HinduSamayam
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

HinduSamayam
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
HinduSamayam
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்
by vpoompalani March 24th 2016, 13:59

» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26

» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17

» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06

» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07

» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58

» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24

» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35

» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52

» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20

» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18

» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37

» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47

» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19

» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46

» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49

» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37

» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07

» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29

» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38

» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55

» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00

» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49

» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28

» திருத்தல யாத்திரை  ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51

» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33

» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46

» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28

» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13

» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29

» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15

» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10

» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29

» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54

» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38

» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42

» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32

» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01

» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20

» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00

தமிழர்களின் சிந்தனைகளம்
Related Posts Plugin for WordPress, Blogger...



பொன்மொழிகள்

2 posters

Go down

பொன்மொழிகள் Empty பொன்மொழிகள்

Post by மாலதி January 19th 2012, 20:50

[size=9]1. பிறரைச் சீர்திருத்தும் கடமையை விட, தன்னை சீர்த் திருத்துவதே முதல் கடமை – பெர்னாட்ஷா

2. தலைசிறந்த மனிதர் ஒவ்வொருவரும், தனித்தன்மை வாய்ந்தவர் – எமர்சன்

3. நல்ல நூல்களைப் படிப்பது, தலைசிறந்த மனிதருடன் உரையாடுவதைப் போன்றது – தெகார்த்

4. உன் மகிழ்ச்சி நிலைத்திருக்க வேண்டுமானால், எதிலும் மிதமாக இரு - சார்லஸ் அகஸ்டின்

5. சுறுசுறுப்புடன் எல்லாவற்றையும் செய்கிறவனுக்கு, எல்லாக் கதவுகளும் திறந்திருக்கும் – எமர்சன்

6. சண்டைக்கு இருவர் தேவை, நீங்கள் அவ்விருவரில் ஒருவராக இருக்காதீர்கள் – ஆவ்பரி

7. தவறு செய்து விட்டோம் என்று தெரிந்தும், அதை ஒப்புக்கொள்ள வெட்கப்படாதே – ஆவ்பரி

8. சிறிய மனிதர்களைப் பெருந்தன்மையுடன் நடத்துபவன் தான் பெரிய மனிதன் - கார்லைல்

9. எல்லாருக்கும் நண்பனாயிருப்பவன், யாருக்கும் நண்பனல்ல – முல்லர்

10. பெரியோர் பேச்சு, அறிவைத் தரும், பெரியோர் மௌனம், அன்பைப் பெருக்கும் – கதே

11. அளவுக்கு மிஞ்சி கிண்டல் செய்தால், அன்பு முறிந்து, ஆபத்தில் போய் முடியும்- வால்டேர்

12. அழகு என்பது, சில காலமே நிற்கும் கொடுங்கோலாட்சி, அதற்கு நீ அடிமையாகாதே – வால்டேர்[/size]
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

பொன்மொழிகள் Empty Re: பொன்மொழிகள்

Post by மாலதி January 19th 2012, 20:52

13. குற்றங்கள் பிறக்கும் இடங்களில் முக்கியமானவை குடியும், அறியாமையுமே – ஆவ்பரி

14. பூரண ஞானம் அடைந்தவனுக்கு, துயரம் என்பது இல்லை – காந்திஜி

15. கண் பார்வை அற்றவன் குருடன் அல்ல, தன் குற்றங்களை உணராதவனே குருடன் – காந்திஜி

16. அமைதியும், மகிழ்ச்சியும் இருக்கும் வரை, உங்களுக்கு என்றைக்கும் விடிவுகாலம் தான் – பிளாட்டோ

17. அதிகமான எதிர்பார்ப்பு நிச்சயம் கை கூடப் போவதில்லை – ஷேக்ஸ்பியர்

18. அரிய செயலைச் செய்து முடிப்பது வலிமையால் அல்ல, விடாமுயற்சியால் தான் - ஜேம்ஸ் ஆலன்

19. பகைமையை அன்பால் வெல்லுங்கள்; சோம்பலை செயல் ஊக்கத்தால் வெல்லுங்கள் – காந்திஜி

20. எவன் ஒருவன் தனக்குத்தானே மனக் கட்டுப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்கிறானோ, அவனே சுதந்திர மனிதனாவான் – காந்திஜி

21. பெரிய பெரிய சாதனைகளெல்லாம் செய்து முடிக்கப்படுவது ஆழ்ந்த மௌனத்தால்தான் – எமர்சன்

22. திறமைதான் ஏழையின் மூலதனம் – எமர்சன்

23. இதயத்தின் வாசல்கள் திறக்கப்படாதவரை, ஒரு நாடு சுதந்திரம் பெற்றதாகச் சொல்ல முடியாது - வல்லபாய் படேல்

24. நீங்கள் செய்யும் தவறை உடனே திருத்திக் கொள்ளுங்கள்; இல்லாவிட்டால், இன்னொரு தவறைச் செய்தவராகி விடுவீர்கள் – கன்பூசியஸ்

25. சதுரங்க விளையாட்டைப் போல, வாழ்விலும் முன் யோசனை வெற்றி பெறுகிறது – பாக்ஸ்டன்

26. நாம் துணிச்சலோடு இருந்தால், எந்த சக்தியும் நமக்குத் துணையாக வந்துவிடும் - பெசில்சிங்

27. எப்போதும் உண்மையை மறைக்காமல் சொல்கிற மனத்தின்மை வேண்டும் – காந்திஜி

28. தியாகம் தான் வாழ்க்கை, இது இயற்கை கற்றுத் தந்த பாடம் – காந்திஜி

29. மிருகத்தைப் போல நடக்கும் மனிதன், மிருகத்தை விடவும் மோசமானவன் – காந்திஜி

30. மன அமைதியோடு இருப்பவனுக்கு என்றும் ஆபத்து இல்லை – லாவோட்சே

31. ஒருவருக்கொருவர் நல்ல பண்புகளுடன் நடந்து கொள்வது, வாழ்க்கையில் மிகவும் அடிப்படையான தேவையாகும் - நபிகள் நாயகம்

32. இந்த உலகம் கோழைகளுக்கல்ல; பயந்து ஓட முயலாதே, வெற்றியோ தோல்வியோ எதிர்பார்க்காதே – விவேகானந்தர்

33. நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது - ப்ரெமர்

34. நாம் செல்லும் மார்க்கம் நல்லதாக இருந்தால், நம்முடைய இலக்கும் தானாகவே நல்லதாகிவிடும் – காந்திஜி

35. கல்வியில் சிறந்தவன் என்று பெயர் வாங்குவதை விட, ஒழுக்கத்தில் சிறந்தவன் என்று பெயர் வாங்க வேண்டும் – காந்திஜி
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

பொன்மொழிகள் Empty Re: பொன்மொழிகள்

Post by மாலதி January 19th 2012, 20:52

36. உயர்ந்த எண்ணங்களை உடையோர், ஒருநாளும் தனித்தவராகார் – காந்திஜி

37. மனிதனுடைய முழுத் திறமைகளின் வெளிப்பாடே, உண்மையான கல்வி – காந்திஜி

38. வெற்றி என்பது, லட்சியத்தைப் படிப்படியாகப் புரிந்து கொள்வது – நைட்டிங்கேல்

39. குழந்தையின் எதிர்காலம், எப்போதும் தாயின் வேலையால் அமைகிறது – நெப்போலியன்

40. பொய்யை மெய்யாலும், விரோதத்தை அன்பாலும், ஆத்திரத்தை, சகிப்புத் தன்மையாலும் வெல்லலாம் – காந்திஜி

41. எத்தனை துன்பங்கள் பகைவர்களால் வந்தாலும், அதை அன்பாலேயே வென்று விடுங்கள் – காந்திஜி

42. எவர் ஒருவர் தன் கடமைகளை சரிவர செய்கிறாரோ, அவருக்கு உரிமைகள் தானாகவே வந்தடையும் – காந்திஜி

43. கீழான லட்சியத்தில் வெற்றி காண்பதை விட, உயர்ந்த லட்சியத்தில் தோல்வி காண்பது சிறந்தது – பிரவுனிங்

44. சிக்கல் எது என்று அறிந்தாலே, பாதி சிக்கல் தீர்ந்துவிடும் – கிப்ளிங்

45. நம்பிக்கையுடையவன் எதையும் எளிதில் முடிக்கும் திறமையுடையவன் – காந்திஜி

46. மன்னிக்கும் குணம், ஆற்றல் வாய்ந்தவர்களுக்கு ஓர் அடையாளம் – காந்திஜி

47. யாருமே உதவாக்கரை இல்லை, அவர்கள் நேரத்தை வீணாக்காமல் இருக்கும் வரை - மார்த்தா எச்

48. பிறர் தவறு கண்டு தன் தவறை திருத்திக் கொள்பவன் அறிவாளி – காந்திஜி

49. செயலில் கெட்டவனை விட, மனதில் கெட்டவனே மிகவும் கெட்டவன் – காந்திஜி

50. அகிம்சை மனித குலத்திற்கு கிடைத்திருக்கும் மாபெரும் சக்தி – காந்திஜி
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

பொன்மொழிகள் Empty Re: பொன்மொழிகள்

Post by மாலதி January 19th 2012, 20:54

51. பேச்சில் இனிமை, கொள்கையில் தெளிவு, செயலில் உறுதி ஆகிய மூன்றும் உள்ளவரால் எதையும் சாதிக்க முடியும் – முல்லர்

52.
வாழ்க்கையில் முன்னேற, குன்றாத உழைப்பு, குறையாத முயற்சி, வெற்றி பெறுவோம்
என்ற தன்னம்பிக்கை - இம்மூன்றும் இருந்தால் போதும் - தாமஸ் ஆல்வா எடிசன்

53. துக்கத்தால் தற்கொலை செய்து கொள்பவன் தைரியசாலி என்றால், அந்தத் துக்கத்தைத் தாங்கிக் கொள்கிறவனோ பெரும் வீரன் – மாஸிங்கர்

54. நாளைக்கு நல்ல காரியம் செய்வேன் என்று சொல்பவன் முட்டாள்; அறிவுள்ளவன் நேற்றே அதைச் செய்து முடித்திருப்பான் – மார்ஷல்

55.
பலவீனம் இடையறாத சித்திரவதையாகவும், துன்பமாகவும் அமைகிறது. பலவீனம்
மரணத்திற்கு ஒப்பானது; வலிமையே மகிழ்ச்சிகரமான வாழ்க்கை – விவேகானந்தர்

56. உலகத்தின் ரகசியத்தை அறிவு ஒன்றால் மட்டும் அளந்து விட முடியாது – கதே

57. வாழ்க்கை என்ற ஆற்றையோ, கடலையோ கடப்பதற்குப் பெண் என்ற படகோ, கப்பலோ அவசியம் தேவை – காண்டேகர்

58. மற்றவர்களை அன்பால் மகிழச் செய்வதே, ஒருவன் பெற்றிருக்க வேண்டிய பாக்கியங்களில் எல்லாம் மேலான பாக்கியம் - செஸ்டர் பீல்டு

59. மனத் திருப்தி, நமக்கு இயற்கையாகக் கிடைத்த செல்வம்; ஆடம்பரம், நாம் செயற்கையாக உருவாக்கிக் கொண்ட பஞ்சம் – சாக்ரடீஸ்

60. தன்னைத் தானே மேதாவியாக நினைத்திருக்கும் இளைஞர்கள், இருந்த இடம் தெரியாமல் போய் விடுகின்றனர் – மகாவீர்

61. லட்சியத்தில் கவனம் செலுத்தி, அதை அடைவதற்கு முயல்கிறவன், தன்னை அறியாமலேயே மேதையாக உருவாகிறான் - நெப்போலியன் ஹில்

62. பிரச்சனைகள் மிகப்பெரிய சாதனைகளையும், மிக உறுதியான வெற்றிகளையும் உருவாக்குகின்றன – கென்னடி

63. ஆசை பேராசையாகவும், அன்பு வெறியாகவும் மாறும் போது, அமைதி அவ்விடத்தை விட்டு நகர்ந்து விடுகிறது - மார்க்ஸிம் கார்க்கி

64. எதற்கும் அஞ்சாதே, எதையும் வெறுக்காதே, யாரையும் ஒதுக்காதே; உன் பணியை ஊக்கத்துடன் செய் – அரவிந்தர்

65. சுறுசுறுப்பாய் உள்ள மனிதன், எப்போதும் மகிழ்ச்சியோடு இருப்பான் - ஹென்றி போர்டு

66. உலகம் அனைத்தையும் ஒரு தட்டிலும், தாயை மறுதட்டிலும் வைத்து நிறுத்தினால், உலகின் தட்டுதான் மேலே இருக்கும் - லாங்க்டேல் பிரபு

67. மேலோர்கள் கெட்டாலும், அவர்களுடைய மேன்மையான பண்புகள் ஒரு போதும் கெடாது –லாங்பெல்லோ

68. தளராத இதயம் உள்ளவனுக்கு, இவ்வுலகில் முடியாதது என்று எதுவுமே இல்லை – புக்கன்ஸ்

69. சிக்கனமாக வாழும் ஏழை, சீக்கிரம் செல்வந்தனாவான் – செனேகா

70. சிறிய ஓட்டைதான், பெரிய கப்பலையும் மூழ்கடித்து விடும் – சாணக்கியன்

71. அறிவு காட்டும் வழியில் மட்டும் செல்லாதே; ஆன்மா கூறும் வழியிலும் செல் – டால்ஸ்டாய்

72. அஞ்சி நடுங்கிக் கொண்டிருப்பவனால், சிறிய குட்டையைக் கூட கடக்க முடியாது – சாணக்கியன்
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

பொன்மொழிகள் Empty Re: பொன்மொழிகள்

Post by மாலதி January 19th 2012, 20:54

73. செல்வமும், சிபாரிசும் வளர்ச்சிக்கு உதவாது – மாத்யூஸ்

74. அன்பில்லாத இடத்தில் தான் கோபம், முட்டாள் தனம், விரோதம் எல்லாம் இருக்கும் – இங்கர்சால்

75. ஆசையில் உள்ளவன் கையில், அவனையும் அறியாமல் விலங்கு பூட்டப்பட்டிருக்கும் - எபிக் டெட்டஸ்

76. திட்டங்கள் தீட்டிக்கொண்டிருப்பதை விட்டு ஒழியுங்கள்; முதலில் செயலில் இறங்குங்கள் – பிளாரன்ஸ்

77. புறக்கணிப்பு என்ற நோய்க்கு, மருந்தே கிடையாது; எனவே யாரையும் அலட்சியப்படுத்தாதீர்கள் – இங்கர்சால்

78. நமக்கு எதையெல்லாம் பிறர் செய்யக்கூடாது என்று நினைக்கிறோமோ, அதையெல்லாம் நாம் பிறருக்குச் செய்யக் கூடாது – கான்பூசியஸ்

79. பொறுமை உள்ள மனிதன் நிச்சயம் வெற்றி பெறுவான் – எபிடேட்ஸ்

80. உலகத்தை வெறுக்கலாம்; ஆனால் உலகமின்றி வாழ முடியாது - வேஸ்ஸன் பர்க்

81. கசப்பான மருந்து தான் நோயை குணப்படுத்தும் – சாணக்கியன்

82. செய்ய முடிந்தவன் சாதிக்கிறான்; செய்ய முடியாதவன் போதிக்கிறான் – பெர்னாட்ஷா
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

பொன்மொழிகள் Empty Re: பொன்மொழிகள்

Post by மாலதி January 19th 2012, 20:57

குழந்தைகளின் எதிர்காலம் எப்போதும் தாயின் செயலில்தான் தங்கியிருக்கிறது.

- நெப்போலியன் போனபார்ட்.

*

மிகச் சிறந்த அல்லது மிக மோசமான விசயங்களே விலை போகின்றன.

- ஷோபா டே

*

அன்பில் அச்சம் கலந்திருக்க முடியாது. நாம் கண்டு அஞ்சும் மனிதனிடம் நம்மாம் அன்பு செலுத்த முடியாது.

- அரிஸ்டாட்டில்.

*

நட்புதான் சுகங்களில் மட்டுமில்லாமல் துக்கத்திலும் பங்கேற்கிறது.

- வைரமுத்து.

*

பிறர்க்கு நன்மை செய்பவன் தனக்கும் நன்மை தேடிக் கொள்கிறான்.

- ஜெனீக்கா.

*

வரவு அறிந்து செலவு செய்வது சிக்கனம். செலவு அறிந்து வரவு சேர்ப்பது நற்குணம்.

- கவிதாசன்.

*

அதிர்ஷ்டத்தை நம்பியிருக்க வேண்டாம்.ஒழுக்கத்தை நம்பியிருங்கள்

- பப்ளியஸ்ஸிரஸ்.

*

ஒருவனுடைய லட்சியம் இதுவென்று அறிந்து விட்டால் பின் அவனைப் பற்றி அறிதல் கடினமானதன்று.

- ஹோம்ஸ்.

*

உண்மை மனிதனுக்குச் சொந்தம். பிழை அவன் காலத்திற்குச் சொந்தம்.

- கதே.

*

நம்பிக்கை என்பது கண் விழித்திருக்கும் போதே காண்கிற கனவு.

- பிளினி.

*

வலிமை, துணிவு, உண்மை, தன்னடக்கம், மரியாதை உள்ளவனே உண்மை வீரன்.

-அன்னிபெசண்ட்.

*

தோல்வி என்பது தள்ளிப் போடப்பட்டிருக்கும் வெற்றி அவ்வளவுதான் அதில் உற்சாக இலக்கு ஒன்றுமில்லை.

- சுவாமி சுகபோதானாந்தா.

*

சோம்பல் என்பது இளைப்பாறுதல் அல்ல. அது வேலையை விட அதிகம் களைப்பைத் தரும்.

-புல்லர்.

*

கடவுள் குணமளிக்கிறார். மருத்துவர் பணம் பெறுகிறார்.

-பிராங்க்ளின்.

*

சிந்தனையும் செயலும் ஒன்றாகி விட்டால் வாழ்க்கையில் வெற்றியை எளிதில் பெற்று விடலாம்.

- ராமதாசர்.

*

வெற்றி பெறும் ஒவ்வொரு செயலும் ஒரு குறிக்கோளாகி விடுகிறது.

- ஹாப்பர்.

*

மிக அதிக உயரத்தை அடைய விரும்பினால் கீழ்மட்டத்திலிருந்து தொடங்கு.

- சைரஸ்.

*

மனிதனை மனிதனாக்குவது உதவிகளும், வசதிகளுமல்ல. இடையூறுகளும் துன்பங்களும்தான்.

- மாத்யூஸ்.

*

சுறுசுறுப்புக்கு எல்லா வேலைகளும் எளிது. சோம்பலுக்கு எல்லாமே கடினம்.

- ஆரோன்புர்.

*

அறிவின்மை கேவலம். அதைவிடக் கேவலம் அதிக மனமின்மை.

- ஜேம்ஸ் ஆலன்.

*

உற்சாகமான உழைப்பு இல்லாமல் உயர்ந்த வெற்றி எதையுமே சாதிக்க முடியாது.

- எமர்சன்.

*

முன் கவனமுள்ள ஒரு நண்பனைப் போல் வாழ்க்கையில் வேறு பாக்கியம் இல்லை.

- யூரிபிடிஸ்.

*

விரைவிலே புகழ் பெற்றவன் பெயரை காப்பாற்றிக் கொள்வது பெரிய பாரம்தான்.

- வால்டேர்.

*

சிந்திக்காமல் படிப்பது வீண், படிக்காமல் சிந்திப்பது ஆபத்தானது.

-கன்பூசியஸ்.

*

எளிமையும் தூய்மையும் ஒருவனை உயர்ந்த மனிதனாக உயர்த்துகின்றன.

- கெம்பில்.

*

அறிவாளிகள் காசுக்கு அடிமையாக இருப்பதால் நம் அறிவை விலை கூறுகின்றனர்.

- வினோபாஜி.

தொகுப்பு: தேனி. எஸ். மாரியப்பன்.

நன்றி : முத்துக்கமலம்
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

பொன்மொழிகள் Empty Re: பொன்மொழிகள்

Post by மாலதி June 20th 2013, 06:24


  • மனித முயற்சியால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவும் செய்துபார், ஒவ்வொரு தடவையும் உனக்குத் தோன்றுவது "கடவுள் இருக்கிறார்" என்பதே.


  • ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல, விழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான்.



  • மனிதனின் இயற்கையான குணம் சிறப்பாகச் சிந்திப்பது, ஆனால் முட்டாள்தனமாகச் செயற்படுவது.



  • பணமும், பதவியும் மோசமானவை என்று ஞானிகள் ஏன் சொல்கிறார்கள்? அவை வரக்கூடாதவனுக்கு வருவதால், கிடைக்கக்கூடாதவனுக்குக் கிடைப்பதால்.



  • மணிக்கணக்கில் உபதேசம் செய்வதைவிட, ஒரு கணப் பொழுதாயினும் உதவி செய்வது மேல்.




  • தாய் பசித்திருக்க, தாரத்திற்கு சோறு ஊட்டாதே, நாளை நீ பசித்திருக்க உன் பிள்ளையும் அதே தவறைச் செய்து கொண்டிருப்பான்.



  • அடிக்கடி தவறு செய்கிறவன் அப்பாவி, ஒரே தவறைத் திரும்பத் திரும்பச் செய்கிறவன் மூடன், ஒரு தவறுமே செய்யாதவன் மரக்கட்டை, தன்னையறியாமல் தவறு செய்து, தன்னையறிந்து திருத்திக் கொள்கிறவனே மனிதன்.



  • பூமியை ஆழமாகத் தோண்டினால்தான் தண்ணீர் கிடைக்கிறது, உண்மையான அன்பு வைப்பவனுக்குத்தான் நன்றி நிரம்ப வருகிறது.



  • பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.



  • நீ கொடுக்கவேண்டியவற்றை நன்றாகக் கொடு, அது உனக்கு 4 மடங்காகத் திருப்பித் தரப்படும்.



  • எப்பொழுதும் உன்னை நினைத்துச் சுயநலமாக இருப்பதைவிட, மற்றவர்களை நினைத்துப் பொதுநலமாக சிந்தி, நீ நன்றாக இருப்பாய்.



  • வாழ்க்கை ஒருமுறை, அதை மற்றவர்களுக்காகவும் வாழ்ந்து காட்டப் பழகிக் கொள்ள வேண்டும்.



  • நீ இந்தப் பூமியை விட்டு வெளியேறும்போது நீதி, நேர்மை, மனிதாபிமானம் போன்றவற்றை விட்டுச் செல், அது உன் சந்ததியை நன்றாக வழிநடத்தும்.



  • நீ எப்பொழுதும் நல்லவற்றையே சிந்தி, உனக்கு எல்லாம் நல்லவைகளாகவே நடக்கும் இது விதி, தீயவற்றைச் சிந்தித்தால் தீயவையே நடக்கும் இதுவும் விதி.



  • ஆண்டவன் உனக்குத் தர நினைக்கும்போது யாரும் தடுக்க முடியாது, அதேநேரம் ஆண்டவன் அதைப் பறிக்கும்போது யாராலும் அதைத் தடுக்க முடியாது.





  • ஆண்டவன் ஒவ்வொரு நல்ல உள்ளங்களிலும் அழகாக வீற்றிருக்கிறான், நாங்கள்தான் அதைக் கண்டுகொள்வதில்லை.


  • உலகில் உள்ள எல்லா இதயங்களும் நல்ல இதயங்களே, ஆனால் சந்தர்ப்பம், சூழ்நிலைகள் அதை மாற்றியமைக்கின்றன.


  • ஆண்டவன் எல்லோருக்கும் எதோ ஒரு திறமையைக் கொடுத்திருக்கிறான், நாம் அதைக் கண்டுகொள்ளாமல், திறமையற்றவர்களாகத் திரிகிறோம்.


  • நீ மற்றவர்களுக்காக வழிவிட்டுக் கொடு, இறைவன் நிச்சயம் உனக்கு வழி விடுவான்.


  • நீ எப்போது யாருமற்ற ஏழை, எளியவர்களுக்கு உதவுகிறாயோ, அப்போது ஆண்டவன் உன்னிடம் 'கடன்காரன்' ஆகிறான்.

மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

பொன்மொழிகள் Empty Re: பொன்மொழிகள்

Post by மாலதி June 20th 2013, 06:25

 உங்களுக்காகவே  சிறப்பு தன்னம்பிக்கை பொன்மொழிகள்


 பொன்மொழிகள் Gandhiஒருவனிடம் துக்கமும் தூக்கமும் எப்போது குறையுமோ, அப்போதே அவன் மேதையாகிறான்.

- காந்திஜி





பொன்மொழிகள் Putthar 
நாம் இன்று என்ன நிலையில் இருக்கிறோமோ, அந்நிலையை நமக்கு அளித்தது நமது எண்ணங்கள்தான். நமது இன்றைய நிலை நமது எண்ணங்களாலேயே ஆக்கப்பட்டிருக்கிறது.

- புத்த பகவான்





ஆழ்மனதின் சக்தியை அதிகப்படுத்துங்கள். அப்படி அதிகப்படுத்தியதால்தான் ஐசக் நியூட்டன், பெல், விவேகானந்தர், காந்திஜி போன்ற பல மனிதர்கள் உருவானார்கள். எனவே நல்லதைச் செய்துகாட்ட என்னால் முடியும் என்பதை ஆழ் மனதிற்குச் சொல்லிச் சொல்லி உங்கள் மன உறுதியைப் பலப்படுத்துங்கள்.

-ரான் ஹாலன்ட்




செயல்படும்போது அதற்குத் தேவையான சக்தி கிடைக்கிறது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அந்த நினைவில் உங்களுடைய சிந்தனையையும் செயலினையும் ஒருமுகப்படுத்துங்கள். வெற்றி நிச்சயம் உண்டு.

- எம்.ஆர். காப்மேயர்




தன்னம்பிக்கை, துணிவு, பயம் - இந்த மூன்றில் முதல் இரண்டும் அழகான, உயர்வான வாழ்க்கையை அமைத்துத் தருகின்றன. தன்னம்பிக்கை இருந்தால் துணிந்து காரியத்தில் இறங்கி செயல்பட முடியும்.
தன்னம்பிக்கை இல்லையென்றால் அது பயத்தைத்தான் பரிசாகத் தருகிறது. பயந்தவர்கள் எதிலும் ஈடபடமாட்டார்கள். துணிச்சலுடன் காரியத்தில் ஈடுபட்டிருப்பவர்களில் நீங்களும் ஒருவராக இருக்க வேண்டும்.

- நிசாமி




பொன்மொழிகள் Emerson_thangam_palaniதனக்குத்தானே உதவிக்கொள்ளாமல் எவனாலும் அடுத்தவனுக்கு உதவ முடியாது என்பது உலகின் மிக அழகிய இயல்புகளில் ஒன்று.

- எமர்சன்




உங்களைத் தவிர வேறு எதுவும் உங்களுக்கு அமைதியைத் தர முடியாது. மற்றவரை அறிந்தவன் புத்திசாலி; தன்னைத்தான் அறிந்தவன் ஞானி.

-லா ஓட்ஸ்




எக்கணமும் சுறுசுறுப்பாக இருப்பவர்களிடம் திறமைகள் தாமே வந்து ஒட்டிக்கொள்ளும். தங்களுக்குச் சாதகமான சூழ்நிலைகளை பயன்படுத்திக் கொள்பவர்கள் மட்டுமே நிலையான புகழை ஈட்ட முடியும்.

-ஹெரால்டு
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

பொன்மொழிகள் Empty Re: பொன்மொழிகள்

Post by ராகவா August 19th 2014, 19:35

அத்தனையும் மிக அருமை....என் வாழ்த்துக்கள் அக்கா...
ராகவா
ராகவா
உதய நிலா
உதய நிலா

Posts : 1143
Join date : 09/11/2012
Age : 43
Location : தஞ்சை மாவட்டம்

http://athisayakavi.blogspot.in/

Back to top Go down

பொன்மொழிகள் Empty Re: பொன்மொழிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum