HinduSamayam
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

HinduSamayam
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
HinduSamayam
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்
by vpoompalani March 24th 2016, 13:59

» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26

» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17

» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06

» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07

» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58

» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24

» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35

» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52

» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20

» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18

» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37

» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47

» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19

» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46

» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49

» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37

» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07

» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29

» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38

» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55

» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00

» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49

» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28

» திருத்தல யாத்திரை  ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51

» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33

» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46

» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28

» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13

» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29

» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15

» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10

» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29

» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54

» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38

» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42

» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32

» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01

» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20

» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00

தமிழர்களின் சிந்தனைகளம்
Related Posts Plugin for WordPress, Blogger...



லிங்கம் விளக்கம்:

Go down

லிங்கம் விளக்கம்:  Empty லிங்கம் விளக்கம்:

Post by மாலதி March 10th 2013, 07:48

மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்புலன்களும் இல்லாதது.

லிங்கம் விளக்கம்:  Annama10 மனம்,சொல்,செயல் இவற்றிற்க்கு மேல் வேறொரு உயர்வான நிலை இல்லை எனுமளவிற்கு உயர்ந்தது.

உருவமற்றது.

ஆகவே இன்னதென நம்மால் சுட்டிக்காட்ட இயலாதது.
அதுவே அனைத்துமானது,
பற்பல குணாதிசயங்களைக் கொண்டது.
நிறமில்லாதது,
அழிவென்பதே இல்லாதது,
ஈரேழு உலகங்களும் தோன்ற அழிய காரணமாயிருப்பது,
இதுதான் எனக் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய நிலையை நமக்கு கொடுக்காதது.

இத்தகைய நம் அனைவரையும் இயக்க வைக்கும் சக்தியை நாம் பரமசிவம் என்றால் எல்லோரும் அறிந்தது என பொருள் படும்.

மேற்சொன்னவாறு ஐம்புலனில்லாத எட்டாத நிலையைக் கொண்ட,
இதற்கு மேல் வேறொரு உயர்ந்த நிலையினை சுட்டிக்காட்ட முடியாத,
உலகம் தோன்ற அழிய காரணமான
இதனை உருவம் உள்ளது அதாவது 'சகளம்' என்றும்,
உருவமற்றது அதாவது 'நிட்களம்' என்றும் பிரிக்கலாம்.

மேற்ச்சொன்ன சகலநிட்கள நிலையையே நாம் லிங்கம் என்போம்.

லிங்கம் சிவரூபம் அதாவது மேலேயுள்ளது.

அது பொருந்தியிருக்கும் பீடம் சக்தி வடிவமாகும்.
பொதுவாக லிங்கத்தை ஞான சக்தியின் மறுவடிவமாக கொள்ளலாம்.
இத்தகைய ஞான சக்தியின் மறுவடிவமான லிங்க உருவமே சிவபெருமானின் உடலாகும்.

லிங்கம் மூவகைப்படும் .
அவ்வியக்தம், வியக்தம், வியக்தாவியக்கம்.
இதில் கை, முகம் வெளிப்படாமல் இருப்பது அவ்வியக்தம், வெளிப்படுவது வியக்தம்.
அருவுருவத் திருமேனியுடையது வியக்தாவியக்தம். சிவலிங்கத்தின் உருண்டையாக இருக்கும் பகுதி ருத்ரபாகம் என்றழைக்கப்படும்.

பீடத்தின் கீழாக உள்ள நான்கு மூலையும் பிரம்மபாகம்.
பீடத்தில் லிங்கம் பொருந்தியுள்ள எட்டு மூலையும் திருமால்பாகம்.
ருத்ரபாகம் ஆணாகவும்,
திருமால்பாகம் பெண்ணாகவும்
பிரமபாகம் பேடு எனவும் குறிக்கப்படும்.

கன்ம சாதாக்கியம் என்பதற்கேற்ப
லிங்கத்தின் நடுவே சதாசிவனும்,
மேற்கே ஈசனும்,
வடக்கே பிரம்மனும்,
தெற்கே திருமாலும்,
கிழக்கே ஈசனும் அமைந்திருக்கின்றனர்.
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

லிங்கம் விளக்கம்:  Empty Re: லிங்கம் விளக்கம்:

Post by மாலதி March 10th 2013, 07:50

லிங்கம் விளக்கம்:  390588_10150645174028835_950731136_n
ஓம் நமஸ்தே அஸ்து பகவன்
விஸ்வேஸ்வராய,
மஹாதேவாய,
த்ரயம்பகாய,
த்ரிபுராந்தகாய,
த்ரிகாலாக்கினி காலாய
காலாக்னிருத்ராய,
நீலகண்டாய,
ம்ருத்யுஞ்ஜயாய,
ஸர்வேஸ்வராய,
ஸதாசிவாய,
ஸ்ரீமன்,
மஹாதேவாய நம!

ஓம் நமோ பகவதே ஸதாசிவாய, ஸகல தத்வாத் மகாய, ஸர்வமந்த்ர - ஸ்வரூபாய,
ஸர்வயந்த்ரா திஷ்டிதாய, ஸர்வதந்த்ர - ஸ்வரூபாய, ஸர்வதத் வவிதுராய ப்ரஹ்ம -
ருத்ராவதாரிணே, நீலகண்டாய, பார்வதீ - மனோஹராய, ஸோம ஸூர்யாக்னி, லோசனாய,
பஸ்மோத்தூளித - விக்ரஹாய, மஹா மணிமகுட தாரணாய, மாணிக்ய - பூஷணாய, ஸ்ருஷ்டி
ஸ்திதிப்ரளயகால - ரௌத்ராவதாராய, தக்ஷõரத்வம்ஸகாய, மஹாகாலபேதனாய, மூலாதாரைக
நிலயாய, தத்வா தீதாய, கங்காதராய, ஸர்வதேவாதி தேவாய, க்ஷடாச்ராய, வேதாந்த -
ஸாராய, த்ரிவர்க்க ஸாதனாய, அனந்தகோடி - ப்ரஹ்மாண்ட - நாயகாய, அனந்தவாஸுகி,
தக்ஷக- கர்க்கோடக - மஹா நாக - குலபூஷணாய, ப்ரணவஸ்ரூபாய, சிதாகாசாய,
ஆகாசதிக் ஸ்வரூபாய, க்ரஹ - நக்ஷத்ரமாலினே, ஸகலாய, களங்க -ரஹிதாய.

ஓம் நமோ பகவதே சதாசிவாய

ஸகலலோகைக-கர்த்ரே, ஸகலலோகைக-பர்த்ரே, ஸகலலோகைக- ஸம்ஹர்த்ரே,
ஸகலலோகைக-குரவே, ஸகலலோகைக-ஸாக்ஷிணே, ஸகலநிகம குஹயாய, ஸகலவேதாந்த பாரகாய,
ஸகலலோகைக- வரப்ரதாய, ஸகலலோகைக- சங்கராய, ஸகலஜகத் பயங்கராய,
ஸகலதுரிதார்த்திபஞ்ஜனாய, சசாங்க சேகராய, சாஸ்வதிநிஜாவாஸாய, நிராகாராய,
நிராபாஸாய, நிராமயாய, நிர்மலாய, நிர்மதாய, நிச்சிந்தாய, நிரஹங்காராய,
நிரங்குசாய, நிஷ்கலங்காய, நிர்குணாய, நிஷ்காமாய, நிருபப்லவாய, நிரவத்யாய,
நிஷ்ப்ரபஞ்சாய, நிஸ்ஸங்காய, நிர்த்வந்த்வாய, நிராதராய, நிஷ்க்ரோதாய,
நிர்லோபாய, நிஷ்கரியாய, நிஸ்துலாய, நிஸ்ஸம்ச்யாய, நிரஞ்சனாய,
நிருபம-விபவாய, நித்ய-சுத்த-புத்த-பரிபூர்ண ஸச்சிதானந் தாத்வயாய,
பரமசாந்தஸ்வ-ரூபாய, தேஜோ ரூபாய, தேஜோமயாய, தேஜோதிபதயே.

ஓம் நமோ பகவதே சதாசிவாய

ஜயஜயருத்ர, மஹாரௌத்ர, பத்ராவதார, மஹாபைரவ, காலபைரவ, கல்பாந்தபைரவ, கபாலமாலாதர, கட்வாங்க-கட்க-சர்ம-பாசாங்குச-டமரு,
த்ரிசூல-சாப-பாண சக்ராத்யாயுத-பீஷணகர-ஸஹஸ்ரமுக, தம்ஷ்ட்ராகராலவதன,
விகடாட்டஹாஸ - விஸ்வபாரித-ப்ரஹ்மாண்ட- மண்டல, நாகேந்த்ர-குண்டல,
நாகேந்த்ரவலய, நாகேந்த்ரசர்மதர,ம்ருத்யுஞ்ஜய, த்ர்யம்பக, த்ரிபுராந்தக
விச்வரூப, விரூபாக்ஷ, விச்வேச்வர, வ்ருஷபவாஹன, விச்வதோமுக, ஸர்வதோமாம் ரக்ஷ
ரக்ஷ, ம்ருத்யுஞ்ஜய த்ர்யம்பக, ஸதாசிவ நமஸ்தே நமஸ்தே.
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

லிங்கம் விளக்கம்:  Empty Re: லிங்கம் விளக்கம்:

Post by மாலதி March 10th 2013, 08:00

திருவும் மெய்ப்பொருளும் செல்வமும் எனக்கு உன் சீர் உடைக் கழல்கள் என்று எண்ணி
ஒருவரை மதியாது உறாமைகள் செய்தும்ஊடியும் உறைப்பனாய்த் திரிவேன்
முருகு அமர் சோலை சூழ் திருமுல்லைவாயிலாய் வாயினால் உன்னைப்
பரவிடும் அடியேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே.

2. கூடிய இலயம் சதி பிழையாமைக்கொடியிடை உமையவள் காண
ஆடிய அழகா அருமறைப் பொருளே அங்கணா எங்கு உற்றாய் என்று
தேடிய வானோர் சேர் திருமுல்லை வாயிலாய் திருப்புகழ் விருப்பால்
பாடிய அடியேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே.

3. விண் பணிந்து ஏத்தும் வேதியா மாதர் வெருவிட வேழம் அன்று உரித்தாய்
செண்பகச் சோலை சூழ் திருமுல்லை வாயிலாய் தேவர்தம் அரசே
தண்பொழில் ஒற்றி மாநகர் உடையாய் சங்கிலிக்கா என் கண் கொண்ட
பண்ப நின் அடியேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே.

4. பொன் நலங் கழனிப் புது விரை மருவிப்பொறிவரி வண்டி இசை பாட
அந்நலங் கமலத் தவிசின்மேல் உறங்கும்அலவன் வந்து உலவிட அள்ளல்
செந்நெல் அங்கழனி சூழ் திருமுல்லைவாயிலாய் திருப்புகழ் விருப்பால்
பன்னலந் தமிழால் பாடுவேற்கு அருளாய்பாசுபதா பரஞ்சுடரே.

5. சந்தன வேருங் கார் அகில்குறடுந்தண் மயிற்பீலியுங் கரியின்
தந்தமுந் தரளக் குவைகளும் பவளக்
கொடிகளுஞ் சுமந்து கொண்டு உந்திவந்து இழி பாலி வடகரை முல்லை
வாயிலாய் மாசிலா மணியேபந்தனை கெடுத்து என் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே.

6. மற்று நான் பெற்றதார் பெறவல்லார்வள்ளலே கள்ளமே பேசிக்
குற்றமே செயினுங் குணம் எனக் கொள்ளுங் கொள்கையால் மிகைபல செய்தேன்
செற்று மீது ஓடுந் திரிபுரம் எரித்த திருமுல்லை வாயிலாய் அடியேன்
பற்றிலேன் உற்ற படு துயர் களையாய்பாசுபதா பரஞ்சுடரே.

7. மணிகெழு செவ்வாய் வெண்நகைக் கரிய வார்குழல் மா மயில்சாயல்
அணிகெழு கொங்கை அங்கயற் கண்ணார் அருநடம் ஆடல் அறாத
திணிபொழில் தழுவு திருமுல்லைவாயில்செல்வனே எல்லியும் பகலும்
பணியது செய்வேன் படு துயர் களையாய்பாசுபதா பரஞ்சுடரே.

8. நம்பனே அன்று வெண்ணெய்நல்லூரில் நாயினேன் தன்னை ஆட்கொண்ட
சம்புவே உம்பரார் தொழுது ஏத்துந்தடங்கடல் நஞ்சு உண்ட கண்டா
செம்பொன் மாளிகை சூழ் திருமுல்லைவாயில்தேடியான் திரிதர்வேன் கண்ட
பைம்பொனே அடியேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே.

9. மட்டு உலாம் மலர்கொண்டு அடியிணை வணங்கும் மாணி தன்மேல் மதியாதே
கட்டுவான் வந்த காலனை மாளக் காலினால் ஆருயிர் செகுத்த
சிட்டனே செல்வத் திருமுல்லைவாயில் செல்வனே செழுமறை பகர்ந்த
பட்டனே அடியேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே.

10. சொல்லரும் புகழான் தொண்டைமான் களிற்றைச்சூழ்கொடி முல்லையாற் கட்டிட்டு
எல்லையில் இன்பம் அவன் பெற வெளிப்பட்டுஅருளிய இறைவனே என்றும்
நல்லவர் பரவுந் திருமுல்லைவாயில்நாதனே நரைவிடை ஏறீ
பல்கலைப் பொருளே படு துயர் களையாய்பாசுபதா பரஞ்சுடரே.

11. விரை தரு மலர்மேல் அயனொடு மாலும்வெருவிட நீண்ட எம்மானைத்
திரை தரு புனல்சூழ் திருமுல்லைவாயில்செல்வனை நாவல் ஆரூரன்
உரைதரு மாலை ஓர் அஞ்சினோடு அஞ்சும்உள் குளிர்ந்து ஏத்த வல்லார்கள்
நரைதிரை மூப்பும் நடலையும் இன்றிநண்ணுவர் விண்ணவர்க்கு அரசே.
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

லிங்கம் விளக்கம்:  Empty Re: லிங்கம் விளக்கம்:

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum