீசர்மைந் தாவினிச் செச்சைநல்கே.
35

துளசிமாலை அணிந்த திருமாலின் கரு நிறத்துடன், போட்டி போடுகின்ற,
மாலைக்காலத்தோடு, விண்ணிலிருந்து, மழை விடாமல் பெய்கிறது, சங்கு
கூட்டங்கள், வசிக்கின்ற, சமுத்திரம், இடை வெளி இல்லாமல் முழங்குகின்றது,
இந்தப் பிரிவாற்றாமையினால் மெய்மறந்து இருக்கும் என் மனதை, ஆறுதல்
புரிவதற்கு, உரியவர் யார்? பெற்ற தாயும், செந்தில் பதியைப் போல்
இருக்கிறாள், சிவந்த மேனியில், எலும்பு மாலையும், உதிர்கின்ற விபூதிப்
பொடியும் படிய, நீண்ட, ஜடாபாரத்தை உடைய பரமசிவன், குமாரனே, இனிமேல் என்னால்
இந்த விரக தாபம் தாங்க முடியாததால், உன் வெட்சி மாலையை எனக்கு தந்தருள
வேண்டும். ..



செச்சைய வாவி கலயில்வல் வாயிடைச் சேடனிற்கச்
செச்சைய வாவி பருகுஞ் சிகாவல செங்கைவெந்தீ
செச்சைய வாவி விடுகெனுஞ் செல்வநின் றாளணுகச்
செச்சைய வாவி னுயிர்வாழ் வினியலஞ் சீர்ப்பினுமே.
36

வெட்சி மாலை தரித்திருப்பவனே, தாவிப் பாய்கின்றதும்,
சர்ப்பங்களிடத்தில் பகையும், கூர்மை பொருந்திய, வலிய, வாயினிடத்தில்,
பாம்பை வைத்துக் கொண்டு, சிவந்த, மலையின் கண், அதனுடைய உயிரை உண்ணுகின்ற,
மயிலை வாகனமாக உடையவனே, (பரமசிவன் ஆக்னியைப் பார்த்து) உன்னுடைய சிவந்த
கரத்தில், இந்த வெப்பமான அக்னிப் பொரியை ஏந்திக் கொண்டு, சரவண தடாகத்தில்
கொண்டு போய் விடு, என்று சொல்ல (அங்கு உற்பவித்த), பாலகனே, உன்னுடைய
திருவடிகளை நாங்கள் அடையும்படி, செய்வாயாக இகழ்ச்சிக்கு இடமான, ஐம்புல
ஆசையுடன் சேர்ந்த இந்த ஜீவ வாழ்க்கை, இனி மேல் நமக்கு வேண்டாம், செல்வம்
அதிகரித்தாலும் (இனி அலம்) ..




சீர்க்கை வனப்பு மலர்வேங்கை யானவன் செஞ்சிலையோர்
சீர்க்கை வனப்பு னிதத்தவ வேடன் றினைவளைக்குஞ்
சீர்க்கை வனப்பு னமதுருக் காட்டிய சேய்தமிழ்நூற்
சீர்க்கை வனப்பு னிமிர்சடை யோன்மகன் சிற்றடிக்கே.
37

மனம் திருந்துதல், அழகாகும், புஷ்பங்கள் உள்ள, வேங்கை மரமாக
நின்றவனும், சிறந்த வில்லை உடைய குறவர் கூட்டத்தினர், சந்தேகப்பட்ட
தன்மையை, கோபித்து, அந்தக் காட்டில், தூய சன்னியாசி ரூபம் எடுத்தவனும்,
தினைப் பயிரைக் காவல் காத்து வந்த, சிறந்த வள்ளிக்கு, மலை அரிசி (தினை
அரிசி) விளையும் அந்த வயலில், தன்னுடைய உண்மை சொரூபத்தைக் காட்டிய, குமாரக்
கடவுளும், தமிழ் இலக்கியத்தில் காணப்படும் 30 சீர்க்கும், தலைவனாக (ஞான
ஞானசம்பந்தராக) அவதரித்தவனும், கங்கா ஜலமும், அருகம்புல்லும், விளங்கும்
நீண்ட, ஜடாபாரத்தை உடைய சிவகுமாரனாகிய முருகனின், சிறிய திருவடிகளுக்கு
(சீர்க்கை வனப்பு) ..




சிற்றம் பலத்தை யரன்புநெய் நூற்றிரி சிந்தையிடுஞ்
சிற்றம் பலத்தை வரஞான தீபமிட் டார்க்குப்பரி
சிற்றம் பலத்தை யருளுஞ்செந் தூரர் பகைக்குலமாஞ்
சிற்றம் பலத்தைப் பதவரந் தோளிலிந் தீவரமே.
38

பர ஆகாச வெளியாகிய, சுவாமியும், பக்தி என்னும், நெய்யை வார்த்து, ஆகம
சாஸ்திரம் என்னும் நூலை, திரியாக்கி, இதயமாகிய, தீபம் ஏற்றுகின்ற, தகழியில்
இட்டு, ஜீவனுக்கு பற்று கோடாகிய, கிருபை உண்டாகும் பொருட்டு, மெய்ஞான
தீபத்தை, ஏற்றின அடியார்களுக்கு, பரிசாக, தனது குக சாயுச்யம் என்னும் பலனை,
கிருபை செய்யும், செந்திலாண்டவனின், எதிரிகளை அழித்த, சிறிய பாணம் அல்ல,
என் இதயத்தில் தைத்து வருத்துவது, அந்தக் கந்தனின், அழகிய புயத்தில்
அணிந்த, நீலோற்பலமாகிய பாணம் தான். ..




தீவர கந்தரி தாம்பகி ராருற வானசெம்பொன்
தீவர கந்தரி யாநொந்த போதினிற் செச்சையவிந்
தீவர கந்தரி சிந்துரை பாக சிவகரண
தீவர கந்த ரிபுதீ ருனதடி சேமநட்பே.
39

வறுமையாகிய பாவத்தை, ஏற்றுக் கொண்டு, மனது உடைந்து வேதனைப் படும்போது,
உறவினர் என்று சொல்லப்படும் பெரிய ஐஸ்வரியவான்கள், தீந்து போன,
அந்துப்பூச்சியால் அரிக்கப்பட்ட, கேழ்வரகு தானியத்தைக் கூட, தானம் கொடுக்க
இசைய மாட்டார்கள் (ஆதலால்), வெட்சி மாலையும் நீலோற்பல மாலை¨யும்
புனைந்தவனே, குகையில் வாழும் வள்ளியம்மையையும், யானையால் வளர்க்கப்பட்ட
தேவசேனையையும், இருபக்கங்களிலும் வைத்திருப்பவனே, சிவ தியானம் செய்யும்,
புத்தியை, வரமாக அளிக்கும், கந்தப் பெருமாளே, எதிரிகளை அழிக்கும் உனது
திருவடிகளே, பொக்கிஷமும் உறவுமாகும். ..




சேமர விக்கம் படையாக வீசுப தேசமுன்னூற்
சேமர விக்கம் பலந்தரு வாய்செரு வாயவெஞ்சூர்ச்
சேமர விக்கம் திரித்தாய் வருத்திய வன்றிறென்றல்
சேமர விக்கம் புயவாளி விண்டிரை தெண்டிரையே.
40

சிவந்த, சூரியனுக்கு, அர்க்கிய ஜலத்தை, + மந்தேகர்களின் தடையை
விலக்கும் ஆயுதமாக, இறைக்கின்றவர்களும், தமக்கு செய்யப்பட்ட காயத்திரி
மந்திர உபதேசத்தையும், முப்புரி நூலின் தூய்மையையும், காப்பாற்றுகின்ற
மறையோர்களின், யாகத்தில் கொடுக்கும் அவிர் பாகத்திற்கு, அழகிய, நல்ல பலனை
கொடுப்பவனே, போர் செய்யும், கொடிய சூரபத்மனின், வைரம் பொருந்திய,
மாமிசத்தினால் ஏற்பட்ட, (விக்னம்) இடையூறை, அழித்தவனே, என்னைத்
துன்புறுத்துகின்றன, காமச் சின்னமாகிய அன்றில் பட்சியும், மன்மதனின்
தேராகிய தென்றலும், மணியோசை கேட்கச்செய்வதால் எருதுகளும், கரும்பு
வில்லும், தாமரைப்பூ பாணமும் ஆர்ப்பாட்டத்துடன் முழங்குகின்ற தெள்ளிய அலையை
உடைய சமுத்திரமுமே. ..




தெண்டன் புரந்தர வக்குன்றில் வாழ்கந்த சிந்துவிலுத்
தெண்டன் புரந்தர லோகஞ் செறாதுசெற் றோய்களைவாய்
தெண்டன் புரந்தர நற்கேள் சிறுவ ரழச்செய்தெம்மைத்
தெண்டன் புரந்தர வின்படி நூக்கிய தீ நரகே.
41

வணங்குகிறேன், நாகாசல வேலவனே, சமுத்திரத்தின் கண், மகாபலசாலியான
சூரபத்மன், இந்திர லோகத்தை, அழிக்காதபடி, அவனை வதைத்தவனே, (என்னைக்
குறைவரக் காப்பாற்றி) தண்டாயுதத்தை உடைய எமன், தொன்று தொட்டு வந்து, அழகிய
நல்ல சுற்றத்தாரும், பிள்ளைகளும், என் உடலைச் சுற்றி உட்கார்ந்து கொண்டு
அழச்செய்து, எம் உயிரைப் பிரித்து, தெள்ளிய தன்மையை உடைய, தன் ஊராகிய
எம்புரிக்கு கூட்டிச் சென்று, தனது உத்தரவின்படி, சென்று நுழைக்கும்,
நரகாக்கினியைக் நீக்குவாய்) ..




தீனந் தினத்து தரச்செல்வர் பாற்சென் றெனக்கென்பதோர்
தீனந் தினத்து முதரா னலஞ்சுடச் சேர்ந்துசுடுந்
தீனந் தினத்து னிகளைசெங் கோட்டினன் செந்திலந்நீர்
தீனந் தினத்து தவத்துப் பிரசதஞ் செய்யவற்றே.
42

புத்தி கெட்ட, கூட்டத்தாரிடை, கொடையாளி என்று பேசப்படும்,
அவர்களிடத்தில் போய், எனக்கு தருமம் செய்யுங்கள் என்று இரக்க வைக்கும்,
மிகவும் கொடியதான, வறுமை, தினந்தோறும், வயிற்றில் பசியாகிய அக்னி எரியும்
பொழுது, அதனுடன் சேர்ந்து என்னை தகிக்கின்றது, தீமையாகிய, நம்முடைய,
நாள்தோறும் வருத்துகின்ற துன்பத்தை, நீக்க வல்ல, சேங்கோட்டு வேலவனின்,
செந்திலம்பதியிலுள்ள, அழகிய ஜலம், சிவப்பு நிறத்தைக் கொண்ட, பவளம் போன்ற
இதழை, இனிய சங்கைப் போல, வெண்மை நிறமாக, கொடுக்க வல்லதோ? ..




செய்யசெந் தாமரை யில்லாத மாதுடன் செந்தினைசூழ்
செய்யசெந் தாமரை மானார் சிலம்பிற் கலந்துறையுஞ்
செய்யசெந் தாமரை யென்னுங் குமார சிறுசதங்கைச்
செய்யசெந் தாமரை சேர்வதென் றோவினை சேய்தொலைத்தே.
43

தினை விளையும் நிலத்தை உடைய, ஒழுங்கான, சிறுகுடி என்னும்
நகரத்தாருக்கு, தெரியாமல், அந்தத் தினைப்புனத்தைக் காவல் செய்த வள்ளி
நாயகியை, சிவந்த கொல்லைப் பயிரைச் சூழ்ந்து கொண்டிருந்த, ஆடு, தாவுகின்ற
கடம்பை என்கிற மான் கூட்டம், மற்றும் வேறு ஜாதி மான்கள், நிரம்பி
இருக்கும், குன்றில், அவளைக் காந்தர்வ மணம் செய்து கொண்ட, கந்தக் கடவுளே,
அழகிய கொன்றை மாலையை உடைய சிவபெருமான், ஐயனே எனப் போற்றுகின்ற குமாரக்
கடவுளே, சிறிய சதங்கை அணிந்த, அழகிய, சிவந்த நின் திருவடித் தாமரையை, நான்
அடைவது எந்தக் காலம்? இருவினைகளையும் தூரத்தில் நீக்கிவிட்டு. ..




சேதாம் பலதுறை வேறும் பணிகங்கை செல்வநந்தன்
சேதாம் பலதுறை யாதசிற் றாயன் றிருமருக
சேதாம் பலதுறை செவ்வாய்க் குறத்தி திறத்தமுத்திச்
சேதாம் பலதுறை யீதென் றெனக்குப தேசநல்கே.
44

சேது முதலிய, மற்றும் பல புண்ணிய தீர்த்தங்களும், வணங்குகின்ற,
கங்காதேவியின் மைந்தனே, நந்த கோபனின் பாலகனாய் அவதரித்து, வெண்ணை திருடனாய்
யசோதையால் கட்டப்பட்ட தம்புக் கயிற்றால் அன்றி, வேறு எதற்கும்
கட்டுப்படாத, சிறு இடையனாகிய கிருஷ்ண மூர்த்தியின், செல்வ மருமகனே, சிவந்த,
ஆம்பல் பூ நிறம்போலும், உற்ற, சிவந்த வாயை உடைய, வள்ளி மணாளனே,
மோட்சத்திற்கும் எனக்கும் உள்ள பெரிய தூரத்தை, தாண்டக்கூடிய, நல்ல பலனைக்
கொடுக்கக் கூடிய மார்க்கம், ஏது என்று, எனக்கு நீ உபதேசம் செய்ய வேண்டும்.
..




தேசம் புகல வயிலே யெனச்சிறை புக்கொருகந்
தேசம் புகல வணவாரி செற்றவ னீசற்குப
தேசம் புகல திகவாச கன்சிறி தோர்கிலன்மாந்
தேசம் புகல கமுதவி மானைச் செருச் செய்வதே.
45

ஐந்து தலையில் ஒரு தலையை, இழந்த, பிரம்மன், எனக்கு உறைவிடமும்,
அடைக்கல ஸ்தானமும், வேலாயுதமே என்று முறையிட, மரக்கலங்களும் அழகும்
நிறைந்த, உக்கிர குமார பாண்டியனாக வருணன் ஏவிய கடலை வற்றச் சேய்தவனும்,
பரமசிவனுக்கு, பிரணவ உபதேசம் செய்த, சிறந்த மொழியை உடைய கந்தக் கடவுள்,
கொஞ்சங்கூட அறிந்தானில்லை, பிரகாசம் பொருந்திய மாம் பூவாகிய அம்பு, காமக்
கலக்கத்தை ஏற்படுத்தி, மான் போன்ற தலைவியுடன், போர் புரிகின்றதை, (சிறிது
ஓர்கிலன்) ..




செருக்கும் பராக வயிராவ தத்தெய்வ யானைமணஞ்
செருக்கும் பராக தனந்தோய் கடம்ப செகமதநூல்
செருக்கும் பராக மநிரு பனந்தந் தெளிவியம்பு
செருக்கும் பராகம் விடுங்கடை நாளுந் திடம்பெறவே.
46

போர் புரியும் திறமும், மத்தகமும், கோபமும் உடைய, அயிராவதம் என்ற
யானையால் வளர்க்கப்பட்ட, தேவசேனையின், மணம் வீசுவதும் இறுமாப்பும்,
பூந்தாதுகளும் உடைய, தன பாரத்தில், மூழ்கும், கடப்ப மாலை அணிந்த முருகனே,
இவ்வுலகத்தில் (வினையால் ஏற்படும்), பிற சமய நூல்களின் கர்வத்தை,
வெல்லுகின்ற, வேதாகம நூல்களை, சிருஷ்டித்தவனே, தாமரை மலர்களில் உதித்த
பிரம்மாக்களும், அழிந்து, தேவர்களின் சா£ரத்தை விடுகின்ற, உகாந்த
காலத்திலும், நான் நித்யத்வம் அடையும் பொருட்டு, இப்பிரபஞ்சத்தில் முடிவான
பொருள் எது என்பதை எனக்கு உபதேசிக்க வேண்டும். ..




திடம்படு கத்துங் கெடீர்கன்ம லோகச் சிலுகுமச்சோ
திடம்படு கத்துந் திரித்தம்பு வாலி யுரத்தும்பத்துத்
திடம்படு கத்துந் தெறித்தான் மருக திருகுமும்ம
திடம்படு கத்துங் கநகங் குனித்தவன் சேயெனுமே.
47

உறுதிநிலை அழியும், யுகாந்த காலத்திலும், அழிவில்லாமல் இருப்பீர்கள்,
பூர்வ வினையால் நமக்கு ஏற்படும், இவ்வுலகத்தில் நமக்கு ஏற்படும்
ஈஷனாத்ரயங்களையும் (மண், பெண், பொன்), ஓயாமல் சோதிட நூல்களை பார்த்து, சதா
பிதற்றுவதையும், மாற்றி, தன்பாணங்களை, வாலியின் மார்பின் மீதும்,
இராவணனுடைய உறுதியான பத்து தலைகளின் மீதும், பிரயோகித்த ஸ்ரீராமனின்,
மருமகனே, பகை கொண்ட, முப்புரங்களையும், தான் தோன்றிய இடத்திலேயே, விழுந்து
அழியும்படி, உயர்ந்த மேருமலையை, வளைத்த சிவபெருமானின், மைந்தனே, என்று
துதியுங்கள். ..




சேயவன் புந்தி வனவாச மாதுடன் சேர்ந்தசெந்திற்
சேயவன் புந்தி கனிசா சராந்தக சேந்தவென்னிற்
சேயவன் புந்தி பனிப்பானு வெள்ளிபொன் செங்கதிரோன்
சேயவன் புந்தி தடுமாற வேதருஞ் சேதமின்றே.
48

அழகுடனும், மிகுந்த காதலுடனும், கானாறு பாய்கின்ற, வள்ளிக் காட்டில்
வாழ்ந்த, வள்ளியுடன், காந்தர்வ மணம் புரிந்த, செந்தில் குமரக்கடவுளே,
வலிமையில் மேம்பட்ட, பகைமை உடைய, இராக்கதர்களை அழித்தவனே, செந்நிறமான
தெய்வமே, என்று துதித்தால், செவ்வாய், புதன், சந்திரன், பிரகஸ்பதி,
வியாழன், ஆதித்தன், அவனுடைய பிள்ளையாகிய சனீஸ்வரன், (இவர்களின்
வக்கிரத்தால் ஏற்படும்) நமது சித்தத்தை மாறுபடச் செய்யும், தீமை இல்லாது
போகும். ..




சேதக மொன்று மனாதியுந் தாதையுந் தேடரியார்
சேதக மொன்றுஞ் சதங்கையங் கிண்கிணி செச்சையந்தாள்
சேதக மொன்றும் வகைபணி யாயினித் தீயவினைச்
சேதக மொன்று மறியா துழலுயிர்ச் சித்திரமே.
49

தனது ஐந்து சிரங்களில் ஒன்றை இழந்தவரும், மற்ற தேவர்களைக் காட்டிலும்
நிலையான வாழ்க்கையை உடையவருமாகிய, ஆதி காடவுளுமாகி பிரம்மனும் அவனின்
பிதாவாகிய திருமாலும், அடிமுடி தேடி கண்டு பிடிக்க முடியாத பரமசிவனின்,
குமாரனே, நல்ல முறையில் ஒலி செய்யும், சதங்கை, சிரேஷ்டமான, மணிகள், வெட்சி
மாலை (இவைகளை எல்லாம் அணிந்த), அழகிய உனது திருவடிகளில், சிவந்த என்
இருதயம், தியானித்து ஒருமைப்படும்ப, எனக்கு அருள வேண்டும், தற்போது, முன்
செய்த தீ வினையாகிய, சேற்றில், கரை சேறுவதற்கு வழி தெரியாமல், உழலுகின்ற,
இச் ஜீவ வாழ்க்கை, பொய்யானது. ..




சித்திர மிக்க னவில்வாழ் வெனத்தெளி யுந்தவவா
சித்திர மிக்க னெறிக்கழிந் தேற்கினிச் செச்சைநல்வி
சித்திர மிக்க தனக்குறத் தோகை திறத்தமுத்தி
சித்திர மிக்க வருளாய் பிறவிச் சிகையறவே.
50

பொய்யாக உள்ள, நாம் காண்கின்ற கனவைப் போன்றது, இந்த பிரபஞ்ச வாழ்க்கை,
என்ற மன உறுதியை நல்கும், தவ சித்திகளின் வலிமையை (நாடாமல்), மன்மதனுடைய
காம நூல் வழியில், கெட்டுப்போன எனக்கு, இனிமேலாவது, வெட்சி மாலை அணிந்த,
சிறந்த, அற்புதமான அழகுடைய, பெருத்த தனபாரமுடைய, மயில் போன்ற வள்ளியின்,
மணாளனே, இந்த பிறப்பாகிய பந்தம் நீங்க, மோட்சப் பேறானது பரிபூரணமாக
கிட்டும்படி, எனக்கு அருள வேண்டும் ..
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

அருணகிரிநாதர் நூல்கள் (Arunagirinathar Books) Empty Re: அருணகிரிநாதர் நூல்கள் (Arunagirinathar Books)

Post by மாலதி December 13th 2011, 08:24

சிகைத்தோகை மாமயில் வீரா சிலம்புஞ் சிலம்பம்புரா
சிகைத்தோகை மாமயில் வாங்கிப் பொருது திசைமுகன்வா
சிகைத்தோகை மாமயில் வானில்வைத் தோய்வெஞ் செருமகள்வா
சிகைத்தோகை மாமயில் செவ்விநற் கீரர்சொற் றித்தித்ததே.
51

கொண்டையையும், தூவியையும் உடைய, பெரிய, மயிலை வாகனமாக உடையவனே,
கிரவுஞ்ச மலையையும், முழங்குகின்ற, சமுத்திரத்தினிடத்தில், ஒழுங்கான, மேல்
கிளைகளை உடைய, மா மரமாக நின்ற சூரபத்மனையும், இருளுக்கு இடமாகிய மாயையும்,
விலக்கி, போர் செய்து, நான்கு முகத்தை உடைய பிரம்மன், பிரணவப் பொருள்
தெரியாமல் வேதத்தைக் கற்ற குற்றத்திற்காக, அவனைக் கோபித்து, பெரும்
மகிழ்ச்சியை, அழகுக்கு இருப்பிடமான, தேவ லோகத்தில், விளைவித்தவனே, கொடிய
போரில் வல்லவனாகிய (பாண்டிய மன்னனின்), குமாரியின்*, குதிரை முகத்தை,
தீர்த்தவனே, யானையாகிய ஐராவதத்தால் வளர்க்கப்பட்ட, மயிலைப் போன்ற அழகுடைய
தேவயானையின், கலவி இன்பத்தை விட, நக்கீரர் சொல்லிய திருமுருகாற்றுப்படை,
உனக்கு இனிமையாக இருந்தது போலும். ..



தித்திக்குந் தொந்திக்கு நித்தம் புரியுஞ் சிவன்செவிபத்
தித்திக்குந் தொந்திக் கறமொழி பாலக தேனலைத்துத்
தித்திக்குந் தொந்திக் கிளையாய் விளையுயிர்க் குஞ்சிதைதோல்
தித்திக்குந் தொந்திப் பனவேது செய்வினைத் தீவிலங்கே.
52

தித்தி தொந்தி என்கிற தாள வரிசைகளுக்கு ஏற்ப, நடனம் புரிகின்ற,
சிவபெருமானின், செவிகளாகிய, வரிசையான புலனிடத்து, நுழையும்படி,
பிரணவப்பொருளை, அச்சிவனின் கலக்கம் ஒழியும்படி, உபதேசம் செய்த, குமாரனே,
தேன் பண்டங்களின் இனிமையினால், இனிப்புற்று இருக்கும், வயிற்றை உடைய
(கணபதிக்கு), தம்பியே, கருப்பையில் உண்டாகிற ஜீவனுக்கும், அழிந்து போகிற,
தோலாகிய இந்தப் பைக்கும், சம்பந்தம் ஏற்பட்டு பிறப்பு உண்டாவதற்கு, காரணம்,
நான் முப்பிறவியில் செய்த, கருமங்களாகிய, கொடிய தளைகள் தானோ? ..



தீவிலங் கங்கை தரித்தார் குமார திமிரமுந்நீர்
தீவிலங் கங்கை வருமான் மருக தெரிவற்றவான்
தீவிலங் கங்கை வரவா விரைக்குத் திரிந்துழலுந்
தீவிலங் கங்கை யமன்றொட ராமற் றிதம்பெறவே.
53

கரத்தில் அக்னியையும், தோளில் வில்வ மாலையையும், சிரசின்கண் கங்கா
நதியையும், புனைந்திருக்கும் சிவபெருமானின், பாலகனே, இருண்ட, (ஊற்று நீர்,
ஆற்று நீர், மழை நீர்) இவைகளால் உண்டாகிய சமுத்திரம், வரண்டு போகும்படி,
வில் வித்தையை காண்பித்த, வல்லவராகிய*, ராமச்சந்திர முர்த்தியின் மருகனே,
அறிவதற்கு அரிதாகிய, பெரிய தீவுகளிலும், வேறு பல இடங்களிலும்
பஞ்சேந்திரியங்களினால், இச்சையினால் உந்தப்பட்டு, பல புலன் நுகர்ச்சிக்காக,
அலைந்து திரிகின்ற, புத்தியின், பலத்த தொடர்ச்சியை, நீ ஒழிக்க வேண்டும்,
எமன் தொடர்ந்து என்னைப் பிடிக்காமல், உனது திருவடியில் நான் நிலைபெற
வேண்டும். ..



திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா
திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா
திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே.
54

திதத்த ததித்த என்னும் தாள வரிசைகளை, தன்னுடைய நடனத்தின் மூலம்
நிலைபடுத்துகின்ற, உன்னுடைய தந்தையாகிய பரமசிவனும், மறை கிழவோனாகிய
பிரம்மனும், புள்ளிகள் உடைய படம் விளங்கும், பாம்பாகிய ஆதிசேஷனின்,
முதுகாகிய இடத்தையும், இருந்த இடத்திலேயே நிலைபெற்று, (ஆனால்) அலை
வீசுகின்ற, சமுத்திரமாகிய திருப்பாற்கடலையும் (தன்னுடைய வாசஸ்தலமாகக்
கொண்டு), அயர்பாடியில் தயிர், மிகவும் இனிப்பாக இருக்கிறதே என்று
சொல்லிக்கோண்டு, அதை மிகவும் வாரி உண்ட (திருமாலும்), போற்றி வணங்குகின்ற,
பேரின்ப சொரூபியாகிய, மூலப்பொருளே, தந்தங்களை உடைய, யானையாகிய ஐராவதத்தால்
வளர்க்கப்பட்ட, கிளி போன்ற தேவயானையின், தாசனே, பல தீமைகள் நிறைந்ததும்,
ரத்தம் மாமிசம் முதலிய சப்த தாதுக்களால் நிரப்பப்பட்டதும், மரணம் பிறப்பு
இவைகளோடு கூடியதும், பல ஆபத்துக்கள் நிறைந்ததும் (ஆகிய) எலும்பை மூடி
இருக்கும் தோல் பை (இந்த உடம்பு), அக்னியினால், தகிக்கப்படும், அந்த அந்திம
நாளில், உன்னை இவ்வளவு நாட்களாக துதித்து வந்த என்னுடைய புத்தி, உன்னிடம்
ஐக்கியமாகி விட வேண்டும். ..



தீதோ மரணந் தவிரும் பிறப்பறுந் தீயகற்புந்
தீதோ மரணம் பரமீது தானவர் சேனை முற்றுந்
தீதோ மரணந் தனபூசு ரர்திரண் டேத்தியமுத்
தீதோ மரண மலையாளி யென்றுரை தென்னுறவே.
55

கொடியனவற்றையே கற்கின்ற ஏ மனமே, தீமை மாத்திரமோ இறப்பும் ஒழிந்து
போகும், பிறவியும் நீங்கும் (ஆதலால்), குற்றத்திற்கு, இடம் ஆகிய, கடலின்
கண், அசுர சேனை அனைத்தையும், தகித்த, கை வேலை உடையவனே, கருணா மூர்த்தியே,
வேள்வி முடியும் காலத்தில் வேதியர்கள் எல்லோரும் திரண்டு கொண்டு ஒரே
மாதிரியாகிய உச்ச குரலில் சுப்ரமண்யோம் என்கிற மந்திரத்தை முழக்கி
வணங்குகின்ற, முத்துக்குமரனே, இந்த, வேள்வியில் கொடுக்கப்படும் அவிர்
பாகத்திற்கு, உரிமையை உடையவனே, குறிஞ்சிக் கடவுளே, என்று துதிப்பாயாக, உன்
சித்தம் அழகு பெறவே. ..



தென்ன வனங்கனஞ் சூழ்காத் திரிநக சூலகரத்
தென்ன வனங்கனந் தப்பத நீட்டினன் செல்வமுன்பின்
தென்ன வனங்கனன் னீற்றாற் றிருத்திய தென்னவின்னத்
தென்ன வனங்கனங் கைச்சிலைக் கூனையுந் தீர்த்தருளே.
56

தென்னஞ் சோலைகளும், மேகங்கள், கவிந்து கொண்டிருக்கும், திருத்தணி,
பரங்குன்றம், திருச்செங்கோடு என்னும் மூன்று மலைகளுக்கு அதிபனே, கையில்
சூலத்தைப் பிடித்திருக்கும், தென் திசைக்கு அதிபனாகிய எமராஜனின், உடல்,
அழியும்படி, காலால் நீட்டி உதைத்த பரமசிவனின், குமாரனே, முன்னொரு
காலத்தில், பின் முதுகில் கூனுடைய, பாண்டியனின் உடல் கூனை, நன்மையே
பயக்கும் விபூதியினால், சரி செய்து நிமிர்த்தியது போல, இப்போது, வனப்புடைய,
மன்மதனின், அழகிய, கையில் பிடித்த கரும்பு வில்லின், வளைவையும், நீக்கி,
அந்த மன்மதன் என்மேல் பாணத்தை எய்தாதபடி நீ அணிந்திருக்கும் மாலையை தந்தருள
வேண்டும். ..



தீத்தன் பரவை வெளிநீங்கிச் சேய்தொழச் செல்பதவுத்
தீத்தன் பரவை முறையிட மாங்குறை தீங்குறவே
தீத்தன் பரவை தழைக்கவிண் காவெனச் சென்னியின்மேல்
தீத்தன் பரவையில் வேலத்த னேகுரு சீலத்தனே.
57

கிரணங்களை உடைய சூரியன், சஞ்சாரஞ் செய்யும், அழகிய ஆகாச வெளியையும்,
கடந்து சென்று, தன் பிள்ளையாகிய பிரம்மனும், பயந்து வணங்கும்படி,
திரிவிக்ரமவதாரத்தில், பாதத்தை ஊர்த்தவ தாண்டவமாய் எடுத்த மகாவிஷ்ணுவும்,
கடலும், அலறி அபயமிட, மாமரமாகிய சூரனால் உண்டான துன்பத்தையும், தீமையையும்,
முழுவதும், நீங்கும்படி ஒழித்து, அடியா¡ர் கூட்டம், செழிக்கும்படி, விண்
உலகத்தையையும், காப்பாற்று என்று, சிரசின்கண், கங்கா ஜலத்தை சூடியிருக்கும்
பரமசிவன், சொல்ல, அவரை வணங்கி அந்த வேலையை செய்து முடித்த, கூரிய
வேலாயுதத்தை, கையில் ஏந்தி இருக்கும் முருகப் பெருமானே, குருவாகி அந்த
சிவனுக்கு, பிரணவப் பொருளை உபதேசித்த நற்குணக் குன்றனே. ..



சீலங் கனமுற்ற பங்கா கரசல தீரக்கநி
சீலங் கனமுற்ற முத்தூர்செந் தூர சிகண்டியஞ்சு
சீலங் கனமுற்ற வேதனை மேவித் தியங்கினஞ்சீ
சீலங் கனமுற்ற விப்பிறப் பூடினிச் சேர்ப்பதன்றே.
58

கொடைக் குணத்திலும், பெருமையிலும், மேம்பட்ட, குறை இல்லாதவனே,
சமுத்திரத்தில், கோபமுடைய, அசுரராகிய இருள் கூட்டத்தை, அழித்தவனே, முற்றமான
கடர்க்கரையின்கண், முத்துக்கள் நிறைந்திருக்கின்ற, செந்திற் பதியானே,
மயில் வாகனமுடைய, அழகிய பரிசுத்த மூர்த்தியே பசியாகிய உதரத்தீயினால்,
ஏற்படும், துன்பத்தை அடைந்து, மயக்கமுற்றிருக்கிறேன், இது மிகவும்
இகழ்ச்சியான, முழுவதும் இழிவான நிலை (அதலால்), இப்படிப்பட்ட ஜனனத்திலே, இனி
மேலும், என்னைக் கொண்டு போய்த் தள்ளுவது, நன்று ஆகாது. ..



சேர்ப்பது மாலய நீலோற் பலகிரித் தெய்வவள்ளி
சேர்ப்பது மாலய முற்றா ரெனப்பலர் செப்பவெப்புச்
சேர்ப்பது மாலய வத்தைமன் யாக்கை சிதைவதன்முன்
சேர்ப்பது மாலய வாசவன் செப்பிய செப்பதத்தே.
59

நெருங்கி இருக்கும் தாமரைகளும், அசைகின்ற, ஜலத்தின் கண், நீலோற்பல
புஷ்பங்கள் மலரும், திருத்தணி மலையில் வாழும், தெய்வீக சக்தியாகிய, வள்ளி
நாயகனே, தும்மல் ஏற்பட்டது, இறந்து விட்டார், என்று, பலரும் ஆச்சரியத்துடன்
சொல்வதற்கு முன், உஷ்ணம், சிலேத்துமம், மயக்கம், ஜாக்ரத், சொப்னம்,
சுசுத்தி, துரியம், துரியாதீதம் என்ற ஐந்து அவஸ்தைகளும், நிரம்பி
இருக்கும், இந்த உடல், அழிந்து போவதற்கு முன், விஷ்ணு, பிரம்மா, இந்திரன்
இவர்கள், போற்றி வணங்கும், சிறந்த உன் திருவடித் தாமரையில் என்னைச்
சேர்த்தருள வேண்டும்). ..



செப்பத் தமதிலை மாற்றார் கொளுமுன்னஞ் செல்வர்க்கிடச்
செப்பத் தமதிலை யெங்ஙனுய் வார்தெய்வ வேழமுகன்
செப்பத் தமதிலை வாணுத னோக்கினர் சேணில்வெள்ளிச்
செப்பத் தமதிலை வென்றார் குமாரவத் திக்கரசே.
60

தனது மனைவியைக் கூட, பகைவர்கள் அபகரித்துக் கொள்ளும் முன்பு,
தனவந்தர்களுக்கு, நடுநிலைமையுடன், மற்றவர்களுக்கு தானம் கொடுத்து கொடுத்து,
சிவந்து போன, கை வாய்க்கப் பெறாவிடில், அவர்கள் எப்படி நல்ல கதி
அடைவார்கள், தெய்வீகமாகிய கணபதி, புகழ்ந்து பேசிய, தம்பியே, தில்லை
நடராஜராகிய, ஒளி பொருந்திய நெற்றியில் முன்றாவது கண்ணை உடையவரும்,
ஆகாசத்தில், வெள்ளி, செம்பு, தங்கமான, மதிலை உடைய திரிபுரத்தை, ஜெயித்த
பரமசிவனின், மைந்தனே, தேவயானையின் தலைவனே. ..



திக்கர சத்தி தவன்சென்று முன்றி திகுமரர்வந்
திக்கர சத்தி யிடத்தோயென் செய்வ தெனத்தருநீ
திக்கர சத்தி விதிர்த்திலை யேலெவன் செய்குவரத்
திக்கர சத்தி யலைவாய் வளர்நித் திலக்கொழுந்தே.
61

தெய்வயானையின் மணாளனே, சமுத்திரத்தின் கண், திருச்செந்தூரில்
விளங்கும், முத்தின் கொழுந்தொளி போன்றவனே, முன்னொரு காலத்தில், அஷ்ட திக்கு
பாலர்களும், ஆட்டை நிலையான வாகனமாக உடையவனும், சிவபெருமானிடத்தில் சென்று,
அரனே, உமாதேவியை இடப்பாகத்தில் வைத்திருப்பவனே, திதியின் பிள்ளைகளான
சூரபத்மாதி அசுரர்களால், எங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை, எப்படித்
தாங்கி பிழைப்போம்? என்று முறையிடுகையில், அவர் உனக்கு அளித்த, அடியவரின்
இடரை நீக்குவதையே நெறியாகக் கொண்ட, கை வேலாயுதத்தை, நீ அவர்கள் மேல் எய்தி
அவர்களை அழித்திராவிடில், அந்த தேவர்கள் எப்படி பிழைத்திருப்பார்கள்? ..



திலமுந் தயில முநிகர வெங்குந் திகழ்தருசெந்
திலமுந் தயில முருகா வெனாதத் திநகையினித்
திலமுந் தயிலமு தத்தா லுருகிய சித்தவென்னே
திலமுந் தயில கலவினை மேவித் தியங்குவதே.
62

தேவயானையின் பல்லாகிய, இனிய, முத்தானது, செலுத்துகின்றதும், தன்னால்
நுகரப்பட்டதும் ஆன, அதரபானமாகிய அமுதத்தால், மனம் குழைந்த, உள்ளம் உடையவனே,
கண்ணுக்குத் தெரியாமல் எள்ளில் எண்ணெய் விரவி இருந்தும் அது எள்ளை
அரைக்கும்போதுதான் வெளி வருவது போல, சராசலமெங்கும் நீக்கமற நிறைந்து கொண்டு
ஆனால் பக்தியினால் வெளிப்படும் போது மட்டும் நேரே தெரிகின்ற,
செந்திலாண்டவனே, ஆயுத வகையில் முதன்மை ஸ்தானத்தை வகிக்கும் வேலாயுதத்தை
ஏந்தியவனே, கந்தக்கடவுளே, என்று துதித்து ஓலமிடாமல், உன்னிடம் பக்தி இல்லாத
மாற்றார்கள் போல், முற்பிறவியில் சம்பாதிக்கப்பட்ட, பெரிய தீவினைகளை நான்
அடைந்து, வருந்தி உழல்வது, என்ன காரணம்? ..



தியங்காப் பொறியுண் டெனுந்தனுத் தீதலு மேதியையூர்
தியங்காப் பொறியுண் டவமிலி யேயென்று செப்பலுஞ்சத்
தியங்காப் பொறியுண் டயன்கைப் படாது திரவெற்புநி
தியங்காப் பொறியுண்டை பண்டுயப் போர்செய்த சேவகனே.
63

சங்க நிதி பதுமநிதி இவைகளும், கற்பக விருட்சமும் ஆக விளங்கும்,
செல்வத்தினை உடைய பொன்னுலகு, முன்பு அழியாமல் பிழைக்கும்படி, நிலை பெற்ற
கிரவுஞ்ச கிரியை, போரில் வென்று அழித்த, முழு வீரனே, சற்றும் கலக்கமில்லாத,
ஐம்புலங்களை உடைய, இந்த தேகம், அந்திம காலத்தில் அக்கினியில் வெந்து
போவதும், எருமை வாகனமுடைய எமதூதன் (என்னை எமபுரத்திற்கு கொண்டு சென்று)
வாயைத் திற, சற்றும் தவம் செய்யாத பாவியே, (கருணை இல்லாமல் பிராணிகளை
கொன்று சாப்பிட்ட பாவத்திற்காக) தீப்பொறிகளைச் சாப்பிடு, என்று கூறப்போவது,
உண்மை ஆதலால், பிரம லிபி என் தலையில் எழுதப்பட்டு, பிரம்மன் என்னை
மீண்டும் சிரிஷ்டிக்காதபடி என்னைக் காத்தருள வேண்டும். ..



சேவக மன்ன மலர்க்கோமுன் னீசொலத் தெய்வவள்ளி
சேவக மன்ன வதனாம் புயகிரி செற்றமுழுச்
சேவக மன்ன திருவாவி னன்குடிச் செல்வகல்விச்
சேவக மன்ன முநிக்கெங்ங னாணித் திகைப்புற்றதே.
64


தெய்வீகம் பொருந்திய வள்ளியின், (கருணையினால்) சிவந்த, இதய தாமரை
போல் விளங்கும், முகார விந்தம் உடையவனே, கிரவுஞ்ச மலையை அழித்த ஒப்பற்ற
வீரனே, தலைவனே, பழனிப் பதியானே, ரிஷப வாகனத்தின் மேல், நிலைபெற்று வரும்,
குற்றமற்ற பரிசுத்தரான சிவபெருமானுக்கு, முன்னொரு காலத்தில், நீ பிரணவ
உபதேசத்தை செய்ய, வேதம் ஓதுவதில் வல்லமையும், அன்ன வாகனத்தையும் உடைய,
பிரமனுக்கு, எதனால், வெட்கத்தை அடைந்து, பொருள் தெரியாமல் மயங்கி நின்றது?
..



திகைப்படங் கப்புயந் தந்தரு ளானென் படிங்கணிய
திகைப்படங் கத்தமை யார்செந்தி லாரென்ப டென்னனுய
திகைப்படங் கப்புகல் சேயென்பள் கன்னிகண் ணீர்தரவி
திகைப்படங் கத்தமை யாதெமை யாட்கொளுஞ் சீகரமே.
65


என் உயிர் போன்ற இந்தப் பெண், விழிகளில் நீர் சொரிந்து கொண்டு,
மயங்கி நிற்கிறாள், செந்திலாண்டவன், தன்னுடைய திருத்தோள்களை, எனக்குக்
கொடுத்து அருள மாட்டார் என்கிறாள், சந்திரனை, தினமும், வெறுத்து
பேசுகிறாள், தான் இப்படி அரற்றி வருந்துவதைப் பார்த்து, மன்னித்து ரட்சிக்க
மாட்டேன் என்கிறார் என்று சொல்லுகிறாள், பாண்டிய மன்னனின், சுர
வருத்தத்தின், கொடுமை நீங்க, தேவாரப் பதிகத்தைப் பாடி அருளிய, சம்பந்தப்
பிள்ளை என்று கூறுகிறாள் (ஆதலால்), பிரமனின், கையினால்
சிருஷ்டிக்கப்படுகின்ற உடலுக்குள், இந்த ஆன்மா சேர்க்கபட்டு மீண்டும் பிறவி
அடையாதபடி, ஆண்டு கொள்ள வேண்டும், என்னுடைய சுவாமியே அழகிய குமாரக்கடவுளே.
..



சீகர சிந்துர வுத்தவெஞ் சூர செயபுயவ
சீகர சிந்துர வல்லிசிங் கார சிவசுதசு
சீகர சிந்துர கந்தர வாகன் சிறைவிடுஞ்சு
சீகர சிந்துர மால்வினைக் குன்றைச் சிகண்டிகொண்டே.
66


அலைவீசும், கடலின் கண், பெரிய போர் வீரனான, கொடிய, சூரபத்மனை,
ஜெயித்தவனே, தோள்களை, விரும்பி அணைப்பதில் பிரியமுள்ளவளும், நெற்றியில்
திலகம் தீட்டியவளுமான, கொடி போன்ற வள்ளிநாயகிக்கு உரிய, அலங்காரமுடையவனே,
சிவகுமாரனே, பரிசுத்தமான அக்கினியால், பொறி ரூபத்தில் ஏந்தப் பட்டவனே,
ஐராவதத்தையும், மேகத்தையும், வாகனமாக உடைய இந்திரனின், சிறையை மீட்டுக்
கொடுத்த, பரிசுத்த மூத்தியே, வலிய, மயக்கத்தைத் தரும், இருவினைகளாகிய
மலையை, மயில் வாகனத்தில் எழுந்தருளி, சிதற அடித்து விடு. ..



சிகண்டிதத் தத்த மரவாரி விட்டத் திதிபுத்ரரா
சிகண்டிதத் தத்த நகபூ தரதெய்வ வள்ளிக்கொடிச்
சிகண்டிதத் தத்த மலர்மேற் குவித்திடை செப்புருவஞ்
சிகண்டிதத் தத்த கறபோ பலமென்னுஞ் சேகரனே.
67


மயில் வாகனத்தை, தாவிச் செலுத்தும்படி, ஆர்பாரிக்கும், கடலின்
கண், செலுத்தி, அந்த வீரம் வாய்ந்த, திதி தேவியின் பிள்ளைகளாகிய அசுர
கூட்டங்களை, கோபித்து அழித்தவனே, தந்தம் உடைய, பாம்பு போன்ற நாகாசல வேலவனே,
தெய்வீகமாகிய, குறப்பெண்ணாகிய வள்ளி தேவியை, பார்த்து, பணிவுடன், உன் மலர்
போன்ற கைகளை, தலைக்கு மேல் கூப்பிக் கோண்டு, ஏ பெண்ணே உன்னுடைய இடுப்பு,
புகழ்ந்து கூறப்படும், வஞ்சிக் கொடி போன்ற உருவம் உடையது, உன் விழி,
நிலைபெற்ற, ஆபத்துக்களை எல்லாம், அகற்றி என்னுடைய ஆசை அக்கினியைத்
தணிப்பதால், நான் செய்த தவத்தின் பயனே ஆகும், என்றெல்லாம் புகழ்ந்துரைத்த
தலைவனே. ..



சேகர வாரண வேல்வீர வேடச் சிறுமிபத
சேகர வாரண மேவும் புயாசல தீ வினையின்
சேகர வாரண வெற்பாள நாளுந் த்ரியம்பகனார்
சேகர வாரண நின்கையில் வாரணஞ் சீவனொன்றே.
68


அடியவர்களை பின் வாங்குதல் இல்லாத, போர் செய்வதில் வல்லமை உள்ள
வேலாயுத மூர்த்தியே, வள்ளி நாயகியின், தாள்களை சிரத்தில் ஏந்தியவனே,
தேவயானை, தழுவும், மலை போன்ற தோள்களை உடையவனே, (அடியார்களின்) கொடிய
வினையின், வஜ்ரம் போன்ற திடத் தன்மையை, அரம் போன்று பொடி செய்பவனே,
வேதங்கள் பூஜிக்கும் செங்கோட்டு மலைக்கு அதிபனே, தினந்தோரும், முக்கண்ணுடைய
சிவபெருமான், மால் விடையாகிய திருமாலின், கையிலிருக்கும், பாஞ்ச சன்யம்
என்ற சங்கிற்கும், உன் கையில் இருக்கும், கொடியாகிய கோழிக்கும், (உன்னைச்
சேர்ந்திருக்கும் இரவு காலம் நீடிக்காமல் பொழுது புலர்வதை தொனி செய்து
காட்டும் சங்கும், அதே போல் சேவல் காலைப் பொழுதை வரவழைக்க கூவுவதாலும்)
இரண்டிற்கும் உயிர் ஒன்றாக இருக்குமோ? ..



சீவன சத்துரு கன்பாற் பிறப்பறத் தேவருய்யச்
சீவன சத்துரு மிக்குமெய் யோன்கையிற் சேர்த்தசெவ்வேள்
சீவன சத்துரு செய்யாண் மருகவெ னாதிடையே
சீவன சத்துரு வெய்தியெய் தாப்பழி சிந்திப்பதே.
69


பிராணனுக்கு, (நித்யத் தன்மையும் மாறுபடாத தன்மையும் இல்லாததால்)
அசத்தாகும் (ஆதலால் பிராணனும் உடலும் சேர்ந்திருக்கும் பொழுதே), நெஞ்சை
உருகவைக்கும் பக்தியினால், (சத்து எது என்று தெரிந்து கொண்டு) இந்த ஜென்மம்
ஒழியும்படி, சகல ஜீவன்களுக்கும் மூலகாரணராகிய சிவபெருமானால், ஆட்டு
வாகனமுடைய, உஷ்ணமுடைய, உடம்பை உடைய அக்னி தேவனின், கரத்தில் கொடுக்கப்பட்ட
(பொறியாய் இருக்கும் போது), குமாரக்கடவுளே, ஒளிவீசும், தாமரையை
இருப்பிடமாகக் கொண்ட, சிவந்த நிறமுடைய மகாலட்சுமிக்கு, மருகனே, என்று
சித்தத்தில் வைத்து நிலை பெறச் செய்து தியானிக்காமல், ஒரு பிறப்பிற்கும்
இறப்பிற்கும் இடையே, ஜீவனானது (சத்தாகிய பரமாத்மாவையும் அசத்தாகிய
ஜீவாத்மாவையும் அறிந்து கொள்ளாமல்), ஜடமாகிய, மலபாண்டமாகிய தேகத்தை,
அடைந்து, அதற்கு ஏற்கத் தகாத பெரிய பழியை, என் இதயம் எண்ணிக்கோண்டு, அவமே
காலத்தைப் போக்குகிறது. ..



சிந்துர வித்தக வாரும் புகர்முகத் தெய்வவெள்ளைச்
சிந்துர வித்தக வல்லிசிங் காரசெந் தூரகுன்றஞ்
சிந்துர வித்தக முத்திக்கு மாய்நின்ற செல்வதுஞ்சா
சிந்துர வித்தக னம்போலு மிங்கிளந் திங்களுமே.
70


கோலம் தீட்டிய, இந்த அழகு, நிறைந்திருக்கின்ற, புள்ளியை உடைய
முகம் பொருந்திய, தேய்வீகமாகிய ஐராவதத்தினிடை வளர்ந்தவளும், அற்புதமான அழகை
உடையவளும் ஆகிய, கொடி போன்ற தேவயானைக்கு இன்பம் பயப்பவனே,
செந்திற்பதியானே, கிரவுஞ்ச மலையை, சிதற அடித்த, வலிமையை உடையவனே, ஞானா
மூர்த்தியே, (முதலில் இவன் மோட்சத்திற்கு தகுதி உள்ளவனா என ஆராய்ச்சி
செய்துவிட்ட பிறகு இவன் தக்கவன் என அறிந்தவுடன் தாய் போல் அருள் செய்து)
முத்தி வீட்டை அடையச் செய்தவனே (ஆய் .. ஆராய்ச்சி, ஆய் .. தாய்). கடல்
ஓயாமல் முழங்குகிறது, இந்த இடத்தில் பிறைச் சந்திரனும் சூரியனின் காந்தி
போல் தகிக்கிறது. ..



திங்களு மாசுண மும்புனை வார்செல்வ னென்னையிரு
திங்களு மாசுண மாக்கும் பதாம்புயன் செந்திலன்னாள்
திங்களு மாசுண மன்போல் விழியுஞ் செழுங்கரும்புந்
திங்களு மாசுண நன்றான மாற்றமுந் தீட்டினன்றே.
71


சந்திரனையும், பாம்பையும், தரித்திருக்கும் சிவபெருமானின்,
குமாரனும், என் பத்து மாதமென்னும் கால அளவையில் சேர்ந்து அன்னையின்
கருப்பையில் படும் பிறவித் துன்பத்தையும், மிகவும் நீறாக்கும், (சுணம்
சுண்ணாம்பு), தாமரை போன்ற தாள்களை உடைய குமாரக்கடவுளின், செந்தில் பதியைப்
போல, ஒத்து விளங்குகின்ற (இந்த மங்கையின்), தீமைகளை, உண்டாக்கும், ஜீவ
ராசிகள் செய்யும் பாவங்களாகிய குற்றங்களை, ஆராய்ந்து பார்க்கும், எமனைப்
போல, கண்ணையும், செழிப்பான கரும்பும், இனிய, தேனும், ஓப்பு இல்லாததால்
குற்றம் வரும்படி செய்கின்ற, இனிமையான மொழியும், உன்னால் மடல் எழுத
முடிந்தால், நன்மையாகும். ..



தீட்டப் படாவினி யுன்னாலென் சென்னி கறைப்பிறப்பில்
தீட்டப் படாவி யவரல்லன் யான்றிக்கு நான்மருப்புத்
தீட்டப் படாவி தமுகா சலன்சிறை விட்டவன்றாள்
தீட்டப் படாவி வனையே நினைவன் றிசாமுகனே.
72


ஏ நான்முகனே, இனிமேல், உன்னாலே, என் தலை மேல் விதியாகிய லிபியை,
எழுத வேண்டிய வேலை கிடையாது, ரத்தம் முதலிய கறைகள் சேர்ந்த, இந்த
ஜனனத்தில், அசூசி அடைந்திருக்கின்ற, மற்ற ஜீவன்களைப் போல, நான் ஆக
மாட்டேன், (ஏனெனில்) எட்டு திசைகளிலும், தன்னுடைய நான்கு கொம்புகளையும்,
கூர்மை செய்கின்றதும், அந்த முகப் படங்களையும், அதிலுள்ள வித்திர
எழுத்துக்களையும் கொண்ட, முகத்தை உடைய மலை போன்ற ஐராவதத்தை வாகனமாகக் கொண்ட
இந்திரனின், சிறையை மீட்டின கந்தக் கடவுளின், திருவடிகளை அடைய, என்றும்
அழிவில்லாத இந்த தெய்வத்தையே, உள்ளத்தில் தியானித்திருக்கிறேன். ..



திசாமுக வேதனை யன்பாற் கரன்றிங் கடங்களவ
திசாமுக வேதனை யீறிலு மீறிலர் சீறுமம்போ
திசாமுக வேதனை வென்கண்ட வேலன் றினைப்புனத்தந்
திசாமுக வேதனை நண்ணுதண் கார்வரை சேர்பவரே.
73


நான்கு திசைகளிலும் முகத்தையுடைய, வேதத் தலைவனாகிய பிரம்மனும்,
அவரது தந்தையாகிய திருமாலும், சூரியனும், சந்திரனும், தங்கள் தங்கள், ஆயுள்
முடிந்து, இறந்து போகும், யுகத்தில் துன்பமடையும் காலத்திலும், அழிய
மாட்டார்கள், கோபித்து ஆரவாரம் செய்கின்ற, கடலின் கண் தோன்றி, அழிவைக்
காட்டும் முகத்தை உடையவனும், தேவர்களுக்கு அழிவில்லா துன்பத்தை
விளைவித்தவனுமான சூரனை, ஜெயித்து அழித்த, வேலாயுதத்தை உடைய முருகன்
வசிக்கும், தினைக் காடுகளையும், யானைகளின், கூட்டங்களையும், தன்னுடன்
பொருந்தி இருக்கும், குளிர்ந்த, மேகங்கள் தவழ்கின்ற பழமுதிர் சோலை மலையை,
அடைந்து இடைவிடாது தியானிப்பவர்களே. அழிய மாட்டார்கள்). ..



சேரப் பொருப்பட வித்தே னிறைவன் றிரைசிறையைச்
சேரப் பொருப்பட வல்லவன் சூரைச் சிகரியுடன்
சேரப் பொருப்பட வென்றண்ட ரேத்திய சேவகன்வான்
சேரப் பொருப்பட வேணியிற் சேர்த்தவன் செய்தவமே.
74


சேர ராஜனின், கொல்லி மலையையும் வெள்ளி மலையையும் போன்ற, வள்ளி
மலைக்காட்டில் வாழ்கிற, இனிய மொழிகளை உடைய வள்ளி நாயகியின், காதலனே,
அலையானது, கடற் கரையை, அழிக்கும்படி, மோதுகின்ற, ஒப்பற்ற உப்புக் கடலை,
வற்றும்படி வேலைப் பிரயோகித்த, சாமர்த்தியனே, சூரனை, கிரவுஞ்ச கிரியுடன்,
அடியோடு, போர் செய்து அழியும்படி, ஜெயித்து, தேவர்களால் துதிக்கப்பட்ட, மகா
வீரனே, ஆகாச கங்கையை, ஒன்றாக, சடை மேல், அடக்கி தரித்த பரமசிவன், செய்த
தவத்தால் அவதாரம் செய்தவனே. ..



செய்தவத் தாலஞ்சு சீரெழுத் தோதிலந் தீதலருஞ்
செய்தவத் தாலஞ்சு கம்பெறச் சேயுரைக் கேற்றுருப்போய்ச்
செய்தவத் தாலஞ்சு வைக்கனி யீன்றதென் னேம்வினையே
செய்தவத் தாலஞ்சு கின்றன மும்மலச் செம்மல்கொண்டே.
75


முன்பிறவியில் செய்த தவத்தினால், சீரிய பஞ்சாட்சரத்தை (உபதேசம்
பெற்று), துதிக்கின்றோம் இல்லை, தீமை விளையும், நரக பூமி, அழிந்து போகவும்,
பூவுலகம், நன்மை பெறவும், சம்பந்தராய் அவதரித்து அருளிச் செய்த
தேவாரப்பாட்டினால், ஆண் உருவம் நீங்கி, சிவந்த, அந்தப் பெண்ணுருவாகிய பனை,
இனிய பழத்தை, கொடுத்தது என்று சொல்லி துதிக்கவும் இல்லை (ஆதலால்), தீமைகளை
செய்துகொண்டு, மூன்று மலங்களாகிய, போர்வையை தரித்துக்கோண்டு, ஏற்பட்ட
துன்பத்தால், நடுக்கமுற்று பயந்து கொண்டிருக்கின்றோம். ..
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

அருணகிரிநாதர் நூல்கள் (Arunagirinathar Books) Empty Re: அருணகிரிநாதர் நூல்கள் (Arunagirinathar Books)

Post by மாலதி December 13th 2011, 08:25

செம்மலை வண்டு கடரங்க மாவென்ற திண்படைவேற்
செம்மலை வண்டு வசவார ணத்தனைச் செப்பவுன்னிச்
செம்மலை வண்டு தவந்தமிழ்ப் பாணதெண் டீங்கையில்வாய்
செம்மலை வண்டு விருப்புறு மோவிது தேர்ந்துரையே.
76


சிவந்த கிரவுஞ்ச கிரியையும், சங்கினங்கள், உலாவுகின்ற,
சமுத்திரத்தின் கண், மா மரமாய் நின்ற சூரபத்மனை ஜெயித்த, வலிய படையாகிய,
வேலாயுதக் கடவுளை, வளப்பமான சேவல் கொடியை உடைய குமாரக் கடவுளை, புகழ்ந்து
பாடுவதற்கு நினைத்து, மனதைப் புதைத்து விடாதே மூடுதல், செம்மல் மூடாதே),
குற்றம் நீக்கப் பட்ட, அழகிய தமிழ்ப் பாட்டுக்களை இசைக்கும் பாணனே,
தெளிவாகவும் இனித்திருந்தும், கைக்கு அருகில் வாய்த்திருந்தும், பழைய பூவை,
சுரும்பினங்கள் (வண்டு இனங்கள்), இச்சிக்குமோ? இந்த உண்மையை, நீ ஆராய்ந்து
பார்த்து, அந்த முருகனையே நீ புகழ்ந்து பாடுவாயாக. ..



தேரை விடப்பணி யேறேறி முப்புரஞ் செற்றபிரான்
தேரை விடப்பணி சூராரி யென்க தெரிவையர்பால்
தேரை விடப்பணி வாய்ப்படு மாறு செறிந்தலகைத்
தேரை விடப்பணித் தென்றோடி யென்றுந் திரிபவரே.
77


தேவர்கள் கூடி நிர்மாணித்து கொடுத்த ரதத்தை, அச்சு முறியும்படி
பண்ணி, திருமாலாகிய ரிஷபத்தில் ஏறி, திரிபுரங்களையும் சிரித்து அழித்த,
பெருமானாகிய சிவனுக்கு, பிரணவப் பொருள் தெரியும்படி உபதேசித்த, சுவாமியே,
சொல்லத் தகும், தேவர்களைத் துன்புறுத்தி சிறையிலிட்ட குற்றத்தை,
தரித்திருந்த, சூரனை அழித்தவனே, என்று துதித்து பாடுங்கள், காம இச்சையால்
விலைமகளிரிடம் சென்று, தவளையானது, விஷப் பாம்பின், வாயில் சிக்கிக் கொண்டது
போல, அந்த பரத்தையர்களின் வலையில் சிக்கிக் கொண்டு, பேய்த் தேரையாகிய
கானல் நீரை, ஊறுகின்ற ஜலமானது, பக்கத்தில் இருக்கிறது என்று நினைத்து ஓடி
ஓடிப் போய் வருத்தப்படுகின்ற மக்களே. ..



திரிபுரத் தப்புப் புவிதரத் தோன்றி சிலைபிடிப்பத்
திரிபுரத் தப்புத் தலைப்பட நாண்டொடுஞ் சேவகன்கோத்
திரிபுரத் தப்புத் திரமான் மருக திருக்கையம்போ
திரிபுரத் தப்புத் துறையா யுதவெனச் செப்புநெஞ்சே.
78


எப்போதும் திரிவாயாக, கடல் சூழ்ந்த, உலகை சிருஷ்டிக்குமாறு, பூர
நாளில் அவதரித்த பார்வதி தேவியை, தனது உள்பாகமாகிய இடது கையால் மேருவாகிய
வில்லைப் பிடிக்கச் செய்து, திரிபுரங்களின் மேல், விஷ்ணுவாகிய பாணத்தை,
பிரயோகம் செய்யும் பொருட்டு, தனது பாகம் ஆகிய வலது கையால் ஏற்றிட்ட, மகா
வீரனாகிய பரமசிவனின், திருச்செங்கோட்டு மலையை வாசஸ்தலமாகக் கொண்ட, அந்த
சாமர்த்தியசாலியான மைந்தனே, திருமாலின் மருகனே, திருக்கை என்னும் மீன்
இனங்கள் வாழும், சமுத்திரத்தில், பகைவர்களாகிய அசுரர்களின் ரத்தத்தையே
புதிய உறையாகக் கொண்ட, வேலாயுதனே, என்று புகழ்ந்து கொண்டு ஏ நெஞ்சமே
என்றும் திரிவாயாக). ..



செப்பா ரமுதலை மன்னோ திகனங் குரும்பைமுலை
செப்பா ரமுதலை கண்கா னகைமுருந் தீரிருகண்
செப்பா ரமுதலை வாவியிற் சென்ற பிரான்மருகன்
செப்பா ரமுதலை வேர்களை வான்வரைச் சீரினுக்கே.
79


பேசுகின்ற மொழி, இனிய அமுதம் போன்றது, இருண்ட நிறமும், அழகும்,
நிலை பெற்றிருக்கும், கூந்தல், மேகம் போன்றது, தென்னங் குரும்பை போன்ற
தனபாரம், சிமிழைப் போன்றது, முத்துக்கள் நிறைந்த, பழமையான சமுத்திரம்
போன்றது, இவளுடைய கண், ஓளிவீசுகின்ற பல் வரிசை, மயில் இறக்கையின்
அடிப்பாகம் போன்றது, நான்கு கண்களை உடைய, சிவந்த பெரிய முதலை (யின் வாயில்
சிக்கிய), (கஜேந்திரனைக் காப்பாற்றும்பொருட்டு) தடாகத்திற்கு, விரைந்து
சென்ற திருமாலின் மருகனும், தன்னை மிகவும் புகழ்ந்து பாடியவர்களின்,
பிறப்பிற்கு மூலமான வினைத்தொகையை, அடியோடு நிர் மூலமாக்கும் கந்தக்
கடவுளின், மலையில் வாழும், இந்தச் சிறந்த பெண்ணிற்கு. ..



சீராம ராம சிவசங்க ராநுந் திருமுடிக்குச்
சீராம ராம துகரத் துழாயென்பர் தெண்டிரைமேற்
சீராம ராம நிறந்திறக் கத்தொட்ட சேய்கழற்குச்
சீராம ராம னிமையோர் மகுடச் சிகாவிம்பமே.
80


லட்சுமி நாயகனாகிய, அழகான, திருமாலே, பரம சிவனே, உங்கள்
சென்னிக்கு, அழகாக அமைந்திருக்கின்றன, கங்கா ஜலமும், சரப் பாபரணமும்,
தேன்விளங்கும் துளசி மாலையும், என்று உலகில் சொல்லுவார்கள், தெள்ளிய அலைகளை
உடைய கடலின்கண், மா மரமாய் நின்ற சூரபத்மாவின், மார்பைத் துளைக்கும்படி,
உடை வாளை, பிரயோகித்த, குமாரக்கடவுளின் திருவடிகளுக்கு, அணிகலமாக
அமைந்திருப்பவை, நெருங்கிய, நிலை பெற்ற, தேவர்களின், கி¡£டமணிந்த, தலைகளின்
வட்ட வடிவமான வரிசைகளே. ..



சிகாவல வன்பரி தப்பாடு செய்யுஞ்செவ் வேலவிலஞ்
சிகாவல வன்பரி வூரார் மதனித் திலஞ்சலரா
சிகாவல வன்பரி யங்கங் குழல்பெற்ற தேமொழிவஞ்
சிகாவல வன்பரி யானல மன்றிலுந் தென்றலுமே.
81


மயில் வாகனனே, அடியார்களிடத்தில், இன்னருளைக் காட்டும், சிறந்த
வேலாயுதத்தை உடையவனே, இலஞ்சிப் பதிக்கு அதிபனே, என்னை இழி சொற்களால்
பேசும், இந்த ஊர் மக்களும், மன்மதனும், முத்துக்கள் நிறைந்த சமுத்திரமும்,
சோலைகளும், சந்திரனும், கட்டிலும், இரவில் ஒலிக்கும் புல்லாங்குழல்
ஓசையும், என்னைப் பெற்றெடுத்த இனிய மொழியை உடைய, தாயாரின், காவலும், பெரிது
அல்ல, காமச்சின்னமாகிய அன்றில் பறவையும், காமனின் தேராகிய தென்றல்
காற்றும், கொடிய குதிரை முகத்தை உடைய, வடவாமுகாக்னியைப் போல என்னை
வருத்துகின்றன. ..



தென்றலை யம்பு புனைவார் குமார திமிரமுந்நீர்த்
தென்றலை யம்புய மின்கோ மருக செழுமறைதேர்
தென்றலை யம்பு சகபூ தரவெரி சிந்திமன்றல்
தென்றலை யம்பு படுநெறி போயுயிர் தீர்க்கின்றதே.
82


வண்டுகள் இசை பாடுகின்ற, சென்னியின் கண், கங்கா ஜலத்தை,
தரித்திருக்கும் பரமசிவனின், மைந்தனே, இருளின் நிறம் கொண்ட, கடலால்
சூழப்பட்ட, அழகிய, பூமா தேவிக்கும், தாமரையில் வசிக்கும் ஸ்ரீதேவிக்கும்,
தலைவனாகிய திருமாலின், மருகனே, வளமையான வேதங்கள் எல்லாம், பூஜிக்கும்,
தெற்குத் திசைக் கண் இருக்கும், சிறந்த, சர்ப்பம் போல் காட்சி அளிக்கும்
செங்கோட்டு அதிபனே, அக்னியைக் கொட்டிக்கோண்டு, மணம் நிரம்பிய, தென்றல்
காற்று, காமனின் ஐந்து பாணங்களும், என் உடலில் தைத்த புண்வழியே போய், என்
உயிரை வருத்திப் போக்குகிறது. ..



தீரா கமல சலிகித போக மெனத்தெளிந்துந்
தீரா கமல மெனக்கரு தாததென் சேயவநூல்
தீரா கமல குகரம் பொறுப்ப னெனத்திருக்கண்
தீரா கமல மரவே கருகச் சிவந்தவனே.
83


தாமரையில் உற்பவித்த பிரம்மனால், தலையில் எழுதப்பட்ட, அனுபவ
பிராப்தம், ஒருகாலும் மாறாது, என்று அறிந்திருந்தும், என்னுடைய புத்தி,
மென்மேலும் ஆசைப் படுவதினால், பயன் ஏதும் இல்லை என்று, நினைக்காததற்கு என்ன
காரணம்? சேயோனே, பயனற்ற சாத்திரங்களை, அழித்துவிடும், ஆகம நூல்களை
அருளியவனே, அக்னி தேவன் .. இந்தத் தீப்பொறி மிகவும் அற்பமானது, என்
கரத்தால் மிகவும் சுலபமாகத் தாங்கிச் செல்வேன், .. என்று மமதையுடன் சொல்ல,
தன்னுடைய சிவந்த கண்களினால், அந்த அக்னியின், நிறமும் காந்தியும்,
வருத்தமுறவே, கருகிப் போகும்படி கோபித்தவனே. ..



சிவசிவ சங்கர வேலா யுததினை வஞ்சிகுறிஞ்
சிவசிவ சங்கர வாமயில் வீர செகந்திருக்கண்
சிவசிவ சங்கர மாவை யெனுந்திற லோய்பொறைவா
சிவசிவ சங்கர மான்பட்ட வாவொளி சேர்ந்தபின்னே.
84


ஏக வஸ்துவாகிய, சிவபெருமானிடத்தில், ஜெனித்து, வேலாயுதத்தைக்
கரத்தில் பிடித்தவனே, தினைப்புனத்தைக் காத்து வந்த, வஞ்சிக் கொடி போன்ற,
குறிஞ்சி நிலத்தில் வசித்து வந்த வள்ளி நாயகியின், பக்கத்தை விட்டு
நீங்காத, மயில் வீரனே, இவ்வுலகத்தில் சென்று, உன் சிவந்த விழியால்,
எல்லாவற்றையும் அழித்து வந்த மா மரமாக நின்ற சூரபத்மனை, கோபி கோபி
(கோபிப்பாயாக), என்று கூறி வேலாயுதத்தை ஏவிய, வலிமையுடைய வீரனே, மிகுந்த
பொறுமை என்னும், பாணத்தின், கூர்மையினால் அடிபட்டு, கோபம் எனகிற மிருகம்,
விழுந்து விட்டது, உன்னுடைய அருட் பிரகாசம் என்னிடம் கலந்தவுடனே. என்ன
ஆச்சரியம் ..



சேந்த மராத்துடர் தானவர் சேனையைத் தெண்டிரைக்கண்
சேந்த மராத்துடன் கொன்றசெவ் வேல திருமுடிமேற்
சேந்த மராத்துட ரச்சூடி மைந்த திளைத்திளைத்தேன்
சேந்த மராத்துட ரின்னாரி யென்னுமிச் சேறுபுக்கே.
85


கந்தக் கடவுளே, கடப்ப மாலையை அணிந்து, அசுரர்களின் கூட்டத்தை,
தெளிந்த அலைகளை உடைய சமுத்திரத்தில், கண்கள் கோபத்தால் சிவந்து, அந்த, மா
மரமாய் நின்ற சூரனுடன், போரிட்டு கொன்ற அழகிய வேலாயுதத்தை உடையவனே, அழகிய
ஜடையின் மேல், இளம் பிறை, கங்கா ஜலம், சர்ப்பங்கள், இவைகள் எல்லாம்
(நடனமாடும்போது) துள்ளிக் குதிக்கும்படி, சூடி இருக்கும் பரமசிவனின்
குமாரனே, சுற்றமாக பற்றிக் கொள்ளும், மனை வாழ்க்கை, பெண்டிர், என்று
சொல்லப்படுகின்ற, இந்தப் பிரபஞ்ச சேற்றில், மெலிந்து வருந்துகிறேன்,
என்னைக் காத்தருள்வாயாக. ..



சேறலைத் தாறலைக் கப்பா லெழுந்து செழுங்கமுகிற்
சேறலைத் தாறலைக் குஞ்செந்தி லாய்சிந்தை தீநெறியிற்
சேறலைத் தாறலைக் தீர்க்குங் குமார திரியவினைச்
சேறலைத் தாறலைக் கத்தகு மோமெய்த் திறங்கண்டுமே.
86


சேற்றை, உழக்கி, ஆற்றின் அலையில், மேலே எழுந்து, வளப்பமான, பாக்கு
மரத்தில், சேல் மீன்கள், மரத்தின் உச்சியில் இருக்கும், குலைகளை, மோதித்
தாக்கும், செந்திற் பதியோனே, என் சித்தமானது, கெட்ட மார்க்கத்தில், போய்ச்
சேருவதையும், அளவில்லாத அஞ்ஞான இருளை அடைவதையும், நீக்குகின்ற
குமாரக்கடவுளே, மாறுபடும்படி, இருவினைகளால் ஏற்படும் பிரபஞ்சச் சேற்றில்,
என்னை உழல வைத்து, வழிப்பறி செய்பவர் போல் என் உயிரைப் போக்கிவிடத் தகுமோ?
உன்னுடைய அருட் பிரகாசத்தின் உண்மைத் திறனை உணர்ந்து அதுவே பற்றுக் கோடாகக்
கருதி இருக்கும் என்னை (ஆறலைக்கத் தகுமோ?). ..



திறம்பா டுவர்தண் புனத்தெய்வ மேயென்பர் சேதத்துமாந்
திறம்பா டுவர்முது நீரெனக் காய்பவர் செந்தினைமேல்
திறம்பா டுவரிதழ் கண்டுரு காநிற்பர் செப்புறச்செந்
திறம்பா டுவரி லிவர்வல் லவர்நஞ் செயல்கொள்ளவே.
87


உன்னுடைய சாமர்த்தியத்தைப் புகழ்ந்து பேசுகின்றார், குளிர்ந்த
தினைப் புனத்தில் வாழுகின்ற தேவதையே என்று புகழ்கின்றார் (இவர் யார்
எனில்), என்றும் கெடுதலையையே செய்து வந்த, மா மரமாய் நின்ற சூரபத்மாவை,
தன்னுடைய சுற்றத்தாருடன், உவர்ப்பை உடைய, பெரிய சமுத்திரத்தில், அழிந்து
போனான், என்று தேவர்கள் எல்லாம் பேசும்படியாக, அவனை அழித்த கந்தக் கடவுள்
ஆவார், செழுமையான தினைப் புனத்திலிருந்து, நீங்கிச் செல்லாத, (ஏ வள்ளி
நாயகியே), பவளம் போன்ற, உன்னுடைய அதரத்தைப் பார்த்து, ஏதாவது மறு மொழி
வராதா என்று, சித்தம் குலைந்து நிற்கின்றார் (இப்பேற்பட்டவர்),
திருச்செந்தூராகிய தம் பதியிலும் இதே அன்பைக் காட்டினால், நம்முடைய
உபசாரத்தைக் கொள்ள, இவர் தகுதி உள்ளவரே. ..



செயலங்கை வாளை யிறைகோயி லைச்சிவ னாரமுதைச்
செயலங்கை வாளை முனிகொண்டல் வாளியைத் தேவர்பிரான்
செயலங்கை வாளை முனைவேலை யன்னவிச் சேயுறையுஞ்
செயலங்கை வாளை யுகள்செந்தில் வாழ்பவள் சேல்விழியே.
88


சேற்றில் உண்டாவதும், அழகுள்ளதும், ஒப்பற்றதும், ஒளி வீசுவதும்,
சிரேஷ்டதுமான, பிரம்மாவின் இருப்பிடமான தாமரையைப் போலவும், சிவபெருமான்
அமுதைப்போல உண்ட ஆலகால விஷத்தைப் போலவும், வெற்றி நிரம்பிய, லங்காபுரியின்,
பிரகாசம் பொருந்திய அழகை, கோபித்து அழித்த, மேக வர்ணனாகிய ஸ்ரீராமனின்,
பாணத்தைப் போலவும், இந்திரனின், போர் புரியும், கையில் தரித்திருக்கும் உடை
வாளைப் போலவும், கூர்மையான வேலாயுதத்தைப் போலவும், ஒத்திருக்கின்றன, இந்த
முருகக் கடவுள் வீற்றிருக்கும், நிலத்தை (உழுகின்ற), கலப்பையை, மோதிக்
கோபிக்கின்ற, வாளை மீன்கள், ஊறுகின்ற, செந்தில் பதியில், வசிக்கின்ற
(இப்பெண்ணின்), சேல் கெண்டை மீன் போன்ற இரு கண்களுமே. ..



சேலையி லாருந் தவன்சூல மேறச் சினத்தவன்கண்
சேலையி லாருந் திவனோற் பவையர சிந்திரியச்
சேலையி லாரும் பராபரி புக்குறச் சிக்கெனுமிச்
சேலையி லாருந் திறையிட் டனர்தங்கள் சித்தங்களே.
89


அசோக மரத்தை இருப்பிடமாகக் கொண்ட அமணர்கள், உயர்ந்த, அந்த வலிய
கழுவில் ஏறி மடியும்படி, சம்பந்தப் பிள்ளையாக அவதரித்து தேவாரம் பாடி
ஜெயித்தவன், விழியானது, சேல் மீனையும் வேலாயுதத்தினையும் ஒத்த கூரிய விழியை
உடைய, காட்டாற்றின் வளப்பத்தை உடைய வள்ளிமலைக் காட்டில் அவதரித்த வள்ளி
நாயகியின், நாயகன், பஞ்சேந்திரியங்களின் சேஷ்டைகளை, நீக்கிய தவ
சிரேஷ்டர்களுக்கும், தேவர்களுக்கும் ஏற்பட்ட, ஆபத்துக்களுக்குக் காரணமான,
சத்துருவாகிய சூரபத்மாவை, குற்றும்படி, இறுக்கக்கட்டிய, பிதாம்பரப்
பட்டில், எல்லா மாதர்களும், தங்கள் தங்கள் உள்ளங்களை, கப்பமாக
செலுத்திவிட்டனர். ..



சித்தத் தரங்கத்தர் சித்தியெய் தத்திரி கின்றதென்னர்ச்
சித்தத் தரங்கத்தர் சந்ததி யேசெந்தி லாய்சலரா
சித்தத் தரங்கத்த ரக்கரைச் செற்றகந் தாதிங்களிஞ்
சித்தத் தரங்கத்தர் சேயா ரணத்தந் திகிரியையே.
90


கடல் அலை போல் அலைகின்ற மனதை உடையவர் மோட்சம் அடையும் பொருட்டு,
வெளி பூஜை மட்டும் செய்து வீணாக காலத்தைப் போக்குவதால் என்ன பயன்?
எல்லோருக்கும் இறைவனாகிய, எலும்பு மாலை பூண்ட சிவபெருமானின், குழந்தையே,
செந்திலாண்டவனே, சமுத்திரத்தின் கண், தங்கள் தங்கள் பெருமையை, கூறி
ஆர்ப்பாரித்து வந்த, அசுரர்களை, அழித்த கந்தக் கடவுளே, சந்திரன், கோயில்
மதில் மேல், தவழ்ந்து செல்லும் (அந்த அளவிற்கு உயர்ந்துள்ள),
ஸ்ரீரங்கநாதரின், பிள்ளையாகிய பிரம்மா (ஓதும்), வேதங்கள் பூஜிக்கும்,
பாம்பு போன்ற செங்கோட்டு மலையில் வசிக்கும், சுவாமியே. ..



திகிரி வலம்புரி மாற்கரி யார்க்குப தேசஞ்சொன்ன
திகிரி வலம்புரி செய்யா ரிலஞ்சிசெந் தூர்கனதந்
திகிரி வலம்புரி வேறும் படைத்தருள் சேய்தணியில்
திகிரி வலம்புரி சூடிய வாநன்று சேடியின்றே.
91


சக்ராயுதத்தை, வலக் கையில், தரித்துள்ள, திருமாலால், தேடி கண்டு
கொள்ள முடியாத (பரமசிவனுக்கு), பிரணவப் பொருளை உபதேசித்த, சுவாமிமலைப் பதி,
வலம்புரி சங்குகள், வயல்களில், நிறைந்திருக்கும், இலஞ்சிப் பதி,
திருச்செந்தூர், மேகங்கள் சூழ்ந்த சர்ப்பம் போன்ற திருச்செங்கோடு,
திருவலம், வேறு பல தலங்களையும் சிருஷ்டித்து அருள் செய்த, குமாரக்
கடவுளின், திருத்தணியில், மூங்கில், நந்தியாவட்டை மலரை, சூடி இருக்கும்
குறிப்பு, இத்தினத்தில் நன்றாக அமைந்திருக்கிறது, தோழியே. ..



சேடி வணங்கு வளைத்தோ ளெனப்புணர் சேயவட
சேடி வணங்கு திருத்தணி காவல நின்செருக்காற்
சேடி வணங்கு கொடியிடை யாரையென் செப்புமுலைச்
சேடி வணங்கு தலைக்களி றீந்தது செல்லநில்லே.
92


அழகாக இருக்கிறது, இந்த மங்கையின், வளை அணிந்த தோள்கள், என்று
மகிழ்ந்து சொல்லி முன்பு தேவைப்பட்ட காலத்தில் என்னைப் புணர்ந்த, குமாரக்
கடவுளே, வெள்ளி மலையின் வட பாரிசத்தில் வாழும் வித்யாதரர்கள், வணங்குகின்ற,
தணிகை மலைக்கு அதிபனே, நீ தழுவின பெருமிதத்தால், இருமாப்புக் கொண்டு,
துவளுகின்ற, கொடி போன்ற இடையை உடைய பரத்தையரை, நான் நிந்தித்துப் பேச என்ன
இருக்கிறது? எனது மார்பகத்தின் திரட்ச்சியை, இந்த மாதிரியாகக்
குலைக்கும்படி, மழலை மொழி பேசும் இந்த பாலகன், செய்து விட்டான், என்
அருகில் வராமல், அவ்விடத்திலேயே நின்று கொள். ..



செல்லலை யம்பொழில் சூழ்செந்தி லானறி யானிறைகைச்
செல்லலை யம்பொழி லெங்கணு மேற்ப வெனத்தெறித்த
செல்லலை யம்பொழி லங்கைக் கருடிரு மானிறம்போற்
செல்லலை யம்பொழி லாகவ மாதுயிர் சேதிப்பதே.
93


மேகத்தை, அசைக்கின்ற, அழகிய சோலைகள், சூழ்ந்த, செந்திற்பதியான்,
அறிகின்றானில்லை, உலகம் எங்கும், பிச்சை வாங்குவதற்காக, போக வேண்டாம்,
என்று சொல்லி, சிவபெருமானின் கையிலுள்ள பிரம்ம கபாலத்தில், தனது ரத்தத்தை
ஒழுக விட்டவரும், துன்பத்தையும், பயத்தையும், பெருமை வாய்ந்த
லங்காபுரிக்கு, உண்டாக்கியவருமாகிய, மகாவிஷ்ணுவின், கரிய நிறத்தை, போல
விளங்குகின்ற, இருள் நேரத்தில், மன்மதனின் ஐந்து பாணங்களும், மிக நுட்பமான
இந்தப் பெண்ணின், பிராணனாது, அழிந்து போகும்படி, வருத்தி நீக்குகிறதை,
(செந்திலான் அறிகின்றானில்லை). ..



சேதிக் கனைத்து களதாக்கு நோக்கினன் செல்வசெந்திற்
சேதிக் கனைத்து நிலைபெறச் சூரங்கஞ் சீரங்கமால்
சேதிக் கனைத்து வரிதோ யயில்கொடெற் சேர்க்கவந்தாற்
சேதிக் கனைத்து வருமா மறலி திறலினையே.
94


சிவந்த கரும்பு வில்லை உடைய மன்மதனை, சாம்பலாகச் செய்த, நெருப்பு
விழியை உடைய சிவபெருமானின், குமாரனே, எட்டு திக்குகளும் முன்போல ஸ்திரமான
நிலையை அடையவும், ஸ்ரீரங்கநாதராகிய திருமாலின், குமாரனாகிய பிரம்மா,
திகைப்பை அடையவும், சூரபத்மாவின் உடலை, அழித்து, பின்பு சமுத்திரத்தில்
குளித்து வந்த, வேலாயுதத்தைக் கையில் ஏந்திக் கோண்டு, எம தூதர்கள் என்னைப்
பிடித்துப் போக வந்தால், பெரிய சப்தத்தைப் போட்டு கடகொண்டு, எருமை
வாகனத்தில் வரும், எமனுடைய வலிமைத் திறனை, நீ கண்டித்து அடக்க வேண்டும். ..



திறவா வனக புரிவாச னீக்கச் சிகரிநெஞ்சந்
திறவா வனச முனியைவென் றோய்தென் றிசைத்திருச்செந்
திறவா வனமயி லோயந்த காலமென் சிந்தைவைக்கத்
திறவா வனநின் றிருவான தண்டைத் திருவடியே.
95


பாபமற்ற கைலாயத்தின், கதவைப் திறப்பதற்கு, திறவு கோலானவனே,
கிரவுஞ்ச கிரியின் மார்பு, பிளக்கும்படி செய்து, ஆச்சரியமான விதத்தில்,
தாமரையில் வாழும் பிரம்மனை, ஜெயித்தவனே, தெற்கு திசையிலிருக்கும், செந்தில்
பதியை விட்டு, நீங்காத, அழகிய மயில் வாகனத்தை உடையவனே, எனது உடல் அழியும்
அந்தக் கடைசி காலத்தில், என்னுடைய மனதை, ஒருவழி படுத்த, அடைக்கல ஸ்தானம்
எது எனில் உன்னுடைய மங்களகரமான, தண்டை அணிந்த திருத் தாள்களே. ..



திருக்கையம் போதிக ளோகஞ்ச மோநஞ்ச மோதிருமால்
திருக்கையம் போசெய்ய வேலோ விலோசனந் தென்னனங்கத்
திருக்கையம் போருகக் கைந் நீற்றின் மாற்றித்தென் னூல்சிவபத்
திருக்கையம் போக வுரைத்தோன் சிலம்பிற் சிறுமிதற்கே.
96


திருக்கை என்னும் மீன்கள் வாழும், கடல்களோ? தாமரைகளோ? விடமோ?
மஹாவிஷ்ணுவின் கையில் உள்ள கூரிய பாணமோ? சிவந்த வேலாயுதமோ? கண், கூன்
பாண்டியனின் முதுகில் இருந்த கூனாகிய விகாரத்தை, தாமரை போன்ற, தன்
திருக்கையில் தரித்த விபூதியினால், நேர்படச் செய்தவரும், தமிழ் நூலாகிய,
சிவ பக்தியை உண்டாக்கும், ருக்கு வேத சாரமாகிய தேவாரப் பாக்களை, பர தெய்வம்
யார் என்கிற சந்தேகத்தைத் தீர்த்து, சம்பந்தப் பிள்ளையாராக மொழிந்தருளிய
குமாரக்கடவுளின், மலையின்கண் வாழும், இந்த இளம் பெண்ணின் கண்). ..



சிறுமிக் குமர நிகர்வீர் பகிரச் சிதையுயிர்த்துச்
சிறுமிக் குமர சரணமென் னீருய்விர் செந்தினைமேற்
சிறுமிக் குமர புரைத்துநின் றோன்சிலை வேட்டுவனெச்
சிறுமிக் குமர வணிமுடி யான்மகன் சீறடிக்கே.
97


அற்பமான, சிறு உமியைக் கூட, தர்மம் செய்வதற்கு மனமில்லாமல்,
மரத்தைப்போல ஈவு இரக்கம் இல்லாமல் இருப்பவர்களே, அழிந்து போவதும் ஜீவனுக்கு
ஒதுங்கிடமான (இந்த தேகத்தில்), தும்மல் எற்படும் போதிலாவது, முருகா உன்
அடைக்கலம் என்று சொல்லுங்கள், அதன் மூலமாக நற்கதி அடைவீர்கள், சிவந்த
தினைப்புனத்தில் வாழும், வள்ளி நாயகிக்கு, தன்னுடைய வம்ச பரம்பரையை எடுத்து
உரைத்து அவளுடைய அன்பை வேண்டி, நின்றவனும், வில்லைத் தரித்த கண்ணப்ப
நாயனார், தான் முதலில் ருசி பார்த்து நைவேத்தியமாகக் கொடுத்த மாமிசத்தை,
மிகவும் களிப்புடன் உண்டவரும், மேன்மையான விதத்தில், சர்ப்பத்தைத் தரித்த
சடையை உடைய சிவபெருமானின், மைந்தனாகிய கந்தக் கடவுளின், சிறிய திருவடிகளை
தியானித்துக் கொண்டே (தும்மும் போது 'குமரா சரணம்' என்று சொல்லுங்கள்). ..



சீரங்க ராக மறமோது திகிரி செங்கைகொண்ட
சீரங்க ராக மருகந்த தேசிக செந்தினைமேற்
சீரங்க ராக தனகிரி தோய்கந்த செந்தமிழ்நூற்
சீரங்க ராக விநோதவென் பார்க்கில்லை தீவினையே.
98


கலப்பையையும், முதலையின், தலையை, அற்று விழும்படி, எதிர்த்து
தகர்த்த, சக்ராயுதத்தை, அழகிய கையில் தரித்திருக்கும், ஸ்ரீரங்கநாதராகிய
திருமாலும், சிவாகமங்களை அருளிச் செய்த சிவபெருமானும், மன மகிழ்ச்சி
கொள்ளும் ஆச்சார்ய மூர்த்தியே, செழுமை மிக்க தினை புனத்தில் வாழும்,
வாசனைத் திரவியம் பூசிய, மலை போன்ற மார்பகங்களை அணைத்த, கந்தக் கடவுளே,
சிறந்த தமிழ் பனுவல்களில் சொல்லப்படும், சீர் முதலிய எட்டு வகைகளிலும்
வல்லவனாகிய கவி சிரேஷ்டனனே, இசைப் பிரியனே, என்று துதிப்போருக்கு,
தீவினைகள் கிட்ட அணுகாது. ..



தீவினை யற்ற சினந்தீ ரகத்துண்மெய்த் தீபநந்தந்
தீவினை யற்ற வநந்தா தெடுத்தனஞ் செந்தினைமேல்
தீவினை யற்ற புனமான் கொழுநன் செழுங்கனகத்
தீவினை யற்ற வடியார்க் கருள்பெருஞ் செல்வனுக்கே.
99


அக்னியானது, தனது இயல்பாகிய எரிக்கும் தன்மையை விட்டது போல்,
கோபத்தை அடியோடு ஒழித்த, உள்ளத்துள், சத்யம் என்கிற ஞான விளக்கை, அணைந்து
விடாமல் எப்போழுதும் பிரகாசிக்கும்படி, நம்முடைய, தீ வினையாகிய, இருள்,
நீங்கும்படி, ஏற்றி வைத்தோம், வளமையான தினைப் புனத்தில், தீர்ந்து போகாமல்
எப்போழும் பசுமையாகவே இருக்கும், தினைப்புனத்தில் வாழும், மான் போன்ற வள்ளி
நாயகியின், மணாளனும், உலக பசு பாச தொந்தங்களை அடியோடு நீக்கின
அடியார்களுக்கு, செழுமையான பொன் போல் பிரகாசிக்கும் மோட்ச வீட்டை, வரமாகக்
கொடுக்கும், முக்திச் செல்வனான முருகப்பெருமானுக்கு (மெய்த் தீபம்
எடுத்தனம்). ..



செல்வந் திகழு மலநெஞ்ச மேயவன் றெய்வமின்னூர்
செல்வந் திகழு நமதின்மை தீர்க்கும்வெங் கூற்றுவற்குச்
செல்வந் திகழுந் திருக்கையில் வேறினை காத்தசெல்வி
செல்வந் திகழு மணவாள னல்குந் திருவடியே.
100


ஏ மனமே, சென்று, கந்தக் கடவுள் இப்பூவுலகத்தில் சம்பந்தராக
அவதரித்த சீர்காழிப் பதியை, துதிப்பாயாக (அதன்), அந்தக் குமரக் கடவுளின்
தெய்வீக நாயகியாகிய தேவசேனை, ஊர்ந்து செல்லும், மேகங்கள், நல்ல மழையைப்
பொழிந்து, மிகவும் இகழ்ச்சிக்கிடமான, நம்முடைய வறுமை என்கிற நிலையை, போக்கி
விடும், கொடிய எமன், நம் மேல் செலுத்தும் நரக தண்டனையை, அவனுடைய கை
வேலாயுதமானது, போக்கி விடும், பக்திப் பயிரைக் காத்து வளர்த்த வள்ளி
நாயகியின், பெரும் பேறாக விளங்கும், மணாளனாகிய முருகப் பெருமான், குக
சாயுச்சியமாகிய தனது சரணங்களைக் கொடுத்து அருளுவான். ..





கந்தர் அந்தாதி முற்றும்.
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

அருணகிரிநாதர் நூல்கள் (Arunagirinathar Books) Empty கந்தர் அலங்காரம்

Post by மாலதி December 13th 2011, 08:28


அருணகிரிநாதர் நூல்கள் (Arunagirinathar Books) Murugan2








அருணகிரிநாதரின் கந்தர் அலங்காரம் என்ற நூலில் முருகனே குருவாக இருந்து
ஞானஉபேதசத்தை உபதேசிக்கப் பெற்ற முறையும், உபதேசம் பெறப்பட்ட நிலையும்
மிகத் தெளிவாகக் காட்டப் பெற்றுள்ளன. இவ்வலங்காரம் அருணகிரிநாதர் பல
வேளைகளில் பாடிய பாடல்களில் தொகுப்பு என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஆனால்
உபதேசம் பெற்ற நிலையின் அடுத்து இது எழுதப் பெற்றிருக்க வேண்டும் என்ற
கருத்து வலுப்பெறும் நிலையில் இதனுள் பல பாடல்கள் அமைந்திருக்கின்றன.
குறிப்பாக முருகன் சாவின் விளிம்பில் அருணகிரிநாதரைத் தடுத்து
நிறுத்தியபோது அவர் கண்ட அருள் வடிவே அலங்காரமாகப் பாடப் பெற்றுள்ளது
என்பதில் சிறிதும் ஐயமில்லை.





காப்பு


அடலருணைத் திருக் கோபுரத் தேயந்த வாயிலுக்கு
வட வருகிற் சென்று கண்டுகொண்டேன்வருவார் தலையில்
தடபடெனப்படு குட்டுடன் சர்க்கரை மொக்கியகைக்
கடதட கும்பக களிற்றுக் கிளைய களிற்றினையே.


நூல்


பேற்றைத் தவஞ் சற்றுமில்லாத வென்னைப்ர பஞ்ச மென்னுஞ்
சேற்றைக் கழிய வழிவிட்ட வா. செஞ்சடாடவிமேல்
ஆற்றைப் பணியை யிதழியைத் தும்பையை யம்புலியின்
கீற்றைப் புனைந்த பெருமான் குமாரன் க்ருபாகரனே.
1

அழித்துப் பிறக் கவொட்டாவயில் வேலன் கவியையன்பால்
எழுத்துப் பிழையறக் கற்கின்றி வீரெரி மூண்டதென்ன
விழித்துப் புகையெழப் பொங்குவெங் கூற்றன் விடுங்கயிற்றாற்
கழுத்திற் சுருக்கிட் டிழுக்குமன் றோகவி கற்கின்றதே.
2

தேரணி யிட்டுபட புரமெரித் தான்மகன் செங்கையில்வேற்
கூரணி யிட்டணு வாகிக் கிரௌஞ்சங் குலைந்தரக்கர்
நேரணி யிட்டு வளைந்த கடக நௌiந்ததுசூர்ப்
பேரணி கெட்டது தேவேந்தர லோகம் பிழைத்ததுவே.
3

ஓரவொட்டாரொன்றை யுன்னவொட்டார்மலரிட்டுனதான்
சேரவொட்டாரைவர் செய்வதென்யான் சென்று தேவருய்யச்
சோரநிட் டூரனைச் சூரனைக் காருடல் சோரிக்கக்
கூரகட்டாரியிட் டோ ரிமைப் போதினிற் கொன்றவனே.
4


திருந்தப் புவனங்களீன்ற பொற்பாவை திருமுலைப்பால்
அருந்திச் சரவணப் பூந்தொட்டி லேறி யறுவர்கொங்கை
விரும்பிக் கடலழக் குன்றழச் சூரழ விம்மியழுங்
குருந்தைக் குறிஞ்சிக் கிழவனென் றோதுங் குவலயமே.
5

பெரும்பைம் புனத்தினுட் சிற்றேனல் காக்கின்ற பேதை கொங்கை
விரும்புங் குமரனை மெய்யின்பி னான்மெல்ல மெல்லவுள்ள
அரும்புந் தனிப்பர மாநந்தந் திfத்தித் தறிந்தவன்றே
கரும்புந் துவர்த்துச்செந் தேனும் புளித்தறக் கைத்ததுவே.
6

சளத்திற் பிணிபட்டசட்டு க்ரியைக்குட் டவிக்கு மென்றன்
உளத்திற் ப்ரமத்தைத் தவிர்ப்பா யவுண ருரத்துதிரக்
குளத்திற் குதித்துக் குளித்துக் களித்துக் குடித்துவெற்றிக்
களத்திற் செருக்கிக் கழுதாட வேல்தொட்ட காவலனே.
7

ஔiயில் விளைந்த வுயர்ஞான பூதரத் துச்சியின்மேல்
அளியில் விளைந்ததொரா நந்தத் தேனை யநாதியிலே
வௌiயில் விளைந்த வெறும்பாழைப் பெற்ற வெறுந்தனியைத்
தௌiய விளம்பிய வா.. முகமாறுடைத்தேசிகனே.
8

தேனென்று பாகனெfறுவமிக் கொணாமொழித் தெய்வ வள்ளி
கோனன் றெனக்குப தேசித்த தொன்றுண்டு கூறவற்றோ
வானன்று காலன்று தீயன்று நீரன்று மண்ணுமன்று
தானன்று நானன் றசிரீரி யன்று சரீரியன்றே.
9

சொல்லுகைக் கில்லையென் றெல்லா மிழந்துசும்மாவிருக்கு
மெல்லையுட் செல்ல எனைவிட்டவா இகல் வேலனல்ல
கொல்லியைச் சேர்க்கின்ற சொல்லியைக் கல்வரைக் கொவ்வைச்
செவ்வாய்வல்லியைப் புல்கின்ற மால்வரைத் தோளண்ணல் வல்லபமே.
10

குசைநெகி ழாவெற்றி வேலோ னவுணர் குடர்குழம்பக்
கசையிடு வாசி விசைகொண்ட வாகனப் பீலியின்கொத்
தசைபடு கால்பட் டசைந்து மேரு அடியிடவெண்
டிசைவரை தூள்பட்ட அத்தூளின் வாரி திடர்பட்டே
11

படைபட்ட வேலவன் பால்வந்த வாகைப் பதாகையென்னுந்
தடைபட்ட சேவல் சிறகடிக் கொள்ளச் சலதிகழிந்
துடைபட்ட தண்டகடாக முதிர்ந்த துடுபடலம்
இடைப்பட்ட குன்றமு மாமேரு வெற்பு மிடிபட்டவே.
12

ஒருவரைப் பங்கி லுடையாள் குமார னுடைமணிசேர்
திருவரைக் கிண்கிணி யோசை படத்திடுக் கிட்டரக்கர்
வெருவரத் திக்குச் செவிபட் டெட்டு வெற்புங்கனகப்
பருவரைக் குன்று மதிர்ந்தன தேவர் பயங் கெட்டதே.
13

குப்பாச வாழ்க்கையுட் கூத்தாடு மைவரிற் கொட்படைந்த
இப்பாச நெஞ்சனை ஈடேற்று வாயிரு நான்கு வெற்பும்
அப்பாதி யாய் விழ மேருங் குலங்கவிண்ணாரு முய்யச்
சப்பாணி கொட்டிய கையா றிரண்டுடைச் சண்முகனே.
14

தாவடி யோட்டு மயிலிலுந் தேவர் தலையிலுமென்
பாவடி யேட்டிலும் பட்டதன் றோபடி மாவலிபால்
மூவடி கேட்டன்று மூதண்ட கூடி முகடுமுட்டச்
சேவடி நீட்டும் பெருமாள் சிற்றடியே.
15


இடுங்கோ ளிருந்த படியிருங் கோளெரு பாருமுய்யக்
கொடுங்கோபச் சூருடன் குன்றத் திறக்கத் தொளக்கலை வேல்
விடுங்கொ னருள் வந்து தானே யுமக்கு வெளிப்படுமே.
16

வேதா கமசித்ர வேலா யுதன்வெட்சி பூத்ததண்டைச்
பாதார விந்த மரணாக அல்லும் பகலுமில்லாச்
சூதான தற்ற வௌiக்கே யொளித்துச்சும் மாவிருக்கப்
போதா யினிமன மேதெரி யாதொரு பூதர்க்குமே.
17

வையிற் கதிர்வடி வேலோனை வாழ்த்தி வறிஞர்க்கென்றும்
நொய்யிற் பிளவன வேனும் பகிர்மின்க ணுங்கட்கிங்ஙன்
வெய்யிற் கொதுங்க வுதவா வுடம்பின் வெறுநிழல்போற்
கையிற் பொருளு முதவாது காணுங் கடைவழிக்கே.
18

சொன்ன கிரௌஞ்ச கிரியூ டுருவத் தொளுத்தவைவேல்
மன்ன கடம்பின் மலர்மாலை மார்பமௌ னத்தையுற்று
நின்னை யுணர்ந்துணரந் தெல்லா மொருங்கிய நிர்க்குணம் பூண்
டென்னை மறந்திருந் தேனிறந் தேவிட்ட திவ்வுடம்பே.
19

கோழிக் கொடிய னடிபணி யாமற் குவலயத்தே
வாழக் கருது மதியிலி காளுங்கள் வல்வினைநோய்
ஊழிற் பெருவலி யுண்ணவொட் டாதுங்க ளத்தமெல்லாம்
ஆழப் புதைத்துவைத் தால் வருமோநும் மடிப்பிறகே.
20

மரணப்ர மாத நமக்கில்லை யாமென்றும் வாய்த்ததுணை
கிரணப் கலாபியும் வேலுமுண் டேகிண் கிணிமுகுள
சரணப்ர தாப சசிதேவி மங்கல்ய தந்துரக்ஷா
பரணக்ரு பாகர ஞானா கரசுர பாஸ்கரனே.
21

மொய்தர ரணிகுழல் வள்ளியை வேட்டவன் முத்தமிழால்
வைதா ரையுமங்கு வாழவைப் போன்வெய்ய வாரணம்போற்
கைதா னிருப துடையான் தலைபத்துங் கத்தரிக்க
எய்தான் மருகன் உமையாள் பயந்த இலஞ்சியமே.
22

தெய்வத் திருமலைச் செங்கோட்டில் வாழுஞ் செழுஞ்சுடரே
வைவைத்த வேற்படை வானவ னே மறவேனுனைநான்
ஐவர்க் கிடம்பெறக் காலிரண்டோ ட்டி யதிலிரண்டு
கைவைத்த வீடு குலையுமுன் னே வந்து காத்தருளே.
23

கின்னங் குறித்தடி னேfசெவி நீயன்று கேட்கச்சொன்ன
குன்னங் குறிச்சி வௌiயாக்கி விட்டது கோடுகுழல்
சின்னங் குறிக்கக் குறிஞ்சிக் கிழவர் சிறுமிதனை
முன்னங் குறிச்சியிற் சென்றுகல் யாண முயன்றவனே.
24

தண்டாயுதமுந் திரிசூல மும்விழத் தாக்கியுன்னைத்
திண்டாட வெட்டி விழவிடு வேன்செந்தில் வேலவனுக்குத்
தொண்டா கியவென் னவிரோத ஞானச் சுடர்வடிவாள்
கண்டாய டாவந்த காவந்து பார்சற்றென் கைக் கெட்டவே.
25

நீலச் சிகண்டியி லேறும் பிரானெந்த நேரத்திலுங்
கோலக் குறத்தி யுடன்வரு வான் குருநாதன் சொன்ன
சீலத்தை மௌfளத் தௌiந்தறி வார் சிவயோகிகளே
காலத்தை வென்றிருப்பார், மரிப் பார்வெறுங்களே.
26

ஓலையுந் தூதருங் கண்டுதிண்டாட லொழித் தெனக்குத்
காலையு மாலையு முன்னிற்கு மேகந்த வேள் மருங்கிற்
சேலையுங் கட்டிய சீராவுங் கையிற் சிவந்தசெச்சை
மாலையுஞ் சேவற் பதாகையுந் தோகையும் வாகையுமே.
27

வேலே விளங்குகை யான் செய்ய தாளினில் வீழ்ந்திறைஞ்சி
மாலே கொளவிங்ஙன் காண்பதல் லான் மனவாக்குச்செய
லாலே யடைதற் கரிதா யருவுரு வாகியொன்று
போலே யிருக்கும் பொருளையெவ்வாறு புகல்வதுவே.
28

கடத்திற் குறத்தி பிரானரு ளாற்கலங் காதசித்தத்
திடத்திற் புணையென யான் கடந் தேன் சித்ர மாதரல்குற்
படத்திற் கழுத்திற் பழுத்தசெவ்வாயிற் பனையிலுந்தித்
தடத்திற் றனத்திற் கிடக்கும் வெங்காம சமுத்திரமே.
29

பாலென் பதுமொழி பஞ்னெf பதுபதம் பாவையர்கண்
சேலென்ப தாகத் திரிகின்ற நீசெந்தி லோன்றிருக்கை
வேலென் கிலைகொற்ற மயூர மென்கிலை வெட்சித்தண்டைக்
காலென் கிலைமன மேயெங்ங னேமுத்தி காண்பதுவே.
30

பொக்கக் குடிலிற் புகுதா வகைபுண்ட ரீகத்தினுஞ்
செக்கச் சிவந்த கழல்வீடு தந்தருள் சிந்துவெந்து
கொக்குத் தறிபட் டெறிபட் டுதிரங் குமுகுமெனக்
கக்கக் கிரியுரு வக்கதிர் வேல் தொட்ட காவலனே.
31

கிளைத்துப் புறப்பட்ட சூர்மார் புடன்கிரி யூடுருவத்
தொளைத்துப் புறப்பட்ட வேற்கந்த னே துறந் தோருளத்தை
வளைத்துப் பிடித்துப் பதைக்கப் பதைத்த வதைக்குங் கண்ணார்க்
கிளைத்துத் தவிக்கின்ற என்னை யெந்தாள் வந்திரட்சிப்பையே.
32

முடியாப் பிறவிக் கடலிற் புகார்முழு துங்கெடுக்கு
மிடியாற் படியில் விதனப் படார்வெற்றி வேற்பெருமாள்
அடியார்க்கு நல்ல பெருமாள் அவுணர் குலமடங்கப்
பொடியாக் கியபெரு மாள் திரு நாமம் புகல்பவரே.
33

பொட்டாக வெற்பைப் பொருதகந்தா தப்பிப் போனதொன்றற்
கெட்டாத ஞான கலைதரு வாயிருங் காமவிடாய்ப்
பட்டா ருயிரைத் திருகிப் பருகிப் பசிதணிக்குங்
கட்டாரி வேல்வழி யார்வலைக்கேமனங் கட்டுண்டதே.
34

பத்திற் துறையிழிந் தாநந்த வாரி படிவதானால்
புத்தித் தரங்கந் தௌiவதென் றோபொங்கு வெங்குருதி
மெத்திக் குதிகொள்ள வெஞ்சூ ரனைவிட்ட கட்டியிலே
குத்தித் தரங்கொண் டமரா வதிகொண்ட கொற்றவனே.
35

கழித்தோடு மாற்றிற் பெருக்கானது செல்வந் துன்பமின்பங்
கழித்தோடு கின்றதெக்கால நெஞ் சேகரிக் கோட்டுமுத்தைக்
கொழித்தோடு காவிரிச் செங்கோட னென்கிலை குன்றமெட்டுங்
கிழித்தோடு வேலென் கிலையெங்ங னே முத்தி கிட்டுவதே.
36

கண்டுண்ட சொல்லியர் மெல்லியர் காமக் கலவிக்கள்ளை
மொண்டுண் டயர்கினும் வேன் மறவேன் முதுகூளித்திரள்
குண்டுண் டுடுடுடு டூடூ டுடுடுடு டுண்டுடுண்டு
டிண்டிண் டெனக்கொட்டி யாடவெஞ் சூர்க்கொன்ற ராவுத்தனே.
37

நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றன் செயுங்கும ரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்கு முன்னே வந்து தோன்றிடினே.
38

உதித்தாங் குழல்வதுஞ் சாவதுந் தீர்த்தெனை யுன்னிலொன்றா
விதித்தாண் டருள்தருங் காலமுண் டோ வெற்பு நட்டுரக
பதித்தாம்பு வாங்கிநின் றம்பரம் பம்பரம் பட்டுழல
மதித்தான் திருமரு காமயி லேறிய மாணிக்கமே.
39

சேல்பட் டழிந்தது செந்துaர் வயற்பொழில் தேங்கடம்பின்
மால்பட் டழிந்தது பூங்கொடி யார்மனம் மாமயிலோன்
வேல்பட் டழிந்தது வேலையுஞ் சூரனும் வெற்புமவன்
கால்பட் டழிந்ததிங் கென்றலை மேலயன் கையெழுத்தே.
40

பாலே யனைய மொழியார்த மின்பத்தைப் பற்றியென்றும்
மாலே கொண்டுய்யும் வகையறி யேன் மலர்த்தாள் தருவாய்
காலே மிகவுண்டு காலே யிலாத கணபணத்தின்
மேலே துயில்கொள்ளு மாலோன் மருகசெவ்வேலவனே.
41

நிணங்காட்டுங் கொட்டிலை விட்டொரு வீடெய்தி நிற்கநிங்குங்
குணங்காட்டி யாண்ட குருதே சிகனங் குறச்சிறுமான்
பணங்காட்டி மல்குற் குரகுங் குமரன் பதாம்புயத்தை
வணங்லாத் தவைaங்கி தெங்கே யெனக்கிங் ஙன் வாய்த்ததுவே.
42

கவியாற் கடலடைத் தோன் மரு கொனைக் கணபணக்கட்
செவியாற் பணியணி கோமான் மகனைத் திறலரக்கர்
புவியார்ப் பெழத்தொட்ட போர்வேன் முருகனைப் போற்றி யன்பாற்
குவியாக் கரங்கள் வந்தெங்கே யெனக்கிங்ஙன் கூடியவே.
43

தோலாற் கவர்வைத்து நாலாறு காலிற் சுமத்தியிரு
காலா லெழுப்பி வளைமுது கோட்டிக்கைந் நாற்றிநரம்
பாலார்க்கை யிட்டுத் தசைகொண்டு மேய்ந்த அகம்பிரிந்தால்
வேலாற் கிரிதொளைத் தோனிடி தாளன்றி வேறில்லையே.
44

ஒருபூ தருமறி யாத்தனி வீட்டி லுரையுணர்வற்
றிருபூத வீட்டி லிராமலென் றானிரு கோட்டொருகைப்
பொருபூ தரமுரித் தேகாச மிட்ட புராந்தகற்குக்
குருபூத வேலவ னிட்டூர சூர குலாந்தகனே.
45

நீயான ஞான விநோதந் தனையென்று நீயருள்வாய்
சேயான வேற்கந்த னேசெந்தி லாய் சித்ர மாதரல்குற்
றோயா வுருகிப் பருகிப் பெருகித் துவளுமிந்த
மாயா விநோத மநோதுக்க மானது மாய்வயதற்கே.
46

பத்தித் திருமுக மாறுடன் பன்னிரு தோள்களுமாய்த்
தித்தித் திருக்கு மமுதுகண் டேன்செயன் மாண்டடங்கப்
புத்திக் கமலத் துருகிப் பெருகிப் புவனமெற்றித்
தத்திக் கரைபுர ளும்பர மாநந்த சாகரத்தே.
47

பத்தியை வாங்கிநின் பாதாம் புயத்திற் புகட்டியன்பாய்
முத்திரை வாங்க அறிகின்றி லேன் முது சூர்நடுங்கச்
சத்தியை வாங்கத் தரமோ குவடு தவிடுபடக்
குத்திர காங்கேய னேவினை யேற்கென் குறித்தனையே.
48

சூரிற் கிரியிற் கதிர்வே லெறிந்தவன் தொண்டர்சூழாஞ்
சாரிற் கதியின்றி வேறிலை காண்தண்டு தாவடிபோய்த்
தேரிற் கரியிற் பரியிற் றிரிபவர் செல்வமெல்லாம்
நீரிற் பொறியென் றறியாத பாவி நெடுநெஞ்சமே.
49

படிக்கும் திருப்புகழ் போற்றுவன் கூற்றவன் பாசத்தினாற்
பிடிக்கும் பொழுதுவந் தஞ்சலென் பாய்பெரும் பாம்பினின்று
நடிக்கும் பிரான்மரு காகொடுஞ் சூர னடுங்கவெற்பை
இடிக்குங் கலாபத் தனிமயி லேறு மிராவுத்தனே.
50
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

அருணகிரிநாதர் நூல்கள் (Arunagirinathar Books) Empty Re: அருணகிரிநாதர் நூல்கள் (Arunagirinathar Books)

Post by மாலதி December 13th 2011, 08:29

மலையாறு கூறெழ வேல்வாங்கி னானை வணங்கியபின்
நிலையான மாதவஞ் செய்குமி னோநும்மை நேடிவருந்
தொலையா வழிக்குப் பொதிசோறு முற்ற துணையுங்கண்டீர்
இலையா யினும் வெந்த தேதா யினும்பகிர்ந் தேற்றவர்க்கே.
51

சிகாராத்ரி கூறிட்ட வேலுஞ்செஞ் சேவலுஞ் செந்தமிழாற்
பகரார்வமீ, பணி பாசசங் க்ராம பணாமகுட
நிகராட் சமபட்ச பட்சி துரங்க ந்ருபகுமார
குமராட் சசபட்ச விட்சோப தீர குணதுங்கனே.
52

வேடிச்சி கொங்கை விரும்புங் குமரனை மெய்யன்பினாற்
பாடிக் கசிந்துள்ள போதே கொடாதவர் பாதகத்தாற்
றேடிப் புதைத்துத் திருட்டிற் கொடுத்துத் திகைத்திளைத்து
வாடிக் கிலேசித்து வாழ்நாளை வீணுக்கு மாய்ப்பவரே.
53

சாகைக்கு மீண்டு பிறக்கைக்கு மன்றித் தளர்ந்தவர்கொன்
றீகைக் கெனை விதித் தாயிலை யே யிலங் காபுரிக்குப்
போகைக்கு நீவழி காட்டென்று போய்க்கடல் தீக்கொளுந்த
வாகைச் சிலைவளைத் தோன்மரு காமயில் வாகனனே.
54

ஆங்கா ரமுமடங் காரொடுங் கார்பர மாநந்தத்தே
தேங்கார் நினைப்பு மறப்பு மறார் தினைப் போதளவும்
ஓங்காரத் துள்ளொளிக் குள்ளே முருக னுருவங்கண்டு
தூங்கார் தொழும்புசெய்யா ரென்செய்வார் யம தூதருக்கே.
55

கிழியும் படியடற் குன்றெறிந் தோன்கவி கேட்டுருகி
இழியுங் கவிகற் றிடாதிருப் பீரெரி வாய் நரகக்
குழியுந் துயரும் விடாப்படக் கூற்றுவனூர்க் குச்செல்லும்
வழியுந் துயரும் பகரீர் பகரீர் மறந்தவர்க்கே.
56

பொருபிடி யுங்களி றும் விளையாடும் புனச்சிறுமான்
தருபிடி காவல சண்முக வாவென் சாற்றிநித்தம்
இருபிடி சோகொண் டிட்டுண்டிருவினை யோமிறந்தால்
ஒருபிடி சாம்பருங் காணாது மாயவுடம்பிதுவே.
57

நெற்றாப் பசுங்கதிர்ச் செவ்வேனல் காக்கின்ற நீலவள்ளி
முற்றாத் தனத்திற் கினிய பிரானிக்கு முல்லையுடன்
பற்றாக்கை யும்வெந்து சங்க்ராம வேளும் படவிழியாற்
செற்றார்க் கினியவன் தேவேந்த்ர லோக சிகாமணியே.
58

பொங்கார வேலையில் வேலைவிட் டோ னருள் போலுதவ
எங்கா யினும்வரு மேற்பவர்க் கிட்ட திடாமல்வைத்த
வங்கா ரமுமுங்கள் சிங்கார வீடு மடந்தையருஞ்
சங்காத மோகெடு வீருயிர் போமத் தனிவழிக்கே.
59

சிந்திக் கிலேனின்று சேவிக்கு லேன்றண்டைச் சிற்றடியை
வந்திக் கிலேனொன்றும் வாழ்த்துகி லேன் மயில் வாகனனைச்
சந்திக் கிலேன் பொய்யை நிந்திக் கிலேனுண்மை சாதிக்கிலேன்
புந்திக் கிலேசமுங் காயக் கிலேசமும் போக்குதற்கே.
60

வரையற் றவுணர் சிரமற்று வாரிதி வற்றச்செற்ற
புரையற்ற வேலவன் போதித் தவா, பஞ்ச பூதமுமற்
றுரையற் றுவர்வற் றுடலற் றுயிரற் றுபாயமற்றுக்
கரையற் றிருளற் றெனதற் றிருக்குமக் காட்சியதே.
61

ஆலுக் கணிகலம் வெண்டலை மாலை யகிலமுண்ட
மாலுக் கணிகலம் தண்ணந் துழாய்மயி லேறுமையன்
காலுக் கணிகலம் வானோர் முடியுங் கடம்புங்கையில்
வேலுக் கணிகலம் வேலையுஞ் சூரனு மேருவுமே.
62

பாதித் திருவுருப் பச்சென் றவர்க்குத்தன் பாவனையைப்
போதித்த நாதனைப் போர் வேலனைச்சென்று போற்றியுய்யச்
சோதித்த மெய்யன்பு பொய்யோ அழுது தொழுதுருகிச்
சாதிதfத புத்திவந் தெங்கே யெனக் கிங்ஙன் சந்தித்ததே.
63

பட்டிக் கடாவில் வருமந்த காவுனைப் பாரறிய
வெட்டிப் புறங்கண் டலாதுவிடேன் வெய்ய சூரனைப் போய்
முட்டிப் பொருதசெவ் வேற்பொரு மாள் திரு முன்புநின்றேன்
கட்டிப் புறப்பட டாசத்தி வாளென்றன் கையதுவே.
64

வெட்டுங் கடாமிசைத் தோன்றும் வெங்கூற்றன் விடுங் கயிற்றாற்
கட்டும் பொழுது விடுவிக்க வேண்டும் கராசலங்கள்
எட்டுங் குலகிரி யெட்டும் விட் டோ ட வெட் டாதவெளி
மட்டும் புதைய விரிக்குங் கலாப மயூரத்தனே.
65

நீர்க்குமிழக்கு நிகரென்பர் யாக்கைநில்லாது செல்வம்
பார்க்கு மிடத் தந்த மின் போலுமென்பர் பசித்துவந்தே
ஏற்கு மவர்க்கிட வென்னினெங் கேனு மெழுந்திருப்பார்
வேற்குமரற் கன்பிலாதவர் ஞான மிகவுநன்றெ.
66

பெறுதற் கறிய பிறவியைப் பெற்றுநின் சிற்றடியைக்
குறிகிப் பணிந்து பெறக்கற் றிலேன் மத கும்பகம்பத்
தறுகட் சிறுகட் சங்க்ராம சயில சரசவல்லி
இறுகத் தழுவுங் கடகா சலபன் னிருபுயனே.
67

சாடுஞ் சமரத் தனிவேல் முருகன் சரணத்திலே
ஓடுங் கருத்தை யிருத்தவல் லார்க்குகம் போய்ச்சகம்போய்ப்
பாடுங் கவுரி பவுரிகொண்டா டப்பசுபதின்
றாடும் பொழுது பரமா யிருக்கு மதீதத்திலே.
68

தந்தைக்கு முன்னந் தனிஞான வாளொன்று சாதித்தருள்
கந்தச் சுவாமி யெனைத் தேற் றிய பின்னர்க் காலன்வெம்பி
வந்திப் பொழுதென்னை யென் செய்ய லாஞ்சத்தி வாளொன்றினாற்
சிந்தத் துணிப்பன் தணிப்பருங் கோபத்ரி சூலத்தையே.
69

விழிக்கு துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மை குன்றா
மொழிக்குத் துணைமுரு காவெனு நாமங்கள் முன்பு செய்த
பழிக்குத் துணையவன் பன்னிரு தோளும் பயந்ததனி
வழிக்குத் துணைவடி வேலுஞ் செங்கோடன் மயூரமுமே.
70

துருத்தி யெனும்படி கும்பித்து வாயுவைச் சுற்றிமுறித்
தருத்தி யுடம்பை யொறுக்கிலென் னாஞ்சிவ யோக மென்னுங்
குருத்தை யறிந்து முகமா றுடைக்குரு நாதன்சொன்ன
கருத்தை மனத்தி லிருந்துங்கண் டீர்முத்தி கைகண்டதே.
71

சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்

வேந்தனைச் செந்தமிழ் நூல்விரித் தோனை விளங்குவள்ளி
காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச்
சாந்துணைப் போது மறவா தவர்க்கொரு தாழ்வில்லையே.
72

போக்கும் வரவு மிரவும் பகலும் புறம்புமுள்ளும்
வாக்கும் வடிவு முடிவுமில்லாத தொன்று வந்துவந்து
தாக்கு மநோலயந் தானே தருமெனைத் தன்வசத்தே
ஆக்கு மறுமுக வாசொல் லொணாதிந்த ஆநந்தமே.
73

அராப்புனை வேணியன் சேயருள் வேண்டு மவிழ்ந்த அன்பாற்
குராப்புனை தண்டையந்தாள் தொழல் வேண்டுங் கொடிய ஐவர்
பராக்கறல் வேண்டும் மனமும் பதைப்பறல் வேண்டுமென்றால்
இராப்பக லற்ற இடத்தே யிருக்கை யௌiதல்லவே.
74

படிக்கின் றிலைபழு நித்திரு நாமம் படிப்பவர்தாள்
முடிக்கின் றிலைமுருகா வென் கிலைமுசி யாமலிட்டு
மிடிக்கின் றிலைபர மாநந்த மேற்கொள விம்மிவிம்மி
நடிக்கின் றிலைநெஞ்ச மேதஞ்ச மேது நமக்கினியே.
75

கோடாத வேதனுக் கியான்செய்த குற்றமென் குன்றெறிந்த
தாடாள னெதென் தணிகைக் குமரநின் றண்டைந்தாள்
சூடாத சென்னியு நாடாத கண்ணுந் தொழாதகையும்
பாடாத நாவு மெனக்கே தெரிந்து படைத்தனனே.
76

சேல்வாங்கு கண்ணியர் வண்ண் பயோதரஞ் சேரஎண்ணி
மால்வாங்கி யேங்கி மயங்காமல் வௌfளி மலையெனவே
கால்வாங்கி நிற்குங் களிற்றான் கிழத்தி கழுத்திற்கட்டு
நூல் வாங்கி டாதன்று வேல்வாங்கி பூங்கழல் நோக்கு நெஞ்சே.
77

கூர்கொண்ட வேலனைப் போற்றாம லேற்றங்கொண்டாடுவிர்காள்
போர்கொண்ட கால னுமைக்கொண்டு போமன்று பூண்பனவுந்
தார்கொண்ட மாதரு மாளிகை யும்பணச் சாளிகையும்
ஆர்கொண்டு போவரையே கெடுவீர்நும் மறிவின்மையே.
78

பந்தாடு மங்கையர் செங்கயற் பார்வையிற் பட்டுழலுஞ்
சிந்தா குலந்தனைத் தீர்த்தருள் வாய்செய்ய வேல்முருகா
கொந்தார் கடம்பு புடைசூழ் திருத்தணிக் குன்றினிற்குங்
கந்தா இளங்குமரா அமராவதி காவலனே.
79

மாகத்தை முட்டி வருநெடுங் கூற்றன்வந்தா லென்முன்னே
தோகைப் புரவியிற் றோன்நிற் பாய்சுத்த நித்தமுத்தித்
த்யாகப் பொருப்பைத் த்ரிபுராந் தகனைத் த்ரியம்பகனைப்
பாகத்தில் வைக்கும் பரமகல் யாணிதன் பாலகனே.
80

தாரா கணமெனுந் தாய்மார் அறுவர் தருமுலைப்பால்
ஆரா துமைமுலைப் பாலுண்ட பால னரையிற் கட்டுஞ்
சீராவுங் கையிற் சிறுவாளும் வேலுமென் சிந்தையவே
வாரா தகலந்த காவந்த போதுயிர் வாங்குவனே.
81

தகட்டிற் சிவந்த கடம்பையு நெஞ்சையுந் தாளிணைக்கே
புகட்டிப் பணியப் பணித்தரு ளாய்புண்ட ரீகனண்ட
முகட்டைப் பிளந்து வளர்ந்திந்த்ர லோகத்தை முட்டவெட்டிப்
பகட்டிற் பொருதிட்ட நிட்டூர சூர பயங்கரனே.
82

தேங்கிய அண்டத் திமையோர் சிறைவிடச் சிற்றடிக்கே
பூங்கழல் கட்டும் பெருமாள் கலாபப் புரவிமிசை
தாங்கி நடப்ப முறிந்தது சூரன் தளந்தனிவேல்
வாங்கி யினுப்பிடக் குன்றங்க ளெட்டும் வழிவிட்டவே.
83

மைவருங் கண்டத்தர் மைந்தகந்தாவென்று வாழ்த்துமிந்தக்
கைவருந் தொண்டன்றி மற்றறியேன் கற்ற கல்வியும்போய்
பைவரும் கேளும் பதியுங் கதறப் பழகிநிற்கும்
ஐவருங் கைவிட்டு மெய்விடும் போதுன்னடைக்கலமே.
84

காட்டிற் குறத்தி பிரான்பதத் தேகருத்தைப்புகட்டின்
வீட்டிற் புகுதன் மிகவௌi தேவிழி நாசிவைத்து
மூட்டிக் கபாலமூ லாதார நேரண்ட மூச்சையுள்ளே
ஓட்டிப் பிடித்தெங்கு மோடாமற் சாதிக்கும் யோகிகளே.
85

வேலாயுதன் சங்கு சக்ராயுதன் விரிஞ் சன்னறியாச்
சூலா யுதன் தந்த கந்தச் சுவாமி சுடர்க்குடுமிக்
காலா யுதக்கொடி யோனரு ளாய கவசமுண்டென்
பாலா யுதம் வருமோய னோடு பகைக்கினுமே.
86

குமரா சரணஞ் சரணமனெf றண்டர் குழாந்துதிக்கும்
அமரா வதியிற் பெருமாள் திருமுக மாறுங்கண்ட
தமராகி வைகுந் தனியான ஞான தபோதனர்க்கிங்
கெமராசன் விட்ட கடையோடு வந்தினி யென்செயுமே.
87

வணங்கித் துதிக்க அறியா மனித ருடனிணங்கிக்குணங்
கெட்ட துட்டனை யீடேற்றுவாய் கொடி யுங்கழுகும்
பிணங்கத் துணங்கை யலகை கொண்டாடப் பிசிதர்தம்வாய்
நிணங்கக்க விக்ரம வேலா யுதந் தொட்ட நிர்மலனே.
88

பங்கே ருகனெனைப் பட்டோ லையிலிடப் பண்டுதளை
தங்காலி லிட்ட தறிந்தில னோதனி வேலெடுத்துப்
போங்கோதம் வாய்விடப் பொன்னஞ் சிலம்பு புலம்பவரும்
எங்கோ னறியி னினிநான் முகனுக் கிருவிலங்கே.
89

மாலோன் மருகனை மன்றாடி மைந்தனை வானவர்க்கு
மேலான தேவனை மெய்ஞ்ஞான தெய்வத்தை மேதினியில்
சேலார் வயற்பொழிற் செஙfகோடனைச் சென்று கண்டுதொழ
நாலா யிரங்கண் படைத்தில னேயந்த நான்முகனே.
90

கருமான் மருகனைச் செம்மான் மகளைக் களவுகொண்டு
வருமா குலவனைச் சேவற்கைக் கோளனை வானமுய்யப்
பொருமா வினைச் செற்ற போர்வேல னைக்கன்னிப் பூகமுடன்
தருமா மருவுசெங் கோடனை வாழ்த்துகை சாலநன்றே.
91

தொண்டர்கண் டண்டிமொண் டுண்டுருக் குஞ்சுத்த ஞானமெனுந்
தண்டயம் புண்டரி கந்தருவாய் சண்ட தண்ட வெஞ்சூர்
மண்டலங் கொண்டுபண் டண்லரண் டங்கொண்டு மண்டிமிண்டக்
கண்டுருண் டண்டர்விண் டோ டாமல் வேல்தொட்ட காவலனே.
92

மண்கம ழுந்தித் திருமால் வலம்புரி யோசையந்த
விண்கமழ் சோலையும் வாவியுங் கேட்டது வேலெடுத்துத்
திண்கிரி சிந்த விளையாடும் பிள்ளைத் திருவரையிற்
கிண்கிணி யோசை பதினா லுலகமுங் கேட்டதுவே.
93

தௌfளிய ஏனவிற் கிள்ளையைக் கள்ளச் சிறுமியெனும்
வள்ளியை வேட்டவன் தாள் வேட்டிலை சிறு வள்ளைதள்ளித்
துள்ளிய கெண்டையைத் தொண்டையைத் தோதக் சொல்லைநல்ல
வௌfளிய நித்தில வித்தார Yமூரலை வேட்டநெஞ்சே.
94

யான்றானெனுஞ்சொல் லிரண்டுங் கெட்டாலன்றி யாவருக்குந்
தோன்றாது சத்தியந் தொல்லைப் பெருநிலஞ் சூகரமாய்க்
கீன்றான் மருகன் முருகன்க்ரு பாகரன் கேள்வியினாற்
சான்றாரு மற்ற தனிவௌiக் கேவந்து சந்திப்பதே.
95

தடக்கொற்ற வேள்மயி லேயிடர் தீரத் தனிவிடில்ந
ணவடக்கிற் கிரிக்கப் புறத்துநின் றோகையின் வட்டமிட்டுக்
கடற்கப் புறத்துங் கதிர்க்கப் புறத்துங் கனகசக்ரத்
திடர்க்கப் புறத்துத் திசைக்கப் புறத்துந் திரிகுவையே.
96

சேலிற் றிகழ்வயற் செங்கோடை வெற்பன் செழுங்கலபி
ஆலித் தநந்தன் பணாமுடி தாக்க அதிர்ந்ததிர்ந்து
காலிற் கிடப்பன மாணிக்க ராசியுங் காசினியைப்
பாலிக்கு மாயனுஞ சக்ரா யுதமும் பணிலமுமே.
97

கதிதனை யொன்றையுங் காண்கின்றி லேன் கந்த வேல்முருகா
நதிதினை யன்னபொய் வாழ்விலன் பாய்நரம் பாற்பொதிந்த
பொதிதனை யுங்கொண்டு திண்டாடு மாறெனைப் போதவிட்ட
விதிதனை நொந்துநொந் திங்கேயென் றன்மனம் வேகின்றதே.
98

காவிக் கமலக் கழலுடன் சேர்த்தெனைக் காத்தருளாய்
தாவிக் குலமயில் வாகன னேதுணை யேதுமின்றித்
தாவிப் படரக் கொழுகொம் பிலாத தனிக்கொடிபோல்
பாவித் தனிமனந் தள்ளாடி வாடிப் பதைக்கின்றதே.
99

இடுதலைச் சற்றுங் கருதேனைப் போதமி லேனையன்பாற்
கெடுதலி லாத்தொண் டரிற் கூட் டியவா கிரௌஞ்ச வெற்பை
அடுதலைச் சாதித்த வேலோன் பிறவி யறவிச்சிறை
விடுதலைப் பட்டது விட்டது பாச வினைவிலங்கே.
100

சலங்காணும் வேந்தர் தமக்கு மஞ்சார் யமன் சண்டைக்கஞ்சார்
துலங்கா நரகக் குழியணு கார்துட்ட நோயணுகார்
கலங்கார் புலிக்குங் கரடிக்கும் யானைக்குங் கந்தனன்னூல்
அலங்கார நூற்று ளொருகவி தான் கற்றறிந்தவரே.
101

திருவடி யுந்தண்டை யுஞ்சிலம் புஞ்சிலம் பூடுருவப்
பொருவடி வேலுங் கடம்புந் தடம்புயம் ஆறிரண்டும்
மருவடி வாண வதனங்க ளாறும் மலர்க்கண்களுங்
குருவடி வாய்வந்தென் னுள்ளங் குளிரக் குதிகொண்டவே.
102

இராப்பக லற்ற இடங்காட்டி யானிருந் தேதுதிக்கக்
குராப்புனை தண்டையந் தாளரு ளாய் கரி கூப்பிட்டநாள்
கராப்புடக் கொன்றக் கரிபோற்ற நின்ற கடவுள் மெச்சும்
பராக்ரம வேல நிருதசங் கார பயங்கரனே.
103

செங்கே ழடுத்த சிவனடி வேலுந் திருமுகமும்
பங்கே நிரைத்தநற் பன்னிரு தோளும் பதுமமலர்க்
கொங்கே தரளஞ் சொரியுஞ்செங் கோடைக் குமரனென
எங்கே நினைப்பினும் அங்கேயென் முன்வந்தெதிர் நிற்பனே.
104

ஆவிக்கு மோசம் வருமா றறிந்துன் னருட்பதங்கள்
சேவிக்க என்று நினைக்கின்றி லேன் வினை தீர்த்தருளாய்
வாவித் தடவயல் சூழுந் திருத்தணி மாமலைவாழ்
சேவற் கொடியுடை யானே யமர சிகாமணியே.
105

கொள்ளித் தலையில் எறும்பது போலக் குலையுமென்றன்
உள்ளத் துயரை யொழித்தரு ளாயொரு கோடிமுத்தந்
தௌfளிக் கொழிக்குங் கடற்செந்தின் மேவி
வள்ளிக்கு வாய்த்தவ னே மயிலேறிய மாணிfக்கமே.
106

சூலம் பிடித்தெம பாசஞ் சுழற்றித் தொடர்ந்துவருங்
காலன் தனக்கொரு காலுமஞ் சேன்கடல் மீதெழுந்த
ஆலங் குடித்த பெருமான் குமாரன் அறுமுகவன்
வேலுந் திருக்கையு முண்ட நமக்கொரு மெய்த்துணையே.
107



கந்தர் அலங்காரம் முற்றிற்று.
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

அருணகிரிநாதர் நூல்கள் (Arunagirinathar Books) Empty கந்தர் அனுபூதி

Post by மாலதி December 13th 2011, 08:30


அருணகிரிநாதர் நூல்கள் (Arunagirinathar Books) Murugan01








அருணகிரிநாதர் முருகப் பெருமான் மீது அருளிச் செய்த சக்தி மிகுந்த பதிகம்
கந்தர் அனுபூதி ஆகும். 51 விருத்தப்பாக்களால் ஆனது. தனியே ஒரு காப்புச்
செய்யுள் உள்ளது. சித்தாந்தக் கருத்துகள் நிறைந்த இந்நூல் ஒரு சிறந்த
பாராயண நூலாகும்.


காப்பு



நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந் துருகத்
தஞ்சத் தருள்சண் முகனுக் கியல்சேர்
செஞ்சொற் புனைமாலை சிறந் திடவே
பஞ்சக் கரவானை பதம் பணிவாம்.

கல்லைப் போன்ற கடினமான உள்ளம், பக்தியினால் உருகும்படிக்கு, அடைக்கலமான
அடியவர்களுக்கு அருள்புரியும் ஆறுமுகனுக்கு, எல்லா இலக்கண அம்சங்களும்
பொருந்திய தமிழ் மாலை, சிறப்பாக அமையும் பொருட்டு, முழுமுதற் கடவுளான
விநாயகப் பெருமானின் அருளை நாடி துதிப்போம்.


நூல்



ஆடும் பணிவே லணிசே வலெனப்
பாடும் பணிவே பணியா யருள்வாய்
தேடுங் கயமா முகனைச் செருவிற்
காடுந் தனியா னைசகோ தரனே.
1

அக்ரமாக சான்றோர்களை அழிப்பதற்காக தேடுகின்ற, கஜமுகாசுரனை, போர்
செய்து அழித்த, ஒப்பற்ற விநாயகப் பெருமானின், தம்பியே, பிரணவ நடனமாடும்
மயில், உன்னுடைய ஞானா சக்தியாகிய வேலாயுதம், அடியார்களுக்கு முருகனின்
அருளைத் தெரிவிக்கின்ற சேவல் (இவை மூன்றையும்) துதித்துப் பாடுகின்ற
தொழிலையே என்னுடைய கடமையாக நீ அருள வேண்டும். ..



உல்லாச நிராகுல யோக விதச்
சல்லாப விநோதனு நீயலையோ
எல்லாமற என்னை யிழந்த நலஞ்
சொல்லாய் முருகா கரபூ பதியே.
2

மங்காத உள்ளக் களிப்பும், துன்பமற்ற நிலையும், யோக சொரூபனும், நன்மை
பயப்பவனும், அடியார்களிடம் இனிமையாகவே பேசி திருவிளையாடல் புரிபவனும், நீ
தானே முருகா, உரை அவிழ உணர்வு அவிழ உயிர் அவிழ, நான் எனும் ஜீவ போதம்
இழந்து அனுபவிக்கும் பேரின்ப நிலையை, மற்றவர்களுக்கு நீயே எடுத்துச்
சொல்லவேண்டும். ..



வானோ புனல்பார் கனல்மா ருதமோ
ஞானோ தயமோ நவில்நான் மறையோ
யானோ மனமோ எனையாண் டவிடந்
தானோ பொருளா வதுசண்முகனே.
3

ஆறுமுகக் கடவுளே, நித்தய அழிவில்லாத பொருள் என்பது (எது?) ஆகாயமோ?,
தண்ணீரோ?, நிலமோ?, நெருப்போ?, காற்றோ?, அறிவு தோன்றும் இடமோ?, ஓதப்படும்
நான்கு வேதங்களோ?, நான் என்கிற தத்துவமோ?, மனமோ?, என்னை ஆட்கொண்ட இடம்
தானோ? ..



வளைபட்டகைம் மாதொடு மக்க ளெனுந்
தளைபட் டழியத் தகுமோ தகுமோ
கிளைபட் டெழுகு ருரமுங் கிரியுந்
தொளைபட் டுருவத் தொடுவே லவனே.
4

சுற்றத்தினர் சூழ போருக்கு எழுந்த, சூரபத்மனின் மார்பையும், கிரவுஞ்ச
மலையையும், தொளைத்து ஊடுறுவிப் போகும்படி, தொடுத்த வேலாயுதத்தை உடையவனே,
வளையளை அனிந்த கைகளை உடைய மனைவியுடன், மக்களும் (பிற செல்வம், உறவினர்)
என்று கூறப்படுகின்ற அடியேன் கட்டுண்டு அழிவது, முறையோ முறையோ (முறை ஆகாது)
..



மகமாயை களைந்திட வல்ல பிரான்
முகமாறு மொழிந்து மொழிந் திலனே
அகமாடை மடந்தைய ரென் றயருஞ்
சகமாயையுள் நின்று தயங் குவதே.
5

வல்லமை மிக்க பெரிய மாயைகளை எல்லாம், நீக்க வல்லவராகிய,
உயிர்களைவிட்டு பிரியாதவராகிய முருகப் பிரான், தன் வாயினால் வழிகளை
(உபதேசங்களை), தந்து அருளிய போதிலும், வீடு, பொன் (செல்வம்), மாதர் என்று
இவைகளை சதா நினைத்து, சோர்வு அடையச் செய்கிற, உலக மாயைக்குள் கிடந்து,
கலங்குவதை நான் விடவில்லையே. ..



திணியா னமனோ சிலைமீ துனதாள்
அணியா ரரவிந்த மரும்பு மதோ
பணியா வென வள்ளி பதம் பணியுந்
தணியா வதிமோத தயா பரனே.
6

எனக்கு இடும் கட்டளை எவை என வினவி, வள்ளி பிராட்டியின் திருவடிகளை
வணங்குகின்ற, குன்றாத, மிகுந்த காதல் கொண்டுள்ள, கருணைக் கடவுளே, மிகவும்
கடினமான மனமாகிய கல்லின் மீது, உனது திருவடியான, அழகு மிகுந்த தாமரை
மலருவது என்ன ஆச்சரியம்? ..



கெடுவாய் மனனை கதிகேள் கரவா
திடுவாய் வடிவே லிறைதாள் நினைவாய்
சுடுவாய் நெடுவே தனைதூள் படவே
விடுவாய் விடுவாய் வினையா வையுமே.
7

ஏ மனமே, நீ கெட்டு வீணே ஒழிகின்றாய், நீ உய்யும் வழியைக் கூறுகின்றேன்
கேட்பாயாக, இரப்பவர்களுக்கு ஒளிக்காமல் தானம் செய்வாயாக,
வேலாயுதக்கடவுளின் திருவடிகளைத் தியானிப்பாயாக, நீண்ட பிறவித் துன்பத்தை,
பொடியாக்கி ஞானாக்கினியால் சுட்டு எரிப்பாயாக வினைகள் யாவையும் விட்டு
விடுவாய் ..



அமரும் பதிதே ளகமா மெனுமிப்
பிமரங் கெட்மெய்ப் பொருள் பேசியவா
குமரன் கிரிராச குமாரி மகன்
சமரம் பொரு தானவ நாசகனே.
8

குமாரக் கடவுள், மலை அரசனது மகளான பார்வதியின் புதல்வன், போருக்கு
வந்த சூரர்களை அழித்தவன், நான் பிறந்த ஊர், உறவினர்கள், நான் தான்
எனப்படும், இந்த மயக்க அறிவு, பிரமை கெட்டு ஒழிய, மெய்ப் பொருள் பேசியது
என்ன ஆச்சரியம். ..



மட்டூர்குழல் மங்கையர் மையல் வலைப்
பட்டூசல் படும் பரிசென் றொழிவேன்
தட்டூ டறவேல் சயிலத் தெறியும்
திட்டூர நிராகுல நிர்ப் பயனே.
9

கிரவுஞ்ச கிரியின் மீது, தடைகள் இன்றி ஊடுறுவிச் செல்லும்படி
வேலாயுத்தை ஏவி, அழித்தவனே, துன்பம் இல்லாதவனே, பயமற்றவனே, தேன் சிந்தும்
மலர்கள் அணிந்த கூந்தலை உடைய, பெண்களது, மோக வலையில் அகப்பட்டு, ஊஞ்சல்
ஆடுவதுபோல் உள்ளம் ஆடுகின்ற தன்மையை, எப்போது நீங்கப் பெறுவேன்? ..



கார்மா மிசைகா லன்வரிற் கலபத்
தேர்மா மிகைவந் தெதிரப் படுவாய்
தார்மார்ப வலாரி தலாரி யெனுஞ்
சூர்மா மடியத் தொடுவே லவனே.
10

மலர் மாலையணிந்த திரு மார்பினரே, வலன் என்ற அசுரனை அழித்த இந்திரனுடைய
பொன்னுலகை அழித்த, சூரனாகிய மாமரம் அழியும்படி செலுத்திய, வேலாயுதக்
கடவுளே, கரிய எருமையின் மீது, காலன் வரும்போது, அழகிய தோகையை உடைய மயில்
வாகனத்தில் எழுந்தருளி, அடியேன் எதிரே வந்தருள்வீராக ..



கூகா வெனவென் கிளைகூ டியழப்
போகா வகைமெய்ப் பொருள்பே சியவா
தாகாசல வேலவ நாலு கவித்
தியாகா கரலோக சிகா மணியே.
11

திருச்செங்கோட்டு மலையில் எழுந்தருளியவரே, வேலாயுதக் கடவுளே, நாலு
விதக் கவிகளை பாடும் திறமையைத் தந்தவரே, தேவலோகத்திற்கு சிகாமணியாக
விளங்குபவரே, என் சுற்றத்தார் ஒன்று கூடி, கூகா என ஓலமிட்டு அழும்படிக்கு,
இறந்து போகாத வண்ணம், உண்மையான பொருளை அடியேனுக்கு உபதேசித்த அற்புதந்தான்
என்னே ..



செம்மான் மகளைத் திருடுந் திருடன்
பெம்மான் முருகன் பிறவா னிறவான்
சும்மா இருசொல் லறவென் றலுமே
அம்மா பொரு ளொன்று மறிந்திலனே.
12

செவ்விய மானின் புதல்வியாகிய வள்ளியம்மையாரை, வள்ளி புனத்தில் இருந்து
கவர்ந்து சென்ற கள்வனும், மிகப் பெரியவனும், பிறப்பும் இறப்பும்
இல்லாதவனும் ஆகிய முருகன், சொல் ஒழித்து மெய்ஞான உணர்வு பெற்று மோன நிலை
அடைந்து இருப்பாய், என்று உபதேசித்தவுடன், அவனை அன்றி வேறு ஒரு உலகம்
ஒன்றையும் அறியாது நின்றேன், இது என்ன ஆச்சரியம். ..



முருகன் தனிவேல் முனிநங் குருவென்
றருள்கொண் டறியா ரறியுந் தரமோ
உருவன் றருவன் றுளதன் றிலதன்
றிருளன் றொளியன் றென்நின் றதுவே.
13

உருவப் பொருளும் அன்று, அருவப் பொருளும் அன்று, உள்ள பொருளும் அன்று,
இல்லாத பொருளும் அன்று, இருளும் அன்று, ஒளியாகிய பொருளும் அன்று, என்று
சொல்லும் தன்மையில் உள்ள அப் பரம் பொருளே, முருகப் பெருமான் என்றும்,
ஒப்பற்ற வேலேந்திய முனிவன் என்றும், நமது பரம குரு என்றும், அப்பரமனது
திருவருளைக் கொண்டு அறியாமல், மற்ற வழிகளில் அறிய முடியுமோ? முடியாது. ..



கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்
றுய்வாய் மனனே யொழிவா யொழிவாய்
மெய்வாய் விழி நாசியொடுஞ் செவியாம்
ஐவாய் வழி செல்லு மவாவினையே.
14

ஏ மனமே, உடம்பு, வாய், கண், மூக்கு, காது ஆகிய, ஐம் பொறிகளின் வழியே
செல்லும் ஆசைகளை, முற்றிலும் ஒழித்து விடு (அதனால்), திருக் கரத்தில்
விளங்கும் ஒளிவீசும் வேலாயுதத்தை உடைய, முருகப் பெருமானின் திருவருளைப்
பெற்று, உயர்வு பெற்று வாழ்வாய். ..



முருகன் குமரன் குகனென்று மொழிந்
துருகுஞ் செயல்தந் துணர்வென் றருள்வாய்
பொருபுங் கவரும் புவியும் பரவுங்
குருபுங்கவ எண்குண பஞ் சரனே.
15

போர் புரிவதில் விருப்பமுள்ள தேவர்களும், பூவுலகத்தவரும் புகழ்ந்து
துதிக்கின்ற, குரு சிரேஷ்டனே, அருங் குணங்கள் எட்டிற்கும் உறைவிடமானவனே,
முருகன், குமரன், குகன் என உனது திரு நாமங்களை மெய்யன்புடன் புகழ்ந்து
கூறி, உள்ளம் கசிந்து உருகும் தன்மையைத் தந்து, மெய்யுணர்வை எப்போது
அடியேனுக்கு தந்து அருள் புரிவாய். ..



பேராசை யெனும் பிணியிற் பிணிபட்
டோ ரா வினையே னுழலந் தகுமோ
வீரா முதுசூர் படவே லெறியுஞ்
சூரா சுரலோக துரந் தரனே.
16

வீரனே, முதுமையான சூரபத்மன் கிளைகள் அழியும்படி, வேலாயுதத்தைச்
செலுத்தின தீரனே, தேவ லோகத்தைக் காத்தவனே, சிந்திக்கத் தெரியாத தீவினைகளை
உடைய அடியேன், பெரிய நீண்டுகொண்டே செல்லும், நோயால் கட்டப்பட்டு, சுழலுதல்
தகுதி ஆகுமா? ..



யாமோதிய கல்வியு மெம் மறிவுந்
தாமே பெற வேலவர் தந்தனாற்
பூமேல் மயல் போ யறமெய்ப் புணர்வீர்
தாமேல் நடவீர் நடவீ ரினியே.
17

நாம் கற்று உணர்ந்த கல்வி அறிவும், நமக்கு இயற்கையாகவே அமைந்த உண்மை
அறிவும், தாமே திரும்பப் பெற வேண்டி, வேலாயுதக் கடவுள் நமக்குக்
கொடுத்ததினால், இப் பூமியில், நீங்கள் மயக்கங்களை விட்டு, தர்மத்தையும்
ஒழுக்கத்தையும் கடைபிடித்து வாழும் உத்தம சீலர்களே, நம்மை அவனுக்கு
அர்ப்பணித்து அவனுடைய புகழைச் சொல்லிச் சொல்லிப் பாடுங்கள். ..



உதியா மரியா வுணரா மறவா
விதிமா லறியா விமலன் புதல்வா
அதிகா வநகா வபயா வமரா
பதிகா வலசூர் பயங் கரனே.
18

பிறப்பில்லாதவனும், இறப்பில்லாதவனும், நினைப்பில்லாதவனும், மறதி
இல்லாதவனும், பிரம்மனும் திருமாலும் தேடி காண முடியாதவனும், மலம்
இல்லாவனுமாகிய சிவ பெருமானின், குமாரனே, எல்லாவற்றிற்கும் மேலானவனே, பாப
இல்லாதவனே, பாபம் இல்லாதவனே, தேவ லோக ரட்சகனே, ராட்சசர்களுக்கு
பயங்கரமானவனே. ..



வடிவுந் தனமும் மனமுங் குணமுங்
குடியுங் குலமுங் குடிபோ கியவா
அடியந் தமிலா அயில்வே லரசே
மிடி யென்றொரு பாவி வௌiப் படினே.
19

முதலும் முடிவும் இல்லாத, கூரிய வேலாயுதத்தை கையில் ஏந்திய அரசனே,
வறுமை என்கிற ஒரு பாவி வந்து விட்டால், உடல் அழகும், செல்வங்களும், நல்ல
மனமும், நல்ல குணநலங்களும், பிறந்த வம்ச பரம்பரையின் பெருமையும், பிறந்த
குலத்தின் பெருமையும், நீங்கி விடுகின்றன. (இது பெரும் வியப்பே). ..



அரிதா கியமெய்ப் பொருளுக் கடியேண்
உரிதா வுபதேச முணர்ந் தியவா
விரிதாரண விக்ரம் வேளி மையோர்
புரிதா ரக நாக புரந்தரனே.
20

விரிந்து பரந்த உறுதியான உள்ளம் கொண்டவனே, மிகுந்த வலிமை உடையவனே,
எல்லோராலும் விரும்பப்படுகின்றவனே, தேவர்கள் விரும்பும் தாரகப் மந்திரமாம்
பிரணவப் பொருளே, விண்ணுலகோரைக் காத்த தேவசேனாபதியே, தேவ லோகத்தைத்
தாங்குபவரே, அடைவதற்கு அரிது ஆகிய உண்மைப் பொருளைப் பெறுவதற்கு, அடியேனாகிய
நான், தகுதி உடைவனாகும்படி உபதேசம் செய்து உணர்த்தி அருளிய திறம்
ஆச்சரியமானது. ..



கருதா மறவா நெறிகாண எனக்
கிருதாள் வனசந் தரஎன் றிசைவாய்
வரதா முருகா மயில்வா கனனே
விரதா கரசூர விபாட ணனே.
21

கேட்ட வரங்களை வழங்கும் வள்ளலே, முருக வேளே, மயிலை வாகனமாகக்
கொண்டவனே, அடியார்களைக் காக்கும் விரதம் கொண்டவனே, அசுர கூட்டங்களையும்
சூரனையும் அழித்தவனே, நினைப்பு மறப்பு அற்ற வழியைக் கண்டு கொள்ள,
அடியேனுக்கு, உன்னுடைய இரு திருவடித் தாமரைகளைத் தருவதற்கு, உன்னுடைய திரு
உள்ளம் எப்போது இசையுமோ? ..



காளைக் குமரேச னெனக் கருதித்
தாளைப் பணியத் தவமெய் தியவா
பாளைச் சூழல் வள்ளி பதம்புணியும்
வேளைச் சுரபூ
22

கமுகின் பாளை போன்ற நீண்ட கூந்தலை உடைய, வள்ளிப் பிராட்டியின்
பாதங்களைத் தொழுகின்ற, முருக வேளை, தேவர்களின் அரசனை, மேரு மலையன்ன பெருமை
உடையவனை, காளைப் பருவம் கொண்ட குமரன், ஈசன் என தியானம் செய்து, அவனுடைய
திருவடிகளை வணங்கும்படியான, தவத்தினை அடியேன் அடைந்தது ஆச்சரியமானது. ..



அடியைக் குறியா தறியா மையினால்
முடியக் கெடவோ முறையோ முறையோ
வடிவிக் ரமமேல் மகிபா குறமின்
கொடியைப் புணருங் குணபூத ரனே
23

கூர்மையும் வலிமையுமுடைய வேலாயுதத்தை ஏந்தி மகிமை பெற்றவனே, குறவர்
குலத்து வளர்ந்த மின்னல் கொடி போன்ற வள்ளி நாயகியைச் சேர்கின்ற, குணக்
குன்றமே, உனது திருவடியைத் தியானிக்காமல், அறிவின்மையினால், அடியேன்
அடியோடு அழிந்து போகலாமோ., இது நீதியோ? இது நீதியோ? ..



கூர்வேல் விழி மங்கையர் கொங்கையிலே
சேர்வே னருள் சேரவு மெண்ணுமதோ
சூர்வே ரொடு குன்று தொளைத்தநெடும்
போர்வேல புரத்தா பூப தியே.
24

சூரபத்மன் குலம் முழுவதையும், அவனுக்கு காவலாய் இருந்த கிரவுஞ்ச மலையை
ஊடுருவிச் சென்ற கொடிய கொலை புரியும் வேலாயுதத்தை திருக்கையில் தாங்கிக்
கொண்டிருப்பவனே, இந்திரனுடைய நகரத்திற்கு அரசனே, கூரிய வேல் போன்ற கண்களை
உடைய, மாதர்களுடைய தனபாரங்களை, சேர விருப்பங்கொண்ட அடியேன், உனது திரு
அருள் பேற்றை பெற நான் நினைக்க மாட்டேனோ? ..



மெய்ய யெனவெவ் வினைவாழ் வையுகந்
தையோ அடியே னலையத் தகுமோ
கையோ அயிலோ கழலோ முழுதுஞ்
செய்யோய் மயிலே றிய சேவகனே.
25

திருக்கரங்கள் மட்டுமோ, கையில் விளங்கும் வேலாயுதம் மட்டுமோ,
திருவடிகள் மட்டுமோ, திருமேனி முழுவதும் செம்மை நிறம் கொண்டவனே, மயில் ஏறிய
மாவீரனே, கொடிய தீவினையால் வந்த வாழ்க்கையை, என்றும் நிலையானது என
மகிழ்ந்து, அந்தோ, அடியேன் உழலுதல் நீதியோ? ..



ஆதார மிலே னருளைப் பெறவே
நீதா னொரு சற்று நினைந்திலையே
வேதாகம ஞான விநோ தமனோ
கீதா சுரலோக சிகா மணியே.
26

வேதங்களிலும் ஆகமங்களிலும் காணப்படுகின்ற உட் பொருளான ஞானத்தையே
வடிவாகக் உடையவனே, மனதிற்கு எட்டாத நிலையில் இருப்பவனே, தேவ லோகத்தின் முடி
மணியாக விளங்குபவனே, உனது திருவடியை அன்றி வேறு ஒரு பற்றுக் கோடும் இல்லாத
அடியேன், திருவருளைப் பெற்று உய்யுமாறு, நீ ஒரு சிறிதேனும் நினைக்க
வில்லையே (நினைத்து அருள் புரியவும்). ..



மின்னே நிகர்வாழ்வை விரும்பிய யான்
என்னே விதியின் பயனிங் கிதுவோ
பொன்னே மணியே பொருளே யருளே
மன்னே மயிலேறிய வானவனே.
27

பொன்னைப் போன்றவனே, நவ ரத்தினம் போல் ஒளியை வீசுபவனே, பேரின்பப்
பொருளே, பேரருளானவனே, தலைவனே, மயிலை வாகனமாகக் கொண்ட மேலானவனே, மின்னலைப்
போல் தோன்றி உடனே மறையும் நிலையில்லாத இவ்வுலக வாழ்வை நிலையானது என எண்ணிக்
கொண்டிருக்கும் நான், இந்த நிலையை என்ன என்று கூறுவேன், இந்த உலகில் என்
தலை விதியின் பயன் இதுதானோ? ..



ஆனா அமுதே அயில்வே லரசே
ஞானா கரனே நவிலத் தகுமோ
யானாகிய வென்னை விழுங்கி வெறுந்
தானாய் நிலைநின் றதுதற் பரவே.
28

கெடுதலும் அழிவுமில்லாத அமுதம் போன்றவனே, கூரிய வேலாயுதத்தை கையில்
ஏந்திய மன்னவனே, ஞானத்திற்கு இருப்பிடமானவனே, நான் என்னும் ஆணவ முனைப்பில்
அழுந்தி இருக்கும் என்னிடமிருந்து ஜீவபோதத்தை போக்கி சிவபோதத்துள் அடக்கி,
வேறு ஒன்றும் இல்லாது எல்லாம் தானேயாய், நிலைத்திருப்பதான, மேலான நிலையை
(அனுபவித்து அனுபவத்தில் காண்பதே அல்லாது பிறருக்கு இந்த அனுபவம்
இத்தன்மையது என்று), சொல்லத் தக்கதோ? (சொல்ல முடியாது). ..



இல்லே யெனுமா யையி லிட்டனைநீ
பொல்லே னறியாமை பொறுத் திலையே
மல்லே புரி பன்னிரு வாகுவிலென்
சொல்லே புனையுஞ் சுடர்வே லவனே.
29

போர் புரிவதற்கு ஏற்றதான, பன்னிரு திருத் தோள்களிலும், அடியேனுடைய
பாமாலைகளையே தரித்துக்கொண்டிருக்கும், ஒளிவீசும் வேலாயுதக் கடவுளே, இந்த
இல்வாழ்க்கை எனும் மாயை வலையில், அடியேனை சிக்க வைத்து விட்டாய், தீயவனாகிய
என்னுடைய, அறியாமையால் செய்த பிழைகளை பொறுத்தாய் இல்லையே. ..



செல்வா னுருவிற் றிகழ்வே லவனன்
றொவ்வா ததென வுணர்வித் ததுதான்
அவ்வா றறிவா ரறிகின் றதலால்
எவ்வா றொருவர்க் கிசைவிப் பதுவே.
30

செவ்வானம் நிறத்துடன் தோன்றும், ஐவேலை உடைய முருகப் பெருமான், அந்த
ஒரு நாள், இந்த உபதேசத்திற்கு நிகரானது வேறு ஒன்றும் இல்லை என்று
சொல்லும்படி, உபதேசத்தால் உணர்த்திய சுவானுபூதியை, அங்ஙனம் உபதேசித்த
முறையில் தமக்குள் உள்ளுணர்வால் உணர்வதல்லாமல், அதை மற்றவர்களுக்கு எவ்வாறு
வார்த்தைகளால் எடுத்துச் சொல்ல முடியும்? (முடியாது). ..



பாழ்வாழ் வெனுமிப் படுமா யையிலே
வீழ்வா யென என்னை விதித்தனையே
தாழ்வா னவைசெய் தனதா முளவோ
வாழ்வா யினிநீ மயில்வா கனனே.
31

மயிலை வாகனமாகக் கொண்ட முருகப் பெருமானே, பாழ்பட்ட இவ்வுலக வாழ்வு
என்கின்ற, இந்தப் பெரிய மாயை என்கின்ற படு குழியிலே, நீ விழுவாயாக என்று,
அடியோன் தலையில் எழுதி விட்டீரே, (இதற்கு காரணமான) இழிவான செய்கைகள்,
அடியேன் முன் செய்தவைகள் இருகின்றனவோ?, இனி தேவா£ர் வாழ்ந்து போவீராக. ..



கலையே பதறிக் கதறிக் தலையூ
டலையே படுமா றதுவாய் விடவோ
கொலையே புரி வேடர்குலப் பிடிதோய்
மலையே மலை கூறிடு வாகையானே.
32

கொலை செய்வதையேதான் தொழிலாகக் கொண்ட, வேடர் குலத்தில் வளர்ந்த வள்ளிப்
பிராட்டியாரை தழுவி மகிழ்கின்றவனே, மலை போன்றவனே, கிரவுஞ்ச மலையை இரு
கூறிட்டு வெற்றி வாகை கொண்டவனே, முதன்மையான சமயவாதிகளோடு வாதம் செய்து
பிணக்குதல் செய்து, சாஸ்த்ர நூல்களை மனக் கலக்கத்துடன் சத்தம் போட்டு பேசி,
அப்படிப்பட்ட வாத பிரதிவாத மாயையிலே நான் மூழ்கிவிடுவேனோ? (மூழ்க்விடக்
கூடாது). ..



சிந்தா குலவில் லொடுசெல் வமெனும்
விந்தா டவியென்று விடப் பெறுவேன்
மந்தா கினிதந்த வரோ தயனே
கந்தா முருகா கருணா கரனே.
33

கங்கா நதி தாங்கிக்கொண்டு வந்து கொடுத்த, தேவர்கள் வேண்டியபடி சிவ
பெருமானிடத்தில் தோன்றியவரே, கந்தப் பெருமானே, முருகப் பெருமானே, கருணைக்கு
இருப்பிடமானவனே, மனதில் துன்பத்தைக் கொடுத்துக்கொண்டிருக்கும், மனைவி
செல்வம் எனப்படும், விந்திய மலைக் காடுபோன்ற இத் துன்பத்தை, அடியேன் என்று
விடுவேன்? ..



சிங்கார மடந்தையர் தீநெறி போய்
மங்கார லெனக்கு வரந்தருவாய்
சங்க்ராம சிகா வலசண் முகனே
கங்கா நதி பால க்ருபாகரனே.
34

போரிடுவதில் வல்ல மயிலை வாகனமாக உடையவரே, ஆறுமுகக் கடவுளே, கருணைக்கு
இருப்பிடமானவரே, அழகிய விலை மாந்தர்களின், தீய வழியில் சென்று, நான்
கெட்டுப் போகாமல், அடியேனுக்கு வரம் தந்தருள்வீர். ..



விதிகாணு முடம்பை விடா வினையேன்
கதிகாண மலர்க்கழ லென் றருள்வாய்
மதிவா ணுதல்வள்ளியையல் லதுபின்
துதியா விரதா சுரபூ பதியே.
35

பிறைச் சந்தரனைப் போன்று, வளைந்து ஒளி பொருந்திய நெற்றியை உடைய, வள்ளி
பிராட்டியைத் தவிர, வேறு ஒருவரையும் துதிக்காத செயலை ஒரு விரதமாகக் கொண்ட
கந்தக் கடவுளே, விண்ணுக்கும் மண்ணுக்கும் தலைவனே, அரசனே, பிரம தேவன்
படைத்த, இந்த தேகத்தை விட முடியாத அடியேன், நல்ல கதியை அடையும் பொருட்டு,
தாமரை மலர்கள் போன்ற உனது திருவடிகளை அடியேனுக்கு என்று கொடுத்தருள்வீர்?
..



நாதா குமரா நமவென் றரனார்
ஓதா யெனவோ தியதெப் பொருள்தான்
வேதா முதல் விண்ணவர் சூடுமலர்ப்
பாதா குறமின் பதசே கரனே.
36

பிரம்ம தேவன் முதலிய தேவர்கள், தங்கள் தலையில் சூடிக் கொள்ளும்
தாமரைபோன்ற பாதங்களை உடையவனே, மின்னல் கொடிபோன்ற வள்ளி பிராட்டியின்
பாதங்களை தமது தலையில் சூட்டிக் கொண்டவனே, சிவ பெருமான், நாதனே, குமரனே
போற்றி என உன்னை வணங்கி, எனக்கு உபதேசி என விளம்ப, நீ அவருக்கு உபதேசித்த
பொருள் எது? (அதை நீ எனக்கு உபதேசித்து அருள் புரிய வேண்டும்). ..



கிரிவாய் விடுவிக் ரம வேலிறையோன்
பரிவா ரமெனும் பதமே வலையே
புரிவாய் மனனே பொறையா மறிவால்
அரிவா யடியொடு மகந் தையையே.
37

ஏ மனமே, கிரவுஞ்ச கிரியின் மீது, வெற்றி வேலை உடைய கந்தக் கடவுளின்,
அடியார்களின் திருக் கூட்டத்தை சேர்ந்தவன் என்ற, பதவியை அடைவதையே
விரும்புவாய், நான் எனது என்கிற அகங்காரத்தை, பொறுமை எனும் ஞானத்தால்
வேரோடு நீக்கி விடுவாயாக ..



ஆதாளிaய யொன் றறியே னையறத்
தீதாளியை யாண் டதுசெப் புமதோ
கூதாள கிராத குலிக் கிறைவா
வேதாள கணம் புகழ்வே லவனே.
38

கூதாள மலரை சூடியவனே, வேடர் குலத்துதித்த வள்ளிப் பிராட்டியின் தலைவனே
பேய்க் கூட்டங்கள் துதிக்கும் வேலாயுதனே, வீண் பேச்சுக்களை பேசுகிறவனும்,
நல்லவைகளை பற்றிய அறிவு இல்லாதவனும், மட்டமான தீக்குணம் கொண்ட அடியேனை, ஒரு
பொருளாகக் கருதி ஆண்டு கொண்ட அருளை எப்படி விரித்து கூற முடியும்? ..



மாவேழ் சனனங் கெடமா யைவிடா
மூவேடணை யென்று முடிந் திடுமோ
கோவே குறமின் கொடிதோள் புணருந்
தேவே சிவ சங்கர தேசிகனே.
39

மன்னனே, வேடர் குலத்தில் உதித்த வள்ளிப் பிராட்டியின் திருத் தோள்களை
தழுவும் தெய்வீகனே, மங்கல மூர்த்தியும் சுகத்தைத் தருபவருமான சிவ
மூர்த்தியின் குருநாதனே, ஏழு வகையான எனது பிறவிகள் தொலையுமாறு,
மாயையிலிருந்தும் நீங்காத, மூன்று ஆசைகளும், எப்போதுதான் அடியேனை பற்றாது
நீங்குமோ? ..



வினையோட விடுங் கதிர்வேல் மறவேன்
மனையோடு தியங்கி மயங் கிடவோ
கனையோ டருவித் துறையோடு பசுந்
தினையோ டிதணோடு திரிந் தவனே.
40

வள்ளி மலையில் சுனைகளிடத்தும், மலை அருவிகள் விழுமிடத்தும், பசுமை
நிறங்கொண்ட தினைப் புனத்திடத்தும், பரணிடத்தும், வள்ளிப் பிராட்டிக்கு
அருள் செய்யும் பொருட்டு சுற்றித் திரிந்த பெருமானே, ஆன்மாக்களின்
இருவினைகளையும் ஓடச் செய்யும், ஞான ஒளி வீசுகின்ற வேலாயுதத்தை ஒருகாலும்
மறக்க மாட்டேன், இல் வாழ்வில் கலக்கம் கொண்டு மயங்கி அழியலாமோ? ..



சாகா தெனையே சரணங் களிலே
காகா நமனார் கலகஞ் செயுநாள்
வாகா முருகா மயில்வா கனனே
யோகா சிவஞா னொபதே சிகனே.
41

அழகனே, முருகப் பெருமானே, மயிலின் மீது வரும் பெருமானே, யோகீசனே, சிவ
ஞானத்தை பக்குவப்பட்ட ஆன்மாக்களுக்கு உபதேசம் செய்பவனே. யமன் வந்து என்
உயிரை பறித்துக்கொண்டு போகும் அந்தக் கடைசி நாளில், அடியேன் இறந்து
போகாதபடி, அடியேனை உமது திருவடி நிழலிலே தங்கும்படி காத்தருளும். ..



குறியைக் குறியாது குறித்தறியும்
நெறியைக் தனிவோல நிகழ்த் திடலுஞ்
செறிவற் றுலகோ டுரைசிந் தையுமற்
றறிவற் றறியா மையு மற்றதுவே.
42

தியானிக்கப் படுகின்ற பொருளை, காலம், இடம் முதலியன பற்றி நினைக்காமல்
தியானிக்கப்படும் பொருளைப் பற்றியே எண்ணிக்கொண்டு, பசு, பாச ஞானங்களை
விட்டு, பதி ஞானத்தால் அறியும் உண்மை வழியை, ஒப்பற்ற வேலாயுதத்தை உடைய
கடவுள் மெளன குருவாய் வந்து உள் நின்று உணர்த்திய உடனே, உலகத்தாறோடு
நெருங்கும் உறவு நீங்கி, வாக்கும் அற்று, நினைவும் அற்று, சுட்டி அறிகின்ற
அறிவும் அற்று, அறியாமையும் முற்றிலும் நீங்கிவிட்டன. ..



தூசா மணியுந் துகிலும் புனைவாள்
நேசா முருகா நினதன் பருளால்
ஆசா நிகளந் துகளா யின்பின்
பேசா அநுபூதி பிறந் ததுவே.
43

தூய்மையான இரத்தின மணிகளும், ஆடைகளும் அணிகின்ற வள்ளி பிராட்டியாரின்,
காதலனே, முருகப் பெருமானே, நீ காட்டிய அன்புடன் கூடிய அருளினால், ஆசையாகிய
விலங்கு, தூள் தூளாக பொடியான பின் மெளன நிலையுடன் கூடிய அநுபூதி நிலை
எனக்குக் கிடைத்தது. ..



சாடுந் தனிவேல் முருகன் சரணஞ்
சூடும் படிதந் ததுசொல் லுமதோ
வீடுஞ் சுரர்மா முடிவே தமும்வெங்
காடும் புனமுங் கமழுங் கழலே.
44

பகைவர்களையும், மாயை மற்றும் மலங்களையும் அழிக்கின்ற, ஓப்பற்ற
வேலாயுதக் கடவுளின் திருவடிகள், முத்தி தலத்திலும், தேவர்களின் சிறப்பான
தலைகளிலும், வேதங்களிலும் வள்ளி வாழ்ந்த வெப்பமான காட்டிலும், தினைப்
புனத்திலும் மணக்கும்படி விளங்கும், அத்தகைய திருவடிகளை என் தலை மேல்
சூடும்படி தந்தருளிய கருணையை சொல்லி விளக்க முடியுமோ? (முடியாது). ..



கரவா கியகல்வி யுளார் கடைசென்
றிரவா வகைமெய்ப் பொருளீ குவையோ
குரவா குமரா குலிசா யுதகுஞ்
சரவா சிவயோக தயா பரனே.
45

சற்குருநாதனே, குமரனே, வஜ்ர படையோனே, தெய்வயானைக்கு நாயகனே,
பக்குவப்பட்ட ஆன்மாக்களுக்கு சிவ யோகத்தை அருள் பாலிக்கும்
கருணாமூர்த்தியே, தாம் கற்ற கல்வியை பிறருக்கு கற்றுத் தராமல் ஒளித்து
வைத்துக்கொள்ளும் குருமார்களிடம் சென்று, அக் கல்வி ஞானத்தை நான் யாசிக்கா
வண்ணம், உண்மைப் பொருளை உபதேசித்து அருள்வாயோ? ..



எந்தாயுமெனக் கருள்தந்தையுநீ
சிந்தா குலமா னவைதீர்த் தெனையாள்
கந்தா கதிர்வே லவனே யுமையாள்
மைந்தா குமரா மறைநா யகனே.
46

கந்தக் கடவுளே, ஒளி படைத்த வேலாயுதத்தை உடையவனே, உமையம்மையின்
திருக்குமரனே, என்றும் இளையோனே, வேத நாயகனே, எங்களுக்கு பெற்ற தாயாகவும்,
எனக்கு அருள் புரியும் தந்தையும் நீதானே, அடியேனுடைய மனக் கவலைகளை எல்லாம்,
தீர்த்து என்னை ஆண்டு அருள்வீராக. ..



ஆறா றையுநீத் ததன்மேல் நிலையைப்
பேறா வடியேன் பெறுமா றுளதோ
சீறா வருசூர் சிதைவித் திமையோர்
கூறா வுலகங் குளிர்வித் தவனே.
47

கோபித்து வந்த, சூரபத்மனை அழித்து, துன்பத்தைக் கூறி முறையிட்ட
தேவர்களின் உலகத்தை, திருப்பி கொடுத்து சந்தோசப் படுத்தியவனே, முப்பத்தாறு
தத்துவங்களையும் கடந்து, அவற்றிக்கு அப்பால் உள்ள அநுபூதியாகிய குக
சாயுச்சிய நிலையை, அடியேன் பெறும் பேறாக, பெற்றுக் கொள்ளுகின்ற வழியை
எனக்கு அருள்வாயோ? ..



அறிவொன் றறநின் றறிவா ரறிவிற்
பிறிவொன் றறநின் றபிரா னலையோ
செறிவொன் றறவந் திருளே சிதைய
வெறிவென்றவ ரோடுறும் வேலவனே.
48

உலகாயத பந்த பாசத்தில் நெருக்கமான உறவுகள் அற்றுப் போகும் நிலை
ஏற்பட்டு, அதனால் மல இருள் முற்றிலும் வலிமை குன்றி ஒழியும்படி, மயக்கத்தை
வென்ற சிவ ஞானிகளுடன், பொருந்தி இருக்கும் வேலாயுத
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

அருணகிரிநாதர் நூல்கள் (Arunagirinathar Books) Empty சேவல் விருத்தம்

Post by மாலதி December 13th 2011, 08:32


அருணகிரிநாதர் நூல்கள் (Arunagirinathar Books) Seval









முருகப் பெருமானின் சேவல் கொடியை மையமாக வைத்து அருணகிரிநாதர் பாடியது
சேவல் விருத்தம் ஆகும். பதினோரு பாடல்களை உடைய இப்பகுதி பயம் நீக்கும்.
ஏவல், பில்லி, சூனியம், பேய், பிசாசு முதலியவற்றால் ஏற்படும் ஏதங்களை
விரட்டும் தன்மை வாய்ந்தது. எம பயத்தையும் போக்கும் வல்லமை இதற்கு உள்ளது.
இவ்வகையில் தினமும் பாராயணம் செய்ய வேண்டிய நிலையில் பெருமை பெற்றது சேவல்
விருத்தம் ஆகும். இதனுள் பல அரிய கருத்துகளைத் தொகுத்து் வைத்துள்ளார்
அருணகிரிநாதர்.




காப்பு


கொந்தார் குழல்வரி வண்டோ லிடுமியல் கொண்டேழ் இசைமருள
குதலை மொழிந்தருள் கவுரி சுதந்தரி குமரன் இதம்பெறு பொற்

செந்தாமரை கடம் நந்தா வனமுள செந்தூர் எங்குமுளான்
திலக மயிலில்வரு குமரன் வரிசைபெறு சேவல் தனைப்பாட

வந்தே சமர்ப்பொரு மிண்டாகிய கய மா முகனைக் கோறி
வன் கோடொன்றை ஒடித்துப் பாரதம் மா மேருவில் எழுதி

பைந்தார் கொடு பல ராவணன் அன்பொடு பணி சிவ லிங்கம் அதை
பார்மிசை வைத்த வினாயகன் முக்கட் பரமன் துணையாமே

(முக்கட் பரமன் துணையாமே வினாயகன் பரமன் துணையாமே)



பூங்கொத்துக்கள் சூடியுள்ள கூந்தலில், இசை பாடும் வண்டினங்கள், ரீங்காரம்
செய்யும், அந்த இலக்கணத்திற்கு நிகராகவும் (அதே போல்), சங்கீதத்தில் வரும்
'ஸ ரி க ம ப த நி' என்கின்ற ஏழு சுரங்களும் தோற்று பின் வாங்கவும், மழலைச்
சொற்கள் பேசி அடியவர்களுக்கு அருள் புரியும் பொன் நிற வடிவினள்,
எவரிடத்தும் வசப்படாமல் தன்னிச்சையாக செயல் படுபவள் ஆகிய உமா தேவியின்,
குமாரனாகிய முருகக் கடவுள் (வீற்றிருக்கும்), நன்மைகளைத் தரும், அழகான,
தாமரைக் காடுகளும், அழியாத சோலைகளும் உள்ள, திருச்செந்தூர், மற்ற பல
தலங்களிலும் குடிகொண்டு உள்ள குமார மூர்த்தியின், சிறப்பு வாய்ந்த (திலகம்
போன்ற) மயில் வாகனத்தில் வரும் முருகப் பெருமானின், சிறப்பு வாய்ந்த, சேவலை
நான் துதித்து பாடுவதற்கு, எதிர்த்து போருக்கு வந்த, மதம் பிடித்த,
கஜமுகமாசுரனை கொன்று, தனது வலிமை பொருந்திய ஒரு தந்தத்தை ஒடித்து, பாரதக்
கதையை மேரு மலையில் வைத்து எழுதினவரும், பசுமையான அன்று பூத்த பல மலர்
மாலைகளைக் கொண்டு ராவணன் வழிபட்டு பூஜை செய்த சிவ லிங்கம் ஆன மஹாபலேஸ்வரரை,
கோகர்ணத்தில் பூமியில் வைத்த, கணபதியாகிய, மூன்று கண்களை உடைய பரம தெய்வம்
எனக்கு துணை புரியட்டும்.



சேவல் விருத்தம் - 1
கம்சத்வனி - கண்ட சாபு



உலகில் அனுதினமும் வரும் அடியவர்கள் இடரகல
உரிய பர கதி தெரியவே

உரகமணி எனவுழலும் இருவினையும் முறைபடவும்
இருள்கள்மிடி கெட அருளியே

கலகமிடும் அலகைகுறள் மிகுபணிகள் வலிமையொடு
கடினமுற வரில் அவைகளைக்

கண்ணைப் பிடுங்கியுடல் தன்னைப் பிளந்து சிற
கைக்கொட்டி நின்றா டுமாம்

மலைகள் நெறு நெறு நெறென அலைகள் சுவறிட அசுரர்
மடிய அயில் கடவு முருகன்

மகுட வட கிரியலைய மலையுமுலை வனிதை குற
வரிசையின மகள் அவளுடன்

சிலைகுலிசன் மகள்மருவு புயன் இலகு சரவண
சிறுவன் அயன் வெருவ விரகிற்

சிரமிசையில் வெகு சினமொட் அடியுதவும் அறுமுகவன்
சேவற் திருத் துவஜமே

(சேவற்திருத் துவஜமே அறுமுகவன் சேவற்திருத் துவஜமே)




இப்பூவுலகில், முருகப் பெருமானின் அடியவர்களுக்கு, நாள்தோரும் ஏற்படும்,
இடஞ்சல்கள் நீங்கும்படியும், அவர்களுக்கு கிடைக்க வேண்டிய லட்சியமாகிய,
சாயுச்சிய நிலையாகிய முக்தியை, காண்பித்தருளியும், படத்தில் ரத்தினத்தைத்
தாங்கி இருக்கும் சர்ப்பங்கள் போல அலைந்து திரிகின்ற, நல்வினை தீவினை
இரண்டும் அழியவும், அஞ்ஞான இருளாகிய பொருள் வறுமை அறிவு வறுமை ஆகிய
இரண்டும் அழிந்து ஒழியும்படி, அருள் செய்யவும், இடஞ்சல்கள் செய்துவரும்,
பேய்களும் குட்டிச் சாத்தான்களும், கொடிய பாம்புகள், மிகுந்த பலத்துடன்,
பெரும் துன்பத்தை தர வந்தால், அவைகளை எல்லாம், கண்களைப் பிடுங்கியும்
தேகங்களைப் பிளந்தும், தனது சிறகுகளைக் அடித்துக் கொண்டு வெற்றிக்
களிப்புடன் நின்று கூத்தாடும் (அது எது என வினவினால்) உலகில் உள்ள மலைகள்
அனைத்தும் பொடிபடவும், சமுத்திரம் வற்றி வறண்டு பொகவும், அரக்கர்கள்
அனைவரும் இறந்து மடியவும், வேலாயுதத்தைப் பிரயோகித்த முருகப் பெருமான்,
சிகரங்களை உடைய மேருமலை தோல்வி அடையும்படி, எதிர்த்து போர் செய்கின்ற, தன
பாரங்களை உடைய பெண்ணும், வேடர் குடி மக்களாகிய, புகழ் மிக்க, அந்த
குலத்தில் பிறந்த வள்ளிப் பிராட்டியையும், கோபமுடைய வஜ்ராயுதத்தை
ஏந்தியுள்ள இந்திரனின் திருமகளாகிய தேவயானையையும், அணைத்திருக்கும் பன்னிரு
திருப்புயங்களை உடையவன், விளங்கும் சரவணப் பொய்கையில் உதித்த குமாரன்,
பிரம தேவன் அஞ்சும்படி, வெகு சாமர்த்தியமுடன், தலையில், மிகுந்த கோபத்துடன்
குட்டி அருளிய, சண்முகப் பெருமானின் கொடியில் அமர்ந்துள்ள சேவலே தான் அது.



சேவல் விருத்தம் - 2
மோகனம் - கண்ட சாபு


எரியனைய வியனவிரம் உளகழுது பல பிரம
ராக்ஷதர்கள் மிண்டுகள் செயும்

ஏவல் பசாசு நனி பேயிற் பசாசு கொலை
ஈனப் பசாசு களையும்

கரி முருடு பெரியமலை பணையெனவும் முனையின் உயர்
ககனமுற நிமிரும் வெங்கட்

கடிகளையும் மடமடென மறுகி அலறிட உகிர்
கரத் தடர்த்துக் கொத்துமாம்

தரணிபல இடமென்வன மதகரிகள் தறிகள்பணி
சமணர் கிடு கிடென நடனம்

தண்டைகள் சிலம்புகள் கலிங்கலினென சிறிய
சரண அழகொடு புரியும் வேள்

திரிபுரம் அதெரிய நகைபுரியும் இறையவன் மறைகள்
தெரியும் அரன் உதவு குமரன்

திமிர தினகர முருக சரவண பவன் குகன்
சேவற் திருத் துவஜமே

(சேவற்திருத் துவஜமே குகன் சேவற் திருத் துவஜமே)



நெருப்பு போல் தோன்றி, படர்ந்துள்ள, தலை முடிகளை உடைய பேய்கள், பலவகைப்பட்ட
பிரம்ம ராட்சதர்கள், குறும்புகள் செய்யும், பிறரால் ஏவப்பட்ட பிசாசுகள்,
தனித் தன்மைகள் வாய்ந்த பிசாசுகள், கொலைகளைப் புரியும் துஷ்ட
பிசாசுகளையும், கரு நிறம் வாய்க்கப்பெற்று, கரடு முரடான, பெரிய மலை
போலவும், மூங்கில்கள் போலவும், முயன்று, உயர்ந்து ஆகாச வரையிலும்
நிமிர்ந்து நிற்கும், கொடிய பார்வையை உடைய பூதங்களையும், மட மட என்கிற
சப்தத்துடன் பயந்து அலறும்படி, கையில் உள்ள நகங்களால் கொத்தித் தாக்கும்.
(அது எது என வினவினால்) பல மலைப் பிரதேசங்களில் வசித்து வந்த, மதம் பிடித்த
காட்டு யானைகள் போலவும், தூண்கள் போலவும், வாழ்க்கை நடத்தி வந்த, அமணர்
கூட்டம் கிடு கிடு என நடுங்கும்படி, காலில் அணிந்துள்ள தண்டைகளும்
சிலம்புகளும், தனது சின்ன திருவடிகள் அழகு பெறும்படி நர்த்தனம் புரியும்
ஞானசம்பந்தப் பெருமான், முப்புரங்களும் எரிந்து சாம்பலாகும்படி புன்முறுவல்
பூத்த இறைவரும், வேதங்களால் அறிவிக்கப்படும் சிவபெருமான், உலகத்திற்கு
நன்மை செய்யும் பொருட்டு அருளிய குமாரக் கடவுள், அஞ்ஞான இருளை நீக்கும் ஞான
சூரியனான முருகன், நாணல் பொய்கையில் அவதாரம் செய்தவன், அடியார்களின்
இதயக்குகையில் வீற்றிருப்பவன் ஆகிய குமாரக் கடவுளின், கொடியில் விளங்கும்
சேவலே தான் அது.



சேவல் விருத்தம் - 3
சார்ங்கா - கண்ட சாபு


கரி முரட்டடி வலைக் கயிறெடுத் தெயிறு பற்
களை இறுக்கியு முறைத்து

கலகமிட்டி யமன் முற் கரமுறத் துடரும் அக்
காலத்தில் வேலு மயிலும்

குருபரக் குகனும் அப்பொழுதில் நட்புடன் வர
குரலொலித் அடியரிடை

குலத்தலறு முக்கிற்சினப் பேய்களைக் கொத்தி
வட்டத்தில் முட்ட வருமாம்

அரிய கொற்கையன் உடற்கருகும் வெப்பகையை உற்
பனமுறைத் தத மிகவுமே

அமணரைக் கழுவில் வைத்தவரு மெய்ப் பொடிதரித்து
அவனிமெய்த் திட அருளதார்

சிவபுரத் அவதரித் தவமுதத் தினமணி
சிவிகை பெற்றினிய தமிழை

சிவனயப் புற விரித்துரை செய் விற்பனன் நிகற்
சேவற்திருத் துவஜமே

(சேவற்திருத் துவஜமே குருபரன் சேவற்திருத் துவஜமே)



கரிய நிறத்துடனும், முரட்டு குணத்துடனும், பாச வலையான், கயிற்றை ஏந்திக்
கொண்டு, கோரைப் பற்களை, நற நற என கடித்துக் கொண்டு, கலக்கத்தைத் தரும், எம
ராஜன், என் முன்னால் தொடர்ந்து வந்து, கையால் பிடித்து கொண்டு போகும், அந்த
அந்திம காலத்தில், ஞானத்தைத் தரும் சக்தியாகிய வேலாயுதமும் ஓங்கார ரூபமான
மயில் வாகனமும், குரு சிரேஷ்டனாகிய குகப் பெருமானும், அந்த அபாயகரமான
நேரத்தில் என் முன் கருணையுடன் தோன்றும் படி, கூவி அழைத்து, அடியவர்களின்
மரண துன்பத்தை, அடியோடு நீக்கி, உலகேழும் அதிர அரற்றும் மூக்கினால், கோபம்
மிக்க பேய்களை, கொத்தி குதறி, சுற்றிச் சுற்றி வட்டமிட்டு முட்ட வரும் (அது
எது என வினாவினால்) அருமை மிக்க கொற்கைப் பாண்டியன், தேகத்தைக் கருக்கி
விட்ட, மிகவும் வெப்ப நோயை (சுரத்தை), மூல காரணத்தை எடுத்துச் சொல்லி,
கொலைச் செயல்களை செய்து வந்த சமணர்களை, வாது புரிந்து கழுவில் ஏற்றி, ஒரு
சிலரை உண்மைப் பொருளாகிய சிவத்தைச் சுட்டிக் காட்டும் விபூதியை அணியச்
செய்து, உலகம் முழுவதும் உண்மைப் பரம் பொருளை அறியும்படி செய்து, அருள்
புரிந்தவரும், சீர்காழி தலத்தில் திரு அவதாரம் செய்து, அமிர்தம் போன்ற
குளுமையையும் சூரியனைப் போன்ற பிரகாசத்தையும் உடைய, முத்துப் பந்தலை சத்தி
முத்தம் என்ற தலத்தில் பெற்று, இனிமையான தமிழில் தேவாரப் பாக்களை, சிவ
பெருமான் விருப்பத்துடன் கேட்கும்படிப் பாடி அருளிய ஞான சம்பந்த
மூர்த்தியான ஆறுமுகப் பெருமான், வெற்றியைத் தரும் கொடியிலுள்ள சேவலே தான்
அது.



சேவல் விருத்தம் - 4
மனோலயம் - ஆதி


அச்சப் படக் குரல் முழக்கிப் பகட்டி அல
றிக் கொட்டமிட்ட் அமரிடும்

அற்பக் குறப் பலிகள் வெட்டுக்கள் பட்டுகடி
அறு குழைகளைக் கொத்தியே

பிச்சு சினத்த் உதறி எட்டுத்திசைப் பலிகள்
இட்டுக் கொதித்து விறலே

பெற்றுச் சுடர் சிறகு தட்டிக் குதித்தியல்
பெறக் கொக்கரித்து வருமாம்

பொய் சித்திரப் பலவும் உட்கத் திரை ஜலதி
பொற்றைக் கறுத் அயில்விடும்

புட்தி ப்ரியத்தன் வெகு வித்தைக் குணக்கடல்
புகழ் செட்டி சுப்ரமணியன்

செச்சைப் புயத்தன் நவ ரத்ன க்ரிடத்தன் மொழி
தித்திக்கு முத் தமிழினை

தெரியவரு பொதிகைமலை முனிவர்க் குரைத்தவன்
சேவற் திருத் துவஜமே

(சேவற்திருத் துவஜமே சுப்ரமணியன் சேவற்திருத் துவஜமே)



பகைவர்கள் அஞ்சும் படி, பெருத்த சப்தம் செய்து, விரட்டி, கூக்கரலிட்டு,
ஆர்ப்பாட்டத்துடன், போர் செய்யும், அற்பமான சிறு தேவதைகளுக்கு
படைத்திருக்கும், பலி வரிசைகளில், வெட்டுக்கள் பட்டு, அந்தச் சிறு தேவதைகள்
கடித்துப் போட்டிருந்த, இலைகள் தழைகள் போன்றவைகளை, மூக்கால் கொத்தி,
துண்டு துண்டாக பிய்த்தும், நான்கு பக்கமும் தூக்கி வீசி, எட்டு
திசைகளிலும் அடைத்து பலி போடுவது போல் பெரும் கிளர்ச்சியுடன் வலிமை பெற்று,
ஒளி வீசும் தனது சிறகுகளைத் தட்டிக் கொண்டு, மிகுந்த லட்சணத்துடன்
கொக்கரித்துக் கொண்டு வரும் (அது எது என வினாவினால்) பொய்யும் கற்பனைகளும்
நிறைந்த புறச் சமயங்கள், நடுங்கி பின் வாங்கவும், அலை வீசும் கடல் மீதும்,
அவைகள் கருகிக் போகும்படி, ஒளி வீசும் வேலாயுதத்தை செலுத்தியவன், அன்பும்
அறிவும் நிறம்பப் பெற்றவன், சகல கலைகளிலும் கடலென திறமை மிக்கவன், புகழ்
மிக்க செட்டியாகிய சுப்ரமணியக் கடவுள், வெட்சி மாலையை அணிந்தவன்,
நவரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட கிரீடத்தை அணிந்துள்ளவன், மொழிக்கு மொழி
இனிமை மிக்க, இயல், இசை, நாடகம் என்கின்ற மூன்று தமிழையும், அறிந்து
கொள்வதற்காக வந்த பொதிகை மலையில் வாழும் முனி சிரேஷ்டரான அகத்தியனுக்கு,
உபதேசம் செய்தவருமாகிய குமாரக் கடவுளின், கொடியில் உள்ள சேவலே தான் அது.



சேவல் விருத்தம் - 5
பாகேஸ்ரீ - கண்ட சாபு


தான இடும்புசெயு மோகினி இடாகினி
தரித்த வேதாஅள பூதம்

சருவ சூனியமும் அங்கிரியினால் உதறித்
தடிந்து சந்தோட முறவே

கோனாகி மகவானும் வனாள வனாடர்
குலவு சிறை மீள அட்ட

குலகிரிகள் அசுரர் கிளை பொடியாக வெஞ்ஜிறைகள்
கொட்டி எட்டிக் கூவுமாம்

மானாகம் அக்கறுகு மானுடையன் நிர்த்தமிடு
மாதேவனற் குருபரன்

வானீரம் அவனியழல் காலாய் நவக் கிரகம்
வாழ்னாள் அனைத்தும் அவனாம்

சேனா பதித் தலைவன் வேதாவினை சிறைசெய்
தேவாதி கட் கரசு கட்

டேனான மைக்கடலின் மீனானவற் கினியன்
சேவற் திருத் துவஜமே

(சேவற் திருத் துவஜமே குருபரன் சேவற் திருத் துவஜமே)



ஒருவரின் தூண்டுதல் இல்லாமல், துன்பங்களை விளைவிக்கும், மோகினி எனும் பெண்
பேய்களும் (நடு நிசியில் தனி வழியில் செல்லும் ஆடவரை பிடித்துக்கொள்ளும்
இவ்வகை மோகினிப் பேய்), பிணங்களைத் தின்னும் இடாகினிப் பேய்கள், இவைகளுடன்
கூடி இருக்கும் வேதாளங்கள் பூதங்கள், எல்லாவிதமான ஏவல் சூன்யங்கள்
அனைத்தையும், பாதத்தினால் எடுத்து உதறி, அவைகளை தண்டித்து, இந்திரனும்,
மகிழ்ச்சியுற்று, மீண்டும் தேவலோகத்திற்கு அதிபனாகி, தேவலோகத்தை அரசு
ஆளவும், அந்த தேவர்களுக்கு நேர்ந்த சிறை நீங்கவும், எட்டு திசைகளில் உள்ள
மலைகள், அரக்கர்களின் கூட்டங்கள் பொடி பொடியாகப் போகவும் கொடிய சிறகுகளை
படபடவென அடித்துக் கொண்டு எட்டிக் குதித்து பெருங் குரலிட்டுக் கூவும் (அது
எது என வினாவினால்) பெரிய வாசுகி எனும் நாகப் பாம்பு, எலும்பு மாலை,
அருகம்புல் இவைகளை அணிந்துகொண்டு, நடனம் செய்யும் பரமேஸ்வரனுக்கு, நல்ல
குரு மூர்த்தி, ஆகாயம், நீர், பூமி, நெருப்பு காற்று முதலான பஞ்ச
பூதங்களையும், ஒன்பது கிரகங்களையும் காலம் என்று சொல்லப்படும் தத்துவங்கள்
அனைத்தும் எல்லாமாய் இருக்கும் முருகக் கடவுள், தேவ சேனாபதி, பிரம்மனை
சிறையில் அடைத்தவரும் தேவ லோக சக்ரவர்த்தி, மது, தேன் போன்று இனிமை
உடையவன், இருண்ட கடலில் மீன் உருவத்தில் இருந்த நந்தி தேவருக்கு
மகிழ்ச்சியை அளித்தவன் இப்பேற்பட்ட குமாரக் கடவுளின் கொடியில் உள்ள சேவலே
தான் அது.



சேவல் விருத்தம் - 6
சின்டுப்கைரவி - கண்ட சாபு


பங்கமாகிய விட புயங்கமா படமது
பறித்து சிவத் அருந்தி

பகிரண்ட முழுதும் பறந்து நிர்த்தங்கள் புரி
பச்சை கலாப மயிலை

துங்கமாய் அன்புற்று வன்புற்ற் அடர்ந்துவரு
துடரும் பிரேத பூத

தொகுதிகள் பசாசுகள் நிசாசரர் அடங்கலும்
துண்டப் படக் கொத்துமாம்

மங்கை யாமளை குமரி கங்கை மாலினி கவுரி
வஞ்ஜி நான்முகி வராகி

மலையரையன் உதவு அமலை திருமுலையில் ஒழுகுபால்
மகிழ அமுதுண்ட பாலன்

செங்க் கணன் மதலையிடம் இங்குளான் என்னு நர
சிங்கமாய் இரணியனுடல்

சிந்த உகிரிற்கொடு பிளந்த மால் மருமகன்
சேவற் திருத் துவஜமே

(மால் மருமகன் சேவற்திருத் துவஜமே)



கொடுமையைச் செய்யும் விஷமுள்ள, பாம்பின் பெரிய படத்தை, கொத்தி, சினத்துடன்
அதை உணவாகக் கொண்டு, வெளி அண்டங்கள் எல்லாவற்றிலும் பறந்து, களி நடனம்
புரியும், பச்சை நிறத் தோகைகளை உடைய மயிலுடன், தூய அன்பு கொண்டு,
வலிமையுடன், நெருங்கி வரும், தொடர்ந்து வரும், பிணப் பேய்களின் கூட்டங்கள்,
பிசாசுகளையும், அசுரர் கூட்டங்கள் அனைத்தையும், துண்டு துண்டாகச்
சிதறும்படிக் கொத்தும் (அது எது என வினாவினால்) மங்கையும், யாமளையும்,
குமாரியும், கங்கையாக இருப்பவளும், மாலைகளை அணிந்திருப்பவளும், பொன்னிறமாக
இருப்பவளும், கொடி போன்றவளும், நான்கு முகங்களை உடையவளும், வராகியும்,
இமவான் தந்த அப்பழுக்கற்றவளும், ஆகிய பார்வதி தேவியின் திருமார்பிலிருந்து
ஒழுகிய பாலமுதத்தை, மகிழ்ச்சியோடு உண்ட சிறுவன், (திருஞானசம்பந்தர் ..
முருகன்) (கோபத்தால்) சிவந்த கண்களை உடைய திருமால், இதோ தூணில் இருக்கிறான்
என்று பிரகலாதனால் சுட்டிக் காட்டப்பட்டவன், நரசிங்க அவதாரம் எடுத்து
இரணியன் உடலை, ரத்தம் சிந்த கை நகத்தால் பிளந்து சம்காரம் செய்த மகா
விஷ்ணுவின் மருமகன் (ஆகிய) குமாரக் கடவுளின் கொடியில் உள்ள சேவலே தான் அது.




சேவல் விருத்தம் - 7
பீம்பலாச் - கண்ட சாபு


வீறான காரிகதி முன்னோடி பின்னோடி
வெங்கட் குறும்புகள் தரும்

விடு பேய்களே கழுவன் கொலைசாவு கொள்ளிவாய்
வெம் பேய்களைத் துரத்தி

பேறான ஏசரவண பவாஏ என்னு மந்திரம்
பேசி உச்சாடனத்தார்

பிடர் பிடித்துக் கொத்தி நகனுதியினால் உற
பிய்ச்சுக் களித் தாடுமாம்

மாறாத முயலகன் வயிற்றுவலி குன்மம்
மகோதரம் பெருவியாதி

வாத பித்தம் சிலேர்ப்பனம் குட்ட முதலான
வல்ல பிணிகளை மாற்றியே

சீறாத ஓராறு திருமுக மலர்ந் அடியர்
சித்தத் இருக்கு முருகன்

சிலைகள் உரு இட அயிலை விடுகுமர குருபரன்
சேவற் திருத் துவஜமே

(செவற் திருத் துவஜமே
குருபரன் சேவற் திருத் துவஜமே)



மிடுக்குடைய, பைரவர் போகும் வழியில், முன்னும் பின்னும் ஓடி தொடர்ந்து
வந்து, சிவந்த கண்களை உடையனவாய் சேஷ்டைகள் புரியும், தனித்திருக்கும்
பேய்களையும், கொடிய கழுகுகளையும், வன்மையான கொலைகளுக்கும் சாவுகளுக்கும்
காரணமான, நெருப்பைக் கக்கும் வாய்களை உடைய, கொடிய போய்களைத் துரத்திச்
சென்று, தவத்தால் கிடைப்பதான, சரவணபவா என்கிற சடாட்சர மந்திரத்தை, சொல்லி,
உட்சாடத்தினால் பிரயோகம் செய்யும் வகையில், அவைகளுடைய கழுத்தைப் பிடித்து
மூக்கினால் கொத்தி, கூர்மையான நகமுனையினால் பிய்த்து, மகிழ்ச்சியுடன் நடனம்
புரியும் (அது எது என வினாவினால்) நீங்காத வியாதியான காக்காய் வலிப்பு,
வயிற்று வலி, வயிறு உளைப்பு (சூலை நோய்), பெரு வயிறு, பால் வினை நோய்கள்,
வாதம் பித்தம், சிலேத்துமம், குஷ்டம், இவை போன்ற, கொடிய நோய்களை
நீக்குபவரும், அடியவர்களின் கோடி குறைகள் கருதினாலும் வேறு முனிய
அறியாதவரும், தனது ஆறு திருமுகங்களும் மகிழ்ச்சியுடன், தியானிக்கும்
அடியவர்களின் உள்ளத்தில் வீற்றிருக்கும் முருகன், கிரவுஞ்ச கிரியும் மற்ற
ஏழு மலைகளும் உருவிச் சென்று அழித்த, கூரிய வேலாயுதத்தைச் செலுத்திய,
குமாரப் பரமேஸ்வரனின், கொடியில் வீற்றிருக்கும் சேவலே தான் அது.



சேவல் விருத்தம் - 8
மாண்ட் - கண்ட சாபு


வந்து அர்ப்பரிக்கும் அம்மிண்டுவகை தண்டதரன்
வலிய தூதுவர் பில்லி பேய்

வஞ்ஜினாற் பேதுற மகாபூதம் அஞ்ஜிட
வாயினும் காலினாலும்

பந்தாடியே மிதித்துக் கொட்டி வடவை செம்
பவளமா அதிகாசாமா

பசும் சிறைத்தலமிசைத் தணியயிற் குமரனை
பார்த் அன்புறக் கூவுமாம்

முந்த் ஆகமப் பலகை சங்காகமத்தர் தொழ
முன்பேறு முத்தி முருகன்

முது கானகத் எயினர் பண்டோ ட் அயிற் கணை
முனிந்தே தொடுத்த சிறுவன்

சிந்தா குலத்தை அடர் கந்தா எனப்பரவு
சித்தர்க் கிரங்க் அறுமுகன்

ஜெய வெற்றிவேள் புனிதன் நளினத்தன் முடி குற்றி
சேவற் திருத் துவஜமே

(சேவற் திருத் துவஜமே)



எதிரே வந்து, பெரும் ஆரவாரத்துடன், அந்த மதத்துடன் நெருங்கித் தொடரும்
வகையில், தண்டாயுதம் ஏந்தியுள்ள யமனின் பலமிக்க தூதுவர்கள், பிறரால்
ஏவப்படும் பிசாசுகள் (இவைகளை), வலிய சினத்துடன் அவைகளை புத்தி மயங்கும்படி
செய்தும் மிகப் பெரிய பூதங்களும் பயந்து நடுங்கும்படி, தன்னுடைய
மூக்கினாலும் காலினாலும், கால் பந்து போல் அவைகளை உதைத்து மிதித்து,
அடித்து, வடவாமுகாக்கினியை பவளமணி போல் கொத்தி எடுத்து பெரிய நகை புரிந்து,
பசிய சிறைகளின்மேல் முதுகில் வீற்றிருக்கும் ஒப்பற்ற வேலாயுதக் கடவுளை,
நோக்கி அன்புடன் குரல் கொடுக்கும் (அது எது என வினாவினால்) முற்பட்டு
விளங்கும், கல்வியின் அளவை நிர்ணயிக்கும் சங்கப் பலகையின் மேல், கல்வியில்
வல்லவர்களான 49 புலவர்களும் வணங்க, முன்பு ஒரு சமயம் ஏறி வீற்றிருந்து
மோட்ச சாம்ராஜ்யத்திற்கு வழி காட்டியான முருகன், பழமையான காடுகளில்
வசிக்கும் வேடர்கள், முன்பு பின் வாங்கி, கூரிய வேலாயுதத்தை சினத்துடன்
செலுத்திய முருகன், மன வியாகுலத்தை நீக்கும் கந்தக் கடவுள், என்று
துதிக்கும், உள்ளத்தை உடைய பக்தர்க்கு இரங்கி கருணை புரியும் சண்முகப்
பெருமான் வெற்றியையே காணும் முருகன், பரிசுத்த மூர்த்தி, தாமரை மலரில்
வசிக்கும் பிரம்மனை சிரசில் குட்டி தண்டித்த முருகப் பெருமானின், கொடியில்
விளங்கும் சேவலே தான் அது.



சேவல் விருத்தம் - 9
டுர்கா - கண்ட சாபு


உருவாய் எவர்க்கு நினை அரிதாய் அனைத்துலகும்
உளதாய் உயிர்க் உயிரதாய்

உணர்வாய் விரிப்பரிய உரைதேர் பரப்பிரம
ஒளியாய் அருட்பொருளதாய்

வரும் ஈசனைக் களப முகன் ஆதரித் திசையை
வலமாய் மதிக்க வருமுன்

வளர்முருகனைக் கொண்டு தரணிவலம் வந்தான் முன்
வைகு மயிலைப் புகழுமாம்

குருமா மணித்திரள் கொழிக்கும் புனற் கடக்
குன்றுதோ றாடல் பழனம்

குலவு பழமுதிர் சோலை ஆவினன் குடி பரங்க்
குன்றிடம் திருவேரகம்

திரையாழி முத்தைத் தரங்கக் கை சிந்தித்
தெறித்திடும் செந்தி நகர் வாழ்

திடமுடைய அடியவர் தொழு பழையவன் குலவுற்ற
சேவற் திருத் துவஜமே

(சேவற் திருத் துவஜமே பழையவன் சேவற் திருத் துவஜமே)



அடியவர்களுக்கு அனுக்ரகம் செய்யும் பொருட்டும் சில திருவிளையாடல்கள்
செய்யும் பொருட்டும் நடராஜ மூர்த்தி தட்சிணாமூர்த்தி முதலிய பல வடிவங்களை
எடுத்தும், ஆனால் தன்னுடைய சொந்த நிலையான சொரூப நிலையில் எவராலும்
நினைத்துக்கூட பார்க்க முடியாதவராயும், சகல உலகங்களில் வாழும் ஜீவன்களின்
சொரூபமாயும், அந்தந்த உயிர்களை உள் நின்று இயக்கும் உயிர்ச் சக்தியாயும்,
அந்த உயிர்களின் அந்தக்கரணமான அறிவு ரூபமாயும், விரித்துச் சொல்வதற்கு
அரிதான வேத மொழிகளால் ஆராய்ந்து நிச்சயிக்கப்படும், மேலான அனைத்தையும்
கடந்த பிரம்மப் பொருளாய், அருட் பொரும் ஜோதியாய், நின்று விளங்கும் சிவ
பெருமானை, யானை முகக் கணபதி, அன்பு பாராட்டி, முன் ஒரு காலத்தில் எட்டு
திசையில் உள்ளோரும் மதிக்கும்படி அந்த ஈசனை வலம் வரும் சமயத்தில்,
விளங்கும் முருகனைத் தன் முதுகில் சுமந்து கொண்டு, பூமியைச் சுற்றி வந்த
(அந்த முருகனின்), முன்பாக, வீற்றிருக்கும் மயிலைப் புகழ்ந்து பேசுமாம்
(அது எது என வினாவினால்) ஒளி வீசுகின்ற, ரத்னக் குவியல்களை, வெள்ளத்தில்
அடித்துக் கொண்டு வரும், அருவிகளும், காடுகளும் விளங்கும், பல மலைகள், பல
வயல்கள், பிரகாசம் பொருந்திய சோலை மலை, திருவாவினன்குடி,
திருப்பரங்குன்றிலும், சுவாமிமலை, கடல் அலைகள் முத்துக்களை, சமுத்திரம் தன்
கைகளினால், வீசி எறிந்திடும், திருச்செந்தூரில் வாழும் திடமான பக்தியைக்
கொண்ட அடியார்கள் போற்றி வணங்குகின்ற, பழம் பொருளாகிய முருகப் பெருமான்,
கையில் தரித்திருக்கும், கையில் தரித்துள்ள கொடியில் உள்ள சேவலேதான் அது.



சேவல் விருத்தம் - 10
மத்யமாவதி - கண்ட சாபு


மகர ஜலனிதி சுவற உரகபதி முடிபதற
மலைகள் கிடு கிடு கிடெனவே

மகுடகுட வடசிகரி முகடு பட படபடென
மதகரிகள் உயிர் சிதறவே

ககனமுதல் அண்டங்கள் கண்ட துண்டப்பட
கர்ஜித் இரைத் அலறியே

காரையாழின் நகரர் மாரைப் பிளந்து சிற
கைக்கொட்டி நின்றாடுமாம்

சுகவிமலை அமலை பரை இமையவரை தரு குமரி
துடியிடை அனகை அசலையாள்

சுதன் முருகன் மதுரமொழி உழைவனிதை
இபவனிதை துணைவன் எனதிதய நிலையோன்

திகுட திகுட திதிகுட தகுடதி தகுட திகுட
செக்கண செகக் கண என

திருனடனம் இடுமயிலில் வருகுமர குருபரன்
சேவற் திருத் துவஜமே

(துவஜமே, சேவற் திருத் துவஜமே சேவற் திருத் துவஜமே)



மகர மீன்கள் வாழும் கடல் வற்றிப் போகவும், சர்ப்ப ராஜனான ஆதிசேஷனின் ஆயிரம்
முடிகளும் பதறவும், மலைகள் கிடு கிடு என நடுங்கவும், சிகரங்களைக் கொண்ட,
குடம் போன்ற திரட்சி உடைய, மேரு மலையின், உச்சிகள் படபடென நடுங்கவும், மத
யானைகளின் உயிர் பயத்தால் பிரியவும், தேவலோகம் முதல், எல்லா உலகங்களும்
துண்டு துண்டாகச் சிதறவும், பெருத்த ஆரவாரம் செய்து, சமுத்திரக் கரையில்
உள்ள காரையாழி நகரில் வாழ்ந்த அசுரர்களின், மார்பைப் பிளந்து தன்னுடைய
சிறகுகளை அடித்துக்கொண்டு களிப்புடன் நடனம் ஆடுமாம் (அது எது என
வினாவினால்) சுக சொரூபியானவள், மலமற்றவள், பராசக்தி, இம ராஜன் தந்தருளிய
மடந்தை, உடுக்கை போன்ற இடுப்யை உடையவள், பயமற்றவள், மலை போன்று
சலனமில்லாமல் இருப்பவள், இப்பேர்ப்பட்ட பார்வதி தேவி தந்த திருக் குமாரன்,
ஞானமும் அறிவும் இளமையும் உடையவன், தேன் போன்ற இனிய மொழியை பகரும் மான்
மகளான வள்ளிப் பிராட்டி, ஐராவதம் வளர்த்த தேவசேனை, இவர்களின் துணைவன், எனது
உள்ளத்தில் என்றும் நிலைத்து இருப்பவன், எனும் ஒலியுடன், நடனமிடும் மயில்
வாகனத்தில், பவனி வரும் குமரகுரு மூர்த்தியின் கொடியில் உள்ள சேவலே தான்
அது.



சேவல் விருத்தம் - 11
மத்யமாவதி - கண்ட சாபு



பூவிலியன் வாசவன் முர்ரரி முனிவோர் அமரர்
பூசனை செய்வோர் மகிழவே

பூதரமும் எழுகடலும் ஆட அமுதூற அனு
போக பதினால் உலகமும்

தாவுபுகழ் மீறிட நிசாசரர்கள் மாள வரு
தானதவ ஞூல் தழையவே

தாள் வலியதான பல பேய்கள் அஞ்ஜ சிறகு
கொட்டிக் குரற் பயிலுமாம்

காவுகனி வாழைபுளி மாவொடுயர் தாழை கமு
காடவிகள் பரவு நடன

காரண மெய்ன்யானபரி சீரணவ் அர அசன
கனகமயில் வாகனன் அடற்

சேவகன் இரஜத இலக்கண உமைக்கொரு
சிகாமணி சரோருக முக

சீதள குமார கிருபாகர மனோகரன்
சேவற் திருத் துவஜமே

(துவஜமே சேவற் திருத் துவஜமே சேவற் திருத் துவஜமே)


தாமரைப் பூவில் வாசம் செய்யும் பிரம்மன், இந்திரன், திருமால், தவம்
செய்யும் முனிவோர்கள், தேவர்கள், நித்தம் இறைவனை வழிபாடுகள் புரியும்
அடியவர்கள், இவர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடையும் பொருட்டு, மலைகளும் ஏழு
கடல்களும் ஆட்டம் காணவும், பூவுலகில் இன்பம் நிறைந்து விளங்கவும், எல்லாவித
அநுபோகங்களைத் தரும் பதினான்கு உலகங்களிலும், பரந்து கிடக்கும் தனது புகழ்
முதன்மையாக விளங்கி நிற்கவும், அரக்கர்கள் மடிந்து அழியவும், விளங்கும்
ஒழுக்க நெறிகளைக் கூறும் தர்ம இலக்கிய நூல்கள் தழைத்து ஓங்கவும், கெட்ட
வலிமை பொருந்திய செயல்களைச் செய்யும் பல பேய்கள் பயந்து ஓடவும், தனது
சிறகுகளைத் தட்டி அடித்துக்கொண்டு பெரிய கூக்குரல் எழுப்பும் (அது எது என
வினாவினால்) சோலைகள், நல்ல பழங்களைத் தரும் வாழை மரங்கள், புளிய மரம், மா
மரம் இவைகளுடன், வானளாவ உயர்ந்த தென்னை மரங்கள், பாக்கு மரங்கள் (இவைகளுடன்
கூடிய), அடர்ந்த காடுகளில், பரந்த நடன வகைகளைக் காட்டும், முருகன்
ஆட்கொண்ட காரணத்தால் மெய் ஞானத்தை அடைந்த வாகனமானதும், சிறப்பு மிக்கதும்,
பாம்பை உணவாகக் கொள்வதும் ஆன, செம் பொன் மயிலை வாகனமாகக் கொண்டவன், வலிமை
மிக்க மா வீரன், இராசத இலட்சணம் பொருந்திய, பார்வதி தேவிக்கு ஒப்பற்ற சிரோ
ரத்னம், தாமரை போன்ற முக அழகு கொண்டவன், தண்மையான குணாளன் என்றும் இளையவன்,
கருணைக் கடல் அடியார்கள் மனதில் அனுதினமும் மகிழ்ச்சியைத் தருபவன் (ஆகிய
கந்தக் கடவுளின்), கொடியில் உள்ள சேவலேதான் அது.



சேவல் விருத்தம் முற்றிற்று.
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

அருணகிரிநாதர் நூல்கள் (Arunagirinathar Books) Empty திருப்புகழ்

Post by மாலதி December 13th 2011, 08:33

திருப்புகழ் என்பது முருகக் கடவுள் மீது அருணகிரிநாதர் இயற்றிய ஒரு பத்தி
நூலாகும். இதில் 1307 இசைப்பாடல்கள் உள்ளன. இவற்றுள் 1088கும் மேற்பட்ட
சந்த வேறுபாடுகள் உள்ளன என்றும் கணித்து இருக்கிறார்கள். திருப்புகழை
தேவாரம், திருவாசகம் போல் மந்திர நூலாகவும், நாள்தோறும் இறைவனைப் போற்றிப்
புகழ்பாடும் நூலாகவும் பத்தி வழி பின்பற்றுவோர் கொள்ளுகின்றனர்.
திருப்புகழில் உள்ள இசைத்தாளங்கள், இசை நூல்கள் எதிலும் அடங்காத தனித்தன்மை
பெற்றவை.
இதற்கு உரை எழுதியவர் ஸ்ரீ கோபால சுந்தரம் அவர்கள் ஆவார்.



அருணகிரிநாதர் நூல்கள் (Arunagirinathar Books) Murugan01








[1-50][51-100][101-150][151-200][201-250][251-300][301-350][351-400]
[401-450][451-500][501-550][551-600][601-650][651-700][701-750][751-800]

[801-850][851-900][901-950][951-1000][1001-1050][1051-1100] [1101-1150] [1151-1200]
[1201-1250][1251-1300][1301-1327]








பாடல் 651 - காசி


ராகம் - சந்த்ர
கெளன்ஸ்; தாளம் - மிஸ்ரசாபு - 3 1/2
தகிட-1 1/2, தகதிமி-2



தான தத்தன தான தானன
தான தத்தன தான தானன
தான தத்தன தான தானன ...... தனதான



தார ணிக்கதி பாவி யாய்வெகு
சூது மெத்திய மூட னாய்மன
சாத னைக்கள வாணி யாயுறு ...... மதிமோக


தாப மிக்குள வீண னாய்பொரு
வேல்வி ழிச்சிய ராகு மாதர்கள்
தாமு யச்செயு மேது தேடிய ...... நினைவாகிப்


பூர ணச்சிவ ஞான காவிய
மோது தற்புணர் வான நேயர்கள்
பூசு மெய்த்திரு நீறி டாஇரு ...... வினையேனைப்


பூசி மெய்ப்பத மான சேவடி
காண வைத்தருள் ஞான மாகிய
போத கத்தினை யேயு மாறருள் ...... புரிவாயே


வார ணத்தினை யேக ராவுமு
னேவ ளைத்திடு போதுமேவிய
மாய வற்கித மாக வீறிய ...... மருகோனே


வாழு முப்புர வீற தானது
நீறெ ழப்புகை யாக வேசெய்த
மாம திப்பிறை வேணி யாரருள் ...... புதல்வோனே


கார ணக்குறி யான நீதிய
ரான வர்க்குமு னாக வேநெறி
காவி யச்சிவ நூலை யோதிய ...... கதிர்வேலா


கான கக்குற மாதை மேவிய
ஞான சொற்கும ராப ராபர
காசி யிற்பிர தாப மாயுறை ...... பெருமாளே.

இந்த உலகிலேயே அதிக பாவியாய்,
மிக்க சூது நிறைந்த மூடனாய், மனத்திலே அழுந்திய திருட்டுப் புத்தியை
உடையவனாய், மிகுந்த காம மயக்கத்தில் தாகம் மிக்க வீணனாய், போருக்கு உற்ற
வேல் போன்ற கண்களை உடைய பொது மகளிர் தாம் பிழைப்பதற்கு உதவும் செல்வத்தை
தேடித் தரும் நினைவையே கொண்டு, பரிபூரணமான சிவஞான நூல்களை ஓதுதலில்
விருப்பம் கொண்டுள்ள அன்பர்கள் பூசுகின்ற மகிமை வாய்ந்த திருநீற்றை இட்டுக்
கொள்ளாத இருவினையாளனாகிய (புண்ணிய பாப வினையாளனாகிய) அடியேனை திருநீற்றைப்
பூசவைத்து, உண்மைப்பதவியாகிய உன் திருவடிகளை தரிசனம் செய்வித்து
திருவருள்மயமான ஞானம் என்ற தூய அறிவும் எனக்குக் கிட்டுமாறு அருள்
புரிவாயாக. கஜேந்திரன் என்ற யானையை முதலை முன்னொருநாள் வளைத்து இழுத்த போது
அங்கு வந்து உதவிய மாயவன் திருமாலுக்கு மனம் மகிழச்செய்யும்படி விளங்கும்
மருமகனே, பெருவாழ்வு வாழ்ந்த திரிபுரங்களின் பொலிவெல்லாம் சாம்பலாகப்
போகுமாறு புகை எழச் செய்த சிறந்த திங்கட்பிறை அணிந்த சடைப்
பெருமான்சிவபிரான் அருளிய புதல்வனே, யாவற்றிற்கும் மூல காரணனாகவும்,
இலக்காகவும் உள்ள நீதிப் பெருமான் சிவபிரானது சந்நிதிகளில் அறநெறியை ஓதும்
பிரபந்தங்களான சிவநூலாகிய தேவாரத்தை, திருஞானசம்பந்தராக அவதரித்து, ஓதின
ஒளி வேலனே, காட்டில் குறப்பெண் வள்ளியை விரும்பி அடைந்த ஞான மொழி பேசும்
குமரனே, யாவர்க்கும் மேலானவனே, காசித்தலத்தில்* பிரபலமாக வீற்றிருக்கும் பெருமாளே.

* காசி என்ற 'வாரணாசி' கங்கைக் கரையில் உத்தரப் பிரதேசத்தில் உள்ளது.ஏழு முக்தித் தலங்களுள் காசியும் ஒன்று.


பாடல் 652 - காசி


ராகம் - ...; தாளம் -



தந்தத் தனதன தானன தானன
தந்தத் தனதன தானன தானன
தந்தத் தனதன தானன தானன ...... தனதான



மங்கைக் கணவனும் வாழ்சிவ ணாமயல்
பங்கப் படமிசை யேபனி போல்மதம்
வந்துட் பெருகிட வேவிதி யானவ ...... னருள்மேவி


வண்டுத் தடிகைபொ லாகியெ நாள்பல
பந்துப் பனைபழ மோடிள நீர்குட
மண்டிப் பலபல வாய்வினை கோலும ...... வழியாலே


திங்கட் பதுசெல வேதலை கீழுற
வந்துப் புவிதனி லேமத லாயென
சிந்தைக் குழவியெ னாவனை தாதையு ...... மருள்கூரச்


செம்பொற் றடமுலை பால்குடி நாள்பல
பண்புத் தவழ்நடை போய்வித மாய்பல
சிங்கிப் பெருவிழி யாரவ மாயதி ...... லழிவேனோ


அங்கைத் தரியென வேயொரு பாலக
னின்பக் கிருபைய தாயொரு தூண்மிசை
அம்பற் கொடுவரி யாயிரண் யாசுர ...... னுடல்பீறி


அண்டர்க் கருள்பெரு மான்முதி ராவணி
சங்குத் திகிரிக ரோனரி நாரவ
ரங்கத் திருவணை மேல்துயில் நாரணன் ...... மருகோனே


கங்கைச் சடைமுடி யோனிட மேவிய
தங்கப் பவளொளி பால்மதி போல்முக
கங்குற் றரிகுழ லாள்பர மேசுரி ...... யருள்பாலா


கந்துப் பரிமயில் வாகன மீதிரு
கொங்கைக் குறமக ளாசையொ டேமகிழ்
கங்கைப் பதிநதி காசியில் மேவிய ...... பெருமாளே.

ஒரு பெண்ணும் அவளுடைய கணவனும்
வாழ்ந்து பொருந்தி, காம இச்சை என்னும் ஒரு உந்துதல் தம் மீது அடைய, (அதன்
விளைவாக) பனி போல சுக்கிலம் தோன்றி உள்ளே பரவ, பிரமனது அருள் கூடி
(கருவானது) வண்டு தடித்து வளருவது போல் தடித்து, நாள் பல செல்ல, பந்தின்
அளவாகி, பனம் பழத்தின் அளவாகி, இள நீர் போலவும், குடம் போலவும் நெருங்கி
வளர்ந்து, பின்னும் பல பல வளர்ச்சியுடன், புணர்தல் செய்த அந்த இடத்தின்
வழியாக, மாதங்கள் பத்து கழிந்த பின் தலை கீழாக வந்து பூமியில் பிறந்து,
மகன் எனப் பேர் பெற்று, மனதுக்கு இனிய குழந்தையாகி, தாயும் தந்தையும் அன்பு
மிகுந்து ஆதரிக்க, செவ்விய பொலிவுள்ள பருத்த முலையில் பாலைக் குடிக்கின்ற
நாட்கள் பல செல்ல, பின்பு அழகிய தவழ் நடை நாட்களும் செல்ல, பல விதமான விஷம்
போன்ற பெரிய கண்களை உடைய விலைமாதர்களோடு பொழுது போக்கும் பயனற்ற
வாழ்க்கையில் அழிந்து போவேனோ? உள்ளங்கை நெல்லிக் கனி போல எளிதில்
புலப்படுவான் (இறைவன்) என்று ஒரு பிள்ளையாகிய பிரகலாதன் கூற, இன்ப அன்புடனே
ஒரு தூணிலிருந்து அழகிய பற்களைக் கொண்டு நரசிங்கமாய்த் தோன்றி,
இரணியாசுரனுடைய உடலைக் கிழித்து, தேவர்களுக்கு உதவி செய்த பெருமான், தம்மை
விட்டு நீங்காத ஆபரணங்களான பஞ்ச ஜன்யம் என்னும் சங்கும், சுதர்சனம் என்னும்
சக்கரத்தையும் திருக் கரத்தில் கொண்டவன், (காவிரி, கொள்ளிடம் என்னும்)
நதியின் கரையில் உள்ள ஸ்ரீரங்கம் என்னும் தலத்தில் (ஆதிசேஷன் என்னும்)
பெரிய படுக்கை மேல் பள்ளி கொள்ளும் திருமாலின் மருகனே, கங்கையைச் சடையில்
தரித்துள்ள சிவபெருமானுடைய இடது பக்கத்தில் பொருந்தியுள்ளவளும், தங்கம்,
பவளம் இவைகளின் ஒளியைக் கொண்டவளும், பால் நிறத்து வெண் மதியைப் போல் திரு
முகம் கொண்டவளும், இருள் கொண்ட கூந்தலை உடையவளுமாகிய பரமேஸ்வரி அருளிய
குழந்தையே, பாய வல்ல குதிரை போன்ற மயில் வாகனத்தின் மேல், இரண்டு
மார்பகங்களை உடைய குறப் பெண்ணாகிய வள்ளியுடன் ஆசையோடு மகிழ்கின்றவனே, கங்கை
நதிக் கரையில் உள்ள தலமாகிய காசியில் வீற்றிருக்கும் பெருமாளே.


பாடல் 653 - காசி


ராகம் - சாரங்கா; தாளம்
- அங்கதாளம் - 8 1/2
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2, தக-1



தான தந்தன தானன ...... தனதான
தான தந்தன தானன ...... தனதான



வேழ முண்ட விளாகனி ...... யதுபோல
மேனி கொண்டு வியாபக ...... மயலூறி


நாளு மிண்டர்கள் போல்மிக ...... அயர்வாகி
நானு நைந்து விடாதருள் ...... புரிவாயே


மாள அன்றம ணீசர்கள் ...... கழுவேற
வாதில் வென்ற சிகாமணி ...... மயில்வீரா


காள கண்ட னுமாபதி ...... தருபாலா
காசி கங்கையில் மேவிய ...... பெருமாளே.

வேழம்*
என்ற பழங்களுக்கு ஏற்படும் நோய் தாக்கிய விளாம்பழம் போல உள்ளிருக்கும்
சத்து நீங்கிய உடலை அடைந்து, எங்கும் காம இச்சை ஊறிப் பரவி, தினமும்
அறிவின்மை மிகுந்த மூடர்கள் போன்று மிகுந்த தளர்ச்சியடைந்து, நானும்
மெலிந்து வாட்டமுறாதபடி அருள் புரிவாயாக. முன்பு சமணக் குருக்கள் கழுவில்
ஏறி இறக்கும்படியாக வாது செய்து வென்ற (சம்பந்தராக வந்த) சிகாமணியே, மயில்
வீரனே, விஷமுண்ட கண்டனாகிய உமாநாதன் சிவபிரான் தந்த குமரனே, கங்கைநதிக்
கரையிலுள்ள காசிநகரில்* வீற்றிருக்கும் பெருமாளே.

* வேழம் என்ற தேரை விளாம்பழத்துக்குள் பாய்ந்தால், பழம் உள்ளீடு இல்லாமல் வெறும் ஓடாகப் போய்விடும்.

** காசி என்ற 'வாரணாசி' கங்கைக் கரையில் உத்தரப் பிரதேசத்தில் உள்ளது. ஏழு முக்தித் தலங்களுள் காசியும் ஒன்று.
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

அருணகிரிநாதர் நூல்கள் (Arunagirinathar Books) Empty Re: அருணகிரிநாதர் நூல்கள் (Arunagirinathar Books)

Post by மாலதி December 13th 2011, 08:33

பாடல் 654 - மாயாபுரி


ராகம் -
பந்துவராளி; தாளம் - அங்கதாளம் - 8 1/2
தகதிமி-2, தகிட-1 1/2, தகதிமி-2,
தகதிமிதக-3



தனன தனந்த தானன ...... தனதான
தனன தனந்த தானன ...... தனதான



சிகர மருந்த வாழ்வது ...... சிவஞானம்
சிதறி யலைந்து போவது ...... செயலாசை


மகர நெருங்க வீழ்வது ...... மகமாய
மருவி நினைந்தி டாவருள் ...... புரிவாயே


அகர நெருங்கி னாமய ...... முறவாகி
அவச மொடுங்கை யாறொடு ...... முனமேகிக்


ககன மிசைந்த சூரியர் ...... புகமாயை
கருணை பொழிந்து மேவிய ...... பெருமாளே.

சிவாயநம என்ற
பஞ்சாட்சரத்திலுள்ள 'சி'கரம் ஆகிய எழுத்தை உச்சரிப்பதால் கிடைக்கக்கூடியது
சிவஞானமாகும். அந்த உச்சரிப்பால் அலைந்து அழிந்து போவன மனம், வாக்கு, காயம்
இவற்றின் செயலும் ஆசைகளும் ஆகும். மகரம் என்னும் எழுத்தை நெருங்க
உச்சரிக்கும்போது வீழ்ந்து அழிவதுதான் மஹாமாயை. உன்னை தியானித்து அதன்
பயனாக நினைப்பு மறப்பு இரண்டுமே இல்லாத நிலையை அருள் புரிவாயாக.
(வீரமஹேந்திரபுரத்தின்)* வீதிகளுக்கு மிக
அருகே வந்தால் துன்பம் ஏற்பட்டு, மயக்கத்துடனும், தன்செயல் அற்றும் முன்பு
சூரன்அரசாண்ட காலத்தில் அவதியுற்றுச் சென்று, ஆகாயத்தில் இருந்த பன்னிரண்டு
சூரியர்களும் உன்னிடம் தஞ்சம் புக (சூர சம்ஹாரம் செய்து) அவர்களுக்குக்
கருணை பொழிந்தனையே. மாயாபுரியில்** வீற்றிருக்கும் பெருமாளே.

*
சூரனது அரசாட்சியில் அவனது தலைநகராம் வீரமஹேந்திரபுரத்தின் வழியாகச்
செல்லும் சூரியன் தனது உக்ரத்தைக் குறைத்துக்கொள்ள சூரன் ஆணையிட்டதால்
சூரியன் பட்ட துன்பம் முருகனால் தீர்த்துவைக்கப்பட்டது.

** மாயாபுரி முக்தித் தலங்களில் ஒன்றான ஹரித்துவாரம் - உத்தரப்பிரதேசத்தில் உள்ளது.


பாடல் 655 - வயிரவிவனம்


ராகம் - ஸரஸ்வதி ;
தாளம் - அங்கதாளம் - 5 1/2
தகதிமி-2, தகதிமி-2, தகிட-1 1/2



தனதன தனத்த தான தனதன தனத்த தான
தனதன தனத்த தான ...... தனதான



அருவரை யெடுத்த வீர னெரிபட விரற்க ளூணு
மரனிட மிருக்கு மாயி ...... யருள்வோனே


அலைகட லடைத்த ராமன் மிகமன மகிழ்ச்சி கூரு
மணிமயில் நடத்து மாசை ...... மருகோனே


பருதியி னொளிக்கண் வீறும் அறுமுக நிரைத்த தோள்ப
னிருகர மிகுத்த பார ...... முருகாநின்


பதமல ருளத்தி னாளு நினைவுறு கருத்தர் தாள்கள்
பணியவு மெனக்கு ஞானம் ...... அருள்வாயே


சுருதிக ளுரைத்த வேத னுரைமொழி தனக் குளாதி
சொலுவென வுரைத்த ஞான ...... குருநாதா


சுரர்பதி தழைத்து வாழ அமர்சிறை யனைத்து மீள
துணிபட அரக்கர் மாள ...... விடும்வேலா


மருமலர் மணக்கும் வாச நிறைதரு தருக்கள் சூழும்
வயல்புடை கிடக்கு நீல ...... மலர்வாவி


வளமுறு தடத்தி னோடு சரஸ்வதி நதிக்கண் வீறு
வயிரவி வனத்தில் மேவு ...... பெருமாளே.

அரியதான கயிலை மலையை அசைத்து
எடுக்க முயன்ற வீரனான ராவணன் நெரிபடும்படி தமது விரல்களை ஊன்றிய
சிவபிரானின் இடது பாகத்தில் உள்ள அன்னை பார்வதி பெற்றருளிய குழந்தையே, அலை
வீசும் கடலை அணையிட்டு அடைத்த ஸ்ரீராமன் மிக்க மனமகிழ்ச்சி கொள்ளும், அழகிய
மயிலை வாகனமாகக் கொண்டு எட்டுத் திக்கிலும் நடத்திச் செல்லும், மருமகனே,
சூரியனது ஒளி தம்மிடத்தே விளங்கும் முகங்கள் ஆறும், வரிசையான தோள்களும்,
பன்னிரண்டு கரங்களும் உடையவனே, மிகுந்த பெருமை வாய்ந்த முருகனே, உன்
திருவடி மலரை உள்ளத்தில் தினமும் நினைத்துத் தொழுதிருக்கும் கருத்தை உடைய
அடியார்களின் தாள்களைப் பணிந்திடவும் எனக்கு ஞானத்தைத் தந்தருள்வாயாக.
வேதங்களை ஓதும் பிரமன் சொன்ன மொழிகளுள் முதலாவதான ஓம் என்ற பிரணவத்தின்
பொருளை எனக்கு நீ சொல்லுக என தந்தை சிவனார் கேட்க அவ்வாறே பொருள் உரைத்த
ஞான குரு நாதனே, தேவர்களுக்குத் தலைவனான இந்திரன் செழிப்புடன் வாழவும்,
இருந்த சிறையினின்றும் தேவர்கள் யாவரும் மீளவும், வெட்டுண்டு அசுரர்கள்
இறந்தொழியவும், வேலாயுதத்தைச் செலுத்திய வீரனே, வாசனை மலர்கள் மணம் வீசும்
நறுமணம் நிறைந்துள்ள மரங்கள் சூழ்ந்த வயல்கள் பக்கத்தில் உள்ள நீலோத்பல
மலர்கள் மலர்ந்துள்ள நீர்நிலைகளின் செழிப்பு வாய்ந்த கரைகளோடு ஸரஸ்வதி
என்னும் ஆற்றினிடத்தே விளங்குகின்ற வயிரவிவனம்* என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.

* இது பஞ்சாப் மாநிலத்தில் ஸரஸ்வதி நதிக்கரையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.


பாடல் 656 - வெள்ளிகரம்


ராகம் - சாமா;
தாளம் - அங்கதாளம் - 15
தகதிமி-2, தகிட-1 1/2, தகதிமி-2, தகிட-1 1/2

தகதிமி-2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமிதக-3



தனதன தனன தனதன தனன
தய்ய தனத்த தந்த ...... தனதானா



அடலரி மகவு விதிவழி யொழுகு
மைவ ருமொய்க்கு ரம்பை ...... யுடனாளும்


அலைகட லுலகி லலம்வரு கலக
வைவர் தமக்கு டைந்து ...... தடுமாறி


இடர்படு மடிமை யுளமுரை யுடலொ
டெல்லை விடப்ர பஞ்ச ...... மயல்தீர


எனதற நினது கழல்பெற மவுன
வெல்லை குறிப்ப தொன்று ...... புகல்வாயே


வடமணி முலையு மழகிய முகமும்
வள்ளை யெனத்த யங்கு ...... மிருகாதும்


மரகத வடிவு மடலிடை யெழுதி
வள்ளி புனத்தில் நின்ற ...... மயில்வீரா


விடதர திகுணர் சசிதரர் நிமலர்
வெள்ளி மலைச்ச யம்பு ...... குருநாதா


விகசித கமல பரிபுர முளரி
வெள்ளி கரத்த மர்ந்த ...... பெருமாளே.

வலிமை வாய்ந்த திருமாலின்
பிள்ளையாகிய பிரமன் எழுதிவிட்ட விதியின் வழியின்படி செல்லுகின்ற சுவை, ஒளி,
ஊறு, ஓசை, நாற்றம் ஆகிய ஐந்து உணர்ச்சிகளும் நெருங்கி (வேலை செய்யும்)
குடிலாகிய உடலுடன் நாள்தோறும் அலைகளை உடைய கடல் சூழ்ந்த உலகத்தில் துன்பம்
உண்டாக்கி கலகம் செய்யும் ஐந்து (மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய)
இந்திரியங்களால் மனம் உடைந்து தடுமாற்றம் அடைந்து, வருத்தங்களுக்கு ஆளான
அடிமையாகிய நான் மனம், வாக்கு, காயம் இவை மூன்றும் உலகத்தில் ஈடுபடுதலில்
இருந்து விடுபடவும், மயக்கம் தீரவும், எனது எனப்படும் பாசம் (மமகாரம்)
நீங்கவும், உனது திருவடியைப் பெறவும், மோன வரம்பைக் குறிப்பதாகிய ஓர்
உபதேசத்தை அருள்புரிவாயாக. (வள்ளியின்) மணி வடம் அணிந்த மார்பும், அழகான
முகமும், வள்ளைக் கொடி போல விளங்கும் இரண்டு காதுகளும், மரகத நிறமும்,
படத்தில் எழுதி வள்ளியினுடைய தினைப்புனத்தில் நின்ற மயில் வீரனே, விஷத்தைக்
கண்டத்தில் தரித்தவர், மேலான குணத்தை உடையவர், சந்திரனைச் சடையில்
தரித்தவர், பரிசுத்தமானவர், வெள்ளி மலையாகிய கயிலையில் வீற்றிருக்கும்
சுயம்பு மூர்த்தியான சிவபெருமானுக்கு குருநாதனே, மலர்ந்த தாமரை போன்ற,
சிலம்பணிந்த தாமரை மலர் போன்ற, திருவடியை உடையவனே, வெள்ளிகரம்* என்னும் தலத்தில் அமர்ந்த பெருமாளே.

* வெள்ளிகரம் அரக்கோணத்துக்கு வடக்கில் 22 மைலில் உள்ள வேப்பகுண்டா ரயில் நிலையத்தினின்று மேற்கே 10 மைலில் உள்ளது.


பாடல் 657 - வெள்ளிகரம்


ராகம் -
மாயாமாளவகெளளை ; தாளம் - அங்கதாளம் - 15
தகதிமி-2, தகிட-1 1/2, தகதிமி-2,
தகிட-1 1/2
தகதிமி-2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமிதக-3



தனதன தனன தனதன தனன
தய்ய தனத்த தந்த ...... தனதான



சிகரிக ளிடிய நடநவில் கலவி
செவ்வி மலர்க்க டம்பு ...... சிறுவாள்வேல்


திருமுக சமுக சததள முளரி
திவ்ய கரத்தி ணங்கு ...... பொருசேவல்


அகிலடி பறிய எறிதிரை யருவி
ஐவன வெற்பில் வஞ்சி ...... கணவாஎன்


றகிலமு முணர மொழிதரு மொழியி
னல்லது பொற்பதங்கள் ...... பெறலாமோ


நிகரிட அரிய சிவசுத பரம
நிர்வச னப்ர சங்க ...... குருநாதா


நிரைதிகழ் பொதுவர் நெறிபடு பழைய
நெல்லி மரத்த மர்ந்த ...... அபிராம


வெகுமுக ககன நதிமதி யிதழி
வில்வ முடித்த நம்பர் ...... பெருவாழ்வே


விகசித கமல பரிமள கமல
வெள்ளி கரத்த மர்ந்த ...... பெருமாளே.

அஷ்ட கிரிகளும்
பொடிபடும்படியாக நடனமாடும் கலாப மயில், அன்றலர்ந்த புதிய கடப்பமலர், சிறிய
வாள், வேல், ஆறு திருமுகங்களின் சேர்க்கையாம் நூறு இதழ்கள் உள்ள தாமரைகள்,
திவ்யமான கரத்திலே பொருந்திய போர் செய்யவல்ல சேவல், (இவையெல்லாம் விளங்க)
அகில் மரத்தின் வேரைப் பறித்து எறியும் அலைவீசும் அருவிகள் உள்ள, நெல்
விளையும் வள்ளிமலையின் வஞ்சிக்கொடியனன வள்ளியின் கணவா, என்று உலகெலாம்
உணரக் கூறும் சொற்களால் அல்லது உனது அழகிய திருவடிகளைப் பெற முடியுமோ?
ஒப்பிடற்கு அரியரான சிவபிரானின் சேயே, பரமனே, வாக்குக்கு எட்டாததான பிரணவ
உபதேசத்தைச் செய்த குருநாதனே, பசுக்கூட்டங்களைக் கொண்ட இடையர்கள் செல்லும்
வழியில் உள்ள பழைய நெல்லி மரத்தின்* கீழே
வீற்றிருந்த அழகனே, ஆயிரம் முகங்களோடு ஓடும் ஆகாய கங்கை நதியையும்,
பிறையையும், கொன்றையையும், வில்வத்தையும் சடையில் முடித்த நம்
சிவபெருமானின் பெருஞ் செல்வமே, மலர்ந்த தாமரைகளும், நறுமணம் மிகுந்த
தாமரைகளும் நிறைந்த வெள்ளிகரத்தில்** வீற்றிருக்கும் பெருமாளே.

*
சுவாமிமலைக்கு அருகே பூமிதேவியானவள் பார்வதியின் சாபத்தால் பலகாலம்
இருந்து, ஷண்முகனை வணங்கி சாப விமோசனம் பெற்றாள். முருகனை விட்டுப் பிரிய
மனமில்லாது அங்கேயே நெல்லிமரமாக நின்றாள் - சுவாமிமலை மகாத்மியம்.

** வெள்ளிகரம் அரக்கோணத்துக்கு வடக்கில் 22 மைலில் உள்ள வேப்பகுண்டா ரயில் நிலையத்தினின்று மேற்கே 10 மைலில் உள்ளது.


பாடல் 658 - வெள்ளிகரம்


ராகம் - ...;
தாளம் -



தனதன தய்ய தனதன தய்ய
தனதன தய்ய ...... தனதான



குவலய மல்கு தவலிகள் முல்லை
குளிர்நகை சொல்லு ...... முதுபாகு


குழையிள வள்ளை யிடைசிறு வல்லி
குயமுலை கொள்ளை ...... விழைமேவிக்


கவலைசெய் வல்ல தவலரு முள்ள
கலவியில் தெள்ளு ...... கவிமாலை


கடிமல ரைய அணிவன செய்ய
கழலிணை பைய ...... அருள்வாயே


தவநெறி யுள்ளு சிவமுனி துள்ளு
தனியுழை புள்ளி ...... யுடனாடித்


தருபுன வள்ளி மலைமற வள்ளி
தருதினை மெள்ள ...... நுகர்வோனே


அவநெறி சொல்லு மவரவை கொல்லு
மழகிய வெள்ளி ...... நகர்வாழ்வே


அடையலர் செல்வ மளறிடை செல்ல
அமர்செய வல்ல ...... பெருமாளே.

உலகில் நிறைந்துள்ள, ஒழுக்கக்
குறைபாடுகள் உள்ள விலைமாதர்களின் பற்கள் குளிர்ந்த முல்லை மலர் போன்றவை,
பேச்சும் முதிர்ந்த வெல்லம் போன்றது, காது இளமையான வள்ளிக் கொடி போன்றது,
இடுப்பு சிறிய கொடி ஒத்தது, இளமை வாய்ந்த மார்பகங்கள் பூரித்து உள்ளன
(என்று எல்லாம் கூறி) விருப்பம் மிகவும் அடைந்து, மனக் கவலை தரத்தக்க
குற்றம், குறை உள்ளவர்களுடன் நான் இணைந்திருந்த போதும், தெளிந்த கவி
மாலைகளையும், நறு மணம் உள்ள மலர் மாலைகளையும் அழகுற அணிவிப்பதற்காக உனது
திருவடி இணைகளை மெல்ல எனக்கு அருள் புரிவாயாக. முன்பு, தவ நெறியில்
தியானித்து இருந்த சிவ முனிவரின் (தவத்தைக் கலைத்துத்) துள்ளிச் சென்ற,
ஒப்பற்ற, புள்ளி மானுடன் கலந்து பெற்றெடுத்தவளும், தினைப்புனத்தில்
இருந்தவளும், அந்த வள்ளி மலையில் இருந்த வேட்டுவ குலத்தைச் சேர்ந்தவளுமான
வள்ளி கொடுத்த தினை மாவை மெதுவாக உண்டவனே, பயனற்ற மார்க்கத்தைச் சொல்லி
வந்த சமணர்களின் கூட்டத்தை (கழுவில்) மாய்த்த (திருஞானசம்பந்தராக வந்து)
அழகு வாய்ந்த வெள்ளிகரம்* என்னும் நகரில்
வாழும் செல்வனே, பகைவர்களாகிய அசுரர்களின் செல்வம் எல்லாம் கடல் நீரில்
மூழ்கி அழியும்படி சண்டை செய்ய வல்ல பெருமாளே.

* வெள்ளிகரம் அரக்கோணத்துக்கு வடக்கே 22 மைலில் உள்ள வேப்பகுண்டா ரயில் நிலையத்துக்கு மேற்கே 12 மைலில் உள்ளது.


பாடல் 659 - வெள்ளிகரம்


ராகம் - ...;
தாளம் -



தனதன தய்ய தனதன தய்ய
தனதன தய்ய ...... தனதான



பொருவன கள்ள இருகயல் வள்ளை
புரிகுழை தள்ளி ...... விளையாடும்


புளகித வல்லி யிளகித வல்லி
புரியிள முல்லை ...... நகைமீதே


உருகிட வுள்ள விரகுடை யுள்ள
முலகுயி ருள்ள ...... பொழுதேநின்


றுமைதரு செல்வ னெனமிகு கல்வி
யுணர்வொடு சொல்ல ...... வுணராதோ


மருவலர் வள்ளி புரமுள வள்ளி
மலைமற வள்ளி ...... மணவாளா


வளர்புவி யெல்லை யளவிடு தொல்லை
மரகத நல்ல ...... மயில்வீரா


அருவரை விள்ள அயில்விடு மள்ள
அணிவயல் வெள்ளி ...... நகர்வாழ்வே


அடையலர் செல்வ மளறிடை செல்ல
அமர்செய வல்ல ...... பெருமாளே.

போர் செய்யவல்ல கள்ளத்தனம்
உள்ள கயல் மீன் போல் இரண்டு கண்கள் வள்ளிக் கொடி போன்ற காதுகளைத் தாக்கி
விளையாடுகின்ற புளகாங்கிதம் கொண்ட, கொடி போல் இடை வாய்ந்த, இளம் பெண்கள்
புன்னகை புரியும் போது தெரியும் முல்லை அரும்பு போன்ற பற்களைக் கண்டு,
உருகத் தக்க உற்சாகத்தை அடையும் என் மனம், இவ்வுலகில் உயிர் இருக்கும்
பொழுதே நிலைத்து நின்று உமாதேவியார் பெற்றெடுத்த செல்வனே என்று உன்னை
மிகுந்த கல்வி உணர்ச்சியோடு சொல்லுவதற்குத் தெரிந்து கொள்ளாதோ? வாசனை
மலர்கள் உள்ள வள்ளிபுரத்தில் உள்ள வள்ளி மலையில் இருக்கும் குறப்பெண்
வள்ளியின் கணவனே, பெரிதாக உள்ள பூமியின் முழு எல்லையையும் (பறந்தே)
அளவிட்ட, பழைய மரகதப் பச்சை நிறமுள்ள அழகிய மயில் மீதேறும் வீரனே, அரிய
கிரவுஞ்ச மலை உடைபடுமாறு வேலாயுதத்தைச் செலுத்திய போர் வீரனே, அழகிய
வயல்கள் சூழ்ந்த வெள்ளி நகரில் வாழும் செல்வமே, பகைவர்களின் செல்வம்
எல்லாம் சேற்றிடையே படிந்து அழியுமாறு போர் செய்ய வல்ல பெருமாளே.

* வெள்ளிகரம் அரக்கோணத்துக்கு வடக்கே 22 மைலில் உள்ள வேப்பகுண்டா ரயில் நிலையத்துக்கு மேற்கே 12 மைலில் உள்ளது.


பாடல் 660 - வெள்ளிகரம்


ராகம் - ...;
தாளம் -



தய்ய தய்ய தய்ய தய்ய
தய்ய தய்ய ...... தனதான



கள்ள முள்ள வல்ல வல்லி
கையி லள்ளி ...... பொருளீயக்


கல்லு நெல்லு வெள்ளி தெள்ளு
கல்வி செல்வர் ...... கிளைமாய


அள்ளல் துள்ளி ஐவர் செல்லு
மல்லல் சொல்ல ...... முடியாதே


ஐய ரைய மெய்யர் மெய்ய
ஐய செய்ய ...... கழல்தாராய்


வள்ளல் புள்ளி நவ்வி நல்கு
வள்ளி கிள்ளை ...... மொழியாலே


மைய லெய்து மைய செய்யில்
வையில் வெள்வ ...... ளைகளேற


மெள்ள மள்ளர் கொய்யு நெல்லின்
வெள்ள வெள்ளி ...... நகர்வாழ்வே


வெய்ய சைய வில்லி சொல்லை
வெல்ல வல்ல ...... பெருமாளே.

கள்ளத் தனம் வாய்ந்த,
சாமர்த்தியமான ஒரு விலைமகளின் கையிலே (நான்) அள்ளிப் பொருள்களைக்
கொடுப்பதால், (என்னுடைய) நவரத்தினக் கற்களும், நெற் குவியல்களும், வெள்ளிப்
பொருள்களும், தெளிந்த கல்விச் செல்வமும், செல்வமுள்ள சுற்றத்தார்களும்,
எல்லாம் அழிந்து விலக, (மாயைச்) சேற்றிலிருந்து குதித்து ஐம்புலன்கள்
செலுத்துகின்ற துன்பம் விவரிக்க முடியாது. முனிவர்களுக்கு முனிவனே,
மெய்யர்க்கு மெய்யனே, அழகிய, சிவந்த உனது திருவடியைத் தாராய். வள்ளலே,
புள்ளிகளை உடைய பெண் மான் (லக்ஷ்மி) ஈன்ற வள்ளி நாயகியாகிய கிளியின்
மொழிகளைக் கேட்டு, மோகம் கொண்ட ஐயனே, வயல்களில், புல்லில் வெள்ளைச்
சங்குகள் நிறைந்திட, வயலில் உழவர்கள் மெதுவாக அறுவடை செய்த நெல் மிக்க உள்ள
வெள்ளிகர* நகரத்தில் வாழ்பவனே,
விரும்புதற்குரிய (மேரு) மலையை வில்லாக வளைத்த சிவபெருமானுக்கு, பிரணவ
மொழியின் பொருளை (அவருக்குக் குருவாயிருந்து) வெற்றியுடன் மொழிய வல்ல
பெருமாளே.

* வெள்ளிகரம் அரக்கோணத்துக்கு வடக்கே 22 மைலில் உள்ள வேப்பகுண்டா ரயில் நிலையத்துக்கு மேற்கே 12 மைலில் உள்ளது.
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

அருணகிரிநாதர் நூல்கள் (Arunagirinathar Books) Empty Re: அருணகிரிநாதர் நூல்கள் (Arunagirinathar Books)

Post by மாலதி December 13th 2011, 08:34

பாடல் 661 - வெள்ளிகரம்


ராகம் - .......;
தாளம் -



தய்ய தய்ய தய்ய தய்ய
தய்ய தய்ய ...... தனதான



தொய்யில் செய்யில் நொய்யர் கையர்
தொய்யு மைய ...... இடையாலுந்


துள்ளி வள்ளை தள்ளி யுள்ளல்
சொல்லு கள்ள ...... விழியாலும்


மைய செவ்வி மவ்வல் முல்லை
மல்கு நல்ல ...... குழலாலும்


மையல் கொள்ள எள்ளல் செய்யும்
வல்லி சொல்லை ...... மகிழ்வேனோ


செய்ய துய்ய புள்ளி நவ்வி
செல்வி கல்வ ...... ரையிலேனல்


தெய்வ வள்ளி மையல் கொள்ளு
செல்வ பிள்ளை ...... முருகோனே


மெய்யர் மெய்ய பொய்யர் பொய்ய
வெள்ளை வெள்ளி ...... நகர்வாழ்வே


வெய்ய சைய வில்லி சொல்லை
வெல்ல வல்ல ...... பெருமாளே.

மார்பின் மீது சந்தனத்தால்
எழுதினாலே நெகிழ்ந்து தளர்பவர்கள் போல பாசாங்கு செய்யும் கீழ் மக்களான
விலைமாதரின் இளைத்துள்ள, வியக்கத் தக்க (நுண்ணிய) இடையாலும், எழுந்து
பாய்ந்து வள்ளைக் கொடிபோன்று காது வரை நீளும், மனத்தில் நினைந்துள்ள வஞ்சக
எண்ணத்தை வெளிப்படுத்தும், திருட்டுக் கண்களாலும், மை போன்று கரு நிறம்
கொண்டதும், செம்மை வாய்ந்த காட்டு மல்லிகை, முல்லை நிறைந்துள்ள நல்ல
கூந்தலாலும், காம இச்சை கொள்ளும்படியாக (என்னை) இகழ்கின்ற பெண்களின்
பேச்சுக்கு மகிழ்ச்சி கொள்வேனோ? செந்நிறத்தவனே, தூயவனே, பெண் மான் போன்ற
லக்ஷ்மியின் குமாரியும், கல் நிறைந்த வள்ளி மலையில் தினைப் புனத்தைக் காவல்
செய்தவளுமான தெய்வ வள்ளி மேல் மோகம் கொண்ட செல்வப் பிள்ளையான முருகனே,
மெய்யர்க்கு மெய்யனே, பொய்யர்க்குப் பொய்யனே, கள்ளம் இல்லாத நகராகிய
வெள்ளிகரம் என்னும் தலத்தில் வாழும் செல்வனே, விரும்பத் தக்க கயிலை மலை
வாசியாகிய சிவபெருமானுக்கு பிரணவத்தின் பொருளை இன்னதென்று விளக்கி
வெற்றியைக் கொண்ட பெருமாளே.

* வெள்ளிகரம் அரக்கோணத்துக்கு வடக்கே 22 மைலில் உள்ள வேப்பகுண்டா ரயில் நிலையத்துக்கு மேற்கே 12 மைலில் உள்ளது.


பாடல் 662 - வெள்ளிகரம்


ராகம் -
குமுதக்ரியா; தாளம் - ஆதி



தய்யதன தான தய்யதன தான
தய்யதன தான ...... தனதான



இல்லையென நாணி யுள்ளதின் மறாம
லெள்ளினள வேனும் ...... பகிராரை


எவ்வமென நாடி யுய்வகையி லேனை
யெவ்வகையு நாமங் ...... கவியாகச்


சொல்லவறி யேனை யெல்லைதெரி யாத
தொல்லைமுத லேதென் ...... றுணரேனைத்


தொய்யுமுடல் பேணு பொய்யனைவி டாது
துய்யகழ லாளுந் ...... திறமேதோ


வல்லசுரர் மாள நல்லசுரர் வாழ
மையவரை பாகம் ...... படமோது


மையுலவு சோலை செய்யகுளிர் சாரல்
வள்ளிமலை வாழுங் ...... கொடிகோவே


வெல்லுமயி லேறு வல்லகும ரேச
வெள்ளிலுட னீபம் ...... புனைவோனே


வெள்ளிமணி மாட மல்குதிரு வீதி
வெள்ளிநகர் மேவும் ...... பெருமாளே.

இல்லை என்று கூற வெட்கப்பட்டு,
உள்ள பொருளின் அளவுக்கு மறுக்காமல், ஓர் எள்ளின் அளவாவது பகிர்ந்து
கொடுக்காதவர்களை, வெறுக்கத்தக்கவர்கள் என்று ஆராய்ந்தறிந்து பிழைக்கும் வழி
இல்லாத என்னை, எந்த வகையிலாவது உன் திருநாமங்களைக் கவிதையாக அமைத்துச்
சொல்லும் அறிவில்லாத என்னை, முடிவெல்லை காண முடியாத பழைய மூலப்பொருள்
இன்னது என்று உணரும் அறிவில்லாத என்னை, இளைத்துத் துவளும் உடம்பைப்
போற்றும் பொய்யனாகிய என்னை, புறக்கணித்து விட்டுவிடாமல் பரிசுத்தமான உன்
திருவடிகளால் ஆண்டருளும் வழி ஏதேனும் உண்டோ, யான் அறியேன். வலிமை பொருந்திய
அசுரர்கள் மாளவும், நல்ல தேவர்கள் வாழவும், குற்றமுள்ள கிரெளஞ்சகிரி
கூறுபட்டழிய மோதியவனே, இருண்ட சோலைகள், செவ்விய குளிர்ந்த மலைகள் உடைய
வள்ளிமலையில் வாழும் குறக்குலக் கொடியாகிய வள்ளியின் மணாளனே, வெல்லும்
திறல் படைத்த மயில் மீது ஏறவல்ல குமரேசா, விளாத் தளிருடன் கடப்பமலரை
அணிபவனே, வெண்ணிற அழகிய மாடங்கள் நிறைந்த செல்வச் செழிப்புள்ள வீதிகளை உடைய
வெள்ளிகரம் என்ற வெள்ளிநகரில் அமர்ந்த பெருமாளே.

* வெள்ளிகரம் அரக்கோணத்துக்கு வடக்கில் 22 மைலில் உள்ள வேப்பகுண்டா ரயில் நிலையத்தினின்று மேற்கே 10 மைலில் உள்ளது.


பாடல் 663 - வெள்ளிகரம்


ராகம் - ....;
தாளம் -



தய்யதன தான தய்யதன தான
தய்யதன தான ...... தனதான



பையரவு போலு நொய்யஇடை மாதர்
பையவரு கோலந் ...... தனைநாடிப்


பையலென வோடி மையல்மிகு மோக
பவ்வமிசை வீழுந் ...... தனிநாயேன்


உய்யவொரு கால மையவுப தேச
முள்ளுருக நாடும் ...... படிபேசி


உள்ளதுமி லாது மல்லதவி ரோத
உல்லசவி நோதந் ...... தருவாயே


வையமுழு தாளு மையகும ரேச
வள்ளிபடர் கானம் ...... புடைசூழும்


வள்ளிமலை வாழும் வள்ளிமண வாள
மையுததி யேழுங் ...... கனல்மூள


வெய்யநிரு தேசர் சையமுடன் வீழ
வெல்லயில்வி நோதம் ...... புரிவோனே


வெள்ளிமணி மாட மல்குதிரு வீதி
வெள்ளிநகர் மேவும் ...... பெருமாளே.

படம் கொண்ட பாம்பைப் போன்ற
நுண்ணிய இடையை உடைய விலைமாதர்கள் சாவகாசமாகச் செய்து கொள்ளும் அலங்காரங்களை
விரும்பி அற்பமான பையன் என்னும்படி ஓடி மோகம் மிக்க காமக் கடலில்
விழுகின்ற, தனித்து நிற்கும் நாய் போன்றவனாகிய நான் பிழைப்பதற்கு ஒரு
காலத்தில், ஐயனே, உமது உபதேசத்தை என் மனம் உருகி விரும்பும்படி ஓதி, உள்ளது
என்றும் இல்லாதது என்றும், (இவை இரண்டும்) அல்லாததும் மாறுபாடு
இல்லாததும், உள்ளக் களிப்பை தருவதும் ஆகிய வியப்பைத் தந்து அருளுக. உலகம்
முழுவதும் ஆள்கின்ற ஐயனே, குமரேசனே, வள்ளிக் கொடி படர்ந்துள்ள காடுகள்
பக்கத்தில் சூழ்ந்துள்ள வள்ளி மலையில் வாழ்கின்ற வள்ளி நாயகியின் கணவனே,
கரிய கடல்கள் ஏழிலும் நெருப்பு எழ, கொடிய அசுரத் தலைவர்கள் (அவர்கள் இருந்த
கிரவுஞ்சம், ஏழு கிரி ஆகிய) மலைகளுடன் மாண்டு விழ, வெற்றி கொண்ட
வேலாயுதத்துடன் திருவிளையாடல் புரிந்தவனே, வெண்ணிறத்து அழகிய மாடங்கள்
நிறைந்த, லக்ஷ்மிகரம் பொருந்திய வெள்ளி நகரில்* வீற்றிருக்கும் பெருமாளே.

* வெள்ளிகரம் அரக்கோணத்துக்கு வடக்கே 22 மைலில் உள்ள வேப்பகுண்டா ரயில் நிலையத்தின் மேற்கே 12 மைலில் உள்ளது.


பாடல் 664 - வெள்ளிகரம்


ராகம் -
பிருந்தாவன ஸாரங்கா ; தாளம் - அங்கதாளம் - 23 1/2
தகதிமிதகதிமி-4, தகதிமி
தகதிமி-4
தகதிமி-2, தகிட-1 1/2, தகிட-1 1/2
தகதிமிதகதிமிதகதிமிதக-7,
தகிடதகதிமி-3 1/2



தனன தனாதன தனன தனாதன தய்ய தனத்த தந்த
தானாதன தானந் தானன ...... தந்ததான



வதன சரோருக நயன சிலீமுக வள்ளி புனத்தில் நின்று
வாராய்பதி காதங் காதரை ...... யொன்றுமூரும்


வயலு மொரேவிடை யெனவொரு காவிடை வல்லப மற்றழிந்து
மாலாய்மட லேறுங் காமுக ...... எம்பிரானே


இதவிய காணிவை ததையென வேடுவ னெய்திடு மெச்சில் தின்று
லீலாசல மாடுந் தூயவன் ...... மைந்தநாளும்


இளையவ மூதுரை மலைகிழ வோனென வெள்ள மெனக் கலந்து
நூறாயிர பேதஞ் சாதமொ ...... ழிந்தவாதான்


கதைகன சாபதி கிரிவளை வாளொடு கைவசி வித்தநந்த
கோபாலம கீபன் தேவிம ...... கிழ்ந்துவாழக்


கயிறொ டுலூகல முருள வுலாவிய கள்வ னறப் பயந்து
ஆகாயக பாலம் பீறநி ...... மிர்ந்துநீள


விதரண மாவலி வெருவ மகாவ்ருத வெள்ள வெளுக்க நின்ற
நாராயண மாமன் சேயைமு ...... னிந்தகோவே


விளைவய லூடிடை வளைவிளை யாடிய வெள்ளிநகர்க் கமர்ந்த
வேலாயுத மேவுந் தேவர்கள் ...... தம்பிரானே.

தாமரை போன்ற முகமும், அம்பு
போன்ற கண்களும் உடைய வள்ளியின் தினைப்புனத்தில் போய் நின்று கொண்டு, நீ
என்னுடன் வருவாயாக, என் ஊர் (திருத்தணிகை) இரண்டரை காதம் தூரம்தான் (25
மைல்), என் ஊரும், உன்னூராகிய வள்ளிமலையும் நெருங்கி உள்ளன, இடையில் ஒரே
ஒரு வயல்தான் உள்ளது, என்று கூறி, ஒரு சோலையிலே உன் வலிமை எல்லாம் இழந்து,
வள்ளி மீது மிக்க மயக்கம் கொண்டு மடல்*
ஏறிய மோகம் நிறைந்த எம்பெருமானே, இதோ இவ்வுணவு இனிப்புடன் கலந்து
இருப்பதைப் பார் என்று கூறிய வேடுவன் கண்ணப்பன் சேர்ப்பித்த எச்சில் உணவைத்
தின்று (கண்ணில் ரத்தத்துடன்) திருவிளையாடல் ஆடிய சுத்த சிவன் மகனே,
எப்போதும் இளமையுடன் இருப்பவனே என்றும், பழைய நூல் திருமுருகாற்றுப்படையில்
சொன்னபடி மலை கிழவோனே (மலைகளுக்கு உரியவனே) என்றும் ஓதினால், ஒரு பெரிய
எண்ணிக்கையாகக் கூடி நூறாயிர பேதமாக**
வருவதாகிய பிறப்புக்கள் ஒழிந்து போயினவே, இது பெரிய அற்புதந்தான்.
(கெளமோதகி என்னும்) கதாயுதமும், பெருமை பொருந்திய சாரங்கம் என்னும்
வில்லும், சுதர்சனம் என்னும் சக்கரமும், பாஞ்ச சன்யம் என்னும் சங்கும்,
நாந்தகம் என்னும் வாளும் (ஆகிய பஞ்ச ஆயுதங்களை) கைகளில் ஏந்தியவனும், நந்த
கோபாலன் என்ற கோகுலத்து மன்னனது தேவி யசோதை மகிழ்ந்து வாழ உரலோடு
கட்டப்பெற்ற கயிறோடு அந்த உரலை இழுத்தவண்ணம் உலாவியனும், வெண்ணெய் திருடும்
கள்வனும், மிகவும் பயப்படும்படியாக ஆகாயத்தையும் தனது தலை கிழிக்கும்படி
உயரமாக வளர்ந்து கொடையிற் சிறந்த மகாபலிச் சக்கரவர்த்தி அஞ்சும்படி மகா
விரதசீல வாமனனாய் பகிரங்கமாக எதிரில் நின்றவனும் ஆகிய நாராயண மூர்த்தியாம்
உன் மாமனின் மகனாகிய பிரமனைக் கோபித்த தலைவனே, விளைச்சல் உள்ள வயல்களின்
இடையில் சங்குகள் தவழ்ந்தாடும் வெள்ளிநகர்*** என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் வேலாயுதனே, உன்னைத் துதிக்கும் தேவர்களுக்கெல்லாம் தலைவனே.

*
மடல் எழுதுதல்: தலைவன் தலைவியின் அழகை வர்ணித்து ஓர் ஏட்டில் மடலாக எழுதி
அவளது ஊருக்குச் சென்று நாற்சந்தியில் ஒன்றும் பேசாமல் ஒருவரது வசைக்கும்
கூசாமல் படத்தில் எழுதிய உருவத்தைப் பார்த்தவாறு பகலும் இரவுமாக நிற்பான்.
அவனது உறுதிகண்டு தலைவியின் வீட்டார் தலைவனுக்கு அவளை மணம் செய்து வைப்பர்.
முருகன் வள்ளியை ஊரறிய மடல் எழுதி மணம் செய்துகொண்ட காட்சி கந்த
புராணத்தில் வருகிறது.

** சம்பந்தர் தேவாரத்தின்படி சாதம்
(பிறப்பு) 84 நூறாயிரம் வகையாகும். ஊர்வன - 11, மானிடம் - 9, நீர்வாழ்வன -
10, பறவைகள் - 10, மிருகங்கள் - 10, தேவர்கள் - 14, தாவரங்கள் - 20,
ஆக 84 நூறாயிரம் (8,400,000).

*** வெள்ளிகரம் அரக்கோணத்துக்கு வடக்கில் 22 மைலில் உள்ள வேப்பகுண்டா ரயில் நிலையத்தினின்று மேற்கே 10 மைலில் உள்ளது.
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

அருணகிரிநாதர் நூல்கள் (Arunagirinathar Books) Empty Re: அருணகிரிநாதர் நூல்கள் (Arunagirinathar Books)

Post by மாலதி December 13th 2011, 08:34

பாடல் 665 - திருவல்லம்


ராகம் - ....;
தாளம் -



தனதன தானந் தனதன தானந்
தனதன தானந் ...... தனதான



நசையொடு தோலுந் தசைதுறு நீரும்
நடுநடு வேயென் ...... புறுகீலும்


நலமுறு வேயொன் றிடஇரு கால்நன்
றுறநடை யாருங் ...... குடிலூடே


விசையுறு காலம் புலனெறி யேவெங்
கனலுயிர் வேழந் ...... திரியாதே


விழுமடி யார்முன் பழுதற வேள்கந்
தனுமென வோதும் ...... விறல்தாராய்


இசையுற வேயன் றசைவற வூதும்
எழிலரி வேழம் ...... எனையாளென்


றிடர்கொடு மூலந் தொடர்வுட னோதும்
இடமிமை யாமுன் ...... வருமாயன்


திசைமுக னாருந் திசைபுவி வானுந்
திரிதர வாழுஞ் ...... சிவன்மூதூர்


தெரிவையர் தாம்வந் தருநட மாடுந்
திருவல மேவும் ...... பெருமாளே.

ஈரத்துடன் தோலும் மாமிசமும்
அடைந்துள்ள நீரும் இடையிடையே எலும்புகளைப் பூட்டியுள்ள இணைப்புக்களும் நலம்
உறும் வண்ணம் பொருந்தி ஒன்று சேர, இரண்டு கால்களும் நன்கு இணைக்கப் பெற்று
நடை நிரம்பிய குடிசையாகிய இந்த உடலுக்குள், வேகமான வாழ்க்கை செல்லும்
காலத்தில், ஐம்புலன்களின் வழியாக கொடிய தீப் போன்றதும், மதம் நிறைந்த யானை
போன்றதுமான அந்த ஐம்பொறிகளும் அலையாமல், உனது திருவடியில் விழும்
அடியார்களின் முன், குற்றம் இல்லாத வகையில், வேளே கந்தனே என்று ஓதும்
சக்தியைத் தந்தருளுக. முன்பு, இனிய இசை பொருந்தி அசையாமல் நிற்கும்படி,
புல்லாங்குழலை ஊத வல்ல அழகிய கண்ணனும், கஜேந்திரனாகிய யானை என்னை
ஆட்கொள்வாய் ஆதிமூலமே என்று துன்பத்துடனும் பேரன்புடனும் கூச்சலிட்டு
அழைத்த இடத்துக்கு, கண்ணை இமைக்கும் நேரத்தில் வந்து உதவிய மாயனுமாகிய
திருமாலும், நான் முகனும், பல திசைகளில் உள்ளவர்களும், உலகில்
உள்ளவர்களும், வானுலகத்தில் உள்ளவர்களும் வலம் வந்து சூழ வாழ்கின்ற
சிவபெருமானுடைய பழைய ஊரும், மாதர்கள் வந்து அருமையான நடனம் புரியும்
ஊருமாகிய திருவ (ல்) லத்தில்* வீற்றிருக்கும் பெருமாளே.

*
திருவல்லம் வேலூருக்கு அருகில் உள்ளது. திருமாலாலும் பிரமானாலும் சிவன்
வலம் செய்யப்பெற்று பூஜிக்கப்பட்டதால் திருவலம் என்ற பெயர் வந்தது.


பாடல் 666 - வேலு஡ர்


ராகம் - ....; தாளம்
-



தனன தாத்தன தானா தானன
தனன தாத்தன தானா தானன
தனன தாத்தன தானா தானன ...... தந்ததான



அதிக ராய்ப்பொரு ளீவார் நேர்படில்
ரசனை காட்டிக ளீயார் கூடினும்
அகல வோட்டிகள் மாயா ரூபிகள் ...... நண்புபோலே


அசட ராக்கிகள் மார்மே லேபடு
முலைகள் காட்டிகள் கூசா தேவிழும்
அழகு காட்டிக ளாரோ டாகிலு ...... மன்புபோலே


சதிர தாய்த்திரி வோயா வேசிகள்
கருணை நோக்கமி லாமா பாவிகள்
தருமு பேட்சைசெய் தோஷா தோஷிகள் ...... நம்பொணாத


சரச வார்த்தையி னாலே வாதுசெய்
விரக மாக்கிவி டாமூ தேவிகள்
தகைமை நீத்துன தாளே சேர்வதும் ...... எந்தநாளோ


மதுரை நாட்டினி லேவாழ் வாகிய
அருகர் வாக்கினி லேசார் வாகிய
வழுதி மேற்றிரு நீறே பூசிநி ..... மிர்ந்துகூனும்


மருவு மாற்றெதிர் வீறே டேறிட
அழகி போற்றிய மாறா லாகிய
மகிமை யாற்சமண் வேரோ டேகெட ...... வென்றகோவே


புதிய மாக்கனி வீழ்தே னூறல்கள்
பகலி ராத்திரி யோயா ஆலைகள்
புரள மேற்செல வூரூர் பாயஅ ...... ணைந்துபோதும்


புகழி னாற்கடல் சூழ்பார் மீதினி
லளகை போற்பல வாழ்வால் வீறிய
புலவர் போற்றிய வேலூர் மேவிய ...... தம்பிரானே.

அதிகமாகப் பொருள் கொடுப்பவர்
கிடைத்தால் இன்பம் காட்டுவார்கள். பொருள் கொடாதவர் கூட வந்தால் அவர்களைத்
தம்மை விட்டு நீங்கும்படி ஓட்டுபவர்கள். மாயையே ஒர் உருவம் ஆனவர்கள். நட்பு
பாராட்டுவது போல (வந்தவர்களை) மூடர்களாக ஆக்குபவர்கள். மார்பு மேலே உள்ள
மார்பகத்தைக் காட்டுபவர்கள். கூச்சம் இல்லமால் மேலே விழுந்து தமது அழகைக்
காட்டுபவர்கள். யாராக இருந்தாலும் அன்பு உள்ளவர்கள் போல் சாமர்த்தியமாக
எப்போதும் திரியும் ஓய்வில்லாத விலைமாதர்கள். அருள் நோக்கம் என்பதே இல்லாத
பெரிய பாவிகள். வேண்டும் என்றே வந்தவரைப் புறக்கணிப்பவர்கள். பலவித குற்றம்
(பாவம்) செய்பவர்கள். நம்புதற்கு முடியாத பக்குவ வார்த்தைகளைப் பேசி வாது
செய்து, காமத்தை மூட்டி, போக ஒட்டாது பிடிக்க வல்ல மூதேவிகள்.
(இத்தகையோருடன்) கூடுவதை ஒழித்து, உன்னுடைய திருவடியைச் சேரும் நாள்
எனக்குக் கிட்டுமோ? மதுரையைத் தலைநகராகக் கொண்ட பாண்டிய நாட்டில்
வாழ்ந்திருந்த சமணர்களின் கொள்கைகளில் ஈடுபட்டிருந்த பாண்டிய மன்னன் மீது
திரு நீற்றைத் தடவி, அவனுடைய கூன் நிமிரச் செய்தும், அருகில் பாயும் வைகை
ஆற்று வெள்ள நீரை எதிர்த்து இட்ட ஏடுகள் மேற் செல்லச் செய்தும், அழகு
நிறைந்த பாண்டி மா தேவியாகிய மங்கையர்க்கரசி உன்னைத் துதித்துப் போற்றிய
பக்தியின் சிறப்பாலும், இந்த நிகழ்ச்சியின் சிறப்பாலும், அந்தச் சமணர்கள்
வேருடன் அழியும்படி வெற்றி கொண்ட (திருஞானசம்பந்தத்) தலைவனே, புதிய
மாம்பழங்களினின்று விழுகின்ற தேன் ஊறல்கள், பகலிலும், இரவிலும் ஓயாது வேலை
செய்யும் கரும்பாலைகள் மேலே புரண்டு மேற் சென்று அயலில் உள்ள ஊர்களிலும்
பாயும்படி சேர்ந்து போகின்ற புகழ் பெற்ற காரணத்தால், கடல் சூழ்ந்த இப்
பூமியில் பல வகையான வாழ்வால் மேம்பட்ட பண்டிதர்களால் அளகாபுரி* போலப் போற்றப்பட்ட வேலூரில் வீற்றிருக்கும் தம்பிரானே.

* அளகாபுரி நிதிக்கு காவலனான குபேரனின் தலைநகர்.


பாடல் 667 - வேலு஡ர்


ராகம் - ...; தாளம்
-



தானான தந்த தந்த தானான தந்த தந்த
தானான தந்த தந்த ...... தனதான



சேலால மொன்று செங்கண் வேலாலும் வென்று மைந்தர்
சீர்வாழ்வு சிந்தை பொன்ற ...... முதல்நாடித்


தேன்மேவு செஞ்சொ லின்சொல் தானோதி வந்த ணைந்து
தீராத துன்ப இன்ப ...... முறுமாதர்


கோலாக லங்கள் கண்டு மாலாகி நின்ற னன்பு
கூராமல் மங்கி யங்க ...... மழியாதே


கோள்கோடி பொன்ற வென்று நாடோறு நின்றி யங்கு
கூர்வாய்மை கொண்டி றைஞ்ச ...... அருள்தாராய்


மாலாலு ழன்ற ணங்கை யார்மாம தன்க ரும்பின்
வாகோட ழிந்தொ டுங்க ...... முதல்நாடி


வாழ்வான கந்த முந்த மாறாகி வந்த டர்ந்த
மாசூரர் குன்ற வென்றி ...... மயிலேறீ


மேலாகு மொன்ற மைந்த மேனாடர் நின்றி ரங்க
வேலாலெ றிந்து குன்றை ...... மலைவோனே


வேய்போல வுந்தி ரண்ட தோள்மாதர் வந்தி றைஞ்சு
வேலூர்வி ளங்க வந்த ...... பெருமாளே.

சேல் மீன் போலவும், ஆலகால
விஷம் போலவும் உள்ள தம் செவ்விய கண்ணாகிய வேலாலும் ஆண்களை வென்று,
அவர்களுடைய சீரும் நல் வாழ்வும் மனமும் குலைந்து அழியும்படி முதலிலேயே
திட்டமிட்டு, தேன் போன்றதும், செம்மை வாய்ந்ததும், இனியதுமாகிய சொற்களையே
பேசிக்கொண்டு வந்து அணைந்து, முடிவு இல்லாத துன்பத்தையும் இன்பத்தையும்
ஏற்படுத்துகின்ற விலைமாதர்களின் ஆடம்பரங்களைப் பார்த்து காம மயக்கம்
கொண்டவனாய், உன் மீது அன்பு பெருகாமல், பொலிவு குன்றி, உடல் அழிந்து
போகாமல், இடையூறுகள் கோடிக் கணக்கானவைகள் வரினும் அவை அழிந்து போகும்படி
வென்று, தினமும் ஒழுக்க வழியில் செல்வதான சிறந்த உண்மைப் பக்தியை
மேற்கொண்டு வணங்கும்படியாக உனது திருவருளைத் தந்தருளுக. (இன்னது செய்வது
என்று தெரியாத) மயக்கத்தால் மனம் அலைப்புண்டு வருத்தத்தை நிரம்பக் கொண்ட
சிறந்த மன்மதன் கையில் கொண்ட கரும்பு வில்லின் அழகுடன் அழிந்து ஒடுங்க,
முன்பு நாடி அவனை எரித்த சிவ பெருமானின் செல்வப் புதல்வனான கந்தனே,
முற்பட்டு, பகைமை பூண்டு வந்து நெருங்கி எதிர்த்த பெரிய சூராதிகள் அடங்க
வெற்றி மயிலின் மேல் ஏறியவனே, மேலான பரம் பொருளின் தியானம் பொருந்திய
விண்ணோர்கள் நின்று பரிதாபித்து வேண்ட, வேலாயுதத்தைச் செலுத்தி கிரெளஞ்ச
மலையை எதிர்த்து அழித்தவனே, பச்சை மூங்கில் போல திரட்சி உள்ள தோள்களை உடைய
மாதர்கள் வந்து வணங்க, வேலூர் விளங்கும்படி வந்து வீற்றிருக்கும் பெருமாளே.



பாடல் 668 - விரிஞ்சிபுரம்


ராகம் - ....;
தாளம் -



தனதனத் தனதனத் தனதனத் தனதனத்
தனதனத் தனதனத் தனதனத் தனதனத்
தனதனத் தனதனத் தனதனத் தனதனத் ...... தனதான



ஒருவரைச் சிறுமனைச் சயனமெத் தையினில்வைத்
தொருவரைத் தமதலைக் கடையினிற் சுழலவிட்
டொருவரைப் பரபரப் பொடுதெருத் திரியவிட் ...... டதனாலே


ஒருவருக் கொருவர்சக் களமையிற் சருவவிட்
டுருவுபத் திரமெடுத் தறையின்மற் புரியவிட்
டுயிர்பிழைப் பதுகருத் தளவிலுச் சிதமெனச் ...... செயுமானார்


தருமயற் ப்ரமைதனிற் றவநெறிக் கயலெனச்
சரியையிற் கிரியையிற் றவமுமற் றெனதுகைத்
தனமவத் தினிலிறைத் தெவருமுற் றிகழ்வுறத் ...... திரிவேனைச்


சகலதுக் கமுமறச் சகலசற் குணம்வரத்
தரணியிற் புகழ்பெறத் தகைமைபெற் றுனதுபொற்
சரணமெப் பொழுதுநட் பொடுநினைத் திடஅருட் ...... டருவாயே


குருமொழித் தவமுடைப் புலவரைச் சிறையில்வைத்
தறவுமுக் கிரம்விளைத் திடுமரக் கரைமுழுக்
கொடியதுர்க் குணஅவத் தரைமுதற் றுரிசறுத் ...... திடும்வேலா


குயில்மொழிக் கயல்விழித் துகிரிதழ்ச் சிலைநுதற்
சசிமுகத் திளநகைக் கனகுழற் றனகிரிக்
கொடியிடைப் பிடிநடைக் குறமகட் டிருவினைப் ...... புணர்வோனே


கருதுசட் சமயிகட் கமைவுறக் கிறியுடைப்
பறிதலைச் சமணரைக் குலமுதற் பொடிபடக்
கலகமிட் டுடலுயிர்க் கழுவினுச் சியினில்வைத் ...... திடுவோனே


கமுகினிற் குலையறக் கதலியிற் கனியுகக்
கழையின்முத் தமுதிரக் கயல்குதித் துலவுநற்
கனவயற் றிகழ்திருக் கரபுரத் தறுமுகப் ...... பெருமாளே.

ஒருவரை சிறு வீட்டின் படுக்கை
மெத்தையில் படுக்க வைத்து, ஒருவரைத் தம் வீட்டு வாசலில் மனக் குழப்பத்தோடு
சுழலவிட்டு, இன்னொருவரை மிகுந்த பரபரப்போடு வீதியில் அலையும்படியாக விட்டு,
அத்தகையச் செயலாலே ஒருவருக்கு ஒருவர் போட்டிப் பகைமையில் போராட விட்டு,
வாளை உருவி எடுத்து அறையில் மல் யுத்தம் செய்யும்படி வைத்து, உயிர்
பிழைப்பதே யோசித்துப் பார்க்கில் தக்கது என்று எண்ணச் செய்கின்ற பொது
மகளிர் தருகின்ற காம இச்சை மயக்கத்தினால் தவ வழிக்கு மாறுபட்டவனாகி, சரியை
மார்க்கத்திலும், கிரியை மார்க்கத்திலும்*
செய்வதற்குள்ள தவ ஒழுக்கம் இல்லாது போய், எனது கையிலிருந்த பொருளை வீணாகச்
செலவழித்து, ஊரில் உள்ள யாவரும் இழித்துப் பேசும்படி திரிகின்ற என்னை,
எல்லா வித துக்கங்களும் நீங்கவும், எல்லா வித நற் குணங்களும் கூடவும்,
பூமியில் நான் புகழ் அடையவும், மதிப்பைப் பெற்று உன்னுடைய அழகிய திருவடிகளை
எப்போதும் அன்புடன் நான் நினைக்கும்படி உனது திருவருளைத் தந்தருள்க.
தங்களுடைய குருவான பிரஹஸ்பதி சொன்ன சொற்படி தவநெறியில் இருந்த தேவர்களை
சிறைப்படுத்தி மிகவும் கொடுமை செய்து வந்த அசுரர்களை, முற்றிலும் கொடிய
கெட்ட குணமுடைய வீணர்களை, முன்பு அவர்கள் செய்த குற்றங்களுக்காக அறுத்து
எறிந்த வேலாயுதனே, குயில் போன்ற மொழியையும், கயல் மீன் போன்ற கண்களையும்,
பவளம் போன்ற வாயிதழையும், வில் போன்ற நெற்றியையும், சந்திரன் போன்ற
முகத்தையும், புன்னகையையும், கரு மேகம் போன்ற கூந்தலையும், மலை போன்ற
மார்பகங்களையும், கொடி போன்ற இடையையும், பெண் யானை போன்ற நடையையும் கொண்ட
குற மகளாகிய வள்ளியை அணைபவனே, ஆராய்ச்சி செய்துள்ள ஆறு சமயத்து அறிஞரையும்
வீழ்த்தும் தந்திரம் உடையவர்களும், மயிர் பறிபடும் தலையருமான சமணர்களின
குலம் முன்பு பொடிபட்டு ஒடுங்க, வாதப் போர் செய்து அவர்களின் உயிருள்ள உடலை
கழு முனையில் (திருஞானசம்பந்தராக வந்து) வைத்திட்டவனே, கமுக மரத்தின் குலை
தன் மீது விழுதலால் வாழை மரத்தினின்றும் பழங்கள் விழ, (அந்தப் பழங்கள் தன்
மீது விழும் அதிர்ச்சியால்) கரும்பினின்றும் முத்துக்கள் விழ, கயல்
மீன்கள் விளையாடும் நல்ல பெருமை வாய்ந்த வயல்கள் திகழ்கின்ற திருக்கரபுரம்** என்ற பெயருள்ள விரிஞ்சிபுரத்தில் வீற்றிருக்கும் ஆறுமுகப் பெருமாளே.

*
4 பக்தி மார்க்கங்கள் பின்வருமாறு:1. சரியை: திருக்கோயிலில் அலகு இடுதல்,
மெழுகுதல், விளக்கு இடுதல், நந்தவனம் வைத்தல், பூ எடுத்தல், மாலை அமைத்தல்,
இறைவனை வாழ்த்துதல், திருவேடம் கண்டு பணிதல். இது 'தாத மார்க்கம் -
சாலோகம்'.2. கிரியை: பூஜை உபகரணங்களை அமைத்து நித்தியக் காரியம் செய்தல்.
இது 'புத்ர மார்க்கம் - சாமீபம்'.3. யோகம்: புலன்களை அடக்கிப் பிராண
வாயுவைச் சலனம் அற நிறுத்தி ஆறு ஆதாரங்களின் பொருளை உணர்ந்து, சந்திர மண்டல
அமிர்தத்தை உடல் முழுதும் நிரப்பி, முழு ஜோதியை நினைத்திருத்தல். இது 'சக
மார்க்கம் (தோழ நெறி) - சாரூபம்'.4. ஞானம்: புறத் தொழில் அகத் தொழில்
இன்றி, அறிவு மாத்திரத்தாலே செய்யும் வழிபாடு ஞானம். இது 'சன்மார்க்கம் -
சாயுஜ்யம்'. சிவஞான சித்தியார் சூத்திரம்.

** கரபுரம் என்ற விரிஞ்சிபுரம் வேலூருக்கு அருகில் உள்ளது.


பாடல் 669 - விரிஞ்சிபுரம்


ராகம் - ....;
தாளம் -



தனதனன தான தனதனன தான
தனதனன தான ...... தனதானா



குலையமயி ரோதி குவியவிழி வீறு
குருகினிசை பாடி ...... முகமீதே


குறுவியர்வு லாவ அமுதினினி தான
குதலையுமொ ராறு ...... படவேதான்


பலவிதவி நோத முடனுபய பாத
பரிபுரமு மாட ...... அணைமீதே


பரிவுதரு மாசை விடமனமொ வாத
பதகனையு மாள ...... நினைவாயே


சிலைமலைய தான பரமர்தரு பால
சிகிபரிய தான ...... குமரேசா


திருமதுரை மேவு மமணர்குல மான
திருடர்கழு வேற ...... வருவோனே


கலின்வடிவ மான அகலிகைபெ ணான
கமலபத மாயன் ...... மருகோனே


கழனிநெடு வாளை கமுகொடிய மோது
கரபுரியில் வீறு ...... பெருமாளே.

கூந்தலின் மயிர் குலைந்து போக,
கண்கள் குவிய, விளக்கத்துடன் கோழி முதலிய பறவைகளின் புட்குரல் இசை பாடி,
முகத்தின் மேல் சிறு வியர்வை தோன்ற, அமுதம் போல் இனிமை கொண்ட குதலைச்
சொற்களும் ஒரு வழியாக ஆறு போலப் பெருகவே, பல விதமான விநோதங்களுடன் இரண்டு
கால்களிலும் உள்ள சிலம்புகளும் அசைந்து ஒலிக்க படுக்கையின் மேல் அன்பு
எழுகின்ற ஆசையை விடுவதற்கு மனம் ஒத்துக் கொள்ளாத இந்தப் பாதகனையும் ஆண்டருள
நினைந்து அருளுவாயாக. வில்லாக மேரு மலையைக் கொண்ட மேலான சிவபெருமான் ஈன்ற
புதல்வனே, மயிலைக் குதிரையாகக் கொண்ட குமரேசனே, அழகிய மதுரையில் இருந்த
சமணர் குலமான திருடர்களை கழுவில் ஏற்ற (திருஞானசம்பந்தராக) வந்தவனே, கல்
வடிவமாகக் கிடந்த அகலிகை பெண்ணாக வரும்படிச் செய்த தாமரை மலர் போன்ற
திருவடியை உள்ள திருமாலின் மருகனே, கழனியில் இருக்கும் பெரிய வாளை மீன்கள்
கமுக மரம் ஒடிந்து விழும்படி மோதுகின்ற கரபுரமாகிய விரிஞ்சிபுரத்தில்* வீற்றிருக்கும் பெருமாளே.


* கரபுரம் என்ற திருவிரிஞ்சைத் தலம்
(விரிஞ்சிபுரம்) வேலூருக்கு மேற்கே காட்பாடியிலிருந்து 8 மைல் தொலைவில்
உள்ளது.பிரமன் பூஜித்ததால் விரிஞ்சன்புரம் ஆகி, விரிஞ்சிபுரம் என்று பெயர்
மருவிற்று.


பாடல் 670 - விரிஞ்சிபுரம்


ராகம் -
மனோலயம் ; தாளம் - அங்கதாளம் - 5
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமி-2



தனன தந்த தானன தனன தந்த தானன
தனன தந்த தானன ...... தனதான



நிகரில் பஞ்ச பூதமு நினையு நெஞ்சு மாவியு
நெகிழ வந்து நேர்படு ...... மவிரோதம்


நிகழ்த ரும்ப்ர பாகர நிரவ யம்ப ராபர
நிருப அங்கு மாரவெ ...... ளெனவேதம்


சகர சங்க சாகர மெனமு ழங்கு வாதிகள்
சமய பஞ்ச பாதக ...... ரறியாத


தனிமை கண்ட தானகிண் கிணிய தண்டை சூழ்வன
சரண புண்ட ¡£கம ...... தருள்வாயே


மகர விம்ப சீகர முகர வங்க வாரிதி
மறுகி வெந்து வாய்விட ...... நெடுவான


வழிதி றந்து சேனையு மெதிர்ம லைந்த சூரனு
மடிய இந்தி ராதியர் ...... குடியேறச்


சிகர துங்க மால்வரை தகர வென்றி வேல்விடு
சிறுவ சந்த்ர சேகரர் ...... பெருவாழ்வே


திசைதொ றும்ப்ர பூபதி திசைமு கன்ப ராவிய
திருவி ரிஞ்சை மேவிய ...... பெருமாளே.

ஒப்பில்லாத ஐந்து பூதங்களும்,
நினைக்கும் நெஞ்சும், உயிரும், நெகிழும்படி கூடுகின்ற விரோதமின்மையை
ஏற்படுத்தித் தரும் ஞான சூரியனே, அழிவில்லாத மேலான பொருளே, அரசனே, அழகிய
குமார வேளே என்று வேதங்கள் முழங்குவதும், சகரர்களால் ஏற்பட்டதும், சங்குகள்
உள்ளதுமான சமுத்திரம் போல பெருத்த சப்தத்துடன் வாதம் செய்பவராம்
சமயவாதிகளான பஞ்சமா பாதகர்களால் அறியப்படாததும், ஊழிக் காலத்தில் தனித்து
நிற்பதும், கிண்கிணியும் தண்டையும் சூழ்ந்துள்ளதுமான திருவடித் தாமரையதனைத்
தந்தருள்வாயாக. மகர மீன்கள் நிறைந்ததும், ஒளி கொண்டதும், அலைகள் உள்ளதும்,
ஒலி நிறைந்ததும், கப்பல்கள் செல்வதுமான கடல் கலக்கமுற்று, சூடாகி,
கொந்தளிக்கவும், பெரிய ஆகாய* மார்க்கமாக
வந்த சேனைகளும், எதிர்த்துப் போர் செய்த சூரனும் மாண்டு போக, இந்திராதி
தேவர்கள் மீண்டும் விண்ணுலகில் குடியேற, சிகரங்களை உடைய உயர்ந்த மந்திரஜால
கிரெளஞ்சமலை தகர்ந்துபோக வெற்றி வேலினை விடுத்த சிறுவனே, சந்திரனை முடியில்
சூடிய சிவபிரானின் பெருஞ் செல்வமே, திசைகள் தோறும் உள்ள கீர்த்திவாய்ந்த
அரசர்களும், நான்முகன் பிரம்மாவும் பரவிப் போற்றிய திருவிரிஞ்சைத்** தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.

*
சூரனது சேனைகள் ஆகாயவழியில் வராமல் தடுக்க முருகன் அண்டவாயிலை
அடைத்தான்.சூரன் அம்புகள் ஏவி அவ்வழியைத் திறக்க, சேனைகள் ஆகாய மார்க்கமாக
போருக்கு வந்தன - கந்த புராணம்.**
திருவிரிஞ்சைத் தலம் (விரிஞ்சிபுரம்) வேலூருக்கு மேற்கே காட்பாடியிலிருந்து
8 மைல் தொலைவில் உள்ளது.பிரமன் பூஜித்ததால் 'விரிஞ்சன்புரம்' ஆகி,
'விரிஞ்சிபுரம்' என்று பெயர் மருவிற்று.


பாடல் 671 - விரிஞ்சிபுரம்

ராகம் - .....;
தாளம் - ..........



தனன தனதனத் தனன தனதனத்
தனன தனதனத் தனன தனதனத்
தனன தனதனத் தனன தனதனத் ...... தனதானா



பரவி யுனதுபொற் கரமு முகமுமுத்
தணியு முரமுமெய்ப் ப்ரபையு மருமலர்ப்
பதமும் விரவுகுக் குடமு மயிலுமுட் ...... பரிவாலே


படிய மனதில்வைத் துறுதி சிவமிகுத்
தெவரு மகிழ்வுறத் தரும நெறியின்மெய்ப்
பசியில் வருமவர்க் கசன மொருபிடிப் ...... படையாதே


சருவி யினியநட் புறவு சொலிமுதற்
பழகு மவரெனப் பதறி யருகினிற்
சரச விதமளித் துரிய பொருள்பறித் ...... திடுமானார்


தமது ம்ருகமதக் களப புளகிதச்
சயில நிகர்தனத் திணையின் மகிழ்வுறத்
தழுவி யவசமுற் றுருகி மருளெனத் ...... திரிவேனோ


கரிய நிறமுடைக் கொடிய அசுரரைக்
கெருவ மதமொழித் துடல்கள் துணிபடக்
கழுகு பசிகெடக் கடுகி அயில்விடுத் ...... திடுதீரா


கமல அயனுமச் சுதனும் வருணனக்
கினியு நமனுமக் கரியு லுறையுமெய்க்
கணனு மமரரத் தனையு நிலைபெறப் ...... புரிவோனே


இரையு முததியிற் கடுவை மிடறமைத்
துழுவை யதளுடுத் தரவு பணிதரித்
திலகு பெறநடிப் பவர்மு னருளுமுத் ...... தமவேளே


இசையு மருமறைப் பொருள்கள் தினமுரைத்
தவனி தனிலெழிற் கரும முனிவருக்
கினிய கரபுரப் பதியி லறுமுகப் ...... பெருமாளே.

உன்னைப் போற்றி உனது அழகிய
கைகளையும், திருமுகத்தையும், முத்து மாலை அணிந்த திருமார்பையும், உடல்
ஒளியையும், நறு மணம் வீசும் திருவடிகளையும், உன்னிடம் உள்ள சேவலையும்,
மயிலையும் இதயத்துள் அன்புடன் அழுந்திப் படிய என் மனத்தில் நிறுத்தி,
திடமான சிவ பக்தி மிகப் பெற்று, யாவரும் மகிழ்ச்சி அடையும்படி அற நெறியில்
நின்று, உண்மையான பசியுடன் வருகின்றவர்களுக்கு ஒரு பிடி அளவேனும் உணவு
இடாமல், கொஞ்சிக் குலாவி, இனிமையான உறவு காட்டும் வார்த்தைகளைச் சொல்லி,
முதலிலேயே பழகியவர்கள் போல மாய்மாலம் செய்து, அருகில் இருந்து, காம லீலைகள்
புரிந்து, அதற்குத் தக்கதான பொருளை அபகரிக்கும் பொது மகளிருடைய
கஸ்தூரியும் சந்தனமும் சேர்ந்த கலவை கொண்ட, புளகாங்கிதம் தருவதுமான,
மலையைப் போன்ற மார்பகங்களில் மகிழ்ச்சியுடன் தழுவி, தன் வசம் இழந்து மனம்
உருகி அந்த மோக மயக்கத்துடன் திரிவேனோ? கறுத்த நிறமுள்ள கொடுமை வாய்ந்த
அசுரர்களின் கர்வத்தையும் ஆணவத்தையும் ஒழித்து அவர்களின் உடல்கள்
துண்டுபடவும், (அந்தப் பிணங்களைத் தின்று) கழுகுகள் பசி நீங்கவும், வேகமாக
வேலைச் செலுத்திய தீரனே, தாமரையில் உள்ள பிரமனும், திருமாலும், வருணனும்,
அக்கினி தேவனும், யமனும், அந்த வெள்ளை யானையாகிய ஐராவதத்தில் ஏறி வரும்
உடல் எல்லாம் கண் கொண்ட இந்திரனும், மற்ற எல்லா தேவர்களும் தத்தம் பதவிகள்
நிலைக்கப் பெற்று விளங்கச் செய்தவனே, ஒலிக்கின்ற பாற்கடலில் எழுந்த ஆலகால
விஷத்தைக் கழுத்தில் நிறுத்தி வைத்து, புலியின் தோலை உடுத்து, பாம்பாகிய
ஆபரணத்தைத் தரித்து, விளக்கம் உற ஊழிக் கூத்து நடனம் செய்யும் சிவ பெருமான்
முன்பு ஈன்றருளிய உத்தம வேளே, பொருந்திய அரிய வேதங்களின் பொருள்களை நாள்
தோறும் ஆய்ந்து உரைத்து, இப்பூமியில் தமது கடமைகளை அழகாகச் செய்யும்
முனிவர்களுக்கு உகந்த தலமாகிய விரிஞ்சிபுரத்தில்* வீற்றிருக்கும் ஆறுமுகப் பெருமாளே.

*
கரபுரம் என்ற விரிஞ்சிபுரம் வேலூருக்கு மேற்கே காட்பாடியிலிருந்து 8 மைல்
தொலைவில் உள்ளது. பிரமன் பூஜித்ததால் 'விரிஞ்சன்புரம்' ஆகி,
'விரிஞ்சிபுரம்' என்று பெயர் மருவிற்று.


பாடல் 672 - விரிஞ்சிபுரம்


ராகம் -
மோஹனம் .
தாளம் - திஸ்ர த்ருவம் - திஸ்ரநடை - 10 1/2
- எடுப்பு - /3/3/3 0



தனன தந்த தான தனன தந்த தான
தனன தந்த தான ...... தனதான



மருவு மஞ்சு பூத முரிமை வந்தி டாது
மலமி தென்று போட ...... அறியாது


மயல்கொ ளிந்த வாழ்வு அமையு மெந்த நாளும்
வகையில் வந்தி ராத ...... அடியேனும்


உருகி யன்பி னோடு உனைநி னைந்து நாளும்
உலக மென்று பேச ......அறியாத


உருவ மொன்றி லாத பருவம் வந்து சேர
உபய துங்க பாத ...... மருள்வாயே


அரிவி ரிஞ்சர் தேட அரிய தம்பி ரானும்
அடிப ணிந்து பேசி ...... கடையூடே


அருளு கென்ற போது பொருளி தென்று காண
அருளு மைந்த ஆதி ...... குருநாதா


திரியு மும்பர் நீடு கிரிபி ளந்து சூரர்
செருவ டங்க வேலை ...... விடுவோனே


செயல மைந்த வேத தொனிமு ழங்கு வீதி
திருவி ரிஞ்சை மேவு ...... பெருமாளே.

பொருந்திய மண், நீர், தீ,
காற்று, வெளி என்ற ஐந்து பூதங்களுக்குச் சொந்தம் ஆகாத வண்ணம் இந்த உடலை
அழுக்கு என்று உதறிப் போடத் தெரியாமல் மயக்கம் நிறைந்த இந்த வாழ்வு போதுமே
என்று எப்போதும் அவ்வெண்ணம் நன்கு மனத்தில் தோன்றாத நானும், உள்ளம் உருகி
அன்போடு தினமும் உன்னை நினைத்து, உலக விஷயங்களைப் பேசும் பேச்சே பேச அறியாத
இவ்வடிவம்தான் இது என்ற கூற இயலாத நிலையை நான் அடைய உன் இரண்டு
பரிசுத்தமான பாதங்களை எனக்கு நீ தந்தருள்வாயாக. திருமாலும் பிரமனும்
தேடுதற்கு அரியவரான தம்பிரான் சிவபிரானும் உனது திருவடிகளில் பணிந்து பேசி,
இறுதியில் அந்தப் பிரணவப் பொருளை எனக்கு அருள்க என்று கேட்க இதுதான்
பொருள் என்று அவர் உணரும்படியாக உபதேசித்து அருளிய குமரனே, அந்த
ஆதிசிவனுக்கும் குருநாதனே, சூரன் செல்லும் இடமெல்லாம் திரியும் விண் அளாவிய
நீண்ட ஏழு மலைகளையும் பிளந்து, அசுரர்களின் போர் ஒடுங்குமாறு
வேலாயுதத்தைச் செலுத்தியவனே, ஒழுங்காக ஓதப்படும் வேதத்தின் ஒலி முழங்கும்
வீதியைக் கொண்ட திரிவிரிஞ்சைத் தலத்தில்* வீற்றிருக்கும் பெருமாளே.

*
திருவிரிஞ்சைத் தலம் (விரிஞ்சிபுரம்) வேலூருக்கு மேற்கே
காட்பாடியிலிருந்து 8 மைல் தொலைவில் உள்ளது.பிரமன் பூஜித்ததால்
'விரிஞ்சன்புரம்' ஆகி, 'விரிஞ்சிபுரம்' என்று பெயர் மருவிற்று.
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

அருணகிரிநாதர் நூல்கள் (Arunagirinathar Books) Empty Re: அருணகிரிநாதர் நூல்கள் (Arunagirinathar Books)

Post by மாலதி December 13th 2011, 08:35

பாடல் 673 - திருவாலங்காடு


ராகம் - ...;
தாளம் -



தனதானந் தானன தானன
தனதானந் தானன தானன
தனதானந் தானன தானன ...... தனதான



கனவாலங் கூர்விழி மாதர்கள்
மனசாலஞ் சால்பழி காரிகள்
கனபோகம் போருக மாமிணை ...... முலைமீதே


கசிவாருங் கீறுகி ளாலுறு
வசைகாணுங் காளிம வீணிகள்
களிகூரும் பேயமு தூணிடு ...... கசுமாலர்


மனவேலங் கீலக லாவிகள்
மயமாயங் கீதவி நோதிகள்
மருளாருங் காதலர் மேல்விழு ...... மகளீர்வில்


மதிமாடம் வானிகழ் வார்மிசை
மகிழ்கூரும் பாழ்மன மாமுன
மலர்பேணுந் தாளுன வேயரு ...... ளருளாயோ


தனதானந் தானன தானன
எனவேதங் கூறுசொல் மீறளி
ததைசேர்தண் பூமண மாலிகை ...... யணிமார்பா


தகரேறங் காரச மேவிய
குகவீரம் பாகும ராமிகு
தகைசாலன் பாரடி யார்மகிழ் ...... பெருவாழ்வே


தினமாமன் பாபுன மேவிய
தனிமானின் தோளுட னாடிய
தினைமாவின் பாவுயர் தேவர்கள் ...... தலைவாமா


திகழ்வேடங் காளியொ டாடிய
ஜெகதீசங் கேசந டேசுரர்
திருவாலங் காடினில் வீறிய ...... பெருமாளே.

பெருத்த, கொடிய விஷம்
மிக்குள்ள கண்களை உடைய விலைமாதர்கள், மனத்தில் வஞ்சனையுடன் பசப்பி நடிப்பு
வண்ணம் மிகுந்த பழிகாரிகள். மிகுந்த போக சுகத்தைத் தரக் கூடியதும், தாமரை
மொட்டுக்கு ஒப்பதானதுமான மார்பின் மீதே அன்பு மிகுதிக்கு அடையாளமாக
கீறல்களாலும் கிள்ளுதலின் குறிகளாலும் பழிப்புக்கு இடம் தரும் களிம்பைத்
தடவும் வீணிகள். ஆவேசத்தைத் தருகின்ற, தீய வெறித் தன்மையைக் கொடுக்கும்
மாமிச உணவைத் தருகின்ற, அசுத்தர்கள். மனத்தில் பொருந்திய சூழ்ச்சி நிறைந்த
அழகிய தந்திரவாதிகள், மாயம் நிறைந்த இசையில் இன்பம் கொள்பவர்கள். காம
மயக்கம் நிறைந்த காதல் செய்பவர்கள். தம் மீது மோகம் கொண்டு வந்தவர்கள் மேலே
விழுகின்ற பொது மகளிர். ஒளி பொருந்திய மேல் மாடம் உள்ள (உப்பரிகை உள்ள)
வீடுகளில் நிலவையும் வானத்தையும் அளாவி விளங்க இருப்பவர்கள் மீது மகிழ்ச்சி
நிரம்பக் கொள்ளும் பாழான மனம் இது. உன்னுடைய தாமரை மலரை ஒத்த திருவடியை
தியானிக்கவே உனது திருவருளைப் பாலிக்க மாட்டாயோ? தனதானந் தானன தானன என்று
வேதம் ஓதுவோரது சொல்லொலியினும் மிகுந்ததான ஒலியுடன் வண்டுகள் நிறைந்து
சேர்ந்துள்ள குளிர்ந்த பூக்களாலான நறு மணம் கொண்ட மாலைகளை அணிந்த மார்பனே,
நொறுங்குதலும் அழிவும் அப்போது நிறையச் செய்த ஆட்டின் மேல் வாகனமாக ஏறி
அமர்ந்த குக வீரனே, தேவி பார்வதியின் குமாரனே, மிக்க மேம்பாடு நிறைந்த
அடியார்கள் மகிழ்கின்ற பெரும் செல்வமே, தினந்தோறும் உன் மீது கொண்ட
அன்புடன் தினைப் புனத்தில் இருந்த ஒப்பற்ற மான் போன்ற (வள்ளியின்) தோளுடன்
விளையாடியவனே, தினை மாவில் விருப்பம் உள்ளவனே, தேவர்களின் தலைவனான அழகனே,
திகழ்கின்ற வேடத்துடன் காளியுடன் நடனம் ஆடின உலகத்துக்கு ஈசனும் சங்க
மேசனும் ஆகிய நடேசப் பெருமானுடைய தலமாகிய திருவாலங்காட்டில்* விளங்கி நிற்கும் பெருமாளே.

* திருவாலங்காடு சென்னைக்கு மேற்கே 37 மைலில் உள்ளது.


பாடல் 674 - திருவாலங்காடு


ராகம் - ---;
தாளம் -



தந்தானந் தாத்தம் தனதன
தந்தானந் தாத்தம் தனதன
தந்தானந் தாத்தம் தனதன ...... தனதான



பொன்றாமன் றாக்கும் புதல்வரும்
நன்றாமன் றார்க்கின் றுறுதுணை
பொன்றானென் றாட்டம் பெருகிய ...... புவியூடே


பொங்காவெங் கூற்றம் பொதிதரு
சிங்காரஞ் சேர்த்திங் குயரிய
புன்கூடொன் றாய்க்கொண் டுறைதரு ...... முயிர்கோல


நின்றானின் றேத்தும் படிநினை
வுந்தானும் போச்சென் றுயர்வற
நிந்தாகும் பேச்சென் பதுபட ...... நிகழாமுன்


நெஞ்சாலஞ் சாற்பொங் கியவினை
விஞ்சாதென் பாற்சென் றகலிட
நின்தாள்தந் தாட்கொண் டருள்தர ...... நினைவாயே


குன்றால்விண் டாழ்க்குங் குடைகொடு
கன்றாமுன் காத்துங் குவலய
முண்டார்கொண் டாட்டம் பெருகிய ...... மருகோனே


கொந்தார்பைந் தார்த்திண் குயகுற
மின்தாள்சிந் தாச்சிந் தையில்மயல்
கொண்டேசென் றாட்கொண் டருளென ...... மொழிவோனே


அன்றாலங் காட்டண் டருமுய
நின்றாடுங் கூத்தன் திருவருள்
அங்காகும் பாட்டின் பயனினை ...... யருள்வாழ்வே


அன்பால்நின் தாட்கும் பிடுபவர்
தம்பாவந் தீர்த்தம் புவியிடை
அஞ்சாநெஞ் சாக்கந் தரவல ...... பெருமாளே.

அழிவில்லாத வகையில் சபையிலே
புகழைப் பெருக்கும் மக்களும் கூட நல்லபடியாக நிலைத்த செல்வம் ஆகார்.
யாவருக்கும் இன்று உற்ற துணையாக கருதப்படும் பொருட்செல்வமும் கூட அவ்வாறே
நிலையற்றது என்னும் இந்தக் கூத்தாட்டம் நிறைந்த புவி வாழ்க்கையில்,
கோபித்து வரும் கொடிய யமன் உயிரைக் கொண்டுபோக மறைந்து நிற்கும்போது, நன்கு
அலங்காரம் செய்துகொண்டதான மேம்பட்டு நிற்கும் புன்மையான கூடாகிய உடலைக்
கொண்டு, அதனுள் இருக்கின்ற உயிர் இடம் கொள்ளுமாறு இங்கு இவன் நிற்கின்றான்,
இன்று உன்னைப் புகழ்ந்து துதிக்கும்படியான நினைவுகூட இவனிடம் இல்லாமல்
போய்விட்டது என்று, மேன்மையற்ற நிந்தனையான பேச்சு என்பது ஏற்பட்டுப்
பரவுதற்கு முன்பாக, மனத்தாலும், ஐம்பொறிகளாலும் உண்டாகிப் பெருகும்
வினையானது அதிகப்படாமல் என்னிடத்திலிருந்து விட்டு நீங்க, உன் திருவடிகளைத்
தந்து அடியேனை ஆட்கொண்டு திருவருளைத் தர நினைந்தருள வேண்டுகிறேன்.
(கோவர்த்தன) மலையை மேகங்களைத் தடுக்கும் குடையாகக் கொண்டு, கன்றுகளையும்
பசுக்களையும் முன்னாள் காத்தவரும், பூமியை உண்டவருமான திருமாலின்
பாராட்டுதலை வெகுவாகப் பெற்ற மருகனே, பூங்கொத்து நிறைந்த பசுமையான மாலையைத்
தரித்துள்ள, திண்ணிய மார்பகங்கள் உடைய வள்ளியாம் குறப் பெண்ணிண் நீங்காத
மனத்தில் மயக்கம் கொண்டே, அவளிடம் போய் என்னை ஆட்கொண்டு அருள்வாயாக என்று
கூறியவனே, அன்று திருவாலங்காட்டில்*,
தேவர்களும் பிழைப்பதற்காக, நின்று நடனம் புரிந்த சிவபெருமானது திருவருள்
அங்கு கூடும்படியான (தேவாரத்) திருப்பதிகங்களின் பயனை (திருஞானசம்பந்தராக
வந்து) அருளிச்செய்த செல்வமே, அன்பினால் உன்னுடைய திருவடிகளை வணங்குபவரின்
பாவத்தைத் தீர்த்து, இப்பூமியில் அவர்களுக்கு அஞ்சாத நெஞ்சத்தையும்,
செல்வங்களையும் தரவல்ல பெருமாளே.

* திருவாலங்காடு சென்னைக்கு மேற்கே 37 மைலில் உள்ளது. இது நடராஜர் தாண்டவமாடிய பஞ்ச சபைகளில் ஒன்று - ரத்னசபை.


பாடல் 675 - திருவாலங்காடு


ராகம் - ...;
தாளம் -



தனதன தானந் தாத்த தனதன தானந் தாத்த
தனதன தானந் தாத்த ...... தனதான



புவிபுனல் காலுங் காட்டி சிகியொடு வானுஞ் சேர்த்தி
புதுமன மானும் பூட்டி ...... யிடையூடே


பொறிபுல னீரைந் தாக்கி கருவிகள் நாலுங் காட்டி
புகல்வழி நாலைந் தாக்கி ...... வருகாயம்


பவவினை நூறுங் காட்டி சுவமதி தானுஞ் சூட்டி
பசுபதி பாசங் காட்டி ...... புலமாயப்


படிமிசை போவென் றோட்டி அடிமையை நீவந் தேத்தி
பரகதி தானுங் காட்டி ...... யருள்வாயே


சிவமய ஞானங் கேட்க தவமுநி வோரும் பார்க்க
திருநட மாடுங் கூத்தர் ...... முருகோனே


திருவளர் மார்பன் போற்ற திசைமுக னாளும் போற்ற
ஜெகமொடு வானங் காக்க ...... மயிலேறிக்


குவடொடு சூரன் தோற்க எழுகடல் சூதந் தாக்கி
குதர்வடி வேலங் கோட்டு ...... குமரேசா


குவலயம் யாவும் போற்ற பழனையி லாலங் காட்டில்
குறமகள் பாதம் போற்று ...... பெருமாளே.

மண், நீர், காற்று இவைகளைக்
கலந்தும், நெருப்பு, வான் என்ற இரண்டையும் கூடச் சேர்த்தும், புதுமை
வாய்ந்த மனம் என்ற குதிரையை அதில் பூட்டியும், இவைகளுக்கு இடையே
ஐம்பொறிகள், ஐம்புலன்கள் என்ற பத்து இந்திரியங்களையும் இணைத்தும், மனம்,
புத்தி, அகங்காரம், சித்தம் என்ற நான்கு கருவிகளைப் பிணைத்தும்,
சொல்லப்படுகின்ற துவாரங்களாக (வழிகளாக) ஒன்பது வாயில்களை*
உண்டுபண்ணியும், இந்த உடல் ஏற்படுத்தப்படுகிறது. (இத்தகைய உடலுக்குக்
காரணமான) பாவ வினைகள் பொடிபட்டு அழிதலைக்காட்டி, நல்ல அறிவை எனக்குப்
பொருந்தவைத்து, பசு, பதி, பாசம் (உயிர், இறைவன், தளை) என்ற முப்பொருள்களின்
இலக்கணங்களை எனக்கு விளக்கி, ஐம்புலன்களும் மாய்ந்து ஒடுங்க இந்தப்
பூமிக்குப் போ என்று என்னை விரைவில் அனுப்பிய நீதான், உன் அடிமையாகிய என்னை
இப்போது வந்து வாழ்த்தி, முக்தியையும் அடைவதற்கான வழியைக் காட்டி
அருள்வாயாக. சிவமயமான ஞானோபதேசத்தை உலகோர் கேட்டு மகிழவும், தவம் நிறைந்த
முநிவர்கள்** பார்த்து மகிழவும், திருநடனம்
ஆடும் கூத்தபிரான் சிவனின் குழந்தை முருகனே, லக்ஷ்மியை மார்பில் வைத்த
திருமால் போற்றவும், நான்கு திசைகளையும் நோக்கும் முகனான பிரமன் நாள்தோறும்
போற்றவும், மண்ணுலகையும் விண்ணுலகையும் காக்கும் பொருட்டு மயில் மீதேறி,
கிரெளஞ்சகிரியுடன் சூரன் தோல்வியுற, ஏழு கடல்களையும், மாமரத்தையும்
(சூரனையும்) தாக்கி, எடுத்த கூரிய வேலினை அங்கு போர்க்களத்தில் செலுத்தின
குமரேசனே, உலகெலாம் போற்ற பழையனூரிலும்***, திருவாலங்காட்டிலும் வீற்றிருந்து, குறமகளாகிய வள்ளியின் பாதம் போற்றுகின்ற பெருமாளே.

* நவ துவாரங்கள்: இரு கண்கள், இரு செவிகள், இரு நாசிகள், ஒரு வாய், இரு கழிவுப் பாதைகள்.

** திருவாலங்காட்டில் கார்க்கோடகன்,
முஞ்சிகேசர் என்ற முநிவர்கள் சிவனின் அருளைப்பெற்று அவரது நடன தரிசனத்தைக்
கண்டனர் - திருவாலங்காட்டுப் புராணம்.

*** பழனை என்ற பழையனூர்
திருவாலங்காட்டுக்குக் கிழக்கே ஒரு மைலில் உள்ளது. திருவாலங்காடு
சென்னைக்கு மேற்கே 37 மைலில் உள்ளது. இது நடராஜர் தாண்டவமாடிய பஞ்ச
சபைகளில் ஒன்று - ரத்னசபை.


பாடல் 676 - திருவாலங்காடு


ராகம் - :
தாளம் -



தனதன தானந் தாத்த தனதன தானந் தாத்த
தனதன தானந் தாத்த ...... தனதான



வடிவது நீலங் காட்டி முடிவுள காலன் கூட்டி
வரவிடு தூதன் கோட்டி ...... விடுபாசம்


மகனொடு மாமன் பாட்டி முதலுற வோருங் கேட்டு
மதிகெட மாயந் தீட்டி ...... யுயிர்போமுன்


படிமிசை தாளுங் காட்டி யுடலுறு நோய்பண் டேற்ற
பழவினை பாவந் தீர்த்து ...... னடியேனைப்


பரிவொடு நாளுங் காத்து விரிதமி ழாலங் கூர்த்த
பரபுகழ் பாடென் றாட்கொ ...... டருள்வாயே


முடிமிசை சோமன் சூட்டி வடிவுள ஆலங் காட்டில்
முதிர்நட மாடுங் கூத்தர் ...... புதல்வோனே


முருகவிழ் தாருஞ் சூட்டி யொருதனி வேழங் கூட்டி
முதல்மற மானின் சேர்க்கை ...... மயல்கூர்வாய்


இடியென வேகங் காட்டி நெடிதரு சூலந் தீட்டி
யெதிர்பொரு சூரன் தாக்க ...... வரஏகி


இலகிய வேல்கொண் டார்த்து உடலிரு கூறன் றாக்கி
யிமையவ ரேதந் தீர்த்த ...... பெருமாளே.

உடலின் நிறத்தை கருநீலமாகக்
காட்டி, முடிவு காலத்தில் வரும் யமன்அழைத்து வர அனுப்புகின்ற அவனுடைய தூதன்
வளைத்து எறிகின்ற பாசக் கயிற்றினால் (மரணம் அடைகின்ற பொழுது), மகனும்,
மாமன், பாட்டி முதலான உறவினர்களும் (மரண நிலையைக்) கேட்டு புத்தி
கலங்கும்படி, உலக மாயை அதிகமாகி உயிர் போவதற்கு முன்பு, இந்தப் பூமியில்
உனது திருவடிகளைக் காட்டி, உடலுக்கு ஏற்பட்ட நோய்கள், முன் செய்த கர்மப்
பயனால் அடைந்துள்ள பழைய வினைகளாகிய பாவங்களை ஒழித்து, உனது அடியேனாகிய
என்னை அன்புடன் நாள்தோறும் காத்தளித்து, விரிந்த அழகிய தமிழ் மொழியால் அழகு
மிக்க மேலான திருப்புகழைப் பாடுவாயாக என்று ஆட்கொண்டு அருள் புரிவாயாக.
தலையில் சந்திரனைத் தரித்து, அழகுள்ள திருவாலங்காடு* என்னும் ஊரில் முதன்மையான நடனம்**
ஆடுகின்ற கூத்தர் நடராஜனின் மகனே, நறுமணம் கமழும் மாலையையும் சூட்டி,
ஒப்பற்றுத் தனித்து வர யானையையும் (விநாயகரையும்) வரவழைத்து முன்பு,
வேடர்குலப் பெண்ணாகிய வள்ளியோடு சேர்தலில் மோகம் மிக்கவனே, இடியைப் போல
வேகத்தைக் காட்டி, புலால் நாற்றம் கொண்ட சூலாயுதத்தைக் கையில் எடுத்து,
எதிர்த்து வந்த சூரன் சண்டைக்கு வர, அவனை எதிர்த்துச் சென்று விளங்குகின்ற
வேலாயுதத்தை ஆரவாரத்துடன் செலுத்தி, அவன் உடலை இரண்டு பிளவாக அன்று ஆக்கி,
தேவர்களுடைய துன்பத்தை நீக்கிய பெருமாளே.

* திருவாலங்காடு சென்னைக்கு மேற்கே 37 மைலில் உள்ளது. இது நடராஜர் தாண்டவமாடிய பஞ்ச சபைகளில் ஒன்று - ரத்னசபை.

** திருவாலங்காட்டில் செய்யப்பட்ட
நடனம் சண்ட தாண்டவம் (ஊர்த்துவ தாண்டவம்). இது ஆகாய உச்சியை நோக்கி மேலே
செல்லும்படியாக இடது பாதத்தைத் தூக்கி வலது பாதத்தை ஊன்றிச் செய்யப்படும்
சம்ஹார தாண்டவமாகும். இது பிறவியை நீக்கும் என்பது கோட்பாடு.


பாடல் 677 - திருவாலங்காடு


ராகம் -
மோஹனம்
தாளம் - சதுஸ்ர ரூபகம் - 6



தனனாத் தானன தானம் தனனாத் தானன தானம்
தனனாத் தானன தானம் ...... தனதான



தவர்வாட் டோமர சூலந் தரியாக் காதிய சூருந்
தணியாச் சாகர மேழுங் ...... கிரியேழுஞ்


சருகாக் காய்கதிர் வேலும் பொருகாற் சேவலு நீலந்
தரிகூத் தாடிய மாவுந் ...... தினைகாவல்


துவர்வாய்க் கானவர் மானுஞ் சுரநாட் டாளொரு தேனுந்
துணையாத் தாழ்வற வாழும் ...... பெரியோனே


துணையாய்க் காவல்செய் வாயென் றுணராப் பாவிகள் பாலுந்
தொலையாப் பாடலை யானும் ...... புகல்வேனோ


பவமாய்த் தாணது வாகும் பனைகாய்த் தேமண நாறும்
பழமாய்ப் பார்மிசை வீழும் ...... படிவேதம்


படியாப் பாதகர் பாயன் றியுடாப் பேதைகள் கேசம்
பறிகோப் பாளிகள் யாருங் ...... கழுவேறச்


சிவமாய்த் தேனமுதூறுந் திருவாக் காலொளி சேர்வெண்
டிருநீற் றாலம ராடுஞ் ...... சிறியோனே


செழுநீர்ச் சேய்நதி யாரங் கொழியாக் கோமளம் வீசுந்
திருவோத் தூர்தனில் மேவும் ...... பெருமாளே.

வில், வாள், தண்டாயுதம், சூலம்
இவைகளைத் தரித்து, பல கொலைகளைச் செய்த சூரனும், வற்றாத கடல்கள் ஏழும்,
மலைகள் ஏழும், சருகு போலக் காய்ந்து போகும்படி எரித்த ஒளிமிக்க வேலும்,
சண்டை செய்யவல்ல கால்களை உடைய சேவலும், நீல நிறமானதும், நடனம் ஆடவல்லதுமான
மயிலாம் குதிரையும், தினைப் புனத்தைக் காத்த, பவளம் போன்ற வாயைக்கொண்ட,
வேடர் குலத்து மான் போன்ற வள்ளியும், தேவலோகத்தாளாகிய ஒப்பற்ற தேன் அனைய
தேவயானையும், துணையாகக் கொண்டு குறைவின்றி வாழ்கின்ற கோமானே, நீ துணையாகக்
காவல் செய்து ரக்ஷிப்பாய் என்று உணராத பாவிகளிடத்தில் சென்று அழிவில்லாத
அருமையான பாடல்களை நானும் சொல்லித் திரியலாமோ? பிறப்பை ஒழித்து, ஆணாக
இருந்த பனைமரம் காய்த்து நறுமணம் வீசும் பழங்களாக பூமியின் மீது
விழும்படியாக,* வேதத்தைப் படிக்காத
பாதகர்கள் (1) பாயைத் தவிர வேறு எந்த ஆடையும் உடுக்காத பேதைகள் (2)
தலைமயிரைப் பிய்த்துப் பறிக்கும் கூத்தாடிச் சமர்த்தர்கள் (3) ஆகிய சமணர்
எல்லாருமாகக் கழுவில் ஏறும்படியாக, சிவமயமானதும், தேனும் அமுதும் ஊறினது
போலத் தித்திக்கும் உனது (திருஞானசம்பந்தரது) திருவாக்கினாலும் தேவாரப்
பாடல்களினாலும், பெருமை வாய்ந்த வெள்ளைத் திருநீற்றாலும், வாதுப் போர்
புரிந்த இளையோனே, செழுமை வாய்ந்த நீரைக் கொண்ட சேயாறு முத்துக்களைக்
கரையிலே கொட்டும் அழகு நிறைந்த திருவோத்தூர்** என்ற தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.

*
திருவோத்தூரில் பனைமரங்கள் ஆண்பனையாக இருந்தமை கண்டு சமணர்கள் பரிகசிக்க,
அவ்வூரில் சிவனைத் தரிசித்த திருஞானசம்பந்தர் (குரும்பை ஆண்பனை ஈன்குலை
ஓத்தூர் என்ற) தேவாரத்தைப் பாட, ஆண்பனைகள் யாவும் குலைதள்ளி பனம் பழங்களைக்
கொட்டின. பனைகளின் பிறப்பும் ஒழிந்தன.(1) (2) (3) இவையாவும் சமண
குருமாரைக் குறிப்பன:(1) சமணர் வேதத்தைப் படித்ததில்லை.(2) சமணர் கோரைப்
பாயைத் தவிர வேறு ஆடை உடுப்பதில்லை.(3) சமண குருமார் ஒருவனைக் குருவாக
ஆக்கும்போது அவனது தலைமயிரை ஒவ்வொன்றாகப் பிய்த்துப் பறிக்கும் வழக்கம்
உண்டு.

** திருவோத்தூர் காஞ்சீபுரத்துக்குத்
தென்மேற்கே 19 மைலில் சேயாற்றின் கரையின் உள்ளது.இங்கு சிவபிரான்
தேவர்களுக்கும் முநிவர்களுக்கும் வேதத்தை ஓதுவித்ததால் திருவோத்தூர்
எனப்படும்.


பாடல் 678 - பாக்கம்


ராகம் - ...; தாளம்
-



தாத்தத்த தானதன தாத்தத்த தானதன
தாத்தத்த தானதன ...... தனதான



கார்க்கொத்த மேனிகடல் போற்சுற்ற மானவழி
காய்த்தொட்டொ ணாதவுரு ...... ஒருகோடி


காக்கைக்கு நாய்கழுகு பேய்க்கக்க மானவுடல்
காட்டத்தி னீளெரியி ...... லுறவானிற்


கூர்ப்பித்த சூலனத னாற்குத்தி யாவிகொடு
போத்துக்க மானகுறை ...... யுடையேனைக்


கூப்பிட்டு சாவருளி வாக்கிட்டு நாமமொழி
கோக்கைக்கு நூலறிவு ...... தருவாயே


போர்க்கெய்த்தி டாமறலி போற்குத்தி மேவசுரர்
போய்த்திக்கெ லாமடிய ...... வடிவேலாற்


பூச்சித்தர் தேவர்மழை போற்றுர்க்க வேபொருது
போற்றிச்செய் வார்சிறையை ...... விடுவோனே


பார்க்கொற்ற நீறுபுனை வார்க்கொக்க ஞானபர
னாய்ப்பத்தி கூர்மொழிகள் ...... பகர்வாழ்வே


பாக்கொத்தி னாலியலர் நோக்கைக்கு வேல்கொடுயர்
பாக்கத்தில் மேவவல ...... பெருமாளே.

கருமேகத்துக்கு நிகரான உடல்
நிறத்தை உடைய கடல் போலப் பரந்த சுற்றத்தார்கள் பொருந்திய இடத்திலே பிறந்து
தோன்றி, நிலைத்து நிற்காத வடிவம் இந்த உடல் ஆகும். ஒரு கோடிக் கணக்கான
காக்கைகளுக்கும் நாய்களுக்கும், கழுகுகளுக்கும், பேய்களுக்கும் உணவுத்
தானியமாக ஆகப்போவது இந்த உடல். சுடுகாட்டில் பெரு நெருப்பில் சேரும்படி,
ஆகாயத்தில் இருந்து கூர்மை கொண்ட சூலாயுதத்தை உடைய யமன் சூலத்தால் என்னைக்
குத்தி என் ஆவியைக் கொண்டு போகின்ற துக்கமான ஒரு குறைபாட்டை உடைய என்னை,
அருகே அழைத்து, விசாரித்துத் திருவருள் பாலித்து, (உன்னைப் பாடும்படியான)
வாக்கை எனக்கு அருளி, உன் திரு நாமங்களைச் சொற்களில் பாடலாக அமைப்பதற்கு
வேண்டிய நூல் அறிவைத் தந்து அருளுக. சண்டைக்குச் சளைக்காத யமனைப் போல
எதிர்த்து வந்த அசுரர்கள் கூடிப் போய் திசை தோறும் இறக்கும்படியாக, கூரிய
வேலினால் குத்தி, சித்தர்களும் தேவர்களும் மழை போல பூக்களை
(போர்க்களத்தில்) மிகப் பொழிய உக்கிரமாகச் சண்டை செய்து, போற்றி வணங்கும்
தேவர்களுடைய சிறையை நீக்கியவனே, பூமியில் வெற்றி தருகின்ற திருநீற்றை
அணிகின்ற சிவபெருமானுக்கு, மிக்க ஞானத்தில் சிறந்தவனாக, பக்தியை நன்கு
வளர்க்க வல்ல உபதேச மொழிகளைக் கூறிய குரு மூர்த்தியாகிய செல்வமே,
பாமாலைகளால் இயற்றமிழ் வல்ல புலவர்கள் விரும்பிப் பார்ப்பதற்காக, வேல்
ஏந்தி, சிறந்த பாக்கம்* என்னும் தலத்தில் வீற்றிருக்க வல்ல பெருமாளே.
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

அருணகிரிநாதர் நூல்கள் (Arunagirinathar Books) Empty Re: அருணகிரிநாதர் நூல்கள் (Arunagirinathar Books)

Post by மாலதி December 13th 2011, 08:36

* பாக்கம், சென்னையிலிருந்து அரக்கோணம் செல்லும் வழியில் தின்னனூர் ரயில் நிலையத்துக்கு 3 மைலில் உள்ளது.


பாடல் 679 - பாக்கம்


ராகம் - ...; தாளம்
-



தாத்தத் தனந்த தந்த தாத்தத் தனந்த தந்த
தாத்தத் தனந்த தந்த ...... தனதான



பாற்றுக் கணங்கள் தின்று தேக்கிட் டிடுங்கு ரம்பை
நோக்கிச் சுமந்து கொண்டு ...... பதிதோறும்


பார்த்துத் திரிந்து ழன்று ஆக்கத் தையுந்தெ ரிந்து
ஏக்கற் றுநின்று நின்று ...... தளராதே


வேற்றுப் புலன்க ளைந்து மோட்டிப் புகழ்ந்து கொண்டு
கீர்த்தித் துநின்ப தங்க ...... ளடியேனும்


வேட்டுக் கலந்தி ருந்து ஈட்டைக் கடந்து நின்ற
வீட்டிற் புகுந்தி ருந்து ...... மகிழ்வேனோ


மாற்றற் றபொன்து லங்கு வாட்சக் கிரந்தெ ரிந்து
வாய்ப்புற் றமைந்த சங்கு ...... தடிசாப


மாற்பொற் கலந்து லங்க நாட்டச் சுதன்ப ணிந்து
வார்க்கைத் தலங்க ளென்று ...... திரைமோதும்


பாற்சொற் றடம்பு குந்து வேற்கட் சினம்பொ ருந்து
பாய்க்குட் டுயின்ற வன்றன் ...... மருகோனே


பாக்குக் கரும்பை கெண்டை தாக்கித் தடம்ப டிந்த
பாக்கத் தமர்ந்தி ருந்த ...... பெருமாளே.

பருந்துகளின் கூட்டங்கள் உண்டு
வயிறு நிறைந்து ஏப்பமிடுவதற்கு இடமான இந்த உடல் கூட்டை விரும்பிச் சுமந்து
கொண்டு, ஊர்கள் தோறும் சுற்றிப் பார்த்தும், திரிந்தும், அலைச்சல்
உற்றும், செல்வத்துக்கு வழியைத் தேடியும் இளைத்து வாடி, அங்கங்கு நின்று
தளராமல், மாறாக நிற்கின்ற ஐம்புலன்களையும் அப்புறப்படுத்தி (ஒருமைப்பட்ட
மனத்தினனாய்) உன்னைப் புகழ்ந்து கொண்டு, உன் திருப்புகழையே பாடிப் பாடி
உனது திருவடிகளை அடியேனாகிய நானும் விரும்பி, உன்னோடு கலந்திருந்து
வருத்தங்களைக் கடந்து நின்ற மோட்ச வீட்டில் புகுந்து இருந்து மகிழ்ச்சி
உறுவேனோ? உரை மாற்றுக் கடந்த பொன் விளங்கும் (நாந்தகம் என்னும்) வாளும்,
(சுதர்சனம் என்னும்) சக்கரமும், தெரிந்து பொருந்த அமைந்த (பாஞ்சஜன்யம்
என்னும்) சங்கமும், (கெளமோதகி என்னும்) தண்டமும், (சாரங்கம் என்னும்)
வில்லும், அழகிய பொன் ஆபரணங்களும் விளங்கும்படியாக நிலையாக வைத்துள்ள
திருமாலை, வணங்குகின்ற நீண்ட கைகள் என்று சொல்லும்படி அலைகள் மோதுகின்ற
பால் என்று சொல்லும்படியான திருப்பாற் கடலில் இடம் கொண்டு, வேல் போன்ற
கூரிய கண்ணையும் கோபத்தையும் கொண்ட பாயான ஆதி சேஷன் என்னும் பாம்பணையில்
துயில் கொண்டவனாகிய திருமாலின் மருகனே, கமுக மரப் பாக்கையும்
கரும்புகளையும் கெண்டை மீன்கள் தாக்கி விட்டுத் தடாகத்தில் படிகின்ற
பாக்கம்* என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.

* சென்னையிலிருந்து அரக்கோணம் செல்லும் வழியில் தின்னனூர் ரயில் நிலையத்துக்கு 3 மைலில் உள்ளது.


பாடல் 680 - திருவேற்காடு


ராகம் - ....;
தாளம் -



தானந்தா தனதான தானந்தா தனதான
தானந்தா தனதான ...... தனதான



ஆலம்போ லெழுநீல மேலங்காய் வரிகோல
மாளம்போர் செயுமாய ...... விழியாலே


ஆரம்பால் தொடைசால ஆலுங்கோ புரவார
ஆடம்பார் குவிநேய ...... முலையாலே


சாலந்தாழ் வுறுமால ஏலங்கோர் பிடியாய
வேளங்கார் துடிநீப ...... இடையாலே


சாரஞ்சார் விலனாய நேகங்கா யமன்மீறு
காலந்தா னொழிவேது ...... உரையாயோ


பாலம்பால் மணநாறு காலங்கே யிறிலாத
மாதம்பா தருசேய ...... வயலூரா


பாடம்பார் திரிசூல நீடந்தா கரவீர
பாசந்தா திருமாலின் ...... மருகோனே


வேலம்பார் குறமாது மேலும்பார் தருமாதும்
வீறங்கே யிருபாலு ...... முறவீறு


வேதந்தா வபிராம நாதந்தா வருள்பாவு
வேலங்கா டுறைசீல ...... பெருமாளே.

ஆலகால விஷத்தைப் போல் எழுந்து
நீலோற்பல மலருக்கும் மேலானதாக அங்கு அமர்ந்து, ரேகைகள் கொண்டு அழகு
வாய்ந்து, கண்டோர் இறந்து போகும்படிச் சண்டை செய்ய வல்ல மாயம் நிறைந்த
கண்களாலே, முத்து ஆரம் தம்மேல் மாலையாக மிகவும் அசைகின்ற, கோபுரம் போல்
எழுந்து ஆடம்பரமாகக் குவிந்துள்ள, அன்புக்கு இடமான மார்பகங்களாலே, மிகவும்
இளைத்திருப்பதும், ஆசை தரக் கூடியதாகப் பொருந்தி அங்கு ஒரு பிடி அளவே
இருப்பதும், விருப்பத்துக்கு அங்கு இடமாய் நிறைந்ததும், உடுக்கை போன்றதுமான
இடுப்பாலே, (என்னை வாழவிடாமல் செய்யும் விலைமாதரை விட்டு) வேறு புகலிடம்
இல்லாதவனாய் இருக்கும் எனக்கு, நிறைய பிறப்புகளில் என் உயிரைக் கவர்ந்து
சென்ற யமன் என்னை அதிகாரம் செய்து வென்று செல்லும் காலம் தான் நீங்குதல்
என்றைக்கு எனச் சொல்ல மாட்டாயோ? பூமியின் இடமெல்லாம் கடல் நீரால் சேர்க்கை
தோன்றுங்கால் (பிரளய காலத்தில்), அப்போதும் அழிவில்லாத தேவி அம்பிகை பெற்ற
குழந்தையே, வயலூரில் குடிகொண்டுள்ள தெய்வமே, பெருமை வாய்ந்த அம்பு போல
கூர்மை வாய்ந்த முத்தலைச் சூலத்தால், மேம்பட்டு நின்ற அந்தகாசுரனை*
வருத்தின வீரனாகிய சிவன் மீது அன்பைப் பொழியும் திருமாலின் மருகனே, வேல்
போலவும் அம்பு போலவும் (உள்ள கண்களைக் கொண்ட) குறப் பெண்ணாகிய வள்ளியும்,
தேவர்கள் வளர்த்த தேவயானை அம்மையும் பெருமிதத்துடன் அங்கே இரண்டு புறமும்
பொருந்த விளங்க வேதத்தின் முடிவில் இருப்பவனே, அழகனே, ஒலியின் முடிவில்
இருப்பவனே, திருவருளைப் பரப்பும் திருவேற்காட்டில்** வீற்றிருக்கும் தூயவனே, பெருமாளே.

*
அந்தகாசுரன் அரக்கன் இரணியனுக்கு மைந்தன், பிரகலாதனுக்குத் தம்பி. இவன்
தேவர்களை வருத்த, சிவபெருமான் பைரவ மூர்த்தியை ஏவினார். அவர் சூலத்தினால்
அந்தகாசுரனைக் குத்தி அடக்கினார்.

** திருவேற்காடு, சென்னையின் அருகிலுள்ள ஆவடி ரயில் நிலையத்திலிருந்து தென்கிழக்கில் 4 மைலில் உள்ளது.


பாடல் 681 - திருவேற்காடு


ராகம் -
ஸிம்மேந்திர மத்யமம்
தாளம் - திஸ்ர த்ருபுடை



தாத்தாதன தானன தானன
தாத்தாதன தானன தானன
தாத்தாதன தானன தானன ...... தனதான



கார்ச்சார்குழ லார்விழி யாரயி
லார்ப்பால்மொழி யாரிடை நூலெழு
வார்ச்சாரிள நீர்முலை மாதர்கள் ...... மயலாலே


காழ்க்காதல தாமன மேமிக
வார்க்காமுக னாயுறு சாதக
மாப்பாதக னாமடி யேனைநி ...... னருளாலே


பார்ப்பாயலை யோவடி யாரொடு
சேர்ப்பாயலை யோவுன தாரருள்
கூர்ப்பாயலை யோவுமை யாள்தரு ...... குமரேசா


பார்ப்பாவல ரோதுசொ லால்முது
நீர்ப்பாரினில் மீறிய கீரரை
யார்ப்பாயுன தாமரு ளாலொர்சொ ...... லருள்வாயே


வார்ப்பேரரு ளேபொழி காரண
நேர்ப்பாவச காரண மாமத
ஏற்பாடிக ளேயழி வேயுற ...... அறைகோப


வாக்காசிவ மாமத மேமிக
வூக்காதிப யோகம தேயுறு
மாத்தாசிவ பாலகு காவடி ...... யர்கள்வாழ்வே


வேற்காடவல் வேடர்கள் மாமக
ளார்க்கார்வநன் மாமகி ணாதிரு
வேற்காடுறை வேதபு ¡£சுரர் ...... தருசேயே


வேட்டார்மக வான்மக ளானவ
ளேட்டார்திரு மாமண வாபொனி
னாட்டார்பெரு வாழ்வென வேவரு ...... பெருமாளே.

மேகத்தை ஒத்த கூந்தலை
உடையவர்கள், கூரிய வேல் போன்ற கண்களை உடையவர்கள், பால் போல் இனிய சொற்களை
உடையவர்கள், இடையானது நூல் போல நுண்ணிதாக உடையவர்கள் பொருந்திய இள நீரைப்
போன்ற மார்பகங்களை உடையவர்களாகிய விலைமாதர்கள் மீதுள்ள மயக்கத்தாலே,
திண்ணியதான அன்பு பூண்டுள்ள மனமே, மிக்க காமப் பித்தனாக இருக்கின்ற
ஜாதகத்தை உடையவனும், மிகவும் பெரிய பாதகச் செயல்களைப் புரிபவனுமாகிய
அடியேனை, உன்னுடைய திருவருள் கொண்டு பார்க்க மாட்டாயோ? உனது அடியார்களோடு
சேர்க்க மாட்டாயோ? உன்னுடைய பூரண அருளை நிரம்பத் தர மாட்டாயோ? உமா தேவி
பெற்ற குமரேசனே, பூமியில் உள்ள புலவர்கள் ஓதும் புகழ்ச் சொற்களால் பழைய
கடல் சூழ்ந்த இவ்வுலகில் மேம்பட்டு விளங்குபவராகிய நக்கீரரை*
மகிழ்ந்து ஏற்பவனே, உனது திருவருளை அதேபோலப் பாலித்து ஒப்பற்ற ஒரு உபதேசச்
சொல்லை எனக்கு அருளுவாயாக. (உலகத்துக்கு) நீடிய பேர் அருளையே பொழிந்த மூல
காரணனே, நேரிட்டு எதிர்த்த பாவத்துக்குத் துணைக் காரணமாகிய சமண மதத்தை
ஏற்பாடு செய்த மதக் குருக்கள் அழிபட (தேவாரப் பாடல்களை திருஞானசம்பந்தராக
வந்து) கூறிய, கோபம் கொண்ட திருவாக்கை உடையவனே, சிறந்த சிவ மதமே
பெருகும்படி முயற்சிகளைச் செய்த தலைவனே, யோக நிலையில் இருக்கும் பெரியவனே,
சிவனது குமரனே, குகனே அடியார்களின் செல்வமே, வேல் ஏந்திக் காட்டில்
வசிக்கும் வேடர்களின் சிறந்த பெண்ணாகிய வள்ளியிடம் அன்பு பூண்ட நல்ல அழகிய
கணவனே, திருவேற்காட்டில்** வீற்றிருக்கும்
வேத பு¡£சுரர் பெற்ற குழந்தையே, வேள்வி நிரம்பிய யாகபதியாகிய இந்திரனுடைய
மகளான தேவயானையின் சிறந்த அழகிய மணவாளனே, பொன்னுலகத்தினரான தேவர்களுடைய
செல்வம் என வருகின்ற பெருமாளே.

* சிவபிரானால் சபிக்கப்பட்டு சிறையில் இருந்த நக்கீரர், திருமுருகாற்றுப்படையைப் பாடி முருகன் அருளால் சிறை மீண்டார்.

** திருவேற்காடு சென்னையின் அருகிலுள்ள ஆவடி ரயில் நிலையத்திலிருந்து தென்கிழக்கில் 4 மைலில் உள்ளது.


பாடல் 682 - வடதிருமுல்லைவாயில்


ராகம் -
மோஹனம் ; தாளம் - அங்கதாளம் - 6 1/2
- எடுப்பு - 1/2 அக்ஷரம் தள்ளி


தகதகிட-2 1/2, தகதிமி-2, தகதிமி-2



தனதய்ய தானன தானன
தனதய்ய தானன தானன
தனதய்ய தானன தானன ...... தனதான



அணிசெவ்வி யார்திரை சூழ்புவி
தனநிவ்வி யேகரை யேறிட
அறிவில்லி யாமடி யேனிட ...... ரதுதீர


அருள்வல்லை யோநெடு நாளின
மிருளில்லி லேயிடு மோவுன
தருளில்லை யோஇன மானவை ...... யறியேனே


குணவில்ல தாமக மேரினை
யணிசெல்வி யாயரு ணாசல
குருவல்ல மாதவ மேபெறு ...... குணசாத


குடிலில்ல மேதரு நாளெது
மொழிநல்ல யோகவ ரேபணி
குணவல்ல வாசிவ னேசிவ ...... குருநாதா


பணிகொள்ளி மாகண பூதமொ
டமர்கள்ளி கானக நாடக
பரமெல்லி யார்பர மேசுரி ...... தருகோவே


படரல்லி மாமலர் பாணம
துடைவில்லி மாமத னாரனை
பரிசெல்வி யார்மரு காசுர ...... முருகேசா


மணமொல்லை யாகி நகாகன
தனவல்லி மோகன மோடமர்
மகிழ்தில்லை மாநட மாடின ...... ரருள்பாலா


மருமல்லி மாவன நீடிய
பொழில் மெல்லி காவன மாடமை
வடமுல்லை வாயிலின் மேவிய ...... பெருமாளே.

அழகு நிறைந்த மாதர் (பெண்),
கடல் சூழ்ந்த பூமி (மண்), செல்வம் (பொன்) என்ற மூவாசைகளையும் கடந்தே கரை
ஏறுவதற்கான அறிவற்றவனாகிய அடியேனது துயரங்கள் நீங்குவதற்கு வேண்டிய
திருவருளை வலிய அருள்வாயோ? அல்லது நீண்ட காலத்துக்கு இன்னமும் என்னை இருள்
சூழ்ந்த வீடுகளான பிறவிகளிலே கொண்டு விட்டுவிடுமோ? உனது திருவருள் என்மீது
சிறிதும் இல்லையோ? உன்அடியார் கூட்டத்தை நான் அறியவில்லையே. சீரான வில்லாக
மகா மேருவைத் தாங்கிய* அழகிய தாயார்
பார்வதி தேவியுடன் கூடிய அண்ணாமலையாருக்கு குருநாதனே, திண்ணிய பெரும்
தவநிலையே பெறும்படியான நற்குணத்தோடு கூடிய பிறப்பில் கிடைத்த உடலாகிய
வீட்டை எனக்கு நீ தரும் நாள் எதுவெனக் கூறுவாயாக. நல்ல யோகிகளே பணிகின்ற
நற்குண சீலனே, சிவனே, சிவபிரானுக்கு குரு மூர்த்தியே, பாம்புகளை ஆபரணமாகப்
பூண்டவளும், பெரிய கணங்களாகிய பூதங்களோடு அமர்ந்த திருடியும், காட்டில்
சிவனுடன் நடனம் ஆடுகின்றவளும், மேலான மென்மையுடையவளுமான பரமேஸ்வரி
பார்வதிதேவி பெற்ற தலைவனே, நீரில் படரும் அல்லி, தாமரை, நீலோற்பலம் முதலிய
சிறந்த மலர்ப் பாணங்களை உடைய வில்லியாகிய அழகிய மன்மதனின் அன்னையும்,
பெருமை வாய்ந்த செல்வியுமாகிய லக்ஷ்மிதேவியின் மருமகனே, தெய்வ முருகேசனே,
திருமணம் விரைவில் புரிந்தவளும், பெருமை வாய்ந்த மலைக் கொடியும் ஆகிய
பார்வதிதேவி வசீகரத்துடன் அமர்ந்து மகிழும் சிதம்பரத்தில் பெரிய நடனம் ஆடிய
சிவபிரான் அருளிய பாலனே, வாசனைமிக்க மல்லிகை பெருங்காடாக வளர்ந்துள்ள
சோலையும், மென்மையான பூந்தோட்டங்களும், நீர்நிலைகளும் பக்கங்களில் சூழ்ந்து
அமைந்துள்ள வடமுல்லைவாயிலில்** மேவும் பெருமாளே.

* சிவபிரான் இடது கரத்தில் மேருவை வில்லாகத் தாங்கினார். அது தேவியின் கை.

** வடதிருமுல்லைவாயில் சென்னை அருகில் ஆவடிக்கு வடகிழக்கில் 3 மைலில் உள்ளது.


பாடல் 683 - வடதிருமுல்லைவாயில்


ராகம் -
...; தாளம் -



தான தானன தானன தந்தன
தான தானன தானன தந்தன
தான தானன தானன தந்தன ...... தனதான



சோதி மாமதி போல்முக முங்கிளர்
மேரு லாவிய மாமுலை யுங்கொடு
தூர வேவரு மாடவர் தங்கள்மு ...... னெதிராயே


சோலி பேசிமு னாளிலி ணங்கிய
மாதர் போலிரு தோளில்வி ழுந்தொரு
சூதி னால்வர வேமனை கொண்டவ ...... ருடன்மேவி


மோதி யேகனி வாயத ரந்தரு
நாளி லேபொருள் சூறைகள் கொண்டுபின்
மோன மாயவ மேசில சண்டைக ...... ளுடனேசி


மோச மேதரு தோதக வம்பியர்
மீதி லேமய லாகிம னந்தளர்
மோட னாகிய பாதக னுங்கதி ...... பெறுவேனோ


ஆதி யேயெனும் வானவர் தம்பகை
யான சூரனை மோதிய ரும்பொடி
யாக வேமயி லேறிமு னிந்திடு ...... நெடுவேலா


ஆயர் வாழ்பதி தோறுமு கந்துர
லேறி யேயுறி மீதளை யுங்கள
வாக வேகொடு போதநு கர்ந்தவன் ...... மருகோனே


வாதி னால்வரு காளியை வென்றிடு
மாதி நாயகர் வீறுத யங்குகை
வாரி ராசனு மேபணி யுந்திரு ...... நடபாதர்


வாச மாமல ரோனொடு செந்திரு
மார்பில் வீறிய மாயவ னும்பணி
மாசி லாமணி யீசர்ம கிழ்ந்தருள் ...... பெருமாளே.

ஒளி பொருந்திய சிறந்த நிலவைப்
போல முகமும், விளங்கும் மேரு மலை போன்ற பெரிய மார்பையும் கொண்டு, தூரத்தில்
வருகின்ற ஆண்களின் முன் எதிர்ப்பட்டு (தங்கள்) வியாபாரப் பேச்சைப் பேசி,
நீண்ட நாட்கள் பழகிய பெண்களைப் போல, அவர்களுடைய இரண்டு தோள்களிலும்
விழுந்து அணைத்து, ஒரு வஞ்சனைப் பேச்சினால் வரும்படி செய்து, (அவர்களைத்
தங்கள்) வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போய் அவர்களுடன் பொருந்தி இருந்து,
வலிய அணைத்து கொவ்வைக் கனி போன்ற வாய் இதழைத் தருகின்ற நாட்களில்
வந்தவர்களுடைய பொருளை எல்லாம் கொள்ளை அடித்து, பின்பு (அவருடைய பொருளைக்
கைப்பற்றிய பின்) மெளனமாக இருந்தும், வீணாகச் சில சண்டைகள் போட்டு இகழ்ந்து
பேசியும், மோசமே செய்கின்ற வஞ்சனை மிக்க துஷ்டர்கள் மேல் காம இச்சை கொண்டு
மனம் தளர்கின்ற மூடனும் பாதகனுமாகிய நான் நற்கதியைப் பெறுவேனோ? ஆதி
மூர்த்தியே என்று போற்றிய தேவர்களுடைய பகைவனாகிய சூரனைத் தாக்கி அவனை நன்கு
பொடியாகும்படிச் செய்து, மயிலில் ஏறி கோபித்த நெடிய வேலாயுதனே, இடையர்கள்
வாழ்ந்திருந்த ஊர்கள் தோறும் மகிழ்ந்து சென்று, உரலில் ஏறி உறி மேல் உள்ள
வெண்ணெயை திருட்டுத்தனமாகக் கொண்டு போய் வேண்டிய அளவு உண்டவனாகிய
(கண்ணனுடைய) மருகோனே, வாது செய்ய வந்த காளியை வென்ற ஆதி நாயகர், மேலிட்டு
விளங்கி கும்பிட்டு வீழும் கைகள் போல் வருகின்ற பெரும் அலைகளை உடைய கடல்
அரசனாகிய வருணனும் வணங்கும் அழகிய பாதங்களை உடைய சிவபெருமான், நறு மணமுள்ள
சிறந்த தாமரையில் வீற்றிருக்கும் பிரமனோடு, அழகிய லக்ஷ்மி மார்பில்
விளங்கும் திருமாலும் வணங்கும் (வடதிருமுல்லைவாயில் இறைவராகிய) மாசிலாமணி* ஈசர் மகிழ்ந்து அருளிய பெருமாளே.

*
வடதிருமுல்லைவாயிலில் இருக்கும் சிவபிரான் மாசிலாமணி என்ற நாமம்
படைத்தவர்.இத்தலம் சென்னைக்கு அருகில் உள்ள ஆவடிக்குப் பக்கத்தில்
இருக்கிறது.


பாடல் 684 - வடதிருமுல்லைவாயில்


ராகம் -
...; தாளம் -



தய்யதன தான தந்தன
தய்யதன தான தந்தன
தய்யதன தான தந்தன ...... தனதான



மின்னிடைக லாப தொங்கலொ
டன்னமயில் நாண விஞ்சிய
மெல்லியர்கு ழாமி சைந்தொரு ...... தெருமீதே


மெள்ளவுமு லாவி யிங்கித
சொல்குயில்கு லாவி நண்பொடு
வில்லியல்பு ரூர கண்கணை ...... தொடுமோக


கன்னியர்கள் போலி தம்பெறு
மின்னணிக லார கொங்கையர்
கண்ணியில்வி ழாம லன்பொடு ...... பதஞான


கண்ணியிலு ளாக சுந்தர
பொன்னியல்ப தார முங்கொடு
கண்ணுறுவ ராம லின்பமொ ...... டெனையாள்வாய்


சென்னியிலு டாடி ளம்பிறை
வன்னியும ராவு கொன்றையர்
செம்மணிகு லாவு மெந்தையர் ...... குருநாதா


செம்முகஇ ராவ ணன்தலை
விண்ணுறவில் வாளி யுந்தொடு
தெய்விகபொ னாழி வண்கையன் ...... மருகோனே


துன்னியெதிர் சூரர் மங்கிட
சண்முகம தாகி வன்கிரி
துள்ளிடவெ லாயு தந்தனை ...... விடுவோனே


சொல்லுமுனி வோர்த வம்புரி
முல்லைவட வாயில் வந்தருள்
துல்யபர ஞான வும்பர்கள் ...... பெருமாளே.

மின்னல் போன்ற இடையில் கலாபம்
என்னும் இடை அணியும் ஆடையின் முந்தானையும் விளங்க, அன்னமும், மயிலும்
வெட்கம் அடையும்படியான (சாயலும், நடை அழகும்) அவைகளின் மேம்பட்ட மாதர்
கூட்டம் ஒருமித்து ஒரு தெருவிலே மெதுவாக உலாவி, இன்பகரமான சொற்களை குயில்
போலக் கொஞ்சிப்பேசி விரைவில் நட்பு பாராட்டி, வில்லைப் போன்ற புருவமும்,
கண்கள் அம்பு போலவும் கொண்டு காமம் மிக்க பெண்கள் போல, மின்னல் போல் ஒளி
வீசும் அணி கலன்களையும், செங்கழு நீர் மாலையையும் பூண்டுள்ள இன்ப நலம்
பெறுகின்ற மார்பினை உடையவர்களாகிய விலைமாதர்களின் வலையில் நான் அகப்படாமல்,
அன்புடன் ஞான பதமான வலையினுள் அகப்படும்படி, அழகிய பொலிவு நிறைந்த தாமரைத்
திருவடிகளையும் கொடுத்து, கண் திருஷ்டி வராதபடி இனிமையுடன் என்னை
ஆண்டருளுக. தலையில் ஊடுருவும் இளம் பிறையையும், வன்னியையும், பாம்பையும்,
கொன்றை மலரையும் கொண்டவர், சிவந்த ரத்தினங்கள் விளங்கும் சடையர் எனது
தந்தையாகிய சிவபெருமானின் குரு நாதனே, (ரத்தத்தால்) செந்நிறம் காட்டிய
ராவணனின் தலை ஆகாயத்தில் தெறித்து விழும்படி வில்லினின்றும் அம்பைச்
செலுத்தியவனும், தெய்விக பொன் மயமான (சுதர்ஸன) சக்கரத்தை ஏந்திய அழகிய
கையனுமாகிய திருமாலின் மருகனே, நெருங்கி எதிர்த்து வந்த அசுரர்கள் அழிய,
ஆறு திருமுகங்களுடன் விளங்கி, வலிய கிரெளஞ்ச மலை, ஏழு மலைகள் ஆகியவை பதை
பதைத்து மாள, வேலாயுதத்தைச் செலுத்தியவனே, புகழ்பெற்ற (பிருகு, வசிஷ்டர்
முதலிய) முனிவர்கள் தவம் செய்த வடதிருமுல்லை வாயிலில்* வந்தருள் பாலிக்கும், சுத்தமான மேலான ஞானமுள்ள தேவர்களின் பெருமாளே.

* வடதிருமுல்லைவாயில் சென்னை அருகில் ஆவடிக்கு வடகிழக்கில் 3 மைலில் உள்ளது.
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

அருணகிரிநாதர் நூல்கள் (Arunagirinathar Books) Empty Re: அருணகிரிநாதர் நூல்கள் (Arunagirinathar Books)

Post by மாலதி December 13th 2011, 08:36

பாடல் 685 - திருவலிதாயம்


ராகம் -
ஷண்முகப்ரியா
தாளம் - அங்கதாளம் - 8

தக-1, தகிட-1 1/2, தகிட-1 1/2,
தக-1, தகதிமிதக-3



தனதய்ய தானதன ...... தனதான



மருமல்லி யார்குழலின் ...... மடமாதர்


மருளுள்ளி நாயடிய ...... னலையாமல்


இருநல்ல வாகுமுன ...... தடிபேண


இனவல்ல மானமன ...... தருளாயோ


கருநெல்லி மேனியரி ...... மருகோனே


கனவள்ளி யார்கணவ ...... முருகேசா


திருவல்லி தாயமதி ...... லுறைவோனே


திகழ்வல்ல மாதவர்கள் ...... பெருமாளே.

வாசனை வீசும் மல்லிகை மலர்
நிறைந்த கூந்தலையுடைய இளம் பெண்களை காம மயக்கத்தால் நினைந்து நினைந்து
அடிநாயேன் அலைவுறாமல், நன்மை நல்கும் உன் இரண்டு திருவடிகளை விரும்பிப்
போற்ற தக்கதான பெருமையும் மானமும் உள்ள மனதினை அருளமாட்டாயோ?
கருநெல்லிக்காய் போல பச்சையும் கருப்பும் கலந்த நிறத்து மாலின் மருகனே,
பெருமை வாய்ந்த வள்ளி தேவியின் கணவனே, முருகேசா, திருவலிதாயம்* என்ற தலத்தில் வீற்றிருப்பவனே, விளங்குகின்ற பெருந்தவர்கள் போற்றும் பெருமாளே.

* திருவலிதாயம் இப்போது 'பாடி' எனப்படும். சென்னைக்கு அருகே வில்லிவாக்கத்திற்கு 2 மைல் மேற்கே உள்ளது.


பாடல் 686 - திருவொற்றியூர்


ராகம் - ...;
தாளம் -



தனதனன தான தனதனன தான
தனதனன தான ...... தனதான



கரியமுகில் போலு மிருளளக பார
கயல்பொருத வேலின் ...... விழிமாதர்


கலவிகளில் மூழ்கி ம்ருகமதப டீர
களபமுலை தோய ...... அணையூடே


விரகமது வான மதனகலை யோது
வெறியனென நாளு ...... முலகோர்கள்


விதரணம தான வகைநகைகள் கூறி
விடுவதன்முன் ஞான ...... அருள்தாராய்


அரிபிரமர் தேவர் முனிவர்சிவ யோகர்
அவர்கள்புக ழோத ...... புவிமீதே


அதிகநட ராஜர் பரவுகுரு ராஜ
அமரர்குல நேச ...... குமரேசா


சிரகரக பாலர் அரிவையொரு பாகர்
திகழ்கநக மேனி ...... யுடையாளர்


திருவளரு மாதி புரியதனில் மேவு
ஜெயமுருக தேவர் ...... பெருமாளே.

கரு நிறமான மேகத்தைப் போன்று
இருண்ட கூந்தல் பாரத்தையும், கயல் மீனுக்கு இணையான வேல் போன்ற கண்களையும்
உடைய விலைமாதர்களின் காமப் புணர்ச்சியில் தோய்ந்து, கஸ்தூரி, சந்தனம்
இவைகளின் கலவையைப் பூசியுள்ள மார்பகங்களில் படிய, படுக்கையில் காம
சம்பந்தமான இன்பரச சாஸ்திரங்களைப் படிக்கின்ற வெறி கொண்டவன் இவன் என்று
என்னை நாள் தோறும் உலகத்தினர் சுருக்கு என்று தைக்கும்படியாக பரிகாசப்
பேச்சுக்ளைப் பேசி இகழ்வதற்கு முன்னர் ஞான கடாட்சத்தைத் தந்து அருள்வாயாக.
திருமால், நான்முகன், தேவர்கள், முனிவர்கள், சிவ யோகிகள் ஆகிய இவர்கள் உனது
திருப்புகழைப் பரவி ஓத, பூமியில் மேம்பட்டு விளங்கும் நடராஜனாகிய சிவ
பெருமான் போற்றும் குரு ராஜ மூர்த்தியே, தேவர் குலத்துக்கு அன்பனே,
குமரேசனே, பிரம கபாலத்தைக் கையில் ஏந்தியவரும், உமா தேவியை தனது இடது
பக்கத்தில் வைத்திருப்பவரும், விளங்கும் பொன் நிறமான மேனியை உடையவரும் ஆகிய
சிவ பெருமான் வீற்றிருக்கும் செல்வம் கொழிக்கும் ஆதிபுரி எனப்படும்
திருவொற்றியூரில்* விளங்கும் வெற்றி முருகனே, தேவர்கள் பெருமாளே.

* திருவொற்றியூர் சென்னைக்கு வடக்கே 3 மைலில் உள்ளது.


பாடல் 687 - திருவொற்றியூர்


ராகம் -
தன்யாஸி
தாளம் - அங்கதாளம் - 5 1/2

தகதிமிதக-3, தகிட-1 1/2, தக-1



தனதத்தன தானதன தனதத்தன தானதன
தனதத்தன தானதன ...... தனதானா



சொருபப்பிர காசவிசு வருபப்பிர மாகநிச
சுகவிப்பிர தேசரச ...... சுபமாயா


துலியப்பிர காசமத சொலியற்றர சாசவித
தொகைவிக்ரம மாதர்வயி ...... றிடையூறு


கருவிற்பிற வாதபடி யுருவிற்பிர மோதஅடி
களையெத்திடி ராகவகை ...... யதின்மீறிக்


கருணைப்பிர காசவுன தருளுற்றிட ஆசில்சிவ
கதிபெற்றிட ரானவையை ...... யொழிவேனோ


குருகுக்குட வாரகொடி செருவுக்கிர ஆதபயில்
பிடிகைத்தல ஆதியரி ...... மருகோனே


குமரப்பிர தாபகுக சிவசுப்பிர மாமணிய
குணமுட்டர வாவசுரர் ...... குலகாலா


திருவொற்றியு றாமருவு நகரொற்றியுர் வாரிதிரை
யருகுற்றிடு மாதிசிவ ...... னருள்பாலா


திகழுற்றிடு யோகதவ மிகுமுக்கிய மாதவர்க
ளிதயத்திட மேமருவு ...... பெருமாளே.

பிரகாசமான உருவத்தை உடையவனே,
சராசரம் யாவையும் கொண்ட பேருருவனே, பிரம்மப் பொருளாக நின்று, உண்மையான
சுகத்தைத் தருபவனே, அந்தணரின் தேஜஸை உடையவனே, இன்ப சுபப் பொருளே, அழியாத
சுத்தப் பிரகாசனே, மதங்களின் தொந்தரவைக் கடந்த இன்பம் கூடியவனே, பலவகையான
பராக்கிரமத்தை உடையவனே, மாதரின் வயிற்றிடையே ஊறும் கருவில் பிறவாதபடி, உன்
திருவுருவில் விரும்பத்தக்க திருவடிகளைப் போற்றும் கீத வகைகளில்
மேம்பட்டவனாய் யான் ஆகி, கருணை ஒளிப்பிழம்பே, உன் திருவருள் கூடுவதால்
குற்றமற்ற சிவகதியை யான் பெற்று, துன்பங்கள் யாவையும் கடக்க மாட்டேனோ?
நிறமுள்ள சேவல் நிறைந்து விளங்கும் கொடியை உடையவனே, போரில் உக்கிரமாக,
வெயில் ஒளி வீசும் வேலினை பிடித்துள்ள திருக்கரங்களை உடைய ஆதியே,
திருமாலின் மருகனே, குமரனே, கீர்த்தி உள்ளவனே, குகனே, மிகத் தூய்மையான
பேரொளியோனே, குணக் குறைவுள்ளவரும் ஆசை மிகுந்தவருமான அசுரர்களின்
குலத்துக்கே யமனாக நின்றவனே, லக்ஷ்மி சேர்ந்து பொருந்தி இருக்கும் நகரமான
திருவொற்றியூரில்* கடல் அலைக்குச்
சமீபத்தில் இருக்கும் ஆதிசிவன் அருளிய குழந்தையே, விளக்கம் கொண்ட
யோகத்திலும், தவத்திலும் மிக்க சிறப்பு அடைந்த மகா தவசிகளின் நெஞ்சம்
என்னும் இடத்திலே வீற்றிருக்கும் பெருமாளே.

* திருவொற்றியூர் சென்னைக்கு வடக்கே 3 மைலில் உள்ளது.


பாடல் 688 - திருமயிலை


ராகம் - ராமப்ரியா
; தாளம் - ஆதி



தனன தனதனன தனன தனதனன
தனன தனதனன ...... தனதான



அமரு மமரரினி லதிக னயனுமரி
யவரும் வெருவவரு ...... மதிகாளம்


அதனை யதகரண விதன பரிபுரண
மமைய னவர்கரண ...... அகிலேச


நிமிர வருள்சரண நிபிட மதெனவுன
நிமிர சமிரமய ...... நியமாய


நிமிட மதனிலுண வலசி வசுதவர
நினது பதவிதர ...... வருவாயே


சமர சமரசுர அசுர விதரபர
சரத விரதஅயில் ...... விடுவோனே


தகுர்த தகுர்ததிகு திகுர்த திகுர்ததிகு
தரர ரரரரிரி ...... தகுர்தாத


எமர நடனவித மயிலின் முதுகில்வரு
மிமைய மகள்குமர ...... எமதீச


இயலி னியல்மயிலை நகரி லினிதுறையு
மெமது பரகுரவ ...... பெருமாளே.

சிறந்த தேவர்களில்
மேம்பட்டவனான இந்திரன், பிரம்மா, திருமால் ஆகியோர் அஞ்சும்படி வந்த ஆலகால
விஷத்தினை (அடக்குவதற்காக) மனச் சஞ்சலத்தை ஹதம் செய்பவனே, சிந்தை நிறைந்த
சாந்தர் மனத்தில் இருப்பவனே, அகில உலகிற்கும் ஈசனே, எம் தாழ்வு நீங்கி யாம்
நிமிர்ந்திட உன் திருவடி அருளவேண்டும், (அவ்விஷம்) எம்மை நெருங்கி
வருகிறது, என்றெல்லாம் எல்லா தேவர்களும் முறையிட, நினைக்கின்ற
மாத்திரத்திலேயே, வாயு வேகத்தில், (சரணடைந்தவர்களைக் காப்பதுதான்)
கடமையென்று நிமிஷ நேரத்தில் (அந்த விஷத்தை) உண்டருளிய சிவனுடைய சிரேஷ்டமான
குமாரனே, உனது குகசாயுஜ்ய பதவியைத் தந்திட வரவேண்டும். ஒற்றுமையான
பெருந்தன்மையுள்ள தேவர்களுக்கு பகைவர்களாகிய அசுரர்கள் மேல் சத்தியமான
ஆக்ஞாசக்தி வேலை விடுவோனே, (என்னும் அதே ஒலியில்) (முருகன் அடியாராகிய)
எம்மவருக்கு ஏற்ற நடனவகைகள் செய்யும் மயிலின் முதுகின் மேல் வருகின்றவனே,
இமயராஜன் மகள் பார்வதி பெற்ற குமரா, எம் இறைவனே, தகுதி வாய்ந்துள்ள
திருமயிலை* நகரிலே இன்பமாக வாழும் எங்கள் மேலான குருதேவப் பெருமாளே.

* திருமயிலை (மயிலாப்பூர்) தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையின் மையத்தில் இருக்கிறது.


பாடல் 689 - திருமயிலை


ராகம் -....;
தாளம் -



தனனத் தனதன ...... தனதான



அயிலொத் தெழுமிரு ...... விழியாலே


அமுதொத் திடுமரு ...... மொழியாலே


சயிலத் தெழுதுணை ...... முலையாலே


தடையுற் றடியனு ...... மடிவேனோ


கயிலைப் பதியரன் ...... முருகோனே


கடலக் கரைதிரை ...... யருகேசூழ்


மயிலைப் பதிதனி ...... லுறைவோனே


மகிமைக் கடியவர் ...... பெருமாளே.

வேலை நிகர்த்து எழுந்துள்ள
இரண்டு கண்களாலும், அமுதத்துக்கு ஒப்பான அருமையான பேச்சினாலும், மலைக்கு
இணையாக எழுந்துள்ள இரு மார்பகங்களாலும், வாழ்க்கை தடைப்பட்டு, அடியேனும்
இறந்து படுவேனோ? கயிலைப்பதியில் வீற்றிருக்கும் சிவபிரானின் குழந்தை
முருகனே, கடலின் கரையும், அலையும் அருகிலே சூழ்ந்திருக்கும்
திருமயிலைப்பதியில்* வீற்றிருப்பவனே, பெருமை பொருந்திய அடியவர்களின் பெருமாளே.

* திருமயிலை (மயிலாப்பூர்) தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையின் மையத்தில் இருக்கிறது.


பாடல் 690 - திருமயிலை



ராகம் -
பூர்வி கல்யாணி
தாளம் - அங்கதாளம் - 10 1/2

தகிட-1 1/2, தகதிமி-2

தகதிமி-2, தகதிமிதக-3



தனன தானன தானன தந்தத் ...... தனதான



அறமி லாவதி பாதக வஞ்சத் ...... தொழிலாலே


அடிய னேன்மெலி வாகிம னஞ்சற் ...... றிளையாதே


திறல்கு லாவிய சேவடி வந்தித் ...... தருள்கூடத்


தினமு மேமிக வாழ்வுறு மின்பைத் ...... தருவாயே


விறல்நி சாசரர் சேனைக ளஞ்சப் ...... பொரும்வேலா


விமல மாதபி ராமித ருஞ்செய்ப் ...... புதல்வோனே


மறவர் வாணுதல் வேடைகொ ளும்பொற் ...... புயவீரா


மயிலை மாநகர் மேவிய கந்தப் ...... பெருமாளே.

தர்மமே இல்லாத மிக்க பாவம்
நிறைந்த வஞ்சனை கொண்ட செயல்களாலே, அடியவனாகிய நான் உடல் தளர்ச்சி அடைந்தும்
மனம் மட்டும் கொஞ்சமும் சோர்வு அடையாமல், வெற்றி விளங்கும் உனது செவ்விய
பாதமலர்களை வணங்கிப் போற்றி உன் திருவருள் கிடைக்குமாறு நாள்தோறும் நல்ல
வாழ்வு ஏற்படும் இன்பத்தைத் தந்தருள்வாயாக. வீரமுள்ள அசுரர்களின் படைகள்
பயப்படும்படியாகப் போர் புரிந்த வேலனே, பரிசுத்தமானவனே, தாயார் அபிராமி
தந்த செந்நிறத்துக் குழந்தையே, வேடர்குலத்தில் ஒளிபடைத்த நெற்றியுள்ள
வள்ளிமீது வேட்கை கொண்ட அழகிய தோள்கள் அமைந்த வீரனே, திருமயிலை* மாநகரில் வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே.

* திருமயிலை (மயிலாப்பூர்) தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையின் மையத்தில் இருக்கிறது.


பாடல் 691 - திருமயிலை


ராகம் - கீரவாணி

தாளம் - அங்தாளம் - 7 1/2

தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2



தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன ...... தனதான



இகல வருதிரை பெருகிய சலநிதி
நிலவு முலகினி லிகமுறு பிறவியி
னினிமை பெறவரு மிடருறு மிருவினை ...... யதுதீர


இசையு முனதிரு பதமலர் தனைமன
மிசைய நினைகிலி யிதமுற வுனதரு
ளிவர வுருகிலி அயர்கிலி தொழுகிலி ...... உமைபாகர்


மகிழு மகவென அறைகிலி நிறைகிலி
மடமை குறைகிலி மதியுணர் வறிகிலி
வசன மறவுறு மவுனமொ டுறைகிலி ...... மடமாதர்


மயம தடரிட இடருறு மடியனு
மினிமை தருமுன தடியவ ருடனுற
மருவ அருள்தரு கிருபையின் மலிகுவ ...... தொருநாளே


சிகர தனகிரி குறமக ளினிதுற
சிலத நலமுறு சிலபல வசனமு
திறைய அறைபயி லறுமுக நிறைதரு ...... மருணீத


சிரண புரணவி தரணவி சிரவண
சரணு சரவண பவகுக சயனொளி
திரவ பரவதி சிரமறை முடிவுறு ...... பொருணீத


அகர உகரதி மகரதி சிகரதி
யகர அருளதி தெருளதி வலவல
அரண முரணுறு மசுரர்கள் கெடஅயில் ...... விடுவோனே


அழகு மிலகிய புலமையு மகிமையும்
வளமு முறைதிரு மயிலையி லநுதின
மமரு மரகர சிவசுத அடியவர் ...... பெருமாளே.

மாறுபட்டு எழும் அலைகள்
பெருகிய கடல்கள் சூழ்ந்த இவ்வுலகில் இம்மையிலுள்ள பிறப்பின் இன்பத்தைப்
பெறவும், வருகின்ற துன்பத்தோடு மோதும் நல்வினை, தீவினை ஆகிய இருவினைகள்
நீங்கவும், இணைந்த உன்னிரு பாத மலர்களை மனம் பொருந்த நினையாதவன் யான்.
இன்பமுற உன் திருவருள் கைகூட உருகித் துதியாதவன் யான். பக்தியால் தளர்ச்சி
அடையாதவனும், வணங்காதவனும் யான். உமாதேவியைப் பாகத்தில் வைத்த சிவபிரான்
மகிழ்கின்ற குழந்தையே என்று கூறாதவன் யான். திருப்தியே இல்லாத, பேதைமை
குறையாதவன் யான். அறிவும், தெளிவும் அறியாதவன் யான். பேச்சற்றுப்போய் மெளன
நிலையினில் இருக்காதவன் யான். அழகிய பெண்களின் மயக்கும் எழிலானது மனத்தில்
இடம் பிடிக்க, அதனால் துன்பம் அடைகிற அடியேனும், இன்பத்தை நல்கும் உன்
அடியார்களுடன் கூடிப் பொருந்தும் திருவருளைத் தரும் உன் கிருபைக்கு ஆளாகும்
ஒரு நாளும் கிடைக்குமோ? உயர்ந்த மார்பினளான குறப்பெண் வள்ளி இனிமை
அடையுமாறு தோழன் போன்று அவளிடம் நன்மைமிக்க சில பல வார்த்தைகளை அமுதமென
அள்ளி வீசி, பேச்சுப் பயின்ற ஆறுமுக வேளே, நிறைந்து விளங்கும் அருள் கொண்ட
நீதிமானே, பெருமை நிறைந்த பூரண நிறைவே, தயாள குணமுடையோனே, நிரம்பிய கேள்வி
உடையவனே, அடைக்கலம் புகுதற்குரிய இறைவனே, சரவணப்பொய்கையில் தோன்றியவனே,
குகனே, சிவபிரானின் ஒளியின் சாரமே, பரனே, அதிக மேன்மை உடையோனே, வேதத்தின்
முடிவான பொருளாக விளங்கும் நீதியனே, அகரம் போன்ற முதற்பொருளே, உகர
சிவசக்தியாக விளங்கும் நல்லறிவே, மமகாரமாகிய ஆணவத்தைத் தகிப்பவனே, சிவமாகிய
தூய அறிவே, யகரமாகிய ஜீவாத்மாவில் விளங்குபவனே, அதிகமான அருளே, மிகுந்த
ஞானமே, மிகுந்த வல்லமை படைத்த காவற் கோட்டையில் இருந்த பகைமை பூண்ட
அசுரர்கள் அழியும்படி வேலைச் செலுத்தியவனே, அழகும், விளங்கும் கல்வி
ஞானமும், பெருமையும், செழிப்பும் நிலைத்த மயிலாப்பூரில் நாள் தோறும்
வீற்றிருக்கும், ஹர ஹர கோஷத்துக்கு உரியவருமான, சிவபிரானின் மைந்தனே,
அடியவர்கள்தம் பெருமாளே.

* திருமயிலை (மயிலாப்பூர்) தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையின் மையத்தில் இருக்கிறது.


பாடல் 692 - திருமயிலை


ராகம் -....;
தாளம் -



தனதனன தான தந்த தனதனன தான தந்த
தனதனன தான தந்த ...... தனதான



இணையதில தாமி ரண்டு கயல்களென வேபு ரண்டு
இருகுழையின் மீத டர்ந்து ...... அமராடி


இலகுசிலை வேள்து ரந்த கணையதிலு மேசி றந்த
இருநயனர் வாரி ணங்கு ...... மதபாரப்


பணைமுலையின் மீத ணிந்த தரளமணி யார்து லங்கு
பருவரதி போல வந்த ...... விலைமானார்


பயிலுநடை யாலு ழன்று அவர்களிட மோக மென்ற
படுகுழியி லேம யங்கி ...... விழலாமோ


கணகணென வீர தண்டை சரணமதி லேவி ளங்க
கலபமயில் மேலு கந்த ...... குமரேசா


கறுவிவரு சூர னங்க மிருபிளவ தாக விண்டு
கதறிவிழ வேலெ றிந்த ...... முருகோனே


மணிமகுட வேணி கொன்றை அறுகுமதி யாற ணிந்த
மலையவிலி னாய கன்றன் ...... ஒருபாக


மலையரையன் மாது தந்த சிறுவனென வேவ ளர்ந்து
மயிலைநகர் வாழ வந்த ...... பெருமாளே.

தமக்கு ஒப்பில்லாதனவான இரண்டு
கயல் மீன்கள் என்னும்படி புரண்டு இரண்டு காதுகளின் மேலே நெருங்கிப் போர்
தொடுத்து, விளங்கும் வில்லை உடைய மன்மதன் செலுத்திய மலர் அம்பைக்
காட்டிலும் சிறந்த இரு கண்களை உடையவர்களும், கச்சணிந்த அதிக பாரமான பெரும்
மார்பகங்களின் மீது முத்து மாலை அணிந்தவர்களும், விளங்கும் இளமை வாய்ந்த
(மன்மதனின் மனைவி) ரதியைப் போல வந்தவர்களும் ஆகிய விலைமாதர்கள்
மேற்கொள்ளும் தொழிலில் நான் சுழன்று அலைந்து, அவர்கள் மீது காம இச்சை
என்னும் பெருங்குழியிலே மயங்கி விழலாமோ? கண கண என்ற ஓசையோடு ஒலிக்கும் வீர
தண்டைகள் திருவடிகளில் விளங்க, தோகை மயிலின் மேல் மகிழ்ந்து ஏறும் குமரேசா,
கோபித்து வந்த சூரனுடைய உடல் இரண்டு பிளவாகப் பிரியும்படிச் செய்து, அவன்
அலறி விழும்படி வேலாயுதத்தைச் செலுத்திய முருகனே, அழகிய முடியாகிய சடையில்,
கொன்றை, அறுகம்புல், பிறைச் சந்திரன், கங்கை இவற்றை அணிந்துள்ள, (மேரு)
மலையையே வில்லாகக் கொண்ட தலைவரான சிவபெருமானது ஒரு பாகத்தில் உள்ள, மலை
அரசனாகிய பர்வத ராஜனுடைய மகளான, பார்வதியின் செல்லக் குழந்தை என்னும்படி
வளர்ந்து, திருமயிலைத்தலம் சிறப்புடன் வாழும்படியாக அங்கு வீற்றிருக்கும்
பெருமாளே.

* திருமயிலை (மயிலாப்பூர்) தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையின் மையத்தில் இருக்கிறது.


பாடல் 693 - திருமயிலை


ராகம் - ....;
தாளம் -



தனதனன தான தத்த தனதனன தான தத்த
தனதனன தான தத்த ...... தனதான



களபமணி யார முற்ற வனசமுலை மீது கொற்ற
கலகமத வேள்தொ டுத்த ...... கணையாலுங்


கனிமொழிமி னார்கள் முற்று மிசைவசைகள் பேச வுற்ற
கனலெனவு லாவு வட்ட ...... மதியாலும்


வளமையணி நீடு புஷ்ப சயனஅணை மீது ருக்கி
வனிதைமடல் நாடி நித்த ...... நலியாதே


வரியளியு லாவு துற்ற இருபுயம ளாவி வெற்றி
மலரணையில் நீய ணைக்க ...... வரவேணும்


துளபமணி மார்ப சக்ர தரனரிமு ராரி சர்ப்ப
துயிலதர னாத ரித்த ...... மருகோனே


சுருதிமறை வேள்வி மிக்க மயிலைநகர் மேவு முக்ர
துரகதக லாப பச்சை ...... மயில்வீரா


அளகைவணி கோர்கு லத்தில் வனிதையுயிர் மீள ழைப்ப
அருள்பரவு பாடல் சொற்ற ...... குமரேசா


அருவரையை நீறெ ழுப்பி நிருதர்தமை வேர றுத்து
அமரர்பதி வாழ வைத்த ...... பெருமாளே.

கலவைச் சாந்தும் மணி மாலையும்
கொண்ட, தாமரை மொட்டுப் போன்ற மார்பின் மீது, வீரம் வாய்ந்தவனும்,
குழப்பத்தை உண்டு பண்ணும் காம விகாரம் தருபவனுமாகிய மன்மதன் செலுத்திய
அம்புகளாலும், இனிமையான மொழிகளை உடைய மின்னல் போன்ற ஒளி கொண்ட மாதர்கள்
அனைவரும் வேண்டுமென்றே பழிச் சொற்களைப் பேசுவதாலும், சேர்ந்துள்ள
நெருப்புப் போல உலவி வரும் பூரண நிலவாலும், செழுமை கொண்ட, விரிந்த
மலர்களால் அமைந்த படுக்கையின் மெத்தை மீது உருகும் இப்பெண் மடலேற*
விரும்பி நாள் தோறும் துன்பம் அடையாமல், ரேகைகள் கொண்ட வண்டுகள் உலவி
நெருங்கியுள்ள (மாலையை அணிந்த) இரண்டு புயங்களாலும் கலந்து, அவளது எண்ணம்
வெற்றி பெற இந்த மலர்ப்படுக்கையில் நீ அணைக்க வர வேண்டுகின்றேன். துளசி
மாலை அணிந்த மார்பன், சக்கரம் தரித்தவன், விஷ்ணு, முராசுரனைக் கொன்ற
முராரி, ஆதிசேஷன் என்னும் பாம்பின்மேல் துயில் கொள்ளுபவன் விரும்புகின்ற
மருகனே, வேதம், உபநிஷதம், வேள்வி இவை நிரம்பிய திருமயிலையில்**
வீற்றிருப்பவனும், உக்ரமான குதிரையாகிய, தோகையுடைய பச்சை மயில் ஏறும்
வீரனே, அளகாபுரி நகரத்துச் செல்வம் கொண்ட செட்டிக் குலத்தில் பிறந்த
(பூம்பாவை என்னும்) பெண்ணின் உயிரை மீளும்படி அழைக்க வேண்டி இறைவன்
திருவருள் பரவிய பதிகத்தை (ஞான சம்பந்தராக அவதரித்துச்) சொன்ன குமரேசனே,
அருமையான கிரெளஞ்ச மலையைத் தூளாக்கி, அசுரர்களை வேரோடு அழித்து, தேவர்களைப்
பொன்னுலகில் வாழ வைத்த பெருமாளே.

*
கடவுள் சம்பந்தமாக மட்டும் பெண்பாலோர் மடலேறுதல் கூறப்படும்.மடல் ஏறுதல்:
காமத்தால் வாடும் தலைவன் பனங்கருக்கால் குதிரை முதலிய வடிவங்கள் செய்து
அவற்றின் மேலே ஏறி ஊரைச் சுற்றி, தன் காதலை ஊரிலுள்ள பிறருக்குத்
தெரிவிப்பான்.

** திருமயிலை (மயிலாப்பூர்)
தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையின் மையத்தில் இருக்கிறது.இப்பாடல்
அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் நாயகியின் நற்றாய் கூறுவதுபோல
அமைந்தது.மன்மதன், மலர்ப் பாணங்கள், நிலவு, ஊராரின் வசைப் பேச்சு முதலியவை
தலைவனின் பிரிவை மிகவும் அதிகமாக்கும் பொருட்கள்.


பாடல் 694 - திருமயிலை


ராகம் - கல்யாண
வஸந்தம்
தாளம் - அங்கதாளம் - 5 1/2

தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதகிட-2
1/2



தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான



கடிய வேக மாறாத விரத சூத ராபாதர்
கலக மேசெய் பாழ்மூடர் ...... வினைவேடர்


கபட வீன ராகாத இயல்பு நாடி யேநீடு
கனவி கார மேபேசி ...... நெறி பேணாக்


கொடிய னேது மோராது விரக சால மேமூடு
குடிலின் மேவி யேநாளு ...... மடியாதே


குலவு தோகை மீதாறு முகமும் வேலு மீராறு
குவளை வாகும் நேர்காண ...... வருவாயே


படியி னோடு மாமேரு அதிர வீசி யேசேட
பணமு மாட வேநீடு ...... வரைசாடிப்


பரவை யாழி நீர்மோத நிருதர் மாள வானாடு
பதிய தாக வேலேவு ...... மயில்வீரா


வடிவு லாவி யாகாச மிளிர்ப லாவி னீள்சோலை
வனச வாவி பூவோடை ...... வயலோடே


மணிசெய் மாட மாமேடை சிகர மோடு வாகான
மயிலை மேவி வாழ்தேவர் ...... பெருமாளே.

கடுமையான கோபம் குறையாத
சங்கற்பங்களை உடைய வஞ்சகர்கள், கீழ்க்குணத்தவர்கள், கலகத்தையே செய்கின்ற
பாழான மூடர்கள், தீவினையையே விரும்புவோர்கள், வஞ்சனை கொண்ட இழிந்தவர்கள்,
(இத்தன்மையருடைய) நல்லது ஆகாத முறைகளை விரும்பியே, மிக மோசமான
அவலட்சணங்களையே பேசி நன்னெறியைப் போற்றாத கொடியவனாகிய நான் எதையும்
ஆராய்ந்து பார்க்காமல், வெறும் ஆசை ஜாலமே மூடியுள்ள இந்தக் குடிசையாகிய
உடலில் இருந்து கொண்டே தினந்தோறும் அழிவுறாமல், விளங்கும் மயிலின் மீது
ஆறுமுகங்களும், வேலும், பன்னிரண்டு குவளை மலர்மாலை அணிந்த தோள்களும்,
அடியேன் நேரில் கண்டு தரிசிக்குமாறு நேர் எதிரே வருவாயாக. பூமியோடு, பெரிய
மேருமலை அதிரும்படியாகச் செலுத்தி, ஆதிசேஷனின் பணாமகுடங்கள் அசைவுறவும்,
பெருமலைகளை மோதி, பரந்த கடலில் நீர் கொந்தளித்து மோதவும், அசுரர்கள்
இறக்கவும், தேவர்களின் நாடு செழிப்பான நகராகவும், வேலாயுதத்தைச் செலுத்திய
மயில் வீரனே, அழகோடு வளர்ந்து ஆகாயம் வரை ஓங்கி மிளிரும் பலா மரங்களின்
பெரிய சோலைகளும், தாமரைக் குளமும், நீர்ப் பூக்கள் நிறைந்த ஓடைகளும்,
வயல்களும், அழகிய மாடங்களும், சிறந்த மேடைகளும், கோபுரங்களும் ஒன்று கூடி
விளங்கும் மயிலாப்பூரில்* வீற்றிருந்து வாழும் தேவர் பெருமாளே.

* திருமயிலை (மயிலாப்பூர்) தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையின் மையத்தில் இருக்கிறது.


பாடல் 695 - திருமயிலை


ராகம் -
சுபபந்துவராளி
தாளம் - கண்ட ஏகம் - 5



தனனா தனனாதன தனனா தனனாதன
தனனா தனனாதன ...... தனதான



திரைவார் கடல்சூழ்புவி தனிலே யுலகோரொடு
திரிவே னுனையோதுதல் ...... திகழாமே


தினநா ளுமுனேதுதி மனதா ரபினேசிவ
சுதனே திரிதேவர்கள் ...... தலைவாமால்


வரைமா துமையாள் தரு மணியே குகனேயென
அறையா வடியேனுமு ...... னடியாராய்


வழிபா டுறுவாரொடு அருளா தரமாயிடு
மகநா ளுளதோசொல ...... அருள்வாயே


இறைவா ரணதேவனு மிமையோ ரவரேவரு
மிழிவா கிமுனேயிய ...... லிலராகி


இருளா மனதேயுற அசுரே சர்களேமிக
இடரே செயவேயவ ...... ரிடர்தீர


மறமா வயிலேகொடு வுடலே யிருகூறெழ
மதமா மிகுசூரனை ...... மடிவாக


வதையே செயுமாவலி யுடையா யழகாகிய
மயிலா புரிமேவிய ...... பெருமாளே.

அலைகள் கொண்ட நீண்ட கடலால்
சூழப்பட்ட பூமியிலே உலகத்தாரோடு உன்னை ஓதிப் புகழ்தல் இன்றித்
திரிகின்றேன். நாள்தோறும் முன்னதாகத் துதிக்கும் மனநிலை நிரம்பப் பெற்று,
அப்படிப்பட்ட மனம் வாய்த்த பின்னர், சிவகுமாரனே, மும்மூர்த்திகளின் தலைவனே,
இமயமலை மாதரசி உமையாள் பெற்ற மணியே, குகனே என்று ஓதி அடியேனும், உன்
தொண்டர்களாய் வழிபடும் அடியார்களோடு அருளன்பு கூடியவனாக ஆகின்ற விசேஷமான
நாளும் எனக்கு உண்டோ? உன் நாமங்களைச் சொல்ல நீ அருள் புரிவாயாக. தலைமையான
யானை ஐராவதத்தின் தேவனாம் இந்திரனும், ஏனைய தேவர்கள் அனைவரும், தாழ்ந்த
நிலையை அடைந்து, முன்னர் தமது தகுதியை இழந்தவராகி, மயக்க இருளடைந்த
மனத்தினராகி, அசுரத் தலைவர்கள் மிகவும் துன்பங்கள் செய்யவே, அந்த தேவர்களது
துயரம் நீங்க, வீரமிக்க சிறந்த வேலினைக் கொண்டு உடல் இரண்டு கூறுபட,
ஆணவமிக்க சூரனை, அவன் மாமரமாக உருமாறினும், அழித்து வதை செய்த பெரும்
வலிமையை உடையவனே, அழகு வாய்ந்த மயிலாப்பூர்* தலத்தில் வாழ்கின்ற பெருமாளே.

* திருமயிலை (மயிலாப்பூர்) தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையின் மையத்தில் இருக்கிறது.


பாடல் 696 - திருமயிலை


ராகம் -....;
தாளம் -



தனதன தனதன தாந்த தானன
தனதன தனதன தாந்த தானன
தனதன தனதன தாந்த தானன ...... தனதான



நிரைதரு மணியணி யார்ந்த பூரித
ம்ருகமத களபகில் சாந்து சேரிய
இளமுலை யுரமிசை தோய்ந்து மாமல ...... ரணைமீதே


நெகிழ்தர அரைதுகில் வீழ்ந்து மாமதி
முகம்வெயர் வெழவிழி பாய்ந்து வார்குழை
யொடுபொர இருகர மேந்து நீள்வளை ...... யொலிகூர


விரைமலர் செறிகுழல் சாய்ந்து நூபுர
மிசைதர இலவிதழ் மோந்து வாயமு
தியல்பொடு பருகிய வாஞ்சை யேதக ...... வியனாடும்


வினையனை யிருவினை யீண்டு மாழ்கட
லிடர்படு சுழியிடை தாழ்ந்து போமதி
யிருகதி பெறஅருள் சேர்ந்து வாழ்வது ...... மொருநாளே


பரையபி நவைசிவை சாம்ப வீயுமை
யகிலமு மருளரு ளேய்ந்த கோமளி
பயிரவி திரிபுரை யாய்ந்த நூல்மறை ...... சதகோடி


பகவதி யிருசுட ரேந்து காரணி
மலைமகள் கவுரிவி தார்ந்த மோகினி
படர்சடை யவனிட நீங்கு றாதவள் ...... தருகோவே


குரைகடல் மறுகிட மூண்ட சூரர்க
ளணிகெட நெடுவரை சாய்ந்து தூளெழ
முடுகிய மயில்மிசை யூர்ந்து வேல்விடு ...... முருகோனே


குலநறை மலரளி சூழ்ந்து லாவிய
மயிலையி லுறைதரு சேந்த சேவக
குகசர வணபவ வாய்ந்த தேவர்கள் ...... பெருமாளே.

வரிசையாய் அமைந்த ரத்தின அணி
கலன்கள் நிறைந்ததாய், மிக்கெழுந்ததாய், கஸ்தூரி சந்தனம் அகில் இவைகளின்
சாந்து சேர்ந்துள்ள இள முலைகள் மார்பின் மேல் அணைந்து நல்ல மலர்ப்
படுக்கையின் மேல் இடுப்பில் உள்ள ஆடை தளர்ந்து (தரையில்) விழுந்திட, நல்ல
சந்திரனைப் போன்ற முகத்தில் வியர்வு எழ, கண்கள் பாய்ந்து நீண்ட குண்டலங்கள்
உள்ள காதுகளோடு சண்டை செய்ய, இரண்டு கைகளில் அணிந்த பெரிய வளையல்கள் ஒலி
மிகச் செய்ய, நறு மணம் உள்ள மலர்கள் நிறைந்த கூந்தல் சரிவுற்று, (கால்களில்
உள்ள) சிலம்பு ஒலி செய்ய, இலவ மலர் போன்ற சிவந்த வாயிதழை முத்தமிட்டு
வாயிதழின் அமுதம் போன்ற ஊறலை முறையே பருகும் விருப்பத்தையே தக்க
ஒழுக்கமாகத் தேடும் வினைக்கு ஈடானவனை, நல்வினை தீவினை என்பவற்றில்
இப்பிறப்பிலும் ஆழ்ந்த கடல் போன்ற துன்பப் படுகின்ற நீர்ச்சுழியான தீக்
குணத்தில் தாழ்ந்து போகின்ற என் புத்தி நல்ல கதியைப் பெறுமாறு உனது
திருவருளைப் பெற்று வாழ்வதும் ஒரு நாள் கிடைக்குமோ? பரா சக்தி,
சிவத்தினின்று பிரிவு படாதவள், சிவன் தேவி, சம்புவின் சக்தி உமை, எல்லா
உலகங்களையும் அருளிய அருள் கொண்ட அழகி, அச்சம் தருபவள், மும்
மூர்த்திகளுக்கும் மூத்தவள், நூற்றுக் கணக்கான நூல்களும், உபதேச ரகசியப்
பொருள்களும் ஆய்ந்துள்ள பகவதி, சூரியன் சந்திரன் ஆகிய இரண்டு சுடர்களும்
தரிக்கின்ற மூல தேவதை, இமய மலை அரசன் மகள் கெளரி, பல உருவினவளான அழகி,
படர்ந்த சடையை உடைய சிவபெருமானது இடது பாகத்தில் நீங்காது விளங்கும்
பார்வதி தேவி பெற்ற தலைவனே, ஒலிக்கின்ற கடல் கலங்க, கோபம் பொங்கி எழுந்த
சூரர்களின் படைகள் அழிய, பெரிய கிரெளஞ்ச மலை வீழ்ந்து பொடிபட, வேகமாகச்
செல்லும் மயிலின் மேல் ஏறி வேலாயுதத்தைச் செலுத்திய முருகனே, நல்ல தேன்
உள்ள மலர்களில் உள்ள வண்டுகள் சூழ்ந்து உலாவும் மயிலாப்பூரில்* வீற்றிருக்கும் முருகனே, வீரம் வாய்ந்த குகனே, சரவணப் பொய்கையில் அவதரித்தவனே, பொருந்திய தேவர்களின் பெருமாளே.

* மயிலாப்பூர் சென்னை நகரின் மையத்தில் உள்ளது.


பாடல் 697 - திருமயிலை


ராகம் - ....;
தாளம் -



தனதன தத்தன தானா தானன
தனதன தத்தன தானா தானன
தனதன தத்தன தானா தானன ...... தனதான



வருமயி லொத்தவ ¡£வார் மாமுக
மதியென வைத்தவர் தாவா காமிகள்
வரிசையின் முற்றிய வாகா ராமியல் ...... மடமாதர்


மயலினி லுற்றவர் மோகா வாரிதி
யதனிடை புக்கவ ராளாய் நீணிதி
தருவிய லுத்தர்கள் மாடா மாமதி ...... மிகமூழ்கி


தருபர வுத்தம வேளே சீருறை
அறுமுக நற்றவ லீலா கூருடை
அயிலுறை கைத்தல சீலா பூரண ...... பரயோக


சரவண வெற்றிவி நோதா மாமணி
தருமர வைக்கடி நீதா வாமணி
மயிலுறை வித்தவு னாதா ராமணி ...... பெறுவேனோ


திரிரிரி தித்திதி தீதீ தீதிதி
தொகுதொகு தொத்தொகு தோதோ தோதிகு
திமிதிமி தித்திமி ஜேஜே தீதிமி ...... தொதிதீதோ


தெனவரி மத்தள மீதார் தேமுழ
திடுவென மிக்கியல் வேதா வேதொழு
திருநட மிட்டவர் காதே மூடிய ...... குருபோதம்


உரை செயு முத்தம வீரா நாரணி
உமையவ ளுத்தர பூர்வா காரணி
உறுஜக ரக்ஷணி நீரா வாரணி ...... தருசேயே


உயர்வர முற்றிய கோவே யாரண
மறைமுடி வித்தக தேவே காரண
ஒருமயி லைப்பதி வாழ்வே தேவர்கள் ...... பெருமாளே.

அசைந்து வரும் மயில்
போன்றவர்கள், பொருள் கொடுப்பவர்கள் வந்தால் (அவர் முன்பு தமது) அழகிய
முகத்தை பூரண நிலவைப் போல வைத்துக் கொள்பவர்கள், எதிர் பாய்தல் இல்லாத
(உண்மையில் மோகம் கொள்ளாத) ஆசைக்காரிகள், ஒருவிதமான ஒழுங்கைக்
கைப்பிடிக்கும், அழகு நிறைந்த, தகுதி வாய்ந்த மென்மையான (விலை) மாதர்கள்,
காம வசப்பட்டு அவர்களுடைய மோகம் என்னும் கடலில் புகுந்து அவர்களுடைய
ஆளுகைக்கு உட்பட்டு (என்னுடைய) பெரிய சொத்துக்களை எல்லாம் தத்தம் செய்தும்,
மரம் போன்று அருட் குணம் இல்லாத லோபிகளாகிய விலைமாதர்கள், இவ் வேசையர்
மாட்டு ஈடுபட்டு, நல்ல அறிவு அறவே அற்று மூழ்கிக் கிடப்பவன் நான்.
திருவருளைத் தரும் மேலான உத்தமனே, பெருமை வாய்ந்த ஆறு முகனே, நல்ல தவ
விளையாடல்களை புரிபவனே, கூர்மை கொண்ட வேலைப் பிடித்த கரத்தனே, தரும
மூர்த்தியே, பரிபூரணனே, மேலான யோக மூர்த்தியே, சரவண பவனே, வெற்றி விநோதனே,
உயர்ந்த மணியைத் தருகின்ற பாம்பை அடக்குகின்ற, நீதியாயுள்ள, அழகிய மயிலின்
மேல் வீற்றிருக்கும் ஞான மூர்த்தியே, உனது பற்றுக் கோடு என்னும் பெருமையைப்
பெறுவேனோ? திரிரிரி தித்திதி தீதீ தீதிதி தொகுதொகு தொத்தொகு தோதோ தோதிகு
திரிரிரி தித்திதி தீதீ தீதிதி தொகுதொகு தொத்தொகு தோதோ தோதிகு திமிதிமி
தித்திமி ஜேஜே தீதிமி தொதிதீதோ என்ற இவ்வாறான ஒலிகளுடன் திருமால் மத்தளம்
மீது நிரம்ப வாசிக்கும் இடத்தில் முழவு வாத்தியத்தை திடு திடு என்று
வாசிக்க, மிகுந்த தகுதி வாய்ந்த பிரமனும் (தாளம் போட்டுத்) தொழுகின்ற போது,
திரு நடனம் செய்கின்ற சிவபெருமான் தமது செவிகளை (உபதேசம் கேட்க) பொத்தச்
செய்த ஞானகுருவாக இருந்து ஞானப் பொருளை உபதேசித்த மேலானவனே, வீரனே,
நாராயணி, உமையவள், வடக்கு கிழக்கு முதலிய திசைகளின் ஆதி தேவதை, உலகை
மிகவும் காப்பவள், மறைக்கின்ற (திரோதான) சக்திக் குணம் உடையவள் ஈன்ற
குழந்தையே, உயர்ந்த வரங்களைத் தரும் தலைவனே, வேத உபநிஷதங்களின் முடிவில்
விளங்கும் ஞானியே,
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

அருணகிரிநாதர் நூல்கள் (Arunagirinathar Books) Empty Re: அருணகிரிநாதர் நூல்கள் (Arunagirinathar Books)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum