HinduSamayam
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

HinduSamayam
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
HinduSamayam
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்
by vpoompalani March 24th 2016, 13:59

» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26

» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17

» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06

» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07

» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58

» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24

» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35

» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52

» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20

» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18

» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37

» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47

» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19

» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46

» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49

» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37

» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07

» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29

» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38

» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55

» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00

» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49

» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28

» திருத்தல யாத்திரை  ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51

» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33

» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46

» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28

» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13

» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29

» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15

» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10

» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29

» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54

» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38

» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42

» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32

» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01

» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20

» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00

தமிழர்களின் சிந்தனைகளம்
Related Posts Plugin for WordPress, Blogger...



நக்கீரதேவ நாயனார் அருளிய திருக்கண்ணப்ப தேவர் திருமறம்

Go down

நக்கீரதேவ நாயனார் அருளிய திருக்கண்ணப்ப தேவர் திருமறம்  Empty நக்கீரதேவ நாயனார் அருளிய திருக்கண்ணப்ப தேவர் திருமறம்

Post by மாலதி February 20th 2013, 19:13

63 நாயன்மார்களில் ஒருவராகிய கண்ணப்ப நாயனார்
தம்முடைய கண்ணையிடத்து சிவபெருமானுக்கு அப்புதலாகிய மாபெரும் வீரத்தைச்
செய்தவராதலின் அவர்மீது மறம் என்னும் இப்பாட்டுப் பாடப்பட்டது.

இது 158 அடிகளால் ஆக்கப் பெற்ற ஆசிரியப்பாவாகும்.

சேக்கிழார் பாடிய கண்ணப்ப நாயனார் புராணத்துக்கு இப்பாட்டு ஆதாரமாகும்.

திருச்சிற்றம்பலம்

திருக்கண்ணப்பன் செய்தவத் திறத்து
விருப்புடைத் தம்ம விரிகடல் உலகே, பிறந்தது
தேனிழித்து ஊனூண் கானவர் குலத்தே, திரிவது
பொருபுலி குமுறும் பொருப்பிடைக் காடே, வளர்ப்பது
செங்கண் நாயொடு தீவகம் பலவே, பயில்வது

விரிகடல் உலகு, திருக்கண்ணப்பரது செய்தவத் திறத்தில் விருப்புடையதாக
இருக்கிறது. அவர் தேன் அழித்து, ஊன் உண்ணும் கானவர் குலத்தில் பிறந்தார்.
அவர், போர் குணமுடைய புலிகள் குமுறுகின்ற பொருப்பிடைக் காட்டில்
திரிந்தார். அவர், சிறந்த கண்களையுடைய நாய்களையும் பார்வை மிருகங்கள்
பலவற்றையும் வளர்த்தார்.
**************************************************
வெந்திறற் சிலையொடு வேல்வாள் முதலிய
அந்தமில் படைக்கலம் அவையே, உறைவது
குறைதசை பயின்று குடம்பல நிரைத்துக்
கறைமலி படைக்கலம் கலந்த புல்லொடு
பீலி மேய்ந்தவை பிரிந்த வெள்ளிடை
வாலிய புலித்தோல் மறைப்ப வெள்வார்

அவர், கொடிய திறலுடைய வில்லோடு, வேல், வாள், முதலிய எண்ணற்ற
படைக்கலங்களையும் பயின்றார். அவர் குறை தசை பயின்று, குடம் பல நிறைந்து,
கறைமலி படைக்கலங் கலந்த புல்லொடு பீலி வேய்ந்த குடிசையில் வாழ்ந்தார்.
பிரிந்த வெள்ளிடையை ஒளி பொருந்திய புலித்தோல் மறைத்தது.
**************************************************
இரவும் பகலும் இகழா முயற்றியொடு
மடைத்த தேனும் வல்நாய் விட்டும்
சிலைவிடு கணையிலும் திண்சுரி கையிலும்
பலகிளை அவையொடும் பதைப்பப் படுத்துத்
தொல்லுயிர் கொல்லும் தொழிலே, வடிவே

வெள்வார் இரவும் பகலும் குறையாத முயற்சியோடு உண்ணுதற்குரிய தேனுடன்,
வல்லமை பொருந்திய நாய்களை முன் விட்டு வில்லில் வைத்துச் செலுத்துகின்ற
அம்புகளுடன் திண்ணிய உடைவாளோடு பல உதவியாளரோடு வேட்டையாடி பல உயிர்களைக்
கொல்வதே அவருடைய தொழிலாகும்.
**************************************************
மறப்புலி கடித்த வன்திரள் முன்கை
திறற்படை கிழித்த திண்வரை அகலம்
எயிற்றெண்கு கவர்ந்த இருந்தண் நெற்றி
அயிற்கோட் டேனம் படுத்தெழு குறங்கு
செடித்தெழு குஞ்சி செந்நிறத் துறுகண்
கடுத்தெழும் வெவ்வுரை அவ்வாய்க் கருநிறத்து
அடுபடை பிரியாக் கொடுவிரல் அதுவே, மனமே

வீரப்புலி கடித்த வலிய திரண்ட முன்கையையும் வலிய ஆயுதங்கள் கிழித்த
கெட்டியான மலை போன்ற மார்பையும் உடையது அவரது வடிவம். இவையே யன்றி, நீண்ட
பற்களையுடைய கரடி கவர்ந்த இருந்தண் நெற்றியும், வேல் போன்ற கொம்பினையுடைய
காட்டுப்பன்றி படுத்தெழுகின்ற தொடையும், செடியைப் போல எழுந்து விளங்குகின்ற
தலை மயிரும், செந்நிறங் கொண்ட கூர்மையான கண்களும், கோபத்தோடு எழும் கொடிய
சொற்களை யுடைய வாழும் கருநிறத்துக் கொடிய ஆயுதங்களைப் பிரியாத அவருடைய
வீரமும் கொண்டது அவரது உருவமாகும்.
**************************************************
மிகக்கொலை புரியும் வேட்டையில் உயிர்கள்
அகப்படு துயருக்கு அகனமர்ந் ததுவே, இதுஅக்
கானத் தலைவன் தன்மை; கண்ணுதல்

அவருடைய மனம் எத்தகையது என்றால் மிகக் கொலை புரியும் வேட்டையில், உயிர்கள்
அகப்படு துயருக்கு மிகவும் பொருத்தமுடையது. இதுவே அந்தக் கானத் தலைவனது
தன்மையாகும்.
**************************************************
வானத் தலைவன் மலைமகள் பங்கன்
எண்ணரும் பெருமை இமையவர் இறைஞ்சும்
புண்ணிய பாதப் பொற்பார் மலரிணை
தாய்க்கண் கன்றெனச் சென்றுகண் டல்லது
வாய்க்கிடும் உண்டி வழக்கறி யானே, அதாஅன்று

நெற்றிக் கண்ணையுடையவரும், வானத் தலைவரும், உமாதேவியை இடப்பாகத்தில்
வைத்துள்ளவரும் எண்ணற்ற பெருமைகளை யுடைய தேவர்கள் வழிபடும் புண்ணியருமான
அவருடைய பொற்பார் இரண்டு மலர்ப் பாதங்களைத் தாயைக் கண்ட கன்று போலச் சென்று
கண்ட பிறகே உணவு கொள்ளும் தன்மையுடையவர். அதுவுமல்லாமல்,
**************************************************
கட்டழல் விரித்த கனற்கதிர் உச்சியிற்
சுட்டடி இடுந்தொறும் சுறுக்கொளும் சுரத்து
முதுமரம் நிரந்த முட்பயில் வளாகத்து
எதிரினங் கடவிய வேட்டையில் விரும்பி
எழுப்பிய விருகத் தினங்களை மறுக்குறத்
தன்நாய் கடித்திரித் திடவடிக் கணைதொடுத்து
எய்து துணித்திடும் துணித்த விடக்கினை
விறகினிற் கடைந்த வெங்கனல் காய்ச்சி
நறுவிய இறைச்சி நல்லது சுவைகண்டு
அண்ணற்கு அமிர்தென்று அதுவேறு அமைத்துத்

நெருப்புப் போன்ற வெப்பத்தை யுடைய உச்சி வேளையில் கால் சுடும் பாலையில்
பழைமையான மரங்களும் முட்களும் கலந்த பகுதியில் மேற் கொண்ட வேட்டையில்
இவர்கள் எழுப்பிய காட்டு மிருகங்களை நாய் துரத்திக் கடித்து இரித்திட அம்பு
தொடுத்துக் கொன்று துணி ஊனை, விறகினைக் கடைந்து வெங்கனலில் காய்ச்சி
நறுமணமுள்ள நல்ல இறைச்சி இது என்று சுவைகண்டு, அண்ணற்கு அமிர் தென்று அதைத்
தனியாக எடுத்து வைத்து,
**************************************************
தண்ணறுஞ் சுனைநீர் தன்வாய்க் குடத்தால்
மஞ்சன மாக முகந்து மலரெனக்
குஞ்சியில் துவர்க்குலை செருகிக் குனிசிலை
கடுங்கணை அதனொடும் ஏந்திக் கனல்விழிக்
கடுங்குரல் நாய்பின் தொடர யாவரும்
வெருக்கோ ளுற்ற வெங்கடும் பகலில்
திருக்கா ளத்தி எய்திய சிவற்கு
வழிபடக் கடவ மறையோன் முன்னம்

குளிர்ந்த சுனைநீரைத் தன்வாய்க் குடத்தால் மஞ்சனமாக முகந்து, மலரெனத்
தலைமுடியில் துவர்க்குலை செருகி, வளைந்த வில்லையும் கொடிய களைகளையும்
அதனோடும் ஏந்தி, நெருப்புப் போன்ற கண்களையும் கடுமையான குரலையும் உடைய நாய்
பின் தொடர, யாவரும் கண்டு நடுங்கும் வெங்கொடும் பகலில் திருக்காளத்தியில்
எழுந்தருளியிருக்கும் சிவபெருமானுக்கு வழிபாடு செய்யும் சிவகோசரியார்
முன்பு,
**************************************************
துகிலிடைச் சுற்றித் தூநீர் ஆட்டி
நல்லன விரைமலர் நறும்புகை விளக்கவி
சொல்லின பரிசில் சுருங்கலின் பூவும்
பட்ட மாலையும் தூக்கமும் அலங்கரித்து
அருச்சுனை செய்தாங்கு அவனடி இறைஞ்சித்
திருந்த முத்திரை சிறப்பொடும் காட்டி
மந்திரம் எண்ணி வலமிடம் வந்து
விடைகொண் டேகின பின்தொழில்

இலிங்கத்திற்கு நீராட்டி, ஆடை உடுத்தி, நல்ல மணமுள்ள மலர்களைச் சூட்டி,
நறும்புகையும் விளக்கும் காட்டி திருவமுதைப் படைத்து, (அதாவது தூப தீப
நைவேத்தியங்களை முறைப்படி செய்து என்க) மந்திரங்களைச் சொல்லி ஆபரணங்கள்,
பூமாலை, காதணி இவைகளைக் கொண்டு அலங்கரித்து அருச்சனை செய்து இறைவனது
பாதங்களில் வணங்கி, திருந்த முத்திரை சிறப்பொடுங் காட்டி, மந்திரம் சொல்லி,
சுவாமியை வலம் வந்து அவர் சென்ற பிறகு,
**************************************************
பூசனை தன்னைப் புக்கொரு காலில்
தொடுசெருப்(பு) அடியால் நீக்கி வாயில்
இடுபுனல் மேனியில் ஆட்டித் தன்தலைத்
தங்கிய துவர்ப்பூ ஏற்றி இறைச்சியில்
பெரிதும் போனகம் படைத்துப் பிரானைக்
கண்டுகண்(டு) உள்ளங் கசிந்து காதலில்
கொண்டதோர் கூத்துமுன் ஆடிக் குரைகழல்
அன்பொடும் இறுக இறைஞ்சி ஆரா
அன்பொடு கானகம் அடையும் அடைந்த

கண்ணப்பர், பூசை செய்யத் தொடங்கினார். காலில் இருந்த செருப்பினால் முன்பு
இட்டிருந்தவற்றை அப்புறப்படுத்தினார். வாயில் இருந்த நீரால் நீராட்டினார்.
தன் தலையில் செருகியிருந்த செந்நிறப் பூக்களைச் சுவாமியின் தலைமீது
அணிவித்து இறைச்சியாகிய உணவைப் படைத்து, சிவபிரானை உற்று நோக்கி, உள்ளங்
கசிந்து, அன்பினால் சுவாமியின் முன் கூத்தாடி குரைகழல் அன்பொடு இறுக
வணங்கி, தெவிட்டாத அன்போடு காட்டை அடைந்தார்.
**************************************************
அற்றை அயலினிற் கழித்தாங்கு இரவியும்
உதித்த போழ்தத்து உள்நீர் மூழ்கி
ஆதரிக்கும் அந்தணன் வந்து
சீரார் சிவற்குத் தான்முன் செய்வதோர்
பொற்புடைப் பூசனை காணான் முடிமிசை
ஏற்றிய துவர்கண்(டு) ஒழியான் மறித்தும்
இவ்வா(று) அருச்சனை செய்பவர் யாவர்கொல் என்று
காத்திருந்(து) அவன்அக் கானவன் வரவினைப்
பரந்த காட்டிடைப் பார்த்து நடுக்குற்று

இரவு, மறுநாள் காலை, நீராடி, ஆதரிக்கும் அந்தணன் வந்து சிறப்புடைய
சிவபெருமானுக்குத் தான் வழக்கமாய்ச் செய்யும் பூசையைக் காணாதவராகி, இவ்வாறு
பூசை செய்தவர் யார் என்று காணும் பொருட்டு, தூரத்தில் வந்து கொண்டிருந்த
வேடுவனைக் கண்டு பயந்து,
**************************************************
வந்தவன் செய்து போயின வண்ணம்
சிந்தையிற் பொறாது சேர்விடம் புக்கு
மற்றை நாளும்அவ் வழிப்பட்டு இறைவ
உற்றது கேட்டருள் உன்தனக்கு அழகா
நாடொறும் நான்செய் பூசனை தன்னை
ஈங்கொரு வேடுவன்
நாயொடும் புகுந்து மிதித் துழக்கித்
தொடுசெருப் படியால் நீக்கி வாயில்
இடுபுனல் மேனியில் ஆட்டித் தன்தலை
தங்கிய சருகிலை உதிர்த்தோர் இறைச்சியை
நின்திருக் கோயிலில் இட்டுப் போமது
என்றும் உன்தனக்கு இனிதே எனையுருக்

வந்தவன் செய்துவிட்டுப் போன விதத்தைக் கண்டு மனம் பொறுக்காமல், தன் வீடு
சேர்ந்து, மறுநாளும் அவ்வாறு வழிபடப்பட்ட விதத்தை அறிந்து இறைவா! இது
உனக்கு அழகோ? நாள்தோறும் நான் செய்யும் பூசனையை இங்கொரு வேடுவன் நாயுடன்
வந்து புகுந்து, மிதித்து உழக்கி, செருப்பினால் அப்புறப்படுத்தி, வாயில்
கொண்டு வந்த நீரினால் உன் மேனியை நீராட்டி, அவன் தலையில் செருகி
வைத்திருந்த சருகுகளையும் இலைகளையும், எடுத்துச் சாத்தி, இறைச்சியை உன்
திருக்கோயிலில் இட்டுப் போவது உனக்கு இனிதோ?
**************************************************
காணில் கொன்றிடும் யாவ ராலும்
விலக்குறும் குணத்தன் அல்லன் என்றும்
திருக்குறிப்(பு) என்றவன் சென்ற அல்லிடைக்
கனவில்ஆ தரிக்கும் அந்தணன் தனக்குச்
சீரார் திருக்கா ளத்தியுள் அப்பன்
பிறையணி இலங்கு பின்னுபுன் சடைமுடிக்
கறையணி மிடற்றுக் கனல்மழுத் தடக்கை
நெற்றி நாட்டத்து நிறைநீற் றாக
ஒற்றை மால்விடை உமையொடு மருங்கில்
திருவுருக் காட்டி அருளிப்

என்னை அவன் காணில் கொன்று விடுவான் என்று சிவகோசிரியார் முறையிட்டார்.
அதற்கு இறைவன் அன்றிரவு அந்தணர் கனவில் தோன்றி, அவன் கொடியவன் அல்லன்;
என்று கூறினார். அந்தக் காட்சியை ஆசிரியர் விவரிக்கும் பாங்கைப் பாருங்கள்!
சிறப்புடைய திருக் காளத்தியப்பன் பிறையணிந்த சடை முடியோடும், கறையணி
மிடற்றோடும், கனல் மழு தடக்கையோடும், நெற்றிக் கண்ணோடும், நிறைந்த
திருநீற்றோடும், காளை மீது இவர்ந்து, உமாதேவியோடு காட்சியளித்து,
**************************************************
புரிவொடு பூசனை செய்யும்
குணிசிலை வேடன் குணம் அவை ஆவன
உரிமையிற் சிறந்தநன் மாதவன் என்றுணர்
அவன்உகந் தியங்கிய இடம்முனி வனம்அதுவே; அவன்
செருப்படி யாவன விருப்புறு துவலே
எழில் அவன் வாயது தூயபொற் குடமே
அதனில் தங்குநீர் கங்கையின் புனலே
புனற்கிடு மாமணி அவன்நிரைப் பல்லே
அதற்கிடு தூமலர் அவனது நாவே
உப்புனல் விடும்பொழுது உருஞ்சிய மீசைப்
புன்மயிர் குசையினும் நம்முடிக்கு இனிதே; அவன்தலை
தங்கிய சருகு இலை தருப்பையிற் பொதிந்த
அங்குலி கற்பகத் தவரே; அவன் உகந்து
இட்ட இறைச்சி எனக்குநன் மாதவர்
இட்ட நெய்பால் அவியே
இதுஎனக்கு உனக்கவன்
கலந்ததோர் அன்பு காட்டுவன் நாளை
நலந்திகழ் அருச்சனை செய்தாங்கு இருவென்று
இறையவன் எழுந்த ருளினன்

அந்த வேடன் அன்போடு செய்கின்ற பூசை எத்தகையது என்றால், அவன் சிறந்த
மாதவன்; அவன் விரும்பி வாழும் இடம் முனிவர்கள் வாழும் வனம். அவன்
செருப்படிகள் நான் விரும்பும் பூ. அவனுடைய வாய் ஆனது அழகுடைய தூய பொற்
குடமாகும். அதில் தங்கியுள்ள நீர் கங்கை நீராகும். புனலுக்கு இடுகின்ற
மாமணி வரிசையான பல் இரத்தினம் ஒக்கும். அதற்கு இடும் தூமலர் அவனது நாவாகும்
வாயிலுள்ள நீரை விடும்போது உரிஞ்சிய மீசைப் புன்மயிர் தருப்பையோடு கூடிய
மோதிரம். கற்பகத்து அலருமாகும். அவன் விரும்பியளித்த இறைச்சி எனக்கு
நன்மாதவர் இட்ட நெய்பால் அவியுணவாகும் இது எனக்கு. உனக்கு அவன் கலந்ததோர்
அன்பைக் காட்டுவன். நாளையதினம் நீ பூசையைச் செய்த பிறகு மறைந்திரு என்று
இறையவன் எழுந்தருளினன்.
**************************************************
அருளலும் மறையவன் அறிவுற்று எழுந்து
மனமிகக் கூசி வைகறைக் குளித்துத்
தான்முன் செய்வதோர்
பொற்புடைப் பூசனை புகழ்தரச் செய்து
தோன்றா வண்ணம் இருந்தனன் ஆக, இரவியும்

இவ்வாறு இறைவன் அருள் செய்து மறைந்ததும், அந்தணன் அறிவுற்றெழுந்து மனம்
மிகக் கூசி, வைகறைக் குளித்து, தான் முன் செய்வதோர் பொற்புடைப் பூசையைச்
சிறப்பாகச் செய்து ஒரு முறை விடத்தில் ஒளிந்திருந்தான்.
**************************************************
வான்தனி முகட்டில் வந்தழல் சிந்தக்
கடும்பகல் வேட்டையில் காதலித்து அடித்த
உடும்பொடு சிலைகணை உடைத்தோல் செருப்புத்
தொடர்ந்த நாயொடு தோன்றினன் தோன்றலும்

சூரியன் உச்சிப் பொழுதில் வெயிலைக் கடுமையாக வீச, கடும் பகல் வேட்டையில்
கண்ணப்பர் விரும்பிக் கொண்டு வந்த உடும்போடு, வில், அம்பு, உடைத்தோல்,
செருப்பு, தொடர்ந்து வந்த நாயோடு வந்து சேர்ந்தார்.
**************************************************
செல்வன் திருக்கா ளத்தியுள் அப்பன்
திருமேனியின் மூன்று கண்ணாய்
ஆங்கொரு கண்ணிலும் உதிரம்
ஒழியாது ஒழுக இருந்தன னாகப்
பார்த்து நடுக்குற்றுப் பதைத்து மனஞ்சுழன்று
வாய்ப்புனல் சிந்தக் கண்ணீர் அருவக்
கையில் ஊனொடு கணைசிலை சிந்த
நிலப்படப் புரண்டு நெடிதினில் தேறிச்
சிலைக்கொடும் படைகடிது எடுத்திதுப் படுத்தவர்
அடுத்தஇவ் வனத்துளர் எனத்திரிந் தாஅங்கு

வந்ததும் செல்வனாகிய திருக்காளத்தியப்பனது திருமேனியின் மூன்று கண்களில்
ஒரு கண்ணில் இரத்தம் நிற்காமல் ஒழுகிக் கொண்டிருந்தது. அதைக் கண்ணப்பர்
கண்டதும் நடுங்கி, பதைத்து, மனம் சுழன்று, வாயிலிருந்த நீர் சிந்த, கண்ணீர்
பெருக, கையிலிருந்த இறைச்சியோடு அம்பு வில் யாவும் சிதறின. அவர் தரையில்
விழுந்து புரண்டு, பிறகு ஒருவாறு மனம் தேறி, வில்லையும் மற்ற ஆயுதங்களையும்
விரைந்து எடுத்து, இவ்வாறு செய்தவர் அடுத்துள்ள காட்டில் யாராக இருக்கும்?
என்று திரிந்தார்.
**************************************************
இன்மை கண்டு நன்மையில்
தக்கன மருந்துகள் பிழியவும் பிழிதொறும்
நெக்கிழி குருதியைக் கண்டுநிலை தளர்ந்தென்
அத்தனுக்கு அடுத்ததென் அத்தனுக்கு அடுத்ததென் என்று
அன்பொடும் கனற்றி
இத்தனை தரிக்கிலன் இதுதனைக் கண்டஎன்
கண்தனை இடந்து கடவுள்தன் கண்ணுறு
புண்ணில் அப்பியும் காண்பன் என்றொரு கண்ணிடைக்
கணையது மடுத்துக் கையில் வாங்கி
அணைதர அப்பினன் அப்பலுங் குருதி

அங்கு யாரும் இல்லாமை கண்டு, நல்ல தகுந்த மருந்துத் தழைகளைக் கொண்டு வந்து
பிழிந்தார். அப்போதும் குருதி நிற்கவில்லை. நிலை தளர்ந்தார். என்
அத்தனுக்கு என்ன நேர்ந்தது? என்று பலமுறை அன்பொடு அழுது அரற்றி இதை என்னால்
பொறுக்க முடியாது. இதைக் கண்ட என் கண்ணைப் பெயர்த்து எடுத்து, இறைவனது
கண்ணில் ஏற்பட்ட புண்ணில் அப்புவேன் என்று ஒரு கண்ணிடை அம்பைப் பாய்ச்சி,
கையில் அதை எடுத்து இறைவனது கண்ணில் வைத்து அப்பினார்.
**************************************************
நிற்பதொத்து உருப்பெறக் கண்டுநெஞ்சு உகந்து
மற்றைக் கண்ணிலும் வடிக்கணை மடுத்தனன் மடுத்தலும்
நில்லு கண்ணப்ப நில்லு கண்ணப்ப என்
அன்புடைத் தோன்றல் நில்லு கண்ணப்ப என்று
இன்னுரை அதனொடும் எழிற் சிவலிங்கம்
தன்னிடைப் பிறந்த தட மலர்க்கையால்
அன்னவன் தன்கை அம்பொடும் அகப்படப் பிடித்து
அருளினன் அருளலும்

அவ்வாறு அப்பவும், இரத்தம் நின்றது கண்டு மகிழ்ச்சி யடைந்தார். ஆனால்
மற்றக் கண்ணிலும் இரத்தம் ஒழுக ஆரம்பித்தது. உடனே கண்ணப்பர் தன் அம்பை
மற்றக் கண்ணில் பாய்ச்சினார். உடனே இறைவன், நில்லு கண்ணப்ப, நில்லு கண்ணப்ப
என்று இனிமையாகக் கூறி, அதனோடு சிவலிங்கத்திலிருந்து தோன்றிய தடமலர்க்
கையால் கண்ணப்பருடைய கையில் உள்ள அம்போடு பிடித்து அருளினன்.
**************************************************
விண்மிசை வானவர்
மலர்மழை பொழிந்தணர் வளையொலி படகம்
துந்துபி கறங்கின தொல்சீர் முனிவரும்
ஏந்தினர் இன்னிசை வல்லே
சிவகதி பெற்றனன் திருக்கண் ணப்பனே.

அவ்வாறு அருளவும் வானத்தில் தேவர்கள் தோன்றி மலர் மழை பொழிந்தனர்.
வளையொலி, படகம், துந்துபி முதலியன முழங்கின. தொல்சீர் முனிவரும் ஏத்தினர்.
திருக்கண்ணப்பர் இன்னிசை வல்லே சிவகதி பெற்றனர்.
**************************************************
வெண்பா

தத்தையாம் தாய்தந்தை நாகனாம் தன்பிறப்புப்
பொத்தப்பி நாட்டுடுப்பூர் வேடுவனாம் - தித்திக்கும்
திண்ணப்ப னாஞ்சிறுபேர் செய்தவத்தால் காளத்திக்
கண்ணப்ப னாய்நின்றான் காண்.

தாயின் பெயர் தத்தை, தந்தையின் பெயர் நாகன், அவர் பிறந்தது பொத்தப்பி
நாடு, ஊர் உடுப்பூர், வேடுவர் குலத்தில் பிறந்தார். அவரது பிள்ளைத்
திருநாமம் திண்ணப்பன். அவர் செய்த முன் தவப் பயனால் காளத்திக் கண்ணப்பனாய்
நின்றார். அறிவாயாக என்பதாம்.,
**************************************************
திருச்சிற்றம்பலம்
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum