HinduSamayam
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

HinduSamayam
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
HinduSamayam
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்
by vpoompalani March 24th 2016, 13:59

» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26

» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17

» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06

» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07

» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58

» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24

» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35

» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52

» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20

» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18

» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37

» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47

» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19

» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46

» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49

» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37

» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07

» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29

» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38

» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55

» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00

» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49

» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28

» திருத்தல யாத்திரை  ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51

» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33

» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46

» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28

» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13

» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29

» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15

» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10

» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29

» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54

» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38

» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42

» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32

» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01

» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20

» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00

தமிழர்களின் சிந்தனைகளம்
Related Posts Plugin for WordPress, Blogger...



ஸ்ரீ பைரவ வழிபாட்டு மகிமை

Go down

ஸ்ரீ பைரவ வழிபாட்டு மகிமை  Empty ஸ்ரீ பைரவ வழிபாட்டு மகிமை

Post by மாலதி July 31st 2011, 21:29

நேரடியாக மோத
முடியாத, மோத விரும்பாத எதிரிகளை - ஒழித்துக் கட்ட , எதிரிகளால் உங்களுக்கு
எந்த வித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க , எதிரிகள் உங்களை நினைத்தாலே மிரள
வைக்க , உங்களுக்கு தேவையான ஆன்ம பலம் அளிக்கும் இறை ரூபம் - ஸ்ரீ கால
பைரவர்.

ஸ்ரீ பைரவரைப் பற்றிய , பல அபூர்வ தகவல்களை உடைய இந்த வார சிறப்புக்
கட்டுரையை, ஆக்கம் செய்து நமது வாசக அன்பர்களிடம் பகிர்ந்து கொள்பவர் :
மதிப்பிற்குரிய திரு . கை.வீரமுனி அவர்கள். இதில் கூறப்பட்ட பல தகவல்கள் -
ஆன்மீக வழிகாட்டி . ஐயா. மிஸ்டிக் செல்வம் அவர்கள், பல வருட
ஆராய்ச்சிக்குப் பின், அனுபவப் பூர்மாக உணர்ந்த உண்மைகள்.

ஒரு பொக்கிஷத்திற்கு நிகரான இந்த கட்டுரையை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் , பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.


ஸ்ரீ பைரவ அவதாரம்
[You must be registered and logged in to see this link.]




அந்தகாசுரன்
என்னும் சிவபக்தன் நீண்ட வலிய தவம் புரிந்து, சிவ பெருமானிடம் வரம்
பெற்றான்.அந்த வரத்தின் சக்தியால் மும்மூர்த்திகளையும்,மற்ற தேவர்களையும்
துன்புறுத்தினான்.அவர்களை சேலை அணிந்து,கையில் வளையிட்டு,கண்ணில்
மைதீட்டி,பெண் வேடத்தில் தனக்கு சாமரம் வீசி பணிபுரியச்செய்து,இழிவு
படுத்தினான்.அந்தகாசுரன் இருள் என்னும் சக்தியைப் பெற்றதால்,பிரபஞ்சம்
முழுவதும் இருளைக்கொண்டு ஆட்சி நடத்தினான்.

இவர்கள் அனைவரும் அந்தகாசுரனிடம் போரிட்டுத் தோற்றனர்.பின்னர்,முழு முதற்கடவுளான சிவபெருமானைத் தஞ்சமடைந்து முறையிட்டனர்.

தாருகாபுரத்தை எரித்த காலாக்னி ,சாந்தமாகி சிவபெருமானின் நெஞ்சில் ஓர்
பகுதியாக இருந்தது.தேவர்களின் துயர் துடைக்க சிவபெருமான் அந்த
அக்னிக்குஞ்சுக்கு ஆணையிட்டார்.அதில் விஸ்வரூபம் எடுத்து வந்தவர்தான்
ஸ்ரீபைரவர்.

அதுவும் எப்படி விஸ்வரூபம் எடுத்தார் எனில்,எட்டு திக்குகளிலும்
அந்தகாசுரனால் உருவாகிய இருளை நீக்கிட எட்டு பைரவர்களை சக்தியுடன் புறப்பட
உத்தரவிட்டார்.

அதன்படி,

1)அசிதாங்க பைரவர் + பிராம்மி
2)ருரு பைரவர் + மகேஸ்வரி
3)உன்மத்த பைரவர் + வாராஹி
4)குரோதன பைரவர் +வைஷ்ணவி
5)சண்டபைரவர் + கவுமாரி
6)கபால பைரவர் + இந்திராணி
7)பீஷண பைரவர் + சாமுண்டி
Coolசம்ஹார பைரவர் + சண்டிகா

ஆகியோர் தம்பதி சகிதமாக புறப்பட்டு,அந்தகாசூரனை அழித்து உலகிற்கு ஒளியைக்
கொடுத்தனர். இதனால்,தேவர்கள் மகிழ்ச்சியடைந்து அனைவரும் தத்தம் ஆயுதங்களை
பைரவருக்குக் கொடுத்தனர்.

பைரவ வழிபாடு செய்வதின் அவசியம் :
12 ராசிகளையும் தன் உடலில் அங்கங்களாகக் கொண்டவர் ஸ்ரீபைரவர். நவக்கிரகங்களுக்கும் பிராண தேவதையாக இருப்பவரும் பைரவரே.


தேவ, அசுர, மானிடர்களும் அஞ்சும் கிரகம் சனி பகவான் ஆவார்.சனிக்கு வரம்
தந்து, இக்கடமையைச் செய்ய வைத்த சனியின் குரு ஸ்ரீபைரவரே ஆவார்.சனியின் வாத
நோயை நீக்கியவரும் பைரவரே.


தன் தமையன் எமன், பைரவரிடம் அதீத சக்திக்கு வரம் பெற்றதைக் கண்ட அவன் தம்பி
சனீஸ்வரன்,பைரவரை நோக்கி கடுமையான தவம் இருந்தான்.தவ வலிமையால் பைரவர்
அவன் முன் தோன்றி,மும்மூர்த்திகள் உள்பட அனைவரையும்,கால வர்த்தமான
நிர்ணயப்படி(ஜோதிட ரீதியாக சனிப்பெயர்ச்சிப்படி) நல்லது தீயது செய்யும்
சக்தி அருளினார்.அப்போது சனீஸ்வரனிடம் ஒரு சத்தியப்பிரமாணம்
பெற்றுக்கொண்டார்.

சனீஸ்வரனின் சஞ்சாரத்தால் எவர் ஒருவருக்கு கஷ்டம் கொடுக்க
வேண்டியிருந்தாலும்,அவர்கள் பைரவரை வழிபட்டு சரணடைந்தால் அவரகளுக்கு
சனீஸ்வரன் நன்மையையே செய்ய வேண்டும் என பைரவபெருமானிடம் விரும்பினார்.

அதனால்தான் ,ஏழரை நாட்டுச்சனி,அஷ்டமச்சனி,ஜன்மச்சனியால் அவதிப்படுவோர் பைரவ
வழிபாடு பண்ணுவதன் மூலம் அத்தொல்லை களிலிருந்து விடுபட முடியும்.


பைரவரை வழிபாடு செய்வது எப்படி?

பைரவருக்கு
மிகவும் உகந்த நாள் அஷ்டமி என கருதப்படுகிறது.பொதுவாக,மக்கள் அஷ்டமி
அன்று எந்த நல்ல காரியமும் செய்ய மாட்டார்கள்.அதன் உண்மைக்காரணம் வேறு.

இறையாணைப்படி,அனைத்து ஜீவராசிகளுக்கும் எல்லா ஐஸ்வர்யங்களையும்
அள்ளித்தரும் பணியினை நிறைவேற்றுபவர்கள் அஷ்ட
லட்சுமிகள்.சொர்ணபைரவரிடம்,சக்திகளைப் பெற்று தாங்கள் பெற்ற அதனை
பக்தர்களுக்கு விநியோகம் செய்துவருகின்றனர்.தாங்கள் பெற்ற சக்தி குறைய
குறைய,ஒவ்வொரு அஷ்டமியிலும் பைரவரை வழிபாடு செய்து தங்கள் சக்தியை
பெருக்கிக் கொள்ளுகின்றார்கள்.அஷ்டமிஅன்று,அஷ்ட லட்சுமிகளே பைரவ
வழிபாட்டில் ஈடுபடுவதால்,அவர்களால் அன்று நடைபெறும் நற்காரியங்களில் ஈடுபட
முடியாது.

ஆகவே,அஷ்ட லட்சுமிகளே வழிபடும் அந்த அஷ்டமி நன்னாளில்,நாம் நேரடியாக
ஸ்ரீபைரவரை வணங்கிவந்தால்,அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.தேய்பிறை
அஷ்டமி,குறிப்பாக கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி பைரவ வணக்கத்திற்கு
மிகவும் சிறந்தது.

சாதாரணமாக,நாய் வாகனம் பைரவரின் பின்புறம் வலப்பக்கம் தலை உள்ளவாறு இருக்கும்.சில இடங்களில் இடப்பக்கம் தலை உள்ளவாறு இருக்கும்.


மிக அரிதாக,சில இடங்களில் மட்டுமே இருபக்கமும் நாய்வாகனங்களுடன் பைரவர்
காட்சி தருகிறார்.இவ்வாறு,இடப்பக்கம் மற்றும் இரு வாகனங்களுடன் உள்ள பைரவ
பெருமான்,மிகுந்த சக்தியுடன் விளங்குவதாக ஐதீகம்.ஏவல்,பில்லி சூனியம்,பேய்
பிசாசு முதலியவற்றின் தொல்லைகளிலிருந்து பூரண விடுதலை அடைய,வாழ்வில் வளம்
பெற,திருமணத்தடைகள் நீங்கிட,பிதுர்தோஷம்,சனி தோஷம்,வாஸ்து குறைபாடுகள்
நீங்கி பைரவர் வழிபாடு மிகவும் உதவும்.

தமிழகம் முழுவதும் இருக்கும் பழமையான சிவாலயங்களில் கோவிலின் பாதுகாவலராக பைரவர் இருக்கிறார்.அவரை வழிபாடு செய்தால் போதுமானது.



அஷ்ட பைரவர்,அவரது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள்


சந்திரனின் பிராண தேவதை கபால பைரவர்+இந்திராணியின் காயத்ரி மந்திரங்கள்

ஓம் கால தண்டாய வித்மஹே
வஜ்ர வீராய தீமஹி
தந்நோ: கபால பைரவ ப்ரசோதயாத்

ஒம் கஜத்வஜாய வித்மஹே
வஜ்ர ஹஸ்தாய தீமஹி
தந்நோ: இந்திராணி ப்ரசோதயாத்

யாருக்கெல்லாம் சந்திர மகாதிசை நடைபெறுகிறதோ,அவர்கள் தினமும் அவர்களின்
ஊரில் இருக்கும் பைரவர் சன்னிதியில் 9 இன் மடங்குகளில் இந்த காயத்ரி
மந்திரங்களை ஜபித்துவரவேண்டும்.இதனால்,சந்திர திசை யோக திசையாக
இருந்தால்,யோகங்கள் அதிகரிக்கும்.சந்திர திசை பாதகாதிபாதி திசையாக
இருந்தால்,கஷ்டங்கள் குறையும்.

செவ்வாயின் பிராண தேவதை சண்ட பைரவர்+கவுமாரி

ஓம் சர்வசத்ரு நாசாய வித்மஹே
மஹாவீராய தீமஹி
தந்நோ: சண்ட பைரவ ப்ரசோதயாத்

ஓம் சிகித்வஜாயை வித்மஹே
வஜ்ர ஹஸ்தாயை தீமஹி
தந்நோ; கவுமாரி ப்ரசோதயாத்

செவ்வாய் மகாதிசை நடப்பவர்கள்,இந்த மந்திரங்களை உங்கள் ஊரில் இருக்கும்
பைரவர் சன்னிதியில் தினமும் அல்லது செவ்வாய்க்கிழமைகளில் செவ்வாய் ஓரையில் 9
முறை ஜபித்துவருவது நல்லது.


புதனின் பிராணதேவதை உன்மத்த பைரவர்+ஸ்ரீவராஹி

ஓம் மஹா மந்த்ராய வித்மஹே
வராஹி மனோகராய தீமஹி
தந்நோ: உன்மத்த பைரவ ப்ரசோதயாத்

ஓம் மஹிஷத் வஜாயை வித்மஹே
தண்ட ஹஸ்தாயை தீமஹி
தந்நோ: வராஹி ப்ரசோதயாத்


புதன் மகாதிசை நடப்பவர்கள் ,பைரவர் சன்னிதியில் இந்த மந்திரத்தை ஐந்தின் மடங்குகளில் ஜபிக்கலாம்.

குருவின் பிராண தேவதை அசிதாங்க பைரவர்+பிராம்ஹி

ஓம் ஞான தேவாய வித்மஹே
வித்யா ராஜாய தீமஹி
தந்நோ:அசிதாங்க பைரவ ப்ரசோதயாத்


ஓம் ஹம்சத் வஜாய வித்மஹே
கூர்ச்ச ஹஸ்தாயை தீமஹி
தந்நோ: பிராம்ஹி ப்ரசோதயாத்

குருதிசை நடப்பவர்கள் பைரவ சன்னிதியில் ஜபிக்க வேண்டிய மந்திரங்கள்.


சுக்கிரனின் பிராண தேவதை ருரு பைரவர்+மாஹேஸ்வரி

ஓம் ஆனந்த ரூபாய வித்மஹே
டங்கேஷாய தீமஹி
தந்நோ: ருருபைரவ ப்ரசோதயாத்


ஓம் வருஷத் வஜாய வித்மஹே
ம்ருக ஹஸ்தாயை தீமஹி
தந்நோ: ரவுத்ரி ப்ரசோதயாத்

சுக்கிர மகாதிசை நடப்பவர்கள் ஜபிக்க வேண்டிய பைரவ காயத்ரி மந்திரங்கள்.


சனியின் பிராண தேவதை குரோதன பைரவர்+வைஷ்ணவி


ஓம் க்ருஷ்ண வர்ணாய வித்மஹே
லட்சுமி தராய தீமஹி
தந்நோ: குரோதன பைரவ ப்ரசோதயாத்


ஓம் தாக்ஷ்யாத் வஜாய வித்மஹே
சக்ர ஹஸ்தாயை தீமஹி
தந்நோ: வைஷ்ணவி ப்ரசோதயாத்

சனி மகாதிசை நடப்பவர்கள் ஜபிக்க வேண்டிய பைரவ காயத்ரிகள்.


ராகுவின் பிராண தேவதை சம்ஹார பைரவர்+சண்டீ

ஓம் மங்களேஷாய வித்மஹே
சண்டிகாப்ரியாய தீமஹி
தந்நோ:ஸம்ஹாரபைரவ ப்ரசோதயாத்

ஓம் சண்டீஸ்வரி ச வித்மஹே
மஹாதேவி ச தீமஹி
தந்நோ: சண்டி ப்ரசோதயாத்

ராகு தசை நடப்பில் இருப்பவர்கள் பைரவர் சன்னிதியில் ஜபிக்க வேண்டிய காயத்ரி மந்திரங்கள் இவை.


கேதுவின் பிராணதேவதை பீஷண பைரவர்+சாமுண்டி

ஓம் சூலஹஸ்தாய வித்மஹே
ஸர்வானுக்ராய தீமஹி
தந்நோ: பீஷணபைரவ ப்ரசோதயாத்


ஓம் பிசாசத் வஜாயை வித்மஹே
சூல ஹஸ்தாயை தீமஹி
தந்நோ; காளி ப்ரசோதயாத்


கேது மகாதிசை நடப்பில் இருப்பவர்கள் பைரவர் சன்னதியில் ஜபிக்க வேண்டிய காயத்ரி மந்திரங்கள்.

இவற்றில் தந்நோ: என்பதை தந்நோஹ் என்று உச்சரிக்க வேண்டும்.






ஸ்ரீ பைரவர் காயத்ரி மந்திரங்கள்
ஒம் ஷ்வானத் வஜாய வித்மஹே !
சூல ஹஸ்தாய தீமஹி !
தன்னோ பைரவ : ப்ரசோதயாத் !!


ஓம் சூல ஹஸ்தாய வித்மஹே
ஸ்வாந வாஹாய தீமஹி
தந்நோ பைரவ: ப்ரசோதயாத்


ஓம் திகம்பராய வித்மஹே
தீர்கதிஷணாய தீமஹி
தந்நோ பைரவ: ப்ரசோதயாத்


கால பைரவ அஷ்டகம்


தேவராஜஸேவ்யமானபாவனாம்க்ரிபங்கஜம்
வ்யாலயக்யஸுஉத்ரமின்துஷேகரம் க்ருபாகரம் .
நாரதாதியோகிவ்ரு‍ந்தவந்திதம் திகம்பரம்
காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..

பானுகோடிபாஸ்வரம் பவாப்திதாரகம் பரம்
நீலகண்டமீப்ஸிதார்ததாயகம் த்ரிலோசனம் .
காலகாலமம்புஜாக்ஷமக்ஷஷுஉலமக்ஷரம்
காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..
ஷூலடம்கபாஷதண்டபாணிமாதிகாரணம்
ஷ்யாமகாயமாதிதேவமக்ஷரம் நிராமயம் .
பீமவிக்ரமம் ப்ரபும் விசித்ரதாண்டவப்ரியம்
காஷிகாபுராதிநாதகாலபைரவம் பஜே ..

புக்திமுக்திதாயகம் ப்ரஷஸ்தசாருவிக்ரஹம்
பக்தவத்ஸலம் ஸ்திதம் ஸமஸ்தலோகவிக்ரஹம் .
வினிக்வணன்மனோக்யஹேம கிங்கிணீலஸத்கடிம்
காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..

தர்மஸேதுபாலகம் த்வதர்மமார்கனாஷனம்
கர்மபாஷமோசகம் ஸுஷர்மதாயகம் விபும் .
ஸ்வர்ணவர்ணஷேஷ்ஹபாஷஷோபிதாம் கமண்டலம்
காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..
ரத்னபாதுகாப்ரபாபிராமபாதயுக்மகம்
நித்யமத்விதியமிஷ்டதைவதம் நிரம்ஜனம் .
ம்ரு‍த்யுதர்பனாஷனம் கராலதம்ஷ்ட்ரமோக்ஷணம்
காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..

அட்டஹாஸபின்னபத்மஜாண்டகோஷஸம்ததிம்
த்ரு‍ஷ்டிபாத்தனஷ்டபாபஜாலமுக்ரஷாஸனம் .
அஷ்டஸித்திதாயகம் கபாலமாலிகாதரம்
காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..

பூதஸம்கனாயகம் விஷாலகீர்திதாயகம்
காஷிவாஸலோகபுண்யபாபஷோதகம் விபும் .
நீதிமார்ககோவிதம் புராதனம் ஜகத்பதிம்
காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..
காலபைரவாஷ்டகம் படம்தி யே மனோஹரம்
க்யானமுக்திஸாதனம் விசித்ரபுண்யவர்தனம் .
ஷோகமோஹதைன்யலோபகோபதாபனாஷனம்
ப்ரயான்தி காலபைரவாம்க்ரிஸன்னிதிம் நரா த்ருவம்

இதி ஸ்ரீமத் சங்கராசார்ய விரசிதம்
ஸ்ரீ காலபைரவாஷ்டகம் சம்பூர்ணம் ..




சொர்ணாகர்ஷண பைரவ மந்திரம்


ஓம் ஏம் க்லாம் க்லீம் க்லூம் ஹ்ராம் ஹ்ரீம்
ஹ்ரூம்ஸக: வம் ஆபத்துத்தாரணாய
அஜாமிலா பத்தாய லோகேஸ்வராய
ஸ்வர்ணாகர்ஷண பைரவாய
மம தாரித்தர்ய வித்வேஷணாய
ஓம் ஸ்ரீம் மஹா பைரவாய நம:


ஓம் பைரவாய வித்மஹே
ஆகர்ஷணாய தீமஹி
தந்நோஹ் சொர்ணபைரவ ப்ரசோதயாத்

ஓம் த்ரிபுராயை ச வித்மஹே
பைரவ்யை ச தீமஹி
தந்நோஹ் பைரவி ப்ரசோதயாத்



ஸ்ரீ பைரவ த்யானம்


ரக்த ஜுவால ஜடாதரம் சசிதரம்
ரக்தாங்க தேஜோமயம்
ஹஸ்தே சூலகபால பாச டமரும்
லோகஸ்ய ரக்ஷா கரம்
நிர்வாணம் ஸுநவாகனம்
திரிநயனஞ்ச அனந்த கோலாகலம்
வந்தே பூத பிசாச நாதவடுகம்
ஷேத்ரஷ்ய பாலம்சிவம் .


சகல செல்வங்களும் பெற,
நீதி கிடைக்க, பாவங்கள் அழிய, வேண்டுவன கிடைக்க, மரணபயம் நீங்கிட, மோட்சம்
கிடைக்க, ஆதி சங்கரர் அருளிய , மேலே கூறிய ஸ்ரீ கால பைரவ அஷ்டகம்
பாராயணம் செய்யவும்.



ஸ்ரீ பைரவ வழிபாடு மேற்கொள்ளும்
அன்பர்கள் சைவ உணவுப் பழக்கம் கொண்டவராக இருத்தல் வேண்டும். தினம்தோறும்
குளித்து முடித்து விட்டு பக்தியுடனும் ஆச்சாரத்துடனும் இந்த
ஸ்தோத்திரங்களைச் சொல்லி இறைவனைத் தொழ வேண்டும். புறதூய்மையோடு
அகத்தூய்மையும் மிக அவசியம். தொடர்ந்து 48 நாட்கள் தடையில்லாமல்
நம்பிக்கையோடு சொல்லி வர பலன் நிச்சயம்.


ஒவ்வொரு மனிதர்களின்
மனதுக்குள்ளும் தைரிய உணர்ச்சியாக இருப்பவர் பைரவர்.பைரவர்களில் வீட்டில்
வைத்து வழிபடத்தக்கவர் சொர்ண பைரவர் மட்டுமே!!!

தேய்பிறை அஷ்டமியன்று சொர்ண ஆகர்ஷண பைரவரை கோவிலுக்குச் சென்று அபிஷேகம்
செய்து வழிபட்டுவரவேண்டும்.இப்படி குறைந்தது எட்டு தேய்பிறை அஷ்டமிகளுக்கு
வழிபட்டுவர நமது செய்தொழில் அபாரமான வளர்ச்சியை அடையும்.

எந்த தொழில் செய்து நொடித்துப்போனாலும்,ஊருக்கெல்லாம் கடன் கொடுத்து அந்தப்
பணம் திரும்ப வராமல் போனதாலும்,செல்வச் செழிப்பிலிருந்து வறுமையின்
புதைகுழிக்குள் வீழ்ந்தவர்களும் தேய்பிறை அஷ்டமியன்று சொர்ண ஆகர்ஷண பைரவர்
வழிபாடு தொடர்ந்து செய்துவந்து மாபெரும் வெற்றியடையலாம்.

அரசியலில் மகத்தான பதவிகளை அடைய விரும்புவோர்கள் இதே வழிமுறையைப் பின்பற்றி உச்சத்துக்கு வந்துகொண்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் இருக்கும் சொர்ண ஆகர்ஷணபைரவர்களின் கோவில்கள் வருமாறு:

படப்பையில் ஸ்ரீஜெயதுர்கா பீடத்தில் அமரர் படப்பை சித்தர் சுவாமிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் அருகே அழிபடைதாங்கி என்னும் ஊரில் சொர்ணகால பைரவருக்கு தனி கோவில் இருக்கிறது.

சிதம்பரம் கனக சபையில் சொர்ண ஆகர்ஷணபைரவர் அருள்பாலிக்கிறார்.

கும்பகோணம் அருகில் திருச்சேறையில் காலபைரவரை வழிபட,கடன் தொல்லை நீங்கும்.

திருச்சியில் மலைக்கோட்டைக்கு தெற்கே பெரிய கடைவீதியில் சொர்ணபைரவநாத சுவாமி திருக்கோவில் இருக்கிறது.

திருமயம் அருகே இருக்கும் தபசுமலையில் சொர்ண ஆகர்ஷணபைரவர் கோவில் இருக்கிறது.

திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு என்னும் கிராமத்தில் அருள்மிகு சவுந்தர
ராஜப்பெருமாள் கோவிலில் சொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னிதி இருக்கிறது.மிகவும்
சக்திவாய்ந்த பைரவராக இருக்கிறார்.

தேவக்கோட்டையில் சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு தனிக்கோவில் இருக்கிறது.

விருதுநகரில் ரயில்வே நிலையம் அருகே சுடலை கோவில் அருகே சொர்ண ஆகர்ஷண பைரவர் ஒரு தனியார் கோவிலாக இருக்கிறது.

இனி,அடுத்துவரும் தேய்பிறை அஷ்டமி நாட்களின் பட்டியலை நாம் பார்ப்போம்:


26.3.11 சனி காலை 11.35 முதல் 27.3.11 ஞாயிறு காலை 11.12 வரை

24.4.11 ஞாயிறு நள்ளிரவு 12.44 முதல் 25.4.11 திங்கள் நள்ளிரவு 1.22 வரை

24.5.11 செவ்வாய் மதியம் 2.52 முதல் 25.5.11 புதன் மாலை 4.18 வரை

23.6.11 வியாழன் காலை 5.44 முதல் 24.6.11 வெள்ளி காலை 7.38 வரை

22.7.11 வெள்ளி இரவு 9 முதல் 23.7.11 சனி இரவு 10.52வரை

21.8.11 ஞாயிறு மதியம் 12.9 முதல் 22.8.11 திங்கள் மதியம் 1.25 வரை

19.9.11 திங்கள் நள்ளிரவு 2.44 முதல் 20.9.11 செவ்வாய் நள்ளிரவு 3.05வரை

19.10.11 புதன் மாலை 4.15 முதல் 20.10.11 வியாழன் மாலை 3.39 வரை

18.11.11 வெள்ளி விடிகாலை 4.58 முதல் நள்ளிரவு 3.31 வரை

17.12.11 சனி மாலை 4.36 முதல் 18.12.11 ஞாயிறு மாலை 2.35 வரை

15.1.12 ஞாயிறு நள்ளிரவு 3.38 முதல் 16.1.12 திங்கள் நள்ளிரவு 1.19 வரை

14.2.12 செவ்வாய் மதியம் 2.08 முதல் 15.2.12 புதன் காலை 11.52 வரை

14.3.12 புதன் நள்ளிரவு 12.18 முதல் 15.3.12 வியாழன் நள்ளிரவு 10.24 வரை

எல்லாம் சரி! ஏன் சொர்ண ஆகர்ஷண பைரவரை அஷ்டமியில் வழிபட வேண்டும்?

நமக்குச் செல்வச்செழிப்பைத் தருவது அஷ்ட லட்சுமிகளே! இவர்கள் வரம் தந்து
கொண்டே இருப்பதால்,இவர்களின் சக்தி குறைந்துகொண்டே வரும்.அப்படி குறையும்
சக்தியை ஒவ்வொரு அஷ்டமியிலும்,அதுவும் தேய்பிறை அஷ்டமியிலும் சொர்ண ஆகர்ஷண
பைரவரை வழிபட்டே பெருக்கிவருகின்றனர்.இது எப்பேர்ப்பட்ட தேவரகசியம்!!!

மனிதர்களாகிய நாமும் அதே தேய்பிறை அஷ்டமியன்று சொர்ண ஆகர்ஷண பைரவரை
வழிபட,அஷ்ட லட்சுமிகளின் ஆசியும்,சொர்ண ஆகர்ஷண பைரவரின் வரங்களும்
ஒருங்கிணைந்து கிடைத்துவிடும்.

ஓம்சிவசிவஓம்..............

இறைத்தொண்டில் அன்பன் கை. வீரமுனி (ஆன்மீகக் கடல் ) :
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum