HinduSamayam
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

HinduSamayam
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
HinduSamayam
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்
by vpoompalani March 24th 2016, 13:59

» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26

» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17

» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06

» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07

» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58

» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24

» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35

» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52

» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20

» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18

» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37

» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47

» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19

» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46

» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49

» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37

» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07

» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29

» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38

» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55

» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00

» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49

» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28

» திருத்தல யாத்திரை  ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51

» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33

» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46

» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28

» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13

» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29

» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15

» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10

» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29

» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54

» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38

» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42

» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32

» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01

» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20

» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00

தமிழர்களின் சிந்தனைகளம்
Related Posts Plugin for WordPress, Blogger...



நவக்கிரக பரிகார திருத்தலங்கள்

Go down

 நவக்கிரக பரிகார திருத்தலங்கள்  Empty நவக்கிரக பரிகார திருத்தலங்கள்

Post by மாலதி January 15th 2013, 07:31

திருமங்கலக்குடி

 நவக்கிரக பரிகார திருத்தலங்கள்  T_500_518

 நவக்கிரக பரிகார திருத்தலங்கள்  Thirumankalakudi+Header
நவக்கிரக வழிபாட்டில் முதலில் வணங்கப்பட வேண்டிய
தலம் " திருமங்கலக்குடி ". இத் தலம் சூரியனார் கோவில் அருகில்
அமைந்துள்ளது. மூலாவராக " பிராணவரதேஸ்வரரும்". அம்பாளாக " மங்கள நாயகியும் "
அருள் புரியும் இத் திருத் தலம், மங்கலக்குடி, மங்கல விநாயகர், மங்கல
நாதர், மங்கல் நாயகி, மங்கல தீர்த்தம் என " பஞ்ச மங்கல ஷேத்ரமாக"
வழிபடப்படுகிறது.. திருநாவுக்கரசராலும், திருஞானசம்பந்தராலும் பாடப் பெற்ற
புண்ணிய பூமி இது."மங்கலக்குடி ஆளும் ஆதிபிரான் அடிகள் அடைந்து ஏத்தவே கோளும் நாளவை போயலும் குற்றமிலார்கலே"எனப் புகழ்ந்துள்ளார் திருஞானசம்பந்தர் ஒரு
சமயம் இமயமலை சாரலில் தவம் செய்து கொண்டிருந்தார் "காலவர் " என்ற மகா
முனிவர் ஒருவர். முக்காலமும் அறிந்தவர். அவரிடம் வந்த துறவி ஒருவர் தன்னை
பற்றிய வருங்காலத்தை தெரிவிக்குமாறு கேட்டார். அத்ற்கு காலவரோ " துறவியே,
எனது ஞானதிருஷ்டியால் அறிந்து கொண்ட உமது வருங்காலம் பற்றி கூற ஒன்றும்
இல்லை" எனக் கூறினார். அதற்கு துறவியோ " முனிவரே அனைவரது வருங்காலம் பற்றி
கூறும் உமது எதிர்காலம் பற்றி உமக்கு ஏதும் தெரியுமா" என வினவ. காலவர் "
நீர் யார் ? " எனக் கேட்டார். துறவி " நான் தான் கால தேவன் " எனக் கூறி
மறைந்தார். காலவ முனிவரும் தன் வருங்காலம் எப்படி இருக்கும் என தனது
ஞானதிருஷ்டியால் காண, தன்னை , முன் வினைப் பயனால் " குஷ்ட நோய் "
பிடிக்கபோவதை உணர்ந்தார். முன்வினைப் பயங்களுக்கு வினைகளை தருபவர்கள்
நவக்கிரகங்களே என்றெண்ணி, அவர்களை நோக்கி கடும் தவம் புரிந்தார். தவத்தை
மெச்சிய நவகிரகர்கள் என்ன வரம் வேண்டு எனக் கேட்க, தன்னை குஷ்ட நோய்
பீடிக்காமல் காத்தருள வேண்டினார். நவக்கிரக நாயகர்களும் அவ்வாறே ஆகட்டும்
என ஆசீர்வதிதனர். இதனை அறிந்த பிரம்ம தேவர் நவகிரகங்களின் மேல் கடும் சினம்
கொண்டார்.  நவக்கிரக பரிகார திருத்தலங்கள்  02

நவக்கிரகங்கள் பிரம்மனிடம் சாபம் பெறுதல்
" நவக்கிரகங்களே, தேவர்களாய் இருப்பினும் தனித்து இயங்கும் அதிகாரம்
உங்களுக்கு இல்லை. சிவனின் ஆணைப்படியும், கால தேவனின் துணையுடனும் மட்டுமே
நீங்கள் அவரவர் வினைக்கேற்ப நன்மை, தீமைகளை அளிக்க வேண்டும். இதை மீறி காலவ
முனிவரை நீங்கள் காத்ததால், அத் தொழு நோய் உங்களை பிடிக்கும் " என்றார்
பிரம்ம தேவர். கலங்கின நவகிரகங்கள். பிரம்மனின் திருவடி பற்றி சாப விமோஷனம்
கேட்டனர். மனமிறங்கிய நான்முகனும் அவர்களிடம், "அர்க்கவனம் என்ற தலம்
சென்று அங்கு வீற்றிருக்கும் பிராணவரதரையும், மங்கல நாயகியையும்
வழிபடுங்கள். கார்த்திகை மாதம் முதல் ஞாயிற்று கிழமை தொடங்கி 12 ஞாயிற்று
கிழமைகள் தவம் செய்யுங்கள். திங்கள் கிழமைகள் தோறும் நீராடி, வெள்ளெருக்கு
இலையில் ஒரு பிடி தயிர் அன்னம் வைத்து உண்ணுங்கள் " என்றார். மற்ற
நாட்களில் உண்ணா நோன்பு இருக்க சொன்னார்.

நவக்கிரகங்களும் அவ்வாறே அர்க்கவனம் வந்து அப்பனையும், அம்மையையும்
வழிபட்டனர். பிரம்மனது சாபத்தால் தொழு நோய் அவர்களை பற்றியது. அச் சமயம்
அங்கு வந்த அகத்திய முனிவர், வழிபாடு முறை பற்றி விளங்கச் சொன்னார்.
அர்க்கவனத்தின் வட கிழக்கு பகுதியில் வினாயகரை பிரதிஷ்டை செய்து வழிபடச்
சொன்னார். கடுமையான உண்ணா நோன்பும், திங்கட் கிழமைகள் மட்டும் எருக்க
இலையில் சிறிது தயிர் அன்னம் புசிக்க சொன்னார். அர்க்கவனத்தில் இருந்த
ஒன்பது தீர்த்தங்களையும் ஆளுக்கு ஒன்றாக தேர்ந்து எடுத்து நீராடச்
சொன்னார். எருக்க இலையில் தயிர் அன்னம் உண்ணும் பொழுது, அந்த இலையின் ஒரு
அணுப் பிரமான அளவு அன்னத்தில் கலக்கும். அதுவே குஷ்ட நோய் தீர்க்கும்
எனவும் விளக்கினார்.
நவக்கிரகங்கள் தங்கள் சாபம் நீங்கப் பெறுதல்
இவாறு 78 நாட்கள் கடும் தவம் செய்த பின்னர், 79 ஆம் நாள்பிராணவரதரும் மங்கல
நாயகியும் நவக்கிரகங்களுக்கு காட்சி தந்து " நவக்கிரகர்களே, உமது தவம்
மெச்சினோம். உம்மை பற்றிய தொழு நோய் முழுவதும் நீங்கட்டும். இந்த அர்க்க
வனத்தின் வட கிழக்கு பகுதியில் ஒர் ஆலயம் உண்டாக்கி, உம்மை வந்து
வழிபடுபவரது நவக்கிரக தோஷங்களை தீர்ப்பீராக. இத் தலம் நவக்கிரகர்களுக்கு
உரிய பரிகார தலமாக விளங்கட்டும் " என அருளினார்.

காலவ முனிவர் நவக்கிரகங்களுக்கென ஆலயம் அமைத்தல்

இதனிடையே, தன்னால் நவக்கிரகர்கள் தொழு நோயால் பிடிக்கப்பட்டதை அறிந்த காலவ
முனிவர், ஓடோடி வனது நவக்கிரகர்களிடம் சரணடைந்து மன்னிப்பு கேட்டார். நவ
நாயகர்களும் அவரை மன்னித்து தாங்கள் பிரதிஷ்டை செய்து வழிபட்ட வினாயகரை
வழிபட்டனர். சாப பிணியான கோள் தீர்த்ததால் இவர் " கோள் தீர்த்த வினாயகர் "
என வழிபடலானார். பின்னர் காலவ முனிவரிடம், இறைவன் ஆணைப்படி தங்களுக்காக தனி
சன்னதிகள் கொண்ட ஆலயம் ஒன்றை உருவாக சொன்னார்கள். முனிவரும் அவ்வாறே,
திருக் கோயில் ஒன்றை அமைத்து நவக் கிரக நாயகர்களை தனி சன்னதிகளில்
பிரதிஸ்டை செய்தார்.

பிராண வரதேஸ்வரரும் , மங்களாம்பிகையும் எழுந்தருளியுள்ள திருத்தலம் "
திருமங்கலக்குடி " என்றும், நவக்கிரக நாயகர்கள் தனி சன்னதிகள் கொண்டு
அருளும் தலம் " சூரியனார் கோவில் " என்றும் வழிபடலாயிற்று. சூரியனார்
கோவில் வழிபாட்டை திருமங்கலக்குடியில் இருந்துதான் துவங்க வேண்டும்.
நவக்கிரக வழிபாட்டில் முதல் திருத் தலமாக விளங்குவது இத் திருமங்கலக்குடி.
மாங்கல்ய பலம் அருளும் மங்கலநாயகி

அந்நாளில் அரசனுக்கு சேர வேண்டிய வரிப் பணத்தை கொண்டு மந்திரி ஒருவர்
கோவில் கட்டும் பணிகளை மிகச் சிறப்பாக செய்து வந்தார். ஒரு நாள் இதனை
அறிந்த மன்னன் " தனக்கு சேர வேண்டிய பணத்தை கொண்டு எனக்கே தெரியாமல், என்
அனுமதியில்லாமல் ஆலயம் கட்டுவதா? " என சினம் கொண்டு அமைச்சரை சிரச் சேதம்
செய்ய ஆணையிட்டான். ஆணையும் நிறைவேறியது. துடிதுடித்துப் போன அமைச்சரின்
மனைவி, இத் தலம் வந்து அம்மையிடம் " தனது கணவனை உயிர்ப்பித்து தருமாறு "
வேண்டினாள். அம்மையும் அவ்வாறே அமைச்சரை உயிர்ப்பித்து தந்தாள். அமைச்சரின்
மாங்கல்ய பலத்தினை தந்திட்ட இத் தல அம்பாள் "மங்கலநாயகி" எனவும், இறைவன்
பிராணனை திரும்ப தந்ததால் " பிராணவரதேஸ்வரர் " எனவும் வழிபடப்படுகின்றனர்.
பஞ்சமங்கள ஷேத்திரம்
நவக்கிரகங்களின் தோஷங்களையே நீக்கிய இத் திருத் தலத்தினை வழிபட்ட பின்னரே
சூரியனார் கோவில் சென்று வழிபட வேண்டும். நோய்கல் தீர்க்கும் திருத்தலம்
இது. வியாதி உள்ளவர்கள், கார்த்திகை மாதம் முதல் ஞாயிறு துவங்கி தொடர்ந்து
11 ஞாயிற்று கிழமைகள் வெள்ளெருக்கு இலையில் தயிர் அன்னம் நைவேத்யம் செய்து
வழிபட்டு அப் பிரசாதத்தினை உட்கொண்டால் வியாதிகள் அனித்தும் முற்றிலும்
நீங்கப் பெறலாம். மங்கள விமானம், மங்கள விநாயகர், மங்கள நாயகி, மங்கள
தீர்த்தம் மற்றும் மங்கள கோயில் என "பஞ்சமங்கள ஷேத்திரமாக" விளங்கும்
திருத்தலம் இது.



திருஞானசம்பந்தர் திருச்சி மலைக்கோட்டையில் குடிகொண்டருளும் தாயுமான
சுவாமிகளை குறித்து பாடிய இப் பாடல்களை கர்ப்பிணிப் பெண்கள் தினந்தோறும்
மனமுருக பாடினால், பிரசவம் இனிதே நடைபெறும்

நன்றுடையானைத் தீயதிலானை நரை வெள்ளேறு

ஒன்றுடையானை உமையொரு பாகம் உடையானைச்

சென்றுடையாத திருவுடையானைச் சிராப்பள்ளி

குன்றுடையானைக் கூற என்னுள்ளம் குளிரும்மே.

கைம்மகவேந்தி கடுவனொடு ஊடிக்கழைபாய் வான்

செம்முக மந்தி கருவரையேறு சிராப்பள்ளி

வெம்முகவேழத்து ஈருரி போர்த்த விகிர்தா நீ

பைம்முக நாகம் மதியுடன் வைத்தல் பழியன்றே
மந்தம் முழவம் மழலை ததும்ப வரை நீழல்

செந்தண் புனமுஞ் சுனையுஞ் சூழ்ந்த சிராபபள்ளிச்

சந்தம் மலர்கள் சடைமேலுடையார் விடையூரும்

எந்தம் அடிகள் அடியார்க்கு அல்லல் இல்லையே

துறை மல்கு சாரற் சுனை மல்கு நீலத்திடை வைகிச்

சிறை மகு வண்டுந்தும்பியும் பாடுஞ் சிராப்பள்ளிக்

கறைமல்கு கண்டன் கனலெரியாடுங்க் கடவுள் எம்

பிறை மல்கு சென்னி உடையவன் எங்கள் பெருமானே.



பௌர்ணமி சிவ பூஜை பலன்கள்

பௌர்ணமி தினங்களில் சிவ சக்தியை
வழிபட வாழ்வில் இருள் நீங்கி ஒளி பிறக்கும். மங்கல்ய பலம் கிடைக்கும்.
மகப்பேறு பெறலாம். படிப்பினில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் அபிவிருத்தி
அடையும். நினத்தவை நடக்கும். எடுத்த காரியம் வெற்றி பெறும். நோய்கள்
தீரும். சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும். மறு பிரப்பு எடுக்க வண்னம் நர்
கதி அடையலாம்.

சர்வ மங்கள யோகம் பெற்றிட

 நவக்கிரக பரிகார திருத்தலங்கள்  Thirumankalakudi+Footerபஞ்சு
திரியில் நெய், விளக்கெண்ணெய், வேப்பெண்ணெய், இலுப்பை எண்ணெய், தேங்காய்
எண்ணெய் ஆகிய ஐந்தையும் கலந்து 48 நாட்கள் தொடர்ந்து ஏற்றி திருவிளக்கு
பூஜை செய்தால் தேவியின் பரிபூரண அருள் கிட்டும். சகல விதமான
சௌபாக்கியங்களும் கிடைக்கும். சந்திர சக்தி அடைவர். அதிகாலை 3 மணி முதல் 5
மணிக்குள் தீபம் ஏற்றி வழிபட்டால்சர்வ மங்கள யோகம் கிடைக்கும்.
-வெங்கடேஸ்வரா-
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

 நவக்கிரக பரிகார திருத்தலங்கள்  Empty Re: நவக்கிரக பரிகார திருத்தலங்கள்

Post by மாலதி January 15th 2013, 07:35

மூலவர் : பிராணநாதேசுவரர்
உற்சவர் : -
அம்மன்/தாயார் : மங்களாம்பிகை
தல விருட்சம் : கோங்கு, இலவு(வெள்ளெருக்கு)
தீர்த்தம் : மங்களதீர்த்தம் (காவிரி)
ஆகமம்/பூஜை : -
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திருமங்கலக்குடி
ஊர் : திருமங்கலக்குடி
மாவட்டம் : தஞ்சாவூர்
மாநிலம் : தமிழ்நாடு
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

 நவக்கிரக பரிகார திருத்தலங்கள்  Empty Re: நவக்கிரக பரிகார திருத்தலங்கள்

Post by மாலதி January 15th 2013, 07:37

 நவக்கிரக பரிகார திருத்தலங்கள்  Suriyanar+Kovil+Header

சூரியனார் கோவில் தல அமைப்பு

கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் ஆடுதுறையை அடுத்து
அமைந்துள்ளது சூரிய பரிகார தலமான " சூரியனார் கோவில் ". மேற்கு நோக்கி
அமைந்துள்ள இத் திருக் கோயிலின் 50 அடி உயர ராஜ கோபுரம் மூன்று
நிலைகளையும், ஐந்து கலசங்களையும் கொண்டது. கோபுரத்தில் எழில்மிகு புராணச்
செய்திகள் சுதைச் சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரே பிரகாரமும் ,
நாற் புறமும் நெடும் மதில் சுவர்களையும் உடைய ஆலயத்தின் மத்தியில்
அமைந்துள்ள கர்ப்ப கிரகத்தில் மூலவராக " சூரிய தேவன் " இடப் புறம் உஷா
தேவியுடனும், வலப் புறம் சாயா தேவியான பிரத்யுஷா தேவியுடனும், தன் இரு
கைகளில் செந்தாமரை மலர்கள் ஏந்தி மலர்ந்த முகத்துடன் காட்சி தருகிறார்.
இவர், தன்னை வழிபடுபவரது பகையையும், கவலைகளையும் போக்குபவர். நினைத்த
காரியங்களை நிறைவேற்றி தருபவர். கண், இருதய மற்றும் காமாலை நோய்களை
தீர்ப்பவர். ஏழரை, அஷ்டம மற்றும் ஜென்ம சனி திசை நடப்போரும், மற்ற நவக்கிரக
தோஷமுள்ளவர்களும் இத் தல நாயகனை வழிபட வேண்டும். 12 ஞாயிற்று கிழமைகள் இத்
தலத்திலேயே தங்கி வழிபடுவது மிகச் சிறப்பு.

பரிதி, அருக்கன், ஆதித்தன், பானு, ஞாயிறு, பகன், கனலி, கதிரவன், கமலநாயகன்,
வெங்கதிரோன், வெய்யோன், மார்த்தாணடன், தினகரன், பகலவன் என பல்வேறு
பெயர்களுடன் போற்றப்படும் சூரியன் நவ நாயகர்களின் தலைவன். சிவனது
முக்கண்ணில் வலது கண்ணாக திகழ்பவர். புகழ், மங்களம், கீர்த்தி, செல்வாக்கு,
ஆட்சி திறம் போன்றவற்றை அளிப்பவன். சூரிய தசா புத்தி நடப்பவர்கள், சூரிய
பகவானை சிவப்பு நிற மலர்களால் அர்ச்சிப்பதாலும், சிவப்பு நிற ஆடைகளை
உடுத்திக் கொள்வதாலும், மாணிக்கத்தை அணிவதாலும், ஞாயிற்று கிழமைகள் விரதம்
இருப்பதாலும், சிவப்பு நிற பசு மற்றும் தானியங்களை தானம் செய்வதாலும்,
சூரிய நமஸ்காரம் மற்றும் சூரியனார் கோவில் வழிபாட்டாலும் கிரக தோஷ
நிவர்த்தி பெறலாம்.

சிவ சூரிய நாராயணனாக சூரிய பெருமான் குடி கொண்டுள்ள இத் தலத்தில் உட்
பிரகாரத்தில் மற்ற எட்டு நவக்கிரக நாயகர்களும் தனி சந்நிதி கொண்டுள்ளனர்.
மற்ற ஆலயங்களை போலல்லாது இத் திருத்தல வழிபாடு சற்றே வேறுபட்டது. மனதில்
எப்படிப்பட்ட சஞ்சலங்கள் இருந்தாலும், எத்தகைய ஆபத்துகளில் அகப்பட்டு
கொண்டாலும், தாங்க முடியாத துயரங்கள் ஆட்கொண்டாலும் " ஆதித்ய ஹிருதயத்தை "
மனத் தூய்மையுடன் பாராயணம் செய்தால் அல்லல்களும், துன்பங்களும் வந்த சுவடே
தெரியாமல் மறைந்தோடும்.
 நவக்கிரக பரிகார திருத்தலங்கள்  Suryanar+Temple+Kumbakonam+1





சூரியனார் கோவில் வழிபாடு


[justify]

சூரிய காயத்ரி


ஓம் அஸ்வ த்வஜாய வித்மஹே

பாச ஹஸ்தாய தீமஹி

தந்நோ சூர்ய: ப்ரசோதயாத்

சூரிய துதிப்பாடல்


காசினி இருளை நிக்கும் கதிரொளியாகி யெங்கும்

பூசனை உலகோர் போற்றப் புசிப்பொடு சுகத்தை நல்கும்

வாசியேழுடைய தேர்மெல் மகாகிரி வலமாய் வந்த

தேசிகா எனை ரட்சிப்பாய் செங்கதிரவனே போற்றி
சூரிய பகவானுக்கு உரியவையும், பிரீத்தியானவையும்
ராசி சிம்ம ராசி திக்கு நவக்கிரகங்களுக்கு நடுவில்
அதி தேவதை அக்கினி ப்ரத்யதி தேவதை உருத்திரன்
தலம் சூரியனார் கோயில் வாகனம் ஏழு குதிரை பூட்டிய தேர்
நிறம் சிவப்பு உலோகம் தம்பாக்கு
தானியம் கோதுமை மலர் செந்தாமரை
வஸ்திரம் சிவப்பு ஆடை ரத்தினம் மாணிக்கம்
நைவேத்யம் கோதுமை சக்ரான்னம் சமித்து வெள்ளெருக்கு

 நவக்கிரக பரிகார திருத்தலங்கள்  Suriyanar+Kovil+Vazhipatu+copy

மற்ற ஆலயங்களை போலல்லாது, இத் திருத் தல வழிபாடு சற்றே வேறுபட்டது.
வழிபாட்டு முறை அறிந்து வணங்குதல் மிகச் சிறந்த பலன் அளிக்கும். சூரியனார்
கோவிலை வழிபடுவதற்கு முன்னர் அருகில் உள்ள " திருமங்கலக்குடி " சென்று "
பிராணவரதரையும் ", அம்மனையும் வழிபட வேண்டும். பின்னர், சூரிய
தீர்த்தத்தில் நீராடி, கோபுர தரிசனம் செய்து, கொடி மரம் வணங்கி, கோள்
தீர்த்த விநாயகரை வீழ்ந்து வணங்க வேண்டும். பின்னர், நடராஜரையும்,
சிவகாமியையும், காசி விஸ்வநாதரையும், விசாலாட்சியையும் வழிபட்டு,
மூலவாராய், தன் இரு தேவியருடன் காட்சி அருளும் சூரிய பகவானை நைவேத்யம்
வைத்து, அபிஷேக, ஆராதனைகளுடன் வணங்க வேண்டும்.அதன் பிறகு, வெளிப் பிரகாரம்
வந்து, முறையே குரு பகவானையும், நெய் தீபம் கொண்டு சனீஸ்வரனையும்,
புதனையும், அங்காரகனான செவ்வாயையும், சந்திரனையும் பின்னர் கேதுவையும்
மலர்களால் அர்சித்தும், அர்ச்சனைகள் செய்தும் வணங்க வேண்டும். கடைசியாக
சுக்கிர பகவானையும் , ராகுவையும் வழிபட வேண்டும். ( செல்லும் முறை அறிய
அம்புக் குறி இடப்பட்டுள்ளது ). மீண்டும் விநாயகரிடம் வந்து அவரை துதித்து,
கொடி மரத்தின் கீழ் வீழ்ந்து வணங்கி வடக்கு, கிழக்கு, தெற்கு பிரகாரம்
வழியாக கோவிலை 9 முறை இடமாக ( மற்ற ஆலயங்களை போல வலமாக அல்ல ) வர வேண்டும்.
வழிபாட்டின் பூர்த்தியாக விநாயகரை மீண்டும் வீழ்ந்து வணங்கி வெளிப்புறம்
சென்று அங்குள்ள சாதுக்களுக்கு முடிந்த அளவு தானம் செய்யலாம். [/justify]
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

 நவக்கிரக பரிகார திருத்தலங்கள்  Empty Re: நவக்கிரக பரிகார திருத்தலங்கள்

Post by மாலதி January 15th 2013, 07:39

திங்களூர்






 நவக்கிரக பரிகார திருத்தலங்கள்  Thingalur+Header
கும்பகோணத்திலிருந்து
சுவாமி மலை, கபிஸ்தலம் வழியில் திருவையாற்றின் அருகில் உள்ளது
சந்திரனுகுரிய தலமான " திங்களூர் ". தஞ்சவூரில் இருந்து சுமார் 15 கி.மீ.
தொலைவில் அமைந்துள்ளது. தேவரப் பாடல்பெற்ற தலம் இது. 63 நாயன்மார்கல்ளில்
ஒருவரான " அப்பூதி அடிகளார் " வாழ்ந்த தலம் இது. அம்புலி, இந்து, கலாநிதி,
குமுத சகாயன், சசாங்கதன், கதிர், நிலா, மதி என பல்வேறு பெயர்களால்
அழைக்கப்படும் சந்திரன் சிவ பெருமானின் முக்கண்ணில் இடது கண்ணாக
விளங்குபவர்.



 நவக்கிரக பரிகார திருத்தலங்கள்  04 நவக்கிரக பரிகார திருத்தலங்கள்  06


சாத்வீக குணம் கொண்ட இவர் ஒரு சுப கிரகர். பராசக்தியின் அம்சமான இவர்
திருப்பதி வெங்கடாசலபதியின் காலடியில் குடி கொண்டுள்ளதாக ஐதீகம். கடக
ராசிக்கு அதிபதியான இவர் உயிர்களிடத்து மோக குணத்தை தூண்டுபவர். இவர்
ஒருவரது ஜாதகத்தில் வலு பெற்று நல்ல நிலையில் இருந்தால் ஜாதகர் நல்ல மனோ
திடத்துடன் இருப்பார். இவரது நீச்சம் மன நோய் தரும். சந்திரனது
ஆதிக்கத்தால் மனித உடலில் மூளை, வயிறு, மார்பு போன்ற உறுப்புகள்
பாதிப்படையும்.
 நவக்கிரக பரிகார திருத்தலங்கள்  07
நீர் தொடர்பான நோய்களுக்கு இவரே காரகன். காலரா, பாலியல் தொடர்பான நோய்கள்,
நுரையீரல் நோய்கள் ஆகியன இவரது நீச்சத்தால் உண்டாவன. நீர் உணவுகள், தேன்,
மது, உறக்கம், குதிரை, மாறு கண், காச நோய், மலர்கள், வெண்ணெய் போன்றவற்றின்
காரணகர்த்தா. வெண்மை நிற மலர்களால் அர்சிப்பதாலும், வெள்ளை நிற ஆடைகள்
உடுத்தி கொள்வதாலும், முத்து மாலை அணிவதாலும், பௌர்ணமி விரதம்
இருப்பதாலும், அரிசி தானம் செய்வதாலும் சந்திர கிரக தோஷங்கள் விலகுகின்றன.

சந்திர தோஷம் அகல
திருநாவுக்கரசரும், அப்பூதி அடிகளும்

திருநாவுக்கரசர் ஒரு சமயம் உழவாரப் பணி செய்ய திங்களூர் சென்றிருந்தார்.
அச் சமயம் அங்கு அப்பூதி அடிகள் என்பவர், நாவுககரசர் பெயராலே பல தர்ம
காரியங்களை செய்து வருவதைக் கண்டு அவர் இல்லம் சென்றார். நாவுக்கரசரை கண்ட
அப்பூதி அடிகள் உள்ளம் மகிழ்ந்து விருந்தோம்பலுக்கு ஆயத்தமானார். தனது மகனை
வாழை இலை பறிக்க தோட்டத்திற்கு அனுப்ப, அங்கு அந்த சிறுவனை பாம்பு தீண்ட
உயிரிழந்தான்.

இச் செய்தியை அறிந்தால் எங்கே நாவுக்கரசர் விருந்து உண்ண மாட்டாரோ
என்றெண்ணிய அப்பூதி அடிகள் மகன் இறந்ததை மறைத்து நாவுக்கரசருக்கு அமுது
படைத்தார். இதனை அறிந்த நாவுக்கரசர், இறந்த அப்பூதி அடிகளின் மகனை இத்
திருத் தலத்திற்கு எடுத்து சென்று, " ஒன்று கொலாம் அவர் சிந்தை " எனத்
தொடங்கும் பதிகம் பாடி இறந்த பிள்ளையை உயிர்ப்பித்தார். இத் தகைய பெரும்
பேறு பெற்ற தலம் இது.

மக்களின் மூச்சுக் காற்றில் சந்திரன் இட கலை ஆனவர். சந்திரன் சூரியனிடம்
இருந்து முழுவதும் பிரிந்திருக்கும் நாள் பௌர்ணமி. சந்திரனை ராகு அல்லது
கேது பற்றும் நாள் சந்திர கிரகணம். இது பௌர்ணமி தினங்களில் நடைபெறும். வலக்
கையில் கதையும், இடக் கையில் வரதமும் கொண்டு காட்சி தருபவர். வெள்ளாடை
உடுத்தி, முத்து மாலை, வெண் சந்தனம், பன்னிற மலர் மாலைகள் அணிந்து காட்சி
தருபவர்.


சந்திர காயத்ரி


பத்ம த்வஜாய வித்மஹே

பாஸ ஹஸ்தாய தீமஹி

தந்நோ சோம : ப்ரசோதயாத்

சந்திர பகவான் துதிப் பாடல்


அலைகடல் அதனில் நின்று அன்று வந்துதித்தபோது

கலை வளர் திங்களாகிக் கடவுள் என்று எவரும் ஏத்தும்

சிலைநுதல் உமையாள் பங்கன் செஞ்சடைப் பிறையாய் மேரு

மலை வலமாக வந்த மதியமே போற்றி ! போற்றி !

சந்திர பகவானுக்கு உரியவையும், பிரீத்தியானவையும்
ராசி கடகம் திக்கு தென்கிழக்கு
அதி தேவதை நீர் ப்ரத்யதி தேவதை கௌரி
தலம் திருப்பதி, திங்களூர் வாகனம் வெள்ளை குதிரை
நிறம் வெண்மை உலோகம் ஈயம்
தானியம் நெல், பச்சரிசி மலர் வெள்ளை அலரி, அல்லி
வஸ்திரம் வெள்ளை ஆடைகள் ரத்தினம் முத்து
நைவேத்யம் தயிர் அன்னம் சமித்து ருக்கஞ்சமித்து


ஈய உலோகத்தால் சந்திர பகவானின் உருவம் செய்து அவருக்கு பிடித்தமான வெண்ணிற
மலர்களை அர்ச்சனை செய்ய வேண்டும். திங்கட் கிழமைகள் தோறும் விரதம் இருக்க
வேண்டும். சந்திரரை வெண்ணிற ஆடைகளால் அலங்காரம் செய்யலாம். முருங்கை
சமித்து கொண்டு தூபமிட்டும் தீபம் எற்றியும் வழிபட வேண்டும். சிவன் கோயில்
சென்று அம்பாளுக்கு விளக்கு ஏற்றி வைத்து வழிபடலாம்.
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

 நவக்கிரக பரிகார திருத்தலங்கள்  Empty Re: நவக்கிரக பரிகார திருத்தலங்கள்

Post by மாலதி January 15th 2013, 07:40











 நவக்கிரக பரிகார திருத்தலங்கள்  Alankudi++Header
ஆலங்குடி
நவக்கிரகங்களில் முழு முதற் சுப கிரகமான " குரு
பகவான் " பொன்னிறமானவர். சாத்வீக குணம் கொண்டவர். தேவர்களுக்கெல்லாம் இவரே
குரு. கைகளில் யோக தண்டம், வர மித்திரை, அட்சய கமண்டலம் கொண்டு குபேர திசை
நோக்கி யோகத்தில் அமர்ந்துள்ளவர். இவர் புத்திர காரகன். பொருள் காரகன்.
ஆலயங்கள், போதனைச் சாலைகள், உபன்யாசம், புனித இடங்கள், ஆன்மீகத் தொடர்பு
போன்றவற்றில் வாசம் செய்பவர். தெய்வ பக்தி, ஆசாரம், புத்தி, யுக்தி, ஞானம்,
பொறுமை, புகழ் ஆகியவற்றிற்கு இவரே காரகன். ஜாதகத்தில் குரு பார்வை கொண்டே
திருமணங்கள் நிச்சயிக்கப்படுகின்றன. சூரியனை அடுத்த மிகப் பிரகாசமான கிரகம்
குரு.
தல அமைவிடமும் , சிறப்பும்

கும்பகோணத்தில் இருந்து நீடாமங்கலம் செல்லும் சாலையில் சுமார் 18 கி.மீ.
தொலைவில் உள்ளது இத் திருத்தலம். தேவாரப் பாடல் பெற்ற தலங்கள் 274.
அவ்ற்றில் காவிரியின் தென் கரையில் அமைந்துள்ளது 127. இவற்றில் 98 வது
தலமாக விளங்குவது இந்த தட்சிணாமூர்த்தியின் விஷேஷ தலமாக விளங்கும் "
ஆலங்குடி ". இத் தல மூலவர் சுயம்பு லிங்கம். ஆபத்சகாயர், ஆரண்யேசுவரர்,
காசியாரண்யேசுவரர் என்றெல்லாம் அழைக்கப்படுகிறார். இறைவி "
ஏலவார்குழலியம்மை ". தல விஷேஷ மூர்த்தி குரு தட்சிணாமுர்த்தி.
விசுவாமித்திரர், அகத்தியர், வீரபத்திரர் போன்றோர் வழிபட்ட திருத் தலம்
இது. இத் தலம் திருநாவுக்கரசராலும், திருஞான சம்பந்தராலும் பாடப் பெற்றது,
ஆதி சங்கரர் வழிபட்ட இத் தலம் பஞ்சாரண்ய தலங்களில் ஒன்று. இது விஷம் தீண்டா
தலம். இத் தலத்தில் விஷ ஜந்துக்கள் தீண்டி யாரும் இறப்பதில்லை.

காசியில் இறக்க நேர்ந்தால், காசி விஸ்வநாதர் இறப்பவரது காதில் இறக்கும்
முன் " ராம நாமம் " சொல்லி முக்தியடையச் செய்வதாக ஐதீகம். அது போல், இத்
தலத்தில் ஈசன் " பஞ்சாட்சிர மந்திரம் " உபதேசிப்பதாக நம்பிக்கை. பஞ்சாட்சிர
மந்திரத்தை தொடர்ந்து ஜபிப்பவர்களை பூதம், பிரேதம், பைசாச, வேதாளம்
போன்றவை நெருங்குவதில்லை. எல்லா விதமான நோய்களும், துனபங்களும் அகலும்
என்கிறது " காசியாரண்ய மகாத்மியம் ".



குரு காயத்ரி
குரு பகவான் துதிப் பாடல்



வ்ருஷப த்வஜாய வித்மஹே

க்ருணி ஹஸ்தாய தீமஹி

தந்நோ குரு : ப்ரசோதயாத்


மறைமிகு கலைநூல் வல்லோன் வானவர்க்கரசன் மந்திரி

நறைசொரி கற்பகம் பொன்னாட்டினுக்கதிபதினாகி

நிறைதினம் சிவிகை மண்ணில் நீடுபோகத்தை நல்கும்

இறையவன் குரு வியாழன் இருமலர்ப் பாதம் போற்றி!
குரு பகவானுக்கு உரியவையும், பிரீத்தியானவையும்
ராசி தனுசு, மீனம் திக்கு வடக்கு
அதி தேவதை வியாழன் ப்ரத்யதி தேவதை இந்திரன்
தலம் திருச்செந்தூர் , ஆலங்குடிவாகனம் அன்னம்
நிறம் மஞ்சள் உலோகம் தங்கம்
தானியம் கடலை மலர் வெண்முல்லை
வஸ்திரம் மஞ்சள் நிற ஆடைகள் ரத்தினம் புஷ்பராகம்
நைவேத்யம் கடலைப் பொடி அன்னம் சமித்து அரசு
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

 நவக்கிரக பரிகார திருத்தலங்கள்  Empty Re: நவக்கிரக பரிகார திருத்தலங்கள்

Post by மாலதி January 15th 2013, 07:42


திருநாகேஸ்வரம்
கும்பகோணத்தில்
இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது " ராகு, கேது, நாக தோஷ
பரிகார " தலமான " திருநாகேஸ்வரம்". ஒரு சமயம் சுசீல முனிவரால் சாபம் பெற்ற
ராகு பகவான், தனது சாபம் நீங்க, சிவ ராத்திரியன்று, முதல் ஜாமத்தில்
நாகேஸ்வரரையும், இரண்டாம் ஜாமத்தில் செண்பகாரண்யத்தையும், மூன்றாம்
ஜாமத்தில் திருப்பாம்புரத்தையும், நான்காம் ஜாமத்தில் நாகை
காரோண்யத்தையும் வழிபட்டு, பின்னர் இத் தலம் வந்து ஈசனின் அருளால் சாபம்
நீங்க பெற்றார். நந்தி தேவரும், நான்முகனும், சூரியனும், வசிஷ்டரும்,
இந்திரனும் வழிபட்ட திருத் தலம் இது.

நாக ராஜன், தான் வழிபட வேண்டி இறைவனை பிரதிஷ்டை செய்ததாலும், ராகு பகவான்
சாபம் நீங்க பெற்றதாலும், இத் தலம் ராகு தோஷ நிவர்த்தி தலமாக
வழிபடப்படுகிறது. நாக ராஜன், தன் இரு தேவியருடன், கோவிலின் தென் மேற்கு
மூலையில் அருள்பாளிக்கிறார். இவருக்கு செய்யப்படும் பால் அபிஷேகம், நீல
நிறமாக மாறுவது இத் தலத்தின் பெரும் சிறப்பு. ராகு கால வேளைகளில்
செய்யப்படும் பாலாபிஷேகம் ராகு, கேது, நாக தோஷங்களுக்கு சிறந்ததொரு
பரிகாரமாகும். தேவாரம் பாடிய மூவராலும் பாடப்பெற்ற திருத்தலம் இது

செண்பகாரண்யம் என்று அழைக்கப்படும் இத் தலத்தின் இறைவன் நாகநாதரான
நாகேஸ்வரர், இறைவி பிறையணிவாள்நுதல் அம்மை மற்றும் கிரிகுஜாம்பாள். செண்பக
விநாயகர், முருகன், லஷ்மி, அறுபத்து மூவர், நடராஜர், சோமஸ்கந்தர்,
சண்முகன், சேக்கிழார், சமயக் குரவர் நால்வர் போன்ற பரிவார மூர்த்திகளும்
உள்ளனர். நாற்புரமும் தேரோடும் வீதிகளுடன், மூன்று பிரகாரங்களையும்,
இரண்டு ஐந்து நிலை கோபுரங்களும் கொண்டு மிகப் பிரம்மாண்டமாய்
காட்சியளிக்கும் இத் தலத்தின் தல விருட்சம் செண்பக மரம். இங்கு கணப்படும்
சூரிய தீர்த்தத்துடம் மேலும் 11 தீர்த்தங்கள் உள்ளதாக ஐதீகம்.







ராகு தோஷ பரிகார வழிபாடு
ராகு பகவான் ஒரு சிறந்த சிவ பக்தர். ராமேஸ்வரம், காளகஸ்தி, திருக்களர்
ஆகிய திருத் தலங்களில் ராகு சிறப்பானவர் எனினும் திருநகேஸ்வரத்தில்
மட்டுமே, தனது தேவியர் இருவருடன் தனிக் கோயில் கொண்டு அருள்பாளிக்கிறார்.
இத் தலத்தில் செய்யப்படும் பால் அபிஷேகம் மிகச் சிறந்த ராகு தோஷ
நிவர்த்தியாகும். அர்ச்சனை, ஆராதனைகள் கூடுதல் சிறப்பு. 11 ஞாயிற்று
கிழமைகள் துர்க்கைக்கு எலுமிச்சம் பழ தோலில் ஏற்றப்படும் நெய் தீபம்
சிறந்த ராகு தோஷ பரிகாரமாகும். ராகு கால வேளைகளில் துர்க்கை வழிபாடு மிகச்
சிறந்தது. அபிஷேக, ஆராதனைகள் முடித்த பின்னர் நவக்கிரக பீடத்தில் உள்ள
ராகு பகவானை வலம் வர வேண்டும். கோமேதகம் கொண்ட ஆபரணங்களை அணிந்து
கொள்ளலாம்.

வெள்ளியாலான சர்ப்பத்தையும், உளுந்து தானியத்தையும், கருப்பு வண்ண
ஆடைகளையும் தானம் கொடுக்கலாம். நீல நிற ஆடை அணிந்து, ராகு பகவானுக்கு நீல
நிற ஆடை அணிவித்தும், உளுந்து பொடி கொண்ட அன்னத்தை நைவேத்யம் செய்தும்,
மந்தார மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்தும், அருக்கு சமித்து தூபம்
காணபித்தும், நெய் விளக்கு ஏற்றியும் ராகு பகவானை வழிபட வேண்டும். அருக்கம்
புல்லினால் விநாயகருக்கு செய்யப்படும் அர்ச்சனைகளும், ராகுவின் அதி
தேவதைகளான காளி, பசு, பாம்பு வழிபாடும் ராகு பகவானுக்கு மிகவும்
பிரீத்தியானவை.


நாக ராஜன், தன் இரு தேவியருடன், கோவிலின் தென் மேற்கு மூலையில் அருள்பாளிக்கிறார்.
இவருக்கு செய்யப்படும் பால் அபிஷேகம், நீல நிறமாக மாறுவது இத் தலத்தின்
பெரும் சிறப்பு ராகு கால வேளைகளில் செய்யப்படும் பாலாபிஷேகம் ராகு, கேது,
நாக தோஷங்களுக்கு சிறந்ததொரு பரிகாரமாகும்









ராகு காயத்ரி

ராகு பகவான் துதிப் பாடல்


நாக த்வஜாய வித்மஹே

பத்ம ஹஸ்தாய தீமஹி

தந்நோ ராஹூ : ப்ரசோதயாத்


வாகுசேர் நெடுமால் முன்னம் வானவர்க்கு அமுதம் ஈயப்

போகுமக் காலை யுன்றன் புணர்ப்பினால் சிரமே அற்றுப்

பாகுசேர் மொழியாள் பங்கன் பரன்கையில் மீண்டும் பெற்ற

ராகுவே உனைத் துதிப்பேன் ரட்சிப்பாய் ரட்சிப்பாயே !









ராகு பகவானுக்கு உரியவையும், பிரீத்தியானவையும்
ராசி அதிபதித்துவமற்றது திக்கு தென்மேற்கு
அதி தேவதை பசு ப்ரத்யதி தேவதை பாம்பு
தலம் காளத்தி, திருநாகேஸ்வரம் வாகனம் நீலச்சிம்மம்
நிறம் கருமை உலோகம் கருங்கல்
தானியம் உளுந்து மலர் மந்தாரை
வஸ்திரம் நீல நிறம் ரத்தினம் கோமேதகம்
நைவேத்யம் உளுந்து பொடி அன்னம் சமித்து அருகம் புல்

நீல நிற ஆடை அணிந்து, ராகு பகவானுக்கு நீல நிற ஆடை அணிவித்தும், உளுந்து பொடி கொண்ட அன்னத்தை
நைவேத்யம் செய்தும், மந்தார மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்தும், அருக்கு சமித்து
தூபம் காணபித்தும், நெய் விளக்கு ஏற்றியும் ராகு பகவானை வழிபட வேண்டும்









தோஷ நிவர்த்திகளுக்கான தீப எண்ணிக்கைகள்

தோஷங்கள்

தீப எண்ணிக்கைகள்

தோஷங்கள்

தீப எண்ணிக்கைகள்

ராகு தோஷம் நீங்க

21 தீபங்கள்

திருமண தோஷம் நீங்க

21 தீபங்கள்

புத்திர தோஷம் நீங்க

51 தீபங்கள்

சர்ப தோஷம் நீங்க

48 தீபங்கள்

களத்திர தோஷம் நீங்க

108 தீபங்கள்

சனி தோஷம் நீங்க

9 தீபங்கள்

குரு தோஷம் நீங்க

33 தீபங்கள்

செவ்வாய் தோஷம் நீங்க

9 தீபங்கள்
ஈஸ்வரனை வழிபடுவதற்கு
11 தீபங்கள்
துர்க்கையை வழிபடுவதற்கு
9
தீபங்கள்
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

 நவக்கிரக பரிகார திருத்தலங்கள்  Empty Re: நவக்கிரக பரிகார திருத்தலங்கள்

Post by மாலதி January 15th 2013, 07:43


 நவக்கிரக பரிகார திருத்தலங்கள்  Kanchanur+Header
கஞ்சனூர்


 நவக்கிரக பரிகார திருத்தலங்கள்  10










தேவர்களின் குருவாக " ஆலங்குடி வியாழ பகவான் "
விளங்குவது போல, அசுரர்களின் குருவாக விளங்குபவர் " சுக்கிரன் ". இவர் ஒரு
நீர்க் கிரகம், பெண் கிரகம். வெண்ணிறம் கொண்டுள்ளதால் " வெள்ளி " எனவும்
அழைக்கப்படுகிறார். சுக்கிரனுக்குரிய தலமான " கஞ்சனூர் " கும்பகோணத்தில்
இருந்து சுமார் 18 கி.மீ. தொலைவிலும், சூரியனார் கோவிலிலிருந்து 3 கி.மீ.
தொலைவிலும் அமைந்துள்ளது. ஐந்து அடுக்கு ராஜ கோபுரத்துடன் கிழக்கு நோக்கி
அமைந்துள்ள இத் தலம், திருநாவுக்கரசரால் பாடப் பெற்றது. பிற நவக்கிரகங்களை
போல இத் தலத்தில் சுக்கிரனுக்கு தனி சந்நதியோ, உருவச் சிலையோ கிடையாது. சிவ
பெருமானே இங்கு சுக்கிரனாக காட்சி தருகிறார். சுக்கிரன் சிவனிடம்
ஐக்கியமாகியுள்ளதாக ஐதீகம். இத் தல இறைவன் " அக்கினீஸ்வரர் " இறைவி "
கற்பகாம்பிகை ". பிரம்ம தேவருக்குக் திருமண கோலம் காட்டியதால், இத்
தலத்தில் இறைவியை தனது வலப் புறம் மணக் கோலத்தில் கொண்டுள்ளார் ஈசன்.

வெள்ளிக்
கிழமைகள் விரதம் இருப்பதாலும், கஞ்சனூர் சென்று வழிபடுவதாலும், ராஜ
ராஜேஸ்வரியை வணங்குவதாலும், வெள்ளி, வைர நகைகள் அணிவதாலும், வெண்ணிற ஆடைகள்
உடுத்திக் கொள்வதாலும், மொச்சை தானியத்தை தானமாக தருவதாலும் சுக்கிர
தோஷங்கள் நீங்கும். சுக்கிர பகவானின் அருளாசி கிடைக்கும். ஒருவருக்கு விவாக
பிராப்தி வேண்டும் என்றாலும், மலட்டு தன்மை நீங்கி புத்திரப் பேறு கிடைக்க
வேண்டும் என்றாலும் சுக்கிரனின் அனுக்கிரகம் மிக அவசியம். இவர் தனது
நான்கு கைகளில் தண்டம், வரகஸ்தம், கமண்டலம், அஷமாலை கொண்டு விளங்குபவர்.
வெண்ணிற ஆடையுடனும் , வெள்ளை பூவுடன் காட்சி தருபவர். தனது அதி தேவதையான
தேவேந்திரனின் மனைவி இந்திராணியை வழிபட்டால் மிகுந்த மன மகிழ்வு அடைபவர்.







சுக்கிர பகவானான சுக்கிராச்சாரியார்

அசுரர்களின்
குருவாக விளங்கியவர் இந்த சுக்கிராச்சாரியார். இறந்தவரை உயிர்ப்பிக்கும் "
அமிர்த சஞ்சீவினி " மந்திரத்தை ஈசனிடம் இருந்து பெற்றவர். ஒரு சமயம்
தேவர்களுக்கும் , அசுரர்களுக்கும் நடந்த போரில் , இறந்த அசுரர்களை
சுக்கிராச்சாரியார் உயிர்ப்பிக்க, சிவ பெருமான் பார்க்கவரை விழுங்கினார்.
பல காலம் கழித்து தவப் பயனால் வெளிவந்தார் பார்க்கவர். இதனால் சிவ
புத்திரர் ஆனார். வெண்ணிறம் கொண்டதால் சுக்கிரன் என்ப் பெயர் பெற்றார்
பார்க்கவர். வாமன அவதாரத்தில், மகாபலி மகா விஷ்ணுவிற்கு தானம் தருகையில்,
தானத்தை தடுக்கும் பொருட்டு வண்டாக மாறி, தர்ப்பை புல்லால் தன் ஒரு கண்ணை
இழந்தவர். பின்னர் பல காலம் தவம் இருந்து தன் கண்ணை திரும்ப பெற்று,
நவகிரகங்களில் ஒருவராக பெரும் பேறு அடைந்தவர்..

சுக்கிரன் அசுர
குருவாயினும் அசுரத் தன்மையற்ற சுப கிரகர். ஒருவரது வாழ்வில் சுக்கிர திசை
ஒரு முறைதான் வரும். சுக்கிர திசை 30 வருடங்கள் நடக்கும். ஒருவரது
ஜாதகத்தில், சுக்கிரன் அருள் கிடைத்தால் நல்ல பல மேன்மைகள் அடைவர்.
சுக்கிர தோஷத்திற்கு கஜ லட்சுமி, ராஜ ராஜேஸ்வரி வழிபாடும், " தேவி மகாத்மிய
" பாராயணமும் செய்ய வேண்டும். சுக்கிரனின் ஆசி கிடைக்க அவரை வெள்ளை தாமரை
மலர்களால் அர்ச்சித்து, அரசு சமித்து தூபம் காட்டி, தயிரன்னம், மொச்சை பொடி
அன்னம் கொண்டு நைவேத்யம் செய்ய்து, சுக்கிர பகவானை 9 முறை வலம் வர
வேண்டும்.



" திரவிய லாபம் சேர்ப்பான் தேர்ந்து ஆரோக்கியம் ஈவான்

சயனத்தை சுகமாக செய்வான் நினைவுறு நண்பர் கூட்டம்

நிறைந்திடச் செய்வான் வேனன் மறை புகழ் கொண்ட

சுக்கிரன் மகிமையை யார் சொல்வாரே !!!











சுக்கிர காயத்ரி



அச்வ த்வஜாய வித்மஹே

தநுர் ஹஸ்தாய தீமஹி

தந்நோ சுக்ர : ப்ரசோதயாத்


சுக்கிர பகவான் துதிப் பாடல்



மூர்க்கவான் சூரன் வாணன் முதலினோர் குருவாய் வையம்

காக்கவான் மழை பெய்விக்கும் கவி மகன் கனகம் ஈவோன்

தீர்க்க வானவர்கள் போற்றச் செத்தவர் தமையெழுப்பும்

பார்க்கவான் சுக்ராச்சாரி பாத பங்கயமே போற்றி !


சுக்கிர பகவானுக்கு உரியவையும், பிரீத்தியானவையும்
ராசி ரிஷபம், துலாம் திக்கு கிழக்கு
அதி தேவதை இந்திராணி ப்ரத்யதி தேவதை இந்திர மருத்துவன்
தலம் ஸ்ரீரங்கம், கஞ்சனூர், திருநாவலூர் வாகனம் தலை
நிறம் வெள்ளை உலோகம் வெள்ளி
தானியம் மொச்சை பயிறு மலர் வெண் தாமரை
வஸ்திரம் வெள்ளை நிற ஆடைகள் ரத்தினம் வைரம்
நைவேத்யம் மொச்சைப் பொடி அன்னம் சமித்து அத்தி

மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

 நவக்கிரக பரிகார திருத்தலங்கள்  Empty Re: நவக்கிரக பரிகார திருத்தலங்கள்

Post by மாலதி January 15th 2013, 07:45


 நவக்கிரக பரிகார திருத்தலங்கள்  Keelaperumpallam+Header



 நவக்கிரக பரிகார திருத்தலங்கள்  05



கீழப்பெரும்பள்ளம்
சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும்
வழியில் உள்ளது " கேது பகவான் " அருளாசி புரியும் கேது தோஷ நிவர்த்தி தலமான
" கீழப் பெரும் பள்ளம் ". கொள்ளு தானியப் பிரியனான இவன் அசுரர்களில்
வலியவன். மனிதற்கு ஏற்படும் தரித்திரம், வியாதிகள், பீடைகள் இவற்றிற்கு
காரணகர்த்தா. கதம்ப மலர்ப் பிரியோன் இவன். வைடூர்ய ஆபர்ணன். கஸ்தூரியை
சந்தனமாக கொள்பவன். மனிதரது பீடைகள் நீங்க வேண்டுமெனில் கேது பகவானின்
அருளை பரிபூரணமாக பெற வெண்டும்


" அனேக ரூபவர்னைஸ்ச சத ஸேரதேஸஹஸ்ரஸ

உத்பாதரூப ஜகதாம் பீடாம் ஹரது மே சகீ "


கேது தோஷ பரிகாரங்கள்

தனி
சந்நதி கொண்டு கேது பகவான் விளங்கும் இத் திருத்தலம் திருஞான சம்பந்தரால்
பாடப் பெற்றது. கேது பகவான் மோட்சம் தருபவர். திடீர் தன பிராப்தி, யோகம்,
புதையல் போன்றவை இவனால் ஏற்படுபவையே. ஒவ்வொரு சதுர்த்தியன்றும்
விநாயகருக்கு நீர் ஊற்றி அருகம் புல் கொண்டு அர்ச்சனை செய்தால் கேது தோஷம்
நிவர்த்தியாகும். பல வண்ணம் கொண்ட துணி, கேதுவின் தானியமான கொள், ராகுவின்
தானியமான உளுந்து போன்றவற்றை வைத்து சித்திர குப்தனை தேங்காய், பழம் கொண்டு
அர்ச்சித்து வழிபட்டு, பல வண்ணம் கொண்ட துணியை கோயிலுக்கும்,
தேங்காயையும், பழத்தையும், உளுந்தையும், கொள்ளையும் பசு மாட்டிற்கும்
கொடுக்க வேண்டும். பிரம்ம தேவரையும், காளத்தி நாதரையும் வழிபட கேது பகவான்
மகிழ்வார். சிவன் கோவில் சென்று கொள்ளுப் பொடி அன்னம் வைத்து வழிபடுவதும்
கேது தோஷ நிவர்த்தி தரும்.

தல அமைவிடம்

கிழக்கு
நோக்கி அமைந்துள்ள ஆலயம் ஒரு சுற்றையும், ஒரு கோபுரத்தையும் கொண்டு
விளங்குகிறது. பிரகாரத்தின் மேற்கு மூலையில் விநாயகர் சந்நதியும், பிரகார
நடுப் பகுதியில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியரும் உள்ளனர். அடுத்து,
துர்க்கையும், லக்ஷ்மி சமேத நாரயணரும் அமைந்துள்ளனர். அதன் பின்னர் கஜ
லஷ்மியும், சண்டிகேஸ்வரரும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். கிழக்கு
பிரகரத்தில் கேது பகவானும், சனி பகவானும் தனி சந்நதி கொண்டுள்ளனர். பைரவர்,
சூரியன், ஞானசம்பந்தர் சந்நதிகளும் உண்டு. கருவறையில் நாகநாத சுவாமியும்,
வலப் புறம் தெற்கு நோக்கி சௌந்தர நாயகியும் வீற்றிருக்கின்றனர். நடராஜர்,
பஞ்ச மூர்த்திகள், உற்சவ மூர்த்திகளும் உள்ளனர். மூங்கில் மரம் இத் தல
விருட்சம். கேது பகவானுக்கு சனியும், சுக்கிரனும் நண்பர்கள். சூரியன் ,
சந்திரன், செவ்வாய் பகைவர்கள்.

அப்பர், சுந்தரர் மற்றும்
சம்பந்தரால் பாடப் பெற்ற இத் தலத்திற்கு வந்த கேது பகவான், தனது பாவங்களை
போக்குமாறு இறைவனை வேண்ட, இறைவனும் கேது பகவானிடம் இத் தலத்திலேயே
தங்கியிருந்து கேது தோஷத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு அருளுமாறு வரம்
தந்தார். மேற்கு முகமாக காட்சி தரும் கேது பகவானின், தேகம் தெய்வ
வடிவிலும், தலை ஐந்து தலை நாக வடிவிலும் உள்ளது. தன் இரு கைகளை கூப்பி
நாகநாதரை வணங்கிய வண்ணம் காட்சியளிக்கிறார் கேது. வாசுகி நாகம் தன் சாபம்
போக்கிக் கொண்ட தலம் இது.

பாற்கடலை கடைந்து அமுதம் பெற தேவரும்,
அசுரரும் " வாசுகி " என்கின்ற நாகத்தை மத்தாக பயன்படுத்தினர். வலி பொறுக்க
மாட்டாமல் வாசுகி விஷம் கக்க, அனைவரும் மயங்கி வீழ்ந்தனர். விஷம் பரவாமல்
தடுக்க சிவ பெருமான் அதை உண்ண, உமையாளால் அவரது கண்டத்திலேயே
தடுக்கப்ப்பட்டு " திருநீலகண்டனானார் ". இதை பின்னர் அறிந்த வாசுகி, இத்
தலம் வந்து ஈசனை பூஜித்து வருந்தி மன்னிப்பு கேட்டது. வாசுகியின்
வேண்டுதளுக்கிணங்க, ஈசன் இங்கு நாகநாதராய் அருள்பாலிக்கிறார்.




கேது காயத்ரி


அச்வ த்வஜாய வித்மஹே

சூல ஹஸ்தாய தீமஹி

தந்நோ கேது : ப்ரசோதயாத்


கேது பகவான் துதிப் பாடல்



மாதுசேர் நெடுமால் முன்னால் மாகிரி வலமே போந்து

கோதுகள் யாவும் தீரக்குருவருள் பாதம் போற்றி

தீதுகள் யாவும் தீர்க்கும் சிவன்கையில் சிரமே பெற்ற

கேதுவே உனைத் துதிப்பேன் கீர்த்தியாய் ரட்சிபபாயே !

கேது பகவானுக்கு உரியவையும், பிரீத்தியானவையும்
ராசி அதிபதித்துவமற்றது திக்கு வடமேற்கு
அதி தேவதை சித்திர குப்தன் ப்ரத்யதி தேவதை பிரம்மன்
தலம் காளத்தி, கீழபெரும்பள்ளம் வாகனம் கழுகு
நிறம் செம்மை உலோகம் துருக்கல்
தானியம் கொள்ளு மலர் செவ்வல்லி
வஸ்திரம் பல வண்ண ஆடை ரத்தினம் வைடூர்யம்
நைவேத்யம் கொள்ளு பொடி அன்னம் சமித்து தர்ப்பை

மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

 நவக்கிரக பரிகார திருத்தலங்கள்  Empty Re: நவக்கிரக பரிகார திருத்தலங்கள்

Post by மாலதி January 15th 2013, 07:47


 நவக்கிரக பரிகார திருத்தலங்கள்  Vaitheeswaran+Kovil+Header

வைதீஸ்வரன் கோயில்
நவக்கிரகங்களில் மூன்றாவதாய் குறிப்பிடப்படும்
செவ்வாய் எனும் " அங்காரகன் " ஆட்சி புரியும் தலமாக விளங்குவது "
வைத்தீஸ்வரன் கோவில் ". கும்பகோணத்தை அடுத்த மாயவரம் எனப்படும்
மயிலாடுதுறையில் இருந்து சிதம்பரம் செல்லும் சாலையில் சுமார் 15 கி.மீ.
தொலைவில் உள்ளது. சிவ பெருமானின் வியர்வை துளியில் இருந்து தோன்றினார்
அங்காரகன். அங்காரகன் செங்குஷ்டம் கொண்டிருப்பதை கண்ட ஈசன், வைத்தீஸ்வரன்
கோவில் சென்று அங்குள்ள சித்தாமிர்த தீர்த்தத்தில் நீராடி வழிபட சொன்னார்.
அங்காரகனும் அவ்வாறே செய்ய அவரது செங்குஷ்டம் நீங்கியது. இறைவனிடம் தன்னை
செவ்வாய் கிழமைகளில் வழிபடுவோருக்கு சகல செல்வங்களையும், சற்புத்திர
பேற்றையும் அளிக்கும்படி வேண்டினார். சிவ பெருமானும் " செவ்வாய் கிழமைகள்
உனை துதிப்போர் அனைவரும் கிரக தோஷங்கள் விலகி நன்மை அடைவர். நீ
நவக்கிரகங்களில் மூன்றாவதாய் திகழ்வாய் " என வரமளித்தார்.

வைத்தீஸ்வரன்
கோவிலில் மூலவர் சந்நதிக்குள் நுழைந்தவுடன், தண்டாயுதபாணி சந்நதிக்கு
தெற்கில் தெற்கு முகமாக அமிந்துள்லது அங்காரகன் சந்நதி. தனது நான்கு
கைகளிலும் முறையே சூலம், சக்தியாயுதம், அபயக்கை, தண்டம் தாங்கியபடி காட்சி
தருகிறார் செவ்வாய். செவ்வாய் தோஷம் உள்ள அனைவரும் இத் தலம் வந்து துவரை
அன்னம் நைவேத்யம் செய்து இவரை வழிபடவேண்டும். இவர் அனுக்கிரகம் கிட்டினால்
தோஷ நிவர்த்தி பெற்று, மணவினை பெறலாம் அன்பது திண்ணம். இத் தல வழிபாடு கோள்
வினைகள், வாத நோய், பேய் பிசாசு வாதனைகள், கிரக பீடை, சொறி சிரங்கு, குஷ்ட
நோய், சித்த பேதம், வெப்பு நோய் போன்ற கொடிய நோய்களை தீர்க்க வல்லது.
இங்கு விற்கப்படும் " வைத்தியநாதர் மருந்து " என்ற திருச்சாந்துருண்டையை
உண்ண சகல நோய்களிலுமிருந்தும் நிவாரணம் பெறலாம்.

இங்கு நாம்
வாங்கும் அர்ச்சனை தட்டுடன் வெல்லம், உப்பு, மிளகு ஆகியனவும் தரப்படும்.
வெல்லத்தை அங்குள்ள தீர்தத்தில் கரைத்து விட்டு, மிளகையும், உப்பையும்
தையல் நாயகி சந்நதி எதிரில் சேர்க்க வேண்டும். மிகச் சிறிய அளவு உப்பையும்,
மிளகையும் பிரசாதமாக உட்கொள்ள வேண்டும். உடலில் ஏதேனும் கட்டிகள்
இருந்தால், வெள்ளம் குளத்து நீரில் கரைவது போல உடலிலுள்ல கட்டிகளும்
கரைந்துவிடும் என்பது நம்பிக்கை.



 நவக்கிரக பரிகார திருத்தலங்கள்  065

இத் தலத்தில் நவகிரகங்கள் வக்கிரமாக இல்லாது ஒரு
முகமாக இருக்கிறார்கள். கீழ சந்நதி நுழைவாயிலில் வேப்ப மரத்தடியில் உள்ள
ஆதி வைத்தியநாதரை மூன்று முறை வலம் வந்து தியானிக்க சகல நன்மைகளும்
கிடைக்கும். கேட்டது கிடைக்கும். நினைத்தது நடக்கும். செவ்வாய் கிழமைகள்
தோறும் அங்காரகன் தனது வாகனமான ஆட்டில் வலம் வந்து இறைவனை வணங்குவதாக
ஐதீகம்.

செவ்வாய். பூமிக்கும், அதில் விளையும் பயிர்களுக்கும், ஆடு,
மாடு, கோழிகளுக்கும் காரகன் இவன். பொன், பொருள், போகம் இவற்றின்
காரணகர்த்தா. இவன் சிவந்த கண்களை கொண்ட செந்நிற மேனியோன். செவ்வாய் கிழமை
பிறந்த இவனை வீரபத்திரன் என்றும் கூறுவர். சிவப்பு மலர்களை விரும்புபவன்.
துவரை பிரியனான இவன் துவரையை தானம் செய்ய மகிழ்பவன். பூமி தேவியையும்,
முருகப் பெருமானையும் வழிட இவன் அருள் கிட்டும்.
பூமியின் புத்திரனான
இவனது நீச்சம் நெருப்பினால் கண்டம், வாத நோய், குடல் நோய்கள் போன்றவற்றை
உண்டாக்கும். மழையை கொடுப்பவனும் இவனே, தடுப்பவனும் இவனே.

 நவக்கிரக பரிகார திருத்தலங்கள்  063 நவக்கிரக பரிகார திருத்தலங்கள்  062
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

 நவக்கிரக பரிகார திருத்தலங்கள்  Empty Re: நவக்கிரக பரிகார திருத்தலங்கள்

Post by மாலதி January 15th 2013, 07:48

 நவக்கிரக பரிகார திருத்தலங்கள்  11
திருவெண்காடு

 நவக்கிரக பரிகார திருத்தலங்கள்  06
கும்பகோணத்தை அடுத்துள்ள சீர்காழியில் இருந்து 17 கி. மீ. தொலைவில்
அமைந்துள்ளது, நவக்கிரக நாயகர்களில் ஞான காராகனான புதன் ஆட்சி புரியும் "
திருவெண்காடு ". இத் தலம் பூம்புகாரில் இருந்து 10 கி.மீ. தொலைவிலும்,
அங்காரகானான செவ்வாய் அருளும் வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து 11 கி.மீ.
தொலைவிலும் உள்ளது. இத் தலம் ஆதி சிதம்பரம் என்றும் அழைக்கப்படுகிறது. சுப
கிரக மகா ஞானியான இவரை வழிபட ஞானம் பெருகும். இவர் தீய கிரகங்களினால்
ஏற்படும் பீடைகளை போக்குபவர். கல்விக்கு அதிபதியான இவரை வழிபட்டால் நல்ல
வாக்கு சாதுர்யமும், கல்வி அறிவும், கவி பாடும் ஆற்றலும் கிடைக்கும்.
வித்யா காரகனான இவர் நல் விருந்து, பிரசங்கம், ஜோதிடம், வாத நோய், சிற்ப
வேலைப்படுகள் ஆகியவற்றின் காரணகர்த்தா.

ஞானி, சாந்த சொரூபியான இவர் பார்வை வக்கிரமாகும் பொழுது நரம்பு தளர்ச்சி ,
பேச்சு திறன் பாதிப்பு, மூளை நோய்கள் போன்றவை ஏற்படுகின்றன. காவிரி வட
கரையில் உள்ள 63 தலங்களில் 11 வது தலம் இது. சமயக் குரவர் நால்வராலும்
பாடப் பெற்ற திருத் தலம் இது. காசிக்கு நிகரான தலம். மற்ற தலங்கள்
மயிலாடுதுறை, திருவிடைமருதூர், திருவையாறு, சாயாவனம், மற்றும்
திருவாஞ்சியம் ஆகும். இத் தல இறைவன் வழிபடுபவரது பாவங்களை போக்குவதால் இத்
தலம் பாபநாசபுரம் என்றும் வணங்கப்படுகிறது. சிவன், நடராசர், வீர பத்திரர்
என இத் தலத்தின் மூர்த்திகள் மூவர். அது போன்றே தீர்த்தங்களும் மூன்று.
இந்த மூன்று தீர்த்தங்களிலும் நீராடினால், " தேயாத தீவினையும் வல் வினையும்
போகுமே " என சீர்காழிப் பெருமான் பாடியுள்ளார். நவக்கிரக நாயகர்கள் ஒரே
நேர் வரிசையில் நின்று அருளும் தலம் இது.

கருவறையில் திருவெண்காட்டு ஈஸ்வரர் மாகாலிங்கமாக காட்சி தருகிறார். புதன்
பகவான் நான்கு திருக் கரங்களுடன் பூமியி புதைந்திருந்து வெளிப்பட்டவர்.
கயாவில் விஷ்ணு பாதம் உள்ளது போல் இங்கு ருத்ர பாதம் உள்ளது. பித்ரு
கடன்கள் இத் தலத்தில் செய்வது சாலச் சிறந்தது. துறவியாவதற்கு முன்
பட்டினத்தார் வழிபட்ட தலம் இது. ராஜ ராஜ சோழன், ராஜேந்திர சோழன் போன்றோர்
திருப்பணி செய்துள்ளனர்.
திரு ஞான சம்பந்தர் இத்
தலம் வந்தபோது மணல் யாவும் சிவ லிங்கமாகவும், ஊரே சிவ லோகமாகவும்
காட்சியளிக்க கண்டு, " அம்மா " என அம்பாளை விளிக்க, அம்மனும் , சம்பந்தரை
தன் இடுப்பில் ஏந்தி இறைவனிடம் சேர்த்தாராம். இதனால் அம்மன் " பிள்ளை
இடுக்கி அம்மன் " ஆனார். திருநாவுக்கரசர், சுண்டரர், மாணிக்கவாசகர் என
சமயக் குரவர் நால்வரும் இத் தலத்தின் மீது பதிகங்கள் பாடியுள்ளனர்.
மூர்த்தி, தீர்த்தங்களை போன்று விருட்சங்களும் இங்கு, வடவால, கொன்றை,
வில்வம் என மூன்று.மன நோய், சீதள நோய், வெண் குஷ்டம், ஆண்மைக் குறைவு, ரத்த
சோகை, புற்று நோய், நரம்பு தளர்ச்சி ஆகியன புதன் பகவானால் ஏற்படக் கூடிய
நோய்கள்.

இத் தலத்தில் அகோர மூர்த்தி காட்சி தருகிறார். ஈசானம், தத்புருஷம், வாம
தேவம், ஸத்யோஜாதம், அகோரம் என்ற சிவனின் ஐந்து முகங்களில் அகோரத்திற்கு
உரியவர் இவர். ஞாயிற்று கிழமைகளில் இவருக்கு சிறப்பு வழிபாடு
செய்யப்படுகிறது. அவரவர் வேண்டுதலுக்கு ஏற்ப இவரை வெவ்வேறு கோலத்தில் வழிபட
வேண்டும். மோட்சம் கிட்ட வெண்மை நிறத்திலும், காரிய சித்தி கிட்ட சிவப்பு
நிறத்திலும், சத்ரு நாசத்திற்கு கரு நிறத்திலும் இந்த அகோர முர்த்தியை
வணங்க வேண்டும்.

" சிவஞான போதம் " என்ற நூலை தமிழுக்கு தந்த " மெய்க்கண்ட தேவரின் "
தந்தையும், தாயும் தங்களது ஜாதகப்படி பிள்ளைப் பேறு இல்லை என்று அறிந்தும்,
இத் தலம் வந்து, மூன்று தீர்த்தங்களிலும் நீராடி, திருவெண்காட்டு இறைவனை
தொழுது பிள்ளைப் பேறு பெற்றனர். இது பிள்ளைப் பேறு அளிக்கும் திருத்தலம்.




புதன் காயத்ரி


கஜ த்வஜாய வித்மஹே

சுக ஹஸ்தாய தீமஹி

தந்நோ புத : ப்ரசோதயாத்

புதன் பகவான் துதிப் பாடல்


மதன நூல் முதலாவுள்ள மறை புகழ் கல்வி ஞானம்

விதமுடன் அவரவர்க்கு விஞ்சைகள் அருள்வோன் திங்கள்

சுதன் பல சுபாசுபங்கள் சுகம்பல கொடுக்க வல்லன்

புதன் கவிப் புலவன் சீர்சால் பொன்னடி போற்றி! போற்றி!

புதன் பகவானுக்கு உரியவையும், பிரீத்தியானவையும்
ராசி மிதுனம், கன்னி திக்கு வடகிழக்கு
அதி தேவதை விஷ்ணு ப்ரத்யதி தேவதை -----
தலம் திருவெண்காடு வாகனம் குதிரை
நிறம் வெளிர்பச்சை உலோகம் பித்தளை
தானியம் பச்சைப் பயிறு மலர் வெண்காந்தள்
வஸ்திரம் பச்சை நிறம் ரத்தினம் மரகதம்
நைவேத்யம் பாசி பருப்பு பொடி அன்னம் சமித்து நாயுருவி
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

 நவக்கிரக பரிகார திருத்தலங்கள்  Empty Re: நவக்கிரக பரிகார திருத்தலங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum