HinduSamayam
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

HinduSamayam
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
HinduSamayam
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்
by vpoompalani March 24th 2016, 13:59

» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26

» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17

» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06

» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07

» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58

» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24

» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35

» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52

» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20

» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18

» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37

» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47

» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19

» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46

» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49

» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37

» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07

» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29

» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38

» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55

» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00

» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49

» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28

» திருத்தல யாத்திரை  ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51

» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33

» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46

» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28

» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13

» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29

» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15

» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10

» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29

» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54

» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38

» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42

» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32

» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01

» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20

» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00

தமிழர்களின் சிந்தனைகளம்
Related Posts Plugin for WordPress, Blogger...



உங்களின் அனைத்து விசேஷத்திற்கும் நீங்களே நல்ல நாள் பார்க்க எளிய வழி!

Go down

உங்களின் அனைத்து விசேஷத்திற்கும் நீங்களே நல்ல நாள் பார்க்க எளிய வழி! Empty உங்களின் அனைத்து விசேஷத்திற்கும் நீங்களே நல்ல நாள் பார்க்க எளிய வழி!

Post by மாலதி June 30th 2012, 18:02

ஒவ்வொரு காலகட்டத்திலும் அவரவர் குடும்பங்களில் புதுமனை புகுதல்,
காதுகுத்துதல், திருமணம் என்று ஏதாவது ஒரு சடங்குகள் நிகழ்ந்து கொண்டேதான்
இருக்கும். அப்படிப்பட்ட சமயங்களில் அனைவரும் தினசரி காலண்டரையோ அல்லது
பஞ்சாங்கத்தையோ பார்த்து தான் நாள் குறிப்போம். ஒரு சிலர் ஏதாவது ஒரு
ஜோசியர் அல்லது கோயில் குருக்களிடம் கேட்டு நல்ல நாள் குறிப்பார்கள்.
மேல்நோக்கு நாள், அமிர்தயோக நாள், சுபமுகூர்த்த நாள் என பொதுவாகப் பார்த்து
நாள் குறிக்காமல் அவரவர் ராசி, நட்சத்திரம், பிறந்த தேதி, கிழமை இவற்றை
அடிப்டையாகக் கொண்டு நாமே நல்ல நாள் பார்க்கலாம்.

நாள் என்ன செய்யும்?

நாள் (வாரம்), திதி, நட்சத்திரம், யோகம், கர்ணம் என்ற ஐந்தும் சேர்ந்ததே
பஞ்சாங்கம். இந்த ஐந்தும் அடங்கிய பஞ்சாங்கத்தில் முதல் அங்கமாக வருவது
வாரம் அதாவது கிழமை அல்லது நாட்கள். பஞ்சாங்கத்தில் நம் முன்னோர்கள்
என்றைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்பதற்குக் கூட நாள்
குறித்து வைத்திருக்கிறார்கள். ஞாயிறு, திங்கள், புதன், வியாழன், வெள்ளி
ஆகிய கிழமைகள் திருமணம், ஹோமம், சாந்திகள் போன்ற நற்காரியங்களுக்கு
விசேஷமானவை. செவ்வாய் நெருப்பு கிரகம் என்பதால் செவ்வாய்க் கிழமை அக்னி
சம்பந்தமான செயல்களுக்குரியது. சனிக்கிழமை இயந்திர சம்பந்தமான பணிகளுக்கு
உரிய நாள்.

ஞாயிற்றுக்கிழமை: சூரியன் ஆரோக்கியத்தை அளிப்பவன்.
அதனால் நீண்டகால பிணிகளுக்கு மருத்துவர் ஆலோசனை பெற்று மருந்து உண்ண
ஆரம்பிக்கலாம். வடக்கு திசை நோக்கி பயணம் செய்யலாம். அரசுப்பணித் தொடர்பான
விஷயங்களுக்காக உரிய அலுவலர்களை நேரில் சந்திக்கலாம்.

திங்கட்கிழமை: தென்திசை நோக்கி பயணம் செய்யலாம்.
கிருகப் பிரவேசம் நடத்தலாம். காதுகுத்துதல், பெண் பார்த்தல், ருது சாந்தி
செய்தல் (சாந்தி முகூர்த்தம்), சீமந்தம், விருந்து உண்ணல் போன்ற விசேஷங்களை
செய்யலாம். ஆடுமாடு வாங்குதல், விதையிடுதல், உரமிடல், வியாபராம்
துவங்குதல் ஆகியவையும் செய்யலாம்.

செவ்வாய்க்கிழமை: கிழக்கு திசை நோக்கி பயணம்
செய்யலாம். வாங்கிய கடனை அடைத்தல், வயலுக்கு உரமிடல், செங்கல் சூளைக்கு
நெருப்பிடுதல் ஆகியன செய்ய ஏற்ற நாள் இது. செவ்வாய்க்கிழமைகளில் பொருள்
வாங்கினால் அது வருவாயைப் பெருக்கும். அதனால் வீட்டில் செல்வம் பெருகும்.

புதன் கிழமை: மேற்கு திசை நோக்கி பயணம் செய்யலாம்.
புதிய ஆராய்ச்சி, எழுத்துப் பணிகளைத் துவங்கலாம். வழக்குகள் சம்பந்தமாக
வழக்கறிஞரை சந்தித்தல், புதுமனை புகுதுல், குளம், ஏரி, கிணறு வெட்டுதல்,
நிலத்தை உழுதல், விதையிடுதல், அறுவடை செய்தல், காது குத்துதல், சீமந்தம்,
விருந்து உண்ணல் போன்ற சுபகாரியங்கள் செய்யலாம். கல்வி, கலை போன்றவற்றைக்
கற்க ஆரம்பித்தல் ஆகியவற்றுக்கு ஏற்ற நாள் இது.

வியாழக்கிழமை: மேற்குதிசையில் பயணிக்கலாம். புதிய
பணியில் சேரலாம். வங்கிப் பணிகள் கவனித்தல், பெரிய மனிதர்களை சந்தித்தல்,
சீமந்தம், ருது சாந்தி, காது குத்துதல், கிருகப் பிரவேசம், விவசாயம்
சம்பந்தப்பட்ட பணிகள் இவற்றைச் செய்ய ஏற்ற தினம்.

வெள்ளிக்கிழமை: வடதிசை நோக்கி பயணம் செய்யலாம். பெண்
பார்க்கச் செல்லலாம். காது குத்துதல், சாந்தி முகூர்த்தம், புதிய வாகனங்கள்
வாங்குதல், நிலத்தினை உழுதல், உரமிடல் இவற்றைச் செய்ய ஏற்ற நாள் இது.

சனிக்கிழமை: தென்திசை நோக்கி பயணம் செய்யலாம். பூமி
தொடர்பான விஷயங்கள் அதாவது வீடு, நிலம், மனை வாங்குதல், விற்றல் போன்ற
செயல்களுக்கும், இயந்திரங்கள் வாங்குதல் போன்ற இரும்பு சம்பந்தப்பட்ட
விஷயங்களுக்கும் உகந்த நாள்.

திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களை சுபநாட்கள் எனவும்;
ஞாயிறு, செவ்வாய், சனி ஆகிய நாட்களை அசுப நாட்கள் எனவும் சிலர் கூறுவர்.
சுப நாட்களிலும் பிரதமை, அஷ்டமி, நவமி ஆகிய திதிகள் வரும் நாட்களை
தவிர்ப்பது நல்லது. சில கிழமைகளில் வரும் நட்சத்திரங்களைப் பொறுத்தும்
அன்று சுபகாரியங்கள் செய்வதை தவிர்க்க வேண்டும்.

ஞாயிறு-பரணி, கார்த்திகை, மிருகசீரிஷம், மகம், விசாகம், அனுஷம், கேட்டை, பூரட்டாதி
திங்கள்-சித்திரை, கார்த்திகை, மகம், விசாகம், அனுஷம், பூரம், பூரட்டாதி
செவ்வாய்-உத்திராடம், திருவாதிரை, கேட்டை, திருவோணம், அவிட்டம், சதயம்
புதன்-அவிட்டம், அசுபதி, பரணி, கார்த்திகை, மூலம், திருவோணம், அவிட்டம்
வியாழன்-கேட்டை, மிருகசீரிஷம், புனர்பூசம், பூசம், பூராடம், ரேவதி
வெள்ளி-பூராடம், ரோகிணி, மிருகசீரிஷம், பூசம், விசாகம், அஸ்தம், அனுஷம், அவிட்டம்
சனி-ரேவதி, புனர்பூசம், பூசம், உத்திரம், அஸ்தம், ரேவதி

ஆகிய நட்சத்திரங்கள் வரும் கிழமைகள் சுபகாரியம் செய்ய ஏற்றவை அல்ல.

திதிகள்: திதி என்ற வடமொழிச் சொல்லுக்கு தொலைவு என்று
அர்த்தம். குறிப்பாக திதி என்பது வானவெளியில் சூரியனுக்கும் சந்திரனுக்கும்
இடையே ஏற்பட்ட தூரத்தின் பெயராகும்.

1. பிரதமை, 2. துவிதியை, 3. திருதியை, 4. சதுர்த்தி, 5. பஞ்சமி, 6.
சஷ்டி, 7. சப்தமி, 8. அஷ்டமி, 9. நவமி, 10. தசமி, 11. ஏகாதசி, 12. துவாதசி,
13. திரயோதசி, 14. சதுர்த்தசி, 15. பவுர்ணமி (அ) அமாவாசை என்று மொத்தம் 15
திதிகள் உள்ளன. அமாவாசை, பவுர்ணமி ஆகிய இரண்டு திதிகள் தவிர மற்ற
பதினான்கு திதிகளினால் சில சுப அசுபப் பலன்கள் ஏற்படக்கூடும். அதேபோல் சில
கிழமைகளில் சில திதிகள் வந்தால் சுபப் பலன்களும், அசுபப் பலன்களும்
ஏற்படும்.

நற்பலன் தரும் திதிகள்: ஞாயிறு-அஷ்டமி, திங்கள்-நவமி,
செவ்வாய்-சஷ்டி, புதன்-திரிதியை; வியாழன்-ஏகாதசி, வெள்ளி-திரயோதசி,
சனி-சதுர்த்தசி திதி. இத்தகைய நாட்களில் வரும் திதிகளில் எந்த ஒரு நல்ல
காரியம் செய்தாலும் அது வெற்றியே கிட்டும்.

சுபகாரியங்களுக்குக் கூடாத திதிகள்:
ஞாயிறு-சதுர்த்தசி, திங்கள்-சஷ்டி, செவ்வாய்-சப்தமி, புதன்-துவிதியை,
வியாழன்-அஷ்டமி, வெள்ளி-நவமி, சனி-சப்தமி மேற்கூறியபடி குறிப்பிட்ட
நாட்களில் குறிப்பிட்ட திதிகள் வரும்போது அந்த நாட்களில் நற்காரியங்கள்
செய்வதை தவிர்ப்பது அவசியம். ஏனெனில் அன்று செய்யப்படும் நற்காரியங்கள்
பலன் அளிக்காது. வளர்பிறை, தேய்பிறை ஆகிய காலங்களில் சில திதிகளுக்கு
இரண்டு கண்கள் உண்டு. இத்திதிகளில் நற்காரியங்கள் செய்தால் நலந்தரும்.

வளர்பிறை காலம் : அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி திதிகள்.
தேய்பிறை காலம் : துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப்தமி திதிகள்.

ஒரு கண்ணுள்ள திதிகள்: வளர்பிறை, தேய்பிறை காலங்களில்
சில திதிகளுக்கு ஒரு கண்மட்டுமே உண்டு. அதாவது இந்த சமயத்தில் செய்யப்படும்
செயல்கள் பூரண பலன் தராது. எனவே இத்திதிகளில் சுபகாரியங்களைத் தவிர்ப்பது
நல்லது. அந்தத் திதி காலங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.

வளர்பிறை தேய்பிறை
பஞ்சமி பிரதமை
சஷ்டி அஷ்டமி
சப்தமி நவமி
சதுர்த்தசி தசமி
பவுர்ணமி .....

பொதுவாக பலரும் தவிர்க்கும் திதிகள்: வளர்பிறை,
தேய்பிறை ஆகிய இரண்டு காலங்களிலுமே அஷ்டமி, நவமி திதிகளையுமே தவிர்ப்பர்.
அமாவாசை, பவுர்ணமிக்கு முந்தைய நாளாக வரும் சதுர்த்தசியும், அடுத்த நாளாக
வரும் பிரதமையும் ஆகாத திதிகளாகும். இவ்விரண்டு திதிகள் வரும் நாட்களில்
எந்த ஒரு நல்ல காரியத்தைத் துவங்கினாலும் பொருள் நஷ்டம், எதிர்ப்பு,
விரோதம், நோய் போன்ற பாதிப்புகள் வரக்கூடும்.

நட்சத்திர பலன்கள்: பொதுவாக ஒரு குழந்தை பிறந்ததுமே
பலரும் பார்ப்பது அன்று என்ன நட்சத்திரம் என்பதைத் தான். காரணம், ஜோதிட
ரீதியான 27 நட்சத்திரங்களுள் ஏதாவது ஒன்றுதான் எல்லோருடைய வாழ்க்கையிலுமே
ஆதிக்கம் செலுத்தும். அது அவரவர் பிறந்ததினத்தில் அமையும் நட்சத்திரமே.
தனிப்பட்ட நபருக்கு உரியது என்றில்லாமல் பொதுவாக எல்லோருக்கும் நன்மை
அளிப்பன என்றும் ஆகாதவை எனவும் சில நட்சத்திரங்கள் கூறப்பட்டுள்ளன.
திருவாதிரை, பரணி, கார்த்திகை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி,
கேட்டை, விசாகம், சுவாதி, சித்திரை, மகம் ஆகிய பன்னிரண்டு நட்சத்திரங்கள்
வரும் நாட்களில் கடன் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. அதேநாட்களில்
வெளியூர்ப் பிரயாணம் மேற்கொள்வது கூடாது. கடுமையான நோய்வாய்ப்பட்டவர் அன்று
சிகிச்சையை ஆரம்பிக்கக் கூடாது.

யோகங்கள்: பொதுவாக பலருக்கும் தெரிந்தது அமிர்தயோகம்,
சித்தயோகம், மரணயோகம் எனும் மூன்று யோகங்கள். இந்த யோகங்கள்
நட்சத்திரங்களின் அடிப்படையில் கணிக்கப்படுபவை. பரணி, புனர்பூசம், பூரம்,
சுவாதி, பூராடம், உத்திரட்டாதி எல்லா கிழமைகளிலும் நற்பலன்களைத்
தரக்கூடியவையாகும். அசுவினி-புதன், மிருகசீரிஷம்-வியாழன், பூசம்-வெள்ளி,
சித்திரை-சனி, அனுஷம்-ஞாயிறு, மூலம்-புதன், உத்திராடம்-திங்கள்,
திருவோணம்-வெள்ளி இந்த நட்சத்திரங்கள் இந்தக் கிழமைகளில் வருவதைத் தவிர,
இதர கிழமைகளில் எல்லாம் நற்பலன்களை கொடுக்கக்கூடியவையாகும்.

ராகுகாலம்: சர்ப்ப கிரகங்கள், சாயா கிரகங்கள்
என்றெல்லாம் அழைக்கப்படுபவை ராகு, கேது கிரகங்கள். ஒவ்வொரு நாளிலும் சுமார்
ஒன்றரை மணி நேரம் ராகுவுக்கு உரியதாக சொல்லப்பட்டுள்ளது. ராகு காலத்தில்
புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நலம். கூடிய வரையில் இயன்றவரை
அந்த சமயத்தில் புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடாமல் இருப்பது நல்லது.

ராகுகாலம் என்று எப்போது?

ஞாயிறு 4.30 மணி முதல் 6 மணி வரை
திங்கள் 7.30 மணி முதல் 9 மணி வரை
செவ்வாய் 3 மணி முதல் 4.30 மணி வரை
புதன் 12 மணி முதல் 1.30 மணி வரை.
வியாழன் 1.30 மணி முதல் 3 மணி வரை
வெள்ளி 10.30 மணி முதல் 12 மணி வரை
சனி 9 மணி முதல் 10.30 மணி வரை.

எமகண்டம்

எமகண்டம் என்பது மரணத்திற்கு சமமான விளைவினை ஏற்படுத்தக்கூடியது
எனக்கருதப்படுகிறது. எமகண்ட நேரத்தில் ஒரு செயலை மேற்கொள்வது ஆபத்து.
விபத்து, பிரச்னைகள் ஆகியவற்றை உருவாக்கும். இரவில் வரும் எமகண்ட காலத்தில்
துவக்கும் காரியங்கள்கூட எதிர்மறை விளைவையே தரும். பகலில் வரும் எமகண்ட
நேரம் பலருக்கும் தெரிந்திருக்கும். இங்கே ஒவ்வொரு நாளிலும் இரு
வேளைகளிலும் வரும் எமகண்ட நேரத்தின் பட்டியல் இதோ...

கிழமை பகல் நேரம் இரவு நேரம்

ஞாயிறு 12.00-1.30 6.00-7.30
திங்கள் 10.30-12.00 3.00-4.30
செவ்வாய் 9.00-10.30 1.30-3.00
புதன் 7.30-9.00 12.00-1.30
வியாழன் 6.00-7.30 10.30-12.00
வெள்ளி 3.00-4.30 9.00-10.30
சனி 1.30-3.00 7.30-9.00

குளிகன் அல்லது குளிகை காலம்: குளிகன், சனிபகவானின்
மகன் எனச் சொல்கிறது ஜோதிட சாஸ்திரம். அந்தக் குளிகனுக்கென ஒவ்வொரு
நாளிலும் ஒதுக்கப்பட்டுள்ள நேரமே குளிகை காலம். தினசரி பகலில் ஒன்றரை மணி
நேரமும், இரவில் ஒன்றரை மணி நேரமும் நடைபெறும். குளிகை காலத்தில்
நற்காரியங்களை மட்டுமே செய்யலாம். ஏனெனில் இந்த நேரத்தில் செய்யப்படும்
செயல் தடை இல்லாமல் தொடர்ந்து நடைபெறும் என்பது நியதி. எனவே அசுப
காரியங்களைத் தவிர்ப்பது அவசியம்.

கரிநாள்: ஒவ்வொரு வருடமும் வரும் 365 நாட்களில் 34 நாட்கள் கரி நாளாக அமையும். இந்த நாட்களில் சுபகாரியங்களைத் தவிர்ப்பது நல்லது.

மாதம் தேதிகள்

சித்திரை 6, 15
வைகாசி 7, 16, 17
ஆனி 1, 6
ஆடி 2, 10, 20
ஆவணி 2, 9, 28
புரட்டாசி 16, 29
ஐப்பசி 6, 20
கார்த்திகை 1, 10, 17
மார்கழி 6, 9, 11
தை 1, 2, 3, 11, 17
மாசி 15, 16, 17
பங்குனி 6, 5, 19

வாரசூலை: வாரசூலைக்கு சூலதோஷம் என்றும் பெயர்.
வாரசூலையை நிருவாணி சூலம் என்றும் களரி காலன் என்றும் அழைப்பதுண்டு. பகலில்
வாரசூலை நேர் திசைகளிலும் இரவில் மூலை திசைகளிலும் இடம்பெற்று இருக்கும்
என்பது ஜோதிட நியதி. வாரசூலை உள்ள திசையை நோக்கிப் பயணம் செய்வது கூடாது.
அவசியம் பயணம் செய்ய வேண்டுமென்றால் பரிகாரம் மேற்கொண்டு பிரயாணம்
செய்யலாம். வார சூலைக்கான பரிகாரம் செய்வது குறிப்பிட்ட பரிகாரப் பொருளை
சிறிதளவு உண்டுவிட்டுப் பயணத்தைத் தொடங்குவது தான். சிலர் அப்பொருளை தானம்
செய்வது வழக்கம்.

தின ஓரையில் பயன்கள்: ஒவ்வொரு மாதமும் தினமும்
அந்தந்த ஊர்களில் சூரியன் உதிக்கும் நேரம் முதல் ஒவ்வொரு மணி நேரம் வரையில்
ஒவ்வொரு கிரகத்தினுடைய ஆதிபத்திய காலம் நடைபெறும். அதைத்தான் அந்த
கிரகத்தின் ஆதிபத்தியம் உள்ள ஓரை என்று சொல்வர். எந்தக் கிழமையில் சூரிய
உதயம் ஆகிறதோ, அந்தக் கிழமைக்கு உரிய கிரகமே சூரிய உதய முதல் ஒரு மணி
நேரத்துக்கான ஓரைக்கு ஆதிபத்தியம் வகிக்கிறது. உதாரணமாக திங்கட்கிழமை காலை
6 மணிக்கு சூரிய உதயமானால், அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையில்
சந்திரனே ஆதிபத்தியம் செய்வதால், அது சந்திர ஓரையாகிறது. அடுத்தடுத்த ஒரு
மணி நேரம் உரிய வரிசைப்படியான கிரகத்திற்கு உரியதாகிறது. அடுத்த நாள்
செவ்வாய்க்கிழமை சூரிய உதயத்தின் போது செவ்வாய் ஓரை ஆரம்பாகிறது. இப்படியாக
கிரக ஓரைகள் ஒரு வட்டம் போல ஒன்றையடுத்து மற்றொன்று என்று தொடர்ந்து
நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. ராகுவும் கேதுவும் நிழல் கிரகங்கள்
என்பதால் அவற்றுக்கு ஓரைகள் இல்லை. மாறாக ராகு காலம் என தனிக் காலம் உண்டு.

சூரிய ஓரை: விண்ணப்பம் செய்ய, அதிகாரிகளை சந்தித்தல்,
மருந்துண்ணல், சொத்துப் பிரிவினை செய்தல், வேலைக்கு முயற்சித்தல், அரசு
அனுமதி பெறுதல், பதவி ஏற்றிடல் ஆகியன செய்யலாம்.

சந்திர ஓரை: திருமணத்துக்கு நாள் குறித்தல், பெண்
பார்த்தல், ஆடை ஆபரணம் அணிதல், கல்வி கலை கற்றிட ஆரம்பித்தல், தொலைதூரப்
பயணம் தொடங்குதல், கால்நடைகள் வாங்குதல் நலம் தரும்.

செவ்வாய் ஓரை: போர்க்கருவிகள் செய்தல், வாகனங்கள்
பழுது பார்த்தல், போர் தொடுத்தால், வீடு மனை நிலம் வாங்குதல், விற்றல்,
மருந்துண்ணல், ஏரிக்கரை அல்லது அணை கட்டுதல் செய்யலாம். சுப காரியங்களைத்
தவிர்ப்பது நல்லது.

புதன் ஓரை: ஜோதிட ஆராய்ச்சியில் ஈடுபடுதல், தேர்வு
எழுதுதல், போட்டி பந்தயங்களில் பங்கேற்றல், கடிதத் தொடர்பு கொள்ளுதல்,
புதிய பொருள்களை வாங்குதல், புதிய கணக்கு ஆரம்பித்தல் செய்யலாம்.

குரு ஓரை: புதிய ஆடை ஆபரணம் வாங்குதல், அணிதல்,
சேமிக்கத் தொடங்குதல், வர்த்தகக் கொள்முதல் செய்தல், விதை விதைத்தல்,
நாற்று நடுதல், குரு உபதேசம் செய்தல், பெரியோர்களை சந்தித்து ஆசி பெறல்
ஆகியவற்றுக்கு ஏற்ற காலம்.

சுக்கிர ஓரை: கலைகளைக் கற்கத் தொடங்குதல்,
திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தல், காதல் புரிதல்,
மருந்துண்ணல், பொருள் சேர்த்தல், கடன் வசூல் செய்தல், புதிய ஆடை ஆபரணம்
அணிதல் செய்யலாம்.

சனி ஓரை: உழுதல், எருவிடுதல், இரும்பு, மின்சாதனங்களை வாங்குதல், தோப்பு துரவு (கிணறு) அமைத்தல், பயணம் செய்தல் போன்றவை செய்யலாம்.

சந்திராஷ்டமம்: நம் ஜோதிட சாஸ்திரப்படி ஒவ்வொருவருடைய
ஜனன கால ஜாதகமும் சந்திரனை அடிப்படையாக வைத்தே கணக்கிடப்படுகிறது. அதாவது
ஒருவர் பிறந்த போது சந்திரன் எந்த ராசியில் இருக்கிறதோ, அதுவே அவரது ஜனன
ராசி என்றும், சந்திர லக்கினம் என்றும் கூறப்படுகிறது. கோள்களின்
இயக்கத்தின் படி அதாவது கோசாரத்தின்படி சந்திரன் ஒருவரது ஜனன ராசிக்கு
எட்டாம் வீடான அஷ்டம ஸ்தானத்தில் இருக்கும் காலமே அவரது சந்திராஷ்டம காலம்
ஆகும். சந்திரன் ஒருவரின் எட்டாவது ராசிக்கு உரிய இரண்டேகால்
நட்சத்திரங்களில் சஞ்சரிக்கும் அந்த சந்திராஷ்டம நாட்களில் அந்த நபர்
இயன்றவரை புதிய முயற்சிகளைத் தவிர்க்க வேண்டும். அவருக்கான சுபகாரியங்களை
அதாவது திருமணம், பெண் பார்த்தல், பணியில் சேருதல் போன்ற மங்கள
நிகழ்ச்சிகளை தவிர்ப்பது நல்லது. திட்டமிடாத திடீர் பயணங்களையும் வெளிநாடு,
வெளியூர் பிரயாணங்களையும் தவிர்ப்பது அவசியம்.

(உதாரணமாக.. மேஷ ராசியினருக்கு எட்டாம் இடமான விருச்சிக ராசிக்கு உரிய
விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை நட்சத்திரங்களில் சந்திரன் வரும்
தினங்கள் சந்திராஷ்டம நாட்களாகும்.)

2 அமாவாசை 2 பவுர்ணமி: அமாவாசை ஒரு நல்லநாள் என்றாலும், திருமணம் போன்ற
சுபகாரியங்களுக்கு உகந்ததல்ல. அமாவாசையை விலக்குவதைப் போலவே ஒரே மாதத்தில்
இரு அமாவாசை வந்தால் அதனை மல மாதம் என்பார்கள். இப்படிப்பட்ட அமைப்பு
அநேகமாக 18 வருடங்களுக்கு ஒரு முறையே வரும். மல மாதத்தினை மட்டுமல்லாமல்,
மல மாதமுள்ள தமிழ் ஆண்டும் திருமணம் போன்ற நற்காரியங்களுக்கு ஏற்றதல்ல
என்பது பொதுவிதி. ஒரே மாதத்தில் இரு பவுர்ணமிகள் வந்தால் அதுவும் மலமாதமே.
ஆனால் பவுர்ணமி திதியில் சுபகாரியங்கள் மட்டுமே செய்யப்படுவதால் அந்த
மாதத்தினை விலக்குவது இல்லை.

கல்யாணத்திற்கு நாள் பார்ப்பது எப்படி?

1. முதல் விதி, திருமணம் மல மாதத்தில் இடம்பெறக்கூடாது. (மலமாதம் என்பது
இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பவுர்ணமி ஒரே மாதத்தில் வருவது.)
2. அடுத்ததாக சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, தை, பங்குனி தவிர இதர மாதங்களில் திருமணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.
3. இயன்றவரை சுக்கில பட்ச காலத்திலேயே திருமணம் செய்வது நல்லது என்பது மூன்றாவது விதி.
4. புதன், வியாழன், வெள்ளி போன்ற சுப ஆதிபத்தியமுடைய கிழமைகள் மிகமிக ஏற்றவை. இதர கிழமைகள் அவ்வளவு உகந்தவை அல்ல. இது 4வது விதி.
5.
அடுத்த வித... ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு,
மீனம் ஆகிய சுப லக்கினங்களில் மட்டுமே திருமணம் நடத்த வேண்டும் என்பது
தான்.
6. துவிதியை, திரிதியை, பஞ்சமி, ஸப்தமி, தசமி, திரயோதசி ஆகிய சுப திதிகள் தவிர இதர திதிகளை தவிர்ப்பது ஆறாவது விதி.
7. அடுத்ததாக முகூர்த்த லக்கினத்துக்கு 7ம் இடம் முகூர்த்த நாளன்று சுத்தமாக இருக்க வேண்டும்.
8. அக்கினி நட்சத்திரம், மிருத்யூ பஞ்சகம், கசரயோகங்கள் போன்ற காலகட்டத்தில் திருமணம் நடத்தக்கூடாது. இது 9வது விதி.
9.
திருமணத்தின்போது குரு, சுக்கிரன் போன்ற சுப கிரகங்கள் திருமண
லக்கினத்துக்கும் மணமக்களின் ஜனன ராசிக்கும் எட்டாம் வீட்டில் இடம்
பெற்றிருக்கக்கூடாது என்பது 10ம் விதி.
10. திருமணநாள் மணமக்களின் சந்திராஷ்டம தினமாக இல்லாமல் இருப்பது மிகமிக முக்கியமான விதி.
11.
மணமக்களின் ஜனன நட்சத்திர நாளிலும் 3, 5, 7, 12, 14, 16, 21, 23, 2வதாக
வரும் நட்சத்திர தினங்களிலும் திருமணம் நடத்தக்கூடாது என்பது 12வது விதி.
12. கடைசியாக மணமக்களின் பிறந்த தேதி அல்லது கிழமைகளிலும் கல்யாணம் பண்ணக்கூடாது.

இவ்வளவு விஷயங்கள் தெரிந்து கொண்டபின் நீங்களே அனைத்து
சுபகாரியங்களுக்கும் நல்ல நாள் பார்த்துவிடுவீர்கள் தானே. அவரவர்
குலதெய்வத்தை மனதில் வேண்டிக்கொண்டு உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களின்
ஆசியுடன் நல்லதொரு நாளைக் குறியுங்கள். அனைத்துக் காரியங்களும் தடையின்றி
இனிதே நிறைவேறிட இறைவன் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum