HinduSamayam
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

HinduSamayam
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
HinduSamayam
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்
by vpoompalani March 24th 2016, 13:59

» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26

» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17

» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06

» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07

» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58

» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24

» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35

» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52

» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20

» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18

» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37

» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47

» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19

» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46

» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49

» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37

» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07

» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29

» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38

» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55

» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00

» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49

» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28

» திருத்தல யாத்திரை  ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51

» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33

» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46

» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28

» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13

» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29

» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15

» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10

» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29

» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54

» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38

» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42

» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32

» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01

» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20

» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00

தமிழர்களின் சிந்தனைகளம்
Related Posts Plugin for WordPress, Blogger...



சபரிமலை - சில உண்மைகள்..!

Go down

சபரிமலை - சில உண்மைகள்..! Empty சபரிமலை - சில உண்மைகள்..!

Post by மாலதி February 3rd 2011, 20:39

சாஸ்தா
என்பது இறைநிலை அம்சங்களில் ஒன்று. 32 சாஸ்தாக்கள் உண்டு என்றும் இவை தவிர
ஆயிரமாயிரம் சாஸ்தாக்கள் இருக்கிறார்கள் என்றும் கூறுவார்கள். இவர்கள்
எதற்கு இத்தனை எண்ணிக்கையில் இருக்கிறார்கள் என கேள்வி எழும். இவர்களின்
முக்கிய பணி சனாதன தர்மத்தை காப்பது. அதனால் இவர்களுக்கு ‘தர்மசாஸ்தா’
என்று பெயர்.


சபரிமலை - சில உண்மைகள்..! BrahmaSastha
பிரம்ம சாஸ்தா என்ற சாஸ்தா நிலை.
பழனி கோவில் சுவர் ஓவியம்


சனாதன
தர்மம் என்றால் என்ன என்று மட்டும் என்னிடம் கேட்டுவிடாதீர்கள்..! என்
வாய் குறைந்தபட்சம் பல மணிநேரத்திற்கு மூடாமல் இதை பற்றி விளக்கும்.
எளிமையாக கூறவேண்டுமானால் அனைத்து உயிர்களையும் சமமாக பாவித்து அவை
இறைநிலைக்கு உயர்த்தும் பணி சனாதன தர்மம் விளக்கலாம். மீண்டும் கூறுகிறேன்
இதுவே முழுமையான விளக்கம் அல்ல சார்பு விளக்கம் மட்டுமே.


சனாதன
தர்மத்தை காப்பவர்கள் தர்ம சாஸ்தா என்றால் இப்பணியை அனேக ஆன்மீகவாதிகள்
செய்கிறார்களே அல்லவா? அப்படியானல் அவர்கள் எல்லாம் யார்? ஆன்மீக நிலை
கொண்டவர்களுக்கு ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு கலாச்சார நாகரீக மக்கள்
விதவிதமான பெயர் கொடுத்து வந்திருக்கிறார்கள்.


சிங்கத்தை
கேசரி, லயன் என எப்படி கூறினாலும் சிங்கம், சிங்கம் தானே? அது போல
யோகிகளுக்கு நாம் எப்படி பெயர் கொடுத்தாலும் யோக நிலையில் இருப்பவர்கள்
என்றும் யோகிகளே..! சித்தர்கள், ரிஷிகள் என பல்வேறு பெயர்களில் நம்
ஆன்மீகவாதிகளை அழைப்பது போல கேரள கரையோரம் யோகிகளுக்கு பெயர் சாஸ்தா.


பிறப்பு இறப்பு அற்ற நிலையில் என்றும் சாஸ்வதமாக இருப்பவன் சாஸ்தா..!


அப்படி யோக நிலையில் இருந்து என்றும் மனிதனின் ஆன்மீக உயர்வுக்கு வழிகாட்டுபவரே தர்மசாஸ்தா என்ற ஐயப்பன்.


சில நூற்றாண்டுகளுக்கு முன் சைவ வைணவ துவேஷங்கள் பெருகி இருந்தது. பெரிய புராணத்தில் இதன் சுவடுகள் அதிகம் இருந்ததை காணலாம். மதமாற்றம்
மற்றும் மத துவேஷம் அதிகம் இருந்த காலகட்டத்தில் மக்கள் ஆன்மீக
முன்னேற்றத்திற்கு முயற்சி செய்யாமல் தங்கள் மதம் உயர்ந்தது என்ற ஆணவ
போக்கில் இருந்தார்கள்.


அக்காலத்தில்
சைவ வைணவ துவேஷத்தை போக்கவும் அனைத்து மதங்களும் ஒன்றுதான் என்றும்
மனிதநேயமும் இறை பக்தியும் முக்கியமானது என்றும் கூறவே ஐயப்பன் என்ற யோகி
அவதரித்தார்...!


பாண்டிய
மன்னர்கள் சமண மதத்தை தழுவினார்கள் என்றும் பிறகு நாயன்மார்கள் அவர்களை
மீண்டும் சைவத்திற்கு கொண்டு வந்தார்கள் என்ற பெரிய புராணத்திற்கு ஏற்ப,
ஒரு பாண்டிய மன்னரின் வாரிசாக இருந்தவரே இந்த யோகி. தனது ஆன்மீக
உயர்நிலையால் குறைந்த வயதிலேயே அனைவரையும் தர்மத்தில் பாதையில்
செலுத்தினார்.


வடநாட்டில்
யோகிகளை ‘பாபா’ என அழைப்பார்கள். பாபா என்றால் தந்தை என அர்த்தம். இது நம்
ஊரிலும் அவ்வழக்கம் உண்டு. அய்யன், அப்பன் என தமிழ்நாட்டினரும்
கேரளநாட்டினரும் அந்த யோகியை அழைப்பதால் அவர் அய்யப்பன் ஆனார்..!


சித்தர்கள்,யோகிகள்
கொடூரமான விலங்குகளை தங்கள் வசமாக்கி அவற்றை சாதுவாக நடமாட விடுவார்கள்.
அது போல புலியை தன் வசமாக்கி வைத்திருந்தவர் ஐய்யப்பன். இது சித்தர்களுக்கு
சாதாரணமான விஷயம். இதற்கு பழனியில் இருந்த புலிப்பாணி சித்தர் ஒரு
உதாரணம்.






மேலே
உள்ள வீடியோவை பாருங்கள், தாய்லாந்தில் தற்சமயம் ஒரு ஐயப்பன் இருக்கிறார்.
எதிர்காலத்தில் அவருக்கும் நம் ஆட்கள் கதை சொல்லுவார்கள்..!


சபரி
என்றால் தூய்மையான பரிசுத்தமான என அர்த்தம். இராமாயண கதையில் வரும் சபரி
என்ற பாத்திரமும் பரிசுத்தமான பக்தியை வெளிப்படுத்துவதன் மூலம் இக்கருத்தை
உணரலாம். சபரி பீடம் என்ற பரிசுத்தமான இடத்தில் இருக்கும் யோகி தனது
அருளால் அனைவரையும் சனாதன தர்மத்தில் திளைக்க செய்தார். பரிசுத்தமான அம்மலை
சபரி மலை என அழைக்கப்படுகிறது. தன்னை சிவ,விஷ்ணுவின் குழந்தை என்று சொல்லி
ஜாதி துவேஷம் விலக்கியும், வாவரின் தோழன் என்று சொல்லி மத துவேஷம்
விலக்கியும் மக்களை அறியாமையிலிருந்து யோக வழிக்கு திருப்பினார்.


மக்கள்
துறவு என்பதன் அருமையை ஒரு ஷணமேனும் உணர வேண்டும் என்பதற்கு சில நியதிகளை
வகுத்தி அதன் படி அவர்கள் வந்தால் மட்டுமே தன்னை காண முடியும் என நிலையை
உருவாக்கினார். இதனால் மக்கள் சம்சாரத்தில் இருந்தாலும் ஆன்மீக உயர்நிலையை
உணர ஓர் வாய்ப்பு ஏற்பட்டது.


நாளாக
நாளாக இக்கருத்துக்களை உணராமல் மக்கள் தங்களுக்கு தோன்றிய விஷயங்களை
புகுத்தி சபரி மலை சபரி என்ற தூய தன்மையை இழந்துவருகிறது என்பது மறுக்க
முடியாத உண்மை.


என்ன
தான் சொல்லுங்கள் ஸ்வாமி.. சபரி மலைக்கு பெண்களை அனுமதிக்க மறுப்பது
பெரும் குற்றம் தான் என்கிறார்கள் பெண்ணீயவாதிகள். ஜாதி மத சமதர்மத்தை
போதித்த அய்யப்பன் பெண்களை வர விடாமல் தடுப்பாரா? இதில் ஏதோ காரணம்
இருக்குமே என தோன்றுகிறதா? யோசியுங்கள்.


Last edited by Admin on February 3rd 2011, 20:52; edited 1 time in total
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

சபரிமலை - சில உண்மைகள்..! Empty சபரிமலை - சில உண்மைகள்..!

Post by மாலதி February 3rd 2011, 20:45

சபரிமலை - சில உண்மைகள்..! Ayyappa
ஆன்மீகவாழ்க்கையில் இருப்பது சில நேரங்களில் அசெளகரியத்தை கொடுக்கும். அதில் ஒன்று மனிதர்களின் ஆழ்ந்த நம்பிக்கைக்கு பின் இருக்கும் உண்மை வெளிப்படுத்துவதாகும்.


உங்கள் நண்பர் வீட்டுக்கு வருகிறார். உங்களின் சிறு வயது மகள் விளையாடி கொண்டிருக்கிறாள். உங்கள் நண்பர் முன் உங்களின் குழந்தையை பற்றி பெருமையடிக்க ஆசைப்படுவீர்கள். “புஜ்ஜிமா, நீ பண்ணின பெயிண்டிங்கை அங்கிளுக்கு காமி” என்பீர்கள். உங்கள் குழந்தையும் விளையாட்டை விட்டுவிட்டு ஒரு காகிதத்தில் வரைந்த பெயிண்டிங்கை கொண்டு வருவாள்.


உங்கள் நண்பர் சும்மா இருப்பாரா? அவர் பங்குக்கு, “சோ..ச்வீட், அருமையா பெயிண்ட் பண்ணிருக்கே. இந்த கலர் எல்லாம் எப்படிடா பெயிண்ட் பண்ணினே?” என்பார். உங்கள் செல்ல மகள் அங்கிட்டும் இங்கிட்டும் பார்த்துவிட்டு, “அப்பாதான் பெயிண்ட் பண்ணினா.. எனக்கு தெரியாது” என உண்மையை போட்டு உடைக்கும். அப்பொழுது உங்கள் நண்பர் பார்க்கும் பார்வையை எப்படி சந்திப்பீர்கள் ?


அப்படிபட்ட நிலைதான் சபரிமலையை பற்றி என்னிடம் கேட்டால் நான் உணர்வேன்.




முதலில் ஒன்று தெரிந்து கொள்ளுங்கள். சபரிமலை தெய்வீகமான இடம். இறையாற்றல் பரிபூரணமாக நிறைந்த இடம். உங்கள் ஆன்மீக வாழ்க்கை உயர கண்டிப்பாக சபரிமலையும் அதன் கிரீடமாக இருக்கும் சபரி பீடமும் உதவும். இதில் எனக்கு ஒரு துளியும் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் சபரிமலையை பற்றி பலர் கூறும் அடிப்படை விஷயங்கள் முற்றிலும் தவறானது. இவற்றை விளக்குவதே எனது நோக்கம்.


முக்கியமாக சபரிமலை அமைந்தவிதம் குறித்த தல புராணம் முன்னுக்கு பின் முரணாக இருக்கிறது என்பதிலிருந்து துவங்குவோம்.


ஐயப்பன் பிறப்பு பற்றிய குறிப்பு முற்றிலும் தவறானது. மகாவிஷ்ணுவுக்கும், சிவனுக்கும் பிறந்த குழந்தை என்றும் காட்டில் கண்டெடுக்கப்பட்டார் என்றும் கூறுவார்கள். இக்கருத்து இந்த தலபுராணத்தை தவிர நம் கலாச்சாரத்தில் இருக்கும் எந்த பகுதியிலும் இல்லை. நம் நாட்டின் சிறப்பே புராணம் மற்றும் இதிகாசங்கள் அனைத்தும் காஷ்மீர் முதல் குமரி வரை ஒன்று போலவே இருக்கும்.


உதாரணமாக கந்த புராணத்தில் முருகனின் பிறப்பு விவரிக்கப்பட்டுள்ளது. முருகன் என்ற பெயருக்கு பதில் கார்த்திக் என்பார்களே ஒழிய கந்தனின் பிறப்பு பற்றிய கருத்து நம் நாட்டின் எந்த பகுதியிலும் ஒன்று போலவே இருக்கும். ஆனால் ஐய்யப்பனின் பிறப்பு பற்றிய கருத்து தென்னகத்தில் மட்டுமே உண்டு. வடநாட்டில் தற்சமயம் பிரபலம் சபரிமலை பெரும்பாலும் தெரியும். காரணம் நம்மவர்கள் ஐய்யப்பன் கோவிலை கட்டி இருக்கிறார்கள்.


காஷ்மீர் அல்லது அஸ்ஸாம் பகுதிக்கு சென்றால் அவர்கள் “ஐய்யோ அப்பா” என தனி தனியே சொல்லுவார்கள். அவர்களுக்கு சபரிமலையும் தெரியாது மஹாவிஷ்னுவுக்கும் சிவனுக்கும் பிறந்த குழந்தையும் தெரியாது.


இக்கதையை திரித்து ஓரின சேர்க்கைக்கு சாட்சி தேடும் மடையர் கூட்டமும் நம்மிடையே உண்டு.பால் கடல் கடையும் பொழுது மோகினி ரூபம் கொண்ட விஷ்ணுவுக்கும் சிவனுக்கும் பிறந்த மகன் எப்படி இஸ்லாமியரான வாவருடன் தொடர்பு கொண்டார்? இஸ்லாம் தோன்றி 1500 சொச்ச வருடங்கள் தானே ஆகிறது?


பால்கடல் கடைந்தது என்பது பல லட்சம் வருட கணக்கு அல்லவா வருகிறது? அப்படியே பல லட்சம் வருடம் இருந்ததாக கொண்டாலும் மணிகண்டன் என்ற நிலையில் 12 வருடம் தானே வாழ்ததாக தல புராணம் கூறுகிறது? பாண்டிய மன்னனுக்கு மகனாக வாழ்ந்தார் என்றால் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னேயே பாண்டிய மன்னர்கள் இருந்தார்களா?


இத்தனை கேள்விகளும் எழாமல் வருடா வருடம் சபரி மலை செல்லுபவர்களை என்ன செய்யலாம்?


சபரிமலையில் இருக்கும் இறை சக்தி உண்மையென்றால் அது எப்படி உருவானது? அதன் பின்னணி என்ன? கொஞ்சம் பொறுத்திருங்கள்.
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

சபரிமலை - சில உண்மைகள்..! Empty சபரிமலை - சில உண்மைகள்..! பகுதி 3

Post by மாலதி February 3rd 2011, 20:47

சில விஷயங்களை நாமாக துவங்கி பேச அசெளகரியமாக இருக்கும். ஆனால் யாராவது கேள்வியாக கேட்டால் அவர்களின் பெயரால் அவ்விஷயத்தை பேசுவோம். அப்படிப்பட்ட நிலையில் நான் சபரிமலையின் பெயரால் சில விஷயத்தை பேசப்போகிறேன்.


ஆன்மீகம் பெண்களை ஒதுக்குகிறது என பலருக்கு எண்ணம் உண்டு. முக்கியமாக பெண்களுக்கே இத்தகைய எண்ணம் அதிகமாக உண்டு. உண்மையில் இக்கருத்து முற்றிலும் தவறானது. மதங்கள் மாந்தர்களை ஒதுக்கிறது என்றால் நான் முற்றிலும் சரி என்பேன். மதம் என்பதையும் ஆன்மீகம் என்பதையும் பலர் போட்டு குழப்பிக்கொள்கிறார்கள். அதன் எதிரொலிப்பே இத்தகைய கருத்து.


பெண்ணின் கருப்பை மாதத்திற்கு ஒரு முறை தன்னை சக்தியூட்டிக் கொள்ளும் தாய்மை நிறைந்த செயலை இவர்கள் ‘மாதவிலக்கு’ என அழைக்கிறார்கள். இதற்கு மாத ஓய்வு என்று கூறுங்கள் ஏன் விலக்கு என முற்றிலும் விலக்க வேண்டும்? மதத்தை விலக்குங்கள் தவறில்லை, ஆனால் ஏன் மாத விலக்கு என பெண்களை விலக்குகிறீர்கள் என்பதே என் கேள்வி..!


உங்களுக்கு முடி வளர்கிறது, நகம் வளர்கிறது. சிறுநீர் கழிக்க வேண்டும் என உணர்கிறீர்கள் இத்தகைய காலத்தில் நீங்கள் ஆன்மீக வழிபாடு செய்வீர்களா? ஆம் என்றால் மாத ஓய்வு அன்றும் செய்யலாம். கோவிலுக்கு செல்லலாமா என கேட்காதீர்கள், கோவிலில் மட்டும் ஆன்மீகம் இல்லை. கோவிலில் மட்டும் இறைவனும் இல்லை.


சளி பிடித்திருக்கும் சமயம் நாசியில் கபம் ஒழுகினாலும் கைக்குட்டையுடன் இறைவனை நினைப்பது தவறென்றால் மாத ஓய்வில் பெண்கள் இறைப்பணியில் ஈடுபடுவதும் தவறே..!


யோக முறைகள் என்றும் ஆண் பெண் என எதையும் பிரித்து பார்ப்பது அல்ல. வேறுபாடு இல்லாமல் இணைந்திருப்பது என்பதே யோகம். சபரிமலைக்கு பெண்கள் ஏன் செல்லக்கூடாது என்பதில் பல முரண்பட்ட தகவல்கள் உண்டு. தற்சமய கேரள அரசும் கோர்ட்டில் பெண்கள் செல்ல அனுமதி வேண்டி வழக்கு தொடர்ந்துள்ளது. பெண்கள் சபரிமலைக்கு செல்லலாம் என்பதே உண்மை. ஆனால் கருப்பை செயல்படும் நிலையில் இருக்கும் பெண்களே அனுமதி மறுக்கப்படுகிறது.


சபரிமலை - சில உண்மைகள்..! 1744011-The-wait-is-over-0குழந்தை பருவ பெண்களும், வயது முதிர்ந்த பெண்களும் சபரி மலை செல்ல தடையேதும் இல்லை. இதன் காரணம் என்ன?


யோக சக்தி என்பது மனிதனின் உடலில் கீழ் இருந்து மேல்நோக்கி செயல்பட வேண்டும். மேலிருந்து கீழ் நோக்கி செயல்படக் கூடாது. பிறப்புறுப்பு பகுதியில் செயல்கள் இருக்கும் பொழுது ப்ராண சக்தியானது உடலில் கீழ் நோக்கி பயணிக்கும். இந்நிலையில் ஆன்மீக எழுச்சி ஏற்படாமல் மன சிதறல்கள் ஏற்பட்டு, இது போன்ற பாதிப்புகள் பிறருக்கும் பரவும். இதை தவிர்த்து தலைப்பகுதியில் செயல்கள் இருந்தால் ப்ராணன் மேல் நோக்கி பயணித்து ஆன்மீக உயர்வுக்கு வழிகாட்டும்.


கருமுட்டையை தயார்படுத்துதல், கருப்பையில் அதை நிலைப்படுத்துதல் மற்றும் கருமுட்டையை உடைத்து வெளியேற்றுதல் என பெண்களின் கருப்பை மாதம் முழுவதும் செயல்படும் ஒர் உறுப்பு. அப்படி கருப்பை செயல்படும் சமயம் அதீதமான இறைசக்தி உள்ள இடத்திற்கு சென்றால் (அபாணன்) கீழ் நோக்கி செயல்படும் ப்ராணன் திடீரென மேல்நோக்கி செயல் படத்துவங்கும். இதனால் கருப்பை தன் செயல்பாட்டை இழந்து கருமுட்டையை வெளிப்படுத்தும் தன்மையை விட்டு மலட்டுத்தன்மைக்கு செல்லும். கோவிலுக்கு சென்றால் வளர்ச்சி என்பது தான் நடக்க வேண்டுமே தவிர அழிவு நடக்கலாமா? கருப்பை செயல்படும் பெண்கள் அனேகர் இத்தகைய இடத்திற்கு சென்றால் நம் எதிர்கால சந்ததிகள் என்ன ஆவது?


இதனாலேயே நம் கோவில்களில் கூட சில இடங்களில் இளம் பெண்கள் அனுமதிப்பதில்லை. சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்படுவார்கள், கருப்பை செயல்படும் நிலையில் அல்ல என்பதை புரிந்துகொண்டீர்களா?


கேரளத்தில் மன்னார்சாலை என்ற பாம்பு கோவில் உண்டு. இங்கே பெண் தான் பூஜை செய்ய முடியும். மேலும் ஆண்களுக்கு அனைத்து பகுதியிலும் அனுமதி இல்லை. காரணம் அக்கோவில் அபாணா என்ற ப்ராணனுக்கானது. அதனால் பெண்களே தாய்மை என்ற உருவாக்கும் திறன் கொண்டவர்கள் என்பதால் இக்கோவிலின் உரிமை அவர்களிடமே உள்ளது. இப்படியாக ஒவ்வொரு கோவிலின் சக்திக்கு ஏற்பவே நடைமுறைகளும் ஏற்படுத்தப்படுகிறது. இதை விடுத்து எல்லோருக்கும் சம உரிமை வேண்டும் என உளருவது முட்டாள் தனம். பெண்கள் அழகு நிலையத்திற்கு சென்று ஒரு ஆண் எனக்கும் முடி திருத்துங்கள் என சம உரிமை கேட்பதற்கு சமம்.


இக்காரணத்தை தவிர காட்டில் மிருகம் இரத்த வாசனை உணர்ந்து வந்து தாக்கும் என்பதெல்லாம் ஏதோ ஒரு ராக்கெட் விஞ்ஞானி வெளியிட்ட புரளி என்பதை உணருங்கள். அந்தகாலத்திலிருந்தே பெண்கள் சபரிமலை சென்றதற்கான
சான்றுகள் உண்டு. இன்றும் கூட கருப்பை அறுவை சிகிச்சை நடந்துவிட்டது என்ற
சான்றிதழ் இருந்தால் இளம் பெண்கள் அனுமதிக்கப்படுவார்கள். அனைவரும்
புரியாமல் சென்று பாதிக்கப்பட கூடாது என்பதே இந்த கட்டுப்பாட்டின் நோக்கம்.


சபரி மலையில் உள்ள பதினெட்டு படிகள் ஆன்மீக சக்தி நிறைந்த பகுதி. முழுமையான ப்ராணன் கொண்ட பகுதி. அதனால் தான் அதற்கு பூஜைகள் நடத்தப்படுகிறது. வேறு எந்த கோவிலிலும் படிக்கட்டுகள் கட்டிடங்களுக்கு வருடா வருடம் பூஜை செய்யமாட்டார்கள். இருமுடி கட்டி தலையில் அழுத்தம் கொடுத்தவண்ணம் தலையில் ப்ராணன் செயல்படும் நிலையில் அந்த படிக்கட்டுகளை அணுகினால் முழுமையான சக்திமாற்றம் ஏற்படும். இதையே நியதியாக்கினார் அந்த யோகி. ஆனால் தற்சமயம் இது மூடப் பழக்கமாகிவிட்டது.


சபரிமலை என்றாலே ஐயப்பன் தான். இறைவனே அவர்தான் என நம்பும் இவர்களுக்கு ஒன்று புரிவதில்லை. இருமுடி கட்டாமல் கூட ஐயப்பனை தரிசனம் செய்யலாம். ஆனால் இருமுடிகட்டாமல் பதினெட்டாம் படியை தொட அனுமதியில்லை. ஐயப்பனைவிட அந்த படிகள் அவ்வளவு உயர்ந்ததா என யோசியுங்கள் நான் முன்பு சொன்ன வரிகள் புரியும்.


இவ்வாறு சபரிமலையில் பின்பற்றும் அனேக விஷயங்களில் நுட்மமான பின்புலம் உண்டு. இது புரியாமல் சபரிமலை பெண்களுக்கு எதிரானது, இது இந்து கோவில் என நம் ஆட்கள் அறியாமையை வளர்க்கிறார்கள்.


ஓகே சாமி இது புரிஞ்சுது.. அந்த மகர ஜோதி எப்படி சாமி?


அதுவா.. ஹி ஹி ஹி..
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

சபரிமலை - சில உண்மைகள்..! Empty சபரிமலை - சில உண்மைகள் பகுதி 4

Post by மாலதி February 3rd 2011, 20:48

சபரிமலை - சில உண்மைகள்..! MJothi
ஒரு
பேராசை பிடித்த மனிதன் இருந்தான். தனக்கு எல்லாமும் வேண்டும், அனைத்தும்
வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன். கடவுளை நோக்கி தவம் இருந்தால் அவர் நம்
முன் தோன்றி அனைத்தையும் வழங்குவார் என யாரோ சொன்னதை கேட்டு தவம் இருக்க
துவங்கினான். வருடங்கள் ஓடியது தன்னை சுற்றி புதர்களும் செடிகளும் மண்டி
புற்று வளரும் அளவுக்கு


கடுமையான தவம் இருந்தான். பத்து வருடங்கள் கழித்து கடவுள் அவன் முன் தோன்றினார்.


“உன் தவத்தை மெச்சினேன்.அப்பனே, கண்களை திற. உனக்கு என்ன வரம் வேண்டும் ? ” என்றார் கடவுள்.


“வரம்
எல்லாம் இருக்கட்டும் கடவுளே, முதலில் ஒரு சந்தேகத்திற்கு விளக்கம்
கொடுங்கள். நான் கடுமையாக தவம் இருந்தும் நீங்கள் வர இத்தனை காலம் ஆனதே இது
ஏன்?” என்றான் பேராசைக்காரன்.


“மானிடா,
பூலோகத்திற்கும் தேவ லோகத்திற்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள
வித்தியாசம் உண்டு. பூலோகத்தில் ஒரு கோடி என்பது எங்களுக்கு ஒரு ரூபாய்
போன்றது. பூலோகத்தில் உங்களுக்கு ஒரு வருடம் என்பது தேவ லோகத்தில் ஒரு நாள்
போன்றது. அப்படி பார்த்தால் நான் பத்து நாட்களில் உன் முன் தோன்றி
இருக்கிறேன் என்பதை உணர்ந்துகொள்..”


(பேராசைக்காரன் மனதில் கணக்கு போட்டான்) "ஓ அப்படியா? பூலோகத்தில் ஒரு கோடி என்பது உங்களுக்கு ஒரு ரூபாயா? ”


“கடவுளே என் மேல் கருணை செய்து தேவ லோக பணத்தில் ஒரு கோடி குடுத்து அருளவேண்டும்” என்றான்.


“ஒரு
கோடி தேவலோக பணம் தானே ...? தந்தேன். ஆனால் அது தேவலோகத்தின் பத்து வருடம்
கழித்து உனக்கு கிடைக்கும்..” என கூறி கடவுள் மறைந்தார்.


மேற்கண்ட
கதை பேராசை பெரு நஷ்டம் என்ற கருத்தில் சொல்லப்பட்டாலும், இதில் ஒரு உண்மை
புதைந்திருக்கிறது. நமக்கு ஒரு வருடம் என்பது சூரிய மண்டலத்திற்கு ஒரு
நாள் பூமியில் 24 மணி நேரம் ஒரு நாள் என நாம் கணக்கிடுகிறோம் அல்லவா? சூரிய
குடும்ப என்ற நம் சூரிய மண்டலத்திற்கு ஒரு நாள் என்பது பூமியானது சூரியனை
ஒரு முறை சுற்றிவருவதை குறிக்கும். அதாவது பூமி தன்னை தானே சுற்றினால்
நமக்கு ஒரு நாள்.


பூமி
சூரியனை ஒரு முறை சுற்றி வந்தால் சூரிய மண்டலத்திற்கு ஒரு நாள். இந்த ஒரு
நாள் நமக்கு ஒரு வருடம் தானே? வானவியல் (astronomy) இக்கருத்தை
ஒத்துக்கொள்கிறது. இதற்கு நட்சத்திர மணி அல்லது சைடீரியல் டைம் என
கூறுகிறார்கள்.


சூரிய
மண்டலம் என்பதையே நம் புராணங்கள் தேவ லோகம் என உருவகப்படுத்தி இருக்கிறது.
இதனால் அவர்களின் ஒரு நாள் நமக்கு ஒருவருடம் ஆகிறது. தேவர்களின் இந்த ஒரு
நாள் இரவு பகல் என இரண்டாக பிரிக்கலாம் அல்லவா? நமக்கு 12 மணி நேரம்
பிரிப்பதை போல இவர்களுக்கு 6 மாதம் பகல் , 6 மாதம் இரவு என கூறலாம்.
இத்தகைய தேவர்களின் இரவு பகல் என்பதையே உத்திராயணம், தட்ஷிணாயனம்
என்கிறோம்.


நம்
நாள் எப்படி சூரிய உதயத்திலிருந்து துவங்குகிறதோ அது போல உத்திராயணம் என்ற
தேவர்களின் பகல் சூரியன் குறிப்பிட்ட நிலைக்கு வருவதால் துவங்குகிறது.
ராசி மண்டலத்தில் 12 ராசிகள் இருப்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். அதில் 6
ராசிகள் பகல் வேளையும் 6 ராசிகள் இரவு வேளையும் குறிக்கும். பகல் வேளையை
குறிக்கும் ராசிகளில் முதலில் ஆரம்பிக்கும் ராசி மகர ராசியாகும்.


மகர
ராசியில் சூரியன் நுழைந்து உத்திராயண காலத்தை துவக்கும் வேளையை மகர ஜோதி
என்கிறார்கள். இது மகர ராசியில் ஜோதி சொரூபமாக இருக்கும் சூரியனை
குறிப்பதாகும். இதை தவிர்த்து காந்த மலை என்ற இடத்தில் தெரியும் ஜோதி ,
அதிசயம் அற்புதம் என நீங்கள் நினைத்தால் அது முற்றிலும் தவறு. மகர
சங்கிரமம், மகர ஜோதி என்பது சூரியனின் நிலையையும், உத்திராயண காலத்தையும்
குறிக்குமே தவிர மலையில் தெரியும் ஜோதியை அல்ல.


மலையில் தெரியும் ஜோதி இயற்கையாக தெரியும் விஷயம் அல்ல. மனிதர்களால் உருவாக்கப்படும் விஷயமே...!


பிரபஞ்சத்தில்
எந்த இடத்திலும் இறைவன் அதிசயத்தை நிகழ்த்தி தன்னை நிரூபணம் செய்ய வேண்டிய
அவசியம் இல்லை. தன்னை நிரூபித்தால் அது இறைவனும் அல்ல..!


திருவண்ணாமலையில்
ஏற்றப்படுவதை போல சபரிமலையிலும் தை மாதம் ஒன்றாம் தேதி (உத்திராயண
ஆரம்பம்) கோவில் நிர்வாக குழுவினரால் ஜோதி ஏற்றப்படுகிறது. இது எனது
கருத்து மட்டுமே. நீங்கள் இது இயற்கையாக இறைவனே ஜோதியாக வருகிறான் என
நினைத்தீர்கள் என்றால் நினைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு என்
வாழ்த்துக்கள்...!


திருப்பதி
அதிசயம், சமய புரம் அதிசயம் என வதந்தியை கிளப்பிவிடும் நபர்கள் தான் இது
போன்ற வதந்தியையும் துவக்கி இருக்க வேண்டும். ஆன்மீக யோகிகளின்
இருப்பிடத்தில் உங்களின் உள்ளே தான் அதிசயம் நடக்க வேண்டுமே தவிர வெளியே
அல்ல...!


திருவாபரண
பெட்டி வரும் சமயம் கருடன் வட்டமிடும் அது அதிசயம் அல்லவா? ஒரு பிரபல
தொலைகாட்சி நிகழ்ச்சியில் கூட ‘நிஜம்’ என காட்டினார்களே என கேட்டால்
உங்களுக்கு விளக்கும் அளவு என்னிடம் பதில் இல்லை. காரணம் மிருகங்களுக்கு
நம்மை விட சக்தி மிகு பகுதிகளை உணரும் நுட்பமான அறிவு உண்டு. மனிதன் தன்
மதி நுட்பத்தை இதில் உயர்த்தாத காரணத்தால் காண்பது எல்லாம் அதிசயம் என
நம்புகிறான்.


48
நாட்கள் முழுமையாக விரதம் இருந்து எளிமையாக வாழ்ந்து இறைவனை காண செல்லும்
பொழுது ஜோதி வெளியே தெரிய வேண்டுமா அல்லது உள்ளே தெரிய வேண்டுமா என நாம்
தான் முடிவு செய்ய வேண்டும்...!


சன்மார்க்க
சங்கத்தை நிறுவிய வள்ளலார் தன் உடலை மறைய செய்தார் என அதிசயப்படுவதை விட
அவர் உயர்த்திய அக்னி தினமும் பலருக்கு உணவை வழங்குகிறது என்பது அதிசயம்
அல்லவா? 150 வருடத்திற்கு முன் இட்ட அக்னி இன்றும் பலரின் வயிற்றில்
இருக்கும் அக்னியை அணைக்கிறது. அவர் ஏற்றிய விளக்கு இன்றும் ஞான ஒளியை
கொடுக்கிறது. இன்னும் சில


நூறு
வருடங்களில் இவரையும் கடவுளாக்கி சடங்குக்குள் அடைப்பார்கள் என்பதில்
எள்ளமுனை அளவும் சந்தேகம் இல்லை. ( தற்சமயமே இதன் சுவடுகள் தெரிகிறது..!)


யோகிகள்
இறைவனை தரிசித்தவர்கள். அவர்களை இறைவனாக்குவதை விட அவர்களை யோகியாகவே
வணங்கினால் நீங்களும் இறைவனை தரிசிக்க முடியும். அதை விடுத்து அவர்களை
இறைவனாக்கினால் நீங்கள் இருளில் சிக்க நேரிடும்.


நம்முள்
தூய்மை இல்லை என்றால் மட்டுமே இது போன்ற அதிசயங்களை நம்புவோம். சபரி
மலைக்கு செல்ல விரத முறைகள் வகுக்கப்பட்டுள்ளது. அம்முறைகளில் இருந்தாலே
அனைத்து விதமான தூய்மையும் ஏற்படும்.


ஆனால் தற்காலத்தில் எத்தனை பேர் முழுமையாக விரதம் இருக்கிறார்கள்? சாமிக்கு ‘தனி கிளாஸ்’ என்பது தானே தற்கால விரதம் இருக்கும் முறை?


வெகுவாக அழிந்துவரும் சபரிமலை விரத முறையை மீண்டும் ஒரு முறை விளக்கமாக கூறுகிறேன் கேளுங்கள்.
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

சபரிமலை - சில உண்மைகள்..! Empty சபரிமலை - சில உண்மைகள் பகுதி 5

Post by மாலதி February 3rd 2011, 20:48

நம்மிடையே
அனேகர் ஆன்மீகத்தை பின்பற்றுகிறேன் என தன்னை தானே ஏமாற்றிக்கொள்பவர்கள்.
போலி சாமியார்கள் என பத்திரிகைகளில் பலர் எழுதுகிறார் அல்லவா? ஆனால் போலி
பக்தர்கள் பற்றி யாரும் எழுதுவதில்லை. காரணம் பெரும்பான் மையானவர்கள் இத்தகையவர்களே. இவர்களை பற்றி சில கருத்துக்களை கூறினால் இவர்களை நீங்கள் அடையாளம் காண உதவும்.



கொல்லிமலைக்கு போயிருக்கேன், காளகஸ்திக்கு போயிருக்கேன், கைலாஷ் பார்த்தாச்சு என்பார்கள். சரி இத்தனை கோவில் போனையே அதனால் உனக்கு என்ன ஆன்மீக முன்னேற்றம் ஏற்பட்டது என கேட்டால் அவ்வளவு தான், திருஞான சம்பந்தரும் இப்படித்தான் கோவில் கோவிலா போனாரு என திருஞான சம்பந்தரை அசிங்கப்படுத்துவார்கள்.


தாங்கள் ஆன்மீகவாதி தான் என்றும் தான் கடினமாக ஆன்மீக பயிற்சிகளை செய்வதாகவும் நினைத்துக்கொள்வார்கள். இன்னும் எளிமையாக சொன்னால், “ஸ்வாமி உங்களை விட நான் கடினமாக முயற்சிக்கிறேன் இன்னும் ஏன் எனக்கு ஞானம் வரலை?” என கேட்பார்கள். இதில் உள்ள குயுக்தி என்னவென்றால் எனக்கே வரலையே உனக்கு எல்லாம் எங்க ஞானம் வந்திருக்கும் என்பதே பொருள்.


சில நேரங்களில் அவர்களின் கடுமையான ஆன்மீக பயிற்சி பற்றி பேசுவார்கள். கடந்த பத்து நாட்களாக கடுமையாக விரதம் இருக்கிறேன் என்பார்கள். ஓ அப்படியா, எப்படிப்பட்ட விரதம் என்றால், காலையில் 4 செவ்வாழையும் ஒரு டம்ளர் பால் மட்டும் தான். மதியம் இரவு மட்டும் தான் சாப்பாடு என்பார்கள். இது தான் அந்த கடினமான விரதம். அப்ப விரதம் இருக்கிறதா சொன்னீங்களே அது எப்போனு கேட்டால் இவர்களுக்கு கெட்ட கோவம் வரும் Smile


பிரதோஷ விரதம் இருக்கிறேன் பேர்வழி என காலை மதியம் சாப்பிட மாட்டார்கள். மாலை 6 மணிக்கு தரிசனம் முடிந்ததும் நேராக ஹோட்டலுக்குள் சென்றார்கள் என்றால் வேறுயாருக்கும் உணவு கிடைக்காது. இதன் பெயர் பிரதோஷ விரதமாம்.


இப்படி விரதம் என்பதே தெரியாமல் உண்மையான விரதத்திற்கு விரதம் இருப்பவர்கள் இவர்கள்..! இப்படிபட்ட ஆட்கள் தான் நம்மில் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் சபரிமலை விரதம் இருந்தால் எப்படி இருக்கும்?


ஐயப்பனுக்கு விரதம் இருப்பது என்பது பக்தி என்பதை கடந்து உங்களின் வாழ்க்கையின் அடிப்படையை மாற்றும் விரதமாகும். வாழ்க்கையில் ஒரு முறையேனும் அவ்விரதத்தை சரியான வழிமுறை அறிந்து பின்பற்றினால் நிச்சயம் உங்களின் வாழ்க்கை அமைப்பில் மாறுதல் இருக்கும்.


பலருக்கு இந்த விரத முறையின் அடிப்படை தெரியாமல் தாங்கள் வகுத்து கொண்டதே விரத முறை என இருக்கிறார்கள். தங்களுக்கு தேவையானது போல விரதத்தின் அடிப்படையை வளைத்துக் கொள்கிறார்கள். நாளடைவில் விரதங்களின் தன்மையும் அதனால் ஏற்படும் பயனும் நீர்த்துப்போய்விடுகிறது.


சாஸ்தா விரதத்தை பற்றி கூறுகிறேன் கேளுங்கள்.


விரதம் 48 நாட்கள் இருக்க வேண்டும். பலர் இதை 45 நாள் என நினைக்கிறார்கள். அப்படி அல்ல. 48 நாள் என்பதே ஒரு மண்டலம். மண்டலத்தின் துவக்கத்தில் மாலை அணிந்து, தினமும் அணியும் உடை களைந்து கருப்பு அல்லது நீல வண்ண உடை அணிந்து கொள்ள வேண்டும்.


சாஸ்தாவிற்கு விரதம் இருப்பது என்பது ஆண் பெண் இருபாலருக்கும் பொதுவானது. உடை, உணவு, பழக்க முறை என மூன்று தளங்களில் விரதம் அனுசரிக்கப்பட வேண்டும்.


உடை அணிதல் :


கருப்பு மற்றும் நீல வண்ணம் தனிமையை குறிக்கும். ஒதுங்கி இருத்தல் அல்லது உலக விவகாரங்களில் இருந்து தனித்து இருத்தல் என்பதை சுட்டிக்காட்டுகிறது. மேலும் சனி என்ற கிரகம் சாஸ்தாவை குறிப்பதால் அக்கிரகத்தின் நிறமும், செயலும் சாஸ்தாவின் தன்மையை ஒத்து இருக்கிறது.


உடை தளர்வான உடையாக இருக்க வேண்டும். இரண்டு அல்லது மூன்று ஜோடி வேட்டிகள் போதுமானது. ஒன்று இடுப்பிலும், மற்றது உடலிலும் போர்த்தி இருக்க வேண்டும். மற்றவை அடுத்த முறை பயன்படுத்த வைத்திருக்க வேண்டும். சட்டை, பனியன் போன்ற தைத்த உடைகள் அணியக்கூடாது. உடை விஷயம் விரதகாலத்திலும், சபரிமலைக்கு செல்லும் பொழுதும் பின்பற்ற வேண்டும்.


பலர் தாங்கள் பணியாற்றும் இடத்தில் உடை கட்டுப்பாடு உண்டு அதனால் சின்ன துண்டை மட்டும் கழுத்தை சுற்றி போட்டுக்கொள்கிறோம் என்கிறார்கள். இது தான் விரதத்தின் விதிகளை வளைப்பது என்கிறேன்.


உங்களுக்கு உண்மையிலேயே பக்தி இருந்தால் இப்படி செய்ய மாட்டீர்கள். உடை என்பது உங்களின் ஆன்மீக பயிற்சிக்கு தடையானால் ஆன்மீக பயிற்சிக்கு தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமே தவிர உங்களின் சுயநலத்திற்கு அல்ல.


ராணுவம் துவங்கி மென்பொருள் துறை வரை பலர் சபரிமலைக்கு விரதம் இருக்கும் பொழுது உடை விஷயத்தில் இப்படி நடந்துகொள்கிறார்கள். ஆனால் ராணுவம் முதல் மென்பொருள் துறைவரை இருக்கும் பிற மத சகோதரர்கள் இப்படி இருக்கிறார்களா என பார்க்க வேண்டும். ஒரு சீக்கியரை உன் முடியை கத்தரித்துவிட்டு பணிக்கு வா என்றால் அவர் என்ன முடிவு எடுப்பார்? நம்மை போல முடியை மழித்துவிட்டு, அவர்கள் சொல்லும் உடையில் சென்று வேலை செய்வாரா என யோசிக்க வேண்டும்.


வாழ்நாள் முழுவதும் சீக்கியர் அப்படி இருக்க போகிறார். இதை உங்களின் கம்பெனி அனுமதிக்கிறது என்றால் இரண்டு மாதம் மட்டும் உங்களை அனுமதிக்காதா? இது யாரின் தவறு?


விரதத்தை கடைபிடிக்க சுகந்திரம் இல்லாத நீங்கள் அப்படி ஏன் விரதம் இருக்க வேண்டும்? என் கணவரும் கச்சேரிக்கு போனார் என்ற கதையாக நானும் சபரிமலை விரதம் இருந்தேன் என்பது உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்வது தானே?


உணவு முறை :


காலை 11 மணி மற்றும் மாலை 7 மணிக்கு என இரண்டு வேளைகள் உணவு உண்ண வேண்டும். உணவு எளிய உணவாகவும், குறைந்த அளவும் உண்ண வேண்டும். ஒவ்வொரு முறை உணவு உண்ணுவதற்கு முன்னும் குளித்து துவைத்த ஆடை உடுத்த வேண்டும்.


நாம் உண்ணும் உணவு இறைவனுக்கு நைவேத்தியம் செய்த உணவாக இருக்க வேண்டும்.


வாழை இலை அல்லது நமக்கு என ஒரு தட்டு வைத்து அதில் மட்டுமே உண்ண வேண்டும். சாப்பாடு மேஜை பயன்படுத்தாமல் நிலத்தில் பாய் அல்லது சிறிய துணி விரித்து அமர்ந்து உண்ண வேண்டும்.

விரத காலத்தில் குறைந்த பட்சம் ஐந்து முறையாவது அன்னதானமோ, பிட்ஷை எடுத்தோ உணவு உண்டு இருக்க வேண்டும். வீட்டில் மட்டும் உண்ணும் உணவு விரதத்திற்கு பயன்படாது.


காலை
அல்லது இரவு ஏதேனும் ஒரு வேளை மட்டும் பழங்கள் அல்லது பச்சை காய்கறிகள்
உண்ணுவது நல்லது. சாஸ்த்தாவிற்கு அவல்,வெல்லம் மற்றும் பழம் நைவத்தியம்
செய்துவிட்டு அதை மட்டும் உண்ணலாம்.


உணவுமுறை
விரதம் இருப்பது நம் உண்ணும் உணவில் மட்டுமல்ல, பிறருக்கு உணவு
வழங்குவதிலும் இருக்கிறது. நம் விரத காலத்தில் நம்மால் முடிந்த அளவு
அன்னதானம் செய்வதும், அன்னதானம் செய்பவர்களுக்கு கைங்கரியம் செய்வதும்
நல்லது.


பழக்க வழக்கங்களில் விரதம் கடைபிடிப்பது என்பது என்ன என பார்ப்போம்..


(சரணம் தொடரும்)
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

சபரிமலை - சில உண்மைகள்..! Empty சபரிமலை - சில உண்மைகள் பகுதி 6

Post by மாலதி February 3rd 2011, 20:49

உடை மற்றும் உணவு மூலம் இருக்கும் விரதம் உங்களின் உடல் என்னும் தளத்தில் வேலை செய்யும் என்றால் பழக்க சூழலில் இருக்கும் விரதம் மனம் என்ற தளத்தில் வேலை செய்யும்.


உடலும் மனமும் தூய்மை ஏற்பட்டால் எப்பொழுதும் சுய தூய்மையுடன் விளங்கும் ஆன்மாவை காண முடியும் என்பதே இதன் அடிப்படை. பழக்கங்கள் என நான் இங்கே கூறுவது வாழ்வியல் முறைகளைத்தான்.


எப்படி விரதகாலத்தில் நடந்துகொள்வது என்பது மிக முக்கியம். சாஸ்தா விரதங்களில் கடைபிடிக்க வேண்டிய முக்கிய பழக்கங்களை கீழே குறிப்பிடுகிறேன்.


தினமும் இரண்டு வேளை கட்டாயம் குளிக்க வேண்டும். உணவு அருந்தும் முன் குளித்திருப்பது அவசியம். காலை 4 முதல் 5 க்குள் அல்லது மாலை 5 முதல் 6க்குள் குளிக்க வேண்டும்.


சோப் போன்ற கெமிக்கல் வஸ்துக்களை பயன்படுத்தாமல் மண் அல்லது காய்ந்த பசும் சாணத்தை பயன்படுத்த வேண்டும். எண்ணெய் மற்றும் ஷாம்புக்கள் கேசங்களில் பயன்படுத்தக்கூடாது.


கண்ணாடியில் முகம் பார்க்க கூடாது. சந்தனம் குங்குமம் வைப்பது உங்களின் விருப்பம்.


செருப்பு மற்றும் காலணிகள் கட்டாயம் கூடாது. இரவு 9 முதல் காலை 4 மணி வரைக்குமே தூங்குவதற்கான நேரம். படுக்கை மற்றும் தலையணை பயன்படுத்தாமல், ஒரு துணியை மட்டுமே விரித்து அதில் தலையணையில்லாமல் படுக்க வேண்டும். மிகவும் குளிர் பிரதேசங்களில் இருப்பவர்கள் கெட்டியான கம்பளியை விரிப்பாக பயன்படுத்தலாம். ஆனால் மெத்தையை முற்றிலும் தவிர்க்க வேண்டிய ஒன்று. இடுப்பில் கட்டிய வேஷ்டி போக உடலில் போர்த்திய வேஷ்டியை தூங்கும் பொழுது போர்வையாக பயன்படுத்தலாம். உங்களின் கைகளை விட வேறு நல்ல தலையணை தேவையா?


புகைப்பழக்கம் உள்ளவர்கள் தற்காலத்தில் விரதம் இருக்கும் பொழுது புகைப்பிடிப்பதை பார்க்கிறோம். கேவலமாக விரதம் இருப்பவர்களுக்கு இவர்களை விட உதாரணம் சொல்ல முடியாது. தங்களிடம் உள்ள சின்ன பழக்கத்தை விட முடியாத அளவுக்கு மிகவும் தரம் குறைந்த வைராக்கியம் கொண்டவர்கள்.


ஒரு மதபோதகரிடம் ஒரு இளைஞர் கேட்டான், “ஐயா புகைபிடிப்பது தவறா?”
போதகர் சொன்னார், “மிகவும் கொடிய பாவம். புகைப்பிடிப்பவன் நரகம் அடைவான்”
மற்றொரு இளைஞர் போதகரிடம் கேட்டான், “ஐயா நான் தொடர்ந்து புகைப்பிடிப்பவன், புகைப்பிடிக்கும் பொழுது எல்லாம் இறைவனை தொடர்ந்து நினைக்கிறேன். இது சரியா?”
போதகர் சொன்னார், “இறைவனை நினைக்கும் எந்த காரியமும் தவறில்லை”


இப்படிபட்ட பக்தர்களும் அவர்களை வழிநடத்துபவர்களும் கொண்ட உலகம் இது. போதகருக்கு இறைவனை நினைக்க வைக்க வேண்டும் என்பதே குறிக்கோள். இளைஞனுக்கோ புகைப்பிடித்தல். இருவரும் ஒரு புள்ளியில் தங்களின் சுயநலத்தை இணைக்கிறார்கள். உங்களின் புத்திசாலித்தனத்தால் நீங்கள் விரத்தத்தை உங்களின் சுகபோகத்திற்கு தக்க வளைக்கலாம், அதனால் நீங்கள் பெறப்போவது எதுவும் இல்லை. இழப்பது தான் அதிகம்.



விரத காலத்தில் ஆண்டவன் என்ற பெரிய இலக்கை அடைய தங்களின் சின்ன விஷயங்களை விட தயாராகாதவர்கள், வாழ்க்கையில் பெரிய இலக்கை சின்ன சுக போகத்தால் நழுவ விடுவார்கள் என்பது நிச்சயம்...!


இப்படி விரதகாலத்தை பற்றி கூறுகிறீர்களே இது எந்த புத்தகத்தில் இருக்கிறது? இதை யார் வரையறுத்தது என நீங்கள் கேட்கலாம்.


இந்த வழிமுறை துறவு என்ற நிலையின் அடிப்படை. ஆத்மாஸ்ரமம் என்ற துறவு நிலையே விரதமாக சபரிமலை விரதத்தில் கடைபிடிக்கப்படுகிறது. இம்முறை மிக உயர்ந்த யோக வாழ்க்கையின் துறவு நிலை.


நாம் இனிப்பு கடைக்கு சென்று அங்கே விற்கும் இனிப்புகளை வாங்கலாமா இல்லையா என குழப்பம் வரும் சமயம் கடைக்காரர் ஒரு பீஸ் இனிப்பை நமக்கு தருவார். அதன் சுவை நன்றாக இருந்தால் அதை வாங்குவோம் அல்லது விட்டு விடுவோம் அல்லவா?


அதுபோல நம் கலாச்சாரத்தில் துறவு என்பது கட்டாயமாக்கப்படவில்லை. இரண்டு மாதம் அப்ரண்டிஸ்ஸாக இருந்துபார். இது பிடித்திருக்கிறதா என்றால் இதையே வாழ்க்கையாக்கிக்கொள் என்கிறது சபரிமலை சாஸ்தா விரதம்.


அப்ரண்டிஸ்ஸாக இருக்கும் காலத்திலேயே தன்னையும் பிறரையும் ஏமாற்றுபவர் முழுமையான வாழ்க்கையாக தேர்ந்தெடுத்தால் என்ன செய்வார் என புரிகிறதா? இதற்கு ஆக சிறந்த உதாரணம் சமீப செய்தியான விடியோனந்தாவை கூறலாம்.


பலர் இந்த தொடரை படித்துவிட்டு சபரிமலை யோகியின் இருப்பிடம் என்று எப்படி சொல்லுகிறீர்கள்? அங்கே பல சன்னதிகளும், சடங்குகளும் நடைபெறுகிறதே என கேட்கிறார்கள்.


68 வருடங்களுக்கு முன்னால் சபரிமலை எப்படி இருந்தது என்ற புகைப்படம் இணையத்தில் காணக் கிடைக்கிறது பாருங்கள். திருவாங்கூர் ராஜா தான் சபரிமலைக்கு செல்லும் பொழுது 1948ஆம் ஆண்டு எடுத்த புகைப்படம் இது.


சபரிமலை - சில உண்மைகள்..! Sabarimala


சபரிமலை கோவிலின் அளவை பாருங்கள். தற்சமயம் இருப்பது பிற்காலத்தில் உருவாக்கப்பட்டவை என்பது புரியும். மிக எளிய, தனிமை நிறைந்த ஏகாந்தமான இடமாக இருந்திருக்கிறது சபரிமலை.


தற்சமயம்
நிலையை இப்படத்துடன் ஒப்பிட்டால் மனம் கலங்குகிறது. இச்சூழலை திரும்ப
அனுபவிப்பதற்காக விஞ்ஞானிகள் கால இயந்திரத்தை கண்டறிந்தால் மகிழ்வேன்.
கோவிலை சுற்றி இருக்கும் மரங்களையும் அதன் வளர்ச்சியையும் பாருங்கள்.
என்னவென்று சொல்ல?


கட்டுகட்டுவது என்றால் என்ன?


சிலர் அன்னதானத்தை ஒரு கட்டுகட்டிவிட்டு செல்லுவார்கள் அதை சொல்லவில்லை. Smile)


சபரிமலைக்கு கட்டு கட்டி செல்லுகிறார்களே இது ஏன்?
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

சபரிமலை - சில உண்மைகள்..! Empty சபரிமலை - சில உண்மைகள் பகுதி 7

Post by மாலதி February 3rd 2011, 20:56

சபரிமலை விரதம் இருப்பது துறவு நிலையின் சின்ன சேம்பிள் என்றேன் அல்லவா? அப்படிப்பட்ட துறவு நிலையை பலர் புரிந்து கொண்ட விதம் மிக தவறாக உள்ளது.


துறவின் அடிப்படையே எளிமை. குறைவான பொருட்களை தன்னிடம் வைத்திருப்பது. அதிக பணம் மற்றும் பணம் மூலம் கிடைக்கும் சுகபோகங்களை விடுவது என்பது மிக அவசியம்.


ஆனால் நடைமுறையில் சபரிமலை செல்லும் அனேகரிடம் எளிமை கிலோ என்ன விலை என கேட்க வேண்டி இருக்கிறது. சபரிமலைக்கு செல்லும் வாகனம் துவங்கி அவர்களின் உணவு முறை வரை அனைத்திலும் ஆடம்பரம். உடை கூட மூன்றுக்கு மேல் இருக்க கூடாது என விரதம் இருப்பதே சாஸ்தா விரதம்.


ஆனால் கட்டுநிறை என்ற பெயரில் அவர்களின் ஆடம்பர திருவிழா எங்கும் நடைபெறுகிறது. அது போக அன்னதானம் என்ற பெயரில் எளிய உணவு அளிக்காமல், ஏதோ நட்சத்திர ஹோட்டலின் மெனுவை போட்டு தாங்கள் பெரிய ஆடம்பர பிரியர்கள் என்ற ஆணவத்தையும் காட்டுகிறார்கள்.


உண்மையில் கட்டுகட்டி செல்லும் பொழுது அதில் தேங்காய்களும் அதில் நெய் நிறைத்து எடுத்து செல்லுவது போன்ற நிகழ்வுகள் எதற்காக?


சபரிமலை கட்டுகட்டி செல்லுவதில் எடுத்து செல்லும் அனேக பொருட்கள் உலர் பழ வகையை சார்ந்தது. சபரி மலை முன்பு மிகவும் காடு சார்ந்த இடமாக இருப்பதால் சபரிமலைக்கு செல்லுபவர்கள் எத்தனை நாட்கள் காடுகளில் இருந்தாலும் உணவு தேவையை சமாளிக்கவே உலர் பழவகைகளை( Dry Fruits) கட்டுகட்டும் பொழுது அதில் இணைக்கிறார்கள்.



காடு அல்லது மலைப்பயணத்தில் செல்லும் பொழுது உலர் பழவகைகளை எடுத்து சென்றால் எடை குறைவாகவும் அதே நேரம் அதிக நாட்கள் வைத்து உண்ணக்கூடிய வகையிலும் அமையும்.நெய், தேன் ஆகியவை மிகவும் முக்கிய பொருளாக ஆயுர்வேத மருத்துவத்திலும், பூஜை பொருட்களிலும் இருப்பதற்கு காரணம், இப்பொருட்கள் எத்தனை நாட்கள் ஆனாலும் கெட்டுப்போகாது.


அரிசி, தேங்காய், உலர் பழங்கள், நெல் பொரி,நெய் மற்றும் தேன் ஆகியவை பள்ளிக்கட்டில் சேர்ப்பதற்கு காட்டுவழி பயண முறைகளே காரணம். நாம் நடுவழியில் மாட்டிக்கொண்டாலும் இப்பொருட்களை உண்டு பலநாட்கள் தாக்குப்பிடிக்க முடியும். மேலும் இவற்றை தூக்கி பல கிலோமீட்டர் நடப்பதில் சிரமமும் இருக்காது.


இவ்விஷயங்கள் அனைத்தும் பெருவழி பயணம் செல்லுபவர்களுக்கே பொருந்தும். பம்பை வரை வாகனத்தில் சென்று அங்கே இட்லி தோசை சாப்பிட்டு உடல் வளையாமல் 4 கிலோமீட்டர் பயணம் செய்பவர்களுக்கு எதற்கு உலர் பழங்கள்?


4 கிலோமீட்டரில் காட்டில் தொலைந்தாலும் அங்கே ஏகப்பட்ட கடைகள் உணவு வழங்குவதற்கு இருக்கிறதே? இன்னும் ஏன் முட்டாள்தனமாக கட்டு கட்டுகிறேன் என அனைத்தையும் தூக்கிக்கொண்டு செல்லுவது? எத்தனை பொருட்களை கொண்டு சென்றாலும் சபரிமலையில் நெய்யை மட்டுமே அபிஷேகப்பொருள் எனும் பொழுது நாம் ஏன் அனைத்தையும் சுமந்து கொண்டு செல்ல வேண்டும்?


சபரி பீடம் எனும் சாஸ்தா கோவில் இருக்கும் இடம் வரை மசால் தோசை கிடைக்க இவர்கள் இன்னும் கட்டுக்கட்டி செல்லுவதை பார்த்தால் எத்தனை முட்டாள் தனமாக இவர்கள் செல்லுகிறார்கள் என்பதை உணரலாம். கேரளாவில் இருந்து சபரிமலை வருபவர்கள் சின்ன துண்டில் ஒரு தேங்காயை முடிந்துகொண்டு வருவதை சபரிமலை சென்றவர்கள் பார்த்திருக்கலாம். மிக எளிமையாக வருவார்கள். ஆனால் தமிழகம் மற்றும் பிற ஊரிலிருந்து வரும் ஆட்கள் ஒரு சின்ன தேங்காய் மண்டியை தலையில் சுமந்து வருவார்கள்.


அரைக்கிலோ அல்லது ஒரு கிலோ நெய்யை ஒரு இருமுடி துணியில் கட்டி எடுத்து சென்று அபிஷேகம் செய்து வருவது சரியான புத்திசாலி பக்தனுக்கு அழகு.


இவர்கள் செய்யும் செயல் எப்படி இருக்கிறது என்றால் வேற்றுகிரகத்திற்கு செல்லும் பொழுது ஆக்ஸிஜன் சிலிண்டரை கட்டிக்கொண்டு விண்வெளி வீரர்கள் செல்லுகிறார்கள், அந்த கிரகத்தில் பூமியை போல ஆக்ஸிஜன் இருப்பது கண்டு பிடிக்கப்பட்ட பிறகும் சிலிண்டரை கட்டிக்கொண்டு செல்லலாமா? நாம் கொஞ்சம் சிந்திக்க வேண்டும்.


நெய் அபிஷேக ப்ரியன் என சாஸ்தாவை கூற காரணம் என்ன? நெய் என்பது முக்தி என்ற நிலையை குறிக்கிறது. பால் என்ற நிலையில் இருந்து தயிராகி, வெண்ணை என்ற நிலை அடைந்து நெருப்பால் உருக்கப்பட்டு நெய் என்ற நிலையை அடைந்த பிறகு மாற்றம் அடையாமல் நிலைத்திருப்பது நெய்யின் குணம்.


பால் போன்ற பக்தன் தன்னை பக்தியால் செம்மையாக்கி நெய் என்ற முக்தி நிலைக்கு உயர்த்த வேண்டும். அப்பொழுது பிறவாநிலையை அடையலாம் என்ற உயர் தத்துவத்தை சபரிமலை பள்ளிக்கட்டு உணர்த்துகிறது.


இக்கருத்தை உணர்ந்து நெய் கொண்டு அபிஷேகம் செய்பவர்கள் விரைவில் தாங்களே முக்தி எனும் நெய்யாகிவிடுவார்கள் அன்றோ?


அது எல்லாம் சரி... சபரிமலை இந்த இருக்கு இதற்கு செல்ல குருசாமி அவசியமா? அது என்ன குருசாமி? மாலை போட்டவர்களை எல்லாம் சாமி சாமி என சொல்ல வேண்டும் என கட்டளை வேறு..


நேற்று வரை பொய் சொல்லி கெடுதல் செய்து திரிந்துகொண்டு இருந்தவன் எல்லாம் இன்று மாலை போட்ட காரணத்தால் அவனை சாமி என கூப்பிட வேண்டுமா? என்ன கொடுமை இது?


(சரணம் தொடரும்
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

சபரிமலை - சில உண்மைகள்..! Empty Re: சபரிமலை - சில உண்மைகள்..!

Post by மாலதி February 3rd 2011, 20:57


சபரிமலை -சில உண்மைகள் - பகுதி 8




காக்கைச் சிறகினிலே நந்த லாலா! - நின்றன்
கரியநிறம் தோன்று தையே, நந்த லாலா!


பார்க்கும் மரங்கள் எல்லாம் நந்த லாலா! - நின்றன்
பச்சை நிறம் தோன்று தையே, நந்த லாலா!


கேட்கும் ஒலியில் எல்லாம் நந்த லாலா! - நின்றன்
கீதம் இசைக்குதடா, நந்த லாலா!


தீக்குள் விரலை வைத்தால் நந்த லாலா! - நின்னைத்
தீண்டும் இன்பம் தோன்றுதடா, நந்த லாலா!


- மஹாகவி சுப்ரமணிய பாரதி


மேற்கண்ட பாடலுக்கு தமிழ் இலக்கியத்தில் பல்வேறு விளக்கம் கொடுக்கப்பட்டாலும், பக்தி ரீதியாக உணர வேண்டுமாயின் இவ்வாறு விளக்கலாம்.


கிருஷ்ணரின் கருமை நிறம் தன்னுள் நிறைந்திருப்பதால் காக்கையை பார்க்கும் பொழுது எல்லாம் கிருஷ்ணரின் கருமை நிறம் உணர்ந்திருக்கிறார் பாரதியார். மரங்களை பார்க்கும் பொழுதெல்லாம் ராமனின் பச்சை திருமேனி அவருக்கு தெரிகிறது. கேட்கும் ஒலியெல்லாம் கிருஷ்ணரின் குழலிசையாகவும், சூரிய வம்சத்தில் தோன்றிய ராமன் அக்னி ரூபமாக இருப்பதால் தீயை தீண்டும்பொழுது எல்லாம் ஸ்ரீராமனை தீண்டியது போல இருக்கிறது என்கிறார்.


கிருஷ்ண பக்தியும் ராம பக்தியும் மேலோங்கும் பொழுது பார்க்கும் கேட்கும் விஷயங்கள் எல்லாம் இறை ரூபமாகவே பாரதியாருக்கு இருந்ததை போல சபரிமலை விரதம் இருந்து பக்திமயத்தில் இருப்பவர்கள் தம்மையும் தம்மை சுற்றி உள்ள உயிரையும் இறைவனாக பாவிக்க துவங்குவார்கள். கவனியுங்கள் பாவிக்க துவங்குவார்கள், பாவிக்க வேண்டும் என்ற கட்டாயம் எல்லாம் இல்லை. இந்த பாவனை இயற்கையாக வரவேண்டுமே தவிர கட்டாயத்தில் வரக்கூடாது.


சபரிமலை விரதம் இருப்பவரகள் தம்மையும், பிறரையும் ‘ஸ்வாமி’ என அழைக்கவேண்டும். பிறர் தன்னை ஸ்வாமி என அழைப்பதை எதிர்பார்க்க கூடாது. அனைத்திலும் இறைநிலை உணர அனைத்தையும் இறைவனாக அழைக்கும் பொழுது நம்முள் பக்தியும், ஆன்மீக உயர்வும் ஏற்படும். சபரிமலைக்கு மாலை அணிந்தவர்கள் பிறரை ஸ்வாமி என அழைப்பதால் நாளடைவில் பிறரும் அவர்களை ஸ்வாமி என அழைக்கிறார்கள்.


உண்மையில் சபரிமலைக்கு மாலை போட்டிருப்பவரை நீங்கள் ஸ்வாமி என அழைக்க வேண்டும் என்பதில்லை. விரதம் இருப்பவர் தான் அனைவரையும் ஸ்வாமி என அழைக்க வேண்டும்..!


தற்சமயத்தில் சபரிமலைக்கு மாலைபோட்டவுன் தன் சகோதரர்களே தன்னை ஸ்வாமி என அழைக்கவில்லை என கோபித்துக்கொள்பவர்கள் பலர் இருக்கிறார்கள். துறவு நிலையில் இருப்பவர்கள் தன்னை அடையாளம் காணாமல் இருக்க செய்யும் முக்கிய யுக்தி தன் பெயரையும் உடல் அடையாளத்தையும் மறைப்பது. அதில் ஒன்றுதான் துறவு பெற்றவர்கள் பெயரை மாற்றம் செய்கிறார்கள். அதன் அடிப்படையிலேயே சபரிமலை செல்பவர்கள் தங்களை ஸ்வாமி என அழைத்துக்கொள்வதும் பிறரை அவ்வாறு அழைப்பதும் என்பதை உணர வேண்டும்.


மேற்கண்ட வரிகளில் ஒன்றை கவனித்தால் ஒன்று புரிந்திருப்பீர்கள். சாமி என்று அழைப்பார்கள் என கூறவில்லை. ஸ்வாமி என்பார்கள் என்கிறேன். ஸ்வாமி என உச்சரிக்கும் பொழுது உங்களின் சுவாசத்தில் சில ஏற்றத்தாழ்வுகள் உணரலாம். உங்களின் வாயின் அடிப்பகுதியில் இருந்து இந்த சப்தம் எழும். ஆனால் சாமி என்றீர்கள் ஆனால் உங்கள் உதட்டளவில் மட்டுமே இந்த சப்தம் வரும்.


சபரிமலை செல்லும் சிலர் பிறரை கூப்பிடும் செயலில் கொடுமையை பார்த்தீர்களானால் புரியும்.. “சாமீ...சாமீ...சமே..” என அவர்கள் கூப்பிடும் பொழுது நம் பாக்கெட்டில் சில்லரை தேட தோன்றும்..!


சபரிமலை விரதம் என்பது துறவின் ஒரு துளி என்பதால் துறவு என்பதை ஏற்க குரு என்பவர் அவசியம். சுயமாக துறவு என்பதை ஏற்றால் வெகுநாளுக்கு தாக்கு பிடிக்காது. மனம் கூறும் வழிகளை எல்லாம் பின்பற்ற தோன்றும். குரு இருந்தால் அவர் வகுத்த பாதையில் அடையாளங்களை தொலைத்து உயிருடன் பிணமாக வாழ்வதே துறவு. அத்தகைய துறவை சபரிமலை விரதம் என்ற பெயரில் குறைந்த காலத்திற்கு கடைப்பிடிக்கும் பொழுது குரு அவசியம்.


அதனாலேயே குரு ஸ்வாமி ஒருவர் நமக்கு மாலை அணிவித்து - அவரே விரதகாலத்தில் வழி நடத்தி - இருமுடியும் கட்ட வைத்து - சபரிமலைக்கு அழைத்து செல்ல வேண்டும் என நியதி வகுத்தார்கள். இன்று பலர் குரு ஸ்வாமியின் உதவியின்றியே தானாக செல்லுகிறார்கள். இங்கே சபரிமலை சன்னிதானத்திற்கு பம்பை நதியிலிருந்து கையை பிடித்து கூட்டி செல்ல வேண்டும் என்ற அர்த்தத்தில் வழி நடத்த என சொல்லவில்லை. ஆன்மீக விஷயங்களை பற்றி கூறியும், சபரி சாஸ்தாவின் மேன்மையை பற்றி கூறியும் நம் சபரிமலை பயணத்தை ஆன்மீகமாக மாற்றும் குருஸ்வாமி அவசியம்.


சித்தர்கள் எத்தனை பேர் என்றால் பதினெட்டு என்பார்கள். உண்மையில் பதினென் சித்தர்கள் என்பது 18 நபர்களை குறிப்பதில்லை. சித்தர்கள் எண்ணிக்கையில்லாமல் அனேகர் இருக்கிறார்கள். பதினெட்டு என்பது சித்தர்களின் சித்த நிலையை குறிக்கும். நம் ஐம்பொறிகளையும், அதன் செயல்களையும் இணைத்தால் பத்து. அவற்றை கடந்தால் அஷ்டமா சித்தி கிடைக்கும் என்பதையே 18 என்ற எண்ணிக்கை காண்பிக்கிறது.



யோக சித்திகள் என்பதே சபரிமலையில் 18 படிகளாக இருக்கிறது. இத்தொடரில் முன்பு குறிப்பிட்டது போல பதினெட்டாம் படியை கடக்க விரதம் இருந்து இருமுடியுடன் செல்ல வேண்டும். ஆனால் இறைவனை காண இருமுடி தேவை இல்லை. இக்கருத்தை தெளிவாக புரிந்துகொள்ளுங்கள். உங்களுக்கு யோக சித்தி வேண்டுமானால் அதற்கு கடுமையான விரதம் மற்றும் பயிற்சிகள் அவசியம்.


ஆனால் இறைவனை அடைய பக்தி மட்டுமே போதுமானது. யோகசித்தியுடன் இறைவனை அடைவது மிகவும் உன்னதமானது. இந்த அற்புத கருத்தை கூறிப்பிடுவது தான் சபரிபீடம் என்னும் ஆன்மீக ஸ்தலத்தின் நோக்கம்.


எந்த காலத்திலும் ஆன்மீக ஆற்றல் என்ற சிகரம் குறையாமல் இருந்துகொண்டே இருக்கும். ஆனால் அதை அடைய மனிதன் தன் அறியாமையால் வேறு பாதைகளுக்கு செல்வதால் சிகரத்தை அடைய முடியாமல் வீணாகிறார்கள். சபரிமலையும் தன்னகத்தே ஆற்றலை கொண்டிருந்தாலும், தங்களின் அறியாமையாலும், சோம்பேறித்தனத்தாலும் மற்றும் ஒழுக்கமின்மையாலும் ஆற்றலை பெறமுடியாமல் எத்தனையோ பேர் வீணாகிறார்கள்.



இத்தனை நாள் உங்களிடம் சில உண்மைகளை பகிர்ந்து கொண்டேன். இக்கருத்தை உங்களின் விழிப்புணர்வில் வைத்து உண்மையை அறியுங்கள். பிறகு நீங்கள் சபரிமலை செல்லும் பொழுதும் உங்களின் நண்பர்கள் செல்லும் பொழுதும் இக்கருத்தை விளக்கி பயன்பெறுங்கள்.


சபரிமலையில் எத்தனையோ விஷயங்கள் பகிர்ந்துகொள்ள இருந்தாலும் முக்கியமாக சில விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். யோக சாஸ்தாவின் அருள்மழை அனைவரின் மேலும் பொழியட்டும்.
தாங்க்ஸ்:http://vediceye.blogspot.

ஸ்வாமியே சரணம்
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

சபரிமலை - சில உண்மைகள்..! Empty Re: சபரிமலை - சில உண்மைகள்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum