HinduSamayam
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

HinduSamayam
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
HinduSamayam
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்
by vpoompalani March 24th 2016, 13:59

» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26

» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17

» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06

» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07

» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58

» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24

» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35

» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52

» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20

» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18

» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37

» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47

» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19

» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46

» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49

» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37

» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07

» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29

» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38

» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55

» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00

» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49

» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28

» திருத்தல யாத்திரை  ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51

» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33

» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46

» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28

» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13

» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29

» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15

» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10

» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29

» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54

» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38

» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42

» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32

» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01

» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20

» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00

தமிழர்களின் சிந்தனைகளம்
Related Posts Plugin for WordPress, Blogger...



திருப்பதி

Go down

திருப்பதி  Empty திருப்பதி

Post by மாலதி December 31st 2011, 07:57

திருப்பதி

திருப்பதி மலை
மீது கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீ வெங்கடேஸ்வரப் பெருமான் மனித இனத்தை
ரட்சித்துத் திருத்திப் பணி கொள்வதற்கும், அவர்களுக்கு முக்திக்கு வழி
காட்டுவதற்கும், தான்தோன்றியாக நின்று அருள் மழையைப் பொழிகின்றார். (
தான்தோன்றி = மனிதரால் செய்யப்படாமல், தானாகவே, சுயம்புவாக உருவாகிய
தெய்வச் சிலை. திருப்பதியிலுள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரரின் கம்பீரமான திரு
உருவச்சிலை இவ்வாறே, மனிதரால் செய்யப்படாமல், தாமாகவே, சுயம்புவாக
உருவாகியது என்று புராணங்கள் கூறுகின்றன.) இத்தகைய பெருமைகள் உடைய
திருவேங்கடப் பெருமானை, ஆதி காலத்திலிருந்து தேவர்களும், முனிவர்களும்,
ஞானிகளும், மனிதர்களும் போற்றிப் புகழ்ந்து வழிபட்டு வருகின்றனர்.
அன்றிலிருந்து, இன்றுவரை, திருப்பதியில் உறையும் ஸ்ரீ வெங்கடேஸ்வரப்
பெருமானைத் தரிசித்து, இப் பூமியில் மனிதராகப் பிறந்ததன் பயனை அனுபவிக்கக்
கூடும் மக்கள் கூட்டத்துக்கு அளவேயில்லை.

இக் கலியுகத்தில், ஆழ்வார்கள் தோன்றி திருவேங்கடப் பெருமானின் ஸ்வாமித்வம்
= அனைவருக்கும் மேலான தன்மை, வாத்சல்யம் = தாயைப்போன்ற அன்பு, சௌசீல்யம் =
தர்மங்களின் தலைவனாகிய இறைவன் சிறியவர்களாகிய மனிதரோடு நெருங்கி உறவாடும்
தன்மை, சௌலப்யம் = எளிமையாக நமக்குத் தரிசனம் தரும் தன்மை எனும் கல்யாண
குணங்களை நமக்கு எடுத்துரைத்தனர்.

திருமலையின் பெருமைகளை முழுவதுமாக எடுத்துரைக்க வார்த்தைகள் போதாது.

கிருத
யுகத்தில் நரசிம்ம மூர்த்தியாக அவதாரம் செய்தவரே, திரேதா யுகத்தில் ராம
பிரானாக அவதாரம் செய்தார். துவாபர யுகத்தில் அவரே கிருஷ்ண பரமாத்மாவாக
அவதரித்து அற்புதங்கள் செய்தார். கலியுகத்தில் அவரே ஸ்ரீ வேங்கட நாதராக
விளங்குகின்றார்.


இவ்வாறு, திருமலையின் மீது ஸ்ரீ நாராயண மூர்த்தியாகிய மகா
விஷ்ணு பகவான் ஸ்ரீ வெங்கடேஸ்வரராக எழுந்தருளியிருப்பதற்குக் காரணங்கள் எவை
? இக் கேள்விக்கு, நமது புராணங்கள் அழகிய கதைகளைப் பதிலாகத் தருகின்றன.

இதோ, முதலாவது கதை:

ஒரு ஊழிக்காலம் முடிந்து, புதிய கல்பம் ஆரம்பமாகிக் கொண்டிருந்தது. ( கல்பம் என்றால் என்ன? இக் கேள்விக்குரிய விடையை, நீங்கள் எமது " வினாவிடைகள் " பகுதியில் படித்தறிந்து கொள்ளுங்கள். ) ஏழு
சமுத்திரங்களும் பொங்கிப் பெருகின. எங்கே பார்த்தாலும் கடுமையான
வெள்ளப்பெருக்கு. இந்தப் பூலோகமே வெள்ளத்தில் மூழ்கி விட்டது. மகா விஷ்ணு
பகவான் சிருஷ்டியை ஆரம்பித்து வைப்பவராக, ஒரு ஆலிலைமேல்
சயனித்துக்கொண்டிருந்தார். ( சயனம் = உறக்கம். மஹா விஷ்ணுவின் உறக்கத்தை '
அறிதுயில் ' என்று கூறுவார்கள். "இந்தப் பிரபஞ்சத்தில் நடப்பவை அனைத்தையும்
அறிந்துகொண்டே உறங்குவது " என்பது பொருள். )

ஆயிரம் யுகங்கள் கழிந்தும் வெள்ள நீர் குறையவில்லை.


பிரளய வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கும் பூலோகத்தை வெளியே
கொண்டுவந்து, மீண்டும் பூலோகத்தில் உயிர்களைப் படைத்து, பெருகச் செய்ய மகா
விஷ்ணு விரும்பினார். அவர் உடனே, வராக அவதாரம் ( வெள்ளை நிறமுடைய பன்றியாக
அவதாரம் ) எடுத்துப் பூலோகம் அமிழ்ந்திருக்கும் இடத்தைத் தேடிப் பாதாளம்
சென்றார்.


அங்கே, இரண்யாட்சன் என்றொரு அரசன் இருந்தான். அவன் மிகக்
கொடுமையானவன். மகா விஷ்ணு அவனைக் கொல்வதற்காகப் போர் தொடுத்தார்.
நெடுங்காலமாகப் போர் நிகழ்ந்தது. இறுதியில், அந்தக் கொடிய அரக்கனை மகா
விஷ்ணு தம் நகங்களாலும், கோரைப் பற்களாலும் கிழித்துக் கொன்றார். அந்த
அரக்கனுடைய இரத்தத்தால் சமுத்திர நீர் முழுவதும் சிவப்பு நிறமாக மாறி
விட்டது.


அரக்கன் அழிந்தொழிந்ததைத் தம் ஞான திருஷ்டியால் கண்டுணர்ந்த
ஞானிகளும், முனிவர்களும் தங்கள் தவத்தை முடித்துக்கொண்டு, ஸ்ரீ நாராயண
மூர்த்தியாகிய மகா விஷ்ணு பகவானை வணங்கித் துதித்தார்கள். இறைவனின்
திருவருளினால் வெள்ளம் குறைந்தது.


ஸ்ரீ வராக மூர்த்தி தமது கோரைப் பற்களால் பூலோகத்தை மேலே
கொண்டுவந்தார். அதன் பழைய இடத்தில் நிலைநிறுத்தினார். அதன்பின், அவர்
பிரம்ம தேவரை அழைத்துப் பூலோகத்தில் சகல உயிரினங்களையும் படைக்கும்படி
செய்தார். பிரம்ம தேவரும், மகா விஷ்ணுவை வணங்கித் தம் படைப்புத் தொழிலைத்
தொடங்கினார்.


ஸ்ரீ வராக மூர்த்தி தமக்கென்று ஒரு சிறந்த இருப்பிடத்தைப்
பூலோகத்தில் தேடினார். ஒரு சிறந்த, புனிதமான இடத்தைத் தெரிந்தெடுத்தார்.
அவ்வாறு தேர்ந்தெடுத்தபின், தமது வாகனமான கருட தேவரை அழைத்து, தமது கிரீட
மலையான நாராயணகிரியை அங்கே கொண்டுவரும்படி கட்டளையிட்டார். கருட தேவர்,
பகவானின் கட்டளைப்படி, ஸ்ரீ வைகுந்தலோகத்தை அடைந்து, அங்கிருந்த நாராயண
கிரியைத் தம் தோளில் சுமந்துகொண்டு வந்து பகவான் காட்டிய இடத்தில்
நிலைநிறுத்தினார். முப்பது யோசனை நீளமும், மூன்று யோசனை அகலமும் கொண்ட
அம்மலை, ஆதிசேஷன் என்ற பாம்பு ஏழு தலைகளோடு பூலோகத்தில் படுத்திருப்பதுபோல்
அழகாக அமைந்திருந்தது. ஆதிசேஷனைப்போல் அமைந்திருந்ததால், அம்மலை "
சேஷாசலம் ( சேஷ + அசலம் ) " என்று அழைக்கப்பட்டது.


பின்னர், அந்த மலைகளுக்கு இடையில், காட்டின் நடுவில், சுவாமி
புஷ்கரிணி என்ற புனித தீர்த்தமும், அதன் கரைகளில் அழகு மிக்க மண்டபமும்
கட்டப் பட்டது. ஆதி வராக மூர்த்தியாகிய ஸ்ரீ நாராயண மூர்த்தி அங்கே அழகிய
விமானத்தின் கீழே உலகோர் உய்யும் வண்ணம் எழுந்தருளினார்.


இவ்வாறு, ஆதி வராக மூர்த்தியாக ஸ்ரீ நாராயணர் அங்கே
எழுந்தருளியிருப்பதை அறிந்த பிரம்ம தேவர், சிவபெருமான், இந்திரன் மற்றும்
தேவர்கள் அங்கே விரைந்து வந்து, பெருமானைப் போற்றித் துதித்தார்கள்.


ஆதி வராக மூர்த்தி இரண்யாட்சனுடன் போர் செய்த உக்கிர
தோற்றத்தில் அங்கே கோயில் கொண்டிருந்தார். அத் தோற்றத்தைக்கண்ட யாவரும்
அஞ்சி நடுங்கினர். " பகவானே, உமது உக்கிர தோற்றத்தைக் கண்டு உமது பக்தர்கள்
எல்லாரும் அஞ்சி நடுங்குவார்களே. அதனால், இங்கே, உமது உக்கிர தோற்றத்தைக்
குறைத்துக்கொண்டு, சாந்த மூர்த்தியாக எங்களுக்குக் காட்சியளிக்க வேண்டும் "
என்று வேண்டிக் கொண்டனர்.

அவர்களின் வேண்டுதலுக்கு இசைந்து, பகவான் தமது உக்கிர உருவத்தை மாற்றினார்.


நான்கு திருக்கரங்களோடு, ஸ்ரீதேவி பூதேவி சமேதராக அங்கே
திருக்காட்சி அளித்தார். அன்றிலிருந்து அந்தத் திருத்தலம் தேவர்களும்,
முனிவர்களும், மக்களும் மகிழ்ந்து வழிபடும் ஒரு திவ்வியமான தலமாகியது.


இத்
திருத்தலம் ஸ்ரீ வெங்கடேஸ்வரப் பெருமானுக்கும், பத்மாவதித் தாயாருக்கும்
திருமணம் நிகழ்ந்த மங்களமான தலமாகும். அதனால் இத் திருத்தலம் ஒரு திருமணத்
தலம் என்று அழைக்கப்படுகின்றது. புதிதாக மணம் முடித்த திருமணத் தம்பதியினர்
விரும்பி வந்து தரிசனம் செய்து ஸ்ரீ வெங்கடேஸ்வரப் பெருமானின் அருளை
வேண்டும் திருத்தலமாகத் திருப்பதி விளங்குகின்றது.


பகவான் ஸ்ரீ வெங்கடேஸ்வரருக்கும், பத்மாவதித் தாயாருக்கும்
திருமணம் நிகழ்ந்த அந்தச் சுவையான, சுபமான கதையை இனிப் படியுங்கள்.


முன்னொரு காலத்தில், ஒருநாள், மகா விஷ்ணு பகவான், தமது வைகுண்ட
லோகத்தில், பாற்கடலின்மீது, ஆதிசேஷன் என்ற ஆயிரம் தலையுள்ள
பாம்பணையின்மீது அமர்ந்து, தமது மனைவியான மஹா லக்ஷ்மி தேவியுடன்
உரையாடிக்கொண்டிருந்தார்.


அப்போது, ஓர் அவசர வேலையாக, பிருகு முனிவர் அவரைக் காண வைகுண்ட
லோகம் வந்தார். பிருகு முனிவர் சிறந்த தவ ஞானி என்பதாலும், அவர் மகா
விஷ்ணுவின் தீவிரமான பக்தர் என்பதாலும், வாயிற் காவலர்கள் அவரை உள்ளே செல்ல
அனுமதித்தார்கள்.


மகா விஷ்ணு பகவானின் சந்நிதிக்கு வந்த பிருகு முனிவர்,
பகவானுக்குத் தமது வணக்கத்தைத் தெரிவித்தார். ஆனால், மகாலக்ஷ்மி தேவியுடன்
முக்கியமான ஒரு விஷயம் பற்றிப் பேசிக் கொண்டிருந்த மகா விஷ்ணு, பிருகு
முனிவர் அங்கே வந்ததையோ, அவர் வணக்கம் தெரிவித்ததையோ கவனிக்கவில்லை.


தாம் கணந்தோறும் வணங்கிப் போற்றும் தெய்வமான பகவான் தம்மை
அலட்சியப்படுத்தியதைக் கண்ட பிருகு முனிவருக்குக் கடும் கோபமும், மன
வருத்தமும் வந்துவிட்டது. உடனே, அந்த முனிவர், தாம் செய்வது என்னவென்று
உணராமல், பகவானின் மார்பில் தம் காலால் உதைத்து விட்டார்.


திடுக்கிட வைக்கும் அந்தக் காட்சியைக் கண்டு, வைகுண்ட லோகமே
நடுங்கியது. இனி என்ன நடக்குமோ என்று தேவர்கள் அஞ்சி அலறினர்.


ஆனால், மகா விஷ்ணு சிறிதும் கோபம் கொள்ளவில்லை. தாம்
அலட்சியமாக இருந்ததுதான் முனிவரின் கோபத்துக்குக் காரணம் என்பதை
உணர்ந்துகொண்ட பகவான், உடனே, பிருகு முனிவரிடம் மன்னிப்புக்
கேட்டுக்கொண்டார். ( உண்மையான பக்தர்களின் செயல்களை பகவான்
பொறுத்துக்கொள்வார், அல்லவா?) உடனே பிருகு முனிவர் தாம் செய்த பெரும்
பிழையை உணர்ந்தார். மனம் வருந்தி பகவானின் பாதங்களில் வீழ்ந்து வணங்கி
மன்னிப்புக் கேட்டார்.


ஆயினும், நடந்த நிகழ்ச்சிகளை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த
மகா லக்ஷ்மி தேவி கடும் கோபம் கொண்டாள். ( கணவன் அவமதிக்கப்படுவதை எந்த
மனைவியும் பொறுத்திருக்க மாட்டாள் ). பிருகு முனிவரின் கால் பட்ட இடம் தாம்
வாசம் செய்யும் மகாவிஷ்ணுவின் திருமார்புதான் என்பதை உணர்ந்த அவள், "
இனிமேல் அந்த மார்பில் வாசம் செய்ய மாட்டேன் " என்று கூறி, கணவனை விட்டுப்
பிரிந்து சென்று விட்டாள்.

மகா விஷ்ணுவுடன் கோபித்துக்கொண்டு, வைகுண்ட லோகத்தை விட்டு வந்த மகா லக்ஷ்மி தேவி, பூலோகத்துக்கு வந்தாள்.

பூமியில், கோதாவரி நதிக்கரையில், ஒரு ஆச்சிரமம் அமைத்துக்கொண்டு, அங்கேயிருந்து தவம் செய்தாள்.


மனைவியைப் பிரிந்து கடும் துயருற்ற மகா விஷ்ணு, அவளைச்
சந்திப்பதற்காக,' ஸ்ரீநிவாசன் ' என்ற திருப்பெயரைத் தாங்கிப் பூலோகம்
வந்தார். அன்பு மனைவியை நாலா திசைகளிலும் தேடி அலைந்து வரும் வழியில், அவர்
சேஷாத்ரி மலைப் பகுதிக்கு வந்து சேர்ந்தார். அப்போது அவர் மிகவும்
களைப்படைந்திருந்தார். அவர் அங்கே ஒரு பெரிய எறும்புப் புற்றைக் கண்டு,
அதனுள்ளே சென்று படுத்து உறங்கினார்.


உலகைக் காக்கும் பரம்பொருளான மகா விஷ்ணு பகவானின் துயர நிலையைக்
கண்டு மனம் கலங்கிய சிவ பெருமானும், பிரம்ம தேவரும் மகா விஷ்ணுவுக்குச்
சேவை செய்வதற்காகப் பூலோகம் வந்தார்கள். அங்கே அவர்கள் ஒரு பசுவாகவும்,
கன்றாகவும் உருவம் கொண்டு, சோழ மன்னரின் பசுப் பண்ணையில் சேர்ந்து
கொண்டனர்.


மன்னரின் பசுக்களை மேய்க்கும் இடையன், தினமும் அந்தப்
பண்ணையிலிருந்த பசுக்கள் எல்லாவற்றையும் சேஷாத்ரி மலைக்கு ஓட்டிச் சென்று,
அங்கே வளர்ந்திருந்த பசுமையான புல்லை மேய விடுவான். அத் தருணத்தில், ஏனைய
பசுக்கள் புல் மேய்ந்து கொண்டிருக்கும்போது, இந்தப் பசுவும் கன்றும்
மட்டும் இரகசியமாக அந்தப் புற்றின் அருகே சென்று, அங்கே உறங்கிக்
கொண்டிருக்கும் ஸ்ரீநிவாசனாகிய மகாவிஷ்ணுவுக்குப் பால் கொடுத்துச் சென்றன.
இது தினசரி வழக்கமாயிற்று.


ஒருநாள் மாலையில், இடையன் அந்தப் பசுவிடம் பால் கறக்க
முற்பட்டபோது, அந்தப் பசுவின் மடியில் பால் இல்லாதது கண்டு திகைத்தான்.
அந்த மர்மத்தைக் கண்டுபிடிப்பதற்காக அவன் மறுநாள் அந்தப் பசுவையும்,
கன்றையும் கண்காணித்துக் கொண்டிருந்து, அவை புற்றுக்குப் போகும்போது
பின்தொடர்ந்து சென்றான். அந்தப் பசு ஸ்ரீநிவாசனுக்குப் பால் கொடுப்பதைக்
கண்டு, கடும் கோபம் கொண்டு, தன் கையிலிருந்த பெரிய தடியால் அந்தப்
புற்றினுள்ளே அடித்தான்.


உள்ளேயிருந்த ஸ்ரீநிவாசனுக்குத் தலையில் அடிபட்டுக் காயம்
உண்டாயிற்று. அந்தக் காயம் பட்ட இடத்தில் வளர்ந்திருந்த முடி உதிர்ந்து
போனது.


தலைக் காயத்திலிருந்து இரத்தம் வழிய, அதற்கு மூலிகை மருந்து
தேடிச் ஸ்ரீநிவாசன் சேஷாத்ரி வனம் முழுவதும் அலைந்து திரிந்தார். அப்போது,
அவர் ஸ்ரீ வராக மூர்த்தியின் திருக்கோயிலை அடைந்தார். அப்போது, அவர், ஸ்ரீ
வராக மூர்த்தியிடம் தாம் அங்கே தங்குவதற்கு ஓர் இடம் தருமாறு கேட்டார்.
ஆனால், வராக மூர்த்தி," இடம் வேண்டுமானால், வாடகை தர வேண்டும்" என்று
கேட்டார்.


தாம் அப்போது ஏழையாய் இருப்பதாகவும், வாடகை தர இயலாது என்றும்
ஸ்ரீ நிவாசன் கூறினார். ஆனால், தமது பக்தர்கள் தம்மைத் தரிசிக்க வரும்போது,
தம்மைத் தரிசிப்பதற்கு முன்னதாக ஸ்ரீ வராக மூர்த்தியைத் தரிசிக்க வைப்பதாக
அவர் உறுதியளித்தார்.


ஸ்ரீ வராக மூர்த்தி இந்த ஒப்பந்தத்துக்குச் சம்மதிக்கவே,
ஸ்ரீநிவாசன் அந்தக் கோயிலின் அருகே ஆச்சிரமம் ஒன்றை அமைத்து அங்கே
தங்கினார்.

அவரது தீவிர பக்தையான வகுளா தேவி என்பவள் அவருக்கு அன்புடன் பணிவிடை செய்து வந்தாள்.



இது
இவ்வாறிருக்க, அருகிலேயிருந்த ஒரு நாட்டில் ஆகாசராஜன் என்ற அரசன் ஆட்சி
செய்து வந்தான். நீண்ட காலம் பிள்ளைகள் இல்லாததால் கவலையுற்றிருந்தான்.
ஒருநாள் அவன் வயலை உழுதுகொண்டிருந்தபோது, வயலின் நடுவே, ஒரு தங்கத் தாமரை
மலரில் அழகே உருவான பெண் குழந்தை ஒன்று இருப்பதைக் கண்டான். மிக்க
மகிழ்ச்சியுடன் அந்தக் குழந்தையைத் தன் அரண்மனைக்கு எடுத்துச் சென்று,
பத்மாவதி என்று பெயரிட்டு, அன்புடன் சீராட்டி வளர்த்து வந்தான். பத்மாவதி
வளர்ந்து அழகும், நற்பண்புகளும் நிறைந்த இளம் பெண்ணாகக் காட்சியளித்தாள்.


அப்போது, ஸ்ரீநிவாசன் அருகிலுள்ள காட்டுப் பகுதிக்கு
வேட்டையாட வந்தார். வழிதவறி அவர் ஒரு அழகான பூஞ்சோலையை அடைந்தார். அந்தப்
பூஞ்சோலையின் நடுவே ஒரு நீரூற்று இருந்தது. அந்த நீரூற்றின் தண்ணீரைக்
குடித்துத் தமது தாகத்தைத் தீர்த்துக் கொண்ட ஸ்ரீநிவாசனின் காதுகளில்
இனிமையான பாடல் ஒன்று கேட்டது.


இனிமையான அந்தக் குரல் வந்த திசையை நோக்கிச் சென்ற ஸ்ரீ
நிவாசன், அங்கே, தன் தோழிகளுடன் அழகிய பாடல் ஒன்றைப் பாடிக்கொண்டே,
சந்தோஷமாக நடனமாடிக்கொண்டிருந்த பத்மாவதியைப் பார்த்தார். அழகே உருவாக
இருந்த பத்மாவதியைக் கண்டவுடனே ஸ்ரீ நிவாசனின் உள்ளத்தில் அவள்மேல் அளவற்ற
அன்பும் விருப்பமும் உண்டாயிற்று. அவளையே திருமணம் செய்துகொள்ள
விரும்பினார்.

பத்மாவதியிடம் நேரில் சென்று, தன் விருப்பத்தைக் கூறினார்.

அவரைச் சாதாரண வேடன் என்று நினைத்த தோழிகள், அவரைக் கேலி செய்து, பழித்து, கல்லால் அடித்து விரட்டி விட்டனர்.


கவலையுடன் தமது ஆச்சிரமம் திரும்பிய ஸ்ரீநிவாசன் தமது
காதலையும், ஏமாற்றத்தையும் வகுளா தேவியிடம் கூறினார். தாம் மகா விஷ்ணுவின்
அவதாரம் என்ற உண்மையை வகுளாதேவியிடம் அப்போது கூறினார்.


அதே சமயம், பத்மாவதி உறங்கிக் கொண்டிருந்தபோது, கனவில்
ஸ்ரீநிவாசனைக் கண்டாள். அவரையே கணவராக அடைய வேண்டும் என்று அவள் உறுதி
கொண்டாள்.


ஸ்ரீநிவாசன் கூறியபடியே, வகுளாதேவி ஆகாசராஜனின் அரண்மனையை
அடைந்து, பத்மாவதியை ஸ்ரீநிவாசனுக்கு மனைவியாக்குமாறு கேட்டாள். முதலில்
கோபத்துடன் மறுத்த ஆகாசராஜன், பின்னர், தனது மகள் பத்மாவதியும் அவரையே
மணக்க உறுதியாக இருப்பதை அறிந்து, தனது மந்திரிகளையும், வேத அறிஞர்களையும்,
ஜோதிடர்களையும் கலந்து பேசி, இறுதியில் திருமணத்துக்குச் சம்மதித்தான்.


ஸ்ரீநிவாசன் தமது திருமணத்துக்கு ஏற்பாடுகள் செய்ய
வேண்டியதாயிற்று. அது தெய்வீகத் திருமணம் அல்லவா? அதை மிக விமரிசையாகச்
செய்ய விரும்பினார். ஆனால், அவரிடம் பணம் இல்லை. ஆகவே, குபேரனை ( குபேரன் =
செல்வத்துக்கு அதிபதி ) அழைத்தார். குபேரன் ஓடோடி வந்தான்.
குபேரனிடமிருந்து பதினான்கு லட்சம் தங்க நாணயங்களைக் கடனாகப் பெற்றார்.


தேவதச்சனாகிய விஸ்வகர்மாவை அழைத்தார். ஸ்ரீனிவாசனின்
விருப்பப்படி, தேவதச்சன், அழகுமிக்க திருமண மாளிகையை அந்தச் சேஷாத்ரி மலைப்
பகுதியில் அமைத்தான்.


திருமண நாள் நெருங்கியது. முப்பத்து மூன்று கோடி தேவர்களும்,
முனிவர்களும், ஞானிகளும், ஸ்ரீநிவாசனின் பக்தர்களும் அத் தெய்வீகத்
திருமணத்தைக் கண்டு தரிசிக்க அங்கே கூடி வந்தனர்.


தெய்வீகம் கமழும் மணமகன் அலங்காரத்தோடு, மாப்பிள்ளையான
ஸ்ரீநிவாசன், ஆகாசராஜனின் அரண்மனைக்கு வந்தார். ஆகாசராஜன் அவரை வரவேற்று,
அவரது கால்களைக் கழுவி, மணமேடைக்கு அழைத்துச் சென்றான்.


வசிஷ்ட முனிவர் மந்திரங்களை ஓத, தேவர்கள் பூமழை பொழிந்திட,
முனிவர்களும், ஞானிகளும், பக்தர்களும் உள்ளம் மகிழ்ந்து வாழ்த்திட,
பத்மாவதியின் கழுத்தில், ஸ்ரீநிவாசன் மலர்மாலை சூட்டி, மணம் புரிந்து
கொண்டார்.

கோபம் நீங்கப்பெற்ற மகாலட்சுமி தேவி, முன்னைப்போல், தமது கணவரின் திருமார்பில் வாசம் புரிந்தாள்.


ஸ்ரீனிவாசனும், பத்மாவதித் தாயாரும் அன்புத் தம்பதிகளாக
திருப்பதித் தலத்தில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து, உலக மக்களுக்கெல்லாம் தமது
அருளை வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.


தற்போதும், தினந்தோறும் திருமலை திருப்பதித் திருக்கோயிலில்,
ஸ்ரீநிவாசன் பத்மாவதித் தாயார் திருமண உத்சவம் வெகு சிறப்பாக, வெகு
விமரிசையாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.


திருப்பதிக்கோயிலின் பிரம்மோத்சவ காலத்தில், திருப்பதித்
திருக்கோயிலில் இருந்து மஞ்சள், குங்குமம், திருமணப் பட்டுப் புடவை ஆகிய
மங்கலப் பொருட்கள் திருச்சானூரிலுள்ள பத்மாவதித் தாயாரின் திருக்கோயிலுக்கு
ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகின்றன.


தினந்தோறும், திருப்பதித் திருத்தலத்துக்குச் செல்லும்
பக்தர்களின் எண்ணிக்கைக்கு அளவில்லை. தம்மை உண்மையன்புடனும், பக்தியுடனும்
வணங்க வரும் பக்தர்களுடைய எண்ணங்கள் யாவும் ஈடேறச் செய்கிறார் ஸ்ரீ
வெங்கடேஸ்வரப் பெருமான். இக் கலியுகத்தில், கண்கண்ட தெய்வமாக விளங்குகின்ற
திருப்பதிப் பெருமானின் அருளால், நோய் நீங்கப்பெற்றவர்கள் பலர்; துன்பங்கள்
நீங்கப்பெற்றவர்கள் பலர்; விரும்பியவற்றை எல்லாம் நிறைவேற்றிக்கொண்டவர்கள்
பலர்; வாழ்க்கையில் வெற்றி அடைந்தவர்கள் பலர். இவ்வாறு, கலியுக வரதராக,
தம் உண்மைப் பக்தர்களைக் காக்கும் கருணாமூர்த்தியாக விளங்கும் ஸ்ரீ
வெங்கடேஸ்வரப் பெருமானைச் சந்திர பகவானும் வழிபட்டுப் பெரும்பேறு பெற்றார்.



ஸ்ரீ வெங்கடேஸ்வரரின் திருச் சந்நிதியில் தினமும் நடைபெறும்
அற்புதங்களுக்குக் கணக்கேயில்லை. இத் திருத்தலத்தின் மகிமையைக் கீழே உள்ள
பாடல் அழகாக விளக்குகின்றது.

" கூன்கொண்டு சென்றவன் கூன் நிமிர்ந்து

ஓடக் குருடன்கொம்பில்

தேன்என்று காட்ட முடவன் அத்

தேனை எடுக்கஅயல்

தான்நின்ற ஊமை தனக்கென்று

கேட்கத் தருவன்வரம்

வான்நின்ற சோலை வடவேங்

கடமேய மாதவனே "


இது சந்திர பகவான் வழிபட்டுப் பேறு பெற்ற திருத் தலம்
என்பதால், சந்திர தோஷம் உள்ளவர்கள் இத் தலத்துக்கு வந்து, திருப்பதிப்
பெருமானுடன் சந்திர பகவானையும் சேர்த்து வணங்கி நன்மைகள் பலவும் பெறலாம்.



திருப்பதி ஒரு உபகதை
[b]
[b]
[/b][/b] திருப்பதி
ஸ்ரீ வெங்கடேஸ்வரப் பெருமானைத் தரிசிக்கச் செல்லும் பக்தர்களில் பலர்,
தங்கள் தலை முடியைப் பகவானுக்குக் காணிக்கையாகச் செலுத்தும் வழக்கம்
ஆதிகாலம் தொடக்கம் இருந்து வருகின்றது. ( பக்தர்கள் தலையை மொட்டை போட்டு
பகவானுக்கு அந்த தலைமுடியைக் காணிக்கையாகச் செலுத்துவதற்காக, மொட்டை
அடிக்கும் கூடங்கள் திருப்பதித் தலத்தில் உள்ளன. இந்த நிலையங்கள், திருமலை
திருப்பதி தேவஸ்தானத்தினரால் மிகவும் திறம்பட நிர்வகிக்கப்படுகின்றன. இவை
மிகவும் சுத்தமாகப் பேணப் படுகின்றன. )

பகவானுக்கு முடிக் காணிக்கை செலுத்தும் வழக்கம் எப்போது, ஏன் ஆரம்பமாகியது?

இக் கேள்விக்குரிய பதிலை அறிய நாம் "நீளா தேவியின் கதையைப் " படிக்க வேண்டும். சுவையான அந்தக் கதையை இனிப் படியுங்கள்.


ஸ்ரீனிவாசன் எறும்புப் புற்றினுள்ளே உறங்கிக் கொண்டிருந்த
போது, பசு அவருக்குப் பாலைச் சொரிந்து கொடுத்த சம்பவத்தையும், கோபம் கொண்ட
இடையன் பெரிய தடியினால் அந்தப் புற்றினுள்ளே அடித்தபோது ஸ்ரீனிவாசனின்
தலையில் பெரிய காயம் உண்டாகி இரத்தம் வடிந்த சம்பவத்தையும் நீங்கள்
மேலேயுள்ள கதையில் படித்தீர்கள்.

அந்தக் காயத்தினால் ஸ்ரீனிவாசனின் தலையில் ஒரு பாகத்தில் இருந்த முடி உதிர்ந்து போனது. அந்தப் பகுதி மொட்டையாகி விட்டது.

காந்தர்வ நாட்டின் இளவரசியாகிய நீளாதேவி பகவான் ஸ்ரீநிவாசனின் தீவிரமான பக்தை.


ஒருநாள் அவள் காந்தர்வ தேசத்திலிருந்து ஸ்ரீநிவாசனைத்
தரிசிக்கத் திருப்பதி வந்தபோது, பகவானின் தலையில் ஒரு பகுதி முடியின்றி
மொட்டையாக இருந்ததைக் கண்டாள். மிகவும் கவலையடைந்தாள்.


" இவ்வளவு அழகு நிறைந்த எங்கள் பகவானின் தலையில் முடியின்றி
இருக்கக்கூடாது " என்று சொல்லி, தனது நீளமான, அழகிய தலை முடியின் ஒரு
பகுதியைப் பிய்த்து எடுத்துத் தன் அபூர்வ சக்தியால் பெருமானின் தலையில்
ஒட்டிவிடும்படி செய்தாள். அந்த முடி பெருமானின் தலையில் சேர்ந்து வளரத்
தொடங்கியது.


அவளது தியாகத்தையும், தன்மீது அவள் கொண்ட அன்பையும்,
பக்தியையும் கண்டு மனம் நெகிழ்ந்த பெருமான், ' தமது பக்தர்கள் கொடுக்கும்
முடிக்காணிக்கை முழுவதும் நீளாதேவிக்கே போய்ச் சேர வேண்டும்' என்று
கட்டளையிட்டார்.


அன்றிலிருந்து, திருப்பதித் தலத்தில், பக்தர்கள் அன்போடு
செலுத்தும் முடிக் காணிக்கை முழுவதும் நீளாதேவிக்கே செல்லுகின்றது.

பகவான் தமது பக்தர்களின் அன்பையும், தியாகத்தையும் என்றும் மறப்பதில்லை என்பதை இச் சம்பவம் நமக்கு உணர்த்துகின்றது.
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum