Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்by vpoompalani March 24th 2016, 13:59
» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26
» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17
» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06
» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07
» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58
» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24
» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35
» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52
» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18
» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47
» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19
» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46
» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49
» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37
» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07
» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29
» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38
» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55
» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00
» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49
» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28
» திருத்தல யாத்திரை ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51
» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33
» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46
» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28
» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13
» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29
» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15
» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10
» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29
» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54
» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38
» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42
» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32
» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01
» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20
» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00
அகத்தியான்பள்ளி தல வரலாற்றுக் குறிப்புக்கள்
Page 1 of 1
அகத்தியான்பள்ளி தல வரலாற்றுக் குறிப்புக்கள்
இத் தல வரலாற்றுக்
குறிப்புக்கள், கோயம்புத்தூர், திரு. சி. எம். இராமச்சந்திர செட்டியார்
அவர்களாலும், சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக் கழகப் புலவர் திரு. வை.
சுந்தரேச வாண்டையார் அவர்களாலும், அண்ணாமலைப்பல்கலைக்கழக ஆராய்ச்சி
விரிவுரையாளர் தி. வி. சதாசிவப் பண்டாரத்தார் அவர்களின் உதவியுடனும் தருமை
ஆதீனப் பல்கலைக் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் வித்துவான் வி. சா.
குருசாமி தேசிகர் அவர்களாலும் எழுதியுதவப் பெற்றன.
கோயில்கள்
அருள்மிகு பாகம்பிரியாள்நாயகி உடனுறை அகத்தீசுவரர்
மரம்: வன்னி
குளம்: அகத்திய தீர்த்தம்
பதிகம்: வாடியவெண் -2 -76 திருஞானசம்பந்தர்
முகவரி: அகத்தியம்பள்ளி,
வேதாரணியம் வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம், 614810
வேதாரணியத்திற்குத் தெற்கே 2.கி.மீ.தூரத்தில்
இருக்கின்றது.வேதாரணியத்திலிருந்து கோடியக்கரை செல்லும் பேருந்தில்
சென்றால் இத்தலத்தை அடையலாம்.
கல்வெட்டு:

சுவாமி
சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. அம்பாள் சந்நிதி மேற்கு நோக்கி
அமைந்துள்ளது. அகத்தியர்கோயில் மூலத்தானத்திற்கு மேற்கில் உள்ளது. பழையவேலை
செங்கல்லால், புதிய வேலை கருங்கல்லால் இயன்றது. அம்மன் உருவம் சிறியது.
கோயில் முப்பது ஆண்டுகளுக்கு முன் புதுப்பிக்கப்பட்டது. திருக்கயிலையில்
வீற்றிருக்கும் அருட்கடலாகிய சிவபெருமானது திருமணக்கோலக் காட்சியைக்
காணும்பொருட்டு அகத்தியர் தங்கித் தவஞ்செய்த பதியாதலின் அகத்தியான்பள்ளி
என்னும் பெயர் பெற்றது என்பர்.
இது சோழ நாட்டுக் காவிரித் தென்கரைத் தலங்களுள் 126 ஆவது தலம்.
1. அகத்தியதீர்த்தம்: இது அகத்தீசுவரர் திருக்கோயிலுக்கு அண்மையில் மேல்புறத்துள்ளது.
2. அக்நிதீர்த்தம்: இது அகத்தீசுவரர் சந்நிதிக்குக் கிழக்கே சுமார் ஒருமைல் தூரத்திலுள்ள சமுத்திரதீர்த்த மாகும்.
3. அக்நிபுட்கரிணி: இது அகத்தீசுவரர் சந்நிதியில் உள்ள தீர்த்தம்.
4. எமதருமதீர்த்தம்: இது அக்நிபுட்கரிணிக்கு வடக்கேயுள்ளது.
அகத்தியர் பூசித்தது. சிவபெருமானின் திருமணக் கோலத்தை, அண்மையிலுள்ள
திருமறைக்காட்டில் காட்டக், கண்டு வணங்கியது. படைத்தல், காத்தல், அழித்தல்
என்னும் முத்தொழில்களையும் இயற்றும் பிரமன், திருமால், உருத்திரன் என்னும்
மூவரையும் தமக்குப் புதல்வராகப் பெறுதற்குத் தவம் இயற்றி அவ்வாறே பெற்றது.
எமதருமராசன் சீவன்முத்தி பெற்றது.
இத்தலத்தை வழிபட்டாலும் நினைத்தாலும் தீவினை நீங்கும் பெருமைவாய்ந்தது.
திருஞானசம்பந்தர் திருவாய்மலர்ந்தருளிய பதிகம் ஒன்று பெற்ற பெருமைக்குரியது இத்தலம்.

கோயிலில்,சோழமன்னரில்
திருபுவனச் சக்கரவர்த்தி இராஜராஜதேவரது இரண்டாம் ஆட்சியாண்டில்
(29-1-1218) பொறிக்கப்பெற்ற கல்வெட்டு ஒன்றும் பிற்காலப் பாண்டியர்களில்
மாறவர்மன் திரிபுவன சக்கரவர்த்தி குலசேகர தேவரின் ஐந்து, முப்பத்தொன்று
இவ்வாட்சியாண்டுகளில் பொறிக்கப் பெற்ற இரண்டு கல்வெட்டுக்களும், மாறவர்மன்,
திரிபுவன சக்கரவர்த்தி வீரபாண்டிய தேவரின் பதினைந்தாம் ஆட்சி ஆண்டில்
பொறிக்கப்பெற்ற கல்வெட்டு ஒன்றும் ஆக நான்கு கல்வெட்டுக்கள் இருக்கின்றன.
இவைகள்
நந்தா விளக்குகளுக்கும் நித்திய வழி பாட்டிற்கும் நிலங்கள் அளிக்கப்பெற்ற
செய்திகளைக் குறிப்பிடுகின்றன. இராஜராஜன் ஒரு விளக்கிற்காக 1,500
காசுகளும், மாறவர்மன் குலசேகரன் ஐந்தாமாண்டில் பொன் தானமும்,
முப்பத்தொன்றாமாண்டில் விழா நடத்த நிலதானமும் அளித்தனன்.

Last edited by Admin on August 22nd 2012, 13:24; edited 1 time in total
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum