HinduSamayam
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

HinduSamayam
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
HinduSamayam
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்
by vpoompalani March 24th 2016, 13:59

» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26

» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17

» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06

» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07

» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58

» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24

» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35

» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52

» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20

» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18

» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37

» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47

» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19

» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46

» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49

» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37

» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07

» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29

» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38

» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55

» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00

» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49

» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28

» திருத்தல யாத்திரை  ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51

» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33

» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46

» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28

» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13

» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29

» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15

» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10

» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29

» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54

» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38

» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42

» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32

» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01

» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20

» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00

தமிழர்களின் சிந்தனைகளம்
Related Posts Plugin for WordPress, Blogger...



அவசியம் தரிசிக்க வேண்டிய அதி அற்புத ஆலயங்கள்

Go down

அவசியம் தரிசிக்க வேண்டிய அதி அற்புத ஆலயங்கள்  Empty அவசியம் தரிசிக்க வேண்டிய அதி அற்புத ஆலயங்கள்

Post by மாலதி June 15th 2012, 07:01

அன்பு நண்பர்களுக்கு வணக்கம். நமது சென்ற வார திருவலம் வில்வநாத ஈஸ்வரர்
கட்டுரையை படித்துவிட்டு , நிறைய வாசகர்கள் நன்றி கூறி மின்னஞ்சல் அனுப்பி
இருந்தனர். கிட்டத்தட்ட இதே சூழ்நிலையில் தான் இருக்கிறேன், சரியான
நேரத்தில் இந்த ஆலயம் பற்றிய தகவல் கிடைத்தது. அந்த இறைவனே அழைத்தது போல
இருந்தது என்று கூறி இருந்தனர். மேலும், நமது தளத்தில் படித்துவிட்டு அந்த
ஆலயம் சென்று , அவரை முதன் முறையாக சென்று தரிசித்த நண்பர்கள் அனைவரும்,
ஏதோ ஒரு விதத்தில் மன நிம்மதியை உணர்ந்து இருப்பதாக கூறி இருக்கின்றனர்.
அனைவருக்கும் இறை அருள் தொடர்ந்து கிடைக்கட்டும்....!

இது தவிர, சென்ற வாரக் கட்டுரையை படித்து விட்டு , நமது தளத்தின் ஆரம்ப
காலத்தில் இருந்தே தீவிர வாசகராக இருக்கும் நண்பர் ஒருவர், ஒரு நீண்ட
மின்னஞ்சல் அனுப்பி இருந்தார். சாராம்சம் மட்டும் கூறுகிறேன்..!
" சார், உங்களது இந்த ஸ்தலம் பற்றிய கட்டுரைக்கு மிக்க நன்றி.. அவசியம் ,
விரைவில் அங்கு சென்று தரிசிப்பேன். அதே நேரம், இந்த ஆலயங்கள் பற்றிய
தொடரில், நீங்கள் இதற்க்கு முன்பு எழுதிய அன்னை - பத்திரகாளியின் ஆலயம்
பற்றி அவசியம் நம் வாசகர்களுக்கு நினைவூட்டுங்கள். என் வாழ்க்கையில் நான்
மிகப் பெரிய பாக்கியமாக கருதுவது, உரிய நேரத்தில் உங்கள் அந்த கட்டுரையைப்
படித்ததுதான்... ! அதன் பிறகு, இந்த ஒரு வருட காலத்தில், நிஜமாகவே என்
நிலைமையில் எவ்வளவோ முன்னேற்றம் அடைந்துள்ளேன். அன்னைக்கும், இந்த ஆலயம்
பற்றிய தகவல் அளித்த உங்களுக்கும் என்றென்றும் நன்றிக்கடன்
பட்டிருக்கிறேன்.." என்று உருக்கமாக கூறி இருந்தார்.....

அந்த கட்டுரையை படிக்காத, நம் புதிய வாசகர்களுக்காக - அதன் லிங்கைக் கீழே
கொடுத்துள்ளேன்...! நீங்கள் பொறுமையாக படிக்க வேண்டிய பதிவு. தட்டுத்
தடுமாறி, வாழ்க்கையில் மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்டு எதிர் நீச்சல்
போடுபவர்கள் அனைவரும், அவசியம் படிக்க வேண்டிய பதிவு.



நண்பர் தனது கடிதத்தில், மேலும் ஒரு தகவல் கூறி இருந்தார். சில முக்கிய
வேண்டுகோளுக்காக அன்னையை தரிசிக்க செல்லும்போது, எங்கிருந்தோ ஒரு சுண்டெலி
வந்து அன்னை சிலையின் மேல் ஏறி விளையாடுகிறதாம்.. அன்னைக்கு மேல்
சாற்றியிருக்கும் மாலையின் உள் புகுந்து விளையாடிக்கொண்டு இருக்குமாம்.
கைக்கு கீழே, அது விளையாடும்போது, அந்த மாலை ஆடும்போது, அன்னையே கையை ஆட்டி
ஆசி பண்ணுவது போல் இருக்கிறதாம். சொல்லி வைத்தாற்போல, அந்த பிரச்னைகள்
ஓரிரு வாரங்களுக்குள்ளாகவே, தீர்ந்து விடுகிறது... அன்னையே அந்த சுண்டெலி
வடிவில் வருகிறாரோ.. அல்லது அங்கு இருக்கும் லாட தவசி என்கிற சித்த
சந்நியாசி தான் வருகிறாரோ.. தெரியவில்லை என்று வியக்கிறார்...

அதை அறிந்துகொள்ள நமக்கு தகுதி இல்லை. ஆனால், இந்த கலியுகத்தில் - நம்
கர்மங்களை கரைக்க, வேண்டும் வரம் கிடைக்க, அன்னை இங்கே அருள் பாலிப்பது நம்
அனைவருக்கும் கிடைத்துள்ள ஒரு அரிய வாய்ப்பு என்பதில் ஐயமில்லை...
தனிப்பட்ட முறையில், என் பல பிரச்னைகளை தீர்த்து , தன் அன்பினால் என்னை
அரவணைத்துக் கொண்டு இருப்பவர் அன்னை பத்திரகாளி... இந்த பதிவை நீங்களும்
ஒரு முறை படித்துப் பார்க்கவும் ... வாய்ப்பு கிடைக்கும்போது அவசியம்
ஒருமுறை சென்று வரவும்.







பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா? உங்கள் சந்ததிக்கே ஒரு கலங்கரை விளக்கமாகும் - சிறப்புக் கட்டுரை





இந்த சுண்டெலி சம்பவம் பற்றிய மெயில் படித்துக் கொண்டு இருக்கும்போதே,
சகோதரி யவனிகை - இன்னொரு மெயிலில் சில படங்களை அனுப்பி இருந்தார். நமது
தேப்பெருமா நல்லூர் கட்டுரைக்கு தொடர்புடைய படங்கள்.
இரண்டு வருடம் முன்பு - சூரிய கிரகணத்தின்போது, ஒரு பெரிய பாம்பு, தனது
வாயில் வில்வ இலையை பறித்துக்கொண்டு சிவனை அர்ச்சித்ததாக கேள்விப்பட்டு
இருப்பீர்களே... அதே கோவில் தான். அந்த கோவில் பற்றிய நம் பழைய
கட்டுரைகளின் லிங்குகள் கீழே கொடுத்துள்ளேன்... படித்துப்பாருங்கள்..!


சித்தர்கள், ரிஷிகள் - இதே போல் வேறு ரூபத்தில் இறைவனை தொழுவது, சில
குறிப்பிட்ட ஆலயங்களில் அடிக்கடி நடக்கும். இங்கே அந்த சர்ப்பம், பல பேர்
கூடி இருக்கும்போது - அந்த குறிப்பிட்ட கிரகண நேரத்தில் - ஆலயத்தின் உள்ளே
வந்து, இறைவனின் சிரசில் அமர்ந்து வில்வ இலையை வைத்து இருக்கிறது. இரண்டு,
மூன்று முறை இது நடந்ததாம். இரவு நேரங்களில் யாரும் இல்லாத நேரத்தில்
அடிக்கடி நடப்பதாகவும் கூறுகிறார்கள்... கொஞ்சம் மிகைப் படுத்தலாகவும்
இருக்கலாம்...

ஆனால், ஒரு பாம்பு வந்து கும்பிடுகிறதே என்னும்போது - கடவுள் இல்லை என்று
சொல்வது மடத்தனமாக தெரிகிறது. வில்வத்தின் மகிமையையும் , இந்த
ஆலயத்தின் மகிமையையும் பாருங்கள். இந்த நிகழ்வு நடந்த மறுநாளே, தின
இதழ்களும் இந்த நிகழ்வை உறுதிப் படுத்தி இருந்தன. பல ஆன்மீக இதழ்களின்
'கவர்
ஸ்டோரி' யாகவும் இருந்தது... இருந்தபோதும், நிறைய பேருக்கு தெரியாமல்
இருந்து இருக்கலாம். அது சரி, யார் யாருக்கு எது பிராப்தமோ - அது தானே. நம்
புதிய வாசகர்கள் அவசியம் தெரிந்து கொள்ளும் பொருட்டு - அந்த
படங்களையும், கட்டுரைகளையும் இணைத்துள்ளேன்.... படித்துப் பாருங்கள்...

இன்னும் சில ஆலயங்களில் ஆலயம் மூடிய பிறகு, நடு நிசியில் -நாம் பார்த்தே
இராத, கேள்விப்படாத சில மலர்களால் இறைவனை அந்த சித்தர்கள் பூஜிக்கிறார்கள்.
காலையில் ஆலயத்திற்குள் வரும் குருக்கள் மிரண்டு ,
பயபக்தியுடன் இறைவனை பூஜிக்கிறார்கள். சில ஆலயங்களில் கதவுகளை மூடிய பிறகு -
பைரவர் கோவிலில் உலாவுவாராம். நாய்களின் மூச்சு இரைக்கும் சப்தம் நன்றாக
கேட்கிறதாம். கதைகளில் வருவது போல தோன்றினாலும், பகுத்தறிவுக்கு உட்படாத பல
விஷயங்கள் - இன்னமும் நம் நாட்டில் நடப்பது நிச்சயமான உண்மை.

சதுரகிரி,
அண்ணாமலை போன்ற இடங்களில், மலை ஏறும் போது - கிரிவலம் செல்லும்போது -
கண்முன்னே நடந்து செல்லும் சில பேர் மறைந்தே போயிருக்கிறார்கள். சித்தர்
தரிசனம் அந்த மாதிரி சில பாக்கியவான்களுக்கு கிடைத்துவிடுகிறது. இது போன்ற நமக்கு வரும் சில உண்மையான அனுபவக் கட்டுரைகளை, உரிய
நேரத்தில் - உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

இந்த சிவ ஆலயம் என்று இல்லை, எல்லா பழமையான ஆலயங்களும் - நம் குறை
தீர்க்கவென்றே ஏற்படுத்தப்பட்டுள்ளன..! நாம் அந்த ஆலயங்கள் இருப்பது பற்றி
அறிந்து கொள்வதே, அந்த பிரச்னைக்கு விமோச்சனம் கிடைக்கத்தான்...! எதையும்
நினைத்துக் கலங்க வேண்டாம்.. எல்லா பிரச்னைகளுக்கும் விடிவு உண்டு. இறை
அருளோடு , அதை நாம் விரைவில் சாதிப்போம்..!

இதைப் போன்ற அதிசயங்கள் , நம் கண் முன் நடந்தால் தான் - இறைவனை நம்புவேன்,
என்று உரைக்கும் உங்கள் உள் மனதின் மடத்தனத்தை மூட்டை கட்டி வைத்து விட்டு -
உண்மையான பக்தியுடன், முழு நம்பிக்கையுடன் - இறைவனை அணுகுங்கள்..! அதன்
பிறகு நடக்கும் அற்புதத்தை உணர்ந்து பாருங்கள்..! நம் தகப்பன் நம்மை
நிச்சயம் ஆசீர்வதிப்பான்!




வாழ்க அறமுடன் ! வளர்க அருளுடன்!


அவசியம் தரிசிக்க வேண்டிய அதி அற்புத ஆலயங்கள்  Snake1





அவசியம் தரிசிக்க வேண்டிய அதி அற்புத ஆலயங்கள்  Snake2



அவசியம் தரிசிக்க வேண்டிய அதி அற்புத ஆலயங்கள்  Snake3



அவசியம் தரிசிக்க வேண்டிய அதி அற்புத ஆலயங்கள்  Snake4



தேப்பெருமா நல்லூர் - ஆலயம், அவற்றின் பெருமைகள் - மேலும் அங்கு நடந்த ஒரு
அதிசயம் பற்றி, நமது பழைய கட்டுரைகளை படிக்க கீழே 'க்ளிக்' செய்யவும்.

தேங்க்ஸ்:லிவிங் எக்ஸ்ட்ரா
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

அவசியம் தரிசிக்க வேண்டிய அதி அற்புத ஆலயங்கள்  Empty Re: அவசியம் தரிசிக்க வேண்டிய அதி அற்புத ஆலயங்கள்

Post by மாலதி June 15th 2012, 07:02

மீண்டும்
பிறவாத நிலையை அடைவதே உயிர்களின் குறிக்கோள் என்பர் பெரியோர். அத்தகைய
பேரின்ப நிலையை அருளும் தலமாக விளங்குகிறது தேப்பெருமாநல்லூர். புராண
காலத் தொடர்புடைய இத்தலத்தில் வேதாந்த நாயகி சமேத விஸ்வநாத சுவாமி
அருள்புரிகிறார். இவரை வணங்குவோருக்கு மறுபிறவி இல்லை என்று சொல்லப்
படுகிறது.
அவசியம் தரிசிக்க வேண்டிய அதி அற்புத ஆலயங்கள்  Images?q=tbn:ANd9GcQyNssCknsgf-zU9qBThyE4fnY5F0vF8gKmyf08WvmKOm-54DQ9
மிகவும் பழமையானது இத்திருக்கோவில். ஆகம விதிக்கு முற்றிலும் மாற்றாக
அமைக் கப்பட்டுள்ளது. இங்கு எழுந்தருளியிருக்கும் தெய்வங்கள் அனைத்தும்
மாறுபட்ட கோலத்திலேயே காட்சி தருகின்றனர்.

""யாருக்கு மறுபிறவி இல்லையோ அவர் கள்தான் இக்கோவிலுக்கு வரமுடியும்;
சுவாமியைத் தரிசிக்க முடியும்'' என்று சொல்கிறார் ஆலய குருக்கள் சதீஷ்
சிவாச்சாரியார். சுவாமியைத் தரிசித்ததும், பக்தர்களுக்குப் பிரசாதமாக
வில்வதளத்துடன் ருத்ராட்சம் ஒன்றும் கொடுக்கிறார்கள்.

மகா மண்டபத்திற்குள் தெற்குத் திசை நோக்கி தனிச் சந்நிதியில் வேதாந்த
நாயகி அருள்புரிகிறாள். இந்த அம்பாள் வலது காலை எடுத்து வைத்து முன்னோக்கி
வருவது போன்ற தோற்றத்தில் உள்ளாள். அம்பாள் நம்முடன் பேசுவதுபோல் உதடுகள்
குவிந்த நிலையில் உள்ளன. இது வேறெங்கும் காணக்கிட்டாத காட்சி. நமக்கு
வேதத்தின் உட்பொருளை உபதேசிக்கும் பாவனையோடு இருப்பதாகச் சொல்கின்றனர்.
இந்த அன்னையின் உபதேசக் கருணைப் பார்வை யால் கல்வி ஞானத்தில் சிறந்து
விளங்கலாம். இந்த அம்பாளுக்கு வெள்ளிக் கிழமைகளில் குங்கும அர்ச்சனை
செய்து வழிபட்டால் திருமணத்தடை நீங்கும் என்பது ஐதீகம்.

அம்பாள் சந்நிதிக்கு அருகில் சாந்த பைரவர் என்று சிறிய உருவிலும் மகா
பைரவர் என்று சுமார் ஐந்தடி உயரத்தில் பெரிய உருவிலும் ஒரே சந்நிதியில்
இரண்டு பைரவர்கள் காட்சி தருகின்றனர்.

பைரவர் சந்நிதிக்குப் பக்கத்தில் சனி பகவான் காக்கை வாகனத்துடன்,
இடுப்புக்குக் கீழே இடக்கையை வைத்தபடி ஒய்யாரமாக மேற்கு நோக்கி இறைவனைப்
பார்த்த வண்ணம் காட்சி தருகிறார். இவர் ஏன் ஒய்யாரமாக நிற்கிறார்?

சனி பகவான் இறைவனைப் பிடிப்பதற்குரிய நேரம் நெருங்கி விட்டதால்
அம்பாளிடம், ""நாளை காலை ஏழேகால் நாழிகைப்பொழுது ஈசனைப் பிடிக்கப்
போகிறேன்'' என்று சொன்னார். அதைக் கேட்டுக் கோபம் கொண்டாள் அம்பாள்.

எப்படியும் ஈஸ்வரனை ஏழேகால் நாழிகை பிடித்து தன் வேலையை ஒழுங்காகச் செய்ய
வேண்டும் என்ற நோக்கத்தில் மறுநாள், ஈஸ்வரனைப் பிடிக்க சனிபகவான் மெதுவாக
வந்தார். அப்போது அன்னை, ஈஸ்வரனைப் பக்கத்திலிருந்த அரச மரத்தின் பின்னால்
ஒளிந்து கொள்ளச் சொன்னாள். ஈஸ்வரனும் அப்படியே செய்தார்.

அங்கு வந்த சனி பகவான் அம்பாள் அரச மரத்தடியில் நிற்பதைப் பார்த்து
ஈஸ்வரன் எங்கே இருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டார். அதனால் அரச
மரத்தைப் பார்த்த வண்ணம் அங்கேயே நின்றுவிட்டார். சனி பகவான் சொன்ன
ஏழேகால் நாழிகை கழிந்ததும் அங்கிருந்து மெதுவாக நகர ஆரம்பித்தார் சனி
பகவான். அப்போது அன்னை சனி பகவானைப் பார்த்து,

""என்ன, ஈஸ்வரனைப் பிடிக்க முடியாமல் தோல்வி அடைந்து திரும்பிச்
செல்கிறாயா?'' என்று கேட்டாள். சனி பகவான், ""நான் வந்த வேலை வெற்றியுடன்
முடிந்தது. ஈஸ்வரனே அரச மரத்தின் பின்புறம் ஒளிந்திருக்க நேர்ந்த தல்லவா?
அந்த நேரமே நான் அவரைப் பிடித்த நேரம்'' என்று ஆணவத்துடன் சொன்னதுடன்,
சற்று ஒய்யாரமாக இடுப்பில் இடக்கை வைத்த வண்ணம் அம்பாள்முன் நின்றார். சனி
சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த ஈஸ்வரன் அரச மரத்தின்
பின்புறத்திலிருந்து கோபத்தோடு வெளிப்பட்டு, மகாமந்திர பைரவர் அவதாரம்
எடுத்து சனி பகவானை இரண்டாகக் கிழித்தார்.

இரண்டாகக் கிழிக்கப்பட்ட சனி பகவான் சிவபெருமானை நோக்கி, ""ஈஸ்வரா!
தாங்கள் வகுத்துக் கொடுத்த சட்டப்படிதான் நான் இயங்குகிறேன். நான்
இல்லையேல் பூலோகவாசிகள் தங்கள் விருப்பப்படி மிகுந்த ஆணவத்துடன்
செயல்படுவர். இதனால் உலகில் ஆணவக்காரர்களும் அக்கிரமம் செய்பவர்களும்
பெருகி விடுவார்கள். எனவே, ஆணவத்தோடு நான் நடந்து கொண்டதற்காக என்னை
மன்னித்து, மீண்டும் முன்புபோல் செயல்பட அருள்புரிய வேண்டும்'' என்று
வேண்டினார். அவர் வேண்டுதலை ஏற்ற சிவபெருமான் இரு கூறான உடலை ஒன்று
சேர்த்து அருள்புரிந்தார். இவ்வாறு ஆணவம் நீங்கிய இந்த சனி பகவானை
வணங்கினால் சனி தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம்.

மகாமந்திர பைரவராக உக்கிரமாகக் காட்சி தந்த ஈஸ்வரனுக்கு, நான்கு
வேதங்களைச் சொல்லி அவர் கோபத் தைத் தணித்தாள் அம்பிகை. அம்பா ளின் அருள்
பார்வையால் கோபம் தணிந்து மீண்டும் சாந்த சொரூபி யானார் ஈஸ்வரன். இதனால்
அம்பாள் வேதாந்த நாயகி என்று பெயர் பெற்றாள். அந்த வேளையில் நாரதர் அங்கு
வந்தார். ""ஈஸ்வரா! நீங்கள் சனி பகவானை இரண்டாகக் கிழித்த பாவம் உங்களைப்
பிடித்துக் கொண்டது. இனிமேல் நீங்கள் விஸ்வரூபம் எடுக்க இயலாது. எனவே
நீங்கள் பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களை ஒருசேர தரிசித் தால் அந்தப் பாவம்
நீங்கும்'' என்று கூறினார்.

உடனே ஈஸ்வரன் பன்னிரண்டு ஜோதிர்லிங்க பரமேஸ்வரர்களையும் இத்திருத்தலத்திற்கு வரவழைத்தார்.

இதனைக் கண்ட நாரதர், ""இவர்களில் ஒருவர் இங்கு வந்தாலும் எத்தகைய
பாவங்களும் சாபங்களும் தோஷங்களும் நீங்கிவிடும். அப்படி யிருக்க
பன்னிரண்டு பேரும் வந்து இறங்கியதால் இது மிக அதிசயமான க்ஷேத்திரம்!''
என்று போற்றிப் புகழ்ந்தார்.

""பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களும் தரிசனம் கொடுத்த புண்ணிய தலம்
இதுவென்பதால், ஏழேழு ஜென்மங் களில் புண்ணியம் செய்தவர்களும், மறுபிறவி
இல்லாதவர்களும்தான் இங்கு வந்து தரிசிக்க முடியும்'' என்று நாரதர்
சொன்னார். அதில் ஒரு ஜோதிர் லிங்கமான காசி விஸ்வநாதர், விசாலாட்சியுடன்
அங்கேயே தங்கிவிட்டார். அந்தச் சந்நிதி மகாமண்டபத்தில் தென்கிழக்கு
மூலையில் உள்ளது.

இத்தல இறைவனின் மகிமையை அறிந்த அகத்திய மாமுனிவர் ஸ்ரீவிசுவநாத சுவாமியைத்
தரிசிக்க வந்தார். அகத்தியர் வருவதை அறிந்த சிவபெருமான், அகத்தி யருக்கு
மறுபிறவி உண்டு என்பதால் அவரை அங்கு வராமல் தடுக்க எண்ணினார். அதனால்
மகரந்த மகரிஷியை அழைத்து அகத்தியரின் வருகையைத் தடுக்குமாறு கூறினார்.
இறைவனின் கட்டளையை ஏற்ற மகரந்த மகரிஷி, அகத்தியர் மேற்கொண்டு நடக்க
முடியாமல், மகரந்தப் பூக்களாக மாறி வழியை அடைத்து விட்டார். வழி மறித்த
மகரந்த மலர் களை ஞான திருஷ்டியில் பார்த்த அகத்தியர், அந்த மலர்களில்
மகரந்த மகரிஷி இருப்பதை அறிந்து, ""மகரிஷியே! நான் சுவாமியைத் தரிசிக்கச்
செல்ல வேண்டும்; வழிவிடுங்கள்'' என்றார்.

மகரந்த மகரிஷி வழிவிட மறுக்கவே, கோபமடைந்த அகத்தியர், ""பூ போன்று
இருக்கும் உன் முகம் யாழி முகமாக மாறட்டும்'' என்று சாபமிட்டார்.
அகத்தியரின் சாபம் பலிக்க, யாழி முகத்துடன் காட்சி தந்த மகரிஷி,
""மாமுனிவரே, இதனை நான் என் விருப்பப்படி செய்யவில்லை. இறைவன்
கட்டளைப்படிதான் தங்களை வழி மறித்தேன். உங்களுக்கு மறுபிறவி உள்ளதால்
நீங்கள் இத்தல இறைவனைத் தரிசிக்க முடியாது'' என்று கூறி தன் சாபத்துக்கு
விமோசனம் கேட்டார்.

சாந்தமடைந்த அகத்தியர், ""மகரந்த ரிஷியே, நான் கொடுத்த சாபத்திலிருந்து
விமோசனம் பெற, உலகத்தில் யாருமே பூஜை செய்யாத பொருளைக் கொண்டு இறைவனைப்
பூஜை செய்தால், சாபம் நீங்கி மீண்டும் பழைய முகத்தினை அடைவீர்'' என்று
சொல்லிவிட்டுத் திரும்பிச் சென்றார்.

உடனே மகரந்த ரிஷி தேப்பெருமாநல்லூர் ஸ்ரீ விஸ்வநாத சுவாமி ஆலயத்திற்கு
வந்து யாழி (சிங்க) முகத்துடன் பூஜை செய்தார். இன்று ஒருவகை மலரால் பூஜை
செய்தால் அடுத்த நாள் வேறு ஒரு மலரைக் கொண்டு பூஜை செய்தார். இப்படியாக
ஐம்பது வருடங்கள் பூஜை செய்தார். ஒரு நாள் சுவாமிக்கு அபிஷேகம்
செய்யும்போது அவர் கழுத்திலிருந்த ருத்ராட்ச மாலை அறுந்து சுவாமியின்
சிரசில் (லிங்கத்தில்) விழுந்தது. அப்போது இறைவன் ஜோதியாக ஜொலித்தார்.
இதனைக் கண்ட மகரந்த ரிஷி, ஒருமுக ருத்ராட்சத்திலிருந்து பதினான்கு முகம்
கொண்ட ருத்ராட்சம் வரை சமர்ப்பித்து பூஜை செய்ய, சுவாமி ரிஷிக்குக் காட்சி
கொடுத்தார். ரிஷி தன் யாழி முகம் மாறி சாப விமோசனம் அடைந்தார்.
அதனால்தான் இத்தல இறைவனுக்கு ருத்ராட்ச கவசம் சாற்றப்பட்டிருப்பதாகச்
சொல்கி றார்கள்.

இருபத்தியிரண்டாயிரம் ருத்ராட்ச மணி களைக் கொண்டு ஆவுடை, பாணம், நாக படம்
அமைத்து கவசமிடப்படுகிறது. ருத்ராட்ச கவசத்தை பிரதோஷம், சிவராத்திரி, மாத
சிவராத்திரி மற்றும் சிவனுக்குரிய சிறப்பு நாட்களில் அணிவிக்கிறார்கள்.
இதுபோன்ற ருத்ராட்ச கவசம் அணிந்த மேனி உள்ள இறைவனை எங்கும் தரிசிக்க
முடியாது என்கிறார்கள். இந்தக் கவசத்தினைத் தயார் செய்ய உதவியவர்
திருச்சியைச் சேர்ந்த பக்தர் சிவகுமார் என்பவர்.

மகா மண்டபத்திலிருந்து கிழக்கு வாசல் வழியாக வெளியே வந்தால் நந்தியெம்எபெருமான் காட்சி தருகிறார். இவருக்கு வலக்காது இல்லை.

பிரளய காலத்தில் உலகமே மூழ்கியபோது இத்தலம் மட்டும் தண்ணீரில் மூழ்காமல்
வெளியே தெரிந்தது. அப்போது பிரம்மா இத்தலத்தில் இறங்கிப் பார்த்தார்.
அங்கே விஸ்வநாத சுவாமி எழுந்தருளியிருப்பதைக் கண்டு வழிபட்டார். ஈசன்
அப்போது ஜோதிர்லிங்கமாய் காட்சி கொடுத்தார்.

இந்த நிலையில் பிரளயத்தில் சிக்கிக் கொண்ட நந்தி இறைவனைத் தேடி
இத்தலத்திற்கு வேகமாக வந்தது. அப்போது அது கால் சறுக்கி ஒரு பக்கமாக
விழுந்துவிடவே, அதன் வலக்காது மடங்கி உள்நோக்கிச் சென்றுவிட்டது. இதனால்
வருந்திய நந்தி இறைவனை நோக்க, நந்தியின் உள்ளப் போக்கை அறிந்த இறைவன்,
""நந்தியே! வருந்தாதே. யார் ஒருவர் தங்கள் குறைகளை உன் வலக்காது இருந்த
பக்கம் சொல்கிறார்களோ, அதனை நான் உடனே நிவர்த்தி செய்வேன்'' என்று ஆறுதல்
கூறினார்.

அதன்படி, இந்த நந்தியின் வலக்காதுப் பக்கம் தங்கள் குறைகளைக் கூறினால் அது நிவர்த்தி ஆகிவிடுகிறது என்கிறார்கள்.

ஆலயத்தின் தெற்குப் பகுதியில் உள்ள சந்நிதியில் ஸ்ரீதட்சிணாமூர்த்தி
காட்சி தருகிறார். இவர் சீடர்கள் யாருமின்றி காளை வாகனத்தில் அமர்ந்து
நிருதி திசையை நோக்கி அருள்புரிகிறார். இவரை அன்னதான தட்சிணாமூர்த்தி
என்பர். இவரை தரிசித்தால் சாபங்கள் நீங்கும்; கல்வி ஞானத்தில் சிறந்து
விளங்க லாம். இவருக்கு தினமும் பழைய சோறு (தண்ணீர் ஊற்றி வைத்த முதல் நாள்
சோறு) படைக்கப்படுகிறது. இவரை மனதார வழிபட்டால் பசித்த நேரத்தில் உணவு
கிடைக்கும் என்கிறார் கோவில் குருக்கள்.

இக்கோவிலின் வடமேற்குப் பகுதியில் தன் பத்தினிகளுடன் முருகப்பெருமான்
அருள்புரிகிறார். ஆலயத்தின் வடக்குக் கோஷ்டத்தில் மகாவிஷ்ணு காட்சி
தருகிறார். இவர், நவராத்திரி விழாவின்போது தன் மாப்பிள்ளையான
சிவபெருமானையும் தன் தங்கையான வேதாந்த நாயகியையும் சீர்வரிசை கொடுத்து,
தன் ஆலயத்திற்கு அழைத்துச் செல்வாராம். இந்தச் சிவாலயத்திற்கு அருகில்
பெருமாள் கோவில் உள்ளது. இந்தப் பெருமாள் கோவிலில் நவராத்திரி விழா
நடைபெறும் பொழுது, கடைசி நாள் சிவதம்பதி யர் அங்கே வருகை தருவது
வழக்கமாம். அவ்வாலயத் திலுள்ள பெருமாள் இங்கு வந்து சீர்வரிசை கொடுத்து
அழைத்ததன் அடையாளமாக இங்கு வடக்குக் கோஷ்டத்தில் எழுந்தருளியுள்ளார்.

அவருக்கு அருகில் ஸ்ரீசண்டிகேஸ்வரர் சந்நிதி உள்ளது. இங்கு இரண்டு
சண்டிகேஸ்வரர்கள் அருள் புரிகிறார்கள். ஒருவர் பெரிய தோற்றத்தில் தெற்கு
நோக்கியும் இன்னொருவர் சிறிய திருவுருவில் கிழக்கு நோக்கியும் உள்ளனர்.
சண்டிகேஸ்வரர் சந்நிதிக்கு அருகில் கோஷ்டத்தில் நான்கு கரங்கள் கொண்ட
விஷ்ணு துர்க்கை எழுந்தருளியுள்ளாள். அம்பாள் சந்நிதியின் பின்புறம்
வடக்கு கோஷ்டத்தில் எட்டு கரங்கள் கொண்ட துர்க்கை காட்சி தருகிறாள். இந்த
இரு துர்க்கைகளும் திரிபங்க நிலையில் நின்று வடமேற்கு திசையை நோக்கிக்
காட்சி தருகிறார்கள்.

கன்னி மூலையில் கபால விநாயகருக்குத் தனிச்சந்நிதி உள்ளது. இவரை வழிபட சகல
பாவங்களும் நீங்கி, எடுத்த காரியம் முழு வெற்றி பெறும் என்பர்.

இக்கோவிலின் கர்ப்பகிரகம் மட்டும் தேன் கலந்த சுண்ணாம்பால் கட்டப்பட்டது என்று வரலாறு சொல்கிறது.

இத்திருக்கோவிலின் தலமரம் வன்னி. தலத் தீர்த்தமான பிரம்ம தீர்த்தம்
கோவிலின் கிழக்குப் பகுதியில் உள்ளது. இத்தலத்தின் புராணப் பெயர்
தேவராஜபுரம்.

பூஜைக்குரிய பொருட்களை நாம் வாங்கிச் செல்வது நல்லது. குருக்களின் வீடு
அருகிலேயே இருப்பதால் நாம் செல்லும் நேரத்தில் தரிசனம் காணலாம். விரைவில்
கும்பாபிஷேகம் காணவிருக்கும் இந்தக் கோவிலின் திருப்பணிகள் நடைபெற்றுக்
கொண்டி ருக்கின்றன. பக்தர்கள் இதில் கலந்து கொண்டு இறையருள் பெறலாம்.

சிறப்புச் செய்தி

தினமும் காலையில் சூரிய பகவான் தன் ஒளிக்கதிர்களை சிவலிங்கத்தின்மீது
படரச் செய்து வழிபடுகிறார். அதற்குப் பின்தான் காலை ஏழு மணி அளவில் கோவில்
திறக்கப்படுகிறது.

சூரிய ஒளி சிவலிங்கத்தின்மீது படர் வதற்கு ஏற்ப கிழக்கு வாசல் சாளரம்போல் அமைக்கப்பட்டுள்ளது.

சூரிய கிரகணத்தின்போது ஒரு பெரிய நாகம் எங்கிருந்தோ வந்து தலமரமான
வில்வத்தில் ஏறி, வில்வதளத்தைப் பறித்து வாயில் கவ்விக் கொண்டு, கிழக்கு
வாசல் வழியாக நுழைந்து சிவலிங்கத்தின்மீது ஏறி வில்வதளத்தை வைத்தபின்,
கீழே இறங்கிப் படம் எடுத்து வழிபட்டபின், வந்த வழியே சென்று
மறைந்துவிடுமாம்.



தேப்பெருமாநல்லூர்
தலத்தின் புராணப் பெயர் தேவராஜபுரம். இங்குள்ள வேதாந்த நாயகி சமேத
விஸ்வநாதசுவாமி திருக்கோயில் வளாகத்தில் கன்னி மூலையில் தனி சந்நதியில்
எழுந்தருளியுள்ளார் கபால கணபதி. அது என்ன கபால கணபதி?

இந்த கணபதியின் கண்கள் யானை முகத்திற்கு உள்ளது போல் முகத்தின்
பக்கவாட்டில் இல்லாமல், மனிதர்களுக்கு இருப்பது போல் முகத்தின் நடுவில்
உள்ளது. மேலும், இவரது கை, கால் விரல்கள் மனித விரல்களைப் போல்
நீண்டுள்ளது. இடுப்பில் கபால மாலையை அணிந்திருக்கிறார் இவர்.
ஒரு மகாபிரளய காலத்தில், இந்தப் பூவுலகமே நீரில் அமிழ்ந்தபோது, இத்தலம் மட்டும் மூழ்காமல் வெளியே தெரிந்தது.

இதனைக் கண்டு திகைத்த நான்முகன், தன் சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ள
விநாயகரை தியானித்தார். அவர் முன் தோன்றிய விநாயகர், ‘‘இத்தலம்
புனிதமானது. இங்கே சிவபெருமான் எழுந்தருளப்போகிறார். மறுபிறவி இல்லாத
புனிதருக்குதான் இத்தல ஈசனை வழிபடும் பாக்கியம் கிட்டும். ஈசனுடன்
அன்னையும் நானும் இத்தலத்தில் எழுந்தருள்வோம்.

அப்போது என் கண்கள், மனித கண்கள் போல நேராகக் காட்சி தரும்; என் நகங்கள்,
நரம்புகள் எல்லாம் மனித உறுப்புகள் போலவே இருக்கும். அந்த வேளையில்
அஷ்டதிக் பாலகர்களை மண்டை ஓடு மாலைகளாக மாற்றி என் இடுப்பில் ஒட்டியாணமாக
அணிவேன். என்னை வழிபடுபவர்களுக்கு அவர்கள் செய்த பாவங்களை நிவர்த்தி
செய்து சகல பாக்கியங்களையும் அளிப்பேன்’’ என்று திருவாய் மலர்ந்தருளினார்.

இந்த கபால விநாயகருக்கு சந்தன அபிஷேகம் செய்யும் போது அவரது இடுப்பில் உள்ள கபால ஒட்டியாணத்தை தரிசிக்கலாம்.

குடந்தை நாகேஸ்வரம் திருக்கோயிலிலிருந்து சுமார் நான்கு கி.மீ தொலைவில் உள்ளது தேப்பெருமாநல்லூர்.

நன்றி: நக்கீரன் , தினகரன் - ஆன்மீகப் பகுதி
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

அவசியம் தரிசிக்க வேண்டிய அதி அற்புத ஆலயங்கள்  Empty Re: அவசியம் தரிசிக்க வேண்டிய அதி அற்புத ஆலயங்கள்

Post by மாலதி June 15th 2012, 07:04

அவசியம் தரிசிக்க வேண்டிய அதி அற்புத ஆலயங்கள்  Images?q=tbn:ANd9GcRYoaEfuoQvySkAXch-67zaQAOnwiIqjOnBKFTLBh-Qb7CxNpUG

கும்பகோணம்: திருநாகேஸ்வரம் அருகே தேப்பெருமாநல்லூரில் நல்லபாம்பு
அர்ச்சனை செய்த விஸ்வநாதசுவாமி கோவிலில் அம்பாள் சன்னதியில் அணைந்து,
அணைந்து தானாக மீண்டும் எரிந்த தீபத்தை கண்டு பக்தர்கள்
பரவசமடைந்தனர்.தஞ்சை மாவட்டம் திருநாகேஸ்வரம் அருகே தேப்பெருமாநல்லூரில்
வேதாந்தநாயகி சமேத விஸ்வநாதசுவாமி கோவில் உள்ளது. இங்கு
விஸ்வநாதசுவாமிக்கு ருத்ராட்சத்தால் மட்டுமே அர்ச்சனை நடப்பது சிறப்பு.

விசுவநாதசுவாமியை வழிபடுவதால் மறுபிறவி கிடையாது என புராணம்
கூறுகிறது.கடந்தாண்டு ஜனவரி 15ம் தேதி சூரிய கங்கண கிரகணம் நடக்கும் முன்
காலை 10.30 மணிக்கு நல்லபாம்பு விசுவநாதசுவாமியின் மேல் இருப்பதை கோவில்
சிவாச்சாரியார் சதீஷ் கண்டார். பாம்பு சுவாமியின் மேலிருந்து இறங்கி நேராக
தலவிருட்சம் வில்வமரத்துக்கு சென்றது. அங்கு மரத்தில் ஏறி வில்வஇலையை
பறித்துக்கொண்டு மீண்டும் சுவாமி சன்னதிக்குள் வந்தது. பின்னால்
வந்தவர்களை பார்த்து சீறியது. பின் நேராக சுவாமியின் மேல் ஏறி தலையில்
அமர்ந்து படம் எடுத்தவாறு சுவாமியின் மீது வில்வ இலையை இட்டது. இது
அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.இதுபோல் இரண்டு, மூன்று முறை இவ்வாறாக
செய்தது. இத்தகவல் பரவியதும் கிராமமக்கள் முழுவதும் கோவிலுக்கு வந்து
நல்லபாம்பை பார்த்து சுவாமியை தரிசனம் செய்தனர். இதுபற்றி கோவில்
சிவாச்சாரியார் சதீஷ்குருக்கள் மற்றும் பிரகாஷ் குருக்கள் அப்போது
கூறுகையில், ""ஒவ்வொரு கிரகணத்தின் போதும் தன் சாபத்தை போக்கிக்கொள்ள
பாம்பு வந்து வில்வத்தால் விசுவநாதசுவாமியை அர்ச்சித்து வருகிறது. இதுவரை
நம் கண்ணில் படவில்லை. இன்று தான் நேரில் கண்டுள்ளோம்,'' என்றனர்.

இந்நிலையில், கோவில் திருப்பணி வேலைகள் நடந்து வருகிறது. நேற்று முன்தினம்
இக்கோவிலின் திருப்பணி உபயதாரர் கனடாவை சேர்ந்த ஜெனித்தா, அம்பாள்
சன்னதியில் 11 சுமங்கலிகள், ஏழு கன்னிப்பெண்களை வரவழைத்து வேதாந்தநாயகி
அம்பாள் சன்னதியில் சுமங்கலி பூஜை, கன்னிகா பூஜை செய்தார். முன்னதாக
சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், புஷ்பலங்காரம் நடந்தது.பின்,
சுமங்கலிகள், கன்னிப்பெண்களுக்கு புத்தாடைகள் வழங்கினர். மதியம் உணவு
வழங்கப்பட்டது. நேற்று காலை கோவிலுக்கு சென்ற பக்தர் அம்பாள் வேதாந்தநாயகி
சன்னதியில் தீபம் அணைவதும், பின் தானாக எரிவதுமான நிகழ்வை கண்டு
ஆச்சர்யமடைந்தார். கோவில் அர்ச்சகர் சதீஷ் சிவாச்சாரியாரை அழைத்து வந்து,
""எனக்கு தான் பார்வை சரியாக தெரியவில்லையா. நீங்கள் பாருங்கள்,''
என்றார்.

அப்போது தீபம் அணைவதும், மீண்டும் தானாக எரிவதுமாக இருந்துள்ளது.அதற்குள்
அக்கம்பக்கம் தகவல் பரவியதும் தேப்பெருமாநல்லூர் மக்கள் திரளானோர்
கோவிலுக்கு படை எடுத்தனர். அவர்களும் தீபம் அணைந்து எரிவதை பார்த்து
அம்பாளை தரிசித்தனர். இந்நிகழ்வு காலை ஏழு முதல் ஒன்பது மணி வரை நடந்தது.
இந்த அதிசயம் நடந்த கோவிலுக்கு அம்பாளை காண சுற்றுப்புற மக்களும் வந்த
வண்ணம் உள்ளனர்.

ஆதாரம் : தினமலர் , தேதி : 21 .04 .2011
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=228669





இந்த கோவிலுக்கு செல்ல விரும்பும் பக்தர்கள் - கும்பகோணம் சென்று
அங்கு இருந்து செல்லலாம். ராகுவின் ஸ்தலமாக கருதப்படும் திருநாகேஸ்வரம்
கோவிலிலிருந்து சுமார் நான்கு கி. மீ. தொலைவில் உள்ளது.
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

அவசியம் தரிசிக்க வேண்டிய அதி அற்புத ஆலயங்கள்  Empty Re: அவசியம் தரிசிக்க வேண்டிய அதி அற்புத ஆலயங்கள்

Post by மாலதி June 15th 2012, 07:14

வாசக அன்பர்களுக்கு என் பணிவான வணக்கம். நமது வாசகர்கள் அனைவரிடமும், ஒரு
உதவியை எதிர் பார்க்கிறேன். எந்த ஒரு முயற்சியும், தனிப்பட்ட
முறையில் செய்வதை விட, ஒரு கூட்டு முயற்சியாக செய்தால், அது எளிதாக
நிறைவேறிவிடும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை.

சென்ற பதிவில், நான் குறிப்பிட்ட படி - சித்தர்கள் நமக்கு அருளிய அபூர்வ
ஆன்மீக குறிப்புக்களை பற்றிய கட்டுரைகள் நாம் தொடங்கும் முன்பு, இந்த பதிவு
அவசியம் என எண்ணியதன் விளைவே இந்த கட்டுரை. நமது வாசகர்களில் சும்மா ஒரு
வாசிப்பு சுவாரஸ்யத்துக்கு வருபவர்கள் எத்தனை பேர், நிஜமாகவே ஆர்வத்துடன்
வருபவர்கள் எத்தனை பேர், நான் மட்டும் நல்லா இருந்தாப் போதும் என்று
நினைக்காது, பொது நல நோக்குடன் இருப்பவர்கள் எவ்வளவு பேர் என்று அறிய ஒரு
சின்ன முன்னோட்டமாக இந்த முயற்சி.

என்னடா, ஓவர் பில்ட் அப் ஆக இருக்கிறதே, ஏதாவது அறக்கட்டளை, மடம், கோவில்
பணி என்று பைசா சம்பந்தப்பட்ட விஷயமோ என்று ஜெர்க் ஆகிடாதீங்க... இது
அப்படிப்பட்ட விஷயமே அல்ல...! அது நமது நோக்கமும் அல்ல. கிட்டத்தட்ட
அறுநூறு பாலோவர்ஸ், இரண்டாயிரத்து ஐநூறு இ-மெயில் சப்ஸ்க்ரைபர்ஸ் என்று
ஒரு பெரிய நெட்வொர்க் ஆக நமது தளம் இப்போது இயங்கிக்கொண்டு இருக்கிறது.
இவங்க எல்லோரையும் இந்த பதிவு மூலம் ஒரு சின்ன ஒருங்கிணைப்பு பண்ணனும்னு
ஒரு ஆசை.. அதிக பட்சம் உங்கள் மேலான நேரத்தை, ஒரு அஞ்சு நிமிஷம்
ஒதுக்கினாப் போதும். ஒன்னும் இல்லை, இந்த பதிவு படிச்சதும், நீங்க ஒரு E-mail /
பின்னூட்டம் இடணும். படிக்க வரும் வாசகர்களுக்கு ஒரு உபயோகமான தகவலா
இருக்கணும். அவ்வளவுதான் விஷயம். In future, நாம எல்லோரும் ஒரு குடும்பம் மாதிரி , ஒரு குழுவா அல்லது ஒரு forum போன்று
நமது விவாதங்கள், கருத்துக்கள் பரிமாறிக்கொள்ள வேண்டும் என்று ஒரு ஆசை.

விஷயம் இதுதான் : நமது பாரத பூமியில் எவ்வளவோ ஆலயங்கள் இருக்கின்றன.
ஆனால், ஒரு சில கோவில்களுக்கு சென்று வணங்கி வரும்போது, சில கோரிக்கைகள்
உடனடியாக நிறைவேறுகிறது. அதற்க்கு என்ன காரணம், என்ன சூட்சுமம் எல்லாம்
நமக்குத் தெரியாது. ஆனால், உங்கள் மனது அதை உணரும். முதல் தடவை எதோ
எதேச்சையாக நடந்தது போல தோன்றினாலும், அடுத்தடுத்து அந்த குறிப்பிட்ட ஆலயத்திற்கு சென்று வரும்போது, ஆச்சரியப் படத்தக்க
விஷயங்கள் நடக்கும். மனது அந்த இறைவனை 'சிக்' கென பற்றிவிடும். இந்த
அனுபவம், உங்களுக்கு மட்டுமே தெரிந்த ஒரு விஷயமாக இருந்து வந்து இருக்கும்.
அல்லது உங்களுக்கு மிக நெருக்கமானவர்களுக்கு நீங்கள் சொல்லி இருக்கக்
கூடும். இந்த ரகசியத்தை, நீங்கள் நம் வாசகர்களிடம் பகிர்ந்து கொண்டால்,
நமது வாசகர்கள் குழுவில் உள்ள அனைவரும் பயன் பெற உதவியாக இருக்கும்.

இறைவனின் அருள் கடாட்சம் பரிபூரணமாக நிலவும் ஆலயம் பற்றி நீங்கள் உணர்ந்த
அனுபவம், அந்த ஆலயம் எங்கே இருக்கிறது, என்ன பலன்கள் உடனடியாக கிடைக்கும்
என்பது பற்றிய தகவல்கள், துன்பத்தில் உழன்று கொண்டு இருக்கும் எதோ ஒரு
நல்ல ஆத்மாவுக்கு, உடனடி தீர்வாக அமையும்.

நமது வாசகர்கள் அனைவரும் ஏனோ தானோவென்று இருப்பவர்கள் இல்லை. அவர்கள் மிக
மிக நல்ல மனிதர்கள் என்பதை , நம் வாசகர்களும், புதிதாக நம் தளத்துக்கு
வரும் வாசகர்களும் உணர வேண்டும். ஏற்கனவே நாம், பல ஆலயங்களைப் பற்றியும், அவற்றின் மகத்துவம் பற்றியும் பல
கட்டுரைகளில் அலசி இருந்தாலும், இந்த பதிவும், இதை சார்ந்து நீங்கள் இடும் பின்னூட்டங்களும், இணைய தள
வரலாற்றில் ஒரு மைல் கல்லாக அமைய வேண்டும் என்பது என் ஆசை.

பிள்ளையார் சுழியாக, நான் ஆரம்பித்து வைக்கிறேன். ஒரு சின்ன கோடு போட்டா, நீங்கள் ரோடே போட்டு விடுவீர்கள் என்று நம்புகிறேன்.
====================================================================
இந்த ஆலயம் ஒரு பழம்பெரும் சிவ ஆலயம். கட்டி முடித்து ஆயிரம் வருடங்களுக்கு
மேல் இருக்கும். காலம் காலமாக பல சிவன் அடியார்களின் திருவடி பட்ட இடம்.
சத்தமே இல்லாமல், பல ஆச்சர்யங்களை அற்புதங்களை நடத்திக் கொண்டு
இருக்கிறார், இங்கு உள்ள சிவன்.அந்த சித்தர் வந்து வழிபட்டு இருக்கிறார், இந்த நாயன்மார் வந்து தொழுது
இருக்கிறார். தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம் என்று ஒவ்வொரு ஆலயத்திற்கும் ,
எவ்வளவோ பெருமைகள் இருக்கும்.

இந்த ஆலயத்திற்கும் இருக்கிறது. ஆனால், எது
எப்படி இருந்தாலும், நம் மனது அறிய சில அதிசயங்கள் நிகழ்ந்தால் ஒழிய, நாம்
நம்புவதேயில்லை, இந்த மாதிரி நிறைய கோவில்களை பார்த்திருக்கேன் சாமி, ஆனா, நான் போய்
கும்பிட்டா, அந்த சாமி கண்டுக்கிறதே இல்லை.. மேலே சொல்லு..! என்று தான்
தோன்றும் இல்லையா? பர்ட்டிக்குலரா நான் ரொம்ப மோசம்... அவ்வளவு சீக்கிரம் என்
மனசு எந்த விஷயத்தையும் சீர் தூக்கிப் பார்க்காமல் ஒப்புக்கொள்வது இல்லை.

அப்படிப்பட்ட என்னையும் மாற்றியவர் இங்கு அருள் பாலிக்கும் அய்யன். கிட்டத்
தட்ட பத்து வருடங்களாக , வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நான் இங்கு
வழிபட்டுக் கொண்டு இருக்கிறேன். தனிப்பட்ட முறையில் எனக்கு பல அற்புதங்களை
இவர் நடத்தி இருந்த போதிலும், என் நண்பர் இருவரின் வாழ்க்கையில் இவர்
நடத்தி இருக்கும் அற்புதங்கள், சத்தியமாக எதேச்சையாக நடந்த விஷயம் அல்ல.

விசேஷ தினங்களில், பிரதோஷ நாட்களில் கூட்டம் அலைமோதும். சாதாரண நாட்களில் ,
இவரைக் காண சென்றால் நீங்களும், இறைவனும், கோவில் குருக்களும் மட்டுமே
இருப்பீர்கள். சமயத்தில் குருக்கள் கூட வெளியில் நந்தி மண்டபத்தில் ஓய்வு
எடுத்துக் கொண்டு இருப்பார். நீங்களும், பரம்பொருளும் மட்டுமே. நீங்கள்
உரையாடுவதை அவர் காது கொடுத்து கேட்கும் உணர்வு , உங்களுக்கு ஏற்படும். இதை
எழுதும்போதே , சில சம்பவங்கள் நினைத்து மயிர் கூச்செடுக்கிறது.

"ஐயனே,
என்னாலே முடியலை, என்னோட சக்திக்கு உட்பட்டு என்னாலே சமாளிக்க முடியும்னு
தெரியலை, தயவு செய்து அருள் புரியுங்கள்" - என்று உங்கள் மனதுக்குள்
ஒலிக்கும் ஓலக்குரலை, ஒரு தாயின் கருணையுடன் - செவி மடுத்து , பிரச்னைகளை
உடனுக்குடன் ஊதித் தள்ளி, பரவசத்தில் ஆழ்த்துபவர், இந்த ஆலயநாதர்.

என்னதான் பகீரதப் பிரயத்தனம் எடுத்து நாம் முயற்சிகள் மேற்கொண்டாலும் ,
சில விஷயங்களில் இறைவனின் கருணை கண்டிப்பாகத் தேவைப்படுகிறது. சிலருக்கு
அது அலுவலக சம்பந்தமாக இருக்கலாம், கடன், சொத்துப் பிரச்னை, திருமணம் என்று
பிரச்னைகளுக்கா பஞ்சம். இதோ முடியப்போகிறது என்று நினைத்து இருக்கும்
நிலையில், எங்கிட்டிருந்தோ ஒரு புது குறுக்கீடு வந்து, மறுபடியும் முதல்ல இருந்தா..
"த்ஸ்..அப்பா, இப்போவே கண்ணைக் கட்டுதே..." , என்று நொந்து நூடுல்ஸ்
ஆகிவிடுவோம்.

ரொம்ப கூலா சில பேர் சொல்லிடுறாங்க, மனுஷனா பொறந்தா, கஷ்ட நஷ்டங்கள்
இருக்கத்தான் செய்யும். எல்லாத்தையும் சமாளிக்கனும்னு. கரெக்ட்ங்கண்ணா ..
வெறும் கஷ்டமும், நஷ்டமும் மட்டும் தான் இருக்கு... என்னைக்கு கரை
ஏறப்போறோம்னு தெரிய மாட்டேங்குதே... அதைத் தானே யோசிக்கிறீங்க... மேலே
படிங்க.. ! என் நண்பருக்கு ஏற்பட்ட அனுபவத்தை கூறுகிறேன்.

"ஐய்யா, இந்த ஜாதகத்தைப் பாருங்கள், எனக்கு குழந்தை பாக்கியம் இருக்கிறதா ,

இல்லையா ? எதாவது நல்ல வார்த்தை கூறுங்கள்" என்றுதான் அவர் அறிமுகம் சென்ற
வருடத்தில் நடந்தது. கணவன், மனைவி இருவர் ஜாதகமும் இருந்தது. ஏற்கனவே தாமத
திருமணம். ஜாதக ரீதியாக அவர் மனைவிக்கு மிக
உஷ்ணமான உடம்பு. கரு தங்கினாலும், மருத்துவ ரீதியாக கரு நிலைப்பதற்கு
உடம்பு ஒத்துழைக்காது. ஜாதகத்திலும் புத்திர பாக்கியத்திற்கு வாய்ப்பு
இல்லை என்றே நிலை. ஆனால், ஒரு நல்ல ஜோதிடன் அனுகூலமான பலன்கள் நடக்க
வாய்ப்பு
இல்லையெனினும், அதை வாய் விட்டு கூற இயலாது, அதை ஒரு கொள்கையாகவே வைத்து
இருப்பவன் நான்.

அவருக்கு நான் கூறிய பரிகாரம் இதுதான். சிவ ராத்திரி
நெருங்கிக்கொண்டு இருந்த வேளை அது. நீங்களும் , உங்கள் மனைவியும் சிவ
ராத்திரி முழுவதும், இந்த ஆலயம் சென்று - உங்களால் எவ்வளவு நேரம் ஆலயத்தில்
இருக்க முடியுமோ, அவ்வளவு நேரம் இருந்து - மனம் உருக இறைவனிடம்
வேண்டுங்கள். நிச்சயம் உங்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டு. விரைவில்
நீங்கள் அப்பாவாகப் போகிறீர்கள் என்று, நானும் அவருக்காக வேண்டினேன். வீட்டில் இருந்த கல்கண்டு கொஞ்சம் எடுத்து, அட்வான்ஸ்
வாழ்த்துக்கள் சார் என்று இனிக்க இனிக்க வாழ்த்தி அனுப்பினேன்.

அவரும்
சும்மா இல்லை, சிக்கென அவன் திருவடிகளைப் பற்றி சரணடைந்தார். கிட்டத்தட்ட
மருத்துவ உலகமே, கைவிரித்து விட்ட சூழலில் அந்த தம்பதிகள் இருந்தனர்.
நம்பிக்கையின் ஒளி கீற்று மொத்தமாக மங்கிய நிலை.... ஆனால், இன்று ! ஆம்,
அந்த பேரதியசம் நடந்தே விட்டது... மிகச் சரியாக பதினைந்து மாதத்திற்குள்
அவர் இன்று ஒரு அழகான ஆண் குழந்தைக்குத் தந்தை.

சிவராத்திரி அன்று, இரவில் இந்த ஆலயத்திற்கு வந்த அவருக்கு, ஒரு வயதான பெரியவர் பேச்சுத் துணைக்கு
கிடைத்து இருக்கிறார். பொதுவாக பேசத்தொடங்கிய அவர்கள் உரையாடல், ஒரு மணி
நேரத்துக்கும் மேல் நடந்ததாம். சிவ ராத்திரியின் மகிமைகள், சிவனின்
திருவிளையாடல்கள் என்று பேச்சு மிக அருமையாக நடந்து இருந்து இருக்கிறது.
அந்த பெரியவர் யார், என்ன என்று விவரம் தெரியவில்லை. மனது முழுவதும்
லேசாகி, ஒரு அபரிமிதமான பரவச அனுபவத்தில், அந்த தம்பதிகள் திளைத்து
இருந்தனராம். அவர் எதோ ஒரு சித்தராக இருக்கலாம் என்று அந்த நண்பர்
மனப்பூர்வமாக நம்புகிறார்.

"சார், இன்னைக்கு என் பையன் என் கன்னத்தைப் பிடித்து, முத்தம் கொடுத்தான் ,

பாருங்க! நான் அவுட் சார், வாழ்க்கையில இம்புட்டு சந்தோசமா நான் இருந்ததே
இல்லை"ன்னு இன்று அவர் கூறியபோது , அவர் முகத்தில் தெரிந்த அந்த
மகிழ்ச்சி, நிம்மதி... அடேங்கப்பா...! ஈடு இணையே இல்லை. எத்தனை கோடி
சொத்து
இருந்தாலும், கொஞ்ச ஒரு மழலை இல்லையென்றால், அது தரும் வேதனை அதை
அனுபவிப்பவர்களுக்குத் தான் தெரியும்...

முக்கியமாக சிவ ராத்திரி தினத்தில் அத்தனை மகிமை பொருந்திய ஆலயத்தில்
இருந்ததே, ஜாதக ரீதியாக அத்தனை குளறுபடிகளையும் தூக்கி கடாசி
இருக்கிறது,... நாளென்ன செய்யும் ? கோள் என்ன செய்யும்- அவன் கருணை
இருக்கும் இடத்தில். இந்த நண்பர் வாழ்க்கையில், அவன் அதை
நிரூபித்துவிட்டான். இது நூறு சதவீதம் உண்மையாக நடந்த நிஜம்.

இன்னொரு நண்பருக்கு, நடந்த சம்பவம்.... கந்து வட்டியால் கதறி கதறி
துடித்துக் கொண்டு இருந்தவர். நல்ல சம்பளம் வாங்கியும், ஒரு பிரயோஜனமும் இல்லை, வாழ்க்கை முழுவதுமே வட்டி
கட்டியே ஓடிவிடுமோ என்கிற நிலை. சொந்தம், பந்தம் நட்பு என்று அத்தனை
பேரிடமும் ஏற்கனவே உதவி வாங்கி, அதை திருப்பிக்கட்ட தலை குப்புற
குட்டிக்கரணம் அடித்து, வேறு எங்கும் உதவி கேட்க முடியாத சூழ்நிலை.

கிரெடிட் கார்ட் கடன் நிரம்பி வழிகிறது.. மாத மாதம் , பேங்க் காரர்கள்
வீட்டுக்கு வந்து சட்டையை பிடிக்கின்றனர். ஏற்கனவே ஒரு பாங்க்கில் லோன்
எடுத்து திருப்பிக் கட்ட முடியாத சூழ்நிலை. இப்போதெல்லாம், ஒரு டெலி போன்
பில் ஒழுங்காக கட்டவில்லைஎன்றாலே, உடனே CIBIL ரிப்போர்ட்டில்
பதிவாகிவிடும். எந்த பேங்க்கிலும் லோன் கிடைக்காது. ஆரும் பேச மாட்டாங்க.
ஆரும் தண்ணி கொடுக்க மாட்டாங்க.. நாட்டாமை தீர்ப்புக்கு மதிப்பு கொடுத்து.
இந்த நிலைமையில் வீட்டிலும் அனுசரணையாக யாரும் இல்லை. ஒரே சண்டை, களேபரம்.
இப்படி இருந்தா, யார் மதிப்பா...? எதுக்கும் ஒரு லிமிட் இருக்கு இல்லே...!

மனுஷன் கிட்டத்தட்ட விரக்தியின் உச்சத்துக்கே வந்து விட்டார்...! செத்துப்
போறதுதான், இருக்கிற ஒரே வழி. ஆனா, குடும்பம் , குட்டி என்ன செய்யும்...?
பெருமைக்கு , பந்தாவுக்குன்னு நிறைய செலவு பண்ணி, சொத்து வாங்குறேன், ஷேர் வாங்குறேன்னு இறங்கி, இன்னைக்கு அத்தனையும்
விற்றும், கடன் தீர்ந்த பாடு இல்லை. யாரைப் பார்த்தாலும், முகத்துல
சிடுசிடுப்பு. வாழ்க்கையில தோத்துக்கிட்டு இருக்கிறவங்க ஒவ்வொருத்தருக்கும்
இருக்கிற அதே உணர்வு.கடைசியில் நடுத்தெரு
நாராயணன் நிலைமை. இவரு நல்ல நேரம், ஆரம்பமாகிற நேரம் அது. எதேச்சையா, என்னை
சந்தித்தார்.

"சார், சாமி, கடவுள் , ஜாதகம் எதிலேயும் எனக்கு நம்பிக்கை ரொம்பவே இருந்துச்சு, ஆனா இப்போ இல்லை. எத்தனையோ கோவில் - எத்தனையோ
பரிகாரங்கள், எல்லாம் வேஸ்ட் சார்.. ஒவ்வொருத்தரும் முடிஞ்ச அளவுக்கு
இன்னொருத்தனை ஏமாத்தி காசு சம்பாதிக்கிறாங்க. அறிவு தான்
ஒரு மனுஷனை வழி நடத்துது. அதுதான் நான் உணர்ந்த ஞானம். எனக்கு இருக்கிற அறிவு பத்தலைன்னு நான்
நினைச்சுக்கிறேன். ஆனா, இப்படியே வாழ்க்கை போச்சுன்னா, நான் வாழுறதிலேயும்
அர்த்தம் இல்லை"ன்னு தான் ஆரம்பிச்சார்....

நான் அவர் கட்டத்தை வாங்கிப்
பார்த்திட்டு, முதல்ல அவர் கையை பிடிச்சு குலுக்கினேன். முதல்ல கையை
கொடுங்க சார்.. நீங்க எவ்வளவு கஷ்டப் பட்டு இருப்பீங்கன்னு கட்டத்தைப்
பார்த்தாலே தெரியுது... ஆனா, போன மாசத்தோட எல்லா நிலைமையும் முடிஞ்சது.
இவ்வளவு தூரம் நீங்க கடந்து வந்ததிலேயே, நீங்க எவ்வளவு பெரிய திறமைசாலின்னு
தெரியுது... கவலையே படாதீங்க...! எண்ணி ரெண்டு மாசத்துக்குள்ளே, உங்க
கஷ்டம் எல்லாம் பறந்து போகும்... நீங்க பெரிய ஆளா ஆகப் போறீங்க... !
நம்பிக்கையோட இருங்க....! இனி தொட்டது எல்லாம் வெற்றிதான்னு சொன்னேன்.

இப்படி ஒரு வார்த்தையை அவர் எதிர் பார்க்கவே இல்லை....வெயில்ல கிறங்கி,
தண்ணி தண்ணின்னு வர்றவனுக்கு - சும்மா கும்முன்னு மோர் கிடைச்சா எப்படி
இருக்கும்? " ரொம்ப சந்தோசம்
சார்... என்ன பரிகாரம் செய்யனும், எல்லாமே ஏற்கனவே செஞ்சுட்டேன்.. இனியும்
எதுவும் செய்யணும்னாலும் செய்றேன்"னு சொன்னார்...

"நீங்க ஒன்னும் செய்ய வேண்டாம் சார்.. நீங்க ஒரு கோவிலுக்கு மட்டும்
போயிட்டு வாங்க"ன்னு நான் கைகாட்டினது இந்த கோவில் தான்... "எப்படி
கும்பிடனும், ஏதாவது வழிமுறைகள் இருக்குதா?"....ன்னு கேட்டார். அவர் நிலைமை

எனக்கு நல்லாவே தெரியும். ஒரு பார்மாலிட்டியும் கிடையாது. உங்க தாய்,
தகப்பனை பார்க்கிறதுக்கு எதுக்கு சம்பிரதாயம், சாஸ்திரம் எல்லாம்..? உங்க
சொந்த வீட்டுக்கு போற மாதிரி போய்ட்டு வாங்க. "சார்... உங்களால
முடிஞ்சா, ஒரு மல்லிப் பூ மாலையும், தேங்காயும் உடைச்சிட்டு வாங்க, மீதி
எல்லாம் அவன் பாத்துப்பா"ன்னு தைரியமா அவனை நம்பி, இவரை அங்கே அனுப்பினான்.

"கடையில் பேரம் பேசாமல், கேரி பாக் இல்லாமல், உங்கள் கைகள் பட, இறைவனுக்கு
சமர்ப்பியுங்கள்...அது போதும். அப்படி முடியலைனாலும் பரவா இல்லை"ன்னு
அனுப்பினேன்.

பஸ்சுக்கு கூட காசு இல்லாமல், கிட்டத்தட்ட பத்து கிலோமீட்டர் நடந்தே, அவர்
அந்த கோவிலுக்குச் சென்றார். மாலையும் இல்லை, தேங்காயும் இல்லை. கோவிலில்
வேறு யாரும் இல்லை. குருக்கள் கூட அந்த சமயம் இல்லை. கதறி, கதறி, கண்ணில்
நீர் கொப்பளிக்க அவர் இறைவனை சந்திக்கும்போது, அங்கு மௌனமாக அவரை பார்த்துக்
கொண்டு இருந்தது, வெறும் கல் என்று நம்மில் பெரும்பாலானோர் நினைக்கும் அந்த லிங்கம் மட்டுமே...! ஒரு அரை மணி நேரம் ஆலயத்தில்
இருந்துவிட்டு, வெளியில் வந்து , நடந்தே வீடு திரும்பி இருக்கிறார்...!

அதற்க்கு ஒரு மாதம் முன்பு SBI பாங்க்கில் லோனுக்கு அப்ளை பண்ணி
இருந்தாராம். கிட்டத்தட்ட இருபது, முப்பது முறை பாலோ பண்ணியிருந்து
இருக்கிறார். செஞ்சு தர்றேன், தர்றேன்னு 'தா' காட்டி, காட்டி அலைக்கழித்து
இருக்கின்றனர். இவருக்கு நம்பிக்கையே இல்லை. சரி, CIBIL
ரிப்போர்ட்டில் தகராறு.. இருந்ததும் போயி, நாலு வருடம் முன்பு இதே SBI
யில், இன்னொரு ப்ரான்ச்சில் அந்த செலுத்தாத லோனுக்கு , சேர்த்து பிரஷ்ஷர்
எந்த நேரத்திலும் வரவிருக்கிறது... லோனுக்கு அப்ளை பண்ணாமலே
இருந்து இருக்கலாம் போல, சரி வருவது வரட்டும். சேர்த்து அனுபவிக்க
வேண்டியதுதான் என்று நினைத்து இருந்தாராம்.

மத்த பேங்க் ஐ விட, SBI யில் லோன் கிடைப்பது என்பது, குதிரை கொம்பு என்பது
அதை அனுபவித்தவர்களுக்குத் தெரியும். "லோன் எனக்கு இல்லை, சொக்கா ! அவனை
கூப்பிடக் கூடாது, கூப்பிடக்கூடாது ,
ஏன் எதுக்கு கூப்பிடனும்" என்று தருமி ரேஞ்சில் இருந்த நிலையில் தான், அவர்
என்னை சந்தித்து - இந்த கோவிலுக்கு சென்று வந்தது...

இது நடந்த மூன்றாவது நாள், SBI பாங்க்கில் இருந்து அவருக்கு போன், " சார்,
நான் பீல்ட் ஆபீசர் பேசுறேன், கொஞ்சம் பேங்க் வரைக்கும் வந்து போக
முடியுமா?", சரிதான், அந்த பழைய லோன் மேட்டருதான் போல, இன்னைக்கு நம்மளை
சுழுக்கு எடுக்கப்போறானுங்கன்னு நினைச்சுக்கிட்டே போயிருக்கார். சரி,
கழுத்துலையா, கத்தி வைச்சுடப் போறாங்க... SBI கொஞ்சம் டீசன்ட் பார்ட்டி
தானே, கிரெடிட் கார்ட் மாதிரி, கந்து வட்டி மாதிரியா அசிங்கப் படுத்திடப்
போறாங்க? என்ன, கம்பனிக்கு லெட்டர் போடுவாங்க, பாத்திக்கிடலாம்" ன்னு -
பில்டிங் ஸ்ட்ராங், basement தான் கொஞ்சம்....ன்னு போயிப் பார்த்தா..... அட, நம்ப முடியாத அதிசயம் அங்கே அரங்கேறியது.அவர் லோன்
சாங்க்க்ஷன்.

"அஞ்சு லட்ச ரூபாய் உங்க அக்கௌன்ட்ல ட்ரான்ஸ்பர் பண்ணுறோம்
சார், அமௌன்ட் கொஞ்சம் அதிகம்ங்கிறதால லேட் ஆயிடுச்சி. சாரி சார்"ன்னு
சொல்றாங்க.

இவருக்கு சந்தோசம் தாங்க முடியலை. வெளியில வந்த உடனே எனக்கு போன்..." சார்,
நீங்க..... நீங்க ..." பேச வார்த்தையே இல்லை. ! "லோன் கிடைச்சிடுச்சி
சார்.. கம்பெனிக்கு அரை நாள் லீவ் சொல்லிட்டேன்.... நான் அந்த சாமியைப்
பார்க்க போயிட்டிருக்கேன்"னார்...

மூணு லட்ச ரூபாய் வட்டிக்கு வாங்கி, வட்டி மட்டுமே ஒன்பது லட்சம் கட்டிய
ஆள் அவர். அசல் திருப்பித் தரவே முடியாதோங்கிற நிலைமைல, லோன்
கிடைக்கவே வாய்ப்பே இல்லாத நிலைமைல, இந்த அஞ்சு லட்சம், அவருக்கு அஞ்சு
கோடிக்கு சமம். இதில இன்னொரு ஆச்சர்யம், இவரு கூட அப்ளை பண்ணின, இவரை விட
சம்பளம் அதிகம் வாங்கின ஆளுங்களுக்கு கூட, லோன் சாங்க்க்ஷன் ஆகாம இன்னும்
'பென்டிங்'லேயே கிடந்து இருக்குது.

இன்னைக்கு வர்ற சம்பளத்துல, நிம்மதியா லோன் அடைச்சுக்கிட்டு, கந்து கடன்
எல்லாம் முடிச்சிட்டு , குடும்பத்தை சந்தோசமா வைச்சுக்கிட்டு இருக்கார்.

"இனி எனக்கு கவலை இல்லை சார், நான் நிமிர்ந்துடுவேன். எனக்கு இந்த போதாத கால
கட்டத்துல கிடைச்ச அனுபவத்துக்கு விலை மதிப்பே இல்லை சார். திரும்ப தப்பு
செய்யாம இருக்கணும். இதுக்கு மேலே, என்ன நடந்தாலும், உடனே சரி செய்ய என்
சாமி இருக்கிறப்போ , எனக்கு என்ன கவலை"ன்னு, அவர் இந்த சிவனை சொல்லும்போது,
நமக்கே ஜிவ்வென்று இருக்கிறது.
கடவுள் இல்லை என்று யாராவது சொன்னால், இவர்கள் பதிலுக்கு , "ஹா... ஹா..." வென்று பலத்த குரலில் சிரிக்கிறார்கள்.
அப்பேற்பட்ட மகத்துவம் பொருந்திய, இறைவன் யார் என்று அறிந்து கொள்ள ஆவல் உங்களுக்கும் இருக்கும் இல்லையா..?

சந்தேகமே இல்லாமல், இறைவன் இருக்கும் அற்புதத்தை நீங்கள் உணர , அவசியம்
ஒருமுறை இந்த ஆலயம் வந்து பாருங்கள். இது இருக்கும் இடம் : திருவலம் (Thiruvallam / Tiruvalam ) என்ற
சிறிய ஒரு ஊர். பிள்ளையார் - திருவை (அம்மை , அப்பனை) வலம் வந்ததை ஒட்டிய காரணப் பெயர்.

வரலாறு கொஞ்சம் ஞாபகம் இருப்பவர்களுக்கு, வல்லவரையன் வந்தியத்தேவன் பிறந்து
வளர்ந்து ஆண்ட பகுதி என்று சொன்னால் ஞாபகம் வரலாம். அதே வல்லவரையர் தான்.
அருண்மொழியின் உற்ற நண்பனாக, குந்தவையை கரம் பிடித்த வந்தியத்தேவன், பலமுறை
தொழுது இருக்க கூடிய ஆலயம் தான் இங்கு இருப்பது.வேலூர், ராணிப்பேட்டை, ஆற்காடு, வாலாஜா என்று அருகில்
இருக்கும் பெரிய ஊர்களில் இருந்து பஸ் வசதி இருக்கிறது. இந்த ஊர்களில்
இருந்து அரை மணி நேர பயண நேரம் ஆகும். பத்து முதல் பதினைந்து கிலோ மீட்டர்
தூரம் இருக்கும்.

ஸ்தலப் பெருமைகள் நிறைய, அது எல்லாம் உண்மையோ, பொய்யோ - அது நமக்குத்
தெரியாதுங்க.... ஆனா, இங்கு அருள் பாலிக்கும் இறைவன் - (நாமம் வில்வநாதர் -
அம்மன் தனுமத்யம்பாள்) - இருவரும், ஹைலி , ஹைலி பவர்புல்.
இது இங்கு
அருகில் இருக்கும் வட்டார மக்களுக்கே, ஏன் இந்த கோவிலில் இருப்பவர்களுக்கே
கூட தெரியுமோ, தெரியாதோ....சந்தேகம் தான்.

ஆனால், கண் முன்னே , நிஜத்தை
பார்த்தபிறகு, இவரிடம் நம் கோரிக்கை நிச்சயம் நிறைவேறும் என்கிற நம்பிக்கை
நிறையவே இருக்கிறது.

மேலே சொன்ன இரண்டு சம்பவங்களும் நடந்த நிஜ சம்பவங்கள். படிக்கும்
உங்களுக்கு , நீங்களும் இங்கு ஒருமுறை வந்து பார்க்கவேண்டும் என்கிற
உணர்வைத் தூண்டவில்லையெனில், அது என்னுடைய எழுத்து வசீகரம் இன்மையே தவிர
வேறில்லை.

ஒரே ஒருமுறை, உங்கள் நீண்ட நெடுநாள் பிரச்னை தீர, நேரில் நீங்கள் வந்து
இவரிடம் பேசிப் பாருங்கள். எவ்வளவு சீக்கிரம் அந்த பிரச்னை தீர்கிறது
என்கிற அதிசயத்தை உணர்வீர்கள்... .... இது வெறும் கல்லால் ஆன லிங்கம்
இல்லை, சத்தியமா சாமி, இது... என்ன ஆச்சர்யம், எப்படி இவ்வளவு நாளா வெளி
உலகத்துக்கு தெரியலைன்னு ஆச்சர்யப்படுவீங்க...!

ஒரு தீபத்துக்கு கூட வழியில்லாமல் எத்தனையோ ஆலயங்கள் இருக்கின்றன. உங்களால்
முடிந்த அளவுக்கு அதைப் போன்ற ஆலயங்களை மெருகேற்ற, விளக்கு ஏற்ற உதவி
செய்யுங்கள். என் நண்பர் ஒருவர் அடிக்கடி கூறுவார். ஆலயங்களுக்கும் ஒரு
நேரம், காலம் இருக்கிறது போல. சில கோவில் எல்லாம் பத்து வருஷத்துக்கு
முன்னே, ஒண்ணுமே இல்லாம இருந்துச்சு. இப்போ பாரு, எவ்வளவு கூட்டம் என்று.

இந்த சிதிலமடைந்த கோவில்கள் எல்லாம், ஒரு காலத்தில் ஓகோவென்று இருந்து
இருக்க கூடும். இந்த ஆலயங்களை மெருகேற்ற, நாம் நமது பங்களிப்பை அளிக்க
இறைவன் நமக்கு ஒரு வாய்ப்பு அளிப்பதாக நினைத்து, இங்கு குறைந்தபட்சம்
விளக்கு ஏற்றவாவது உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள். விளக்கு ஒளி ஏற ஏற,
ஆலயமும் புத்துயிர் பெரும், நம் வாழ்விலும் ஒளி ஏறும்... இது நிச்சயம்...!
சிதிலமடைந்த ஒரு ஆலயம் பற்றி ஒரு தகவல் உங்களுக்கு வருகிறது என்றால்,
உங்களுக்கும் அந்த ஆலயத்திற்கும் எதோ நெருங்கிய முன் ஜென்ம தொடர்பு இருந்து இருக்க கூடும்.

அதை நீங்கள் நேர் செய்யும்போது,
நமது கர்மக் கணக்கு நேர்த்தியாகி, நாமும் நல்ல நிலை அடைய ஒரு அரிய
வாய்ப்பாகவும் அமையும்...!
தவறு செய்யாத மனிதனே இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக அவன் பாதம் சரணம்
அடையும்போது, மனதை உறுத்தும் தவறுகளை திரும்ப செய்வதில்லை என்ற உறுதி மொழி
எடுத்து, அதை இறுதி மூச்சு வரை கடைபிடியுங்கள்....! அவனன்றி ஒரு அணுவும்
அசைவதில்லை. இதை நீங்களே உணர்வீர்கள் வெகு விரைவில்...!

ஓம் சிவ சிவ ஓம்..!

எந்த ரூபத்தில் , எந்த ஊரில் இருந்தாலும் இறைவன் இறைவனே. இதைப் போலவே,
உங்கள் பகுதியில் உங்கள் அனுபவத்தில், நீங்கள் நிஜமாகவே
வியந்த ஆலய மகிமைகள் பற்றி, ஒரு நாலு வரி எழுதினீங்கன்னா, நாங்களும், நம்ம வாசர்களும்
தெரிஞ்சுக்கிடுவோம்...சரிங்களா? கூச்சப்படாம, தமிழிலோ, ஆங்கிலத்திலோ - எழுதி மெயில் / கமெண்ட்ஸ் இல் பதிவு செய்யவும்...

கம் ஆன்..! உங்கள் கருத்துக்களும், விமரிசனங்களும் வரவேற்க்கப்படுகின்றன...!

வாழ்க அறமுடன் ! வளர்க அருளுடன் !

Nearest Railway station : Katpadi ( From Katpadi local buses avaialble. approx 15 Kms)
From Ranipet, Vellore, Walajha, Arcot - Approx 15 kms distance.
From chennai direct buses available to Chittoor , which go via Tiruvalam (Approx : 130 Kms)
From Tiruvalam bus stand , Temple is just 50 metres walkable distance.





அவசியம் தரிசிக்க வேண்டிய அதி அற்புத ஆலயங்கள்  Thiruvalam1



அவசியம் தரிசிக்க வேண்டிய அதி அற்புத ஆலயங்கள்  Thiruvalam2



அவசியம் தரிசிக்க வேண்டிய அதி அற்புத ஆலயங்கள்  Thiruvalam4



அவசியம் தரிசிக்க வேண்டிய அதி அற்புத ஆலயங்கள்  Thiruvalam3



அவசியம் தரிசிக்க வேண்டிய அதி அற்புத ஆலயங்கள்  Thiruvalam5
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

அவசியம் தரிசிக்க வேண்டிய அதி அற்புத ஆலயங்கள்  Empty Re: அவசியம் தரிசிக்க வேண்டிய அதி அற்புத ஆலயங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum