HinduSamayam
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

HinduSamayam
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
HinduSamayam
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்
by vpoompalani March 24th 2016, 13:59

» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26

» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17

» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06

» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07

» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58

» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24

» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35

» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52

» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20

» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18

» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37

» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47

» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19

» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46

» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49

» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37

» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07

» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29

» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38

» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55

» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00

» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49

» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28

» திருத்தல யாத்திரை  ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51

» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33

» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46

» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28

» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13

» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29

» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15

» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10

» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29

» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54

» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38

» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42

» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32

» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01

» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20

» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00

தமிழர்களின் சிந்தனைகளம்
Related Posts Plugin for WordPress, Blogger...



திருமணத்தில் அரசாணிக்கால் நடுதல் ஏன் ?

Go down

திருமணத்தில் அரசாணிக்கால் நடுதல் ஏன் ? Empty திருமணத்தில் அரசாணிக்கால் நடுதல் ஏன் ?

Post by logu August 5th 2011, 19:41

திருமணத்தில் அரசாணிக்கால் நடுதல் ஏன் ?

திருமணத்தில் அரசாணிக்கால் நடுதல் ஏன் ? 2824014454_956ed7f071

அரச
மரத்தின் வேரில் பிரம்மதேவனும், அடியில் திருமாலும், நுனியில்
சிவமூர்த்தியும் இருக்கிறார்கள். அரசமரம் மும்மூர்த்தி ஸ்வரூபம். அதனால்,
சுமங்கலிகள் அரசமரத்தின் கிளையைப் பாலும் பன்னீரும் விட்டுப் பூசித்து
மும்மூர்த்திகளையும் அங்கு எழுந்தருளச் செய்கின்றார்கள்.

கும்பம்:
கங்கை
புனிதமானது. எல்லாவற்றையும் தூய்மை செய்வது தண்ணீர். ‘நீரின்றி அமையாது
உலகு’ என்பது பொய்யாமொழி. தண்ணீரால் பயிரும், உயிரும் தழைக்கின்றன.
ஆகையால், மணவறையில் கும்பத்தில் நீர் வைத்து வழிபட வேண்டும்.

ஓமம்:
அனைத்துக்கும்
அக்னியே சாட்சி. ‘நீயே உலகுக்கொரு காட்சி’ என்று சீதாதேவியார்
கூறுகின்றார். அக்னியால் உலகமும் உயிரும் வாழ்கின்றன. நம் உடம்பில் சூடு
இல்லையானால் உயிர் நிலைபெற மாட்டாது. இதனால் அக்னியை வழிபட வேண்டும்.
ஓமப்புகை ஆயுளையும் வளர்க்கும்.

நவகோள் வழிபாடு:
ஞாயிறு முதலிய
நவகோள்கள் இந்த உலகை இயக்குகின்றன. அதனால், நவகோள்களை வழிபட வேண்டும்.
மணமக்களுக்கு நவகோள்களின் நல்லருள் துணை செய்யும்.

தாலி:
பழங்காலத்தில்
அணிகலன்கள் செய்யும் நாகரிகம் இல்லாதிருந்தபோது ஒழுக்கம் மட்டும்
உயர்ந்திருந்தது. ‘தாலம்’ என்பது பனையோலையைக் குறிக்கும். அந்தப் பனையோலையை
ஒழுங்கு செய்து மஞ்சள் தடவி, அதில் பிள்ளையார் சுழியிட்டு ‘இன்னாருடைய
மகளை, இன்னாருடைய மகன் மணந்து கொண்டார். வாழ்க’

என்றெழுதி, அதைச்
சுருட்டி மஞ்சள் கயிற்றிலே கோர்த்து மணமகள் கழுத்திலே தரிப்பர். தால
ஓலையில் எழுதிக் கட்டியதனால் அதற்குத் தாலி என்ற பெயர் வந்தது. நாகரிகம்
வளர்ந்த பிறகு (பனையோலை தண்ணீர் பட்டு நைந்து போவதால்) தாலியைத்
தங்கத்தினால் செய்து தரித்துக் கொண்டனர். மனைவிக்கு மணவாளனே தெய்வமாதலின்
கணவருடைய இரு பாதங்கள் போல் திருமாங்கல்யத்தைச் செய்து மார்பில் தரித்துக்
கொண்டனர்.

பெண்களுக்குத் திருமாங்கல்யம் என்ற அந்த மங்கலநாண்
உயிரினும் சிறந்தது. பெண்கள் எந்த அணிகலன்களை நீக்கினாலும்,
திருமாங்கல்யத்தைக் கழற்றக் கூடாது. சீதா தேவியார் இராவணனால் கவரப்பட்ட
பொழுது, எல்லா அணிகலன்களையும் சுழற்றி எறிந்தனள். திருமாங்கல்யம் மட்டும்
அவள் கழுத்தில் அணி செய்து கொண்டிருந்தது.

அட்சதை:
திருமாங்கல்ய
தாரணம் முடிந்ததும் அட்சதை தெளிப்பார்கள். க்ஷதம் என்றால் குத்துவது என்று
பொருள்: அகரம் அண்மைப் பொருளைத் தெரிவிக்கிறது. அட்சதை என்றால் உலக்கையால்
குத்தப்படாதது என்று பொருள். குத்தப்படாத அரிசியில் முளைக்கும் ஆற்றல்
உள்ளது. திருமணத்துக்கு முன்பே நெல்லைப் பக்குவமாக உரித்து, முறையோடு அதில்
பன்னீர் தெளித்து, மஞ்சள்பொடி தூவி, அந்த அட்சதையை மணமக்கள் தலையிலே
இறைவனுடைய மந்திரங்களைச் சொல்லித் தெளித்தால் ஜீவகளையுண்டாகும்.

அம்மி மிதித்தல்:
மணமக்கள்
அக்னியை வலமாக வருகிறபோது வலப்பக்கத்திலே ஒரு கல் இருக்கும். மணமகளின்
பாதத்தை அந்தக் கல்லின் மீது வைக்குமாறு மணமகன் செய்வான். அதன் பொருள்
‘‘இந்தக் கல்லைப்போல் உறுதியாக இரு’’ என்பதாகும். தன்மேல் வைக்கும் பாரம்
அதிகமானால் இரும்பு வளையும். ஆனால், கல் வளையாது; பிளந்து போகும்.

மணமகளே!
கற்பில் நீ கல்லைப்போல் உறுதியாக இரு. அந்தக் கற்பில் கொஞ்சம் உறுதி
தளர்ந்த அகலிகையைக் கல்லாயிருக்கச் சொன்னார் கௌதமர். அதனாலேதான் ‘நீ
கல்லைப் போல் உறுதியாக இரு’ என்று, கணவன் கூறும் பாங்கில் மனைவியின் காலைப்
பற்றி அந்த அம்மிமேலே வைப்பது.

அம்மி மிதித்து அருந்ததியை வணங்குவார்கள். அருந்ததி = அ+ருந்ததி (கணவனின் சொல்லுக்குக் குறுக்கே நில்லாதவள் என்று பொருள்)

மணமகனுக்கு:

புதிய
வாழ்வில் அடியெடுத்து வைக்கும் புது மணமகனே, உன் வாழ்வு புனிதமாகவும்
புத்தமுதம் போலவும் இனிமையுடன் விளங்குவதாக. உன் மனைவியை அடிமைபோல் எண்ணி
அடக்கியாளக் கூடாது. மனைவி மலருக்கு நிகராவாள். அதனால் மலரிடம் பழகுவதுபோல்
மனைவியிடம் மெத்தென்று பழகவேண்டும்.

உன் மனைவி உன் வீட்டுக்கு வந்த
ராஜலட்சுமியாகும். அவள் திருமணமான அன்றே பெற்ற தாய்_தந்தையரையும், உடன்
பிறந்தாரையும், பழகிய வீட்டையும், எல்லாவற்றையும் துறந்து உன்னை நாடி
வந்திருக்கிறாள். சுருங்கச் சொன்னால், தன் பெயரையே துறந்து விடுகின்றாள்.
ஆதலால், மனைவியிடம் அன்பாகப் பழக வேண்டும். நீ வீட்டிற்கு வரும்பொழுது வன்
சொற்கள் என்றுமே பேசக் கூடாது. மனைவியின் அன்பைப் பெற வேண்டுமானால்,
மாமனார் மாமியாரை உயர்த்திப் பேச வேண்டும். பெண் உருவத்துடன் கூடிய
காலண்டரைக் கூட உற்றுப் பார்க்கக் கூடாது. மனைவியின் சுகதுக்கத்தில் நீ
பங்குபெற வேண்டும். மனைவியை நீ உன் உயிர்போல் நேசிக்க வேண்டும். மனைவி
ஏதாவது சிறுகுற்றம் செய்தால் அதனைப் புறங்காத்தல் அமைதிக்கும் அன்பு
பெருகவும் வசதி செய்யும்.

மணமகளுக்கு:

புதிய வாழ்வில்
அடியெடுத்து வைக்கும் புதுமணமகளே, உன் கணவனைத் தெய்வமாக எண்ணி இனிமை செய்ய
வேண்டும். எப்போதும் கணவனாரைப் பார்த்துச் சிரித்தமுகத்துடன் வரவேற்க
வேண்டும். கணவனார் வீட்டிற்குள் நுழையும்போது முகத்தை வாழைப்பூ மாதிரி
வைத்துக் கொள்ளக் கூடாது. சிரித்த முகமாக இருந்தால் அழகாக இருக்கும்.

மாமனார்,
மாமியார் மற்றும் உறவினர்கள் அனைவரிடமும் அன்பாக நடக்க வேண்டும்.
மாமன்_மாமியார்க்கு காலம் தவறாமல் உணவு அளிக்க வேண்டும். காலை மாலை, கை
கால் முகங்கழுவி நெற்றிக்குப் பொட்டு இட்டுக் கொண்டு மகாலட்சுமியைப் போல்
விளங்க வேண்டும். அடிக்கடி அக்கம்பக்கம் போய் ஊர்க்கதையை உழக்கில் அளக்கக்
கூடாது. இவள் நமக்கு மருமகளாக வந்தாளே என்று உள்ளம் குளிர நினைத்து
மாமியார் மெச்சிய மருமகளாக இருக்க வேண்டும். இந்த உத்தமி நமக்கு மனைவியாக
வந்தாளே என்று எண்ணுந்தோறும் கணவன் உள்ளம் உவக்குமாறு நடக்க வேண்டும்.
பெண்குலத்துக்குப் பெருமை தேடிக் கொடுக்க வேண்டும்.

பெண்களுக்கு இந்த ஆறு குணங்கள் இருந்தால் குடும்பம் மகிழ்ச்சியாகும்!

அன்னை தயையும்: தாய் எப்படிச் சேயிடம் கருணையுடன் இருப்பாளோ, அதைப் போலே கணவனிடம் அந்த மனைவி இருக்க வேண்டும்.

அடியாள் பணியும்: ஒரு வேலைக்காரி போல கணவனுக்குக் கைங்கர்யம் செய்ய வேண்டும்.

மலர்ப் பொன்னின் அழகும்: செந்தாமரையில் வீற்றிருக்கும் இலட்சுமியைப் போல, எப்போதும் அழகாக இருக்க வேண்டும்.

புவிப்பொறையும்: கணவனார் கொஞ்சம் கோபித்தாலும் பூமாதேவியைப் போல பொறுமையுடனிருக்க வேண்டும்.

வேசித்துயிலும்: இருமனப் பெண்டிர் எப்படி தன்னை நாடி வருபவர்க்கு அன்பு செய்வார்களோ, அப்படிக் கணவனிடத்தில் அன்பு காட்ட வேண்டும்.

விறல் மந்திரி மதியும்: கணவனாருக்கு அப்போதைக்கப்போது மந்திரியைப் போல, நல்ல ஆலோசனைகளைச் சொல்ல வேண்டும்.

வாரியார் எழுதிய ‘இல்லறம் இனிக்க’ புத்தகத்திலிருந்து..
logu
logu

Posts : 69
Join date : 01/08/2011

Back to top Go down

Back to top

- Similar topics
» திருமணத்தில் சொல்லப்படுகின்ற ஒரு மந்திரம்.
» திருமணத்தில் அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது ஏன்?
» திருமணத்தில் அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது ஏன்?
» திருமணத்தில் தடையா..! இந்த காதல் கடிதம் படியுங்க.. உங்கள் கல்யாண தேதி குறியுங்க!
» திருமணத்தில் ஜாதகப் பொருத்தம் பார்க்கும் போது கவனிக்க வேண்டிய அம்சங்கள் - ஜோதிட நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum