HinduSamayam
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

HinduSamayam
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
HinduSamayam
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்
by vpoompalani March 24th 2016, 13:59

» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26

» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17

» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06

» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07

» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58

» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24

» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35

» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52

» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20

» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18

» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37

» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47

» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19

» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46

» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49

» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37

» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07

» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29

» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38

» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55

» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00

» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49

» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28

» திருத்தல யாத்திரை  ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51

» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33

» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46

» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28

» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13

» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29

» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15

» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10

» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29

» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54

» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38

» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42

» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32

» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01

» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20

» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00

தமிழர்களின் சிந்தனைகளம்
Related Posts Plugin for WordPress, Blogger...



நாள்தோறும் நாயன்மார்கள்

Page 2 of 2 Previous  1, 2

Go down

நாள்தோறும் நாயன்மார்கள்  - Page 2 Empty நாள்தோறும் நாயன்மார்கள்

Post by மாலதி June 9th 2013, 08:13

First topic message reminder :

நாள்தோறும் நாயன்மார்கள்

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார்


பிறையணிந்த
பெருமானை வழிவழியாகப் போற்றி வரும் சோழர்களின் கொடி நிழலிலே வளம்
கொழிக்கும் திருநகரங்கள் பலவற்றுள் சீர்காழியும் ஒன்றாகும்.இத்தலத்திற்கு
பிரமபுரம், வேணுபுரம், சீர்காழி, வெங்குரு, தோணிபுரம், பூந்தராம்,
சிரபுரம், புறவம், சண்பை, காழி, கொச்சைவயம், கழுமலம் என்னும் பன்னிரெண்டு
பெயர்கள் உண்டு. நிலவளமும், நீர்வளமும், தெய்வவளமும் ஒருங்கே அமையப்பெற்ற
இப்பழம்பெரும் பதியிலே சிவனின் சிந்தை மறவாது செந்தண்மை பூண்டொழுகும்
அந்தணர் மரபிலே - கவுணியர் கோத்திரத்திலே - சிவபாதவிருதயர் என்னும்
பெயருடைய தொண்டர் ஒருவர் வாழ்ந்து வந்தார். இவருடைய வாழ்க்கைத் துணைவியார்
பெயர் பகவதியார். இவ்விரு சிவனருள் தம்பதியரும் இல்லற இலக்கணமறிந்து
திருவெண்ணீற்றன்பர்களிடத்தும் இறைவனிடத்தும் எல்லையில்லாப் பக்தி பூண்டு
யாவரும் வியக்கும் வண்ணம் இல்லறத்தை இனிமையாக நடத்தி வந்தனர். இவ்வாறு,
இவர்கள் வாழ்ந்து வரும் நாளில் சைவ சமயமும் சற்று வலிமை குறைந்து இருக்க,
பவுத்தமும், சமணமும் வன்மை பெற்று விளங்கிற்று. வேறு சில சமயங்களால்
வேதநெறி குன்றியது. இரவையே பகல் போல் பிரகாசமாகத் தோன்றச் செய்யும்
திருவெண்ணீற்றின் மகிமையும் பெருமையும் போற்றுதலின்றி நலிந்து காணப்பட்டன.
சிவசமயத்திற்கு ஏற்பட்ட இத்தகைய தாங்கொணாத் துயர்கண்டு சிவபாதவிருதயரும்
அவரது மனைவியாரும் மிகவும் மனம் வாடினர். அவர்கள் இருவரும் புறச்
சமயங்களால் வரும் தீமைகளைப் போக்கித் திருவெண்ணீற்றின் ஆக்கத்தை
அகிலமெல்லாம் ஓங்கச் செய்யத்தக்க சிவப்பற்றும் தெய்வ அருளும் மிக்க மகனைப்
பெற்றுப் பெருமிதமடைய எண்ணினர். இச்சிவ அன்பர்கள் எப்போதும் முழுமுதற் பரம்
பொருளின் நினைவாகவே இருந்தனர். அதற்கென அருந்தவம் செய்தனர்.
திருத்தோணியப்பருக்குத் தொண்டுகள் பல புரிந்தனர். அதன் பயனாக தோணியப்பர்
இச்சிவத் தொண்டர்களின் மனக்குறையைப் போக்க மக்கட்பேற்றை அளித்து அருளத்
திருவுள்ளம் கொண்டார். பிறைமுடிப் பெருமானின் திருவருளால் பகவதியார்
கருவுற்றாள். வைகாசிமுதல் நாளன்று - சைவம் தழைக்க திருஞான
சம்பந்தப்பெருமான் பகவதியாருக்கும் சிவபாத விருதயருக்கும் திருமகனாய்
அவதாரம் செய்தார். செல்வன் பிறந்த பேருவகையில் பெற்றோர்கள் பொன்னும்
பொருளும் வந்தோர்க்கெல்லாம் வாரி வாரி வழங்கினர். அன்பர்களுக்கு அமுது
அளித்தனர். ஆலயத்திற்கு முக்காலமும் கோலாகலமாகப் பெருவிழா போல் சிவ
வழிபாடுகள் பல செய்தனர்.மண்மாதாவின் மடியில் பிறந்த அருந்தவப் புதல்வன்
பெற்றோர்களின் மடியிலும் துங்கமணி மாடத்திலும் தூயமணி பீடத்திலும்,
அணிமிகும் தொட்டிலி<லும் விளையாடினான்.செங்கீரை, சப்பாணி, அம்மானை
முதலிய பருவங்களைக் களிப்போடு கடந்து, சின்னஞ்சிறு தேர் உருட்டி வீதியிலே
தளர் நடை பயிலும் பருவத்தை அடைந்தான். இப்படியாகப் பிரபஞ்சத்தில் கமலமலர்ப்
பாதங்களைப் பதிய வைத்து நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்பிறைபோல்
வளர்ந்து வந்த தவப்புதல்வருக்கு மூன்றாவது ஆண்டு தொடங்கிற்று. வழக்கம்போல்
சிவபாதவிருதயர் கோயிலை அடுத்துள்ள பொற்றாமரைக் குளத்தில் நீராடப்
புறப்பட்டார். அப்போது தவப்புதல்வன் அழுது கொண்டே தந்தையைப் பின்னே
தொடர்ந்து வாயில் வரை வந்தான். பிஞ்சுக் கால்களிலே இனியதான கிண்கிணி ஓசை
ஒலிக்க, மெல்ல அடி இட்டு வந்த செல்வன் தாமும் உடன் வருவதாகக் குழலைப்
பழிக்கக் கூறி நின்றான். மழலை மொழிதனில் உலகை மறந்த சிவபாத விருதயர்
தம்மோடு நீராடி மகிழ குழந்தையையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டார். குளத்தை
வந்தடைந்த சிவபாதவிருதயர் குழந்தையைக் கரையிலே உட்கார வைத்துவிட்டு நீராடக்
குளத்தில் இறங்கினார்; ஜபதபங்கள் புரிந்து தண்ணீரில் மூழ்கினார். குழந்தை
தந்தையாரைக் காணாது மனம் கலங்கியது; கண்களிலே கண்ணீர் கசிய சுற்றும்
முற்றும் பார்த்தது! குழந்தை கோபுரத்தை நோக்கி, அம்மே! அப்பா எனத் தன் பவழ
வாயால் அழைத்தது. பொருமிப் பொருமி அழுதது. தோணியப்பர், உமாதேவியாரோடு
வானவீதியில் பேரொளி பரவ எழுந்தருளினார்.

எம்பெருமான்
உமாதேவியாரிடம், தேவி ! நமது தொண்டனுக்குச் சிவஞானத்தை குழைத்த பாலைப்
பொற்கிண்ணத்தில் ஏந்தி ஊட்டுவாயாக என்று அருளினார். அன்னை பராசக்தி
குழந்தையின் அருகே வந்தாள். வாரி அணைத்து முத்தமிட்டு மகிழ்ந்தாள். மடி
மீது அமர்த்திக் கொண்டாள். தமது திருமுலைப் பாலினைப் பொற்கிண்ணத்தில்
ஏந்தினாள். அவரது கண் மலரிலே வழியும் நீரைத் துடைத்தாள். சிவஞான அமுதத்தைக்
கலந்த பொற்கிண்ணத்தை அவரது கைகளிலே அளித்து பாலமுதத்தினை உண்பாயாக என
மொழிந்தாள்.குழந்தையின் கையைப் பிடித்தவாறு பார்வதி தேவியார் பாலைப் பருகச்
செய்தார்கள். குழந்தை அழுவதை நிறுத்தி ஆனந்தக் கண்ணீர் பூண்டது.
திருத்தோணியப்பராலும் உமாதேவியாராலும் ஆட்கொள்ளப்பெற்ற குழந்தை ஆளுடைப்
பிள்ளையார் என்னும் திருநாமம் பெற்றது.அமரர்க்கும் அருந்தவசியர்க்கும்
அறிவதற்கு அரிய பொருளாகிய ஒப்பற்றச் சிவஞானச் செல்வத்தைச் சம்பந்தம்
செய்ததனாலே சிவஞான சம்பந்தர் என்னும் திருநாமமும் பெற்றார். அப்பொழுதே
சம்பந்தர் உவமையில்லாத கலைஞானத்தைப் பெற்று விளங்கும் பெருமகனானார்.
குளத்தில் மூழ்கி நியமங்களை முடித்துக் கரையேறினார் சிவபாதவிருதயர்.
ஒப்பற்ற ஞானத்தோடு பேருணர்வு பெற்று விளங்குகின்றார் பிள்ளை என்ற உண்மையை
அவர் அறிந்திலார். குழந்தையருகில் வந்தார்.பிஞ்சுக் கரங்களிலே
பொற்கிண்ணமிருப்பதைக் கண்டார். செக்கச் சிவந்த செங்கனி இதழ்களிலே பால்
வழிவதனையும் கண்டார். அந்தணர் ஐயமுற்றார்.பால் மணம் மாறாப் பாலகனுக்கு எவரோ
எச்சிற் பால் ஊட்டிச் சென்றனரே என ஐயமுற்றார். கள்ளமில்லாப் பாலகனை
கடுங்கோபத்தோடு பார்த்தார். கீழே கிடந்த குச்சியை எடுத்தார் பாலகன் அருகே
சென்று, உனக்கு எச்சிற் பாலைக் கொடுத்தது யாரென்று எனக்கு காட்டு என்று
மிக்கச் சினத்துடன் கேட்டார். தந்தையின் சுடுமொழியினால் மெய்ஞான சம்பந்தர்
விழிகளிலே ஆனந்தக் கண்ணீர் தான் ததும்பியது. சம்பந்தர் ஒரு காலைத் தூக்கி
ஒரு திருக்கை விரலை உச்சி மேல் உயர்த்தி விண்ணிலே விடையின் மேல் பேரொளியோடு
எழுந்தருளிய பெருமானைச் சுட்டிக்காட்டினார். ஞானசம்பந்தர் தமது ஒப்பற்ற
ஞானத் திருமொழியினால் எல்லையில்லா வேதங்கட்கு மூலமாகிய ஓங்காரத்தோடு
சேர்ந்த எழுத்தால் இன்பம் பெருகப் பாடத் தொடங்கினார். தாம் பாடும் தமிழ்மறை
பரமசிவத்தின்பாற் சென்று ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு ஏற்ப சிவபிரானது
திருச்செவிறைச் சிறப்பித்துச் செவ்விசையோடு, தோடுடைய செவியன் எனத்
தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடலானார். தெய்வத்திருவருள் பெற்ற
திருஞானசம்பந்தரை மிரட்டுவதற்காகக் கோலெடுத்து வந்த அந்தணர் திகைத்தார்.
செயலற்று நின்றார். அவர் கையிலே இருந்த கோல் அவரையறியாமலேயே கை நழுவிக்
கீழே விழுந்தது. அந்தணர் ஆனந்தக் கூத்தாடினார். அருந்தமிழ்ப் பதிகத்தால்
உண்மையை உணர்த்திய புதல்வரின் முகத்தில் இறைவனின் தோற்றப் பொலிவுதனைக்
கண்டு மெய்யுருகினார். சம்பந்தப் பெருமான் தோணியப்பர் எழுந்தருளியிருக்கும்
கோவி<<<லுக்குச் செல்ல மெல்ல தம் சீரடி எடுத்து வைத்தார்.
தந்தையாரும் பிள்ளையாரைப் பின் தொடர்ந்தார். தோணியப்பர் கோவிலையடைந்த
ஞானசம்பந்தர் இறைவனை வணங்கி வழிபட்டார். பதிகம் ஒன்றைப் பாடினார். இந்த
அற்புத நிகழ்ச்சி பகலவனின் காலை இளங்கீற்றுப்போல் ஊரெங்கும் பரவியது.
ஞானசம் பந்தரின் அருஞ்செயலை நேரில் கண்டு களிப்புற அனைவரும் கோவிலின்
வாயிலில் ஒருங்கே கூடினர். ஞானசம்பந்தர் அங்கிருந்த அனைவருக்கும்
எம்பெருமான் உமாதேவியாருடன் விடையின் மேல் வந்து தம்மை ஆட்கொண்டு அருளிய
திறத்தினை மொழிந்தார். அனைவரும் ஞானசம்பந்தரை, காழியர் செய்த தவமே!
கவுணியர்தனமே ! கலைஞானக் கடலே, அக்கடலிடை தோன்றிய அமுதே! மறைவளர் திருவே!
வைதிக நிலையே! வளர்ஞானப் பொறையணி முகிலே! புகலியர் புகலே! காவிரி பெற்ற
மணியே ! மறையின் ஒளியே! புண்ணிய முதலே! கலை வளரும் திங்களே! கண் கவரும்
கதிரொளியே! இசையின் முதலே! மூன்றாண்டிலே சைவந் தழைக்க எம்பெருமான் அருள்
பெற்ற செல்வனே ! நீ வாழ்க! என வாழ்த்தி மகிழ்ந்தனர். சம்பந்தர் கோவிலை
விட்டுத் வீட்டிற்குப் புறப்பட்டார். அன்பர்களும் அடியார்களும் தொடர்ந்து
புறப்பட்டனர். சிவபாதவிருதயர் தம் தெய்வத் திருமகனைத் தோளிற் சுமந்துகொண்டு
மகிழ்ச்சியுடன் வீதி வழியே பவனி புறப்பட்டார். கோவிலை மும்முறை வலம்
வந்தார். தோணிபுரத்துப் பெருமக்கள் புடை சூழ்ந்து கொண்டு ஞானசம்பந்தரை
வாழ்த்தி வணங்கியதோடு தங்களுடைய மேலாடைகளை வானில் எறிந்து அளவு கடந்த
ஆரவாரம் செய்தனர். மங்கல மங்கையர்கள் மேல் மாடங்களிலே வந்து நின்று மங்கள
மொழிகள் கூறினர். தேன் சிந்தும் நறுமலர்களையும், நறுமணப் பொடியையும்
நெற்பொரியோடு கலந்து தூவி வாழ்த்தினர். வீதிதோறும் மணிவிளக்குகள்
ஒளியூட்டின. எங்கும் மாவிலைத் தோரணங்கள் அழகு செய்தன. வீடெல்லாம் அழகாக
அலங்கரித்தனர். வெண் சிறு கடுகு, முகில் முதலியவற்றால் தூபமெடுத்தார்கள்.
இப்படியாகத் திருவீதியெங்கும் மறை ஒலியும், மங்கல வாத்தியமும் ஒலிக்க
ஆளுடைப்பிள்ளையார் இல்லத்தை அடைந்தார்.

பகவதியார் தமது தவச் செல்வனை
ஆரத்தி எடுத்து வாரி அணைத்து எடுத்துக் கொண்டார். முத்தமாரி பொழிந்தார்.
உலகையே மறந்து உவகை பூண்டார். வியக்கத்தக்கத் திருவருளைப் பரமனருளால் பெற்ற
ஞானசம்பந்தர் தந்தையாருடன் சிவத்தலங்கள் தோறும் சென்று ஆலய தரிசனம் செய்ய
எண்ணினார். ஒரு நாள் தந்தையாருடன் ஆலய தரிசனம் காணப் புறப்பட்டார்.
அடுத்துள்ள திருக்கோலக்காவை அடைந்தார். அங்கு எழுந்தருளி இருக்கும்
எம்பெருமானை வழிபட்டார். கையினால் தாளம் போட்டுக் கொண்டே, மடையில் வாளையாய
எனத் தொடங்கும் பதிகம் ஒன்றைப் பாடிக் கொண்டிருந்தார். பிஞ்சுக்கரம்
சிவக்கத் தாளம் போடுவதைப் பார்த்த செஞ்சடைவண்ணர் ஐந்தெழுத்து மந்திரம்
எழுதிய பொன்னாலான இரண்டு தாளங்களை ஞானசம்பந்தரின் திருக்கை மலரிலே வந்து
தங்குமாறு திருவருள் பாலித்தார். ஞானசம்பந்தர் இறைவனின் கருணையை எண்ணி
உள்ளமும் உடலும் பூரித்தார். இறைவன் அருளால் தம் அங்கை மலரிலே வந்து தங்கிய
பொற்தாளங்களைச் சிரம் மீது எடுத்து வணங்கினார்.அவற்றாலே தாளம் போட்ட
வண்ணம் ஏழிசைகளும் தழைத்தோங்குமாறு பக்திப் பெருக்கோடு தமிழிசை பொழிந்து
திருக்கடைக் காப்பு சாத்தி நின்றார்.தேவத் துந்துபிகள் முழங்க விண்ணவர் பூ
மழையைப் பொழிந்தனர். தந்தையார் ஞானசம்பந்தரைத் தம் தோள் மீது சுமந்து
கொண்டு சீர்காழிக்கு வந்து நின்றார்.ஞானசம்பந்தருக்குப் பொன்னாலான தாளம்
அளித்தமையால் திருத்தாளமுடையார் கோவில் என்று அத்தலத்திற்குச் சிறப்புப்
பெயர் ஏற்பட்டது. சீர்காழியில் உள்ள தொண்டர்களும் சுற்றுப்புற ஊர்களிலுள்ள
சிவத் தொண்டர்களும் அந்தண சிரேஷ்டர்களும் கூட்டங் கூட்டமாக வந்து ஞான
சம்பந்தரை வழிபட்டனர். சம்பந்தர் அனைவரோடும் கோயிலுக்குச் சென்றார்.
தோணியப்பரை எட்டுப் பதிகங்கள் அடங்கிய கட்டளை ஒன்றில் அமைந்த பூவார் கொன்றை
என்ற தேவாரப் பதிகம் பாடி வணங்கினார். சிவனருட் செல்வரின் சுந்தர
தரிசனத்தால் சீர்காழி அன்பர்கள் பாலாழியில் மூழ்கிய பேரின்பத்தைப்
பெற்றார்கள். இவ்வாறு, எம்பெருமானுக்கு சம்பந்தனார் திருத்தொண்டு புரிந்து
வரும் நாளில் திருநனிப்பள்ளி அன்பர்கள் தங்கள் ஊருக்கு எழுந்தருள வேண்டும்
என்று சம்பந்தரைக் கேட்டுக் கொண்டார். ஒருநாள் சம்பந்தர், தாயின் ஊராகிய
திருநனிப் பள்ளிக்குப் புறப்பட்டார். தந்தையார் தனயனைத் தோளிலே சுமந்து
நடந்தார். திருநனிப்பள்ளிப் பெருமானைத் தமிழ்மறை பல பாடி வணங்கியவாறு
புறப்பட்டார். திருவலம்புரம், பல்லனீச்சரம், திருச்சாயக்காடு,
திருவெண்காடு, திருமுல்லைவாயில் முதலிய சிவத்தலங்களை தரிசித்த வண்ணம்
மீண்டும் சீர்காழியை வந்தடைந்தார் திருஞானசம்பந்தர்! ஞானசம்பந்தர்
சீர்காழியில் இருந்தவாறே சுற்றுப்புறத்துள்ள பல சிவத் தலங்களைத்
தரிசித்துப் பதிகங்கள் பாடி வந்தார். சம்பந்தருடைய தெய்வத் திருப்பணியைப்
பற்றிக் கேள்வியுற்ற திருநீலகண்ட யாழ்ப்பாணரும் அவரது மனைவியாராகிய
மதங்கசூளாமணியாரும் ஞான சம்பந்தரை தரிசிக்கச் சீர்காழிக்கு வந்தனர்.
ஞானசம்பந்தர் அவர்கள் தம்மை வீழ்ந்து வணங்கும் முன்பே அன்போடு வீழ்ந்து
வணங்கி எழுந்தார். ஞான சம்பந்தர் தேவார அமுதும் பொழிந்தார். அத்தேவார
அமுதத்தைப் பாணர் தம்பதியர் யாழிசைத்து மகிழ்ந்தனர். ஞானசம்பந்தர் பாட,
பாணர் யாழிசைக்க, பாலும் தேனும் கலந்தாற்போல் எங்கும் தமிழ் மழை பொழிந்தது.
திருநீலகண்ட யாழ்ப்பாணரும், மதங்கசூளாமணியாரும் ஞானசம்பந்தருடனேயே இருந்து
அவருடைய பாசுரங்களை யாழிலே இசைக்கும் அரும் பெரும் தொண்டை மனங்குளிர -
பரமன் செவி குளிர - கேட்போர் உள்ளம் உருகத் தொடர்ந்து நடத்தி வரலாயினர்.
இவ்வாறு வாழ்ந்து வரும் நாளில் ஞானசம்பந்தருக்குத் தில்லையில்
எழுந்தருளியிருக்கும் நடராசப் பெருமானை வழிபட வேண்டுமென்ற எண்ணம் எழுந்தது.

யாழ்ப்பாணரோடு
தந்தையாரையும் அழைத்துக் கொண்டு தில்லைக்குப் புறப்பட்டார் சம்பந்தர்.
தந்தையார், சம்பந்தரைத் தோளில் சுமந்து கொண்டு மகிழ்வோடு புறப்பட்டார்.
சீர்காழி மெய்யன்பர்கள் சம்பந்தரை வழிஅனுப்பி வைத்தனர். தில்லைவாழ்
அந்தணர்கள் ஞானசம்பந்தர் பெருமானைப் பூரண பொற்கும்ப கலசங்கள் வைத்து
வரவேற்று வீதி வழியே அழைத்துச் சென்றனர். தில்லைத் திருவீதியையும்,
எழுநிலைக் கோபுரத்தையும் வணங்கியவாறே ஆலயத்தை வலம் வந்த ஞானசம்பந்தர்
கண்களிலே ஆனந்தக் கண்ணீர் பெருகியது. பதிகம் பாடிக்கொண்டே தெற்கு
ராஜகோபுரத்தின் வழியாக சென்று நடராஜப் பெருமானை வணங்கினார். அவரது
பாடல்களை பாணரும் அவரது மனைவியாரும் யாழில் இசைத்தனர். பல நாட்கள்
தில்லையில் தங்கி திருப்பணிகளைச் செய்தார் சம்பந்தப் பெருமான்! தில்லையில்
தங்கி இருந்த ஞான சம்பந்தர் அருகிலுள்ள திருவேட்களம் சென்றார். அங்கு
திருக்கோவிலிலே தங்கி இருக்கும் அரனாரைப் பாடிப் பாடி, உள்ளம் உருகினார்.
அங்கிருந்தபடியே அடிக்கடி தில்லைக்கு வந்து சிற்றம்பலத்தையும் தரிசனம்
செய்து வரலானார். பாணர் வேண்டுகோளுக்கிணங்க அவரது சொந்த ஊராகிய
திருஎருக்கத்தம்புலியூருக்கு சம்பந்தர் புறப்பட்டார். ஆங்காங்கே கோவில்
கொண்டுள்ள இறைவனை வழிபட்டு திருப்பதிகங்களைப் பாடிக் கொண்டே சென்றார்.
ஞானசம்பந்தருக்கு திருநெல்வாயில் அரந்துறையைத் தரிசிக்க வேண்டுமென்ற ஆசை
எழுந்தது. இத்திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனுக்கு உச்சிநாதர்
என்று பெயர். அது காரணம் பற்றியே அத்தலத்திற்கு திருவுச்சி என்றும் ஒரு
பெயர் உண்டு. திருமகனின் ஆசையை நிறைவேற்ற தந்தையார் அவரைத் தமது தோளில்
சுமந்துகொண்டு புறப்பட்டார். தந்தையார் தம்மைத் தூக்கிக்கொண்டு நடப்பது
கண்டு சம்பந்தர் மனம் கலங்கினார். தந்தையாரைத் தோளிலே தூக்கிச் செல்ல
வேண்டாம் என்று கூறிய ஞானசம்பந்தர், தமது பட்டுப்பாதம் நோவதையும் அறியாது
நடக்கலானார். இவர்கள் போகும் வழியே மாறன்பாடி என்னும் தலம் ஒன்று
எதிர்ப்பட்டது. இரவு நெருங்கவே அனைவரும் அங்கே தங்கினர். திருநெல்வாயில்
அரத்துறை அமைந்த இறைவன், ஞான சம்பந்தர் சேவடி நோக நடந்துவருவதை எண்ணி,
அவ்வூர் அடியார்களின் கனவில் தோன்றினார். ஞானசம்பந்தன் தளிர் அடிகள் நோக
நம்மைத் தரிசிக்க வருகின்றான். அவனை ஏற்றி வருவதற்காக முத்துச்
சிவிகையையும், முத்துக் குடையையும், முத்துச் சின்னங்களையும்
வைத்திருக்கின்றோம். அவற்றை எடுத்துச் சென்று, இது எமது கட்டளை என்று கூறி
அழைத்து வருவீர்களாக ! என சிவ பெருமான் திருவாய் மலர்ந்தருளினார்.
எம்பெருமான், ஞானசம்பந்தர் கனவிலும் தோன்றி, நாம் உனக்கு மகிழ்ந்து அருளும்
முத்துச்சிவிகை, முத்துக்குடை முதலியவற்றைப் பெற்றுக் கொள்வாயாக எனத்
திருவாய் மலர்ந்தருளினார். பொழுது புலர்ந்தது! ஞானசம்பந்தர் இறைவனின்
திருவருட் கருணையை எண்ணிப் பதிகம் ஒன்றைப் பாடிப் பரமன் அருளைப்
போற்றினார். அதற்குள் மறையோர்கள் முத்துச்சிவிகையோடு வந்தனர். ஞானசம்பந்தப்
பெருமானைக் கண்டு இறைவன் திருவாய் மலர்ந்து அருளிய திருவாசகத்தைச்
சொல்லினர். முத்துச் சிவிகையில் எழுந்தருளப் பிரார்த்தித்தனர். நெல்வாயில்
மெய்யன்பர்கள் சம்பந்த பெருமானையும் அவரது தந்தையாரையும் உடன் வந்த
அடியார்களையும் நெல்வாயில் அரத்துறைத் திருக்கோவிலுக்கு மேளதாள இன்னிசை
முழக்கத்துடன் அழைத்துக் கொண்டு புறப்பட்டனர். ஞானசம்பந்தர் அரத்துறை
அரனாரை வழிபட்டுப் பதிகம் பலவற்றைப் பாடினார். அவ்வூர் அடியார்கள்
விருப்பத்திற்கு இணங்க சில காலம் நெல்வாயிலில் தங்கினார் சம்பந்தர்.
அங்கிருந்தவாறே அருகிலுள்ள பல சிவன் கோவில்களையும் வழிபட்டு வரலானார்.
பிறகு சீர்காழியை வந்தடைந்தார்.

சீர்காழிப் பகுதியில்
எழுந்தருளியிருந்த சம்பந்தர் அனுதினமும் தோணியப்பரைப் பாடிப் பரவசமுற்றார்.
ஞானசம்பந்தருக்கு உரிய பருவத்தில் அவரது பெற்றோர்கள், முப்புரி நூலணியும்
சடங்கினைச் சீரோடும் சிறப்போடும் நடத்தினர். ஞானசம்பந்தர் சீர்காழியில்
தங்கி இருக்கும் நாளில் ஞானசம்பந்தருடைய அன்பையும், அருளையும்,
ஞானத்தையும், மேன்மையையும் கேள்வியுற்ற திருநாவுக்கரசர் சீர்காழிக்கு
வந்தார். அவரது வருகையை முன்னதாகவே தெரிந்துகொண்ட சம்பந்தர் அன்பர் புடைசூழ
அப்பரடிகளை எல்லையிலேயே எதிர்கொண்டழைத்தார். ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி
அகமகிழ்ந்து களித்தனர். ஞானசம்பந்தர் கரங்குவித்து இன்பம் பெருக
இன்மொழியால் அப்பரே என்றழைக்க நாவுக்கரசர் அவரை நோக்கி அடியேன் என்று
<உள்ளம் உருக வணங்கினார். இருவரும் கோவிலுக்குச் சென்று இறைவனை
வழிபட்டனர். ஞானசம்பந்தருடன் தங்கி இருந்து திருத்தலங்கள் பவலவற்றைத்
தரிசித்து வந்த அப்பரடிகள் ஒருநாள் அவரிடம் விடை பெற்றுக் கொண்டு
புறப்பட்டார். ஞானசம்பந்தர் திருத்தோணியப்பரைச் செந்தமிழ் மாலை
விகற்பங்களான திருமொழிமாற்று, திருமாலை மாற்று, வழிமொழித் திருவிராகம்,
திருஏகபாதம், திருவிருக்குறள், திருவெழுக கூற்றிருக்கை, திருவிராகம் போன்ற
பற்பல திருப்பதிகங்களை உள்ளம் உருக பாடிப் பரவசம் பூண்டார்.
இத்திருப்பதிகங்கள், மூல இலக்கியமாக வீடுபேற்றிற்கான உண்மை இயல்பினை
உணர்த்தும் சன்மார்க்க பதிகங்களாக அமைந்துள்ளன. ஒருநாள் தந்தையாருடன்,
பிள்ளையார் சிவயாத்திரையைத் தொடர்ந்தார். அதுசமயம் பாணரும் அவரது
மனைவியாரும் உடன் சென்றார்கள். சோழ நாட்டிலுள்ள பல சிவத் தலங்களை
தரிசித்தவாறு திருப்பாச்சிலாச்சிரமத்தை அடைந்தனர். திருக்கோவிலை வலம் வந்து
இறைவனைத் தொழுது நின்ற சம்பந்தர் இறைவன் திருமுன் கிடந்த கொல்லி மழவன்
மகளைக் கண்டார். மழநாட்டுத் தலைவன் கொல்லி மழவன் வலிப்பு நோயால் துன்புறும்
தன் மகளை இவ்வாலயத்தில் விட்டுச் சென்றுவிட்டான். இறைவன் அருளால் தன்
மகளுக்கு நோய் நீங்கும் என்றெண்ணித்தான் மழவன் இவ்வாறு செய்தான். இந்த
சமயத்தில், ஞானசம்பந்தர் ஆலயத்திற்கு வந்துள்ளார் என்பதைக் கேள்விப்பட்டான்
மன்னன். ஆளுடைப் பிள்ளையாரால் எப்படியும் தன் மகளுக்கு உடல் பூரண
குணமடையும் என்று மனம் குளிர்ந்த மழநாட்டுத் தலைவன் ஞானசம்பந்தரைக் காண
ஓடோடி வந்தான். தலைவன் ஞானசம்பந்தரிடம் மகளின் உடல்நிலையைக் கூறி வருந்தி
உள்ளம் உருகி நின்றான். ஞானசம்பந்தர் துணிவளர் திங்கள் எனத் தொடங்கும்
பதிகத்தை, மழவன் மகளின் வலிப்பு நோய் நீங்குமாறு உள்ளம் இரங்கிப் பாடினார்.
இறைவன் திருவருளால் ஞானசம்பந்தர் பதிகம் பாடி முடிந்ததும் தலைவன் மகள்
நோய் நீங்கி, சுய உணர்வு பெற்று எழுந்தாள். ஞானசம்பந்தரின் வியக்கத்தக்க
இவ்வருட் செயலை எண்ணி உள்ளமும் உடலும் பொங்கிப் பூரித்துப்போன தலைவனும்,
தலைவன் மகளும் தெய்வத் திருமகனின் தாள்தனில் வீழ்ந்து வணங்கி கண்களில்
ஆனந்தக் கண்ணீர் மல்க நின்றனர். ஞானசம்பந்தர் அவர்களை வாழ்த்தினார்.
அங்கியிருந்து புறப்பட்ட ஞானசம்பந்தர் மேலும் பல கோயில்களை வழிபட்ட வண்ணம்
கொங்கு நாட்டை வந்தடைந்தார். கொங்குநாட்டில் மக்களைக் கொல்லும் கொடும்
பனியைக் கண்டார். அவ்வினைக்கு இவ்வினை எனத் தொடங்கும் பதிகமொன்றைப் பாடிக்
கொடும் பனி அந்த நாட்டினைச் சேரா வண்ணம் பேரருள் புரிந்து மக்களைக்
காத்தார்.கொங்கு நாட்டு மக்கள் ஞானசம்பந்தரைப் போற்றி புகழ்ந்து வாழ்த்தி
வணங்கினர். இவ்வாறு இறைவனைத் தரிசித்துப் பதிகங்கள் பல பாடி, பாரோர்
புகழ்ப் பற்பல அற்புதங்களை நிகழ்த்தி, ஊர் ஊராகச் சுற்றி வந்த
ஞானசம்பந்தர், திருப்பட்டீ சுரத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனைத்
தரிசிக்கத் திருவுள்ளம் கொண்டு அத்திருத்தலம் நோக்கிப் புறப்பட்டார்.
ஞானசம்பந்தர் வெய்யிலில் நடந்து வரும்பொழுது திருவுளங் கனிந்த இறைவன்
அவருக்குப் பூதகணங்கள் மூலம் முத்துப்பந்தல் அமைத்து நிழல் கொடுக்கச்
செய்தார். முத்துப் பந்தலின் நிழலிலே திருப்பட்டீசுரத்தை அடைந்த
ஞானசம்பந்தர் எம்பெருமானை வழிபட்டுப் பதிகம் ஒன்றைப் பாடினார்.
அங்கியிருந்து புறப்பட்டுத் திருவாடுதுறையை வந்தடைந்தார் திருஞான
சம்பந்தர். அங்கு தொண்டர்களும், அடியார்களும், அந்தணர்களும், ஞானசம்பந்தரை
எதிர்கொண்டு அழைத்து வரவேற்று வணங்கினர். ஞானசம்பந்தர் அத்தலத்தில் சில
காலம் தங்கியிருந்தார். அப்பொழுது, அவருடைய தந்தையார் அவரிடம்,
சீர்காழியில் வேள்வி நடத்துவதற்குப் பொன்னும் பொருளும் வேண்டும் என்று
கேட்டார். ஞானசம்பந்தர் இறைவன் திருவடியை எண்ணித் திருப்பதிகம் ஒன்றைப்
பாடினார். இறைவன் ஒரு பீடத்தில் எடுக்க எடுக்க என்றும் குறையாத ஆயிரம் பொன்
நிறைந்த கிழி ஒன்றைக் கொடுத்து அருளினார். தந்தை சிவபாதவிருதயர் மனம் மகிழ
அதைக் கொண்டு வேள்வி நடத்துவதற்காகச் சீர்காழியை நோக்கிப் புறப்பட்டார்.
ஞானசம்பந்தரும் விடை கொடுத்து அனுப்பி வைத்தார்.

திருவாடுதுறையில்
தங்கியிருந்த சம்பந்தர் பாடினார். பாணர் யாழ் மீட்டி மகிழ்ந்தார்.
மெய்யன்பர்கள் இசை வெள்ளத்தில் மூழ்கினர்.அவ்வூரிலுள்ள பாணருடைய
உறவினர்களும், சுற்றத்தார்களும் தங்கள் அறியாமையால் ஞானசம்பந்தர் பாடும்
பதிகங்கள் பாணர் யாழ் மீட்டி வாசிப்பதால்தான் புகழ் பெறுகின்றன என்ற தவறான
எண்ணத்தைக் கொண்டிருந்தனர். அவ்வெண்ணத்தை அவர்கள் பாணரிடமே பெருமையுடன்
வெளியிடவும் செய்தனர். அதுகேட்ட பாணர், உளம் துடித்துப் போனார். ஞானப்
பாலுண்ட சம்பந்தரிடம், தன் சுற்றத்தாரின் அறியாமையையும் செருக்கையும்
அடக்கவேண்டும் என்று உள்ளமுருக வேண்டினார். அதைக் கேட்ட ஞானசம்பந்தர் மாதர்
மடப்பிடி எனத் தொடங்கிடும் திருப்பதிகமொன்றைப் பாடினார். பாணர்
அப்பதிகத்தை யாழில் மீட்டிப் பாட இயலாது செயலற்றுப் போனார். பாணர் கண்
கலங்கினார். வேதனை கருணையை உணராது யாழை உடைக்க முற்பட்டது தவறு. இந்தக்
கருவியில் முடிந்த அளவுக்கு எவை கிட்டுமோ அவற்றை முன்போல் இதனிலிட்டு
வாசிப்பீராக என்று ஞானசம்பந்தர் பாணருக்கு அன்பு கூர்ந்து அருளி
வாழ்த்தினார். பாணர் முன்போல் யாழில் பண் அமைத்துப் பதிகம் பாடினார்.
அதுகண்ட பாணருடைய உறவினர்களும், சுற்றத்தார்களும் தங்கள் தவற்றை
உணர்ந்தனர். ஞானசம்பந்தருடைய பாதங்களில் வீழ்ந்து வணங்கி, தங்கள்
தவற்றுக்கு மன்னிப்புக் கோரினர். அங்கியிருந்து சிவயாத்திரை புறப்பட்ட
ஞானசம்பந்தர் திருச்சாத்த மங்கையை அடைந்து, திருநீலநக்க நாயனாரைக் கண்டு
மகிழ்ந்து வேறு பல தலங்களைத் தரிசித்த வண்ணம் செங்காட்டங்குடி வழியாக
திருமருகல் என்னும் தலத்தை வந்தடைந்தார். திருமருகல் கோயில் மடத்தில்
தங்கியிருந்து எப்போதும் இறைவனை வழிபட்டு வந்தார் சம்பந்தர். ஒருநாள் அங்கு
வியக்கத்தக்க நிகழ்ச்சி ஒன்று நடந்தது. திருமருகல் கோயில் மடத்தில் ஒரு
கன்னிப் பெண்ணும் ஒரு வணிக மகனும் தங்கி இருந்தனர். அக்கன்னிப் பெண்ணின்
காதலனான வணிக மகன் ஓர்நாள் அவ்விடத்தில் பாம்பு தீண்டி உயிர் நீத்தான்.
காதலனுக்கு ஏற்பட்ட கதியை எண்ணிக் கன்னி மகள் துடித்தாள். பெற்றோருக்குத்
தெரியாமல் அத்தை மகனை மணக்க வேண்டும் என்று ஓடிவந்த தனது ஆசையில்
இப்படியொரு பேரிடி வீழ்ந்ததே என்றெண்ணி தத்தளித்தாள். அப்பெண்மணி வணிக
மகனைத் தீண்ட முடியாத நிலையில் தாங்கொணாத் துயரால் பலவாறு சொல்லி புலம்பிக்
கொண்டே இருந்தாள். அவளது புலம்பல் கோயிலை நோக்கி வரும் ஞானசம்பந்தர்
செவிகளில் விழுந்தது. வாடிய முகத்துடனும், வடிக்கும் கண்ணீருடனும் ஒடிந்து
விழுந்த பூங்கொடி போல் தன் நிலை மறந்து நின்ற வணிக மகள், ஞானசம்பந்தரைக்
கண்டாள். திருமருகல் தெய்வமே எழுந்தருளினாற்போல் சித்தத்தில் கொண்டாள்.
ஓடிச்சென்று அவரது பாதங்களில் வீழ்ந்தாள். ஞானசம்பந்தர் அப்பெண்மணிக்கு
ஆறுதல் மொழி கூறினார். அப்பெண்மணி தனது சோகக் கதையைச் சொல்லத் துவங்கினாள்.
நான் பிறந்த ஊர் வைப்பூர். தாமன் என்பவர் என் தந்தை. என் தந்தைக்கு
என்னுடன் ஏழு பெண்கள் உண்டு. இங்கு இறந்து கிடக்கும் என் அத்தை மகனுக்குத்
தன் பெண்களில் ஒருவரைக் கொடுப்பதாகச் சொல்லிய அவர், மற்ற ஆறு பெண்களில்
ஒருத்தியைக் கூட இவருக்குக் கொடுக்காமல் ஏமாற்றியதை எண்ணி மனம் பொறாத நான்,
இவரை அழைத்துக்கொண்டு இரவோடிரவாக இங்கு ஓடிவந்தேன்.வந்த இடத்தில் விதி
எனக்குச் சதி செய்துவிட்டது. என் வாழ்க்கைத் துணைவராக இல்லறத்தில் இருக்க
வேண்டிய என் அத்தை மகன் அரவத்தால் தீண்டப்பட்டு எனக்குமில்லாமல் இந்த
உலகத்திலும் நில்லாமல் போய்விட்டார் எனச் சொல்லி மேலும் புலம்பிக் கண்ணீர்
வடித்தாள். ஞானசம்பந்தர் கால்களில் விழுந்து அழுதாள் அந்த வணிகக் குலப்
பெண்மணி!

ஞானசம்பந்தர் திருமருகல் தெய்வத்தைப் பணிந்து எழுந்து,
சடையாய் எனுமால் எனத் தொடங்கி பதிகம் ஒன்றைப் பாடியருளினார். நீலகண்டப்
பெருமான் சம்பந்தரின் செந்தமிழ்ப் பண் கேட்டுச் சிந்தை மகிழ்ந்தார்.
திருமருகல் உறையும் உமையொருபாகன் வணிக மகனைக் காத்தார். இறைவனின் கருணையால்
வணிக மகன் உயிர் பெற்று எழுந்தான். அனைவரும் அதிசயித்து சம்பந்த பெருமானை
வணங்கி துதித்தனர்.வணிக மகனும், வணிக மகளும் ஞானசம்பந்தரின் பாத கமலங்களில்
வீழ்ந்து வணங்கினர். சம்பந்தர் இருவரையும், திருமணம் செய்து கொண்டு
என்றென்னும் நீடு புகழ் வாழ்வீராக என்று ஆசி கூறி வழி
அனுப்பினர்.ஞானசம்பந்தர் அத்தலத்தில் சில நாட்கள் தங்கியிருந்து, சிவ
வழிபாட்டை இடையறாது நடத்தி வந்தார். அந்நாளில், அவரைக் காண சிறுத்தொண்ட
நாயனார் வந்தார். இருவரும், ஒருவரை ஒருவர் வணங்கி மகிழ்ந்தனர். இருவரும்
திருமருகல் நீலகண்டப் பெருமானை வழிபட்டவாறு, அங்கியிருந்து புறப்பட்டு,
திருச்செங்காட்டாங்குடிக்கு வந்தனர். அங்கு கோவில் கொண்டுள்ள கணபதீச்சுரரை
வணங்கி வழிபட்டு வாழ்ந்து வரலாயினர். சில நாட்களில், அங்கியிருந்து
புறப்பட்டுத் திருப்புகலூரை அடைந்தார். அங்கு முருகநாயனார் தங்கியிருந்த
திருமடத்தில் தங்கினார். அச்சமயத்தில் அப்பரடிகள் தொண்டர் பலருடன்
திருப்புகலூரை வந்தடைந்தார். அப்பரடிகள் திருவாரூர் தரிசனத்தைப் பற்றிச்
சிந்தை குளிரும் பதிகத்தால் சிறப்புற எடுத்து இயம்பியதைக் கேட்ட
ஞானசம்பந்தருக்குத் திருவாரூர் சென்று புற்றிடம் கொண்ட பெருமானைப் போற்றிப்
பணிந்து வரவேண்டும் என்ற விருப்பம் உண்டாயிற்று. ஞானசம்பந்தர்
அப்பரடிகளைத் திருப்புகலூரிலேயே சில காலம் தங்கி இருக்கும்படி கூறி விட்டு
திருவாரூருக்குப் புறப்பட்டார். ஞானசம்பந்தர் திருவாரூர் செல்லும் வழியே
உள்ள சிவத்தலங்கள் பலவற்றைத் தரிசித்து மகிழ்ந்தவாறே திருவாரூரை வந்து
அடைந்தார். திருவாரூரில் தியாகேசப் பெருமானைக் கண்குளிரக் கண்டு களித்தார்.
தமிழ்ப் பாமாலை தொடுத்து இன்புற்றார். சில காலம் தங்கியிருந்து பேரின்பம்
கொண்டார். பின்பு திருவாரூரை நீத்துத் திருப்புகலூர் வந்தார். அங்கு
அப்பரடிகளோடு தங்கியிருந்து எம்பெருமானை வழிபட்டு வரலானார்.
திருப்புகலூர்ச் செஞ்சடை வண்ணர் அருள்பெற்று, இன்புற்று ஆளுடைப்
பிள்ளையாரும், அப்பரடிகளும் அங்கியிருந்து புறப்பட்டு மற்றும் பல
சிவத்தலங்களைத் தரிசித்து வரலாயினர். இரு ஞானமூர்த்திகளும் கால்நடையாகவே
சென்று கொண்டிருந்தனர். ஞானசம்பந்தர் இறைவன் தமக்களித்த முத்துப்பல்லக்கில்
அமர்ந்து வராமல் தம்முடன் நடந்து வருவது, அப்பருக்கு மன வேதனையைக்
கொடுத்தது.அப்பரடிகள் ஞானசம்பந்தரை நோக்கி, முத்துச் சிவிகைத்தனித்து வரத்
தாங்கள் கால் கடுக்க நடந்து வருதல் ஆகாது. தாங்கள் எம்பெருமான் அருளிச்
செய்த முத்துச் சிவிகையில் எழுந்தருள்க என்று அன்போடு வேண்டினார். அது
கேட்டு ஞானசம்பந்தர் சிறிதும் மனம் ஒவ்வாத நிலையில் அப்பரிடம், தாங்கள்
நடந்துவர நான் மட்டும் முத்துச் சிவிகையில் ஏறி வருவது முறையல்ல என்று
கூறினார். எனினும் எம்பெருமானின் திருவருட் கருணையை எண்ணிப் பார்த்த
ஆளுடைப் பிள்ளையார், தாங்கள் முன்னர் எழுந்தருளுங்கள், தங்கள் பின்னால்
நான் மெதுவாக வந்து சேருகிறேன் என்றார். அப்பரடிகளும் அதற்கு இசைந்தார்.
இவ்வாறாக அப்பரடிகள் முதலில் ஒரு திருத்தலத்தை சேர்வதும், பின்னார்
ஆளுடைப்பிள்ளையார் முத்துச்சிவிகையில் அத்தலத்தை அடைவதுமாக, இரு சிவநேசச்
செல்வர்களும் தங்கள் சிவ யாத்திரையைத் தொடர்ந்து நடத்திக் கொண்டே
இருந்தனர். இப்படியாக இரு திருத்தொண்டர்களும் திருக்கடவூர், திருவம்பர்
முதலிய தலங்களைத் தரிசித்தவாறு, திருவீழிமிழலையை வந்தடைந்தனர்.

அந்நகரத்துத்
தொண்டர்களும், அடியார்களும் இவர்களைப் போற்றி வணங்கினர். ஞானசம்பந்தர்
வீழிமிழலை எம்பெருமானைப் போற்றி சடையார் புனலுடையார் எனத் தொடங்கும் பதிகம்
ஒன்றை உள்ளமுருகப் பாடி எம்பெருமானின் சேவடியை வழிபட்டார்.ஆளுடை அரசரும்
ஆளுடைப் பிள்ளையாரும் தினந் தவறாது அரனாரை, அழகு தமிழ்ப் பா
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down


நாள்தோறும் நாயன்மார்கள்  - Page 2 Empty Re: நாள்தோறும் நாயன்மார்கள்

Post by மாலதி June 9th 2013, 08:25

சுந்தரர் பரவையாரிடம், முதுகுன்றூர் பெருமான் நமக்கு அளித்த பொற்குவியலை
மணிமுத்தாற்றில் இட்டோம். இப்பொழுது எம்பெருமான் திருவருளால்
அப்பொற்குவியலை இத்திருத்தலத்திலுள்ள கமலாலயப் பொய்கையிலே
எடுத்துக்காட்டுவேன். எம்முடன் பொற்றாமரைக் குளத்திற்கு வருவாயாக என்று
கூறியவாறு முதுகூரில் நடந்தவற்றை விளக்கினார்.அம்மையார் முகம் கமலம் போல்
மலர்ந்தது. அம்மையார் பெரும் வியப்பில் மூழ்கினாள். ஐயனே! தாங்கள்
இயம்புவது எமக்கு பெருத்த வியப்பினைக் கொடுக்கிறது. தாங்கள் கூறுவது
எங்ஙனம் சாத்தியமாகும்? என்று ஐயத்துடன் கேட்டாள். அவள் இதழ்களில்
புன்னகையும் மலரத்தான் செய்தது. சுந்தரர், பரவையாரையும் அழைத்துக் கொண்டு
கோயிலுக்கு புறப்பட்டார். பூங்கோயிலினுள் சென்று வான்மீகிநாதரின் பாத
கமலங்களைப் பதிகம்பாடிப் போற்றினார். கோயிலை வலம் வந்தார். மேற்கு திசையில்
அமைந்துள்ள கமலாலயக் குளத்தை அடைந்தார். கமலாலயத்தில் சுந்தரர்
பொற்குவியல் எடுக்கப் போகும் செய்தி எங்கும் பரவியது. அந்த அதிசயத்தைக் காண
திருக்குளத்தைச் சுற்றி அன்பர்கள் கூட்டம்! சுந்தரர் பரவையாரைக் கரையில்
ஒருபுறம் அமரச் செய்து குளத்துள் இறங்கினார். எம்பெருமானைத் தியானித்த
வண்ணம் பொற்குவியலைத் தேடலானார். அவரது பூங்கரத்தில் பொன் என்பதே
தென்படவில்லை. சுந்தரர் நீரிடை மூழ்கி, துருவி துருவித் தேடினார். மிக்க
சிரமத்துடன் தேடியும் நாடிவந்த பொன் மட்டும் கைக்குக் கூடிவரவில்லை. வாடிய
முகத்தோடு, சுந்தரர் நிற்பது கண்டு பரவையார், ஆற்றினில் இட்டுவிட்டு
குளத்தினில் தேடுகின்றீரே! என்று நகைப்போடு கேட்டவாறு புன்னகை பூத்தாள்.
சுந்தரரின் பைந்தமிழ்ப் பாமாலையில் பெரு விருப்பங்கொண்ட எம்பெருமான்,
வேண்டுமென்றே தான் பொற்றாமரைக் குளத்தில் பொன்னைத் தருவிக்காமல் இருந்தார்.
ஐயனின் திருவிளையாடல்தான் இதுவும்! என்பதை உணர்ந்தார் சுந்தரர்.
பழமலைநாதரை மனதில் நினைத்தவண்ணம் பொன்செய்த மேனியீர் எனத் தொடங்கும்
பதிகத்தை அன்பு கனிந்துருக, பக்தி பெருகிவர, செந்தமிழ்ப் பூவினால்
பாமாலைகளாய்த் தொகுத்து பரமனின் அணிமார்பில் சாத்தினார். பொற்குவியல் அவரது
கைக்கு கிட்டவில்லை! சுந்தரர்க்கு வேதனை மேலிட்டது! முதுகுன்றத்தில்
தந்தருளிய பொற்குவியலைப் பெற முடியாது வருந்தும் எம் துயரத்தை இப்பரவையார்
எதிரிலேயே தீர்த்தருளும் என்ற கருத்துடைய எட்டாவது பாடலைப் பாடினார்.
அப்படியும் பரமன் மனம் உருகி தமக்கு அருள் சுரக்காதது கண்டு வருந்தினார்.
அருட்பெருங்கூத்தனே! ஆனந்தத் தாண்டவனே! பழமலைநாதரே! பொற்குவியலை
இப்பரவையார் முன்னே தந்தருள்வாயாக! என்னும் பொருள்பட, ஏத்தாதிருந்தறியேன்
எனத் தொடங்கும் ஒன்பதாவது பாட்டால் இறைவனைத் துதித்துப் பாடியதும், இறைவன்
சுந்தரர்க்கு திருவருள் புரிந்தார். பொற்குவியலை அவரது கரத்திற்குத் தட்டு
பட செய்தார். மகிழ்ச்சி பொங்க, பொன்னோடு கரையேறினார் சுந்தரர். பொற்றாமரை
குளத்தில் கூடியிருந்தோர் பெரும் வியப்பில் ஆழ்ந்தனர். பரவையார் அதிசயித்து
நின்றாள். சுந்தரர், பொன்னின் மாற்றினை உரைத்துப் பார்த்து தாம் அடையாளமாக
எடுத்து வந்த பொன்னோடு ஒப்பிட்டுப் பார்த்தார். சற்று மாற்றுக்
குறைந்திருக்கக் கண்டு, இதுவும் திருநாவலுரான் திருவிளையாடலே என்று
எண்ணியவராய் மீண்டும் திருப்பாடல் ஒன்றைப் பாடினார். அக்கணமே பொன்னின்
மாற்று சரியானது. சுந்தரர் மகிழ்ச்சி கடலில் மூழ்கினார். பரவையார், இறைவன்
தமது நாயகியிடம் கொண்டுள்ள திருவருளை நினைத்து வியந்தார். அனைவரும் ஆனந்தக்
கூத்தாடினார்கள். குளத்தில் சூழ்ந்திருந்த தொண்டர் பலர், சுந்தரமூர்த்தி
சுவாமிகளின் திருவடியைப் போற்றினர். அவரை வாழ்த்தி மகிழ்ந்தனர். அவ்வாண்டு
பங்குனி உத்திரப் பெருவிழாவை சுந்தரரும் பரவையாரும் வெகு விமர்சையாக
கொண்டாடினர். சுந்தரரும் பரவையாரும் சில காலம் சிவத்தொண்டுகளைப் புரிந்து
வாழ்ந்து வந்தனர். சுந்தரர் திருத்தல யாத்திரை புறப்பட எண்ணினார். ஒருநாள்
பரவையாரிடம் விடை பெற்றுக் கொண்ட தொண்டர்கள் புடைசூழ திருத்தலங்களை
தரிசிக்கப் புறப்பட்டார். திருநள்ளாறு, திருக்கடவூர், திருவலம்புறம்,
திருச்சாய்க்காடு, திருவெண்காடு, திருநனிப்பள்ளி, திருச்செம்பொன்பள்ளி,
திருநின்றியூர், திருநீடுர், திருப்புன்கூர், திருக்கோலக்கா முதலிய
பதிகளில் எழுந்தருளியிருக்கும் தேவதேவரின் தூய திருவடிகளைப் பணிந்து
துதித்தார். திருப்பதிகம் பலவும் பாடி உள்ளம் உருகினார். சீர்காழியை
வந்தடைந்தார். திருத்தோணியப்பரைத் தொழுது வணங்கி பதிகம் பாடினார்.

திருஞானசம்பந்தர்
திருவடிகளை மனத்தால் தியானித்தவண்ணம் குருகாவூர் என்னும் திருப்பதியை
நோக்கி புறப்பட்டார். குருகாவூர் செல்லுகையில் சுந்தரரும் அவர் தம்
தொண்டர்களும் வழிநடந்த களைப்பினாலும், தாகத்தினாலும், பசியினாலும் உடல்
தளர்ந்தனர். இங்ஙனம் இவர்கள் துயறுருவதை உணர்ந்த சிவபெருமான் இவர்கள் வரும்
வழியே குளிர்ப்பந்தல் ஒன்றை அமைத்தார். தாம் வேதியர் வடிவம் பூண்டு,
சுந்தரரின் முன்னே எழுந்தருளினார். சுந்தரரும், அடியார்களும் தணலில் வெந்து
வாடிய மலர் போல், உடல்வாடி வந்து கொண்டிருக்கும் பொழுது சற்றுத் தொலைவில்
குளிர்ப்பந்தல் ஒன்று இருப்பது கண்டு அப்பந்தலை விரைந்து வந்து அடைந்தனர்.
அங்கு நின்று கொண்டிருந்த வேதியரை வணங்கி அனைவரும் உள்ளே சென்று
அமர்ந்தனர். வேதியர் வேடத்திலிருந்த வேதமுதல்வன், சுந்தரர்க்கும் அவரது
கூட்டத்தாருக்கும் உணவும், தண்ணீரும் அளித்தார். அனைவரும், வேதியரைப்
போற்றி துதித்தனர். சிவநாமத்தை தியானித்த வண்ணம் களைப்பு மேலிட துயின்றனர்.
சுந்தரர்க்குத் தொண்டு புரிந்த தில்லைநாதர், மறைந்தார். தம்மோடு தண்ணீர்ப்
பந்தலையும் மறையச் செய்தார். துயிலெழுந்த சுந்தரரும், தொண்டர்களும்
பந்தலையும், அந்தணரையும் காணாது திகைத்தனர். இதுவும் எம்பெருமானின்
திருவருட் கருணை என்பதை உணர்ந்து மனம் மகிழ்ந்தார் சுந்தரர்! இத்தனையாம்
ஆற்றை அறிந்திலேன் எனத் தொடங்கும் பதிகம் ஒன்றைப் பாடினார். அங்கிருந்து
தமது யாத்திரையை தொடர்ந்தார். குருகாவூர், வெள்ளடை, திருக்கழிப்பாலை போன்ற
தலங்களை தரிசித்தவாறு தில்லையை அடைந்தார். தில்லைவாழ் அந்தணர்கள் சுந்தரரை
எதிர்கொண்டு அழைத்தனர். அவர்களோடு சேர்ந்து நடராஜ தரிசனத்தைக்
கண்டுகளித்தார் சுந்தரர். அங்கிருந்து புறப்பட்டு நாவலூர் வழியாக
திருக்கழுக்குன்றத்தை வந்தடைந்தார். திருக்கழுக்குன்ற சிவாலய தரிசனத்தை
முடித்துக் கொண்டு திருக்கச்சூர் என்னும் தலத்தை வந்தடைந்தார். அத்தலத்தில்
காட்சிதரும் மாதொருபங்கனைப் பணிந்தவாறு, பசியினாலும், வழி நடந்த
களைப்பினாலும், உடல் வாட்டத்துடன் மதிற்புறத்தே வந்து தங்கினார். பசியால்
வருந்திடும் சுந்தரரின் பசியினைத் தீர்க்கத் திருவுள்ளம் கொண்ட
திருக்கச்சூர் பெருமான் முன்போல் வயது முதிர்ந்த அந்தணர் வடிவம் பூண்டார்.
கையிலே திருவோடு ஒன்றை ஏந்திக்கொண்டு, மதிர்ப்புறத்தே வந்தார். அவ்வேதியர்,
சுந்தரரைப் பார்த்து, நீர் உம் அன்பர்களுடன் பசியால் மிகவும் வருந்தி
இளைப்புற்றிருக்கின்றீர். உங்கள் பசி வேட்கை நீங்கும்படி இப்பொழுதே சென்று
நான் உமக்கு, சோறு இரந்து வந்து கொடுக்கிறேன். நீர் எங்கும் போய்விடாமல்
எமக்காக இங்கேயே சற்று நேரம் அமர்ந்திரும் என்று செப்பினார். சுந்தரரும்
வேதியரின் இன்மொழிக்கு மறுமொழி செப்பினாரில்லை. வேதமுதல்வன், வெள்ளிய தூய
வெண்ணீற்றின் அழகு திகழவும், அழகிய முப்புரிநூலின் பேரொளி அசைந்து
விளங்கவும், பாதகமலங்கள் நிலவுலகில் தோயவும், கண்டவர் மனமெல்லாம் உருகவும்,
கடும் பகலில், திருக்கச்சூர் வாழும் அந்தணர்களின் வீடுதோறும் சென்று
சோற்றினை இரந்து பெற்றார். தடுத்தாட்கொண்டருளிய தம்பிரான் தோழரின் பசியைப்
போக்க, இத்தகைய அன்புச் செய்ல் புரிந்த ஈசன், பிச்சை எடுத்துப் பெற்ற
அமுதுடன் ஆரூரார் முன் வந்தார். அமுதினைக் கொடுத்தார். இவ்வமுதினையும்,
காய்கறிகளையும் உண்டு பசியைத் தீர்த்துக் கொள்வீர்களாக! என்று முகம் மலர
திருவாய் மலர்ந்தார் ஈசன். சுந்தரரும், அடியார்களும் அமுதினை உண்டு
மகிழ்ந்தனர். அதற்குள், அருள் வடிவமான அண்ணலார் மறைந்தார். வேதியர்
மறைந்தது கண்டு சுந்தரர் மனம் வாடினார். எம்பெருமான், தம்பொருட்டு செய்த
அருஞ்செயலை எண்ணிக் கலங்கினார். நாதச்சிலம்பணிந்த சேவடி நோவ நண்பகலில்
நிலவுலகில் எழுந்தருளிய ஐயனின் பெருங்கருணையை எண்ணிப் பார்த்து மனம்
உருகினார். விழிகளில் நீர் வழிய, முதுவாயோரி எனத் தொடங்கும் திருப்பதிகம்
ஒன்றைப் பாடிப் பணிந்தார். அங்கு திருக்கூட்டத்தாருடன் சில நாட்கள்
தங்கியிருந்தார். அங்கிருந்து புறப்பட்டு காஞ்சிபுரத்தை வந்தடைந்தார்.
சுந்தரரின் வருகையைப் பற்றி முன்னதாகவே அறிந்த காஞ்சிநகரத்து மெய்யன்பர்கள்
சுந்தரரை எதிர் கொண்டழைக்க மேளவாத்தியங்களுடன் காஞ்சி நகரின் எல்லைக்கு
வந்தனர். சுந்தரரைப் பூரண பொற்கும்ப கலசங்களுடன் மலர் தூவி
எதிர்கொண்டழைத்து நகரத்துக்குள் பிரவேசித்தனர். சுந்தரர் அன்பர்களும்,
அடியார்களும் புடைசூழ, மங்கல இசைகள், வேத முழக்கத்தோடு சேர்ந்து ஒலிக்க,
அலங்காரமாக விளங்கும் பெருமாட வீதி வழியே திருக்கோயிலை வந்தடைந்தார்.
சுந்தரர், சிரமீது கரங்கூப்பிக் கொண்டு, அகத்தெழுந்து எழில் மேவும் அணி
மாளிகைகள் பலவற்றையும் தனித்தனியே வலம் வந்து வழிபட்டவாறே, திரு ஏகம்பர்
திருச்சன்னதிக்குள் சென்றா

மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

நாள்தோறும் நாயன்மார்கள்  - Page 2 Empty Re: நாள்தோறும் நாயன்மார்கள்

Post by மாலதி June 9th 2013, 08:26

காமாட்சி அம்மையார் வழிபடும் ஏகம்பவாணரின் திருவடியை வீழ்ந்து வணங்கி பக்தி
வெள்ளத்தில் மூழ்கினார். அருள்வடிவமாய் நின்றார். பக்திப்பெருக்கால்
பரவசமாகிப் பாடிப் பரவினார். சுந்தரர் காமாட்சி அம்மனையும் தரிசித்து
சிந்தை குளிர்ந்தார். காஞ்சிபுரத்திலேயே திருத்தொண்டர்களுடன் சில நாட்கள்
தங்கியிருந்து அடுத்துள்ள பல சிவன் கோயில்களையும் வழிபட்டு வந்த சுந்தரர்,
மீண்டும் தமது சிவயாத்திரையைத் தொடர்ந்தார். திருவன் பார்த்தான்,
பனங்காட்டூர், திருமாற்பேறு, வல்லம் முதலிய தலங்களை தரிசித்து துதித்த
வண்ணம் காளத்தி மலையை அடைந்தார். கண்ணப்பருக்கு அருள் தந்து, தம் அடிச்
சேர்த்துக் கொண்ட குடுமித்தேவரின் திருவடியைப் போற்றி, செண்டாடு விடையாய்
எனத் தொடங்கும் பதிகம் ஒன்றைப் பாடி மகிழ்ந்தார். அங்கிருந்து புறப்பட்டு
திருவொற்றியூரை வந்தடைந்தார் சுந்தரர்! சுந்தரர் திருக்கோபுரத்தை
வணங்கியவாறு திருமாளிகையினை வலம் வந்து, பாட்டும் பாடிப் பரவி எனத்
தொடங்கும் திருப்பதிகம் ஒன்றைப் பாடினார். திருவொற்றியூரானை விட்டுப் பிரிய
மனம் வராத சுந்தரர், திருக்கூட்டத்தாருடன் திருவொற்றியூரிலேயே தங்கலானார்.
திருவொற்றியூர் என்னும் தலத்தருகே, ஞாயிறு என்னும் ஊரில், வளம் கொழிக்கும்
வேளாண்மரபில் ஞாயிறுகிழார் என்னும் பெயருடைய பெருஞ்செல்வர் ஒருவர்
வாழ்ந்து வந்தார். இப்பெரியார் செய்த அருந்தவப் பயனாய், திருக்கயிலை
மலையில் உமையாளுக்குத் திருத்தொண்டு புரிந்து வந்து மங்கையர் இருவரில்
ஒருவரான அநிந்திதையார், அன்புத் திருமகளாய் வந்து பிறந்திருந்தாள்.
ஞாயிறுகிழார், தமது அழகு மகளுக்கு சங்கிலியார் என்னும் நாமத்தை சூட்டி
மகிழ்ந்தார். சங்கிலியார், இறைவன் அருளால் அழகோடும், பக்தியோடும், சிறந்த
ஆற்றலோடும், தெய்வத்தன்மை மிக்க பொற்புடைச் செல்வியாய் விளங்கினாள். நாளொரு
மேனி கண்டாள். பொழுதொருவண்ணம் கண்டாள். எழில்பொங்கும் மங்கைப்
பருவத்தையும் கண்டாள். திருமணப் பருவம் எய்திய சங்கிலியாருக்கு, தங்கள்
குலநலத்துக்கும், பண்பிற்கும் தக்கபடி ஒருவரைத் தேர்ந்தெடுத்து மணமுடிப்பது
என்ற தீர்மானத்திற்கு வந்தனர் பெற்றோர். பெற்றோர்களின் இத்தகைய உள்ளக்
கருத்தினை அவர்களது உரையாடல் பலவற்றுள்ளிருந்து உணர்ந்து கொண்ட
சங்கிலியார், பெரும் வேதனையடைந்தாள். தனது லட்சியத்தை பெற்றோர்களிடம் கூற
முடியாமல் தவித்தாள். ஒருநாள், தனது எண்ணத்தைக் கூறக்கூடச் சக்தியற்ற
நிலையில், அஞ்சி நடுங்கியவளாய் மயக்கமுற்றாள்.எதிர்பாராமல், மகள்
மயக்கமுற்று விழுந்ததைக் கண்ட ஞாயிறுகிழாரும், அவரது மனைவியாரும் உள்ளத்
தடுமாற்றத்துடன், விரைந்து சென்று குளிர்ந்த நீரைக் கொண்டு வந்து,
அம்மையாரின் முகத்தில் தெளித்தனர். சங்கிலியாரும் சற்று நேரத்தில் மூர்ச்சை
தெளிந்து எழுந்தாள். பெற்றோர்கள் வேதனையால் பெருமூச்செறிந்தனர். அன்பு
மகளே! உனக்கு யாது குறை? எது கருதி இவ்வாறு மயக்கம் ஏற்படும் நிலையை
அடைந்தாய்? உள்ளத்தில் எதையாவது எண்ணிச் சொல்ல முடியாமல் தவிக்கின்றாயா?
சொல்! தயங்காதே! என்றனர். சங்கிலியார், சற்றும் தயங்காமல் மனதை
உறுதிப்படுத்தியவாறு, பெற்றோர்களிடம் தமது உள்ளக் கிடக்கையை வெளியிட்டாள்.
என் திருமணம் பற்றி நீங்கள் பேசி வருவதை நான் அறிந்தேன். எவருக்காகிலும்
என்னை மணம் முடித்து விடவேண்டும் என்பது என் முடிவிற்கு சற்றும்
பொருந்தாது. எம்பெருமானின் திருவருளைப் பரிபூரணமாகப் பெற்ற திருவருட்
செல்வருக்குத்தான் உரியவளாவேனே தவிர, மற்றெவர்க்கும் அல்ல. அதனால் என்னைத்
தடுக்காதீர்கள். நான் திருவொற்றியூரை அடைந்து சிவபெருமான் திருவருள்
வழியிலேயே ஒழுகி நிற்க ஆசைப்படுகிறேன். எனக்கு சம்மதம் சொல்லுங்கள்.
பெற்றோர்களுக்கு இடி இடித்தாற்போல் இருந்தது. பயமும், பீதியும், பரிவும்,
பாசமும், அச்சமும் எல்லாம் ஒன்றோடொன்று சேர்ந்து அவர்களைக் கதி கலங்கச்
செய்தது. இருப்பினும் அவர்கள், சங்கிலியார் கூறியவற்றை வெளியே தெரியாவண்ணம்
அப்படியே மறைத்து விட்டனர்.

சங்கிலியாரின் வைராக்கிய குணத்தை உணரப்
பெறாதவனாகிய ஒரு செல்வந்தன், சங்கிலியாரைத் தனக்கு மணம் பேச சிலரை
ஞாயிறுகிழாரிடம் அனுப்பி வைத்தான். மணம் பேச வந்தவர்களை எங்ஙனம் திருப்பி
அனுப்பி வைப்பது என்பது புரியாது, தர்மசங்கடமான நிலைக்கு ஆளான பெற்றோர்,
சங்கிலியாரைப் பற்றிய உண்மையான விவரங்களைக் கூறுவது சிறப்புடையதன்று என்று
நினைத்தவராய், அவர்களிடம் தந்திரமாகப் பேசி, மிக்க சாமர்த்தியமாக திரும்ப
அனுப்பினர். இதே சமயத்தில் அச்செல்வந்தன் எதிர்பாராமல் மரணம் அடைந்தான்.
இந்நிகழ்ச்சி ஞாயிறுகிழார் செவிகளுக்கு எட்டியது. அவரும் மனம் புண்பட்டார்.
இவ்விவரம் உற்றார் உறவினருக்கும் தெரியவந்தன. இதனால் சங்கிலியாரைப் பற்றிய
பல தப்பான எண்ணங்களும், பேச்சுக்களும் மக்கள் மத்தியில் புயலெனப்
புகுந்தது. இந்நிகழ்ச்சி நடந்த பிறகு சங்கிலியாரை மணம் பேச உறவினர்களோ,
சுற்றத்தார்களோ எவருமே வரவில்லை. பெற்றோர்கள், தெய்வத்தன்மை மிக்க
சங்கிலியாரை இனியும் அவளது விருப்பத்திற்கு மாறாக வீட்டில் வைத்துக் கொண்டு
இருக்க விரும்பவில்லை. அவளது உள்ளக்கருத்திற்கு ஏற்ப, திருவொற்றியூர்
கோயிலில் கொண்டு போய்ச் சேர்த்து விடுவது என்று எண்ணினர். திருவொற்றியூரில்
கன்னிமாடம் ஒன்றை அமைத்து சங்கிலியாரை அங்கேயே வாசம் புரிய வழி செய்தனர்
பெற்றோர்கள். திருவொற்றியூரில் இறைவன் கோயிலின் பக்கத்தில் கட்டியிருந்த
கன்னிமாடத்தில், சங்கிலியார் அருந்தவசியைப் போல் வாழ்வை நடத்தினாள்.
அம்மையாருக்குப் பணிவிடை செய்ய சேடிகளும், ஏவல் புரியும் பெண்டிர்களும்
இருந்தனர். எம்பெருமான் நினைவாகவே வாழ்ந்து வரும் சங்கிலியார், வைகறைப்
பொழுது தூய நீராடி, அழகிய நெற்றியில் திருவெண்ணீற்றை அணிந்து கொண்டு,
சேடிகளுடன் மலர்வனம் செல்வாள். விதவிதமான வாசமிகு மலர்களை நிறையப் பறித்து
வந்து, வெவ்வேறாக பிரித்து எடுத்து கொள்வாள். அவற்றை சற்றும் கசங்காமல்
எடுத்துக் கொண்டு வந்து தனி இடத்தில் அமர்ந்து பல்வேறு திருமாலைகளாக உரிய
காலத்திற்கு ஏற்றபடிக் காட்டுவாள். வழிபாட்டுக் காலங்களில் திருமாலைகளை,
திருவொற்றியூர்ப் பெருமானின் பாத கமலங்களிலே அன்போடு சாத்தி வழிபடுவாள்.
உள்ளன்போடு, திருவைந்தெழுத்து மந்திரத்தை இடைவிடாமல் ஓதிக்கொண்டிருப்பாள்.
இங்ஙனம், கன்னிமாடத்தில் சங்கிலியார் சங்கரனின் செஞ்சேவடிகளுக்குத்
திருத்தொண்டு புரிந்தவாறு வாழ்ந்து வரலானாள். சங்கிலியார், கன்னி மாடத்தில்
தங்கியிருக்கும் தருணத்தில் சுந்தரர், திருவொற்றியூருக்குத் தமது
திருக்கூட்டத்தாருடன் வந்து சேர்ந்தார். மடம் ஒன்றில் தங்கியிருந்து
நாடோறும் எம்பெருமானை வணங்கி வந்தார். ஒருநாள், சுந்தரர் அன்பர்களுடன்,
ஆலயத்தை வலம் வந்த வண்ணம் மண்டபத்தினுள் புகுந்தார். அவ்வமயம், சங்கிலியார்
எம்பெருமானுக்குச் சாத்துவதற்காக, வாசமிகு நறுமலர் மாலையைக் கையில் ஏந்திய
வண்ணம் திரை மறைவிலிருந்து வெளியே வந்தாள். நொடிப் பொழுதில் சங்கிலியார்,
மாலையை அர்ச்சகரிடம் கொடுத்து விட்டு, மின்னல் போலத் திரைக்குள் மறைந்து
கன்னிமாடம் சென்றாள். தென்றலாக வந்து மின்னலாக மறைந்த சங்கிலியாரைத் தம்
ஊழ்வினைப் பயனாலேயே கண்ணுற்றார் சுந்தரர். அந்த எழிற் பாவையின் ரூப
லாவண்யத்தில் தம்மை மறந்து நின்றார். தம் எதிரிலே வானவில் போல் அழகுறத்
தோன்றி மறைந்த எழுதாத ஓவியத்தின் ஒப்பற்ற பொன்மேனி அழகில் மனம் பேதலித்துப்
போனார். கோவைபடாத முத்தினையும், வண்டுகள் மொய்க்காத மென்மையான
அரும்பினையும் ஒத்த சங்கிலியாரைச் சந்தித்த சுந்தரர், மனம் தடுமாறினார்.
உணர்வு மங்கினார், மையல் நோயின் துன்பம் தாளாது அருகிலிருந்தவர்களிடம்
சங்கிலியாரைப் பற்றி விசாரித்தார். இங்கு திரைமறைவிலிருந்து தோன்றி
மறைந்தவள் யார்? பொன்னும், மணியும் ஒளியிடும் புத்தொளியின் புதுச்சுவையோடு,
அமிழ்தத்தையும் கலந்து, தண்நிலவின் நீர்மையாலே குழைத்துச் செய்த அழகுப்
புதுமை பூத்துக் குலுங்குகின்ற புதுமலர் போன்ற பெண்ணொருத்தி என்னை உள்ளம்
திரியும்படிச் செய்தனள். அப்பெண்மனி யார்? அவள் எங்குள்ளாள்? என்று
வினவினார் சுந்தரர். அருகிலுள்ளோர், அவள் பெயர் சங்கிலியார் என்பதையும்,
தெய்வத் தன்மை பொருந்திய அவள் அருந்தவத்தினால், எம்பெருமானின்
பாதகமலங்களைப் போற்றி வணங்கி வரும் கன்னியராவாள் என்று விடையிறுத்தனர்.
சங்கிலியாரைப் பற்றிய விவரங்களைத் தெளிவாகத் தெரிந்துகொண்ட சுந்தரர்,
பரவையாரைப் பரமன் அருளாள் மணம் புரிந்தாற்போல் சங்கிலியாரையும் அடைந்தே
தீருவேன் என்று தமக்குள் தீர்க்கமானதோர் முடிவிற்கு வந்தார்.

எம்பெருமானே!
உமையாளைப் பொன் திருமேனியில் மறைத்ததுமன்றித் திருச்சடையில் கங்கையையும்
மறைத்து எழுந்தருளும் மறை முதல்வனே! எமக்குற்ற துன்பத்தைத் தீர்த்தருள
வல்லவர் நீவிர் ஒருவரே! அன்று பரவையாரை எமக்குத் திருமணம் செய்து வைத்த
தேவாதி தேவா! இன்று, உமது பாதகமலங்களுக்குச் சாத்த பூமாலையினைத் தொடுத்துக்
கட்டி மகிழும் சங்கிலியார் எனும் அழகுக்கோதை, எனது உள்ளமெனும் பூமாலையினை
அவிழ்த்து எமக்கு அவள்பால் ஆராக் காதலைத் தோற்றுவிட்டாள். இத்தருணமும்
ஐயன், எமக்காக எழுந்தருளி என் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட சங்கிலியாரை எமக்கு
அளித்து என் துயரைப் போக்க வேண்டும். உம் திருத்தாளினை எண்ணுகின்ற எனது மன
வலிமையை உடைந்து போகுமாறு அவள் செய்துவிட்டாள். இனியாது செய்வதென்பது
அறியாது மனம் பேதலித்து நிற்கும் என்னைக் காத்து, அருள் புரியும் என்று
இறைஞ்சினார் சுந்தரர். அன்றிரவு சங்கிலியார் நினைவாகவே, ஒருபுறத்தே
துயின்றார் சுந்தரர்! எம்பெருமான், சுந்தரரின் கனவிலே எழுந்தருளி, அன்ப!
இந்நிலவுலகில் யாவருக்கும் கிட்டாத அருந்தவத்தினையுடைய சங்கிலியாரை, உனது
விருப்பப்படி மணம் முடித்து வைப்போம் என்றார். மறை முதல்வன், வேதியர்
வடிவம் கொண்டு, சங்கிலியார் கனவிலும் எழுந்தருளினார். சங்கிலியார் செஞ்சடை
அண்ணலின் பொன்சேவடிகளைப் பணிந்து, தேவரீர்! இந்த அடிமை உய்யும் பொருட்டு
எழுந்தருளிய பெரும் பேற்றுக்கு யாது கைம்மாறு செய்வேன்? என்று சொல்லிப்
பரவசமுற்றாள். சிறந்த தவத்தினையுடைய சங்கிலியே! எம்பால் அன்புடையவனும்,
மேருமாமலையைவிட மேம்பட்ட தவத்தினையுடையவனும், வெண்ணெய்நல்லூரில் எம்மால்
தடுத்தாட் கொள்ளப்பட்டவனும் ஆகிய சுந்தரன் எனும் தொண்டன், உன்னை
அடையக்கருதி எம்மிடம் வந்து இரந்து நின்றான். அவன் விருப்பத்தை
நிறைவேற்றும் பொருட்டே யாம் இங்கு வந்துள்ளோம். நீ அவனை மணந்து வாழ்ந்து
மகிழ்வாயாக! என்று எம்பெருமான் திருவாய் மலர்ந்தார். எம்பெருமானே! என்
ஐயனே! உமது திருவருட் கட்டளையைச் சிரமேற் கொண்டேன். ஆனால், அவர் பரவையாரை
மணந்து திருவாரூரில் சுகமாக, மகிழ்ச்சி பொங்க வாழ்கிறார் என்பது உலகறிந்த
உண்மையாயிற்றே. அங்ஙனமிருக்க என்னை அவருக்குக் கொடுத்தருளுவது எங்ஙனம்
சாத்தியமாகும்? தேவரீர் திருவுள்ளம் கொண்டு, அதற்கு ஒரு வழிமார்க்கம்
செய்து என்னை அவருக்கு அடிமையாக்க அருள் செய்தல் வேண்டும் என்று பணிவன்போடு
கேட்டுக் கொண்டாள் சங்கிலியார்! சங்கிலியே! சுந்தரன் உன்னை விட்டுப்
பிரியாமல் இருப்பதற்கு, உன்னிடம் ஒரு உறுதிமொழி அளிக்குமாறு செய்கிறேன்
என்று அருளி மறைந்தார். எம்பெருமான் முன்போல் சுந்தரர் கனவில்
எழுந்தருளினார். சுந்தரர் பரமனைத் தொழுது நின்றார். ஆரூரா! உன்
விருப்பத்தைச் சங்கிலியாரிடம் கூறினோம்; ஆனால், அவளை நீ மணம் செய்து
கொள்வதில் ஒரு நிபந்தனை ஏற்பட்டுள்ளது. ஐயனே! இந்த அடியேன் ஏற்க வேண்டிய
நிபந்தனை யாதோ? சுந்தரா! நீ சங்கிலியை மணப்பதற்கு அவளுக்கொரு சபதம் செய்து
கொடுத்தல் வேண்டும். எம்பிரானே! மாதவம் புரியும் மங்கையான சங்கிலியை மணக்க,
ஐயனின் ஆணைப்படி எவ்வித சபதம் செய்தல் வேண்டும்? அவளைவிட்டுப் பிரியாமல்
என்றென்றும் அவளுடனேயே இருப்பேன், என்று உறுதிமொழி கொடுத்தல் வேண்டும்.
எம்பெருமானே! திருத்தலங்கள் தோறும் சென்று ஐயனைத் தரிசிக்காமல் என்னால்
இருக்க முடியாது. அதனால், தங்கள் ஆணைப்படி, சங்கிலிக்கு நான் உன்னைப்
பிரியேன் என்ற சபதம் செய்து கொடுப்பதற்காக, தங்கள் திருமுன்னே அவளோடு
வரும்பொழுது, அடியேன் பொருட்டு ஐயன் திருக்கோயிலை விட்டு அகன்று மகிழ
மரத்தின் கீழே எழுந்தருளல் வேண்டும் என்று வேண்டிக் கொண்டார் சுந்தரர்!
அங்ஙனமே செய்வோம் என்றார் எம்பெருமான். செஞ்சடைவண்ணர், முன்போல்
சங்கிலியார் முன்னால் எழுந்தருளி, சாரும் தவத்துச் சங்கிலியே, கேள்!
சுந்தரன் என்னுடைய திருச்சந்நிதி முன்பாக வந்து நின்று உனக்கு சபதம் செய்து
தருகிறேன் என்பான். அது சமயம் நீ அவனது விருப்பத்திற்கு இசையாது, அவனை
மகிழ மரத்திற்கு கீழே நின்று சபதம் செய்து தருமாறு கேட்டுக்கொள்வாயாக!
என்றார். சங்கிலியார், எம்பெருமானின் திருவடியைத் தொழுது எழுந்து,
கரங்கூப்பி, மாலவனால் அறிவதற்கரியவரே! இத்தகைய ரகசியத்தை எமக்கு அருளிச்
செய்து காத்தமையால் யான் ஐயனின் அடியேனாக ஏற்றுக்கொள்ளப் பெற்றேன் என்று
கூறினாள். எம்பெருமான் சங்கிலியாரை வாழ்த்தி மறைந்தார். இவ்வாறு தமது
அன்புத்தொண்டர்களுக்காக அற்புதத் திருவிளையாடல் நடத்தி ஆனந்தித்தார்
திருவொற்றியூர் பெருமான்

மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

நாள்தோறும் நாயன்மார்கள்  - Page 2 Empty Re: நாள்தோறும் நாயன்மார்கள்

Post by மாலதி June 9th 2013, 08:26

சங்கிலியார் விழித்தெழுந்தாள். சுற்றும் முற்றும் பார்த்தாள். அதுவரை தம்
எதிரிலேயே எழுந்தருளி ஆட்கொண்ட எம்பெருமானைக் காணாது கலங்கினாள். இறைவனின்
அன்பின் திறத்தினை எண்ணி, எண்ணி பெரும் வியப்பு கொண்டாள். சற்று நேரம் யாது
செய்வதென்பதறியாது மனம் குழம்பிப் போன சங்கிலியார், உறக்கம் வராமல்
தவித்தாள். சற்று சிந்தித்தாள். சட்டென்று ஏதோ ஒரு முடிவிற்கு வந்து தம்
அருகே படுத்து உறங்கிக் கொண்டிருக்கும் சேடியர்களை எழுப்பினாள். அவர்களும்
திடுக்கிட்டு விழித்தெழுந்தனர். அத்தோழியர்களிடம் இறைவர் தமது கனவில்
எழுந்தருளி திருவாய் மலர்ந்து அருளிய நிகழ்ச்சியைப் பற்றிக் கூறினாள்.
மறுநாள் சங்கிலியார், தோழியருடன் திருமாலைகள் சாத்துவதற்காக வேண்டியளவு
நறுமலர்களைப் பறித்துக் கொண்டாள். திருக்கோயிலை வந்தடைந்ததாள். சுந்தரரும்,
சங்கிலியாரை எதிர்பார்த்து கோயிலுக்கு வந்திருந்தார். அவளருகே சென்று,
எம்பெருமான் தமது கனவில் எழுந்தருளி திருவருள் புரிந்ததனை இயம்பினார்.
அம்மொழி கேட்டு சங்கிலியார் நாணத்தால் கன்னம் சிவக்க, புன்னகையை
சிந்திவிட்டு, இட்ட அடி நோக, எடுத்த அடி கொப்பளிக்க, செக்க சிவந்த
மென்சீரடி எடுத்து அன்னம்போல நடந்து கோயிலுள் புகுந்தாள். சுந்தரர்
சங்கிலியார் பின்சென்று, ஆயிழையீர்! எம்பெருமான் திருவாய் மலர்ந்து
அருளியதற்கு ஏற்ப, உம்மை மணந்து என்றும் பிரிந்து போகாத நிலையில்
இவ்வூரிலேயே வாழ்கிறேன் என்று ஆணையிட்டுத் தருகிறேன். அதனால் எம்பெருமான்
திருமுன்பு வருவீர்களாக! என்று கேட்டுக் கொண்டார். எமது பெருமானே! இதற்காக
இறைவன் முன்பு ஆணையிட்டுத் தருவதென்பது தகாத செயலாகும் என்றனர் சேடியர்!
சேடியர் சொல்லியவற்றைக் கேட்டு, சுந்தர் பெண்களே! எம்பெருமானின் திருமுன்
சபதம் செய்து தருவதை விட வேறு சிறந்த இடம் எங்குள்ளது? மகிழ மரத்தின் கீழே
இருந்து சத்தியம் செய்து கொடுத்தால் அதுவே எங்களுக்கும், எங்கள்
தலைவிக்கும் போதுமானதாகும். சுந்தரர் சற்று திடுக்கிட்டார். மகிழ
மரத்தடியில் அல்லவா எம்பெருமானை எழுந்தருளியிருக்கச் சொன்னோம் என்றெண்ணி
நிலை தடுமாறினார். இருந்தும் சுந்தரர் தமது தயக்கத்தையோ, ஐயத்தையோ
வெளிப்படுத்தவில்லை! தோழியர்கள் விருப்பத்திற்கு மாறாக நடக்க
விரும்பவில்லை. துணிந்து அவர்கள் வினவியதற்கு ஏற்ப மகிழ மரத்தடியில் சபதம்
செய்து கொடுப்பது என்ற தீர்மானத்திற்கு வந்தார். அவர்களை அழைத்துக் கொண்டு
மகிழ மரத்தருகே சென்றார். சுந்தரர் மகிழ மரத்தை வலம் வந்து எம்பெருமானை
மனதில் தியானித்தார். திருவொற்றியூரை விட்டு அகன்று உன்னை என்றும் பிரியேன்
என்று சங்கிலியாருக்கு திருத்தமாக சத்திய சபதம் செய்து கொடுத்தார்
சுந்தரர்! சங்கிலியார், எடுத்த பிறவியின் முழுப்பயனையும் பெற்றுவிட்ட
பேரின்பக் களிப்பில், சுந்தரர் திருவடி வீழ்ந்து வணங்கினாள். சேடியர்களுடன்
சுந்தரரிடம் விடைபெற்றுச் சென்றாள். சுந்தரர், இறைவனின் பாதகமலங்களைப்
பணிந்து பதிகம் பாடி துதித்தார். அன்றிரவே எம்பெருமான், சுந்தரர்க்கும்,
சங்கிலியாருக்கும் திருமணத்தை நடத்திவைக்கும் பொருட்டு,
திருவொற்றியூரிலுள்ள சிவத்தொண்டர் கனவில் எழுந்தருளி, எம்மால் தடுத்தாட்
கொள்ளப்பட்ட வன்றொண்டனுக்கும், மாதவமிக்க மங்கை நல்லாள் சங்கிலிக்கும்
திருமணத்தை நடத்தை வைப்பீர்களாகுக என்று கட்டளையிட்டார். மறுநாள்,
அச்சிவத்தொண்டர்கள் சங்கிலியாருக்கும், சுந்தரருக்கும் திருமணத்தை
நடத்துவதற்கான ஏற்பாட்டைத் தொடங்கினர். சங்கிலியார் பெற்றோர்களிடம்
விவரத்தைக் கூறினாள். அவர்களும் மகிழ்ந்தனர். மங்களகரமான நன்னாளன்று உலகமே
வியக்கும் வண்ணம் சுந்தரருக்கும், சங்கிலியாருக்கும் மிக்கச் சிறப்புடன்
திருமணம் நடந்தது. இறைவனின் அருள்பெற்ற சங்கிலியாரும், சுந்தரரும் இல்லற
வாழ்க்கையை இனிது நடத்தினர். சங்கிலியார் பூமாலையால் பரமனைப் பணிய,
சுந்தரர் பைந்தமிழ் பாமாலையால் பரமனைப் பணிந்தார். இருவரும் நாடோறும்
திருவொற்றியூர் ஆலயத்தை வலம் வந்து, நலந்தந்த நாதன் மலரடியைத் தொழுது
வணங்கி சிவத்தொண்டுகள் பல புரிந்து இல்லறமெனும் இன்பக் கடலில் மூழ்கி
மிதந்து எல்லையில்லா இன்பம் பூண்டு வாழ்ந்து வரலாயினர். வசந்த காலம்
வந்தது! திருவாரூர் வீதிவிடங்கப் பெருமானுக்கு வசந்த காலத்தில் தான்
பெருவிழா நடைபெறுவது வழக்கம். பொங்கு தமிழ் வளர்கின்ற பொதிய மலையிலே தோன்றி
சந்தன மரங்களிடையே தவழ்ந்து, மலைச்சாரல்களிடையே வளர்ந்து வரும் தென்றல்
காற்று சுந்தரர் மேனியில் பட்டு இன்பக் கிளுகிளுப்பை ஏற்படுத்தியது.
இத்தகைய வசந்த காலத் தென்றலில் சுந்தமூர்த்தி நாயனார் சங்கிலியாருடன்
சுந்தரகீதம் பாடிய வண்ணம் சொக்கி மகிழ்ந்து கொண்டிருந்தார். அவரது
உள்ளுணர்வு வசந்த காலத்தில் திருவாரூரில் நடைபெறும் திருவிழாக்
காட்சியையும், அத்திருவிழாக் கோலத்தில் தியாகேசப் பெருமான்
எழுந்தருளியிருக்கும் மாட்சியையும், பரவையார் பக்திப் பெருக்கோடு பரமன்
முன்னால் பரதம் ஆடி அக மகிழ்வதைப் போன்ற காட்சியையும் தோன்றச் செய்தது.
பூங்கோயிலினுள் அமர்ந்தாரை-புற்றிடங் கொண்டாரை-எந்நேரமும் அடியார்களை எண்ணி
அருள்புரிகின்ற அம்பலவாணரை இவ்விடத்து நான் மறந்திருந்தேனே என்று
தியாகேசப்பெருமானின், பிரிவாற்றாமையால் சித்தம் கலங்கினார் சுந்தரர்.

பத்திமையையும்
அடிமையையும் கைவிடுவான் என்று தொடங்கி, எத்தனை நாளும் பிரிந்திருக்கேன்
என்னாரூர் இறைவனையே என்ற குறிப்பை உணர்த்தும் தமிழ்ப் பாமாலையைப் பாடினார்.
அவரால் திருவொற்றியூரில் இருக்கவே முடியவில்லை. சங்கரர் நினைவால் சிந்தை
குளிர்ந்த சுந்தரர் சங்கிலியாருக்குக் கொடுத்த சபதத்தை மறந்தார்.
எப்படியும் திருவாரூருக்குப் புறப்பட்டுப் போய்விடுவது என்ற திடமான
முடிவிற்கு வந்தார். ஒருநாள் சுந்தரர் சங்கிலியாருக்கு தெரியாமல்
திருவொற்றியூர் எல்லையைக் கடந்து அடி எடுத்து வைத்தார். சங்கிலியாருக்குக்
கொடுத்த உறுதிமொழியை மீறியதால் அக்கணமே சுந்தரரது கண்கள் இரண்டும் ஒளியை
இழந்தன. நாயனார் மூர்ச்சித்தார்.சுந்தரர் அப்போதே தமது தவற்றை உணர்ந்தார்.
சங்கிலியாருக்கு அளித்த உறுதிமொழியை முறித்துவிட்டதினால் தான் இறைவன் தன்
கண் ஒளியைப் பறித்துக் கொண்டார் என்பதையும் சுந்தரர் உணர்ந்தார். அழுக்கு
மெய்கொடு என்று தொடங்கும் பதிகம் ஒன்றைப் பாடிப் பரமனைப் பணிந்தார். இறைவன்
சுந்தரர்க்கு அருள் செய்யாது வாளா இருந்தார்.எப்படியும் திருவாரூரை
அடைந்து தியாகேசப் பெருமானைத் தொழுது வழிபடுவது என உறுதி பூண்டார். ஒருவாறு
தட்டுத்தடுமாறி, முல்லைவாயில் தலத்தில் கோயில் கொண்டுள்ள கருநட்ட கண்டரைத்
தரிசித்தவாறு திருவெண்பாக்கம் என்னும் பழம்பதியை வந்தடைந்தார் சுந்தரர்!
திருவெண்பாக்கத்து எம்பெருமானைக் கண்டுகளிக்க கண்ணுக்கு ஒளி இல்லாமற்
போய்விட்டதே எனச் சித்தம் கலங்கிய நாயனார், பரமனைத் துதித்து, பிறைமுடிப்
பெருமானே நீவிர் இத்திருக்கோயிலின் உள்ளேதான் எழுந்தருளியிருக்கின்றீரோ?
என்று உளம் வருந்த இறைஞ்சி நின்றார். சுந்தரரின் கனிமொழியைக் கேட்டு,
பிரம்படி பட்ட பரமன் ஊன்றுகோல் ஒன்று அவரது கைகளில் வந்து தங்குமாறு
அருள்புரிந்தார். சுந்தரா! யாம் கோயிலின் உள்ளேதான் இருக்கின்றோம் என்ற
கருத்தமைய, யாம் உள்ளோம். நீர் போகீர் என்று இணக்கமில்லாத மொழிகளால் விடை
பகர்ந்தார். விடையேறும் பெருமான் அன்னியனிடம் கூறுவது போல் சற்று கடுமையாக
மொழிந்ததைக் கேட்டு, சுந்தரர் வேதனை தாளாமல் பிழையுறன பொறுத்திடுவர் எனத்
தொடங்கும் பாடலால் மெய்யுருகினார். எம்பெருமானின் அருள் உள்ளம் இந்த
அளவிற்குத்தான் இத்தலத்தில் தமக்கு கிட்டியதுபோலும் என்று உள்ளத்திலே
எண்ணியவாறு, ஊன்றுகோலை ஊன்றிக் கொண்டு புறப்பட்டார். சுந்தரர்
திருவாலங்காடு, திருவூறல் போன்ற சிவத்தலங்களை வழிபட்டவாறு காஞ்சிமா
நகரத்தினை வந்தடைந்தார். எழில்மிகு சோலைகளால் சுந்தரத் தோற்றமளிக்கும்
திருக்கச்சிக்காமக் கோட்டத்தில் உள்ள காமாட்சி அம்மையாரின் சன்னதியை
வணங்கித் துதித்த சுந்தரமூர்த்தி நாயனார், அப்படியே ஏகம்பவாணர்
சன்னதியையும் அடைந்தார். விண்ணவர் வாழ நஞ்சுண்ட கயிலைமலைக் கண்ணாளா! கச்சி
ஏகம்பனே! பவளவண்ணரே! மறைகட்கும் எட்டாத மாமுனியே! உமது ஆனந்த ரூபத்தைத்
தரிசித்து மகிழ, கடையேனாகிய எனது பிழையைப் பொறுத்து அருளி பார்வையைத் தந்து
காத்திட வேண்டும். அன்று நல்லூர் மணப்பந்தலிலே என்னை தடுத்தாட் கொண்ட
அண்ணலே! இன்று உன் அருட்கோலத்தைக் கண்டு மகிழத் துடிக்கும் உன் தோழனுக்குப்
பார்வையைத் தரலாகாதோ? ஐயனே! என் உணர்வை நீ உணராதவன் அல்லவே! என்றெல்லாம்
பலவாறு கதறிக் கதறி இறைஞ்சி நின்றார். காமாட்சி அம்மையாருடைய தளிர்க்
கரங்களால் வழிபாடு செய்து பணிந்த ஏகம்பவாணரின் பாத கமலங்களைப் பணிந்தார்.
துதித்து பாமாலை பாடினார். சுந்தரரின் பாமாலைக்கு பரமன் மனம் குளிர்ந்தார்.
காமாட்சி அம்மையார் தழுவக் குழைந்த திருசடைப்பெருமான் சுந்தரருக்கு
இடக்கண் பார்வையினை மட்டும் கொடுத்து, தமது திருக்கோலத்தை காட்டி
அருளினார். சுந்தரர் கண் பெற்ற பெருமிதத்தில் ஆடினார்; பாடினார்; நிலமதில்
வீழ்ந்து பன்முறை வணங்கி, வணங்கி எழுந்தார். ஆலந் தானுகந் தமது செய்தானை
என்று தொடங்கும் பதிகம் ஒன்றைப் பாடினார். ஏகம்பவாணரின் மலர்த்தாளினைத்
துதித்தார் சுந்தரர்

மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

நாள்தோறும் நாயன்மார்கள்  - Page 2 Empty Re: நாள்தோறும் நாயன்மார்கள்

Post by மாலதி June 9th 2013, 08:27

சுந்தரர் தொண்டர்களுடன் சில நாட்கள் அப்பதியிலேயே தங்கி, சிவ வழிபாடு
புரிந்து வந்தார். பின்னர் அங்கிருந்து தமது சிவ யாத்திரையைத் துவங்கினார்.
இரவென்றும், பகலென்றும் பாராமல் வழி நடந்தார். அவர் உடலில் நோய் கண்டது.
நடை தளர்ந்தார். அப்படியும் சிவதரிசனத்தை மட்டும் கைவிடவில்லை.எண்ணற்ற
சிவத்தலங்களைத் தரிசித்து, பதிகங்கள் பல பாடியவாறே மாத்தூர்,
திருநெல்வாயில் வழியாக காவிரியாற்றைக் கடந்து திருவாடுதுறை
திருத்துருத்தியினை அடைந்தார்.சிவக்கோயிலை பன்முறை வலம் வந்து
எம்பெருமானின் செஞ்சேவடிகளை தரிசித்து, நம்மை துன்புறுத்தி வரும் உடம்பின்
மேல் உற்ற பிணியை ஒழித்துக் காக்க வேண்டும் என்று பணிந்து
நின்றார்.சுந்தரரின் அன்பிற்குக் கட்டுப்பட்ட திருத்துருத்தி மேவும்
விரிசடைத் தம்பிரான், ஆரூரா! அஞ்சாதே! இக்கோயிலின் வடபுறத்திலுள்ள
குளத்தில் நீராடினால் உன் உடம்பில் பற்றியுள்ள வெப்பு நோய் விலகும் என்று
அருளினார்.அரனாரின் அன்புமொழி கேட்டு ஆனந்தப் பெருக்கோடு சுந்தரர் கோயிலின்
வடபுறத்திலுள்ள குளத்தில் ஐந்தெழுத்து மந்திரத்தை மனதிலே தியானித்தவண்ணம்
மூழ்கி எழுந்தார்.எம்பெருமானின் அருளால் அவரது மேனியில் இடைக்காலத்து
ஏற்பட்ட புதிய வெப்பு நோய் நீங்கப் பெற்ற மாணிக்கம் போல் பேரொளி வீசும்
பொன்மேனியைப் பெற்றார்.சிவனருள் பெற்ற அச்சிவச்செல்வர், தேன் உண்ட வண்டு
போல் இன்பம் பெற்றார்.மின்னுமா மேகம் எனத் தொடங்கும் பதிகத்தை ஏழிசைகளில்
எடுத்துரைத்து எல்லையில்லா இன்பம் கண்டார். எம்பெருமானின் அருளை
நினைத்தவராய்த் தொண்டர்களுடன் திருவாரூரை நோக்கி புறப்பட்டார். திருவாரூர்
எல்லையை வந்தடைந்த சுந்தரர், தியாகேசப்பெருமான் எழுந்தருளியிருக்கும்
பூங்கோயிலின் பெருங்கோபுரத்தைக் கண்டு மகிழ்ந்தார். பொழுது சாயும் வேளையில்
திருவாரூரினுள்ளே நுழைந்தார். தொண்டர்கள் புடைசூழ, திருப்பரவையுண் மண்டலி
என்னும் ஆலயத்தை வலம் வந்து வழிபட்டு, தூவாயத் தொண்டு என்று தொடங்கும்
செந்தமிழ்ப் பாமாலையினை சாத்தி சிந்தை குளிர்ந்தார் சுந்தரர்! குருகுபாய
எனத் தொடங்கும் சிவப்பதிகத்தைப் பாடியவாறே சிவன் அடியார்களுடன், தேவாசிரிய
மண்டபத்தை அடைந்த சுந்தரர், கோபுரத்தைத் தரிசித்தவாறே புற்றிடங்கொண்ட
நாதரின் சிலம்பணிந்த தாளினைப் பணிந்து போற்றினார். எம்பெருமானே! இன்னுமா
தங்கள் தோழர்க்குத் தீராத துயரம். துயரக்கடலில் அல்லலுற்று வருந்தும்
இவ்வடியேனைக் கரைசேர்த்து, மற்றொரு கண்ணுக்கும் ஒளி தந்தருளுவீர்! என்று
இறைஞ்சி நின்ற சுந்தரர், மீளா வடிவை எனத் தொடங்கும் பதிகம் ஒன்றைப்
பாடினார். அப்படியும் இறைவனின் மனமிரங்காதது கண்டு, அருட்பெருஞ்சோதியே!
உமது திருமலர்த்தாளினை இடையறாது, பைந்தமிழ்ப் பாமாலையால் வழிபடும்
தொண்டனுக்கு ஏற்படும் தீராத துன்பங்கண்டு நீ ஒருபோதும் பொறுத்திருக்க
மாட்டாயே! அக்கணமே அன்பர்களின் துயரத்தைத் தீர்த்து வைத்து மகிழ்வாயே!
அப்படியிருக்க எம்மை காத்தருளலாகாதது ஏனோ? என்று குறிப்புடனே, அடிமையும்,
தோழமையும் கலந்த அருத்திறத்தோடு கூடிய இன்பத் தமிழ்ப்பதிகம் ஒன்றைப் பாடிப்
பரமனைப் பணிந்தார். சுந்தரமூர்த்தி நாயனாரின் திருப்பதிகங்களில் சிந்தை
குளிர்ந்த செஞ்சுடர் வண்ணர், சித்தம் இரங்கி, அவருக்கு வலக்கண்
பார்வையினையும் கொடுத்து அருள்புரிந்தார். கதிரவனைக் கண்டு தாமரை
மலர்ந்தாற் போல் பரமன் அருளிலே சுந்தரர் முகம் மலர, ஒளி பெற்ற
பேரானந்தத்தில் பரமனைப் பணிந்து உலகையே மறந்தார்.கண் பெற்ற சுந்தரர், தாம்
கண்மூடித்தனமாக பரவையாருக்குச் செய்த துரோகச் செயலை எண்ணிப் பார்த்தார்.
அவர் மனம் வேதனையாலும், வெட்கத்தாலும் கூனிக் குறுகியது. பரவையார்
மாளிகைக்கு செல்ல அஞ்சியவராய், தேவாசிரிய மண்டபத்திலேயே தங்கிவிட்டார்
சுந்தரர்.

சுந்தரர் பிரிந்து சென்ற பிறகு பரவையார், பிரிவாற்றாமை
தாளாது, எல்லையில்லாத் துன்பமடைந்தாள். அம்மையாருக்கு இரவு பகலாகவும், பகல்
இரவாகவும் கழிந்தன. மனதிலே நிம்மதியென்பது கடுகளவு கூட இல்லாமற் போது.
அன்பரைப் பிரிந்து தணல் மேல் புழுப் போல் துவண்டு கொண்டிருக்கும்
நாளில்தான், திருவொற்றியூரில் சுந்தரர் சங்கிலியாரைத் திருமணம் செய்து
கொண்டார் என்ற செய்தி பரவையாருக்கு எட்டியது. பரவையார் மேலும் வேதனையும்
பெருங்கோபமும் கொண்டாள். இரவும், பகலும் மாலையிட்ட மணாளனின் நினைவாகவே
நெஞ்சு நெகிழ்ந்து, சிறகொடிந்த பறவைபோல்-பற்றுக்கோல் அற்ற முல்லைக்
கொடிபோல்- பாலைவனத்திலே காயும் நிலவு போல்-பாய்மரம் இல்லாத மரக்கலம் போல்
அவதிப்பட்டு கொண்டிருந்தாள் பரவையார். வண்டுகள் மொய்க்கும் அன்றலர்ந்த
மென்மலர் தூவிய பட்டு விரித்த ரத்தின மணிக்கட்டில் நித்திரை கொள்ளாது
எந்நேரமும் விழித்தேயிருந்தாள். இவ்வாறு பரவையார் வாழ்ந்து வரும் நாளிலே,
தேவாசிரிய மண்டபத்திலே தங்கியிருந்த சுந்தரர், பரவையார் மாளிகைக்குச் செல்ல
அஞ்சியவராய், தமது ஏவலாளர் சிலரை அனுப்பி, தமது வருகையை அம்மையாரிடம்
தெரிவிக்கத் தக்க ஏற்பாடுகளைச் செய்தார். பரவையார் மாளிகையை அடைந்த
ஏவலாளர்களால், உள்ளே சென்று பரவையாரைப் பார்க்கக் கூட முடியவில்லை.
எப்படியோ விஷயம் அறிந்த தோழியர்கள் தலைவியின் கட்டளைப்படி கதவடைத்து
அனுப்பி விட்டார்கள். ஏவலாளர்கள் ஏமாற்றத்தோடு சுந்தரரை அணுகி, ஐயனே!
தாங்கள் திருவொற்றியூரில் சங்கிலியாரோடு வாழ்ந்து வந்த வரலாற்றைத் தெரிந்து
வைத்திருக்கும் அம்மையார் எங்களைப் பார்க்க மறுத்ததோடல்லாமல்,
தோழியர்களிடம் சொல்லிக் கதவையும் தாழிடச் செய்துவிட்டார்கள் என்றனர்.
சுந்தரர் சித்தம் தடுமாறினார், பரவையார் பிணக்கை போக்கி, அவர்களது
திருமாளிகைக்குச் செல்வதுதான் எங்ஙனம்? என்று தமக்குள் எண்ணி மனம்
கலங்கினார். நெடு நேரம் சிந்தித்தார். முடிவில், உலக இயல்பினைக் கற்றுத்
தெளிந்த திறமைமிக்க மாதர்களை, பரவையாரிடம் தூது அனுப்பி வைத்தார். பரவையார்
மாளிகையை அடைந்த அம்மாதர்கள் பரவையாரை நேரில் சந்தித்து, தங்கள்
வணக்கத்தைத் தெரிவித்து கொண்டனர். நற்றமிவக்க நங்கையே! எம்பிரானால்
தடுத்தாட் கொள்ளப்பட்ட தங்கள் நாயகர் தம்பிரான் தோழர், மீண்டும் தங்களுடன்
சேர்ந்து வாழ வந்துள்ளார்கள். உங்கள் பெருமையையும் அவரது பெருமையையும்
அளவிட முடியாதது. அங்ஙனமிருக்க, நீங்கள் உங்கள் நாயகர் மீது இவ்வாறு ஊடல்
கொண்டு, பிணக்கம் கொள்வது நம் பண்பிற்கு ஒவ்வாதது. இறைவனின் அருளால்
மீண்டும் கண்களைப் பெற்றது உங்களை எண்ணி மனம் உருகிக் கண்ணீர்
வடிப்பதற்கல்ல; உங்கள் அழகு நடனத்தையும், ஒளிமிக்க கமலவதனத்தையும் கண்டு
களிப்பதற்காகத் தான். அதனால் அம்மையார் எங்கள் பொருட்டாவது ஐயன் மீது
கொண்டுள்ள கோபத்தை தணித்து கொள்ளுங்கள் என்று பலவாறு அம்மாதர்கள் கூறினர்.
அவர்களது அறிவுரைகளைப் பரவையார் சற்றும் செவிமடுக்கவில்லை. என்னை மறந்து,
வேறு பெண்ணை மணம் செய்துகொண்டு, எனக்குத் தீராத துயரத்தையும் ஆறாத
கவலையையும் அளித்த அவரது குற்றத்தை மறைக்க நீங்கள் எவ்வளவுதான் அறிவுரைகள்
பகர்ந்தாலும் என்னால் ஒருபோதும் ஏற்க முடியாது. நீங்கள் மேலும் மேலும்
பேசிப் பேசி என் மனதை புண்படுத்துவீர்களானால் நான் உயிரை இழப்பது திண்ணம்.
தயவு செய்து போய்விடுங்கள் என்று ஒரேயடியாக, சினத்தோடு மறுத்து அவர்களைத்
திரும்ப அனுப்பி விட்டார் பரவையார். பரவையார் பேச்சிற்கு மறுமொழி பேசாமல்,
ஏமாற்றத்தோடு வெளியே வந்த மாதர்கள், சுந்தரரிடம் நிகழ்ந்தவை அனைத்தையும்
கூறிச் சென்றனர். சுந்தரர், மன சோர்வுற்றார். இரவு கழிந்து
கொண்டேயிருந்தது. நடு ஜாமம் வந்தது. இருந்தும் சுந்தரருக்கு உறக்கம்
சற்றுகூட வரவில்லை. அவருடன் சூழ்ந்திருந்த அன்பர்கள் அனைவரும் அயர்ந்து
உறங்கிக் கொண்டிருந்தனர். கவலை தோய்ந்த முகத்தோடு, இறைவனைத் தியானித்த
வண்ணம் கண்விழித்திருந்த சுந்தரர், தமது குறையை இறைவனிடம் முறையிடுவது
என்று எண்ணினார். சுந்தரர், ஒளி கொடுத்த திங்கள் வளர்நாயகரைப் பணிந்து,
என்னைத் தடுத்தாட்கொண்ட தம்பிரானே! அன்பர்க்கு அன்பனே! எமக்கு தேவரீர்
இப்படியும் ஒரு சோதனையைக் கொடுத்து திருவிளையாடல் புரியலாமா? முன்வினைப்
பயனால், இப்பிறப்பில் தேவரீர் அருளோடு மணம் புரிந்து கொண்ட பரவையார்
என்னைத் திரும்ப ஏற்க மறுப்பதைத் தாங்கள் அறியாததல்லவே! எம்பிரானே!
பரவையாருக்கு எம்மோடுள்ள பிணக்கை போக்கி உய்யும் வழிசெய்யும் திறத்தவர்
உம்மையன்றி வேறு எவர் எனக்குள்ளார்? விண்ணவர்களுக்காக விடமுண்ட நீலகண்ட
நாயகரே! இந்நடுராத்திரியில் இவ்வடியேனுக்காக இங்கு எழுந்தருளி,
காத்தருளலாகாதா? என்று வேண்டினார். அக்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்துள்ள
பரம் பொருளான கயிலையரசன், சுந்தரரின் துயரத்தைத் தீர்க்க திருவுள்ளம்
கொண்டார். அந்த நள்ளிரவு நேரத்தில் எம்பெருமான் சுந்தரர் முன்னால் பேரொளிப்
பிழம்பாகக் காட்சி அளித்தார். சுந்தரர் பக்தி வெள்ளம் போல் பெருக, இறைவனது
சேவடிகளைப் பணிந்து போற்றினார். புற்றிடங்கொண்ட பெருமான், தம்மைப் பற்றிக்
கொண்ட தோழருக்கு அருள் செய்து, அன்பனே! இந்த நடு ஜாமத்தில் அபயக்குரல் எது
கருதி? அப்பனே! உனக்கு நேர்ந்ததுதான் என்ன? என்று ஒன்றுமறியாதவரைப் போல்
கேட்டார். இறைவன் இவ்வாறு கேட்டதும் தம்பிரான் தோழர் உடல் நடுங்க,
மெய்சிலிர்க்க, பித்தா! பிறைசூடி! பெருமானே! அன்பர் மனங்களில் எந்நேரமும்
எழுந்தருளியிருக்கும் அருளாளா! தயாபரா! நீ அறியாததொன்றில்லையே! உமது
சக்தியில்தானே அகில உலகமும் சுற்றிச் சுழலுகிறது

மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

நாள்தோறும் நாயன்மார்கள்  - Page 2 Empty Re: நாள்தோறும் நாயன்மார்கள்

Post by மாலதி June 9th 2013, 08:28

சுந்தரர் தொண்டர்களுடன் சில நாட்கள் அப்பதியிலேயே தங்கி, சிவ வழிபாடு
புரிந்து வந்தார். பின்னர் அங்கிருந்து தமது சிவ யாத்திரையைத் துவங்கினார்.
இரவென்றும், பகலென்றும் பாராமல் வழி நடந்தார். அவர் உடலில் நோய் கண்டது.
நடை தளர்ந்தார். அப்படியும் சிவதரிசனத்தை மட்டும் கைவிடவில்லை.எண்ணற்ற
சிவத்தலங்களைத் தரிசித்து, பதிகங்கள் பல பாடியவாறே மாத்தூர்,
திருநெல்வாயில் வழியாக காவிரியாற்றைக் கடந்து திருவாடுதுறை
திருத்துருத்தியினை அடைந்தார்.சிவக்கோயிலை பன்முறை வலம் வந்து
எம்பெருமானின் செஞ்சேவடிகளை தரிசித்து, நம்மை துன்புறுத்தி வரும் உடம்பின்
மேல் உற்ற பிணியை ஒழித்துக் காக்க வேண்டும் என்று பணிந்து
நின்றார்.சுந்தரரின் அன்பிற்குக் கட்டுப்பட்ட திருத்துருத்தி மேவும்
விரிசடைத் தம்பிரான், ஆரூரா! அஞ்சாதே! இக்கோயிலின் வடபுறத்திலுள்ள
குளத்தில் நீராடினால் உன் உடம்பில் பற்றியுள்ள வெப்பு நோய் விலகும் என்று
அருளினார்.அரனாரின் அன்புமொழி கேட்டு ஆனந்தப் பெருக்கோடு சுந்தரர் கோயிலின்
வடபுறத்திலுள்ள குளத்தில் ஐந்தெழுத்து மந்திரத்தை மனதிலே தியானித்தவண்ணம்
மூழ்கி எழுந்தார்.எம்பெருமானின் அருளால் அவரது மேனியில் இடைக்காலத்து
ஏற்பட்ட புதிய வெப்பு நோய் நீங்கப் பெற்ற மாணிக்கம் போல் பேரொளி வீசும்
பொன்மேனியைப் பெற்றார்.சிவனருள் பெற்ற அச்சிவச்செல்வர், தேன் உண்ட வண்டு
போல் இன்பம் பெற்றார்.மின்னுமா மேகம் எனத் தொடங்கும் பதிகத்தை ஏழிசைகளில்
எடுத்துரைத்து எல்லையில்லா இன்பம் கண்டார். எம்பெருமானின் அருளை
நினைத்தவராய்த் தொண்டர்களுடன் திருவாரூரை நோக்கி புறப்பட்டார். திருவாரூர்
எல்லையை வந்தடைந்த சுந்தரர், தியாகேசப்பெருமான் எழுந்தருளியிருக்கும்
பூங்கோயிலின் பெருங்கோபுரத்தைக் கண்டு மகிழ்ந்தார். பொழுது சாயும் வேளையில்
திருவாரூரினுள்ளே நுழைந்தார். தொண்டர்கள் புடைசூழ, திருப்பரவையுண் மண்டலி
என்னும் ஆலயத்தை வலம் வந்து வழிபட்டு, தூவாயத் தொண்டு என்று தொடங்கும்
செந்தமிழ்ப் பாமாலையினை சாத்தி சிந்தை குளிர்ந்தார் சுந்தரர்! குருகுபாய
எனத் தொடங்கும் சிவப்பதிகத்தைப் பாடியவாறே சிவன் அடியார்களுடன், தேவாசிரிய
மண்டபத்தை அடைந்த சுந்தரர், கோபுரத்தைத் தரிசித்தவாறே புற்றிடங்கொண்ட
நாதரின் சிலம்பணிந்த தாளினைப் பணிந்து போற்றினார். எம்பெருமானே! இன்னுமா
தங்கள் தோழர்க்குத் தீராத துயரம். துயரக்கடலில் அல்லலுற்று வருந்தும்
இவ்வடியேனைக் கரைசேர்த்து, மற்றொரு கண்ணுக்கும் ஒளி தந்தருளுவீர்! என்று
இறைஞ்சி நின்ற சுந்தரர், மீளா வடிவை எனத் தொடங்கும் பதிகம் ஒன்றைப்
பாடினார். அப்படியும் இறைவனின் மனமிரங்காதது கண்டு, அருட்பெருஞ்சோதியே!
உமது திருமலர்த்தாளினை இடையறாது, பைந்தமிழ்ப் பாமாலையால் வழிபடும்
தொண்டனுக்கு ஏற்படும் தீராத துன்பங்கண்டு நீ ஒருபோதும் பொறுத்திருக்க
மாட்டாயே! அக்கணமே அன்பர்களின் துயரத்தைத் தீர்த்து வைத்து மகிழ்வாயே!
அப்படியிருக்க எம்மை காத்தருளலாகாதது ஏனோ? என்று குறிப்புடனே, அடிமையும்,
தோழமையும் கலந்த அருத்திறத்தோடு கூடிய இன்பத் தமிழ்ப்பதிகம் ஒன்றைப் பாடிப்
பரமனைப் பணிந்தார். சுந்தரமூர்த்தி நாயனாரின் திருப்பதிகங்களில் சிந்தை
குளிர்ந்த செஞ்சுடர் வண்ணர், சித்தம் இரங்கி, அவருக்கு வலக்கண்
பார்வையினையும் கொடுத்து அருள்புரிந்தார். கதிரவனைக் கண்டு தாமரை
மலர்ந்தாற் போல் பரமன் அருளிலே சுந்தரர் முகம் மலர, ஒளி பெற்ற
பேரானந்தத்தில் பரமனைப் பணிந்து உலகையே மறந்தார்.கண் பெற்ற சுந்தரர், தாம்
கண்மூடித்தனமாக பரவையாருக்குச் செய்த துரோகச் செயலை எண்ணிப் பார்த்தார்.
அவர் மனம் வேதனையாலும், வெட்கத்தாலும் கூனிக் குறுகியது. பரவையார்
மாளிகைக்கு செல்ல அஞ்சியவராய், தேவாசிரிய மண்டபத்திலேயே தங்கிவிட்டார்
சுந்தரர்.

சுந்தரர் பிரிந்து சென்ற பிறகு பரவையார், பிரிவாற்றாமை
தாளாது, எல்லையில்லாத் துன்பமடைந்தாள். அம்மையாருக்கு இரவு பகலாகவும், பகல்
இரவாகவும் கழிந்தன. மனதிலே நிம்மதியென்பது கடுகளவு கூட இல்லாமற் போது.
அன்பரைப் பிரிந்து தணல் மேல் புழுப் போல் துவண்டு கொண்டிருக்கும்
நாளில்தான், திருவொற்றியூரில் சுந்தரர் சங்கிலியாரைத் திருமணம் செய்து
கொண்டார் என்ற செய்தி பரவையாருக்கு எட்டியது. பரவையார் மேலும் வேதனையும்
பெருங்கோபமும் கொண்டாள். இரவும், பகலும் மாலையிட்ட மணாளனின் நினைவாகவே
நெஞ்சு நெகிழ்ந்து, சிறகொடிந்த பறவைபோல்-பற்றுக்கோல் அற்ற முல்லைக்
கொடிபோல்- பாலைவனத்திலே காயும் நிலவு போல்-பாய்மரம் இல்லாத மரக்கலம் போல்
அவதிப்பட்டு கொண்டிருந்தாள் பரவையார். வண்டுகள் மொய்க்கும் அன்றலர்ந்த
மென்மலர் தூவிய பட்டு விரித்த ரத்தின மணிக்கட்டில் நித்திரை கொள்ளாது
எந்நேரமும் விழித்தேயிருந்தாள். இவ்வாறு பரவையார் வாழ்ந்து வரும் நாளிலே,
தேவாசிரிய மண்டபத்திலே தங்கியிருந்த சுந்தரர், பரவையார் மாளிகைக்குச் செல்ல
அஞ்சியவராய், தமது ஏவலாளர் சிலரை அனுப்பி, தமது வருகையை அம்மையாரிடம்
தெரிவிக்கத் தக்க ஏற்பாடுகளைச் செய்தார். பரவையார் மாளிகையை அடைந்த
ஏவலாளர்களால், உள்ளே சென்று பரவையாரைப் பார்க்கக் கூட முடியவில்லை.
எப்படியோ விஷயம் அறிந்த தோழியர்கள் தலைவியின் கட்டளைப்படி கதவடைத்து
அனுப்பி விட்டார்கள். ஏவலாளர்கள் ஏமாற்றத்தோடு சுந்தரரை அணுகி, ஐயனே!
தாங்கள் திருவொற்றியூரில் சங்கிலியாரோடு வாழ்ந்து வந்த வரலாற்றைத் தெரிந்து
வைத்திருக்கும் அம்மையார் எங்களைப் பார்க்க மறுத்ததோடல்லாமல்,
தோழியர்களிடம் சொல்லிக் கதவையும் தாழிடச் செய்துவிட்டார்கள் என்றனர்.
சுந்தரர் சித்தம் தடுமாறினார், பரவையார் பிணக்கை போக்கி, அவர்களது
திருமாளிகைக்குச் செல்வதுதான் எங்ஙனம்? என்று தமக்குள் எண்ணி மனம்
கலங்கினார். நெடு நேரம் சிந்தித்தார். முடிவில், உலக இயல்பினைக் கற்றுத்
தெளிந்த திறமைமிக்க மாதர்களை, பரவையாரிடம் தூது அனுப்பி வைத்தார். பரவையார்
மாளிகையை அடைந்த அம்மாதர்கள் பரவையாரை நேரில் சந்தித்து, தங்கள்
வணக்கத்தைத் தெரிவித்து கொண்டனர். நற்றமிவக்க நங்கையே! எம்பிரானால்
தடுத்தாட் கொள்ளப்பட்ட தங்கள் நாயகர் தம்பிரான் தோழர், மீண்டும் தங்களுடன்
சேர்ந்து வாழ வந்துள்ளார்கள். உங்கள் பெருமையையும் அவரது பெருமையையும்
அளவிட முடியாதது. அங்ஙனமிருக்க, நீங்கள் உங்கள் நாயகர் மீது இவ்வாறு ஊடல்
கொண்டு, பிணக்கம் கொள்வது நம் பண்பிற்கு ஒவ்வாதது. இறைவனின் அருளால்
மீண்டும் கண்களைப் பெற்றது உங்களை எண்ணி மனம் உருகிக் கண்ணீர்
வடிப்பதற்கல்ல; உங்கள் அழகு நடனத்தையும், ஒளிமிக்க கமலவதனத்தையும் கண்டு
களிப்பதற்காகத் தான். அதனால் அம்மையார் எங்கள் பொருட்டாவது ஐயன் மீது
கொண்டுள்ள கோபத்தை தணித்து கொள்ளுங்கள் என்று பலவாறு அம்மாதர்கள் கூறினர்.
அவர்களது அறிவுரைகளைப் பரவையார் சற்றும் செவிமடுக்கவில்லை. என்னை மறந்து,
வேறு பெண்ணை மணம் செய்துகொண்டு, எனக்குத் தீராத துயரத்தையும் ஆறாத
கவலையையும் அளித்த அவரது குற்றத்தை மறைக்க நீங்கள் எவ்வளவுதான் அறிவுரைகள்
பகர்ந்தாலும் என்னால் ஒருபோதும் ஏற்க முடியாது. நீங்கள் மேலும் மேலும்
பேசிப் பேசி என் மனதை புண்படுத்துவீர்களானால் நான் உயிரை இழப்பது திண்ணம்.
தயவு செய்து போய்விடுங்கள் என்று ஒரேயடியாக, சினத்தோடு மறுத்து அவர்களைத்
திரும்ப அனுப்பி விட்டார் பரவையார். பரவையார் பேச்சிற்கு மறுமொழி பேசாமல்,
ஏமாற்றத்தோடு வெளியே வந்த மாதர்கள், சுந்தரரிடம் நிகழ்ந்தவை அனைத்தையும்
கூறிச் சென்றனர். சுந்தரர், மன சோர்வுற்றார். இரவு கழிந்து
கொண்டேயிருந்தது. நடு ஜாமம் வந்தது. இருந்தும் சுந்தரருக்கு உறக்கம்
சற்றுகூட வரவில்லை. அவருடன் சூழ்ந்திருந்த அன்பர்கள் அனைவரும் அயர்ந்து
உறங்கிக் கொண்டிருந்தனர். கவலை தோய்ந்த முகத்தோடு, இறைவனைத் தியானித்த
வண்ணம் கண்விழித்திருந்த சுந்தரர், தமது குறையை இறைவனிடம் முறையிடுவது
என்று எண்ணினார். சுந்தரர், ஒளி கொடுத்த திங்கள் வளர்நாயகரைப் பணிந்து,
என்னைத் தடுத்தாட்கொண்ட தம்பிரானே! அன்பர்க்கு அன்பனே! எமக்கு தேவரீர்
இப்படியும் ஒரு சோதனையைக் கொடுத்து திருவிளையாடல் புரியலாமா? முன்வினைப்
பயனால், இப்பிறப்பில் தேவரீர் அருளோடு மணம் புரிந்து கொண்ட பரவையார்
என்னைத் திரும்ப ஏற்க மறுப்பதைத் தாங்கள் அறியாததல்லவே! எம்பிரானே!
பரவையாருக்கு எம்மோடுள்ள பிணக்கை போக்கி உய்யும் வழிசெய்யும் திறத்தவர்
உம்மையன்றி வேறு எவர் எனக்குள்ளார்? விண்ணவர்களுக்காக விடமுண்ட நீலகண்ட
நாயகரே! இந்நடுராத்திரியில் இவ்வடியேனுக்காக இங்கு எழுந்தருளி,
காத்தருளலாகாதா? என்று வேண்டினார். அக்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்துள்ள
பரம் பொருளான கயிலையரசன், சுந்தரரின் துயரத்தைத் தீர்க்க திருவுள்ளம்
கொண்டார். அந்த நள்ளிரவு நேரத்தில் எம்பெருமான் சுந்தரர் முன்னால் பேரொளிப்
பிழம்பாகக் காட்சி அளித்தார். சுந்தரர் பக்தி வெள்ளம் போல் பெருக, இறைவனது
சேவடிகளைப் பணிந்து போற்றினார். புற்றிடங்கொண்ட பெருமான், தம்மைப் பற்றிக்
கொண்ட தோழருக்கு அருள் செய்து, அன்பனே! இந்த நடு ஜாமத்தில் அபயக்குரல் எது
கருதி? அப்பனே! உனக்கு நேர்ந்ததுதான் என்ன? என்று ஒன்றுமறியாதவரைப் போல்
கேட்டார். இறைவன் இவ்வாறு கேட்டதும் தம்பிரான் தோழர் உடல் நடுங்க,
மெய்சிலிர்க்க, பித்தா! பிறைசூடி! பெருமானே! அன்பர் மனங்களில் எந்நேரமும்
எழுந்தருளியிருக்கும் அருளாளா! தயாபரா! நீ அறியாததொன்றில்லையே! உமது
சக்தியில்தானே அகில உலகமும் சுற்றிச் சுழலுகிறது

மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

நாள்தோறும் நாயன்மார்கள்  - Page 2 Empty Re: நாள்தோறும் நாயன்மார்கள்

Post by மாலதி June 9th 2013, 08:28

சங்கரா! எனக்கு இன்று ஏற்பட்டுள்ள துன்பத்தைப் பொறுத்து ஆட்கொள்ள வேண்டியது
தேவரீருடைய கடமையாகும். ஐயனின் ஆணைப்படி மகிழமரத்தின் கீழே சபதம் செய்து
சங்கிலியாரைத் திருமணம் செய்து கொண்டு நான் திருவொற்றியூரில் வாழ்ந்த
செய்தி எப்படியோ பரவையாருக்கு எட்டிவிட்டது. அதனால், பரவையார் என் மீது
கோபம் கொண்டுள்ளதோடல்லாமல், என்னால் தனது உயிரையே இழப்பதாகவும்
கூறுகிறாளாம். இந்த எளியோன் தேவரீரின் அடியேன்! ஐயன்தான் எனக்குத் தாயும்
தந்தையும்! துன்பக் கடலினின்றும் நீந்திக் கரையேறுவதற்குரிய மரக்கலம்
இல்லாது மனம் கலங்கும் என்னைக் காக்க வேண்டும். இவ்விரவிலேயே,
இவ்வெளியேனுக்காகப் பரவையார் மாளிகைக்கு எழுந்தருளி, என் நிலையை விளக்கி,
அவளுடைய கோபத்தைத் தணித்து எம்மோடு கூடி வாழச் செய்திடல் வேண்டும் என்று
பணிவன்போடு கேட்டுக் கொண்டார். சுந்தரா! கவலையை மறப்பாயாக! நான் இப்பொழுதே
பரவையாரிடம் தூது சொல்கிறேன் என்று மொழிந்தார் பரமன். அந்த அருள்
வார்த்தையிலே சிந்தை குளிர்ந்த சுந்தரர் எல்லையற்ற உவகையோடு, ஐயனே!
பரவையார் மாளிகைக்கு விரைந்து சென்று அவரது ஊடலைத் தீர்த்து கூடல் கொள்ளச்
செய்து வருவீராகுக! என்று மீண்டும் அன்புக் கட்டளையிட்டார். எம்பெருமான்,
அந்த அர்த்தயாம வேளையில் தமது திருவடிகள் நிலவுலகில் பொருந்தப் பரவையார்
மாளிகையை நோக்கிப் புறப்பட்டார். விண்ணிலிருந்து மலர்மாரி பொழிந்தவண்ணமாகவே
இருந்தது. எம்பெருமானைப் பின் தொடர்ந்து தேவாசிரிய மண்டபத்திலே
எழுந்தருளியுள்ள அமரர்களும், சிவகணங்களும், அருந்தவசிகளும்,
நந்தியெம்பெருமானும், குபேரன் முதலானோரும் பரமனைத் துதித்தவாறு பின்னால்
சென்றனர். திருவாரூர் சிவலோகம் போல் காட்சி அளிக்க, சிவனார் மணிவீதி வழியாக
தூது புறப்பட்டார். அவருடைய திருச்சடையைச் சுற்றி விளையாடும் பாம்புகளும்,
மாணிக்க ஒளி வீசத் தொடர்ந்து படமெடுத்துப் பின் வந்தன. இளம்பிறை நிழலில்
மலர்ந்துள்ள கொன்றைப் பூக்களில் தேன் பருகும் வண்டுகளும், ரீங்காரம் செய்த
வண்ணம் தொடர்ந்து வந்தன. கூடவே சுந்தரமூர்த்தி சுவாமிகளின் மனமும் பின்
தொடர்ந்தது. வேதங்கள் பின்தொடர, பரவையார் மாளிகையை அடைந்த இறைவன்,
அனைவரையும் புறத்தே தங்குமாறு ஆணையிட்டு விட்டு, தாம் மட்டும் ஓர்
அர்ச்சகரைப் போல் வடிவம் கொண்டு, மாளிகையை அடைந்தார். உள்ளே தாழ்போட்டுள்ள
கதவைத் தட்டியவண்ணம், பரவையே! கதவினைத் திறந்திடுவாய்! எனச் செம்பவளவாய்
திறந்து அழைத்தார் அம்பலவாணர். உறக்கம் வராமல் மலர் மஞ்சத்தில்
படுத்திருந்த பரவையார் திடுக்கிட்டு எழுந்தார். அர்ச்சகரின் குரலோசை கேட்டு
அம்மையார், இந்த அர்த்த ஜாமத்தில் நம்மைத் தேடி அர்ச்சகர் வரவேண்டிய
காரணம் என்ன? என்று எண்ணியவளாய் விரைந்து வந்து கதவைத் திறந்தாள்.
அர்ச்சகர் வடிவில் வந்துள்ள இறைவனை வணங்கி, வரவேற்ற பரவையார், ஊர் உறங்கும்
இவ்வேளையில் தேவரீர் இவ்வடியாளின் இருப்பிடத்திற்கு எழுந்தருளிய காரணம்
யாதோ? என்று பணிவன்புடன் கேட்டாள். பரவையே! வந்த காரணத்தைக் கூறுவேன்;
ஆனால் நீ மட்டும் மறுக்காமல் எமது கோரிக்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
ஆணையிடுங்கள் சுவாமி! பரவையே கேள்! சுந்தரர் சற்றுத் தவறியதற்காக நீ அவரை
முற்றும் வெறுத்து இங்ஙனம் ஊடல் கொள்வது முறையாகாது. உனது பிரிவினால்
மிக்கத் துயருரும் நாவலூர் நம்பி உன் நினைவாகவே தேவாசிரிய மண்டபத்தில்
வந்து தங்கியுள்ளார். அவர் மீண்டும் இங்கு வந்து உன்னோடு கூடி வாழ்தல்
வேண்டும். இதற்கு நீ இசைந்து விடுவதுதான் நல்லது. நன்று! நன்று! தாங்கள்
செப்புவது! சிவத்தலங்களை தரிசிக்கப் போகிறேன் என்று என்னிடம் விடை பெற்றுச்
சென்றார். எப்படியும் பங்குனித் திருநாள் அன்று விரைந்து வந்துவிடுவார்
என்று எதிர்பார்த்து ஏமாந்தேன். அவரோ திருவொற்றியூரில் சங்கிலியார் என்னும்
பெண்ணை மணந்து வாழ்ந்துள்ளார். இனிமேல் அவருக்கும் எனக்கும் எவ்விதத்
தொடர்பும் கிடையாது. இதற்காகவா, இந்த இரவு வேளையில் தாங்கள் இங்கு
வந்தீர்கள்? பரவையே! கோபம் தணிந்து, உன் நாயகனின் குற்றத்தைப் பொறுத்துக்
கொள், என்று நான் எடுத்துச் சொல்வது உனக்கு புரியவில்லையா? நங்கையே! என்
பொருட்டாவது சுந்தரரை ஏற்றுக் கொள்ளலாகாதா? அதுதான் உனக்கு தகுதியான
செயலும் கூட.
ஐயனே! இவ்வாறு திரும்ப திரும்ப என்னிடம் கதை கூறுவது
தங்கள் பெருமைக்கு ஒருபோதும் ஒவ்வாது. இதற்கு நான் இணங்கப்போவதாக இல்லை.
தயவுசெய்து போய் வாருங்கள் என்று கடுமையாக, தமது முடிவான பதிலைக் கூறினாள்.
அதற்குமேல், பரவையாரிடம் வாதாட விரும்பாத அரனார் அவளிடம் விடைபெற்றுப்
புறப்பட்டார். எம்பெருமானை, பரவையார் மாளிகைக்குத் தூதராக அனுப்பிவிட்டு,
அவரது வரவை எதிர்பார்த்திருந்த சுந்தரர், கங்கையை முடித்த சங்கரா! சற்றும்
அறிவில்லாத இவ்வடியேன், தங்கள் திருப்பாதம் நோகுமாறு இப்பாதி இரவு
வேளையில், பரவை மாளிகைக்கு அவளது புலவி தீர்த்துவரும் பொருட்டு தூதராக
அனுப்பிவிட்டேனே! நான் செய்த இப்பொல்லாத பிழைக்கு மன்னிப்பே கிடையாது.
இதற்கென்று தங்களை வணங்கி வேண்டினேனே! அபச்சாரம்! என் ஐயனுக்கு எவ்வளவு
கொடிய பாவத்தை செய்துவிட்டேன் என்று வாய்விட்டுக் கதறி வருந்தினார். உடனே
பரவையார் நினைவு ஏற்படவே, பரவையார் மாளிகையில், இறைவன் எப்படியும் எனக்காக
வாதாடி, அவளது இசைவினைப் பெற்றே மீளுவார்; கண்டிப்பாக பரவையாரது சிறு
ஊடலைத் தீர்த்து விட்டுத்தான் வருவார் என்று எண்ணி மகிழ்ச்சி கொண்டார்
சுந்தரர். நேரம் நகர்ந்து கொண்டேயிருந்தது. சுந்தரர்க்கு ஓரிடத்தில்
இருப்புக் கொள்ளவில்லை. அப்படியும் இப்படியுமாக அல்லல் பட்டுக்
கொண்டிருந்தார். எம்பெருமான் வரும் வழியே தமது விழியையும் மனதையும்
செல்லவிட்டார். அந்த நிலையில் மன்மதனின் மலர்க்கணை, மாரி போல் சுந்தரர்
மீது பொழிந்தன. அவை மேலும் துன்பத்தைக் கொடுத்தன. இத்தருணத்தில் இறைவன்,
அர்ச்சகர் கோலத்தை மறைத்து பிறையணிந்த அண்ணலாக சுந்தரர் முன்னால்
தோன்றினார். அணையை உடைத்துக் கொண்டு பாய்ந்து ஓடிவரும் வெள்ளப் பிரவாகம்
போல் சுந்தரர், ஆசை பொங்கிப் பெருகி வர, எம்மை ஆட்கொண்ட அண்ணலே! இந்தப்
பாதி இரவில் மலர்ப்பாதம் நோக பரவையார் மாளிகைக்கு எழுந்தருளி, எமக்காக
வேண்டி அவளது பிணக்கைப் போக்கி வெற்றிப் பெருமிதத்தோடு
எழுந்தருளியுள்ளீர்களே சுவாமி! ஐயனின் கருணையை என்னென்பேன்! என்று அகமும்
முகமும் மலரக் கூறினார்.

சுந்தரர் செப்பியது கேட்டு செஞ்சடை வண்ணர்,
சுந்தரா! உன் ஆற்றலையும், அருந்திறத்தினையும் அளவிட முடியாத அளவிற்கு
அடுக்கடுக்காக எடுத்துக் கூறினேன். அத்தனையும் விழலுக்கு இறைத்த நீராகி
விட்டதே. பரவையார் எமது மொழியைச் செவிசாய்க்க மறுத்து, வெறுப்போடு என்னைத்
திரும்ப அனுப்பி விட்டாள் என மொழிந்தார். முக்கண்ணர் அருளியதைக் கேட்டு
மனம் கலங்கிய சுந்தரர், நடுக்கமுற்று கண்கலங்கி, கரங்கூப்பி வணங்கியவாறு,
தேவரீர் திருமொழியை மறுக்க வல்லவள் பரவையார் அல்லவே! ஐயன் அருள் கூர்ந்தால்
அகிலத்தில் ஆகாதது ஒன்றில்லையே! தேவரீர்! இதற்காகவா வலிய வந்து எம்மை
தடுத்தாட் கொண்டீர்கள்? முப்புரம் எரித்த மறையவனே! அமரர் வாழ ஆலகால
விடமுண்ட அருமாமணியே! பாலனுக்காகக் காலனை உதைத்து, மார்கண்டேயன் என்னும்
தொண்டனை அடிமை கொண்டருளிய அம்பலத்தரசே! என் மீது மட்டும் தங்கள் அருட்கண்
மலரவில்லையா? சுவாமி! எம்மை வேண்டத்தகாதவன் என்று கருதி, திரும்ப வந்து
விட்டீர்களோ? இறைவா! எனக்காக வேண்டி மீண்டும் ஒருமுறை பரவையாரிடம் சென்று
அவளது சினத்தைப் போக்குவீர். எனது நோயையும், துயரத்தையும் நேரில் கண்டும்,
உமது திருவுள்ளம் இரங்கவில்லையா? இன்றிரவு ஐயன் அருள் செய்து என்னைப்
பரவையாரோடு சேர்க்காவிட்டால் என்னுயிர் நீங்கி விடும் என்பது மட்டும் உறுதி
என்று புலம்பி கண்ணீரால் எம்பெருமானின் பாதகமலங்களைக் குளிரச் செய்தார்.
தமது திருவடிகளில் சரணமென்று வீழ்ந்து பணிந்து கிடக்கும் சுந்தரரை அருளோடு
பார்த்த எம்பெருமான், சுந்தரா எழுந்திரு! வருந்தாதே! உன் துயரத்தை நான்
உணர்வதுபோல், எப்படியும் பரவையையும் உணருமாறு செய்கிறேன். மீண்டும் உன்
பொருட்டு அவளிடம் சென்று வருகிறோம். கவலையை மறந்து திடமாக இரு. என்று
மதுரமொழிபகர்ந்தவாறு பரவையார் மாளிகைக்கு மீண்டும் புறப்பட்டார் சங்கரர்!
அர்ச்சகர் வடிவில் வந்த அரனார் சென்ற பிறகு பரவையார் மனதில் எதனாலோ, இனம்
தெரியாத ஒருவித கலக்கம் ஏற்பட்டது. அந்தணர் வடிவுடன் எழுந்தருளியவர்
திருவாரூர் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் தியாகேசப் பெருமானே தான்
என்ற உண்மையயை பரவையாருக்கு உணர்த்துவது போல் வியக்கதக்க நிகழ்ச்சிகள் பல
பரவையார் மாளிகையில் தோன்றின. அது கண்ட பரவையார் மனம் திருக்கிட்டாள்.
எம்பெருமானுக்கு பெரும் பிழை இழைத்து விட்டோமே! ஐயோ! அபச்சாரம்
நடந்துவிட்டது, கெட்டேன்! என் நாயகருக்காக, சிவவேதியர் கோலத்துடன்
வந்தணைந்தவரை இன்னாரென்று அறியமுடியாத அளவிற்கு என் அகக் கண்களும்,
புறக்கண்களும் குருடாகிவிட்டனவே! பரமனுக்கு பெரும் துன்பத்தை கொடுத்த
பாவியாகிவிட்டேனே! என்று பலவாறு கருதிப் புலம்பி, நிலை தளர்ந்து
தோழியர்களுடன் உறக்கமின்றி வாயிலை நோக்கியவாறு அமர்ந்திருந்தாள் பரவையார்.
அது சமயம் இறைவன் மீண்டும் பூதகண நாதர்கள் சூழ, பரவையார் மாளிகைக்கு
எழுந்தருளினார். பரவையார் விரைந்து சென்று பரமனின் பொற்பாதங்களை வணங்கி,
வரவேற்று எதிர்கொண்டு மாளிகையுள் அழைத்துச் சென்றாள். பரவையார் மாளிகை,
மகாதேவனின் அருள் ஒளியினால் திருக்கயிலாயத் திருமாமலைபோல் ஜெகஜோதியாகப்
பிரகாசித்தது.பரவையார் கரமிரண்டையும் தாமரை குவித்தாற் போன்று சிரமீது
தூக்கியவண்ணம், கண்களில் நீர்மல்க, அஞ்சி நடுநடுங்கி நின்று
கொண்டிருந்தாள். பெருமான், பரவையாரை திருநோக்கம் செய்தார். பரவையே! என்
தோழனான நம்பியாரூரன் எம்மை அடிமைகொண்ட உரிமையால், தூதராக ஏவ, மீண்டும்
இப்பொழுது உன்னிடம் வந்துள்ளோம்! முன்போல் இம்முறையும் மறுத்துவிடாதே! உனது
பிரிவால் என் தோழன் சொல்ல முடியாத நிலையில் அளவு கடந்து வருந்துகின்றான்.
நீ அவனை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்று திருவாய் மலர்ந்தார் கண்ணுதற்
கடவுள். அன்பே வடிவெடுத்த அரனார் முன்னே, அச்சமே வடிவாகி, உளம் தடுமாற,
வணங்கிப் பவுடன் நின்று கொண்டிருந்த பரவையார், ஐயனே! முன்பு அந்தணர்
வடிவத்தில் எழுந்தருளிய அண்ணலே! முற்பிறப்பில் நான் செய்த அருந்தவப்பயனை
என்னென்பேன்! தேவரீர் இந்த ஏழையின் மாளிகைக்குத் திருவடி தேய எழுந்தருளும்
அளவிற்குத் தவறு புரிந்தேனே! அறியாது செய்த என் பிழையைப் பொறுத்தருள
வேண்டும். இனியும் தேவரீர் திருமொழிக்கு அடியேன் இசையாமல் வேறு என்செய்ய
வல்லேன்? என்று கூறி நிலமதில் வீழ்ந்து வணங்கி எழுந்தாள். எம்பெருமான்
பரவையார் மொழிந்ததைக் கேட்டு நங்கையே! உனது பண்பிற்குத் தக்கவாறு நீ
மொழிந்தது நன்றே! என்று பாராட்டி, மாயமாய் மறைந்தருளினார். பரவையார்,
எம்பெருமான் மறைந்த திசைநோக்கித் தொழுவண்ணம் நின்று கொண்டிருந்தாள். அவளது
மனதில் சுந்தரரின் தூயவடிவம் பிரகாசித்தது. பரவையார் பொறுமையே வடிவமாய்,
நாயகரின் நினைவினால் சிலையாகி நின்றாள். சுந்தரர் முன்னால் எம்பெருமான்
எழுந்தருளினார். சுந்தரர் நிலமதில் வீழ்ந்து அவரது மலரடிகளைப் பணிந்து,
எம்பெருமானே! இம்முறை எம் பரவையாரிடமிருந்து யாது குறை கொண்டு வந்தீர்கள்?
என்று ஆவலோடு வேட்கை மேலிட வினவினார். எம்பெருமான் சுந்தரரைப் பார்த்து,
நம்பியாரூரனே! உன் மீது பரவையார் கொண்டிருந்த தீராத கோபத்தைத் தணிய
செய்தோம். இனிமேல், எவ்வித தடையுமின்றி நீ அவளைச் சென்று அடைந்து முன்போல்
மகிழ்ந்து வாழலாம் என்று அருளி பூங்கோயிலுள் புகுந்தார். மறுநாள் சுந்தரர்
பரமனை வணங்கி பரவையாரது மாளிகைக்கு அன்பர்களுடனும் அடியார்களுடனும்
புறப்பட்டார். மலர்மாலை, கலவைச் சந்தனம், கஸ்தூரி சாந்து, தங்க ஆபரணங்கள்,
பட்டாடைகள் முதலிய பல நற்சடங்கிற்கான பொருட்களை ஏந்தியவண்ணம் அன்பர்கள்
முன்னால் சென்று கொண்டிருக்க, மங்கல இசைகள் ஒலி எழுப்ப இறைவன் திருநாமம்
விண்ணெட்ட முழங்க சுந்தரர், சுந்தரகோலத்தோடு பவனி புறப்பட்ட காட்சியைக்
கண்டு வியக்காதவரில்லை. சுந்தரர் எழுந்தருளப் போகும் பெருமிதத்தில்,
பரவையார் பொழுது புலரும் நேரத்துள் தமது மாளிகையை அழகுற விளங்கச் செய்தாள்.
மாளிகை எங்கும் நெய் விளக்குகளை ஏற்றி, பொற் சுண்ணங்களையும் மலர்
தாதுக்களையும் சிந்தினர். தூபங்களையும், புண்ணியப் புது நீரை நிறைத்து
வைத்த பொற்குடங்களையும் வரிசையாக வைத்தனர். வண்டுகள் ரீங்காரமிடும் நறுமலர்
மாலைகளையும், ஒளிமிகும் மணிமாலைகளையும் அடுத்தடுத்து அழகிற்கு அழகு
செய்தாற்போல் தொங்கவிட்டனர். வெண்கடுகுப் புகையாலும், நெய்யுடன் கலந்த
அகிற் புகையாலும் மாளிகை முழுவதும் தெய்வமணம் கமழச் செய்தனர். வண்ண மலர்
தூவி, வாழ்த்தொலி எழுப்பி, சுந்தரரை வரவேற்க, பரவையார் தோழியர்களோடு
வாயிலருகே நின்று கொண்டிருந்தாள். மங்கல இசை ஒலி எழுப்ப, தொண்டர்களுடன்
மாளிகையை வந்தடைந்தார் சுந்தரர். பரவையார் காதல் வெள்ளத்தில் மூழ்கித்
திளைத்தவராய், புத்தம் புது மலர்களை, சுந்தரரின் சேவடிகளிலே கொட்டிக்
குவித்து வணங்கி வரவேற்றாள். சுந்தரர் மகிழ்ச்சி பொங்க, பரவையாரின்
திருக்கரத்தைப் பற்றிக்கொண்டு மாளிகைக்குள் சென்றார். முன்போல் உடலும்
உயிரும் ஒன்றாயினர். பரவையாரும், சுந்தரரும் வாழ்க்கைக் கடலில் பக்தி எனும்
ஓடத்தில் அமர்ந்து பரமனின் திருவடி என்னும் கரையை அடைய வழி செய்யத்
தொடங்கினர். பரவையார், பரமனைப் பணிவதோடு, தமது நாயகரான சுந்தரரின்
திருவடிகளையும் வணங்கி வழிபட்டாள். இவ்வாறு இருவரும் இல்லறம் எனும்
நல்லறத்தில் நலம்பெற வாழ்ந்து வரலாயினர். சித்தத்தைச் சிவன்பாற் வைத்து
நித்தம் நித்தம் புற்றிடங்கொண்ட பெருமானின் ஞானக் கதிர்களாகிய
திருத்தாள்களை போற்றிப் பணிந்து வந்தவாறு பரவை நாச்சியாருடன் இன்புற்று
வாழ்ந்து வந்தார் சுந்தரர். இவ்வாறு வாழ்ந்து வரும் நாளில் இவருக்கு
சேரமான் பெருமாள் நாயனாரைக் கண்டுவர வேண்டும் என்ற காதல் உள்ளத்திலே
ஊற்றெடுத்து பெருகியது

மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

நாள்தோறும் நாயன்மார்கள்  - Page 2 Empty Re: நாள்தோறும் நாயன்மார்கள்

Post by மாலதி June 9th 2013, 08:29

ஒரு நன்னாள் பரவையாரிடம் விடை பெற்றுப் பூங்கோவில் அமர்ந்து பெருமானின்
பொற்கழல்களை பணிந்து அடியார் புடைசூழ திருவஞ்சைக்களம் புறப்பட்டார்.
சோழநாட்டுத்
தலங்களை கண்குளிரக் கண்டு வணங்கியவாறு கொங்கு நாட்டிலுள்ள திருப்புக
கொளியூரை அடைந்தார். வேதியர் வாழ்கின்ற தேரோடும் திருவீதி வழியாக வந்து
கொண்டிருந்த சுந்தரர் அவ்வீதியில் எதிர் எதிராக அமைந்துள்ள இரு வீட்டில்
நடந்த நிகழ்ச்சியை கண்ணுற்றார். ஒரு வீட்டில் அலங்காரமும் ஆனந்தமும்
பொங்கிப் பெருகி, மங்கல வாத்தியங்கள் முழங்கியவாறு இருக்க மற்றொரு வீட்டில்
அமங்கலமான தோற்றமும், அழுகையும் நெஞ்சை உருக்கும் சோகக் காட்சியும்
இருக்கக் கண்டார். சுந்தரர், அங்குள்ளோரிடம், இவ்விரு வீட்டார்க்கும் உள்ள
இன்ப துன்பங்களுக்கு காரணம் யாது? என்று வினவினார். அதற்கு அந்தணர்கள்,
சுவாமி! இவ்விரு வீட்டிலும் இருந்த இரு சிறுவர்கள், அருகிலுள்ள மடுவிற்கு
நீராடச் சென்றார்கள். அதில் ஒருவனை முதலை விழுங்கி விட்டது. தப்பிப்
பிழைத்த மற்றொருவனுக்கு இப்பொழுது உரிய பருவம் வந்ததும் பெற்றோர்கள்
முப்புரி நூல் அணியும் சடங்கினைச் செய்து மகிழ்கிறார்கள் என்றனர். இதற்குள்
அச்சிறுவனை இழந்து அழுது கொண்டிருந்த பெற்றோர்கள், சுந்தரர்
எழுந்தருளியுள்ளார் என்று கேள்வியுற்று வேதனையை மறந்த நிலையில் விரைந்தோடி
வந்து அவரது திருவடித் தாமரைகளைப் பணிந்தனர். அருகிலுள்ளோர் மூலம் சிறுவனை
இழந்த பெற்றோர்கள் இவர்கள்தான் என்பதைத் தெரிந்து கொண்ட சுந்தரர், சோகம்
நீங்கி; முகமலர்ச்சியுடன் தம்மை வந்து வணங்கிய பெற்றோர்களைக் கண்டு,
நீங்களா மகனை இழந்தவர்கள்? என்று வியப்பு மேலிடக் கேட்டார். ஆமாம் சுவாமி !
அந்நிகழ்ச்சி நடந்து ஆண்டுகள் பல தாண்டிவிட்டன. ஆனால் இப்பொழுது ஐயன்
எழுந்தருளியது கண்டு, நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றோம். இம்மையில்
நாங்கள் பெற்ற பேறு எவர் பெறுவர் என்று கூறி மீண்டும் அவரது திருவடிகளில்
வீழ்ந்து வணங்கினர். அப்பெற்றோர்களின் அன்பிற்கும், பக்திக்கும்
கட்டுப்பட்ட சுந்தரர் அவர்களது துயரை எப்படியும் தீர்ப்பது என்ற உறுதியில்
அவர்களிடம் குழந்தையை விழுங்கிய மடு எங்குள்ளது? என்று கேட்டார்.
பெற்றோர்கள் சுவாமிகளை அழைத்துக்கொண்டு மடுவிற்குப் புறப்பட்டனர்.
சுந்தரரைத் தொடர்ந்து சிவ அன்பர்களும் சென்றனர். மடுவின் கரையை அடைந்தனர்.
பெற்றோர்கள் சுந்தரரை வணங்கி, சுவாமி ! எங்கள் குலக் கொழுந்தை விழுங்கிய
மடு இதுதான் என்று கூறினார். சுந்தரர் பெருமாளைத் தியானித்தார். ஆக்கவும்,
அழிக்கவும் வல்ல அவினாசியப்பரை துதித்து ஏற்றான் மறக்கேன் எனத் தொடங்கும்
பதிகம் ஒன்றைப் பாடினார். தேமதூரத் தமிழில் நான்காவது பாட்டைப் பாடி
முடிப்பதற்குள் பெரு முதலை ஒன்று நீரிலிருந்து வெளிப்பட்டு பிள்ளையைக்
கரையில் கொண்டுவந்து உமிழ்ந்தது. அன்பு பெற்றோர்கள் ஓடிச்சென்று தங்களது
பச்சிளம் பாலகனை வாரித் தழுவி உச்சிமோந்து அகமும், முகமும் மலர சிறுவனுடன்
சுந்தரர் திருவடியைத் தொழுதனர். சுந்தரரின் தெய்வீகச் சக்தியைக் கண்டு
பக்தர்கள் அதிசயித்து வியந்து போற்றினர். சுந்தரமூர்த்தி நாயனார் வாழ்க
என்ற கோஷம் வானைப் பிளந்தது. சுந்தரர் அவர்களை வாழ்த்தி அருளினார்.
அவிநாசியப்பர் ஆலயம் சென்று, பாடிப் பேரின்பம் பூண்டு, மீண்டும் தமது
பயணத்தைத் தொடர்ந்தார் சுந்தரர். சுந்தரரின் வியக்கத்தக்க அருட்செயலையும்,
தமது நகருக்கு எழுந்தருளுவதையும் கேள்வியுற்ற சேரர் கொடுங்கோளூரைக்
கவின்பெற அலங்கரிக்கத் தக்க ஏற்பாடுகளைச் செய்தார். சுந்தரர் வருகையை நாடு
முழுவதும் பறையறைந்து அறிவித்தார். சேரப் பெருந்தகையார் யானை மீது
புறப்பட்டார். அணி, தேர், புரவி, ஆட்பெரும் படையுடனும் மற்ற
பரிவாரங்களுடனும், சிவ அன்பர்களுடனும், புறப்பட்ட சேர வேந்தன், சுந்தரரை
எதிர்கொண்டு அழைக்க எல்லையிலேயே காத்திருந்தார். சுந்தரர் அன்பர்களுடன்,
தமது சிவயாத்திரையை முடித்தவாறு எல்லையை வந்தடைந்ததும் சேரப் பெருந்தகையார்
யானையினின்றும் இறங்கினார். விரைந்தோடிச் சென்று சுந்தரரை ஆரத்தழுவினார்.
சுந்தரரும், சேரமான் பெருமாள் நாயனாரை ஆரத்தழுவி அகமகிழ்ந்தார். கடல்
வெள்ளம்போல் திரண்டு வந்த மக்கள் விண்ணெட்ட வாழ்த்தொலி எழுப்பினர்.முரசு
ஒலிக்க - சங்கு முழக்க - பறை அலற - மேள தாளங்கள் சிவநாமத்தோடு பொங்கி எழ,
சேரமான் பெருமாள் சுந்தரரைத் தாம் அமர்ந்து வந்த யானை மீது அமரச் செய்தார்.
தாமும் பின்னால் அமர்ந்து, வெண் கொற்றக் குடையினைப் பிடித்தார். அனைவரும்
அரண்மனையை அடைந்தனர். மன்னனின் எல்லையில்லாப் பக்திக்குத் தலைவணங்கி
எல்லையில் கூடியிருந்த பக்தர்கள் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். இரு
ஞானமூர்த்திகளும் அரண்மனைக்குள் எழுந்தருளினர். சேரமான் பெருமாள்
சுந்தரரைத் தமது அரியணையில் அமரச் செய்து வழிபாடு புரிந்து இன்புற்றார்.
இரு சிவச் செல்வர்களும் மாகோதை மாநகரில் இருந்தவாறே அடுத்துள்ள
சிவத்தலங்கள் பலவற்றிற்குச் சென்று பதிகம் பாடிப் பரமனைக் கண்டுகளித்து
வந்தனர். மாகோதை நகரில் குடிகொண்டிருக்கும் எம்பெருமானை வழிபட்டு வரும்
சேரரும், சுந்தரரும், ஆலயத்துள் செல்லும் முன் அடுத்துள்ள அழகிய பொய்கையில்
நீராடிச் செல்வது வழக்கம். ஒருநாள் இருவரும் பொய்கையில் நீராடிக்
கொண்டிருக்கும்பொழுது சுந்தரர் மட்டும், சற்று முன்னதாகவே நீராடலை
முடித்துக்கொண்டு இறைவன் திருமுன்னே வழிபடச் சென்றார். சுந்தரரின் உடல்
புளகம் போர்த்தது; உள்ளத்திலே அருள் உயர்வு பொங்கி எழுந்தது. சைவப் பழமான
சுந்தரர் பேரொளிப் பிழம்புபோல் ஆனார். அவர் கண்களில் கண்ணீர் பெருகியது.

எம்பெருமான்
திருமுன் பன்முறை வீழ்ந்து வீழ்ந்து வணங்கி எழுந்தார். அவரை அறியாத
உள்ளக்கிளர்ச்சியும், உடல் நெகிழ்ச்சியும் அவருக்கு உலக மாயையிலிருந்து
விடுபடும் பேரின்ப சக்தியைக் கொடுத்தது. அருளே வடிவான சுந்தரர் தலைக்குத்
தலைமாலை என்னும் பதிகத்தைக் கயிலையரசன் செவிகுளிரப் பாடிப் பரவினார்.
சுந்தரரின் செந்தமிழ்த் தேன் அமுதத்தை அள்ளிப் பருகி மெய்யுருகிய நீலகண்டர்
தமது அன்பு ஆலால சுந்தரரைத் திரும்பவும் தம்மோடு அழைத்துக் கொள்ளத்
திருவுள்ளங் கொண்டார். அதற்கேற்ப எம்பெருமான் அமரர்களை அழைத்து
ஆலாலசுந்தரரை வெள்ளை யானையில் அழைத்து வருவீர்களாக! என்று ஆணையிட்டார்.
அமரர்கள் வெள்ளை யானையுடன் புறப்பட்டு திருவஞ்சைக்களம் அடைந்தனர். ஆரூரைக்
கண்டு வணங்கினர். ஆண்டவனின் ஆணையைக் கூறி வெள்ளையானையில் அமர்ந்து
கயிலைக்கு எழுந்தருளுமாறு கேட்டுக் கொண்டனர். அரனார் அருள் வாக்கிலே,
செய்வதறியாது நின்ற சுந்தரர் எம்பெருமானை நினைத்து துதித்தார். தேவர்கள்,
அவரை வலம் வந்து வெள்ளை யானையின் மீது எழுந்தருளச் செய்தனர். சுந்தரர்
தமது தோழராம் சேரர் நினைவாக வெள்ளை யானை மீதமர்ந்து விண்ணை நோக்கிப்
புறப்பட்டார். அமரர்கள் மலர்மாரி பொழிந்தனர். பொய்கையினின்றும் வந்த
சேரவேந்தன் சுந்தரரைக் காணாது திகைத்தார். சுந்தரர் திருக்கயிலை மலைக்கு
வெள்ளை யானையில் எழுந்தருளுவதைத் தமது தபோ வலிமையால் அறிந்து கொண்டார் சேர
மன்னர்; அக்கணமே தாமும் ஆரூரரைத் தொடர்ந்து செல்லத் திருவுள்ளங் கொண்டார்.
சோழன் வெண்புரவியில் அமர்ந்தார். குதிரையின் செவியில் நமச்சிவாய மந்திரத்தை
இடையறாது ஓதினார். குதிரை காற்றினும் கடுகப் புறப்பட்டது. வெள்ளை யானையை
அணுகி, வலம் வந்தது. மன்னர் சுந்தரரை வணங்கி வழிபட்டார். மன்னர் புரவியில்,
யானைக்கு முன்னதாகவே கயிலைமலையை நோக்கிப் புறப்பட்டார். சுந்தரர் தம்மை
வணங்கி முன்னால் செல்லும் மன்னனைக் கண்டார். தமக்குள் புன்முறுவல்
பூத்தார். வெள்ளை யானையில் வந்து கொண்டிருந்த சுந்தரர் தானெனை முன்
படைத்தான் எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடியவாறு கயிலைமலைக் கோவிலின்
தென்திசை வாயிலை அடைந்தார். வேகமாக வந்த சேரமான் வாயில் அடைத்திருப்பது
கண்டு திகைத்தார். அங்கேயே சுந்தரர் வருகையை எதிர்பார்த்து நின்றார்.
சுந்தரர் வந்தார். அங்கே நின்று கொண்டிருந்த சேரமான் பெருமாள் சுந்தரரை
நமஸ்கரித்தார். இரு சிவச் செம்மல்களும் தமது வாகனங்களை விட்டிறங்கி,
திருவாயில்கள் பலவற்றைக் கடந்து, திருவணுக்கன் திருவாயிலை அடைந்தார்கள்.
சேரர் அவ்வாயிலில் தடைபட்டு நின்றார். சுந்தரர் மட்டும் இறைவன் திருவருளாள்
எம்பெருமான் திருமுன் சென்றார். பொன்மயமான கயிலை மாமலையில் வேத
முழக்கங்களும், துந்துபி நாதங்களும் ஒலித்த வண்ணமாகவே இருந்தன.முனிவர்கள்
சிரமீது கரம் உயர்த்தி சுந்தரரை வரவேற்றனர். தேவகணங்கள், கந்தர்வர்கள்
கற்பக மலர் தூவித் துதித்துக் கொண்டிருக்க, எம்பெருமான் கற்பக வல்லியோடு
எழுந்தருளியிருந்தார். இத்திருக்கோலக் காட்சியைக் கண்டு கண்களில் நீர் மல்க
தாய்ப் பசுவைக் கண்டு விரைந்து வரும் இளங்கன்றைப் போல் ஆராக் காதலோடு ஐயன்
திருமுன் சென்று அவரது கமலமலர்ப் பாதங்களை பணிந்து துதித்து நின்றார்
சுந்தரர்! ஆலால சுந்தரரைக் கண்ட திருசடை அண்ணல், ஆனந்தப் பெருக்கோடு,
ஆரூரனே நீ வந்தனையோ? என்று திருவாய் மலர்ந்து அருளினார். ஐயனின் அமுதமொழிக்
கேட்டு அகமும் முகமும் மலர்ந்த சுந்தரர், ஐயனே ! இந்த ஏழையின் பிழை
பொறுத்து, எம்மைத் தடுத்தாட் கொண்ட தெய்வமே! முடிவிலாத் தூய முத்தி
நெறியினை அருளிய பெருங்கருணையை எடுத்தருளும் திறத்தினை எமக்கருள வில்லையே?
என்று சொல்லி பலமுறை பணிந்து எழுந்து சிவானந்தப் பாற்கடலில் அழுந்தி
நின்றார். பேரின்பப் பெருக்கில் மெய்யுருகி நின்ற தம்பிரான் தோழர்,
எம்பெருமானிடம், நிலவணிந்த நீரணி வேணிய! நின் மலர்க்கழல் சாரும்
பொருட்டுச் சாரும் தவத்தையுடைய சேரமான் பெருமாள் திருவணுக்கன் திருவாயிற்
புறத்தே தடைபட்டு நிற்கின்றார் என பணிவோடு பகர்ந்தார். சங்கரர் நந்திதேவரை
அழைத்துச் சேரரை அழைத்துவர ஆணையிட்டருளினார். நந்திதேவர் இறைவன் ஆணைப்படி
சேரரை அழைத்து வந்தார். எம்பெருமான் திருமுன் வந்த சேரமான் பெருமாள்
நாயனார் உள்ளமும் உடலும் பொங்கப் பூரிக்க மெய்ம்மறந்து எம்பெருமானின்
திருத்தாள்களில் பன்முறை வீழ்ந்து வணங்கி எழுந்தார். எம்பெருமானின்
கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பு தவழ சேரரை நோக்கி, எமது அழைப்பின்றி
நீ ஏன் இவ்வளவு தொலைவு வந்தாய்? என திருவாய் மலர்ந்து அருளினார். சிரமீது
கரங்குவித்து நின்ற சேரமன்னன் எம்பெருமான் திருமுன் தமது பிரார்த்தனையைச்
சமர்ப்பித்தார். இவ்வெளியோன் ஆரூரர் கழல் போற்றி ஐயன் திருமுன் அணையப்
பெற்றேன். ஐயனின் கருணை வெள்ளத்தால், அடியேன் திருமுன்னே வந்து நின்று
சேவித்து நிற்கும் பொன்னான பேறு பெற்றேன். இப்பொழுது இந்த எளியோனுக்குத்
தேவரீர்! திருவருள் புரிய வேண்டும்.ஆரூரரின் அரிய நட்பை இவ்வடியேனுக்கு
தந்தருளிய வேத முதல்வனே ! எம்பெருமான் மீது பூண்டுள்ள ஆராக்காதலால்
இவ்வடியேன் திருவுலா என்னும் பிரபந்தம் ஒன்று பாடினேன். அதனை ஐயன்
திருச்செவி சாத்தி அருளப் பணிவோடு கேட்கின்றேன் என்று பிரார்த்தித்தார்.
எம்பெருமான் சொல்லுக ! எனச் சேரர்க்கு ஆணையிட்டருளினார். புலமைமிக்கச்
சேரப் பெருந்தகையார் அருள்மிக்க ஞானவுலா என்னும் திருக்கயிலாய உலாவை
மெய்யுருகப் பாடினார். எம்பெருமான் ஞான உலாவினைக் கேட்டு மகிழ்ந்தார்.
சேரரையும், சுந்தரரையும் சிவகணத் தலைவர்களாக, தமது திருவடி நிழலில்
இருக்குமாறு வாழ்த்தி அருளினார். சேரமான் பெருமாள் நாயனார் சிவபிரானின்
செஞ்சேவடிகளைத் துதித்து திருத்தொண்டு புரியலானார். சுந்தரமூர்த்தி
நாயனார், முன்போல் ஆலால சுந்தரராய், இறைவனின் அணுக்கத் தொண்டராய்த்
திருத்தொண்டு புரிந்து வரலானார். பூவுலகில் இருந்த பரவையாரும்,
சங்கிலியாரும் உலகப் பற்றை விட்டகன்று முன்போல் கமலினி, அனிநிந்தையாருமாகி
உமாதேவியாரின் சேவடி போற்றும் சேடிகள் ஆயினர். சுந்தரமூர்த்தி நாயனார்
குடும்பமே ஒரு நாயன்மார் குடும்பம் ஆகும். தந்தை சடையனார், தாய்
இசைஞானியார், சுந்தரர் இவர்கள் மூவருமே நாயன்மார் என்ற பெருமையைப்
பெற்றவர்கள்.

குருபூஜை: சுந்தரரின் குருபூஜை ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.

திருச்சிற்றம்பலம்
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

நாள்தோறும் நாயன்மார்கள்  - Page 2 Empty Re: நாள்தோறும் நாயன்மார்கள்

Post by மாலதி June 9th 2013, 08:29

கண்ணப்ப நாயனார்


உடுப்பூர்
என்பது பூம்பொழில்களும், புத்தம் புது மலர்ச்சோலைகளும் சூழ்ந்த மலைவள
மிக்கப் பொத்தப்பி நாட்டிலுள்ள சிற்றூர். இத்தலத்தைச் சுற்றி ஓங்கி உயர்ந்த
மலைகள் சூழ்ந்திருந்தன. யானைத் தந்தங்களை வேலியாகக் கொண்டதும், பெரிய
மதில் அரண்களையும் உடையதுமான இவ்வூர் வேடர்களின் தனி நாடாய்த் திகழ்ந்தது.
இவர்கள் மறவர் குலத்திற்கு ஏற்ப வேட்டையாடுவதில் வல்லவர்களாக இருந்தனர்.
தோலுடை தரித்து, ஊனை உண்டு, கொடுந்தொழில் புரியும் இவ்வேடர் குலத்திற்குத்
தலைவனாக இருந்தவன்தான் நாகன். இவனது மனைவி தத்தை என்பவள். வாள் வலிமையும்,
தோள் வலிமையும் ஒருங்கே பெற்ற நாகன், குற்றம் புரிவதையே தொழிலாகக்
கொண்டவன். அம்மறக்குடி மங்கையும் கணவனைப் போலவே வீரமும், வலிமையும் கொண்டு,
பெண் சிங்கம் போலிருந்தாள். இருவரும் பல்வகைச் சிறப்புக்களோடும் வாழ்ந்து
வந்தனரே தவிர, அவர்களுக்கு மன நிம்மதியில்லை. நாகனுக்கும், தத்தைக்கும்
திருமணமாகிப் பல காலமாகியும் மக்கட்பேறு இல்லை. அதற்காக இருவரும் பக்தர்கள்
குறை தீர்க்கும் எல்லாம்வல்ல முருகக் கடவுளைப் பல வழிகளில் அனுதினமும்
வழிபட்டு வந்தனர். இவர்களது இடையறாத பக்திக்கு சுந்தரக் கடவுளும் கருணைக்
காட்டினார். குன்றுகள் தோறும் குடியிருக்கும் குமரவேள், நாகனுக்கும்,
தத்தைக்கும் குழந்தைச் செல்வத்தை அருளினார். முருகப் பெருமானின்
திருவருளால் மறவர்குடி மங்காது விளங்க, தத்தை ஒரு ஆண் மகவை ஈன்றெடுத்து
மகிழ்ந்தாள். பிறக்கும்போதே குழந்தையைக் கைகளில் தூக்கமுடியாத அளவிற்குத்
திண்ணமாய் இருந்ததால் அவர்கள் அக்குழந்தைக்கு திண்ணன் என்று சிறப்புப்
பெயர் வைத்தனர். வேடர்கள் அனைவரும் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கி
ஆரவாரித்தனர். புலிக்குட்டிபோல் வீரத்தோடு பிறந்த திண்ணன் நாளொரு மேனியும்
பொழுதொரு வண்ணமுமாக வளரலானான். வேடர் குல முறைமைக்கு ஏற்ப உரிய பருவத்தில்
திண்ணன் வில் வித்தையை முறையோடு பயின்று, உரிய காலத்தில் வல்லவனாக
விளங்கினான்.பிரபஞ்சம் திண்ணனைப் பதினாறு பிராயம் நிரம்பப் பெற்ற
வாலிபனாக்கியது. முதுமையை அடைந்த நாகன், தலைமைப் பதவிக்குத் தன் மகனை மாற்ற
எண்ணி அதனை வேடர்களிடம் தெரிவத்தான். அவர்களும் நாகனின் விருப்பப்படியே
திண்ணனைத் தலைவனாக ஏற்றுக்கொள்ள இசைந்தனர். திண்ணனாரும் வேடர்களுக்கு ஈடு
இணையற்ற வீரத்தலைவர் ஆனார்.

உள்ளமும், உடலும் பூரித்துப்போன நாகன்,
தேவதைகளுக்குப் பூசை செய்யும் தேவராட்டியை வரவழைத்து குல வழக்கத்திற்கு
ஏற்பத் தேவதைகளுக்குப் பூஜை செய்யுமாறு கட்டளையிட்டான். தேவராட்டி வழிபாடு
செய்து, திண்ணன் தந்தையினும் மேம்பட்டவனாய் விளங்குவான் என்று ஆசி
கூறினாள். ஒருநாள் குல வழக்கப்படி வேட்டைக்குப் புறப்பட எண்ணினார்
திண்ணனார். இறைவழிபாட்டை முடித்துக் கொண்டு மற்றவர்களோடு வேட்டைக்குப்
புறப்பட்டார். மேகம் போல் வேடர் கூட்டம் சூழ, திண்ணனார் வேட்டையாடக்
காட்டிற்குள் புகுந்தார். குகைவிட்டுக் கிளம்பும் கொடும் புலியைப்போல்
திண்ணனார் வேட்டையாடத் தொடங்கினார். பறவைகளும், கொம்புகளும் பெரு
முழக்கமிட்டன. வேடர்களால் வாயால் சீழ்க்கையடித்தனர். கைகளைத் தட்டி ஓசை
எழுப்பினர். வேடர்களின் ஆர்ப்பாட்டத்தில் காடே அதிர்ந்தது சிங்கங்கள்
கர்ஜித்து வந்து, வேடர்களின் குத்தீட்டிகளுக்குப் பலியாயின. பாய்ந்து வந்து
புலிகள் அம்பினால் தாக்கப்பட்டு உயிர் நீத்தன. துள்ளித் துள்ளி வந்த
மான்கள் பல மடிந்து வீழ்ந்தன. மற்றும் பல வனவிலங்குகளும் வேடர்களின்
கணைகளுக்குப் பலியாயின. இந்தச் சமயத்தில் திடுக்கிடும் நிகழ்ச்சி ஒன்று
நடந்தது. வலையை அறுத்துக்கொண்டு தப்பி ஓடிய பெரிய பன்றி ஒன்று வேட்டை
நாய்களிடமிருந்து எப்படியோ தப்பித்துக் கொண்டதோடல்லாமல் வேடர்கள்
கணைகளுக்கும் தப்பி அதி வேகமாக ஓடத் தொடங்கியது. வேடர்கள் பன்றியைத்
துரத்திக் கொண்டு ஓடினர். பன்றி சிக்கவில்லை. அனைவரும் களைப்பு மேலிடப்
பின்தங்கினர். ஆனால் திண்ணனார் மட்டும் உறுதியோடு பன்றியைப் பின்தொடர்ந்து
கற்களையும், முட்களையும், பாறைகளையும் பாராமல் காட்டு முயல்போல்
பாய்ந்தோடியவாறு பன்றியைப் பிடிக்க முயற்சித்துக் கொண்டிருந்தார்.
திண்ணனின் மெய்க்காவலர்களாகிய நாணன், காடன் என்ற இருவர் மட்டும் அவரைப்
பின்தொடர்ந்து ஓடினர். எல்லோரையும் ஏமாற்றிவிட்டுக் காற்றினும் கடுகப்
பாய்ந்தோடிய பன்றியைப் பிடித்தார். உடைவாளால் வெட்டி, அதனைத் துண்டு
துண்டாக்கினார் திண்ணனார். திண்ணனாரின் பின்னால் ஓடிவந்த நாணனும், காடனும்
திண்ணனார் இருக்குமிடத்தை அடைந்து, தலைவரது ஆற்றலைக் கண்டு வியந்தனர்.
திண்ணனாரின் வீரத்திற்குத் தலைவணங்கிய அவ்விருவரும், அவர் கால்களில்
வீழ்ந்து வணங்கினர். அம் மூவருக்கும் நேரம் அதிகமானதாலும் ஓடிவந்த
களைப்பினாலும் பசி மேலிட்டது.

மூவரும் பன்றியை நெருப்பில் சுட்டு
தின்று, தண்ணீர் அருந்திச் செல்ல தீர்மானித்தனர். ஆனால் திண்ணனாருக்குத்
தண்ணீர் எங்கே கிடைக்கும் என்ற ஐயம் எழவே அவர்களிடம் கேட்டுத் தெரிந்து
கொண்டார். இதற்கு முன், பல தடவை வேட்டைக்கு வந்து பழக்கப்பட்ட நாணன்,
திண்ணனிடம், சற்று தொலைவில் உள்ள தேக்குமரத் தோப்பினைக் கடந்து சென்றால்
குன்றுகளின் அருகாமையில் பொன்முகலி என்னும் ஆறு ஓடுகிறது. என்று
விளக்கினார். நாணனின் பேச்சைக் கேட்டு பூரித்துப்போன திண்ணனார், அப்படியா !
நாம் அனைவரும் அங்கேயே போவோம். இந்த பன்றியையும் தூக்கிச் செல்வோம் என்று
சொல்லி முன்னால் புறப்பட, நாணனும் காடனும் பன்றியைத் தூக்கிக் கொண்டு
திண்ணனாரை வழிநடத்திச் சென்றனர். செல்லும் வழியே திண்ணனார் காளத்தி மலையைக்
கண்டார். திண்ணனார் ஒரு வினாடி அப்படியே அசைவற்று நின்றார். காளத்தி
மலையைப் பார்க்க பார்க்க அவருக்கு மெய் சிலிர்த்தது. எதனாலோ, அவர் உடம்பில்
புதுச் சக்தி பிறந்தது. மலை மீது ஒளிப்பிழம்பு தெரிவது போன்ற பிரமை அவரைப்
பற்றிச் சற்று நேரம் மெய்மறக்கச் செய்தது. குன்றின் அழகையே பார்த்துக்
கொண்டிருந்த திண்ணனார் செவிகளில் மட்டும் விழும்படியாக, மலைமீது ஐந்த தேவ
துந்துபிகள் கடல் ஒலிபோல் முழக்கம் செய்தன. அந்த ஒலியைக் கேட்கும் பேறு
பெறாத நாணன் செவிகளில், தேனீக்கள் தேனடையைச் சூழ்ந்து கொண்டும் எழுப்பும்
ஓசைதான் ஒலித்தது. திருமலையில் திருவுள்ளம் பதிந்து போன திண்ணனார், நாணா !
அக்குன்றுக்குச் செல்வோமா ? என்று உணர்ச்சி மேலிடக் கேட்டார். ஏதோ சொல்ல
முடியாத உணர்ச்சி ஒன்று திண்ணனாரைத் தடுத்தாட்கொண்டது. ஓ, போகலாமே !
அம்மலையிலே நல்ல காட்சிகள் பலவற்றைக் காணலாம், அத்தோடு அம்மலையிலுள்ள
குடுமித்தேவர் கோவிலுக்குச் சென்று, அவரையும் கும்பிட்டு வராலம் என்று
நாணன் கூறினான். அவன் மொழிந்தது கேட்டு திண்ணனார் களிப்படைந்தார் அவர்
உடம்பில் பேரின்பச் சக்தி பிறந்தது. திண்ணனாருக்குச் சொல்ல முடியாத
அளவிற்கு மகிழ்ச்சி பெருக்கெடுத்தது. மலையைப் பார்க்கப் பார்க்க உலக பாõரம்
குறைவது போன்ற ஒரு புத்துணர்வு திண்ணனாருக்கு ஏற்பட்டது. குடுமித்தேவரைக்
காணவேண்டும் என்ற ஆசை பள்ளத்தில் பாய்ந்த வெள்ளம்போல் அவர் உள்ளத்தில்
புகுந்து ஓடியது.
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

நாள்தோறும் நாயன்மார்கள்  - Page 2 Empty Re: நாள்தோறும் நாயன்மார்கள்

Post by மாலதி June 9th 2013, 08:30

குடுமித்
தேவரைக் கும்பிட வேண்டுமென்ற எண்ணம், அவரை மேலும் விரைந்து செல்லத்
தூண்டியது. நடந்து சென்று கொண்டிருந்த திண்ணனார், ஆசை மேலிட, ஆவல் உந்திட,
ஓட ஆரம்பித்தார். நாணனும் காடனும் கூடவே விரைந்தனர். சற்று நேரத்தில்
மூவரும் பொன் முகலி ஆற்றின் கரையை அடைந்தனர்.திண்ணனார், காடனை நோக்கி, காடா
! நீ, தீ மூட்டி, இப்பன்றியைச் சுட்டுச் சாப்பிடுவதற்குப் பக்குவமாகச்
செய்து வை. அதற்குள் நானும், நாணனும் மலைக்குப் போய் வருகிறோம் என்று
கூறினார். திண்ணனாரும், நாணனும் வேக வேகமாக பொன்முகலி ஆற்றைக் கடந்து
மகிழ்ச்சியுடன் திருக்காளத்தி மலைச்சாரலை அடைந்தனர்.பகலெல்லாம் பாரிலே பவனி
வந்த பகலவன் கடமையை முடித்த களிப்பிலே, களைப்பு நீங்கக் கடல் வாயிலை
அடைந்து கொண்டிருக்கும் நேரம் !மாலைக் கதிரவனின் மஞ்சள் வெயில்
திருக்காளத்தி மலையைப் பொன்மயமாக்கியது. நாணன், திண்ணனாருக்குப் பாதை
காட்டும் பொருட்டு முன்னால் நடந்து சென்றான். திண்ணனார் அவனைப் பின்
தொடர்ந்தார். மலையின் மீது படிகளைக் கடந்து செல்லும் நேரம் உலகத்
தத்துவங்கள் என்னும் படிகளைக் கடப்பது போன்ற ஒருவித மன உணர்வு பூண்டார்
திண்ணனார். வேணிநாதரின் முடி மேலிருக்கும் வெண்ணிலாவின் தன்மைபோல்
திண்ணனார் நெஞ்சம் குளிர்ந்தது. ஒவ்வோர் படி மீதும் அடி எடுத்து வைக்கும்
போதும், அவரது உள்ளத்தில் எதனாலோ பக்தி வளர்ந்தது. முருகனைப் போற்றும்
திண்ணனார், சிவத்தை சாரும் சிவயோகி போலானார். திண்ணனார், முற்பிறப்பில்
செய்த தவத்தின் பெருக்கம் அவரது உள்ளத்தில் அன்பைப் பெருக்கியது. ஆண்டவன்
மீது ஆராக காதலைப் பொங்கி எழச் செய்தது. காளத்தி மலையின் உச்சியில்
முழுங்கும் பஞ்சதேவதுந்துபிகளின் ஒலியைக் கேட்க கேட்க ஆசை பொங்கி வழிந்தது.
உள்ளம் ஏதோ ஒரு சொல்ல முடியாத விருப்பத்தை அடைந்தாற்போல் தோன்ற மெய்
சிலிர்த்தது. மலை மீதேறிய திண்ணனார் அங்கு எழுந்தருளியிருக்கும் குடுமித்
தேவரைக் கண்டார். அவரது வடிவெல்லார் புளகம் பொங்கியது. அருள் வழிகளில்
ஆனந்தக் கண்ணீர் அருவிபோல் பாய்ந்தது.

திண்ணனார் முகத்திலே புதிய
பிரகாசம் ஒன்று ஏற்பட்டது. எம்பெருமானின் கருணை கூர்ந்த அருட்திருநோக்கம்
அவர் மீது பட்டது. திண்ணனார் ஒப்பற்ற அன்பு வடிவமாய்த் திகழ்ப் புதுப்பிறவி
எடுத்தாற்போல் ஆனார். ஞாயிறு தோன்ற நலியும் இருள்போல திண்ணனார்
நெஞ்சத்தில் தோன்றிய அருள், அஞ்ஞானத்தை அறவே நீக்கியது. ஞானத்தை ஊட்டியது.
சிவகொழுந்தை அப்படியே பார்த்துக் கொண்டேயிருந்தார். அன்பினாலும்
பேருவகையினாலும் ஈர்க்கப்பெற்ற திண்ணனார் ஆசை பொங்கி மேலிட அருள் வடிவமான
அம்மையப்பரைக் கட்டித் தழுவினார். முத்தமாரி பொழிந்தார். பன்முறை வீழ்ந்து
வீழ்ந்து வணங்கி எழுந்தார். விழி இரண்டும் அருவி போல் ஆனந்த நீரைச்
சிந்தின. திண்ணனார் மதுவுண்ட வண்டுபோல் ஆனார் அவரது மொழி குழறியது. உடல்
குளிர்ந்தது. உள்ளம் பேருவகை எய்தியது. திண்ணனார் அன்பே உருவானார். அகில
உலகத்தையும் மறந்து சிலைபோலானார். சற்று நேரத்தில் மீண்டும் நினைவு
பெற்றார். இந்த ஏழைக்கு இவர் அகப்பட்டார். இப்பிறப்பில் நான் பெற்ற பேற்றை
வேறு எவருமே பெற்றிருக்க முடியாது என்று உணர்ச்சி பொங்கக் கூறிய திண்ணனார்,
எல்லையில்லா ஆனந்தப் பெருக்கில் கூத்தாடினார். இறைவனைச் சுற்றிச் சுற்றி
வலம் வந்து, நெற்றி சிவக்க நிலத்தில் வீழ்ந்து சிவலிங்கத்தை வணங்கினார்.
திண்ணனாரின் மனத்திலே திடீரென்று ஒரு கலக்கம் குடிபுகுந்தது. அவரது பிஞ்சு
மனத்திலே ஒரு கேள்வி பிறந்தது. கரடியும், வேங்கையும், கடும்புலியும்,
வாழும் இக்கொடிய கானகத்தில் குடுமித் தேவர், துணை எதுவுமின்றித் தனித்து
இருக்கிறாரே ! வனவிலங்குகள் வந்து என் எம்பிரானுக்கு ஏதாகிலும் துன்பத்தைக்
கொடுத்துவிட்டால் என்ன செய்வது ? என்னால் அக்கொடுமையைக் கண்டுகொண்டு
எப்படிப் பொறுமையாக இருக்க முடியும் ? இப்படி தமக்குள் எண்ணிப் பார்த்த
திண்ணனார், தாங்க முடியாத வேதனையால் விம்மி விம்மி அழத் தொடங்கிவிட்டார்,
அவரது கையில் இருந்த வில், தானாக நழுவி நிலத்தில் வீழந்தது. அப்பொழுது
திண்ணனார் இறைவனின் திருமேனியில் பச்சிலையும், நீரும் இருப்பதைப்பார்த்து,
என் ஐயனை இப்படியெல்லாம் செய்தவர் யாராக இருக்கலாம் என்று தமக்குள்ளேயே
கேட்டுக் கொண்டார். உண்மையை அறிய விரும்பிய திண்ணனார் இதே கேள்வியை
நாணனிடம் கேட்டார். நாணன் திண்ணனாரை நோக்கி தலைவா ! இதெல்லாம் யாருடைய வேலை
என்பதை நான் நன்றாக அறிவேன் முன்னொரு முறை, நான் உங்கள் தந்தையுடன்
இக்கோவிலுக்கு வந்திருந்தேன். அது சமயம் பார்ப்பனர் ஒருவர் இக்குடுமித்
தேவருக்குப் பச்சிலையிட்டு நீரை வார்த்துச் செல்வதைக் கண்டேன். இன்றும்
அவர்தான் இவ்வாறு செய்திருத்தல் வேண்டும் என்றான்.


நாணன்
கூறியதைக் கேட்டு திண்ணனார் இவ்வாறு செய்வதுதான் குடுமித் தேவருக்கு
மகிழ்ச்சியைத் தரக்கூடிய செய்கைகள் ஆகும் என்பதை உணர்ந்தார். தாமும்
அவற்றைக் கடைப்பிடித்து அவ்வழி செல்ல முடிவுகட்டினார். ஏன் நாணா !அப்படி
என்றால், நாம் அன்போடு எதைச் செய்தாலும் இறைவன் ஏற்றுக்கொள்வார்
போலிருக்கிறதே ! என்று ஒன்றுமறியாப் பாலகனைப் போல் கேட்டார். திடீரென்று
திண்ணனாருக்குத் தாம் இறைவனைப் பட்டினி போட்டு விட்டோமோ ? என்ற ஐயமும்
எழுந்தது. உண்மையிலேயே இறைவன் பசியுடன் தான் இருப்பார் என்ற முடிவிற்கும்
வந்தார் திண்ணனார். குடுமித் தேவரே ! என் இறைவனே ! நீர் இங்கு தனியாக
அல்லவா இருக்கிறீர் ? உமக்குப் பன்றி இறைச்சியும், குளிர்ந்த தண்ணீரும்
கொடுப்பவர் யார் ? என்று புலம்பத் தொடங்கிவிட்டார். உடனே விரைந்து சென்று,
இறைவனுக்கு இறைச்சியும், தண்ணீரும் கொண்டு வரும் நோக்கோடு முன்னால் இரண்டடி
எடுத்து வைத்தார். சட்டென்று எதையோ மனதில் எண்ணியவாறு ஓடிவந்து இறைவனைக்
கட்டித் தழுவிக்கொண்டு, இந்த இடத்தை விட்டுப் பிரிந்து நான் எங்குமே
போகமாட்டேன். ஒரு அடி கூட நான் நகர மாட்டேன். என் ஐயனைப் பிரிந்துருக்கவே
முடியாது என்று கூறியவாறு இறைவனை விடாது அணைத்தடியே இருந்தார். அந்த இடத்தை
விட்டுப் போகவே அப்பொழுது அவருக்கு மனம் வரவில்லை. அப்படியே சென்றாலும்
சற்று அடி எடுத்து வைப்பார். மீண்டும் வருவார். சிவலிங்கத் திருமேனியைத்
தழுவுவார். உச்சிமோந்து நிற்பார். பேரன்போடு திரும்பிப் பார்த்து நிற்பார்.
மீண்டும் ஓடிச்சென்று இறைவனைக் கட்டித் தழுவிக் கொள்வார். இறைவனைக்
கட்டித் தழுவி, குழந்தைப் போல் கொஞ்சிக் குழைவார். தாய்ப் பசுவை விட்டுப்
பிரிய முடியாமல் துடிக்கும் கன்று போல், திண்ணனார் குடுமித்தேவரை விட்டுப்
பிரிய முடியாமல் மனம் வாடினார். பிறை சூடிய பெருமானை நினைத்து, புலம்பிப்
புலம்பி கலங்கி நின்ற திண்ணனார், பித்தனாகவே மாறிவிட்டார். இறுதியில்
எப்படியோ மனத்தை ஒருவாறு தேற்றிக்கொண்டு வில்லைக் கையில் எடுத்துக் கொண்டு
புறப்பட்டார். இறைவனைத் திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டே வழி
நடந்தார். திண்ணனாரின் ஒவ்வொரு செயலையும் பார்த்துக் கொண்டே இருந்த நாணன்,
இவருக்கு பைத்தியம் பிடித்து விட்டதோ ? என்று மனதில் எண்ணியவாறே
திண்ணனாரைப் பின் தொடர்ந்து சென்றான். திண்ணனார் பற்றற்ற பரம ஞானியைப் போல்
நடந்து கொண்டிருந்தார். அவரது கால்கள்தான் நடந்து கொண்டிருந்தனவே தவிர,
அவரது எண்ணமெல்லாம் காளத்திமலைக் கோயில் மீதுதான் இருந்தது.

பொன்
முகலி ஆற்றைக் கடந்து, காடன் எதிரில் வந்து நின்றதுகூட அவரது உணர்வுக்கு
அப்பாற்பட்ட செயலாகவே இருந்தது. அந்த அளவிற்கு அம்பலத்தரசரின் அருள்
கயிற்றினால் பிணைக்கப்பட்டிருந்தார் திண்ணனார். திண்ணனாரைப் பார்த்த காடன்,
அன்போடு தலைவரை எதிரில் வந்து தொழுதான்.நாணன் அவனிடம், குடுமித்தேவரை நம்
தலைவர் உடும்புப் பிடியாக அல்லவா பிடித்துக்கொண்டு விட்டார் ! இப்போது
இங்கு வந்திருப்பது கூட வீட்டிற்கு போவதற்காக அல்ல; குடுமித்தேவருக்குப்
பன்றி இறைச்சியைப் பக்குவப்படுத்திக் கொண்டு போவதற்காகத்தான். தெய்வ
மயக்கம் தலைக்கேறிக் குடுமித்தேவரோடு ஐக்கியமாகிவிட்டார் என்று கூறினான்.
நாணன் மொழிந்ததைக் கேட்டு காடன் நிலை குலைந்தான். நமக்கெல்லாம் தலைவராக
இருக்கும் இவர் எதனால் இப்படி மாறிவிட்டார் ? என்று தனக்குள் வேதனையோடு
கேட்டுக் கொண்டான். நாணனும், காடனும், திண்ணனாரிடம் நாட்டிற்குப்
புறப்படலாம் என்று பல தடவைகள் கேட்டனர் ! திண்ணனார் மவுனமாகவே
இருந்தார்.இறைவனின் அருள் வெள்ளத்திலே மூழ்கிய திண்ணனார் இவர்களது
கூற்றையெல்லாம் சற்றும் செவி சாய்த்துக் கேட்காது இறைச்சியைப்
பக்குவப்படுத்து வதிலேயே தமது முழுக் கவனத்தையும் செலுத்தினார். அம்பினால்
பன்றியைக் கிழித்து இறைச்சியைத் துண்டு துண்டாக வெட்டினார். அவற்றைக்
நெருக்கமாக அம்பிலே கோர்த்து, நெருப்பில் நன்றாகக் காய்ச்சித் தக்கபடி
பக்குவமாகச் சமைத்தார்.அவற்றை வாயில் இட்டுச் சுவைத்துப் பார்த்தார்.
வாய்க்குச் சுவையாக இருந்த நல்ல இறைச்சித் துண்டுகளை எல்லாம் தேக்கிலையால்
செய்த தொன்னையிலே எடுத்துக் கொண்டார்.திண்ணனாரின் இச்செய்கைகளை எல்லாம்
பார்த்துக் கொண்டேயிருந்த காடனுக்கும், நாணனுக்கும் என்ன செய்வதென்றே
புரியவில்லை. நாகனையும், தேவராட்டியையும் அழைத்து வந்து தக்க முடிவு
காணலாம் என்ற எண்ணத்தோடு, திண்ணனாரிடம் கூடக் கூறலாம் புறப்பட்டனர்.
கண்ணிருந்தும் குருடராய், காதிருந்தும் செவிடராய் இறைவன் அன்பு மயக்கத்தில்
ஐம்புலனையம் ஒருமைப்படுத்தித் தம்மை மறநந்திருந்த திண்ணனார், இவர்கள்
பேசியதையும் கவனிக்கவில்லை; இவர்கள் சென்றதையும் கவனிக்கவில்லை. திண்ணனார்
தொன்னையில் பன்றி இறைச்சியை நிரப்பிக் கொண்டார். இறைவனை நீராட்டுவதற்காக
பொன் முகலி நீரை வாயில் நிறைய முகந்து கொண்டார். பூசிப்பதற்குத் தேவையான
நறுமலர்களைக் கால்களினால் பறித்து வந்து தலைமீது ஏந்திக் கொண்டார். ஒரு
கையிலே வில், மற்றொரு கையிலே ஆற்றுநீர், தலையிலே மலர்கள், இதயத்திலே
இறைவனைப் பற்றிய சிந்தை ! இப்படியாக, சிவ வழிபாட்டிற்குப் புறப்பட்ட
திண்ணனார், காளத்தி மலையை நோக்கி வேகமாக ஓடினார். சிவலிங்கப் பெருமானின்
திருச்சன்னிதானத்தை அடைந்தார்.
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

நாள்தோறும் நாயன்மார்கள்  - Page 2 Empty Re: நாள்தோறும் நாயன்மார்கள்

Post by மாலதி June 9th 2013, 08:31

முதல் வேலையாக அரசார் திருமேனியிலிருக்கும் மலர்களையும், பச்சை இலைகளையும்
செருப்புக் காலால் அகற்றினார். வாயிலிருந்த பொன் முகலி ஆற்று நீரை ஆண்டவன்
மீது உமிழ்ந்தார். இதயத்திலுள்ள எல்லையில்லா அன்பை அரனார் மீது சொரிவதுபோல
தலைமீது சுமந்து வந்து நறுமலர்களை இறைவன் மீது பொழிந்தார். கையில் கொண்டு
வந்திருந்த ஊன் நிறைந்த தொன்னையை தெய்வத்தின் திருமுன் பயபக்தியோடு
வைத்தார், தேவரும், பூதகணங்களும் முனிவரும் போற்றி வணங்கும் மறைமுதல்வன்,
முன்னால் வைத்த இறைச்சியை, திருவமுதூட்டச் சித்தம் கொண்டார் திண்ணனார்.ஐயனே
! இந்த இறைச்சியை அம்பிலே கோர்த்து, நன்றாக நெருப்பிலிட்டுப் பக்குவமாகச்
சமைத்துள்ளேன். அதிலும் நானே நாவால் சுவைத்துப் பார்த்துச் வையுள்ள
இறைச்சியை மட்டும் தங்களுக்குக் கொண்டு வந்துள்ளேன். எம்பெருமானே ! இந்த
ஏழையின் ஆசையைப் பூர்த்திசெய்யத் திருவமுது செய்து அருளவேண்டும் என்று
மொழிந்தவாறே, ஊனை இறைவனுக்கு அன்போடு ஊட்டத் தொடங்கினார் திண்ணனார்.
உலகமெங்கும் கங்குல் அரசன் தனது ஆட்சியைத் தொடங்கினான். திண்ணனாருக்குப்
பயம் ஏற்பட்டது. ஏற்பட்ட பயமோ தம்மைப்பற்றி அல்ல ! தமது அன்பு அணைப்பிலே
அழுந்தி நிற்கும் இறைவனைப் பற்றித்தான்.இரவில் வனவிலங்குகள் வந்து இறைவனைத்
துனன்புறுத்தக்கூடுமோ? என்ற பயத்தால் கலங்கிய திண்ணனார், செவ்விய அன்பு
தாங்கிய திருக்கையில் வில்லைத் தாங்கிக் காளத்தியப்பரின் அருகினிலேயே
அசையாமல் இரவெல்லாம் கண் இமைக்காமல் நேசமுறக் காவல் காத்து நின்றார்.
மூங்கில்கள் சொரியும் முத்துக்களின் ஒளியாலும், பாம்புகள் உமிழ்ந்த சிவந்த
மாணிக்கக் கற்களின் பேரொளியினாலும் ஒளி வீசும் சோதி மரங்களின்
விளக்கத்தாலும், குரங்குகள் பொதும்பில் அவைகட்கு விளக்காக வைத்த
மணிவிளக்குகளின் ஒளியினாலும், ஐம்புலன்களை அடக்கிய முனிவர்கள்பால் எழும்
அரிய பெரிய ஜோதி மயத்தாலும் எங்கும் ஒளிச்சுடர் படர்ந்த வண்ணமாகவே இருந்தன.
இருள் புலர்ந்தது. புள்ளினங்கள் ஆர்த்தன. வேள்விச் சாலைகளில் அந்தணர்களின்
வேதபாராயணம் ஒலித்தன. ஆலயங்களில் காலை முரசம் முழங்கின. செங்கதிரோன்
குணதிசை எழுந்து தனது விரிக்கதிர்களைப் பாரிலே பரப்பினான். அவனது செம்மையான
கதிர்கள் திண்ணனார் மீது பட்டன. உறங்காமல் காவம் புரிகின்ற பக்திச்
செம்மல் இறைவனைப் பார்த்துப் பெரு மகிழ்ச்சி கொண்டார். அப்பொழுது அவரது
மனதில் இறைவனுக்குத் திரும்பவும் பசி எடுக்குமே! அதற்குள் விரைந்து சென்று
இறைச்சியைக் கொண்டு வரவேண்டும் என்று எண்ணினார். வேகமாகப் புறப்பட்டார்.

திண்ணனார்
திருக்கோயிலை விட்டு வெளியே சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் வழக்கம்போல்
பூசை செய்யும் சிவகோசரியார் என்னும் அந்தணர் வழிபாடு செய்வதற்காக மலரும்
நீரும் நறுமணப் புகைப்பொருளும் எடுத்து வந்தார். உள்ளே வந்த அந்தணர் இறைவன்
திருமுன்னால் இறைச்சியும் எலும்பும் சிதறிக் கிடப்பதைக் கண்டு பதறினார்.
ஐயையோ ! இத்தகைய இழிவுச் செயல்களைச் செய்தவர் எவரோ ? என்று நிலத்தில்
வீழ்ந்து அலறினார். செய்வதறியாது திகைத்தார். கலங்கினார்.
வேடர்குலத்தவர்தான் இத்தகைய கொடிய பாதகச் செயல்களைச் செய்திருக்க வேண்டும் !
என்று மனதில் எண்ணியவாறு அந்த இடத்தைச் சுத்தம் செய்தார். பொன்
முகலிக்குச் சென்று நீராடித் திரும்பி வந்தார் அந்தணர். என்றும் போல் வேதம்
ஓதி சைவாகம முறைப்படி இறைவனை நீராட்டினார். மலரிட்டு நறுமணப் புகை காட்டி
வழிபட்டார். மனவேதனையோடு தமது வீட்டிற்குத் திரும்பினார். காளத்திமலையை
விட்டுப் புறப்பட்ட திண்ணனார். அரனாருக்குப் பலவகை விலங்குகள் மாமிசத்தைச்
சமைத்து அமுதூட்ட எண்ணினார். அதற்காக மான், பன்றி, காட்டுமான் முதலியவற்றை
வேட்டையாடினார் திண்ணனார். அதன்பிறகு, முந்தைய நாள் போல், அவற்றை அம்பிற்
கோர்த்து தீயிலிட்டு வதக்கி எடுத்தார். சுவைத்துப் பார்த்துக் தொன்னை
நிறையச் சேர்த்துக் கொண்டார். தேன் அடைகளை பிழிந்து ஊனை கலந்தார். தலையில்,
மலரையும், வாயில் நீரையும் எடுத்துக் கொண்டு காளத்தியப்பரின் பசியைப்
போக்கப் புறப்பட்டார் திண்ணனார். ஆலயத்தை அடைந்த திண்ணனார் இறைவன்
முன்னால், பச்சிலையும், தண்ணீரும் இருப்பது கண்டு திகைத்தார். முன்போலவே
அவற்றைச் செருப்பு கால்களால் சுத்தம் செய்தார். வாயில் இருந்த தண்ணீரை
உமிழ்ந்து இறைவனுக்கு திருமஞ்சன நீராட்டினார். தலையிலிருந்து மலரை
உதிர்த்து அர்ச்சனை புரிந்தார். அன்போடு அமுதூட்டி உளம் மகிழ்ந்தார்.
இப்படியாக தினமும் திண்ணனாரும், சிவகோசரியாரும் மாறி மாறி சிவபூஜை செய்து
வரலாயினர்.திண்ணனாரின் ஊன் அமுதும் அன்பும் கலந்த பூசையும், சிவகோசரியாரின்
சிவாகமமுறை வழிபாடும் நாள்தோறும் இடைவிடாமல் நடந்த வண்ணமாகவே இருந்தன.
இதற்குள், நாணனும், காடனும் ஊருக்குத் திரும்பி நாகனிடம், திண்ணனாரின்
நிலையைப் பற்றி விளக்கிக் கூறினர். நாகன் அரவம் தீண்வினாற்போல் துடித்தான்.
மகனுக்கு ஏதோ ஆபத்து நேர்ந்துவிட்டது என்று அஞ்சி நடுங்கினான். நாகன்
தேவராட்டியையும், தத்தையயும் அழைத்துக் கொண்டு, திண்ணனாரைப் பார்க்கக்
காளத்தி மலைக்கு புறப்பட்டான். திண்ணனார் குடுமித்தேவரை அணைந்த வண்ணம்
இருந்தார். அப்பொழுது அங்கு வந்த நாகனும், தத்தையும் திண்ணனாரிடம், பல
வழிகளில் பேசிப் பார்த்தார்கள். பழகிப் பார்த்தார்கள். அவரைப்
பிடித்திருக்கும் சாமிப் பைத்தியம் மட்டும் விட்ட பாடில்லை என்பதை உணர்ந்து
வருந்தினார்கள். தேவராட்டிøயும் முயற்சித்துத் தோல்வியுற்றாள். நாகனும்
தத்தையும் மனம் வருந்தினர். மகனைத் தன்னோடு அழைத்துச் செல்வது என்பது இயலாத
காரியம் என்பதைத் திடமாகக் கொண்டனர். இறைவனது கருணைக் கயிற்றிலே கட்டுண்ட
திண்ணனார் இவர்கள் முன்னால் வெறும் ஜடமாகவே காணப்பட்டார். அவர்கள்
திண்ணனாரைப் பழைய நிலைக்குக் கொண்டு வருவது இயலாத காரியம் என்று
வருத்தத்துடன் வந்த வழியே திரும்பினார்கள். குடுமித்தேவருக்கு வேடர்
வழிபாடும், வேதியர் வழிபாடும் நான்கு நாட்களாகக் கலந்து கலந்து நிகழலாயின.
ஐந்தாம் நாள் வந்தது. அன்றும் வழக்கம்போல், திண்ணனார் சென்ற சற்று
நேரத்திற்கெல்லாம் வந்த சிவகோசரியார் இறைவன் முன்னால் தினமும் காலை தான்
வரும்பொழுதெல்லாம் இறைச்சி சிதறிக் கிடப்பதை எண்ணி மனம் தாளாமல் இறைவனிடம்
இறைஞ்சினார்
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

நாள்தோறும் நாயன்மார்கள்  - Page 2 Empty Re: நாள்தோறும் நாயன்மார்கள்

Post by மாலதி June 9th 2013, 08:32

எம்பிரானே ! தம்பிரானே ! திருக்காளத்தி அப்பனே ! அபச்சாரம். தினம் தவறாது
எலும்பையும் இறைச்சியையும் உமது திருமுன்னால் வாரி இறைத்து மாசுபடுத்துவது
இன்னாரென்று யான் அறியேனே !தேவரீர் ! திருஉள்ளம் கனிந்து இத்தகைய கொடுமையை
இனியும் நேராத வண்ணம் எம்மைக் காத்தருள வேண்டும் என்று பரமனிடம்
பிரார்த்தித்தபடியே வழிபாட்டை முடித்துக் கொண்டு வீட்டிற்குச் சென்றார்.
அன்றிரவு அவரது கனவில் செஞ்சுடர் வண்ணர் எழுந்தருளினார்.இச்செயலை யாரோ
வேடுவன் வேண்டுமென்றே, என்னை இழிவுபடுத்த வேண்டும் என்பதற்காகச் செய்கிறான்
என்று மட்டும் எண்ணிவிடாதே. அவனது வடிவமெல்லாம் எப்பொழுதும் நம் பக்கம்
அன்பு செலுத்தும் தன்மையானதே.அவனுடைய அறிவும் உணர்வும் நம்மை அறியும் அறிவே
! அவனுடைய செயல் ஒவ்வொன்றும் நமக்கு இனிமை பயக்கக்கூடியதாகும். அவனது
செருப்புக் கால்கள் என் மீது தேய்த்துச் சுத்தப்படுத்தும் போது எனக்கு
மழலைகளின் சேவடிகள் தடவிச் செல்வது போன்ற இன்பப் பெருக்கை ஏற்படுத்துகிறது.
கங்கை, காவிரி முதலிய தூய நதிகளின் நீரைவிடத் தூய்மையான அவன் தனது
வாயினின்றும் உமிழ்கின்ற திருமஞ்சன நீர். அவனது முடியிலிருந்து உதிர்ந்து
விழும் நறுமலர்கள், அவன் எம்மீது கொண்டுள்ள உயிருக்கு உயிரான அன்பு
மலர்ந்து, நம்மீது நழுவி விழுவதைப் போலாகும், அம்மலர்களுக்குத்
தேவதேவாதியர்கள் இடும் பாரிஜாத மலர்கள் கூட ஒவ்வா. அவன் ஊட்டும் இறைச்சி
மறைவிதிப்படி அளிக்கும் அவிர்பாகத்தைவிடச் சிறந்ததாகும். வேத முனிவர்கள்
ஓதும் தோத்திர நாமங்களை விட, அவன் அகம் குளிர அன்புருகிக் கூறும் மொழிகளே
மிகமிக நல்லவை; எனக்கு இன்பம் தரத்தக்கவை. அவனது இத்தகைய உயர்ந்த அன்புச்
செயலை உனக்குக் காட்டுகிறேன். இதற்காகக் கலங்காதே என்று திருவாய்
மலர்ந்தார் எம்பெருமான் ! சிவகோசரியார் கனவு கலைந்து திடீரென்று
விழித்தெழுந்தார். எம்பெருமானைப் போற்றி நிலத்தில் வீழ்ந்து வணங்கினார்.
அவரது கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகியது. அதன் பின்னர் உறக்கம் எப்படி
வரும் ! கனவில் கண்ட பெருமானின் திருக்கோலத்தை எண்ணியபடியே விடியும்வரை
விழித்திருந்தார். அன்று ஆறாம் நாள் ! வழக்கம்போல் திண்ணனார் வேட்டைக்குப்
புறப்பட்டார். அந்தச் சமயத்தில் அந்தணர் மன நிறைவோடு திருக்கோயிலுக்கு
வந்தார். வழக்கப்படி வேதாகம வழிபாடுகளைச் செய்தார். அதன் பிறகு இறைவன்
கனவில் எழுந்தருளி மொழிந்ததற்கு ஏற்பச் சிவலிங்கத்தின் பின்புறமாக
ஓரிடத்தில் மறைந்து கொண்டார். வழக்கம்போல், தொன்னையில் இறைச்சியும்,
தலையில் நறுமலரும், வாயில் பொன்முகலி ஆற்றுத் தெளிந்த நீரும் எடுத்துக்
கொண்டு திண்ணனார் திருச்சன்னிதிக்குள் வந்தார். திண்ணனாரின் பக்தியை
உலகோர்க்கு உணர்த்தவும், இறைவன் மீது கொண்டுள்ள அன்பை சிவகோசரியாருக்குத்
தெரியப்படுத்துவதற்காகவும் வேண்டி குடுமித் தேவர், அந்த ஆனந்தமலை மீது ஓர்
அற்புத விளையாடலைத் தொடங்கினார். எம்பெருமான், தமது சிவலிங்கத்
திருமேனியில் வலக்கண்ணில் இருந்து இரத்தம் வடிவதைப் போல் காட்டினார்.

சிவபெருமானுடைய
திருவிழிகளிலிருந்து குருதி கொட்டுவது கண்டு மதிமயங்கிய திண்ணனார்
செயலிழந்தார். வாயிலிருந்த பொன்முகலியாற்று நீர் கீழே விழுந்து சிதறியது.
வில்லும் கீழே நழுவின. குடுமியில் சுமந்து வந்த நறுமலர்கள் சோர்ந்தன. அருள்
மிகுதியால் நிலை தளர்ந்த திண்ணனர் பதைபதைத்துக் கீழே விழுந்தார். அவரது
உள்ளமும், உடலும் நடுங்கியது. நடுக்கத்தால் உடல் வியர்த்தது. அவர் கண்ணீர்
வடித்தார் ! கதறினார் ! திடுக்கிட்டு எழுந்தார். எம்பெருமானின் குருதி
வழியும் திருக்கண்ணை தமது கையால் துடைத்தார். குருதி மட்டும்
நின்றபாடில்லை. செய்வதறியாது, செயல் மறந்து நிலத்தில் வீழ்ந்தார். மீண்டும்
எழுந்தார்.எம்பெருமானுக்கு இத்தகைய கொடிய துன்பத்தை செய்தது யார்? காட்டு
விலங்குகளானாலும் சரி, மாறாக வேடர்கள் ஆனாலும் சரி, என் ஐயனுக்கு
இப்படியொரு துன்பத்தைக் கொடுத்ததை மட்டும் என்னால் பொறுக்கவே முடியாது.
இப்பொழுது பழி வாங்கி வருகிறேன் என்று கர்ஜித்த திண்ணனார் கோபத்துடன்
எழுந்தார். வில்லும் அம்பும் எடுத்தார். வில்லில் நாணேற்றி குன்றின்
சாரலில் அங்குமிங்குமாக நெடுந்தூரம் தேடித் தேடி அலைந்தார். தேடிய
இடங்களிலெல்லாம் விலங்குகளையோ வேடர்களையோ காணாது வேதனையோடு திரும்பி
வந்தார்.எம்பெருமானின் இரத்தம் சிந்தும் விழிகளைப்ப பார்த்து ரத்தக்
கண்ணீர் வடித்தார். குடுமித்தேவரை இறுகக் கட்டித் தழுவினார். அன்பும்
அருளும் இணைந்தன. பக்தியும், சக்தியும் கலந்தன.வேடர்கள் மூலிகைகளைக் கொண்டு
புண்களை ஆற்றுவது திண்ணனார் நினைவிற்கு வந்தது. உடனே காளத்தி மலை
அடிவாரத்திற்குச் சென்று தமக்குத் தெரிந்த சில பச்சிலை மூலிகைகளைப் பறித்து
வந்தார். அப்பச்சிலைகளைக் கசக்கிப் பிழிந்து சாற்றை இறைவன் திருவிழிகளில்
பிழிந்தார். அப்படியும் பெருகி வந்த இரத்தம் மட்டும் சற்றுகூட நிற்கவே
இல்லை.அந்த சமயத்தில், ஊனுக்கு ஊனிடல் வேண்டும் என்ற ஆன்றோர்களின்
சித்தாந்த மொழி அவரது சிந்தைக்கு எட்டியது.எம்பெருமானுடைய விழிக்கு நேர்ந்த
விபத்தைத் தீர்ப்பதற்கு, தம்முடைய விழிகளில் ஒன்றைத் தோண்டி எடுப்பது
இரத்தம் சிந்தும் இறைவனின் திருவிழிகளில் வைப்பது என்ற கருத்தினைக்
கொண்டார் திண்ணனார். சற்றும் தாமதிக்காமல் கூரிய அம்பினால் தமது
வலக்கண்னைத் தோண்டி எடுத்தார். காளத்தி அப்பனின் ரத்தம் வழியும்
வலக்கண்ணில் அப்பினார் திண்ணனார். அக்கண்ணில் இருந்து ரத்தம் வழிவது
நின்றது. திண்ணனாரின் கண்களிலிருந்து ரத்தம் பெருக்கெடுத்து ஓடத்
தொடங்கியது. அவர் அதைச் சற்றும் பொருட்படுத்தவில்லை. வேதனையைப்பற்றி
சற்றுகூட எண்ணிக் கதறவில்லை. தாம் தக்க சிந்தனையோடு செய்த செயல் பரமனின்
கண்களைக் குணப்படுத்திவிட்டதே என்ற களிப்பில் மலையை ஒத்த தமது தோள்களைத்
தட்டிக் கொண்டு ஆனந்தக் கூத்தாடினார். திண்ணனாரின் தெளிந்த பேரன்பின்
பெருக்கினை மேலும் சோதிக்க தொடங்கிய சிவனார். தமது இடக்கண்ணிலிருந்தும்
ரத்தம் வழியுமாறு செய்தார்
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

நாள்தோறும் நாயன்மார்கள்  - Page 2 Empty Re: நாள்தோறும் நாயன்மார்கள்

Post by மாலதி June 9th 2013, 08:32

ஆனந்தக் கூத்தாடிக் களித்து நின்ற திண்ணனார் இறைவனின் இடக்கண்ணிலிருந்து
ரத்தம் பெருகி வருவது கண்டு, அப்படியே அசைவற்று நின்றார். கண்ணுக்குக்
கைகண்ட மருந்தைக் கண்ட பின்னர் திண்ணனார் எதற்காக கண்ட கண்ட மூலிகைகளையும்
பச்சிலைகளையும் தேடி அலையப் போகிறார் ! அக் கண்ணிலிருந்து வரும்
இரத்தத்தையும் தடுத்து நிறுத்த அப்பொழுது தமது மறுகண்ணையும் அம்பினால்
தோண்டி எடுத்து அப்புவது என்ற முடிவிற்கு வந்தார். மறுகண்ணையும்
எடுத்துவிட்டால், இறைவனது கண் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடுமே என்று
நினைத்து தமது காலை, இறைவனின் குருதி கொட்டும் இடக் கண்ணருகே பலமாக ஊன்றிக்
கொண்டார்.அம்பை எடுத்தார். அம்பு எடுத்த அன்பர், காளத்தியப்பரை அன்பின்
பெருக்கிலே ஒருமுறை பார்த்தார். இந்தக் கண்ணையும் பறித்து இறைவனுக்கு
வைத்து விட்டால் பிறகு இறைவனைக் கண்ணால் பார்க்கவே முடியாதே - அன்பு
வடிவமான இறைவனின் அருள் முகத்தைக் காணவே முடியாதே ? என்று எண்ணினாரோ
என்னவோ, இறைவனையே பார்த்துக் கொண்டிருந்தார்.பார்த்துப் பார்த்து மனம்
உருகினார்.இனிமேல் என்றும், எப்பொழுதும், ஞானக்கண்களால் இறைவனைக்
கண்டுகளிக்கப் போகும் திண்ணனார். தமது ஊனக் கண்களைப் பற்றி கவலைப்படவில்லை.
அம்பை எடுத்தார். இடக்கண்ணில் ஊன்றி கண்ணைத் தோண்டப் போனார். இதற்கு மேல்
காளத்தியப்பர். தமது அன்புத் தொண்டனைத் துன்புறுத்த விரும்பவில்லை. அருள்
வள்ளலார், திண்ணனாரின் அன்பிற்கு அடிமையானார். அன்பர்களைக் காக்கும்
அம்பத்தரசன் - கருணைக் கடலான சந்திரக்காலாதரன் - வேதமுதல்வன் திண்ணனாரைத்
தடுத்தாட் கொண்டார். எம்பெருமான் தமது திருக்கையால் திண்ணனாரின் கரத்தைப்
பற்றினார்.நிற்க கண்ணப்ப ! நிற்க கண்ணப்ப ! அன்புருவே நிற்க ! என்று தமது
அமுத வாக்கால் திருவாய் மலர்ந்து அருளினார் எம்பெருமான்.தேவர்கள் மலர்மாரி
பொழிந்தனர். ஆலயம் எங்கும் புத்தொளி பிறந்தது. வேதம் முழங்கியது. திண்ணனார்
இறைவனின் அருளிலே அன்பு வடிவமாய், பேரின்பப் பெருக்கெடுத்து நின்று
கொண்டிருந்தார்.இந்நிகழ்ச்சிகள் அனைத்தையும் மறைந்திருந்து பார்த்துக்
கொண்டிருந்த சிவகோசரியார் திண்ணனாரின் பக்திக்கு தலை வணங்கினார். இறைவன்
திருவருளினாலே திண்ணனார், இழந்த கண்ணைப் பெற்றார். கண் பெற்றதோடு கண்ணப்பர்
என்ற திருநாமத்தையும் பெற்றார்.கண்ணப்பரின் உண்மையான பக்தியையும்,
இறைவனின் திருவருளையும் என்ணிப் பார்த்தார் அந்தணர். ஆயுள் எல்லாம் அரனாரை
வழிபட்டேன்; என்னால் அவரது அருளைப்பெற முடியவில்லை. ஆறுநாள் பூஜையிலே
ஆண்டவனின் அருகிலேயே இருக்கும் இன்பப் பேற்றினைப் பெற்றார் திண்ணனார்.
அதற்குக் காரணம் வெறும் பூஜை மட்டுமல்ல ! உண்மையான அன்புதான். அன்வே
சிவமானார். அன்பில்லாத வழிபாட்டால் ஒரு காரியமும் நடக்காது. இறைவனின்
அருளைப் பெறவும் முடியாது.இம்மையில் யாம் முக்தி பெற, இனிமேல்
காளத்தியப்பரோடு கண்ணப்பரையும் சேர்த்து வழிபடுவதே சிறந்தது ! என்று
உறுதிபூண்டார் வேதியர். நிலத்தில் வீழ்ந்து வணங்கினார்.
அருந்தவத்தோர்க்கும் கிட்டாத பரம்பொருளாகிய எம்பெருமான் திருவாய் மலர்ந்து,
ஒப்புயர்வற்ற கண்ணப்பா ! நீ எமது வலப்பக்கத்திலே எப்பொழுதும் நிற்பாயாக !
என்று திருவருள் புரிந்தார்.திண்ணனார் கண்ணப்பர் ஆனார். கண்ணப்பர்
பரமனுக்குக் கண்கொடுத்து பக்திக்குக் கண்ணாக விளங்கினார்.

குருபூஜை: கண்ணப்ப நாயனாரின் குருபூஜை தை மாதம் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.

கலைமலிந்த சீர் நம்பி கண்ணப்பர்க்கு அடியேன்
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

நாள்தோறும் நாயன்மார்கள்  - Page 2 Empty Re: நாள்தோறும் நாயன்மார்கள்

Post by மாலதி June 9th 2013, 08:32

அதிபத்த நாயனார்

சோழ
நாட்டிலே காவிரிப் பூம்பட்டினமும், நாகபட்டினமும் இரு பெரும் நகரங்களாக
விளங்கின. அந்நகரங்களில் கப்பல் வாணிபத்தில் வல்லமை பெற்ற
நாகப்பட்டினத்தின் கடற்கரை ஓரத்தில் நுழைப்பாடி என்ற இடம்
அமைந்திருந்தது.இந்நகரில் வலைஞர்கள் வாழ்ந்து வந்தனர். அவர்கள் மீன்
வியாபாரம் செய்து வந்ததோடு சங்கு, பவழம் போன்ற பொருள்களையும் விற்பனை
செய்து வந்தனர்.ஆழ்கடலுள் சென்று மீன் பிடித்ததுவரும் அதிபத்தர் முதல் மீனை
இறைவனுக்கு என்று சொல்லி கடலிலேயே விட்டு விடுவதைத் தலைசிறந்த இறை
நியதியாகக் கொண்டிருந்தார்.எல்லையில்லாப் பக்தி காரணமாகத்தான் அதிபத்த
நாயனார் இவ்வாறு திருத்தொண்டு புரிந்து வந்தார்.இவருடைய அன்பிற்குக்
கட்டுப்பட்ட எம்பெருமான் இவரது புகழை உலகறியச் செய்யத் திருவுள்ளம்
கொண்டார். முன்பெல்லாம் ஏராளமான மீன் பிடித்த நாயனாருக்கு இப்பொழுதெல்லாம்
எவ்வளவு தான் வலை வீசிய போதும் ஒரே ஒரு மீனுக்கு மேல் கிடைப்பதில்லை. அந்த
மீனையும் இறைவனுக்கு என்றே கடலுக்குள் வீசி விட்டு வெறுங்கையோடு
வீட்டிற்குத் திரும்புவார். இதனால் இவரது வியாபாரம் தடைப்பட்டது. இதுகாறும்
சேர்த்து வைத்திருந்த செல்வம் சிறுகச் சிறுகக் குறையத் தொடங்கியது.ஒருநாள்
அதிபத்த நாயனார் வலை வீசிய போது அவரது வலையில் விசித்திரமான ஒரு மீன்
கிடைத்தது. சூரிய ஒளியுடன் தோன்றிய அபபொன் மீன் நவமணி இழைத்த செதில்களைப்
பெற்றிருந்தது. வலைஞர்கள் அதிபத்தரிடம் இந்த பொன்மீனைக் கொண்டே இழந்த
செல்வத்தை எல்லாம் மீண்டும் பெற்று வறுமை நீங்கி சுபிட்சமாக வாழலாம்
என்றார்கள். அதிபத்தர் அவர்களது வார்த்தைகளுக்குச் சற்றும்
செவிசாய்க்கவில்லை.எம்பெருமானுக்கு அளிக்கப் பொன் மீன் கிடைத்ததே என்ற
மட்டில்லா மகிழ்ச்சியோடு இறைவனை நினைத்தவாறு அப்பொன் மீனைக் கடலிலே தூக்கி
எறிந்தார்.அதிபத்தரது பக்தியின் திறத்தினைக் கண்டு அனைவரும் வியந்து
நின்றனர். வானத்திலே பேரொளி பிறந்தது.இறைவன் உமையாளுடன் விடை மீது காட்சி
அளித்தார். சிவபுரியிலே தமது திருவடி நீழலை அடைந்து வாழும் பேரின்பத்தை
அதிபத்த நாயனாருக்கு அருளி மறைந்தார் எம்பெருமான்.

குருபூஜை: அதிபத்த நாயனாரின் குருபூஜை ஆவணி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.

கடல் நாகை அதிபத்தர்க்கு அடியேன்
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

நாள்தோறும் நாயன்மார்கள்  - Page 2 Empty Re: நாள்தோறும் நாயன்மார்கள்

Post by மாலதி June 9th 2013, 08:33

கணம்புல்ல நாயனார்

வடவெள்ளாற்றின்
தென்கரையிலே அமைந்துள்ள இருக்குவேளூர் என்னும் தலத்திலே வாழ்ந்து வந்த
பெருங்குடி மக்களுக்கெல்லாம் ஒப்பற்ற தலைவராய் வாழ்ந்தவர் கணம்புல்ல
நாயனார் என்னும் சிவனருட் செல்வர். இத்தவசீலர் திருசடைநாதர்
எழுந்தருளியிருக்கும் கோயில்களுக்கு நெய்விளக்கு ஏற்றும் நற்பணியை
நாள்தோறும் தவறாமல் செய்து வந்தார்.கோயில்களுக்கு ஒளி ஏற்றுவதால் இருளடைந்த
மானிடப்பிறவி என்னும் அஞ்ஞான இருள்நீங்கி அருளுடைய ஞான இன்ப வீட்டை அடைய
வழி பிறக்கும் என்பதனை உணர்ந்தார்.இவ்வாறு நற்பணி செய்து வந்த
நாயனாருக்குச் செல்வம் குறைந்து வறுமை வளரத் தொடங்கியது. அந்த நிலையிலும்
திருவிளக்கு ஏற்றும் பணியைத் தவறாமல் செய்து வந்தார்.இந்த நிலையில் நாயனார்
இருக்குவேளூரில் வறியராய் இருக்க விரும்பவில்லை. தம்மிடமுள்ள நிலபுலன்களை
விற்று ஓரளவு பணத்தோடு சிவ யாத்திரையை மேற்கொள்ளுவான் வேண்டி ஊரை விட்டே
புறப்பட்டார். ஊர் ஊராகச் சென்று கோயில் தோறும் நெய் விளக்கேற்றியவாறு
தில்லையை வந்தடைந்தார்.எம்பெருமானைப் பணிந்து பேரின்பம் பூண்டார்.
தில்லைப்பதியை விட்டுச் செல்ல மனமில்லாத அடிகளார் அவ்வூரில் தனியாக வீடு
எடுத்து வசிக்கலானார்.

அடியார் அவ்வூரில் தங்கியிருந்து பெருமானை
உளம் குழைந்து உருகிப் போற்றி விளக்கேற்றும் திருப்பணியை மேற்கொள்ளலானர்.
தில்லைத் திருவிடத்தில் அமைந்துள்ள திருப்புலீச்சரம் என்னும் சிவன்
கோயிலுக்கு விளக்கேற்றும் பணியை மேற்கொண்ட அடியார் வறுமையால் மனம்
வாடினார். விற்பதற்குக் கூட மேற்கொண்டு மனையில் பொருள் இல்லையே என்ற நிலை
ஏற்பட்டதும் நாயனார் ஊராரிடம் இரப்பதற்கு அஞ்சிய நிலையில் உடல்
உழைப்பினால் செல்வம் சேர்க்கக் கருதினார். அதற்கான கணம்புல்லை அரிந்து
வந்து அவற்றை விற்று பணமாக்கி நெய் வாங்கி விளக்கேற்றி வந்தார்.
எம்பெருமான் சோதனையால் கணம்புல்லும் விற்பனையாக வில்லை. இதனால் இடர்பட்ட
நாயனார், கணம்புல்லையே திரித்து அழகிய விளக்காக எரித்தார். ஆலயங்களில்
விளக்குகள் பெரும்பாலும் ஜாமம் வரைக்கும் எரிவது வழக்கம். கணம்புல் யாமம்
வரைக்கும் எரியாமல் சீக்கிரமே அணைந்துவிட்டது. கணம்புல் நாயனார்
அன்புருகும் சிந்தனையுடன் என்புருக அத்திரு விளக்கில் தமது திருமுடியினை
வைத்து இன்பம் பெருக நமச்சிவாய நாமம் என்று சொல்லி விளக்காக எரிக்கத்
தொடங்கினார்.திருப்புலீச்சரத்து மணிகண்டப் பெருமான் அதற்கு மேல் பக்தரைச்
சோதிக்க விரும்பவில்லை. பெருமான் பக்தருக்கு சக்தி சமேதராய் ரிஷப
வாகனத்தில் பேரின்ப காட்சி கொடுத்தார். அடியார் நிலம் கிடந்து சேவித்து,
பெருமானைப் போற்றினார். எம்பெருமான் தமது அன்பு தொண்டர் கணம்புல்ல
நாயனாருக்குச் சிவலோகப் பதவியை அளித்து அருளினார்.

குருபூஜை: கணம்புல்லர் நாயனாரின் குருபூஜை கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.

கணம்புல்ல நம்பிக்கு அடியேன்
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

நாள்தோறும் நாயன்மார்கள்  - Page 2 Empty Re: நாள்தோறும் நாயன்மார்கள்

Post by மாலதி June 9th 2013, 08:33

ஆனாய நாயனார்


திருமங்கலம்
- சோலை வளமிக்க மழ நாட்டிலே அமைந்துள்ள ஓர் ஊர். இவ்வூரில்
எழுந்தருளியிருக்கும் பெருமானுக்கு பரசுதாமீசுரம் உடையார் என்றும்
திருமழுவுடைய தாயனார் என்றும் சாமவேதீசுவரர் என்றும் பல திருநாமங்கள்
உண்டு. தெய்வவள மிக்க இத்தலத்தில் நீடிய பெருங்குடிகளுள் ஆயர்குடி
நன்றாகவும் ஒன்றாகவும் இருந்தது. அக்குலத்தின் பொன்விளக்கு போல் ஆயனார்
என்னும் அடியார் அவதரித்தார்.ஆயர் குலம் விளங்கத் தோன்றிய நாயனார் ஆனிரைகளை
நிரம்பப் பெற்றிருந்தவராதலால்தான் ஆனாயர் என்னும் நாமத்தைப் பெற்றார்.
இவர் செயல்படுவது தம் குலத்திற்கேற்ற தொழிலாக இருந்த போதும் மனத்தாலும்
வாக்காலும் மெய்யாலும் சிவபெருமானையே எண்ணி, எந்நேரமும் உள்ளம் மகிழ்வோடு
இருந்தார். ஆனாயர் வேய்ங்குழல் வாசிப்பதில் மெத்தக் கெட்டிக்காரர்.
ஆநிரைகளைக் காலையில் ஓட்டிச் செல்லும்போதும், மாலையில் திரும்ப அழைத்து
வரும்போதும் வேய்ங்குழல் வாசித்துக்கொண்டேதான் இருப்பார். ஆனாயர் வேய்ங்
குழலில் ஐந்து எழுத்தினை அமைத்துப் பாடும் அருந்திறனைப் பெற்றிருந்தார்.
ஆனாயநாயனாரின் இன்ப இசைக்கு உயிரினங்கள் அனைத்தும் மெய்மறந்து நிற்கும்.
ஒருநாள் நாயனார் வழக்கம்போல் ஆநிரைகளை மேய்க்கப் புறப்பட்டார். நறுமலர்
மாலையை அணிந்து கொண்டார். தலையை ஒரு புறமாகக் கோதி முடிந்து அதில் கண்ணி
மாலையைச் சூட்டிக் கெண்டார். செங்காந்தட் பூவினைக் காதில் சொருகிக்
கொண்டார். கால்களிலே தோற்பாது கையைத் தரித்துக் கொண்டார். கையிலே
வெண்கோலும் வேய்ங்குழலும் எடுத்துக் கொண்டார், ஏவலரும், கோபாலரும் சூழ
ஆநிரைகளை ஓட்டிக்கொண்டு, முல்லை நிலத்திற்குப் புறப்பட்டார். அப்பொழுது
கார் காலம் ! முல்லை நிலம் பூத்துக் குலுங்கும் புது மலர்ச்சோலை போல்
காட்சி அளித்தது. ஆங்காங்கே கொன்றை மரங்கள் புது மலர்களைத் தாங்கிய வண்ணம்
எழிலுறக் காட்சி அளித்தன. ஆனாயர் முல்லை நிலத்தின் இயற்கை எழிலில் -
இன்பத்தை அளிக்கும் வண்ண மலர்களின் நறுவாசனையில் உள்ளத்தைப் பறி
கொடுத்தார்.

தம்மை மறந்து வேய்ங் குழலின் இன்ப இசையை இனிமையாக
எழுப்பி வாசித்துக் கொண்டே இருந்தார்.அப்பொழுது ஆனாயர் பார்வை கொன்றை
மரத்தின் மீது பதிந்தது. அம்மரத்திலிருந்த மலர்கள் கொத்து கொத்தாக மாலை
போன்ற வடிவத்தில் தொங்கிக் கொண்டிருந்தன.எந்நேரமும் சிவனைப் பற்றியும்,
திருவெண்ணீற்றை பற்றியும் எண்ணிக் கொண்டிருக்கும் ஆனாயர்க் கண்களுக்கு
கொன்றை மரத்தின் வடிவத்தைப் பார்த்ததும் கொன்றை மாலையை அணிந்த சிவபெருமான்
எழுந்தருளி இருப்பது போல் தோன்றியது. அத்திருத்தோற்றப் பொலிவினில், சிவனையே
பார்த்து விட்டாற் போன்ற பெருமகிழ்ச்சி பூண்டார் அடியார் ! அவரது
ஐம்புலன்களும் பக்தியால் பூரித்தன. ஆனாயர் அம்மரத்தை வலம் வந்து
வணங்கினார். தாம் வைத்திருந்த வேய்ங்குழல் பலவற்றில் சிறந்ததான ஒன்றை
எடுத்தார். ஆனாயர் பரமனை நினைத்தபடியே பண் ஒன்றை எழுப்பினார். அவர் சுத்த
சுரத்திலே திருவைந்தெழுத்தை இசையுடன் அமைத்து முறையோடு சுருதி சேர்த்து
வாசிக்கலானார். ஐந்தொலியின் இசை இன்பம் வெள்ளம் போல் பாய்ந்து ஓடியது.
கல்லும் கரையும் தன்மை பெற்ற அவ்வின்ப இசை கந்தவர்வ கானம் போல் அமைந்தது.
அருகம் புல்லை அசை போட்டபடியாக நின்று கொண்டிருந்த ஆநிரைகள் ஆனாயர் இசைக்கு
மயங்கி அவரது அருகே வந்து நின்றன. கன்றுகளோ தாய்ப்பாலையும் மறந்து இன்ப
இசையில் உணர்விழந்து ஆனாயரைச் சுற்றி நின்றன. மான் கூட்டங்கள் துள்ளி
ஓடிவந்து ஆனாயரைச் சூழ்ந்தன. பல்வேறு ஆக்க வேலைகளில் அதிகப்படியாக ஊக்கம்
காட்டி நின்ற ஆயர்கள், தங்கள் வேலைகளை மறந்து இசை வெள்ளத்தில் மூழ்கி நின்ற
இடத்திலேயே செய்வதறியாது செயலற்று நின்றனர். வானவரும் விஞ்சயரும் புட்பக
விமானத்தில் அமர்ந்தவண்ணம் ஆனாயரின் இசைத்தேனைச் சுவைத்துப்
பருகிக்கொண்டிருந்தனர். ஆனாயர் தேவகான இசை மழை பொழிந்த வண்ணமாகவே
இருந்தார். உலகில் மாறுபட்ட உள்ளத்தினரும் வாழ்வில் வேறுபட்ட நிலையில்
இருப்போரும் தத்தம் நிலைமை, தகுதி இவற்றை எல்லாம் அறவே மறந்து ஒருமனப்பட்டு
உள்ளம் மகிழ ஆனாயரின் இசைக்கடலில் மூழ்கி இன்பம் கண்டனர்.

தோகை
விரித்தாடும் மயில் மீது படமெடுத்தாடும் பாம்புகள் மயங்கி விழுந்தன.
சிங்கமும், யானையும் பகைமை மறந்து ஒன்றோடொன்று இணைந்தவாறு இசை வசப்பட்டு
நின்றன. புலிகளின் முன்னே புள்ளி மான்கள் பயமின்றி நின்று கொண்டிருந்தன.
காற்றுகூட வேகமாக வீசவில்லை. மரக்கிளைகள் எல்லாம் அசைவற்று இசையில்
செயலற்றன. மலையிலிருந்து துள்ளிப் பாய்ந்தோடும் தேனருவிகள் எவ்வித ஓசையும்
இன்றி அமைதியாக ஓடிக்கொண்டிருந்தன. அலைமோதும் கடல் கூட அமைதியுடன்
காணப்பட்டது. மேகக் கூட்டங்கள் இடியும் மழையும் இன்றி வான வீதியிலே
அமைதியாக ஊர்ந்து கொண்டிருந்தன. ஈரேழு உலகமும், ஆனாயரின் இசை வெள்ளத்தில்
இன்ப சுகம் பெற்றன. உயிருள்ள பொருட்கள் மட்டுமல்ல உயிரற்ற பொருட்களும்கூட
ஆனாயரின் குழலோசைக்குக் கட்டுப்படத்தான் செய்தன. மண்ணிலே இருந்து எழுந்த
ஆனாயரின் குழலோசை மேலோங்கி விரைந்து சென்று விண்ணகத்தை முட்டியதோடல்லாமல்
கயிலை மலையில் வீற்றிருக்கும் உமாமஹேஸ்வரனின் திருச்செவிகளுக்கும்
ஊடுருவிற்று. வெள்ளி அம்பலத்திலே ஆனந்தத் தாண்டவம் ஆடும் அரனாரும்
இசைக்குக் கட்டுப்பட்டவர்தானே !இலங்கேஸ்வரனின் இசைக்கு அடிமையானவரான அவர்
இன்று ஆனாயரின் இசை வெள்ளத்திலே மெய்யுருகி ஆனாயரை ஆட்கொள்ளப் பார்வதியுடன்
விடையின் மீது காட்சி அளித்தார். ஆனாயரின் இசைக்குக் கட்டுப்பட்ட
கங்காதரன் ஆனாயரை வேய்ங்குழலை இவ்வாறு இசைத்துக் கொண்டே எம் அருகே வந்து
அணைந்திடுவாய் என்று வாழ்த்தி அருளினார். ஆனாயர், இறைவன் அருகேயே அமர்ந்து,
வேய்ங்குழல் வாசிக்கும் பேறு பெற்றார். ஆனாயர் பெற்ற பேறன்றோ அருந்தப்
பேறு!

குருபூஜை: ஆனாய நாயனாரின் குருபூஜை கார்த்திகை மாதம் அஸ்தம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.

அலைமலிந்த புனல்மங்கை ஆனாயர்க்கடியேன்
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

நாள்தோறும் நாயன்மார்கள்  - Page 2 Empty Re: நாள்தோறும் நாயன்மார்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum