Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்by vpoompalani March 24th 2016, 13:59
» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26
» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17
» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06
» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07
» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58
» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24
» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35
» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52
» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18
» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47
» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19
» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46
» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49
» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37
» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07
» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29
» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38
» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55
» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00
» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49
» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28
» திருத்தல யாத்திரை ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51
» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33
» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46
» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28
» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13
» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29
» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15
» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10
» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29
» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54
» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38
» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42
» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32
» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01
» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20
» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில்தல வரலாறு
Page 1 of 1
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில்தல வரலாறு
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில்:-
உமையோடு கூடிய சிவனை சிந்தித்தால் சுமையாக இருப்தெல்லாம் சுவையாக மாற்றமெடுக்க காணலாம் என்கிறது தச்சஸாதோர் விபூஷணம்.
திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளியுள்ள பதிகம்:-
வெந்தவெண் ணீறணிந்து விரிநூல் திகழ்மார்பின் நல்லபந்தணவும் விரலாள் ஒருபாகம் அமர்ந்தருளிக்
கொந்தணவும் பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
அந்தணனைத் தொழுவார் அவலம் அறுப்பாரே.
அலைமலி தண்புனலோ டரவஞ் சடைக்கணிந் தாகம்
மலைமகள் கூறுடையான் மலையார் இளவாழைக்
குலைமலி தண்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
தலைமக னைத்தொழுவார் தடுமாற் றறுப்பாரே.
பாலன நீறுபுனை திருமார்பிற் பல்வளைக்கை நல்ல
ஏலம லர்க்குழலாள் ஒருபாகம் அமர்ந்தருளிக்
கோல மலர்ப்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் மல்கும்
நீலநன் மாமிடற்றான் கழலேத்தல் நீதியே.
வாருறு கொங்கைநல்ல மடவாள் திகழ்மார்பில் நண்ணுங்
காருறு கொன்றையொடுங் கதநாகம் பூண்டருளிச்
சீருறும் அந்தணர்வாழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
நீருறு செஞ்சடையான் கழலேத்தல் நீதியே.
பொன்றிகழ் ஆமையொடு புரிநூல் திகழ்மார்பில் நல்ல
பன்றியின் கொம்பணிந்து பணைத்தோளியோர் பாகமாகக்
குன்றன மாளிகைசூழ் கொடிமாடச் செங்குன்றூர் வானில்
மின்றிகழ் செஞ்சடையான் கழலேத்தல் மெய்ப்பொருளே.
ஓங்கிய மூவிலைநற் சூல மொருகையன் சென்னி
தாங்கிய கங்கையொடு மதியஞ் சடைக்கணிந்து
கோங்கண வும்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் வாய்ந்த
பாங்கன தாள்தொழுவார் வினையாய பற்றறுமே.
நீடலர் கொன்றையொடு நிமிர்புன் சடைதாழ வெள்ளை
வாடலுடை தலையிற் பலிகொள்ளும் வாழ்க்கையனாய்க்
கோடல் வளம்புறவிற் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
சேடன தாள்தொழுவார் வினையாய தேயுமே.
மத்தநன் மாமலரும் மதியும்வளர் கொன்றையுடன் துன்று
தொத்தலர் செஞ்சடைமேல் துதைய வுடன்சூடிக்
கொத்தலர் தண்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் மேய
தத்துவனைத் தொழுவார் தடுமாற் றறுப்பாரே.
செம்பொனின் மேனியனாம் பிரமன்திரு மாலுந்தேட நின்ற
அம்பவ ளத்திரள்போல் ஒளியாய ஆதிபிரான்
கொம்பண வும்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் மேய
நம்பன தாள்தொழுவார் வினையாய நாசமே.
போதியர் பிண்டியரென் றிவர்கள் புறங்கூறும் பொய்ந்நூல்
ஓதிய கட்டுரைகேட் டுழல்வீர் வரிக்குயில்கள்
கோதிய தண்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
வேதியனைத் தொழநும் வினையான வீடுமே.
அலைமலி தண்புனல்சூழ்ந் தழகார் புகலிந்நகர் பேணுந்
தலைமக னாகிநின்ற தமிழ்ஞான சம்பந்தன்
கொலைமலி மூவிலையான் கொடிமாடச் செங்குன்றூ ரேத்தும்
நலம்மலி பாடல்வல்லார் வினையான நாசமே.
சிவா திருச்சிற்றம்பலம்.
ஓம் சுகுந்த குந்தலாம்பிகை உடனமர் ஓம் கைலாசநாதர் ஆலயம்,அடிவாரம், திருச்செங்கோடு.
இறைவனுக்கும், அம்பிகைக்கும் நடுவில் முருகன் அமர்ந்துள்ள வடிவம்
"சோமாஸ்கந்த மூர்த்தம்". இந்த அமைப்பு கைலாசநாதர் ஆலயத்தில் உள்ளது. இந்த
அமைப்புள்ள ஆலயத்தில் வழிபட்டால் தேஜஸ் கூடும். சதய
நட்சத்திரக்காரர்களுக்கான ஆயுள் கால வழிபாட்டு ஆலயம். இங்கு மேற்கு
பார்த்து தனி சன்னதி கொண்டுள்ள சனி பகவானை இவர்கள் வழிபட வேண்டும்.
சனிபகவானுக்குரிய சமித்து வன்னி இங்கு வன்னி மரமே ஸ்தல விருட்சமாக உள்ளது.

Similar topics
» திரிகோணமலை நல்லியக்கோடர்.ஆலய வரலாறு
» அருணகிரிநாதர் வரலாறு
» ஸ்ரீ ராகவேந்திரர் வரலாறு
» திருஞான சம்பந்தர் வரலாறு.
» திருஞான சம்பந்தர் வரலாறு.
» அருணகிரிநாதர் வரலாறு
» ஸ்ரீ ராகவேந்திரர் வரலாறு
» திருஞான சம்பந்தர் வரலாறு.
» திருஞான சம்பந்தர் வரலாறு.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum