HinduSamayam
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்
by vpoompalani March 24th 2016, 13:59

» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26

» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17

» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06

» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07

» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58

» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24

» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35

» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52

» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20

» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18

» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37

» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47

» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19

» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46

» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49

» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37

» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07

» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29

» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38

» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55

» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00

» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49

» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28

» திருத்தல யாத்திரை  ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51

» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33

» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46

» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28

» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13

» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29

» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15

» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10

» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29

» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54

» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38

» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42

» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32

» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01

» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20

» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00

தமிழர்களின் சிந்தனைகளம்
Related Posts Plugin for WordPress, Blogger...



வாழ்தல் என்றால் என்ன?

Go down

வாழ்தல் என்றால் என்ன? Empty வாழ்தல் என்றால் என்ன?

Post by vpoompalani on September 9th 2015, 17:01

வாழ்தல் என்றால் என்ன?
வாழ்தல் என்பது மூச்சுக்காற்றை விடுவது மட்டும் தான் என்பது பலரது எண்ணம். அது வல்ல வாழ்தல்.
" உள்ளம் பெருங்கோவில் ஊன்உடம்பு ஆலயம்" என்ற திருமூலரின் வாக்குப்படி அகத்தில் உள்ள கோவில் கொண்டுள்ள இறைவரை அகப்பூசை செய்வது சிறந்ததாகும். பூசலார் தன் மனத்தில் கட்டிய அகக் கோவிலில் தான் இறைவன் எழுந்தருளினார் எனவே இறைவன் வழிபட்டு வாழ அகப்பூசையே சிறந்தது. அனுபூதிமான்கள் தங்கள் அகத்தில் கண்ட அனுபூதி உண்மை முற்றிலும் அனுஸ்டானத்திற்கு உரியது. இது வெறும் மேடை பேச்சிற்கோ, உபன்யாசத்திற்கோ மட்டும் அல்ல. மனத்தில் பதிய வைத்துக் கொண்டு வாழ்க்கையில் செயல்படுத்துவதாகும்.
வாழ்தல் என்றால் மூச்சுக்காற்றை சுவாசிப்பது என்பதல்ல. பஞ்சபூதங்களில் ஒன்றான காற்றோடு மட்டும் தன்னை இணைத்துக் கொண்டு இருப்பதை அல்லது தக்க வைத்துக் கொள்வது பற்றி மட்டுமே உயிர் வாழ்தல் என்று எண்ணுவது தவறு. இதுவும், இதுமட்டுமல்லாமல் ஒலியுடன் உங்களை இணைத்துக் கொள்வது உயிர் வாழுவதும் வாழ்தல்தான்.
அத்துடன் ஒளியுடன் உங்களை இணைததுக் கொண்டு வாழ்வதும் இருக்கின்றது. அன்றாட நடைமுறை வாழ்க்கைக்கு பயன்படுபவை அத்யாத்மிக வாழ்க்கையும் லெளகீக வாழ்க்கையும் ஆகும். இவை ஒன்றோடொன்று தொடர்புடையவை. இவை இரணடும் இரண்டு துருவங்கள் என எண்ணுவது சமயத்தைச் சரியாக அனுபவிக்காதவர்களின் தவறான கூற்றாகும்.
அத்யாத்மிக வாழ்க்கை என்பது உள்வழிப் பயணம் அதாவது தியான வாழ்க்கை. லெளகீக வாழ்க்கை என்பது குடும்ப வாழ்க்கை. இது வெளி வாழ்க்கை.
சமயம் என்பது மனிதனைச் சமைத்து நெறிப்படுத்துவது. அதாவது, இவ்வுலகத்தில் வாழும் ஒருவன் இப்படித்தான் வாழ வேண்டும் என வழிகாட்டுவது.
அகத்தில் இதனை அனுஷ்டிக்க அனஷ்டிக்க ஒருவருடைய புற வாழ்க்கை நெறிபடுகிறது. பிராக்டிக்கல் வாழ்க்கை என்ற நடைமுறை வாழ்க்கையும், ஆன்மீக வாழ்க்கையும், வெவ்வேறானவை அல்ல, உள்ளே எதுவாக உங்களை எண்ணிக் கொள்கிறீர்களோ வெளியில் நீங்கள் அதுவாகவே இருக்கின்றீர்கள். நம் புற வாழ்க்கை என்பது, நம்முடைய அக வாழ்க்கையின் வெளிப்பாடே. ஒரு நாள் முழுவதும் நாம் எதைப்பற்றி நினைக்கின்றோமோ அதுவாகவே நாம் ஆகிறோம். சமயவாதிகளும் தத்துவ வாதிகளும் உளவியல் அறிஞர்களின் கருத்துவும் இதுவே.
நீ எதுவாக நினைக்கிறாயோ, அதுவாகவே ஆகிறாய் என்கிறார் இறைமகன் யேசு தம் பைபிளில்.
உங்கள் எண்ணத்தின் பிரதிபலிப்புத்தான் நீங்கள் காணும் இந்த உலகம். நீங்கள் புறத்தே பார்க்கின்றவை அனைத்துமே உங்கள் அகத்தில் உங்கள் மனதில் எண்ணத்தில் தோன்றிய பின்னர்தான் இந்த வடிவம் எடுத்து வந்துள்ளீர்கள்.
சூட்சுமம் என்பது அத்யாத்மிகம் என்ற உள்ளொளிப்பயணம்,
ஸ்தூலம் என்பது லெளகீகம் என்ற வெளிப்பொருள் சார்ந்த வாழ்க்கை. அதாவது குடும்ப வாழ்க்கை. அகத்தின் பிரதியே புறம் ஆகும். ஸ்தூலம் அதன் பிரதிபலிப்பே. உங்களால் நடைமுறையில் கடைபிடிக்க முடியாத ஒன்றை தவஞானிகள் - அனுபூதிமார்கள் - உங்களுக்கு சொல்லவில்லை. அவர்கள் வாழ்வில் கடைபிடித்த தங்களுடைய அனுபவங்களைத்தான் உங்களுக்கு விட்டு சென்றுள்ளார்கள்.
இந்த பாதை பழையதுதான், ஆனால் பயணம் புதியது பயணிக்கும் நாம் புதியவர்கள். இது பல்லாயிரக்கணக்கானவர்கள் பயணித்த பாதைதான். இதனை நமது வாழ்க்கைக்குள் எடுத்து செல்ல செல்ல நமது வாழ்க்கை உயர் தகுதியைப் பெறும்.
திருச்சிற்றம்பலம்
நன்றி; ஆன்மிகம் அறிவோம்
http://tamilall.com/
vpoompalani
vpoompalani

Posts : 50
Join date : 16/07/2015
Location : Sundarapandiam

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum